Everything posted by ஏராளன்
-
பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? விடையை கண்டுபிடிக்க போட்டி போடும் உலக விஞ்ஞானிகள்
பட மூலாதாரம்,MATTHEW KAPUST / SURF படக்குறிப்பு,தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 22 மே 2025, 05:38 GMT தெற்கு டகோடாவின் காடுகளின் மூடுபனிக்கு மேலே அமைந்துள்ள ஆய்வகத்துக்குள்ளே, விஞ்ஞானிகள் அறிவியலின் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கான விடையை தேடி வருகின்றனர்: இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? அவர்களை விட இந்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஏன் தோன்றின என்பன குறித்து தற்போதுள்ள வானியல் கோட்பாடுகளால் விளக்க முடியாது. இந்த கேள்விக்கான விடையை கண்டறியும் நம்பிக்கையில் நியூட்ரினோ எனப்படும் துணை அணுத் துகள்கள் (sub-atomic particle) குறித்து ஆராயும் டிடெக்டர் (detector) கருவியை இரு குழுக்களும் உருவாக்கி வருகின்றன. இதற்கான விடை நிலத்துக்கடியில் அதிக ஆழத்தில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர், நிலத்துக்கடியில் நியூட்ரினோ குறித்து ஆராயும் இந்த ஆய்வுக்கு டியூன் (Dune - டீப் அண்டர்கிரவுண்ட் நியூட்ரினோ எக்ஸ்பிரிமெண்ட்) என பெயரிடப்பட்டுள்ளது. நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், மூன்று பரந்துவிரிந்த குகைகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்துள்ளனர். இதில் ஈடுபடும் கட்டுமான குழுக்களும் அதன் புல்டோசர்களும் சிறிய பிளாஸ்டிக் பொம்மைகள் போன்று தெரியும் அளவுக்கு இந்த குகைகள் மிகப்பெரியவை. டியூனின் அறிவியல் இயக்குநர் முனைவர் ஜேரெட் ஹெயிஸ், இந்த பிரம்மாண்ட குகைகள் எந்தளவுக்கு அளவில் பெரியவை என்பதை விளக்கும் பொருட்டு, அவை "அறிவியலின் தேவாலயங்கள்" (cathedrals to science) போன்றவை என்றார். பிரபஞ்சம் குறித்த புரிதலை மாற்றும் முயற்சி இந்த குகைகளின் கட்டுமான பணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஹெயிஸ் ஈடுபட்டு வருகிறார். நிலத்துக்கு மேலேயிருந்து இரைச்சல் மற்றும் கதிர்வீச்சை தடுக்கும் பொருட்டு டியூன் அமைப்பை முழுவதுமாக அவர்கள் மறைத்துள்ளனர். தற்போது அதன் அடுத்த கட்டத்துக்கு செல்ல டியூன் தயாராக உள்ளது. "பிரபஞ்சம் குறித்த நம் புரிதலை மாற்றும் வகையில், (நியூட்ரினோவை ஆராய்வதற்கான) டிடெக்டர் கருவியை வடிவமைப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாம் ஏன் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற கேள்விக்கான விடையை கூறுவதற்கு ஆர்வமாக உள்ள 1,500 விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு கருவிகளை பயன்படுத்தி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றார் அவர். பிரபஞ்சம் உருவானபோது இருவிதமான துகள்கள் உருவாகின: நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள எல்லாமும் உருவான பருப்பொருள் மற்றும் பருப்பொருளுக்கு நேரெதிரான எதிர்ப்பொருள் (antimatter). கோட்பாட்டு ரீதியாக இரண்டும் பரஸ்பரம் அதன் திறனை இழக்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்யும்போது பெரும் ஆற்றல் வெடிப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். எனினும், பருப்பொருள் இன்னும் மிச்சம் இருக்கிறது. எதனால் பருப்பொருள் வெற்றியடைகிறது மற்றும் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கான பதில், நியூட்ரினோ துகள் மற்றும் எதிர் நியூட்ரினோ (anti-neutrino) ஆகியவற்றை ஆராய்வதில் தான் இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இல்லினாய்ஸின் ஆழமான நிலத்தடியிலிருந்து விஞ்ஞானிகள் இரு விதமான துகள்களின் கற்றைகளையும் 800 மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு டகோட்டாவுக்கு அனுப்புகின்றனர். ஒரு மாபெரும் ஆய்வு திட்டம் ஏனெனில், நியூட்ரினோ மற்றும் எதிர் நியூட்ரினோக்கள் பயணிக்கும் போது சிறிதளவு மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இந்த மாற்றங்கள் நியூட்ரினோக்களுக்கும் எதிர் நியூட்ரினோக்களுக்கும் வெவ்வேறானதாக உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க விரும்புகின்றனர். அப்படி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருந்தால், பருப்பொருளும் எதிர்பொருளும் ஏன் ஒன்றையொன்று அதன் திறனை இழக்கச் செய்வதில்லை என்பதற்கான விடைக்கு அவர்களை இட்டுச் செல்லும். 30 நாடுகளைச் சேர்ந்த 1,400 விஞ்ஞானிகள் இணைந்த ஒரு சர்வதேச ஆய்வுத் திட்டமாக டியூன் உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் சசக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கேட் ஷா. பிரபஞ்சம் மற்றும் மானுடம் குறித்த நம்முடைய புரிதலை, இந்த ஆய்வில் இதுவரையில் தெரிந்த தகவல்கள் மாற்றக்கூடியதாக உள்ளன என அவர் என்னிடம் தெரிவித்தார். "இப்போது தொழில்நுட்பம், பொறியியல், கணினி மென்பொருள் திறன் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய பெரிய கேள்விகளை தீர்க்க முடிவது உண்மையில் உற்சாகமளிக்கிறது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,KAMIOKA/ICRR/TOKYO UNIVERSITY படக்குறிப்பு,ஜப்பானில் ஏற்கெனவே உள்ள சூப்பர் கே நியூட்ரினோ ஆய்வகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஆய்வகமாக ஜப்பானின் புதிய ஆய்வகம் இருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வு இதே கேள்விக்கான பதிலை பெரும் தொலைவில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னும் தங்க நிற உலக உருண்டையில் (நியூட்ரினோ ஆய்வகம்) தேடுகின்றனர். இது, 'அறிவியலின் கோவில்' போன்று பிரகாசிக்கிறது. இந்த விஞ்ஞானிகள் ஹைப்பர் கே எனும் நியூட்ரினோ ஆய்வகத்தை வடிவமைத்து வருகின்றனர், இது, ஏற்கெனவே ஜப்பானில் உள்ள நியூட்ரினோ ஆய்வகமான சூப்பர் கே-வை விட மிகப்பெரியதும் சிறந்ததும் ஆகும். இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குள் நியூட்ரினோ கற்றையை ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு செயல்படுத்த உள்ளது, இது அமெரிக்காவின் திட்டத்தை விட முன்னிலையில் உள்ளது. லண்டன் இம்பெரியல் கல்லூரியின் முனைவர் மார்க் ஸ்காட், தன்னுடைய குழு பிரபஞ்சம் குறித்த இதுவரையிலான கண்டுபிடிப்புகளில் மிகப்பெரியதை நிகழ்த்துவதற்கு சாதகமான நிலையில் உள்ளதாக நம்புகிறார். "நாங்கள் முன்னதாகவே இதை கண்டுபிடிப்போம், எங்களிடம் மிகப்பெரிய டிடெக்டர் கருவி உள்ளது, எனவே டியூன் திட்டத்தை விட எங்களிடம் அதுகுறித்து அதிக தகவல்களை விரைவிலேயே பெறுவோம்," என்றார் அவர். இரண்டு சோதனைகளை ஒன்றாக நடத்தும்போது, ஒரு சோதனை மூலமாக கிடைப்பதை விட அதிகளவில் விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைக்கும். ஆனாலும், "நான் தான் அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்!" என்றார் அவர். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நமது தற்போதைய புரிதலின்படி, நமது பிரபஞ்சம் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களாக உருவாகியிருக்கக் கூடாது. மர்மம் நீடிக்கிறது ஆனால், அமெரிக்காவின் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் முனைவர் லிண்டா கிரெமோனெசி, முதலில் அந்த இடத்தை ஜப்பானிய குழு அடையும்போது, என்ன நடக்கிறது என்பது தொடர்பான முழு தகவல்களை அவர்களுக்கு அளிக்காமல் போகலாம் என்கிறார். "இதில் போட்டி இருக்கிறது, ஆனால் நியூட்ரினோக்களும் எதிர் நியூட்ரினோக்களும் வித்தியாசமாக செயலாற்றுகிறதா என்பதை புரிந்துகொள்வதற்கான அனைத்து விஷயங்களும் ஹைப்பர் கே திட்டத்தில் இல்லை". விஞ்ஞானிகளுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் முதல்கட்ட முடிவுகள் கிடைக்க இன்னும் சில ஆண்டுகாலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் இருப்பதற்கு முன்பான ஆரம்பகாலத்தில் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce80nk9wgzpo
-
ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நட்ட ஈடு - நெக்ஸ்ட் குழுமம் அறிவிப்பு Published By: VISHNU 22 MAY, 2025 | 07:55 PM (எம்.மனோசித்ரா) பிரித்தானிய குழுமமொன்றுக்கு சொந்தமான நெக்ஸ்ட் உற்பத்தி, அதிக இயக்கச் செலவுகள் காரணமாக கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட தீர்மானித்துள்ளதாகவும், எனினும் இதனுடன் தொடர்புடைய ஏனைய இரண்டு தொழிற்சாலைகள் குறைந்தளவான ஊழியர்களுடன் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. தமது தீர்மானத்தின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இலங்கை தொழிலாளர் சட்டத்துக்கமைய நட்டஈட்டு தொகை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. செயற்பாடுகளை முடிவுறுத்தும் தீர்மானம் நிறுவனத்திற்கு மிகவும் கடினமான முடிவாக அமைந்துள்ளது. அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில ஆண்டுகளாக, இந்த தொழிற்சாலை இலாபகரமானதாக இல்லை. மேலும் நிலைமையை சரிசெய்ய நாங்கள் கணிசமான முயற்சிகள் எடுத்த போதிலும், தொழிற்சாலையை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாற்ற முடியவில்லை. அந்த வகையில் சமீபத்தில், இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. தொழிலாளர்களுக்கான செலவுகள் மிக அதிகமாக இருந்தால், வேறு எந்த முதலீட்டாளரும் அத்தகைய நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த முடியாது. மற்ற நாடுகளுடன் போட்டியிடவும் முடியாது. இதனால் தொழிற்சாலையை மூடுவது மாத்திரமே ஒரே வழியாகும். இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களின் சேவை விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவனமானது 2.5 மில்லியன் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும். மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு தொழிற்சாலைகள் செயல்பாட்டில் இருக்கும். எனினும் அவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடனேயே இயங்கும். ஆண்டிகம மற்றும் நவகத்தேகமவை தளமாகக் கொண்ட பிற உற்பத்தி செயல்பாடுகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். இந்த தீர்மானம் துரதிர்ஷ்டவசமாக ஒட்டுமொத்தமாக 1,416 பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும். நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்கள் மாற்று உள்ளுர் வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த நோக்கத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் பிற உள்ளூர் உற்பத்தி தளங்களைத் தொடர்புகொள்வோம். இலங்கையில் எமது நிறுவனத்தின் உற்பத்தி வரலாற்றை அங்கீகரிக்கும் விதமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நிறுவனம் செலுத்தும் சட்டப்பூர்வ பணிநீக்க கொடுப்பனவை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்த விரும்புகிறது. அதற்கமைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்கள் பிற உரிமைகளுடன் மேலதிகமாக குறைந்தபட்சம் 2மாத ஊதியத்தைப் பெறுவார்கள். சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சூத்திரத்தின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கொடுப்பனவுகள் 2.5 மில்லியன் இலங்கை ரூபா உச்ச வரம்பிற்கு உட்பட்டவையாக இருக்கும். அது மாத்திரமின்றி மே மாதம் இறுதி வேலை நாள் வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் வழக்கம் போல் உரிய தினத்தில் செலுத்தப்படும். அத்தோடு நிலுவையில் உள்ள அனைத்து விடுமுறை ஊதியங்களும் செலுத்தப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் வருகை போனஸ் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215438
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்களை வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்!
22 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (22) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கு அமைய, இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத்தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் நீரிணைப்பிலிருந்து புதிதாக புதிய இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கும், தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, நல்லூா், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இலவச நீர் விநியோகம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக இந்த ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 500 பயனாளிகளை தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் (கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, நல்லூா், தெல்லிப்பழை, யாழ்பபாணம், பருத்தித்துறை மற்றும் வேலணை), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215423
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானியை இரத்து செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தென்னாபிரிக்க தூதுவரிடம் கஜேந்திரகுமார் எம்பி வலியிறுத்தல்
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 04:55 PM வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய மற்றும் குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகள் விடுதலை, தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்பி தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். தென்னாபிரிக்க தூதுவருக்கும் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (22) காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெருவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6,000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சியில் மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும். வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும் தொலைந்துமுள்ளன. அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். அத்துடன் போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளது. இந்த மக்கள் பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டினை விட்டு வெளியேறினார்கள். எனவே இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை. ஆனாலும் இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம். இரண்டாவது குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு 79 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சொந்தமானதென 1932 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிப்படுத்துகிறது. எனினும் அதற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை குறித்த தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்க வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் புத்த பிக்கு அரசிடம் கோரியிருந்தார். எனினும் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகள் என்பதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அப்போதய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த 325 ஏக்கரிலும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. எனினும் வழமைபோன்று குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்றுபேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்பட்டு இரண்டுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மட்டத்தில் தீர்வு எட்டபட்ட ஓரு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர்விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் அற்ற குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும் அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மூன்றாவதாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் காணிகளை வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னுடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/215425
-
எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது - நாமல் ராஜபக்ஷ
Published By: DIGITAL DESK 2 22 MAY, 2025 | 04:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே, நாட்டு மக்கள் மரமுந்திரிகை சாப்பிடுவதை போன்று உப்பு சாப்பிடுவதில்லை என்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கிறது. உணவின் அடிப்படை பொருளாகவே உப்பு காணப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ' நானும் இராணுவ வீரன் ' என்று குறிப்பிட்டுக் கொண்டு திரிந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள். இராணுவத்தில் சேவையாற்றிய பலர் இன்று ஆளும் தரப்பில் உள்ளார்கள். பலர் பதில் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இராணுவ வீரர்களை வீரர்கள் என்று குறிப்பிடும் தற்றுணிபு இவர்களுக்கு கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இராணுவ வீரர்களை சிப்பாய் என்று குறிப்பிடவில்லை. அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் போது அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள். எம்மை சிறைக்கு அனுப்பி அடிப்படை மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷர்கள் காரணம், கடந்த அரசாங்கம் காரணம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் குற்றஞ்சாட்டினீர்கள். இனியும் இந்த குற்றச்சாட்டு செல்வாக்கு செலுத்தாது. ஏனெனில் 6 மாதங்கள் கடந்து விட்டன. ஆகவே போலியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொண்டிருக்காமல் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/215421
-
அதிபர் மாளிகையில் மற்றொரு வாக்குவாதம் - டிரம்பின் மோதல் போக்கு உத்தியின் பின்னணி என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஓ'டோனோகு பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம். ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும் செய்திக் கட்டுரைகளின் குவியல்களுடன் நடத்தப்பட்ட ஒரு மறைமுக தாக்குதலும் இதில் இடம்பெற்றது. அந்த சந்திப்பை தொலைக்காட்சி கேமராக்கள் பதிவு செய்துக்கொண்டிருந்தன. அங்கே ஒரு அமைதியான உரையாடல் நடைபெற்றது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவில் "வெள்ளையர்கள் இனப்படுகொலை" செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என நீங்கள் நம்ப வேண்டுமென்றால் எந்த வகையான ஆதாரங்கள் தேவை என்று டிரம்பிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அந்த கேள்விக்கு முதலில் பதிலளித்த ராமபோசா , இந்த விவகாரத்தில் அதிபர் "தென்னாப்பிரிக்க மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்" என்று கூறினார். அதன் பின்னர் பேசத் தொடங்கிய டிரம்ப், தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு "சில விஷயங்களை" காட்ட வேண்டும் எனக் கூறி, "விளக்குகளை அணைத்து" தொலைக்காட்சியை இயக்குமாறு ஒரு உதவியாளரிடம் கூறினார். மறுபுறம் டிரம்பின் ஆலோசகராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்த கோடீஸ்வரராகவும் இருக்கும் ஈலோன் மஸ்க், ஒரு சோபாவில் அமைதியாக அமர்ந்து நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு, ஒரு அசாதாரணமான மற்றும் திட்டமிட்டு நடத்தியது போன்ற தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்தார். இது, பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை டிரம்ப் நடத்திய விதத்தை நினைவுபடுத்தியது. தென்னாப்பிரிக்க அரசியல் தலைவர்கள் "போயரை சுடு" (Shoot the Boer) என்ற இனவெறி எதிர்ப்புப் பாடலை கோஷமிடுவதை அந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்டியது. அடிக்கடி செய்தி ஊடகங்களை விமர்சிக்கும் டிரம்ப், தெளிவாக ஆதாரம் இல்லாத புகைப்படங்களை காட்டி மகிழ்ந்ததாகவும் தெரிந்தது. மேலும் விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் கல்லறைகள் எங்கே உள்ளன என்ற கேள்விக்கு, டிரம்ப் வெறும் "தென்னாப்பிரிக்கா" என்று மட்டும் பதிலளித்தார். அந்த வீடியோவில் அரசாங்கத்தில் பங்கு வகிக்காத அரசியல் தலைவர்கள் காட்டப்பட்டனர். விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அந்த அரசியல் தலைவர்களுக்கு இருப்பதாக டிரம்ப் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இழப்பீடு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துதலை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ராமபோசா கையெழுத்திட்டபோதிலும், அந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், தென்னாப்பிரிக்க அதிபரான ராமபோசா அரசியல் உரைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது தொனியுடன் உடன்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளியும், சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட ஆட்சியை முடிக்க உதவிய பேச்சுவார்த்தையாளருமான ராமபோசா, அந்தக் கூட்டத்திற்காக தயாராக வந்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெளிநாட்டு தலைவர்கள் வெளிப்படையாக புகழ்வதற்கு எடுக்கும் முயற்சிகளை டிரம்ப் சில சமயம் உணராமல் இருக்கிறார். ஆனால் அது தென்னாப்பிரிக்காவுடைய தெளிவான திட்டத்தின் ஒரு பகுதி. டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது உண்மைதான். ஆனால், ராஜ்ஜீய பிரச்னைகள் மற்றும் வர்த்தக கொள்கை குறித்து நடைபெறும் கூட்டத்துக்காக இரண்டு புகழ்பெற்ற கோல்ஃப் வீரர்களான எர்னி எல்ஸ் மற்றும் ரீடீஃப் கூசனை அழைத்து வரும் ராமபோசாவின் திட்டம், நான் இதுவரை படித்த எந்த சர்வதேச உறவுகள் பாடப்புத்தகத்திலும் காணப்படாத ஒரு யுக்தி. மேலும், இரண்டு வெள்ளை தென்னாப்பிரிக்க கோல்ஃப் வீரர்களை அங்கு காண்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியடைந்ததை அனைவரும் தெளிவாகக் கண்டனர். ராமபோசா பெரும்பாலும் அமைதியாகவும், சுருக்கமாகவும் பேசினார். மேலும் ராமபோசா இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கோல்ஃப் வீரர்களும், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியிலிருந்து வந்த அவரது வெள்ளையின விவசாய அமைச்சரும், ஓரளவு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர். ஒரு சிறிய கவசம் அல்லது ராஜ்ஜீய பாதுகாவலைப் போல காணப்பட்ட இந்த உத்தி பயனுள்ளதாகவும் இருந்தது. டிரம்ப் விவசாயிகளின் அவலநிலை குறித்து மீண்டும் பேசினார் . அவர்களில் பலரை அவர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரவேற்றுள்ளார். ஆனால் அதிபர் ராமபோசா இதற்கு பதில் சொல்லவில்லை, மேலும் அவரை கோபமூட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் கவனம் பெறவில்லை. ஒரு கட்டத்தில், கோல்ஃப் வீரர்களையும், தனது அணியில் இடம் பெற்றிருந்த ஒரு ஆப்பிரிக்க கோடீஸ்வரரையும் ராமபோசா குறிப்பிட்டு, " ஆப்பிரிக்க விவசாயிகள் (வெள்ளை தென் ஆப்ரிக்க விவசாயிகள்) மீது இனப்படுகொலை நடந்திருந்தால், இந்த மூன்று நபர்களும் இங்கே இருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்." என்று டிரம்பிடம் கூறினார். அதிபர் டிரம்ப்பால் தென்னாப்பிரிக்க அதிபரிடம் இருந்து எந்த எதிர்வினையையும் பெற முடியவில்லை என்றாலும், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகள் வீண் என்று அர்த்தமல்ல. அவை நிச்சயமாக வீணாகவில்லை. மக்கள் தங்களின் அதிருப்தி மற்றும் கவலை என நினைப்பதை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பதே ''அமெரிக்காவை மீண்டும் மகத்துவமாக்குவோம்" (MAGA) திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார் ஏனென்றால், இவ்வாறு திட்டமிட்டது போல நிகழ்த்தப்பட்ட இந்த ராஜ்ஜீய பாணியானது, அதிபர் அலுவலகத்திற்கு சென்றிருந்த பார்வையாளர்களை மட்டுமின்றி, உள்நாட்டு அமெரிக்க பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டது. சில வெளிநாட்டு தலைவர்கள் இந்த தருணங்களை திறமையாக சமாளிக்க கற்றுக்கொண்டால், டொனால்ட் டிரம்ப் தான் விரும்பும் தாக்கத்தை தொடர்ந்து பெற, தனது திட்டங்களை சிறிது மாற்ற வேண்டியிருக்கும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg455kx1zgo
-
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை; அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை - சஜித்
22 MAY, 2025 | 03:51 PM நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகள் இவை. இன்றும் கூட, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பேசி வருகிறது. ஆனால் மருந்துப் பற்றாக்குறை தொடர்பிலோ அல்லது சுகாதாரத் துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கோ எந்தப் பதிலும் இல்லை. நாட்டு மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு எந்த ஆர்வமும் இல்லை. இலவச சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக இல்லை. கொவிட் புதிய திரிவு தோன்றியுள்ளது; பரிசோதனைகளை விரைவுபடுத்துங்கள் LP 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றன. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த கொவிட் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இந்த அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சின்னம்மையும் பரவி வருகிறது சின்னம்மை பரவுவதாலும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 6 வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, இதற்கும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/215411
-
இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!
மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜூ கொல்லப்பட்டது நக்சல் அமைப்பின் முடிவை உணர்த்துகிறதா? பட மூலாதாரம்,SALMAN RAVI/BBC படக்குறிப்பு,பஸ்தரில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர். (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், அலோக் புதுல் பதவி, ஹிந்திக்காக 22 மே 2025, 10:54 GMT 1992 மே மாதத்தில், கோடைக்காலம் உச்சத்தில் இருந்தபோது, அப்போதைய மிகப்பெரிய நக்சல் அமைப்பான 'சிபிஐ (எம்எல்) மக்கள் போர்க் குழு'-வில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது. ஆந்திராவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆனால் கட்சியின் மத்திய குழு செயலாளர் கொண்டபள்ளி சீதாராமையா ஏற்கனவே தனது சகாக்களுடன் சேர்ந்து ஒரு தனி அமைப்பை உருவாக்கும் யோசனையை முன்வைத்திருந்தார். சீதாராமையாவுடன் செல்வதற்குப் பதிலாக, வாரங்கல் பல்கலைக்கழகத்தில் தனது பி.டெக் படிப்பை முடித்து, பின்னர் 1980-களில் அமைப்பில் சேர்ந்த நம்பல்லா கேசவ ராவ், மக்கள் போர் குழுவில் தொடர முடிவு செய்தார். ஜூன் 1992-ல், கணபதி என்ற முப்பல்ல லட்சுமண ராவ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, நம்பல்ல கேசவ ராவ் அவரது நெருங்கிய உதவியாளராக உருவெடுத்தார். கட்சியின் மத்திய குழுவில் நம்பல்ல கேசவ ராவுக்கு இடம் வழங்கப்பட்டது. அந்த நம்பல்லா கேசவ ராவ் தான் நக்சல் இயக்கத்தில் பசவராஜு என்று அழைக்கப்பட்டார். புதன்கிழமை, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த மோதலில் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு மற்றும் 27 மாவோயிஸ்டுகளைக் கொன்றதாக போலீசார் கூறினர். ஆயுதமேந்திய மாவோயிஸ்டு போராட்டத்தின் முடிவின் தொடக்கமாகவும் புதன்கிழமை நிகழ்வுகளை பலர் பார்க்கிறார்கள். பஸ்டர் ஐ.ஜி பி சுந்தர்ராஜ் கூறுகையில், "2024 ஆம் ஆண்டில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை நடத்தியது போல, 2025 ஆம் ஆண்டிலும் நாங்கள் அதை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதன் விளைவாக, மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் கொல்லப்பட்டார். இவர் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். சத்தீஸ்கரில் முதன்முறையாக அரசியல் தலைமைக்குழு மற்றும் பொதுச்செயலாளர் மட்டத்தில் இருந்த மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்" என்றார். "நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த நடவடிக்கையில், சிபிஐ-மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர், நக்சல் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர் மற்றும் முதுகெலும்பான நம்பல்லா கேசவ ராவ் என்ற பசவராஜு உட்பட 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் பசவராஜூவின் கொலை ஒரு வரலாற்று சாதனை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பொறியாளர் முதல் மாவோயிஸ்ட் வரை ஹைதராபாத்திலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜியன்னாபேட்டை கிராமம். மாவட்ட தலைமையகமான ஸ்ரீகாகுளத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான வாசுதேவ் ராவ் இப்பகுதியில் பிரலமானவர். கிராமத்தின் பெரியவர்களிடம் பேசும்போது, அவர்கள் வாசுதேவ் ராவ் மற்றும் வாசுதேவ் ராவின் மகன் நம்பல்லா கேசவ் ராவ் பற்றிய பல கதைகளைச் சொல்கின்றனர். வாசுதேவ் ராவ் தனது மூன்று மகள்களுக்கும் மூன்று மகன்களுக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க முயன்றார். வாசுதேவ் ராவின் மகன்களும் - தில்லேஸ்வர ராவ் மற்றும் கேசவ ராவ் கல்வியில் சிறந்து விளங்கினர். வாசுதேவ் ராவ், தனது மகன் கேசவ் ராவை வாரங்கலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது, கேசவ ராவ் புரட்சிகர மாணவர் சங்கத்தில் சேர்ந்ததாகவும், சமூக இயக்கங்களில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் கிராமத்தை எட்டத் தொடங்கின. கேசவ் ராவ் மீது காவல்துறையில் சில வழக்குகளும் பதிவாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சத்தீஸ்கரில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான டிரோன் பயிற்சி (கோப்புப் படம்) ஸ்ரீகாகுளம் சமூக ஆர்வலர் குணா ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், "கேசவ் எம்.டெக் படிப்பில் சேர்ந்தார். ஆனால் தனது பெரும்பாலான நேரத்தை அரசியல் நடவடிக்கைகளில் செலவிடத் தொடங்கினார். சிபிஐ லிபரேஷன் கட்சிகாக வேலை செய்யத் தொடங்கியதும், சில நாட்களில்யே அவர் தலைமறைவானார். கேசவ் ராவின் சகோதரர் தில்லேஸ்வர ராவ், குடும்பப் பொறுப்பை பார்த்துக் கொண்டார். அவர் துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்தார். ஆனால் கேசவ ராவ் குறித்து எந்த தகவலும் வரவில்லை'' என்கிறார். எம்.டெக் படிக்கும் போது, கேசவ் ராவ் நக்சலைட் அமைப்பான சிபிஐ மக்கள் போர் குழுவில் சாதாரண தொண்டராக அமைப்பில் சேர்ந்த கேசவ் ராவ், அடுத்தடுத்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தலைமையின் நம்பிக்கையை வென்றார். கேசவ் ராவின் பொறுப்பும், பகுதியும் மாறிக் கொண்டே இருந்ததுபோல, அவரது பெயரும் ககன்னா, பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், கேசவ், பிஆர், பிரகாஷ், தர்ப நரசிம்ம ரெட்டி, ஆகாஷ், நரசிம்மா, பசவராஜ், பசவராஜு என தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. 1992 ஆம் ஆண்டில், மக்கள் போர்க் குழு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, கணபதியுடன் நின்ற கேசவ் ராவுக்கு மத்திய குழுவின் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டது, இது அவரை அமைப்பில் முக்கியமானவராக ஆக்கியது. பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC படக்குறிப்பு,கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பார்வையிடுகின்றனர். பசவராஜூவுக்கு மத்தியக் குழுவில் எப்படி இடம் கிடைத்தது? 1992 ஆம் ஆண்டில் மக்கள் போர் குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கேசவ் ராவ் மாவோயிச அமைப்பில் சிறப்பு கொரில்லா படைக்கு நீண்ட காலம் தலைமை தாங்கினார். ஆயுதங்கள் முதல் பயிற்சி வரை அனைத்திற்கும் பொறுப்பாக இருந்த கேசவ் ராவுக்கு, பிரிக்கப்படாத ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. 1994-95 இல் கொரில்லாப் படை தொடங்கப்பட்டிருந்தாலும், மே 1999 வாக்கில், மத்திய கொரில்லாப் படை கலைக்கப்பட்டு, பிளாட்டூன்கள், உள்ளூர் கொரில்லா அணிகள் மற்றும் சிறப்பு கொரில்லா அணிகள் தொடங்கப்பட்டன என்பதை மாவோயிச ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இக்காலக்கட்டத்தில், முதன்முறையாக, ஆயுதக்குழு மற்றும் அமைப்பு வேலைகளுக்காக தனித்தனி கட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவ் மத்திய ராணுவ ஆணையத்தின் பொறுப்பாளராக பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில், மாவோயிஸ்ட் அமைப்பு. மக்கள் விடுதலை ஆயுதக்குழுவை உருவாக்கியது, இந்த காலக்கட்டத்தில்தான் கேசவ் ராவ் அமைப்பின் மிக உயர்ந்த குழுவான அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவின் பெயர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுடன் இணைத்து பேசப்பட்டது. மேலும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அமைப்புகளால் இவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கேசவ் ராவின் தலைக்கு அறிவித்த மொத்த பரிசுத்தொகை ஒன்றரை கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது. பெரிய தாக்குதல்களில் பசவராஜூவின் பங்கு கேசவ் ராவ் முதன்முதலில் 1987 இல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு தாக்குதலை வழிநடத்தினார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 போலீசார் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு, 'கேசவ் ராவ் நடத்திய கொடூரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இப்போது போலீஸ் ஆவணங்களின் ஒரு பகுதியாகும்' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏப்ரல் 10, 2010 அன்று தாந்தேவாடாவில் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், 2013 மே 23 அன்று தர்பா பள்ளத்தாக்கின் ஜீராம் படுகொலை என பல்வேறு பெரிய சம்பவத்திலும் கேசவ் ராவ் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. ஜீரம் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். "2018 ஆம் ஆண்டில் அரக்கு தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ கிதாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கும் கேசவ் ராவ் பொறுப்பாக்கப்பட்டார். 2019 ல் கட்சிரோலியில் 15 கமாண்டோக்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் கேசவ் ராவ் இருந்தார். அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலின் பின்னணியிலும் கேசவ் இருந்தார். ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தியதற்கும் கேசவ்தான் காரணம்" என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார். எப்படி கேசவ் ராவ் மாவோயிஸ்ட் தலைமை பொறுப்புக்கு வந்தார்? 2009 இல் கோபாத் காந்தி மற்றும் 2010 இல் அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பிஜோய் டா என்கிற நவீன் பிரசாத் என்கிற நாராயண் சன்யால் ஆகியோர் கைது செய்யப்பட்டது அமைப்புக்கு பல நெருக்கடிகளை உருவாக்கியது. இதற்கிடையில், ஜூலை 2010 இல் சிபிஐ மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத் மற்றும் 2011 நவம்பரில் கோட்டேஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பில் கேசவ் ராவின் பிடி வலுவடைந்தது. நோய்வாய்ப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் முப்பபல்லா லட்சுமண ராவ் என்கிற கணபதி அமைப்பின் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, கேசவ் ராவ் இயல்பாகவே சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்டளையை ஏற்க முன்னணி போட்டியாளராக ஆனார். 2018 ஆம் ஆண்டில், நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் பதவி கிடையாது. பொதுச் செயலாளர் என்பது இந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியாகும். இந்த வகையில், பி.டெக் படித்த கேசவ் ராவ், மாவோயிஸ்ட் அமைப்பில் ஒரு சாதாரண தொண்டராக இருந்து மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 27 ஆண்டுகளாக மத்திய குழு உறுப்பினராகவும், 18 ஆண்டுகளாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய கேசவ் ராவை பொதுச் செயலாளராக நியமித்ததை அறிவித்த சிபிஐ மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி செய்தித் தொடர்பாளர் அபய், கேசவ் ராவைப் பற்றி கூறுகையில், "துல்லியமாகச் சொல்வதானால், அவர் சமீபத்தில் பொதுச் செயலாளராக பரிணமித்துள்ளார், அதே நேரத்தில் 1992 க்குப் பிறகு ஒரு கூட்டுத் தலைமையாக வளர்ந்த மத்திய குழுவில் ஒரு முக்கியமான தோழராக இருக்கிறார்." என்றார். நெருக்கடியில் இருந்த மாவோயிஸ்ட் அமைப்பு பட மூலாதாரம்,CPI (MAOIST) படக்குறிப்பு,மாவோயிஸ்ட் முகாம் (கோப்புப் படம்) சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புப் படை முகாம்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்ட சமயத்தில் மாவோயிஸ்டுகளுக்கு சிக்கல்கள் அதிகமானது. இதற்குப் பிறகு, 2023 டிசம்பரில் வந்த பாஜகவின் விஷ்ணுதேவ் சாய் அரசு, சில மாதங்களுக்குள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, கேசவ் ராவ் மாவோயிஸ்ட் அமைப்பைக் காப்பாற்றி பராமரிக்கும் சவாலை எதிர்கொண்டார். பாஜக அரசின் 15 மாத ஆட்சிக் காலத்தில், 450 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், சிலர் காணாமல் போயினர். மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரும் சரணடைந்தனர். மாவோயிஸ்ட் அமைப்பு தனது பிடிவாதம் அனைத்தையும் கைவிட்டு நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆனால் இப்போது அதற்கு அரசு தயாராக இல்லை. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா தெளிவாகக் கூறினார். மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கமா இது? பட மூலாதாரம்,CG KHABAR/BBC புதன்கிழமை கேசவ் ராவ் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு குறித்து பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "இந்த மரணம் மீதமுள்ள மாவோயிஸ்டுகள் மீது பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். கேசவ் ராவ் கொலைக்குப் பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு தலைமையற்றதாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இது மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கம் என்று நீங்கள் கூறலாம். 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு நிர்ணயித்திருந்தார். அது இப்போது உண்மையாகி வருவதாகத் தெரிகிறது." இருப்பினும், சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக காவல்துறை இயக்குநர் பதவியை வகித்த விஸ்வரஞ்சன் இதை வேறுவிதமாகப் பார்க்கிறார். "கேசவ் ராவ் கொலை போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மாவோயிஸ்ட் பிரச்னை சில ஆண்டுகளுக்கு அமைதியடைய வாய்ப்புள்ளது. ஆனால் 1973 இல் நக்சலைட் இயக்கம் மோசமாக நசுக்கப்பட்ட பிறகும், நக்சலைட்டுகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்களை புத்துயிர் பெறச் செய்தனர் என்பதை பழைய வரலாறு காட்டுகிறது." என்கிறார் விஸ்வரஞ்சன் விஸ்வரஞ்சனின் கூற்றுப்படி, மாவோயிஸ்ட் இயக்கம் வரும் நாட்களில் அகிம்சை வடிவத்தில் உருவாகலாம் அல்லது வேறு ஏதேனும் வன்முறை வடிவத்தில் மீண்டும் எழக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு நம்பல்லா கேசவ ராவுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட அதே மே மாதத்தில், அவர் கொல்லப்பட்டுள்ளார். பல மாதங்களாக நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, பஸ்தர் உட்பட சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கேசவ் ராவ் மற்றும் பிற மாவோயிஸ்ட்களின் சடலங்களை மாவட்ட தலைமையகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mgzn7dpd0o
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் - உலக நாடுகள் கடும் கண்டனம்
22 MAY, 2025 | 12:33 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது. அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை நோக்கியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. சர்வதேச இராஜதந்திரிகளிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் விசாரணைகளின் பின்னர் இராஜதந்திரிகளை தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது இஸ்ரேலிய இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகக்கு ஸ்பெயின், எகிப்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய தூதுவர்களை அழைத்து தங்கள் கண்டனங்களை வெளியிடப்போவதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விளக்கமளிக்கவேண்டும் என பலநாடுகள் தெரிவித்துள்ளன. இராஜதந்திரிகள் குழுவை இஸ்ரேலிய படையினர் வேண்டுமென்றே இலக்குவைத்தது பெரும் குற்றம் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் காணப்படும் மனிதாபிமான நிலை குறித்து நேரடியாக பார்த்து அறிந்துகொள்வதற்காகவும், பாலஸ்தீன மக்களிற்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்வதற்காகவே இராஜதந்திரிகள் அங்கு சென்றனர் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேல் தெரிவித்ததை ஏற்கமறுத்துள்ளதுடன் அதன் விளக்கங்கள் "இன்றைய சம்பவத்தின்தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார் இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் "இராஜதந்திரிகளின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார். "இந்த சம்பவத்தை விசாரித்து இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்ய இஸ்ரேலை நாங்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கல்லாஸ் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேலிய இராணுவத்தின் நிகழ்வுகள் குறித்த பதிப்பை மறுத்து அதன் விளக்கங்கள் "இன்றைய நிகழ்வின் தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார் இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை மெதுவான முறையில் பயன்படுத்துவதை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "நிராயுதபாணியான பொதுமக்களுக்கு ஈடுபாட்டின் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது. https://www.virakesari.lk/article/215390
-
பிரபாகரன் உப்பு என்று எதுவும் நாட்டில் தற்போது இல்லை - நாடாளுமன்றத்தில் சுனில் ஹந்துநெத்தி
22 MAY, 2025 | 03:21 PM இலங்கையில் இனிமேலும் பிரபாகரன் உப்பு என்று எதுவும் இல்லை என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடனான கடும் வாக்குவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு உப்பை தெற்கிற்கு விநியோகிப்பதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று எதுவும் இல்லை. இலங்கையின் உப்பே உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரன் உப்பை வைத்திருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறான இன்று அவ்வாறான உப்பு எதுவுமில்லை. நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்திவிட்டோம் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அர்ச்சுனா நான் வடக்கு உப்பை தெற்கிற்கு வழங்கவேண்டாம் என தெரிவிக்கவில்லை தொழிலாளர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் என்றே வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215409
-
பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்குக; புதிய சட்டங்கள், மாற்று ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை - யாழ். சட்டத்தரணிகள் சங்கம்
22 MAY, 2025 | 01:48 PM (எம்.நியூட்டன்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவுள்ளது என்றும், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என்றும் அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்காக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஒன்றுகூடி கலந்துரையாடி இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தது. அதன்படி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று மாற்றுச் சட்டங்கள் அல்லது புதிய சட்டங்கள் அவசியம் இல்லை என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்காமல், தற்போது காணப்படும் குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைக்குக் கீழான ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை அணுகலாம் என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215399
-
உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கைது
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 01:22 PM சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. “சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு சமூக ஊடகங்கள் வழியாக பல பொருத்தமற்ற செய்திகள் அனுப்பப்பட்டன. முறைப்பாட்டை தொடர்ந்து, நாங்கள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து, வழக்குக் கோப்பை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்தோம். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 345 இன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் எங்களுக்கு அறிவுறுத்தினார், இது கைதுக்கு வழிவகுத்தது,” என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நேற்றையதினம் சிலாபம் தலைமை நீதவான் எஸ். மகேந்திரராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டு ரூ. 500,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215384
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூரில் திட்டமிட்டு நடக்கும் சதி..! அசைவ உணவகத்தின் பின்னணி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் ஒரு பல்தேசிய கம்பனியின் அசைவ உணவகம் எந்தவித அனுமதியும் இன்றி திறக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் மாட்டிறைச்சியும் விற்கப்படுகின்றது. ஒரு ஆலய சூழலுக்குள் அசைவ உணவகம் இருக்க கூடாது என்பது எமது அடிப்படை பண்பாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்துக்களினதும் தமிழர்களினதும் ஒரு தேசிய அடையாளமாக நல்லூர் ஆலயம் உள்ள நிலையில், அதற்கு முன்னால் இவ்வாறு அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது இனவாதத்தை தூண்டும் ஒரு சதித்திட்டமாகவே புலப்படுகின்றது” எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், https://tamilwin.com/article/nallur-barista-cafe-issue-1747908112#google_vignette
-
கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள் வெள்ளவத்தை - ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரான இந்த அரசியல்வாதி, 6 மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பி, அதை ஒழித்து வைக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணிடம் இந்த ஆயுதத்தை கொண்டு வந்து ஒப்படைத்த முன்னாள் அமைச்சரின் சமையல்காரரை கைது செய்வதற்காக நேற்று மாலை ஒரு சிறப்பு பொலிஸ் குழு அவிசாவளை பகுதிக்கு சென்றிருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளில் இந்த முன்னாள் அமைச்சர் ஹெவ்லொக் வீட்டுத்தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது. பையில் T-56 துப்பாக்கி இருப்பது தெரியாமல் ஆயுதம் அடங்கிய பையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்தப் பை 6 மாதங்களாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தது, நேற்று முன்தினம், அந்தப் பெண்ணின் மகன்களில் ஒருவர் அந்தப் பையை சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்தப் பெண் பையையும் துப்பாக்கியையும் தனது காரின் பின்புறத்தில் விட்டுச் சென்றிருந்தார். இந்த நேரத்தில்தான் வீட்டுத்தொகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆயுதத்தை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் வெள்ளவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் வந்து ஆயுதத்தை ஆய்வு செய்தபோது, அது நவீன T-56 துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதற்கமைய, இந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த 68 வயதுப் பெண்ணும் மற்றொரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரபல அரசியல்வாதி அந்தப் பெண், அந்தப் பையை முன்னாள் அமைச்சரின் சமையல்காரர்களில் ஒருவர் தன்னிடம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட உள்ளார். வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியல்வாதியின் தந்தையும் ஒரு பலம்வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார். இந்த ஆயுதம் ஏன் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது, அந்த ஆயுதத்தால் என்ன குற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://tamilwin.com/article/t-56-belongs-to-a-slfp-former-minister-1747880928
-
ஹமாசை முற்றாக அழித்தல்; இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்
22 MAY, 2025 | 02:52 PM PELED ARBELI பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்றவற்றின் கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிபுணருமான மொசே எலாட் பயங்கரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அழிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாரிவ் உடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். பயங்கரவாத அமைப்புகளை அழிப்பது உண்மையிலேயே சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச அனுபவங்களை பயன்படுத்தியுள்ள அவர் மேற்குலக நாடுகள் விவாதிக்க தயாராகயிருக்கும் ஒரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அமைப்புகளை முற்றாக செயல் இழக்க செய்ய முடியுமா? முழுமையான வெற்றி சாத்தியமா என்ற சர்வதேச விவாதம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, பாலஸ்தீன ஜிகாத் போன்றவற்றின் சூழமைவில் பெருமளவிற்கு தீர்வுகாணப்பட்டதாக காணப்படுகின்றது. காசா மக்களை பட்டினிபோடுதல், தென்லெபனான் கிராமங்களை அழித்தல், இஸ்ரேலின் ஒவ்வொரு தடையையும் மனிதாபிமான நெருக்கடி என முத்திரை குத்துதல், போன்றவற்றால் இஸ்ரேல் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், இஸ்ரேல் முழுமையான இராணுவ வெற்றியை பெறுவதற்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவரது வார்த்தைகளில் 'நாங்கள் நேர்மையாக பேசுவோம், உலகம் இஸ்ரேல் முழுமையான வெற்றியை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது" பல்வேறு வழிகளில் மிகவும் திறமையாக அழிக்கப்பட்ட நான்கு பயங்கரவாத அமைப்புகளை அவர் வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டினார். இராணுவ மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அழிக்கப்பட்ட ஜாரிஸ்ட் ரஸ்யாவின் பிளக் ஹன்ட்ரட்ஸ், பெருவின் சைனிங் பாத் 1990களில் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டது, தானாகவே முன்வந்து கலைந்துபோன ஜேர்மனியின் செம்படை அரசியல் அமைப்பாக மாறி சின்பெய்னுடன் இணைந்த ஐரிஸ் விடுதலை இராணுவம். எலாட் ஐந்தாவது அதிகம் விவாதிக்கப்படாத உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்தது. தென்னாசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுத அச்சுறுத்தலாக விளங்கிய அமைப்பு. வெற்றியின் விரிவான தன்மை, மற்றும் அதனை சாத்தியமாக்க பயன்படுத்தப்பட்ட தீவிரமான, பெரும்பாலும் தார்மீக ரீதியிலான நடவடிக்கை காரணமாக இலங்கை அனுபவம் விதிவிலக்கானது என அவர் விவரித்தார். இலங்கையின் வடக்கு கிழக்கில் சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்குவதற்காக அந்த அமைப்பு 26 வருடங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த குழு அதிநவீன இராணுவதிறன்களை வளர்த்துக்கொண்டது, தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது, அவர்களில் சிலர் பெண்கள் சிறுவர்கள். 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதை கைவிட்டு விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுத்தது. இலங்கை தமிழ் புலிகளை தோற்கடித்தது எப்படி? இது இஸ்ரேலிற்கு ஏன் முக்கியமானது? 2006க்கும் 2009க்கும் இடையில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. இராணுவத்தை கணிசமான அளவு விரிவுபடுத்தவும், மேம்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், ஆயிரக்கணக்கான புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வளஙகள் ஒதுக்கப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பல முனைகளில் இராணுவநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, எதிரியின் பகுதிகளிற்குள் ஊடுருவி விசேட படைப்பிரிவுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதற்கு சமாந்திரமாக விடுதலைப்புலிகளிற்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. புலம்பெயர்ந்தவர்களின் நிதி சேகரிப்பை இலக்குவைத்தது. குறிப்பாக கனடா, பிரிட்டன், ஸ்கன்டினேவியன் நாடுகளில் விடுதலைப்புலிகளை உத்தியோகபூர்வதாக பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு பல மேற்குலக நாடுகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் அந்த அமைப்பின் ஆதரவு கட்டமைப்புகள் பலவற்றை மூடியது. உளவியல் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் இடையில் அதிருப்தியை அதிகரிப்பதற்காக தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒற்றர்களாக தகவல் வழங்குபவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கவில்லை என்கின்றார் எலாட். இறுதி அடி என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் வழிமுறை மூலம் சாத்தியமானது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், பலர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஆனால் கடும் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் கொல்லப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் மருத்துவமனைகளை இலக்குவைப்பது பொதுமக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியது, தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல்போனது போன்ற இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகளை ஆவணப்படுத்தியுள்ளன. தமிழ் புலிகள் வெறுமனே பின்வாங்கச்செய்யப்படவில்லை. அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்கின்றார் எலாட். அவர்களிடமிருந்த பகுதி மீள கைப்பற்றப்பட்டது, தலைமைத்துவம் அழிக்கப்பட்டது, 2009ம் ஆண்டின் பின்னர் மீள எழுச்சி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தவில்லை. 2011 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மதிப்பீடுகள் குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் நடந்த சண்டையின் இறுதி மாதங்களில் 40000 முதல் 70000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகள் போராளிகள் என்று வலியுறுத்துகிறது. மனிதாபிமான அமைப்புகள் மோதல் வலயங்களிற்குள் மண்டலங்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் வாயடைக்கப்பட்டதாகவும் அல்லது நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தார்மீக மற்றும் சட்ட மதிப்பீடுகள் சிக்கலாகின. பொதுமக்களின் இறப்புகளின் அளவு மோதலின் முடிவில் மிகவும் பிரச்சினைக்குரிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. சர்வதேச மௌனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் அவை வெறுமனே நிராகரிக்கப்பட்டன. இதனால் அரசாங்கம் சில விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இதனை பயங்கரவாத அமைப்பொன்று முற்றாக அழிக்கப்பட்ட மிகவும் வழமைக்கு மாறான தருணம் என தெரிவித்தார். ஆனால், பெரும் மனிதாபிமான விலை காரணமாக அது சர்ச்சையில் சிக்குண்டது. நீதியை விட புவிசார் அரசியலே மேற்குலகின் பதிலை தீர்மானித்தது என்கின்றார் அவர் செப்டம்பர் 11க்கு பின்னர் இலங்கை தனது நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக முன்னிறுத்தியதால் பல நாடுகள் அதற்கு ஆதரவாகயிருந்தன. அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களின் முயற்சிகள் குறைந்த வெற்றியையே அடைந்தன. கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே மிதமான தடைகளை விதித்தன, அல்லது உதவியை நிறுத்தி வைத்தன. விரிவான சர்வதேச விசாரணை எதுவும் பின்பற்றப்படவில்லை. இலங்கையும் மோதலை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக வெற்றிகரமாக சித்தரித்தது, அதன் நடவடிக்கைகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும் இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்ல என்றும் வாதிட்டது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கை சோர்வை எதிர்கொண்ட மேற்கத்திய நாடுகள் மோதலை விட கட்டுப்படுத்தலையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தன. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடமும் சீனாவுடனான வளர்ந்து வரும் உறவுகளும் மேற்கத்திய அரசாங்கங்களை உண்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்கலாம். https://www.virakesari.lk/article/215402
-
ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்
Published By: RAJEEBAN 21 MAY, 2025 | 12:31 PM Revolutionary Existence for human Development -red கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைதொழிற்சாலையொன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளதால் 1461 தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில்இகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைதொழிற்சாலை முன்னறிவித்தல் இன்றி தனது தொழிற்சாலையை மூடியுள்ளது. ஒரே இரவில் 1461 தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கியுள்ளதுடன் நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளது. மே 19ம்திகதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. பலவருடங்களாக அந்த தொழிற்சாலைக்காக தங்களை அர்ப்பணித்த தொழிலாளர்கள் பலர் ஆறு மணிவரை வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் கழித்து 8 மணியளவில் நாளை முதல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்ற தகவல் வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது. எந்த வித முன்கூட்டிய தகவல்களும் இன்றி இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிற்கு அடுத்தவாரம் ஆடைகளை அனுப்பும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் நள்ளிரவு தாண்டியும் வேலைபார்த்துக்கொண்டிருந்தோம் என தெரிவிக்கும் தொழிலாளர்கள், நாங்கள் எதனையும் எதிர்பார்க்கவில்லை வழமை போல மறுநாளும் வேலை தொடரும் என்றே நினைத்திருந்தோம் என தெரிவிக்கின்றனர். என்னிடம் 4000 ருபாய் மாத்திரம் இருந்தது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று 2500 ரூபாய் கடன் வாங்கினேன். நாளைக்கு எனது பிள்ளைகளிற்கு சமைப்பதற்கு கோழி இறைச்சியும் வாங்கினேன். தற்போது எனக்கு வேலை இல்லை. கையில் காசும் இல்லை. செல்வதற்கு இடமும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ள பெண்ணொருவர், நாங்கள் எங்கள் உயிரை கொடுத்து பணிபுரிந்த இந்த நிறுவனம இதனை செய்யும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனகுறிப்பிட்டுள்ளார். இது வெறுமனே தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழத்தல் மாத்திரமல்ல 1400 குடும்பங்கள் திடீரென ஸ்திரதன்மை இழக்கும் நிலை. தொழிலாளர்கள் தாங்கள் முன்கூட்டியே எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கின்றனர். நிறுவனம் இழப்பீடுகள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார, உணர்வுரீதியான தாக்கங்கள் அதனையும் மீறியவையாக காணப்படுகின்றன. எந்த வித முன்கூட்டிய தகவலும் இன்றி தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்துவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ள தொழிலாளர் ஒருவர் இழப்பீடு என்பது சிலநாட்களிற்கே போதுமானது, அதன் பின்னர் என்ன செய்வது, எங்களிற்கு பிள்ளைகள் உள்ளனர் வீட்டு வாடகை கட்டவேண்டும் வேறொரு வேலையை தேட நேரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார். நிறுவனங்கள் சட்டரீதியில் தங்கள் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளலாம் என்றாலும்உரிய முன்னறிவிப்பு வெளிப்படை தன்மையின்றி இதனை செய்வது, மனிதாபிமானமற்றது, ஒழுக்கமற்றது. இந்தவகையான திடீர் பணிநிறுத்தம் குறிப்பாக பெண்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, அவர்களில் பலர் ஏற்கனவே இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் விளிம்புகளில் வாழ்கின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. சுதந்திர வர்த்தகவலயத்தில் தொழிற்சாலை மூடல்கள் நியாயமாகவும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படுபவையாகவும் கண்ணியமாகவும் நடப்பதை உறுதிசெய்ய முதலீட்டு வாரியமும் இலங்கை அரசாங்கமும் விசாரணை செய்து முதலீட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த கடினமான நேரத்தில் மனித மேம்பாட்டுக்கான புரட்சிகர இருப்பு (red) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. எங்கள் உதவி மையம் மூலம் எங்கள் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தகவல் வழிகாட்டுதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். இருப்பினும்இ ஒரு சிறிய இலாப நோக்கற்ற அமைப்பாக red 1461 தொழிலாளர்களின் முழு சமூக மற்றும் மனநலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கவில்லை. எனவே அனைத்து சிவில் சமூக அமைப்புகள் தொழிலாளர் உரிமைகள் குழுக்கள் - தொழிற்சங்கங்கள் மனநல நிபுணர்கள் மற்றும் அரசாங்கம் இந்த நெருக்கடியான தருணத்தில் ஒன்றிணைந்து இந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவசரமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். https://www.virakesari.lk/article/215311
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
பிளே ஆஃப் சுற்றில் மும்பை - ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்; தகர்ந்த டெல்லி அணியின் நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று (மே 21) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 63-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் ஆட்டமிழந்தது. 11வது முறை கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பொறுப்பேற்றபின் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி செல்கிறது. ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பிளே ஆஃப் சுற்றில் 4 இடங்கள் யாருக்கு? ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத்தான் தகுதி பெற்றுள்ளன, அதில் முதலிடம் முதல் கடைசி இடம் வரை இன்னும் முடிவாகவில்லை. இதில், மும்பை அணி தவிர மற்ற 3 அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால், அதில் வெற்றி தோல்வியைப் பொருத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்கள் முடிவாகும். மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால் அதில் வென்றால் 18 புள்ளிகளுடன் 1.292 நிகர ரன்ரேட்டுக்கும் அதிகமாக சென்று, 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்கலாம். அதேசமயம், பஞ்சாப் அணி 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட பஞ்சாப் அணி 3வது இடத்தைப் பிடித்துவிடும். அதேபோல, ஆர்சிபி அணியும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று, பஞ்சாபும் ஒரு போட்டியில் வென்றால் 19 புள்ளிகளில் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் முடிவாகும். இல்லாவிட்டால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றால் 2வது இடம் கிடைக்கும். குஜராத் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வென்றால் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று, ஒன்றில் தோற்றால் 20 புள்ளிகள்தான் பெறும். ஆனால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம். ஆர்சிபி ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கும். அப்போது, குஜராத்தின் ஒரு வெற்றியே அந்த அணியை முதலிடத்துக்கு உயர்த்தும். டெல்லி அணியைப் பொருத்தவரை இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றால்கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்கத்தில் முதல் 4 போட்டிகளில் வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கடைசி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது. முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும், அடுத்த 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றதால்தான் டெல்லி அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியவில்லை. அக்ஸர் படேல் கேப்டன்சியில் அற்புதமாக சீசனைத் தொடங்கி, முதல் 6 போட்டிகள் வரை முதலிடத்தில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாகத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீசனின் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்தது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவையும், நிகர ரன்ரேட்டில் பெரிய சரிவையும் ஏற்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. அதேசமயம், மும்பை அணி முதல் போட்டியிலேயே தோற்றாலும், ரோஹித் சர்மா, ரெக்கில்டன், பும்ரா ஆகியோர் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாமல் இருந்து பின்னர் தொடர் வெற்றிகளுடன் மும்பை அணி அற்புதமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள் டெல்லி அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் மும்பையைக் கட்டுப்படுத்தி 18-வது ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம்தான் வைத்திருந்தது. சூர்யகுமார், நமன் திர் இருவரும் கடைசி இரு ஓவர்களில் அடித்த 48 ரன்கள் தான் ஆட்டத்தையே திருப்பிவிட்டது. ஒருவேளை இந்த இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக டெல்லி அணி வீசியிருந்தால், 150 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். இந்த 2 ஓவர்களில்தான் ஆட்டத்தை மட்டுமல்ல வெற்றியையும் சேர்ந்து டெல்லி அணி இழந்தது. 43 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் சிதைத்த பும்ரா, சான்ட்னர் மும்பை அணியின் பந்துவீ்ச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணிக்கு தோல்வியைக் கொடுத்தனர். சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3.2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து, டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினர். சூர்யகுமார் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றியதைப் போல், இருவரின் 5 ஓவர்களும் டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாகியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா சேஸிங்கில் தோல்வியடைந்த டெல்லி 181 ரன்கள் இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. தீபக் சஹர் ஓவரில் டூப்பிளசிஸும், போல்ட் ஓவரில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தபோது பாதி நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அபிஷேக் போரெல் (6), நடுவரிசையில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (6), அசுடோஷ் சர்மா (18) ஆகியோர் ஏமாற்றியது டெல்லி அணியை தோல்விக்கு இழுத்து வந்தது. சமீர் ரிஸ்வி (39), விப்ராஜ் நிகம் (20) ஆகியோர் சேர்த்ததுதான் டெல்லி அணியின் கௌரவமான ஸ்கோராகும். மற்ற வகையில் எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. மும்பை அணி திணறல் மும்பை அணிக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா பெரிய தொடக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால் முஸ்தஃபிசுர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா (5), முகேஷ் கமார் பந்துவீச்சில் ஜேக்ஸ் (21) ரன்னில் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவருக்குள் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. குல்தீப் பந்துவீச்சில் ரெக்கிள்டன் (25) ரன்களில் ஆட்டமிழந்தபோது ஐபிஎல் போட்டிகளில் குல்தீப் 100-வது விக்கெட்டை எட்டினார். விப்ராஜ் நிகம், குல்தீப் இருவரும் சேர்ந்து மும்பை பேட்டர்கள் சூர்யகுமார், திலக் வர்மா திணறவிட்டதால் 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்தது. தடுமாறிய திலக் வர்மா 27 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த கேப்டன் ஹர்திக் 3 ரன்னில் சமீரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி இரு ஓவர்கள் நமன் திர், சூர்யகுமார் இருவரும் தங்களுக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். 18வது ஓவரை முகேஷ் குமார் வீசியபோதுதான் சூர்யகுமார், நமன்திர் அதிரடியாக ஆடி சிக்ஸர் பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சமீரா வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என சூர்யகுமார் விளாச மும்பை அணி 180 ரன்களை எட்டியது. 18-வது ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறி 180 ரன்களை எட்டியது. நமன் திர் 8 பந்துகளில் 24 ரன்களும், சூர்யகுமார் 73 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூர்யகுமார் கணக்கில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணியில் விப்ராஜ், குல்தீப் வீசிய 8 ஓவர்கள் தான் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து அவர்கள் கைவசம் வைத்திருந்தது. இருவரும் சேர்ந்து 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ், சமீரா இருவரும் கடைசி இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாகினர். முஸ்தபிசுர் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் விப்ராஜ் நிகம் 'பணி எளிதாக இருந்தது' வெற்றிக்குப் பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "உண்மையாகவே நான் யாரிடம் பந்தை வீசி பந்துவீசச் சொன்னேனோ அவர்களிடம் இருந்து பந்துவீச்சில் துல்லியம், கட்டுக்கோப்பு இருந்ததால் என் கேப்டன்சி பணி எளிமையாக இருந்தது. 180 ரன்கள் நல்ல ஸ்கோர்தான் என்றாலும், டெல்லி அணி வலுவாக ஆடியிருந்தால் இது பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். நமன் திர், சூர்யாவும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இல்லாவிட்டால் 160 ரன்களுக்குள்தான் ஸ்கோர் இருக்கும்" எனத் தெரிவித்தார். ஆட்டங்களின் விவரம் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் இடம்: ஆமதாபாத் நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே நாள் – மே 25 இடம் – ஆமதாபாத் நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள் (12 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள் (12 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள் (12 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள் (13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgegqj5g01no
-
தனித்தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் - நெப்போலியன் என்ன செய்தார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக்கப்பட்டவர் அல்ல. அங்கிருக்கும் கார்ட்டூனிஸ்டுகள் நெப்போலியனைக் கூண்டில் அடைபட்ட விலங்காகக் காட்டினார்கள். பிரிட்டனில் அவரை வைத்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது. பிரிட்டன் மண்ணிலோ அல்லது அருகில் உள்ள வேறொரு நாட்டிலோ அவரை வைத்திருந்தால் பின்னாளில் புரட்சிக்கான மையமாக அவர் மாற வாய்ப்பிருந்தது," என்று 'நெப்போலியன் இன் கேரிகேச்சர் 1795-1821' (Napoleon in Caricature 1795 – 1821) என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ஏ எம் ப்ராட்லி. நெப்போலியனை செயின்ட் ஹெலனா தீவுக்கு அனுப்பும் முடிவு உலகின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த செயின்ட் ஹெலனா தீவுக்கு அவரை அனுப்ப தீர்மானித்தது பிரிட்டன் அரசு. பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த தீவு அது. ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 1,200 கி.மீ தூரம் தள்ளி இருந்தது இந்த இடம். "இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் இடமாக செயின்ட் ஹெலனாதீவு இருந்தது. பிரிட்டனின் ராணுவ முகாமைப் போல செயல்பட்ட அந்த பகுதியில் சுமார் 5,000 பேர் வாழ்ந்தனர். அவர்களில் சிலர் மடகாஸ்கரில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகள். மற்றவர்கள் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான கப்பல்களை பராமரித்து வந்தார்கள்," என்று தனது 'டெரிபிள் எக்ஸைல், தி லாஸ்ட் டேஸ் ஆஃப் நெப்போலியன் ஆன் செயிண்ட்.ஹெலெனா' (Terrible Exile, The last days of Napoleon on St.Helena) புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரையன் அன்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் (ஃப்ரான்சைஸ் ஜோசஃப் சாண்டேமேன் வரைந்த ஓவியம்) நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனா சென்ற 27 பேர் செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார். இதைக் கடுமையாக எதிர்த்த நெப்போலியன், தனக்கு பிரிட்டனிலேயே தங்க அனுமதி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் கூறினார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் தனது கப்பலின் கேபினுக்குச் சென்ற நெப்போலியன் அடுத்த மூன்று நாட்கள் வெளியே வரவில்லை. நான்காம் நாள் பிரிட்டன் அரசுக்குத் தன் எதிர்ப்பை முறையாகக் கடிதம் எழுதித் தெரிவித்தார் நெப்போலியன். 'நெப்போலியன் தி மேன் பிஹைண்ட் தி மித்' (Napoleon the man behind the myth) என்ற தனது புத்தகத்தில், "மொத்தம் 27 பேர் நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் கப்பலில் ஏறும்போது நெப்போலியனும், அவரது குழுவினரும் முழுமையாக சோதிக்கப்பட்டனர். நிறைய செல்வம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஏற்கெனவே யூகித்திருந்த நெப்போலியன், அனைவரது இடுப்பில் உள்ள பெல்ட்களுக்குள் தங்க நாணயங்களைக் கட்டி மறைத்து எடுத்துச் சென்றார்," என்று குறிப்பிடுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி. இந்த நீண்ட பயணத்தில் அவர் கடல் பயணத்தின் பல துன்பங்களையும் எதிர்கொண்டார். தனது அறையிலே தங்கி நிறைய வாசித்தார். மாலுமிகளுடன் பேசி தனது ஆங்கிலத்தை மேம்படுத்த முயற்சித்தார். அக்டோபர் 24-ம் தேதி, செயின்ட் ஹெலனா தீவு நெப்போலியனின் கண் முன்னால் விரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான உறவு கசந்தது இந்தத் தீவின் பரப்பளவு 122 சதுர கி.மீ. 1502-ஆம் வருடம் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இந்தத் தீவு. 1815-ஆம் ஆண்டு வாக்கில் இங்கே 3395 ஐரோப்பியர்கள், அடிமைகளாக அழைத்துவரப்பட்ட 218 கறுப்பினத்தவர், 489 சீனர்கள், 116 இந்திய மற்றும் மலேசிய நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ராணுவ ஆளுநர் ஒருவர், இந்தத் தீவை ஆட்சி செய்தார். ஒரு சிறிய பிரிட்டிஷ் படை அங்கே நிலை கொண்டிருந்தது. ஆரம்பத்தில் 'தி ப்ரையர்' என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயர்களின் எஸ்டேட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். சில நாட்களுக்குப் பிறகு அவர் லாங்வுட் ஹவுஸுக்கு மாற்றப்பட்டார். "மிகத் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். அவர் தோட்டத்துக்குச் சென்றால் கூட பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் உடன் வருவார். இந்தத் தீவின் ஆளுநராக ஹட்சன் லோவ் வந்த பிறகு நெப்போலியனுக்கான கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரித்தன. 1816-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் அரசு தரப்புடனான அவரது உறவு மேலும் மோசமானது," என்று எழுதுகிறார் ப்ரையன் அன்வின். ஆங்கிலேயர்கள், அவருக்காக ஒரு புது வீடு கட்ட ஆரம்பித்தபோது, இனி வாழ்நாள் முழுவதும் செயின்ட் ஹெலனாவில் தான் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன். நடை பயிற்சியும் சீட்டு விளையாட்டும் நெப்போலியன் லாங்வுட் ஹவுஸில் வாசிப்பதிலேயே தன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்கள் தனக்கான புத்தகங்களைக் கொண்டு வருவதற்காக அவர் காத்திருப்பார். நெப்போலியனின் இரண்டாவது பொழுதுபோக்கு தன்னை சந்திக்க வரும் நபர்களை நல்ல உணவும், ஒயினும் கொடுத்து உபசரிப்பது. "விருந்தோம்பலுக்காக அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட மிக அதிகமாகத்தான் பணம் செலவழிப்பார் நெப்போலியன். அவர் மதுபானத்தை அதிக அளவில் குடிக்கவும் செய்தார், பரிமாறவும் செய்தார். 1816-ஆம் ஆண்டில் மட்டும் 830 மிக விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் உட்பட 3700 ஒயின் பாட்டில்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. குதிரை சவாரி செய்வது அல்லது 'தி ப்ரையர்' தோட்டங்களில் நடப்பது போன்ற நடவடிக்கைகளால் தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார் நெப்போலியன். கேப்டன் பாப்பிள்டன் எப்போதும் அவருடன் இருப்பார். நெப்போலியன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளும் பொறுப்பு அவருடையது. பல மாலை நேரங்களை தனது நண்பர் பால்கம்முடன் சீட்டு விளையாடிக் கழித்தார் நெப்போலியன்." என்று தான் எழுதிய நெப்போலியனின் சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜான் பால் பார்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியனும் அவரது கூட்டாளிகளும் செயின்ட் ஹெலனாவுக்குக் கப்பலில் சென்றபோது 'செயின்ட் ஹெலனாவின் வானிலையும் சூழலும் எனக்குப் பிடிக்கவில்லை' நெப்போலியன் வைக்கப்பட்டிருந்த லாங்வுட் ஹவுஸில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. "அங்கே பெயிண்ட் அடிக்கப்படும் வாசம், தன் உடல்நிலையை மோசமாக்குவதாகக் கூறினார் நெப்போலியன். செயின்ட் ஹெலனாவில் உள்ள வானிலையும், அதன் சூழலும் நெப்போலியனுக்கும், அவரது குழுவினருக்கும் வெறுப்பை வரவழைத்தது," என்று எழுதுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி. "நெப்போலியனுடன் சென்றிருந்த அதிகாரிகள் அவர் முன்னிலையில் முழு அரச நெறிமுறைகளைப் பின்பற்றினர். பகல் நேரத்தில் பச்சை நிற ஹண்டர் கோட் வகை உடையையோ அல்லது வெள்ளை லினென் துணியில் கோட்டும் பேண்டுமோ அணிந்திருப்பார் நெப்போலியன். இரவு உணவின் போது முழு ராணுவ உடையில் இருப்பார் அவர். அவருடன் இரவு உணவருந்தச் செல்லும் பெண்கள் அரசவை உடைகளையும், நகைகளையும் அணிந்திருந்தனர். உணவுக்குப் பிறகு அவர்கள் சீட்டு விளையாடுவார்கள் அல்லது பேசுவார்கள். இல்லையென்றால் நெப்போலியன் ஏதாவது புத்தகம் வாசிக்க அதை அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்." நெப்போலியனின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது கண்காணிப்பில் இருந்தபோதும் தோட்டவேலை செய்வதை பொழுதுபோக்காகச் செய்தார் நெப்போலியன். இரண்டு சீனத் தொழிலாளிகள் அவருக்கு உதவியாக இருந்தனர். தாவரங்களுக்குத் தனது கைகளாலேயே நீர் ஊற்றுவார் நெப்போலியன். முழுமையாகப் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளியைப் போலவோ, போர்க்கைதியைப் போலவோ நடத்தப்படவில்லை. நடக்கவோ, குதிரை சவாரி செய்யவோ அனுமதிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு எல்லை வரைதான். அந்த சமயத்திலும் பிரிட்டன் அதிகாரி ஒருவர் அவருடன் இருப்பார். வீட்டுக்குள் இருந்த போதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ராணுவ வீரர்கள் யாராவது கண்காணித்துக் கொண்டுதான் இருந்தனர். ஒருநாளைக்கு இரண்டு முறை அவர் அங்குதான் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரி ஒருவர் வருவார்."இரண்டு கப்பல்கள் எப்போதும் தீவை சுற்றிக் கொண்டே இருந்தன. நெப்போலியனுக்கு எந்த செய்தித்தாள்களும் வழங்கப்படவில்லை. செயின்ட் ஹெலனாவை விட்டு நெப்போலியன் தப்பிக்க நினைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று தனது டைரியில் எழுதியிருக்கிறார் செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக இருந்த ரியர் அட்மிரல் சர் ஜார்ஜ் காக்பர்ன். ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதை அனுபவிக்கவும் ஆரம்பித்தார் அவர். அங்கு இருந்த பிரிட்டன் அதிகாரிகள் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொண்டார் அவர். அந்தத் தீவுக்கு வரும் அல்லது அந்தத் தீவின் வழியாகச் செல்லும் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நெப்போலியனை நேரில் பார்க்க முடிவதென்பது அந்தத் தீவின் கவர்ச்சிகளுள் ஒன்றாக இருந்தது. அவர்களுடனும் நெப்போலியனின் பழக்கவழக்கம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அந்தத் தீவில் மோசமான நிலையில் நெப்போலியன் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் செய்தித்தாள்களில் செய்தி பரவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முடிசூடும் உடையில் நெப்போலியன் நெப்போலியனுக்கும் ஆளுநர் லோவுக்குமான தகராறு அட்மிரல் காக்பர்னுக்கு பதிலாக 1816-ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் சர் ஹட்சன் லோவ், செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியனுக்கும், லோவுக்கும் எதிலும் உடன்பாடில்லை. "புதிய ஆளுநர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் லாங்வுட் ஹவுஸுக்கு வந்த போது நெப்போலியன் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அடுத்தநாள் அவரை சந்திப்பதாக செய்தி அனுப்பினார் நெப்போலியன். மறுநாள் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் இருந்தே நெப்போலியனுக்கு லோவைப் பிடிக்கவில்லை. லோவும், நெப்போலியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்" என்று எழுதினார் ஆடம் ஸெமோய்ஸ்கி. நெப்போலியனைப் பெரிதும் மதித்த ஆங்கிலேயர் ஒருவர் நெப்போலியனுக்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய புத்தகங்கள் அனுப்பினார். அதைப் பறிமுதல் செய்தார் லோவ். நெப்போலியனின் பயன்பாட்டுக்கு என்று சில பொருட்களை அனுப்பி வைத்தார் அவரது தங்கை பாலின். நெப்போலியனுக்கு இவ்வளவு பொருட்கள் தேவையில்லை என்று சொல்லி அவை அனைத்தையும் நெப்போலியனிடம் சென்று சேரவிடாமல் தடுத்துவிட்டார் லோவ். லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே வலுத்த மோதல் இதற்கிடையே லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே இரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. "நெப்போலியன் இந்த சந்திப்புகள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். ஒரு பேரரசர் நிற்கும்போது அவர் முன் அமர்வது வழக்கமில்லை, ஆதலால் லோவும் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழல் வந்தது. நெப்போலியனின் செலவுகளைக் குறைக்கச் சொல்லி லோவுக்கு செய்தி வந்தது. இதைப் பற்றி லோவ் நெப்போலியனுடன் பேச விரும்பிய போது, தனது பட்லரிடம் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளும்படி கூறினார் நெப்போலியன்," என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் தாமஸ் ஆப்ரி. 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று லோவ் நெப்போலியனைச் சந்திக்கச் சென்ற போது , லோவை நீ வெறும் கணக்கர்தான், வேறு ஒன்றுமில்லை என்று பொறுமித் தள்ளினார் நெப்போலியன். நெப்போலியனின் வாழ்க்க வரலாற்றை எழுதிய கில்பர்ட் மார்ட்டினோ, "நெப்போலியன் லோவிடம், நீ ஒரு கௌரவமான மனிதன் இல்லை. மற்ற மனிதர்களின் கடிதங்களை ரகசியமாகப் படிக்கும் மனிதன் நீ. நீ ஒரு சாதாரண சிறை அதிகாரிதான், ராணுவ வீரன் இல்லை. என் உடல் வேண்டுமானால் உன் கைகளில் இருக்கலாம். ஆனால் என் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது என்று கூறினார் நெப்போலியன்" , என்கிறார். இதைக் கேட்டதும் லோவின் முகம் சிவந்தது. அவர் நெப்போலியனிடம், "நீங்கள் ஒரு அபத்தமான மனிதர். உங்கள் முரட்டுத்தனம் பரிதாபகரமானதாக இருக்கிறது," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். அதன் பிறகு, நெப்போலியன் உயிருடன் இருக்கும்வரை அவரைச் சந்திக்க லோவ் செல்லவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நெப்போலியன் (ஆன் மரியர் வரைந்த ஓவியம்) நெப்போலியனின் உடல்நிலை மோசம் அடைந்தது இதன்பிறகு நெப்போலியனின் மன உறுதி குலைந்து போனது. ஒரே மாதிரியான வாழ்க்கை, மோசமான வானிலை, மோசமான உணவு, வாசல் மற்றும் ஜன்னல் அருகே நிற்கும் காவலர்கள், எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியாக உடல்நலம் சரியில்லாமல் போவது ஆகியவை நெப்போலியனை மோசமாக பாதித்தது. தான் எங்கு செல்ல விரும்பினாலும் அதற்கு லோவ் கட்டுப்பாடுகள் விதித்ததால் நடை பயிற்சி செய்வதையும், குதிரை சவாரி செய்வதையும் நிறுத்திவிட்டார் நெப்போலியன். 1816-ஆம் ஆண்டின் இறுதியில் நெப்போலியனுக்குக் காய்ச்சலும் இருமலும் வந்தது. பல நாட்கள் தன் உடைகளை மாற்றாமலோ அல்லது அறையில் இருந்து வெளிவராமலோ கழித்தார் நெப்போலியன். "நெப்போலியனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போன போது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார் ஆளுநர் லோவ். பின்னர் ஒரு நல்ல ராணுவ அல்லது கடற்படை மருத்துவர் ஒருவரை அனுப்பி வைப்பதாக லோவ் கூறிய போது நெப்போலியன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநருக்காக ஒற்று வேலை பார்ப்பார்கள் என்று அவர் நம்பினார். பின்னர் அவர் ஹெச்எம்எஸ் கான்கொயரர் கப்பலின் டாக்டர் ஜான் ஸ்டோக் தன்னை வந்து பார்க்க அவர் அனுமதித்தார்." 52 வயதில் இறந்து போனார் நெப்போலியன் 1819-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நெப்போலியன் ஹெபடைடிஸ் நோயால் அவதிப்படுவதைக் கண்டுபிடித்தார் டாக்டர் ஸ்டோக். அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த லார்ட் லிவர்பூலுக்கு, இதைப் பற்றி, ஏப்ரல் மாதம் தெரியப்படுத்தினார் ஸ்டோக். ஆனால் நெப்போலியனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை என்று பிரதமரை நம்ப வைத்தார் லோவ். வசந்த காலத்துக்குள் நெப்போலியன் ஒரு மோசமான வியாதியால் தாக்கப்பட்டார். அது ஒருவேளை புற்றுநோயாகவோ அல்லது அல்சரின் காரணமாக ஏற்பட்ட ரத்தப்போக்காகவோ இருக்க வேண்டும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நெப்போலியன் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார். வெளிச்சம் நிறைய இருப்பதால் தனது படுக்கையை வரவேற்பறைக்கு மாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் உடல்நிலை மோசமடைந்த அவர் பலமுறை மயக்கமடைந்தார். 1821-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தனது இறுதி மூச்சை சுவாசித்தார் நெப்போலியன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியனின் மரணம் (ஸ்டீபென் சார்லஸ் டி வரைந்த ஓவியம்) பாரீஸில் மறுஅடக்கம் பின்னாட்களில் அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. "அவர் தலைமுடியில் ஆர்செனிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற கூட்டாளிகளில் ஒருவரான மார்சென், அவரது சில தலைமுடிகளை , ஞாபகார்த்தமாக எடுத்து வைத்திருந்தார். அதைப் பின்னர் அறிவியல் ரீதியாகப் பரிசோதித்த போது, நெப்போலியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டது," என்று நெப்போலியனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார் ஆலன் ஃபாரஸ்ட். தான் இறந்த பிறகு பாரீஸில் புதைக்கப்பட வேண்டும் என்று தனது இறுதிநாட்களில் ஆசை தெரிவித்தார் நெப்போலியன். அப்போதைய பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரை செயின்ட் ஹெலனாவிலேயே புதைக்க முடிவு செய்யப்பட்டது. நெப்போலியனின் அரச பாதுகாவலர்களான 12 வீரர்கள் அவரது உடலைப் புதைப்பதற்காக எடுத்துச் சென்றபோது ஒட்டுமொத்த செயின்ட் ஹெலனா தீவின் மக்களும் இந்தக் காட்சியைக் காண வந்தது. அவரது சவப்பெட்டி நீல வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் மேலே அவரது வாளும், கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தன. அவர் புதைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் அரசராக இருந்த லூயி ஃபிலிப் ஆணையின் பேரில், செயின்ட் ஹெலனாவில் இருந்த அவரது கல்லறையில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு , பாரீஸில் முழு அரச மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்பட்டது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj702l744do
-
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!
ACC போட்டிகளிலிருந்து விலக BCCI முடிவு செய்ததாக வெளியான செய்தியை BCCI செயலாளர் மறுத்துள்ளார் Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 02:10 PM (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் (ACC) ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தியை சபையின் செயலாளர் தேவஜித் சைக்கியா மறுத்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காக ஆசிய கிரிக்கெட் பேரiவியின் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது. ஆனால், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். 'ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிய கிண்ணம் மற்றும் வளர்ந்துவரும் பெண்கள் ஆசிய கிண்ணம் ஆகியவற்றில் பங்குபற்றுவதில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 'இது போன்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை ஆகும். ஏனேனில் ஆசிய கிரிக்கெட் பேரவை நிகழ்வுகள் குறித்து நாங்கள் விவாதிக்கவோ, அது தொடர்பான எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவோ இல்லை. இது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு நாங்கள் எதனையும் எழுதவும் இல்லை. இப்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் மற்றும் தொடரவுள்ள ஆடவர் மற்றும் மகளிருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் விஜயம் தொடர்பிலேயே நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்' என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215324
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
சாம்சங் இந்தியா: முடிவுக்கு வந்த 9 மாத போராட்டம் - 4 கேள்விகளும் பதில்களும் படக்குறிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025 "சாம்சங் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து 346 நாள்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தென்கொரியாவை தவிர எந்த நாட்டிலும் அந்நிறுவனத்துக்கு தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் அதை மாற்றியமைத்துள்ளோம்" எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துகுமார். ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக மே 19 அன்று, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி? தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா ஆலையில் வீட்டு உபயோகப் பொருட்களான தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. சுமார் 2000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தில் ஊதிய உயர்வு, தொழிற்சங்கப் பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு கைது சம்பவங்கள், போராட்ட பந்தல் பிரிப்பு, வழக்குகள் என பிரச்னை நீண்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. படக்குறிப்பு,சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது ஒருகட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு இரு தரப்பிலும் சமரச உடன்பாட்டை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்து. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்வதாக சிஐடியு குற்றம் சுமத்தியது. ஒருகட்டத்தில் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்தது. அதேநேரம், இரு தரப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக ஊழியர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பழிவாங்குவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 23 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறி உணவுப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் (சிஐடியு) முன்னெடுத்தது. இந்நிலையில், சாம்சங் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மே 19 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக, அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,CVGANESAN/X படக்குறிப்பு,சாம்சங் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மே 19 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சி.வி.கணேசன், சாம்சங் இந்தியா நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். "தொடக்கத்தில் நடந்த போராட்டத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் அமர்ந்து பேசி வாபஸ் பெற வைத்தேன். அது ஒரு காலகட்டம்" எனக் கூறுகிறார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். தற்போது ஊதிய உயர்வு ஒப்பந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறும் சி.வி.கணேசன், "1.4.2025 முதல் 31.3.2028 வரையிலான காலத்துக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இது. இதற்காக தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் 31 முறை பேசியும் முடிவு எட்டவில்லை" என்கிறார். "இதைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு தொழிற்சாலையிலும் போராட்டம் நடத்தினால் மாநிலத்தில் தொழில் அமைதி என்னவாகும் என்ற எண்ணத்தில் நானே தொழிலாளியாக மாறி நிர்வாகம், தொழிற்சங்கம் என அனைவரையும் வரவழைத்துப் பேசினேன்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "பேச்சுவார்த்தையின்போது, சங்கத்தை பதிவு செய்துவிட்டு சாதித்துவிட்டீர்கள். சம்பளத்தையும் வாங்கி சாதிப்பதன் மூலம் அமைதி கிடைக்கும் என அமைச்சர் கூறினார்" என்கிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார், பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாம்சங் பிரச்னை தீர்ந்தால் தான் மாநிலத்தில் ஒட்டுமொத்த தொழில் அமைதியே கிடைத்தது போன்ற ஒரு தோற்றம் அரசுக்குக் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதை சரியான ஒன்றாக பார்த்தோம்" என்றார். "சாம்சங் இந்தியா நிறுவனத்தால் தொழில் அமைதியை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, உள்ளிருப்பு போராட்டம், வெளியிடத்தில் போராட்டம் என நீடித்தது. தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். "ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஊழியருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 42 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இந்த ஆண்டிலேயே 11 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்" என்கிறார், முத்துகுமார். நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை, சுமார் 16 ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறும் முத்துகுமார், "தொழிலாளர்களும் நிர்வாகமும் சமம் கிடையாது. தீர்மானிக்கும் இடத்தில் நிர்வாகம் உள்ளது. தற்போது, பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார். 23 பேரின் நிலை என்ன? படக்குறிப்பு,தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. பிப்ரவரி 4 அன்று, சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பாக இயங்கும் தொழிலாளர் குழுவில் சேருமாறு மிரட்டப்படுவதாக சிஐடியு குற்றம் சுமத்தியது. கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்களை, அவர்களுக்குத் தொடர்பில்லாத துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதற்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா நிர்வாகம், உற்பத்தி தேவைகளின் அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறியது. தங்களை பணியில் இருந்து நீக்குவதற்காக ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சட்டவிரோத உற்பத்தியில் சாம்சங் இந்தியா ஈடுபடுவதாகக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றையும் ஊழியர்கள் நடத்தினர். இதை அடிப்படையாக வைத்து, பணிநேரத்தில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகக் கூறி 23 ஊழியர்களை சாம்சங் இந்தியா பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா, "அனைத்து ஊழியர்களையும் மரியாதையுடன் நடத்துகிறோம். இதற்கு மாறாக கூறப்படும் தகவல்களை நிராகரிக்கிறோம்" எனக் கூறியது. இதன் தொடர்ச்சியாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மார்ச் 5 முதல் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை சரிசெய்வதற்காக சுமார் 11 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை. "எங்கள் முன் இரண்டு பிரச்னைகள் உள்ளன. தற்போது ஊதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்து, 23 ஊழியர்களும் வெளியில் இருந்தால் அது அவர்களுக்கு (சாம்சங் இந்தியா) மிகப்பெரிய தலைவலியாக மாறும். அதை நோக்கி எங்கள் போராட்டங்கள் தொடரும்" எனக் கூறுகிறார் முத்துகுமார். பணியிடை நீக்கம் என்பது பிரதான விவகாரம் அல்ல எனக் கூறும் அவர், "தொழிற்சங்கம் தான் பிரதானம். அதற்குக் காரணமாக இருந்தவர்களை பணியிடை நீக்கம் செய்தனர்" என்றார். இதே கருத்தை வலியுறுத்திய சாம்சங் இந்தியா சிஐடியு சங்கத்தின் கௌரவத் தலைவர் அ.சௌந்திரராஜன், "23 பேர் பணியிடை நீக்கத்தை பெரிய பிரச்னையாக பார்க்கவில்லை. நிறுவனம் இருந்தால் அதில் பழிவாங்கல் நடக்கும். சங்கமா, கோரிக்கையா என்றால் சங்கம் தான் பிரதானமானது" என்றார். அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "23 பேரின் தற்காலிக இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளோம். அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார். வெற்றி பெற்றது யார்? படக்குறிப்பு,நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை, சுமார் 16 ஆண்டுகளாக நீடித்தது என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார் (கோப்புப் படம்) "ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை. தொழிற்சங்கத்துடன் எந்தவித உடன்பாடோ, அங்கீகாரமோ கிடையாது என சாம்சங் நிறுவனம் முடிவெடுத்தது. அதை இந்த உடன்பாட்டின் மூலம் மாற்றிக் காட்டியுள்ளோம்" எனக் கூறுகிறார், முத்துகுமார். "சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக அரசு இருந்தது. சாம்சங் செய்வது எல்லாம் சரி என்றால் அரசின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது" எனக் கூறும் முத்துகுமார், "வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், இந்த நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது" என்கிறார். "இது முக்கியமான முன்னேற்றம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க கௌரவ தலைவர் அ.சௌந்திரராஜன், "எங்களுடன் பேச மறுத்த நிர்வாகம், தொழிலாளர் நலத்துறையுடன் அமர்ந்து பேசி முடிவுக்கு வந்துள்ளது" என்கிறார். போராட்டம் தொடங்கிய நாள் முதலாக, சிஐடியு முன்வைத்த கோரிக்கைளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்கவில்லை. பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரவே, இதுதொடர்பாக விளக்கம் ஒன்றையும் அந்நிறுவனம் கொடுத்தது. அதில், சட்டவிரோத போராட்டத்தை ஆலையின் உள்புறம் நடத்தி அசாதாரண சூழலை சில தொழிலாளர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறியது. தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்ப வலியுறுத்தியும் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா கூறியிருந்தது. இதுபோன்ற போராட்டங்களால் நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி ஊழியர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக, சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் தெரிவித்திருந்தார். "ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, முதலில் கையெழுத்து போட முடியாது என சாம்சங் இந்தியா கூறியது. மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு சிஐடியு சங்கத்தை விட்டு விலகுமாறு ஊழியர்களை நிர்பந்தம் செய்தது" எனக் கூறுகிறார் முத்துகுமார். கடைசியாக, தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்லலாம் எனக் கூறிய பிறகு தான் சாம்சங் இந்தியா சற்று இறங்கி வந்தாகக் கூறும் முத்துகுமார், "நீதிமன்றம் சென்றால் சம்பளப் பிரச்னை மட்டுமல்ல, வேலை நேரமும் பிரதான பிரச்னையாக மாறும். ஆகவே, இரு தரப்பிலும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்" என்கிறார். மீண்டும் போராட்டம் நடக்குமா? சாம்சங் இந்தியா மற்றும் தொழிற்சங்கம் (சிஐடியு) ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முத்துகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சம்பள விகிதம் என்பது பிரதான உரிமை. அதில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. தற்போது தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியில் நான்காயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் உயர் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறினார். அடுத்த 60 நாள்களுக்குள் 23 பேர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் எனக் கூறிய முத்துகுமார், "மீண்டும் சங்கத்தை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டால் சட்டரீதியாகவே போராடுவோம்" என்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசியபோது, "அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறு நிர்வாகத்திடம் கூறியுள்ளேன். அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிடமும் பேசி கையெழுத்து போட வைத்தேன்" எனக் கூறினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பாளரிடம் பிபிசி தமிழ் பேசியது. இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா அனுப்பியுள்ள பதிலில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் ஊழியர்களின் நலனுக்கு பிரதான முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்துக்கான பணிச் சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ளதாக அதன் ஊடக தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள சாம்சங் இந்தியா நிர்வாகம், "நேர்மறையான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பணியிடச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளோம்" என்று மட்டும் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqqj4r5xzo
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 10:59 AM யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை (22) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215375
-
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு
பழைமைவாய்ந்த மன்னார் - புத்தளம் சாலையை மூடுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் - ரிஷாத் பதியுதீன் Published By: VISHNU 22 MAY, 2025 | 02:09 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் 100 வருடம் பழைமைவாய்ந்த மன்னார் புத்தளம் பாதையை மூடிவிடுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சட்டவிராேதமான நடவடிக்கையாகும். இந்த பாதை அம்பாந்தோட்டையிலோ வேறு பிரதேசங்களிலாே இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பாதைையை மூடிவிட உதவி செய்திருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் என் ஜனாதிபதியிடம் அனைத்து கட்சி மாநாட்டின்போது தெரிவித்திருந்தேன். இந்த முறையினால் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்போது பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரே தற்போது இதனை செய்ய முடியாது என தெரிவித்தார். பழைய முறையில் தேர்தலை நடத்த முடியுமான முறையில் திருத்தம் மேற்கொண்டு தேர்தலை நடத்தி இருந்தால், வெற்றிபெறும் கட்சிக்கு உள்ளூராட்சி சபையில் ஆட்சி செய்திருக்க முடிந்திருக்கும். அதேநேரம் பெரும்பான் இல்லாத சபைகளில் ஆட்சியமைக்க தற்போது பாரியளவில் உறுப்பினர்களுக்கு விலை பேசப்படுகிறது. கல்பிட்டியில் உள்ளூராட்சி சபை ஒன்றில் ஆட்சியமைக்க அரசாங்கத்தைச்சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சியில் ஒரு உறுப்பினருக்கு 25இலட்சம் ரூபா பேரம் பேசி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இது நல்லதல்ல. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாங்கள் அந்த மாற்றத்தை மேற்கொள்வோம். அத்துடன் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, பிரதமர் அந்த பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது தெரிவித்திருந்தார்கள். அந்த மக்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த பாதையை முற்றாக மூடிவிடுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக கேள்விப்பட்டேன். 15 வருடங்களுக்கு முன்னர் அந்த பாதையை நாங்கள் திறந்தவிட்டபோது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே நீதிமன்றம் சென்று அந்த வீதியை முடிவிட நடவடிக்கை எடுத்திருந்தது. பிரதேச செயலகமே இந்த வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பாதையை திறந்துவிட இவர்கள் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு வருவதற்கு கலந்துரையாடி வந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் ஒருதலைப்பட்சமாக நீீதிமன்றத்தில் தெரிவித்து, இந்த பாதையை முற்றாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஜனாதிபதி மன்னாருக்கு சென்று, இந்த பாதையை திறந்துவடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு வந்து ஒரு வாரத்துக்குள் நீதிமன்றம் இஇவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.இது பிழையான தீர்ப்பு. 100 வருடம் பழைமைவாந்த பாதை. இந்த வீதி குருணாகலையிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் மூடி இருப்பார்களா? சிறுபான்மை மக்கள் பயன்படுத்தும் வீதி என்றதாலே சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு உடன்பட்டு இந்த பாதையை முற்றாக மூடி இருக்கிறார்கள். அதனால் மக்களின் எதிர்பார்ப்பு முற்றாக வீணாகி இருக்கிறது. ஜனாதிபதியின், பிரதமரின் வாக்கு பொய் பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/215368
-
வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Published By: VISHNU 22 MAY, 2025 | 02:01 AM (நா.தனுஜா) பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். அதனையடுத்து அரசாங்கம் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை (23) மு.ப 11.00 - பி.ப 1.00 மணி வரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் இச்சந்திப்பில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் எத்தகைய காரணங்களை முன்வைத்தாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அரசாங்கத்துக்கு உண்மையிலேயே வட, கிழக்கிலுள்ள காணிகளை அபகரிக்கும் நோக்கம் இல்லை எனில், அவர்கள் மக்கள் முகங்கொடுத்துவரும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே விரும்புகிறார்கள் எனின், அதற்கென விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என இச்சந்திப்பின்போது தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215367
-
ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!
"கோல்டன் டோம்"- வான் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க புதிய திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி செய்திகள் 21 மே 2025 எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் "கோல்டன் டோம்" ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பை அமெரிக்கா தேர்வு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தமது பதவிக்காலம் முடியும் போது அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஜனவரியில், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்புக்கான தனது திட்டங்களை அறிவித்தார். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்ற "அதி நவீன" வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக, இந்த திட்டத்துக்கு 25 பில்லியன் டாலர் (18.7 பில்லியன் யூரோ) புதிய பட்ஜெட் மசோதாவில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் எதிர்காலத்தில், இதற்கான மொத்தச் செலவு இதைவிட கணிசமாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எதிரிகளிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களை எதிர்க்கும் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவார் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெனரல் குட்லின் தற்போது விண்வெளிப் படையில் விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராக உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஏழு நாட்களுக்குள், வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உதவும் ஒரு அமைப்புக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இது அமெரிக்கா எதிர்கொள்ளும் "மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களில் ஒன்று" என வெள்ளை மாளிகை தெரிவித்தது. செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், இந்த அமைப்பு நிலம், கடல் மற்றும் விண்வெளி முழுவதும் "அதி நவீன" தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். இதில் விண்வெளி அடிப்படையிலான சென்சார்கள் மற்றும் தடுப்புக் கருவிகளும் அடங்கும் என்றார். மேலும் இந்த அமைப்பில் சேர கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்,அப்போதைய கனட பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் வாஷிங்டனுக்கு பயணம் செய்தபோது, இந்த 'டோம்' திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வமாக இருப்பதாக கூறினார். அது "அர்த்தமுள்ளதாக" இருப்பதாகவும், "தேசிய நலனுக்காக" இருக்கும் என்றும் கூறிய அவர், "பிராந்தியத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கனடா அறிந்திருக்க வேண்டும்" என்றும், ஆர்க்டிக் பகுதிகளில் வரவிருக்கும் அச்சுறுத்தல்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த அமைப்பு "உலகின் மறுபக்கத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ அல்லது விண்வெளியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த அமைப்பு 2011 முதல் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை தடுக்கும் இஸ்ரேலின் இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கோல்டன் டோம் அதை விட பல மடங்கு பெரியது. ஒலியின் வேகத்தை கடந்து இயங்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் விண்வெளியிலிருந்து ஏவுகணை குண்டுகளை வீசக்கூடிய சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்புகள் (ஃபோப்ஸ் என அழைக்கப்படுவது) போன்ற பரவலான அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. "அவை அனைத்தும் வான்வெளியில் இருந்து அகற்றப்படும்," என்று கூறிய டிரம்ப், அதன் "வெற்றி விகிதம் 100% க்கு மிக அருகில் உள்ளது." என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன், அல்லது அவை வானில் பறக்கும் தருணத்தில் என பல்வேறு கட்டங்களில் அவற்றைத் தடுக்கும் திறனை அமெரிக்காவுக்கு அளிப்பதே, கோல்டன் டோம் அமைப்பின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். இந்த அமைப்பின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் ஒரே மைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று, இந்தத் திட்டத்திற்கு ஆரம்பகட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும், மொத்தமாக 175 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆரம்பகட்ட முதலீடான 25 பில்லியன் டாலர் என்பது, வரிகளுக்கான அவரது 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் மசோதாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் (Congressional Budget Office) தெரிவித்துள்ளபடி, அந்த அமைப்பில் விண்வெளி சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் 20 ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு 542 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கிய புதிய ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள் மேம்படவில்லை என்று பென்டகன்(அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை) அதிகாரிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். "உண்மையில், தற்போது முழுமையான அமைப்பு எதுவும் இல்லை," என்று டிரம்ப் செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் கூறினார். "சில வகையான ஏவுகணைகள், சில பாதுகாப்பு அமைப்புகள் மட்டும் தான் உள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பு எதுவும் இல்லை... இதுபோன்ற திட்டம் இதுவரை எப்போதும் இருந்ததில்லை," என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் "அளவிலும் , நுட்பத்திலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள "இடைவெளிகளை பயன்படுத்த" புதிய ஏவுகணை அமைப்புகளை தீவிரமாக வடிவமைத்து வருகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyrrd3j25eo
-
தமிழின அழிப்பு நினைவக நிர்மாணம் காலப்பெறுமதி மிக்க செயல் - கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு
Published By: VISHNU 22 MAY, 2025 | 01:58 AM கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த சிறிதரன், இச்சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு தமிழ்மக்கள் சார்பில் தனது நன்றியை வெளிப்படுத்தினார். அதேவேளை ஏற்கனவே கனேடிய பிரதமர் மற்றும் பிரம்டன் நகர மேயருக்கு நன்றியை வெளிப்படுத்தி கடந்த 19 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்த கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் நேரில் கையளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கைத்தீவின் அளவிற் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை 'இனப்படுகொலை' என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழினப் படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில்; திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவுசெய்கிறேன். ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும்; கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது. தங்கள்; மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பரிகார நீதியைக் கோரிநிற்கிற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில், 'இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே' என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதிகேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது. அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணைசெய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215366