Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. பொதுவெளியில் ஒருவர் துப்புவது, அல்லது சிறுநீர் கழிப்பது போன்றவை, சிலருக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. இது சும்மா ஒரு நாள் வந்த பழக்கம் இல்லை. பல வருடங்களாகத் தொடரும் ஒரு வழக்கம்தான். 2009க்குப் பிறகு யேர்மனிக்குப் வந்த சிலர், வெற்றிலை போடுவதையும், பொதுவெளியில் துப்புவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு முறை, ஒருவர் நடைபாதையில் துப்புவதைக் கண்டேன். அவரிடம் நேராகப் போய், "தம்பி, தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்." என்று சொன்னேன். உடனடியாக அவரிடம் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது,“நீ என்ன யேர்மனிய போலீஸா?” அத்தோடு போயிருந்தாலும் பரவாயில்லை. அவர் சண்டைக்குத் தயாராக நின்றார். சேர்ட்டின் கை மடிப்பை மேலே இழுத்துவிட்டு ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்ற நிலையில் இருந்தார். இவ்விதமான விஷயங்களை சும்மா கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அரசியலில் ஓர் நிலை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலர் – வேலை இல்லாமல் வேலன் சாமியாக இருக்கிறவர்களே இவற்றை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அது அவர்களுக்கே நல்ல பெயரைத் தரும். அதோடு நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.
  2. இப்போது வரும் பல கட்டுரைகளில் எங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், சுமந்திரனின் பெயரை இழுத்துவிட்டு அவரை ஒரு தடவையாவது விமர்சிக்காமல் கட்டுரையாளர்கள் போக மாட்டார்கள். யாருடைய கட்டுக்குள்ளும் மனுசன் அகப்பட மாட்டார் என்பது புரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் ‘சங்கு’ பெற்ற துன்பம் நிலாந்தனுக்கும் இருக்கும். அதனால், சுமந்திரனை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அமைதியாக இருக்க மாட்டார். ஆனால், "தமிழ் கட்சிகள் ஒன்றாகவேண்டும்" என்று எழுதுவதை மட்டும் விட மாட்டார். ‘அணையா விளக்கு’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடந்த அவதூறு நிகழ்ச்சிக்கு சிறீதரன் தான் காரணம் என்று நேராகச் சொல்லவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளலாம். நிலாந்தனும் அந்த விஷயத்தை மெதுவாக தொட்டுச் செல்கிறார். உண்மையில் குற்றம் சுமந்திரனிடம் அல்ல, சிறீதரனிடம் தான். "அனைவரும் வருங்கள்" என்று சொல்லி, சமூக நலவாதிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சுமந்திரனை நேரடியாக எதிர்க்கத் தைரியம் இல்லாத,தனது கட்சிக்குள்ளேயே ஆளுமையை நிலைநாட்ட முடியாத ஒருவர், தனக்கு வேண்டாதவர்களை அவமதிக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான். சிறீதரன் ஒரு விசச் செடி என்பது சிந்தித்தால் புரியும். அவருக்கு அவரது அரசியல் நலன்தான் முக்கியம், பொதுநலமல்ல. ஒட்டுமொத்தமாகச் சொன்னால், அவருக்கு ஆசிரியர் வேலையும் சரியாக வந்திருக்காது. அவர் அரசியலில் இருப்பது தமிழருக்கும் நன்மை பயக்காது. அவர் பேசாமல் ஒரு வியாபாரியாகவே இருந்து விடலாம்.
  3. நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை. போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாது” என்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம். ஒரு கேள்வி எழுகிறது – போருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது. நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள் “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு” என யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும் யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது. கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும் அங்கிருப்பவர்களிடம் இல்லை. பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை
  4. நானும் அதைச் செய்திருக்கின்றேன். அதற்கான அடையாள அட்டை எப்பொழுதும் எனது Purseக்குள் இருக்கும்.
  5. நாடு அனுராவோடு வீடு உறவோடு
  6. பெண் பூனைக்கும் உங்களைத் தெரிந்திருக்கிறது
  7. நீங்கள் சில நாட்களுக்கு முன் பதிந்த, “பால் வண்ணம் பருவம் கண்டு…”, மற்றும் தற்போது பதிந்துள்ள “மூடித் திறந்த இமை இரண்டும்…” ஆகிய இரண்டு பாடல்களையும், கம்பராமாயணத்தைப் படித்தவுடன் கண்ணதாசன் எழுதியிருப்பார் போல் தெரிகிறது. கம்பன், சீதையின் இடையை வர்ணிப்பதை வாசித்த கண்ணதாசன், சரோஜாதேவிக்காக இப்படிச் சொல்லியிருப்பார்: “அன்னக் கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது…” சரோஜாதேவியை விட்டுவிடுங்கள். அன்னை இல்லம் படத்துக்காக கடற்கரையில், பெருத்த இடையோடு தேவிகா நடந்து செல்ல, அவர் பின்னால் நடந்து வரும் சிவாஜி கணேசன், இவ்வாறு பாடிக் கொண்டு வருவார்: “நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது…” இங்கு கவிஞர் பொய் சொல்லியிருக்கிறார்!
  8. பீம்சிங் படம் என்றால் குடும்பம் குடும்பமாகப் போய்ப் பார்ப்பார்கள். எம்ஜிஆர் படம் என்றால் தனியாகத்தான் போக வேண்டும். பாகப்பிரிவினை படத்தில் கரண்ட் அடித்து ஒரு சிறுவனுக்கு உடலின் ஒரு பக்கம் இயங்காது போய் விடும். அந்த சிறுவன்(சிவாஜி) வளர்ந்து திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான பிறகு மீண்டும் ஒரு தடவை கரண்ட் அடிக்க அவனுக்கு மீண்டும் உடலின் எல்லாப் பாகங்களும் இயங்க ஆரம்பித்து விடும். இப்பொழுது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். சிவாஜிக்கு பீம்சிங் மாதிரி எம்ஜிஆருக்கு ரி.ஆர் . ராமண்ணா இருந்தார். ரி.ஆர் . ராமண்ணா எம்ஜிஆரை வைத்து, பாசம்,பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், புதுமைப்பித்தன், பெரிய இடத்துப் பெண், பறக்கும்பாவை… என்று ‘ப’ வரிசையில் பல வெற்றிப் படங்களைத் தந்தவர். ஆனாலும் பீம்சிங் கவனிக்கப்பட்டதைப் போல் ரி.ஆர் . ராமண்ணா ஏனோ கவனிக்கப்படவில்லை.
  9. உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.