Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 06 JUN, 2025 | 10:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார். ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024 தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இதோடு ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க். மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார். ‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216740
  2. Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 11:16 AM காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. 14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது. காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன. இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216640
  3. 2009 ஆம் ஆண்டுக்கு முன் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த பொருட்கள் தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன : 300 கொள்கலன்கள் குறித்து அர்ச்சுனா வெளியிட்ட பரபரப்பு தகவல் Published By: VISHNU 06 JUN, 2025 | 06:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெற்றி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர். இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும். அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர். அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது. 2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர். எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர். இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன். ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார். https://www.virakesari.lk/article/216732
  4. செம்மணி புதைகுழியில் கைக்குழந்தைகள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 18 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 06 JUN, 2025 | 06:36 AM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால், அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதுவரையில் ஆடை, அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால், வெற்று உடல்களாகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக காணப்படலாம் எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/216733
  5. Published By: VISHNU 05 JUN, 2025 | 09:55 PM யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ' பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்' உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின் விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/216729
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி 5 ஜூன் 2025 இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது. "இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்களின் தகவலை மேற்கோளாகக் கொண்டு, அதானி குழுமத்தின் முக்கியப் பிரிவான அதானி எண்டர்பிரைசஸுக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பல எல்பிஜி சரக்கு கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டார். இரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அல்லது நபரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்த நேரத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது. அறிக்கை என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது. ஆசியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி, தன் மீதான கடந்த கால குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கன் ஜர்னல் தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் கௌதம் அதானி மீது மோசடி மற்றும் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம் நடத்தும் விசாரணை அதானிக்கு பெரும் சவாலானதாக மாறக்கூடும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்றும் செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் கப்பல்களின் நகர்வுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். கப்பல்களை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகையில், கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் போது, பொதுவாக தங்களது அடையாளத்தை மறைத்து இயக்கும் கப்பல்கள் பயன்படுத்துவதைப் போன்ற சில நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்பிஜி சரக்கு கப்பல்களைக் கண்காணிக்கும் லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸில் கடல்சார் ஆபத்து ஆய்வாளராக இருக்கும் டோமர் ரானன், கப்பலின் உண்மையான இருப்பிடம் அல்லது அடையாளத்தை மறைக்க, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மீது குறுக்கீடு செய்வது பொதுவான முறை என்று விளக்குகிறார். கப்பலின் நிலை குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பு தான் இந்த தானியங்கி அடையாள அமைப்பு (AIS). கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதானிக்காக எல்பிஜியை எடுத்துச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய எஸ்எம்எஸ் பிரதர்ஸ் சரக்குக் கப்பலில் இதேபோன்ற செயல்முறை காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது. லாயிட்ஸ் லிஸ்டின் கடல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆய்வு செய்த இந்த இதழ், அந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தெற்கு இராக்கில் உள்ள கோர் அல்-ஜுபைரில் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டறிந்தது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இராக்கில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை என அறிக்கை கூறுகிறது. எனினும், இராக்கின் டோன்புக் பகுதியில் உள்ள எல்பிஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்எம்எஸ் ப்ரோஸுடன் பொருந்தக் கூடிய ஒரு கப்பலின் படங்களை செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இந்தச் செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்களைப் பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இரானில் நின்ற கப்பல் உண்மையில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதானி குழுமம் பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் கூறியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கை குறித்து, அதானி குழுமம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது. "அதானி குழும நிறுவனங்களுக்கும், இரானிய எல்பிஜிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது. இரானிய எல்பிஜி தொடர்பான தடைகளைத் தவிர்க்க அல்லது அதில் ஈடுபட திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்தும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை முற்றிலும் தவறான கணிப்புகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. "அதானி குழுமம் இரான் மீதான அமெரிக்கத் தடைகளை வேண்டுமென்றே மீறுகிறது என்ற கூற்றை நாங்கள் மறுக்கிறோம். கொள்கை ரீதியாக, அதானி குழுமம் அதன் எந்த துறைமுகத்திலும் இரானிய சரக்குகளைக் கையாளுவதில்லை. இதில் இரானில் இருந்து வரும் எந்தவொரு பொருளோ அல்லது இரானியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களும் அடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. "இரானியர்களுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலையும் அதானி குழுமம் நிர்வகிக்கவோ அல்லது எந்த வசதிகளையும் வழங்கவோ இல்லை. இந்தக் கொள்கை எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது." வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல், நேரடியாக தங்களால் கையாளப்படவில்லை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது என்றும் அதானி குழுமம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதை காட்டும் ஆவணங்களால் இந்தக் கூற்றை அக்குழுமம் உறுதிப்படுத்துகிறது. எஸ்எம்எஸ் ப்ரோஸ் உள்ளிட்ட எந்தக் கப்பலையும் இயக்கவில்லை என்றும், அவை எங்களுடைய சொத்துகள் அல்ல என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் அதானிக்கு எதிரான பழைய வழக்குகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில், கௌதம் அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய கூட்டாளி என்று விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தனது நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, அந்த விஷயத்தை மறைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் கூறியது. அமெரிக்காவில் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் இந்தியத் தொழிலதிபர் அதானி தான். கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மேலும் 6 பேர் மீது , சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, நியூயார்க்கின் கிழக்கு மாகாணத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது. கௌதம் அதானியின் சில பிரதிநிதிகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அதில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து விவாதம் நடந்ததாகவும், கடந்த மாதம் தான் புளூம்பெர்க் தனது அறிக்கைகளில் ஒன்றில் கூறியது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் தனது அறிக்கையில் இந்த சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதானி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில், அதானி குழும உரிமையாளர்களான கௌதம் அதானி மற்றும் வினோத் அதானி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, 2020 முதல் தனது 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்து 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதும் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் 37 போலி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவை பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானியின் நிகர சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அல்லது ரூ.6.63 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lk2e27xj1o
  7. Published By: VISHNU 05 JUN, 2025 | 08:59 PM கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது. மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை குறித்த மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. ஆளனி இன்மையே இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர். பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre) உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216727
  8. செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 08:08 PM செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேசநடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வெளிப்படைதன்மையை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது. செம்மணியின் இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இது அமையலாம்.எனினும் இதற்கு சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி அகழ்வு இடம்பெறுவது அவசியம். மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு இலங்கை அதிகாரிகள் உரிய நிதியை ஒதுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் ஊடகங்களிற்கும் அந்த பகுதிக்கு செல்வதற்கான போதிய அனுமதியை வழங்கினால் ,இநத விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விசாரணைகளின் போது இடைக்காலத்தில் தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வந்தால் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசரத்தை கருத்தில் கொள்ளும்போது இது இடம்பெறவேண்டும். அந்த பகுதியின் நேர்மைதன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/216724
  9. Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216723
  10. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பு : டக்ளஸை சந்தித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் பேச்சு Published By: DIGITAL DESK 3 05 JUN, 2025 | 05:24 PM ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (5) யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216705
  11. புதிய விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது - அமைச்சர் பிமல் சபையில் விளக்கம் 05 JUN, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் எயார் பஸ் விமானம் குத்தகை அடிப்படையிலானது. 8 வருடங்களில் அதனை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கில்ஸ் நெல்சன் உரையாற்றுகையில், விமான சேவைக்கு அரசாங்கம் புதிதாக கொண்டுவந்திருக்கும் விமானத்தின் தரம், அதன் வசதி வாய்ப்புக்கள், அது பழைய விமானம் என்றாலும் அதன் மறுசீரமைப்பின் தரம் தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என கேண்டுக்கொண்டார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பிரமல் ரத்நாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவந்திருக்கும் எயார் பஸ் விமானம், மாதத்துக்கு 1000 டொலர் என்ற அடிப்படையில் குத்தகைக்கே கொண்டுவந்திருக்கிறோம். 8 வருடங்களில் அதனை மீண்டும் குறித் கம்பனிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும். இந்த விமானம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை. புதிய விமானம் கொள்வனவு செய்வதற்கு இப்போதைக்கு எங்களுக்கு முடியாது. புதிய விமானம் கொள்வனவு செய்ய 1.3 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும். தற்போது நாங்கள் கொண்டுவந்திருக்கும் விமானம் மிகவும் நல்ல முறையில் மறுசீரமைத்தே கொண்டுவந்திருக்கிறோம். விமானத்தின் பாகங்கள்,இன்ஜின் மிகவும் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தின் தரம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இந்த விமானத்துக்கான குத்தகையை நல்லமுறையில் செலுத்தி, 8 வருடங்களில் மீள ஒப்படைக்க இருகிறோம். எதிர்காலத்தில் மேலும் விமானங்களை கொண்டுவந்து இந்த சேவையை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டிருக்கிறோம். அதனால் இந்த விமானம் தொடர்பில் தரம் குறைவாக கதைப்பது நல்லதில்லை என்றார். https://www.virakesari.lk/article/216691
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், எல்லியட் பால் பதவி, பிபிசி நியூஸ் 5 ஜூன் 2025, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக (darker) மாறியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. "கடல் அடர் நிறமடைதல்" என்று இந்தச் செயல்முறை அழைக்கப்படுகின்றது. கடலின் மேல் அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள், நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது இந்த நிலை உருவாகிறது. இந்த மேல் பகுதி, 'ஃபோட்டிக் மண்டலம்' (photic zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் தான் கடல் உயிரினங்களில் 90% உயிர்கள் வசிக்கின்றன. உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சி ஆரோக்கியமாக இயங்குவதற்கும் இந்த மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2003 முதல் 2022க்கு இடைபட்ட காலத்தில், உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்? இந்த ஆய்வின் படி, பாசித் திரள் பரவலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே, கடல் கருமையானதாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் என நம்பப்படுகிறது. பெரும்பாலும், ஊட்டச்சத்து நிறைந்த நீர், கடலோரப் பகுதிகளின் மேற்பரப்புக்கு எழும்பும் இடங்களில், கடல் அடர் நிறமடையும் தன்மை காணப்படுகிறது. மழைப் பொழிவு அதிகரிக்கும் போது, நிலத்திலிருந்து விவசாயக் கழிவுகள் மற்றும் மண்ணில் படிந்துள்ள அடர்த்தியான பகுதிகள் கடலுக்குள் செல்லும். இவை பிளாங்க்டன்களுக்கு உணவளிக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், கடுமையாகவும் நிகழும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. திறந்த கடல் பரப்புகளில், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்ததால், ஒளியைத் தடுக்கும் வகையில் பிளாங்க்டன்களின் அளவு அதிகரித்திருக்கலாம். இதுவும் கடல் கருமையடைய ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன? பட மூலாதாரம்,UNIVERSITY OF PLYMOUTH படக்குறிப்பு,உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் சூரிய ஒளி அதிகரிப்பதை (lightening) நீல நிறமும் குறிக்கின்றன கடலின் 9%க்கும் அதிகமான பகுதியில், அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவில், 164 அடி (50 மீட்டர்) வரை ஒளி குறைந்திருப்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கடலின் 2.6% பகுதியில், 328 அடி (100 மீ) வரை ஒளி குறைந்துள்ளது. வளைகுடா நீரோடையின் மேற்பகுதியிலும், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஃபோடிக் மண்டலத்தின் ஆழம் (கடலின் சூரிய ஒளி படரும் மேல் அடுக்கு) மாறிவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்த பகுதிகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெரியளவில் விளைவுகளை எதிர்கொள்கின்றன. கரையோரப் பகுதிகள் மற்றும் பால்டிக் கடல் உட்பட சுற்றிலும் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட கடல்களிலும் கடல் அடர் நிறமடைந்துள்ளது. ஆனால், கடலின் எல்லாப் பகுதிகளும் அடர் நிறமடையவில்லை என்று ஆய்வு கூறுகிறது. அதே காலகட்டத்தில், சுமார் 10% கடல்பரப்பு அதிகமாக நிறம் மங்கியுள்ளது. இந்த கலவையான சூழல், கடல் அமைப்புகளின் சிக்கலான தன்மையையும், நீரின் தெளிவை பாதிக்கும் பல காரணிகளையும் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? இந்த மாற்றங்கள் எதற்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து துல்லியமாக கூற முடியாத நிலையிலும், உலகின் பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழல்கள் பாதிக்கப்படக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "கடந்த 20 ஆண்டுகளில் கடலின் மேற்பரப்பு எவ்வாறு நிறம் மாறியுள்ளது என்பதைக் காட்டும் ஆராய்ச்சி உள்ளது. இது பிளாங்க்டன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம்" என்று பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு இணைப் பேராசிரியர் முனைவர் தாமஸ் டேவிஸ் தெரிவித்தார். "இதுபோன்ற மாற்றங்கள் பரவலான இருளை ஏற்படுத்துகின்றன என்பதற்கான ஆதாரங்களை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. இதனால், சூரியன் மற்றும் சந்திரனைச் சார்ந்து உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு தேவைப்படும் கடலின் பரப்பளவு குறைகிறது". நீரின் இந்த மேல் அடுக்கு பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் - எங்கே செல்கின்றன? பருவமழையை கணிக்க வேளாண் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம் இத்தாலியில் 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய எட்னா எரிமலை எவரெஸ்ட் உச்சியில் ஹிலாரி, டென்சிங் எவ்வளவு நேரம் இருந்தனர்? என்ன செய்தனர்? இங்கு பைட்டோபிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. இவை உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் முக்கிய உயிரினங்கள். ஒளிச்சேர்க்கைக்கு போதுமான சூரிய ஒளி தேவைப்படுவதால் அவை நீரின் மேற்பரப்புக்கு அருகில் காணப்படுகின்றன. இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உணவு கிடைக்கும் ஒளி மண்டலங்களில் வேட்டையாடி இனப்பெருக்கம் செய்கின்றன. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் பாதியை உருவாக்கும் பைட்டோபிளாங்க்டன்கள், கார்பன் சுழற்சி மற்றும் கடல் உயிர்வளத்துக்கும் அவசியமானவையாக உள்ளன. 'கவலைக்கு உண்மையான காரணம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு கடல் அடர் நிறமாவதால், மனிதர்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், அவர்கள் உண்ணும் மீனுக்கும், உலகின் காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் போராட்டத்துக்கும் பாதிப்பு உண்டாகும் என்று டேவிஸ் கூறுகிறார். "எங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்கான உண்மையான காரணத்தைக் குறிக்கின்றன". பிளைமவுத் மரைன் ஆய்வகத்தின் கடல் உயிரி வேதியியல் மற்றும் கண்காணிப்புகளுக்கான அறிவியல் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்மித் கூறுவதன் படி, அங்கு ஏற்படும் மாற்றங்களால் ஒளி தேவைப்படும் சில கடல் விலங்குகள் மேற்பரப்புக்கு நெருக்கமாக வரலாம். இதனால் உணவு மற்றும் பிற வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும். "இது முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்" என்று பேராசிரியர் ஸ்மித் கூறினார். ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? 'Darkening of the global Ocean' என்ற ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட கடல் மாதிரியுடன் சேர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தனர். நாசாவின் ஓஷன் கலர் வெப் தரவு, உலகப் பெருங்கடலை 9 கிலோமீட்டர் அளவுடைய பிக்சல்களாகப் பிரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பிக்சலிலும் கடல் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க, அந்தத் தரவு உதவியது. அதே சமயம், கடல் நீரில் ஒளியை அளவிட உருவாக்கப்பட்ட அல்காரிதம் ஒவ்வொரு இடத்திலும் ஒளி மண்டலத்தின் ஆழத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டது. சூரிய மற்றும் சந்திர கதிர்வீச்சு மாதிரிகள் பகலிலும் இரவிலும் ஒளி நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கடல் உயிரினங்களை எப்படி பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. இரவு நேரத்தில் ஒளி அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பகல் நேரத்தை விட குறைவாக இருந்தன, ஆனால் அதுவும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yx7d0yr10o
  13. உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா. அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது. எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன். தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம். இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.
  14. மிகத்தவறான செயல். சட்டங்கள் திருத்தப்பட்டு இவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
  15. சாய் சுதர்ஷன் இந்த 2025 ஐ.பி.எல்லில் மட்டுமல்ல இதுவரையிலான ஒட்டுமொத்த ஐ.பி.எல் பருவங்களிலுமே தோன்றிய மட்டையாளர்களில் ஆகச்சிறந்தவர் சாய் சுதர்ஷன்தான். இவ்வாண்டு 156 ஸ்டிரைக் ரேட்டில் 759 ரன்கள். ஸ்டிரைக் ரேட்டோ இந்த ரன்களோ கூட அல்ல, வேறொன்றுதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஷ்ரேயாஸ் ஐயரையோ அபிஷேக் ஷர்மாவையோ போல பெரிய சிக்ஸர்கள் அடிப்பவர் அல்ல. ஆனால் எந்த ஆட்டத்திலும் அவர் ஆட்டச்சூழலாலோ பந்துவீச்சாளர்களாலோ ஆதிக்கம் செய்யப்படவில்லை, எதுவுமே அவரை நிலைகுலைய வைக்கவில்லை. ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை எந்த ரிஸ்கும் இன்றி அவர் எடுப்பதையும் வேகவீச்சையும் சுழலையும் பிசிறின்றி ஆடுவதையும் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் திறமையைப் பார்ப்பதைப் போல இருந்தது. வேகவீச்சை ஆடும்போது அவர் சில நுண் வினாடிகள் முன்பே தயாராக இருக்கிறார் - அனேகமாக எந்த விதப் பந்தையும் கணிப்பதில் அவருக்குப் பிழையேற்பட்டு நான் பார்க்கவில்லை. இசை நடத்துநர் ஒருவர் பெரிய வாத்திய கோஷ்டியை தன் சுண்டு விரல் அசைவில் கட்டுப்படுத்தி பிரம்மாண்ட இசையனுபவத்தை கட்டியெழுப்பி நம்மை மயக்கி நிறுத்துவதைப் போல எதிரணியின் கள அமைப்பு, பந்து வீச்சு, திட்டங்கள் எல்லாவற்றையும் சுதர்ஷன் தனி ஆளாக நடத்துவதாகத் தோன்றுகிறது. மிகப்பெரிய ஸ்கோர்களை அவர் துரத்திப் போகும்போதும் சற்றும் அவசரமோ குழப்பமோ இல்லை. மும்பைக்கு எதிராக 228 எனும் இலக்கை சரியான துணை வீரர் இன்றி அவர் எடுத்துச் சென்று (தோல்வியுற்றாலும்) 163 ஸ்டிரைக் ரேட்டில் 80 அடித்ததைப் பார்த்தபோது வாவ் என்றிருந்தது. ஏதோ ஒரு போட்டியில் 200 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் / சதம் அடிப்பது பெரிய விசயமில்லை, எல்லா போட்டிகளிலும் எதிரணியை அடித்து துவம்சம் பண்ணுவது, அவுட் பண்ணுவதற்கு சிறு பழுதும் கொடுக்காமல் ஆடுவது கிட்டத்தட்ட மேதமையைதான். சாய் சுதர்ஷனின் வளர்ச்சியின் அடுத்த கட்டம் இன்னும் சில சிக்ஸர்களைக் கூடுதலாக அடிக்கப் பழகுவதுதான் என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கென்னவோ அவர் சிக்ஸர்களையும் ரிஸ்க் இன்றி அடிக்கத் தொடங்குவார் எனத் தோன்றுகிறது. அப்படி நிகழாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஐ.பி.எல்லின் தரத்தை அவரளவுக்கு பலமடங்கு மேலே உயர்த்துகிற இன்னொரு வீரர் வரலாற்றிலேயே இல்லை. இதை நான் கெய்ல், ஜெயசூர்யா, சேவாக், டிவில்லியர்ஸ் துவங்கி பல்வேறு ஐ.பி.எல் அதிசூர பராக்கிரமசாலிகளைப் பார்த்த பிறகே சொல்கிறேன். கில்லை இப்போது இந்தியாவில் ஆடும் ஒருநாள் மட்டையாளர்களில் தலைசிறந்த திறமையாளர் என்கிறார்கள். ஆனால் பல போட்டிகளில் சுதர்ஷன் கில்லுடன் ஆடும்போது டெக்னிக்கலாகவே கில்லைவிட மேலாகத் தெரிகிறார். இதனால்தான் அவர் ஐ.பி.எல் பார்க்கும் நமது அனுபவத்தையே மகத்தானதாக்குகிறார் என்று சொல்கிறேன். https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_78.html
  16. 15 புகைப்படங்களில் வெற்றிக் கொண்டாட்டம்: விராட்டின் ஆனந்த கண்ணீர் முதல் ரசிகர்களின் மகிழ்ச்சி தருணம் வரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி 3 ஜூன் 2025, 19:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2025, 19:35 GMT இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும். இந்த போட்டியின் முக்கிய தருணங்களை புகைப்படங்களாகக் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியை எட்டியதும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் விட்ட விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் போட்டியைக் காண நேரில் வந்திருந்தார் விராட் கோலியுடன் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் அணிக்காக தலைப்பாகை மற்றும ஆர்சிபிக்காக ஜெர்சியுடன் வந்திருந்த மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்ட நாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பில் சால்ட் பிடித்த அபாரமான கேட்ச் பஞ்சாப் அணியின் விக்கெட் சரிவை தொடக்கி வைத்தது. அவரை சகவீரர்கள் பாராட்டுகின்றனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதலில் கண்ணீர் பின் கொண்டாட்டம்- ஆர்சிபி அணியின் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைதானத்தில் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போட்டியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போட்டி தொடங்கும் முன்னதாக நடைபெற்ற இன்னிசை கலை நிகழ்ச்சிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆமதாபாத்தில் போட்டியைக் காண்பதற்காக திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql27kzykygo
  17. செம்மணி புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 04 JUN, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிக்கு போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றனர். அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் செம்மணியில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியிலான பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை கொண்டுள்ளது. இங்கே எவ்வித பாதுகாப்பும் போடப்படவில்லை. மக்கள் அங்கு சென்று எதனையும் செய்யலாம் என்பதை போன்று உள்ளது. அந்த புதைகுழி தொடர்பான நடவடிக்கைகளுக்ககாக போதுமான நிதி இல்லை. அங்கு அகழ்வுகளை நடத்துவதற்கும் சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் நிதி போதுமாக இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்கும் போதுமானது அல்ல. போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றனர். இதனால் அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம். 1996 காலப்பகுதியில் அங்கே நடந்த கிருஷாந்தி கொலை வழக்கின்போது 600 பேர் அங்கிருந்து காணாமல் போனமை தெரியவந்தது. இதனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நிதியை ஒதுக்குமாறு நாங்கள் கோருகின்றோம். இதனை பாதுகாப்பதற்காகவும், சாட்சியங்களை பாதுகாப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/216575
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ் 4 ஜூன் 2025, 03:22 GMT சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது? உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன. இந்த எண்ணெய்கள் 'தீங்கு விளைவிக்கும்', 'நச்சுத்தன்மை கொண்டவை' மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம். குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை "த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight" என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும். இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா? இதய ஆரோக்கியம் - சமையல் எண்ணெய் தொடர்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது. ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார். "ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என்று அவர் விளக்கினார். அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான 'லினோலிக்' அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) 'கெட்ட கொழுப்பை' குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன. கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. "உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன," என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார். அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம். இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. "ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்" என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார். ஆரோக்கியத்திற்கு உகந்தது எது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன. "இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்," என்று மொசாஃபாரியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார். அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா? "இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு" என்கிறார் மொசாஃப்ரியன். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y3y0x925o
  19. முளையின் கீழ் அல்லது கிழங்கின் சில பகுதிகள் பச்சையாக இருந்தால் வெட்டி அகற்றிவிட்டு பயன்படுத்தலாமாம் அண்ணை.
  20. கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம் Published By: DIGITAL DESK 3 04 JUN, 2025 | 05:13 PM பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சமிந்து தில்ஷான் பியுமங்க, செவ்வாய்க்கிழமை (04) அடையாள அணிவகுப்புக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, பூசா சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள பியுமங்க, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அடையாள அணிவகுப்பிற்கு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பியுமாங்க தான் என்பதை அவர்களால் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் பிரதான சந்தேகநபர் தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, ஜூன் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணைக்கு ஸ்கைப் மூலம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 19 கொலை வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் பூசா சிறைச்சாலையிலிருந்து சிறைசாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216592
  21. இப்போது வடக்கில் எங்கு(நீண்ட தூரங்களில்) ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தாலும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். நீண்டகால நோக்கில் மாங்குளம் பகுதியில் சகல வசதிகளுடன் மற்றும் பிரிவுகளுடன் கூடிய வடமாகாணத்துக்கான பெரிய ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். இது வன்னிப்பிரதேச அபிவிருத்தியின் அடிநாதமாக இருக்கும். இது எதிர்கால யாழ்ப்பாணத்திற்குள்ளே மக்களின் வாழ்விட நெருக்கடிகளை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அத்தோடு காலநிலை மாற்றங்களால்(துருவப்பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல்மட்டம் உயரும்போது) யாழ்ப்பாணம் கடலால் மூழ்கடிக்கப்படும்போது எமக்கு கைகொடுக்கும்.
  22. பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம். கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.
  23. ஆர்சிபி வெற்றியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு என்ன? - நாக் அவுட் பலவீனத்தை சரி செய்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்கள் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். தோனியின் நிழலில் இருந்ததாலும், ஃபார்ம் போன்ற காரணங்களாலும் இந்தியா கிரிக்கெட்டில் சீராக அவரால் சோபிக்க முடியவில்லை. ஆனாலும் நிடாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட அவரின் கடைசி பந்து சிக்ஸர் வீடியோ யூ-ட்யூப் உள்ளவரை ரீப்ளே செய்யப்பட்டு கொண்டே இருக்கும். தற்போது ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாமிடம் பிடித்த ஆர்சிபி குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியை வென்று மகுடம் சூடியது. இதில் அந்த அணியின் பேட்டிங் கோச் மற்றும் மென்டரான தினேஷ் கார்த்தின் பங்கு முக்கியமானது. அணியில் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியது தொடங்கி வலுவான மிடில், லோயர் ஆர்டர் மற்றும் பவுலிங் கூட்டணியை உருவாக்கியது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு வெளியில் தெரியவில்லை என்றாலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினேஷ் கார்த்திக் சோக்கர் (Choker) என்ற பட்டம் ஏன்? சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு 'சோக்கர் (Choker)' என்கிற பட்டம் உண்டு. எவ்வளவு வலுவான அணியாக இருந்தாலும், எத்தனை மேட்ச் வின்னர்களைக் கொண்டிருந்தாலும் 'நாக் அவுட்' போன்ற முக்கியமான மற்றும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சொதப்பி விடுவார்கள் என்கிற வரலாறு அந்த அணிக்கு உண்டு. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஆர்சிபி தான் சோக்கர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, பஞ்சாப் மற்றும் புதிய அணியான லக்னௌ கூட இந்தத் தொடர் வரை கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இந்த பட்டம்? இந்தத் தொடருக்கு முன்பு வரை பெங்களூரு அணி 2009, 2011, 2016 என மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் பெரும்பாலான சீசன்களில் பல ஸ்டார் வீரர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதிலும், குறிப்பாக 2016ம் ஆண்டில் கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், வாட்சன், ஸ்டெய்ன், கோலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தபோதிலும் ஃபைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆர்சிபி. அதற்கு அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே காரணமாக இருந்தது. டாப் 3 பிம்பத்தை மாற்றிய தினேஷ் கார்த்திக் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஒரு கட்டத்தில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி என்றும் மற்றொரு கட்டத்தில் டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என்கிற மூவர் கூட்டணியைச் சார்ந்தே ஆர்சிபி அணி இருந்துள்ளது. மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் ஆர்சிபி அணி சொதப்பும் என்கிற பிம்பம் தினேஷ் கார்த்திக்கின் வருகைக்குப் பின் தான் மாறியது. 2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் விளையாடி இருந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த சீசனுக்கு தினேஷ் கார்த்திக்கின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. தோனியைப் போல விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் என்பது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான காம்போ. ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். அந்தப் பணியை சிறப்பாக செய்தும் காட்டினார். 2022 ஐபிஎல் பெர்ஃபார்மன்ஸைத் தொடர்ந்து 2022 டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். விராட் கோலி: ரூ.20 லட்சத்தில் தொடங்கிய ஆர்சிபி பயணம், 18 ஆண்டுகளாக நீடிக்கும் உறவின் பின்னணி ஆர்சிபி-யின் வெற்றி குறித்து விஜய் மல்லையா, சச்சின், யுவராஜ் சிங் கூறியது என்ன? ஆர்சிபியின் 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி ஃபினிஷராக பரிணமித்த தினேஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். டாப் ஆர்டர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் இந்தப் புதிய ரோலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார். மாறி வரும் விளையாட்டு சூழ்நிலைகளுக்கு தங்களது விளையாட்டு அணுகுமுறைகளை மாற்றியமைத்த வீரர்கள் வெகு சிலரே, அதில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக் 2022 முதல் 2024 வரை பெங்களூரு அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி என்பது டாப் ஆர்டரை மட்டுமே நம்பி இருக்கும் அணி என்கிற பிம்பத்தை மாற்றியமைத்ததில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிய பங்கு உண்டு. ஃபினிஷராக 35 போட்டிகளில் 197 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 607 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடந்த ஐந்து வருடங்களில் 2023 தவிர்த்து 4 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2024-ல் சிஎஸ்கே அணியை வென்று ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது பெங்களூரு. எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சுழற்சிக்கு முன்பான பெங்களூரு அணியின் ரிடென்ஷன் பட்டியலில் முன்னணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருந்தது. ஆனால் கரியர் ஃபார்மின் உச்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக். பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு பேட்டிங் கோச் மற்றும் மென்டராக இணைந்தார். கோப்பை என்கிற இலக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கு மென்டராக இணைந்ததுமே கோப்பையை வெல்வது தான் குறி என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் தினேஷ் கார்த்திக், "ஆர்சிபிக்கு வரும் எவருக்கும் ஒரே குறிக்கோள் தான் இருக்கும். அது கோப்பையை வெல்வது தான். அதோடு எங்கள் ரசிகர்களையும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். தினேஷ் கார்த்திக் 2013ம் ஆண்டு கோப்பை வென்ற மும்பை அணியின் ஒரு அங்கமாக இருந்தார். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா சென்னை அணியிடம் தோற்றது. பெங்களூரு அணியில் விளையாடிய மூன்று வருடங்களில் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பயிற்சியாளராக அதை வென்றாக வேண்டும் என்கிற தீர்மானத்துடன் தான் தனது பணியைத் தொடங்கினார். தெளிவான ஏல செயல்திட்டம் - ஆல்ரவுண்டர்களும் சாம்பியன் பவுலர்களும் ஆர்சிபி அணியைப் பொருத்தவரை விராட் கோலியைத் தவிர்த்து அதன் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைத்து, ஒரு கலவையான அணியை உருவாக்க வேண்டும் என ஏலத்தின் முன்பு திட்டமிடப்பட்டது. அதற்கு ஏற்றார் போலவே ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயால் என மூவரை மட்டுமே ரீட்டெய்ன் செய்திருந்தது. அப்போதே ரஜத் பட்டிதார் தான் கேப்டனுக்கான வாய்ப்பு என்பது தெளிவானது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் டெப்த் ஓவர்களுக்கு என மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு இந்திய பவர்பிளே பவுலர் மற்றும் ஒரு மிஸ்டரி ஸ்பின்னரைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்சிபி அணி தீர்மானித்தது. 2025 தொடருக்கான ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களின் செயல்திட்டம் பற்றிய விவாதத்தை ஆர்சிபி தனது யூ-ட்யூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதில் பில் சால்ட், லியம் லிவ்விங்ஸ்டோன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரோமாரியோ ஷெபர்ட் ஆகியோரை குறிவைப்பதாக ஆர்சிபி பயிற்சியாளர் குழு முடிவு செய்திருந்தது. அவ்வாறே ஏலத்தில் ஆர்சிபி தீர்மானித்த அனைத்து வீரர்களையும் எடுத்தது. இத்துடன் ஜோஷ் ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், சுயஷ் சர்மா மற்றும் குருனால் பாண்டியாவும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆர்சிபி எதிர்பார்த்ததைப் போலவே ஒரு அணியை அமைத்தது. ஜித்தேஷ் ஷர்மா எனும் துருப்புச் சீட்டு இதில் முக்கியமான தேர்வாக அமைந்தது ஜித்தேஷ் ஷர்மா. ரூ.1 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த ஜித்தேஷ் ஷர்மா போட்டிபோட்டு பெங்களூரு அணியால் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். விக்கெட் கீப்பர், ஃபினிஷர் காம்பினேஷனை கச்சிதமாக அமைத்தது. பெங்களூருவில் தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஜித்தேஷ் ஷர்மாவைக் கொண்டு அவரே நிரப்பினார். ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டபோது ஜிதேஷ் ஷர்மா ஒரு அரை சதம் கூட அடித்திருக்கவில்லை. ஆனால் அவரின் பவர் ஹிட்டிங் திறமையில் அணி நம்பிக்கை வைத்தது. அவரை அணிக்கு அழைத்து வந்ததில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது. இந்தத் தொடரில் அவருக்கு பெரிதாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஜத் பட்டிதார் விளையாடாத ஆட்டங்களில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால் அணிக்கு தேவைப்பட்டபோது ஜொலித்தார் ஜித்தேஷ் ஷர்மா. லயம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, ரோமாரியோ ஷெப்பர்ட் என்கிற வலுவான ஆல்ரவுண்டர் கூட்டணியை உருவாக்கியது பெங்களூரு. அதே போல் அதன் கோர் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், சுயஷ் சர்மா என அனைவருமே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் விளையாடியுள்ளனர். ப்ளே ஆப் சுற்றுக்குத் தேவையான பிக் மேட்ச் ப்ளேயர்ஸ் காம்பினேஷனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜித்தேஷ் ஷர்மா கடைசி லீக் ஆட்டம், முதல் 2 இடங்களைப் பிடிக்க கட்டாயம் வெல்ல வேண்டுமென்ற நிலை. முதலில் ஆடிய லக்னௌ அணி வெற்றி பெற 227 என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் 204 தான். அதுவும் 2010ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக வந்தது. அசாத்தியமான இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணி 19வது ஓவரில் 8 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களின் அதிகபட்ச சேஸையும் பதிவு செய்தது. இறுதிப் போட்டியிலும் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி தடுமாறிய நிலையில் உள்ளே வந்த ஜித்தேஷ் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் கேமியோ ஆடினார். ஆர்சிபி 190 என்கிற சவாலான இலக்கை நிர்ணயிக்க இது முக்கிய பங்கு வகித்தது. இறுதியில் பஞ்சாப்புக்கும் பெங்களூருவுக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 6 ரன்களே. ஏல செயல்திட்டம் தொடங்கி அணியில் யாருக்கு என்ன ரோல் என வரையறுத்து கொடுத்தது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்கு உள்ளது. தனது இரண்டாவது கோப்பையை இம்முறை பயிற்சியாளராக வென்ற தினேஷ் கார்த்திக், பெங்களூருவுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றிக்கனியை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தத் தொடர் முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது ஆர்சிபி அணி. ஐபிஎல் எனும் மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தில் ஆர்சிபியின் ஆதிக்க காலம் தொடங்கியுள்ளதன் அறிகுறியாகவும் இதைப் பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2qwz4wqwwo
  24. போர் விமானங்களை சேதப்படுத்திய சாதாரண ட்ரோன்கள் - யுக்ரேனின் "சிலந்தி வலை"யில் ரஷ்யா சிக்கியதா? பட மூலாதாரம்,USS படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த தாக்குதல் குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், லாரா கோஸி பதவி, இருந்துபிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அசாதாரணமான திறமையுடன் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 18 மாதங்களாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதின் விளைவு தான் இந்த மிகப்பெரிய தாக்குதல். ஜூன் 1 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட யுக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் உள்ள விமானப்படைத் தளங்களைத் தாக்கி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்களை குறிவைத்தன. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு "ஸ்பைடர் வெப்" எனக் குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது. தாக்குதல் தொடங்கப்பட்ட தருணத்திலேயே அதன் பரவலான தாக்கத்தை உணர முடிந்தது. ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் வெளி வரத்தொடங்கின. வடக்கில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள மர்மன்ஸ்க் முதல், கிழக்கில் யுக்ரேனில் இருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த அமுர் பகுதி வரை அதன் தாக்கம் பரவியிருந்தது. மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகிய ஐந்து பகுதிகளில் தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ஆனால் மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் மட்டுமே விமானங்கள் சேதமடைந்ததாகவும், மற்ற இடங்களில் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் கூறியது. ரஷ்யா அறிவித்த இடங்களுடன் பொருந்தக்கூடிய விமான படைத்தளங்களின் செயற்கைக்கோள் வரைபடத்தை, யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) தலைவர் வாசில் மாலியுக் பார்த்துக்கொண்டிருப்பதை, தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட படங்கள் காட்டின. இந்த தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? யுக்ரேனின் ராணுவப் புலனாய்வு அமைப்பான எஸ்பியூவின் (SBU) மூலம் ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில், ட்ரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் வழியாக ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. தொலைதூரத்தில் இருந்தபடியே திறக்கப்படக் கூடிய கூரைகளின் கீழ், இந்த பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் விமான நிலையங்களுக்கு இந்த லாரிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றின் ஓட்டுநர்களுக்கு லாரிகளில் என்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து எதுவும் தெரியாது. அங்கு சென்றதும், இலக்குகளை நோக்கி குறிவைத்து,ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. ஒரு லாரியிலிருந்து ட்ரோன் வெளியே பறப்பதை இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று காட்டுகிறது. ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ (RIA) நோவோஸ்டியிடம் பேசிய ஒரு லாரி ஓட்டுநர், தானும் மற்ற ஓட்டுநர்களும் ட்ரோன் பறப்பதைத் தடுக்க முயன்று, அதன் மீது கற்களை எறிந்ததாகக் கூறினார். ரஷ்ய டெலிகிராம் சேனலான "பாசா"வின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளின்படி, பல லாரி ஓட்டுநர்கள் ரஷ்யாவின் வெவ்வேறு இடங்களுக்கு பெட்டிகளை வழங்குவதற்காக வணிகர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறினர். சில ஓட்டுநர்கள், லாரியை எங்கு நிறுத்துவது என்பது குறித்து தொலைபேசியில் வழிகாட்டுதல்கள் கிடைத்ததாகக் கூறினர். அந்த ஓட்டுனர்கள் அவ்வாறு செய்தபோது, ட்ரோன்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். துணிச்சலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்குத் தயாராக "ஒரு வருடம், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்கள்" ஆனது என்றும் இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்பார்வையிடும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, சமூக ஊடகங்களில் கூறினார். தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஒன்று எஃஎஸ்பி (FSB-ரஷ்ய பாதுகாப்பு சேவை) அலுவலகத்திற்கு அடுத்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் சிலர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது, ஆனால் இந்தத் தாக்குதலுக்கு உதவியவர்கள் "ரஷ்ய எல்லையிலிருந்து வெளியேற்றப்பட்டு... இப்போது பாதுகாப்பாக உள்ளனர்" என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துளார். இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உஸ்ட்-குட் நகரின் உள்ளூர் அதிகாரிகள், பெலாயா ராணுவ விமானப்படை தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பாக யுக்ரேன் வம்சாவளியைச் சேர்ந்த 37 வயது நபரைத் தேடுவதாக ஒரு டெலிகிராம் பதிவில் தெரிவித்தனர். ஆனால் அந்த டெலிகிராம் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ராணுவ விமானங்களை பழுதுபார்ப்பது ரஷ்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று யுக்ரேன் கூறுகிறது. மரத்தால் ஆன ஒரு அறையில் டஜன் கணக்கான கருப்பு நிற ட்ரோன்கள் சேமிக்கப்பட்டுள்ளதை யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) பகிர்ந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. ரஷ்ய ராணுவம் குறித்து பதிவிடும் பதிவர்கள் இதை செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள ஒரு கிடங்காக அடையாளம் கண்டுள்ளனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ட்ரோன் நிபுணர் ஸ்டீவ் ரைட்டின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் கனரக வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய எளிய குவாட்காப்டர்கள் என அறியப்படுகின்றது. ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, பின்னர் செயற்கைக்கோள் அல்லது இணைய இணைப்புகள் வழியாக தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்ட விதம் தான் இந்த தாக்குதலை அசாதாரணமாக்கியது என்கிறார் ரைட். 117 ட்ரோன்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பைலட்டுகள் இருந்தனர் என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார். ட்ரோன்களால் ஜிபிஎஸ்ஸைப் பயன்படுத்தி பறக்க முடியும், மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உள்ளூர் ரஷ்ய ஜாமிங் நுட்பங்களையும் தவிர்க்கலாம் என்கிறார் ரைட். யுக்ரேன், அந்த ட்ரோன்களை எங்கிருந்து பெற்றது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் போர் தொடங்கியதிலிருந்து அது ட்ரோன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். யுக்ரேன் உளவாளிகளாக மாறிய ரஷ்ய தம்பதி ஒரு ரப்பர் வளையத்துடன் தப்பியது எப்படி?28 மே 2025 ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிக்கிறாரா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா?21 மே 2025 "போப் உதவியுடன் அமைதி ஒப்பந்தம்" - ரஷ்யா-யுக்ரேன் குறித்து டிரம்ப் கூறியது என்ன?20 மே 2025 இலக்கு பட மூலாதாரம்,SBU படக்குறிப்பு, மரப் பெட்டியில் மறைத்து வைத்து ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டதாக எஸ்பியூ கூறுகிறது. "ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது, அது நியாயமானது" என்று ஸெலன்ஸ்கி தனது உரையில் கூறினார். யுக்ரேனின் கூற்றுப்படி, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்களில் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டு "குறைந்தபட்சம்" அவற்றில் 13 அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில விமானங்கள் சேதமடைந்ததாக மட்டுமே ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. மர்மன்ஸ்கில் உள்ள ஒலெனெகோர்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் உள்ள பெலாயா விமானத் தளங்களில் காணப்பட்ட சேதமடைந்த விமானங்களை, பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய போர் விமானங்கள் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்களை ரஷ்யா தற்போது உற்பத்தி செய்வதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது கடினம். அவற்றை மாற்றவும் முடியாது. பெலாயா விமான தளத்தில், நீண்டதூர இலக்குகளைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நான்கு ரஷ்ய போர் விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை கேபெல்லா ஸ்பேஸால் பகிரப்பட்ட ரேடார் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. "போரின் விதிகள் மற்றும் மரபுகளுக்கு இணங்க, நாங்கள் முற்றிலும் முறையான இலக்குகளைத் தாக்கினோம். அதாவது அமைதியான எங்களது நகரங்களைத் தாக்கிய ராணுவ விமானநிலையங்கள் மற்றும் விமானங்களைத் தாக்கினோம்." என்று SBU தலைவர் வாசில் மாலியுக் கூறினார். இராணுவ புலனாய்வு விமானங்களும் குறிவைக்கப்பட்டன பட மூலாதாரம், UKRAINE PRESIDENTIAL PRESS SERVICE/EPA-EFE/SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த நடவடிக்கை குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார். யுக்ரேனிய ஏவுகணைகளை இடைமறித்து தாக்குதல் நடத்தக்கூடிய திறனை மேம்படுத்தும், ரஷ்யாவின் ராணுவ உளவு விமானமான ஏ-50 இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. ரஷ்யாவில் எத்தனை ஏ-50 கள் உள்ளன என்று தெரியவில்லை. ஆனால் எட்டு ஏ-50 கள் உள்ளன என்று பிப்ரவரி 2024 இல் யுக்ரேனிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடனோவ் அந்த எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். எனவே எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், ரஷ்யாவிற்கு அது பெரும் இழப்பு தான். "ஸ்பைடர் வெப்" தாக்குதல், ரஷ்யாவிற்கு 7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்பியூ சமூக ஊடகங்களில் கூறியது. ரஷ்ய அரசு ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று முக்கிய நேரங்களில் வெளியான தொலைக்காட்சி செய்திகள், பிராந்திய அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் வெளியிட்டன. திங்கட்கிழமைக்குள், இந்தச் செய்தி செய்தித்தாள்களில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. இந்த நடவடிக்கை குறித்து இணையத்திலும் பிற இடங்களிலும் யுக்ரேனியர்கள் பரவலாகப் பாராட்டி வருகின்றனர். ஒருவர் இதை "மிகப்பெரிய சாதனை" என்று விவரித்துள்ளார். "நிச்சயமாக, எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது, ஆனால் யுக்ரேன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறும்" என்று ஸெலன்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4v07yegylo
  25. அண்ணை, பெரும்பாலான போட்டிகளை முன்னர் போல கணிக்க முடியவில்லை தானே? இம்முறை சில பரிசுகளை புதிதாக சேர்த்துள்ளார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.