Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Kavi arunasalam

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  880
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by Kavi arunasalam

 1. சஜித் எங்கடை சுமந்திரன் மாதிரி இருக்கலாம்தானே கும்ஸ்
 2. கும்ஸ்,கள்ள வேலைகளுக்கு சமூக நல காப்புறுதிகளைப் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் ஒரு கள்ள வேலை செய்யலாம். உடம்புக்கு சரியில்லை என்று வைத்தியரிடம் சான்றிதழைப் பெற்று அதை வேலையிடத்துக்கு அனுப்பிவிட்டு நாலு கிழமைக்கு கள்ள வேலை செய்து சம்பாதிக்கலாம். வரவு இரட்டிப்பாக இருக்கும். என்ன நான் சொல்லுறது?
 3. Ampanai, துருக்கி ஐரோப்பிய யூனியனுக்குள் இல்லை. அந்த நாட்டை இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை எனலாம். எர்டகோன் மூன்று விடயங்களைக் கேட்கிறார். 1.அகதிகளை பராமரிப்பதற்கு மேலதிகப் பணம், 2.சிரியாவுடனான சண்டைக்கு NATOவின் உதவி, 3.துருக்கி நாட்டவர் ஐரோப்பாவுக்குள் வருவதற்கான (திறந்த) விசா இதில் 2ம் 3ம் முடியாது என்று திட்ட வட்டமாக அறிவிக்கப் பட்டு விட்டது. முதலாவது இழுபறியில் இருக்கிறது. மனித நேயமற்ற முறையில் அகதிகளைப் பயன் படுத்தி தனது தேவையை நிறைவேற்றப் பார்த்த எர்டகோனின் செயல் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இதற்குள் புட்டீனுடனான சந்திப்பில்
 4. வைத்தியர்களை கோரோனாவின் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும் வகையில் யேர்மனிய மருத்துவக் காப்புறுதி புதிய நடவடிக்கை ஒன்றை யேர்மனியில் நடைமுறைப் படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறையின் பிரகாரம் நோயாளர், காய்ச்சல், இருமல் போன்ற சாதாரண நோய்களுக்கு மருத்துவரிடம் நேரடியாகச் செல்ல வேண்டிய தேவையில்லை. வைத்தியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நிலைமையைத் தெரியப்படுத்தினால் போதும். நோயாளரின் நிலைக்கு ஏற்ப அவருக்கு ஏழு நாட்கள் மருத்துவ விடுப்புக்கு வைத்தியர் பரிந்துரைத்து உறுதிப்படுத்தித் தருவார். நோய்க்கான சான்றிதழ் வாடிக்கையாளரின் விலாசத்திற்கு மருத்துவரால் அனுப்பி வைக்கப்படும். அந்தச் சான்றிதழ
 5. எஸ்.எம. சுப்பையாநாயுடு இசையில் சீர்காழியார் குரல். ஜெயலலிதாஅரசியலில் இருந்த போது அவரை வரவேற்பதற்கு இந்தப் பாடல் பயன் படுத்தப் பட்டிருந்தது
 6. எனக்கும் வள்ளுவரைப் பார்க்க ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்தப் படத்துக்கு, “வாழ விரும்புவோருக்கு வள்ளுவரின் தாக்கு” என்று எழுதலாம்
 7. Suvyஇன் காதிலும் போட்டு வையுங்கள் Goshan-ch ஆதிவாசிக்குத்தான் ‘கவிகள்’ உடனான பழக்கங்கள் அதிகம்
 8. கண்ணதாசன் கவியரசு என்றால் கவிப்பேரரசு என்று இவர் அவரை விட மேலே போய் நிற்பார். உல்டா என்பதை பலர் செய்கிறார்கள். தனது பாடல் வரிகளை இந்த இலக்கியத்தில் இருந்துதான் எடுத்தேன் என்று கண்ணதாசன் சொல்லுவார். கவிப்பேரரசு சொல்லமாட்டார். கவிப்பேரரசு வின் உல்டாவுக்கு ஒரு உதாரணம் ஆலங்குடி சோமு எம்ஜிஆருக்காக எழுதிய பாடல், “ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...” என்றிருக்கும். கவிப்பேரரசு ரஜனிகாந்திற்கு இப்படி எழுதியிருப்பார், “ஒருவன் ஒருவன் முதலாளி மற்றவர் எல்லாம் தொழிலாளி..” பாரதிதாசன் இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார் “அதோ பார் கடல்மகள்
 9. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும். இன்றும் அப்படித்தான். பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் வாகனத் தரிப்பிடம் நிறைந்திருந்தது. தரிப்பிடம் கிடைத்து அதில் எனது வாகனத்தை நிறுத்துவதற்கே 20 நிமிடங்கள் போயிற்று. பல்பொருள் அங்காடிக்குள் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். பொருட்கள் குறைந்திருந்தன. மா,சீனி என்பவை அடுக்கி வைக்கப் பட்டிருந்த தட்டுக்கள் நிர்வாணமாக இருந்தன. கை கழுவும் சவர்க்காரங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் கரைந்து போயிருந்தன. பல்பொருள் அ
 10. Suvy, உங்கள் கவிதை நன்றாகத்தனே இருக்கிறது. கடைசியாக நீங்கள் எழுதியது உங்களது தன்னம்பிக்கையை கேள்விகுள்ளாக்கிறது.
 11. வெற்றிச் செல்வன், நான் அறிந்தவரையில் இல்லை. பார்க்கலாம், தமிழாய்ந்த பெரியோர்கள் யாராவது வந்து விளக்கம் தருகிறார்களா என்று.
 12. மன்மதலீலை திரைப்பட காட்சிகள் நினைவுக்கு வருகிறது.
 13. 12 வயசுப் பையனுக்கும் கலியாணம் கேட்குது. கலி முத்திப் போச்சு
 14. “காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும்..” ”சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்..” இரண்டும் நல்ல பாடல்கள்தானே? தேவராஜனின் இசை எனக்கும் பிடிக்கும். அன்னை வேளாங்கண்ணியில் வரும் “ நீலக் கடலின் ஓரத்தில்...” பாடல் நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. துலாபாரம் படம் பார்த்து விட்டு இனி இப்படியான சோகப் படங்களை பார்ப்பதில்லை என்று எனக்குள் அன்றொரு தீர்மானம் எடுக்கும் அளவுக்கு என்னைப் பாதித்த படம். இந்தப் படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று நான் எங்கேயோ வாசித்ததாக நினைவு
 15. தகவலுக்கு நன்றி கிருபன். பார்த்து விட்டுச் சொல்கிறேன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.