Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. தெனாலி ஒத்துவரவில்லை என்றால் வேறு இருக்கிறது உ.ம். Dancing With Wolves (இது வரலாற்று நிகழ்வுகளை ஒற்றிய படம்). அனால், தெனாலி பற்றி நான் சொன்னது சரி, தெனாலி என்றவுடன் உங்களிடம் உருவாகிய பிம்பம் கோமாளி விகடன். அனால் தெனாலி, உண்மையில் அந்த நேர அதி புத்திக்கூர்மை, சமயோசிதம, சாதுரியம் வாய்ந்த ராஜதந்திரி, உள்ளூரில் தலைசிறந்த நிர்வாகி, அரசுக்கு / அரசனுக்கு (புத்தியால்) பாதுகாவலர். இந்த (பார்வைப்) புரிவு கொண்டவர்களை இதுவரை காணவில்லை. இந்த புரிவு காணொளி தொடரால் மாத்திரமே சாத்தியம். கதையாக வாசித்தால் (தெனாலி) விகடன் எனும் திரை மறைத்துவிடும்.
  2. வரலாறு நூல் வழியாக, வரலாற்று பார்வையில், treaty இன் சில அம்சங்களை தெரிந்து விட்டு, எந்த ஒரு treaty இன் அடிப்படை தன்மையை பற்றி (என்னவென்று சொல்வது) மு... கதை சொல்லுபவரை என்னவென்று சொல்லுவது. நீங்கள் சொல்லி இருப்பதில் இருந்து தெரிவது ஒரு treaty என்றால் என்ன என்பது அடிப்படையாக தெரியாத கதை. எந்த அறிவை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிய வேண்டும். எந்த அறிவை எங்கு பெறவேண்டும் என்பதும் தெரிய வேண்டும். ( அதுக்கு முதலில் சிந்தனை (எதை அறிந்தாலும்) இருக்க வேண்டும். (நான்) குறிப்பிட்ட உகாரணத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு என்று சொல்லப்பட்டு இருந்தால் அல்லது குறிப்பிட்ட செய்ம்மதி முறைகள் என்று சொல்லி இருந்தால், வெளிப்படையாவே கண்காணிப்பு புலத்தை குறுகச் செய்கிறது. சாதாரண விளைவு. அனால் நான் சொல்லியது, (இணைக்கப்பட்ட) அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் மிக உயரத்த ஒப்பந்த அமைப்பின் விளக்கம் மற்றும் வரைவிலக்கணத்தை கொண்டு. இந்த treaty இன் annexes, appendices, schedules இல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம். ) அறிந்தவற்றை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிவதும், குறிப்பிட்ட அறிவை எங்கு பெற வேண்டும் தெரிவதும், எந்த வழியாகவும் (வாசிப்பும் உள்ளடக்கம்) அறிவை பெறுவதிலும் முக்கியம். சுருக்கமாக, சிந்தனை முக்கியம்.
  3. உண்மையில் அக்கறை கொண்டு தான் உங்கள் கேள்வியும் என்ற அடிப்படையில். ஆனால், இதை ஓரளவு விபரம் இல்லாமல் அறிவது கடினம், ஆயினும், இயன்ற அளவு சுருக்கி விளக்கம். முதலில் உங்களுக்கு treaty என்றால் என்ன என்பதற்கு உங்களுக்கு அடிப்படையான புரிவு இருக்க வேண்டும் மிகவும் சுருக்கமாக, அடிப்படையாக, treaty என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கு இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நேரத்தில் இருந்து, குறித்த காலம் வரையுள்ள எதிர்காலத்தில் (treaty காலாவதி ஆகும் வரையும். காலாவதி இல்லாததும் இருக்கிறது) கட்டாயமாக, துல்லியமாக நடக்க அல்லது செய்யப்பட வேண்டிய விடயத்தையும், அதனுடன் சம்பந்த்ப்பட்ட அனைத்து விபரங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை ஆவணமாக உள்ளடக்கியது (சர்வதேச சட்ட வலுவுள்ளது). அரசுகளுக்கு இடையில் செய்யப்படுவதால், இதில் அரசுகளுக்கு சிறப்புரிமை, ஏகோபித்த உரிமை (உ.ம். காலவதியாக முதல் விலத்துவது, அப்படி விலத்துவதற்கு இடம் இருந்தால்). இந்த treaty இல் மிக முக்கியமானது, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பது. (அதை, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதை, ratification என்று ஆங்கிலத்தில் அழைப்பது). ஒவ்வொரு அரசுக்கும், அதன் தமையை பொறுத்து, இந்த முழு அரசும் ஏற்றுக்கொள்ளும் ( ratification) முறை வேறுபாடும். மேற்கில், பாராளுமன்றம் அல்லது அதை ஒத்த அரசாங்க அவையால் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்டுவது முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதாகும. (UK) போல முடியும் அரசில் ஒரு பகுதியாக இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இது இப்பொது சம்பிரதாய ஏற்பாடு. அப்படி முழு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தங்கள் treaty அல்ல. இது (treaty) எவ்வாறு அரசுகளுக்கு இடையில் வந்தது என்பதற்கே தனி வரலாறு இருக்கிறது. ஒரு காலம் இருந்தது treaty ஐ ஒரு அரசு (அல்லது அரசுகள்) நிறைவேற்றவில்லை என்றால், வலோற்கராமாக நிறைவேற்ற படைபலத்தை மற்ற அரசு அல்லது அரசுக்கள் பிரோயோகிக்கலாம் என்று. (இப்பொது treaty ஐ நிறைவேற்ற படைபலம் பாவிப்பது மிக அரிது ஆயினும், ஏனெனில் சர்தேச சட்டம் மற்றும் UN தடுப்பதால். ஆனால் வெளிப்படையாக நடப்பது உக்கிரைன் இல், அதன் முன் நடந்தது இராக்கில் மேற்கால், நேட்டோ ஆல் 2003 இல். இரண்டு சந்தர்ப்பத்திலும் வேறு முக்கிய நோக்கங்கள் இருந்தாலும்.) இனி சொன்ன விடயத்துக்கு அல்லது நீங்கள் கேட்ட விடயத்துக்கு. வரலாற்று நூலில் சொல்லப்பட்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு அளவில், மற்றும் அதுக்கு முதல் இருந்த அணுஆயுத ஒப்பந்தங்களை (treaty). அந்த நூல்களில் அவற்றை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை கொண்டு, இப்போது இருக்கும் அணுஆயுத ஒப்பந்தங்களுடன் (treaty) ஒப்பிட முடியாது, கூடாது என்பதே சொல்லியது. 1. ஒரு ஒப்பந்தத்தை (treaty) வரலாற்று நூலில் முழுமையாக சொல்ல முடியாது. 2. அப்படி வரலாற்று நூலில் சொல்லப்பட்ட இருக்கும் அணுஆயுதா ஒப்பந்தங்களை பற்றி வரலாற்று பார்வை, நியாயாதிக்கமே தவிர, அந்த ஒப்பந்தங்களின் (சட்ட பூர்வ) இறுக்க தன்மை பற்றி அல்ல. 3. அவை 1991 காலப்பகுதி ஒப்பந்தங்கள் (அநேகமாக 1991 க்கு முதல் அமுலுக்கு வந்து இருக்கும்), அவை காலாவதி ஆகி விட்டன 4. இவற்றின் அடிப்படையில் இப்போதைய அணுஆயுத ஒப்பந்தங்கள் (treaty) பற்றி சொல்ல முடியாது, கூடாது 5. ஏனெனில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பூகோள அரசியல் போன்றவை பெருமாற்றம் கண்டுவிட்டது. இதனால் தான் ஒவொரு குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக 10 வருடங்களுக்கு) அணுஆயுத ஒப்பந்தம் (treaty). பின்பு புதிய ஒப்பந்தம் அல்லாதது முந்தைய ஒப்பந்த மீட்கப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு நீடிக்கப்படுவது. சிலவேளைகளில், ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் போதே திருத்தங்கள், மாற்றங்கள், உ.ம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி (உ.ம். ஆக அணுஆயுதம் மறைக்கப்படுவதை) மறைப்பதை சாத்தியம் ஆகிவிட்டது என்பதால். இன்னொரு உதாரணம், புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மரபு வழி ஏவுகணையும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் (treaty) வரும் அணு ஆயுத ஏவுகணைகளும் உ.ம் தூரம், வீச்சால் குறுக்கிட்டால், அவற்றை வேறுபடுத்துவதற்கு. வேறு உதாரணமாக, ஒரு அரசு, மற்ற அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை உளவு மூலம் சந்தேகித்து அல்லது உறுதிப்படுத்தி, நேரடியாக சரிபார்க்கும் முறையை மாற்றுவது அல்லது நேரடி சரிபார்த்தலுக்கு மற்ற அரசுக்கு கொடுக்க வேண்டிய அறிவுறுத்தல் அவகாசத்தை (notice) குறைப்பது. இது தன மாற்றம் என்பதை குறித்து சொல்லமுடியாது. 6. 1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள் அந்த நேரத்துக்கு சரி. 7. அவற்றை (1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள்) வரலாறு நூல்கள் வழியாக அறிந்து, இப்போதைய ஒப்பந்தங்களுடம் ஒப்பிடுவது மிகவும் தவறான முறை, உண்மையில் செய்யக் கூடாது. இதையே சொன்னது. ஆனால், இது வெளிப்படை. இதுக்கு பின்னணியாவது - எல்லா அரசுகள் எப்போதுமே கபடத்தனம் கொண்டு இருப்பது. வரலரசுகளுக்கு, அணுஆயுத வல்லரசுகளுக்கு எப்போதுமே பாதுகாப்பு போதாது. அவற்றின் அடிப்படை பார்வை அவற்றின் இருப்பை தக்கவைகப்பது எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது . எனவே எந்த வல்லரசும் எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எத்தனிக்கும். அணு ஆயுதத்தில் இருப்பை அடகுவைத்தே ஒப்பந்தம் (treaty) செய்வது. எனவே காற்றுபுக முடியாத இறுக்கமாக ஒப்பந்தம் இருக்க வேண்டும். முக்கியமாக நிறைவேற்றுவது (அணுஆயுதம், மற்றும் அதன் வழங்கல் அமைப்பை எண்ணிக்கை, வினைத்திறன் போன்றவற்றை சரிபார்ப்பது அல்லத் குறைப்பது. ஏனெனில் ஒரு அரசு குறைத்து, மற்ற அரசு அதே அளவு குறைக்கவில்லை என்றால், குறைத்த அரசின் பயம் இன்னும் கூடும்) காற்றுப்புகமுடியாத தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
  4. 91 கதையை இப்பொது கதைக்க முடியாது. அதையே நான் சொல்வது. (அப்போது ஏன் அமெரிக்காவே தொடர்ந்து அந்த 91 91 அளவில் treaty ஐ வைத்து இருந்து இருக்கலாமே இப்போதும்? ஏன் அவ்வளவு சிந்திப்புகள், brain storming ஒவொன்றுக்கும் பல்வேறு அரச / துறை சார் மட்டத்தில்? பின்பு ratify பண்ணும் போதும் அப்படியே காங்கிரஸ், செனட் பல்வேறு விளக்கங்கங்கள்) ஒவ்வொன்றும் ஆககூடியது 10 வருடங்கள். இப்பொது செய்ப்படும் ஒரு treaty (குறிப்பாக அணு ஆயுத்தக்கு) அடுத்த 10 வருடங்களுக்கு பலவேறு சவால்களுக்கு மத்தியில் நிற்க கூடியதாக, இறுக்கமாக நடைமுறைபடுத்த கூடியதாக இருக்க வேண்டும். (இதில் பூகோள , தொழில்நுட்ப / பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சிகள், அரசியல் தலைமை மாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் கருத்தில் எடுக்கப்படும்) சும்மா தெரியாது கதைப்பது.
  5. அடிமனதில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிள்ளை மனம் கல்லு, பேதை மனம் பித்து என்பது தான் அநேகமானோரின் நிலை.
  6. இதை செய்வது நீங்கள் நானல்ல. சொல்லிய அனைத்தும் உங்களிடம். வரலாற்று நூல்களில் (இந்த விடயத்தில், கலவாதியாகிய பழைய) treaty வரலாற்று பார்வையில், நியாதிக்கத்தில். அதை ஒரு இப்போதைய treaty (இதில், பொதுவாகவும் ) காற்றுபுகமுடியாத (அரச) இறுக்க தன்மையான பார்வை, கடப்பாடுகள், நிபந்தனைகலோடு ஒப்பிடுவது. (வரலாற்று நூலில் வந்த புரிவினால் தான் தான் உங்களை அறியாமலே உங்களுக்கு இந்த குழப்பம். அதுவும் அறியாது. நீங்கள் வரலாற்று நூல் சொல்லுவதை தூக்கிப்பிடிப்பதன் காரணம்) அத்துடன் தொழில்நுட்பத்திலும் பாரிய மாற்றம் (இதில் குறிப்பாக) (நீங்கள் சொல்லும் வரலாற்று நூல் treaty அந்த நேரத்துக்கு சரியாக இருக்கும்.) இது போன்றவற்றை அறியாது கதைப்பது. பொதுவாக இப்பொது இருப்பதை (treaty), வரலாற்று நூல் சொல்லுவது பழைய treaty க்கு ஒப்பிட முடியாது / கூடாது என்பதை கூட தெரியாது .... தான் செய்வது. பின் மற்றவர்கள் செய்வதாக சொல்வது. குறிப்பு: இப்பொது வாசிப்பது மட்டும் தான் என்று இல்லை. உண்மையில் வேறு வடிவ கிரகிப்பு அதே வரலாற்று நூல்களுக்கு முன்பு ஏற்பட்டு இருக்காதா பார்வையை உருவாக்கும், ஏனெனில் வாசிப்பு ஒரு பரிமாணம் மட்டுமே. உ.ம். இப்போது youtube இல் இருக்கும் தெனாலி ராமன். தெனாலி ராமனுக்கு வேறு பார்வை, புரிதலை உருவாகும். வாசிப்பில் தெனாலி விகடன் (கவி) மாத்திரம் என்ற பார்வை மட்டுமே உருவாகும். இது உதாரணத்துக்கு.
  7. உங்கள் நூல்களில் வரவில்லை என்றால் அப்படி இல்லை என்பது தானே நீங்கள் சொல்வது. பின்பு ஏன் treaty ஐ நீங்கள் பார்க்க வேண்டும்? ஏன் அரசுகளில் இருக்கும் (கபட சிந்தனை) போல (மறைக்க) சிந்திக்க வேண்டும், அல்லது மறைப்பதை கண்டுபிடிக்க அல்லது குறைக்க சிந்திக்க வேண்டும், குறிப்பாக அணு ஆயுதத்துக்கு வரும் போது? நீங்கள் உங்கள் நூல்களோடு இருங்கள்.
  8. உங்கள் நூல்களில் treaty ஏதாவது முழுமையாக இருந்ததா? அல்லது ஏதாவது ஒரு treaty ஐ முழுமையாக வாசித்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு treaty க்கும் விபரங்களின் தன்மை, அளவு வேறுபடும். இதில் விபரமாக இருக்கும் - எப்படி சரி பார்ப்பது என்ற முறை கூட. அநேகமாக அது மட்டும் தான் அல்ல என்பதும் இருக்கும் என்று நினைக்கிறன். இதில் உ.ம். செய்ம்மதி கண்காணிப்பு வார்த்தையால் முழு ருசியா / அமெரிக்காஅரச நிலபுலத்துக்கும். (இது ஒரு உ.ம். ஒன்றும் சொல்லாமல் (வேறு முறைகள், அல்லது குறிப்பிட்ட இடங்கள என்று சொல்லாமல் ) கருத்து (இதில்) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவது.) இப்பொது ஈரானோடு நடக்கும் இழுபறியை பாபார்த்தால் இது வெளிப்டையாகத் தெரியும்.
  9. சரி அப்படியே வைத்து இருங்கள். ஏனெனில், நீங்கள் தானே treaty விபரங்களை US, ரஷ்யா இடத்தில இருந்து ஒருவராக தீர்மானிப்பது. (இதில் சொல்லப்பட்டு இருபத்து மிக உயர்நிலை ஒப்பந்த அமைப்பு.) சிறு கேள்வி: எங்கு எது நிலைகொண்டுள்ளது என்பது தெரியாமல், எப்படி எந்த முறையாலும் சரி பார்ப்பது? இப்படியான ஒப்பந்தம், இந்த அளவு குறுகிய பக்கங்களில், இந்த அளவு குறுகிய விபரங்கள் மட்டுமா இருக்கும்?
  10. (அணுஆயுத்தம் எனும் போது அணுஆயுதம் மட்டும் அல்ல, அவற்றை வழங்க கூடிய அமைப்புகளும் உள்ளடக்கம்.) us சொல்லுவது. United States Department of StateNew START Treaty - United States Department of StateTreaty Structure: The Treaty between the United States of America and the Russian Federation on Measures for the Further Reduction and Limitation of Strategic Offensive Arms, also known as the New...
  11. (உடனடியான கேள்வி, என் திறந்த வெளியில் விமானங்கள் தரித்து வைக்கப்பட்டு இருந்தன என்று.) இவை அணு ஆயுத, குண்டுகளை கொண்டுசெல்லக்கூடிய விமானங்கள். இந்த போர்மானங்கள் குளிர் யுத்த முடிவு ஒப்பந்த படி (treaty), திறந்த வெளியில் (open hanger) இல் தரிக்கப்பட்டு இருக்க வேண்டும் (செய்ம்மதியாலும், நேரடியாகவும், தரவு பரிமாற்றத்தாலும்) சரி பார்பதற்கு; ருசியா சில சரிபார்க்கும் அம்சங்களை இடைநிறுத்தி இருந்தாலும். அதனாலேயே இவை திறந்த வெளியில் தரிக்கவைக்கப்பட்டு இருந்தன, சண்டை களத்தில் இருந்து கிட்டத்தட்ட 7000 மைல்களுக்கு அப்பால், பாதுகாப்பும் குறைவு. இப்போது இவை தாக்கப்பட்டு இருப்பது, குறித்த குளிர் யுத்த முடிவு ஒப்பந்தமும் (treaty) உம் முடிவுக்கு வருகிறது. ருசியா வேறு ஒப்பந்தங்களையும் கைவிடக் கூடும். இது மேற்கின் (உதவியுடன்) விளையாட்டு. எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
  12. எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை யார் வடிவமைதார்கள் என்று தெரியுமா? ஏனெனில், இஸ்லாமிய கட்டிட அமைப்பு செல்வாக்கும் ஊடுருவி உள்ளது. சீக்கிய பொற்கோயிலின் கட்டிட அமைப்புக்கும், இந்த நூலகத்துக்கு ஒற்றுமை இருக்கிறது, கட்டிட அமைப்பில். சீக்கியருக்கு, குருநானக், இந்து , மற்றும் இஸ்லாம் சமய நம்பிக்கைக்கு அடிப்படையில் சீக்கிய மத நம்பிக்கைகளை உருவாக்கினார். இந்துவில் உள்ள சாதி அமைப்பை புறந்தள்ளி.
  13. பொதுவாக எல்லோருக்கும், விடயம் இருந்தால் சொல்லவும் அதிகாரிகள், அரசியல் தலைமையை உரிய காரணதுடன் மேவலாம் என்பது யதார்த்தம் இந்திய அரசில், யாப்பின் படி. V.P. மேனன் (என்ற மிகவும் மூத்த அதிகாரி) அவர் வாயால் (கொள்கை ஆக்கத்தில்) சொன்னதே இருக்கிறது. ஆனால், அது இனிமேலும் தேவை இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. ஆனால், சொல்லபடுவது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி. இந்த விடயத்தில், இந்திய அரசில் அதிகாரிகள் அரசியல் தலைமையை மேவ முடியாது என்று சொன்ன எவருக்கும், இந்த விடயம், அதன் வரலாறு போன்றவற்றை பற்றி எந்த அறிவும் இல்லை என்பது வெளிப்படை. இந்திய சனநாயகத்தின் தனித்துவம் பற்றியும் தெரியாது, அறியாது மேற்கில் இருந்து கனவு காண்பது. அதை பற்றி சுருக்கமாக சொல்லியும், அவர்களின் பொத்தாம் போது கற்பனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது. சிலர் இங்கு எதிர்பார்பது conformance ஐ, ஆனால் விடயம் அறியாமல். அதற்கு நான் இணங்கப்போவதில்லை என்பதில் தெளிவு. இங்கு எல்லோருமே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்திய அரசில் அதிகாரிகள் உரிய காரணத்துடன் அரசியல் தலைமையை மேவலாம் என்பது தான் யதார்த்தம்.
  14. இது பொதுவானது விடயம் அறியாமல் கதைப்பது. எதை கதைக்கிறோம் என்று தெரியாமல் கதைப்பது, வசதிக்கு ஏற்றவாறு. சும்மா விடயாம் இல்லாமல், சிலர் பொத்தாம் பொதுவான கனவு கண்ட கதை (கனவு கூட காரண காரியம் இருக்கும்). இறுதி கட்டம் என்று சொல்லியும் என்பதன் கருத்து கூட தெரியாமல், வசதிக்கு ஏற்வாறு புரட்டுவவது. அதுக்கும் பரிகாசம் தேவையாய் இருப்பது, ஏனெனில் விடயம் இல்லை. ஏன் இந்திய அதிகாரிகள் மந்திரி / அமைச்சரை தடுக்கலாம் என்பதன் யாப்பு விளக்கம். அதிகாரிகள் - முன்பு சொன்னது போல - அதிபரால் மட்டுமே நீக்கப்பட முடியும் - அதாவது அதிபரின் (குடிஅரசு தலைவர் ) பிரதிநிதிகள் - அதிபர் (குடிஅரசு தலைவர் ) பீடம் குறிப்பது கிட்டத்தட்ட முடியை - British Raj இந்திய அரசாங்க சட்டத்தில் இருந்து, இந்திய குடியரசு யாப்புக்கு சிறு மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டது. 7:40 இல் இருந்த்து 9:40 வரை அம்பேத்கார் செய்தது சொல்லப்பட்டு இருக்கிறது. (இதுவே யாப்பு காரணம் அதிகாரிகள், அரசியல் தலைமை (மந்திரி, அமைச்சர், பிரதமர) முடிவுகள் அல்லது விடயங்களை உரிய காரணங்களுடன் தடுக்கலாம், மாற்றலாம், நிராகரிக்கலாம் ... என்பதற்கு) ஒருவர் தன்னையே தான் பரிகாசம் செய்யும் நிலை தெரியாது இருப்பவர்களை பரிகாசம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
  15. presentation செய்த பாக்கிஸ்தான் விமானப்படை அதிகாரி சொல்லி இருந்தார் - multi domain operation ஐ ஆரம்பித்ததாக. (இப்படி இந்திய விமானப்படை எதையும் சொல்லவில்லை) இதில் பாகிஸ்தான் மேலாண்மையை தீர்மானித்தது multi domain operation, அதனுடன் இணைக்கப்பட்ட multi domain electronic warfare . (ஏனெனில், பார்வைக்கு அப்பால் இருந்த தூரத்தில் இருந்து தாக்கி, இலக்குகள் வீழ்த்தப்படது / அழிக்கப்பட்டது) இந்த multi domain operation கருது கோள் சீனாவால் விருத்தி செய்யப்பட்டது. இந்திய (ஊடகங்கள்) சொல்வது போல 1-2 கிழமையில் புதிய தொழில்நுட்ப்பதை புகும் முடியாது முடியாது. முக்கியமாக, இந்தியாவோடு ஒப்பிடும் போது, மிக குறைந்த விலையில், பாக்கிஸ்தான், மிக கூடிய விளையான (மேற்கு, ருசியா) மாணங்களையும், மற்ற ஆயுதங்களையும் துவாம்சம் செய்த்து உள்ளது, பாகிஸ்தானுக்கு மிக குறைந்த இழப்புகளுடன். முன்பு சொன்னது போல, இது ஒரு அம்சம் அல்ல. பாக்கிஸ்தான் விமானப்படை / அரசு / அரசாங்கம் உடனடியாகவு , அமைப்பு அடிப்படையிலும் வினைத்திறனை கட்டி எழுப்பியுள்ளது (சீனாவிடம் வாங்கனாலும், உண்மையில் அந்த குறிப்பிட்ட ஜே-10, சீனா - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பு, உற்பத்தி), பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு.
  16. நெறிமுறயை மேற்கு எப்போதாவது கடைபிடித்ததா அதுக்கு வரும் போது? இன்று வட கொரியாவை மேற்கு தாக்காத காரணம் என்ன? அனல், ஈரானை தாக்குவோம் என்று நிற்பதும். இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது, வழங்கும் போக்கை காட்டுவது மேற்கு, குறிப்பாக us. ஏனெனில், மிகவும் உயர் மட்டத்தில் சீனாவுக்கு எதிரான சமப்படுத்தும் அரசாக நோக்குவது. அத்துடன் , குறிப்பாக, இந்தியா இப்போதும் அதன் மதி காலனித்துவத்தில் இருந்து விடுபட முடியாமையும். அதாவது காலனித்துவதில் இருந்த, உருவாக்கிய மட்டங்களை (hierarchy) ஐ விரும்புவதும்.
  17. அப்படி மங்காமல் இருப்பதும் ஒரு நடிகரின் / நடிகையின் திறமையில் ஒன்று. உடனாக தேடி எடுத்து, ஆயினும் இதை முறையான பே ட்டிகளிலும் சொல்லி உள்ளார். (அதே போல தமிழின் மீது பற்று இல்லாவிட்டாலும், திறமை, சிந்தனை உள்ளவர்கள் இருப்பார்கள்)
  18. முன்பு மற்ற திரியில் சொல்லி இருக்கிறேன். இப்பொது உதோயோக பூர்வமாக. கார்கிலில் கணடறியப்பட்டதை கூட முழுமையாக சரி செய்யாத நிலை. இது ஒரு முக்கிய காரணம் வேறு வேறு நாடுகளில் இருந்து இந்தியா கொள்வனவு செய்து, அவற்றை ஒருங்கணைக வேண்டும் என்பது இந்தியா கொள்கை. இதை சிலர் மேற்கு சாய்வாக எடுப்பது.
  19. சம்ஸ்கிருததை எடுத்துவிட்டால் மொழி நிற்றல் வேண்டும், அதுகே உரிய proto மொழி இருந்து இருந்தால். மலையாளம் மட்டுமே தனித்து நிற்க கூடியது. ஏனெனில், அது உண்மையில் மலையாளதமிழ் (எழுத்து மொழி). மலையளம்மா (பேச்சு மொழிக்கு), இப்போதும் புழக்கத்தில் இருப்பது. (இனால் தான் இங்கு மேற்கில் பிறந்த, வளர்ந்த, ஆனால் தமிழ் பேசி, படித்து வளர்ந்த பிள்ளைகளுக்கு கூட பேச்சு மலையாளம் விளங்குவது. இது மேற்கில் இருக்கும் மலையாளிகளுக்கு கூட ஆச்சரியம், அதாய் அறியும் பொது தான் தமது மொழியை வேறு எவரோ (ஆங்கிலேயரும், நம்பூதிரிகளும்) வெட்டி கொத்தி உள்ளார்கள் என்பது உணர்ந்து ... அதன் பின் கதை இல்லை) மற்ற திராவிட மொழிக நில்லாது, அல்லது தமிழ் பக்கம் சாயும். இதுவே மற்ற திராவிட மொழிகளின் பிரச்சனை. (இதை சொன்னால் அவர்களின் முகம் தொங்கும், ஏனெனில் இதை அவர்களே அன்ஹா இடத்தில செய்து பார்க்கும்படி கேட்கலாம். அது வரை கொக்கரித்தவர்கள் அடங்கிவிடுவார்கள்) சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்பது அவர்களின் கற்பனை, சமஸ்கிருஹ இலக்கணம் தெரியாது. அப்படி வந்தது என்றால், சமஸ்கிருதத்தை எடுத்தால், மொழி இருக்க கூடாது, அனால் இந்த மொழிகள் அதன் ஆரம்ப வ்வடிவில் இருக்கும், தமிழ் பக்கத்துக்கு சாய்வுடன். ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன? இது தான் யதார்த்தம், சும்மா மற்றவனினின் மனம் நோகுது என்றுவிட்டு, யதார்த்தத்தைவிட் விட முடியாது, கூடாது. குறிப்ப: திராவிட என்பதன் நேரடி கருத்து சமக்கிருதத்தில் - மூன்று பக்கம் நீரால் / கடலால் சூழப்பட்ட. ஒருபக்கமாக இந்த 'திராவிட' சொல் நேரடி சம்ஸ்கிருதம், மனுஸ்மிருதியில் பாவிக்கப்பட்டு உள்ளது. மனுஸ்மிருதியில் அதன் குறிப்பது நெறிமுறை தவறிய சத்திரியரின் சந்ததிகள். (உண்மையில் மனுஸ்மிருதி (ஆங்கிலேயர் மொழி பெயர்த்தது) அதன் உரிய பெயர் இல்லை, மன்னவ தர்மசாத்திரம் என்பதே அதன் அவையடக்கத்தில் சொல்வது.) மறுபக்கமா Bishop Robert Caldwell அறிமுகப்படுத்தியது. அம்பேத்காரும் தமிழ் என்பது திரிந்தே திராவிட என்று சம்ஸ்கிருதத்தில் வந்ததாக என்பது என்று சொல்லியத. ஆங்கில மொழியர்ப்பு மனுஸ்மிருதியில் இருந்து: 10.20. Those whom the twice-born beget on wives of equal caste (வர்ணம்), but who, not fulfilling their sacred duties, are excluded from the Savitri, one must designate by the appellation Vratyas. 10.21. But from a Vratya (of the) Brahmana (வர்ணம்) spring the wicked Bhriggakantaka, the Avantya, the Vatadhana, the Pushpadha, and the Saikha. 10.22. From a Vratya (of the) Kshatriya (வர்ணம்), the Ghalla, the Malla, the Likkhivi, the Nata, the Karana, the Khasa, and the Dravida
  20. நடிகராக தொழில் புரிவது இலகு என்று எண்ணுவது மிகவும் தவறு. (விஜே சேதுபதி - டுபாயில் கணக்கியல் துறையில் வேலை செய்து, இளம் வயது தாண்டி நடிப்பு துறைக்கு வந்தவர் - கேட்டால் தெரியம்) அதன் காரணம் கோடிகள் புரளும் துறை, போட்டி ஒன்றை ஒன்று பிடித்து தின்னும் அளவு, அவற்றுக்குள்ளால் முன்னேறிவருவது. பல திறமைகள், ஆளுமைகள் வேண்டும். (சில பெண்கள் இருக்கலாம் 'வேறு' முறை பாவிப்பது, அனால் பொதுவாக அவர்கள் நின்று பிடிக்க மாட்டார்கள்.)
  21. முன்பு (நான்) சொன்னது. (நானே) ஆய்வு சேட்டு விட்டு, வேறு எந்த துறைசார் மீள்பகுப்பாய்வு இல்லாமல் பிரசுரிக்குமாறு கேட்பது. (சிங்களம் இதையே எதிர்பார்க்கிறது) அனல், இந்திய தொல்லிய துறை இப்படி எல்லாவற்றுக்கும் துறைசார் கறாராக இருக்கிறதா என்பது முக்கிய கேள்வி. தமிழ் நாடு எழுப்ப வேண்டும், குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு. குறிப்பாக அனுராதபுர இரசியத்துக்கும், குஜராத்துக்கு தொடர்பு இருந்தது என்று தொல்லியல் மூல உறுதி செய்ததாக அறிவித்ததுக்கு. (அப்படி நடந்ததாக முதலில் தெரிந்து இருக்க வேண்டும், அந்த நேரத்தில் செய்த்து இருக்க வேண்டும்)
  22. இங்குள்ள சிலருக்கு நீங்கள் எல்லோரும் 'கூத்தாடிகள்' அல்லவா, நன்றாக வடயம் அறிந்தவர்களாக தோற்றம் அளிப்பவர்களுக்கும்? இந்த பேட்டியை அவதானித்ஹால் , அவர்ளுக்கு இப்படியான கூர்மையான கிரகித்தல், சிந்தனை, திறமைகள் போன்றவை இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
  23. தூரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முடிவுக்கு வருதல் வேலன் சாமிக்கோ (அல்லது அந்த போக்கை எதிப்பவர்களுக்கோ) பொல்லை தூக்கி கொடுப்பது என்ற மிகவும் வெளிப்டையானதை ... உ.ம். இந்த திரியில் இணைக்கப்பட்டு இருக்கும் அந்த மச்ச படையல் செய்யப்பட்ட கோயிலுக்கும் வேலன் சாமிக்கு இடம் அளிப்பது. இதனால் தான் ஒவ்வொரு கோயிலையும் தனித்துவமாக கையாள வேண்டும் - அதன் கலாசாரம், சூழல் பண்பாடுகள், வழங்கங்கள், நம்பிக்கைகள், ஏற்கனவே இருக்கும் அமைவிடம், வரலாறு போன்ற பல அடிப்படைகளை கொண்டு. (நீதிமன்றமும் அப்படியான அணுகுறையே எடுக்கும் என்று எனது நம்பிக்கை. ஏனெனில், இந்த பிரச்னை எங்கு போக கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை நீதிமன்றம் கருத்தில் எடுக்கும். கொண்டுவரப்பட்டு இருக்கும் வழக்கு குறுகிய நல்லூர் - வேலன் சாமி பிரச்சனையாக முக்கியவிடயம் என்றாலும்.) 6 பிரிவுகளில் - சைவம், வைணவத்துக்கே ஆகமங்கள் இருக்கிறது. (ஆகமங்கள் மனித நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விதிகள்.) மிகுதி 4 க்கும் - காணபத்தியம், கெளமாரம், சாக்தம், சௌரம் பிரிவுகளுக்கு ஆகமங்கள் இல்லை - . சைவம், வைணவதுக்கு ஆகமம் இருப்பதே இயற்கையில் இருந்து விலத்தி, மற்றவற்றோடு ஒப்பிடும் போது.
  24. அது தான் பிரச்சனையே. அது பல பிரச்சனைகளை மறைக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.