Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. "என் சகோதரனை பிடித்து கொல்லுங்கள், எங்களை விட்டு விடுங்கள்" - பஹல்காமில் குற்றம் சாட்டப்பட்டோர் குடும்பத்தினரின் நிலை என்ன? படக்குறிப்பு,அடிலின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை ராணுவமும், காவல்துறையும் இடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். கட்டுரை தகவல் எழுதியவர், மஜித் ஜஹாங்கிர் பதவி, 28 ஏப்ரல் 2025 பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர். ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதுவரை குறைந்தது 10 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுடன் பிபிசி ஹிந்தி பேசியது. இந்தக் குடும்பங்களில் ஆதில் உசேன் தோக்கரின் குடும்பமும் அடங்கும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அனந்த்நாக் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் ஓவியங்களில் ஆதில் உசேன் தோக்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டை இடிக்கும் நடவடிக்கை குறித்து காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. விசாரணைக்காக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், ஆனால் இதுபோன்ற நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆதில் தோகரின் குடும்பத்தினர் கூறியது என்ன? படக்குறிப்பு,ஷாஜதா பானோ, ஆதில் தோக்கரின் தாய் ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு ராணுவமும் காவல்துறையும் தங்கள் வீட்டை அடைந்ததாக ஆதில் தோக்கரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். "ராணுவத்தினரும் காவல்துறையினரும் இரவு 12:30 மணி வரை இங்கு இருந்தனர். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை வெளியேறச் சொல்லிவிட்டு, வேறு வீட்டிற்கு அனுப்பினர்" என்று ஆதில் தோகரின் தாயார் ஷாஜாதா பானோ கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "இரவு 12.30 மணிக்கு ஒரு பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. வீட்டைச் சுற்றி இருந்த அனைவரும் 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அங்கிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டனர். சிலர் கடுகு வயல்களுக்குச் சென்றனர், சிலர் வேறு வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்" என்றார். "அப்போது எங்கள் வீட்டில் யாரும் இல்லை. எனது இரண்டு மகன்களையும், கணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை" என்றும் ஷாஜாதா பானோ கூறினார். மேலும், 2018 முதல் ஆதிலை காணவில்லை என்கிறார் ஷாஜதா பானோ. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு குஜராத்தில் 500க்கும் மேற்பட்டோர் பிடித்து வைக்கப்பட்டது ஏன்? - என்ன நடக்கிறது?28 ஏப்ரல் 2025 பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவமா அல்லது வேறு நடவடிக்கையா? இந்தியா அடுத்து என்ன செய்யும்?28 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி எப்படி இருக்கும்? இந்தியாவின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?27 ஏப்ரல் 2025 ஜாகிர் அகமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது படக்குறிப்பு,ஜாகிர் அகமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் மட்லஹாமா கிராமத்தில் உள்ள ஜாகிர் அகமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது. ஜாகிர் 2023 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும், அதன் பின்னர் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஜாகிரின் தந்தை குலாம் மொஹியுதீன் கூறுகையில், அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அதன் பிறகு காவல்துறையும் ராணுவமும் தனது மகன் ஒரு தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்ததாகவும் கூறுகிறார். "குண்டுவெடிப்பில் எங்கள் வீடு இடிந்து விழுந்தபோது, இரவு 2:30 மணி. குண்டுவெடிப்பு நடந்த அதே நேரத்தில் நாங்கள் மசூதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம்" என்கிறார் குலாம் மொஹியுதீன். "இதுவரை ஜாகீர் அகமது உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எங்களுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை. அவர் எங்களை ஒருபோதும் வந்து சந்திக்கவில்லை என்பது ராணுவத்திற்கும் , கிராம மக்களுக்கும் தெரியும்" என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய குலாம் , "எங்களுடைய பொருட்கள் அனைத்தும் வீட்டுக்குள் புதைந்து போயிருந்தன. எங்களால் எதையும் வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு சிறிய மகள் இருக்கிறாள், அவளை ஒரு ஃபெரான் போர்த்தி மூடினோம். இன்று நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே எங்களால் எடுத்துக்கொள்ள முடிந்தது. அன்று இரவு எங்கள் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது" என்கிறார். பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை இந்தியாவால் உண்மையில் தடுக்க முடியுமா?27 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் - என்ன கூறப்பட்டுள்ளது?27 ஏப்ரல் 2025 "இது போர் அறைகூவல்" சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை எச்சரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்26 ஏப்ரல் 2025 'நான் எனது சகோதரனை பல வருடங்களாக பார்க்கவில்லை' படக்குறிப்பு,ஜாகிர் அகமதுவின் சகோதரி ருகையா, தனக்கு நீதி மட்டுமே வேண்டும் என்றும், வேறு எதுவும் வேண்டாம் என்றும் கூறுகிறார். தனது சகோதரனை பல வருடங்களாகப் பார்க்கவில்லை என்று இதேபோன்ற கூற்றைத்தான் ஜாகிரின் சகோதரி ருகையாவும் கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், "எங்களைப் பொறுத்தவரை அவர் வீட்டை விட்டு வெளியேறிய தருணமே இறந்துவிட்டார். இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார். "நாங்கள் எங்கள் கண்களால் எதையும் பார்த்ததில்லை. இன்று எங்கள் குடும்பம் அதிகமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. எனது இரண்டு சகோதரர்களும் காவலில் உள்ளனர். எனது மாமாவின் ஒரே மகனும் சிறையில் உள்ளார்" என்று ருக்கையா கூறுகிறார். "ஜாகிருக்கு எங்களது குடும்பத்தினரின் ஆதரவு இல்லை. அவர் எங்கிருந்தாலும், அவரைப் பிடித்து கொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன். நாங்கள் கூப்பிய கைகளுடன் நீதி கோருகிறோம். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்று அவர் கூறினார். ராணுவம், காவல்துறை அல்லது ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் ஆகியவற்றால் இந்த நடவடிக்கைகளைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. சிந்து நதிநீரை இந்தியா உடனே நிறுத்த முடியுமா? - பாகிஸ்தான் அடையப்போகும் பாதிப்புகள் என்ன?26 ஏப்ரல் 2025 பஹல்காம் தாக்குதல்: மோதி அரசின் ஜம்மு - காஷ்மீர் கொள்கை தோல்வியா? - ஓர் அலசல்26 ஏப்ரல் 2025 பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?26 ஏப்ரல் 2025 இந்த நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகள் படக்குறிப்பு,பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். சிலர் இந்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் சட்ட நிபுணரான வழக்கறிஞர் ஹபில் இக்பால், இதுபோன்ற நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளை முழுமையாக மீறுகின்றன என்று கூறுகிறார். "இது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அவமதிக்கும் செயல். உண்மையில், வீடுகளை இடிக்கும் வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது" என்று அவர் நம்புகிறார். "அறிவிப்பு வழங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், பட்டப்பகலில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் இதனை கூட்டு தண்டனை என்று கூறியுள்ளது. இதுபோன்ற செயலை எந்த சட்டத்தின் கீழும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது" என்கிறார் ஹபில் இக்பால். தொடர்ந்து பேசிய அவர், "இது கூட்டு தண்டனை என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. குற்றவியல் சட்ட அமைப்பில், ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால், அவரது முழு குடும்பம் அல்லது வீட்டின் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார். "அரசியலமைப்பிற்கு எதிரான இவை அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. குற்றவியல் சட்டம், அரசியலமைப்பு, சர்வதேச தரநிலைகள் அல்லது சர்வதேச நாகரிக விதிகள் என உலகில் உள்ள எந்த சட்டத்தின் கீழும் இத்தகைய நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை." பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?25 ஏப்ரல் 2025 பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?25 ஏப்ரல் 2025 பஹல்காமில் சுடுவதற்கு முன்பு ஆயுததாரிகள் கேட்டது என்ன? கொல்லப்பட்டவர்களின் மனைவி, மகன் பேட்டி25 ஏப்ரல் 2025 மெஹபூபா முஃப்தி மற்றும் உமர் அப்துல்லா கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெஹபூபா முஃப்தி, அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முஃப்தி, சமூக ஊடக தளமான எக்ஸில் இந்த நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். "பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும், பயங்கரவாதிகளுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காட்ட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தக்கூடாது" என்று மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார். "ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளின் வீடுகளுடன், சாதாரண காஷ்மீர் மக்களின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று மெஹபூபா முப்தி பதிவிட்டுள்ளார். பொது மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தால், அது தீவிரவாதிகளின் நோக்கங்களை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "பஹல்காம் தீவிரரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான போராட்டம் அவசியம். காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்திற்கும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் எதிராக வெளிப்படையாகக் குரல் எழுப்பியுள்ளனர், இதை அவர்கள் தாங்களாகவே செய்துள்ளனர். இப்போது மக்களின் இந்த ஆதரவை வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அவர்களை தனிமைப்படுத்தும் எதையும் செய்யக்கூடாது." குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது கருணை காட்டக்கூடாது, ஆனால் அப்பாவி மக்கள் இதற்கு பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1egyn015leo
  2. பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதி பாதுகாப்பின்றி இருந்தது ஏன்? விடை கிடைக்காத 3 கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் உள்ள ராணுவ வீரர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரி பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு பல காணொளிகள் வெளியாகின. அதில் ஒரு வைரல் வீடியோவில் குஜராத்தை சேர்ந்த ஷீதல் கலாதியா இருந்தார். அவரது கணவரான சைலேஷ்பாய் கலாதியாவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் சிஆர் பாட்டில் அவருடைய குடும்பத்தைக் காண சூரத் சென்றார். அவர் முன்பு ஷீத்தல் கட்டுப்படுத்த முடியாமல் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். "உங்களுக்கு நிறைய விஐபி கார்கள் உள்ளன. வரி செலுத்தும் மக்களின் நிலை என்ன? அங்கு எந்த வீரர்களும் மருத்துவக் குழுவும் இல்லை" என்று ஷீதல் தெரிவித்தார். ஆங்கில நாளிதழான தி இந்து, இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த மகாராஷ்டிராவை சேர்ந்தவரான பராஸ் ஜெய்னிடம் பேசியது. இந்தத் தாக்குதல் 25-30 நிமிடங்கள் நீடித்ததாக அவர் தெரிவித்தார். அங்கு எந்த காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் பராஸ். இந்தத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் (சிஆர்பிஎஃப்) முகாம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபல்ஸ் பிரிவினரின் முகாம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சைலேஷ்பாய் கலாதியாவின் குடும்பத்தினரை மத்திய அமைச்சர் சிஆர் பாட்டில் சந்தித்தார். இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்தினரும் நாட்டு மக்களும் மீண்டு வருகின்ற நிலையில், மறுபுறம் இதுகுறித்துப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. தற்போது வரை இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை. அதில் மிக முக்கியமான கேள்வி, பஹல்காமின் மிகவும் பிரபல சுற்றுலாத் தளமாக இருக்கும் பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இருக்கவில்லை என்பதுதான். ஜம்மு காஷ்மீர் மற்றும் பாதுகாப்பு சார்ந்த வல்லுநர்களுடன் பேசி இந்தக் கேள்விகளுக்கு விடை காண பிபிசி முயன்றது. வல்லுநர்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வோம். பைசரனில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை? பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பிரபலமான சுற்றுலாத் தளத்தில் ஏன் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்கிற கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. பத்திரிகையாளரும் காஷ்மீர் விவகார வல்லுநரான அனுராதா பாசின், ஜம்மு காஷ்மீரில் எப்போதுமே கடுமையான ராணுவ வீரர்களின் இருப்பைப் பார்த்ததாக நினைவு கூர்கிறார். "கடந்த 1990களில் இருந்து பாதுகாப்பு இல்லாத எந்தப் பொது இடத்தையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. எல்லா இடங்களிலும் சில பாதுகாப்பு வீரர்கள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்க முடியும். எனவே இந்த இடத்தில் பாதுகாப்பு இருக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் பாசின். அவர் மேலும் சில கேள்விகளை எழுப்பினார். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் எவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் பொதுவெளிக்கு வந்தன? இது மட்டுமில்லை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மனதை ரணமாக்கும் புகைப்படங்கள் எவ்வாறு பொதுவெளிக்கு வந்தன? இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் பாகிஸ்தான் பாசத்துக்கு காரணம் என்ன?28 ஏப்ரல் 2025 "பாதுகாப்புப் படைகள் அங்கு வந்து சேர்வதற்கு நேரம் ஆனது. ஆனால் ஒரு சில மணிநேரங்களில் தாக்குதல் நடத்தியவரின் புகைப்படங்கள் அவர்களிடம் இருந்தன. எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்கள்? இந்த விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகத் தெரியவில்லை. இது போல விசாரணை மீது கேள்வி எழுப்பப்பட்ட பல சம்பவங்கள் இருக்கின்றன. எனக்குள்ள சில கேள்விகள் இவைதான்" என்கிறார் பாசின். கடந்த 2019ஆம் ஆண்டில் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும்கூட காஷ்மீரில் பெரிதாக இல்லையென்றாலும், இதுபோன்ற சம்பவங்கள், நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் பாசின். உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட ஓரிடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுதான் பல கேள்விகளையும் எழுப்புவதாகக் கூறுகிறார் பாசின். "கடந்த ஐந்து ஆண்டுகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆயுதப் போராட்டம் முடிந்ததாகச் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்கூட 'கட்டுப்படுத்தப்பட்ட' போன்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர். ஆயுதப் போராட்டத்தின் 'முடிவு' என்பது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. ஆயுதப் போராட்டம் முடிந்தது என்பது ஒரு விதமான அரசியல் பேச்சுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதி எதுவென்றாலும் அவை ராணுவக் கட்டுப்பாட்டின் மூலமே ஏற்பட்டுள்ளன" என்கிறார் அனுராதா பாசின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் அமிதாப் மட்டூ சர்வதேச மோதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வல்லுநரும்கூட. பாசினின் கேள்விக்குப் பதிலளிக்கையில், "கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான சுற்றுலாத் தளங்களில் கடுமையான அளவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கும் போக்கு உள்ளது" என்றார் அமிதாப். மேலும் அவர், "இந்த யுக்தி திறம்பட இருந்தது, ஆனால் மிகவும் வெளிப்படையாக இல்லை. என்ன இருந்தாலும் இது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறு" என்றார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்பி வெய்த் பிபிசியிடம் பேசியபோது, "சுற்றுலாப் பயணிகள் தொலைதூரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் காவல்துறையினர் அங்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்" என்றார். அங்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்திருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டார். "காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினர் அங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் இருந்திருந்தால் தீவிரவாதிகளைச் சமாளித்திருப்பார்கள். அதேநேரம் காவல்துறையினர் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதும் உண்மைதான். வளங்களும் குறைவாக உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகள் தொலைவில் இருக்கும் ஓரிடத்திற்குச் செல்கிறார்கள் என்றால் நிச்சயம் அங்கு காவல்துறையினர் இருந்திருக்க வேண்டும்" என்றார். ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலான சதிஷ் துவா நீண்ட காலம் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்துள்ளார். "அனைத்து உட்புறப் பகுதிகளிலும் ராணுவம் மற்றும் தேசிய ரைஃபல்ஸ் இருக்க முடியாது. அவர்கள் தீவிரவாதிகளைச் சமாளிக்க எல்லைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையைப் பற்றிப் பார்க்கும்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு 120 கிலோமீட்டர் நீளமும் 38 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. எல்லா இடங்களிலும் காவல்துறையினரை பணியில் வைப்பது சாத்தியம் இல்லை" என்றார். பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் உண்மை நிலையை அம்பலப்படுத்தி உள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை "மன்னிப்பு கேட்க வார்த்தை இல்லை" - ஜம்மு காஷ்மீர் முதல்வர் "என் சகோதரனை பிடித்து கொல்லுங்கள், எங்களை விட்டு விடுங்கள்" - பஹல்காமில் குற்றம் சாட்டப்பட்டோர் குடும்பத்தினரின் நிலை என்ன? பொதுமக்கள் ஏன் குறிவைக்கப்பட்டார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள். பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் எழுகின்றன. வேறு எந்தத் தாக்குதலிலும் இல்லாத ஒரு முறையை இப்போது தீவிரவாதிகள் பின்பற்றியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையினரோ ராணுவ வீரர்களோ அல்லாமல் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீரிலோ அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலோ இவ்வளவு பெரிய அளவில் பொது மக்கள் குறிவைக்கப்படும் சம்பவம், நீண்ட காலம் கழித்து முதல் முறையாக நிகழ்கிறது. ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதிஷ் துவா இதை விவரமாக விளக்குகிறார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமை முன்னேறியுள்ளது மற்றும் ஒரு நேர்மறையான மாற்றம் உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். சுற்றுலாத் துறையும் மிக வேகமாக வளரத் தொடங்கியது. தீவிரவாதிகள் எப்போதும் சுற்றுலாத் தலங்களைக் குறிவைக்க மாட்டார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இதுதான் உண்மை. ஏனென்றால் தீவிரவாதிகள் அவ்வாறு செய்தால் உள்ளூர் காஷ்மீரிகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைப்பார்கள். அவர்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களின் ஆதரவை முடித்துவிடும். இதனால்தான் உள்ளூர் பகுதிகளில் தீவிரவாதிகள் பொது மக்களைக் குறிவைக்க மாட்டார்கள் என்கிற புரிதல் நமக்கு உள்ளது" என்கிறார் துவா. "நான் படைத் தளபதியாக இருந்தபோது காஷ்மீருக்கு சுற்றுலா வரலாமா என என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களிடன் கண்டிப்பாக வாருங்கள். நீங்கள் தால் ஏரிக்கு அருகில் அமரலாம் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம். ஏனென்றால் இந்த இடங்களில் எந்தத் தாக்குதல்களும் இல்லை என்றுதான் எப்போதும் கூறுவேன்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சஞ்சய் லேலேவின் குடும்பத்தினர் இந்தத் தாக்குதலில் பொதுமக்களைக் குறிவைத்தற்கான காரணம் தொடர்பான கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் அமிதாப் மட்டூ. "ஏன் தீவிரவாதக் குழுக்கள் பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்கினார்கள்? முன்னர் அவர்கள் ராணுவ நிலையங்களைத்தான் குறிவைப்பார்கள். இந்த முறை காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இது இயல்புநிலை என்கிற எண்ணத்தை நிராகரிக்கும் வழியா?" என்கிறார். மேலும் அவர், "முன்னர் ராணுவ இலக்குகள் மற்றும் உள்ளூர் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குகள் இடையே வேறுபடுத்துவதுதான் உத்தியாக இருந்தது. இப்போது அந்த வேறுபாடு மறைந்துள்ளது. அது தவிர இந்த முறை அவர்கள் இந்துக்களை குறிவைத்துள்ளனர்" என்றார். நாடு முழுவதும் உணர்வுகளைத் தூண்ட வேண்டும் என்பதும் பொது மக்களைக் குறிவைத்ததற்கான ஒரு காரணம் என துவா நம்புகிறார். "தீவிரவாதிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் இந்து ஆண்களை தனிமைப்படுத்திக் கொன்றுள்ளனர். இதன் நோக்கம், பெண்கள் அவர்களின் ஊர்களுக்குச் சென்று இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான். பெண்களின் அழுகுரலுக்கு அனைத்து இடங்களிலும் தாக்கம் உண்டு. இதன் மூலம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உணர்வுகளைத் தூண்டலாம். நாம் இந்த வலையில் விழமாட்டோம் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும்" என்கிறார் துவா. அவரைப் பொறுத்தவரை, இது 2023ஆம் ஆண்டில் நடந்த ஹமாஸ் தாக்குதலைப் போன்றதுதான். "அவர்கள் இஸ்ரேலின் நோவா இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் செய்ததைப் போன்ற வழிமுறையைத் தேர்வு செய்துள்ளார்கள். பாதுகாப்புப் படையினரைக் கொல்வதைவிட அப்பாவி மக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் கொல்வது மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே காரணம்" என்றார். முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?9 மணி நேரங்களுக்கு முன்னர் இது உளவுத் துறையின் தோல்வியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காம் தாக்குதலில் எல்லை கடந்த தொடர்பு இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றித் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறார் அமிதாப் மட்டூ. அதேவேளையில், இது உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியா என்கிற கேள்வியும் எழுகிறது. "பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகள் இடையே எவ்வளவு உடன்பாடு இருக்கிறது எனத் தெரியவில்லை. ராணுவம், ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தைபா போன்ற அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியுமா? இதில் பாகிஸ்தானின் ஈடுபாடு பற்றிச் சிறிதளவுகூட நான் சந்தேகிக்கவில்லை." என்றார். "இது உளவுத்துறையின் தோல்வி. நமக்கு ஏன் இந்தத் தாக்குதலை ஊகித்து முறியடிக்கக்கூடிய எந்த மின்னணுத் தகவலும் கிடைக்கவில்லை?" என்கிறார் மட்டூ. உளவுத்துறை தோல்வி என்பது ஒரு மிகப்பெரிய தவறு என நம்புகிறார் சதிஷ் துவா. "நாம் எதையாவது சிறப்பாகச் செய்திருக்க முடியுமா? ஆம். நான் எந்தத் தவறுகளுமே இல்லை எனச் சொல்லவில்லை. நாம் சிறப்பாக உளவுத் தகவல்களைச் சேகரித்திருக்கலாம். இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிப் பேசியிருந்தார். இந்தச் சமிக்ஞையை நாம் புரிந்திருக்க வேண்டும். எந்த பெரிய தீவிரவாதத் தாக்குதலுக்கும் மேலிடத்தில்தான் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். எனவே இந்த மாதிரியான விஷயங்கள் மீது நாம் கவனமுடன் இருந்திருக்க வேண்டும். நாம் களத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும்." என்கிறார் துவா. மேலும் அவர், "இந்த நாடு மனித உளவுக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நாம் தற்போது மின்னணு உளவு அமைப்பை அதிகம் சார்ந்திருக்கிறோம். இது இரண்டும் சேர்ந்த சிறந்த அமைப்பாக இருக்க வேண்டும்" என்றார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கையில் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு எல்லை கடந்து தொடர்பு இருப்பதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இது மட்டுமில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் அட்டாரி எல்லையை மூடியது, விசாக்களை ரத்து செய்தது மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும் அடங்கும். பல பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1exxldyxo
  3. 29 APR, 2025 | 12:53 PM மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, படுகாயமடைந்த பெண் பல் வைத்தியரின் மகன் கடை ஒன்றிலிருந்து சீன வெடிகளை வாங்கி வீட்டில் உள்ள மேசையின் மேல் வைத்துள்ளார். இது தொடர்பில் அறிந்திருக்காத பெண் பல் வைத்தியர் மேசையின் மேல் இருந்த சீன வெடியை எடுத்து கடித்து பார்த்த போது அது திடீரென வெடித்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த பெண் பல் வைத்தியர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண் பல் வைத்தியரின் வாய் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/213243
  4. கனடா தேர்தல் - வெற்றிபெற்றது லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கின்றது 29 APR, 2025 | 10:55 AM கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213229
  5. ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸில் நீண்ட நேர மின்தடை : வான், தரை வழிப் போக்குவரத்துகள், இணையம் முடக்கம் ! 28 APR, 2025 | 08:53 PM ஸ்பெயின் தேசம் முழுவதும், போர்த்துக்கல்லின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வரலாறு காணாத மின்தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள் உள்ளாகியுள்ளனர். இதனால் வான் வழிப் போக்குவரத்து, தரை வழிப்போக்குவரத்து, இணைய வசதிகள், தொலைபேசிச் சேவைகள் ஆகியன முடங்கியுள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் தலைநகரங்களிலும் அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியிருப்பதைப் பார்க்கும் மக்கள், எப்போது மின் விநியோகம் சீராகும் என்பது தெரியாமல் தவிப்பதாகவும், இதுபோன்றதொரு மோசமான மின் தடையை சந்தித்ததேயில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர். மின்சாரத் துறையில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உடனடியாக நிலைமையை சீர் செய்யும் பணியில் பல்வேறு துறைசார் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை வரலாறு காணாத வகையில் ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல்லில் ஏற்பட்டிருக்கும் மின் தடையால் 50 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பார்சிலோனாவில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில், சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருக்கும் ரயில்களில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பல மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருப்பதும், கூட்டமாக இருக்கும் கடைகளில் ஆளில்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஞைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசி கோபுரங்கள் இயங்காததால் கையடக்கத்தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இருண்ட கடைகளுக்குள் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஜெனரேட்டர்களின் உதவியோடு வைத்தியசாலைகளில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கணினிகள் செயழிழந்துள்ளதால் மருந்துகங்கள் செயலற்றுக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/213199
  6. வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகம், தான் சந்தித்த முதல் பந்திலேயே சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர், முதல் ஆட்டத்தில் சேர்த்த 34 ரன்களில் 26 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளாக சேர்த்து ஆட்டமிழந்தபோது கண்ணீருடன் பெவிலியன் நோக்கிச் சென்றார் அந்தச் சிறுவன். ஆனால் நேற்று (ஏப்ரல் 28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டு ஆட்டமிழந்தபோது, எதிரணி வீரர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) அனைவரும் கை கொடுத்து, தலையிலும், தோளிலும் தட்டிக் கொடுத்து வழியனுப்பினர். அரங்கமே எழுந்து நின்று கரகோஷத்தோடு அந்தச் சிறுவனுக்கு வரவேற்பு கொடுத்தது. 13 வயதில் ஐபிஎல் அறிமுகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு போட்டி போட்டு வாங்கப்பட்ட சூர்யவன்ஷிக்கு அடிப்படை விலையாக ரூ.35 லட்சம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரின் பேட்டிங் திறமையைப் பார்த்து டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் போட்டியிட்டபோது ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த வருடம் துபையில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது. ஆனால், 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு இப்படியொரு அபாரமான பேட்டிங் திறமை ஒளிந்திருப்பதைக் கண்டறிந்து அவரைக் காத்திருந்து தூக்கியது ராஜஸ்தான் அணி. உலக கிரிக்கெட்டின் கவனம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்தான். ஜெய்ஸ்வாலுடன் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தபோதே ஏறக்குறைய ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிட்டு 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 265 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யவன்ஷி பேட் செய்தார். சூர்யவன்ஷி நேற்றைய ஒரே ஆட்டத்தில் உலக கிரிக்கெட்டின் கவனத்தைத் தன்மீது குவியச் செய்துவிட்டார். உலகளவில் விளையாடப்படும் டி20 லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதில் 14 வயது சிறுவன் 35 பந்துகளில் அடித்த சதம் உலக கிரிக்கெட்டை ஈர்த்துள்ளது. ஐபிஎல்லில் இது பழிவாங்கும் வாரம் - ராகுலின் காந்தாரா கொண்டாட்டத்தை கிண்டல் செய்த விராட் கோலி28 ஏப்ரல் 2025 சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?26 ஏப்ரல் 2025 வின்டேஜ் நினைவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார் சர்வதேச அளவில் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள இஷாந்த் ஷர்மா ஓவரில் 28 ரன்கள், ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் (நேற்றுதான் அறிமுகமானார்) ஓவரில் 30 ரன்கள் மற்றும் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ரஷித் கான் ஓவரில் பெரிய சிக்ஸரை விளாசித்தான் சூர்யவன்ஷி சதத்தையே எட்டினார். குஜராத் அணியின் 7 சர்வதேச பந்துவீச்சாளர்களையும் சூர்யவன்ஷி ஓடவிட்டு அவருக்கு யார் பந்துவீசுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தினார். வின்டேஜ் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் பேட்டிங்கை பார்த்த நினைவுகளும், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிரின் பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் வெளுத்த நினைவுகளும் நேற்று சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 தொடரிலும் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார். சூர்யவன்ஷியின் சாதனைகள் உலக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் 14 வயது 32 நாட்களில், 35 பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் விஜய் ஜோல் (18 வயது, 118 நாட்கள்) வைத்திருந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார். ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதையும் அவர் தற்போது முறியடித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வகையில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்ததாக 35 பந்துகளில் சதம் அடித்த 2வது வீரராக சூர்யவன்ஷி இடம் பெற்றார். டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் ஆப்கன் வீரர் முகமது நபியின் மகன் ஹசன் இஷகில் 15 வயது 360 நாட்களில் அரைசதம் அடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய தமிழக வீரர் முரளி விஜயின் சாதனையைச் சமன் செய்தார். சூர்யவன்ஷி நேற்று அடித்த சதத்தில் 93 சதவீத ரன்கள் பவுண்டரி, சிக்ஸர் மூலமே கிடைத்தன. ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 4வது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். இளம் வயதில் சதம் அடித்தவர்களில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்), ரிஷப் பந்த் (20 வயது 218 நாட்கள்), தேவ்தத் படிக்கல் (20 வயது 289 நாட்கள்) இவர்கள் வரிசையில் சூர்யவன்ஷி உள்ளார். சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்25 ஏப்ரல் 2025 ஃபார்முக்கு வந்த ரோஹித், உருக்குலைந்த சன்ரைசர்ஸ் - இஷான் கிஷன் அவுட் ஆகாமலே வெளியேறியது ஏன்?24 ஏப்ரல் 2025 யார் இந்த சூர்யவன்ஷி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் வைபவ் சூர்யவன்ஷி. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர். சஞ்சீவ் சூர்யவன்ஷி பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "சூர்யவன்ஷி என் மகன் மட்டுமல்ல, பிகார் மாநிலத்தின் மகன். என் மகன் கடினமான உழைப்பாளி, 8 வயதிலேயே கிரிக்கெட் மீது தீவிரமாக இருந்தார். எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வானார். 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் ஆடினார். என் மகனின் கனவை நனவாக்க என் நிலத்தையே விற்றேன்" என்று தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தால் அமெரிக்கா யாரை ஆதரிக்கும்?5 மணி நேரங்களுக்கு முன்னர் எல்க் மான்களின் வலசைப் பயணம் - இயற்கை அதிசயத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பும் சுவீடன்6 மணி நேரங்களுக்கு முன்னர் விவிஎஸ் லட்சுமண், திராவிட் பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது' கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பிகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார். வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ரன்களை விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். இந்தத் தொடர்தான் சூர்யவன்ஷியை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தத் தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துப் போனார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோர் 4 நாட்கள் ஆட்டத்தில் 58 பந்துகளில் சூர்யவன்ஷி அடித்த சதம், ராஜஸ்தான் அணியைக் காந்தம் போல் ஈர்த்தது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு சூர்யவன்ஷியை எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இறங்கி, இவரை வாங்கியது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டிடம் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைக் கூறி அவரை ஏலத்தில் எடுக்கக் கோரியது விவிஎஸ் லட்சுமண்தான். சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்த பிறகு ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் கூறுகையில், "நாக்பூரில் உள்ள எங்கள் உயர் பயிற்சி மையத்துக்கு சூர்யவன்ஷியை அனுப்புகிறோம். அங்கு எங்களுடைய பயிற்சி அவரை மேலும் சிறப்பாக்கும். சூர்யவன்ஷி அற்புதமான திறமை கொண்டவர், அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, ஐபிஎல் விளையாட நம்பிக்கையளிக்க வேண்டும். வரும் மாதங்களில் சூர்யவன்ஷிக்கு தீவிரமான பயிற்சியளிப்போம். அவரது திறமையை மெருகேற்றுவோம். எங்கள் அணிக்கு சூர்யவன்ஷி வந்தது உற்சாகமளிக்கிறது" எனத் தெரிவித்தார். சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?28 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்?24 ஏப்ரல் 2025 விவிஎஸ் லட்சமணின் பரிந்துரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார் வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் விளையாடியபோது அவரது ஆட்டத்தைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துவிட்டார். அவர்தான் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் திராவிட்டிடம் கூறி ஏலத்தில் சூர்யவன்ஷியை எடுக்குமாறு பரிந்துரைத்தார். முதல் ஆட்டத்தில் 36 ரன்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வந்தபோது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினார். இதைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண், சூர்யவன்ஷியியிடம் சென்று அழுகையைத் தேற்றிவிட்டு, இங்கு யாரும் உன்னுடைய ரன்களை பார்க்கவில்லை, நீண்டகாலத்திற்கு விளையாடக்கூடிய ஒரு வீரரின் திறமையைப் பார்க்கிறார்கள் என்றார்" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "சூர்யவன்ஷியின் திறமையை விரைவாக லட்சுமண் புரிந்துகொண்டார், பிசிசிஐ அமைப்பும் சூர்யவன்ஷிக்கு ஆதரவு அளித்தது. சூர்யவன்ஷியின் தந்தை ஒரு விவசாயி. மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக தினமும் என் பயிற்சி மையத்துக்கு அழைத்து வருவார். காலை 7.30 மணிக்கு பயிற்சியைத் தொடங்கும் வைபவ், மாலை வரை தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடுவார். கடந்த 4 ஆண்டுகளாக சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சூர்யவன்ஷியின் எதிர்காலத்துக்காக பெற்றோர் அதிக தியாகம் செய்துள்ளனர். சூர்யவன்ஷியின் தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரித்துக் கொடுத்த அனுப்புவார். எங்கு போட்டி நடந்தாலும் சூர்யவன்ஷியுடன் அவரின் தந்தையும் வருவார். சூர்யவன்ஷி தந்தையும் கிரிக்கெட் விளையாட விரும்பினார். அவரின் காலத்தில் குடும்பச் சூழலால் முடியவில்லை, தனது கனவை மகன் மூலம் நிறைவேற்றினார்" என்று கூறினார். அமைச்சரவை மாற்றம்: அரசியல் நெருக்கடியா? தேர்தல் வியூகமா?28 ஏப்ரல் 2025 கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்28 ஏப்ரல் 2025 'சூர்யவன்ஷியை ஒரு கட்டத்தில் மறுத்த பிசிசிஐ' பட மூலாதாரம்,GETTY IMAGES "பிகார் மாநிலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்குச் சரியான ஆதரவு இருக்காது என்பது தெரியும். இதனால் பிசிசிஐ அமைப்பும் ஒரு கட்டத்தில் இவரைக் கவனிக்க மறந்துவிட்டது, சூர்யவன்ஷிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா. "இதனால் உடனடியாக சூர்யவன்ஷியை வேறு மாநிலத்துக்கு விளையாட வைக்க முடிவு செய்தேன். பல மாநிலங்களில் ரஞ்சி அணியை அணுகி சூர்யவன்ஷிக்காக வாய்ப்பு தேடினேன். வேறு மாநிலத்துக்காக சூர்யவன்ஷி ஆடினால் நிச்சயம் பார்க்கப்படுவார், வளர்க்கப்படுவார், ஆதரவு கிடைக்கும் என நம்பினேன். ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது. சிறப்பான பயிற்சியை திராவிட் அளித்து வருகிறார். சக வீரர்களும் சூர்யவன்ஷியை உற்சாகப்படுத்துகிறார்கள். நிச்சயமாக சூர்யவன்ஷிக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். விவிஎஸ் லட்சமணுடன் சந்திப்பு, ராகுல் திராவிட் பயிற்சி சூர்யவன்ஷிக்கு பெரிய எதிர்காலத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார். தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?22 ஏப்ரல் 2025 அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சிஎஸ்கே-வின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் – மே 1 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சிஎஸ்கே நாள் – மே 3 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்) விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்) நீலத் தொப்பி ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy8ed10jrymo
  7. கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், கனடா மத்திய வங்கி முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 24வது பிரதமராகப் பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நடத்தத் திட்டமிட்டு கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் பொய்லிவ்ரே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தம் 343 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 172 இடங்களில் வெற்றி வாகை சூடுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள். https://thinakkural.lk/article/317381
  8. 28 APR, 2025 | 04:50 PM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. “காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில் “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற ‘போராளி தாக்குதலை’ தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ள மத்திய அரசு பிபிசியின் செய்தி அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பஹல்காம் பயங்கரவாதிகளை “போராளிகள்” என்று தங்கள் செய்தி அறிக்கையில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்திருந்தது. இதனை அமெரிக்க செனட் குழு கடுமையாக விமர்சித்தது. தாக்குதல் நடத்தியவர்களை ‘போராளிகள்’ மற்றும் ‘ஆயுதம் ஏந்தியவர்கள்’ என்று அழைப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்ய முயல்வதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழு விமர்சித்தது. மேலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக உள்ளது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி இஸ்ரேலாக இருந்தாலும் சரி பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து வேறுபடுகிறது என்று அந்தக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது. முன்னதாக உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் யூடியூப் சேனல் 3.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டது. அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213163
  9. ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செல்போன் டவர்கள் இயங்காததால் செல்போனிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இருண்ட கடைகளுக்குள் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைத்தொடர்புகளும் பாதிப்புக்குள்ளாகின. மேலும், விமானச் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. மாட்ரிட் மற்றும் லிஸ்பனின் மெட்ரோ அமைப்புகளில் பல பயணிகள் சிக்கித் தவித்தனர். நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளில் ரயில்கள் சிக்கிக்கொண்டன என்று யூரோநியூஸ் போர்ச்சுகல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரெட் எலக்ட்ரிகா, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பெரிய மின்தடைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிரான்சில், மின் இணைப்பு வழங்கல் நிறுவனம் (RTE), ஒரு சிறிய தடை ஏற்பட்டதாகவும், ஆனால் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317374
  10. கனடா தேர்தல்; வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை வாழ்த்து 29 APR, 2025 | 12:02 PM கனடா தேர்தல் - வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது- 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மக்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய அரசு உறுதியுடன் செயற்படும் என நாம் நம்புகின்றோம். இத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கனடிய உறுப்பினர்களுக்கும்இ கனடிய தமிழர் பேரவை பெருமிதத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் சட்ட ஆலோசகரான கெளரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் மீண்டும் தெரிவாகி உள்ளார். கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இதனுடன் கெளரவ அனீட்டா ஆனந்த் அவர்களும் மீண்டும் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றிகள் தமிழ் கனடிய சமுதாயத்தின் அரசியல் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை தெளிவாக பிரதிபலிக்கின்றன. அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாக செயல்படும் கனடிய தமிழர் பேரவை புதிய அரசுடன் இணைந்து அனைத்து கனடியர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தும் பணிகளிலும் செயற்பட தயாராக இருக்கின்றது. புதிய அரசு மக்கள் விருப்பங்களை மதித்து ஒற்றுமை சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்குமென நாங்கள் நம்புகின்றோம். அதேபோல் நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை திறமையாக சமாளித்து கனடாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி அனைத்து கனடியர்களுக்கும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம். கனடிய தமிழர் பேரவை புதிய அரசின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து உறுதியாகக் கைகோர்க்கும். https://www.virakesari.lk/article/213235
  11. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை திறந்துவைத்து பின் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் செயற்பாடுகளை தடுப்பதாகவும் அலுவலக செயற்பாடுகள், வெளிப்படுத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய, மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவும். குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதற்கு ஸ்தாபிக்கபட்டுள்ளது. அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வினைத்திறனாக செயல்பட அனைவரது ஒத்துழைப்பும் தேவை என தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317369
  12. சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக இளம் வயதில் சதம் குவித்து சாதனை படைத்தார் 'குட்டிப் பையன்' வைபவ் Published By: VISHNU 29 APR, 2025 | 01:47 AM (நெவில் அன்தனி) ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸின் சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ஆடவர் ரி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் சூரியவன்ஷி நிலைநாட்ட, ராஜஸ்தான் றோயல்ஸ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. தனது மூன்றாவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி, எதிரணிக்காக பந்துவீசிய மொஹமத் சிராஜ், வொஷிங்டன் சுந்தர், ராஷித் கான், கரிம் ஜனத் ஆகிய சர்வதேச பந்துவீச்சாளர்களை சுழற்றி, சுழற்றி அடித்து சதம் குவித்தார். 17 பந்துகளில் அரைச் சதம் குவித்ததன் மூலமும் 35 பந்துகளில் சதம் குவித்ததன் மூலமும் ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிக இளம் வயதில் வேகமாக அரைச் சதத்தையும் சதத்தையும் குவித்தவர் என்ற சாதனைகளை வைபவ் நிலைநாட்டினார். அப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. குஜராத் டைட்டன்ஸின் மோசமான பந்துவீச்சும் மோசமான களத்தடுப்பும் அதன் தோல்விக்கு காரணமாகின. சாதனை வீரர் வைபவ் சூரியவன்ஷி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 71 பந்துகளில் 166 ஓட்டங்களைப் பகிர்ந்து மிகவும் பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். 38 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூரியவன்ஷி 7 பவுண்டறிகள், 11 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து நிட்டிஷ் ரானா 4 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ரியான் பரக் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய உதவினர். யஷஸ்வி ஜய்ஸ்வால் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 70 ஓட்டங்களுடனும் ரியான் பரக் 15 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது. சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 62 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சாய் சுதர்சன் 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். ஷுப்மான் கில் 50 பந்துகளில் 84 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், அவர்களது முயற்சிகள் அனைத்தும் இறுதியில் வீண் போயின. ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி https://www.virakesari.lk/article/213206
  13. மன்னாரில் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு; மக்கள் சந்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் Published By: VISHNU 29 APR, 2025 | 02:03 AM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213207
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம். இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 'அச்சமற்ற அணுகுமுறை' சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிக்ஸர் மூலம் சதத்தை எட்டும் காணொளியைப் பகிர்ந்து, "வைபவின் அற்புதமான இன்னிங்ஸிற்கு, அவரது அச்சமற்ற அணுகுமுறை, பேட்டிங் வேகம், பந்தைக் கணிக்கும் திறன், அந்தப் பந்தின் சக்தியைத் தனக்குச் சாதகமாக மாற்றுவது ஆகியவையே காரணம். சிறப்பான ஆட்டம்" எனப் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங் தனது எக்ஸ் பதிவில், "14 வயதில் இப்படி விளையாடுவதை நம்ப முடியவில்லை. இந்தச் சிறுவன் கண்ணிமைக்காமல், உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறான். வைபவ் சூர்யவன்ஷி. இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள், அச்சமற்ற மனப்பான்மையுடன் விளையாடுகிறான். அடுத்த தலைமுறை பிரகாசிப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்," என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், "14 வயதில், பெரும்பாலான பிள்ளைகள் ஐஸ்கிரீம் குறித்துக் கனவு கண்டு சாப்பிடுகிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் மிக அற்புதமான ஒரு சதத்தை விளாசினார். அவரது வயதுக்கு அப்பாற்பட்ட அமைதி, நிதானம் மற்றும் தைரியம். ஒரு நட்சத்திரத்தின் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இதோ..." என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல்லில் இது பழிவாங்கும் வாரம் - ராகுலின் காந்தாரா கொண்டாட்டத்தை கிண்டல் செய்த விராட் கோலி28 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார். இதைத் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அதுவும் நான் செய்தது போலவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சதமடித்தது இன்னும் சிறப்பு," என்று பாராட்டியுள்ளார். மேலும், "இந்த அணியில் இணையும் இளைஞர்களிடம் ஏதோ 'மேஜிக்' உள்ளது. நீ இன்னும் அடைய வேண்டிய உயரங்கள் அதிகம், சாம்பியன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி, "வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அற்புதமான திறமை. வெறும் 14 வயதில் சதம் அடிப்பது நம்ப முடியாதது. தொடர்ந்து சாதனைகளைக் குவிக்க வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தொடர் தோல்வி – சொதப்பிய அணி மீது தோனியின் கடும் அதிருப்தி என்ன?26 ஏப்ரல் 2025 சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட்25 ஏப்ரல் 2025 'இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் காணொளியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "உன் ஆட்டம் என்னை நிச்சயமாக 'என்டர்டைன்' (Entertain) செய்தது" எனப் பதிவிட்டுள்ளார். ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தளத்திற்குப் பேட்டியளித்த அவர், "இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன. குறிப்பாக இதேபோன்ற ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் அவர் மீண்டும் வெளிப்படுத்தத் தவறினால் சவால்கள் இருக்கும். எனவே தோல்வியைச் சமாளிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். தோல்வியைச் சமாளிப்பதில், நான் பார்த்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் பிரையன் லாரா. நாங்கள் 14 அல்லது 15 வயதிலிருந்தே ஒன்றாக விளையாடினோம். லாரா, எப்போதும் தோல்வி தன்னைப் பாதிக்காதவாறு செயல்படுவார். இன்னும் சிறப்பான ஒன்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருக்கும். இதை அவர் லாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், "அவர் எட்டிய இந்த நம்ப முடியாத உயரத்தைத் தக்க வைக்க, மேன்மேலும் முன்னேறுவதை உறுதி செய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவரைச் சுற்றி சரியான நபர்களை வைத்துக் கொள்வதும் மிக முக்கியமானது" என்று இயன் பிஷப் அறிவுறுத்தியுள்ளார். உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை இரட்டையர்களுக்கு ஒன்றுபோல வருமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?28 ஏப்ரல் 2025 'பாகிஸ்தானில் இப்படி செய்திருந்தால்..?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி வைபவ் சூர்யவன்ஷி, 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகமானார். ஏப்ரல் 19 அன்று லக்னௌ அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே, சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்தப் போட்டியில் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை விராத் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். "அவர் (வைபவ் சூர்யவன்ஷி) விராட் கோலியை போல 20 ஆண்டுகள் ஐபிஎல் விளையாடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். கோலி 18 வயதில் ஐபிஎல் விளையாடத் தொடங்கி 18 சீசன்களில் விளையாடியுள்ளார். அவர் அடித்த ஆயிரக்கணக்கான ரன்கள், சதங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். அதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பிறகு நீங்கள் ஒரு நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று நினைத்தால், வரும் ஆண்டுகளில் உங்களை நாங்கள் பார்க்க முடியாமல் போகலாம்" என்று சேவாக் தெரிவித்திருந்தார். அதேபோல முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலியும், சூரியவன்ஷியின் துணிச்சலான அணுகுமுறையைப் பாராட்டி சில நாட்களுக்கு முன்பாகக் கருத்து தெரிவித்திருந்தார். "வைபவ் சூரியவன்ஷி என்ற14 வயது சிறுவன், முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த விதம் ஒரு மிகப்பெரிய விஷயம். பாகிஸ்தானில், ஒரு வீரர் முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று அவுட்டாகி வெளியேறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? பாகிஸ்தான் மக்கள் அவரை அணியிலிருந்து தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் சூரியவன்ஷியை போலத்தான் நம்பிக்கை விதைக்கப்படுகிறது, அது பின்னர் பலனளிக்கிறது" என்று கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg955y94zxo
  15. "உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த எவ்பிஐயின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் டிரம்ப் சீற்றமடைவார்; மேலும் வரிகளை விதிப்பார்" - ரணில் 29 APR, 2025 | 11:47 AM உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த எவ்பிஐயின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். எவ்பிஐயின் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமே என தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இலங்கை வேறுவிதமான கதைகளை ஊக்குவிப்பது டிரம்பிற்கு சீற்றத்தினை ஏற்படுத்தும் அவர் மேலும் வரிகளை விதிப்பார்,உக்ரைனின் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக நடந்துகொண்டது போல இலங்கைக்கு எதிராக நடந்துகொள்ளலாம் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடைபெற்ற பின்னர் அவ்வேளை அமெரிக்க ஜனாதிபதியாகயிருந்த டிரம்ப் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசினார் எவ்பிஐயின் உதவியை வழங்கினார் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நான் அமெரிக்க தூதுவரை தொடர்புகொண்ட தருணத்தில் ஏற்கனவே எவ்பிஐ குழுவொன்று இலங்கை வந்திருந்தது,அதன் பின்னர் ஜனாதிபதி டிரம்ப் என்னுடன் பேசவிரும்புகின்றார் என தெரிவித்தார்கள்,நாங்கள் தொலைபேசி மூலம் உரையாடினோம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வேளை ஜனாதிபதி டிரம்ப் எவ்பிஐயின் உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார்.அதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எவ்பிஐமுகவரும் கலந்துகொண்டார் என அவர் தெரிவித்துள்ளார். எவ்பிஐ முகவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அவ்வேளை டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்தார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார்,அன்று எவ்பிஐ முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஜஹ்ரான் ஹாசிமே சூத்திரதாரி என தெரிவிக்கின்றது என நான் நினைக்கின்றேன் நாங்கள் இதனை மீண்டும் குழப்பினால் என்ன நடக்கும்? ஜனாதிபதி டிரம்பிற்கு கோபத்தை ஏற்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் அறிவீர்கள் எங்களால் எதனையும் செய்யமுடியாது யாருக்கு கோபத்தை எற்படுத்தக்கூடாது என்பது எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/213234
  16. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்நிலை ஏற்பட்டது. அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழுவை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/317351
  17. Iran Port-ல் பயங்கர வெடிப்பு சம்பவம்; 50 KM தாண்டி உணரப்பட்ட Effect; நடந்தது என்ன? இரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஷஹீத் ராஜீயில் (Shahid Rajaee) சனிக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். 1000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரானின் பலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட திட எரிபொருள் சரக்கை, முறையாக கையாளாததின் விளைவாக வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்புவதாக Ambrey Intelligence தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வெடிப்புக்கான காரணமாக அரசு சொல்வது என்ன? விரிவாகப் பார்க்கலாம். #Iran #Port இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இதுவும் உலகின் முதன்மை உளவுத்துறையின் வேலையாக இருக்கலாமோ?!
  18. 28 APR, 2025 | 04:57 PM கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (28) இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருங்கள் வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் திறந்த வெளியில் உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றை பயன்படுத்தவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள் கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதால் விழப்புடன் இருங்கள் அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் https://www.virakesari.lk/article/213158
  19. Vaibhav Suryavanshi* (lhb) 51 17 3 6 300.00 Gujarat Titans 209/4 Rajasthan Royals (5/20 ov, T:210) 81/0 RR need 129 runs in 90 balls. Current RR: 16.20 • Required RR: 8.60 Win Probability: RR 81.70% • GT 18.30%
  20. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2025 ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விருதைப் பெற்றனர். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மாறாத அன்புக்கு உரியவராக அஜித் இருப்பது குறித்து இந்த செய்தியில் காணலாம். பட மூலாதாரம்,AJITHKUMAR/X சூப்பர் ஸ்டார்களில் தனித்து நிற்பவர் தமிழ் சினிமா எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை கண்டிருக்கிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தனித்து இருப்பவர் நடிகர் அஜித். அப்படி அஜித் தனித்திருப்பதற்கு காரணம் அவரது ரசிகர்கள். தமிழ் சினிமாவில் அஜித் அளவுக்கு தோல்வி படங்களை கொடுத்தவர் கிடையாது. ரசிகர்கள் சந்திப்பை அஜித் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரை திரையில் பார்க்கும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். ரசிகர் மன்றம் வேண்டாம், அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம், தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிவித்தபோதெல்லாம் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை. அப்படி என்ன செய்துவிட்டார் அஜித்? அஜித் திரைத்துறைக்குள் வந்ததே ஒரு விபத்துதான். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வந்த அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட, மறுபக்கம் திரைத்துறைக்கான கதவும் திறந்தது. கதாநாயகனாக தெலுங்கு படமான பிரேம புஸ்தகத்தில் அஜித் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த அமராவதிதான் முதலில் ரிலீஸ் ஆனது. அமராவதி ரிலீஸுக்கு பின் விபத்து ஒன்றால் ஒன்றரை ஆண்டுகள் அவர் ஓய்வெடுக்க நேர்ந்தது. பவித்ரா படம் அவருக்கான ரீ-என்ட்ரியாக அமைந்தது. ஆனாலும், அஜித்துக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது வசந்த் இயக்கிய ஆசை திரைப்படம்தான். பின்னர் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை என வரிசையாக தோல்வி படங்கள். 1996 ஜூலையில் அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான காதல் கோட்டை வெளியானது. அகத்தியனின் புதுமையான திரைப் பாணி ரசிகர்களை கவர, படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு தேசிய விருதுகளையும் குவித்தது. அடுத்து மீண்டும் வரிசையாக தோல்விப் படங்கள். அமிதாப் பச்சன் தயாரிப்பில் அஜித், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த உல்லாசம் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் அந்த படமும் தோல்வியை தழுவியது. ஒரு மெகா ஹிட் கொடுப்பது, அடுத்து வரிசையாக தோல்விப்படங்களை கொடுப்பது என அஜித்தின் தொடக்க கால திரைப்பயணம் சிறிய ஏற்றம், பெரிய இறக்கம் நிறைந்ததாக இருந்தது. 1999-ல் வெளியான வாலி திரைப்படம்தான் திரைத்துறையில் அவரை தவிர்க்க முடியாததாக மாற்றியது. அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிய பாராட்டைப் பெற்றதோடு அஜித்துக்கான முதல் ஃபிலீம்ஃபேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது. தொடக்கத்தில் அஜித்துக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகராக பெண் ரசிகர்கள் இருந்தனர். ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், முகவரி, அவள் வருவாளா போன்ற படங்கள் அவரை ஒரு சாக்லேட் பாய் ஹீரோவாக பெண்களிடம் கொண்டுபோய் சேர்த்தன. 2001-ல் வெளியான தீனா அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அஜித்தே வேண்டாம் என்று துறந்தாலும் அவரது ரசிகர்களால் விரும்பப்படும் தல என்ற பட்டம் அஜித்துக்கு கிடைத்தது இந்த படத்தில்தான். அதே ஆண்டில் அஜித்குமார் பல்வேறு கெட்டப்களில் நடித்த சிட்டிசன் திரைப்படம் வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், பெரிய வெற்றியைத் தரவில்லை என அதன் தயாரிப்பாளர் நிக் ஆட்ஸ் சக்ரவர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அசோகா, ரெட், ராஜா என அஜித் நடித்த அடுத்தடுத்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்ப அவரது கவனம் பதின் பருவ கனவு மீது திரும்பியது. அதுதான் ரேஸ். மம்மூட்டி, கௌதம் மேனன் நடித்துள்ள பசூக்கா எப்படி இருக்கிறது? கதை என்ன?11 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,2000களின் துவக்கத்தில் அஜித் நடித்த அடுத்தடுத்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சொதப்ப அவரது கவனம் பதின் பருவ கனவு மீது திரும்பியது 32 வயதில் கார் ரேஸ் தன்னுடைய பதின் பருவ கனவு குறித்து அஜித் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது , ''ஒரு கட்டத்தில் எனது திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. இம்முறை கார் ரேஸிங்கில் கலந்து கொண்டேன். மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தாலும், என்னால் முடிந்ததைச் செய்தேன்'' என்றார். 2002-ஆம் ஆண்டு, ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட நடிகர் அஜித், அதில் நான்காம் இடம் பிடித்தார். பிறகு 2003-ஆம் ஆண்டு நடந்த ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்பில் (Formula BMW Asia) கலந்துகொண்ட அவர், அதில் 12-ஆம் இடத்தைப் பிடித்தார். பிறகு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் ஃபார்முலா 3 நேஷனல் கிளாஸ் (British Formula 3 - National Class) பந்தயத்தில் கலந்துகொண்டு 7-வது இடம் பிடித்தார். இதற்கு பிறகு ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகியே இருந்தார். அதற்கு நடுவே 2007இல் அளித்த பேட்டியில், "நான் கார் ரேஸிங்கில் இருந்தபோது அதை யாருமே கேட்கவில்லை அல்லது என்னை ஊக்குவிக்கவில்லை. அதை விட்டபிறகு ஏன் விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள். எனது ரசிகர்கள் என்னிடமிருந்து நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து ரேஸிங்கில் ஈடுபடுவதை விட்டேன்" என்று கூறியிருப்பார். பிறகு 2010-ஆம் ஆண்டு, எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் (FIA Formula Two Championship) சீசனில் பங்கேற்றார் அஜித். ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 19 வரை ஐரோப்பாவில் இந்தத் சாம்பியன்ஷிப் சீசன் நடைபெற்றது. மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?10 ஏப்ரல் 2025 எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை? - மோகன்லால் வருத்தம் தெரிவித்தது ஏன்?31 மார்ச் 2025 பட மூலாதாரம்,SIVASAKTHI MOVIE MAKERS படக்குறிப்பு,ஒரு மெகா ஹிட் கொடுப்பது, அடுத்து வரிசையாக தோல்விப்படங்களை கொடுப்பது என அஜித்தின் தொடக்க கால திரைப்பயணம் சிறிய ஏற்றம், பெரிய இறக்கம் நிறைந்ததாக இருந்தது தொடர் தோல்வியும் திருப்புமுனை தந்த பில்லாவும் 2005 முதல் 2006 வரை 4 திரைப்படங்களில் அஜித் நடித்திருந்தார். இதில், வரலாறு தவிர ஜி, பரமசிவன், திருப்பதி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. வரலாறு படத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் இருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. அந்த படம் தொடங்கும்போது அஜித் சற்று பருமனாக இருந்தார். சில ஆண்டுகளில் அஜித் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தை கொண்டு வந்தார். இதனால், அந்த படத்தில் இரு தோற்றமும் இடம் பெற்றிருக்கும். 2007ல் அவர் நடித்து வெளியான ஆழ்வார் படுதோல்வி அடைந்தது, அடுத்து வெளியான கிரீடமும் அஜித்துக்கு தேவையான வெற்றியை பெறவில்லை. இனி அஜித் சினிமா கேரியர் முடிந்ததா என்று பேச்சு பரவியபோதுதான், அஜித்தின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமான பில்லா ரிலீஸ் ஆனது. அதுவரை பார்க்காத ஸ்டைலான ஒரு கேங்ஸ்டராக அஜித் திரையில் தோன்றி இருப்பார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அடுத்த நான்கே ஆண்டுகளில் அதைவிட ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் அஜித். அதுதான் அவரின் 50-வது படமான மங்காத்தா. அஜித் முழுக்க முழுக்க வில்லனாகவே நடித்திருந்தாலும் 'விநாயக் மகாதேவை' ரசிகர்கள் கொண்டாடினர். இதற்கு முன்பு அவரது திரைப்படங்கள் வசூலித்த கலெக்சன் அனைத்தையும் இந்த படம் விஞ்சியது. 2012-ல் வெளியான பில்லா 2 பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வி அடைந்தாலும் பலரின் விருப்பமான படங்களில் இந்த படத்துக்கு எப்போதும் இடம் உள்ளது. 2013 முதல் 2025 வரை ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 11 படங்களில் அஜித் நடித்திருக்கிறார். இதில் விவேகம், வலிமை, விடாமுயற்சி ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டன. அதேநேரம், விடாமுயற்சி மற்றும் நேர்கொண்ட பார்வையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் பாராட்டைப் பெற்றன. மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?28 மார்ச் 2025 பட மூலாதாரம்,AJITHKUMAR RACING/X படக்குறிப்பு,மிகவும் தாமதமாக 32 வயதில் கார் ரேஸிங் துறைக்குள் நுழைந்தார் அஜித்குமார் அஜித் தவறவிட்ட படங்கள் அஜித் தோல்வி படங்களை கொடுத்திருந்த காலகட்டத்தில் அவர் வேண்டாம் என்று விலகிய மற்றும் பாதியில் கைவிடப்பட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன. நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் அஜித். படப்பிடிப்பும் நடந்த நிலையில், பாதியில் அவர் விலகினார். வாலி ஹிட்டை தொடர்ந்து நியூ படத்துக்காக அஜித்தை அணுகினார் எஸ்.ஜே. சூர்யா. அஜித், ஜோதிகா நடிப்பதாக போஸ்டர் வெளியானது. ஆனால், பின்னர் எஸ்.ஜே சூர்யாவே கதாநாயகனாக அறிமுகமானார். பாலாவின் நந்தா, நான் கடவுள் படங்களில் முதல் சாய்ஸ் அஜித்தான். ஆனால், இந்த படங்களும் பின்னர் முறையே சூர்யா, ஆர்யா நடிப்பில் வெளியாகின. இதேபோல், சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்த கஜினியும் அஜித் நடிக்க வேண்டியது. மிரட்டல் என்ற பெயரில் படத்தின் போஸ்டர் வெளியானது. எனினும் இந்த படமும் முழுமை பெறவில்லை. இதுபோக, சரண் இயக்கத்தில் இருமுகம், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் காங்கேயன், இதிகாசம், மகா என பல படங்களில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. Play video, "அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது ஏன்?", கால அளவு 10,43 10:43 காணொளிக் குறிப்பு,அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது ஏன்? அஜித்தும் சர்சையும் தற்போது ஊடகங்களிடம் விலகி இருக்கும் அஜித் தனது தொடக்க காலத்தில் ஊடகங்களிடம் நெருக்கத்துடன் இருந்தவர். மனத்தில் பட்டத்தை துணிச்சலாக பேசக்கூடியவர். ஒரு பேட்டியில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அஜித் குறிப்பிட, அது சர்ச்சையானது. இதேபோல் 2010-ல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு திரைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட அஜித், சினிமா கலைஞர்களை கட்டாயப்படுத்தி இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க வைப்பதாகவும், நடிகர்களுக்கு அரசியல் தேவை இல்லை என்றும் பேசியிருந்தார். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் பின்னர், கருணாநிதியை அஜித் நேரில் சந்தித்து பேச இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இதேபோல் அரசியல் சர்ச்சையும் அஜித்தை தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவானவர் என அவர் மீது சாயம் பூசப்பட்டது. இதேபோல் 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அஜித் ஆதரவளிப்பதாக வதந்தி பரவியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அஜித், ''என் தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் ஆசையில்லை. வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு'' என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?23 மார்ச் 2025 இளையராஜா இன்று வெளியிடும் சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்8 மார்ச் 2025 படக்குறிப்பு,கருணாநிதிக்கு திரைக்கலைஞர்கள் நடத்திய பாராட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மீண்டும் கார் ரேஸ் மீது திரும்பிய ஆர்வம் கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித்குமார் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து 2024இல் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்தார். சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற அணியைத் தொடங்கினார். இந்த அணியும் பல்வேறு வெற்றிகளை பெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தை சந்தித்தார். பின்னர் ஸ்பெயினில் அவர் ரேஸில் பங்கேற்றபோது மற்றொரு விபத்தை சந்தித்தார். ரேஸ்களால் அஜித் விபத்துகளை சந்திப்பது புதியதன்று. பல்வேறு விபத்துக்கள், பல்வேறு அறுவை சிகிச்சைகளை அவர் எதிர்கொண்டிருந்தாலும், ரேஸ் மீதான அவரது ஈர்ப்பு இன்றும் தொடர்கிறது. சினிமா, ரேஸ் இரண்டையும் தாண்டியும் அஜித்துக்கு வேறு சிலவற்றின் மீதும் ஆர்வமும் இருந்தது. துப்பாக்கிச் சுடுதலில் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு. 2022-ல் தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் 4 தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவுக்கு டிரோன் தொழில்நுட்பம் தொடர்பாக அஜித் ஆலோசகராக இருந்தார். பின்னால், இந்த குழுவும் பல்வேறு பரிசுகளை வென்றது. புகைப்படம் எடுப்பதில் அஜித்துக்கு ஆர்வம் உண்டு. நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? பிடிபட்டது எப்படி?5 மார்ச் 2025 'ரஜினி & அஜித் ஆகியோரை இயக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது' - பா. விஜய் நேர்காணல்28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,AJITHKUMAR RACING/X படக்குறிப்பு,கார் ரேஸில் இருந்து விலகியிருந்த அஜித்குமார் கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து 2024இல் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்குள் நுழைந்தார் அஜித்தும் ரசிகர்களும் ரசிகர்கள் விஷயங்களில் அஜித் அதிகம் கவனமாக இருக்கக்கூடியவர். 'முதலில் குடும்பத்தை பாருங்கள், நேரம் இருந்தால் என் படத்தை பாருங்கள்' என்பதுதான் ரசிகர்களுக்கு அவர் சொல்வது. 2011-ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதை பிறந்த நாள் பரிசாக அஜித் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், "நான் என்றுமே என் ரசிகர்களை எனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதில்லை. என் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பிற்காக அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன்" எனக் கூறியிருந்தார். அவரது மெகா ஹிட் படமான மங்காத்தா அப்போதுதான் ரிலீஸ். திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும்போதே தனது ரசிகர் மன்றத்தை அவர் கலைத்தார். ஆனாலும், அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதேபோல், அல்டிமேட் ஸ்டார் பட்டம், தல என்ற அடைமொழியை துறப்பதாக அஜித் அறிவித்தபோதும் அவரது ரசிகர்கள் விலகி செல்லவில்லை. 'தோல்வி படம் கொடுத்தாலும் அடுத்த படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் இருக்கிறதே, அப்படி ரசிகர்களுக்கு நீங்கள் செய்தது என்ன?' என்று ஒருமுறை அஜித்திடமே இது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அஜித் கூறிய பதில், ''போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதிக தோல்வி படம் கொடுத்த நடிகனாக நான் தான் இருப்பேன். ஆனாலும் ரசிகர்கள் அளவுகடந்த அன்பை காட்டுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாத அன்பை காட்டுகிறார்கள்'' என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5dz4nlm73o
  21. 28 APR, 2025 | 04:54 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது கிடைத்து வரும் மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழையாகும். அதனால் நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் மழை கிடைக்கும். இது மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் இது இடி மின்னல் நிகழ்வுகளோடு கூடிய மழையாகவே கிடைக்கும். அதிலும் இந்த இடி மின்னல் நிகழ்வுகளின் போதான மின்னேற்றம் முகில்களுக்கும் புவி மேற்பரப்பிற்குமிடையில் பரிமாற்றப் படுவதனால் குத்தான இடி மின்னலாகவே இருக்கும். இடி மின்னல் வகைகளில் இதுவே அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லன. எனவே இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக தமிழுக்கு சித்திரை 28 என்பது சித்திரைக் குழப்பத்தின் மைய நாளாகக் கருதப்படும். சித்திரை ஒரு சிறு மாரி என்ற கருத்தும் எம் மத்தியில் உள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி உருவாகும் தாழமுக்கம் இவ்வாண்டின் சித்திரைத் குழப்பத்தின் தோற்றுவாயாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழமுக்கம் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கணிசமான அளவு மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சித்திரைக் குழப்பமே தென்மேற்குப் பருவக்காற்று உடைவுக்கும் காரணமாக அமைவதுண்டு. அந்த வகையில் இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை மே மாதத்தின் பிற்பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/213161
  22. அமைச்சரவை மாற்றம்: அரசியல் நெருக்கடியா? தேர்தல் வியூகமா? பட மூலாதாரம்,X படக்குறிப்பு,செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், பொன்முடி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டிவருகின்றன. ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை. சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் தி.மு.க.வின் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றிபெறுவது, பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது" போன்ற பல விஷயங்களைப் பற்றி பேசினாலும், சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் பேசிய பேச்சுகள்தான் தலைப்புச் செய்தியாயின. "மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறைசொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்துவரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான். ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது" என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சீனாவின் பாகிஸ்தான் பாசத்துக்கு காரணம் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை: குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@BJP4TAMILNADU ஸ்டாலின் சொன்னது என்ன? ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.ஏல்.ஏக்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, செயல்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படிப் பேசினார் மு.க. ஸ்டாலின். இது நடந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தபோதிலும், இன்னமும் இந்தப் பேச்சுக்கு அர்த்தமிருப்பதைப்போல இருக்கிறது நிலைமை. ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அமைச்சர்கள், பொதுவெளியில் பேசக்கூடாததைப் பேசும் அமைச்சர்கள் என நெருக்கடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் ஒரு அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி வி. செந்தில் பாலாஜியும் கே. பொன்முடியும் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பத்மநாபபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ் அமைச்சரவையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், நிகழ்ந்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் கிட்டத்தட்ட ஒரு கட்டாயத்தின் காரணமாகவே நடந்திருப்பதாகச் சொல்லலாம். அமைச்சரவையிலிருந்து வெளியேறியிருக்கும் இரு அமைச்சர்களுமே பதவியில் நீடிப்பதில் கடும் நெருக்கடியில் இருந்தனர். வி. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை 2011- 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து, அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவுசெய்தது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். "என் சகோதரனை பிடித்து கொல்லுங்கள், எங்களை விட்டு விடுங்கள்" - பஹல்காமில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்தினரின் நிலை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் 'என் முன்னோர்களின் ஜென்ம பூமி இந்தியா' - பாகிஸ்தான் திரும்பும் நபர் உருக்கம்6 மணி நேரங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜியின் அமைச்சரவை பயணம் செந்தில்பாலாஜி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். இவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தன. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 471 நாட்கள் சிறையில் இருந்த பிறகு அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், சிறையிலிருந்து வெளியில் வந்த மூன்று நாட்களிலேயே, அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதியே மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதனை எதிர்த்து வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், 'ஜாமீன் வேண்டுமா, அமைச்சராக நீடிக்க வேண்டுமா?' என்பதை ஏப்ரல் 28க்குள் முடிவுசெய்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். பட மூலாதாரம்,@KPONMUDIMLA பொன்முடியின் அமைச்சரவை பயணம் கே. பொன்முடியைப் பொறுத்தவரை, ஏப்ரல் ஆறாம் தேதியன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டவர் சைவம் - வைணவத்தை பாலியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப்பேசினார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தி.மு.கவில் அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக, 2023ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஏற்கனவே தனது பதவியை இழந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. "முதலமைச்சரைப் பொறுத்தவரை இந்த மாற்றத்தை அவர் சந்தோஷமாக செய்திருக்க மாட்டார். வேறு வழியில்லாமல்தான் இதனைச் செய்திருக்க வேண்டும். பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என மூன்று, நான்கு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார். அமைச்சரவைக் கூட்டங்களிலும் சொன்னார், பொதுக்குழுவிலும் சொன்னார், வேறு கூட்டங்களிலும் சொன்னார். ஆனால், யாரும் காதுகொடுக்கவில்லை. துடுக்குத்தனம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இந்த மாற்றத்தின் மூலம் அமைச்சர்களின் அலட்சியம் கலந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வருமென எதிர்பார்க்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன். கே. பொன்முடியின் பதவி நீக்கத்திற்கான காரணத்தை சுட்டிக்காட்டியே இந்தக் கருத்தை முன்வைக்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். வான்கூவர்: திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி - சந்தேக நபர் பற்றி போலீஸ் கூறுவது என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் போக்குவரத்து மிகுந்த சாலையில் புதிய குடும்ப உறுப்பினர்களை வரவேற்ற வெண்மார்பு கடற்கழுகு7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MANOTHANGARAJ அமைச்சர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் காரணமாக அமைச்சரவை மாற்றம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. முதலமைச்சரின் குடும்பம் குறித்துப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானதையடுத்து நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பொதுவெளியில் மோசமாக நடந்துகொண்ட ஒரு நிகழ்வையடுத்து அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். "இவ்வளவு நடந்தும் சட்டப்பேரவையில் தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என வெளிப்படையாக, ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இப்படிப் பேசுவது எல்லோருக்கும் தர்மசங்கடத்தை அளிக்காதா? இதனால்தான் அடுத்த சில நாட்களிலேயே, அவரது இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பேச வேண்டியதாயிற்று. பொன்முடியைப் பொறுத்தவரை, அவரது பேச்சுக்காக வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியதால் அவர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது காரணமல்ல. அவர் தொடர்ந்து இதுபோல பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இப்போதைய பேச்சுக்காக அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவியை பறித்ததே போதுமானதுதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பேசிய வீடியோவை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சமூகவலைதளங்களில் சுற்றில்விட்டால், அது நெருக்கடியை ஏற்படுத்தும் என மு.க. ஸ்டாலின் கருதுகிறார். அதனால்தான் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன், "சட்டமன்றத் தேர்தலின்போது ஆ. ராசா பேசிய ஒரு பேச்சை வைத்து, மேற்கு மாவட்டங்களில் தி.மு.கவுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து தி.மு.க. ஆகவேதான் இந்த முறை முன்பே சுதாரித்துக்கொண்டார். ஆனால், ஆரம்பத்திலேயே அமைச்சர் பதவியிலிருந்தும் பொன்முடி நீக்கப்பட்டிருந்தால் இவ்வளவு விவாதமாகியிருக்காது" என்கிறார் ப்ரியன். கொலையாளியின் தோல் 200 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் ஏன் ஒரு புத்தகமாக உள்ளது?26 ஏப்ரல் 2025 "கத்தோலிக்க வரலாற்றின் ஒரே பெண் போப் ஆண்டவர்" கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாரா?27 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,TNDIPR எதிர்பார்த்ததைப் போலவே இந்த அமைச்சரவை மாற்றத்தை தங்களது வெற்றியாகவே அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. கே. பொன்முடிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., அவருடைய நீக்கம் தங்களுடைய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கெடு விதித்த பிறகே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், இந்த அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "தி.மு.கவினரிடம் கட்சிப் பதவி வேண்டுமா, அரசுப் பதவி வேண்டுமா என்றால் கட்சிப் பதவியைத்தான் கேட்பார்கள். இந்த விவகாரம் வெளியானவுடனேயே கே. பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டதைப்போலத்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே, மாற்றுத் திறனாளிகள் குறித்து மோசமான சொற்களில் குறிப்பிட்டதற்காக தானே முன்வந்து மன்னிப்புக் கோரினார் பொதுச் செயலாளர் துரைமுருகன். இதெல்லாம் இவர்கள் போராடித்தான் நடந்ததா?" என்கிறார் கான்ஸ்டைன்டீன். அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் செயல்பாட்டின் மூலம் முதலமைச்சரை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்களா? "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதனை வைத்து ஆட்சியை விமர்சிக்க முடியும். இப்போது அதுபோல ஏதுமில்லாததால் இதுபோன்ற விவகாரங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. பழைய காலத்தைப் போல இப்போதும் பேச முடியாது என்று பல முறை முதல்வர் சொல்லிவிட்டார். அது மீறப்படும்போது நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர். ஆனால், அ.தி.மு.கவிலும் பா.ஜ.கவிலும் எவ்வளவோ அநாகரீகமாக பேசுகிறார்கள். அது விவாதித்திற்கே உள்ளாவதில்லையே" என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தை பொன்முடி விவகாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். "ஒருவர் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அமைச்சராக முடியாது என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும் அதுவரை அவர் சிறையில் இருக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இப்போதும் அதேகேள்வி பொருந்துமே" என்கிறார் லக்ஷ்மணன். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவரது ஜாமீனை ரத்துசெய்யக்கோரும் வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. இதனால், அவரது தலைமீது தொங்கிய கத்தியிலிருந்து அவருக்கு சற்றே ஆறுதல் கிடைத்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn9142gjey4o
  23. Published By: VISHNU 28 APR, 2025 | 07:25 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/213197
  24. INNINGS BREAK 47th Match (N), Jaipur, April 28, 2025, Indian Premier League RR chose to field. Gujarat Titans (20 ov) 209/4 Rajasthan Royals Current RR: 10.45 • Last 5 ov (RR): 60/3 (12.00) Win Probability: GT 72.11% • RR 27.89%

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.