Everything posted by Kavi arunasalam
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
Die Abhängigkeit der deutschen Arzneimittelfirmen vom US-Markt ist groß. Die Vereinigten Staaten sind das wichtigste Exportland für die Branche. 2024 gingen dem Statistischen Bundesamt zufolge Waren im Wert von 27 Milliarden Euro und damit knapp ein Viertel der deutschen Pharmaexporte in die USA. Damit ist die deutsche Pharmabranche wesentlich stärker vom US-Markt abhängig als etwa der Maschinenbau und die Chemieindustrie. Besonders gefragt waren etwa Impfstoffe. https://www.zeit.de/wirtschaft/2025-09/medikamente-zoelle-usa-trump-auswirkungen-deutschland-gxe
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தப் பாடலில் தோன்றுபவர் குசலகுமாரி. ஜமுணாராணியைப் பார்க.க வேண்டுமானால், “அமுதைப் பொழியும் நிலவே..”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்…”, “அன்புள்ள மான் விழியே…” என்று அவரின்அருமையான பல பாடல்கள் இருக்கின்றன. இந்தப் பாடலை எழுதியவர் சுரதா. கிண்டிக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து நல்ல நல்ல பழைய பாடல்களை போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் Suvy.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
இதைச் சொல்வதற்காக நானும் கொஞ்சமாக வருந்துகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் முகராசி ஒன்று இருகிறது அல்லவா. உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது😊
-
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
யேர்மன் மருந்து உற்பத்தியில் கால் பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கிருக்கிறது. மனுசன் அடிக்கடி கரடி விட்டு வெருட்டிக் கொண்டிருக்கிறார்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தப் பாடலுக்காக ஒரு மாதத்துக்கு மேலாக பத்மினியும், வையேந்திமாலாவும் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது. பாடலும், ஆடலும் நன்றாக அமைந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தாலும், இன்றுவரை பிரபலமாக இருப்பது, அந்த நடனத்துக்கு இடையில் பி.எஸ். வீரப்பாவின் குரலில் ஒலித்த, “சபாஸ் சரியான போட்டி” என்ற வசனம்தான்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மையிலேயே இந்தப் பாட்டை இப்பொழுதுதான் கேட்கிறேன். எம்ஜிஆர் கால் முறிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓய்வில் இருந்த போது சரோஜாதேவி எல்லோருடனும் சேர்ந்து நடித்தார் என்ற செய்தி இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் வந்த படமாக இருக்கும். பாலாஜியுடன் அவரது ஆட்டம் நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பாடலைக் கேட்டு. எஸ்.சி. கிருண்ணன் பாடியது. மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகள். கவலையோடு இருக்கும் போது மனதுக்கு ஒத்தடம் தரும் பாடல். நன்றி Newbalance
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியிலே மடியிலேயே கையை வைச்சிட்டியே மாப்பு🤪
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
ராசாத்தி அம்மாள், கவிஞர் வாலியுடன் நாடகங்களில் நடித்தவர். நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா எம்ஜிஆரின் நாடகக்குழுவில் இருந்தவர். எம்ஜிஆர் படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். நடிகர் செந்தாமரை கலைஞருடன் நல்ல உறவில் இருந்தவர். செந்தாமரையின் மனைவி கௌசல்யா வழங்கிய பேட்டி ஒன்று இங்கே இருக்கின்றது. மீண்டும் கோசான் வீட்டைச் சுத்தி அடை மழை😊
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில் பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும் தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாஸ் மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான். அதுசரி அநேகமாக பல்லி மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
From the album: கிறுக்கல்கள்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இந்தப் பாடலுக்கு நடனமாடுபவர்கள், எம்.என்.நம்பியாரும், புஸ்பலதாவும். கட்டிலில் படுத்திருந்து எழுந்து ஓடுபவர்தான் ராஜசுலோசனா. ராஜசுலோசனா நல்ல நடிகை மட்டுமல்ல சிறப்பாக நடனமும் ஆடக் கூடியவர். திருமால் பெருமை படத்தில், “கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு…” பாடலுக்கு பத்மினியுடன் சேர்ந்து அழகாக ஆடியிருப்பார். குலேபகாவலியில் வரும், “ பாசமும் நேசமும் இரத்த..” பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. நல்லவன் வால்வான் படத்தில் “குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குது..” பாடலில் எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கிணற்றடியில் போடும் ஆட்டம் ரசிக்கத்தக்கது
-
ஜெர்மனி ICU வில்.
யேர்மனியின் இன்றைய பொருளாதாரம் வலுவானதுதான். உற்பத்தியும் ஏற்றுமதியும் உறுதியாகத்தான் இருக்கின்றன. யேர்மனியின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்மையாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றது. முக்கிய உற்பத்தித்துறைகள் என்று பார்த்தால், இயந்திரங்கள், வாகனங்கள் (மெர்சிடீஸ்-பென்ஸ், பிஎன்டபிள்யூ, பொல்க்ஸ்வாகன்), இரசாயனப் பொருட்கள், அத்துடன் மின்னணு சாதனங்கள் என பல துறைகள் இருக்கின்றன. இப்பொழுதும் யேர்மனிய உற்பத்திப் பொருட்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு இருக்கின்றது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, சுத்தமான ஆற்றல் கூடிய பசுமைத் தொழில்நுட்பங்களிலும் யேர்மனி இப்பொழுது முக்கிய முதலீடுகளை செய்து கொண்டிருக்கிறது. யேர்மனியின் இப்பொழுது இருக்கும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் சில முக்கிய சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய நிலை இன்னும் இருப்பதாகவே கருதுகிறேன். யேர்மனியில் மட்டுமல்ல உலகமெங்குமே மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துத்தான் இருக்கிறது. ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், பென்சனுக்கு வழங்கப்படும் தொகை பெரிதாகிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. எதிர்காலத்தில் பென்சன் வயதை உயர்த்தும் திட்டங்கள் இப்பொழுது ஆராயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் யேர்மனிக்கு வந்த பொழுது பென்சன் வயது 60. ஆனாலும், வேண்டுமானால் 58 வயதில் பென்சன் எடுக்க அப்பொழுது வழி இருந்தது.ஆனால் எனக்கு பென்சன் எடுக்க அனுமதிக்கப்பட்ட பொழுது எனது வயது 66 வருடங்களும் 8 மாதங்களும் இருந்தது. இப்பொழுது பென்சன் எடுப்பதாயின் வயதெல்லை 67 வருடங்கள் அல்லது 45 வருடங்கள் கண்டிப்பாக வேலை செய்திருக்க வேண்டும். யேர்மனி உலகில் முன்னணி கார் உற்பத்தி நாடாக இருந்தாலும், அண்மையில் எலக்ட்ரிக் வாகன மாற்றம் மற்றும் சீனாவின் போட்டி காரணமாக பாரம்பரிய கார் நிறுவனங்கள் உற்பத்தி வீழ்ச்சியை சந்திக்கின்றன என்பது உண்மைதான். வேலைவாய்ப்பு இல்லாமல் மூன்று மில்லியனுக்கு மேலாக மக்கள் இருந்தாலும், இது பெரும்பாலும் வேலைக்கான குறைந்த தகுதியுடையோர் மற்றும் குடியுரிமை பெற்ற வெளிநாட்டில் இருந்து வந்து குடியிருப்பவர்களிடையே அதிகமாகக்காணப்படுகிறது. உயர் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு இன்றும் ஆட்கள் தேவை அதிகமாகவே இருக்கின்றது. யேர்மனியில் மிகப் பெரிய சவாலாக இருப்பது இதுவே, மருத்துவம், தொழில்நுட்பம், ஹோட்டல்/சமையல், கட்டிட வேலை போன்ற துறைகளிலும் ஆட்கள் குறைவாக உள்ளனர். இதனை சரி செய்ய, வெளிநாட்டிலிருந்து திறமையான தொழிலாளர்களை வரவழைக்கும் புதிய குடியேற்றக் கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்திய ரஸ்யாவின் நடவடிக்கைகள், யேர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.பெருமளவு தொகையை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்க வேண்டிய தேவை யேர்மனி ஏற்படிருக்கின்றது. அதாவது, நாட்டின் உள்நாட்டுத் தேவைகளுக்கும் மேலான ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய தேவை. அத்தோடு, உக்ரைன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அளிக்கப்படும் பெரும் தொகை, உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிக்கான செலவுகள் என பெரும் தொகையை யேர்மனி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களூடாக யேர்மனி, மனித உரிமைகள் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஆகவேதான் அகதிகளுக்கு புகழிடம் தந்து பாதுகாக்கிறது. அகதிகளுக்கு உதவுவது என்பது அவர்களின் பெரும்பாலான மனதையும், உண்மை உணர்ந்த அவர்களின் நிலைப்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. யேர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் (1951) ஜெனிவா உடன்படிக்கைகளில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.இந்த உடன்படிக்கை என்பது அகதிகளை அவதிப்படுத்துவதைத் தடுப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பு, வாழும் இடத்தை வழங்குவது, அவர்களுக்கான மருத்துவ வசதி மற்றும் வாழ்வாதாரத்தைக் கவனித்துக் கொள்வது போன்றவற்றுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச சட்டமாகும். யேர்மனி, சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.இன்று கோவில்களைக் கட்டுவது, வீதிகளை இடை மறித்து கடவுளை தேரில் வைத்து இழுப்பதுமான செயற்பாடுகள், தெருவெல்லாம் தேங்காய் உடைத்து காவடி எடுத்து ஆடுவது, டோர்ட்மன்ட் போன்ற நகரங்களில் தெருவிழாக்கள் செய்வதும் நான் மேற் குறிப்பிட்ட நல்லிணக்கமும், சுதந்திரம், சமத்துவமும்தான் காரணம். பொதுவாக, அரசியல் தஞ்சம் என்பதை தள்ளி வைத்து இட்டு மனிதாபிமான செயற்பாடுகளாலேயே எங்களில் பலருக்கு யேர்மனியில் வாழ சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சில வருடங்களாக வெளிநாட்டவர்களால் ஏற்படும் வன்முறைகளால்தான் AFD போன்ற வலதுசாரிகள் கட்சி வளர்ந்து வருகிறதே தவிர, பொருளாதார வீழ்ச்சி அதன் வளர்ச்சிக்குக் காரணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இரண்டாம் உலகக் போரின் பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா நாடுகள் தங்கள் படைகளை நிறுத்தி அழுத்தம் கொடுத்த பொழுதும், யேர்மனி பொருளாதார வளர்ச்சியில் உச்சம் கண்ட நாடு மட்டுமல்ல, உள்கட்டமைப்பையும் திறமையாக அமைத்திருந்தது. இன்று யேர்மனி காணும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சீர் செய்யப்படும். நம்பிக்கையிருக்கிறது. YouTube இன் மூலம் சம்பாதிக்கலாம் என்று அவனவன் சொல்வதெல்லாம் தாங்கள் பணம் பார்ப்பதற்கேயன்றி வேறொன்றுமில்லை. ‘தமிழ் பொக்கிசம் சொல்லும் தகவல்களை இந்தியர்கள்கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனது வீட்டுக்குப் பக்கத்தில் இப்பொழுது நான்கு இந்தியத் தமிழர்கள் புதிதாக வீடு வாங்கிக் குடியேறியிருக்கிறார்கள்’
-
ஒரு பயணமும் சில கதைகளும்
பயணத்தில் வந்த இரண்டு கதைகளுமே சிறப்பு. நீங்கள் மண் குவியல் பற்றிக் குறிப்பிட்ட பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது, வல்லிபுரக் கோவில் மண் குவியல்தான். அன்று ஏழு பெரிய மண்குவியல்களைத் தாண்டித்தான் கோவிலில் இருந்து கடற்கரைக்கு (கடல் தீர்த்தம்) போக முடியும். இப்பொழுது அங்கே அவை இருக்காது. கள்ள மணல் அள்ளி மணல் மலையையே அழித்திருப்பார்கள். இப்பொழுது இங்கே என்ன நடக்கப் போகிறதோ?
-
ஒரு பயணமும் சில கதைகளும் 18.09.2025
From the album: கிறுக்கல்கள்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மைதான் அவருக்கு தென்னகத்து ஜேமஸ்போண்ட் என்ற பட்டமும் இருக்கிறது. இவரது படங்களில் நல்ல பாடல்களும் இருக்கிறது. குறிப்பாக, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி நீ எங்கே என் நினைவுகள் அங்கே அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் தோழ்வி நிலையென நினைத்தால் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்… என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
- கருத்துப்படம் 13.09.2025
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார். சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல், “இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..” இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”- அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
- கருத்துப்படம் 11.09.2025
From the album: கிறுக்கல்கள்
- ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
- கருத்துப்படம் 11.11.2025
From the album: கிறுக்கல்கள்
- மனைவிக்காக குடிமக்களிடம் பணம் கொடுத்து நிலம் வாங்கிய சோழ மன்னன்
அரசனுக்கு ஏது பணம்? எல்லாம் பொது மக்களிடம் வரியாக வசூலித்ததுதானே.- நான் தேடும் செவ்வந்திப் பூவிது...
கண்ணதாசனும் ,வாலியும் இன்று இல்லை. வைரன், சின்னதால் பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமில்லை. சூடு கண்ட பூனை திரும்ப வராது. கவிதை அருமை - கருத்துப்படம் 13.09.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.