Everything posted by Kavi arunasalam
-
தாயைப் போல பிள்ளை
அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டில் சும்மா இருந்தான். ஆனால் அவன் தாய் இறந்ததும், அவனுக்கு “ஒரு வேலை” கிடைத்துவிட்டது. அது, தனது தாயைப் போல வேடமிட்டு வாழும் வேலை. வேசம் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும்? ஒருநாள் அது கலைந்து உண்மை வெளிவராமல் இருக்காது. 56 வயது மதிக்கத்தக்க அவன், தனது 82 வயதான தாய் இறந்தபின், அவரது உடலை மம்மி போல ஒரு sleeping bagஇல் சுற்றி வீட்டிலேயே மறைத்து வைத்தான். பின்னர் தாயைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மாதந்தோறும் அவனது தாயின் ஓய்வூதியத்தையும் வருமானங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான். மூன்று வீடுகளின் உரிமையாளரான தாயின் பெயரில் வருடத்துக்கு சுமார் 60,000 யூரோ வருமானம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது தாயின் அடையாள அட்டையை அரச அலுவலகத்தில் புதுப்பிக்கப் போனபோது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தப்பித்துவிட்டான். ஆனால் ஒரு விற்பனை நிலையத்தில். ஒரு ஊழியரின் கழுகுக் கண்களுக்குள் மாட்டிக் கொண்டான். தடித்த கழுத்து, குரல், ஆண் உடலமைப்பு,எதுவும் பெண்ணை ஒத்திருக்காததால், ஊழியர் அவன் வேஷத்தை உடனே சந்தேகித்தார். போலீசார் அவன் வீட்டை சோதனை செய்ய வந்தபோது அவன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தற்போது அவன் மீது ஆள்மாறாட்டம் செய்தது, உடலை மறைத்து வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
இன்று மாவீரர் தினம்!
- கருத்துப்படம் 27.11.2025
From the album: கிறுக்கல்கள்
- தன்னறம்
வாழ்க்கையில் ஆண்கள் அதிகமாக முன்னதாகவே போய்விடுவார்கள். அவர்கள் போகும்வரை மனைவி துணை நிற்பாள். பெண்கள்தான் தனித்துப் போவார்கள். ஆனாலும் நீங்கள் குறிப்பிடுவது போல் ‘மனம்’தான் காரணம். எதையும் ஏற்றுக் கொள்வதும், இன்னும் வாழ்க்கை இருக்கின்றது என்பதும்தான் சிறந்தது. இந்த விடயத்தில் உங்களைப் போலவே கண்ணதாசனும் கோழியைத்தான் உதாரணம் காட்டுகின்றார். “பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா.. அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா.. வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா.. மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..”- நீ இயந்திரம் நான் பிரேக்
உண்மைதான் குமாரசாமி, இன்றைய பத்திரிகைச் செய்திகள் இப்படியாக இருக்கின்றன இரட்டையர்கள், தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடித்துக் கொள்ள விரும்புவதாக ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தார்கள். அவர்களது மரணம் தற்கொலை என இப்போது Society for Humane Dying மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த அமைப்பின் வழக்கறிஞர் ஒருவரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.- நீ இயந்திரம் நான் பிரேக்
நீ இயந்திரம் நான் பிரேக் அவர்கள் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். பிறந்த நாளிலிருந்தே பிரிக்க முடியாதவர்கள், அலிஸ் (Alice) மற்றும் எலன் (Ellen). ஒருகாலத்தில் “உலகின் மிக அழகான பெண்கள்” என்று புகழப்பட்ட இந்த இருவரும், இன்று இல்லை. எப்படி ஒன்றாக உயிர் பெற்றார்களோ, அவ்வாறே ஒன்றாக உயிர் பிரிந்தும் விட்டார்கள். இருவரும் ஜெர்மனியின் மூனிச் மாநிலத்திலுள்ள கிரூன்வால்டில் 89 வயதில் மரணமடைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. வெளிப்புறக் காரணமில்லை என்ற அறிவிப்புடன் அந்தச் செய்தி முடிந்து விட்டது. அவர்கள் இயல்பாகச் சென்றார்களா? தற்கொலையா? யாருக்கும் தெரியவில்லை. “நாங்கள் இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் என்பதற்கும் மேலாக, எங்களது தந்தையின் பயங்கரமான கோபத்தின் பயம் எங்களை ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டபடி வாழ கற்றுக் கொடுத்தது. வேறு யாரையும் முழுமையாக நம்ப முடியாத நிலை, எங்கள் இருவரையும் இணைத்த பிணைப்பு,” என்று Die Zeit சஞ்சிகைக்குக் கொடுத்த நேர்காணலில் அவர்கள் கூறியிருந்தனர். அவர்களின் நடனமே அவர்களை உலகுக்குத் தெரிய வைத்தது. அந்நாளில் பெண்கள் கால்களை மட்டும் காட்டி ஆடினாலும் இளைஞர்கள் கூட்டம் கூடி விடும். அப்படியான சூழலில், இவர்கள் தாராளமாகவே அந்தச் சுதந்திரத்தை அரங்கேற்றினர். கால்களின் இயக்கத்தில் திளைத்து ஆண்களின் இதயங்களுக்குள் நுழைந்தார்கள். இருவரின் கவர்ச்சியும் மின்னும் மேடை நடையும் நடனமும், உலகின் அழகிய பெண்களின் பட்டியலில் இவர்களை நிலைநிறுத்தியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் இவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இத்தாலியில்தான் இவர்களுக்கு மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்தன. 1962 முதல் தொடர்ந்து 24 ஆண்டுகள் இவர்களின் அதிகமான நிகழ்ச்சிகள் அங்கு நடந்தேறின. 1975-ல், அப்போது இவர்கள் 35 வயதிலிருந்தபோது, இத்தாலிய Playboy சஞ்சிகை வெளியிட்ட இவர்களின் நிர்வாணப் படங்கள் காரணமாக மூன்று மணிநேரத்துக்குள் அனைத்து Playboy சஞ்சிகைகளும் விற்று முடிந்தன. சில வாரங்களைத் தவிர, அலிஸ் மற்றும் எலன் எல்லாக் காலங்களிலும் ஒன்றாகவே இருந்தவர்கள். திருமணம் செய்யவில்லை. ஒரு பத்திரிகை நேர்காணலில் அலிஸ், “எலன் தான் இயந்திரம். நான் தான் பிரேக்,” என்று சொன்னார். இப்போது அவர்களின் 89வது வயதில்,இயந்திரம் பழுதானதா? அல்லது பிரேக் திடீரெனப் பிடித்து இயந்திரத்தை நிறுத்திவிட்டதா? அது மட்டும் மர்மமாகவே நின்று விட்டது. இரட்டையர்களின் ஆட்டம் ஒன்றை இணைத்திருக்கிறேன். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. வேதா இசையமைத்தது. “ கொஞ்சம் நில்லடி என் கண்ணே கூந்தல் தொட்டுப் பின்னலாமா… என்று அந்தப் பாடல் தொடங்குகிறது- யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
நாச்சிமார் கோயிலடி இராஜனுடன் யாழில்தான் அறிமுகம் கிடைத்தது. வில்லுப்பாட்டு அவருக்கு ஒரு அடையாளமாக இருந்தாலும், கதை,நாடகங்கள் என்று அவர் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். குறும் படங்களையும் அவர் இயக்கி நடித்திருக்கின்றார். யாழ் இணையத்தில் வரும் கலைஞர்களின் சிறு கதைகளை வில்லுப்பாட்டாக வடிவமைத்து மேடை ஏற்றி இருக்கின்றார். அவர் சார்ந்து பலதை சொல்லிக் கொண்டு போகலாம்… எனது அஞ்சலிகள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தப் பாடல் கருப்பு பணம் படத்தில் இடம் பெற்றது. கண்ணதாசன் தயாரித்து நடித்த படம். “பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் கூட தலைவனடி…”, “…போராடாச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி..” இந்த வரிகள் என்றும் பொருந்தும்.- கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
- கருத்துப்படம் 15.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
குமாரசாமி, நீங்கள் நிலமையை உணர மறுக்கிறீர்களா? ஒரே நிகழ்வில் 41 உயிர்கள் பலியாகியுள்ள ஒரு பெரும் அனர்த்தம் இது. இதை ஒரு அதிர்ச்சி, ஒரு தடுமாற்றம் என்று உணர வேண்டும். நீங்கள் யேர்மனியில் வசிக்கிறீர்கள். ஆகவே இது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். சாலையில் ஒரு வாகன விபத்து நிகழ்கிறது என்றால், அதை ஓட்டி வந்த சாரதிக்கு என்ன பிரச்சினை அந்த விபத்தால் மனதளவில் அவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா? என்றெல்லாம் பார்த்து சிகிச்சை அளிப்பார்கள். இதை நீங்கள் குறைந்தது தொலைக்காட்சிகளிலாவது பார்த்திருப்பீர்கள். இதுவே ஊரில் என்றால், சாரதிக்கு அடி உதை தாராளமாக கிடைக்கும். இங்கே நடந்து முடிந்த அனர்த்தத்தை அதிகம் பார்க்காமல், விஜய் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை, ஓடி விட்டார், இவர் எல்லாம் தலைவரா? என்ற கேள்விகளுக்குள் அவரை வைத்து அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில்தன் பலர் இருக்கிறார்கள். சீமான் கூட, விபத்து பற்றி உடனடியாக சொன்ன கருத்தில், தம்பி விஜய்க்கு சார்பாக நின்றதையும் கவனிக்கவும். பெட்டியும் வராது ஒட்டுதலும் கிடையாது என்றவுடன் நிலமை தலை கீழாக மாறிவிட்டது. விஜய் தனது அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். உறவுகளை இழந்த குடும்பத்தோடு கதைத்தும் இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது, அந்தக் குடும்பங்களில் யாருமே விஜய்க்கு எதிராகக் கைகளை நீட்டவில்லை. இப்பொழுது இந்த வழக்கை சிபிஜ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முடிவு வரட்டும். தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். நான் விஜய் ரசிகன் இல்லை. எனவே என்னை ‘ரசிகன்’ என்ற அடையாளத்தில் அடைத்துவைக்க முயலாதீர்கள். ஆனால், ஒரு பொது மனிதனாக, உண்மையை உணர முயற்சிப்பதில்தான் எனது நோக்கம் இருக்கிறது. சீமான் பற்றி சொல்வதெனில்,அவர் ஒரு கேவலமான, காட்சிக்காகக் கடுமையான மொழிகளைப் பயன்படுத்தும் மாண்புகளற்ற ஒரு அரசியல் வியாபாரி. தமிழ் தேசியத்தின் பெயரில் பிரபாகரனின் புகைப்படத்துடன், இறந்தவர்கள் படங்களையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார். இது பண்பற்ற அரசியலின் ஒரு பகிரங்கமே. இறந்தவர்களின் படம், அவர்கள் உயிர் இல்லாத நிலையில் காட்டப்படும் போது, அது மரியாதையின்மை மட்டுமல்ல, மனிதநேயத்தின் கேள்விக்குறியுமாகும். திமுகவைச் சாடி கண்ணதாசன் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆக திமுக பற்றி எழுதும் போது கண்ணதாசனும் எனக்கு உள்ளே வந்து விடுகிறார். இதை எல்லாம் பட்டிமன்ற கணக்குக்குள் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. தமிழக அரசியலே நாடக, சினிமா மூலமே பிரச்சாரம் செய்துதான் வந்தது. வருகிறது. எம்ஜிஆர் கூட தனது படங்களில் வரும் பாட்டுக்களூடாகத்தான் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆட்சிக்கும் வந்தார். போராட்டம் கூட…..சரி விடுங்கள். இதற்குள் போனால் நிறைய எழுத வேண்டும். பலே பாண்டிய படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் பாடலில் சில வரிகள், மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவைத் திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா அட என்னத்தச் சொல்வேண்டா தம்பியோவ் என்னத்தச் சொல்வேண்டா யாரை எங்கே வைப்பது என்றே யாருக்கும் தெரியலே... அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
கொஞ்சம் கோவமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சிறிது அவகாசம் கொடுத்துத்துப் பார்க்கலாம். இந்த விடயத்தில் கவலைதான் தெரிவிக்க வேண்டுமே தவிர மன்னிப்பு எதற்காக? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வரும். கண்ணதாசன் திமுக ஆட்சியை சாடி ஒரு பாடல் எழுதியிருந்தார் அந்த பாடலில் இடம் பெற்ற வரி எனக்கு ஞாபகம் வந்தது. “சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம் தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம் என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்…”- மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம்
“முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு …” ஞாபகம் வருதே ஞாபகம் வருதே… மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது👍- சிவவாக்கியம் எனும் தேன்
“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே…” என்ற பாடல் வரும் என்று பார்த்தேன். வரவில்லை. சுப்பர் ஸ்ராரை விடுங்கள். அவர் இன்னும் கோடிகளில் வாங்கிக் கொண்டிருக்கிறார். சித்தர்களை நான் கண்டது கண்ணதாசனிடம்தான். சித்தர்களுடைய பல பாடல்களை கண்ணதாசன் எல்லோருக்கும் புரியும்படி மிக எளிமையாக்கித் தந்திருப்பார். உதாரணத்துக்கு சிவவாக்கியர் பாடலில் உள்ளதை, “சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி…” என்ற பாட்டில், “உடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றே இடத்தைப் பொறுத்தே எதுவும் மாறும்..” சிவ வாக்கியர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறப்பானவை. ஆனால் அவர் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ சொன்னதும் மண்ணை சோறாக்கி சுரைக்காயை கறியாக்கிய கதை எல்லாம் பின்னால் வந்தவர்கள் அவிட்டு விட்ட கட்டுக் கதைகள்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் விரும்பும் பாடலில் ஒன்று. ஆலங்குடி சோமு எழுதியிருப்பார். “கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?”, “கடலுக்கு நீரே பகையானால் அலைகளுக்கு அங்கே இடமேது…” என்று நல்ல நல்ல பாடல் வரிகளைத் தந்து கொண்டிருந்த ஆலங்குடி சோமு , இந்தப் படத்தை (பத்தாம் பசலி) தயாரிக்கப் போய் கையைச் சுட்டுக் கொண்டு திரையுலகை விட்டுப் போனது கவலை.- மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்; ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு!!
- கருத்துப்படம் 10.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இரவில் பாம்பாக மாறும் மனைவி - புலம்பும் கணவன்
புதுசா கல்யாணம் கட்டியிருக்கிறான் போலே- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
- கருத்துப்படம் 09.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மைதான் Suvy, பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
கோசான் , 1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்கு’ என்று முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும். எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம். தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்- ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- கருத்துப்படம் 07.10.2025
From the album: கிறுக்கல்கள்
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
என்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா? அரசியலுக்கு எவரும் வரலாம். நான் யாருடைய ரசிகனும் இல்லை. விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது. முடிவு வரட்டும். நானும் நாங்களும் முட்டி மோதுவதால் என்ன பயன்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் போல வேடம் போட்டு “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்த சீமானின் நடிப்பு அபாரம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். - கருத்துப்படம் 27.11.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.