Everything posted by ஏராளன்
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
பெற்றோர்களே, பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சியை கட்டாயமாகப் பழங்குங்கள்.
-
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு Published By: Vishnu 04 Feb, 2026 | 03:45 AM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார். கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் காலை 6 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. சர்வமத வழிபாடுகள் அத்தோடு காலை 5.30 மணி முதல் சர்வமத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. பௌத்த மத வழிபாடுகள் கொள்ளுபிட்டி - தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் மயூராபதி பத்திரகாளி அம்மன் கோவிலிலும், கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிருஸ்தவ ஆராதனைகள் கிரிமண்டல மாவத்தை மக்கள் தேவசபை தேவாலயத்திலும், இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு - ஜூம்மா மஸ்ஜித்திலும் இடம்பெறவுள்ளது. பிரதம அதிதிகள் வருகை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7 மணி முதல் வருகைதரவுள்ளனர். தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரது வருகையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரத்திலும், இறையான்மையிலும் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் நிரந்தர இருப்பிற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 4000 வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு தொடர்ந்து ஜனாதிபதிக்கான மரியாதை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் அவரால் நாட்டு மக்களுக்கு விசேம உரையாற்றப்படும். காலை 8.45 மணி முதல் 9.30 மணி வரை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி என்பவற்றால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும். இதில் 1962 இராணுவத்தினர், 693 கடற்படையினர், 583 விமானப்படையினர், 352 பொலிஸார், 278 சிறப்பு பொலிஸ் பணிப்பிரிவினர், 183 சிவில் பாதுகாப்பு திணைக்களம், 507 தேசிய மாணவர் படையணி, 22 ஓய்வு பெற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் 22 அங்கவீனமுற்ற பாதுகாப்பு படையினர் உள்ளடங்களாக 4602 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 7 ஆயுதமேந்திய வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. போக்குவரத்துக்கு கட்டுப்பாடு சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/237749
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
றிவேர்சில் சென்ற ரக்ரரில் சிக்கிய பெண். மயிரிழையில் தப்பிய குழந்தை. அரியவகைப் பனிச்சிறுத்தைகள். பராகிளைடிங் விபத்து, ஏரியில் விழுந்த காட்சி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தவிர்க்கவியலாத திறமையாளர் என்பதும் ஒரு காரணம் அண்ணா.
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை - அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம் 03 Feb, 2026 | 04:50 PM (நா.தனுஜா) கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை. எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல' எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 'கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது' எனவும் அவர் விசனம் வெளியிட்டார். அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார். அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். 'அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல. அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன. ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/237733
-
ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்?
ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 31 நிமிடங்களுக்கு முன்னர் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார். ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் பேசுகையில், "அந்த கட்டுரையில் நரவனே, தன்னுடைய நினைவுக்குறிப்பான அப்புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஐந்து வரிகளை மட்டும் வாசிக்க நான் விரும்புகிறேன்." என தெரிவித்தார். வெளியாகாத புத்தகம் ஒன்றின் பகுதிகளை எப்படி வாசிக்கலாம் எனக்கூறி பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆளும்கட்சியினரை பார்த்து ராகுல் காந்தி, "பயங்கரவாத்கத்தை எதிர்த்து சண்டையிடுவதாக அவர்கள் (ஆளுங்கட்சியினர்) கூறுகின்றனர், ஆனால் ஒருவர் கூறிய மேற்கோள் குறித்து அஞ்சுகின்றனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவர்களை பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை வாசிக்க அனுமதிக்கட்டும்." என்றார். ஊடக செய்திகளின்படி, ராகுல் காந்தி குறிப்பிட்ட அப்புத்தகம் 2024ம் ஆண்டு விற்பனைக்கு தயாராக இருந்தது. ஆனால், அப்புத்தகம் குறித்து இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான செய்தியில், அப்புத்தகம் மீதான விசாரணை முடியும் வரை அதன் பகுதிகளையோ அல்லது மின்னணு பிரதிகளையோ யாருக்கும் வழங்கக் கூடாது என அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் சில மட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகவும், அப்போதிருந்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஜெனரல் நரவனே ராணுவத் தளபதியானார். யார் இந்த மனோஜ் முகுந்த் நரவனே? ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பணியாற்றினார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டம் மற்றும் கல்வான்பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா பத்தற்றத்தை எதிர்கொண்ட காலகட்டத்தில் அவர் இந்திய ராணுவத்தை வழிநடத்தினார். புனேவின் கியான் பிரபோதினி பள்ளியில் மனோஜ் நரவனே ஆரம்ப கல்வி பெற்றார். அதன்பின் இந்திய ராணுவத்தில் அதிகாரியானார். போர்க்களத்தைத் தாண்டி கல்வி மீதும் அவருக்கு நாட்டம் இருந்தது. அவர் இந்தோரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக இயல் பிரிவில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். அவருடைய தந்தை முகுந்த் நரவனே விமானப் படை அதிகாரியாக இருந்தவர். மனோஜ் நரவனேவின் மனைவி ஓர் ஆசிரியர். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 2020ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் ஜெனரல் நரவனேவின் ராணுவப் பணியில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில், "2020ம் ஆண்டு ஜூன் மாதம் ரோந்துப் புள்ளி 14-ல் (Patrolling Point) பதற்றம் உச்சகட்டத்தை அடைந்ததாக, அதிகாரபூர்வ ராணுவ பதிவுகள் மற்றும் ராணுவம் வழங்கிய முந்தைய தகவல்கள் கூறுகின்றன. மோதல் தடுப்பு மண்டலத்திலிருந்து (buffer zone) தங்கள் கூடாரங்களை நீக்குவதற்கு சீன ராணுவம் மறுத்தது. கர்னல் சந்தோஷ் பாபுவால் வழிநடத்தப்பட்ட இந்திய துருப்புகள், சீன ராணுவத்தை தடுத்து நிறுத்த நகர்ந்தபோது, வன்முறை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரல் நரவனே இந்தியாவின் உத்தியில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இந்திய ராணுவம் தற்காத்துக்கொள்ளும் கொள்கையை மட்டுமே கடைபிடித்தது (defensive policy), ஆனால் நரவனே அச்சுறுத்தல் சமயங்களில் எதிரிகளை தாக்கும் கொள்கையை கடைபிடிக்குமாறு (offensive defence) செய்தார். அந்த செய்தியில், "நரவனே கைலாஷ் மலைத்தொடரில் இந்திய டாங்கிகளை நிறுத்துமாறு செய்தார், இது சீன ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது. 2020ம் ஆண்டு ஜூன் 16 இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்ததால், அந்நாள் தன்னுடைய பணியில் 'சோகமான நாள்' என நரவனே விவரித்தார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டில் வெளியான புத்தகத்தின் பகுதிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் நரவனே ஆட்சிக் காலத்தில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின்படி, "2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலை இப்புத்தகம் விவரிக்கிறது. அதில், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் அக்னிபத் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான உரையாடலும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடிஐ செய்தி முகமை அப்புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டதாக அச்செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 31 அன்று மாலை நடந்த சம்பவங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இந்த சம்பவம் குறித்த கட்டுரை கேரவன் இதழில் வெளியாகியுள்ளது. அப்புத்தகத்தின் சில பகுதிகள் குறித்து கேரவன் இதழில் வெளியான பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாசிக்க நினைத்தார். அதன்பின், ஆகஸ்ட் 31 மாலை என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ள கேரவன் கட்டுரையின் பக்கங்களை காங்கிரஸ் கட்சி தன் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தது. நரவனேவின் சாதனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். லண்டன் ஸ்பீக்கர்ஸ் பியூரோ அமைப்பின்படி (முன்னணி பேச்சாளர் முகமை), நரவனேவின் பணி காலத்தில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முயற்சியின் கீழ், பல முக்கிய ஆயுத கொள்முதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது, இந்திய ராணுவம் ஆயுதங்களை சொந்தமாக தயாரிக்கவும் வெளிநாட்டு ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் ஊக்கமளித்தது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்கள் பயிற்சி பெற அனுமதித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் நரவனே, இது ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய படியாக கருதப்படுகிறது. ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். இலங்கையில் ஆபரேஷன் பவான் நடவடிக்கையின்போது அங்கு நிறுத்தப்பட்ட இந்திய அமைதிப்படையின் ஒரு உறுப்பினராகவும் ஜெனரல் நரவனே இருந்தார். மேலும் மியான்மர் தூதரகத்திலும் மூன்றாண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். நரவனே பலமுறை தன் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் படைப்பிரிவை வழிநடத்தியதற்காக சேனா பதக்கம், நாகாலாந்தில் அசாம் ரைஃபிள் (வடக்கு) பிரிவின் ஐஜியாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம், அதிநவீன தாக்குதல் படைப்பிரிவான ஸ்டிரைக் கார்ப்ஸை (Strike Corps) வழிநடத்தியதற்காக அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் ராணுவப் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக பணியாற்றியதற்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை அவர் வென்றுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkj6nj310o
-
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7
-
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml6lu35004seo29nn817abfi
-
சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?
சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? பட மூலாதாரம்,AFP via Getty Images கட்டுரை தகவல் பீட்டர் ஹோஸ்கின்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது. சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. பட மூலாதாரம்,Getty Images 60% வாகனங்களில் இந்த வசதி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின்படி, டிக்கி தவிர ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறமும் கைப்பிடியை அணுகுவதற்கு வசதியாக 6 செ.மீ x 2 செ.மீ x 2.5 செ.மீ-க்கு குறையாத அளவில் ஒரு உள்நுழைந்த இடம் இருக்க வேண்டும். காரின் உள்ளே, கதவை எப்படித் திறப்பது என்பதைக் காட்ட குறைந்தபட்சம் 1 செ.மீ x 0.7 செ.மீ அளவுள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, சீனச் சந்தையில் நுழைவதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்கள், அவற்றின் வடிவமைப்புகளை மேம்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறும். மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் கார்களை உள்ளடக்கிய சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'சீனா டெய்லி' நாளிதழ் மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60% வாகனங்களில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் சீனச் சந்தையில் விற்கப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் தொழில்துறையில் அந்த நாட்டின் பெரும் இருப்பு காரணமாக, இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images டெஸ்லாவில் பிரச்னையா? டெஸ்லாவின் கதவு கைப்பிடிகள் ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் சொந்த விதிகளை பரிசீலித்து வருகின்றனர். நவம்பரில் டெஸ்லாவின் மின்சாரத்தில் இயங்கும் கதவு கைப்பிடிகள் திடீரென வேலை செய்யாமல், காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியது. நிறுவனத்தின் முதன்மை மாடலான டெஸ்லாவின் 2021 மாடல் Y கார்களில் உள்ள கைப்பிடிகள் குறித்து ஒன்பது புகார்கள் வந்ததாகவும் அது தெரிவித்துள்ளது. இதில் நான்கு சம்பவங்களில், கார் உரிமையாளர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க கார் ஜன்னலை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp87gy2x12mo
-
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை Feb 3, 2026 - 06:09 PM 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://adaderanatamil.lk/news/cml6l5vos04sdo29nn7uk8u67
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி. இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.
-
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை
இலங்கை கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை Feb 3, 2026 - 04:49 PM இலங்கை கடற்பரப்பிற்கும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான மீனவர்களுக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிசம்பர் 28 ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 இந்திய மீனவர்களையும் இம்மாதம் 13 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cml6iaezl04sbo29n9drcx5um
-
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பேட்டி
கறுப்பு ஜூலையால் இல்லாமல்போன ஜப்பானின் பெரும் முதலீடு - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் #indrajithkumaraswamy #formergovernor #powermoves #NewsFirstTamil #lka #srilanka
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 100க்கு மேற்பட்டோர் பலி! 03 Feb, 2026 | 04:51 PM அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறபோதும், அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237724
-
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்!
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்! 03 Feb, 2026 | 11:42 AM சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அதனையடுத்து, எப்ஸ்டீன் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, “எப்ஸ்டீன் கோப்புகள்” என்ற பெயரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்” உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த ஆவணங்களில், ட்ரம்ப் 13 வயது சிறுமியை 35 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அந்த சிறுமி, தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்தபோது ட்ரம்ப் அந்த சிறுமியை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறித்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 1984இல் மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில் பிறந்த குழந்தையொன்று சிசுக்கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டதை ட்ரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட அந்த குழந்தை ட்ரம்ப்புக்கோ அல்லது வேறு எவருக்கோ பாலியல் உறவினால் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் எப்ஸ்டீன் ஆவணத்தில் சந்தேகக் குறிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எப்ஸ்டீன் ஆவணங்களில் தனது பெயர் வெளியானது குறித்து கருத்து தெரிவித்து வரும் ட்ரம்ப், தனக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள், ஆவணத்தில் தன்னை தொடர்புபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் மறுத்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/237685
-
மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு
மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு Feb 3, 2026 - 12:42 PM இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார். மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml69hpxg04s1o29n5wx83rbk
-
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பேட்டி
ராஜ் ராஜரட்ணம் அவர்களுக்கு ஓராண்டு ஆலோசகராகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார். ராஜ் ராஜரட்ணம் அவர்களால் முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு சதமும் மீளவழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு
கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிப்பு 03 Feb, 2026 | 10:34 AM (நா.தனுஜா) புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்பதை சகலரும் மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார். கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக திங்கட்கிழமை (02) நெடுங்கேணியில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சிங்களக்குடியேற்றங்கள் மிகத்துரிதமாக நிறுவப்பட்டு வந்திருக்கின்றன. இந்த சிங்களக்குடியேற்றங்கள் விவசாய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் எனும் பெயர்களில் இந்தக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் சிங்களக்குடியேற்றங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இப்போது மகாவலி எனும் பெயரில் மட்டக்களப்பிலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில், அதாவது வடமாகாணத்தில் 25 வீதமான சிங்கள மக்களைக் குடியேற்றவேண்டும் என்ற கொள்கை யுத்தத்தின் பின்னர் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களிடம் இருக்கிறது. அதன்மூலம் மாத்திரமே பிற்காலத்தில் தமிழ்மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவ்வரசாங்கங்களிடம் மேலோங்கியுள்ளது. மகாவலி எல் வலயத்தில் சிங்களவர்கள், அதிலும் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள். இன்று அவர்களுக்கு தண்ணீர் தேவை என்பதற்காக மிச்சம் சொச்சமாக இருக்கும் தமிழ்மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்து, சுமார் பத்தாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து, அங்குள்ள சிறு குளங்களை அழித்து, தமிழ்மக்களை அந்த மண்ணிலிருந்து விரட்டி, அங்கு ஒரு புதிய நீர்ப்பாசனத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் யோசிக்கிறது. இந்தக் குடியேற்றங்கள் இதனுடன் முடிந்துபோகாது. நெடுங்கேணி, மாங்குளம், வவுனிக்குளம் என சகல இடங்களிலும் இந்த மகாவலி திட்டத்தின் சிறகுகள் பரந்து விரிந்திருக்கிறது. எனவே அந்தக் குடியேற்றங்கள் வவுனியாவை சுற்றிவளைத்து இடம்பெறும் அதேவேளை, திருகோணமலையில் ஒரு சிங்களத்தொகுதி வந்ததைப்போன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவை இணைந்து ஒரு சிங்களத்தொகுதி உருவாக்கப்படும். இப்புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே இதனைக் கட்டுப்படுத்தி, முடிவுக்குக்கொண்டுவரவேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் உண்டு என்றார். https://www.virakesari.lk/article/237672
-
சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம்
சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது - தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை ; சாணக்கியன் இராசமாணிக்கம் 03 Feb, 2026 | 01:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இது என்ன நியாயம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது கேள்வியெழுப்புகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான், பன்சேனை, வாதக்கல்மடு,பாவற்கொடிசேனை, உன்னிச்சை மற்றும் நெடியமடு போன்ற பிரதேசங்களுக்கு இதுவைர குடிநீர் வசதிகள் வழங்கப்படவில்லை. உன்னிச்சையில் இருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டப்போதிலும், உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஆனால் இந்த பிரதேசத்துக்கு நீர் விநியோகத் திட்டத்தை வழங்கும் முன்மொழிவுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோக திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் கிவுல்ஓயா திட்டம் ஊடாக சிங்கள குடியேற்றங்களை முறையற்ற வகையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/237690
-
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 – 2030க்கு அமைச்சரவை அனுமதி
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030க்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 03 Feb, 2026 | 03:07 PM (சரண்யா பிரதாப் ) மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைப்பதற்குமான இலக்கை அடைவதற்கும், ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம், 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கமைய, இலங்கை நிலைபேண்தகு வலுச்சக்தி அதிகாரசபையால் தொடர்புடைய அனைத்து பங்காளர்களுடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2025–2030 காலப்பகுதிக்கான இந்த அபிவிருத்தித் திட்டம், குறிப்பாக பின்வரும் மூன்று முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது: 1. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு ஏற்ற காணிகளை அடையாளம் காணல் மற்றும் முன்னுரிமை வழங்கல் 2. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வரைபடம் (Renewable Energy Mapping) தயாரித்தல் 3. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பூங்காக்களை (Renewable Energy Parks) அபிவிருத்தி செய்வதற்கான நேரச் சட்டகத்தை உருவாக்கல் இதற்கு மேலாக, மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் (Floating Solar Power Projects) ஆகியனவும் இத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ‘மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030’ ஐ வலுசக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கான அனுமதியும் அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, இன்று செவ்வாய்க்கிழமை (03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த அபிவிருத்தித் திட்டம், இலங்கையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, நிலைபேண்தகு மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட நாடாக மாற்றும் முயற்சியில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுவதுடன், எதிர்கால ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. https://www.virakesari.lk/article/237707
-
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பேட்டி
''மத்தியவங்கியின் ஆளுநராக என்னை நியமித்தமை இன்னொருவர் கூறியே எனக்கு தெரியும்'' #indrajitcoomaraswamy #formergovernor #centralbank #powermoves #srilanka #lka
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டது ரஃபா எல்லை Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 04:54 PM இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும், வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்பவும் இது ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மே 2024-இல் இஸ்ரேல் இராணுவம் ரஃபா எல்லையைக் கைப்பற்றியது முதல், இந்தப் பாதை பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்த நிலையில், எல்லையைத் திறப்பது ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது. எல்லை திறக்கப்பட்டாலும், இதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: எல்லையைக் கடக்கும் மக்கள் சுமார் 2.5 கி.மீ தூரம் நடைபாதையாகவே கடக்க வேண்டும். வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதல் நாளில் காசாவிற்குள் நுழைய 50 பேருக்கும், வெளியேற 50 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தின் மிகத்தீவிரமான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். யாருக்கு முன்னுரிமை? போரின் ஆரம்பக் கட்டங்களில் காசாவை விட்டு வெளியேறிய சுமார் 1 இலட்சம் பாலஸ்தீனியர்களில், முதற்கட்டமாக சிலருக்கு மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல், வைத்திய சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் மற்றும் அவசரத் தேவையுள்ளவர்கள் வெளியேறவும் இது உதவும். எகிப்து எல்லையை ஒட்டிய பிலடெல்பி வழித்தட பகுதியில் இஸ்ரேல் இராணுவம் முள்வேலிகளுடன் கூடிய வலுவான கொங்கிறீட் சுவர்களை எழுப்பியுள்ளது. எல்லை திறக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை வடக்கு மற்றும் தெற்கு காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் 3 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாலஸ்தீனத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/237634
-
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது Feb 3, 2026 - 06:58 AM அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது. அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது. அதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது. அந்தப் பதவிக்கான பதில் கடமைகளை மேற்கொள்வதற்காகக் கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவரது பதில் கடமைக் காலமும் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. தற்போது கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளதுடன், ஜனாதிபதியினால் பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்தப் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டன. எவ்வாறாயினும், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அரசியலமைப்புச் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது. இதனிடையே, பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், சுதந்திர தினம் காரணமாக நாளை (04) பாராளுமன்ற அமர்வு நடைபெறாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cml5x68lm04rjo29nvnvxw7aw
-
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் 2 பிப்ரவரி 2026 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். 2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இந்த நடுவர் குழுவில் இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர். இம்முறை பிபிசி முதன்முறையாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை (Grand Jury) அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வுக்குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பேஸ், நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர். பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் 3 பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளை பிபிசி கௌரவிக்கும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி மாற்றுத்திறனாளி வீராங்கனை, இளம் தடகள வீராங்கனைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிபிசி வளரும் வீராங்கனை விருது மற்றும் மூத்த வீராங்கனை ஒருவரின் ஈடுஇணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். பிபிசி நியூஸின் இடைக்கால உலகளாவிய இயக்குநர் (Interim Global Director) ஃபியோனா கிராக் கூறுகையில், "பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பெண்கள் செய்த சிறப்பான சாதனைகளை கொண்டாடுகிறது. அந்த சாதனைகளை வெளிக்கொணரவும் கொண்டாடவும் மற்ற எந்த ஊடக அமைப்பும் மேற்கொள்ளாத வகையில் பிபிசி உலக சேவை முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த பெண்கள் கடின முயற்சியினால் அடைந்த சாதனைகளை இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒலிக்கச் செய்ய ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்." என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி கலெக்டிவ் நியூஸ்ரூமால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் தயாரிக்கப்படுகிறது. கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதன்மை ஆசிரியரும் இணை நிறுவனருமான ரூபா ஜா கூறுகையில், "திருமணம், வயது, உடல் ரீதியான விதிகள் அல்லது உடல் ரீதியான சவால்கள் காரணமாக விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு பெரும்பாலும் ஊக்கம் தரப்படுவதில்லை. 'எல்லோரும் விளையாடலாம்' (Everybody Can Play) என்ற இந்தாண்டின் தலையங்க கருப்பொருள், விளையாட்டு எல்லோருக்குமானது என்ற எளிமையான யோசனைக்கு வலுவூட்டுகிறது. அதன் உண்மையான தாக்கம் அதனால் ஏற்படும் விளைவுகளால் அளவிடப்படாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. களத்தில் தைரியமாக இறங்கி தன்னுடைய இடத்தைக் கோரும் எந்தவொரு பெண்ணையும் ISWOTY 2026 கொண்டாடுகிறது." என்றார். பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் யார்? திவ்யா தேஷ்முக், சதுரங்கம் சதுரங்க விளையாட்டில் இளம் சாதனையாளரான 20 வயது திவ்யா தேஷ்முக், கடந்தாண்டு ஜூலை மாதம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்திய மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் மற்றும் அந்த கோப்பையை கைப்பற்றிய இளம் சாம்பியன் என்ற புதிய வரலாற்றை படைத்தார். இதன்மூலம் திவ்யா தேஷ்முக் கிராண்ட் மாஸ்டரானார். இறுதிப்போட்டியில் திவ்யா இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பியை தோற்கடித்தார். அந்த தருணம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொறுப்பை கையளிப்பது போன்றதாக இருந்தது. மேற்கு இந்திய நகரமான நாக்பூரில் 2005-ஆம் ஆண்டு பிறந்தவர் திவ்யா தேஷ்முக். இவர் தன்னுடைய ஐந்து வயதில் சதுரங்கம் விளையாட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். 2017-ஆம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். 2022-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஹர்மன்ப்ரீத் கௌர், கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத், நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு தன் அணியை வழிநடத்திச் சென்றார். சொந்த மண்ணில் விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 339 என்ற இமாலய இலக்கை துரத்துகையில் 88 பந்துகளில் 89 ரன்கள் அடித்து, அணியை முன்னின்று வெற்றிக்கு வழிநடத்தினார். 2017-ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்தது, மகளிர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு, பஞ்சாபில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் ஹர்மன்ப்ரீத். அவருடைய தந்தை ஹர்மன்ப்ரீத்துக்கு "குட் பேட்டிங்" என எழுதப்பட்ட டி-ஷர்ட்டை வாங்கிக் கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் முகமாக மாறுவார் என்ற தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப 2009-ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே அவர் திறம்பட விளையாடினார். ஹர்மன்ப்ரீத் 2023-ஆம் ஆண்டின் டைம் இதழின் வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அதே ஆண்டில் பிபிசியின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். 2017-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது உயரிய அங்கீகாரமான அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட்டு துறையில் அவருடைய சிறந்த பங்களிப்புகளுக்காக 2026-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஒருவராக திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்களையும், தற்போதைய வீராங்கனைகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உள்ளார். மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் பிறந்த மந்தனா, மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிய தனது தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார். 2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார். அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார். சுருச்சி சிங், துப்பாக்கி சுடுதல் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். 19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் - ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார். கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார். கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங். ஜோதி யாராஜி, தடகளம் 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்க ஜோதி யாராஜி தகுதி பெற்றார். இதன் மூலம், தடகளம் மற்றும் களப் போட்டிகளில் சர்வதேச அளவிலான சாதனைகள் மிகக் குறைவாகவே இருக்கும் இந்தியாவில் இருந்து 'ஒலிம்பிக்கில் 100 மீ தடை தாண்டும் ஓட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை' என்ற பெருமையை பெற்றார். 26 வயதான ஜோதி யாராஜி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தடைகளைத் தாண்டுவது உண்மையில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அவரது தந்தை ஒரு காவலாளியாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்பவராகவும் இருந்தனர். 2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த சாதனையை பலமுறை முறியடித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஸ்பிரிண்ட் ( குறுகிய தூர ஓட்டப்பந்தயம்) மற்றும் தடை தாண்டும் ஓட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலத்தையும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளியையும் அவர் வென்றார். 2023-ஆம் ஆண்டில், ஜோதி ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கத்தையும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும் வென்றார். இதன்மூலம் அவர் ஆசியாவின் சிறந்த தடை தாண்டும் வீராங்கனையாக தனது பெயரை உறுதிப்படுத்தினார். 2025-ஆம் ஆண்டு குமியில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். 2024-ஆம் ஆண்டு ஜோதி யாராஜிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது(ISWOTY) 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த விருதை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளரானார். 2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பியும் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த விருதை வென்றார். தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர். கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4e914y9l6o