Everything posted by ஏராளன்
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் - பவானந்தராஜா எம்.பி! 11 Feb, 2026 | 04:23 PM யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். புதன்கிழமை (11) வட்டுக்கோட்டை - இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள் கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். பொலிஸாரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், "சங்கானை பிரதேச செயலர் பிரிவில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வலி மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறினீர்கள். அது தொடர்பான முன்னேற்றம் என்ன?" என் கேள்வி எழுப்பினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தெரிவிக்கையில், நாங்கள் இது தொடர்பான சில விபரங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இரவிலோ அல்லது ஒரு கிழமையிலோ நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆறுதலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/238406
-
அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்
அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர் Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 05:09 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர். லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது. அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது. வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர். "இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/238415
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு 3 தடவைகளாக 50000 ரூபா வீதம் 150000 ரூபா மொத்தமாக மலசலகூடத்தை பூரணப்படுத்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம். இருப்பு 178,803.62 +50025=128,778.62 தற்போதைய வங்கி மீதி. வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு மூன்றாவது தடவையாக 50000 ரூபா வைப்பிடப்பட்டது. காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.
-
நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!
"எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்" - பெருந்தோட்ட மக்கள் நெகிழ்ச்சி Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 04:57 PM எங்களைப் பார்க்க வந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான் என பெருந்தோட்ட மக்கள் தங்களது நெகிழ்ச்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர். நுவரெலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நுவரெலியா - அட்டன் பிரதான வீதி நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தோட்டப்பகுதிக்கு சென்று அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி குறித்த தோட்டப்பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்கள் அவரை மிகவும் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். தமக்கான சம்பளத்தை அதிகரித்தமைக்காக இதன்போது தொழிலாளர்கள் ஜனாதிபதிக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தொழிலாளர்கள், “எங்களது சம்பளத்தை உயர்த்தியது மட்டுமன்றி, எங்களது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி நீங்கள்தான்” எனத் தெரிவித்தனர். தங்களைச் சந்திக்க வந்த முதல் ஜனாதிபதி இவரே என அவர்கள் இதன்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/238407
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Live 15th Match, Group C (N), Wankhede, February 11, 2026, ICC Men's T20 World Cup West Indies 196/6 England (9.3/20 ov, T:197) 90/4 England need 107 runs in 63 balls. Current RR: 9.47 • Required RR: 10.19 • Last 5 ov (RR): 37/3 (7.40) Win Probability ENG 31.57% WI 68.43%
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு இலகுவான வெற்றி Published By: Vishnu 11 Feb, 2026 | 07:32 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 67 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது. நேதன் எலிஸ், அடம் ஸ்ம்ப்பா ஆகிய இருவரும் மிகவும் துல்லியமாக பந்துவீசி தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தனர். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது அதிரடி ஆட்டக்காரர் ட்ரவிஸ் ஹெட் (6) ஆட்டம் இழந்தார். எனினும் கெமரன் க்றீன் (21), ஜொஷ் இங்லிஸ் (37), ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு ஓரளவு பலம் சேர்த்தனர். க்ளென் மெக்ஸ்வெல் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (88 - 4 விக்.) அதன் பின்னர் மெட் ரென்ஷோ, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உரமூட்டினர். மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 45 ஓட்டங்களையும் மெட் ரென்ஷோ 37 ஓட்டங்களையும் பெற்றனர். கூப்பர் கொனலி, சேவியர் பாட்லட் ஆகிய இருவரும் தலா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மார்க் அடயா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்ளைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் டொக்ரெல் (41), லோக்கன் டக்கர் (24) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் நேதன் எலிஸ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.5 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அடம் ஸ்ம்ப்பா 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238429
-
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல் 11 Feb, 2026 | 03:30 PM “நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார். “இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள் சிங்கள பௌத்தர்கள். அதனால் பௌத்த தர்மத்திற்காகவும், பௌத்த கலாசாரத்திற்காகவும் நிற்பது தவறு அல்ல. அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும், அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்” என அவர் வலியுறுத்தினார். இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடாக இருந்தாலும், அதுவே அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் திறன் கொண்டது என்றும், அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “நான் சிங்களன், நான் பௌத்தன். அதே சமயம், பிற மொழிகள், மதங்கள், கலாசாரங்களையும் பாதுகாக்க நான் செயல்படுகிறேன். ஒருவர் தன் மதத்தையும் கலாசாரத்தையும் நம்பினால்தான் மற்றவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தன் அடையாளம், தன் நாடு, தன் இனம், தன் மதம் ஆகியவற்றை மறந்து முன்னேற முடியும் என்று யாராவது நினைத்தால், அவருக்கு உண்மையான அடையாளம் இருக்காது. முதலில் ‘நான் யார்’ என்பதை ஏற்றுக்கொண்டு, அதில் நம்பிக்கை கொண்டால்தான் மற்றவர்களை பாதுகாக்க முடியும். தன் மதத்தை தைரியமாக வெளிப்படுத்தும் மனஉறுதி இல்லாதவர், பிற மதங்களை ஒருபோதும் பாதுகாக்க மாட்டார்” என்றார். தன்னை பௌத்தர்களுக்காகவும், நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதை இனவாதமாக கூறுவது தவறு என்றும், தான் இனவாதி அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தை விமர்சித்த அவர், “தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். என்னை சிறையில் அடைத்து தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா, அல்லது வெளியே வைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா என்பதையும் அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டுக்கிடையில் குழப்பத்தில் இருந்து என்னை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எது நடந்தாலும் எனக்கு அது ஒன்றுதான்” என்றார். மக்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்களின் தேவைகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பார்கள்; JVPயின் தேவைகளின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் கூறினார். தற்போதைய அரசாங்கம் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். எரிபொருள் விலை உயர்வு, வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, கடலில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், உர மானியம் வழங்கப்படாமை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சரை விமர்சித்த அவர், “டிக் டொக் பார்க்கும் வேலையை நிறுத்தி, மருத்துவர்களின் பிரச்சினைகளையும் மருந்து பற்றாக்குறையையும் கவனிக்க வேண்டும். நோயாளிகள் பெரும் அவலத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் நேரம் கழிப்பதைவிட சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். இறுதியாக, “இந்த நாட்டில் உண்மையான தலைவர்களின் பற்றாக்குறை உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இறுதியில் மக்கள் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இல்லையெனில், தலைமை இல்லாத பொம்மை அரசியல் உருவாகும் அபாயம் உள்ளது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238393
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு பிணை! 11 Feb, 2026 | 03:51 PM திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அனைத்து எதிராளிகளும் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும், சாட்சிகளை பயமுறுத்த கூடாது, பிரதேசத்தின் பொது அமைதி மற்றும் சமய சகவாழ்விற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளும் மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ் நிபந்தையில் ஒன்றோ அனைத்துமோ எதிராளிகளால் மீறப்பட்டால் பிணை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியல் நடைமுறைக்கு வரும் எனவும் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238397
-
நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!
நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்! 11 Feb, 2026 | 01:43 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், " ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தித்த ஒரே அரச தலைவரும் ஆவார் ” எனத் தெரிவித்தனர். இதற்கிடையில், நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஒரே தேசமாக ஒன்றிணைவோம்” தேசியப் பிரசாரத்தின் மத்திய மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான விழிப்புணர்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊடாக இந்த இலக்கை அடைய ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டமிட்டுள்ளது. அத்துடன், நுவரெலியாவில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்காற்றிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கௌரவம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238378
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Win Probability ENG 52.98% WI 47.02%
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
இலங்கையில் HPV தடுப்பூசி மாணவிகளுக்கு இலவசமாக போடப்படுகிறது அண்ணா. PDF இணைப்பு 👇 http://old.epid.gov.lk/web/images/pdf/HPV/Leaflet/information_leaflet_tamil.pdf
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு! Published By: Digital Desk 3 10 Feb, 2026 | 03:01 PM ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார். அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: 2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் இரகசிய அறிக்கைகளை ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான 'மிக இரகசிய' விவரங்களையும் அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறும் செயல் என 'ரிபப்ளிக்' என்ற அமைப்பு முறைப்பாடு அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து தொடர்ந்து வெளிவரும் முறைப்பாடுகள் குறித்து மன்னர் மிகுந்த கவலை அடைந்துள்ளாரர். பொலிஸ் எங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்." இதன் மூலம், தனது சகோதரரைக் காப்பாற்ற முயலாமல் சட்டத்திற்கு மதிப்பளிக்க மன்னர் தீர்மானித்திருப்பது தெளிவாகியுள்ளது. அண்ட்ரூ ஏற்கனவே தனது 'இளவரசர்' மற்றும் 'டியூக்' பட்டங்களை 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழந்தார். தற்போது அவர் தனது வின்சர் கோட்டை இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) எஸ்டேட்டில் தங்கியுள்ளார். மன்னர் சார்ள்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்த ஒருவர் "அண்ட்ரூ பற்றி உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?" எனக் கத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரும் எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அண்ட்ரூ இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெண்ணுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/238304
-
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர்கள் என்ன?
வடமொழிப் பெயர் சர்ச்சை: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ''ராஜராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வட மொழியில் மயங்கி கிடந்தவர்கள்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் பேசியது விவாதப் பொருளாகியிருந்தது. இந்தக் கருத்தை பலர் மறுக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், "எந்த அரசன் மீதும் எனக்கு மதிப்புக் கிடையாது. யாரையும் நான் பெரிய சக்தியாக பார்ப்பது கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில்தான் நாடு குட்டிச் சுவராகி சமஸ்கிருதமயமானது. கோவில் கருவறைக்குள் இருந்த தமிழ் தூக்கி, வெளியே வீசப்பட்டது எல்லாம் இந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான்." "ராஜராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வட மொழியில் மயங்கி கிடந்தவர்கள். வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் எம் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே, எனக்கு ஆண்ட பரம்பரை என சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை" என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சோழ மன்னர்களுக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். பட மூலாதாரம்,X/Thol Thirumavalavan படக்குறிப்பு,கோப்புப் படம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் இயற்பெயர் என்ன? விஜயாலயச் சோழனுடன் துவங்கிய பிற்காலச் சோழர் மரபில் வந்த ராஜராஜ சோழனும் அவருடைய புதல்வனான ராஜேந்திரச் சோழனும் சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த மன்னர்களாக விளங்கியவர்கள். இந்த சோழ மன்னர்களின் காலம், அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நிலவுடைமை, சமூகத்தின் எந்தப் பிரிவுக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதெல்லாம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில்தான் தொல். திருமாவளவன் இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். "சோழ மன்னர்களில் புகழ்பெற்ற மன்னனாக இருந்த ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி. கி.பி. 985-ஆம் ஆண்டு அருண்மொழி என்ற பெயரிலேயே அவர் சோழ அரியணையில் ஏறினார். கி.பி. 988-ஆம் ஆண்டில் அவருக்கு ராஜராஜ சோழன் என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டு, பிறகு அதுவே தொடர்ந்தது. அருண்மொழிக்கு வேறு பல சிறப்புப் பட்டப் பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன" என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன். பட மூலாதாரம்,Balasubramanian படக்குறிப்பு,ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன். "போளூர் அருகே உள்ள திருமலை பாறைக் கல்வெட்டில் ராஜராஜரின் இயற்பெயரான அருண்மொழியுடன் 'அலைபுரியும் புனர் பொன்னி ஆறுடைய சோழன்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "ராஜ ராஜகேசரி பன்மரான ராஜராஜ தேவர்க்கு யாண்டு 21ஆவது அலை புரியும் புனற் பொன்னி ஆறுடைய சோழன் அருமொழிக்கு யாண்டு இருபத்தொன்றாவதென்" என்கிறது அந்தக் கல்வெட்டு." "அதேபோல் இவரது மகன் ராஜேந்திரசோழனுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் மதுராந்தகன். இதனை திருவாலங்காட்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் தனது சித்தப்பனான மதுராந்தகச் சோழன் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்ததால், அந்தப் பெயரையே தனது மகனுக்கும் சூட்டியிருக்கலாம் என தன்னுடைய 'பிற்காலச் சோழர் சரித்திரம்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். கி.பி. 1012ஆம் ஆண்டில் இவருக்கு இளவரசுப் பட்டம் கட்டியபோது, ராஜேந்திரன் என்ற அபிஷேகப் பெயர் சூட்டப்பட்டது என்கிறது பிற்காலச் சோழர் சரித்திரம். "ராஜராஜனைப் போலவே இவருக்கும் மேலும் பல சிறப்புப் பட்டங்கள் இருந்தன." என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். பட மூலாதாரம்,Bhavani ராஜராஜசோழனின் விருதுப் பெயர்களை சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'பிற்கால சோழர் சரித்திரம்' நூல் விரிவாகப் பட்டியலிடுகிறது. ராஜராஜ சோழனுக்கு "ஷத்ரிய சிகாமணி, ராஜேந்திர சிம்மன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன், நித்தவினோதன், ராஜஸ்ராயன், சிவபாத சேகரன், தெலுங்க குல காலன், ஜனநாதன், ரவிகுல மாணிக்கம், நிகரிலி சோழன், சோழேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், சோழ நாராயணன், கீர்த்தி பராந்தகன், மும்முடி சோழன், ஜெயங்கொண்ட சோழன், சிங்களாந்தகன்" ஆகியவை ராஜராஜ சோழனின் பட்டப் பெயர்களாக இந்த நூலில் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல் அவரது மகன் மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜேந்திர சோழனுக்கு "உத்தம சோழன், சோழேந்திரசிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், கடாரம் கொண்டான், கங்கைகொண்ட சோழன்" போன்ற பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்ததாக சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images "திருவலஞ்சுழி கோவில் கல்வெட்டில் தன்னை சிவசரண சேகரன் என்று குறிப்பிட்டுள்ளான்" என்கிறது குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'இராஜேந்திர சோழன்' நூல். இந்தப் பெயர்கள் தவிர, ராஜேந்திரச் சோழனுக்கு வீர ராஜேந்திரன், பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன், அதிசய சோழன், ஜெயசிம்ம சிம்ம சரபன், மலைநாடு கொண்டான், மண்ணைக் கொண்ட சோழன், மகிபால குலகாலன், வீரசோழன், ராஜராஜேந்திரன், மதுராந்தகன், இரட்டபாடி கொண்ட சோழன், நிருப திவாகரன், பார்திவேந்திரன், மனுகுல சோழன், ராஜ வித்யாதரன், உதர விடங்கன், தான வினோதன், பராக்கிரம சோழன் போன்ற சிறப்புப் பெயர்கள் இருந்ததாகவும் சொல்கிறார் குடவாயில் பலசுப்பிரமணியன். சோழ மன்னர்களின் தமிழ்ப் பணிகள் சோழ மன்னர்கள் சில தமிழ்ப் பணிகளைச் செய்ததாக குறிப்பிடுகிறார் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவரான பேராசிரியர் மா. பவானி. "சோழர் ஆட்சியில்தான் சிதம்பரத்தில் தேவாரப் பதிகங்கள் தொகுத்து ஒலைகளில் எழுதப்பட்டன. தஞ்சாவூர் இராஜராஜேஸ்வரத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்வதற்கென 48 பிடாரர்களை (ஓதுவார்களை) நியமித்தார்கள். தமிழில் பாடவும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். மூவர் உலா, கலிங்கத்துப் பரணி , பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள் சோழர் காலத்தில்தான் உருவாயின. திருக்கைக்கோட்டி என்று கூறப்படும் மண்டபங்களில் தேவாரத் திருமுறைகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டதுடன் பாடவும் பட்டன" என்கிறார் அவர். "இந்தக் காலகட்டத்தில் பக்தி சார்ந்த தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியுள்ளன" என்கிறார் மா. பவானி. பொ. வேல்சாமி போன்ற ஆய்வாளர்கள், சோழர்கள் காலத்தில் வடமொழியை வளர்ப்பதற்கான பணிகளே வெகுவாக நடைபெற்றன என்கிறார்கள். 'சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?' என்ற பொ. வேல்சாமியின் நூலில் இடம்பெற்றுள்ள 'சோழர் காலத்தில் சமஸ்கிருதக் கல்லூரிகளே இருந்தன' என்ற கட்டுரையில், "பல்லவர்கள் காலம், சோழர்கள் காலம், நாயக்கர்கள் காலம், மராட்டியர்கள் காலம், ஆங்கிலேயர்கள் காலத்தின் முன்பகுதி என்று தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலம் முழுமையும் வடமொழிக் கல்லூரிகளே செயல்பட்டுவந்தன" என்று குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78xd2jw4zwo
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இரட்டை சுப்பர் ஓவர்களில் தென் ஆபிரிக்கா வெற்றி; ஆப்கானிஸ்தானின் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாட்டம் Published By: Vishnu 11 Feb, 2026 | 06:36 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா இரட்டை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் ஓவரில் முடிவடைந்த முதலாவது போட்டி இதுவாகும். இப் போட்டி முடிவுடன் ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதன் சுப்பர் 8 வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த (187 ஓட்டங்கள்) எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிப்பதற்காக மத்தியஸ்தர்களால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் இரண்டாவது தடவையாக ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் பிரகாரம் சம்நிலையில் முடிவடையும் போட்டி, சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணி தீர்மானிக்கப்படும்வரை சுப்பர் ஓவர் தொடரவேண்டும். இதற்கு அமைய அமுல்படுத்தப்பட்ட இரண்டாவது சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்களையும் இழந்து 19 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. சமநிலையில் போட்டி முடிவு தென் ஆபிரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (5) ஆட்டம் இழந்த பின்னர் குவின்டன் டி கொக், ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ரெயான் ரிக்ல்டன் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர். அவர்களை விட டிவோல்ட் ப்ரவிஸ் 23 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சன் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது. கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கெகிசோ ரபடாவின் முதலாவது முதலாவது பந்து நோபோலானது. அடுத்த பந்து வைட் ஆக ப்றீ ஹிட் தொடர்ந்து. ஆனால், ப்றீ ஹிட்டை நூர் அஹ்மத் சரியாக பயன்படுத்தாததுடன் அந்தப் பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. அடுத்த பந்தில் நூர் அஹ்மத் பக்கவாட்டில் நகர்ந்து சிக்ஸாக விளாசினார். கடைசி 4 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மூன்றவாது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. ரபடா வீசிய 4ஆவது பந்தும் நோபோலானதுடன் அந்தப் பந்தில் 2 ஓட்டங்களும் பெறப்பட்டது. இப்போது கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தை நூர் அஹ்மத் வைட் லோங் ஓன்னை நோக்கி பந்தை அடித்து 2 ஓட்டங்களைப் பெற முயற்சித்தார். ஆனால், களத்தடுப்பில் வேகமாக செயல்பட்ட மார்க்கோ ஜென்சன் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளர் ரபடாவுக்கு எறிந்தார். அதனைப் பிடித்த ரபடா மின்னேல் வேகத்தில் தாவி பந்துடன் இடது கையால் ஸ்டம்ப்களை தட்டி பஸால்ஹக் பாறூக்கியை ரன் அவுட் ஆக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 4 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவரைவிட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (22), அணித் தலைவர் ராஷித் கான் (20) ஆகிய இருவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர். நூர் அஹ்மத் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதன் பின்னர் முதலாவது சுப்பர் சம நிலையில் முடிவடைய இரண்டாவது சுப்பர் ஓவரில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது. https://www.virakesari.lk/article/238426
-
பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர்
பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர் 11 Feb, 2026 | 02:46 PM ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். 'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார். சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் சோல்பொன் மம்பெடோவா (Ms. Cholpon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/238385
-
மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ; தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவு ; இதுவரை 28 பேர் பலி ; பாடசாலைகளில் முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு
மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ; தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவு ; இதுவரை 28 பேர் பலி ; பாடசாலைகளில் முகக்கவசம் அணியுமாறு அறிவிப்பு 11 Feb, 2026 | 02:39 PM மெக்சிகோ நாட்டின் பல நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தலைநகரில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தட்டம்மை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஜாலிஸ்கோ மாநிலத்தில் குவாடலஜாராவில் பகுதியில் இதுவரை 1,245 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வாரத்தில் 2.5 இலட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மெக்சிகோ நாடு முழுவதும் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த தீவிர சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பாடசாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238387
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்! 11 Feb, 2026 | 11:40 AM திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (11) காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். https://www.virakesari.lk/article/238368
-
பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!
மன்னாரில் சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்களாக உள்ளன - அமைச்சர் பிமல் ரத்நாயக்க Published By: Vishnu 11 Feb, 2026 | 05:13 AM மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்னாரில் இருந்து இலவன் குளம் ஊடாக புத்தளம் செல்லும் பாதை தொடர்பாக சர்ச்சை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன.இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் . அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் . இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/238359
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
நாளொன்றுக்கு 100 புற்றுநோயாளர்கள்; 40 பேர் உயிரிழப்பு - பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி 10 Feb, 2026 | 04:48 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238330
-
கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!
கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்! 11 Feb, 2026 | 11:35 AM கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்படி, உயிரிழப்புகள் மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. டம்பிளர் ரிட்ஜில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்குள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வீடு ஒன்றிலிருந்து மேலும் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலை நடத்திய சந்தேகநபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் தாக்குதலில் காயமடைந்த சுமார் 25 பேர் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். துப்பாக்கிதாரி கொல்லப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து கனேடிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238366
-
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் 10 Feb, 2026 | 04:56 PM (எம்.மனோசித்ரா) கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல. 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது. இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 - 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/238334
-
இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்
இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார். "இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது" என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் கூறியிருந்தது. "எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் விரிவாக எழுதியுள்ளது. இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் குறிப்பிட்டுள்ளது. இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images ராஜபக்ச கூறியது என்ன? ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்சே, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்" என்று கூறியிருந்தார். தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார். "இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்" என்று அவர் கூறியிருந்தார். "இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கூறினார். அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images பானுகா ராஜபக்ச யார்? பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cqlgvwedgd5o
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
SSCஇல் முழு மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச போட்டியில் அமெரிக்காவை வென்றது பாகிஸ்தான் Published By: Vishnu 10 Feb, 2026 | 10:55 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் எஸ்எஸ்சி மைதானத்தில் முழு மின் ஒளிவெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்காவிடம் அடைந்த தோல்வியை பாகிஸ்தான் நிவர்த்தி செய்துகொண்டது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பையும் பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது. கொழும்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்களவர் விளையாட்டுக் கழக (SSC) மைதானத்தில் மின் ஒளிவெள்ளத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முதல் தடவையாக நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஸிம்பாப்வே - ஓமான் அணிகள் மோதிய ரி20 உலகக் கிண்ணப் போட்டி இதே மைதானத்தில் பகல் இரவு போட்டியாக 9ஆம் திகதி நடைபெற்ற போதிலும் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியே முழுமையாக மின் ஒளிவெள்ளத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியாகும். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. சய்ப் அயூப் (19), சாஹிப்ஸதா பர்ஹான் ஆகிய இருவரும் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். பவர்ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். இந் நிலையில் சாஹிப்ஸதா பர்ஹான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஆனால், அவர்கள் இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (143 - 4 விக்) அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த பாபர் அஸாம் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து சாஹிப்ஸதா பர்ஹான் 41 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ஷதாப் கான் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷட்லி வன் ஷோக்வைக் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அமெரிக்கா சார்பாக நால்வர் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆரம்ப வீரர்களான ஷயான் ஜஹாங்கிர் 49 ஓட்டங்களையும் அந்த்ரீஸ் கௌஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் மிலிந்த் குமார் 29 ஓட்டங்களையும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்ஹாம் ரஞ்சேன் 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் உஸ்மான் தாரிக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷதாப் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாஹிப்ஸதா பர்ஹான். https://www.virakesari.lk/article/238356
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!
பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன! Feb 11, 2026 - 09:36 AM மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன. மேலும் மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் காலத்தில், இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள், நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம். இந்த அரசியல் தலைவர்களும், நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. இந்நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என தெரிவித்தார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlhic48c0001356nml5v2w2k