Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. நான் சொல்லுவதில் எது யதார்த்தம் இல்லை என்பதை சுட்டிக்காட்டினால் நல்லது. நாம் பிரிவுக்கு அடிபட்டது, தவறானதுக்கு அடிபட்டது என்று வரும். அங்கும் பெரிய சமூகங்கள் பிரிக்கப்படுகிறது , அத்துடன் புலிகள், மற்ற இயங்களின் நிலைப்பாடு சிறிலங்கா அரசு தான் அழிக்கிறது என்ற வாதத்துடன் , சிங்கள மக்களுடன் பிரச்னை இல்லை என்று. தீர்வு தெரிவுகளில் சுதந்திர தனியரசு ஒருபோதும் இருந்து இருக்க கூடாது என்று வரும் (கற்பனையில், நீங்கள் தமிழீழம், வெற்றிலை, பாக்கு தட்டில் வைத்து தந்தாலும் வேண்டாம் என்று சொல்லுவீர்கள் போல இருக்கிறது ) அப்படி என்றால் மாநில, மாகாண போன்ற பிரிப்புகளும் பிழை என்று அல்லவா வரும்? மறுவளமாக, பிரிவுகளுக்கு பலமான எதுக்கள் இருந்தால், அவற்றை செய்வது, அல்லது பிரிவின் ஆழ, அகலத்தை சமப்படுத்தி பிரிப்பது தவறு இல்லை.
  2. நான் சொல்லுவது யதார்த்தத்தை. un, மேற்கு சொல்லும் நீண்ட கால அமைப்பு சர்வதேச நியதி படி, பாகிஸ்தான் காஸ்மீர் பகிஸ்தானின் இறைமைக்கு கீழ் வரும் இந்திய காஷ்மீர் இந்திய இறைமைக்கு கீழ் வரும். இவை 2ம் விட்டால் ஒழிய காசுமீர் ஒன்றாக போவதில்லை. மாறிச்சாறி, காஷ்மீருக்கு கடவுள் வரமாக பயங்கர ஆயுதங்கள் ஏதாவது கிடைத்து தாக்கினால், இந்தியா , பாகிஸ்தான் ஒன்றாக சேர்ந்து அடிக்கும் (இது தான் அரசுக்கள்). கஹ்மீரின் நிலை கிட்டத்தட்ட குர்டிஸ்தானின் நிலை (அது 4 அரசுகளை சமாளிக்க வேண்டும்) எனவே, இந்திய பகுதி காஷ்மீருக்கு உள்ள இப்போதைய சிறந்த தெரிவு, , இந்திய பகுதி காஸ்மீரின் முஸ்லீம் தன்மையை மாறுவதற்கு / மாற்றுவதத்திற்கு இடம் கொடுக்காமையும், அதே நேரத்தில் இந்திய அரசுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதும். இப்போதைய இந்திய கொள்கை ஒரு கோணத்தில் பொருளாதார பரிசோதனை - அதாவது மத்திம , நீண்ட காலத்தில் காஸ்மீர் பொருத்தர அபிவிருத்தியால் குதர்க்கம் குறைந்து, இந்தியாவின் அங்கமாக தங்க பெரும்பாலும் வரலாம் என்பதற்கு. எமக்கும் இதே தன்மை பிரச்சனைகள் இருக்கிறது. அனால், சிங்களம் எமக்கு எதையும் தராததும , இந்தியா அந்த பிரிப்பை செய்ததும் இந்த நேரத்தில் எமது வசதி. இந்திய பிரிப்பை ஏற்றுக்கொள்வது (அது நியாயமானது, லடாக் வரவேற்று உள்ளது) எமது நலனின் அடிப்படையிலும். அத்துடன் எமது பிரச்சனையின் தனி தன்மையும். இதை தவிர வேறு இல்லை.
  3. சிவபூமியாக இருந்த முழு இலங்கைத்தீவு, பௌத்த பெரும்பான்மையாக மாறியது (இதை வெளிப்படையாக சொல்லவில்லை, அவர்கள் , கருத்தில் கொண்டது, 13ம் திருத்தத்திலும்) அத்துடன், காலனித்துவதில், வடகிழக்கு தமிழர் சிவபூமி இராச்சிய பிரதேசம், சிங்கள இராச்சிய பௌத்த பிரதேங்களுடன் இணைக்கப்பட்டது. இப்பொது பிரிக்கப்ட்டு இருப்பது, இந்தியாவில் - பௌத்த பெரும்பான்மை (ladak), இந்து, முஸ்லீம் கலப்பில் இருந்து. (இலங்கையில் - பௌத்த பெருமைப்பாண்மை இடங்கள், இந்து (சைவம்) - முஸ்லீம் கலவையில் இருந்து பிரிவு.) (தொடர்ந்து ஜம்மு, கசமீரை பிரிப்பதாகவும் போக்கு செல்லலாம். இது பாகிஸ்தானில் தங்கி இருக்கிறது. கொள்கை வகுப்பாளர் வெற்றிடத்தில் இயங்குவதில்லை.)
  4. இதில் தான் எம்மவரக்ள் இந்திய கொள்கைவகுப்பாளரை புரியாதது எமது வடக்குகிழக்கு பிரிப்பு தவறு - வரலாற்றில் அது தமிழரின் அனால் ஜம்மு, காஸ்மீர் அப்படி அல்ல. (இந்தியா இப்படி கொள்கை முடிவு எடுத்தது எமக்கு மிகவும் உதவி, பொருத்தம். கச்சமீர், ஜம்மு இரண்டுக்கும் கிட்டத்தட்ட நியாயம்) சுருக்கமாக்க, இயலுமானவரை கிளை வரலாறுகளை தவிர்த்து. ஜம்முகாஸ்மீரில், இறுதியாக இருந்த மன்னார் Hari Sing (இந்தியா உடன் இணைந்தவர்) இன் முப்ப்பாட்டன் குலாப் சிங் (ராஜ்புட் Dogra வம்சம்) முதலே சிற்றார்சர் போன்ற நிலையில் சீக்கிய இராச்சியத்தில் ஜம்மு ஐ கொண்டு இருந்தார். உண்மையில் Gulab Sing (காசுமீரின் இறுதி மன்னார் ஹரி சிங்கின் (இந்தியா உடன் இணைந்தவர்) முப்பாட்டன்) சீக்கிய இராச்சியத்தில் முக்கிய தளபதி. சீக்கிய இராச்சியத்தை திபெத் பகுதிகளுக்கு நீடித்தவர். ஆங்கிலேயர் - சீக்கிய இராச்சிய யுத்தத்தில் Gulab Sing ஆங்கிலேயே பக்கம் மாறிவிட்டார் (இதுவே பொதுவாக நம்ப படுவது). முன்பு யுத்தத்தில் (இப்போதும்) தோற்றவர்கள், வென்றவர்களுக்கு war indemnity பணம் கட்ட வேண்டும். சீக்கிய இராச்சியம் ஆங்கிலேயரால் தோற்றகடிக்கப்பட்டது. சீக்கிய இராச்சியத்திடம் போதுமான பணம் இல்லை. அனால், Gulab Sing, ஆங்கிலேயர் பாகம் நின்றதால் (இதுவே பொதுவாக நம்ப படுவது, வேறு வடிவ கதைகளும் இருக்கிறது), ஆங்கிலேயர் war indemnity பணதின் தொகையை குறைத்து, கச்சமீரை Gulab Sing க்கு சன்மானமாக விற்றனர். ஆங்கிலேயருடன் , சீக்கிய இராச்சியத்தின் சமாதான Amritsar Treaty இன் பொறுப்பாளரும் Gulab Sing (காசுமீரின் இறுதி மன்னார் ஹரி சிங்கின் (இந்தியா உடன் இணைந்தவர்) முப்பாட்டன்)) (அப்படி விற்ற பின், விடுமுறைகளை கச்சமீரில் கழித்து களிப்படைந்து, ஆங்கிலேயர், பெரிய பகுதிகளை கச்சமீரில் வாங்க தெண்டித்தனர், Gulab சிங் , மற்றும் தொடர்ந்த Dogra அரசவம்சம் மறுத்து விட்டது) இதுவே காஸ்மீர், ஜம்மு உடன் இணைந்த மிகச் சுருக்கமான வரலாறு. இதனால் தான் ஜம்மு எப்போதும் இந்து பெரும்பான்மை. இந்தியா உடன் ஜம்முகாஷ்மீர் இணையும் ஒப்பந்தத்தை, ஜம்மு இல் இருந்தவாறே மன்னர் Hari Sing கையொப்பம் வைத்தார். அந்த கையொப்பத்தை பெறுவதற்கு, ச V. P மேனன் (இவருக்கும், சிவ சங்கர் மேனனுக்குக்ம் தொடர்பு இல்லை, நான் அறிந்த வரையில்) ஜம்மு சென்றார் (என்பது உத்தியோக பூர்வ நிலைப்பாடு). V. P. மேனன் வல்லபாய் பட்டேல் இன் இயங்கும் அதிகார வடிவம். (ஆனால், இன்னொரு குறிப்பு வாசித்த நினைவு, கச்மீர் மன்னர் ஹரி சிங் இடம் இருந்து கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தத்தை மவுண்ட் பட்டேன் பெற்றுக்கொண்டதாக) (சிறிய தவறு: நேருவிப் மிக நெருங்கிய உச்ச நம்ம்பிக்கையாளர் K P S மேனன் (சிவசங்கர் மேனனின் பாட்டன் ) ஜம்மு சென்றார் (என்பது உத்தியோக பூர்வ நிலைப்பாடு). ) 24 ஐப்பசி 1947 மன்னர் உத்தியோக பூர்வமாக இந்தியாவிடம் உதவி கோரினார். 26 ஐப்பசி 1947 கையொப்பம் இட்டது, உத்தியோக பூர்வமாக. 27 ஐப்பசி 1947 இந்தியா படைகள் வான் வழியாக தரை இறக்கப்பட்டனர் என்பதே உத்தியோக பூர்வ நிலைப்பாடு. உத்தியோக பூர்வம் என்று சொல்வதன் காரணம், திகதிகளும் , கையொப்பங்களும் மோசடி செய்யப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. (ராஜதந்திரம் = நாகரிகமாக ஏமாற்றுவது, மிகவும் கூரியது)
  5. காஸ்மீரிகள் - முஸ்லிம்களும் , இந்துக்களும் (சிவ வழிபாடு) எல்லா தீவிரலாத அமைப்பின் நிலைப்பாடும் - முஸ்லிகளுக்கு மட்டும். மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகள் காணி சீர்திருத்தத்தை கருவியாக கொண்டு இந்து சனத்தொகையை குறைத்ததை வைத்து பார்க்கும் போதும். அப்படி என்றால் ஜம்முக்கு உங்கள் நிலைப்பாடு / பர்வை என்ன? இங்கே உள்ள சிலர் வரலாறு தெரியாமல் கதைப்பது. நீங்கள் சொல்லுவதை நீங்களாவே உடைத்து விட்ட விற்பன்னர்
  6. இவை இங்கே சொல்லப்பட வேண்டும் என்பதால் இங்கே சிலர் சிந்திக்கவும் தெரியாது, ஈழத்தமிழருக்கும், அவர்கள் சொல்வதுக்கும் பொருந்தும் என்பதை கூட சிந்திக்க தெரியாத *** நிலையில் இருக்கிறார்கள். முதலில் அத்தைகையவர்களுக்கு, எது யதார்த்தம் (அல்லது அப்படி இல்லை), எது வாதம் என்பதை பிரித்தறிவதில் கூட சிநதிக்க தெரியாமல் மொ... கதைப்பது. நான் சொல்லியவை வாதம் அல்ல என்பது கூட புரியாத ... மரம் கூட சிந்தித்து (சூரிய) ஒளி கூடிய நோக்கி வளர்கிறது / வளைகிறது .. அந்த அளவுக்கு கூட சிந்திக்க தெரியாது இருப்பது. குறிப்பாக, அப்படியானவர்கள் காஸ்மீரில் நடந்தது என்பதற்கு சொல்லுவது போல, ஈழத்ததமிழர் சொல்லுவதுக்கும், எந்தவொரு சிந்தனை (அறிவது என்பது பின்) இன்றி பிற சமூகங்கள் பதில் அளிக்கலாம், புறக்கணிக்கலாம், எள்ளி நகையாடலாம் என்பதை கூட புரியாத .... இவர்களை என்னவென்று சொல்வது. (அனால், காஸ்மீரில் 90 ஆண்டு நடந்ததை பற்றியும் அறியாமல், சும்மா காஸ்மீரை மாலைக்கனவு அசரீரியில் கேட்டது என்று நினைவு பிம்பம் உருவாக்கி வாய்க்கு வந்தபடி கதைத்து இருப்பது.) இப்படியான விடயங்களை (இதில் காஷ்மீரில் நடந்த) சொல்லும் போது, எனது அனுபவத்தில் எம்மை பற்றி வெளியாரிடம் (சீனரிடம் கூட) சொல்லும் போது முதலில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறதே அவர்கள் அணுகியது. ஏனெனில், அவர்கள் (எமது பிரச்சனை தோன்றிய அறிவு இல்லாவிட்டாலும்) சுயமாக சிந்திக்க தெரிந்து இருப்பது. இறுதியில் எமது கண்ணை நாமே குத்தும் அளவுக்கு வந்து இருக்கிறது, சுயமாக, சொந்தமாக சிந்திக்கத் தெரியாது , இணையத்தை பிரதி செய்யும் கிளிப்பிள்ளை போக்கால். ஆனால், இந்த சிந்திக்காது கதைத்து எமது கண்ணை நாமே குத்தும் உரிமை எவருக்கும் இல்லை, குறிப்பாக ஈழத்தமிழர் எவருக்கும்.
  7. நீங்கள் அறிந்தவை எவை என்று ( இங்கு அலசப்படும் விடயங்ளோடு உங்களின் சிந்தனையில்தொடர்பு உள்ளவை) சாராம்சமாக சொல்ல முடியுமா?
  8. வாசித்ததில் நினைவில் உள்ளவை. காஷ்மீரின் நிலை, இந்தியாவுடன் இணையும் போது (சிறு வரலாறு), காணியை சிறு அரச வம்ச குழுமம் வைத்து இருந்தது . அது பிரித்தானியர் கஸ்மீரை, (சீக்கிய இராச்சியத்தை வென்ற பின்), Dogra ராஜ்புட் அரச வம்சத்துக்கு விற்றதில் (1846 என்று தான் நினைவு) இருந்து தொடங்குகிறது. இந்த Dogra அரச வம்சமும் இந்து தான், பிருத்தானியர் சும்மா காணி விற்பது போலவே காஷ்மீரை விற்றனர் Dogra அரச அம்சத்துக்கு, ஏனெனில் பிரித்தானிய- சீக்கிய இராச்சிய யுத்தத்தில், Dogra பிரித்தானியரை ஆதரித்தால். அனால், சீக்கிய இராச்சியமும், காஷ்மீர் முஸ்லிம்களை அவ்வளவு நன்றாக நடத்தவில்லை என்றும் பிரித்தானியரின் பார்வை. இந்தியாவுடன் இணையும் போது, Dogra வரி, நிலசுவாந்தார் கொடுமை ஆட்சியில். சமூக மட்டத்தில் காஸ்மீர் பண்டிதர்கள் (பிராமணர், இந்துக்கள், நேருவின் அடியும் இந்த காஷ்மீர் pandits இல் தான் உள்ளது என்பதும்), , சமூக அளவில் அடுத்த நிலை அடுத்த நிலையில் முஸ்லிம்கள், இந்துக்களும் குடிமை கமக்கரராக ( tenant cultivators) ஆக இருந்தாக்கள், Dogra நிலசுவந்தருக்கு. அடுத்த நிலை அடிமட்டம், முஸ்லிம்களும் , இந்துவுகளும் இருந்தார்கள். அத்துடன் பிரிவினையில் பாகிஸ்தானின் இருந்து வந்த பஞ்சாபிகளும், இந்துக்களும் , இந்த tenant cultivators க்கு கீழ் தொழில் செய்ய தொடங்கினார்கள், அடிமட்டமாக. சமய (முஸ்லீம், அல்லாதோர்) மட்டத்தில், முஸ்லிம்களிடமும் காணி இருந்தது - அது அந்த பூக்கள் , பழங்கள், பட்டு பயிரிடும் காணிகள், காஷ்மீரில் மிக உயர் பெறுமானம் உள்ளவை. (இவை காணி சீர்த்திருத்தத்துக்குள் வரவில்லை ) காணி சீர்திருத்தம் 1947 இல் யஹோடங்கியது. முஸ்லீம் பெரும்பான்மை என்பதால். காணில் பெரும்பாலும் அவர்களுக்கும் (முஸ்லீம் tenant cultivators), காஸ்மீர் அரசாங்கத்துக்கும் சென்றது. இந்து tenant cultivators க்கும் போனது. அடிமட்டத்தில் இருந்தவர்களுக்கு ( tenant cultivators ஆக இல்லை), ஒன்றும் கிடைக்கவில்லை, அதில் பெரும்பான்மையாக பாதிக்கபட்டது இந்துக்கள். ஏனெனில் இந்து tenant cultivators சிறுபான்மை. பெரும்பான்மை முஸ்லீம் tenant cultivators காணி கிடைத்ததில்,முஸ்லீம் அல்லாதோர் வேலையும் இழந்தனர். இதில் பிரிவினையில் வந்த பஞ்சாபிகள், இந்துக்கள் உள்ளடக்கம். அவர்களின் தொழிலை முஸ்லிம்கள் அடிமட்டத்துக்கு பொதுவாக சென்றது . இதில் இந்து tenant cultivators க்கு காணி கொடுக்கப்படாமல் விடப்பட்டதும் இருக்கிறது , அடிப்படையாக, காணி சீர்த்திருத்தம், இந்துக்களை வேலை இழக்க, காணி இழக்க வைக்கப்பட்டு (துரத்தப்படுவதத்திற்கு) பாவிக்கப்பட்டது, ஏனெனில், சீர்திருத்தத்தை செய்தர்க் ஜம்மு-காஸ்மீர் அரசாங்கம் முஸ்லீம் பெரும்பான்மை. (காஷ்மீர் நவீன பொருளாதாரம் அல்ல வேறு வேலை தேடுவதற்கு அந்த நேரத்தில்) நிலச்சுவாந்தர் முறை நீக்கப்பட்டது நன்மை. காணி சீர்திருத்தம் 1953 வரை நடந்தது, ல்லாம் ஒரேயடியாக செய்யமுடியதால் , பாதிக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் (சிறு) தொகுதி தொகுதியாக. அது வெளியில் தெரியவில்லை. அவர்கள் அநேகமாக வந்தது ஜம்முவுக்கு. ஏனெனில் ஜம்மு இந்து பெரும்பான்மை. ஜம்முவிலும் முஸ்லீம் பெரும்பான்மை இடங்கள் இருந்தது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினால் கொல்லப்பட்டு (RSS செய்தது, டோக்ரா அரசாம்சம் சேர்ந்து என்ற நம்பிக்கையும் இருக்கிறது) இந்த முஸ்லிகள் ஒரு பகுதி காஷ்மீருக்கு, மற்ற பகுதி பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்டனர். 1990 கலியே பொதுவாக காஸ்மீர் pandits மீது கைவைக்கப்பட்டது. இதை 1990 களில் நடந்ததுக்கு. இதை ஒன்றை மட்டும் கருத்தில் எடுக்காமல் தேடி பாருங்கள் பல இணைப்புகள் இருக்கிறது. https://sites.tufts.edu/praxis/2023/06/18/the-plight-of-kashmiri-pandits/ https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/ (இது காணி சீர்திரும் நடந்தது என்பதற்கு மட்டும். இதில் இருந்து நான் அறியவில்லை ) Fortune IndiaHow draconian land reform act deprived Hindus of their la...(இதில் இருந்த்தும் நான் அறியவில்லை, அனால், இப்படி நடந்து இருக்கிறது என்பதற்கு) அனால், இந்தியாவின் காஷ்மீருக்கு பல ஆய்வுகள்,விமர்சனங்கள் ... என்று ஆழமான, பரவலாக இருக்கிறது. எனவே நடப்பதை / நடத்தை மறைப்பது கடினம். அனால், பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு மிகவும் குறைவு
  9. வாசித்ததில் நினைவில் உள்ளவை. காஷ்மீரின் நிலை, இந்தியாவுடன் இணையும் போது (சிறு வரலாறு), காணியை சிறு அரச வம்ச குழுமம் வைத்து இருந்தது . அது பிரித்தானியர் கஸ்மீரை, (சீக்கிய இராச்சியத்தை வென்ற பின்), Dogra ராஜ்புட் அரச வம்சத்துக்கு விற்றதில் (1846 என்று தான் நினைவு) இருந்து தொடங்குகிறது. இந்த Dogra அரச வம்சமும் இந்து தான், பிருத்தானியர் சும்மா காணி விற்பது போலவே காஷ்மீரை விற்றனர் Dogra அரச அம்சத்துக்கு, ஏனெனில் பிரித்தானிய- சீக்கிய இராச்சிய யுத்தத்தில், Dogra பிரித்தானியரை ஆதரித்தால். அனால், சீக்கிய இராச்சியமும், காஷ்மீர் முஸ்லிம்களை அவ்வளவு நன்றாக நடத்தவில்லை என்றும் பிரித்தானியரின் பார்வை. இந்தியாவுடன் இணையும் போது, Dogra வரி, நிலசுவாந்தார் கொடுமை ஆட்சியில். காஸ்மீர் பண்டிதர்கள் (பிராமணர், இந்துக்கள், நேருவின் அடியும் இந்த காஷ்மீர் pandits இல் தான் உள்ளது என்பதும்), , சமூக அளவில் அடுத்த நிலை அடுத்த நிலையில் முஸ்லிம்கள், இந்துக்களும் குடிமை கமக்கரராக ( tenant cultivators) ஆக இருந்தாக்கள், Dogra நிலசுவந்தருக்கு. அடுத்த நிலை அடிமட்டம், முஸ்லிம்களும் , இந்துவுகளும் இருந்தார்கள். அத்துடன் பிரிவினையில் பாகிஸ்தானின் இருந்து வந்த பஞ்சாபிகளும், இந்துக்களும் , இந்த tenant cultivators க்கு கீழ் தொழில் செய்ய தொடங்கினார்கள், அடிமட்டமாக. முஸ்லிம்களிடமும் காணி இருந்தது - அது அந்த பூக்கள் , பழங்கள், பட்டு பயிரிடும் காணிகள், காஷ்மீரில் மிக உயர் பெறுமானம் உள்ளவை. இவை காணி சீர்த்திருத்தத்துக்குள் வரவில்லை காணி சீர்திருத்தம் 1947 இல் யஹோடங்கியது. முஸ்லீம் பெரும்பான்மை என்பதால். காணில் பெரும்பாலும் அவர்களுக்கும் (முஸ்லீம் tenant cultivators), காஸ்மீர் அரசாங்கத்துக்கும் சென்றது. இந்து tenant cultivators க்கும் போனது. அடிமட்டத்தில் இருந்தவர்களுக்கு ( tenant cultivators ஆக இல்லை), ஒன்றும் கிடைக்கவில்லை, அதில் பெரும்பான்மையாக பாதிக்கபட்டது இந்துக்கள். ஏனெனில் இந்து tenant cultivators சிறுபான்மை. பெரும்பான்மை முஸ்லீம் tenant cultivators காணி கிடைத்ததில்,முஸ்லீம் அல்லாதோர் வேலையும் இழந்தனர். இதில் பிரிவினையில் வந்த பஞ்சாபிகள், இந்துக்கள் உள்ளடக்கம். அவர்களின் தொழிலை முஸ்லிம்கள் அடிமட்டத்துக்கு பொதுவாக சென்றது . இதில் இந்து tenant cultivators க்கு காணி கொடுக்கப்படாமல் விடப்பட்டதும் இருக்கிறது , அடிப்படையாக, காணி சீர்த்திருத்தம், இந்துக்களை வேலை இழக்க, காணி இழக்க வைக்கப்பட்டு (துரத்தப்படுவதத்திற்கு) பாவிக்கப்பட்டது, ஏனெனில், சீர்திருத்தத்தை செய்தர்க் ஜம்மு-காஸ்மீர் அரசாங்கம் முஸ்லீம் பெரும்பான்மை. (காஷ்மீர் நவீன பொருளாதாரம் அல்ல வேறு வேலை தேடுவதற்கு அந்த நேரத்தில்) நிலச்சுவாந்தர் முறை நீக்கப்பட்டது நன்மை. காணி சீர்திருத்தம் 1953 வரை நடந்தது, ல்லாம் ஒரேயடியாக செய்யமுடியதால் , பாதிக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் (சிறு) தொகுதி தொகுதியாக. அது வெளியில் தெரியவில்லை. அவர்கள் அநேகமாக வந்தது ஜம்முவுக்கு. ஏனெனில் ஜம்மு இந்து பெரும்பான்மை. ஜம்முவிலும் முஸ்லீம் பெரும்பான்மை இடங்கள் இருந்தது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினால் கொல்லப்பட்டு (RSS செய்தது, டோக்ரா அரசாம்சம் சேர்ந்து என்ற நம்பிக்கையும் இருக்கிறது) இந்த முஸ்லிகள் ஒரு பகுதி காஷ்மீருக்கு, மற்ற பகுதி பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்டனர். 1990 கலியே பொதுவாக காஸ்மீர் pandits மீது கைவைக்கப்பட்டது. இதை 1990 களில் நடந்ததுக்கு. இதை ஒன்றை மட்டும் கருத்தில் எடுக்காமல் தேடி பாருங்கள் பல இணைப்புகள் இருக்கிறது. https://sites.tufts.edu/praxis/2023/06/18/the-plight-of-kashmiri-pandits/ https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/ (இது காணி சீர்திரும் நடந்தது என்பதற்கு மட்டும். இதில் இருந்து நான் அறியவில்லை ) (இதில் இருந்த்தும் நான் அறியவில்லை, அனால், இப்படி நடந்து இருக்கிறது என்பதற்கு) அனால், இந்தியாவின் காஷ்மீருக்கு பல ஆய்வுகள்,விமர்சனங்கள் ... என்று ஆழமான, பரவலாக இருக்கிறது. எனவே நடப்பதை / நடத்தை மறைப்பது கடினம். அனால், பாக்கிஸ்தான் காஷ்மீருக்கு மிகவும் குறைவு நிர்வாகம் இதை நீக்கிவிடவும்
  10. இல்லை. அனால், நான் எதுவென்றாலும், யதார்த்தம் ஒன்று தானே இருக்க முடியும்.
  11. விபரம் தேவை இல்லை. ஏனெனில், UN படி, கச்சமீர் அந்த உரிமையை இழக்கிறது. மிகுதி தெரிவுகள் எல்லாம் இந்திய அரசின் முடிவுகள். அன்ஹா இடத்தில், இந்தியா காஷ்மீரிகளுக்கு (முஸ்லிம்களுக்கு) நியாயமாக நடத்துகிறது, இஸ்லாமிய தன்மையை மாற்றாமல். அனால், காஸ்மீரிகள் (முஸ்லிம்கள்) முதலே காணியை பிடுங்கி, கலைத்து முஸ்லீம் அல்லாதோரை காஸ்மீரில் இருந்து நீக்கிவிட்டு , இந்து தன்மை உலா ஜம்முவையும் சொந்தம் கொண்டாட நினைப்பது, ஜம்மு மக்களுக்கு எவ்வளவு அநியாயம். அதை இந்தியா நீக்கி இருக்கிறது. இதுதான் யதார்த்தம்.
  12. கச்சமீர் மாநிலம் இல்லை அன்றைய நிலையில் - இந்திய அதிபர் ஆணையால் சிறப்பு உரிமை வழங்கப்பட பிரதேசம். அனால், அதை தானே UN (மேற்கும்) சொல்கிறது நீண்ட காலம் ஒரு அமைப்பு இருந்த்து விட்டால் அதை மாற்றுவது சரி அல்ல என்று. UN அபைப்பு என்பது எந்த பகுதி, பிரதேசம் எந்த அரசுடன் இருக்கிறது, அல்லது அப்படி இருக்க வேண்டும் என்பதை un ஏற்றுக்கொண்டு இருப்பது. உள்ளக அமைப்பை பற்றி un சொல்லவில்லை. அதிபர் ஆணையால் சிறப்பு உரிமை வழங்கப்பட பிரதேசம் என்பது உள்ளக அமைப்பு. un இன் நிலைப்பாட்டால், (ஏனெனில் கஹ்மீர் இணைவு ஒப்பந்தம் un இல் பிரஸ்தாபிக்கப்பட்டு, பதியப்பட்டது), அந்த உரிமை இல்லாமல் போகிறது. அதை வைத்து, இந்தியா காஷ்மீரை பிரித்து, பாரபட்சமாக நடத்தவில்லை
  13. rss இடம் இருப்பது வேறுவிடயம். அனால் அது அரசுக்குள் வந்து விட்டது என்பது அவரின் கொள்கை பற்றி புரியாத, பொத்தாம் பொதுவான கதை . அவர் சொல்வது தோற்றத்தை வைத்து, உள்ளே என்ன நடக்கிறது என்பதை விளங்கி அல்ல. அது அவரின் (வசதி) புரிதல், கதை. அதை அவரிடமே கேளுங்கள். காஷ்மீருக்கு வந்த கொள்கை எவ்வளவு துல்லியமானது, rss சொல்லுவதை தவிர்த்து உள்ளது, அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில், வரலாற்றையும் கருத்தில் கொண்டு, (பாகிஸ்தான் அதன் காஷ்மீரில் செய்யும் இனப்பரம்பல் மாற்றுவதை, நிலத்தை பிடுங்குவதை கருத்தில் கொண்டு), அநேகமாக எல்லோருக்கும் ஏறத்தாழ சமமாக, பொருளாதார விருத்தியையும் முன்னெடுக்கும் நோக்கில், வருங்கால தீர்வு என்பததற்கும் இடம் விட்டு (அதாவது இவ்வளவும் நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரை பிறிம்பாக விட்டு) என்பது அவருக்கு தெரியாது. (சும்மா கதைப்பது). ஏனெனில் சிந்திப்பது இல்லை. அதை அறியவும் முயதற்சிப்பதும் இல்லை. அத்துடன் UN இல் பதியப்பட்ட காஸ்மீர் இணைவு ஒப்பந்தத்தை மீறவில்லை , மேற்கு சொல்லும் சர்தேச நியதியால். அதாவது, நீண்ட காலம் ஒரு மைப்பு இருந்தால் அதை குழப்புவது சரி அல்ல. காஸ்மீர் இருந்தது இந்தியா நிர்வாகத்தின் / ஆட்சியின் கீழ். இந்திய கொள்கைவகுப்பாளர் சர்வதேச முனையிலும் முரண்பாடு இல்லாமலே கொள்கையை வகுத்து இருக்கின்றனர். (இதனால் தன UN ஒன்றும் சொல்லவில்லை. பாகிஸ்தான் இத்தியா செய்ததை செக்யூரிட்டி கொவுன்சில் க்கு கொண்டு போக முன்பே தடுக்கப்பட்டு விட்டது, அனால் பாகிஸ்தான் சிறிது சிரித்தாக செய்து, 2018 இல் அதன் காஸ்மீரில் எல்லாற்றையும் இறுதியாக பிடுங்கிவிட்டது)) (ஆனல் இதில் முரண்படுவதும் மேட்ற்கு தான் தைவானில், UN தைவான் சீன மாகாணம் எனநின்றே சொல்கிறது. மேட்ற்கு தான் தைவான் சுதந்திர தனிநாடாக வேண்டும் என்பது ) (அவர் போதம் பொதுவாக சொல்லுவது காஸ்மீரில் வாக்கெடுப்பு நடக்க வேண்டும் - முதலே காணியை பிடுங்கி, கலைத்து இனப்பரம்பலை மாற்றிவிட்டு முஸ்லிம் பரம்பல் செறிவை கூட்டிவிட்டு , காஸ்மீரிகளுக்கு, இந்து ஜம்முவுவின் வாக்கெடுப்பில் இடம் கொடுக்க வேண்டும் என்பது, அனால் இந்தியா காஷ்மீரின் முஸ்லீம் தன்மையை ஒருபோதும் மாற்றவில்லை. காஸ்மீரில் பல ஆதி சிவன் கோயில்கள் இருந்தும்) (rss சொல்வது படி நடந்து இருந்தால், கசமீரை வடக்கு தேற்றகாக 2 ஆக பிரித்து, பஞ்சாப் பக்கத்து பகுதியை பஞ்சாப் உடனும், இமாலய பிரதேச பகுதியை ஹிமாச்சல் பிரசதேச மாநிலத்துடனும் இணைத்த இருக்க வேண்டும். இல்ஸ்லாமிய தன்மையை நீக்க. இந்தியா, கொள்கைவகுப்பாளர் நினைத்தால் முடியாத?) rss போன்றவற்றையும் ((அந்த நேரத்தில் rss பெரிய பகுதி இரகசிய அமைப்பு), அவை அரசியலுக்கு வராது அரசில் / அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்த எடுக்க கூடிய முயற்சிகளையும் கருத்திலும் கொண்டு தான் அம்பத்காரும், மிகுதி அறுவரும் இந்திய யாப்பை வடிவமைத்தனர்.
  14. இதை அறிந்துளேன். இங்கு எங்காவது சொல்லியிருக்கிறேனோ தெரியாது. அதில், அவரை, தற்செயலாக நதந்த சம்பவத்தில், உடனடியாக சமயோசிதமாக சிந்தித்து சிறிய தாக்குதல் திட்டத்தை சொன்னதில் புலிகள் அவரை உடனடியாக வரவேற்றதாக. இதன் விபரங்களை நான் அறியவில்லை
  15. இதை தலைவர் கேட்டு இருந்தால், அவர் எதிரார்த்த சமூகத்தில் இப்படி மு.. மு... விதிவிலக்குகளும் இருக்கிறதே என்று கவலை அடைந்து இருப்பார். (அமரன் மாற்றம் பற்றியதா? இதுவா படம் சொல்லும் செய்தி?) படத்தை சமூக எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதில் கூட ஓர் செய்தி, தகவல் உள்ளது. அமரன் படம் வெற்றி , எனவே தமிழ் நாடு பரந்த இளம் சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த உணர்வுகளோடு ஒத்து போய், ஏற்றுக்கொண்டும் இருக்கிறது படத்துக்கு வெளியேயும், படம் வெற்றி, தோல்வி என்பதில், கதையை பொறுத்து, சமூக மனவோட்டத்தை பற்றி சொல்லும் செய்தி இருக்கிறது. அனால், இது ஒரு சுட்டி மாத்திரம் சமுக மனவோட்டத்தை அறிவதில். (வெளிப்படையான உதாரணத்துக்கு சொன்னது) (சும்மா படத்தில் 'கூத்தாடிகள் காட்டுவதை' மட்டும் நுனியாக அன்ஹா நேரத்தில் இரசித்து விட்டு, அதற்கு அப்பால் சிந்தனை/ அறிவு இல்லாத, படம் பற்றி கூத்தாடி காட்டும் ... செய்வது கூட அறியாமல்) மொத்தத்தில் படத்தின் உள்ளே, வெளியே பரிமாணங்கள் தெரியாது. எனவே இதை பற்றி மேலும் கதைப்பது வீண்.
  16. நீங்கள் வேண்டியது உங்களுக்கு உவப்பானது மட்டுமே. இந்தியா, தமிழ்நாடு , மற்ற மாநிலங்களின் தேசிய கருத்துவாக்கத்துக்குள் எந்த படி நிலையில், எந்த திசை நோக்கி நகர்க்கருகிறது என்பது நீங்கள் அறியவேண்டியதில் இல்லை என்றதை நீங்களே சொல்வது நல்லது. ஓர் சிறிய உதாரணம் கேரளத்தில் இந்தியாவை தேசம் என்கிறார்கள். தமிழ் நாட்டில் அந்த நிலை இன்னும் வரவில்லை , அனால் பல விடயங்களில் அவ்வாறே அவர்களின் உணர்வு இருக்கிறது. தேசம் (Nation) என்பதன் வரைவிலக்கண படி, இப்போதும் இந்திய தேசம் அல்ல அனால், இந்திய தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசு. பி.கு : எப்போது நடிகர்கள் / நடிகைகளை கூத்தாடிகள் என்று சொல்லும் போதே தெரிகிறது, படம் பற்றிய புரிதல் ஆழம் உங்களால அவ்வளவு தான் படம் நேரடியாக சொல்லாமல் சொல்லும்ம், உருவாகும் ஆள் கருத்துக்கள், தகவல்கள் போன்றவை உங்களு இருப்பதே தெரியாது. நீங்கள் தேவை என்பது உங்களுக்கு இனிப்பது, அதுவும் நுனி நாக்கில் அல்லது மனதில், மதியில்
  17. உங்களுக்காக, அல்லது வேறு எவருக்காகவும் நேரமும், உலகும், இந்தியாவும்,வேறு நாடுளும் காத்து, தாமதித்து நிற்பதில்லை. தயவு செய்து நடிகர் மாதவனின் பேட்டியை ஆவது பார்க்கவும், நேரம், காலம், போக்குகளை அறிய வேண்டும், அவற்றுடன் ஒற்றி வாழ்கை பயணம் ஏன் இருக்கவும் வேண்டும் என்பதற்கு.
  18. இதில் காலத்தில் பிந்தி இருக்கிறீர்கள். கடந்த 3 மாதத்தில் ஒரு படம் வந்தது , அமரன் பெயர் என்று நினைக்கிறன். தமிழ்நாட்டில் வெற்றிப் படம். இதில் இருந்து போக்குகளை உங்களால் ஆய்ந்து, உணர்ந்து கொள்ள முடியாது என்றால், வேறு எவற்றாலும் நீங்கள் அறிவை பெற முடியாது. மிகுதி நீங்கள் சொல்லும் எதுவும் அரசு / அரச யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை.
  19. இந்திய பற்று இருக்கலாம். இல்லாமல் விடலாம் அனால், நான் சொல்வது உணர்வுகளுக்கு அப்பாற்றப்பட்ட யதார்த்தம். நீங்கள் சொல்வது உணர்ச்சி கதை, அரசு என்பதன் பரிமாணப் புலங்கள் (இவற்றில் பல இது தான் தொட்டு காட்ட முடியாது, சிந்தனை அளவிலேயே இருப்பது, புரியப்படுவது, விளங்கப்படுவது ..) புரியாமல். முதலில், அரசகலை என்ற தமிழ் சொல்லால் வரும், புரியப்படும், உருவாகும் விளக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும்.
  20. இது பொதுவானது. சொல்லப்பட வேண்டும் என்பதால். (பாகிஸ்தான் பிரிவு - தும்பை விட்டு வாலை பிடிப்பது.)) எங்களுக்கு இவளவு அழிவு நடந்தும், இங்கு பாகிஸ்தானின் பிரிவை, அதுவு இந்திய அரசு விரும்பும் என்பது. பாக்கிஸ்தான் பிரிவதை இந்திய அரசு, மற்றும் படை விரும்பாது (இவற்றில் நான் சொல்லிய அதிகார பீட கொள்கை தலையீடு, தீர்மானம். மறுப்பது அவரவரின் பிரச்சனை.). (இந்தியா, பாகிஸ்தான் மிகவும் ஒற்றுமையானா ஒரேயொரு விடயம், இலங்கை 2 அரசுகளாக உடையக்கூடாது என்பதில், மிகுதி எல்லாமே 2ம் - 3ம் பட்சம், ராஜீவ கொலை 1 ம் பட்சமாக பார்க்கப்பட்டது ஒரு சில குறிப்பிட்ட வட்டத்தில் அரசக்குள்ளும், வெளியேயும், ஆத்திரம் இருந்தாலும், முழு அரச அளவில் அல்ல. அனால், புலிகளுக்கு மேல் முழு அரசுக்கும் ஆத்திரம்) இதில் (பாகிஸ்தான் உடைவது) மிக கூர்மையான, நீண்ட, நிரந்தர தாக்கம் இந்திய அரசுக்கே என்பதை இன்னும் இங்குள்ள சிலருக்கு புரியவில்லை. (ஏனெனில் ஏதாவது ஒரு அரசு உடைந்து புதிய அரசு ஏதோ ஒரு பெருமான்மை இனத்தின் அரசாக வரும், அப்படி புதிய அரசு உருவாகி, பிரிய முதல் இருந்த அரசும், புதிய அரசும் சுமுகமாக இருந்தால், , இந்தியாவில் பல கூர்மையான வேறுபாடு பிரச்சனைகளுக்கு அப்படி ஏன் தீர்வு தேடக்கூடாது என்ற நிலை உருவாகும் - மொத்தத்தில் இந்தியாவை Balkanisation ஆக்குவதில் முடியும். இது ஒரு scenario) பங்களாதேஷ் கூட, (முதலில் சுதந்திரத்தில் பாக்கித்தான், இந்தியா பிரிவு இருந்தும்), இந்தியா பிரிக்க முற்படவில்லை. பாகிஸ்தான் படை பங்களாதேஷ் ழு மக்களையும் தாக்காது விட்டு இருந்தால், பங்களாதேஷ் பிரிக்கப்பட்டு இருக்காது. பங்களாதேஷ் பிரிப்பு விதிவிலக்கு. அதாவது, பங்களாதேஷ் இல் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கை, அரசியல்வாதிகளினதும் மேற்பார்வையில் இருந்து இருந்தால், பங்களாதேஷ் பிரிந்து இருப்பதன் சாத்திய கூறு மிக குறைவு. isi முழுதாக முடிவெடுத்து தான் பங்களாதேஷ் நிலை உருவாகிய. பங்களாதேஷ் பிரிந்த பின் அதில் தவறு இழைத்து விட்டமோ (அதாவது இந்திராகாந்திக்கு கடிவாளம் போடவில்லை என்று) என்று கொள்கை தீர்மானம் எடுக்ககூடிய பீடங்கள் அவர்களே தம்மை சந்தேகித்த நிலை இருக்கிறது. அயலக மற்றும் தூர அயலக அரசுகளும் விரும்பாது. மறு வளமாக இந்திய அரசு விரும்புகிறது என்றால், மற்ற அரசுகள் இந்தியா பிரிவதை ஓர் தெரிவாக எடுத்துக்கொள்ளும், எந்த (இந்திய) அரசும் இந்த நிலையை உருவாக்காது. (இப்படித்தான் சீனாவில் இருந்து ஒருவர் இந்தியா பிரிவது / பிரிப்பதை பற்றி எழுதி இருந்தார். அவருக்கு பின் எந்த பகிரங்க ஊடகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார். இப்பொது (அநேகமாக) அவர் எந்த துறைசார் துறையிலும் இல்லை.) ஆழ்ந்து பார்த்தால், ஒரு அரசு, இன்னொரு அரசின் நிலத்தை கைப்பற்றுவதை (பாதிக்கப்படும் அரசுக்கு பெரிய மானப் பிரச்சனை என்றாலும்) ஒப்பீட்டளவில் பெரியது அல்ல, ஒரு அரசுக்கு உள்ளேயிருந்து அரசு தரப்பு அல்லாத ஒரு தரப்பு அரச தரப்பு ஆகுவது உடன் ஒப்பிடும் போது என்பதே எல்லா அரசுகளின் பார்வையும். இதை பற்றி ஓரளவு விடயம் தெரிந்த சிங்களவர்களுடன் கதைக்க முடியுமாயின், கதைத்து அவர்களின் உடனடி பதில் என்ன என்பதை இங்கு சொன்னால் நல்லது. (தமிழரில் பொதுவான பிரச்சனை , அரசு நெடுங்காலம் இல்லாமல், அரசு (கொண்டுள்ள இனங்களின்) சிந்தனை புலத்துக்குள் இருந்த்து விலத்தி விட்டோம்). (இந்தியாவில் உள்ள தனி அமைப்புகள் பாகிஸ்தான் பிரிவு விரும்புவது வேறு, பிஜேபி, ரஸ்ஸ் உள்ளடக்கம்) (ஈழத்தமிழரை பொறுத்தவரை இந்திய அரசு அமைப்பு, மற்றும் பிராந்திய நிலைமை, பார்வை ஒரு சாபம். அப்படி , இன ஒடுக்கல், அழிவில், இந்தியாவால் பிரிக்கப்பட்ட பங்களாதேஷ் எமது பிரிவை எதிர்க்கிறது, பாக்கிஸ்தான் பிரிவை விரும்பவில்லை, ஏனெனில் தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று)
  21. பகிஸ்தாகனிடம் அமெரிக்கா f-16 இருக்கிறது. அவை 80 களில் வாங்கப்பட்டது. அனால், பாவிப்பு ஒப்பந்தம் (EULA) தடுக்கிறது, இன்ஹியாவுக்கு எதிராக பாவிப்பதை. இதனால் தான் பாகிஸ்தான் 4-5 தலைமுறைவிமானங்களை சண்டை விமானங்களை சீனாவிடம் இருந்த்து கொள்வனவு செய்தது. சீன நிபந்தனைகள் போடுவதிலை, விற்கும் தொழில்நுட்பத்தை பாவிப்பது, வாங்கும் அரசின் நியாயாதிக்கத்துக்கு உட்பட்டவை என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால், பொதுவாக பாகிஸ்தான் அமெரிக்கா செல்வாக்கு கோளத்தில் இருந்து விடுபட்டு விட்டது. cpec (china pakistan economic corridor ) , BRI, பரந்த பொருளாதார, சீனாவே பாகிஸ்தானின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி, ஆயுத, உளவு போன்ற உறவுகளை வளர்த்து. இதை குழப்பும் / மாற்றும் ஒரு நோக்கத்திலும் (முன்பு சொல்லியது) மற்றும் சீன தொழிநுட்பத்தை கேலிக்கு உரியதாக்கவும் (சீனா தொழில் நுட்பம் வேலை செய்யாது என்ற எதிர்பார்ப்பில் ), தாம் (மேற்கு, அமெரிக்கா) நல்ல பிள்ளைகள் போல வெளிப்படையாக ஒன்றும் சொல்லாமல், தலையிடாமல் இருந்தது, தெளிவான வெற்றி தோல்வி இல்லாவிட்டாலும், இந்தியா பாகிஸ்தானின் பெருமளவு ஆயுத வளங்களை அளித்து விடும் என்ற நம்பிக்கையில். உண்மையில், அவை இந்தியாவை ஆதரித்தன. (சர்வதேச, அரசுகள் விடயங்களில் எதிர்கா விட்டால் ஆதரிப்பது என்பது ராஜதந்திர நிலைப்பாடு / பொருள்) அது பிழைத்து, புளித்து போயிவிட்டது. இதில் அமெரிக்கா அதுவாக தலையிட்டது என்பதன் ஒரேயொரு சூழ்நிலை ஆதாரம், இந்யா பகிரங்க அறிவுப்பு எதையும் வெளியிடவில்லை, அமெரிக்கா அனுசரணையை, உதவியை வேண்டி. (அனால், இந்தியாவுக்கு ராஜதந்திரமாக சொல்லி இருக்கலாம் உங்களால் பாகிஸ்தானை சமாளிக்க முடியாது, தொடர்ந்தால் கோவணமும் போகவேண்டிய நிலை வரலாம் என்று. அதனால் அமெரிக்காவின் மோதலை தணிக்கும், நிறுத்தும் அனுசரணை, உதவிக்கு அனுமதிக்கும் படி) பொதுவாக, இப்படியான நிலைமைகளில் அமெரிக்கா வலியுறுத்துவது அனுசரணை, உதவி வேண்ய அரசு பகிரங்க அறிவுப்பு விட வேண்டும் என்று . குறிப்பாக தலையிட மாட்டோம் என்று முன்பு சொல்லிய விடயங்களில். ஏனெனில், அமெரிக்கா இந்திய இழப்பை, அதுவும் போர்விமானங்கள் (ஆகாய மேலாண்மை இழப்பு) இழப்பை எதிர்பார்க்கவில்லை, இந்தியா இழந்தது அமெரிக்காவுக்கு முகம் கறுத்து விட்டது.
  22. எதை சொன்னாலும் அவர்கள் ஒரு அரசு. அதற்கான கெளரவம் எங்கும் இருக்கிறது. பாகிஸ்தான் கூட இந்தியா மீது அப்படியான மரியாதை வைத்து இருக்கிறது. அப்படியே அதன் தலைமைகளுக்கும் கெளரவம் எங்கும் இருக்கிறது. இவை இரண்டும் அடிபடும், ஒன்றுக்கு ஒன்று சம நிலையில் அரசுக்களாக. (அனால் எமை அவர்கள் அரசாக, ஏன் மக்களாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை.) அதை மறந்து விடாதீர்கள்.
  23. cruise missile பயணிக்கும் முறை, நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி. எந்த மின்காந்த அலைகளும் (ரேடார், laser ..) அப்படி நிலம் அல்லது நீர்மட்டத்தோடு ஒற்றி, சக்தி இழக்காது பிரயாணிக்க முடியாது. (ஒப்பீடு, இடி, மின்னலையே, அதாவது அவ்வளவு சக்தியை நிலம், நீர் உறுஞ்சி விடுகிறது ) அது தான் மிக கடினம் cruise missile ஐ அடையாளம் காண்பது அப்படி, நில, நீர்பரப்பை தன்மையை (உ.ம். மலைப்பாங்கில் கடினம்) பொறுத்து, போர்விமானகளும் பயணிக்க முடியும். மிகச் சிறந்த வரலாற்று உதாரணம், இஸ்ரேல் போர்விமானங்கள் , அப்படி சினாய் (எகிப்து) இல் இருந்து தாழ்ந்து நிலத்தோடு ஒற்றி பறந்து , எகிப்த்தின் ரேடார் இல் விழாமல் , எகிப்து போர்விமான தரிப்பு இடத்தை அடைந்து, எகிப்தின் விமான படையின் எல்லா போர் வினங்களையும் ஒரே தடவையில் அழித்தது. (அனால், எகிப்தின் சிந்திக்காத விமானப்படைக்கு, ஏன் போர் விமானங்களை?, எந்த படையாவது எல்லா போர் விமானங்களையும் ஓர் இடத்தில திறந்த வெளியில் தரித்து வைக்குமா?, சிந்தித்து இருந்தால்) பாகிஸ்தான் விமானப்படையில் தெரிவது இஸ்ரேல் இன் சிந்தித்து, நிதானித்து, திட்டம் தீட்டி, பொறிவைத்து அடிக்கும் போக்கு.
  24. இவை தென்சீன கடல், தாய்வானில் தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு சொன்னது போல சீனாவின் அணுகுமுறை 2 வழிகளில் - ஒன்று மேற்கிட்ம் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒத்தது, மற்றது எதிரானது , 2 ஐயும் விருத்தி செய்கிறது. அத்துடன் , அது எண்ணிக்கை / தரம் என்ற சமன்பாட்டையும் முழு துறைகளுக்கும் பிரயோகிக்கறது. (இதை பல அமெரிக்கா தளபதிகளே உத்தியோக பற்றற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்) அனால், எல்லாவற்றையும் விட, மேற்கு முன்பு தொழில்நுட்பத்தை எதிராக பாவித்த தரப்புகள் சமச்சீர் இல்லை - ஒன்று தொழில் நுட்பத்தில் குன்றியவை, அதை அடைவதில் விருப்பம் இருந்தாலும், பண, வள வசதி இல்லாதவை. இப்பொது தான் மேற்கு அரசுக்கள் - அவற்றை தொழில்நுட்பத்தில் விஞ்ச வேண்டும் என்ற அவாவும் , அதுக்கு வேண்டிய மதி, மன, பணம், மற்றும் வளங்கள் கொண்ட அல்லது பெறக்கூடிய பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட அரசை வரலாற்றில் காண்கிறது. அதன் இயற்கையான ஆரம்ப தாக்கங்களே இவை. (முன் சொல்லிய தென்சனா கடலில் நடந்தது - அமெரிக்கா அணி முடக்கப்பட்டது , Nancy Pelosi தைவான் வந்ததை சீனா தடுக்க முடியாமல் போனதன் விளைவாக, சீன தொழில்நுட்பம சார்ந்த தடுக்கும் முறைகளை ஆராய்ந்ததில் வந்த ஒரு வவிளைவு) .
  25. எதுவாயினும்,இந்தியா செய்த / செய்யாத அரசியலோடு இந்த இழப்பு / தோல்வி தொடர்பு படவில்லை. இநதியாவின் கொள்கையான ஒரு பகுதியில் / தரப்பில் மட்டும் ஆயுதத்துக்கு தங்கி இருக்க கூடாது எனும் கொள்கை அப்படியே இருக்கிறது. இநதியா அரசாங்கங்கள் அவ்வப்போது supplier ஐ தெரிந்து எடுப்பது போல, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆயுத கொள்வனவு நாடுகளை மாற்றுவது. இதன் அடிப்படை சீனாவின் இராணுவ துறைசார் சிறப்பு தேர்ச்சி, தொழில் நுட்ப வளர்த்தி, அதை இந்தியாவும் , மேற்கு எள்ளிநகையாடி புறக்கணித்தது. குறிப்பாக பாகிஸ்தானை கொசு போல அடித்து சப்பள்ளிக்கலாம் என்ற நம்பிக்கை. தவிர இந்தியாவுக்கு மேற்கின் வரவேட்ப்பு எப்போதும், எதிலும் இருக்கிறது. மாறாக எந்த மேற்கு தொழில்நுட்பம் கிடைத்து இருந்தாலும், இந்தியாவுக்கு இதுவே முடிவாக இருந்து இருக்கும், பாகிஸ்தான் செய்தது போல (வேறு எந்த நாடு இந்தியாவை எதிர்த்து இருந்தாலும், சீனாவின் பின்னணியுடன்). அது போல சீன ஆயுத, தொழ்ல்நுட்ப, சிறப்பு தேர்ச்சி வழங்குதல் / விற்பனை, இந்தியாவின் அரசியலில் தங்கவில்லை . உண்மையில் சீன, சர்தேச வாடிக்கையாளரை பிடிப்பதில் முயற்சி எடுக்கிறது, ஏனெனில் இதுவரை மேட்ற்கு தொழில்நுட்பம் பலவேறு யதார்த்த நிலைமைகளில் பாவிக்கப்பட்டு, அதன் நம்பகத்தன்மை யதார்த்தம் வழியாக என்பதால். பாகிஸ்தானுக்கு சீன பயிற்றுவித்து இருக்கிறது இந்த துறைகளில், தொழில்நுட்பங்களில் . ஆனால் , பாகிஸ்தான் அதை அப்படியே உள்வாங்கி கொண்டு வேலை செய்யும் என்று இல்லாமல், எப்படி பாவித்தால் வினைத்திறன் கூடியது என்பதை சோதித்து அதுவாக தீட்டிய திட்டம். (அநேகமாக சீனாவவுக்கே விபரங்கள் தெரியாது இருக்கும் - உறவும் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவிடம்) தொடர்பாடல் ஐ இப்போதைய நிலையில் ஊடறுப்பது சில நாட்கள் , வார வேலை அல்ல, அதுவும் சண்டையில் ஊடறுக்கப்படும் என்ற நம்பகத்தன்மை உருவாகுவதற்கு. அதாவது, இந்தியாவின் மிக நலிந்த பகுதியை பாகிஸ்தான் ஆய்ந்து அறிந்து உள்ளது. லாவகமாக பாவித்து உள்ளது. (தொடர்பாடல் இல்லாவிட்டால் அடுத்தது என்ன என்பதற்கும் பாகிஸ்தான் வைத்து இருக்கும்) இப்படியான திட்டமிடல் இந்தியாவிடம் இல்லை என்பது வெளிப்படை. இந்தியாவின் நம்பிக்கை பலத்தால் பாகிஸ்தானை (அடித்து) வீழ்த்தலாம் என்று. அமெரிக்காவும் / மேற்கும் அதை நம்பி இருந்த / இருக்கும் தோற்றமே இருக்கிறது. பாகிஸ்தானை இந்தியா வழி அடித்து, சீன விமானப்படை தேர்ச்சி / தொழில்நுட்பம் கைகொடுக்காது என்ற நிலையை உருவாக்கி, மேற்கின் / அமெரிக்காவின் செல்வாக்குக்கு கீழ் கொண்டு வருவது. (மற்றது, இன்னொரு மிக முக்கியமான காரணி, இதுவரை மேற்கு / ருசியா தொழிலநுட்பம் பாவிக்கப்பட்டது (ருசியா - உக்கிரைன் தவிர) சமச்சீர் இல்லாத, தொழில்நுட்பத்தில் மிகவும் குன்றிய தரப்புக்கு எதிராக . அப்படி சமச்சீர்அல்லாத Houthi உடன் அமெரிக்கா சமாதானம் பேச வேண்டிய நிலை. தொழில்நுட்பம் கணிசமான அளவு சனநாயாக மயப்பட்டு விட்டது (இதில் பாகிஸ்தானின் தொடர்பாடல் ஊடறுப்பது இருப்பது போல) )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.