Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Kavi arunasalam

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  880
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by Kavi arunasalam

 1. இந்த எதிர்ப்பும் ஆட்டமும் போதுமானது கும்ஸ். நோயும் வராது பேயும் கிட்டே வராது
 2. நட்டம் காட்டிய போது இலாபம் பார்த்திருப்பார்கள்தானே அந்தப் பணம் இப்போது உதவட்டும்
 3. உண்மைதான். உடனடியாக மருந்து வந்தால் பயம் என்பது இல்லாமல் போய்விடும். எதிர்பபு சக்தி உங்களிடம் இருக்கும்வரை கொரோனா மட்டுமல்ல எந்தக் கொம்பனுக்கும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனாலும் சுகாதார அமைச்சு சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். யேர்மனியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பலர் சிகிச்சையில் குணமாகி இருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருவது ஒரு நம்பிக்கையை தருகிறது.
 4. சிவா சின்னப்பொடியும் தனது சகோதரியின் கணவர் பொன்னன் குலசிங்கம் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் 24.03.2020இல் பிரான்ஸில் காலமானதாக அறிவித்திருக்கிறார்
 5. இல்லை. அந்த விடயத்தை வல்லிபுரக் கோவிலிலேயே அவர் மறந்துவிட்டார். நான்தான் இன்னும் மறக்காமல் இருக்கிறேன்.
 6. விரைவில் கொரோனா தாக்கத்தில் இருந்து நாங்கள் வெளியே வரவேண்டும் இல்லை என்றால் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவை விட மேலதிகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என யேர்மனிய பொருளாளத்துறை இன்று எச்சரித்திருக்கிறது
 7. கருப்பு பணம், கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது. ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?
 8. ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது. அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது. “இந்தக் கரு
 9. வட்டி, சீட்டு இரண்டுமே அவருக்கு பிரதான தொழில்கள். அவரை நேற்றைக்கு முதல் நாள் சந்திக்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்குப் பாதுகாப்பாக அவரிடமிருந்து தள்ளியே நின்றேன். “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு கஸ்ரம் வரப் போகுது” என்றார் “எங்கடையாக்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்தான் கஸ்ரம்” என்றேன் “நான் சொல்லுறது வேறை” என்ன? என்பது போல் அவரைப் பார்த்தேன். “இஞ்சை கனபேர் தகுதிக்கு மேலை காணிகளோடை பெரிய வீடுகள் வேண்டி வைச்சிருக்கினம். அதுக்கு காசு கட்டிறதுக்காகவே இரண்டு மூண்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவையள். இப்ப கொரோனாவாலை ஒரு வேலையே செய்ய முடியாத நிலை. அவையின்ரை பாடு தத
 10. asparagus அறுவடைக் காலம். இந்த நேரம் வழமையாக ரூமேனியா, போலந்து நாடுகளில் இருந்துதான் வேலைக்கு ஆட்களை யேர்மனிய விவசாயப் பண்ணைக்கு வேலைக்கு எடுப்பார்கள். கொரோனா அவலத்தில், பாதுகாப்புக் கருதி இந்த வருட அறுவடைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தருவிப்பதை யேர்மனிய உள்துறை அமைச்சு முழுமையாக தடை செய்திருக்கிறது. விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
 11. பேசாமல் கொரோனாசூடி என்று பெயர் வைத்திருக்கலாம்
 12. என்ன ராசவன்னியன் இன்று சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?
 13. எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன். நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை
 14. என்னங்க நீங்கள்? சிறிய கதை எண்டிட்டு வருவினம் எண்டு போட்டிருக்கிறீங்கள்
 15. நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார். அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின் மாமனார்) நாகேஸ்வரராவ். ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.
 16. யேர்மன் கன்ஸிலர் Merkel, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்பொருள் அங்காடிக்குச் சென்று தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பேர்லினில் உள்ள Berliner HIT-Markt Ullrich இற்கே அவர் பொருட்கள் வாங்கச் செல்வதுண்டு. கொரோனா வைரஸ் பற்றிய தனது உரையில், “யாருமே கவலைப்படத் தேவையில்லை, போதுமானளவு உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பில் இருக்கின்றன” என்பதை மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டார். அத்தோடு நிற்காமல் தானே பல்பொருள் அங்காடிக்குச் சென்று மற்றைய வாடிக்கையாளர்கள் போலவே பாதுகாப்பாக இரண்டு மீற்றர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை
 17. இளைய வயது என்பதால் அவரால் நோயிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. நீங்களும் அவதானமாக இருங்கள்.
 18. ஒன்றுதான் Sabesh (20.03.2020, காலை 5:00 மணியிலான நிலவரம்) நாடுகள் கோரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பால் இறந்தவர்கள் நோயினால் இறந்தவர்கள் விகிதம் யேர்மனி 15.320 44 0,3 பிரான்ஸ் 10.900 371 3,4 இத்தாலி 41,305 3405 8
 19. ஆக இனி யாரும் இப்படியான குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று நம்பலாமா ராசவன்னியன்? ஒருவர் செய்த குற்றத்தை அவர் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பே நீதியாக இருக்க வேண்டும் என்பதை எனது கருத்து. சர்வதேச அறிக்கையின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 100 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெறுவதாகச் சொல்கிறார்கள். இதையைம் கவனிக்க வேண்டும்.
 20. இரண்டு குடும்பங்களோடு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறீர்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.