Everything posted by Kavi arunasalam
-
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ. Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் “மெய்நிகர் பாலியல் வன்முறை” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில் ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார். Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது. படம்- நன்றி,விக்கிபீடியா
- Collien Fernandes
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
விசுகு, எம்ஜிஆர் பற்றிய நிறை குறைகளை ஏற்கனவே அதிகம் வாசித்திருக்கிறேன். இனி புதிதாக எதற்கு என்பதால்தான் , நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தை நான் பார்க்கவில்லை- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
உங்களைப் போல்தான் எனக்கும் இணைந்து பயணித்த அனுபவமாக இருந்தது. ஆனாலும் வழி நெடுக அவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வந்தார். எங்களுக்குத் தரவேயில்லை😁 இந்த மகிழ்ச்சி அவரது வீட்டுக்காரருக்கு இருந்திருக்குமா?- அதிர்ச்சியூட்டும் சைக்கிள் திருட்டு ஆனால் அதிசயமாக முடிந்த கதை
கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2026),யேர்மனி, Hamburg, Hansestadtஇல் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. 44 வயதான Rene, தனது நான்கு வயது மகளுடன் ஒரு வணிக வளாகத்துக்கு தனது E-Bike மூலம் வந்திருந்தார். அவரின் மனைவி பின்னர் அவர்களுடன் சேருவதாக இருந்ததால், காத்திருக்கும் சிறிது நேரம் கடைக்குள் சென்று Donuts வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில், அவரது நான்கு வயதுச் சிறுமி சைக்கிளின் trailer-இல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்க விரும்பாத Rene, சைக்கிளை வணிக வளாகத்தின் அருகில் நிறுத்திவிட்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் உள்ளே சென்று Donuts வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். ஆனால் வெளியே வந்தபோது சைக்கிள் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியடைந்த Rene, சற்றுத் தூரத்தில் தனது மனைவியை நிற்பதைப் பார்த்தார். Rene தன் மனைவியிடம் விசயத்தைச் சொல்ல பதட்டம் அதிகரித்தது. அந்த நேரத்தில், Reneக்கு சைக்கிளைப் பற்றிய கவலை இல்ல. அவரது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று. அது trailerஇல்தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரும் அவசர நடவடிக்கையாக தேடுதல் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பதற்றமான நேரத்தில், Reneக்கு திடீரென ஒரு முக்கிய விசயம் நினைவுக்கு வந்தது. அது, அவரது E-Bike-இல் GPS Tracker பொருத்தப்பட்டிருந்த விடயம். உடனே தனது ஸ்மார்ட்போன் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து, போலீசாருக்கு அறிவித்தார். சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பொலிசார் இனம் கண்டுகொண்டார்கள். 30 நிமிடங்களாக என்ன நடக்கிறது என்று அறியாமல் Reneஇன் மகள் Ann Marie அந்த E-Bike இன் trailerஇல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறாள். திருட்டு சம்பந்தமாக 58 வயதான ஒரு பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தப் பெண், குழந்தையைக் கடத்த முற்பட்டாரா? E-Bikeஐத் திருட நினைத்தாரா? இல்லை, ஒன்றரை கிலோ மீற்றர் வீணாக ஏன் நடக்க வேண்டும் என்று சைக்கிளை எடுத்துச் சென்றாரா? தெரியவில்லை.- என் பெயர் பூனா (Buna)!
இப்படித்தான் திப்பிலி (மிளகு) கிறேக்கம் போய் பிப்பிலி ஆகி இன்று பெப்பர் ஆகி நிற்கின்றது.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நீங்களும் கெட்டிக்காரன்தான். நான்தான் ‘மூனா😜’ வழக்கறிஞர் என்றில்லாமல் நண்பன் என்ற முறையில். சரியான கணிப்பு. 09ந் திகதி சுற்றுலா பொலிஸ் அலுவலகத்துக்கு முதலாளி போயிருக்க வேண்டும். ஐயா ஹொலிடேயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17ந்திகதி அடுத்த அழைப்பு, ஐயா இன்னும் ஹொலிடேயில் இருக்கிறார். ஒருநாள் வருவார். உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் பொய்யும் புரட்டும் வெளியாகும் வரும்- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
பச்சைவிளக்கு திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய படலொன்றின் வரிகள், உள்ளே பணத்தைப் பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்ல கணக்கை மாதி கள்ளக் கணக்கை ஏத்தி நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து... அவருக்கு வேண்டப்படவர்களுக்காக எப்பொழுதும் அவர் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும். வீட்டில் சாப்பிட்டு வந்தாலும் வற்புறுத்தி சாப்பிட வைப்பார். எம்ஜிஆர் திட்ட மிடுவதில் வல்லவர். இல்லாவிட்டால் கதர் ஆடை அணிந்து, ருத்ரட்ச மாலை போட்டுத் திரிந்தவர் திமுகவில் சேருவாரா?- நல்ல சமாரியன் (அல்லது) யூதன்
சார் இது ரொம்ப டூமச்😋 இங்கே சொல்ல வேண்டியதை அழகாக சொல்லிவிட்டீர்கள். இதற்குமேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- கொழும்பில் இருந்து சவுதிஅரேபியா வழியாக ஒருநாள்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அவருக்கென்ன? இரண்டு மூன்று தரங்கள் சாப்பிட்டுவிடுவார். நாங்கள் தேத்தண்ணி குடிக்காமல் வாசிக்கிறோம். ஐந்தாறு மாதங்கள் பிரிந்திருந்தாலும், “இஞ்சை ஒரு அசுமாத்தமும் இல்லை, ஆறுதலா வா” என்று அவர் சொல்வதைப் பார்த்தால், மனுசன் happy போலே😏- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
கிருபனுக்கு வேணும். நான் முன்னமே கதைக்களத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜெயமோகனால் வந்த வினை.- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
காரணம் தெரியாதபடியால்தான் “படையெடுக்க என்ன காரணம்?” என்று உங்களைக் கேட்கிறார். அதுக்கு நீங்கள், “சொல்லுங்கள் கேட்போம்”என்பது நியாயமாகுமா?- ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!
ராஜபக்ஷ!- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
- கருத்துப்படம் 22.03.2026
From the album: கிறுக்கல்கள்
- மறவோம்
நாங்கள் இருக்கிறோம். பணம் பார்க்கிறோம். புகழ் சேர்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எங்களால் தான் வாழ்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறோம்.- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நானும் கண்டேன். காட்சியில் அவள் நடந்து வர, ஆடை சற்று நகர, காட்சி மீண்டும் ஆரம்பத்துக்கு வரும் அந்த நொடியில் அவள் முகம் ஆடை நகர்ந்த இடத்தில் தோன்றுவது அருமை. பாடகர் சிறீநிவாசனை நினைவுட்டும் குரல். நன்றாக வந்திருக்கிறது. இந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கிறது. ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை அரங்கராசன் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் இருந்ததுதான் இந்தக் கவிதை “பிரம்மனை கஞ்சன் என்றுதான் நினைத்தேன் உன் இடையைப் பார்த்தபோது சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது அவன் வள்ளலாகவும் இருக்கிறான்?…” கவிப்பேரரசு சுட்டதுதான் ஜீன்ஸ் படத்தில் வந்தது. எல்லாப் புகழும் வைரமுத்துவுக்கே. இப்படியான விளக்கங்கள் நல்ல உதவியாக இருக்கும். பலர் இந்த வழியில் ஈடுபட தூண்டுதலாக இருக்கும். நன்றி! உங்கள் காலத்துப் பாடல். அதுதான் உங்களுக்குப் மிடித்திருக்கிறது. என் காலத்துப் பாடல் என்பதால், “மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி…”😜- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
உண்மைநான் ரசோதரன். வைரமுத்து தன்னைத் தானே கவிப்பேரரசு என அடையாளப்படுத்திக் கொண்டவர். எனது பார்வையில் அவர் ஒரு சினிமா பாடலாசிரியர் மற்றும் திமுக அபிமானி. (முற் குறிப்பு) கோசான் ஜி, நீங்கள் பச்சைக் கொடி காட்டியதாலேயே இதை எழுதுகிறேன். “கவிஞர் கண்ணதாசன் இலக்கியங்களில் இருந்தும், சித்தர் பாடல்கள், தேவாரப் பாடல்கள் போன்ற பல்வேறு இடங்களில் தான் வாசித்து அதிலே கவரப்பட்டு சினிமா பாடல்களில் அவற்றை புகுத்தியவர் என்பது உண்மை. ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் மறைத்ததில்லை, அதுமட்டுமல்ல, எங்கேயிருந்து எடுத்தார் என்பதையும் அவர் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். அந்த நேர்மைதான் கண்ணதாசன். உதாரணத்திற்கு, பட்டினத்தார் சொல்வது: “மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே…”என்ற பாடல் புரிவதற்கு நேரம் எடுக்கும். அதையே கண்ணதாசன், பாமரனுக்கும் புரியும் வகையில், “வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ…” என்று எழுதியபோது பலரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் கவிப்பேரரசு அப்படியா என்றால்… கொஞ்சம் சிக்கல்தான். எங்கேயிருந்து வந்தது என்று சொல்லாமல், “இது எல்லாம் என் தலையில்தான் உதித்தது!” என்பார். அதிலும் கர்வம் சேர்ந்திருக்கும். சரி அவரது கவிதையை ரசிக்கலாம் என்று பார்த்தால், அதில் உள்ள உவமைகளையும் “இது எனது கண்டுபிடிப்பு” என்று முத்திரையும் குத்தி விடுவார். சில நேரங்களில் “தமிழ் என்னால்தான் வாழ்கிறது” என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு தன்மேல் நம்பிக்கையிருக்கிறது. எங்களுக்கு எரிச்சல் அதிகரிக்கிறது. ‘பொன்மாலை’ என்ற சொல் கூட தனது கண்டுபிடிப்பு என்றார். ஆனால் அதற்கு முன்பே கவிஞர் வாலி,“பொன்மாலை மயக்கம்…”என்று அன்பேவா படத்தில் எழுதி விட்டார். அப்படியென்றால் இது கண்டுபிடிப்பு இல்லை, கவிப்பேரரசின் மீள்பதிவு. மருதகாசி எழுதிய“கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே…” என்ற பாடல் வரி கவிப்பேரரசுவினால்“விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்று மாறுகிறது. அதேபோல், “ஆண்டவன் உலகத்தின் முதலாளி…”என்று ஆலங்குடி சோமு எழுதியிருக்க, பின்னர் “ஒருவன் ஒருவன் முதலாளி…”என்று வருகிறது. கவிப்பேரரசு பற்றி இப்படி எடுத்துக்காட்டுகள் நிறைய சொல்லலாம். ஆனால் அது வீணான நேரமாகிவிடும். இதற்கிடையில், கண்ணதாசன் சினிமாவைத் தாண்டி ‘யேசு காவியம்’, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ போன்ற பல அருமையான படைப்புகளைத் தந்தவர். வாலியும் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை கவிதை வடிவில் படைத்தார். கவிப்பேரரசுக்கு கல்லிக்காட்டு இதிகாசத்துக்கு ஞானபீட விருது தந்திருக்கிறார்கள். ஒரு பேட்டியில் ரங்கராஜ் பாண்டி குறிப்பிட்டார், “ பா.இரஞ்சித்துக்கு தமிழ்நாடு அரசு பரிசு தரவில்லை. ஆனால் வைரமுத்துவுக்கு ஒன்றிய அரசு ஞானபீட விருது தந்திருக்கின்றது” என்று. தேர்தல் நேரம். எல்லாம் அரசியல் நோக்கம்தான். அதுசரி கவிப்பேரரசுவின் ஈழகாவியம் என்னாச்சு? அவர் மட்டும் அதை எழுதினால் புலம் பெயர் தமிழர்களது விருது நிச்சயம்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சாப்பிடணுமே😂- கருத்துப்படம் 19.03.2026
From the album: கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.