Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம் Jun 14, 2025 - 15:46 - நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமான இன்று (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbw2zxqw01uqqpbshhecsnve
  2. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:55 PM யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார். இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/217464
  3. வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt
  4. 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம். யார் இந்த டெம்பா பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. “இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.” இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா. டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன? 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர். இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான் 2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது. ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார். டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார். அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார். விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர். இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது. கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது. இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா. இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2gpdrd4po
  5. 20 இன் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல்; அருணோதயா வீராங்கனை நிருசிகா புதிய சாதனை - இரண்டாம் நாளில் வட மாகாணத்திற்கு 5 தங்கப் பதக்கங்கள் 14 JUN, 2025 | 11:48 AM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (13), 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை செல்வராசா நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவியே நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டினார். ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனை எஸ்.கே. தர்மரட்ன 3.34 மீற்றர் உயரம் தாவி ஏற்படுத்திய சாதனையை நிருசிகா முறியடித்து புதிய சாதனைக்கு உரித்தானார். 20 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் முழு ஆதிக்கம் செலுத்தி வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தன. அப் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.30 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை சிவரூபன் டிலக்ஷிகா (3.10 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாணத்திற்கு மேலும் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர் என். டன்ஸ்சன் 4.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இதே போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜானன் (4.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முன்னாள் ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ். மிதுன்ராஜ் இராணுவம் சார்பாக போட்டியிட்டு 15.26 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள், 25.91 செக்கன்களில் ஓடி முடித்த வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் இளங்கோ விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ரவிகுமார் தனுஷியா (1:10:39.47) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ஜீவேஸ்வரன் தமிழரசி (1:07:57.46) வெண்கலபதக்கத்தையும் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்கபற்றிய எஸ். தனுசன் (9:52.58) வெண்கலப் பதக்கத்தையும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் தேசிய பாடசாலை வீரர் கே. கிருஷான் (50.09) வெண்கலப் பதக்கத்தையும் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷ்ன தமிழ் மகா வித்தியாலய வீரர் வினோதன் விஹாஸ் (47.86 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மலையக வீரர்களுக்கும் பதக்கங்கள் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் பதுளை மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட எஸ். விக்ணேஸ்வரன் (58:46.00) வெள்ளிப் பதக்கத்தையும் திகனை ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் டி. ஷாம்ராஜ் (59:21.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். https://www.virakesari.lk/article/217433
  6. இந்திய விமான விபத்து : உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி இரங்கல் Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:30 PM இந்தியாவின் அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உட்பட சுமார் 265 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இந்தியாவை மாத்திரமின்றி முழு உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியாங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217437
  7. LIVE Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia 212 & 207 South Africa (74 ov, T:282) 138 & 250/4 Day 4 - Session 1: South Africa need 32 runs. Current RR: 3.37 • Min. Ov. Rem: 72 • Last 10 ov (RR): 23/1 (2.30) 31 ஓட்டங்கள் மட்டுமே தேவை அண்ணை.
  8. ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு; இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:12 AM ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஜெர்மனி தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் 136,000 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் வரை அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 69,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217412
  9. இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே - இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும் கட்டுரை தகவல் எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர் 14 ஜூன் 2025, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது. 1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் - இராக் போருக்குப் பிறகு இரான் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. விடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தி மையங்களை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. இரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் போன்றவற்றையும் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான திறனை கணிசமாக குறைக்கிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக பணியாற்றும் நபர்களின் குழு களத்தில் இந்த தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த குழுவே ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் துல்லியமான இடத்தை கண்டறிய உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய ஆறு ஆராய்ச்சியாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப்படையின் (IRGC) தலைவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சியின் பாதுகாவலர்களாக கருதப்பட்டவர்களில் ஒருவரான இவர் 1979-ஆம் ஆண்டு இரானின் ஷா ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்தவர்களில் முக்கியமான நபர் ஆவார். அவர் மட்டுமின்றி ஆயுதப்படைகளின் தலைவர், ஐ.ஆர்.ஜி.சியின் விமானப்படைத் தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய 6 அணு விஞ்ஞானிகளை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பு அமைப்பின் மையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவி, யாரும் அங்கு பாதுகாப்புடன் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மொசாட். இரானின் அரசு தொலைக்காட்சி, இந்த தாக்குதலில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. (இது கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை). இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இரானுக்குள் இருந்தே மொசாட் அமைப்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் முதன்மை இலக்குகள் நடான்ஸில் அமைந்திருக்கும் அணு செறிவூட்டும் மையமும், ஐ.ஆர்.ஜி.சிக்கு சொந்தமான தளங்களும் தான். இப்படியான சூழலை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த தாக்குதல்களால் இரான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் அலை மட்டுமே. இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. சில எளிதில் அடைய முடியாததாகவும் அதேநேரத்தில் நிலத்திற்கு அடியில் உள்ள தளங்களும் இந்த இலக்குப் பட்டியலில் இருக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் காரணம் என்ன? அதை ஏன் இப்போது நடத்துகிறது? இரானின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு இஸ்ரேலும் சில மேற்கத்திய நாடுகளும், இரான் ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறிச் செல்வதாக சந்தேகித்தன. அணு ஆயுத உற்பத்தியில் இருந்து பின் வாங்குவதற்கு இடமே அளிக்காத 'பிரேக்அவுட் கேபபிலிட்டி' என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே அணுசக்தி திட்டத்தை மட்டுமே, ரஷ்யாவின் உதவியோடு உருவாக்கி வருவதாகவும், அது அமைதிக்கான நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இரானின் இந்த முயற்சியை பல்வேறு வடிவங்களில் தாமதமாக்க இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது. இரான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். 2020-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சாலை ஒன்றில்அணுசக்தி திட்டத்தின் தலைவராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். ரிமோட் மூலமாக இயக்கப்படும் மெஷின் துப்பாக்கி மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி (இடது) உள்ளிட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர் முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவு அதிகாரிகள் 'ஸ்டக்ஸ்னெட்' என்ற கணினி வைரஸை, இரானின் அணு ஆய்வுக் கூடத்தின் 'சென்ட்ரிஃபூயூஜஸில்' வெற்றிகரமாக செலுத்தியது. இது அந்த கருவியை கட்டுப்பாடு இல்லாமல் சுழற்றியது. இந்த வாரம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் அதனுடைய அணு ஆயுத பரவல் தடை உத்தரவாதத்தை( non-proliferation obligations) மீறுவதாகக் கண்டறிந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தது. 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) அளவுக்கு அதிகமாக இரான் சேமித்து வைக்கிறது. இதனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவைக் காட்டிலும் யுரேனியம் அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது. அணு குண்டை தயாரிப்பதற்கு தேவையான செறிவுக்கு மிக அருகில் யூரேனியம் செறிவூட்டப்பட்டு இரானில் சேமிக்கப்படுகிறது. இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அடுத்து பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் அது 'உலகில் மிகவும் மோசமான ஒப்பந்தம்' என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து, அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்றபடி இரான் நடக்கவில்லை. இரானைத் தவிர்த்து வேறு யாரும் அந்த நாடு அணு குண்டை வைத்திருப்பதை விரும்பவில்லை. 9.5 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக இருக்கும், ஒரு சிறிய நாடான இஸ்ரேல், அணு ஆயுதம் கொண்ட இரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது. இரானின் மூத்த தலைவர்கள் பலரும் இஸ்ரேல் அரசை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பல அறிக்கைகளை இஸ்ரேல் சுட்டிக்காட்டுகிறது. சௌதி அரேபியா, ஜோர்டான், மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் இரானின் புரட்சிகர இஸ்லாமிய குடியரசு குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இரான் என்ற ஒரு அண்டை நாட்டுடன் அவர்கள் வாழ பழகிக் கொண்டனர். தற்போது அவர்களின் எல்லை வரை பிரச்னை பரவி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. இரானின் கூட்டாளிகளை லெபனான், சிரியா மற்றும் காஸாவில் தோற்கடித்துவிட்டதால் இரான் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலின் ஒரு பகுதியாக மொசாட் இரானுக்குள் இருந்தே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது இஸ்ரேலின் திட்டம் என்ன? ஆபரேஷன் ரைஸிங் லையன் மூலமாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. முழுமையாக இதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது. இது இரானின் தலைமையை மேலும் வலுவிழக்கச் செய்து, ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் ராணுவம், அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. இதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீங்கற்ற ஆட்சி அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறினார். இந்த ஞாயிறன்று மஸ்கட்டில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலமாக எந்த விதமான பலனுள்ள முடிவுகளும் கிடைக்கும் என்று இஸ்ரேல் நம்பவில்லை. யுக்ரேன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உண்டு. தற்போது இரானும் அதையே செய்வதாக இஸ்ரேல் நம்புகிறது. இரானின் சந்தேகத்திற்குரிய அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர இருக்கும் சிறந்த மற்றும் இறுதியான வாய்ப்பு இது என்று இஸ்ரேல் நம்புகிறது. "இரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய டிரம்பிற்கு இருக்கும் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையில், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது," என்று எலி கெரன்மாயே தெரிவித்தார். அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார். "இஸ்ரேல் தாக்குல் நடத்த தேர்ந்தெடுத்த நேரமும், அதன் தன்மையும் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகிறது." இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரானிடம் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் பதில் தாக்குதலுக்காக இரான், அந்த பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் அமெரிக்க தளத்தின் மீது நேரடியாகவோ அல்லது அதன் கூட்டாளிகள் மூலமாகவோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் நடைபெறும் மற்றொரு மோதலில் அமெரிக்காவை இழுக்கும் அபாயம் ஏற்படும். இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரான் மிகவும் வலுவிழந்துள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. அணு ஆயுதப் போட்டி இங்கே மேலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அணு ஆயுத போட்டியைத் தூண்டலாம். இரானின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருக்கும் தீவிர எண்ணங்களைக் கொண்ட தலைவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது எதிர்வரும் காலங்களில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை தடுக்க அணுகுண்டு வைத்திருப்பதே சரியானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். லிபியா மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு நேரிட்ட மாறுபட்ட நிகழ்வுகளை மதிப்பிட்டு இம்முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள். லிபியாவின் கர்னல் கடாஃபி 2003-ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதற்கான திட்டத்தை கைவிட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் ஒன்றில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலின் உதவியோடு நடைபெற்ற அரபு எழுச்சியின் முடிவில் கடாஃபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதற்கு முரணாக, வலிமையான அணு ஆயுதங்களை உருவாக்கவும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கவும் வசதியாக வட கொரியா அனைத்து சர்வதேச தடைகளையும் மீறியது. எந்த ஒரு சாத்தியமான தாக்குதலையும் அந்த நாட்டின் மீது நடத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைக்கும் சூழலை வடகொரியா உருவாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேலின் தாக்குதலால் எத்தகைய இழப்பை சந்தித்தாலும், இரான் அரசு வீழாமல் தப்பித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தீவிரப்படுத்தும். அணு குண்டு சோதனை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பும் பல தடைகளை இரான் மீறி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நிகழும் பட்சத்தில் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களுக்கான போட்டியை இது உருவாக்கும். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் தங்களுக்கும் அணு ஆயுதம் தேவை என்ற முடிவை எடுக்கக் கூடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd901z2ynv1o
  10. Published By: VISHNU 13 JUN, 2025 | 12:04 AM (நெவில் அன்தனி) தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும். இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார். இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார். பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார். ஐந்து புதிய சாதனைகள் போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/217305
  11. ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது – அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 13 ஜூன் 2025 (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்ட ராம் மோகன் நாயுடு "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் விமானத் தரவுப் பதிவை (கருப்புப் பெட்டி) மீட்டெடுத்துள்ளது. இது விசாரணையில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும். விபத்து குறித்த விசாரணை நடத்துவதில் இது பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார் கடந்த சில மணிநேரத்தில், ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி உள்ளிட்ட செய்தி முகமைகள் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு முகமைகளும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வருகின்றன. விமானங்கள் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகளை - சிறிய ஆனால் கடினமான மின்னணுத் தரவு ரெக்கார்டர்களை - கொண்டு செல்கின்றன. ஒன்று விமானி அறையிலிருந்து வரும் ஒலியைப் பதிவு செய்கிறது. இதனால் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் புலனாய்வாளர்களால் கேட்க முடியும். மற்றொன்று உயரம் மற்றும் வேகம் போன்ற விமானத் தரவுகளைப் பதிவு செய்கிறது. போயிங் 787 பயன்பாட்டை ஏர் இந்தியா நிறுத்தப் போகிறதா? சில இந்திய ஊடகங்களில், அரசாங்கம் அனைத்து போயிங் 787 விமானங்களின் பயன்பாட்டையும் நிறுத்தக்கூடும் என்ற செய்திகள் வந்தன. அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அது உண்மையல்ல என்று கூறியுள்ளது. அப்போது, "இந்தச் செய்தி உண்மையல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த நபர் கூறியது என்ன? விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார். விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது. "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஷ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பலியான 15 வயது சிறுவன் – குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியது என்ன? ஆமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு வந்த மருத்துவமனையில், மிகவும் துயரமான சில கதைகளைக் கேட்க முடிகிறது. விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கட்டடத்தில் வசித்து வந்த ஆகாஷ் என்ற 15 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கேள்விப்பட்டோம். அந்தச் சிறுவன் கட்டடத்தில் உள்ள உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார் அந்த உணவகத்தில் ஆகாஷின் அம்மா சீதாபென்னும் பணிபுரிந்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும், தனது மகனைக் காப்பாற்ற அவர் உள்ளே சென்றபோது அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. சீதாபென் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகாஷின் அண்ணா கல்பேஷை சந்தித்தோம், அவர் மிகவும் சோகமாக இருந்தார். தனது தம்பி மற்றும் தாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அவர் அழுது கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் ஆகாஷின் தந்தையும் இருந்திருக்கிறார். திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனே அவர் அங்கு சென்றதாகவும் கூறினார். அருகில் சென்றபோது, எல்லா இடங்களில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் அங்கு சென்றபோது, அவரது மனைவி சீதாபென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார், தனது மகன் உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. பணி ஓய்வுக்குச் சில மாதங்களே இருந்த நிலையில் பலியான மூத்த விமானி படக்குறிப்பு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானி கேப்டன் சுமீத் சபர்வால் இந்த விபத்தில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலும் ஒருவர். அவர் 8,200 மணிநேரத்திற்கும் மேல் விமானப் பயண அனுபவம் கொண்டவர். அத்துடன் விமானத்தில் மூத்த குழு உறுப்பினராக கேப்டன் சபர்வால் இருந்தார். அவர் ஒரு லைன் பயிற்சி கேப்டன் ஆவார். இது விமானக் குழுவினருக்கு வழிகாட்டும் பொறுப்பு. இந்தப் பணி மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அறுபது வயதான விமானி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான தனது 82 வயது தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் மிகவும் அமைதியான நபர். அவர் அடிக்கடி சீருடையில் வந்து செல்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், மிகவும் அமைதியானவராக இருந்தார்" என்று மும்பையில் உள்ள சபர்வாலின் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது. துணை விமானி, முதல் அதிகாரி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். மேலும், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனரை இயக்க சான்றிதழ் பெற்றவராகவும் இருந்தார். விமான விபத்தில் இறந்த 4 வயது பெண் குழந்தை பட மூலாதாரம்,FAMILY HANDOUT இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா மற்றும் ஹன்னா வோராஜி, தங்களது நான்கு வயது மகள் சாராவுடன் விமான விபத்தில் இறந்தனர். இந்த குடும்பத்தின் சார்பாகப் பேசிய இமாம் அப்துல்லா, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்தவற்றை புரிந்துக்கொள்ள முயல்வதாகவும் கூறினார். "இந்த இளம் குடும்பம் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்தது - அர்ப்பணிப்புள்ள பெற்றோர் மற்றும் அவர்களின் அழகான இளம் மகள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இரக்கமுள்ள, சுறுசுறுப்பான சமூக உறுப்பினர்கள், அவர்கள் எங்கள் உள்ளூர் இஸ்லாமிய பள்ளியிலும் பல்வேறு உள்ளூர் திட்டங்களிலும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தனர். அவர்கள் பரவலாக நேசிக்கப்பட்டனர் மற்றும் ஆழமாக மதிக்கப்பட்டனர். அவரது அமைதியான தாராள மனப்பான்மை, அவரது அரவணைப்பு மற்றும் கருணை மற்றும் அவர்களின் மகளின் பிரகாசமான, மகிழ்ச்சியான மனப்பான்மை அவர்களை அறிந்த அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் பள்ளியில் சூரிய ஒளியின் கதிர், அவர்கள் எங்கள் வாழ்க்கையில் பலத்தின் தூணாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில், "ஆமதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்" என்று கூறியுள்ளார். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.", கால அளவு 0,46 00:46 காணொளிக் குறிப்பு,விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது. ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது. சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியது என்ன? இந்த விமான விபத்திற்கு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல் தெரிவித்துள்ளார். "பிரிட்டன் நாட்டினர் பலரை ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம், இந்திய நகரமான ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளானது தொடர்பான துயரக் காட்சிகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. அங்குள்ள நிலைமை குறித்து நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்டன் நாட்டினர் 53 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது. படக்குறிப்பு,ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான இடத்தைக் குறிக்கும் வரைபடம் "விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார். விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது. தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரமிலா தனது மகன் மருத்துவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே குதித்து தப்பியதாகக் கூறுகிறார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே பதட்டமான உறவினர்களிடமிருந்து இப்போது எங்களுக்குத் தகவல் வரத் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார். "ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார். விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார். அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார். மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,BBC/TEJAS VAIDYA ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என அழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. "அப்போது குறிப்பிடத்தக்க அளவில் மேகங்கள் இருந்ததாகவோ அல்லது மோசமான வானிலை நிகழ்வுகள் எதுவும் நிலவியதாகவோ எதுவும் பதிவாகவில்லை. அதீத காற்று, புயல் அல்லது இத்தகைய விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிற பாதகமான நிலைமைகள் குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று சான் கூறுகிறார். சிக்கலில் போயிங் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம் Play video, "ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி?", கால அளவு 4,50 04:50 காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது. "இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது" என்று டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், இந்த விபத்திற்குத் தனது "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த நிகழ்வு தொடர்பான எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஏர் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதுவொரு கடினமான நாள். இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும், எங்கள் பயணிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்துவதில் மட்டுமே உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார். ஏர் இந்தியா அவசர உதவி எண் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4qe1dz38no
  12. நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைக்கான நிதி உதவி நீடிப்பு 13 JUN, 2025 | 08:54 PM (எம்.மனோசித்ரா) நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்கான ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில், இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது. இந்த நீடிப்பானது இரு நாடுகளுக்கும் இடையேயான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு உகந்ததாகவுள்ளது. இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக (மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் ரூபா) வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்வதன் மூலம் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் இந்த பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது. அத்தோட இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பு புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். படகு சேவைக்கான நிதி உதவி தொடர்வதானது, 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும், கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, மேம்பட்ட கடல்சார் இணைப்புக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்ததாகவுள்ளது. இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் மேலதிக வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்வது எதிர்காலத் திட்டங்களில் அடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217363
  13. ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன் 21 முதல் ஆரம்பம் Published By: VISHNU 13 JUN, 2025 | 10:42 PM ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், இலங்கையின் அணைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. https://www.virakesari.lk/article/217409
  14. இஸ்ரேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இரான்? இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்ன செய்கிறது? பட மூலாதாரம், JACK GUEZ/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சேதமடைந்த கட்டடம் 56 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. என்ன நடக்கிறது? இஸ்ரேல் தாக்குதலும் இரானின் பதிலடியும் இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,REUTERS/RONEN ZVULUN இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். ராமத் கானில் உள்ள ஷெபா மருத்துவமனையில் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கேயும் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார். பட மூலாதாரம், ANADOLU VIA GETTY IMAGES 100க்கும் குறைவான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல் இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார். எக்ஸ் தளத்தில் அவர் தனது பதிவில், பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். "குறைந்த எண்ணிக்கையிலான கட்டடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. அவற்றில் சில இரான் ஏவுகணைகளை இடைமறித்த போது வெளிப்பட்ட சிதறல்களால் நேர்ந்தவை," என்று அவர் கூறுகிறார். இரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES 2 இஸ்ரேலிய போர் விமானங்கள் வீழ்ந்தனவா? இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த கூற்று பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES இரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்? இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அங்குள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை அதன் பத்திரிகையாளர்களில் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. விமான நிலையப் பகுதியில் 'வெடிப்பு' ஏற்பட்டதாகக் கூறிய இரானைச் சேர்ந்த மெஹ்ர் செய்தி முகமை, அப்பகுதியில் இருந்து கனத்த புகை எழுவதைக் காட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e6w9n0xwno
  15. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா டெஸ்ட் சாம்பியன் ஆகுமா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் மார்க்ரம் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜூன் 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் பவுமா - மார்க்ரம் ஜோடி தங்களின் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஏதேனும் மாயஜாலம் நிகழ்த்துமா அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும். ஸ்டார்க் அரைசதம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் 16, நேதன் லாயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். 3வது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டது. லேயான் 2 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார். ஸ்டார்க், ஹேசல்வுட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முதல் முறை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இருவரும் 18 ஓவர்கள் களத்தில் இருந்தனர். ஸ்டார்க் 2019ல் ஓல்ட் ட்ராபோர்டில் முதல்முறையாக அரைசதம் அடித்தபின் 2வது முறையாக நேற்று அரைசதத்தை 131 பந்துகளில் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். ஹேசல்வுட் 17 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார். ரபாடா 9 விக்கெட் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்த 74 ரன்களையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், யான் சென் 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி 282 ரன்கள் இலக்கை துரத்தி தென் ஆப்ரிக்க அணி நேற்று 3வது நாளில் உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது. மார்க்ரம், ரிக்கெல்டன் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய 2வது ஓவரில் ரிக்கெல்டன் 6 ரன்னில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிஅதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த முல்டர், மார்க்ரமுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். 12வது ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு சற்று நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் 18வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஸ்டார்க் பிரித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் முல்டர் 27 ரன்னில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக பேட் செய்து நங்கூரம் அமைத்தனர். இருவரையும் பிரிக்க கேப்டன் கம்மின்ஸ் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், கேப்டன் பவுமா இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ஸ்மித் காயம் பவுமா 2 ரன்னில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பீல்டிங்கில் இருந்தார். பவுமா பேட்டில் இருந்து தெறித்த பந்தை ஸ்மித் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவரின் சுண்டுவிரலில் பட்டு சென்றது. இதில் ஸ்மித்தின் சுண்டுவிரல் எலும்பில் முறிவு ஏற்பட்டு கடும் வலியுடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். மார்க்ரம் - பவுமா வலுவான பார்ட்னர்ஷிப் பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கேப்டன் பவுமாவுக்கு திடீரென தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் ரன்கள் ஓடாமல் விக்கெட்டை நிலைப்படுத்தும் விதத்திலேயே பேட் செய்தார். மார்க்ரம் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபோது மார்க்ரம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். 25 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களை எட்டி வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது. இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடியும்பலன் கிடைக்கவில்லை. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததாலும், பந்து பேட்டை நோக்கி நன்கு வந்ததாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை. இருவரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது. மார்க்ரம், பவுமா இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தியதால், 25வது ஓவரில் 100 ரன்களை எட்டிய தென் ஆப்ரிக்கா, 52வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 200 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா மார்க்ரம் சதம் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரமின் ஆட்டத்தில் இம்முறை தீர்க்கமான எண்ணம் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் கையாண்டார். பெரிதாக அவசரப்படாமல் லென்த் பந்துகளை லீவ் செய்து மார்க்ரம் ஆடியதால், தவறு செய்யவைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம் இரண்டாவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் சதம் அடித்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டை கழற்றி, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியை மார்க்ரம் வெளிப்படுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் அதிகளவு இருந்ததால், மார்க்ரமின் சதத்தை கரகோஷத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய 3 வேகப்பந்தவீச்சாளர்களும் மார்க்ரத்தை வெளியேற்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பந்துவீசியும் மார்க்ரம் அதை தவிடுபொடியாக்கி களத்தில் நங்கூரம் பாய்ச்சினார். மார்க்ரம் ஆஃப் சைடில் அருமையாக ஆடக்கூடியவர் என்பதால், ஆஃப் சைடில் விலக்கி வீசப்பட்ட பந்துகளை ரன்களாக மாற்ற அவர் தவறவில்லை, அவரின் சதத்தில் 65 ரன்கள் ஆஃப் சைடில் எடுக்கப்பட்டவை. மார்க்ரம் கடைசியாக 16 இன்னிங்ஸ்களுக்கு முன் சதம் அடித்திருந்தார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று தொடங்கும்போது சதம் அடித்திருந்த மார்க்ரம் மீண்டும் முடியும்போது பைனலில் சதம் அடித்துள்ளார். யாருக்கு சாதகம்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் முடியவே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆடுகளம் கடைசி இருநாட்கள் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை. தென் ஆப்ரிக்காவின் வரலாற்று சாதனை படைக்க எய்டன் மார்க்ரமின் அற்புதமான(102) சதம், கேப்டன் டெம்பா பவுவுமாவின்(65) பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக இருக்கும். இருவரும் 38 ஓவர்கள் பேட்டிங் செய்து 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் ஆடி வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்க்ரம் "சோக்கர்ஸ்" ஆவார்களா தென் ஆப்ரிக்கா? 3வதுநாள் ஆட்டநேர முடிவு வரை ஆட்டம் தென் ஆப்ரிக்க பக்கம் முடியவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இதுபோன்ற இக்கட்டான கட்டங்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. ஆதலால், கடைசி 2 நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தாலும் வியப்பில்லை. குறிப்பாக ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், நேதன் லேயான் ஆகியோரின் பந்துவீச்சு ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பிவிடும். தென் ஆப்ரிக்க அணி கிரிக்கெட் வரலாற்றில் பல நேரங்களில் நெருக்கடியான, அழுத்தமான தருணங்களில் அதை சமாளிக்க முடியாமல் வெற்றியை கோட்டைவிட்ட "சோக்கர்ஸ்" என்று பெயரெடுத்துள்ளது. இதை சாதகமாக வைத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று தங்கள் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியளித்தால், ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு தேவையான 69 ரன்களை சேர்க்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்யவும் முயற்சிக்கலாம். தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெப்ஸ், பெடிங்ஹாம் ஆகிய இரு விக்கெட்டுகள் வீழ்ந்தாலே அடுத்துவரும் பேட்டர்கள் பெரிதாக பேட் செய்யக்கூடியவர்கள் இல்லை. ஆதலால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் என்ன உத்தியோடு களமிறங்கப் போகிறார்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று இன்று தெரியும். இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மாயஜாலம் வெல்லுமா, அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygwddyx3no
  16. STUMPS • Starts 3:00 PM Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia 212 & 207 South Africa (56 ov, T:282) 138 & 213/2 Day 3 - South Africa need 69 runs. Current RR: 3.80 • Last 10 ov (RR): 29/0 (2.90) Temba Bavuma* (rhb) 65 121 5 0 53.71 Aiden Markram (rhb) 102 159 11 0 64.15
  17. கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்துகொள்ளல் 11 JUN, 2025 | 10:39 AM பெருமாள் முருகன் " கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது " என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து பல்வேறு விவாதங்களை மூளவைத்திருக்கிறது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. இது இரு நூற்றாண்டுகளாக தமிழ் உலையாடல்களில் இருந்து வந்திருக்கிறது. பொதுவான ஆதித்திராவிட மொழி (Proto - Dravidian language ) ஒன்றில் இருந்து கிளைவிட்டவையே திராவிட மொழிகள் என்று றொபேர்ட் கால்ட்வெல்லும் மற்றைய மொழியியல் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகல திராவிட மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவையே என்று அவர்களன உரிமை கோரினார்கள். இந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் தமிழே உலகின் முதலாவது மொழி என்றும் உலகின் ஏனைய மொழிகள் சகலதும் அதிலிருந்து பிறந்தவையே என்றும் பிரகடனம் செய்யப்படுகின்ற அளவுக்கு விரிவடைந்தது. பெரிதும் ஏற்புடைய கருத்து இன்றும் கூட தமிழ் அறிவுஜீவிப் பரப்பில் இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ந்து மேம்பட்டுக் காணப்படுகின்றன. ஆதித்திராவிட மொழி ஒன்று பற்றிய கருத்து தமிழ்நாட்டுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ் சகல மொழிகளினதும் தோற்றுவாய் என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தியாவின் பன்மொழிப் பின்புலத்தில் மொழி ஆதிக்கத்தைச் சூழ்ந்த விழிப்புநிலை அரசியல் ரீதியாகவே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தேசியக்குழுவும் அதன் அடையாளத்தின் பிரதான குறியீடாக மொழியையே கருதுகின்றன. அவர்களது மொழியின் பெருமையை சிறுமைப்படுத்துவதாக கருதப்படக்கூடிய எந்தவொரு கருத்து அல்லது நடவடிக்கை ஆவேசமான எதிர்ப்பைக் கிளப்பும். இத்தகைய ஒரு சூழ்நிலையில், பொதுவான ஒரு ஆதித்திராவிட தோற்றுவாயில் (Proto - Dravidian root) இருந்தே சகல திராவிட மொழிகளும் தோன்றின என்ற கருத்தை அழுத்திச் சொல்வதே பொது மேடைகளில் பெருமளவுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த கருத்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கப்போக்கையும் சமத்துவத்தையும் வளர்க்கும். மற்றைய மொழிகள் தமிழில் இருந்தே தோன்றின என்று கூறுவதை மற்றையவர்கள் தங்களது மொழியினதும் அடையாளத்தினதும் மதிப்பைக் குறைக்கும் ஒரு செயலாகவே எளிதில் நோக்கக்கூடும். தமிழே தங்களது மொழிகள் எல்லாவற்றினதும் தோற்றுவாய் என்று உரிமை கோருவதை மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் தங்கள் மீதான திணிக்கப்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கக்கூடும். தங்களது மூதாதைப் பெருமையை அரசியல் பிரசாரத்துடன் கலக்கும் தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை, தமிழே மற்றைய மொழிகளின் தோற்றுவாய் என்று கூறுவது புராதன மேன்மைக் கதையாடல் ஒன்றை கட்டமைக்க உதவலாம். ஆனால், அதற்கு அப்பால், சமகால அரசியலில் இந்த கருத்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும். வலிமையான - பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அறிவுசெறிந்த சான்று இல்லாமல், சகல மொழாகளினதும் தோற்றுவாய் தமிழே என்நு அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை. தமிழின் சிறப்புவாய்ந்த பண்புகளான அதன் தொல்பழமை, இலக்கியச் செழுமை மற்றும் இடையறாத இலக்கியப் பாரம்பரியம் ஆகியவற்றை ஏனைய மொழிச் சமூகங்களும் பரந்தளவில் உலகமும் நன்கு அறியும். இந்த சிறப்புக்களை எடுத்தியம்புவதே தமிழைக் கௌரவப்படுத்தப் போதுமானதாகும். இந்தியாவின் எந்தவொரு மொழியினதும் நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது கூட, தமிழ் உயர்வானதாக மாத்திரமல்ல, சமத்துவமானதாகவும் நிற்கிறது. தமிழின் இந்தச் செழுமையை பரந்த உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு உணர்வு முனைப்புடைய முயற்சிகளே இன்று எமக்கு தேவைப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சிறீ சர்வதேச பூக்கர் பரிசை வென்றார். இந்த வருடம் கன்னட எழுத்தாளர் பானு முஷ்ராக் அதே கௌரவத்தைப் பெற்றார். தமிழும் கூட அத்தகைய உலகளாவிய உச்சங்களை பெறுவதற்கு உரித்துடையது. எமக்கு தேவை அந்த திசையிலான தளராத கலாசார முயற்சியே அன்றி, ஏனைய மொழிகளைப் பேசுபவர்களை மனமுறிவுக்கு உள்ளாக்கக்கூடிய -- ஆத்திரமூட்டும் வகையிலான பயன்ற்ற கருத்துக்கள் அல்ல. " தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது " என்று கமல்ஹாசன் கூறியபோது அவரது நோக்கம் அந்த மொழியை அவமதிப்பது அல்ல. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் அந்த மேடையில் இருந்தார். அவரது குடும்பத்துடனான தனது கனிவான உறவுமுறை பற்றி பெருமையாக ஹாசன் பேசினார். கன்னடத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பண்பொற்றுமையை சுட்டிக்காட்டிய அவர் ' நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள ; எம்மவை சகோதர மொழிகள்' என்று கூறுவதற்கே முயற்சித்தார். அந்த தருணத்தில், ' 'தமிழே மூலமொழி ' என்று தமிழ்ச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் ஒரு கருத்து அவரது சிந்தனைக்கு வந்திருக்கக்கூடியது சாத்தியம். ஆனால், அவரது நோக்கங்களை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. அத்தகைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு அவருக்கு கருத்து வெளிப்பாடாடுச் சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கருத்தை கொண்டவர்கள் அவருடன் இணங்காமல் விடலாம். பதிலை பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்த முடியும். ஆனால், அச்சுறுத்தல் விடுப்பது கருத்தை தெரிவிப்பதற்கான அவரின் உரிமையை மீறும் செயலாகும். நீதிமன்றத்தின் கருத்து கமல்ஹாசனின் ' தக் லைவ் ' என்ற திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான ஒரு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்னிப்புக் கேட்குமாறு அவரை நீதிபதி பெரும்பாலும் நிர்ப்பந்தித்தார். இந்த விவகாரத்தை இரு பிராந்திய இனங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக மாற்றுவதற்கு மொழி அடிப்படைவாதிகள் தயாராக இருக்கின்ற ஒரு நேத்தில், அவர்களுக்கு அனுகூலமான முறையில் நீதிமன்றம் அதை அணுக வேண்டுமா? பொலிசார் இந்த விவகாரத்தை சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக கையாளக்கூடும், ஆனால், நீதிமன்றம் அந்த வழியில் நோக்கக்கூடாது. வர்த்தக ரீதியான விட்டுக்கொடுப்பை கட்டாயப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து போன்று நீதிமன்றம் செயற்பட வேண்டுமா? நீதிமன்றம் இதை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக அணுகியிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக எந்த ஒருவரும் கூறலாம். ஆனால், அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அளவு என்ன? எவருமே வேண்டுமென்று சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம். அத்தகையவர்களை சமரச ஏற்பாட்டுக்கான ஒரு தரப்பாக நீதிமன்றம் கருதமுடியாது. கமல்ஹாசனுக்கு அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கிறதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும் என்று தான் நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சினைக்கும் திரைப்படத்தின் வெளியீடடுக்கும் எந்த தொடர்பும் இல்லை; பொலிஸ் பாதுகாப்புடன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். எந்த வழியில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கோணத்திலேயே அதை நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கான இறுதிப் புகலிடம் நீதிமன்றமேயாகும். கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. " எனது கருத்து தவறானது அல்ல. அது தவறாக விளங்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது" என்று அவர் விளக்கமளித்தார். வழமையாக, திரைப்படம் ஒன்று தொடர்பாக ஏதாவது பிரச்சினை எழுந்தால், உடனடியாக மன்னிப்புக் கோருவது, காட்சிகளை அகற்றுவது, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு வசதியாக சமரசத்தை ஏற்படுத்துதே நடைமுறை நியதியாகும். முதற்தடவையாக திரைப்படத்துறை சார்ந்த ஒருவர் " நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் " என்று கூறியிருக்கிறார். அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல. சுயமரியாதைப் பிரச்சினை. கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும். அத்தகைய கருத்துக்களுக்கு ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், வன்முறை அச்சுறுத்தல்களை விடுப்பதோ அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையை நிராகரிப்பதோ தண்டனைக்குரிய குற்றங்களாக கணிக்கப்பட வேண்டும். (கட்டுரையாளர் தமிழகத்தின் கல்விமான், இலக்கிய வரலாற்று பதிவாளர்) (தி இந்து) https://www.virakesari.lk/article/217133
  18. இரான் அதிஉயர் தலைவருக்கு நெருக்கமான தளபதியை கொன்ற இஸ்ரேல் – அவரது பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல், அமெரிக்கா உள்பட இரானின் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான அணுகுமுறையை முன்னெடுத்ததற்காக, ஹொசைன் சலாமி அறியப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என் ஜி பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், மிக உயர்ந்த பதவியில் இருந்த தலைவராக ஹொசைன் சலாமி கருதப்படுகிறார். 65 வயதான சலாமி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட இரானின் எதிரி நாடுகள் மீது கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்ததற்காக அறியப்பட்டவர். இந்த இரு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும், "இரான் நரகத்தின் கதவுகளைத் திறக்கும்" என்று கடந்த மாதம் அவர் கடுமையாக எச்சரித்திருந்தார். அமெரிக்கா - இரான் இடையே அணு ஆயுதப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது எனத் தனது கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருந்தபோதிலும், இரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா கூறினாலும், இதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் "பெரிய விலையை" கொடுக்க நேரிடும் என்று இரான் எச்சரித்துள்ளது. இதனால் ஏற்கெனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்குப் பகுதியில் முழுமையான போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான முகமது பாகேரி, துணைத் தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் பல அணு விஞ்ஞானிகளும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். தாக்குதல்களுக்கு ஒரு நாள் முன்பு, "எந்தவொரு சூழ்நிலைகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இரான் முழுமையாகt தயாராக உள்ளது" என்று சலாமி கூறியிருந்தார். "இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் இருக்கும் எதிர்த்து சண்டையிட ஆயுதமோ, உதவியோ இல்லாத பாலத்தீனர்களுடன் போராடுவது போல், இரானையும் எதிர்த்துப் போராட முடியும் என்று எதிரி நினைக்கிறார்," என்று கூறிய அவர், "நாங்கள் போரால் சோதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள்"என்று குறிப்பிட்டார். கடந்த 1980ஆம் ஆண்டில், இரான் - இராக் போரின்போது, இரானிய ஆயுதப் படைகளின் சக்தி வாய்ந்த பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையில் இணைந்தவர் சலாமி. 2009ஆம் ஆண்டில் துணைத் தளபதியான அவர், அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து தளபதியாக உயர்ந்தார். இரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் திட்டங்களில் ஈடுபட்டதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்காவால் அவருக்கு 2000ஆம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இரானின் ராணுவ திறன்களைப் பற்றி பெருமையாகப் பேசிய சலாமி, ஒரு கட்டத்தில், இரான் "உலகப் பேரரசாக மாறும் வேளை வந்துவிட்டது" என்று அறிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான ராணுவ மோதல் நடப்பதற்கான வாய்ப்பை சலாமி வரவேற்றார். கடந்த 2019ஆம் ஆண்டில், சிரியாவில் இரானிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலாக, சலாமி அரசியல் வரைபடத்தில் இருந்து "யூத ஆட்சியை முற்றிலும் நீக்குவதாக" சபதம் எடுத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், இரண்டு ஜெனரல்கள் உள்பட ஏழு புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, "எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் யூத ஆட்சியைத் தண்டிப்பார்கள்" என்று சலாமி இதேபோல் மற்றொரு எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1979இல் இரானில் நடந்த புரட்சிக்கு முன்பு வரை, இரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. அந்த புரட்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி, இஸ்ரேலை எதிர்ப்பதை அதன் கொள்கையின் முக்கிய அங்கமாக எடுத்துக் கொண்டது. இஸ்ரேல் எனும் நாட்டை தற்போதைய இரானிய ஆட்சி ஏற்கவில்லை. இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி, இஸ்ரேலை "புற்றுநோய்க் கட்டி" என வர்ணித்து, அது "சந்தேகத்திற்கு இடமின்றி பிடுங்கி அழிக்கப்படும்" என்று கூறினார். இரான் வெளியிட்ட கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள், இஸ்ரேலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் கருதுகிறது. சலாமியும் புரட்சிகர காவல் படையின் பிற மூத்த அதிகாரிகளும் இரானின் அதிஉயர் தலைவருக்கு ஆலோசனை வழங்குவது வழக்கம். இரானின் புரட்சிகர காவல் படை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமனெயி இரானின் மதத் தலைவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) நிறுவினார். நாட்டின் இஸ்லாமிய முறையைப் பாதுகாப்பதும், வழக்கமான ராணுவத்திற்கு எதிராக ஒரு சமநிலையைப் பேணுவதும் அதன் நோக்கமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் ராணுவப் படைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. 190,000க்கும் அதிகமான வீரர்களுடன், அதன் சொந்த தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையை புரட்சிகர காவல் படை கொண்டுள்ளது. இரானின் மிகவும் சக்திவாய்ந்த இந்தப் படை, மிகவும் வலிமையான, ராணுவ மற்றும் அரசியல் குழுக்களில் ஒன்றாக உள்ளது. இரானின் ராணுவம், அந்நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆட்சியைப் பாதுகாக்க புரட்சிகர காவல் படை அமைக்கப்பட்டது. இப்படை நேரடியாக அதிஉயர் தலைவரிடம் தனது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதால், அதன் அதிகாரம் மற்ற அமைப்புகளால் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டது. இரானின் முக்கிய ஆயுதங்களைக் கண்காணிக்கும் புரட்சிகர காவல் படை, துணை ராணுவமான பாசிஜ் எதிர்ப்புப் படையைக் கட்டுப்படுத்துகிறது. அந்தப் படை பெரும்பாலும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்கப் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கின் பிற பகுதிகளில், இந்தக் குழு தங்கள் கூட்டாளிகளாக உள்ள அரசுகளை ஆதரிக்க பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தங்களது செல்வாக்கை நிலைநாட்டுகிறது. புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள், அதன் ரகசிய வெளிநாட்டுப் பிரிவான 'குட்ஸ் படையை' இயக்குகிறார்கள். இந்தப் பிரிவு ஆப்கானிஸ்தான், இராக், லெபனான், பாலத்தீனிய பிரதேசங்கள் மற்றும் ஏமேன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையதாக உள்ளது. அரசாங்கம், நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசியல் அமைப்புகளில் அதிகாரம் வாய்ந்த பதவிகளில், முன்னாள் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்தவர்கள் இன்றும் பதவி வகிக்கின்றனர். இவர்களில் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் மற்றும் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் உள்ளனர். கோ ஈவ்,ரஃபி பெர்க் ஆகியோர் கூடுதல் தகவல்கள் வழங்கியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rel1803lo
  19. கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைத்தொகுப்பு: சமூக நீதி புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்துப் பார்த்தேன். ‘வேட் இன்ஸ்’ என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது. ஆர்வம் காரணமாக வாசித்தேன். சற்றுத்தள்ளி இருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் மெல்ல அவதானித்தேன். ஆபிரிக்கக் கறுப்பு இனத்தவராக இருக்கலாம். ‘என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது புரிந்ததா?’ என்று அங்கிருந்தபடியே ஆங்கிலத்தில் கேட்டார் ‘ஓம்’ என்று நான் தலை அசைத்தேன். ‘அதில் தண்ணீரில் நீந்தப் போய்ப் போலீசாரால் கைதானவர்கள் என்று போட்டிருக்கே, அந்த நால்வரில் நானும் ஒருத்தன்’ என்றார். ‘அப்படியா?’ ஆர்வம் காரணமாக நான் அவருக்கு அருகே சென்று அமர்ந்தேன், சுமார் எண்பது வயதைத் தொட்டிருக்கலாம், ஆனாலும் ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார். ‘ஐயாம் குரு, உங்க பெயரைச் சொல்லலையே’ என்றேன். ‘ஏப்ரஹாம்’ என்று சொல்லி, இருந்தபடியே படியே கை குலுக்கியவர் தொடர்ந்தார், ‘எங்கள் பெற்றோர்களுக்கு நீந்தத் தெரியாத படியால் தண்ணீரைவிட்டு எட்வே விலத்தி இரு என்று அடிக்கடி எங்களுக்குப் போதிப்பார்கள்.’ என்றார். ‘ஏன் உங்களுக்கு நீந்தத் தெரியாதா?’ ‘தெரியாது, எப்படி நீந்துவது தண்ணீரில் இறங்காமல்…?’ என்றார் ‘ஏன் நீந்தப் பழகவில்லையா, தண்ணீருக்குப் பயமா?’ ‘இங்கே உள்ள நீச்சல் தடாகத்திலேயோ அல்லது கடலிலேயோதான் நீந்தப் பழகலாம், இவர்கள்தான் எங்களைத் தண்ணீரில் இறங்க விடவில்லையே’ ‘என்ன சொல்றீங்க, இவர்கள் என்று யாரைச் சொல்லுறீங்க?’ ‘இங்கே அப்போது இருந்த சில வெள்ளையர்களைத்தான்’ ‘இனவெறியா…?’ ‘அப்படியே எடுத்துக் கொள்ளலாம், எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள், அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள்’ ‘அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?’ ‘எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது.’ ‘அதற்காக என்ன செய்தீர்கள்?’ ‘அப்போதுதான் நாங்கள் அல்வின் அ ய்லி டான்ஸ் தியேட்டரில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்தோம். நான் நினைக்கின்றேன் 1960 ஆம் ஆண்டாக இருக்கலாம், அந்த நாடகம் எங்களுக்குள் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது.’ ‘எப்படியான நாடகம், அதிலே என்ன சொல்லியிருந்தார்கள்?’ ‘உண்மையைச் சொல்லப் போனால், அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. ‘வேட் இன் த வாட்டர்’ என்ற வரிகள் எங்களை ரொம்பவும் கவர்ந்தது மட்டுமல்ல, எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்களை அறியாமலே நாங்கள் அந்த வரிகளுக்குள் மூழ்கிப் போயிருந்தோம்.’ ‘ஆர்வமாக இருக்கிறது, அது என்னவென்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன். ‘எனக்கு வயசு போயிடிச்சு, அதனாலே சரியாக அந்த வரிகள் இப்போது ஞாபகமில்லை, ஆனால் தண்ணீருக்குள் இறங்கினால் தப்பி ஓடும் அடிமைகளைத் தேடும் வேட்டைநாய்களால் அவர்களை மோப்பம் பிடிக்க முடியாது என்று கறுப்பினத்தவரின் விடுதலை பற்றி மறைமுகமாகச் சொல்லியது அந்தப்பாடல்.’ எனக்கு ஓரளவு புரிந்தது. 1600 களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள். ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது என்பதைத்தான் அந்தப் பாடல் மறைமுகமாகச் சொன்னது. 1865 இல் அமெரிக்க ஜனாதிபதியான ஏப்ரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டங்களை இயற்றினாலும், நடைமுறையில் தொடர்ந்தும் அடிமை வாழ்க்கை இருக்கத்தான் செய்தது. ‘ஒருநாள் ஜோன்சன் எங்களைச் சந்தித்தார். கடலிலே இறங்கிக் குளிக்கப் போகிறோம், நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டார். ஜோன்சனை எனக்கு ஏற்கனவே தெரியும், எங்கள் இனவிடுதலைக்காகப் பாடுபட்டவர். அவருடன் நின்ற இன்னுமொருவரை ‘டாக்டர் மிசெல்’ என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பகுதியில் உள்ள மருத்துமனைக்குச் சேவையாற்ற முதன் முதலாக வந்த எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதைப் பின்பு தெரிந்து கொண்டேன். ‘கடலில் குளிப்பதற்கு ஏன் நீங்க தயங்குறீங்க?’ என்று கேட்டார். ‘எங்களைத்தான் கடலிலே இறங்க விட மாட்டாங்களே’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘உண்மைதான், ஆனால் எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும். குறிப்பாக மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும். அதனால்தான் துணிச்சல் உள்ள உங்களைக் கேட்டேன்’ என்றார் ஜோன்சன். எனக்கு ஒரு அசட்டுத் துணிவு ஏற்பட்டது. சரி என்று அவரிடம் ஒப்புக் கொண்டேன். என்னுடன் சேர்ந்து இன்னும் மூன்று கூட்டாளிகள் இணைந்து கொண்டார்கள். நீந்தத் தெரியாவிட்டாலும் வருவது வரட்டும் என்று துணிந்து கடலில் இறங்கி விட்டோம். கடலிலே சில வெள்ளையர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பாய்ந்து விழுந்து வெளியேறிவிட்டார்கள். ‘ஏன், அவர்களுக்கு என்ன நடந்தது?’ ‘அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை, தண்ணீரில் தீட்டுப் பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படித்தான் அவர்களை அவர்களது பெற்றோர்கள் வளர்த்திருந்தார்கள்.’ ‘அப்புறம் என்னாச்சு?’ ‘அவர்கள் போலீசை அழைத்ததும் போலீஸ் வந்து எங்களைக் கைது செய்து கொண்டு போய்ச் சிறையில் அடைத்தார்கள்.’ ‘இது எப்ப நடந்தது, எவ்வளவு காலமிருக்கும்?’ ‘சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் இந்தக் கடற்கரையில்தான் நடந்தது, அப்போதெல்லாம் இந்த வசதிகள் ஒன்றும் இங்கே கிடைக்கவில்லை, ஏன், இங்கே வருவதற்குச் சரியான வீதிகளே இருக்கவில்லை. நான் நினைக்கிறேன் இது நடந்தது 1961 ஆம் ஆண்டாக இருக்கலாம், இன்னும் நினைவில் நிற்கிறது.’ அவர் பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க முனைந்தார். ‘நான் மணவனாக இருக்கும் போது, தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்.’ என்று தங்கள் பெற்றோரைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சொன்னது உண்மைதான், காலமெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ்தவர்களின் பரம்பரையில் வந்த சாதாரண பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க இதைவிட வேறு என்னதான் செய்ய முடியும்? ‘போராட்டம் வலுவடைந்ததால், தினமும் எம்மவர்கள் கடலில் குளிக்கத் தொடங்கினார்கள். சுமார் 200 மேற்பட்ட எம்மவர்களை இந்தக் கடலில் குளித்ததற்காகத் தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒருகட்டத்தில் சிறைச்சாலை நிரம்பி வழிந்ததால், இந்த வழக்கை விசாரனைக்கு எடுத்தார்கள்.’ ‘1962 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, ரெட் காபோட் என்பவர்தான் பிறோவாட் கவுண்டி நீதிபதியாக இருந்தார். அவரும் வெள்ளை இனத்தவர்தான், என்ன நடக்குமோ என்று நாங்கள் பயந்து போயிருந்தோம். எங்கள் படிப்பும் தடைப்பட்டதால், பெற்றோரும் இதை நினைத்து மனம் கலங்கிப் போயிருந்தார்கள்.’ ‘கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது’ என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது. 1966 ஆம் ஆண்டுவரை அவர் இங்கேதான் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவருடைய நல்ல மனசால்தான் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. அவரைப் பற்றிய ஒரு நூலும் ‘பீட்டாஸ்கிரிப் பப்பிளிஸிங்’ என்ற பதிப்பகத்தால் வெளிவந்தது.’ என்றார். அதாவது 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று ‘பிறவுண்’ நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும். ‘எங்கு சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், எமக்காக யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான், இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது’ என்பதையும் அவரோடு உரையாடியபோது, நான் புரிந்து கொண்டு, அவரது துணிச்சலான செயலைப் பாராட்டி அவரிடம் இருந்து விடை பெற்றேன். சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன். https://www.sirukathaigal.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/
  20. 11 JUN, 2025 | 08:59 AM கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள். ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்று நினைத்தார்கள். ஊழல் மோசடிகள், முறைகேடுகள் இன்றி தூய்மையாக ஆட்சி செய்வது, ஊழல் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது, கொளளையடிக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்டுக் கொண்டுவருவது ஆகியனவே தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகள். ஆனால், அவ்வாறு அந்த பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை அரசாங்கத்தின் மீதான பொதுவான விமர்சனம் அதிகரித்து வருகின்றது. அண்மைய சில வாரங்களாக, முன்னைய அரசாங்கங்களில் உறுப்பினர்களாக இருந்த ஊழல் மோசடிகளால் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கைதுசெய்ப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் செய்ததாக நம்பப்படுகின்றதை விடவும் சிறியளவிலான குற்றச்செயல்களுக்காகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அத்தியாவசியமான வரிகளைச் செலுத்தாமல் வாகனங்களை கொள்வனவு செய்ததை, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வெளியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டார்கள். சில வழக்குகளில், அவர்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட வகையிலான பாரிய ஊழலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகத் தோன்றுகின்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் கடுமையான தண்டனைகளை நீதித்துறை விதித்திருக்கிறது. இது சட்ட மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற கோடிக்கணக்கான டொலர்களை அரசாங்கத்தினால் எவ்வாறு மீட்டுக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்பதற்கான அறிகுறி எதையும் தற்சமயம் காணமுடியவில்லை. உடைமைகள், ஆடம்பர வாகனங்கள், அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளினால் அவர்களது உத்தியோகபூர்வ சம்பாத்தியத்தியத்துக்கு விகிதப் பொருத்தமில்லாத வகையில் கொள்வனவு செயாயப்பட்ட நிலங்கள் போன்ற உள்நாட்டுச் சொத்துக்களை கண்டுபிடிப்பதிலேயே இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் விசாசணைகள் கவனத்தைக் குவித்திருக்கின்றன. ஆனால், உண்மையில் இடம்பெற்றதாக நம்பப்பட்ட ஊழலையும் விட சிறியதாக இருந்தாலும் அவற்றைச் செய்தவர்களை கண்டுபிடிப்பதில் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றமை அரசாங்கத்தின் பற்றுறுதியில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு, கிழக்கு நீண்டகால உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய " முறைமை மாற்றத்திற்காக " நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்ற மக்களுடன் சேர்ந்து வாக்களித்தார்கள். இதற்கு மேலதிகமாக, அரசியலில் புதிய முகமான தேசிய மக்கள் சக்தி தங்களுக்கு தங்களது உரிமைகளையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் வாக்களித்தார்கள். பிழைத்து வாழ்ந்து முன்னேறுவதற்கு அவர்களுக்கு வளங்கள் எந்தளவுக்கு தேவையோ அதைப் போன்றே போர்காலத்தில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான அனுபவங்களை அவர்களினால் அலட்சியம் செய்ய முடியாது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்தாலும் சரி, வெளியில் வாழ்ந்தாலும் சரி, போரையும் அதன் விளைவான இழப்புக்களை அனுபவித்தவர்களை பழைய சம்பவங்கள் தொடர்ந்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும். பதினாறு வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்காக இன்னமும் காத்திருக்கின்றார்கள். தங்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனபதை தெரிந்துகொள்ளாத நிலையில், ஆட்கள் காணாமல்போகச் செய்யப்பட்ட அந்த சம்பவங்கள் முழுச் சமூகங்களையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அத்தகைய நிலைவரம் நல்லிணக்கத்துக்கான நாட்டின் முயற்சிகளை மலினப்படுத்தும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அதற்கு ஒரு உதாரணமாகும். சாட்சியங்களின் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழக முகாமில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி இராணுவத்தினால் 158 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எதுவும் தெரியாது. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அக்கறைகளில் இருந்து கவனத்தை திருப்பும் நடவடிக்கைகளிலேயே நாட்டம் காட்டி வந்திருக்கின்றன. கடந்த காலத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. முன்னைய அரசாங்கங்களின் உயர்மட்ட தலைவர்களில் பலர் தாங்களே போரில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதிகள் பாதுகாப்பு அமைச்சராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்தார்கள். கடந்த காலத்தில் உண்மையில் நடந்தவை பற்றிய வேதனையானதும் சர்ச்சைக்குரியதுமான விவகாரங்களை கையாள்வதில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு அக்கறை இல்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சினை. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை, அமைதியும் வழமைநிலையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரு எளிமையான நம்பிக்கையுடனேயே அவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, போர்க்காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தில்லை என்பதால் அதன் கீழ் கடந்த காலத்தைக் ஒரு கையாளக்கூடிய நிலைபேறான தீர்வொன்றை காண்பது சாத்தியமாகக் கூடியதாகும். ஆனால், அதற்கு கடந்த காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அரசியல் துணிவாற்றலும் பற்றுறுதியும் அவசியமாகும். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கூட, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. இது பல தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளின் பாணியை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. இத்தகைய நிலைவரம் போரின் தர்க்கம் உண்மையில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை மாத்திரமல்ல, அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது. வெளிப்படையான மோதலுக்கு பதிலாக, இப்போது காணிகளை திருப்பிக் கையளித்தலில் உயர் அதிகாரிகள் மற்றும் நிருவாக மட்டங்களில் காணப்படும் தாமதம், சட்டங்களை பாகுபாடான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் மத்தியமய செயன்முறைகள் ஊடாக உள்ளூர்ச் சுயாட்சியை படிப்படாயாக திணறடித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடைசி ஆணைக்குழு பதினாறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட முறை தொடர்பிலான சர்வதேச கரிசனை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்துவருகிறது. இலங்கையின் போர்களத்தில் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்தவர்கள் அவற்றை எவ்வாறு செய்தார்கள், செய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது இலங்கையில் இடம்பெற்றதை விடவும் மோசமான மீறல்கள் இடம்பெற்ற உலகின் வேறு பாகங்களுக்கும் பாடங்களாக அமையக்கூடும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை நாட்டின் நற்பெயருக்கு ஒரு அச்சுறுத்தலாக அல்லது ஒரு சுமையாக நோக்குவதற்கு பதிலாக, உலகிற்கு ஒரு வகைமாதிரியாக அமையக்கூடியதாக சரவதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பாக அரசாங்கம் நோக்கலாம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை அவலத்துக்கு உள்ளாக்கிய இன, மதப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்பதையே " முறைமை மாற்றத்துக்கான " மக்களின் ஆணையும் உணர்த்துகிறது. பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்பற்றுகின்ற அதே தந்திரோபாயத்தை அரசாங்கம் இது விடயத்திலும் பின்பற்ற முடியும். சுயாதீனமான அரச நிறுவனங்கள் ஊடாக செயற்பட அனுமதிக்கப்பட்டால் நீதியை நிலைநாட்டுவதற்கு வலிமையான கருவிகளாக அமையக்கூடிய வழமையான சட்டங்களையே அரசாங்கம் பயன்படுத்தவும் முடியும். மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்களை பொறுத்தவரை, அவற்றைக் கையாளுவதற்கென்ற அமைக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட " வகை மாதிரியான" ( Emblematic cases ) வழக்குகளை கையாளமுடியும். இந்த வழக்குகள் பல தசாப்தங்களாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்கும் மனித உரிமைமீறல்கள் அல்லது போர்க்கால துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவையாகும். உதாரணமாக, திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்( 2006), மூதூரில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் பதினேழு உதவிப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 2006), ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் (2010 ) ஆகியவற்றை கூறலாம். போருடன் சம்பந்தப்பட்ட முன்னைய சகல ஆணைக் குழுக்களினதும் அறிக்கைகளை ஆராய்வதற்காக 2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவே போர் விவகாரங்களை ஆராய்ந்த கடைசி ஆணைக்குழுவாகும். " வகைமாதிரியான வழக்குகளை " விசாரணை செய்வதை முதற்பணியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமக்கப்பட வேண்டும் என்று நவாஸ் ஆணைக்குழு சிபாரிசு செய்தது. அத்தகைய ஒரு நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அக்கறை தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்பும். பொருளாதார ஊழல்கள் பொறுத்துக் கொள்ளப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் மாற்றியமைக்கப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் கடந்த காலத்துக்கு ஒரு முடிவைக் கட்டவும் தேசிய அபிவிருத்திக்காக சேர்ந்து பாடுபடுவதற்காக மக்களையும் சமூகங்களையும் ஐக்கியப்படுத்தவும் உதவ முடியும். https://www.virakesari.lk/article/217130
  21. Israeli army says it continues to strike Iran The Israeli army continues to attack targets in Iranian territory, it says in a post on X published a few minutes ago. It also shared footage of an explosion in an unidentified location. Netanyahu says attack was originally planned for late April The Israeli prime minister claims that after the assassination of Hassan Nasrallah, the longtime leader of Hezbollah, Tehran began to develop a nuclear weapon. In a televised address, the PM said he ordered the elimination of Iran’s nuclear program six months ago and set the date for the operation for the end of April. Israel had “no choice” but to strike Iran, even in the absence of any US support, he said, adding that the US was notified in advance and what it decides to do now is up to Washington. Trump says it’s unclear if Iran still has a nuclear program, not concerned about regional war: Report Trump has told Reuters in a phone interview that it was unclear if Iran still has a nuclear program following Israeli strikes on the country. Trump said the US still has nuclear talks planned with Iran on Sunday, but that he is not sure if they will still take place. He said it was not too late for Iran to make a deal. “I tried to save Iran humiliation and death,” Trump said. He said he is not concerned about a regional war breaking out as a result of Israel’s strikes. aljazeera
  22. DRINKS Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia 212 & 207 South Africa (39 ov, T:282) 138 & 160/2 Day 3 - Session 3: South Africa need 122 runs. Current RR: 4.10 • Min. Ov. Rem: 25 • Last 10 ov (RR): 50/0 (5.00)
  23. போயிங் விமானங்களில் தரமற்ற உதிரி பாகமா? மீண்டும் வெளிச்சம் பெறும் முன்னாள் ஊழியரின் குற்றச்சாட்டு படக்குறிப்பு, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல்முறை கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் ஜோசப்ஸ் பதவி, வணிகச் செய்தியாளர் 13 ஜூன் 2025, 07:21 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்திலிருந்து புறப்பட்ட 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம் போயிங் 787, ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது. போயிங் 787 வகை விமானம் விபத்துக்குள்ளாவது இது முதல் முறை. அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த மாடலை 14 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. உலகின் வெவ்வேறு விமான நிறுவனங்களிடம் 1,175-க்கும் மேற்பட்ட 787 வகை விமானங்கள் இருப்பதாக அந்த தருணத்தில் போயிங் நிறுவனம் தெரிவித்தது. போயிங் விமான நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கடந்த 14 ஆண்டுகளில் இந்த ரக விமானம் ஒரு பில்லியன் பயணிகளின் போக்குவரத்துத் துணையாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50 லட்சம் முறை மேற்கொண்ட பயணங்களின் மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்றும் தெரிவித்திருந்தது. தனது 737 வகை விமானங்கள் மூலம் ஏற்பட்ட விபத்துகள் உட்பட்ட பல்வேறு பிரச்னைகளுடன் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு 787 ட்ரீம்லைனர் நொறுங்கியது ஒரு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓராண்டைக் கடந்துள்ள கெல்லி ஓர்ட்பெர்கிற்கு இது மற்றுமொரு சோதனை. கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போயிங் நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏர் இந்தியா போயிங் 787-8-ன் சிறப்பு அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போயிங் விமானங்கள் தயாரிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக ஒரு முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். போயிங் 787-8 விமானம் ஏர் இந்தியாவிடம் 2014-ல் சேர்ந்தது. அதில் மொத்தமாக 256 இருக்கைகள் உள்ளன. அதன் நீளம் 57 மீட்டர், அகலம் (இரண்டு இறக்கைகளின் நுனிகளுக்கு இடையிலான தூரம்) 60 மீட்டர் மற்றும் அதன் உயரம் 17 மீட்டர் விமானத் தயாரிப்பில் முறையான தர நிலைகளை பின்பற்றுவதில்லை என போயிங் நிறுவனத்தின் மீது அதன் முன்னாள் ஊழியரான ஜான் பர்னெட் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில் 32 வருடங்கள் பணி புரிந்த பின்னர் அவர் 2017ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். போயிங் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் அவர் பல ஆதாரங்களை கொடுத்தார். சில நாட்கள் கழித்து, 2024ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பர்னெட் தனக்குதானே விளைவித்துக்கொண்ட காயங்களால் உயிரிழந்தார். ஆமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதும் போயிங் நிறுவனப் பங்கு மதிப்பு 4.32 சதவீதம் சரிவை சந்தித்தது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய போயிங் 787 விமானத்தின் சிதறிய பாகங்கள் தயாரிப்பு குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் வடக்கு சார்ல்ஸ்டன் தொழிற்சாலையில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருந்த போது ஜான் பர்னெட் அங்கு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக இருந்தார். தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும், தரம் குறைவான உதிரி பாகங்களை விமானங்களில் பொருத்தியதாகவும் அவர் பிபிசியிடம் 2019ஆம் ஆண்டு தெரிவித்தார். விமானத்தின் ஆக்சிஜன் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், நான்கில் ஒரு ஆக்சிஜன் முகக்கசவம் அவசர காலத்தில் வேலை செய்யாத நிலையில் இருக்கலாம் என்றும் பர்னெட் எச்சரித்திருந்தார். 787 ரக விமானத்தில் நிறுவப்பட்ட அவசர கால ஆக்சிஜன் அமைப்பு பரிசோதிக்கப்பட்டபோது 25 விழுக்காடு தோல்வியடைந்ததாக அவர் கூறினார். தெற்கு கரோலினாவில் தயாரிப்பு பணிகள் தொடங்கிய பிறகு விமானங்களை வேகமாக தயாரிக்கும்படி தொழிலாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர்கள் தயாரிப்பு முறையிலும், பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள நேர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பர்னெட் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ஆய்வு செய்தபோது அவற்றில் சில உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டன. குறைபாடான உதிரிபாகங்களும் உபகரணங்களும் நிறுவனத்திலிருந்து காணாமல் போன பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போயிங் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. பர்னெட்டின் குற்றச்சாட்டுகளை போயிங் நிறுவனம் மறுத்தது. சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் முறையற்ற வகையில் அனுப்பப்பட்டு அவை விமானங்களில் நிறுவப்பட்டன என கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என விநியோக நிறுவனம் விளக்கம் (2017-ல் ) அளித்தது. இதற்கிடையே கடந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட புதிதாக தயாரிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் அவசர கால வழியின் கதவு புறப்பட்ட சிறிது நேரத்தில் தனியாக பிரிந்து சென்றது. தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களை உறுதி செய்ய தவறிவிட்டதாக போயிங் நிறுவனத்தின் மீது கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd621yd8106o
  24. "ஈரானிற்குள் ஆளில்லா விமான தளங்களை அமைத்த மொசாட் - தெஹ்ரானின் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட விசேட படைப்பிரிவினர் ";- இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தகவல் Published By: RAJEEBAN 13 JUN, 2025 | 02:00 PM இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது என அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் டைம்ஸ் ஒவ் இஸ்ரேலிற்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் இராணுவ கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளிற்காக பலவருடங்களாக திட்டமிடலில் ஈடுபட்டது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானிற்குள் ஆளில்லா விமானதளமொன்றை மொசாட் உருவாக்கியது. துல்லியமாக தாக்கும் ஆயுதங்களையும் கொமாண்டோக்களையும் ஈரானிற்குள் கொண்டு சென்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் திட்டம் வெற்றிபெறுவது மொசாட்டும் இஸ்ரேலிய இராணுவமும் இணைந்து முன்னெடுத்த திட்டமிடலிலேயே தங்கியிருந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிற்கு அருகில் மொசாட் ஆளில்லா விமானதளமொன்றை ஏற்படுத்தியது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆளில்லா விமானங்களை நேற்றிரவு இஸ்ரேல் பயன்படுத்தியது அதிலிருந்து ஏவுகணைகளை ஈரானின் இலக்குகளை நோக்கி செலுத்தியது. மேலும் ஆயுத அமைப்புகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஈரானிற்குள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பயன்படுத்தி ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முறைகளை செயல் இஸ்ரேல் செயல் இழக்க செய்தது. இது இஸ்ரேலிய விமானங்கள் ஈரானின் வான்பரப்பில் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையை ஏற்படுத்தியது. மூன்றாவது இரகசிய முயற்சியாக இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் கொமான்டோக்கள் மத்திய ஈரானில் உள்ள விமான எதிர்ப்பு நிலைகளிற்கு அருகில் துல்லியமாக தாக்க கூடிய ஏவுகணைகளை நிலைகொள்ளச்செய்திருந்தனர். முன்னர் ஒருபோதும் இல்லாத மிகவும் புதுமையான சிந்தனை, மிகவும் துணிச்சலான திட்டமிடல் நவீன தொழில்நுட்பங்களை மிகவும் துல்லியமாக பயன்படுத்துதல், விசேட படைப்பிரிவினர் உள்ளுர் புலனாய்வாளர்களின் கண்களில் மண்ணை தூவிட்டு ஈரானின் மையப்பகுதியில் செயற்பட்ட முகவர்கள் ஆகியவற்றினை இந்த நடவடிக்கை நம்பியிருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217359
  25. ஆமதாபாத் விமான விபத்தில் இருந்து இவரை காப்பாற்றிய அந்த '5 நிமிடங்கள்' - என்ன நடந்தது? பட மூலாதாரம்,BHUMI CHAUHAN. படக்குறிப்பு, போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ் பரிக் பதவி, 13 ஜூன் 2025, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் வியாழக்கிழமையன்று மதியம் (நேற்று), 30 வயதான பூமி சவுகான் விமானத்தை தவறவிட்டதால் வருத்தமடைந்தார். ஆனால் விரைவிலேயே, அதற்காக அவர் நன்றி தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் தவறவிட்ட ஏர் இந்தியா விமானம், ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. பூமி சவுகான் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக குஜராத்தில் உள்ள அங்கலேஷ்வரில் இருந்து சாலை வழியாக பயணம் மேற்கொண்டார். "நாங்கள் சரியான நேரத்தில் ஆமதாபாத்தை அடைந்தோம். ஆனால் நகரத்தில் இருந்த போக்குவரத்து நெரிசலால், நான் விமான நிலையத்தை ஐந்து நிமிடங்கள் தாமதமாகத்தான் அடைந்தேன். என்னை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை, முதலில், நான் டிக்கெட் பணத்தை இழந்துவிட்டேன், வேலையை இழக்க நேரிடும் என்றும் நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது, நன்றியோடு இருக்கிறேன்... பணம் போயிருக்கலாம். ஆனால் என் உயிர் காப்பாற்றப்பட்டது"என்று சவுகான் பிபிசியிடம் கூறினார். "நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறிய அவர், "நான் இங்கு ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தேன். எனது விடுமுறை முடிந்துவிட்டதால் நான் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டார். போக்குவரத்து நெரிசலால், இணையதளம் மூலம் விமானத்தில் செக்-இன் செய்ததாக பூமி கூறினார். ஆனால் விமானத்தில் ஏற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. "நான் தாமதமாக வந்தேன் என்றும், குடிவரவு செயல்முறையும், போர்டிங்கும் முடிந்துவிட்டதனால் என்னால் விமானத்தில் ஏற முடியாது என்றும் ஏர் இந்தியா ஊழியர்கள் கூறினார்கள்," "நான் வேலையை இழந்துவிடக் கூடும், டிக்கெட் பணமும் போய்விடும் என்று பலமுறை கெஞ்சினேன். யாரும் கேட்கவில்லை. பணத்தைத் திரும்பக் கேட்டேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்."என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பின்னர். விமான நிலையத்திலிருந்து வெளியேறி, வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்திய போது தான் அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை பூமி உணர்ந்தார். "நாங்கள் டீ குடிக்கலாம் என்று வண்டியை நிறுத்தி, எங்கள் பயண முகவருடன் பணத்தை திருப்பி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் அங்கலேஷ்வரிலிருந்து, நான் ஏறவிருந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று அழைப்பு வந்தது," என்று பூமி கூறுகையில், அவரது குரல் அதிர்ச்சியில் நடுங்கியது. "நாங்கள் உடனே ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நன்றி கூறினோம்... ஆமதாபாத்தின் போக்குவரத்து நெரிசல்தான் என் உயிரைக் காப்பாற்றியது"என்றார் பூமி. பட மூலாதாரம்,BHUMI CHAUHAN. படக்குறிப்பு, பூமி சவுகான் லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அந்த விமானத்தில் பயணித்தார். விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், BHUMI CHAUHAN. படக்குறிப்பு,"நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து எனது சொந்த ஊரான அங்கலேஷ்வருக்கு திரும்பி வந்தேன்," என்று கூறினார் பூமி. "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஸ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. விஸ்வாஸ் குமார் ரமேஷ் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தார் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyvmdp36697o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.