Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. ஆங்கிலத்தில் சொல்கிறேன். நீங்கள் சொல்வது assurance (process). இது கம்பனி நிர்ணயித்த எதோ ஓர் மட்டத்தில் (எண்ணாகவும், சொல்லல் வர்ணிக்கப்படும் அல்லது இவை இரண்டும் கலந்து), உங்கள் (அல்லது கொடுப்பவர்) அனுபவ புரிதலில், அந்த மட்டத்தில் அல்லது அதை விடக் கூட உள்ளது. மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இருப்பது accounabilitty (பொறுப்பு). அத்துடன், மருத்துவர் செய்வது , இருக்கும் பொறுப்பு duty (of care) - இங்கு duty என்ற சொல்லே சட்டவலு, சட்ட அடிப்படையிலான பொறுப்பு ஆக்கி விடுகிறது. எனவே, வேறுபாடு இருக்கிறது.
  2. இது தகமை அடையாளத்தை திருடி செய்தது. (சரி பார்க்காமல்) நிறுவனம் அவ்வாறு சொன்னதை நம்பி, அந்த நிலையில் அவரை பணிக்கு அமர்த்தியது. அந்த தகமை உள்ள உரிய வைத்தியர் வந்த்து இருந்தாலும், உங்கள் நிறுவனம் அந்தப்பணியில் அமர்த்தி இருக்கும் தானே ? மற்றது, நீங்கள் சொல்வது வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் போல தெரிகிறது. நான் சொல்வது தகமை அடிப்படையில் , சிகிச்சை, மருத்துவ சேவைகள் வழங்கும் வைத்தியசாலையில், குறிப்பாக அரச வைத்தியசாலையில், ஒவொருவரின் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது.
  3. மனித வைத்திய, உயிரியல் துறையில் நீங்கள் சொல்வதை கண்டீர்களா? குறிப்பாக வைத்தியசாலையில்? இவை மிகவும் குறித்த, சிறப்பு அறிவு, பயிற்சி போன்றவை. (அவற்றில் உள்ள சொற்களை வாசித்து, விளங்கி திருப்பி கருத்தை உணர்ந்து சொல்லுவதற்கே நேரம் ஒதுக்க வேண்டும், ஏனெனில் அவை பொதுவாக இருப்பது லத்தீன் மொழியில், அல்லது லத்தீன் மொழி சீரமைக்கப்பட்ட சொற்கள், பொதுவாக உச்சரிப்பு நீண்டவையும்) எனவே படிக்காதவர்களால், பயிற்சி எடுக்காதவர்களால் ஒரு போதும் செய்ய முடியாது. இதில் கூட, (நான்) வைத்தியர் , தாதியருடன் நின்றேன் பார்த்தேன், (தொழில்) பழகினேன் என்பது வைத்தியர், தாதியர் செய்த அந்த குறித்த அனுபவ அவதானம் மாத்திரமே. (அது கூட படித்து, பயின்று இருக்காவிட்டால் மனதில் இருக்காது, ஏன் என்று விளங்காது.). சிறு நுணுக்கமான வேறுபாட்டுடன் இருக்கும் இரு வேறு அவதானங்கள் பயிலாதவருக்கு ஒன்றாகவே தெரியும். இதில் உள்ள நுணுக்கங்கள் மிக அதிகம். ஆனால், நன் இதை சொல்வது, பொதுவாக வைத்திய, உயிரியல் துறையில் படித்து, பயின்று இக வேண்டும் என்பதன் காரணம் மருதத்துவத்துறையிலும் duty (பணி) creep up இருக்கிறது, அதாவது பணி செய்பவர்கள் அறிந்தோ அறியாமலோ சுமத்தப்படுவது (மனிதரின் பொதுக் குணம்), பல உடனடியாக நேரம் /மனித வலு தேவை என்பதற்காக. ஏனெனில், மருத்துவம், குறிப்பாக வைத்தியசாலை பரிமாணத்தில் ஓர் குழு பணி (team work). இவர்கள் (தொண்டர்) அந்த நிலைக்கு ஆளாகலாம் அப்படியான பணிகளில் (உதவி தாதி போல) அவர்களை அறியாமல், அதே போல அவர்களை அறியாமல் ஓர் புதிதாக வரும் நோயாளியை மதிப்பு (அவசரம், ஆபத்து போன்றவை) செய்யும் நிலைக்கு உள்ளாகலாம். ஆனாலும், இவற்றை தொடங்கும் போது (சத்தியமூர்த்தி) மற்றும் சத்தியமூர்த்தியை நெருக்கிய அமைச்சர்கள் யோசித்து இருக்க வேண்டும். ஆயினும், அருச்சுனா வைத்தியர் தானே, இதை யோசிக்காமல் கொண்டு போனது , அல்லது இந்த விடயமும் அலசப்பட்டதோ தெரியாது? குறிப்பு: இங்கே uk இல் இப்போதும் எம்மவர்களின் ஓர் பெரும் பகுதி grammar school (இது ஜெர்மனி, சுவிஸ் இல் கிட்டத்தட்ட Gymnasium) என்பதில் அவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற அவாவின் முக்கிய ஓர் காரணம் (இதுக்காக இடம் பெயர்ந்து ...), இவற்றில் இப்போதும் லத்தீன் மொழி பொதுவாக கற்பிக்கப்படுவது, அது அவர்களின் பிள்ளைகள் மருத்துவத்துறை போவதற்கு (விருப்பம் என்றால், ஆனால் எமது பெற்றோர் பிள்ளைகள் பிறக்கும் போதே மருத்துவர் என்று கணக்கு போடுவது ... ஆனால் இது இப்பொது மாறி வருகிறது பிள்ளைகள் தமது விருப்பில் நாண்டு பிடிப்பதால்) போடும் முதல் பிள்ளையார் சுழி (சீர்காழியின் பாட்டுத்தான் நினைவு வருகிறது, பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை (டாக்குத்தரை) தொடங்கிவிடு ... இன்னொரு நினைவு, சிங்களத்தின் குற்றச்சாட்டு, தமிழர்கள் விடைத்தாளில் பிள்ளையார் சுழிபோட்டே அதிக புள்ளிகள் பெற்றார்கள் உயர்தர பரீட்சையில்.) மருத்துவ, தாதி துறையில் அல்ல. senior என்றால் மேலும் கற்கை நெறிகள், பயிற்சிகள் முடித்து, அதில் அனுபவமும் இருக்க வேண்டும். மருதுவ, தாதி துறைகள் கற்கை நெறி, பயிற்சி போன்றவற்றால் படியமைகப்பட்டது (regimental hierarchy என்று சொல்லலாம், இராணுவம் போல இறுக்கமானது). கம்பனிகளில் செய்வது போல முடியாது, ஏனெனில் அந்த குறிப்பிட்ட நாட்டு மருத்துவ துறை வகுத்து வைத்து உள்ளது படிநிலைகளை பகிரங்கமாக. ஆனாலும், கம்பனிகளில் நடையேறுவது போல மேல்வைத்தியரின் ஆமோதிப்பும் தேவை, இதில் பாரபட்சம் காட்டப்படுவது இருக்கிறது.
  4. ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்? வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா? அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது . இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா? அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார. சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர். இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?
  5. நான் சொன்னதையே செய்கிறீர்கள். எனவே தொடர்வதில் அர்த்தமும் இல்லை. (ஆயினும், நீங்கள் சொன்னவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை, அதாவது உந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.)
  6. இங்கே புலிகளை judge பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
  7. முதலில் சிறிய குழப்பம் வரும், பின்பு சரியாகி விடும். அந்த பெண் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், சிங்களவர் தீவுக்கு வரும் எல்லா வெளி இன மக்களோடும் கலக்கும், கலந்த வீதம் மிக கூட. தமிழரில் அப்ப்படி இல்லை என்றே சொல்லலாம் அந்த சிங்களவரின் வலிதான உயிரணு என்பது, அவர்கள் நாகர், யக்கர், வேடர் மற்றும் சிங்க அடி விஜயனின் கலவை என்று இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள், அத்துடன் புத்தர் தென்பகுதி காட்டில் பிறந்து கபிலவஸ்து சென்றகாகவும் இப்போது நம்ப தொடங்கி இருக்கிறார்கள்.
  8. 3-4 வெவேறு வடிவம். எல்லாவற்றிலும், விஜயனின் தந்தை சிங்கபாகு பிறந்தது (அல்லது வளர்ந்தது, ஏனெனில் ஒரு வடிவத்தில் சிங்கம் விஜயனின் அப்பமா சிங்கவல்லி , அவரின் இரு பிள்ளைகளையும் காவச்சென்று அதன் காவலில் வைத்து இருந்தகாக) சிங்கத்துக்கும், விஜயனின் அப்பம்மா சிங்கவல்லிக்கும்.
  9. நான் சொன்னேன் அல்லவா இரத்த அல்லது தூர உறவு அக்கா - தம்பி அல்ல என்று. 2 உறவும், எரம்பு - எனது உறவின் அம்மா , மதிவதனி - எனது உறவு , அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, அக்கா - தம்பி என்ற நிலைக்கும், இணைபிரியா சகோதரிளுக்கு (உணர்திறன் மிக்க விடயங்களை சொல்லுவூ சரி அல்ல) இடையில் இருக்கும் நட்பான உறவாக உருமாறியது என்று. இதில் அறிமுகம் என்பது முக்கியம். இப்படியான கருத்து வெளியில் வந்திருக்காவிட்டால் மன்னிக்கவும். அருணா மதிவதனியின் சகோதரியாக இருந்தால் - ஆம் அருணா மஹிவதானியின் சகோத்தாரி என்ற எல்லை வரைக்கும் . அதன் மேல் அன்னியோன்னியம் இல்லை.
  10. பின்பு கதைக்கலாம் என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன் நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது. (அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.) 1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது? மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா? அது போராட்டத்தை ... அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு). ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா? 2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள். ஏன் என்று சிந்தித்து பார்க்கவும். மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர .... வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival) 3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது) 4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம். 6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை. 7. புலிகள் செய்தது - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு. 8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது. உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும். இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.
  11. நான் சொன்ன குடும்பங்கள் இதை மூடி, கடந்து விட்டன. பெயர் சொல்லலாம் என்றாலும், எழுத்தில் பதிவதை தவிர்க்கிறேன். ஏனெனில், என்ன விளைவுகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைக்குள் சிக்கலாம் என்பதை எதிர் கூற முடியாது குறிப்பிட்ட நபர்களை தவிர, வேறு எவருக்கும் நான் சொன்னது தெரியாது. இப்போது, அவர்களை பொறுத்தவரையில், இயக்க பின்னணி அவர்களுக்கு கிட்டத்தட்ட இல்லை. இங்கே பதியப்போனால், இயக்க பின்னணியை உருவாக்குவதாக முடியும். ஒருமுறை சிந்திக்கவும், அந்த பிள்ளைகளில் (அல்லது மூத்த 1-2 பிள்ளைகளின் பிள்ளைகள்) ஒருவர் அரச வேலைக்கு விண்ணப்பித்து, பின்னணியை தேடும் போது இங்கே பதியப்பட்டதை பின்ணணி தேடும் மென்பொருள் பிடிக்கும் என்றால் (அனால் நிச்சயம் பிடிக்கும்), அவரின் விண்ணப்பம் அதோடு சரி. அப்படியே, வெளிநாட்டு விசா, புலமைப்பரிசில் போன்றவையும். சிலவேளை பயங்கராயத்தை பிரிவு வந்தாலும் ஒரு புதினமும் இல்லை. அதனால் எவர் என்றாலும், கடந்த காலா வரலாற்றில் நடந்ததை இங்கு பதியும் போது மிக ஆழமாக சிந்தித்து பெயர்கள், இடம் போன்றவற்றை பதிவதை தவிர்க்கவும்.. ( ஏனெனில், முன்பு பதிவு (record) என்பது, சிங்கள படைகளுக்கு தெரிய வந்தாலே. இப்பொது பதிவு (record) என்பது ... அதுகுதானே ibm மென்பொருள் செய்கிறது (i2 என்ற மென்பொருளின் விபரத்தை தேடி பார்க்கவும்.) வேறு மென்பொருளும் இருக்கிறது. )
  12. ரோஹிங்கியா போலத்தான் தெரிகிறது. இது 3 வது கடல் கலம் அல்லது படகு என்று நினைக்கிறன் பர்மா / அல்லது பர்மா பகுதியில் இருந்து. ஆனல், எல்லாம் வந்தது முல்லைத்தீவு கடலுக்கு. எங்கு வருகிறேன் என்று தெரிகிறதா? விஜயன் என்று அலைக்கட்ட நபரும், அவரின் கூட்டாளிகள் / க்கூடங்கள் வந்தது மன்னார் பக்கம். கடல் சுழி திசை மாறிவிட்டதா? (அல்லது, மன்ன்னர் பக்கம் அப்போதைய வர்த்தக வழியாக இருந்து இருக்குமோ?)
  13. டிரம்ப் வரமுதலே சும்மா லகலகலகலகலக ... என்று அதிருதல்ல, தூள் பறக்குதில்ல ஹொந்தாய் வேணும் என்றால் ரம்ப் சொந்தத்தில் இருக்க வேண்டும்.
  14. புலிகளுக்கு, புலிகள் அல்லாதோர் என்ன செய்தார்கள் என்று முழுமையாக தெரியாது. அப்படி உண்மையில் நடந்தது எண்பத்து கூட புலிகளுக்கு தெரியாது. இப்படியான, வேறு கட்டுப்பாட்டு பகுதியில். சில விடயங்களை செய்யும் போது , இப்படியான புலிகள் அல்லாதோர், ஈடுபடும் புலிகளிடம் சொன்னார்கள் எங்களை வெளியில் சொல்லவேண்டாம், உங்களை எங்களுக்கு தெரியாது, எங்களை உங்களுக்கு தெரியாது. செய்த விடயமே நடக்கவில்லை. உதாரணமாக, ஆயுத்தங்கள் இடம் மாற்றப்படும்போது, அவற்றை இடம் மாற்றும் புலிகள் அல்லாதோர் , புலிகளை சந்த்திக்கும் போது முகத்தை சேட்டால் மறைத்து. அளது பொதிகளை புலிகள் குறிப்பிட்ட இடடத்தில் வைத்து செல்வது, மாற்றுபவர் வந்த்த்ஹு எடுப்பது. அப்படி இடம் மாற்றுபவர், பொதுவாக (அந்த ஊரில்) புலிகளில் உள்ள வேறு அங்கத்தவர் மூலம் விடயத்துக்குள் கொண்டுவரப்படுவார். அநேகமாக, வேறு புலி உறுப்பினரின் நட்பு. ஈடுபடும் புலிகளுக்கு யார் என்றே தெரியாது, அது சரியும் கூட. இந்த அமைப்பை புலிகள் உருவாகவில்லை. வேறு கட்டுப்பாடு பகுதி என்பதால் தேவையின் நிமித்தம் உருவாகியது. எனவே, மிக கூரிய, கொடிய ஆபத்துகளை எதிர் கொண்டு செய்த முகம் ஆற்றிய பலர் இப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு, திருப்தி போராஹில் எந்தவொரு அடையாளமும் இன்றி பங்காளித்தோம் என்பதே, மனசுத்தியுடன் திருகுதாளம் செய்யாமல் ஈடுபட்டு இருந்தகால். இப்போதும் சொல்கிறேன், எந்த இயக்கத்திலும் முழுமையாக தெரிந்த எவரும் இல்லை.
  15. அதை செய்தால், இங்கே பெயர் குத்துதல் . நான் பின்னிற்கமாட்டேன். ஏற்கனவே சொல்லிவிட்டேன் . நேரம் கிடைக்கும் போது, கோசானுடன், மற்ற இயக்க அழிப்பை அலசி ஆராயப்படும்.
  16. சிலவேளையில் நீங்களும், நானும் அல்லது இங்குள்ள சிலர் இப்படி உரையாடுவது சினிமாவில் நடப்பது போல இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், வேலும்மயிலும், திருவடிவேல் எனது உறவுக்கு அறிமுகமுகமாகி, நட்பு வளர்ந்த்து, யார் என்று பார்த்த போது இரு பகுதியின் முப்பாட்டனுக்கும் ஒருவரை ஒருவர் அறிந்து இருந்தகர்கள். வேலுப்பிள்ளை (பிரபாவின் தகப்பன் ) எனது உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து யார் என்று பார்த்த போது முனைய சந்ததிகள் அறிந்து இருந்தன. ஆனால் போர்த்துக்கேயர் வருகைக்கு முதல் உள்ள சந்ததிகள் வியாபாரத்தில் தொடர்பு இருக்க மிக கூடிய சாத்தியக்கூறுகள் தெரிந்தது. அதேபோல, பிரபாவின் மனைவி (மதிவதனி), எனது இன்னொரு உறவுக்கு அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, தேவை நிமித்தம் எனது எனது உறவு வீட்டில் அவ்வப்போது தங்கி சென்றார் (இது பிரபாவை மணம் முடிக்க முதல்). அப்போது, முதல் தரம் அப்படி தங்க நேர்ந்த போது, மதிவதனியின் பெற்றோருக்கு சங்கடம், தயக்கமும், ஏனெனில் ஒரு பெண் அந்த நேரத்தில் அவரின் ஊரில் (புங்குடுதீவு) இருந்து உடனடியாக யாழ் நகரத்துக்கு உடனடியாக வரமுடியாத நிலையில், தெரியாத ஒருவரின் வீட்டில் தங்குவது. அதனால், மதிவதனி எனது உறவின் வீட்டில் முதல் தங்க வரும் போது தகப்னும் (ஏரம்பு) வந்தார். எனது உறவின் தாயோ அல்லது மதிவதனியின் தகப்பனோ (ஏரம்பு) ஒருவரை ஒருவர் அடையாளம் காணவில்லை. யார் என்று எரம்பு விசாரிக்கிறார் என்னுடைய உறவின் அம்மாவை , கதை தொடர்கிறது ... சிறிது நேரத்தில் ஏரம்பு அதிர்ச்சியான சந்தோசத்துடன் ... அடே என்னுடைய அக்காவின் (சொந்த அல்லது தூரத்து உறவு அக்கா அல்ல) வீட்டிலா எனது மகள் தங்கப்போகிறார் என்று அதிர்ச்சியான நிம்மதியும், ஆனந்தமடைகிறார். எனது உறவின் அம்மாவுக்கும் ஆனந்தம் அவரின் அடையாளம் மாறிய தம்பியை கண்டதில். வந்திருப்பது எனது (தொலைந்த தம்பி உறவின் ) மகள் என்று, அவர்களை வாசலில் நிறுத்தி, எனது உறவின் அம்மா சாமி தட்டில் இருந்த விளக்கு, விபூதி , சந்தணம், குங்குமம் தட்டை எடுத்து வந்த்து தீபம் ஏற்றி ஆரார்த்தி எடுத்து ... வரவேற்றார். அப்போது, எனது உறவின் அம்மாவும், மதிவதனின் தகப்பனும் (ஏரம்பு) கிட்டத்தட்ட ஒரேநேரத்தில் ஒருவரை ஒருவர் குறுக்கிட்டு மதிவதனியை சுட்டி சொல்கிறார்கள், இது உன் வீடு எப்போதும் வந்து போகலாம், ஏரம்பு சொல்கிறார் நீ (மவதனியை சுட்டி) என்னிடம் எதுவும் சொல்லவேண்டியதில்லை இங்கு வரும் போது என்று . படம் அல்லவா? அன்றில் இருந்து மதிவதனி எனது உறவுக்கு ஓர் (உறவு மீட்கப்பட்ட) தங்கை, எனது உறவின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இன்னொரு மகள். எனக்கு ... நீங்களே ஊகித்து கொள்ளலாம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுக்கு முன்பே, மதிவதனிக்கும், எனது உறவுக்கும் வேறு பல பெண்கள் நட்பாக வாய்ப்பு இருந்தும், இவர்கள் இருவருமே ஏறாத்தாழ உடன்பிறவா சகோதரிகள் ஆகிய நட்பு உருவாகி இருந்தது (அதனால் தான் மதிவதனி எனது உறவின் வீட்டில் தகுவதற்கு விருப்பப்பட்டார்). அதேபோல, எனது உறவின் அம்மாவின், அப்பாவின் முனைய சந்ததிகளும், ஏரம்பு, மற்றும் அவரின் மனைவி முன்னைய சந்ததிகளும் ஒன்றையொன்று அறிந்து இருந்ததாக, அவர்கள் அறிமுகமாகி அக்கா - தம்பி என்று உறவு வளர்ந்த நேரத்தில் யார் என்று அறிந்தபோது தெரியவந்தது. நான் நினைக்கிறன், யாழ்ப்பாணம் குக்கிராமம், அதுக்குள் இருந்து கொண்டு பீலா விடுறம் நகரம் என்று, இல்லையா?
  17. எனது அப்போதைய அனுபவ கண்ணனுக்கு தெரிந்தது. எனதுஉறவுக்கு தெரிந்தது வேலும்மயிலும், திருவடிவேல், அதனால் , பின் அவர்களை தெரிய வந்தது. அனாலும் முதல் நிலை அறிமுகம், நட்பு, தொடர் நட்பு, பரீட்சியம், சந்திப்பு, குசலம் விசாரிப்பு, பிடிப்பிக்கப்பட்டவரின் நிலை, எவ்வாறு அது முழு குடும்பத்தையும் பாதித்தது, புலிகளுடன் தொகையை குறைப்பது அவர்கள் கதத்தளித்து என்று ... பல சம்பாஷணைகள் ... எல்லாம் வேலும்மயிலும், திருவடிவேல் உடன் தானே. அப்படியே அவர்களின் உறவும் நிலைத்து விட்டது திருவடிவேலின் ... ஒருத்தரும் சொல்லலை, இடைக்கிடை சந்திக்கும் சந்தர்ப்பம் அப்போது எனது உறவு ககதைத்ததில் இருந்த்து நான் ளங்கியது, பொறுக்கியது. அவருக்கு (தெஇருவடிவேலின் உறவு) கெட தொகையை கேட்டு, சில நொடிகள் எனது மதியில் அது பதியவில்லை, பின் ஆயிரம் , இலட்சம், 10 இலட்சம் என்று யோசித்து, தொகையின் பரிமாணத்தை எடை போட்டேன். புலிகள் இப்படி பணம் பெற்றதை, அதன் தேவையை நியாயப்படுத்தி இருக்கிறேன். அப்போது உனது (உறவுக்கு வந்தால்) என்று மற்றவர்கள் வையா குறை கதை சூடாகும் போது .. பின் எனது உறவுக்கும் வந்தது.. எனக்கு ஆதங்கம் (எனக்கு அவரை யார் என்றே தெரியாது) என்னவென்றால் , ஒரு முறை (ஹிந்தியா படைகள் காலத்தில் 88-89 ரன்றே நினைவு) அவரை பிடித்து கறந்து விட்டு, 2ம் தரமும் அவருக்கு செய்தது என்று நான் அறிந்தது
  18. ஏற்றும்போது விசில் அடித்து கத்தியையும் குடுத்து தானே ஏத்துறது. பிறகு, பாபா காய் குலுங்கும் தண்டு பகுதியை வெட்டி பார் கீழே போடு என்று ...
  19. மன்னிக்கவும், உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலின் சகோதரம் திருவடிவேல் (கொழும்பில் பிரபல பல் சிகிச்சை நிபுணர்), திருவவடிவேலின் மனையின் வழி உறவினர், மனைவியின் தகப்பனாகவும் இருக்கலாம். அவர்கள், பிசினஸ், கொஞ்சம் வசதி சராசரியிலும் கூட, அவரை , கிந்திய படை காலத்தில் அளம்பில் காட்டில் பிடித்து வைத்து காசு கேட்டது - உறவினர் சென்று பார்க்க முடியாது ஏனெனில், காடு, ஹிந்தியை படைகள், புலிகள் காட்டில் இடம் மாறுவது .. என்று ஹிந்தியை படைகள் வெளியேறி கட்டுக்குப்பதில் அந்த பின் இரண்டாவது தடவையும், அப்போது யாழில் தான் பிடித்து வைத்து இருந்ததாக.
  20. இப்போது தெளிவு தானே.. 1 க்கு பின்பபு வருகிறேன் தேவை என்றால். 2 இல் ஒரு குறையும் உங்களுக்கு இல்லைத்தானே அப்படியானால் 2 க்கு, 2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு. நீங்கள் சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க. முதல் கேள்வி உங்களிடம் ஒருபோதும் எழவில்லையா? ஏன் பாலசிங்கம் நீங்கள் சொல்லிய போராட்டத்தை பாதுகாக்க (அல்லது அதற்கு கிட்டத்தட்ட ஒப்பான ஓர் கருத்தை) (நேரடியாக) சொல்லவில்லை. நேரடியாக நான் சொல்வதன் காரணம் - நீங்கள் நம்புகிறீர்கள் வேறு ஏதாவது சொல்லி , அதை நிருபர்கள் சொல்லவில்லை என்று. அல்லது பேட்டியில் வேறு ஏதாவது சூழ்நிலை இருக்கலாம் என்று. நீங்கள் சொல்லும் போராட்டத்தை பாதுகாப்பது என்பது, என்பது மட்டும் தான் என்றால், அதற்காக மற்ற இயக்கங்களை அழித்து இருந்தால் - கிட்டத்தட்ட மிக கூடிய போராட்ட தார்மீக நியாயாதிகமாக இருக்கிறது அல்லவா - அது, அது மட்டும் தானே உடனடியாக மதி, மனம் (state of mind - உங்களுக்கு சட்டத்துறை பரீட்சயம் இருக்கிறது , இதன் அர்த்தம் நன்றாக புரியும்) ஆக வாயில் வந்து இருக்க வேண்டும். வேறு எந்த பதில்களும் வந்து இருக்க கூடாது அல்லவா? ஆகவே, வேறு அடிப்படை காரணம் இருக்கிறது என்ற சந்தேகம் நியாயமானது தானே?
  21. 1. நான் சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்) - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு - வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள் இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இப்பொது தெளிவாக இருக்கிறது தானே. 2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு. நீங்கள் சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.
  22. இங்கே பொதுக்கத்தான் கேட்கிறேன். பொதுமக்களை , பொதுவாக மைம்மல் பொழுதில் குறித்த பொதுமகன் வீடு வந்து, கூட்டிக் சென்று , கேட்ட அளவு அல்லது அததற்கு கிட்டவான தொகை பணம் கொடுக்கும்வரையும் அல்லது அப்படி 3-4 த்தவனையில் பணம் செலுத்தும் இணக்கப்பாட்டுக்கு வந்து, முதல் டதொகை செலுத்தும் வரையிலும், கூட்டிச் செல்லப்படுபவர் விடுவிக்கப்படமாட்டர். பின்பு psycological pressure என்பதும் பாவிக்கப்பட்டது. வடக்கில் இது பொதுவான வழக்கமகா இருந்தது. இப்படி நடக்கவில்லை என்று எவராது இங்கு மறுக்கிறார்களா? இதில் எனது குடும்பத்தில் பணம் கேட்கப்பட்டு, கூட்டிச் செல்லப்பட்டு, மன , மதிநிலை குழம்பியோரும் உண்டு, இயல்பு அழகை திரும்ப மிக கடினமான நீண்ட நாட்கள் காரணம், ,அதில் இன்னொரு பிரச்னை, அறவிடுப்பார்கள் ,கூட்டிச் செல்வோரையும், அவரை பார்க்க செல்லும் உறவினரையும் அறவிடுப்பார்கள் அடிமை போன்று நடத்த வெளிக்கிட்டது. இது அறவிடுப்பார்கள் முடிவாக தெரியவில்லை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முறையாகவே தெரிந்தது பணம் கேட்கப்பட்ட தொகை முடியாயில்லை, அக்கினி சொன்னது போல கெஞ்சி குறைத்து, தவணை முறையில் செலுத்தப்பட்டது. இங்கே யாழில் இருக்கார் வடமராட்சியை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் வல்வெட்டுத்துறை அல்லது அததற்கு கிடாவாக அவரின் ஊர். வேலும் மயிலும் என்பவரின் குடும்பம் கொஞ்சம் வசதி, அவர்கள் இதில் இரு முறை பாதிக்கப்பட்டார்கள். இப்படு பல கண்ணுக்கு தெரியாமல், பரவலாக தெரியாமல் நடந்தன. ஆயினும் இவற்றை நான் மக்கள் துன்புறுத்தலில் ஒன்றாக பார்க்கவில்லை. ஆயுத போராட்டம் நடக்க பணம் வேண்டும், அனால் இப்படி அல்லாமல் வேறு ஏதாவது வழியை பாவித்து இருக்கலாம் என்பதே அன்றில் இருந்து நான் எண்ணிக்கொண்டு இருப்பது. உறவினருடன் வாதாடுவது இதனால், எனது உறவுகள் முறியும் வரையும் வந்து, ஒருமாதிரி முறியாமல் பாதி முறிந்த கிளை போல தொடர்கிறது. ஆயினும், உறவுகளை போராட்டத்தில் இழந்தது என்பதற்கு ஈடு இணையாகாது. அப்படி உறவுகளை இழந்தார்கள் இங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இந்த நிகழ்வு, அது எனது உராய் கூட்டிச் சென்று பணம் கேட்டு.. அவர் மன, மதி குழப்பத்துக்கு ஆளாகி ... பின் தவணையில் பணம் கொடுத்து ... என்பது ஒருபோதும் நான் சொன்ன புலிகள் இருப்புக்காக மற்ற இயக்கங்கங்களை அழித்தார்கள் என்பதில் எந்த வித செல்வாக்கும் செலுத்தாது. அது, ஆய்வின் அடிப்படையில் தரவில் இருந்து பெறப்பட்ட முடிவு. (அதற்கு, என்ன பெயர் எனக்கு சூட்டினாலும் என்னை தாக்காது) (ஆயினும், அக்கினி சொன்ன மாவீரனுக்கு STF செய்துததுக்கு, STF க்கு தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு இருந்தால் மிகச் சிறந்த பழிவாங்கல்.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.