Everything posted by Kavi arunasalam
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
- கருத்துப்படம் 06.06.2026
From the album: கிறுக்கல்கள்
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, உங்களது ஆதங்கம் நியாயமானதே. எனக்கும் இவ்வாறான அனுபவங்கள் இருக்கின்றன. எங்கள் இருவருக்கும் இருக்கும் இந்தப் பிரச்சினை பலருக்கும் இருக்கும். தனியாளாக உதவி செய்ய முன்வரும் போது இந்தச் சிக்கல் கண்டிப்பாக எவரும் எதிர்நோக்க வேண்டி வரும். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அங்கே அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அதிகம். முன்னோடி, ஒரு உதவி நிறுவனமாக செயற்பட ஆரம்பிக்கும் போது, அதற்கான தனி வங்கிக் கணக்கு இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முன்னோடியின் செயற்பாடுகள் பற்றி அதன் செயற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள். காத்திருப்போம்.- நான்காவது கொலை - கருணாகரன்
சொல்லவேண்டிய விடயம்தான். ஆனால் அதைச் சொன்ன இடம் எனக்கு சரியெனப்படவில்லை. அவர் ஒரு அரச அதிகாரி அவர் தனக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். அவரிடம் போய் விவாதிப்பதில் எதுவும் நடந்து விடாது. கேட்க வேண்டிய இடம் MOD. அங்கெல்லாம் நாங்கள் போய் கேட்க மாட்டோம். ஆனாலும் அவருக்கு தனது ஆதங்கத்தை தெரியப் படுத்தியதிலும், வெளியார் பார்வைக்கு கொண்டு வந்ததிலும் திருப்தி.- ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
உலகின் பல நாடுகளில் நிலவும் சில பாரம்பரியங்கள் சில நேரங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான நம்பிக்கையே ஐப்பானியர்களிடையே காணப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் பிடிக்கப்படும் புளூபின் டூனா (Bluefin Tuna) மீன் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் அந்த டூனா மீன் ஏலத்தில் ஆச்சரியப்படவைக்கும் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஏலத்தில் விடப்பட்ட 243 கிலோ எடையுள்ள டூனா மீன், 2.8 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு கிலோ டூனாவின் விலை 11,413 யூரோக்கள். இவ்வளவு விலைக்கு அந்த மீன் தரமானதா, சுவையானதா என்றெல்லாம் பெரிதாக அவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில்லை. “புதிய ஆண்டு நல்லதைத் தர வேண்டும்” என்ற ஒரு நம்பிக்கையே எல்லாவற்றையும் மீறி அவர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையே பணமாக மாறுகிறது. மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் கொள்ளும் சந்தையின் தந்திரம் இதுதான் போலும். சில நேரங்களில் பாரம்பரியம், நம்பிக்கை, வியாபாரம் மூன்றும் ஒன்றாகக் கலந்தால் உருவாகும் அதிர்ஷ்டம் இதுதான். https://edition.cnn.com/2026/01/05/travel/japan-bluefin-tuna-record-auction-intl-hnk- தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
சுமந்திரன் எடுத்துத் தந்தால் தமிழிழமே வேண்டாம் என்று சொன்ன தமிழ்சிறி அவர்களுடய கவனத்துக்கு இதைக் கொண்டு வருகின்றேன்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
குமாரசாமி, இந்த எண்ணத்தைத் தவிர்க்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏராளன் ஏற்கனவே ஒரு அமைப்பை உருவாக்கி, அதனூடாக பல்வேறு செயற்திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். அவரது அமைப்பிற்கும் செயற்பாடுகளுக்கும் தனித்துவமான சில கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. எனவே, எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் தனது புலம் அமைப்பில் தொடர்ந்து செயற்படுவதுதான் உகந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அவரது முயற்சிகளுக்கு உதவுவதை யாழ்கள உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். “எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்பதுபோல, ஒவ்வொரு முயற்சியும் தனது தனித்தளத்தில் வளர்வதே சிறந்தது. நாம் முன்னெடுக்க உள்ள அடிப்படை சுகாதார வசதி திட்டம் தனித்துவமானது. அதைச் செயற்படுத்துவதற்காக ‘முன்னோடி’ என்ற உதவி நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்காததும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏராளனும் இதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்சமயம், அவர் இந்தத் திட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘முன்னோடி’ தற்போது ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆகவே, அதை உறுதியுடன் செயற்படுத்துவோம். ‘முன்னோடி’க்கு தனியான கணக்கு இருப்பது பங்களிப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையையும் நமக்குச் செயற்பாட்டு இலகுவையும் அளிக்கும். துளித் துளியாகச் சேர்ப்போம். எதிர்காலத்தில் அது நிறைந்த குடமாக மாறலாம்.- அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
ஏராளன், இருக்கின்றது என்றல்ல அதேதான். எனக்கும் அவனைத் தெரியும். அவன் பெயர் மயூரன். இதை வாசித்தபோது,மயூரன் சுகுமாரன், மொட்டடையடித்தபடி இருந்த புகைப்படம் நினைவுக்குள் வந்தது. தமிழன், சிட்னி, ஓவியங்கள் என்று எலாமே ஒத்துப் போகின்றது. மிகுதி நிச்சயம் கற்பனையாகத்தான் இருக்கும். அந்தத் தாயின் வலி புரிகிறது. சர்வதேசமட்டுமல்ல உலகின் பல மனிதநேய அமைப்புகள் கேட்டும் இந்தனேசியா மரணதண்டனையை விடாப்பிடியாக நின்று எட்டுப் பேருக்கும் நிறைவேற்றியது. அவர்களுடைய சட்டம் அப்படி.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
- கருத்துப்படம் 01.01.2026
From the album: கிறுக்கல்கள்
- தலைவர்களின் 2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
- கருத்துப்படம் 01.01.2026
From the album: கிறுக்கல்கள்
- பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
- கருத்துப்படம் 31.12.2025
From the album: கிறுக்கல்கள்
- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏- பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
சர்வதேசம் எப்போதும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படும் என்று கூறும் வேலன் அவர்கள், அதே சர்வதேச சமூகத்திடம் தங்களது போராட்டத்தை எடுத்துச் சென்று, அதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துவது எனக்குப் புரியவில்லை. சர்வதேசம் நலன் மட்டுமே பார்க்கும் என்றால், அதிலிருந்து நமக்கான நியாயம் எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி என்னிடம் எழுகிறது. தான் “காவி உடுத்திய துறவி” என வேலன் அவர்கள் கூறுகின்றார். துறவி என்பவர், உலகியல் ஆசைகளைத் துறந்தவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் அரசியல் ஆசையும் அதிலிருந்து விலகியிருக்க வேண்டாமா? இங்கே பட்டினத்தார் கதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை வயல் வரப்பில், தலைக்கு கை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பட்டினத்தாரைக் கண்ட இரண்டு பெண்களில் ஒருவர், “பார், துறவி எவ்வளவு சுகமாக படுத்திருக்கிறார்” என்று கூறினாராம். அந்த வார்த்தை பட்டினத்தாரின் காதில் விழுந்ததும், “இன்னும் நான் துறக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று உணர்ந்தாராம். அந்தக் கதையின் தொடர்ச்சியை இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. அதன் பொருளைப் புரிந்துகொள்ளலாம். வேலன் அவர்கள் ஆன்மீகப் பாதையிலேயே நிலைத்து நிற்பது அவருக்கும் சமூகத்திற்கும் உகந்ததாக இருக்கும் என்பதே என் கருத்து. அரசியல் அவருக்கு அவசியமான துறை அல்ல. ஏற்கனவே எங்கள் மதகுருக்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கிடையாது. அந்தச் சூழலில், போராட்டம், அறம், வீரம் என மக்களின் உணர்வுகளைத் தூண்டி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தால், இருக்கிற மதிப்பும் மெல்ல மெல்லக் குறைந்து போகும். அதையும் மீறி அரசியலில் ஈடுபடுவேன் என்று வேலன் அவர்கள் அடம் பிடித்தால், இன்னொரு “அர்ச்சுனா” அவதாரம் எடுத்து வருவதற்கான வாய்ப்பை நாம் அடுத்த தேர்தலில் பார்க்கலாம். “பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்களில் …”தலைப்பு வேறு ….- யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்- இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
- கருத்துப்படம் 30.12.2025
From the album: கிறுக்கல்கள்
- ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
கோட்டு ஓவியங்கள் வரைபவர்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் ராமு அவர்கள். அவரது ஓவியங்கள் அநேகமாக குமுதம் இதழில் வெளியாகியிருந்தன. இதே நேரத்தில், கல்கி இதழில் சிறுவர் கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் ரமணி என்பவர் வரைந்துவந்தார்.ரமணியின் ஓவியங்கள், ராமு அவர்களின் ஓவியங்களைப் போலவே நிறைந்த கறுப்பு நிறங்களால் இல்லாமல், தனி கோடுகளில் எளிமையாக, நேர்த்தியாக அமைந்திருந்தன. ரமணி அவர்களின் ஓவியங்களில், அவரது ஒற்றைக் கோடு மூலம் அழகிய படங்களை வரைந்து மக்களை கவரும் திறமை, ஈழத்து ஓவியர் சுப்பிரமணியம் அவர்களிடமும் இருந்தது. எழுபதுகளில், (சுப்பி)ரமணி(யம்) ஓவியங்களை சிறுவர் பாடப் புத்தகங்களில் பார்த்தேன். அந்த ஓவியங்களை கண்டு வியந்து, “இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமணி என்ற ஓவியரா?” என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அதே சமயம், அவரது ஓவியத்தில் ஒன்றான, மகிழ்ச்சியுடன் ஓடிவரும் சிறுமியின் படத்தை பார்த்தபோது, அதை பின்பற்றி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பியின் முகப்பிற்காக நான் வரைந்திருந்தேன். அந்த படத்தை பார்த்ததும், மார்க் மாஸ்ரர் அவர்கள் “இது ரமணியின் ஓவியமாக இருக்கிறது” என்று கூறினார். அப்பொழுதுதான் ரமணி அவர்களும் மார்க் மாஸ்ரரின் ஒரு மாணவன் என்பதை, நான் அறிந்து கொண்டேன். ஓவியர் ரமணியை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது படைப்புகளின் மேல் என் ரசனை எப்போதும் இருக்கின்றது. ஈழத்து தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தில் அவர் மிக முக்கியமான இடம் வகிக்கிறார். இவரது ஓவியங்களில் எப்போதும் நிறைவான அழகு, நுணுக்கம் செறிந்திருக்கும். ஓவியர் ரமணி அவர்களுக்கு எனது இதயபூர்வ அஞ்சலிகள்.- ஓவியர் ரமணி (வைத்தீஸ்வரன் சுப்ரமணியம்)
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
ஈழத்து கலைஞர்களும், சமூக சேவையாளர்களது படங்கள்-
ஓவியர் ரமணி (வைத்தீஸ்வரன் சுப்ரமணியம்)
-
அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி(ஓவியர்)
-
பண்டிதர் வீ.பரந்தாமன், கவிஞர், சமூக செயற்பாட்டாளர்
-
புஷ்பராணி சிதம்பரி (போராளி,எழுத்தாளர்)
-
ஆனந்தி சூரியபிரகாசம் , வானொலி
-
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் - இசை, நடனம், வானொலி
-
இராசநாயகம் பாரதி, ஊடகவியலாளர்
-
மாவை சேனாதிராஜா, அரசியல்
-
ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை (வைகறை ரவி) இலக்கியம், சமூகசேவையாளர்
-
குழந்தை ம.சண்முகலிங்கம் (நாடகம்)
-
அன்ரனி ஜீவா எழுத்தாளர்
-
ஏ.மார்க் ஓவியர்
-
நா.யோகேந்திரநாதன் (எழுத்தாளர்)
-
கலாநிதி மகேஸ்வரன் அரசியல்,சமூகசேவையாளர்
-
வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் (ஈழத்து சௌந்தரராஜன் (பாடகர்)
-
மு.பொன்னம்பலம் (முபொ) எழுத்தாளர்
-
விறாஜ் மென்டிஸ் , சமூகசெயற்பாட்டாளர்
-
விக்கிரமபாகு கருணாரத்ன, பேராசிரியர், அரசியல்வாதி
-
போல் சத்தியநேசன், சமூக சேவையாளர்
-
இரா.சம்பந்தன் அரசியல்வாதி, தமிழரசுக்கட்சி (தலைவர்)
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
- கருத்துப்படம் 29.12.2025
From the album: கிறுக்கல்கள்
- யேர்மனியின் Gelsenkirchen நகரத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வங்கிக் கொள்ளை
கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பக அறையின் தரையில் உள்ள கோப்புகள் சிதறிக் கிடப்பதோடு, அந்த அறையில் இருந்த பெட்டிகளும் உடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை. இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்னால் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மறு அறிவித்தல் வரை, வங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படாது என அறிவிப்புகள் பலகையில் போடப்பட்டிருக்கின்றது. புது வருடம் வரும் நேரத்தில் இது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றில்லை, சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தும் blue NewsGermany: Hole in vault triggers rush of bank customersUnknown persons have broken into a bank building in the German city of Gelsenkirchen and ransacked several safe deposit boxes. According to police, the perpetrators used a large drill to get into the - கருத்துப்படம் 06.06.2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.