Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது). அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை. நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.
  2. இது கலாசாரம். சமயம் அல்ல. (சும்மா நாவலரின் பேய்க்காட்டும் கதை.) சைவசமயம் பிள்ளைக்கறி, மாமிச நைவேத்தியதுக்கு இடம் அளிக்கிறது. அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். சைவம் (உணவு அல்லது உணவு கலாசாரம் என்பதால் ), சைவ சமயம் என்று ஒரு சமயமே இல்லை என்று வரும். சைவம் குறிப்பது சிவத்தை. (சிவனும் ஆரம்ப ஒரு வடிவத்தில் சுடலையில் போசிப்பவன், பூசிப்பவன் - இது இப்போதும் இருப்பது அகோரிகளில்.)
  3. உண்மையில் gdp வெளிநாட்டு கடனோடு ஒப்பிட்டு சுட்டி வரவேண்டும். US இன் gdp 36 டிரில்லியன் என்றால் கிட்டதட்ட 26 டிரில்லியன் வெளிநாட்டு கடன் சீனாவுக்கு 18 டிரில்லியன் gdp என்றால் 2.2 (சரி 3 டிரில்லியன் என்ற கொண்டால்) வெளிநாட்டு கடன். எனவே ஒப்பிலாவில் சீன மிகப்பலமாக உள்ளது. அது மட்டும் அல்ல, சீன உடற்பதி மற்றும் நிதி பொறியியலையும் கொண்டு இருக்கிறது. us பெரும்பாலும் நிதி பொறியியலை கொண்டு இருக்கிறது. us இல் இருந்த முழு பொருளாதார வல்லுனரும் அல்ல, கணிசமானோர் சொன்னது, அவ்வளவு கடனையும் எடுத்து, வட்டியையும் கட்டி, நிகர உடற்பதி 10 ட்ரில்லியன். அனால், இப்பொது தான் தெரிகிறது, us இன் இந்த கடன் இன்னமும் கூடும், அதை அடைப்பது என்றால் மிகவும் கடினம் ஆகும் என்றும். அதனால் கடன் பெரு தகவு Aaa இல் இருந்து Aa1 ஆக குறைந்து உள்ளது,எனவே வட்டி கூடும். கடன்தொகையால், ஜிடிபி ஐ குறைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. (ஏனெனில் வட்டி மிக குறைந்த கடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்க அளவில் இருக்கும்போது US இந்த கடனை வளர்த்தது, ஆனல் இப்போதும் வளர்க்க வேண்டிய நிலையில்)
  4. இதையே சொன்னது - ஒவ்வொரு கோயிலுக்கும் கலாசாரம், சூழல், நம்பிக்கை வேறுவேறானவை - சமயம் ஒன்றாக இருப்பினும். (தூரத்தில் பெரிய வேறுபாடு இல்லாவிட்டாலும்) அது மதிக்கப்பட வேண்டும். வேலன் சாமி ஒரு பக்கத்தால் ஒருமயப்படுத்த முனைவது போல, இங்கே சிலர் அதன் எதிர்ப்பாகத்தால் ஒரு மயப்படுத்த முனைவது.
  5. (பொதுவானது) முதலில் பெயரை சரியாக அறியவும். செல்லச்சன்னதி. (சந்நிதி சம்ஸ்கிருத மயப்படுத்தப்பட்ட வடிவம்) (செல்வச்சந்நிதி - எம்மவார்கள் திரித்தது) செல்லச்சன்னதி / செல்லச்சந்நிதி - சொல்லின் கருத்தே (பிரியாணிக்கும் போது) சென்ற அல்லது வந்தடைந்த இடத்தில் (முருகனுக்கு) சன்னதி (சந்நிதி). புராணா வரலாறு - வீரவாகுத் தேவர் சூரனிடம் தூது வந்து, அதிலும் சண்டை வந்து, (திருச்செந்தூர்) திரும்பும் போது சந்தி காலம் (மாலைக்கும், இரவுக்கும் இடைப்பட்ட காலம் - நாம் மைம்மல் பொழுது என்பது) ஆகிவிட்டது. (சந்தி காலம் - (பிரம்ம முகூர்த்த காலம் போல) மிகவும் சக்தி உள்ள காலம் இறைபணிகளுக்கு) வீரவாகுத்தேவர் முருகனுக்கு பூசை செய்ய வேண்டிய கட்டாயத்தில். அப்போது முருகனுக்கு வீரவாகுத்தேவர் சன்னதி (சந்நிதானம்) வைத்து பூசை செய்த இடமே செல்லச்சன்னதி, இலங்கைத்தீவில் (அப்படி புவியியல் இருந்து இருந்தால்) முருகனுக்கு உருவாகிய முதல் சன்னதி. ( சந்தி (காலம்) சன்னதி / சந்நிதியாக மருவியதாக ஓர் நம்பிக்கை இருக்கிறது), இப்போதும் அந்த இடத்தில் கல்லோடை (என்று அழைப்பது,), வீரவாகுத் தேவர் பாதச்சுவடுகள் என்று இருக்கிறது, பூசையும் செய்யப்படுவது.
  6. இதில் தனிப்பட்ட தடுப்பு இல்லை. பொதுக அங்கு இருப்பவர்கள் திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீட்டில் உண்பதை ஒருவரும் தடுப்பது இல்லை. அனால், பொதுவாக அவர்களும் அப்படியே. ஒன்றும் வலுக்கட்டாயமாக இல்லை. அப்படி திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை என்பது, மிகவும் பெரிய பிரதேசம், இருபாலையையும் தாண்டி அந்த (பொது) வழக்கம் இருக்கிறது. அதே போல அங்கேயே பூர்வீகம் என்றால் திருமணம் கூட செய்வது இல்லை. முருகனுக்கு பூங்காவனத்தில் திருமணம் முடிந்ததே திருமணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. ஒன்றில் திருவிழா ஆரம்பம் ஆக முதல் அல்லது திருவிழா முடிந்து திருமணங்கள் நடப்பது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருக்கலாம். சொன்னது போல, சமயம், கலாசாரம், சூழல், நம்பிக்கை கலந்த பிரச்சனை.
  7. இஹில், சட்ட பிரயோகத்தில் அந்த நிலையற்ற தன்மை இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பக்கத்துக்கு இருந்தால் - வேல ண் சமிக்கோ அல்லது அந்த போக்கை எதிர்பவர்களுக்கோ வாய்ப்பாகி விடும். அதாவது , நல்லோருக்கு வந்தால் (அல்லது இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு அளித்தால்), மற்ற கோயிகள், இடங்களுக்கும் வருமோ, வராதோ என்பதை சொல்லமுடியாத நிலை இருக்க வேண்டும். வரும் என்று வந்தால் - வேளாண் சாமி போன்றவர்கள், உ.ம். கள்ளியங்காடு சந்தையை , அகில் உள்ள வைரவருக்கு அந்த குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் தள்ள வேண்டும் என்று நிற்பார்கள். அல்லது கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தூரதத்துக்குள் (அசைவ) கடைகள் வைக்க கூடாது என்று நிற்பார்கள் (அதனால் தான் தூரம் போன்ற (நிச்சயமான தன்மை) உள்ள அடிப்படைகளை வைத்து இது போன்றவற்றுக்கு முடிவுக்கு வரக் கூடாது.) சுமந்திரன் போன்றவர்கள் அரசியலுக்காக வழக்கை கையில் எடுப்பார்கள்.
  8. இது சமயம் மட்டும் அல்ல, சூழல், கலாசாரத்துடன் சம்பந்தப்ப விடயம், வெளிப்படை. உ,ம். முன்பு நல்லூரில் பலியிடும் வழக்கம் இருந்தது (சமய நம்பிக்கை கொல்லாமை என்று இருந்த போதும்). சமூக நம்பிக்கை, பார்வை மாறி காலப்போக்கில் கைவிடப்பட்டது. அதேபோல முருகவழிபாடிலும். இதனால், மேற்கு கோயிகள், அங்கு உள்ள கோயிகள்களை ஒப்பிட முடியாது. மறுவளமாக மேர்க்கிலும், அருமையாக, தனியே எந்த அசைவ உணவும் வளாகத்துக்கு அருகில் இருக்க கூடாது என்று இருக்கிறது - உ.ம். wales camarthen இல், எல்லாமே அந்தந்த சூழல், கலாசாரம், அமையப்பெற்ற வரலாறுகள் போன்றவற்றை பொறுத்தது. அதுக்காக, நல்லூர் - camarthen ஒப்பிட முடியாது, கூடாது. ஏனெனில் அவை இருக்கும் பரந்த சூழல், கலாசாரம், நாடு போன்றவை. இதில் உள்ள பிரச்சனை, வேலன்சாமி மாநகர சபை எல்லையை இழுத்து இருப்பது.
  9. இதில் சீனா, ருசியா போன்றவை மாட்டிக்கொள்ளாது. star war திட்டம் அந்த நேரத்தில் தொழில்நுட்ப சாத்தியம் இல்லை என்று தெரிந்து பெரிய ஆரவாரத்துடன் தொடங்கப்பது, சோவியத்தை அதுக்குள் இழுத்து பணம் , பொருளாதாரத்தை சிக்கவைத்து, பொருளாதாரத்தை குலைய வைபத்துக்கு. பகுதியாக அது நடந்தது என்பதும். இதிலும் அப்படியான நோக்கங்கள் இருக்கலாம். சிலவேளைகளில், மாட்டுவது அமெரிக்க / மெத்திற்காகவும் இருக்கிருப்பதன் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில், சீன, ருசியா இடமும் சம மட்டத்திலான தொழில்நுட்பம் / தேர்ச்சி, பணம், வளம் .. இதில் இருப்பது. தொழில்நுட்பம் எப்போதும் சீரான ஒரே கோட்டில் வளர்வது அல்ல. சிலவேளை, அவர்கள், குறைந்த செலவில், வினைத்திறன் கூடிய பாதுகாப்பு கோளத்தை அமைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. மறுவாளாமாக, யார் இப்போது ஒரு நாட்டை அழிப்போம் என்று நிற்பதும், அததற்கான பலத்தை கொண்டு இருப்பதும்? அமெரிக்கா ஈரானை. மேற்கின் சேட்டை விடும் காலம் முடிவுக்கு வந்து விட்டது.
  10. கிந்தியா டதொல்லியல் உள்ளவர்கள் பாகுபாடு காட்டுவதாக இருக்கலாம். அனால், இந்த ஆய்வுகளை பகுதி பகுதியாக ஆகக்குறைந்தது தரவு அடிப்படையிலாவது, சர்வதேச சர்வதேச துறைசார் peer review க்கு உட்படுத்தி ருக்க வேண்டும். சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு. அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும். சர்வதேச peer review க்கு சமர்பிர்ப்பதற்கும் அனுமதி வேண்டும் அல்லது மறுத்தால், நீதி மன்றத்தை நாடுவவது இலகு. அப்போது அது அரசியல் மயமாகி இருக்கும்.
  11. இந்த வழியே தான் கதிக்காம காலடி யாத்திரை செல்வது. சிங்களம் பார்த்து குறிவைக்கிறது.
  12. முதலே எல்லாம் சொல்லியாகிவிட்டது. துரோகியாக இருந்தாலும் கட்டுக்கதையாக இருந்தால் தான் பிரச்சனை. சொல்லுவது யதார்த்தம். எந்த போராட்டம் என்றாலும் எமக்கே தவிர அவர்களுக்கு இல்லை. சிறிலங்கா ராஜா அதிகாரிகள் இஙகிய தேவையை நிறைவேறும் என்பது மிகவும் ... - சிறிமாவில் இருந்தாவது சிந்திக்கவும்,ககஹீஐ விடத்து ... மலையக தமிழரை உள்வாங்கியது ... என் jr சிவயானதை புலிகள் கேட்க ஜேர் இன் பதில் நான் இறைமை உள்ள அரசின் தலைவர் ... இதில் முழு அதிகாரமும் என்னக்கு (ஜேர் க்கு ) உள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். (வேறு திரியில் சாதாரண தொல்லியல் துறையில் கூட மத்தி எப்படி வேலை செய்வது என்பது தெரியாது. தமிழ் நாடு இவ்வளவு ஆய்வை செய்யும் போது இதை கவனிக்காமல் விட்டது. அப்போதே நான் யோசித்து இருந்தேன் பகுதி பகுதியாக பிரித்து தரவு அடிப்படையில் ஏன் தமிழ்நாடு சர்வதேச peer review க்கு விடவில்லை என்று. கிந்தியா உண்மையில் பாகுபடுத்துவதாக இருந்தாலும். அனால், அதுக்கும் மத்தி அனுமதி வேண்டுமோ தெரியாது. இது சிறு உதாரணத்துக்கு.).
  13. சுமந்திரன் அரசியல் மாதா. வழக்கில் சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும் (நான் நினைக்கவில்லை, கலாசாரம் கருத்தில் எடுபடும் நல்லாருக்கு மாத்திரம்). வேலன் சாமியின் பிம்பமான மாநகர சபை எல்லை என்றதுக்கு அல்ல. சுமந்திரனுக்கு ஆதரவு கூடும்.
  14. சொல்லப்படும் இடம், பருத்தித்துறை வீதி, நல்லூர் குறுக்கு தெரு சந்தி (வரலாற்றின் படி நல்லூர்). (சற்று அப்பால், பருத்தித்துறை வீதி இடது பக்கமாக வளைந்த்து, முத்திரை சந்தி , பழைய நல்லூர், யமுனாரியுடன் சேர்ந்து - முத்திரை சந்திக்கு அருகாமையில் உள்ள தேவாலயம் உள்ள இடம்.) உண்மையில (பழைய) நல்லூரின் (நெல்லூரின்) எல்லை - வடக்கே சட்டநாதர் கோயில், கிழக்கே வெய்யில் உகர்ந்த பிள்ளையார் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், தெறக்கே மூத்த விநாயகர் கோயில். அந்த அளவு சுற்று பிரதேசம். அனால், அது நல்லூர் கோயில், இராசதானியும் சேர்ந்த அமைப்பில். ஆனால். அதெல்லாம் கைவிடப்பட்டு, (நெல்லூரை நல்லூராக்கி), இப்போது உள்ள நல்லூர் கோயில். இந்த இடம், குறிப்பாக, திருவிழாவுக்கு barrier போடும் சந்தி (எல்லை), திருவிழா வளாகத்துக்குள் பிரவிவேசிக்கும் இடம். அதில் அசைவ உணவு இருந்தால், திருவிழா காலங்களிலும் இருக்கும். எனவே தவிர்ப்பது common sense. அந்தந்த சூழலுக்கு, கலாசாரத்துக்கு ஏற்றவாறு. அந்த இடத்தை சொல்லுவது கந்த புராண கலாசார இடம் என்று (இது அங்கு புதிததாக வந்தவர்களுக்கு தெரியாது,) (நல்லூரில் வைரவ மடையின் போது ஆடு வெட்டும் வழக்கமும் இருந்தது. நாவலர் அதை தடுக்க போய், அவரின் காதை வெட்ட முயன்ற அளவுக்கு பிரச்சனை வந்தது. ஏனெனில், ஆட்டின் காதை கீறி, நேர்ந்து, கணங்களை திறந்த்து விட்டே பூசை, ஆடு வெட்டுடது பூசையின் ஒரு பகுதி. முருகவழிபாட்டில், ஆட்டு கிடாய் இரத்தத்தை, தினையுடன் பிசைந்து, கிடாய் இறைச்சி உடன் நைவேத்தியம் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மாவிளக்கில் இப்போதும் குங்குமத்தால் (இரத்தம் வடிவது போல) அலங்காரம் செய்வது. இப்படியானதை ஒதுக்கு புறத்தில் க்கோட இப்படி செய்வதை சமூகத்தின் பெரும் பகுதிக்கு விருப்பம் இல்லை) அனால் வேலன் சாமி செய்வது, மாநகர சபை எல்லைக்குள் அசைவ உணவுக்கு தடை - இது தேவை இல்லாதது. பிரச்சனைகளை உருவாகும். அத்துடன் ஒரு முக்கியமான பொருளாதார பகுதி.
  15. இது உங்களுக்கு தெரியும் அல்லது நிச்சயம்நிச்சயம் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள் . அனால் , நடந்ததை , அந்த ஒழுங்கில் சொல்லும் போது, தொடர்புபடுத்த முடியாமல் இருக்கிறது. அது தான் செய்தவர்களின் திறமை. செய்தவார்கள் US / மேற்கு அவர்களின் நோக்கத்தை (பெருமளவு) அடைந்து உள்ளனர். ஒரு சொல்லில் Indo-Pacific (சொல் 1947 இலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது) சற்று விரிவாக Indo-Pacific geopolitical and geographical construct. பொதுவாக பூகோள அரசியலும், புவியியல் பிரதேசமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒரே அமைப்பாக இருப்பதில்லை இருப்பதில்லை. இதில் தான் (அநேகமாக முதல்தடவையாக) அப்படி இருக்கிறது. இதில் தான் புலிகள் அகப்பட்டது, அந்த திட்டத்தின் முக்கிய அம்சமா அரசுகளின் மீதான செல்வாக்கு - அரசுகளுக்கு எதிராக எந்தவித ஆயுத அச்சுறுத்தலும் இருக்க கூடாது. ஏனெனில், அரசுகள் மீது செலுத்துவதற்கான பிடிகள் மிகவும் கூட. அது இந்தியாவுடன் ஒத்து போனது, இந்தியாவுக்கு வசதியாக இருந்தது மேலும் வசதி. (அப்படியே பார்த்தல், அங்கு இருந்த அனைத்து ஆயுத குழுக்கள் ஒன்றின் ஆயுதத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தனர் , ஆச்சே, நேபாளம் உட்பட, அழிவு (புலிகள்), அல்லது பாரிய அழிவின் பின் பேச்சுவார்த்தை பிலிப்பைன்ஸில், US எதிர் மியான்மாருக்கு கூட இந்த கொள்கை. இவை நான் சொல்லாதவை) பொதுவாக ஆப்பிரிக்காவிலும் அதுவே. மத்தியகிழக்கில் இந்த 4 அரசுகள் / தலைமைகள் மேற்கு / US எதிர், ருசியா, சீன கூட்டாளிகள். மிகுதி எல்லாம் மேற்கு சார்பு வெளியில் சொல்லாவிட்டாலும். 4 இன் அகற்றமும் மேற்றக் எதிர் அரச தலைமைகள் நீக்கம் , அரசு சாரா குழுக்களை ஆக குறைந்தகாது பலவீனம் ஆக்கும் (ஒரே கல்லில் இரு மாங்காய்கள்). செய்தது பயங்கரவாத எதிர்ப்பு என்ற திரையுடன். சுருக்கமாக.
  16. முஸ்லிம்களுக்கு சொந்தம் இல்லை. முஸ்லிகளுக்கு எழுதி கொடுக்கப்படவில்லை. அரச காணி - அதன் பெயர் குருக்கள் வளவு. முஸ்லிகள் வாழ அனுமதிக்கப்பட்டது. அரசு / அரசன் தன செய்தது. (பன்றி தலையை போட்டு, போடப்பட்ட அந்த கிணற்றின் இடத்தையும் அதை 'நள்ளிரவு இருள்' வேலையாக செய்ததே எனது மூதாதையர் என்றதையும் முன்பு வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்.) உண்மையில் 2-3 தரம் போடப்பட்டது. அதை வைபவமாலை சொல்லவில்லை. ஏனெனில் பன்றி இறைச்சி அசுத்தம் என்றாலும், அது நீக்கப்படக்கூடியது / அகற்றப்படக் கூடியது முஸ்லிம்களுக்கு. இறுதியில் தான் (அறிந்த்து / சிந்தித்து) பன்றி தலை போடப்பட்டது. ( இஸ்லாமில் ஒரு கதை இருக்கிறது - முகமது (எஎன்று தான் நினைக்கிறன்) ஒளிந்து இருந்த இடத்தில அவரை பிடிபப்தற்கு தேடிக்கொன்டு இருந்தவர்கள் கைவிட்டு போக ஆயத்தமாகிய வேளையில் பன்றி வெளிவந்து தலையை காட்டியதால் தான் மீண்டும் சல்லடை போட்டு தேடி அவரை பிடித்ததாக. இதனால் தான் பன்றி முஸ்லிகளுக்கு ஒவ்வாதது. இதை கேள்விப்பட்டு / அறிந்து பன்றி தலை போடப்படது. ). அந்த கிணறு தான் இப்போது உள்ளது. பருத்தித்துறை வீதி இப்போது உள்ள கோயிலை அன்றி வளையும் இடத்துக்கும், கோயில் வீதி உள்ள இடையேயும் கோயிலிலுக்கு எதிர்பக்கமாக உள்ள காணி துண்டில் இருப்பது. புனருத்தாரணம் செய்யபட்டு உள்ளது. இப்போதைய கோயிலின் ஆரம்பம, போர்த்துக்கேயருக்கு முதல் முத்திரை சந்தியில் இருந்த இடத்தில் இருந்து (இப்பொது தேவாலயம் உள்ள இடம்). தேவாலயத்துக்கு பக்கமாக நல்லூரின் பெயரில் முதல் கொட்டில் மடாலயம் போடப்பட்டது கிருஷ்ண ஐயர், மாப்பாணர் சேர்ந்து, பின் அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்து விட்டது, இது சுருக்கமாக. அனால், வைபவ மாலையில் சொல்லப்பட்ட மிக முக்கியமானதை இங்கு எவராவது சொல்லி இருக்கிறார்களோ தெரியாது. அதன் படி, தமிழரின் அரச (இராச்சிய) அதிகாரம் (ஆட்சி) சங்கிலியடன் (சங்கிலி குமாரன், செகராசா சேகரம் 2 உடன் முடிவடைந்து விடும்.) மீண்டும் உருவாகாது என்பது. அகத்தியரின் அடி சீடரான ஒரு முனி (பெயர் மறந்து விட்டது), பரராசசேகரத்துக்கு சொன்னதாக. சுருக்கமாக.
  17. தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தி எப்படி வேலை செய்வது என்று தெரியாது. சிங்களவரின் தலைவர்களுக்கு / தூதுவர்க்ளுக்கு / அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டை விட நன்கு தெரியும் (உண்மையில் எந்த மாநில அரசியலாதிகளும், மத்தியில் பொறுப்பில் இருந்து இருக்காவிட்டால் இந்த அறிவு, அனுபவம் இல்லை. அதுவே யதார்த்தம்) ஏனெனில், சிங்கள தலைவர்கள், தூதுவர்கள், அதிகாரிகள் போன்றோரின் , மத்தியோடு உறவு முதலில் அரச - அரச சம மட்டத்தில். அத்தோடு ஒருவரை ஒருவர் அதிகாரப்படுத்தமுடியாது. வேண்டுகோளினால் நோக்கத்துக்கு வேண்டியதை கேட்டு கொள்ளாலாம். அப்படி இருக்கும் போது தான் - மற்ற பக்கத்தின் சிந்தனை, முடிவு எடுக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இங்குள்ள பலருக்கு இதெல்லாம் பெரிதான விடயம் இல்லை. (உ.ம். மத்தி அதிகாரிகள் மாநில அரசியல் தலைவரை அதிகாரப்படுத்துவதை - கருணாநிதியில் கண்டோம்) நீங்களும் அப்படியான பார்வையே எடுப்பதாக எனக்கு தெரிகிறது. அது பெரிது அல்ல. என்னோடு இணங்கவேண்டும் என்பதும் அல்ல அனல், நீங்கள் கொண்டுள்ள எதிர்பார்புகளை உருவாகும், உள்ள யதார்த்தத்தை தவிர்த்து. இது சுருக்கமாக.
  18. எப்போதும் தமிழன் , நீங்கள் எனக்கு முன்பு கோர்வையாக .. என்று சொல்லியதால் ChatGPT சொல்லுவது என்ன? நான் சொல்லியதை நானே ChatGPT க்கு கொடுப்பது சரி அல்ல, கோடியதாக இருக்கலாம் அல்லவா?
  19. இப்படி ஏதாவது நாடாகும் என்ற எதிர்பார்ப்பு பல விடயம் அறிந்த வட்டங்களில் இருந்த்து மற்றது, ஏன் இப்படி கடைசி நேரத்தில், இது 2-3 மாதங்களுக்கு முல் முடிவு செய்யப விடயம். வேண்டும் அப்போதே இதை செய்து இருக்கலாம் இப்போது செதிதிகள் வருகிறது, இதை UK அரசாங்கம் செய்யலாம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்து இருப்பதாக BBC NewsUK's deal to hand over Chagos Islands to Mauritius can go...The deal - which was halted by a last-minute injunction at 02:25 this morning - could now be signed today.
  20. இவர் தானாக வழக்கு போட்டாரா. அல்லது us போடா வைத்ததா , அல்லது uk / பிரான்ஸ் ஏ போட வைத்ததா என்பதே கேள்வி ஆழ்ந்து பார்த்தல், வேறு எவரோ அல்லது எந்த சக்தியின் தூண்டுதலில் போட்ட அறிகுறிகுறிகள் நிறையவே தெரிகிறது. இப்படி உடனடியாக அதிகாலையில், நீதிபதியை நாடும் முறை இருக்கலாம், அனால் பணபலம் இல்லாமல், சட்ட விடயம் அறியாத சாதாரண ஒருவரால் செய்யமுடியாது.
  21. இங்கே விபரமாக பதிய நேரம் இல்லை. அனால் எனது அவதானங்கள் சுருக்கமாக (பிரான்ஸ் அதன் இழப்பை சமாளிக்க போடும் படம்.) அனால், இந்தியா ஊடகம் சொல்லும் பில்-15 ஐ சீனர் இயக்கியது என்பது, எவ்வளவு ஏய்க்கட்டும் கதை. அப்படியானால், விமானங்களையும் சீனர் இயக்கியதாக வரும். (அது சீனாவின் பார்வையில் எவ்வளவு ஆபத்தானது, தற்செயலாக தாக்குதல் , விபத்தில் பிடிபட்டால் என்பதும், கொல்லப்பட்டால் , ஒரு தேர்ச்சி பெற்ற விமானியை உருவாக்குவது எவ்வளவ்வு கடினம், செலவு போன்றதும், அதுவும் மட்டுபடுத்தப்பட்ட நடவடிக்கைக்கு என்பதும் ) இரண்டாவதாக, புதிய தொழில்நுட்பம் சீன கொடுத்தது - கொடுத்து இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கினைத்து பயிற்சி எடுத்து பாவிக்க நேரம் போதாது. இப்படி வேறு சிலவற்றிலும் இந்தியா ஊடகங்கள் சொல்வதில் இடைவெளிகள், ஓட்டைகள் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சொல்லாதது - கார்கிலில் கண்டறியப்பட்ட விமானப்படை அமைப்பு அடிப்படையிலான இன்னமும் நிரப்பப்படாத இடைவெளிகள், அமைப்பு அடிப்படையிலான பிரச்சனைகள், மற்றும் அரசியல் / அதிகார பீடம் இணக்கத்துக்கு வந்து முடிவு எடுக்கும் தன்மை வாமனப்படை கொள்வனவு, பயிற்சி போன்றவற்றில் உருவாக்கும் மிக மந்த நிலை போன்றவை. (உ.ம். இந்தியாவிடம் போதிய அளவு AWACS இல்லை, இருப்பது மிகவும் பழையது. பாகிஸ்தானிடம் போதிய அளவும், பிந்திய தொழில்நுட்பம் உள்ள AWACS இருக்கிறது. அதனால் பாகிஸ்தானின் command & control வானில் இருந்து இருக்க கூடிய வாய்ப்புகள், மிகவும் நன்மை ) அனால், முன்பே சொல்லி இருந்தேன் சீன இந்தியாவுக்குள் இருக்கும் படை, தளபாட விநியோகம், நகர்வுகள் போன்றவை பற்றி பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி இறுக்கலாம் என்று. (ஏனெனில், விமானங்கள் ஒரே தளத்தில் இருந்த்து களத்துக்கு அனுபுபடுவத்தில்லை, அதுவும் அந்த நேரத்தில் இந்தியா வடக்கில் இருந்த்து அனுப்பி இருக்காது, ஏனெனில் பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும், அநேகாக தெற்கில் / கிழக்கில் உள்ள தளங்களில் இருந்த்து, பாகிஸ்தானிடமும் கண்காணிப்பு வசதிகள் இருந்தாலும், இந்திய விமானங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வருவதும் , அததற்கு ஏற்றவாறு அதன் விமானங்களை வானில் வைத்து இருக்கும் வியூகத்துக்கு நேரம் வேண்டும்.) சுருக்கமாக , பாகிஸ்தான் விமானப்படையின் / அரசின் / அரசாங்கத்தின் முழு clockwork ஆக வினைத்திறனை கட்டி எழுப்பியதை , அதை களத்தில் நிரூபித்ததை மேற்கும், இந்தியாவும், மேற்கும் மலினப்படுத்துகின்றன.
  22. முகாம்களில் இருப்பார்கள், , உறவினர் முகவருடன் பணத்துக்காக சேர்ந்து, அந்த உறவினர்கள் தாமும் சென்ற உறவுகளை பின் தொடர்ந்து வருவோம், வர இருப்பிப்பதாக ஆசை / உறுதி மொழி காட்டி, (முகாம்களில் இருக்கும் நிலை அறிந்தும்) உறவினர்களாலேயே ஏமாற்றப்பட்டு அனுப்பப்பட்டு சென்றார்கள். அப்படியான சந்தர்ப்பங்களும் இருக்கிறது. இப்படியாக இந்தியா செல்லவிருந்த, எனது தூரத்து உறவினரால் (அவர் சுத்துமாத்து பேர்வழி) ஒழுங்குபடுத்தப்பட்ட 10-12 பயணங்களை எனது மிககிட்ட உறவும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்து இருக்கிறார்கள். முகாம்களின் நிலையை, அந்த நேரத்தில், எனது கிட்ட உறவு, குடுமபத்துக்கு இருந்த தமிழ்நாட்டில் உள்ள தொடர்பின் வழியாக வாய் வழி அறிந்தே (கொழும்பில் இருந்து கடிதம் வழியாக) எனது கிட்ட உறவினரும், எனது குடும்பத்தில் உள்ளவர்களும் தடுத்தனர். அதில் இந்தியாவை உள்ள தொடர்புகள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை, அனால் முகாம்களின் நிலைபற்றியும், வருவது உசிதம் இல்லாதது என்ற தொனியும். அப்போது அப்டி செல்ல இருந்தவர்கள், பயணத்தை கைவிட்டு, சந்தர்ப்பத்தை இழந்து விட்டமோ என்று மனவருத்தம், மற்றும் எனது கிட்ட உறவினர், குடும்பத்துடன் சற்று கடிவாக இருந்தனர், ஆனல், காலம் போக அவர்களுக்கே தெரிந்தது, இலங்கையில் இருந்தது நல்லது என்று. (இதனால் தூரத்து உறவு எனது கிட்ட உறவினரை, என் குடும்பத்தில் தடுத்தவர்களை தாக்க இருப்பதாகவும் அறிந்து, சில முன்னேற்பாடுகளை செய்து இருந்தோம்) பொதுவாக செல்லாதவர்கள் எல்லோரும் இப்பொது நல்ல நிலையில் இருக்கிறார்கள், இடம் பெயர்ந்தாலும். ஏனெனில், அந்த முகாம்களில் வாழ்க்கை தேக்க நிலை (ஏனெனில், தமிழ் நாட்டில் தேவை இருக்கிறது, அவர்களை கடந்தே இவர்களுக்கு எந்த உதவியும்). ராஜீவ் மறைவு மிகவும் நீண்ட காலமாக அவர்களைமுகாம்களுக்கு உள்ளேயே நீண்ட நேரம் முடக்கிவிட்டது. சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது, அத்துடன் முகாம் நிர்வகிக்கும் அதிகாரிகளின், சூழவுள்ள சமூகத்தில் இருந்த்தும் இவர்களின் நலிவன நிலையை துர்பிரயோகம் செய்வது போன்ற பலவற்றால் வாய்ப்புகள் இல்லை போன்றவையும். அனால், உயிருக்கு அஞ்சி போகும் போது வேறு தெரிவில்லை. அனால்,இதில் பெருமளவு மக்கள் உயிருக்கு அஞ்சி மட்டும் போலில்லை. அல்லது உயிர் ஆபத்து 2ம் - 3ம் பட்ச காரணிகள். இந்த மக்களுக்கு தமிழ்நாடு கொடுத்ததையும், கொடுப்பதையும் என்றுமே நன்றி மறக்க கூடாது .
  23. இன்னும் சற்று விளக்கமாக, வெளிப்படையாக அவற்றுக்கு தொடர்பு இல்லாத தோற்றம். அதை தான் நீங்கள் சொல்வது ஆகவே உங்களுக்கு அடியும் தெரியவில்லை, நுனியும் தெரியவில்லை என்பது வெளிப்படை. அனால், அப்படித்தான் வெளிநாட்டு, அரசியல், இராணுவ நகர்வுகள் , அடியும் தெரியாது, நுனியும் தெரியாது, அப்படி தெரிந்து வடாக கூடாது (அதாவது செய்பவரின் நோக்கம், போக்கு ) என்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டது. இதை கூட அறியாமல், ChatGPT ஐ நடச்சொல்வது. (குறிப்பு: சொல்லியவற்றை Chatgpt இடம் கொடுத்து, அதன் முடிவு என்ன என்பதையும், அந்த முடியின் அடிப்படியில் உங்கள் சிந்தனையால் அடைந்த முடிவை சொல்லலாம்.)
  24. கனடா உண்மையான இதய சுத்தியுடன் இனப்படுகொலை நினைவகத்தை அமைத்து இருந்த்தால், கனடா மத்திய அரசு இதை பற்றி சிறிலங்கா கதை எடுப்பதை கூட நிராகரிக்க வேண்டும்,
  25. முதலில் யாழ்ப்பாணம் தமிழீழம் அல்ல. அனால், அப்படி நடந்த்து இருந்தால் அது வரலாற்றில் பெரிய ஒரு சாதனை தான். சர்வதேச நியதி, அரசு- அரசு சாரா குழு என்ற அடிப்படையில், அரச படைகளை முறியடித்து வடக்கின் பெரு நகரத்தை கைப்பற்றுவது புலிகளின் நிலையை நகரம் / மாகாணம் அளவில் அரச மட்டத்துக்கு உயர்த்தி இருக்கும். அனால், ஒசாமா பின் லாடன் தன புகலிகள் அழிவுக்கு (ஆக குறைந்தது பகுதி ) காரணம் என்றால் - நீங்கள் அதை சொல்ல வருவதாகவே எனக்கு புரிகிறது. மேற்கு 2001 - 2002 இல் UN பாதுகாப்பு சபையில் இல் அரசு சாரா குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு இருக்கும் பாதுகாப்பை நீக்கி தீர்மானம் இயற்றிவிட்டும், ஏன் ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) இருக்கும் மேற்கு எதிர் அரசுசாரா குழுக்களை அழிக்க மேற்கு / us முயலவில்லை? மறுவளமாக, ஒசாமா பின் லாடன் இன் பிரதேசத்தில் (மத்திய கிழக்கில் ) மற்றும் அதனை அண்டிய வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சில அரசுக்களே கைவைக்கப்பட்டது? மத்திய கிழக்கில், ஆக குறைந்தது, (அந்த தீர்மான தொனி அடிப்படையில்), நாடுகள் தாது அரச தலைமைள் குறிவைக் கப்பட்டது (சதாம், கடாபி,அசாத்) போன்றோர் இதில் ஈரானும் உள்ளடக்கம், அனால், மற்றவர்களின் அனுபவத்தில் ஈரான் மிகவும் பெரியது, சண்டைக்கு போய் இலக்குகள் எட்டாமல் காயத்துடன் வெளிக்கிட வேண்டி வரும் என்ற முடிவில், ஈரான் பின்போட்டு, இப்போது எடுக்கப்பட்டு இருக்கிறது. அனால், ஆப்பிரிக்காவில் குறிவைக்கப்பட்டது அரசு சாரா குழுக்கள். ஏன்? இந்த பாதுகாப்பு சபை தீர்மானம் அடிப்படையிலேயே, புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் நீதியான போர். மேற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது (மறைமுக நேரடி ஈடுபாட்டுடன்). அதில் இநதியாவின் நோக்கமும், இலக்கும் மேட்ற்கு / us உடன் ஒத்து போனது. (இந்த தீர்மானம் ஒரு முக்கிய காரணம் இனப்படுகொலை என்பது கருத்தில் எடுக்கப்படாமல், அப்படி சொல்லப்படும் போது மேடற்கு அரசுக்களால் உள்நாட்டு சட்ட்டதை வைத்து, கடும்போக்காளர் என்ற முத்திரை குத்தி மூடப்படுவதற்கும் (குறிப்பாக US, UK ஆல்). இலங்கைக்கு UK சொல்லுவதே பொதுவாக கருத்தில் எடுக்கப்படும் மேற்கால், குறிப்பாக பாதுகாப்பு சபையில். ஏனெனில், பிரித்தானிய காலனித்துவ அகற்றத்தில் சிறிலங்கா அரசு உருவாகியது.) மேலே சொன்னது வெளித்தோற்றத்தில் தனித்தவை அல்லது தொட்டம் தொடமானவை , 2 கண்டங்கள், மூன்று புவியியல் பிரதேசங்களில். அனால், அவற்றுக்கு தொடர்பு இருக்கிறது. இவை முக்கியமானவை, மேலும் சில விடயங்களும் இருக்கிறது அப்படி விளங்காதவர்களே கொசுக்கடி என்போர். அதில் நீங்களும் ஒன்று. ஒன்றும் புதுமை இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.