Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஹொங்கொங் தீ விபத்து : 128 பேர் உயிரிழப்பு, 200 பேர் மாயம் 29 Nov, 2025 | 01:52 PM ஹொங்கொங்கில் கடந்த புதன்கிழமை (29) ஏற்பட்ட பாரிய தீ பரவலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ பரவலில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 200 பேர் காணாமல் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதன்கிழமை (26) தீ பரவியது. இதன் காரணமாக கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற பொருட்கள் காரணமாக மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீபரவல் ஹாங்காங்கில் 1948 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவலை விட மிகப்பெரிய தீ விபத்தாகும். ஹொங்கொங் அரசு பாதிக்கப்பட்ட மக்கள் உதவ 300 மில்லியன் நிதி ஒதக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231919
  2. 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு! Nov 29, 2025 - 11:56 AM சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijws59p025fo29nw65thb5j
  3. Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:53 AM அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும். காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261 மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377 கப்பல் அனுப்புதல் - 021 2223063/ 021 2222261 குருநகலை - 037 2229617/ 037 2223873 அநுராதபுரம் - 025 2222261/ 025 2236424 கண்டி - 081 2203100/ 081 2222261 பதுளை - 055 2222124/ 055 2222261 அம்பாந்தோட்டை - 047 2222016/ 047 2220261 கருப்பு - 034 2222261/ 034 2236529 இரத்னபுர - 045 2226592/ 045 2222261 திருகோணமலை - 026 2231385/ 026 2222600 காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267) மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில் இரத்த தானம் வழங்க முடியும். https://www.virakesari.lk/article/231874
  4. தமிழ்நாட்டை நெருங்கும் திட்வா புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம். 29 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல் இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே 430 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிக்கைப்படி, இது கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையோரத்தை நாளை (நவ.30) அதிகாலை அடையக்கூடும். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 29: தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. நவம்பர் 30: திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 1: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். இவைதவிர்த்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பலத்த காற்று வீச வாய்ப்பு தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நவம்பர் 29: டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 30: வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்றின் வேகம் நவம்பர் 29 காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தையும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தை அடையும் என்றும், அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது (நவம்பர் 29 அதிகாலை 5.30 நிலவரப்படி). இது அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்தக் காற்றின் வேகம் நவம்பர் 30 வரை மணிக்கு 60-70 கி.மீ ஆக நீடிக்கலாம். அவ்வப்போது அது மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் வீசலாம். நவம்பர் 30 நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் மெல்ல முன்னேற்றம் காணப்படும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதன் வேகம் அதிகரித்து, மணிக்கு 70-80 கி.மீ ஆக அதிகரித்து (அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொடும்) நவம்பர் 30 காலை வரை நீடிக்கும். இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் இன்று (நவம்பர் 29) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இன்று (நவ.29 சனிக்கிழமை) காலையும், மாலையும் நடக்க இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்துள்ளார். புதுவை மத்திய பல்கலைக் கழகத்திற்கும் இன்று (நவ.29 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் விமான சேவை ரத்து திட்வா புயல் காரணமாக கனமழை பெய்வதால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யபட்டுள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்தில் தினசரி 6 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு 5 விமான சேவைகளும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சேவையும் இயக்கப்படுகின்றன. புயல் காரணமாக ஆறு விமான சேவைகளும் இன்று (29-11-25) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விமான சேவை இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e01d21w4go
  5. இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் Nov 29, 2025 - 09:37 AM இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmijrstq90253o29nh8tcjwu6
  6. 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டியில் Nov 29, 2025 - 08:13 AM கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijoswdm024zo29nouiwxzg3
  7. Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:28 AM பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் செயற்படும் விமானப்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்பார்வை செய்தார். இன்றிரவு (28) விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி குறித்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தகவல்களை அறிந்துகொண்டார். https://www.virakesari.lk/article/231873
  8. நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு Nov 29, 2025 - 06:11 AM இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது. இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று (29) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வௌியிட்டுள்ளார். அது தொடர்பில் அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக நான் பிரார்த்திக்கின்றேன். கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது. எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=V_Sdf2mv8Z8 https://adaderanatamil.lk/news/cmijkg5l3024vo29n4dixe240
  9. Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:39 PM டிட்வா புயல் 28.11.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி நிலைவரப்படி, திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்திலேயே நகருகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். டிட்வா புயலின் மையப்பகுதி நாளை 29 ஆம் திகதி காலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்துக்கு அண்மையாக கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்வு வேகம் குறைவாக உள்ளமையால் கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும். அதனால் நாளையும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இரவு 2.00 மணிவரை (29.11.2025) நீடிக்கும் வாய்ப்புள்ளது. காற்றின் வேகமும் வடக்கு மாகாணத்தில் படிப்படியாக அதிகரிக்கும். ஆகவே வடக்கு மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம். வெள்ளநீர் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தினை உணர்ந்தால் முன்கூட்டியே உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது சிறந்தது. அதேவேளை வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு கரையோரப்பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் செயற்பாடு இடம்பெறும். ஆகவே கரையோரப் பகுதி மக்கள் இது தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம். கடந்த சில நாட்களாக இலங்கையைப் புரட்டிப் போட்ட, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணமான 'டிட்வா' புயல் நாளையுடன் இலங்கையை விட்டு நீங்குகிறது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியாகும். https://www.virakesari.lk/article/231865
  10. Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:32 PM நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை முன்னிட்டு, பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவித்துள்ளார். முன்னதாக, மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இத்தீர்மானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், “நாடு முழுவதும் உருவான அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி பள்ளிகளை டிசம்பர் 16ஆம் திகதி தொடங்க முடிவு செய்யப்பட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், உயர்தரப் பரீட்சை (A/L)மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய பரீட்சை திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் சூழ்நிலையை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது. https://www.virakesari.lk/article/231864
  11. Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:57 PM நாட்டை பெருமளவில் பாதித்துவரும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை (A/L) உள்ளிட்ட அனைத்து தேசிய பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே அறிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்றும், டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைமுறையில் இருந்த பரீட்சை அட்டவணை இனி செல்லுபடியாகது என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள், பரீட்சை நிலையங்கள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளம், மண்சரிவு மற்றும் தடைகள் காரணமாக இயலாமை நிலையை சந்தித்து வருகின்றன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பரீட்சை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 12ஆம் தர மாணவர்களுக்காக டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சையும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது 14 மாவட்டங்களில் உள்ள 15 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும், கடும் வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பரீட்சைகள் திணைக்களத்தால் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த ஆட்சேர்ப்புப் பரீட்சைகள், வினைத்திறன் தடைத் தாண்டும் பரீட்சைகள் இவையும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும், அனைத்து பரீட்சைகளுக்குமான புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/231866
  12. அவசர எச்சரிக்கை ! கொழும்பு, வத்தளை பகுதியில் வெள்ளநீர் அளவு மேலும் உயர்வு : உடனடியாக வெளியேற வேண்டுகோள் : படகு சேவைகளுக்கான இலக்கங்கள் இதோ ! Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:11 PM களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, தேவையானால் படகு சேவைகளும் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமலும் நீர் அதிகமாக காணப்படும் இடங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக படகு சேவை புரிபவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் குறித்த மாவட்டங்களுக்கு பொறுப்பானவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் படகு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231862
  13. ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்? பட மூலாதாரம்,Mythri Movie Makers கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன? ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் படக் குழுவால் பயன்படுத்தப்பட்டன. 'ட்யூட்' படம் குறித்த சர்ச்சை என்ன? 'ட்யூட்' படத்தில், 'புது நெல்லு புது நாத்து' படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' பாடல், ரஜினி நடித்த 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர். சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, 'தனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு ட்யூட் படக்குழு அனுமதி பெறவில்லை' என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, 'அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம்' என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, 'ட்யூட்' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதித்துப் பாடல்களை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் தனது பாடல்களை படக் குழு பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பட மூலாதாரம்,@Keerthiswaran_ படக்குறிப்பு,இளையராஜாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவரது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது 'இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?' படக் குழு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமையை எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. எக்கோவிடம் இருந்து சோனி நிறுவனம் வாங்கியது. நாங்கள் சோனி நிறுவனத்திடம் அனுமதியைப் பெற்று பாடல்களைப் பயன்படுத்தினோம்" எனக் கூறினார். ஆனால், "பாடல்களின் உரிமை தன்னிடம் உள்ளது. தனது பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி செந்தில்குமார், "30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்களைத் தற்போதும் மக்கள் ரசித்துக் கேட்கின்றனர். இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிப்படைகிறார்?" எனக் கேள்வி எழுப்பினார். "திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் படம் வெளியான பிறகு அமைதியாக இருந்துவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏன்?" எனவும் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தார். வெள்ளிக்கிழமையன்று வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தியதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார். மேலும், 'ட்யூட்' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வார காலம் அவகாசம் தருமாறு படக்குழு கோரியது. ஆனால் நீதிபதி அனுமதியளிக்க மறுத்துவிட்டார். சிக்கலை சந்தித்த 'குட் பேட் அக்லி' முன்னதாக, அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்திலும் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் படத்தில், 'இளமை இதோ...இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்' ஆகிய பாடல்களை படக்குழு பயன்படுத்தி இருந்தது. இந்தப் பாடல்களை சோனி நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு தெரிவித்தது. வழக்கின் தீர்ப்பில், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து பாடல்களை நீக்கியதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,Getty Images காப்புரிமை பிரச்னை - எஸ்.பி.பி சொன்னது என்ன? பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார். 'தன் இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி மேடைகளில் பாடக்கூடாது' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளப் பதிவு ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதைத் தெரிவித்திருந்தார். 'முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். அதோடு, "இளையராஜா தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியுள்ளேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்" என்று அவர் கூறியிருந்தார். "சட்டம் பற்றிய அறியாமை காரணமாக இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடினேன். இனி சட்டத்தை மதித்து அதை ஏற்கப் போகிறேன். அதேநேரம் இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் விவாதங்களையும் எவரும் மேற்கொள்ள வேண்டாம்" எனவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார். முன்னதாக, திரைப் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இண்டஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தினார். 'இந்த நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது' என எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு (2018 செப்டம்பர் மாதம்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், "என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடவுள்ளேன்," எனத் தெரிவித்தார். "தனது எந்தப் பாடலுக்கு உரிமை உள்ளது என்பதை இளையராஜா கூற வேண்டும். அப்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த 2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம்,Getty Images சிக்கலை சந்தித்த 'ராத்திரி சிவராத்திரி' "கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுத்து வருகிறோம்" எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன். "முன்னதாக, காப்புரிமை தொடர்பாக எக்கோ மற்றும் இண்ட்ரிகோ (INDRECO) நிறுவனங்களிடமும் பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது மேல்முறையீட்டில் உள்ளன" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, "பல்வேறு இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தது போலவே திரைப்படங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்." சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராசன்' படத்தில் 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியின்றி வனிதா விஜயகுமார் பயன்படுத்தியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை மாதம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. 'படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்கப்படும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சோனி நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று பாடலைப் பயன்படுத்தினோம்' என, வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஒரு படத்தில் இருந்து பாடலை மட்டும் எடுப்பது என்பது இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை சட்டத்தில் வருவதாகக் கூறும் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், "கேசட்டுகளை வெளியிடும் உரிமையை எக்கோவுக்கு இளையராஜா வழங்கியிருந்தார். அவர்கள் அதை வேறு வகையில் பயன்படுத்தியதால் எக்கோ மீது வழக்கு தொடரப்பட்டது" எனக் கூறினார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட மூலாதாரம்,instagram படக்குறிப்பு,இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 'மஞ்சுமல் பாய்ஸ்' படக் குழுவுக்கு நோட்டீஸ் கடந்த 2024ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2008ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, 'குணா குகை வரை சென்று பார்க்கலாம்' என்ற முயற்சியில் அப்பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது குகையில் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை எவ்வாறு மீட்டனர் என்பதே கதை. அதில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்தில் இடம் பெற்றிருந்த 'கண்மணி அன்போடு' பாடலை படக் குழு பயன்படுத்தியிருந்தது. இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 'பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவரே அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டது. "மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளோம். மிஸ்டர் அண்ட் மிஸஸ், குட் பேட் அக்லி, ட்யூட் ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது" என பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் காப்புரிமை சர்ச்சை தொடங்கிய பின்னணி தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை இளையராஜா தொடங்கினார். தற்போது வரை இந்திய மொழிகளில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தான் இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியில்லாமல் அகி, எக்கோ ஆகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் அவற்றுக்குத் தடை விதிக்குமாறு 2018ஆம் ஆண்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார். வழக்கில், "படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்த தடை இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். வழக்கின் முடிவில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் வழக்கு தொடர்வதில்லை? இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு காப்புரிமை மற்றும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தரும் வகையில் இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டி (IPRS) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சட்டபூர்வமாக இசையைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை சங்கமாக இசையமைப்பாளர்களுக்கு உதவி வருவதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. தாங்கள் உருவாக்கும் இசைக்கு நியாயமான ஊதியத்தை இசையமைப்பாளர்கள் பெறுவதை தாங்கள் உறுதி செய்வதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இளையராஜா அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனது அனைத்துப் பாடல்களின் உரிமையையும் நான் வைத்திருக்கிறேன். ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் எனது பாடல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் காப்புரிமைத் தொகை சினி இசைக் கலைஞர்கள் சங்கத்திற்குச் செல்லும்" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டியில் இருந்து இளையராஜா வெளியேறியதால், அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டது என்கிறார் சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன் "ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறிய பிறகே காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன" என்கிறார், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட இசையமைப்பாளர்கள் பலரும் ஐபிஆர்எஸ் அமைப்பில் உள்ளனர். உலகில் எங்கு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதைக் கண்டறிவதற்கான மென்பொருளை இந்த அமைப்பு வைத்துள்ளது" எனக் கூறுகிறார். "இசையைப் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான ராயல்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இசையமைப்பாளர்களுக்கு அந்த அமைப்பு வழங்கி வருகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறியதால், தனது பாடல்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஆர்.எஸ்.அந்தணன். "தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ஐபிஆர்எஸ் அமைப்பே சட்டரீதியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருகிறது. இதனால் அவர்களின் பெயர்கள் நேரடியாக வெளியில் தெரிவதில்லை" எனவும் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20kggpenm8o
  14. டிட்வா சூறாவளியால் நாட்டில் 80 பேர் பலி! 34 பேர் மாயம் புதிய இணைப்பு 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலையைத் தொடர்ந்து 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் 61,175 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 219,282 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 266 பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் தங்கியுள்ளனர். களனி, களு ஆறு, யான் ஓயா, மகாவலி , தெதுரு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, அத்தங்கலு ஓயா, மாணிக்க கங்கை ஆறு மல்வத்து ஓயா உட்பட பல முக்கிய ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இணைப்பு கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இணைப்பு நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 39 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 79 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் மோசமான வானிலை காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு மடுல்சீமை பட்டாவத்த தோட்டத்தைச் சேர்ந்த வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் மூன்று வயது சிறுவன் மற்றும் தாய், சகோதரிகள் அடங்குவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கண்டி கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைந்தது 17 காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துமவ நிலயைம் தெரிவித்துள்ளது. அசாதாரணமான வானிலை நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://ibctamil.com/article/heavy-rain-flood-death-toll-in-sri-lanka-today-1764239729
  15. பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து பிரிந்து, தனது வாழ்வின் பல கட்டங்களை அவர் கழித்துள்ளார். கிரணின் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கிரணின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும்கூட, அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்களோ என ஒரு கட்டத்தில் தோன்றியுள்ளது. ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு கிரண் பற்றிய தகவல் கிடைத்தபோது இந்த ஏமாற்றம் மகிழ்ச்சியாக மாறியது. கிரண் தனது பெற்றோரை சந்தித்தது எப்படி? கிரணின் தந்தை அப்துல் மஜீத் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களின் குடும்பத்துடன் தொடர்புடைய மூத்த நபரான அசாத் முனீர் இது குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கிரணின் மாமாதான் அசாத் முனீர். கஸூர் மாவட்டத்தில் உள்ள பாக்ரி கிராமத்தில் வசிக்கும் அசாத் முனீர் அந்தச் சம்பவம் குறித்து விவரித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு, கிரணுக்கு 10 வயது இருக்கும்போது, "அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி10 செக்டாரில் உள்ள என் சகோதரி, அதாவது அவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜி-10 பகுதி எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ளது, அங்குதான் அவர் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றார். இது 2008இல் நடந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது" என்று நினைவு கூர்ந்தார் அவர். "நீண்ட நேரமாகியும் கிரண் வீடு திரும்பாததால், அவரைத் தேடினோம், ஆனால் அவர் கிடைக்கவில்லை" என்கிறார் அசாத் முனீர். "அப்போது, கிரணை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் கிரண் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை." தான் ஐஸ்கிரீம் வாங்க வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், கனமழையில் வழி தவறிவிட்டதாகவும் கிரண் தெரிவித்தார். தனது வீட்டைத் தேடி நீண்ட நேரம் தெருக்களில் அலைந்ததாகவும், ஆனால் "வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், யாரோ என்னை இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்" என்றும் அவர் கூறுகிறார். "முதலில் நான் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்க வைக்கப்பட்டேன். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு பில்கீஸ் எதி என்னை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அங்கு 17 ஆண்டுகள் தங்கினேன்" என்று கிரண் பகிர்ந்து கொண்டார். கராச்சியில் உள்ள எதி மையத்தைச் சேர்ந்த ஷபானா பைசல், கிரண் 17 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு வந்ததாகக் கூறினார். இதுகுறித்துப் பேசுகையில், "யாரோ ஒருவர் அவரை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம், ஒருவேளை அவர் வழி தவறியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "அவர் சிறிது காலம் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், பில்கீஸ் எதி, இஸ்லாமாபாத் எதி மையத்திற்குச் சென்றார். அங்கு கிரண் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தார். எனவே அவர் கிரணை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்." சில காலத்திற்கு முன்பு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்துடன் தொடர்புடைய 'மேரா பியாரா' குழு கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் கிரணை நேர்காணல் செய்து அவரது உறவினர்களைத் தேடும் பணியை மேற்கொண்டதாகவும் ஷபானா பைசல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது குடும்பத்தினருடன் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படம். குடும்பத்தைக் கண்டறிய உதவிய நேர்காணல் லாகூரில் உள்ள "மேரா பியாரா" திட்டத்தின் மூத்த காவல்துறை தகவல் தொடர்பு அதிகாரியாக சித்ரா இக்ரம் உள்ளார். பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட "மேரா பியாரா" திட்டம், "காணாமல் போன குழந்தைகளை அவர்களது உறவினர்களுடன் மீண்டும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் விளக்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 51,000 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டிஜிட்டல் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, காவல்துறை ஆதாரங்களும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், "கைவிடப்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மையங்களில், எங்கள் குழுக்கள் நேர்காணல் செய்கின்றன. பின்னர் அந்த நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன், குழந்தையின் குடும்பத்தினரைத் தேடுகிறோம்," என்றும் சித்ரா இக்ராம் கூறினார். கிரண் விஷயத்திலும் இதேதான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். "எங்கள் குழுக்களில் ஒன்று கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்று, கிரணையும், கைவிடப்பட்ட மற்ற பிறரையும் நேர்காணல் செய்து தகவல்களைச் சேகரித்தது." "கிரணுக்கு பெரிதாக நினைவில்லை. அவர் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் தன் உறவினர்களுடன் தங்கியிருந்தார்." கிரண் தனது தந்தையின் பெயர் அப்துல் மஜித் என்பதையும் அவரது கிராமத்தின் பெயரையும் நினைவில் வைத்திருந்ததாக சித்ரா இக்ரம் கூறினார். "நாங்கள் இந்தத் தகவலை எங்கள் கசூர் அலுவலகத்திற்கு அனுப்பி, கிரணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டோம்." அதுகுறித்துப் பேசிய கசூரில் உள்ள காவல் துறை தகவல் தொடர்பு அதிகாரி முபாஷ்ஷீர் ஃபயாஸ், "கிரண் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தபோது, அதில் கிராமத்தின் பெயரும் தந்தையின் பெயரும் இருந்தது. அது அவரது குடும்பத்தைத் தேடுவதற்கு பெரிய உதவியாக இருந்தது" என்றார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,'அப்னா பியாரா' நிகழ்ச்சி மூலம் பகிரப்பட்ட தகவல் 'ஒரே நாளில் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது' முபாஷ்ஷீர் ஃபயாஸ் அதுகுறித்துக் கூறுகையில், முதலில், "நாங்கள் அந்தப் பகுதியின் கிராம நிர்வாகத் தலைவரையும், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியோரையும் தொடர்பு கொண்டோம். நாங்கள் அப்துல் மஜித் பற்றி விசாரித்தபோது, அங்கு பல அப்துல் மஜித்கள் இருப்பது தெரிய வந்தது. கிரணின் குழந்தைப் பருவ புகைப்படங்களை சிலருக்குக் காட்டினோம். ஆனால் அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை," என்றார். "அப்துல் மஜித் என்ற பெயரில் உள்ள பலரையும் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை. சில நேரங்களில், காவல் நிலையங்களைச் சேர்ந்த பழைய காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உதவிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்திலும், நாங்கள் அந்தப் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த பழைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது பேருதவியாக இருந்தது. அப்போது அவர்களில் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரண் என்ற பெண் காணாமல் போனதாகவும், அவரைப் பலர் தேடியதாகவும் எங்களிடம் கூறினார்" என்று அவர் கூறினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தங்களிடம் கூறியதாகவும் முபாஷ்ஷீர் ஃபயாஸ் தெரிவித்தார். "அதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி கிரண் இருக்கும் பகுதியை அடைய எங்களுக்கு உதவினார். அங்கு நாங்கள் மசூதிகளில் அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடு செய்தோம். அங்குள்ள முதியவர்களைச் சந்தித்தோம். அங்கிருந்து, அப்துல் மஜித் என்ற ஒருவரின் மகள் 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதை அறிந்தோம்" என்று குறிப்பிட்டார். மேலும், "எங்களது கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. நாங்கள் அப்துல் மஜித்தை நெருங்கினோம், நாங்கள் அவரது பகுதியை அடைந்ததும், அங்கிருந்த பலருக்கும் கிரண் காணாமல் போனது நினைவுக்கு வந்தது. எங்களை அப்துல் மஜித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்" என்று நடந்ததை விவரித்தார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது தந்தை மற்றும் சகோதரருடன் ஆனந்த கண்ணீர் அப்துல் மஜீத்திடம் அவரது மகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் உள்படப் பல்வேறு புகைப்படங்களைக் காட்டியதாக முபாஷ்ஷீர் ஃபயாஸ் கூறுகிறார். "அவர்கள் எங்களுக்கு குடும்பத்தினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், கிரணின் அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட படிவம் பி-ஐயும் காட்டினர்." படிவம் பி என்பது பாகிஸ்தானில் குழந்தை பதிவுச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்துல் மஜீத்தான் கிரணின் தந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கால் வந்தது, அதில் தந்தை, மகள் மற்றும் பிற உறவினர்கள் கிரணுடன் பேசிவிட்டு கராச்சிக்கு கிளம்பிச் சென்றனர். அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, கிரண் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இறுதியில், நவம்பர் 25 அன்று அவர் வீடு திரும்பினார். கிரணின் மாமா அசாத் முனீர், தனது மருமகள் காணாமல் போனது குறித்துப் பேசுகையில், "கிரண் அப்துல் மஜித்தின் மூத்த மகள். இப்போது அவருக்கு கிரண் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் காணாமல் போனதில் இருந்து, அப்துல் மஜித்தின் கண்களில் எப்போதும் கண்ணீரை கண்டிருக்கிறேன்" என்று கூறுகிறார். மேலும், "அவர் தனது மகளைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று மட்டும்தான் கேட்பார். அவர் எப்போதும் தனது மகளின் நிலையைப் பற்றி கவலை கொண்டிருந்தார்" என்கிறார். "அவரது மகள் காணாமல் போன துக்கம் அவரை முன்கூட்டியே முதுமை அடையச் செய்துவிட்டதாகக் கூறிய அவர், அப்துல் மஜித் தனது மகளை அடையாளம் கண்டபோது, அதை முதலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார். முன்பு அவரது கண்களில் சோகக் கண்ணீரை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஆனந்த கண்ணீரைக் காண்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய கிரண், தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். சமையல், தையல் கலை மற்றும் கல்வி கற்றுக்கொண்ட பிறகு எதி மையத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். "கடினமான காலங்களில் அவர்கள் என்னை முன்னேற ஊக்குவித்து, என் மன உறுதியை உயர்த்தினர். அது மிகப்பெரிய விஷயம்" என்கிறார் கிரண். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0k1dnjevjo
  16. 28 Nov, 2025 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்குரிய நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும செலவு தொடர்பான சுற்றறிக்கையை சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள செலவு சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணமளிப்பதற்கு உரிய பண்டங்கள், செயற்பாடுகள் மற்றும் ஆலோசனையற்ற சேவைகளுக்கு உரிய பெறுகை வழிமுறைகள் மற்றும் கையேடு -2024 இல் குறிப்பிடப்பட்டுள்ள 3.1.8 பிரிவுக்கமைய செயற்படுமாறு இதனூடாக அறிவுறுத்தப்படுகிறது. இதற்கமைய பிரதேச செயலாளர் மேற்குறிப்பிட்படப்ட வழிமுறைகள் மற்றும் கையேட்டின் 2.9இன் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள வரையறையான 50 மில்லியன் ரூபா வரையான பெறுகை நடவடிக்கைகளை எவ்வித தடைகளுமின்றி விரைவாக மேற்கொள்ள முடியும் என பெறுகை ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 2 ஆவது பந்தியில் குறித்துரைக்கப்பட்டதற்கமைய செயற்படுவதற்கு பிரதேச செயலாளருக்கு 50 மில்லியன் ரூபா வரையில் செலவழிப்பதற்கு கூடிய வகையில் நிதி தத்துவங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலாளர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மேலதிகமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கு மேலும் செலவழிக்க வேண்டுமாயின் அது குறித்த விபரங்களை மாவட்டச் செயலார்கள் பாதுகாப்பு அமைச்சு, அசர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு விரைவாக அறிவுறுத்தல வேண்டும். இந்த செலவுச் சுற்றறிக்கையின் பிரதிகள் ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர், பெறுகை ஆணைக்குழுவின் தலைவர், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர்,கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231855
  17. இடிந்து விழுந்த மொரகஹகந்த பாலம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை - மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வுத் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். https://ibctamil.com/article/vehicles-washed-away-by-floods-1764332891
  18. 'மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது' - இலங்கையில் வெள்ள பாதிப்புகளின் நிலவரம் என்ன? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சூறாவளி தாக்கத்தினால் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கி வருகின்றது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது. மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது' "மதியம் 1:30 மணியளவில் என் தந்தை எனக்கு போன் செய்தார். மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இப்போது பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கள் வீட்டில் கூடியுள்ளனர்" என்று பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. இவர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். "ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலை சரிந்து விழுந்து எங்கள் கிராமத்தையே புதைத்துவிட்டது" என்று கூறிய அவர், "நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்." படக்குறிப்பு,ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலைதான் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது என்கிறார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. "சில வீடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழி இல்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை" என்றார் யோஹன் மலக. தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உள்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி இல்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, எங்கும் செல்ல வழி இல்லை, அனைவரும் எங்கள் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவரை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை." "இரண்டு குடும்பங்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை வீட்டிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற வழி இல்லை என்பதுதான்" என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். 10 நாட்களில் 1000 மி.மீ மழை எதிர்வரும் 24 மணிநேரத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு வெகுவாக அதிகரிக்கக்கூடும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆபத்து நிலைமை காணப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையையொட்டி, மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையகத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகுமாக இருந்தால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. அதனால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையகம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளுக்கு சுமார் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் மாத்திரம் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,Getty Images பேராதனை பல்கலைக் கழகத்திற்கு வரலாறு காணாத பாதிப்பு தெற்காசியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமாகக் கருதப்படும் பேராதனை பல்கலைக் கழகம் வரலாறு காணாத அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக் கழகத்தை அண்மித்து ஊடறுத்துச் செல்லும் மகாவளி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளது. பல்கலைக் கழகத்தின் மைதானம், பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அத்துடன், பல்கலைக் கழகத்தை அண்மித்துள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் காணப்பட்ட பல மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன், கண்டி நகரின் முக்கியமான பௌத்த விகாரையான கெட்டம்பே விகாரையும் நீரில் மூழ்கியுள்ளது. அதேவேளை, கண்டி நகரில் பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. மேலும், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தின் ஹசலக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதுடன், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர். நுவரெலியா, நாவலபிட்டிய, கெலிஓயா, கம்பளை உள்ளிட்ட பல நகரங்களுக்குள் வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது. இதனால், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பட மூலாதாரம்,Sri Lanka Air Force படக்குறிப்பு,அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப் படையினர் மீட்டனர். மீட்புப் பணிகள் தீவிரம் பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப்படையினர் காப்பாற்றியுள்ளனர். மின்சாரம், தொலைபேசி துண்டிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீதமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. பல்வேறு பகுதிகளில் மின்சார தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளமை, மின்சார தூண்களின் ஊடாக வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளமை, மண்சரிவு காரணமாக மின்சார தூண்கள் உடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மின்சார துண்டிப்பை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சில பகுதிகளுக்குள் அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. மின்சார விநியோகத்தை இயலுமான அளவுக்கு விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பேருந்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ரயில் தண்டவாளங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, இலங்கைக்கு வரும் சில விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடுவதற்கும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyke19yd17o
  19. இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு 28 Nov, 2025 | 03:37 PM "இந்த கடினமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாம் அனைவரும் செயற்திறனுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (28) முற்பகல் முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக தேவைப்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது பரிந்துரைத்ததுடன், அதற்காக முழு ஆதரவையும் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பணம் தடையல்ல என்று குறிப்பிட்ட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ மாவட்டக் குழுக்களைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்ததுடன்,தேவைக்கேற்ப செலவழிக்க மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த சுற்றறிக்கையும் அந்த நிதியை செலவிடுவதை தடுக்காது என்றும், அவ்வாறு ஏதேனும் தடைகள் இருந்தால், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலுடன் நிதியைச் செலவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், நிவாரணக் குழுக்களுக்கு பிரவேசிக்க முடியாத இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்குத் தேவையான ஹெலிகொப்டர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகொப்டர் வசதிகளை வழங்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நிவாரண முகாம்களுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும், வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும், வீடுகளுக்கு வெளியே வேறு இடங்களில் உள்ளவர்களுக்கும் சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தமது மாவட்டங்களில் நிவாரண சேவைகள் கிடைக்காத பகுதிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரினார். மேலும், மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் அபாயகர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/231823
  20. “டித்வா” புயல் - 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கான விசேட அறிக்கை! 28 Nov, 2025 | 05:21 PM டிட்வா புயல் சற்று தீவிரம் பெறுகின்றது.மிகக்கனமழை, வேகமான காற்று வீசுகை மற்றும் கடல்நீர் உட்புகுதல் தொடர்பான எச்சரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ளார். டிட்வா புயலின் வெளி வளையம் வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இன்று இரவு டிட்வா புயலின் மையம் வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது. வெளி வளையம் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும். காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு மிக அதிக நீர் வரத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும். பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள். குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும். மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231854
  21. சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்! 28 Nov, 2025 | 02:52 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திட்வா புயல் காரணமாக முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது. குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது. முள்ளிப்பொத்தானை,ஜாமியா நகர்,ஈச்சநகர்,பத்தினிபுரம், புதுக்குடியிருப்பு,கோயிலடி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளது. தம்பலகாமம்,கோயிலடி பகுதியில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை சேர்ந்த 90 பேர்கள் தி/ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத் தங்கல் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 11பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய வகையில் 124 கிராம சேவகர் பிரிவில் இருந்து 5433 குடும்பங்களை சேர்ந்த 16063 நபர்கள் இன்று காலை 11.00 பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231816
  22. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 தொன் உணவு நன்கொடை! Published By: Digital Desk 1 28 Nov, 2025 | 03:46 PM கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது கையிருப்பில் இருந்து 4.5 தொன் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன், கப்பல் கூடாரங்கள், மின்சார மின்விளக்குகள் மற்றும் மின்னூக்கி கேபிள் கம்பிகள் உள்ளிட்ட இரண்டு தொன் பிற நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்கள் லொரிகளில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231825
  23. 28 Nov, 2025 | 02:24 PM வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார். 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே, தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார். எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர். https://www.virakesari.lk/article/231810
  24. 2016ஆம் ஆண்டுக்கு பின் மிக மோசமான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! 28 Nov, 2025 | 01:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியீட்டின்படி, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. https://www.virakesari.lk/article/231796
  25. அண்ணை, இன்று தொடக்கம் எமது பகுதியிலும் தொடர்மழை, காற்று வேகமாக வீசி மரங்களை வீழ்த்துகிறது. நாளை வரை இந்த நிலை தொடரலாம். தற்போது கையடக்க தொலைபேசி சேவை இயங்கவில்லை! மின்தடை இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.