Everything posted by ஏராளன்
-
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!
யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்! 11 Dec, 2025 | 04:18 PM வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார். வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233090
-
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி Dec 11, 2025 - 02:17 PM ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார். இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 'டித்வா' புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார். அரசாங்கம் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்குகின்றது என்றும், ஐ.நா. மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே குறிப்பிட்டார். ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmj173foj02mso29nyu991pvt
-
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது?
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர், சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், நடாலி ட்ரஸ்வெல், புலனாய்வுத் தயாரிப்பாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்த உயிரணு பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு விற்கப்படவில்லை. ஆனால், சில பிரிட்டிஷ் குடும்பங்கள் (அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது) டென்மார்க்கில் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்தபோது அந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தானத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. இதனை விற்ற டென்மார்க்கின் ஐரோப்பிய உயிரணு வங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்கள் "ஆழ்ந்த அனுதாபங்களைத்" தெரிவித்ததுடன், சில நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற இந்த தானம் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டது. பட மூலாதாரம்,Getty Images 17 ஆண்டுகளாக தானம் இந்த ஆய்வு, பிபிசி உட்பட 14 பொதுச் சேவை ஒளிபரப்பாளர்களால், ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியத்தின் புலனாய்வு இதழியல் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தானம் ஒரு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து பெறப்பட்டது. அவர், மாணவராக இருந்ததில் இருந்து 2005 ஆம் ஆண்டு முதல் தானம் செய்யப் பணம் பெற்று வந்தார். சுமார் 17 ஆண்டுகளாகப் பல பெண்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நபர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார், மேலும் தானமளிப்பவருக்கான அனைத்துப் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும், அவர் பிறப்பதற்கு முன்பே அவரது சில செல்களில் உள்ள டிஎன்ஏ உருமாற்றம் அடைந்தது. இது, உடலின் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதைத் தடுக்கும் மிக முக்கியமான பணியைச் செய்யும் டிபி53 மரபணுவை சேதப்படுத்தியது. தானமளித்தவரின் உடலின் பெரும்பகுதி இந்த ஆபத்தான டிபி53 மரபணுவைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் தானம் அளித்த உயிரணுவில் 20% வரை அந்த மரபணு உள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட உயிரணுவிலிருந்து உருவாகும் எந்தக் குழந்தைக்கும் இந்த மரபணுக் குறைபாடு அவர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். லி ஃபிராமெனி சிண்ட்ரோம் (Li Fraumeni syndrome) என்று அழைக்கப்படும் இது, 90% வரை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாகப் குழந்தைப் பருவத்திலும், வாழ்க்கையின் பிற்பகுதியில் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இதில் அடங்கும். "இது ஒரு பயங்கரமான நோயறிதல்," என்று லண்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த புற்றுநோய் மரபியல் நிபுணர் பேராசிரியர் கிளார் டர்ன்புல் பிபிசியிடம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இது ஒரு குடும்பத்தின் மீது திணிக்கப்படும் மிகச் சவாலான நோயறிதல் . இந்த அபாயத்துடன் வாழ்வது வாழ்நாள் முழுவதும் ஒரு சுமை. இது வெளிப்படையாகவே ஆபத்தை ஏற்படுத்தும்"என்றும் குறிப்பிட்டார். கட்டிகளைக் கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் உடல் மற்றும் மூளையின் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் வயிற்றுப் பகுதியின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் தேவைப்படுகின்றன. பெண்கள் பெரும்பாலும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கத் தங்கள் மார்பகங்களை அகற்றும் முறையைத் தேர்வு செய்கிறார்கள். "தானமளித்தவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நோய்வாய்ப்படவில்லை" என்றும், இத்தகைய மாற்றம் "முன்கூட்டியே மரபணு பரிசோதனைகளில் கண்டறியப்படுவதில்லை" என்றும் ஐரோப்பிய உயிரணு வங்கி தெரிவித்துள்ளது. பிரச்னை கண்டறியப்பட்டவுடன், தானமளித்தவரை "உடனடியாகத் தடுத்துவிட்டதாக" அது கூறுகிறது. ஏற்கனவே இறந்துவிட்ட சில குழந்தைகள் இந்த தானத்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கவனித்து வந்த மருத்துவர்கள், இந்த ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய மனித மரபியல் சங்கத்தின் கூட்டத்தில் தங்கள் கவலைகளை எழுப்பினர். அப்போது அறியப்பட்ட 67 குழந்தைகளில் 23 பேருக்கு அந்தக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பத்து பேருக்கு ஏற்கனவே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை கோரிக்கைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடனான நேர்காணல்கள் மூலம், தானம் செய்த நபருக்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இந்த எண்ணிக்கை குறைந்தது 197 குழந்தைகள் ஆக இருக்கலாம் எனத் தெரிய வந்தது. ஆனால் அனைத்து நாடுகளிலிருந்தும் தரவுகள் பெறப்படாததால், இது இறுதி எண்ணிக்கையாக இருக்காது. மேலும், இந்தக் குழந்தைகளில் எத்தனை பேர் அந்த ஆபத்தான மரபணுக் குறைபாட்டைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு மருத்துவர் காஸ்பர் உதவி செய்து வருகிறார். 14 நாடுகளில் பிரான்சில் உள்ள ரூவன் பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்றுநோய் மரபியல் நிபுணரான மருத்துவர் எட்விஜ் காஸ்பர், இதுகுறித்த ஆரம்ப தரவுகளை வழங்கியிருந்தார். இந்த புலனாய்வுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஏற்கனவே புற்றுநோய் பாதித்த பல குழந்தைகளை எங்களுக்கு தெரியும்"என்றார். மேலும் "சில குழந்தைகளுக்கு இரண்டு விதமான புற்றுநோய்கள் கூட ஏற்பட்டுள்ளன. அவர்களில் சிலர் மிக இளவயதிலேயே உயிரிழந்துவிட்டார்கள்" என்றும் அவர் கூறினார். பிரான்சில் உள்ள செலின் (அவரது உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது), 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் தானத்தை பயன்படுத்தி ஒரு குழந்தையைப் பெற்றார். அவரது குழந்தைக்கும் இந்தக் குறைபாடு உள்ளது. அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை மேற்கொண்ட கருவுறுதல் கிளினிக்கில் இருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவரது மகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தும்படி அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். தானமளித்தவர் மீது தனக்கு "எந்தவிதக் கோபமும் இல்லை" என்று செலின் கூறுகிறார். ஆனால் "சுத்தமாக இல்லாத, பாதுகாப்பற்ற, ஆபத்தை ஏற்படுத்திய" உயிரணு தனக்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் புற்றுநோயின் ஆபத்து அவர்களைச் சூழ்ந்திருக்கும் என்பதையும் அவர் அறிவார். "அது எப்போது வரும், எந்தப் புற்றுநோய் வரும், மற்றும் எத்தனை முறை வரும் என்று எங்களுக்குத் தெரியாது," என்று கூறும் செலின், "அது நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அது நடக்கும்போது, நாங்கள் போராடுவோம், அது பல முறை வந்தால், நாங்கள் பல முறை போராடுவோம்"என்கிறார். அந்த தானம், 14 நாடுகளில் உள்ள 67 கருவுறுதல் கிளினிக்குகளால் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த நபரின் தானம் பிரிட்டன் கிளினிக்குகளுக்கு விற்கப்படவில்லை. ஆனால், பிரிட்டிஷ் பெண்கள் டென்மார்க்கிற்குப் பயணம் செய்து, அந்த நபரின் தானத்தை பயன்படுத்தி கருவுறுதல் சிகிச்சையைப் பெற்றுள்ளனர் என திங்கட்கிழமை அன்று டென்மார்க் அதிகாரிகள் பிரிட்டனின் மனித கருவுறுதல் மற்றும் கருவியல் ஆணையத்திற்கு (ஹெச்எப்ஃஈஏ) அறிவித்தனர். அந்தப் பெண்களுக்குத் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "மிகக் குறைந்த எண்ணிக்கையிலான" பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், "அவர்கள் சிகிச்சை பெற்ற டென்மார்க் கிளினிக்கால் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் ஹெச்எப்ஃஈஏ-வின் தலைமை நிர்வாகியான பீட்டர் தாம்சன் கூறினார். தானம் விநியோகிக்கப்பட்ட மற்ற நாடுகளில், ஏதேனும் பிரிட்டிஷ் பெண்கள் சிகிச்சை பெற்றார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்துக் கவலை கொண்ட தம்பதிகள், தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட கிளினிக் மற்றும் அந்த நாட்டில் உள்ள கருவுறுதல் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தானமளித்தவர் நல்ல எண்ணத்துடன் தானம் செய்தார் என்பதாலும், பிரிட்டனில் அந்த தானத்தை பயன்படுத்தியதாகத் தெரிந்த குடும்பங்களுக்கு ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், அந்த நபரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று பிபிசி முடிவு செய்துள்ளது. உலகளவில் தானம் செய்யும் ஒரு நபரின் உயிரணு, எத்தனை முறை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து எந்தச் சட்டமும் இல்லை. இருப்பினும், சில நாடுகள் தங்களது சொந்த வரம்புகளை நிர்ணயிக்கின்றன. இந்த வரம்புகள் சில நாடுகளில் "துரதிர்ஷ்டவசமாக" மீறப்பட்டுவிட்டதை ஐரோப்பிய உயிரணு வங்கி ஏற்றுக்கொண்டதுடன், அது "டென்மார்க் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்" கூறியது. பெல்ஜியத்தில், ஒரு நபரின் தானம் ஆறு குடும்பங்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக வெவ்வேறு 38 பெண்கள் இந்த நபரின் தானத்தின் மூலம் 53 குழந்தைகளைப் பெற்றுள்ளனர். அதுபோல், ஒரு நபரின் தானம் பத்து குடும்பங்களால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என பிரிட்டனின் வரம்பு உள்ளது. பட மூலாதாரம்,Getty Images 'எல்லாவற்றையும் ஸ்கிரீன் செய்ய முடியாது' ஷெஃபீல்ட் உயிரணு வங்கியை நடத்தி வந்தவரும், தற்போது மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் துணைத் தலைவராக இருப்பவருமான பேராசிரியர் ஆலன் பேசி, நாடுகள் பெரிய சர்வதேச உயிரணு வங்கிகளைச் சார்ந்துவிட்டதாகவும், பிரிட்டனின் உயிரணுவில் பாதி இப்போது இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் கூறினார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "நாங்கள் பெரிய சர்வதேச உயிரணு வங்கிகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அவை மற்ற நாடுகளுக்கும் விற்கின்றன, ஏனென்றால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் விதம் அப்படித்தான் உள்ளது. எத்தனை முறை பயன்படுத்தலாம் என்று சர்வதேச சட்டம் இல்லாததால், அங்கேதான் பிரச்னை தொடங்குகிறது"என்றார். இந்தச் சம்பவம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "மோசமானது"என்று கூறிய அவர், ஆனால் உயிரணுவை முற்றிலும் பாதுகாப்பாக ஆக்குவது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார். "உங்களால் எல்லாவற்றையும் ஸ்கிரீன் செய்ய முடியாது. தற்போதைய ஸ்கிரீனிங் முறையில் தானம் செய்ய விண்ணப்பிக்கும் ஆண்களில் 1% அல்லது 2% பேரை மட்டுமே நாங்கள் ஏற்கிறோம். எனவே, அதை இன்னும் கட்டுப்படுத்தினால், தானமளிப்பவர்களே இருக்க மாட்டார்கள்."என்று அவர் விளக்கினார். தானத்தின் மூலம் 550 குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு நபர் தானம் செய்வதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்ட சம்பவத்துடன், தற்போதைய இந்தச் சம்பவமும் சேர்ந்து, தானம் குறித்து கடுமையான வரம்புகள் வகுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. ஐரோப்பிய மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கம் சமீபத்தில் ஒரு தானமளிப்பவருக்கு 50 குடும்பங்கள் என்று வரம்பை பரிந்துரைத்துள்ளது. எனினும், இது அரிய மரபணு நோய்களைப் பெறும் அபாயத்தைக் குறைக்காது என்றும் அது கூறியது. "உலகளவில் ஒரே நன்கொடையாளர்களிடமிருந்து பிறக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று கருவுறாமை மற்றும் மரபணு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ஒரு சுயாதீன தொண்டு நிறுவனமான முன்னேற்றக் கல்வி அறக்கட்டளையின் இயக்குனர் சாரா நோர்கிராஸ் கூறினார். "ஒரே தந்தையைப் பகிர்ந்து கொள்ளும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் இருப்பதன் சமூக மற்றும் உளவியல் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அது அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "குறிப்பாக இந்த விஷயத்தில், ஆயிரக்கணக்கான பெண்களும் தம்பதிகளும் தானம் உதவியின்றி குழந்தை பெற வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம்" என்று ஐரோப்பிய உயிரணு வங்கி கூறியது. ''தானமளிப்பவர்கள் மருத்துவ வழிகாட்டுதல்களின்படி ஸ்கிரீன் செய்யப்பட்டால், தானத்தின் உதவியுடன் குழந்தையைப் பெறுவது பொதுவாகப் பாதுகாப்பானது" என்றும் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images என்ன செய்வது? தானம் செய்பவருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தச் சம்பவங்கள் "மிக மிக அரிதானவை" என்று சாரா நோர்கிராஸ் கூறினார். நாங்கள் பேசிய அனைத்து நிபுணர்களும், அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையத்தில் பெறப்படும் தானம், நன்கு பரிசோதிக்கப்பட்டு இருக்கு என தெரிவித்தனர். வழக்கமான ஒரு தந்தை குழந்தை பெறுவதற்கு முன்பு செய்யும் நோய் கண்டறியல் பரிசோதனையை விட இங்கு அதிக பரிசோதனைகள் செய்யப்படும் என அவர்கள் கூறினர். "இவர் பிரிட்டனில் இருந்து தானமளித்தவரா அல்லது வேறு பகுதியைச் சேர்ந்தவரா?" எனக் கேட்பேன் என்று பேராசிரியர் பேசி கூறினார். மேலும், "தானம் செய்த அந்த நபர், வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால், 'இது இதற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இதற்கு மேல் எத்தனை முறை பயன்படுத்தப்படும்?' என்று கேள்விகளைக் கேட்பது நியாயமானது "என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g4w31yw8ro
-
இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி
இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி Dec 11, 2025 - 12:22 PM அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன. இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது. எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmj12z9bu02mko29n8zljzo4i
-
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு
வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா பட மூலாதாரம்,US Government கட்டுரை தகவல் கெய்லா எப்ஸ்டீன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. "நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், மிகப் மிகப் பெரியது, உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப் பெரியது," என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், இந்தக் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர்." என்று விவரித்தார். இந்த நடவடிக்கையை உடனடியாக கண்டித்த வெனிசுவேலா, இதை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கூறியது. முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக" மாறாது என்று அறிவித்திருந்தார். வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. கூடவே, அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளைச் சமீப மாதங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப்பெரியதான எண்ணெய் இருப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ள வெனிசுவேலா, அமெரிக்கா தனது வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, குறுகிய கால விநியோகக் கவலைகளால் பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை புதன்கிழமையன்று சிறிது உயர்ந்தது. இந்த நடவடிக்கை கப்பல் நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க சட்டம் ஒழுங்கு அமலாக்கத்துறைக்குத் தலைமைத் தாங்கும் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டீ, இந்த பறிமுதல் நடவடிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை ஒருங்கிணைத்ததாக தெரிவித்தார். "பல ஆண்டுகளாக, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சட்டவிரோத எண்ணெய் கப்பல் போக்குவரத்து வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, இந்த எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று நாட்டின் தலைமை வழக்கறிஞர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். போன்டீ வெளியிட்ட காட்சிகளில், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பெரிய கப்பலின் மேல் வட்டமிடுவதையும், கயிறுகள் மூலம் வீரர்கள் கப்பலின் தளத்தில் இறங்குவதும் காட்டப்பட்டது. துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய சீருடை அணிந்த வீரர்கள் கப்பலில் அசையும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டில் இருந்து, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஏவப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். அந்த விமானம் தாங்கிக் கப்பல் கடந்த மாதம் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 10 கடலோர பாதுகாப்பு வீரர்கள், 10 கடற்படையினர் மற்றும் சிறப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த நடவடிக்கையைக் குறித்து அறிந்திருந்தார், மேலும் டிரம்ப் நிர்வாகம் இது போன்ற கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக ஒரு நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் சிபிஎஸ்ஸுக்குத் தெரிய வந்தது. டேங்கரில் உள்ள எண்ணெயை அமெரிக்கா என்ன செய்யும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், "அதை நாங்களே வைத்துக்கொள்வோம் என நினைக்கிறேன். எண்ணெயை நாங்கள் தான் வைத்துக்கொள்ளப் போகிறோம் எனக் கருதுகிறேன்," என்று கூறினார். கடல்சார் ஆபத்துகளை கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்டு, அது நீண்ட காலமாக தனது இருப்பிடத்தை "ஸ்பூஃபிங்" அதாவது, போலியான இருப்பிடத்தை ஒளிபரப்பி வந்திருக்கலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது. ஹெஸ்புலா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை-குட்ஸ் படைக்கு வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை 2022-ஆம் ஆண்டில் ஸ்கிப்பர் கப்பலுக்கு தடைவிதித்ததாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி வெரிஃபை, இந்த டேங்கர் கப்பலை மரைன் டிராஃபிக்கில் கண்டுபிடித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் நிலை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டபோது அது கயானா நாட்டுக் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும், புதன்கிழமையன்று மாலை கயானாவின் கடல்சார் நிர்வாகத் துறை வெளியிட்ட அறிக்கை, ஸ்கிப்பர் "தவறாகக் கயானா கொடியைப் பறக்கவிட்டது, ஏனெனில் அது கயானாவில் பதிவு செய்யப்படவில்லை." என்று கூறியது. முன்னதாக புதன்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய அதிபர் மதுரோ, வெனிசுவேலாவுடனான போரை எதிர்த்த அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தியை 1988-ஆம் ஆண்டு பிரபல பாடலின் வடிவில் வழங்கினார். மதுரோ ஸ்பானிஷ் மொழியில், "போருக்கு எதிரான அமெரிக்க குடிமக்களுக்கு, நான் ஒரு பிரபலமான பாடலின் மூலம் பதிலளிக்கிறேன், கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்." என்று கூறிவிட்டு, 1988ம் ஆண்டு பிரபல பாடலின் வரிகளைப் பாடினார். அப்போது, "போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். வேண்டாம், வேண்டாம் மோசமான போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்" எனும் வரிகளைக் குறிப்பிட்டார். இந்தப் பேரணிக்கு முன்பு டேங்கர் கைப்பற்றப்பட்டதைப் பற்றி மதுரோ அறிந்திருந்தாரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. சமீப நாட்களாக, அமெரிக்கா வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான படையினரும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) விமானந்தாங்கி கப்பலும் வெனிசுவேலாவுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பிபிசி வெரிஃபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஏதேனும் ஒரு வகையான ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் குறைந்தது 22 தாக்குதல்களை நடத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் இந்த படகுகள் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறுகிறது. இந்தக் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் இறந்துள்ளனர். (இந்த செய்திக்காக, பிரேசிலின் சா பாலோவில் இருந்து ஐயோன் வெல்ஸ் பங்களித்துள்ளார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz68n2yln64o
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை! 11 Dec, 2025 | 03:55 PM வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கண்டிக்கு நெரில் சென்று பார்வையிட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணும் வழங்கும் சேவைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரும் செயலாளரும் பாராட்டை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/233087
-
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம்
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம் Dec 11, 2025 - 04:12 PM சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாககட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டுநிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmj1b7iq702n1o29ny4ps7xtm
-
வாழைப்பூ வடை
சுகர் மருந்து எடுக்காவிட்டால் அல்லது இரத்தச் சக்கரை அளவுகள் கட்டுப்பாடில்லாது இருந்தால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதோடு கண்ணும் பாதிக்கப்படும். மாற்று மருத்துவம் செய்பவர்கள் குறைந்தபட்சம் இரத்தச் சக்கரை அளவுகளை கிழமைக்கு ஒரு தடவை அல்லது மாதம் இருமுறை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்றுவது — தீர்வா? அல்லது புதிய வறுமையின் தொடக்கமா? அறிவியல் + பொருளாதாரம் + மனித உரிமை அடிப்படையில் ஒரு உண்மையான ஆய்வு ❗“மலையகத்தில் நிலம் குறைவு… அப்படியானால் மக்களை வடகிழக்குக்கு மாற்றலாம்” — கேட்க சுலபமாகத் தோன்றும் இந்த யோசனை, Development Economics சொல்லும் மொழியில்— 👉 ஆபத்தான பாதை. ⸻ ⚠️ Rule #1: எளிய தீர்வு = பெரிய பிரச்சனை மலையக மக்களுக்கு வீடு, நிலம் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களை தாய்மண்ணிலிருந்து பிடுங்கி வேறொரு தேசப் பகுதிய மாற்றுவது… 🔥 ஏழ்மையை குறைக்கும் தீர்வு அல்ல 🔥 “புதிய வறுமையை” உருவாக்கும் தீர்வு. ⸻ 1️⃣ Poor Economics என்னும் பொருளாதார நூல் சொல்லும் முக்கிய பாடம்: “சூழலை மட்டும் மாற்றினாலும் வாழ்க்கை மாறாது.” அதன் ஆசிரியர்கள் Abhijit Banerjee & Esther Duflo வின் கருத்து: “ஒரு சமூகத்தின் உள்ளூர் எதார்த்தங்களை புறக்கணித்து எடுத்த கொள்கைகள் பெரும்பாலும் தோல்வியடைகின்றன.” மலையக மக்களின் 5 முக்கிய வாழ்க்கைத் தளங்கள்: • சமூக மூலதனம் (support networks) • கலாச்சாரம் • வேலை அமைப்பு • ஊதிய சூழல் • பள்ளி & சுகாதார சேவைகள் 👉 இவை அனைத்தும் “வேரோடு இணைந்த வாழ்க்கை அமைப்பு”. இதனை துண்டித்து வடகிழக்கில் மாற்றுவது = ⚠️ சமூகச் சிதைவு + வறுமை வலுப்படுத்தல். ⸻ 2️⃣ அமர்த்தியா சென் — “வளர்ச்சி = திறன் விரிவடைதல்; இடமாற்றம் அல்ல.” நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் Amartya Sen தனது Capability Approach மூலம் சொல்லுவது: “ஒருவரின் வாழ்க்கைத் தேர்வுகள் அதிகரிக்க வேண்டும்; குறையக் கூடாது.” வடகிழக்கில் குடியேற்றினால்: • பழைய திறன்கள் அங்கு வேலை செய்யாது • மொழி–கலாச்சார தடைகள் உருவாகும் • சமூக ஆதரவு வலயம் முற்றிலும் உடையும் • பள்ளியில், குழந்தைகளுக்கு புதிய சிரமங்கள் • புதிய பொருளாதார அமைப்பில் தள்ளாடும் நிலை 👉 இவை அனைத்தும் Capability Loss = வளர்ச்சியல்ல = அதிகாரப்பறிப்பு. ⸻ 3️⃣ உலக வங்கி + IOM ஆய்வுகள்: இடமாற்றம் = “Manufactured Poverty” நகர்மயமாதல் & மறுவாழ்வு (Resettlement) ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பெரிய அபாயங்கள்: 1. வேலையிழப்பு 2. குடும்ப வருமான அதிர்ச்சி 3. அடையாள இழப்பு 4. மன உளைச்சல் 5. சமூக மோதல்கள் 6. பெண்கள் & குழந்தைகளுக்கு கூடும் பாதுகாப்பு அபாயங்கள் 🔥 இடமாற்றம் = “புதிய வறுமை” உருவாக்கும் மிக வேகமான பாதை. ⸻ 4️⃣ மலையகத்தின் பிரச்சனை “நிலம் இல்லை” அல்ல — “நில உரிமை அமைப்பு தவறானது.” உண்மையான பிரச்சனைகள்: • தோட்டக் கம்பனிகளின் நில ஏகபோகம் • வீட்டு உரிமை மறுப்பு • திட்டமிடல் தோல்வி • நகரமயமாதல் இல்லாமை • சுற்றுச்சூழல் சட்டங்கள் காகிதத்தில் மட்டுமே 👉 இடமாற்றம் என்பது, தங்கள் சமூகத்திற்குரிய உரிமையை வழங்கத் தவறிய அரசியல்வாதிகள் பூசி மெழுக முயலும் ‘ஏமாற்றுத் தீர்வு’. தலைவலிக்கு பாம் பூசும் தற்காலிக தீர்வு மாதிரி. ஆனால் உண்மை நோய் வேறு — அந்த தலைவலி, உள்ளே இருக்கும் புற்றுநோயின் அறிகுறி! ⸻ 5️⃣ 10 பெரிய அபாயங்கள் (Relocation = Risk Multiplier) 1. வாழ்வாதாரச் சிதைவு 2. வேலையின்மை 3. சமூக ஆதரவு முறிவு 4. மொழி–கலாச்சார மோதல் 5. பள்ளி இடைநிறுத்தம் 6. மனநல சீர்கேடு 7. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு 8. குழந்தைகளுக்கு அடையாள நெருக்கடி 9. விவசாய/வேலை திறன் மோதல் 10. சமூகங்களுக்கு இடையிலான தீவிர பதற்றம் 👉 இவை அனைத்தும் சேர்ந்து “வறுமையை பல மடங்காக்கும் இயந்திரம்” போல செயல்படும். ⸻ 6️⃣ அப்படியானால் தீர்வு என்ன? (Sen + Poor Economics + Development Models) ✔ A. In-Situ Development (மக்கள் வாழும் இடத்திலேயே மேம்பாடு) • நில உரிமை வழங்கல் • அடுக்குமாடி குடியிருப்புகள் • சமூக வீட்டு திட்டங்கள் ✔ B. Capability Enhancement • நல்ல பள்ளி & சுகாதாரம் • பெண்கள் தொழில்முனைவு ஆதரவு • டிஜிட்டல் திறன் பயிற்சிகள் • மலைநாட்டு நகரமயமாதல் ✔ C. Climate-safe Housing + Urban Planning • மண்சரிவிலிருந்து பாதுகாப்பான “Safe Zones” • அறிவியல் அடிப்படையிலான நகர திட்டமிடல் ⸻ 🔥 இறுதி தீர்ப்பு ❌ மலையக மக்களை வடகிழக்கில் மாற்றுவது வளர்ச்சி அல்ல. ❌ அது வறுமையை குறைக்காது; பெருக்கும். ✔ உண்மையான வளர்ச்சி = மக்கள் வாழும் இடத்திலேயே அவர்களின் திறன்கள் மற்றும் தேர்வுகளை அதிகரிப்பது. 🌟 “வளர்ச்சி என்பது குடியேற்றம் அல்ல; திறன்களை விரிவாக்கும் சுதந்திரம்.” — Amartya Sen ⸻ 📚 மலையக மக்களை “இடமாற்றம் செய்வதே தீர்வு” என்று கூறும் அறிவாளிகள் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட நூல்களைப் படிக்க வேண்டும்: 1️⃣ Abhijit V. Banerjee & Esther Duflo – Poor Economics Banerjee, A. V., & Duflo, E. (2011). Poor Economics: A Radical Rethinking of the Way to Fight Global Poverty. PublicAffairs. 2️⃣ Amartya Sen – Development as Freedom Sen, A. (1999). Development as Freedom. Oxford University Press. 3️⃣ World Bank – Resettlement & Poverty Risks World Bank. (2001). Involuntary Resettlement Sourcebook: Planning and Implementation in Development Projects. World Bank Publications. 4️⃣ Michael M. Cernea – Impoverishment Risks & Reconstruction (IRR) Model Cernea, M. M. (1997). “The Risks and Reconstruction Model for Resettling Displaced Populations”. World Development, 25(10), 1569–1587. 5️⃣ CEPA Sri Lanka – Estate Sector Socioeconomic Study Gunetilleke, N., Kuruppu, G., & Goonasekera, S. (2010). The Estate Sector in Sri Lanka: A Socio-Economic Diagnostic. Centre for Poverty Analysis (CEPA). Sri Shakthi Sumanan https://tinyurl.com/mr4vrdy2
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகத்தில் காணி வேண்டும்! இல்லையேல் வடக்கு கிழக்கில் குடியேறுவோம் : மனோ கணேஷன்.. 09/12/2025 மலையக பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு, காணி உரிமை அவசியமானது. இந்த நிலையில்,மலைசரிவு இல்லாத பாதுகாப்பான சாலையோர இடங்களில் அவர்களுக்கு காணி தர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் கோரியுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி தொலஸ்பாகே தோட்டத்துக்கு இன்று சென்ற போதே அவர் இதனை கோரியுள்ளார். காணி உரிமை எனினும் அரசாங்கம் அதனை தர தவறுமானால், வடகிழக்கில் குடியேற விருப்பமா? என்று கூடியிருந்த மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களும் தாம் தயார் என்றும் தமக்கு சொந்த காணியே வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில், அரசியல்வாதிகள் அல்லாத புலம்பெயர் தமிழ் நண்பர்கள், காணிகளை தருவதாக தனக்கு சொல்கிறர்கள். அவர்கள் அவற்றை தந்தால், மலையக மக்களிடம் அவற்றை ஒப்படைக்கப்போவதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். https://lanka-times.lk/need-land-hills-otherwise-will-settle-north-east-1765271765
-
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி Dec 11, 2025 - 09:18 AM சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது. மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது. இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. https://adaderanatamil.lk/news/cmj0werr402mdo29nmz9rm555
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
இலங்கை மறுகட்டுமான திட்டத்திற்கு EFCITA வழங்கிய ரூ. 20 மில்லியன் நன்கொடை 11 Dec, 2025 | 11:14 AM இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு புறக்கோட்டை அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினால் (EFCITA) இன்று 20 மில்லியன் ரூபா பணத்தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முன்னிலையில் நிதியமைச்சின் பிரதியமைச்சர் (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த நிகழ்வில் EFCITA வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். விநாயகசுந்தரம், செயலாளர் பி. சுப்ரமணியம், பொருளாளர் ஹரிஹரன் மற்றும் முன்னாள் தலைவர் நிஹால் செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தனிபட்ட செயலாளர் வசந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233046
-
யாரும் தனயாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நுவரெலியா விஜயத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவிப்பு 11 Dec, 2025 | 11:46 AM அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின் போது, அனர்த்தத்தின் தாக்கத்தையும், மக்களின் மனநிலையையும் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தின. பாதுகாப்பு மையத்தில் இருந்த ஒரு தாய், தன் குழந்தையை அணைத்தபடி பகிர்ந்த கவலையும், சிறுவர்கள் கண்களில் தெரிந்த பயமும், நிலைமையின் ஆழமான பாதிப்பை வெளிப்படுத்தின. “நாங்கள் மீண்டும் எப்போது வீட்டிற்குத் திரும்ப முடியும்?” என்ற ஒரு எளிய, ஆனால் வலிமையான கேள்வி, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார். அந்த ஒரு கேள்வியிலேயே மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் அச்சமும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது. அமைச்சர் சந்திரசேகர், மக்களின் இந்த வேதனையை உடனடி நடவடிக்கைகள் மூலம் குறைப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராமஅதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், உணவு, மருந்து, உலர் உணவு, உடைகள் போன்ற அவசியமான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன. “ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார். நுவரெலியாவில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள நிலையிலும், அவர்கள் மீண்டும் நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பொறுப்புடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233045
-
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு Dec 11, 2025 - 08:14 AM வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது. இதை "சர்வதேச கடற்கொள்ளை" நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmj0u4sai02mao29neh5sjld1
-
அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு 640 மில்லியன் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்கள்!
அமெரிக்காவிலிருந்து இலங்கை விமானப்படைக்கு 640 மில்லியன் ரூபா பெறுமதியான முக்கிய உபகரணங்கள்! 11 Dec, 2025 | 10:40 AM கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உயிர்காக்கும் உதவிகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க போர்த் திணைக்களம் இலங்கை விமானப்படைக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 640 மில்லியன் ரூபாய்) பெறுமதியான முக்கியமான ஆகாய போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த உபகரணங்களில் எரிபொருள் ட்ரக் வண்டிகள், ஃபோர்க்லிஃப்ட்கள் (Forklifts), பேரொளி விளக்குகள் (Flood Lights), மின் இயந்திரங்கள் (Ground Power Units), மற்றும் சரக்குகளை ஏற்றும் காவிச்செல்லக்கூடிய தளங்கள் (Portable Cargo-Loading Platforms) ஆகியவை அடங்குகின்றன. இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உபகரணங்கள் C-130J மனிதாபிமான நிவாரணப் நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவியளிக்கின்றன. நிவாரணப் பொருட்களை பெறுதல், எரிபொருள் நிரப்புதல், மின்சாரம் வழங்குதல், ஏற்றுதல் மற்றும் நகர்த்துதல் போன்ற பணிகளை இலங்கை மற்றும் அமெரிக்க விமானப்படைகள் விரைவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் இவை உதவுகின்றன. இதன் மூலம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிக வேகமாகவும் அதிக அளவிலும் நிவாரண உதவிகள் சென்றடைய அமெரிக்காவின் ஆதரவு பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233044
-
வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும் யாழ். அரச அதிபருக்குமிடையே விசேட கலந்துரையாடல்!
வடபிராந்திய கடற்படைத் தளபதிக்கும் யாழ். அரச அதிபருக்குமிடையே விசேட கலந்துரையாடல்! 11 Dec, 2025 | 09:47 AM வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் பி. லியனஹமகேவின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை (10) காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் : இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது. நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என அரசாங்க அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதிகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது இன்றைய தினம் நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டது. மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/233036
-
தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி
தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 10 டிசம்பர் 2025 தமிழ்நாட்டில் சமீபத்தில் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டுயானைகள் இறந்ததன் எதிரொலியாக யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இரு மாதங்களில் இந்த குழு இதற்கான வரைவு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டுமென்று காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யானைகள் காட்டை விட்டு வெளியில் வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குழுக்களை அமைப்பதால் எந்த பயனுமில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் மனிதர் வாழும் பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை இடப்பெயர்வு செய்வதே தீர்வு என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் யானைகளை இடப்பெயர்வு செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை அவசியம் என்கின்றனர் அரசு நிர்ணயித்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள். நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழு அமைப்பு மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள 29 ஆயிரம் ஆசிய யானைகளில் தமிழகத்தில் 10 சதவிகிதம், அதாவது 2,961 யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளின் வலசைப் பாதைகளில் ஏற்படும் பலவித தடங்கல்களால் யானை–மனித மோதல்கள் பதிவாகின்றன. இதன் காரணமாக, அதில் தொடர்புடைய யானைகளை இடமாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு, இந்திய காட்டுயிர் மையம் (Wildlife Institue of India) வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) கடைபிடிப்பது அவசியம். சமீபத்தில் தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் உயிரிழந்தன. அதன் தொடர்ச்சியாகவே யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவன இயக்குநருமான உதயன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஷ்ரா, மாவட்ட வன அலுவலர்(கூடலுார்) வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் கலைவாணன், முதுமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில் 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் காரணமாகவே, தற்போதுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகளைப் பிடிப்பதில் துவங்கி, அவற்றைக் கையாள்வது, இடமாற்றம் செய்து விடுவிப்பது, அந்த புதிய இடத்தில் கண்காணிப்பது பற்றிய நடைமுறைகள் சார்ந்து அறிவியல் அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது. படக்குறிப்பு,கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒரு காட்டுயானை உயிரிழந்தது. காட்டு யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) உருவாக்க வேண்டுமென்று கூறியுள்ள தமிழக அரசு, அந்த நெறிமுறை தேசிய மாதிரியாகக் கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட இரு காட்டு யானைகள் இறந்ததைக் காரணம் காட்டியே, இந்த குழுவை அமைத்துள்ளதாக அரசே கூறியிருப்பது ஒரு வகையில் விவாதப்பொருளாகியுள்ளது. இவ்விரு யானைகளும் பிரச்னைக்குரிய யானைகளாக (problematic elephant) அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்பு இடமாற்றம் செய்யப்பட்டவை. நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்ட காட்டுயானை ஒரு மாதம் க்ரால் எனப்படும் பலமான மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, சாந்தப்படுத்தப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானை, அடுத்த 45 நாட்களில் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்பகுதியில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி பிடிக்கப்பட்ட மற்றொரு காட்டுயானை (ரோலக்ஸ் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது), ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அந்த யானை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தது. 2 யானைகள் உயிரிழப்புக்கு வன அதிகாரிகள் கூறும் காரணமென்ன? படக்குறிப்பு,நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் ஒரு காட்டு யானை, கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்டது. இரு யானைகளின் இறப்புக்கும், அவை இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். இயற்கையான விபத்து மற்றும் உடல்நலக்குறைவே இறப்புக்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர். கூடலூர் பகுதியில் பிடிபட்ட யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு, ''ஒரு யானை பிடிக்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. 45 நாட்கள் கழித்து, கனமழை பெய்தபோது மலையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரு பக்கத் தந்தம் உடைந்து ரத்தம் பெருமளவில் வெளியேறி இறந்துவிட்டது. அது ஒரு விபத்து.'' என்றார். கூடலுார் பகுதியில் 2024 டிசம்பர் மாதத்தில் பிடிக்கப்பட்டு, அதே அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை ஒன்று இப்போது வரை அங்கே நன்றாகவுள்ளது என்றார் வெங்கடேஷ் பிரபு. இவ்விரு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், ''அந்த யானைக்கு 50 வயதாகிவிட்டநிலையில், இதயம், நுரையீரல் இரண்டிலும் பிரச்னை இருந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இதய செயலிழப்பே உயிரிழப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது. உடற்கூறு மாதிரிகள், சென்னை, கேரளா உள்ளிட்ட 5 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை வந்த பின்பே முழு காரணத்தை அறியமுடியும்.'' என்றார். வழக்கமாக ஒரு காட்டு யானை 3.5 டன் முதல் 4 டன் வரை எடையிருக்கும். ஆனால் இந்த யானையின் எடை 6.5 டன் ஆக இருந்ததாக கூறிய களஇயக்குநர் வெங்கடேஷ், இது அதீதமான எடை என்பதாலும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றார். படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ் யானைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஆனால், இத்தகைய யானைகளை இடமாற்றம் செய்வதே தவறு என்று வைல்ட்லைஃப் ரேங்க்ளர்ஸ் (Wildlife Wranglers) அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டோபர் கூறுகிறார். அந்த யானைகள் மயக்க நிலையில் பிடிக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்களை விட்டு இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் விடப்படுவதால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாவதும் அவற்றின் இறப்புக்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்வதில் வனத்துறை தவறு செய்கிறது. வளர்ந்த யானைகளால் புதிய வாழ்விடங்களின் இயற்கை அமைப்புடன் ஒன்றுவது எளிதானது அல்ல. அதில் ஏற்பட்ட சிக்கலால் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம்.'' என்றார். 'இடமாற்றம் செய்யும் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பதாகக் கூறும் வனத்துறை, அந்த யானையை பிடித்த பகுதியிலேயே அடர்ந்த வனத்தில் விடுவித்து அதனை கண்காணிப்பதில் என்ன பிரச்னை என்று கிறிஸ்டோபர் கேள்வி எழுப்பினார். 'இடமாற்றம் செய்வதே தீர்வு' இந்த கருத்துடன் ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன் உடன்படவில்லை. பிரச்னைக்குரியவையாக கருதப்படும் யானைகளை இடமாற்றம் செய்வதே தீர்வு என்பது அவரது கருத்து. தமிழ்நாட்டில் 1985 முதல் இதுவரை 22 ஆண் காட்டு யானைகள் மட்டுமே பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து யானைகள் காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததால் பிடிக்கப்பட்டு மீண்டும் அதே காட்டில் விடப்பட்டவை. மற்ற யானைகள் வேறு காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்கிறார் அவர். ''இவற்றில் பெரும்பாலான யானைகள் விடப்பட்ட சில நாட்களிலேயே காட்டை விட்டு வெளியே வந்து பயிர் சேதம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன. சில யானைகள் இறந்து போயின. சில யானைகளைப் பற்றிய தகவல் இல்லை.'' என அவர் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்யும் பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் 2 காட்டுயானைகளை பிடித்து 200 கி.மீ. தள்ளி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விட்டனர். ஆனால் அந்த இரு யானைகளும் ஹாசன் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டன.'' என்றார். ''பிரச்னைக்குரிய யானைகளை கும்கியாக மாற்ற வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்யும்போது, வழக்கமான கூட்டத்தின் தொடர்பற்ற புதிய காட்டில் தனித்துவிடப்படும்போது அவை மன அழுத்தத்துக்கு உள்ளாவதும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளால் இறந்து போவதற்கும் சாத்தியம் அதிகமுள்ளது. அதனால் யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான நெறிமுறைகளை மறுஆய்வு செய்து புதிதாக உருவாக்குவது நல்ல முயற்சிதான்.'' என்றார் காளிதாசன். யானைகளை இடமாற்றம் செய்வதற்கு தற்போது கடைபிடித்து வரும் இந்திய காட்டுயிர் மையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில்லாமல் புதிதாக உருவாக்குவதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் பலரும் முன் வைக்கின்றனர். ஆனால் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலத்துக்குள்ளேயே யானைகளால் ஏற்படும் பிரச்னை, பகுதிக்குப் பகுதி வெவ்வேறாக இருக்கும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார். ''ஓசூரில் 30–60 யானைகளைக் கொண்ட யானைக்கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேழ்வரகு (ராகி) உண்பதற்காக தனது கூட்டத்தை மூத்த பெண் யானை வழிநடத்தி வரும். அவற்றைக் கையாள்வது ஒரு சவாலாக இருக்கும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலேயே பவானி சாகரில் ஒரு விதமாகவும், கடம்பூரில் வேறு விதமாகவும் பிரச்னை இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆண் யானைகளால்தான் பிரச்னை ஏற்படும்.'' என்றார் அவர். ஒற்றை யானைகளை இடமாற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன், ''ஆப்ரிக்காவில் மிகவும் அறிவியல்பூர்வமாக யானைகளை இடமாற்றம் செய்கிறார்கள். முதலில் அதன் குணாதிசயத்தைக் கவனிப்பார்கள். பின் மன அழுத்தத்தை சோதிப்பார்கள். இடமாற்றத்துக்கு முன்னும் பின்னும் அந்த யானைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.'' என்கிறார். யானை ஆராய்ச்சியாளரும், உதவி பேராசிரியருமான பாஸ்கரன், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். ''அத்தகைய அறிவியல்பூர்வமான நெறிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தில்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். காட்டுயானைகளை இடமாற்றம் செய்கையில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.'' என்கிறார் பாஸ்கரன். "ஒரு யானை கூட இறக்கக் கூடாது என்பதே நோக்கம்" படக்குறிப்பு,வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தற்போது யானைகளை இடமாற்றம் செய்வதற்கு கடைபிடிக்கப்படும் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தமிழகத்தின் காட்டுயிர் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ. அந்த காரணத்தால்தான் தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை (Sop) உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''எக்காரணத்திற்காகவும் இடமாற்றத்தின்போது அல்லது அதற்குப் பின் ஒரு யானை கூட இறக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 8–9 காட்டு யானைகளை இடமாற்றம் செய்த நிலையில், இந்த 2 யானைகள் மட்டும் இடமாற்றத்திற்குப் பின் இறந்துள்ளன என்பதால், அதில் ஏதாவது தவறு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதும், அப்படியிருந்தால் அது எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுப்பதும் நம் பொறுப்பு என்பதால்தான் தகுந்த நிபுணர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இத்தகைய விஷயங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் நிறுவனம் என்பதால்தான் அதன் இயக்குநர் உதயனை இதற்கு தலைவராக நியமித்துள்ளோம்.'' என்றார் சுப்ரியா சாஹூ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c075mge92gko
-
அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம் Published By: Vishnu 11 Dec, 2025 | 01:27 AM இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும், அன்புக்குரியவர்களுமான நாம், எமது குடும்ப உறுப்பினர்களைத்தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அல்லது நீதியோ இல்லாமல் தொடர்கிறது. இந்த 'சர்வதேச மனித உரிமைகள் தினம்' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இனவழிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனவழிப்பின் மிகக்கொடூரமான வடிவமொன்று 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது. சரணடைந்தவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து, அதனை நம்பி தாமாகவே சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல் எமது வலியும், போராட்டமும் நின்றபாடில்லை. சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்குவோம் எனக்கூறி சர்வதேச சமூகத்துக்கு முன்பு தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்துகிறது. ஆயினும், ஒவ்வொரு முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கோப்பை மூடுவதற்கும், முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது என்ற மாயையைக் கட்டமைப்பதற்கும் செயற்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்குவழிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் நாம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடிய சுமார் 500 பெற்றோர்களும், உறவினர்களும் எவ்வித பதிலோ, நீதியோ கிட்டாமல் மரணித்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை சமீபத்திய 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எமத இறப்புகளுக்கு எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது? இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்குவதற்குத் தயாராகவோ அல்லது எதிர்ப்புக்களை மீறி அதனைச் செய்யக்கூடிய திறனுடையவராகவோ இருக்கமாட்டார். எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும். எனவே நாம் நீண்டகாலமாக முன்வைத்துவரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை, சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233026
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன 10 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 10 Dec, 2025 | 08:29 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை (10) Navesta Pharmaceuticals (Pvt) Ltd மற்றும் Citihealth Imports (Pvt) Ltd என்பன தலா 05 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியதோடு அதற்கான காசோலைகள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், Navesta Pharmaceuticals (Pvt) Ltd சார்பாக சஞ்சய ஜயரத்ன மற்றும் வைத்தியர் ஜனக விக்ரமசிங்க ஆகியோரும் மற்றும் Citihealth Imports (Pvt) Ltd சார்பாக கபில சமரவிக்ரம மற்றும் இந்திக திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233017
-
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
Bandaranayake Foundation சர்ச்சை – உண்மை என்ன? | Rj Chandru Report
-
Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது. #Carrom #CarromWorldCup Producer: ShanmughaPriya Shoot & Edit: Ranjith இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC நிதி உதவி Published By: Vishnu 10 Dec, 2025 | 08:21 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Ceylinco Holdings PLC 30 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணவர்தனவினால் இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் புதன்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. Ceylinco Holdings PLC பிரதி நிறைவேற்றுத் தலைவர் ஆர். ரங்கநாதன் மற்றும் பணிப்பாளர்/ பிரதான செயற்பாட்டு அதிகாரி பெட்ரிக் அல்விஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233015
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
Generators உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த ரஷ்ய விமானம்
-
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
இரவில் Japan-ஐ தாக்கிய நிலநடுக்கம்... சக்திவாய்ந்த Earthquake-ஆல் பலர் பாதிப்பு இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
-
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி 10 Dec, 2025 | 05:39 PM (செ.சுபதர்ஷனி) தித்வா புயலால் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் புரணர்நிர்மாணப் பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து விசாரிப்பதுடன், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்குடன் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க செவ்வாய்க்கிழமை (09) நுவரேலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா புதிய வைத்தியசாலையின் பிரதான கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதம், பழைய வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு, புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும், அபாயம் தொடர்பிலும் கண்காணித்திருந்தார். அத்தோடு 4 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடத்தொகுதியில் உள்ள 8 தாதியர் விடுதிகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் பார்வையிட்டிருந்தார். ஆய்வின் பின்னர் வைத்தியசாலை நிர்வாகம், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கட்டமைப்பு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுடன் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது சுகாதார அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமையால் 3 பிரதான வைத்தியசாலைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைபேசி வசதிகள் என்பன சுமார் 4 நாட்களாக தடைப்பட்டிருந்தன. எனினும் நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளின் உயிர்களை பாதுகாத்து, இந்த அனர்த்தத்தின் போது மாற்று வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனர்த்தத்தால் வைத்தியர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும். அதேநேரம் விடுதிகளில் தங்கியிருந்த ஒரு சில குழுவினர் வைத்தியசாலையில் தங்கியிருந்து கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சவாலான காலகட்டத்தில் வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைக்கும் விதம் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்தற்கு வைத்தியசாலைகளை பலப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சுகாதார அமைச்சு உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. வைத்தியசாலைக்குத் தேவையான அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் வைத்தியசாலைகளின் மறுசீரமைப்பு பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலையின் தற்போதைய நிலமை தொடர்பில் பரிசோதித்து வருகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/232980