Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,PIER MARCO TACCA/GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும். ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய நட்பு கூட்டணியும் நம்பகமானதாக இல்லை. இந்நிலையில், சில ஐரோப்பிய தலைவர்களும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது அவசியம் என கருதத் தொடங்கியுள்ளனர். ராணுவக் கட்டுப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் நேட்டோ பயிற்சிகளில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் யோசனை 1950 களில் இருந்து தோன்றியது என்று கூறுகிறார் நெதர்லாந்தில் உள்ள கிளிங்கெண்டேல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவரான டிக் சாண்டி. "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியைப் பற்றியும் கவலை இருந்தது, ஆனால் ஜெர்மனியில் ஜனநாயக அரசு நிறுவப்பட்ட பிறகு இந்தக் கவலை மறைந்துவிட்டது. இருப்பினும், 1950 ஆம் ஆண்டு கொரியப் போர் தொடங்கிய பிறகு, சோவியத் யூனியனிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது என்பது தெளிவாகியது. அதைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது" என்று டிக் சாண்டி கூறுகிறார். இந்தக் கூட்டுப் படைக்கு 'ஐரோப்பிய பாதுகாப்புச் சமூகம்' என்று பெயரிடப்பட்டது. லக்சம்பர்க், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அதனை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் இந்த திட்டத்தை நிராகரித்தது. பின்னர் இந்த லட்சியத் திட்டம் தோல்வியடைந்தது. 1949 இல் நேட்டோ நிறுவப்பட்டதும், இந்த திட்டத்தை பாதித்தது. அந்தக் கூட்டணி தொடங்கப்பட்டபோது, அமெரிக்காவும் கனடாவும் அதன் முக்கிய உறுப்பு நாடுகளாக இருந்தன. 1980களில் சோவியத் யூனியனின் அச்சுறுத்தல் குறைந்திருந்தது, ஆனால் பின்னர் சூழல் மீண்டும் மாறத் தொடங்கியது . 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்று டிக் சாண்டி கருதுகிறார். 1990 களில் ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து அப்படியான சூழல் நிலவவில்லை. யுக்ரேன் போர் முழு ஐரோப்பாவையும் பாதிக்கிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் ஆசியாவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று டிக் சாண்டி கூறுகிறார். அதே நேரத்தில், சீனா ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. எனவே, டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐரோப்பா அதன் பாதுகாப்பை முன்பை விடவும் மிகத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். 2018 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஐரோப்பிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் பல நாடுகளும் அதற்கு எதிராக உள்ளன. "கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் இதற்கு எதிராக உள்ளன, ஏனெனில் இது அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து தூர விலக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நெதர்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக இல்லை" என்கிறார் டிக் சாண்டி. "இருப்பினும், அவர்கள் நிச்சயமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆதரிப்பார்கள். ஆனால் ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதை ஆதரிக்கின்றனவா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. அவர்கள் ஐரோப்பாவில் ஒரு ராணுவ அமைப்பை உருவாக்குவதை கடுமையாக எதிர்க்கலாம்." மேலும் ஐரோப்பிய ராணுவம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் டிக் சாண்டி குறிப்பிடுகிறார். மிகப்பெரிய படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரம், நேட்டோ உச்சி மாநாடு நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெற்றது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கினால், அது அமெரிக்க ராணுவத்திற்கு சமமாகவும், ரஷ்ய ராணுவத்தை விட பெரியதாகவும் இருக்கும் என்று பாரிஸைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் உல்ரிக் ஃபிராங்க் கருதுகிறார். ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, இது அவ்வளவு எளிதானது அல்ல. அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை சேகரித்து, தேவைக்கேற்ப அவற்றை நிலைநிறுத்துவது பல சவால்களை முன்னிறுத்துகிறது " என்று அவர் கூறுகிறார். ஐரோப்பாவில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் போன்ற வளங்கள் உள்ளன. "ஐரோப்பாவில் மூன்று அல்லது நான்கு நாடுகளில் மட்டுமே பெரிய ராணுவப் படைகள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக பிரிட்டனும் அடங்கும், ஆனால் இப்போது அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகியவை முக்கிய ராணுவ வளங்களைக் கொண்டுள்ளன" என்று முனைவர் பிரான்கி குறிப்பிடுகிறார். பிரிட்டன் மற்றும் பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஐரோப்பா போருக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளது என்று முனைவர் பிராங்கியிடம் கேட்டபோது, தெளிவான பதில் இல்லை என்றும், ஆனால் ஐரோப்பாவிடம் நிச்சயமாக போதுமான ராணுவ வளங்கள் இருப்பதாகவும் கூறினார். "எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடு தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதலின் தன்மையைப் பொறுத்து மற்ற நாடுகள் பதிலளிக்கும். பல நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தேவையான அளவு ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் விளக்குகிறார். முனைவர் உல்ரிக் ஃபிராங்கேவின் கூற்றுப்படி, நேட்டோவிற்கு தனக்கென ஒரு நிரந்தர ராணுவம் இல்லை. அதன் ராணுவத் திறன் அதன் உறுப்பு நாடுகளின் படைகளைச் சார்ந்துள்ளது. நேட்டோ ஒப்பந்தத்தின் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அது முழு கூட்டணியின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது. "ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் பிரிவு 42.7 இன் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து உறுப்பினர்களும் அதற்கு உதவ கடமைப்பட்டுள்ளனர். இதைத் தவிர, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருதரப்பு ராணுவ ஒப்பந்தங்களும் உள்ளன" என்கிறார் முனைவர் பிரான்கி. இருப்பினும், போர் போன்ற சூழ்நிலையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உத்தி சார்ந்த ஒருங்கிணைப்பு, வீரர்களை அனுப்புதல் மற்றும் ஆகியவை பெரும்பாலும் நேட்டோவின் மூலம் நடைபெறுகின்றன. அதனால் தான், நேட்டோ இல்லாமல் போரின் சவால்களை சமாளிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ராணுவம் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்து நாடுகளின் ராணுவங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. மற்றொரு பரிந்துரை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ராணுவத்தை வைத்திருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய ராணுவத்திற்காக ஒரு தனி படையையும் உருவாக்கலாம் என்பதாக உள்ளது. ஆனால் இந்த யோசனையுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஐரோப்பிய ராணுவத்தை யார் வழிநடத்துவார்கள்? எந்த நாடு எவ்வளவு வளங்களை வழங்கும், எவ்வளவு செலவை ஏற்கும் என்பதை தீர்மானிப்பதும் சிக்கலானது. இது ஒரு பெரிய பிரச்னை, இதைத் தீர்ப்பது எளிதல்ல என்று முனைவர் உல்ரிக் ஃபிராங்கே கூறுகிறார். ராணுவ அதிகாரத்தில் சமநிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ. குறைந்தபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரும் முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளருமான ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார். மேலும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள் விரைவில் முறிந்து விடுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று லுங்கெஸ்கு கூறுகிறார். "எதிர்காலத்தில் நேட்டோவில், ஐரோப்பாவின் பங்கு அமெரிக்காவை விட முக்கியமானதாக இருக்கும் வகையில் சமநிலைப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்.இதில், ஐரோப்பிய ராணுவமும் அதன் திறன்களும் மேம்படுத்தப்படும். மேலும், ஐரோப்பா-நேட்டோ ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்படும். இது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும்" என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். இருப்பினும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருக்கலாம். கடந்த காலத்தில், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்கும் யோசனையை ரஷ்யாவின் பிரச்சார இயந்திரம் ஆதரித்தது, ஏனெனில் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்று ஓனா லுங்கெஸ்கு விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ராணுவத் திறன் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதைப் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது. ஐசனோவர், நிக்சன், கென்னடி மற்றும் ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்களின் காலத்தில் பல ஆண்டுகளாக, ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்கு அதிகளவில் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருந்தது என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். "இப்போது அதிபர் டிரம்பும் அதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவரது கேள்வி நியாயமானது தான்" என்றும் லுங்கெஸ்கு கூறுகிறார். தொடர்ந்து பேசியபோது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனி ராணுவத்தை உருவாக்கினால், அது அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் சில பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் லுங்கெஸ்கு குறிப்பிடுகிறார். ஆனால், போர் ஏற்பட்டால் ஐரோப்பிய ராணுவத்தால் ஐரோப்பாவைப் பாதுகாக்க முடியாவிட்டால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது நடந்தது போல் அமெரிக்கா நிச்சயமாக அதன் உதவிக்கு வரும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐரோப்பா நேட்டோவிற்கு தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி வருகிறது (குறியீட்டு படம்) இந்த ஆண்டு ஸ்பெயின் பிரதமர், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால் சமீபத்தில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, தற்போது யாரும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது குறித்து பேசவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், நேட்டோவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அனைத்துத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். மேலும், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் ஜூன் 2025 இல், ஐரோப்பாவில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகளை வழிநடத்த ஒரு மூத்த அமெரிக்க ஜெனரலை நியமித்துள்ளார் அதிபர் டிரம்ப். 1951 முதல், நேட்டோவில் ஐரோப்பிய கட்டளைக்கான பொறுப்பு ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம் இருப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு ஒரு அமெரிக்க ஜெனரலை நியமித்திருப்பது, அமெரிக்கா நேட்டோவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதையும், ஐரோப்பாவின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார். அமெரிக்க நிர்வாகமும் நேட்டோவை வலுவாக ஆதரிக்கும் அதே நிலைப்பாட்டையே முன்னெடுக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் நேட்டோவின் வலுவான கூட்டாளிகளாக மாற வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. இந்த மாதம் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிலும் அதிபர் டிரம்ப் பங்கேற்பார். இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கவனம் பாதுகாப்பு முதலீடுகளில் இருக்கும். அடுத்த சில தசாப்தங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது ஐந்து சதவீதத்தை பாதுகாப்பு பட்ஜெட்டுக்காக செலவிட வேண்டும் என்பதை இது வலியுறுத்தும் என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். "ஐரோப்பாவில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் தற்போது ஐரோப்பா தேவையான அளவு ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. ஆனால் இதற்கான நிதியை திரட்டுவது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது" என்று அவர் கூறுகிறார். விநியோக சவால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ 1949 இல் வாஷிங்டன் டிசியில் நிறுவப்பட்டது. தற்போது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புத் துறையில் முதலீட்டை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்வென் பிஷப். பனிப்போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறை தொடர்பான தங்களது செலவுகளைக் குறைத்ததாகவும், பல நாடுகளில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளதாகவும் அவர் விளக்குகிறார். "ஆனால் பாதுகாப்புத் துறையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது போதாது. ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்குவதை இது கடினமாக்குகிறது." ஐரோப்பாவில் போலந்து தான் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஏழு மடங்கை, பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒதுக்கியுள்ளது. அதே போல், லிதுவேனியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடுகள் இவை என்றும், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்கின்றன என்றும், அதனால் தான் இந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை விரைவாக அதிகரித்துள்ளன என்றும் முனைவர் பிஷப் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த ராணுவப் படைகள் மற்றும் ஆயுதக் குவியல்கள் மிகப் பெரியவை, ஆனால் அமெரிக்காவை விலக்கிவிட்டால், ஐரோப்பாவிற்கு குறைவான வளங்களே மிஞ்சும். "உதாரணமாக, ராணுவ செயற்கைக்கோள்கள், நவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற வளங்கள் தேவை. ஆனால் தனியாக இந்த முழு செலவையும் ஏற்பது என்பது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு கடினமான விஷயம். இந்த குறைபாடுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பதே மிகப்பெரிய சவால்" என்கிறார் முனைவர் பிஷப். கூடுதல் நிதி எவ்வாறு திரட்டப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ வீரர்கள் (மாதிரி புகைப்படம்) பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க, அரசாங்கங்கள் மற்ற துறைகளில் இருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று முனைவர் ஸ்வென் பிஷப் கூறுகிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும், நேட்டோவில் உறுப்பினராகவே உள்ளது. பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்க அதன் வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் குறைப்பது குறித்தும் பிரிட்டன் பரிசீலித்து வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தன. நேட்டோவின் கூற்றுப்படி, அதன் 32 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் இந்த இலக்கை அடைந்துள்ளன. இப்போது நேட்டோ இந்த இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக முனைவர் பிஷப் கூறுகிறார். "பாதுகாப்பு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். இது ஐரோப்பாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெற உதவும். இந்த இலக்கை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள் அறிவார்கள். அமெரிக்காவின் கவனம் உலகின் பிற பகுதிகளுக்கு திரும்பினால், போர் ஏற்பட்டால் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் கூறுகிறார். விரைவில் ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க முடியுமா என்ற முக்கிய கேள்வியைக் குறித்து இப்போது ஆராய்ந்தால், அதற்கான பதில் இல்லையென்பதாகவே உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை அதிகரித்திருந்தாலும், அவை அமெரிக்காவைக் கைவிடத் தயாராக இல்லை. ஐரோப்பிய ராணுவத்திற்காக பரப்புரை செய்யும் நாடுகள், தேவையான பணத்தை திரட்ட மற்ற பகுதிகளில் செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது ஐரோப்பிய ஒன்றிய சார்பு குழுக்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும். இது வெறும் பொருளாதாரச் சுமையைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கடுமையான அரசியல் கேள்விகள் எழும். ராணுவத்தின் இத்தகைய முடிவுகள் நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கலாம். ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் முழுமையான ஒற்றுமை தேவைப்படுகிறது. தற்போது, நடைமுறைக்கு மாறான யோசனையாக உள்ள இதனைக் குறித்து, ஐரோப்பிய நாடுகளிடையே ஆழமான வேறுபாடுகளும் காணப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7ll33zx99o
  2. அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு 30 JUN, 2025 | 03:48 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு இலக்காகிய ஈரானின் போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதை செய்மதிகள் காண்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மக்சார் தொழில்நுட்பத்தின் செய்மதி படங்கள் கட்டுமானப்பணிகள் தீவிரமாக இடம்பெறுவதை காண்பித்துள்ளன என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலிற்கு உள்ளான போர்டோ அணுஉலையின் அருகில் அகழ்வு இயந்திரமும் கிரேன்களும் இருப்பதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.புல்டோசர் லொறி போன்றவையும் காணப்படுகின்றன. இந்த செய்மதி படங்களை ஆய்வு செய்துள்ள அணுவாயுத நிபுணர் டேவிட் அல்பிரைட்டின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்புதல்,பொறியியல் சேதமதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் ,கதிரியக்க மாதிரிகளை ஆய்வு செய்தல் ஆகியவை இடம்பெறலாம் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றாக சேதப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஐநாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் மூலம் ரபேல் க்ரோஸி ஈரானின் அணுசக்தி திட்டம் பல தசாப்தகால பின்னடைவை சந்தித்துள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218853
  3. போர் விமானத்தை இழந்தோம்’ - கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்! 30 JUN, 2025 | 02:03 PM 'சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க வேண்டுமென்ற கட்டளை காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் உரையாற்றினார். அப்போது தான் இதை சொல்லியதாக தகவல். இந்த வீடியோ நேற்று (ஜூன் 29) கவனம் பெற்றது. இந்நிலையில், அண்டை நாடுகளை போல் இல்லாமல் இந்திய பாதுகாப்பு படை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் சேவை புரிவதாக மட்டுமே அவர் தெரிவித்ததாக இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் போர் விமான இழப்பு தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரியின் பேச்சை சுட்டிக்காட்டி ஆளும் அரசு தேசத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. “கருத்தரங்கில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்த கருத்துக்கு மாறாக அது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஊடக செய்திகள் அதை தவறாக சுட்டிக்காட்டி உள்ளன. மற்ற அண்டை நாடுகளை போல் அல்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் தலைமையின் கீழ் பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தாக்கி அழிப்பதுதான்” என இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என்ற கட்டளையின் காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டியதானது என அந்த பாதுகாப்புப் படை அதிகாரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தாக்குதல் உத்தியை மாற்றி அங்குள்ள ராணுவ நிலைகளையும் குறிவைத்தோம். அதன் பின்னர் தான் தரையிலிருந்து வானத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தினோம் என அவர் விவரித்தார். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் “இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர்: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதலில் தீவிரவாத கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. அதோடு பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/218836
  4. Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 12:45 PM உலகின் வறண்ட பாலைவனங்களில் ஒன்றாக திகழும் வடக்கு சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் வியாழக்கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. "நம்பமுடியாத நிகழ்வு! உலகின் மிகவும் வறண்ட அட்டகாமா பாலைவனம் பனியால் சூழப்பட்டுள்ளது," என கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம், X தளத்தில் வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனி படர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த பனிப்பொழிவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் "இந்த வகையான நிகழ்வு, அட்டகாமா பாலைவனத்தில் மழைப்பொழிவு அடிக்கடி நிகழும்" எனபதை காலநிலை மாதிரியாக்கம் காட்டுகிறது என சாண்டியாகோ பல்கலைக்கழக காலநிலை ஆய்வாளர் ரவுல் கோர்டெரோ ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளார். உலகின் இருண்ட வானங்களுக்கு தாயகமான அட்டகாமா, பல தசாப்தங்களாக உலகின் மிகவும் மேம்பட்ட தொலைநோக்கிகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. ஐரோப்பிய தெற்கு ஆய்வகம், அமெரிக்க தேசிய வானொலி வானியல் ஆய்வகம் மற்றும் ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிற ALMA தொலைநோக்கி, மிகவும் சக்திவாய்ந்ததாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அட்டகாமா பாலைவனம், அதன் வறண்ட நிலப்பரப்பு, உப்பு ஏரிகள், மற்றும் எரிமலைப் படிமங்களுக்காகப் புகழ்பெற்றது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூட, செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலப்பரப்புக்கு ஒப்பான பகுதியாக அட்டகாமா பாலைவனத்தைக் கருதுகிறது. இவ்வளவு வறண்ட ஒரு பகுதியில் பனிப்பொழிவு நிகழ்ந்திருப்பது, காலநிலை மாற்றத்தின் மற்றொரு வினோதமான விளைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட அசாதாரண வானிலை மாற்றங்களே இந்த பனிப்பொழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், வறண்ட பாலைவனப் பகுதிக்குள் ஈரப்பதமான காற்றைக் கொண்டு வந்ததாலேயே இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அட்டகாமா பாலைவனம் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளத்தில் தென் அமெரிக்காவின் மேற்கில், பசிபிக் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ளது. இதனை உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று, நாசா மற்றும் தேசிய புவியியல் கழகம் ஆகிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பாலைநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,05,000 சதுர கி.மீ (41,000 சதுர மைல்) ஆகும். இந்த இடம் சராசரியாக ஆண்டுக்கு ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைக்கு பெறுகிறது. https://www.virakesari.lk/article/218826
  5. Published By: VISHNU 30 JUN, 2025 | 07:22 PM 'இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது, அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, 124 இற்கு மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 'இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம். எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும் என்றார். https://www.virakesari.lk/article/218882
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புக்காட்சி கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் வயிற்றில் இருந்த சிசுவை குடும்பத்தினர் வற்புறுத்தி கலைக்க வைத்ததால் தனது மகளுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீ யும் கடந்த ஜீன் 24-ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். '' என் மகளை விக்னேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இந்த நிலையில் தான் எனது மகள் இரண்டாவதாக கருவுற்றார். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நான் போன் செய்த போது திருப்பதியில் இருக்கின்றோம் என்று என் மகள் கூறினார். நான் திருப்பதி கோவிலுக்கு சாமிகும்பிட சென்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு இல்லை நாங்கள் ஸ்கேன் செய்ய வந்துள்ளோம் என்று கூறினார் எனது மகளை கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர். எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று தான் நினைத்தோம். நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் உடனே வர முடியவில்லை'' என்கிறார் உமா தேவிவின் தந்தை ஏழுமலை. தனது மகள் அழுது கொண்டே இறப்பதற்கு முன் தினம் பேசினார் என்கிறார் ஏழுமலை '' நான் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் வந்து விடுகிறேன் என்று ஆறுதல் கூறினேன். ஆனால் அடுத்த நாளே எங்களுக்கு போன் வந்தது முதலில் எனது பேத்தி மோகனா ஸ்ரீ கிணற்றில் விழுந்துவிட்டதாக கூறினார்கள் உடனடியாக சில நிமிடங்களிலேயே உங்களது மகளும் கிணற்றில் விழுந்து விட்டார் இருவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் வந்தது.'' என்கிறார் அவர். ''எனது மகள் கருவுற்று இரண்டு மாதம் ஆனவுடன் நாங்கள் அரசு செவிலியரிடம் காண்பித்து பதிவு செய்யுங்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று செக்கப் செய்து வாருங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை பதிவு செய்யவே இல்லை என்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிகின்றது. எனது மகள் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவ்வப்போது திட்டியும், வரதட்சணை கேட்டும் அடித்துள்ளனர்.'' என்கிறார் ஏழுமலை. படக்குறிப்பு, இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்ட கிணறு திருப்பதி ஸ்கேன் சென்டரில் சோதனை இறந்த உமாதேவியின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதாக கூறுகிறார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ''விக்னேஷ் -உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று நினைத்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யது கருவில் இருப்பது பெண் சிசு என்பதை அறிந்துள்ளனர். இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தியுள்ளனர் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது'' என்கிறார் அவர். இந்தநிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னஷ், ஜெயவேல் சிவகாமி (43) மற்றும் கருவை கலைக்க உதவியதாக அதே ஊரை சேர்ந்த சாரதி (திருப்பதி ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்தவர்) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறது காவல்துறை. '' தமிழ்நாட்டில் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்கள் தற்பொழுது தகவல் தருவதில்லை இதனால், இவர்கள் அண்டை மாநிலத்துக்கு சென்று இடைத்தரகர் மூலமாக ஸ்கேன் செய்துள்ளனர். கரு கலைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமாதேவி தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமி. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் உள்ள சட்டவிரோத ஸ்கேனிங் மையத்தை விசாரிக்க சிறப்பு குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். திருவண்ணாமலையில் கடந்த 2023- 24 ஆம் ஆண்டில் 14233 ஆண் குழந்தைகளும் 12946 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1287 குறைவாகும் என்றார் சுகாதார துறை மாவட்ட அதிகாரி பிரகாஷ் ''திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற விவசாயம் சார்புடைய தொழிலை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், கல்வியறிவு குறைவாக இருக்கிறது. இங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை'' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் லலித்குமார். கடந்த வருடம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழக அளவில் 28 வது இடத்தை பெற்றுள்ளது இதன் தேர்ச்சி விகிதம் 93.10 ஆகும். நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyllzw0q0yo
  7. ஷிரந்தி கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு மஹிந்த எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை – மல்வத்து பீடம் அறிக்கை Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 04:45 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டி மல்வத்து மகா விகாரை மறுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகா விகாரையிடம் அத்தகைய கோரிக்கையை விடுத்ததாகக் வெளியாகிய செய்திகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மல்வத்து பீடம் இதனைத் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று மல்வத்து பீடம் குறிப்பிட்டுள்ளது. பரப்பப்படும் செய்திகளில் கூறப்பட்டுள்ளதைப் போன்று அத்தகைய சந்திப்பு அல்லது தொலைபேசி உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது. பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்துவத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/218859
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பூஜித், ஹேமசிறி மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு Published By: DIGITAL DESK 3 30 JUN, 2025 | 04:36 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் தடுக்கத் தவறியதன் ஊடாக கடமையைச் செய்யத் தவறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு மேல் நீதிமன்றின் ட்ரயல் அட் பார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (30) நீதிபதிகள் நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன் டி சில்வா, மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆதித்யா படபெண்டிகே ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமையினால் தலைமை நீதிபதியால் மாற்றீட்டாளர் நியமிக்கப்படும் வரை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் புதிய நீதிபதி ஒருவர் பதவி வகிப்பார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, வழக்கு விசாரணைக்கு புதிய திகதியை நிர்ணயிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தைக் கோரினார். பின்னர், வழக்கை ஜூலை 28 ஆம் திகதிக்கு நீதி மன்றம் ஒத்திவைத்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்ல் நீதிமன்ற அமர்வு, ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், சாட்சிகளை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கான மேல் நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு மீதான பரிசீலனையின் பின்னர், இறுதி தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பு உயர் நீதிமன்றம் சாட்சிகளை அழைத்து புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. https://www.virakesari.lk/article/218854
  9. "மழை போல விழும் குண்டுகள்" - வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறுகின்றனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இந்த வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜபாலியாவில் (Jabalia) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும், குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து வெளியேறும் போதும் தாக்குதல் தொடர்ந்ததாகத் தெரிவித்தனர். அதே சமயம், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்ததாக ராயிட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. இதற்கிடையே காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. தற்போது வரை காஸாவில் 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yppe3p2w4o
  10. 30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் IND-TN-10-MM-773பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள் படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும் நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218838
  11. இசைப்பிரியா பாலசந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என கோரும் முறைப்பாடு - அதிகாரிகள் உடனடியாக செயற்படவேண்டும் என சட்டத்தரணி வேண்டுகோள் 30 JUN, 2025 | 01:23 PM இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தனது முறைப்பாடு தற்போது பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன். எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன்.என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218832
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 29 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் "போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்." 'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது. அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார். வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார். வாஸ்கோடகாமா, 1497ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து அந்நாட்டு மன்னரின் ஆதரவுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். பல மாதங்கள் நீடித்த கடல் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியர் எனும் பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு 'ஹீரோவாக' கொண்டாடப்படுகிறார். நமது பாடப் புத்தகங்களில்கூட, வாஸ்கோடகாமாவின் வணிக நோக்கிலான இந்திய பயணங்கள் குறித்தும், அவரது வர்த்தக/மாலுமி முகம் குறித்துமே அதிகம் உள்ளது. இந்தியாவை அடைய வேண்டுமென்ற ஐரோப்பாவின் கனவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கோழிக்கோடு சமோரின் (ராஜா) சந்திப்பை சித்தரிக்கும் ஓவியம் "இந்தியாவோடு நேரடி ஐரோப்பிய தொடர்பைத் தொடங்கும் அதிர்ஷ்டம் பெற்ற இந்த வாஸ்கோடகாமா, வலிமையான உடலமைப்பும், முரட்டுத்தனமான மனப்பான்மையும் கொண்டவர். கல்வியறிவு இல்லாதவர், கொடூரமானவர், வன்முறையாளர் என்றாலும், அவர் விசுவாசமானவர், அச்சமற்றவர். இந்திய பயணத்திற்கு தலைமை தாங்க, அவருக்கு உத்தரவிடப்பட்டது. இத்தகைய பணியை ஒரு மென்மையான தலைவரால் நிறைவேற்ற முடியாது." இவ்வாறு வாஸ்கோடகாமா குறித்து தனது 'தி கிரேட் டிஸ்கவரீஸ்' எனும் நூலில் குறிப்பிடுகிறார் அமெரிக்க வரலாற்று ஆசிரியரான சார்லஸ் இ. நோவெல். ஜனவரி 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். இந்தியாவை முதலில் அடைவது யார் என்ற போட்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்று வந்தது. சிறிய நாடான போர்ச்சுகலும் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்று வந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே இந்தியாவை அடைந்த அரேபியர்களும், பாரசீகர்களும் இங்கு தங்களது வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குறிப்பாக தென்னிந்திய பகுதியான மலபாரில் (கேரளா) இஸ்லாமிய வணிகர்களிடம் இருந்தே ஐரோப்பாவுக்கு மசாலா பொருட்கள் கிடைத்தன. "போர்த்துகீசியர்களின் வருகைக்கு முன்பு, குஜராத், மலபார் மற்றும் செங்கடலில் உள்ள துறைமுகங்கள் உள்பட இந்திய பெருங்கடல் வர்த்தகத்தில் இஸ்லாமிய கடல் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்" என்று 'தி முகல் எம்பயர்' நூலில் ஜான் எஃப். ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். "1492இல் கொலம்பஸ் அமெரிக்காவில் கால்பதித்தார். தான் மரணிக்கும் நாள் வரை, தான் கண்டுபிடித்தது ஆசியாவின் ஒரு பகுதியைத்தான் என்றும், அதற்கு அருகில்தான் இந்தியா உள்ளது என்றும் உறுதியாக நம்பினார். அதனால் அவர் கால் பதித்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'இந்தியர்கள்' என்று அழைத்தார்" என ஜார்ஜ் எம். டோலி தனது 'தி வாயேஜஸ் அண்ட் அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வாஸ்கோடகாமா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு, 'இந்தியாவை' அடைவதில் ஐரோப்பியர்கள் முனைப்பாக இருந்தனர். அதற்குக் காரணம், இந்தியா குறித்து ஐரோப்பாவில் பரவியிருந்த பிம்பம். தங்கம், வைரம், ரத்தினங்கள், மிளகு போன்ற விலை உயர்ந்த மசாலா பொருட்கள் மற்றும் பலதரப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த ஓர் இடமாக ஆசியாவும், குறிப்பாக இந்தியாவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1497இல், போர்ச்சுகல் மன்னர் முதலாம் டி. மானுவல், 'போர்த்துகீசியர்கள் இந்தியாவை அடைய வேண்டும் என்ற கனவை' நிறைவேற்றும் பொறுப்பை வாஸ்கோடகாமாவிடம் ஒப்படைத்தார். வில்லியம் லோகன் எழுதிய 'மலபார் மேனுவல்' நூலில், "1497இல் புறப்பட்ட வாஸ்கோடகாமாவின் கடற்படையில் சாவ் ரஃபேல், சாவ் கேப்ரியல், சாவ் மிகுவல் எனப்படும் மூன்று கப்பல்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலிலும், அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்தபோது அவர் மிகச் சிறிய படையுடனே வந்தார். எத்தனை பேர் என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் வரலாற்றுப் புத்தகங்களில் காணப்பட்டாலும், ஒன்று மட்டும் உறுதியாகிறது- அவரது கப்பலில் குற்றவாளிகளும் இருந்தார்கள். 'எம் நோம் டி டியூஸ்: தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா 1497–1499' என்ற நூல், வாஸ்கோவின் கடற்படையில் நாடு கடத்தப்பட்ட பத்து குற்றவாளிகளும் இருந்தனர் எனக் கூறுகிறது. அவர்களது பாவங்கள் போர்ச்சுகல் மன்னரால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பயணத்திற்கு உதவியாக இருக்கட்டும் என அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இதற்கு மற்றொரு காரணத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதாவது, "ஆபத்தான கடற்பயணம் எனும்போது, போர்ச்சுகல் சிறைகளில் தண்டனை பெற்று வீணாக மடிவதைவிட, வாஸ்கோவுக்கு உதவியாக இருந்து கடற்பயணத்தில் உயிரிழப்பது சிறந்தது என மன்னர் கருதியிருக்கலாம்." இந்தக் குற்றவாளிகளில் முக்கியமானவர், ஜோ அவோ நுனெஸ் எனும் ஒரு 'புதிய கிறிஸ்தவர்', அதாவது சமீபத்தில் மதம் மாறிய யூதர். அவர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை ஓரளவு அறிந்திருந்தார். 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' நூலின்படி, "ஜோ அவோ நுனெஸ்- புத்திக்கூர்மை உடைய மனிதர், அவரால் மூர்கள் (இஸ்லாமியர்களை குறிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்) பேசிய மொழியைப் புரிந்து கொள்ள முடியும்." இந்தியாவில் முதலில் கால் வைத்த ஐரோப்பியர் ஒரு குற்றவாளியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் பயணங்களை விளக்கும் வரைபடம். புள்ளியிடப்பட்ட கோடு 1497இல் இந்தியாவுக்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது. வாஸ்கோவின் படை மே 20, 1498, கேரளாவை அடைந்தபோது, கரையில் இருந்து சிறிது தூரத்தில், கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. வாஸ்கோடகாமாவின் குழு, இந்தியாவில் முதன்முதலாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காப்பாடு எனும் கிராமத்தைத்தான் அடைந்தது என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், உண்மையில் அவர் முதலில் சென்றது கொல்லம் மாவட்டத்திற்கு அருகே இருந்த பந்தலாயணி பகுதிக்குத்தான் என சமீபத்தில் மறைந்த இந்திய வரலாற்று ஆசிரியரும், கல்வியாளருமான எம்.ஜி.எஸ். நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். மலபார் கரையில் இருந்து நான்கு சிறு படகுகள், வாஸ்கோவின் கப்பல்களை அடைந்து, அதில் இருந்தவர்கள் குறித்து விசாரித்தனர். குறிப்பாக, "வாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் முதலில் இந்தியாவில் கால் வைத்த ஒரு ஐரோப்பியர் வாஸ்கோ அல்ல, அது ஒரு 'குற்றவாளியாக' இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், "கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்திய பிறகு, அரபு மற்றும் ஹீப்ரு மொழி பேசக்கூடிய ஒருவரை, மலபார் படகுகளுடன் கரைக்கு வாஸ்கோ அனுப்பி வைத்தார்" என 'வாஸ்கோடகாமா அண்ட் தி ஸீ ரூட் டூ இந்தியா' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், மலபார் கரையை அடைந்த முதல் ஐரோப்பியர் அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளை அறிந்த, 'புதிய கிறிஸ்தவரான' ஜோ அவோ நுனெஸாக இருக்கலாம். ஆனால், இதை உறுதி செய்யப் போதுமான ஆவணங்கள் இல்லை. ஏமாற்றத்தில் முடிந்த முதல் இந்திய பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் சாவ் கேப்ரியல் கப்பல் (சித்தரிப்பு ஓவியம்) அவ்வாறு கேரளாவில் கால் பதித்த அந்த மொழிபெயர்ப்பாளர், உள்ளூரில் வசித்த இரு அரேபியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் வாஸ்கோவின் மொழிபெயர்ப்பாளரை எதிரியாகவே பார்த்தார்கள். "சாத்தான் உன்னைக் கொண்டு போகட்டும்" எனக் கத்தினார்கள். பிறகு, "ஏன் இங்கு வந்தீர்கள்?" எனக் கேட்ட போது, அதற்கு வாஸ்கோவின் ஆள், "நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலா பொருட்களையும் தேடி வந்தோம்" என்ற பதில் கூறியுள்ளார். இப்படித்தான், இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியருக்கும், ஏற்கெனவே இங்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அரேபியர்களுக்கும் இடையிலான உரையாடல் இருந்தது எனப் பல வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு வாஸ்கோடகாமா, சில நபர்களை மட்டும் அழைத்துக் கொண்டு, பிறரை கப்பல்களிலேயே எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்திவிட்டு, மலபார் கரையில் கால் பதித்தார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், வாஸ்கோவின் முதல் இந்திய பயணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவர் சமோரினுக்காக (கோழிக்கோட்டின் இந்து மன்னரைக் குறிக்க போர்த்துகீசியர்கள் பயன்படுத்திய சொல்) கொண்டு சென்ற பரிசுகள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டன. மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரபு முஸ்லிம்கள், போர்த்துகீசியர்களின் வருகையை எதிர்த்தனர். "மிளகு வர்த்தகத்தில் போர்த்துகீசியர்கள் ஏகபோக உரிமையை நாடியபோது, அது இஸ்லாமியர்களால் கையாளப்பட்டதால் சமோரின் அதை மறுத்தார். பின்னர் போர்த்துகீசியர்கள் கொச்சி ராஜ்ஜியத்தை அணுகி, வணிகம் செய்ய அங்கு கடை அமைத்தனர். பின்னர், விஜயநகர பேரரசுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் கோவாவுக்கு மாறினர்" என்று வரலாற்று ஆசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். கடந்த 1499ஆம் ஆண்டில், சிறு அளவிலான மசாலா பொருட்களுடன் ஐரோப்பா திரும்பிய வாஸ்கோடகாமாவுக்கு, போர்ச்சுகல் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. "முதல் இந்திய பயணத்திற்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கடற்படையால் கொண்டு வரப்பட்ட மசாலா பொருட்கள் மிகப்பெரிய லாபத்திற்கு விற்கப்பட்டன, இது பயணத்தின் செலவைவிடப் பல மடங்கு அதிக லாபம்" எனத் தனது 'ஆசியா அண்ட் வெஸ்டர்ன் டாமினன்ஸ்' எனும் நூலில் கே.எம். பணிக்கர் எழுதியுள்ளார். இந்தியாவின் வளத்தை போர்த்துகீசியர்கள் புரிந்துகொண்ட தருணம் அது. வாஸ்கோவின் இரண்டாவது பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமாவின் கப்பலில் கோழிக்கோடு வணிகர்கள் சிறை பிடிக்கப்படுவதைச் சித்தரிக்கும் ஓவியம் இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் முதல் பயணம் (1497–1499) ஐரோப்பா, இந்தியா இடையிலான கடல் வழிப்பாதையை அறிமுகப்படுத்தியது. ஆனால் கேரளாவின் கோழிக்கோடு அரசுடன் ஒரு வலுவான வணிக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது. இந்திய பெருங்கடலில் மசாலா வர்த்தகத்தில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திய அரபு இஸ்லாமிய வணிகர்களால் போர்த்துகீசியர்கள் அவமதிக்கப்பட்டனர் மற்றும் புறக்கணிக்கப்பட்டனர். "வாஸ்கோவின் பார்வையில், கோழிக்கோட்டில் உள்ள முஸ்லிம் வணிகர்கள் வெறும் பொருளாதாரப் போட்டியாளர்கள் மட்டுமல்ல, மத மற்றும் கலாசார எதிரிகளும்கூட. சமோரின் அரசவையில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, போர்த்துகீசிய லட்சியங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது" என 'தி கரியர் அண்ட் லெஜெண்ட் ஆஃப் வாஸ்கோடகாமா' எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, போர்த்துகீசிய அரசு இரண்டாவது இந்திய பயணத்தை ஏற்பாடு செய்தது. இந்த முறை நோக்கம் தெளிவாக இருந்தது. அது. "இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, முந்தைய பின்னடைவுகளுக்குப் பழிவாங்குவது மற்றும் மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெறுவது." இருபது போர்க் கப்பல்கள் மற்றும் சுமார் 1,500 பேர் கொண்ட ஒரு கடற்படையுடன் பிப்ரவரி 1502இல் வாஸ்கோடகாமா லிஸ்பனை விட்டுப் புறப்பட்டார். அந்தக் கடற்படை, பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தது, போருக்குத் தயாராகவும் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'மெக்கா கப்பல்களை' வாஸ்கோவின் கடற்படையினர் தாக்குவதைச் சித்தரிக்கும் ஓவியம். அதே ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, கேரளாவின் கண்ணூர் கடற்பகுதியை வாஸ்கோவின் படை அடைந்தது. அதன் பிறகு நடந்தவற்றை வாஸ்கோவின் கடற்படையில் இருந்த ஒருவர், 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' எனும் நூலில் பின்வருமாறு விவரித்துள்ளார். "அங்கே நாங்கள் மெக்காவின் கப்பல்களைப் பார்த்தோம். அவை நம் நாட்டிற்கு (போர்ச்சுகல்) வரும் மசாலா பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள். இனி போர்ச்சுகல் மன்னர் மட்டுமே நேரடியாக இந்தியாவில் இருந்து மசாலா பொருட்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் அந்தக் கப்பல்களைக் கொள்ளையடித்தோம்." "அதன் பிறகு, 380 ஆண்கள், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணித்த ஒரு மெக்கா கப்பலை நாங்கள் சிறைபிடித்தோம். அதிலிருந்து குறைந்தது 12,000 டுகட்கள் (டுகட்- தங்க நாணயம்) மற்றும் விலை உயர்ந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்தோம். அக்டோபர் முதல் நாளில் கப்பலையும் அதில் இருந்த அனைவரையும் எரித்தோம்." இங்கு குறிப்பிடப்படும் 'மெக்கா கப்பல்' என்பது 'மெரி' (Meri) என்ற ஒரு பெரிய கப்பல். இது கோழிக்கோடு பகுதியில் வசித்த கோஜா காசிம் எனும் செல்வந்தரின் சகோதரருக்கு சொந்தமான கப்பல் என வரலாற்று ஆசிரியர் கே.எம். பணிக்கர் குறிப்பிடுகிறார். வாஸ்கோவின் படையிடம் சிக்கியபோது, 'ஹஜ் புனித யாத்திரைக்காக' பயணித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் மெரி கப்பலில் நிரம்பியிருந்தனர். அத்துடன் வர்த்தகத்திற்கான மதிப்புமிக்க பொருட்களும் கப்பலில் இருந்தன. "வாஸ்கோ கப்பலை எரிக்க உத்தரவிட்டார். பெண்கள் தங்கள் குழந்தைகளை புகையின் நடுவே தூக்கிப் பிடித்து, கருணைக்காக மன்றாடினர். போர்த்துகீசியர்கள் தங்கள் கப்பல்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் வலியால் அழுதுகொண்டே இறந்தனர்." "ஒருவர்கூட தப்பிக்கவில்லை. இறக்கும் தருவாயில் இருந்தவர்களின் அழுகை கடல் முழுவதும் எதிரொலித்தது. அப்போது வாஸ்கோ அசையாமல் நின்றிருந்தார்" என லெண்டாஸ் டி இந்தியா (Lendas da Índia) எனும் நூலில் காஸ்பர் கோஹியா குறிப்பிடுகிறார். வாஸ்கோடகாமா தலைமையிலான படை செய்த இந்தச் சம்பவம் சில போர்த்துகீசிய சம காலத்தவர்களைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வாஸ்கோடகாமா கேரள வரலாற்றில் ஒரு வில்லனாக நினைவுகூறப்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகவும் இந்தச் சம்பவம் மாறியது. 'பிரித்தாளும் சூழ்ச்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஸ்கோடகாமா- கண்ணூர் ராஜா சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம் அப்போது கேரளா பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்ததும், போர்த்துகீசியர்களின் ஆதிக்கம் ஓங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. உதாரணத்திற்கு, மெரி கப்பல் சம்பவத்திற்குப் பிறகு, வாஸ்கோவின் படையினர் கண்ணூர் ராஜாவால் வரவேற்கப்பட்டனர் என 'தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா' குறிப்பிடுகிறது. "அக்டோபர் 20ஆம் தேதி நாங்கள் கண்ணூர் நாட்டிற்குச் சென்றோம். அங்கு அனைத்து வகையான மசாலா பொருட்களையும் வாங்கினோம். ராஜா மிகவும் ஆடம்பரமாக வந்தார், அவருடன் இரண்டு யானைகளையும், பல விசித்திரமான விலங்குகளையும் கொண்டு வந்தார்." அதைத் தொடர்ந்து, கோழிக்கோடு சென்ற வாஸ்கோவின் படையினர், அதன் ராஜா சமோரினிடம், நகரத்தில் இருந்து அனைத்து முஸ்லிம் வணிகர்களையும் வெளியேற்றி, போர்த்துகீசிய வர்த்தக ஏகபோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரினர். ஆனால் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த சமோரின் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனால் கோழிக்கோடு நகரத்தை வாஸ்கோ தாக்கினார். "நாங்கள் எங்கள் படைகளை நகரத்திற்கு முன்பாகத் திரட்டி, அவர்களுடன் மூன்று நாட்கள் சண்டையிட்டோம். ஏராளமான மக்களைப் பிடித்து, அவர்களைக் கப்பல்களின் முற்றங்களில் தொங்கவிட்டோம். அவர்களை வீழ்த்தி, அவர்களின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை வெட்டினோம்." (தி ஜர்னல் ஆஃப் தி ஃபர்ஸ்ட் வாயேஜ் ஆஃப் வாஸ்கோடகாமா டூ இந்தியா) இப்படிச் சிறிது சிறிதாக வன்முறை நடவடிக்கைகள் மூலமும், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற முறையில் பிற கேரள ராஜாக்களுடன் இணைந்தும் தங்களது ஆதிக்கத்தை போர்த்துகீசியர்கள் கேரளாவில் வலுவாக்கினர். "இது பிராந்திய போட்டிகளைப் பயன்படுத்தி போர்ச்சுகலின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி" என 'தி போர்ச்சுகீஸ் ஸீபார்ன் எம்பயர்' நூலில் குறிப்பிடுகிறார் சார்லஸ் ஆர். பாக்ஸர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1524ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா, இந்தியாவின் போர்த்துகீசிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். கேரளாவில் 1998ஆம் ஆண்டு, அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வாஸ்கோடகாமா மலபார் பகுதிக்கு வந்து, 500 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது 'சர்வதேச சுற்றுலா நிகழ்வாக' கொண்டாடப்படும் என அறிவித்தது. இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. 'வாஸ்கோவின் பயணமும் செயல்களும் இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கத்திற்கு வழிவகுத்தன. எனவே அதைக் கொண்டாடுவது சரியான செயல் அல்ல' என்று விமர்சிக்கப்பட்டது. ஐரோப்பாவின் காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு வாஸ்கோடகாமா ஒரு கருவியாகச் செயல்பட்டார் எனக் கூறலாம். போர்த்துகீசிய முடியாட்சியின் ஆசியோடு இந்தியா வந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்ற வாஸ்கோடகாமா, 1524ஆம் ஆண்டு மூன்றாவது முறை கேரளாவுக்கு வந்தபோது 'போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைஸ்ராய்' என்ற பதவியுடன் வந்தார். கொச்சியை வந்தடைந்த அவர், பின்னர் நோய்வாய்ப்பட்டு 1524 டிசம்பர் 24 அன்று இறந்தார். பிறகு 1539ஆம் ஆண்டில், அவரது உடல் எச்சங்கள் போர்ச்சுகலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24083d4wlo
  13. 30 JUN, 2025 | 12:49 PM கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (29) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா, க,இளங்குமரன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ். மாவட்ட செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேவேளை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள காணிகள், ஆலயங்கள், பாடசாலை காணி தொடர்பிலும் அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். https://www.virakesari.lk/article/218827
  14. பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES கட்டுரை தகவல் தனாய் நெஸ்தா குபேம்பா பிபிசி செய்திகள் 30 ஜூன் 2025, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாங்கள் கோடீஸ்வரர்களாக மாறியதாக எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்றிருப்பதாக அந்நாட்டு அரசால் நடத்தப்படும் சூதாட்ட நிறுவனம் அனுப்பிய தகவலே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஏனென்றால் அந்த தகவல் தவறுதலாக மக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது பின்னர் தெரியவந்தது. யூரோஜாக்பாட்டில் "ஆயிரக்கணக்கான மக்கள்" பல கோடி ரூபாய் வென்றிருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு மாறாக, அதிகபட்ச தொகையை வென்றிருப்பதாக வெள்ளிக்கிழமை தவறான தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது," என்று நார்ஸ்க் டிப்பிங் என்ற அந்த நிறுவனம் தெரிவித்தது. தவறான தகவல் அனுப்பப்பட்டதால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை அந்த நிறுவனம் பிபிசிக்கு அளிக்க மறுத்துவிட்டது. நார்ஸ்க் டிப்பிங் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த சக்ஸ்டுயென் மன்னிப்பு கேட்டதோடு, ஒரு நாள் கழித்து தன்னுடைய பதவியையும் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய நாணயமான யூரோவை நார்வீஜியன் க்ரோனெர் பணமாக மாற்றுகையில் தவறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், அவர்கள் வென்ற பணத்தைக் காட்டிலும் கூடுதலாக பணத்தை வென்றதாக குறிப்பிட்டிருக்கிறது. அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக, நூறால் பெருக்கி வரும் தொகையை வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து யூரோ பணமாக வாங்கி, அதனை நார்வீஜியன் க்ரோனெராக மாற்றி பரிசு வென்றவர்களுக்கு அளிப்பது நார்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தின் வழக்கம். பரிசுத்தொகையை குறிப்பிடுவதில் ஏற்பட்ட தவறு சனிக்கிழமை மாலை திருத்தப்பட்டுள்ளது. தவறாக யாருக்கும் பணம் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் உறுதி செய்தது. "இந்த அறிவிப்பால் பலர் ஏமாற்றம் அடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பலரும் எங்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர் என்பதும் எனக்கு புரிகிறது," என்று கூறி சக்ஸ்டுயென் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏமாற்றமடைந்த மக்கள் முன்வைத்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் சிலர் இந்த தகவல் கிடைத்தவுடன் சுற்றுலா செல்ல இருப்பதாகவும், தங்களின் வீடுகளை புனரமைக்கப் போவதாகவும், சொந்தமாக வீடு வாங்கப் போவதாகவும் அவரிடம் கூறியதாக குறிப்பிட்டார். "அவர்களிடம் மன்னித்துவிடுங்கள் என்பதைத் தவிர வேறெதுவும் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் இது சிறிய ஆறுதல் என்று எனக்கு தெரியும்," என்றும் அவர் கூறினார். பெண் ஒருவர், நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனுக்கு (NRK) அளித்த பேட்டியில், அவருக்கு 1.2 மில்லியன் க்ரோனெர் (இந்திய மதிப்பில் 10,180,685.60 ரூபாய்) பணத்தை வென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மையில் சிறு தொகையை மட்டுமே அவர் பரிசாக வென்றிருப்பதாக அவர் கூறினார். நோர்ஸ்க் டிப்பிங் நிர்வாகக் குழுவினர் அதனை நிர்வகிக்கும் கலாசாரத் துறை அதிகாரிகளை சனிக்கிழமை சந்தித்தனர். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சக்ஸ்டுயென் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 2014-ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "சில இடங்களில் கோட்டை விட்டு விட்டோம். இது என் பொறுப்பு," என்று அவர் அறிவித்துள்ளார். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது வருத்தம்தான் என்றாலும் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். கலாசாரம் மற்றும் சமத்துவத் துறை அமைச்சர் லுப்னா ஜாஃப்ரே நார்வீஜியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனிடம் பேசும் போது, "இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது. அதுவும், நோர்ஸ்க் டிப்பிங் நிறுவனத்தில் கூடவே கூடாது. ஏனென்றால் இந்த நாட்டில் அந்த நிறுவனம் பிரத்யேகமாக இந்த சேவையை வழங்கி வருகிறது," என்று குறிப்பிட்டார். "கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்த நிர்வாகக் குழு தீவிரமாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனம் விமர்சனத்திற்கு உள்ளாவது இது ஒன்றும் முதல்முறையல்ல. "கடந்த சில மாதங்களில் சில தீவிரமான பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது," என்று கூறும் அந்த நிறுவனம், கடந்த ஆண்டும் பல தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டதாக குறிப்பிடுகிறது. ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நுகர்வோரால் தீவிரமாக விமர்சிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20pxrlq121o
  15. 30 JUN, 2025 | 11:51 AM யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது: இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால், இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு' போராட்டம் அறிவிக்கப்பட, உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந்தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள். வெளிநாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதைகுழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமாக இது அணுகப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் இந்த விடயங்களை மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/218815 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தானே ஐயா?
  16. தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 30 JUN, 2025 | 10:41 AM தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218810
  17. 30 JUN, 2025 | 09:52 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/218807
  18. உலக சமூக ஊடக தினம் இன்று Published By: DIGITAL DESK 4 30 JUN, 2025 | 10:40 AM மக்களின் வாழ்க்கையில் பின்னிபிணைந்துள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று ஜூன் 30 ஆம் திகதி அனுஷ்க்கப்பட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தை சமூக ஊடகம் வகிக்கின்றது. அந்தவகையில், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதற்கு, செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு மற்றும் தகவல்களை அறிந்தவர்களாக இருப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக சமூக ஊடகம் மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளன. புதிய ஊடகப் போக்குகள் மூலம் சமூகக் குழுக்களின் இன்றியமையாத பகுதியாக, சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. தகவல் மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதோடு, பொதுக் கருத்தை வெளிப்படுத்துவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களின் பயணம் 2002 இல் ஃப்ரெண்ட்ஸ்டர் மற்றும் 2003 இல் மைஸ்பேஸ் போன்ற தளங்களுடன் ஆரம்பமானது. அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக், விரைவில் தொழில்துறையில் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியது. டுவிட்டர் (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) பயனர்கள் தங்கள் சிந்தனைகளை 140 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தது. இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் நம்மை காட்சி ரீதியாக வெளிப்படுத்துவதை எளிதாக்கின, அதே நேரத்தில் யூடியூப் மற்றும் டிக்டொக் வீடியோ பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தி கலாசார முக்கிய தளங்களாக மாறிவிட்டன. சமூக ஊடகங்கள் தற்போது உலகளாவிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அது அன்றாட தொடர்புக்கு அவசியமாகிவிட்டது. மக்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், பிளவுகளையும் உருவாக்கக்கூடும், இதனால் மக்கள் அதைப் பொறுப்புடன் கையாள்வது மிகவும் முக்கியம். சமூக ஊடக தினம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊ டகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில், "எந்தவொரு நாட்டிலும், சமூக ஊடகங்களைப் பற்றி பலருக்கு எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் ஊடகங்களை கையாள்வது தொடர்பான தவறான புரிதல்களே காரணம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவது, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் இது ஊடகங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒரு துறை. சமூக ஊடகங்கள் இல்லாமல், இன்றைய சமூகம் இருக்க முடியாது." நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதம் பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சுமார் 1 கோடியே 20 இலட்சம் பேரை குறிக்கின்றது. அண்மையில், 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டொக் பயன்பாடு சுமார் 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய தளங்களுடன் ஒப்பிடுகையில், பயனர் தளத்தின் அடிப்படையில் இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமாகும். விஜயானந்த ரூபசிங்க கூறினார், மேலும் இலங்கை இப்போது டிஜிட்டல் ஊடக எழுத்தறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218805
  19. 30 JUN, 2025 | 11:22 AM தேசியமக்கள்சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது என தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் , தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் தற்போது தனது தோல்விகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக பௌத்தமத தலைவர்களின் உதவியை நாடியுள்ளார் என்ற கதையை பரப்பியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது முன்னாள் ஜனாதிபதி மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது மிகவும் மதிக்கப்படும் மத தலைவர்களை அரசியல் சேற்றில் சிக்கவைக்கும் முயற்சி என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் பொய்யானவை அரசாங்கம் பொலிஸ்திணைக்களத்தை அரசியல் மயப்படுத்த முயல்கின்றது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்காக நீதித்துறையையும் அரசியல் மயப்படுத்துகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நானும் எனது குடும்பத்தவர்களும் அச்சமின்றி தொடர்ச்சியாக அரசியல் நோக்கத்துடனான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218811
  20. படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2025, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? உயிரிழந்த அஜித் குமாருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன? 10 பவுன் நகை திருடு போனதாக புகார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் 'வெள்ளிக்கிழமை மாலை தாயிடம் பேசிய அஜித் குமார்' தகவலறிந்ததும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் அவரது தாயார் மாதவி தெரிவித்தார். திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவல் நிலையம் முற்றுகை, கடையடைப்பு திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தின் முகப்பு அஜித் குமாரின் சகோதரர் கூறியது என்ன? "எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்ற போது அவன் நடந்து தான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்," என்கிறார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் குமார். பிபிசியிடம் பேசிய அவர், "வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்," என்றார். காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், "அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது," என்று கூறினார். மேலும் பேசிய நவீன்குமார், "காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர். அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்." என்று கூறினார். இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார். "நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்," என்றார் நவீன் குமார். மகனை இழந்த வேதனையில் இருக்கும் மாதவி பிபிசி தமிழிடம் பேசிய போது, "இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?" என்று கேள்வி எழுப்பினார். படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தில் அஜித் குமார் தாக்கப்பட்டார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர் நீதிபதி நேரில் ஆய்வு அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர். அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். படக்குறிப்பு, அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என உறுதி அளிக்கும்மாறு அரசியல் கட்சியினர் கோரிக்கை காவல்துறை கூறுவது என்ன? முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் அறிக்கைக்கு பின் அவர்களை கைது செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அஜித் குமார் உடல் தகனம் இதற்கிடையே, உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர். காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார். "ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார். படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகள் கண்டனம் 'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?," என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். "காவல்துறை விசாரணையின் பேரில் ஒருவரை அடித்து தாக்கி படுகொலை செய்து விட்டு, அதற்கான நடவடிக்கையாக வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதும் என்று கருதுவது வெகுஜனங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அஜித்தின் மரணம் போலீசார் தாக்குதலால் நேர்ந்தது வெளிச்சமான நிலையிலும், ஏன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை?," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். "காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்," என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74zqk4ndxvo
  21. Decode | China’s EV Giant BYD | EV உற்பத்தியில் சீனாவை ராஜாவாகிய அந்த தனி ஒருவன் | N18G Decode | China’s EV Giant BYD | EV உற்பத்தியில் சீனாவை ராஜாவாகிய அந்த தனி ஒருவன் | TESLA-வை பின்னுக்கு தள்ளி அசுர வளர்ச்சியில் BYD | Engineer Wan Gang | N18G 🚗⚡ BYD vs Tesla: Who’s Winning the EV Race in 2025? | China’s EV Giant Surpasses Tesla In this eye-opening video, we explore how China’s BYD (Build Your Dreams) has surged ahead of Tesla in the global electric vehicle (EV) market. Once considered a challenger, BYD is now setting the pace with record-breaking sales, rapid innovation, and aggressive global expansion.
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (இடது), இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (வலது) 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு முகமையான ஐஏஇஏ இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி இரானுக்கு வருவதற்கான சாத்தியக்கூற்றை நம்பிக்கையின்மை, பதற்றத்தை காரணம் காட்டி இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதற்காக இரான் அரசு ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அரக்சி தெளிவுபடுத்தினார். மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் இருக்கும் கோபத்தை பார்த்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அதை கண்டித்ததுடன், ஐஏஇஏவின் பணிகளை வெளிப்படையாக ஆதரித்துள்ளார். ஐஏஇஏவுக்கு எதிரான இரானின் கடுமையான நிலைப்பாடு, அதன் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதை மேலும் சிக்கலானதாக மாற்றக்கூடும். பட மூலாதாரம்,MAXAR TECHNOLOGIES/REUTERS படக்குறிப்பு, அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஃபோர்டோ மலை க்ரோஸி வருகைக்கு மறுப்பு தெரிவித்த இரான் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஜூன் 24ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், அப்பாஸ் அரக்சியை சந்தித்து ஐஏஇஏ-இரான் இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி முன்வந்தார். ஆனால்,"இன்றைய சூழலில் ரஃபேல் க்ரோஸியை அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை," என இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசு தொலைக்காட்சி சேனல் ஐஆர்ஐஎன்என்னுக்கு ஜூன் 26ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார். "அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய அவர் விரும்புகிறார்," என அவர் தெரிவித்தார். ஐஏஇஏ தலைவரின் அண்மைக் கால நடவடிக்கைகள், குறிப்பாக இரானுக்கு எதிராக ஐஏஇஏ ஆளுநர்கள் குழு தீர்மானம் நிறைவேற்ற காரணமான அறிக்கை போன்றவையே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முக்கியமான காரணம் என அரக்சி குற்றம்சாட்டினார். "க்ரோஸி தனது அறிக்கையில் நேர்மையாக செயல்படவில்லை. எங்களது அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டபோது, முகமையால் அந்த தாக்குதலை கண்டிக்கக்கூட முடியவில்லை," என்று அரக்சி கூறினார். ஐஏஇஏவுடன் ஒத்துழைப்பை நிறுத்துவதற்கு இரான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாகவும் அரக்சி தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்து, தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டமாகியிருக்கிறது," என அரக்சி கூறுகிறார். இந்தச் சட்டம் ஒத்துழைப்புக்கான கதவை முழுமையாக மூடவில்லை என்றும் எதிர்காலத்தில் இது இரானின் உச்ச பாதுகாப்பு அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவின் அடிப்படையில் அமையும் என அவர் தெளிவுபடுத்தினார். பட மூலாதாரம்,ASKIN KIYAGAN/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ரோஸி அமெரிக்காவின் வலுவான பதிலடி மறுபுறம், ஐஏஇஏ தலைவருக்கு எதிராக இரானில் எழுப்பப்படும் குரல்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. "ஐஏஇஏ இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸியை கைது செய்து மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என இரானில் எழுந்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, கண்டிக்கத்தக்கது. இரானில் ஐஏஇஏவின் முக்கியமான விசாரணைகளையும், கண்காணிப்பு பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஏஇஏவின் கடுமையான உழைப்பையும் தொழில்முறை அணுகுமுறையையும் பாராட்டுகிறோம். ஐஏஇஏ ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யவேண்டும் என இரானை வலியுறுத்துகிறோம்," என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார். இரானின் 2015ஆம் ஆண்டு ஜேசிபிஒஏ அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு அங்கமாக இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளையும் அரக்சி கடுமையாக எச்சரித்தார். இந்த ஒப்பந்தம் தற்போது கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. 'ஸ்நாப்பேக் மெக்கானிசம்' என சொல்லப்படும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டாம் என அவர்களுக்கு கூறினார். "அந்த தூண்டும் நடைமுறையை பயன்படுத்துவது அவர்களின் மிகப்பெரிய வரலாற்றுத் தவறாக இருக்கும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் இரானின் அணுசக்தி விவகாரத்தில் அவர்களின் பங்கை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள் என அவர்களிடம் தெளிவாக கூறினேன்," என அராக்சி தெரிவித்தார். ஸ்நாப்ஃபேக் மெக்கானிசம் என்பது ஒரு விதிமுறையாகும். இதன்படி அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இரான் மீறியதாக கருதப்பட்டால், 2015-க்கு முன்பு இருந்த ஐக்கிய நாடுகளின் கடுமையான தடைகள் தானாகவே மீண்டும் அமலுக்கு வரும். ஐஏஇஏவின் வரலாறு மற்றும் இரானில் அதன் பங்கு சர்வதேச அணுசக்தி முகமை(International Atomic Energy Agency - IAEA) என்பது ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இது உலகளவில் "அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அணுக்கள்" (Atoms for Peace and Development) என்றும் அறியப்படுகிறது. இது அணுசக்தி துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பின் மையமாக விளங்குகிறது, இதன் உறுப்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல கூட்டாளிகளுடன் இணைந்து அணு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக, நம்பகமாக, மற்றும் அமைதியான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. ஐஏஇஏ 1957 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது. இந்தியாவும் அப்போதிலிருந்து இதன் உறுப்பினராக உள்ளது. அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1953 டிசம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய "அமைதிக்கான அணுக்கள்" (Atoms for Peace) உரையில் இந்த அமைப்புக்கான கரு உருவானது. வடகொரியா 1974 இல் இதன் உறுப்பினராக இணைந்தது, ஆனால் 1994-இல் விலகியது. தற்போது ஐஏஇஏ-வில் 180 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இரானின் அணுசக்தி திட்டத்தை ஐஏஇஏ கடந்த இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வருகிறது. 2015 இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பொருளாதார தடைகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக யுரேனியம் செறிவூட்டலை கட்டுப்படுத்தவும், பன்னாட்டு ஆய்வுகளை அதிகரிக்கவும் இரான் ஒப்புக்கொண்டது, ஆனால் 2018-ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி புதிய தடைகளை விதித்த பின்னர், இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை குறைத்துக்கொண்டது. அது யுரேனியம் செறிவூட்டல் அளவை அதிகரித்ததுடன், ஐஏஇஏ ஆய்வுகளை பல இடங்களில் குறைத்ததுடன், சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துவிட்டது. இரான் தனது முக்கிய அணுசக்தி மையங்களுக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty) மீறியதாக குற்றம்சாட்டி ஜூன் 12 அன்று, ஐஏஇஏ ஆளுநர்கள் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. முன் அறிவிக்கப்படாத இடங்களில் யுரேனியம் கண்டெடுக்கப்பட்டது குறித்து முகமைக்கு போதுமான பதில்கள் அளிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என இரான் தெரிவித்தது. இதற்கு ஒருநாள் கழித்து இஸ்ரேல் இரானின் பல அணுசக்தி நிலைகளின் மீது தாக்குதலை தொடங்கியது, இதனால் ஏற்கனவே இருந்த பதற்றம் மேலும் அதிகரித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn94k11y7o
  23. திருகோணமலை பத்தாம் குறிச்சியில் அணையா விளக்கு தீப்பந்த போராட்டம் Published By: VISHNU 29 JUN, 2025 | 09:51 PM செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதியை வலியுறுத்தி திருகோணமலை பட்டணத்தெரு மக்களால் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சுடர்கள் ஏற்றப்பட்டு பின்பு தீபந்தங்களை கைகளில் ஏந்தி ஊர்சுற்றி கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விடப்பட்டன. https://www.virakesari.lk/article/218796
  24. செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள் - அக்மீமன தயாரத்ன தேரர் கூறும் விடயம் யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கூட அங்கு இருக்கக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இந்த விகாரம் மீளத் தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்த நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது, மக்கள் கொல்லப்பட்டனர். படையினர் கொல்லப்பட்டனர். அழிவுகள் ஏற்பட்டன. கடைசியில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர். செம்மணி மனிதப் புதைகுழியில் இருப்பவை யாருடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆனையிறவு மோதலின்போது படையினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். பொறுப்புடன் செயற்பட வேண்டும் சில உடல்களே கிடைக்கப் பெற்றன. எனவே, செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும். எனவே, அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/venerable-akmeemana-dayaratne-thera-statement-1751175374#google_vignette குழந்தைகளும் இராணுவத்தில் இருந்தவர்களோ?!
  25. அமெரிக்காவில் இறந்தவர்களின் அஸ்திகளில் இடம்பெற்ற மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுமார் 190 சடலங்களை பதுக்கி வைத்துவிட்டு, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலராடோ மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடல்கள் சிதைந்த நிலையில் இறுதிச் சடங்கு நடத்தும் நிலையத்தை நடத்தி வரும் ஜோன் ஹோல்போர்ட் என்பவருக்கு சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள், கடந்த 2023இல் பொலிஸில் முறையிட்டிருந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, சுமார் 190இறுதிச்சடங்குகளுக்கான உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, கோவிட் காலத்தின்போது, 2019 முதல் 2023 வரை, ஹால்போர்ட் மற்றும் அவருடைய மனைவி கேரி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு உடல்களை எரிக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அரசிடம் இருந்து பல மில்லியன் டொலர் அத்துடன், கோவிட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அரசிடம் இருந்தும் அவர்கள் பல மில்லியன் டொலர்களை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதேநேரம் உடல்களை எரித்ததாகக் கூறி உறவினர்களிடம் போலி அஸ்தியை வழங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜோன் ஹோல்போர்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. https://tamilwin.com/article/new-scam-in-united-states-1751166933

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.