Everything posted by ஏராளன்
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கான தண்டனை விரைவாக வழங்கும் விதமாக சட்டமியற்றப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். அயற்கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி பாலியல் தொழிலாளியாக இரண்டு பெண்களால் மிரட்டி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். 2 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டு 3ஆவது முறை கருக்கலைப்பு செய்தபோது ஆபத்தான நிலையில் மருத்துவமனை சென்றதால் மருத்துவர்கள் மூலமாக பொலிசில் முறைப்பாடளித்ததால் செய்தி வெளியே வந்ததாக தெரியவருகிறது.
-
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
NPP பிரசாரங்களில் ஒலித்த விடுதலைப்புலிகளின் பாடல் : விளக்கமளித்த பொதுச் செயலாளர் தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளமை குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) கருத்து வெளியிட்டுள்ளது. தங்களது கட்சிக்கும் அந்தப் பாடல்களுக்கும் தொடர்பில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) தெரிவித்துள்ளார். அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள் எழுதப்பட்ட பாடல் ஒன்றை அண்மையில் பிரசாரததிற்காக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சிவாஜிலிங்கம் எதிர்ப்பு இந்தநிலையில் தேசிய மக்கள் சக்தியின் இவ்வாறான பிரசார நடவடிக்கைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.KShivajilingam) எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலே நிஹால் அபேசிங்க இவ்வாறு பதிலளித்துார். இது குறித்து கருத்து வெளியிட்ட பொதுச் செயலாளர், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் (K. Ilankumaran) முகநூலில் டாக் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முகநூலில் பகிரப்பட்ட காணொளி அத்தகைய காணொளிகள் டாக் செய்யப்படுவதில், தேசிய மக்கள் சக்திக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் சில இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூலில் காணொளிகளை உருவாக்கி டாக் செய்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதியின்றி முகநூலில் காணொளிகளை டாக் செய்ய முடியாது என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/npp-has-denied-releasing-tamil-campaign-songs-1746505872
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
வீடு பல இடங்களில் முன்னிலையாம்! வலி.மேற்கில் 15 நேரடி வட்டாரங்களில் 10 ஐ வென்றுவிட்டார்களாம்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 56th Match (N), Wankhede, May 06, 2025, Indian Premier League GT chose to field. Mumbai Indians (20 ov) 155/8 Current RR: 7.75 • Last 5 ov (RR): 39/2 (7.80) Gujarat Titans Win Probability:MI 28.25% • GT 71.75%
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
வெளியானது அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகள் புதிய இணைப்பு அம்பாந்தோட்டை மாவட்டம் (Hambantota) அம்பாந்தோட்டை மாநகர சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,750 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,874 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி - 1,511 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,279 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சர்வஜன அதிகாரம் (SB)- 816 வாக்குகள் - 1 உறுப்பினர் முதலாம் இணைப்பு அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 2260 வாக்குகள் - 9 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1397 வாக்குகள் - 5 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 795 வாக்குகள் - 3 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 ஆசனங்கள் சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 ஆசனங்கள் https://ibctamil.com/article/local-government-election-result-2025-hambantota-1746537981
-
இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு!
05 MAY, 2025 | 02:18 PM இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) பரிசோதனை செய்தது. இதன்போது இந்த ஆகாய கப்பல் 62 நிமிடங்கள் பறந்தது. அவ்வேளை ஆகாய கப்பலின் ஆழுத்தம், கப்பலை அவசரமாக தரையிறக்குவதற்கான நடைமுறைகள் போன்ற விடயங்களை பரிசோதனைக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆகாய கப்பல் மாதிரியின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் இது இந்தியாவின் மிக முக்கியமான சாதனை எனவும் டிஆர்டிஓ தலைவர் சமிர் வி.காமத் தெரிவித்தார். இதுபோன்ற ஆகாய கப்பல் தொழில்நுட்பமானது உலகில் சில நாடுகளில் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆகாய கப்பலை இந்தியா உருவாக்கி, அதை செலுத்துவதற்கான பரிசோதனை முறைகளையும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/213721
-
குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்
உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதால் இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும், கடந்த மார்ச் மாதம் நிலைமை மோசமடைந்துள்ளது. மருத்துவ ரீதியிலான முயற்சி தோல்வி அடைந்ததால், ஆன்மிக தலைவரின் ஆலோசனையைக் கேட்டு சந்தாராவில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். சமண மதத்தில் சந்தாரா அல்லது சல்லேகானா அல்லது சமாதி மாறன் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது உணவு மற்றும் தண்ணீரை படிப்படியாக கைவிடுவதன் மூலம் தாமாக முன்வந்து இறப்பதற்கான ஒரு மத சபதம் ஆகும். இது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு வழியாக கருதுகின்றனர். இந்த வழக்கம் ஒரு வகையான தற்கொலை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும், இந்த வழக்கத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, வியானாவின் பெற்றோர் அல்லது ஆன்மிக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317527
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
வியட்நாம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார் 06 MAY, 2025 | 05:17 PM வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து வியட்நாம் அரச பிரதானிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். மேலும், ஜனாதிபதி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடனும் (To Lam) கலந்துரையாடினார். கடந்த 55 ஆண்டுகளாக உயர்ந்த அரசியல் நம்பிக்கை, நெருக்கமான மக்கள் உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை இரு நாடுகளும் இதன்போது வலியுறுத்தின. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் இன்னும் வலுவாகப் பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். மேலும், ஜனாதிபதி வியட்நாம் போர் வீரர்கள் நினைவிடம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் அவர்களின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விங்குரூப் (Vingroup), சன் குழுமம் (Sun group), எப். பி. டி. கூட்டுத்தாபனம் (FPT Corporation), சொவிகொ (SOVICO) குழுமம் ரொக்ஸ் (ROX) குழுமம் ஆகிய வியட்நாமில் உள்ள பாரிய அளவிலான தொழிலதிபர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரையின் புதிய போதி மதிலையும் திறந்து வைத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சிறப்புரையாற்றினார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் இணைந்தார். https://www.virakesari.lk/article/213821
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
தமிழர் பகுதிகளில் தமிழ்க்கட்சிகள் முன்னிலை பெற்றதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் வருகின்றன.
-
நிலத்தடியில் ஆயிரம் ஆண்டுகள் தாங்கி நிற்கும் அணுக் கிடங்கை அமைக்க முயலும் பிரான்ஸ்
பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பீசிங் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது? கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது. இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன. இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் கூடங்கள், மின்சாதனங்கள் வெளியிடும் இரைச்சல்கள், குறைந்த ஆள் நடமாட்டம் என அனைத்துமே நான் எப்போது வெளியில் செல்வேன் என்று என்னை யோசிக்கச் செய்தது. எனக்கு முன்னால் இருந்த அணுக்கழிவு அறை மிகவும் பெரிதாக இருந்தது. அதாவது நான் ஏதோ எகிப்திய மன்னர்களின் கல்லறைக்குள் சென்றதைப் போன்று திடுக்கிட்டு நின்றேன். ஆனால் இதைப் பண்டைய எகிப்தியர்கள் கட்டவில்லை. இது பாறைகளைக் குடைந்து உலகிலுள்ள பல அதிசக்தியான கதிரியக்கப் பொருட்கள் புதைக்கப்பட்ட இடம். உலகின் மிகவும் ஆபத்தான பொருட்களைப் புதைக்க, ஒரு லட்சம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு கிடங்கை வடிவமைக்க, கட்டுமானம் மேற்கொள்ள, அதைச் செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு என இதை வடிவமைக்க ஒரு பத்து ஆண்டுகள், இதைக் கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன? 'நிலத்தடியில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்று' பாரிஸில் இருந்து கிழக்கே 4 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள 2.4 கி.மீ நீளமான சுரங்கப் பாதை பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கட்டுமானப் பரிசோதனைகளைச் செய்யவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஒரு கூடாரமாக உள்ளது. பிரான்சின் தேசிய கதிரியக்க கழிவு மேலாண்மை முகமை (ஆண்ட்ரா- Andra), சுரங்கப்பாதைக்கு அருகே பூமிக்கு அடியில் அணுக்கழிவை சேமிக்கும் கிடங்கை கட்டுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு இது வெற்றிகரமாகச் செயல்படுவதை ஒழுங்குமுறை அமைப்புகளிடம் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இந்த பூமிக்கு அடியில் கழிவுகள் சேமிக்கும் கிடங்குதான், மனிதர்கள் நிலத்தடியில் கட்டிய மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கும். விரைவில் இவற்றின் கட்டுமானம் தொடங்கவுள்ளது. இவை பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன், பின்லாந்து போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அமையப் போகின்றன. இவ்வாறு பூமிக்கு அடியில் கழிவுகளை அகற்ற மிக ஆழமான கிடங்கை முதலில் அமைத்த நாடு பின்லாந்துதான். இதற்கான முதல் கட்டப் பரிசோதனை ஓட்டத்தை பின்லாந்து வெற்றிகரமாகச் செய்து பார்த்துள்ளது. இதேபோன்ற கட்டமைப்புகள் சுவீடன் நாட்டில் ஃபோர்ஸ்மார்க் என்ற இடத்திலும் (ஸ்டாக்ஹோமுக்கு வடக்கே 2 மணிநேர பயண தூரம்), பிரான்ஸில் சிகோ என்ற இடத்திலும் விரைவில் அமையவுள்ளன. பிரிட்டனை பொறுத்தவரை இன்னும் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியா விட்டுக்கொடுத்ததா?25 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அணுக் கழிவுகள் (சித்தரிப்புப் படம்) ஜி.டி.எஃப் என்பவை மிகப்பெரிய, விலையுயர்ந்த, மிகுந்த சர்ச்சைக்குரிய அடித்தள கட்டுமானங்கள். இவற்றில் ஆற்றல் மிக்க கதிரியக்கம் மற்றும் நீண்ட கால செயலாக்கத்துடன் இருக்கக்கூடிய அணுக்கழிவுகள் வைக்கப்படும். இந்தக் கழிவுகள் தற்போது பிரிட்டனில் செல்லஃபீல்ட், பிரான்ஸில் லா ஹேக் ஆகிய இடங்களில் பூமியின் மேற்பரப்பில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் அணு உலைகளின் பொருட்கள், அணு உலை மையங்களில் இருந்து கிடைக்கும் கிராஃபைட், பயன்படுத்தப்பட்ட எரிபொருள், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு செயலாக்கம் செய்வதன் மூலம் கிடைக்கும் திரவம் ஆகியவை அடங்கும். கணினித் திரை மூலம் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக, பல அடுக்குகளைக் கொண்டதாக காட்சியளிக்கும். ஆனால் இதை வடிவமைக்க, கட்டமைக்க மற்றும் செயல்படுத்த எடுக்கும் கால அளவு அதிகம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் பிரமிட் போன்ற கட்டமைப்புகளில் பணிபுரிபவர்கள் அவர்களுடைய படைப்பை முழுமை அடையும் பொழுது பார்க்க முடியாது. “இதுபோன்ற பெரிய அளவிலான அணுக்கழிவு கிடங்குகளுக்கான உரிமம் பெறுவதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் எடுக்கும். இதைவிடக் குறைந்த காலத்தில் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்பட்டதில்லை”, என்று கூறுகிறார் எனது வழிகாட்டி மற்றும் பிரான்ஸில் உள்ள கிடங்கின் விஞ்ஞானி ஜாக்ஸ் டிலே. “சீல் வைப்பதற்கு முன்பாக 100 ஆண்டுகள் வரை இந்தக் கிடங்கு பயன்பாட்டில் இருக்கும். சீல் வைக்கப்பட்ட பிறகு அடுத்து வரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தத் தளம் கண்காணிக்கப்படும்" என்றார். “ஜி.டி.எஃப் அமைக்கப் பொருத்தமான இடம் மற்றும் இதை ஆதரிக்கும் ஒரு சமூகம் மிகவும் அவசியம். ஆனால் சிறந்த நில அமைப்புதான் முதன்மை எதிர்பார்ப்பு” என்று கூறுகிறார் பிரிட்டனின் அணுக்கழிவு மேலாண்மை (UK’s Nuclear Waste Services NWS) அமைப்பைச் சேர்ந்த ஏமி ஷெல்டன். தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?22 ஏப்ரல் 2025 தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?23 ஏப்ரல் 2025 'நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள்' பட மூலாதாரம்,ANDRA ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில், ஷெல்டன் போன்ற பொறியாளர்கள், 500 மீட்டர் முதல் 1 கி.மீ ஆழத்தில் பாறைகளைத் துளைத்து, அந்த நிலப்பரப்பு ஒரு லட்சத்திற்கும் மேலான ஆண்டுகள் அணுக்கழிவுகளை அடைத்து வைக்கப் பொருத்தமானவையா என்று கிடைத்த தரவுகளைப் பார்த்து சோதனை மேற்கொள்கின்றனர். கிரானைட் மற்றும் களிமண் போன்ற பாறைகள் இதற்குச் சிறந்தவை. ஆனால் தெளிவான ஒரு முடிவை எடுக்க இவை போதுமான தரவுகளாக இல்லாமல்கூட போகலாம். ஒரு நம்பிக்கைக்குரிய தளம் உள்ளூர் சமூகங்களுக்குக் குடிநீர் வழங்கும் நீர்நிலைக்கு அருகில் அல்லது பள்ளத்தாக்குகளில் அமையலாம். ஆனால் பனிப்பாறைகள் உருகிக்கொண்டே வருவதால் அடுத்த 10 ஆயிரம் ஆண்டுகளில் மீண்டும் இதுபோன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேடல் தொடங்கிவிடும். ஆனால் சில நாடுகளில் இது மிகவும் எளிதாக இருக்கும். “சுவீடன், பின்லாந்து போன்ற இடங்களின் அடித்தளம் மிகவும் நிலையானது. அதாவது நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இந்த நிலம் 90 கோடி ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இப்படியே இருக்கிறது” என்று கூறுகிறார் ஸ்வீடிஷ் அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் எஸ்கேபி நிறுவனத்தின் தொடர்புத் துறை இயக்குநர் அன்னா பொரேலியஸ். சில நேரங்களில் மனித நிலவியலில்தான் பிரச்னை ஏற்படுகிறது. “தன்னார்வத்தோடு நிலத்தை வழங்க வந்தவர்கள் பலருக்கு எதார்த்தம் புரியவில்லை. உதாரணமாக பலரது நிலங்கள் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளுக்கு மிக அருகில் இருந்தன” என்கிறார் டிலே. மிகவும் தேவையான முதலீடுகள் மற்றும் நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள் போன்ற காரணங்களுக்காகவே பல சமூகங்கள் ஜி.டி.எஃப் அமைக்க முன் வருகின்றன. அவர்களின் ஒப்புதல் ஒவ்வோர் அடியிலும் அவசியம். இது இன்றுவரை அணுசக்தித் துறையில் அவர்களுக்கு உள்ள அனுபவத்தைப் பொறுத்தது. பிரிட்டனில் இதை அமைப்பது எளிதான முயற்சி அல்ல. ஆனால் பின்லாந்தில் இருப்பதோ வேறு மாதிரியான நிலை. “அணு உலைகளைக் கொண்டு 70களில் இருந்து மின் உற்பத்தி செய்கிறோம்” என்று கூறுகிறார் போசிவா ஓய் என்னும் அணுக்கழிவு அகற்றும் நிறுவனத்தின் பாசி துவோஹிமா. “இங்குள்ள மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை நன்கு அறிவர், அவர்களின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் எனப் பலர் இந்தத் தளங்களில் பணிபுரிகின்றனர். அதனால் இந்தக் கழிவுகள் பற்றி அவர்களுக்கு நன்றாகப் புரியும்” என்கிறார். இதைக் கட்டமைப்பதில் ஏதேனும் பிழை இருந்தால் ஜி.டி.எஃப் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். “இந்தச் செயல்முறையின்போது சுவீடனின் எஸ்கேபி நிறுவனம் பல முக்கிய பாடங்களைக் கற்றது. வரையப்படும் திட்டங்களுக்கு உள்ளூர் பொதுமக்களின் சாதகமான ஒப்புதல் மிகவும் அவசியம். அல்மூங்கே போன்ற பெரும்பாலான இடங்களில் எஸ்கேபி நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன” என்றார் பொரேலியஸ். தமிழ்நாட்டில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை ஏன்?24 ஏப்ரல் 2025 இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?24 ஏப்ரல் 2025 அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகள் பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/TVO படக்குறிப்பு,பின்லாந்து போன்ற நாடுகளில், நில அதிர்வு செயல்பாடு இல்லாததால், சேமிப்பக வசதிகளை உருவாக்குவதற்கான தளங்களைக் கண்டுபிடிப்பது எளிது கிடங்கை அமைக்கத் தகுந்த இடத்தைத் தேடுவதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கு மாறாக 1960, 1970களில் ஜெர்மனி செய்தது போல ஒரு பயன்படுத்தபடாத சுரங்கத்தில் இவற்றைச் சேமித்து வைக்கலாம். “இப்படியான பயனில் இல்லாத சுரங்கங்களை மறுபயன்பாடு செய்யலாமே என்று கேள்வி எழுவது மிகவும் சாதாரணமான விஷயம். ஆனால் அவை இந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவில்லை. அதாவது நீண்ட காலம் நீடிக்கவோ அல்லது அணுசக்தியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டோ கட்டமைக்கப்படவில்லை” எனக் கூறுகிறார் NWS-இன் முதன்மை விஞ்ஞானி நீல் ஹயாத். மேலும் இந்தச் சுரங்கங்கள் அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகளை சேமிக்கும் வடிவில் அமைக்கப்படவில்லை. “கீழே அமைந்துள்ள கிடங்கிற்கு அழைத்துச் செல்லும் பாதையைக் கட்டி முடிக்கவே ஏறத்தாழ 5 ஆண்டுகள் எடுக்கும். இது பழைய சுரங்க அமைப்பைக் கட்டுவதைவிட மிகவும் அதிகம்” என்கிறார் பொரேலியஸ். கனிம வளங்கள் இருக்கும் சுரங்கத்தில் ஜி.டி.எஃப் கட்டப்பட்டால் அது வருங்காலத்தில் பல இடையூறுகளுக்கு வழி வகுக்கலாம். தற்சமயம் எந்தச் செயல்பாடும் இல்லாத சுரங்கத்திற்கும் இது பொருந்தும். கார்ன்வாலலில் இருந்த கடைசி டின் சுரங்கம் 1998ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக காரனிஷ் லிதியம் என்ற நிறுவனம் இங்கு சுரங்கத் தொழில் செய்யவுள்ளது. புதிய அணுக்கழிவு கிடங்கை அமைப்பது எளிதான விஷயமாகக்கூட இருக்கலாம். “பின்லாந்தில் இதுபோன்று நிலத்தடியில் கட்டுமானம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. நாங்கள் கடுமையான வானிலையில் இருந்து தப்பிக்க அடித்தளத்தைப் பயன்படுத்துவோம். ஒரு புதிய கிடங்கைக் கட்டுவது முதலில் இருந்து ஆரம்பிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தைத் தருகின்றது” என்று கூறுகிறார் டுவோஹிமா. புதிய ஏர்பஸ் விமானத்தை வடிமைப்பதைப் போலன்றி ஜி.டி.எஃப் வடிவம் மாறுபடும். இது நிலபரப்பைப் பொறுத்தே அமையும். ஒரு ஜி.டி.எஃப் வடிவம் பாறைகளின் கனத்தின் அடிப்படையில்தான் கட்டப்படும். அவ்வாறு இருக்குமானால் பிரான்ஸை போல முன்னதாக முடிவெடுத்தபடி மூன்று, நான்கு தளம் என்றில்லாமல் ஒரே தளத்தில் இதை அமைக்கலாம். பட மூலாதாரம்,NUCLEAR WASTE SERVICES படக்குறிப்பு,வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே (புகைப்படத்தில்- பிரிட்டனால் முன்மொழியப்பட்ட கழிவு சேமிப்புத் தளம்) ஒவ்வொரு கழிவிலும் அதற்கான தன்மை, அதன் அளவு மற்றும் அது வெளியேற்றும் வெப்பத்தின் அளவு எனப் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. இடைநிலைக் கழிவுகள் குறைந்த வெப்பத்தை உருவாக்குகின்றன, எனவே அதைப் பாதுகாப்பாகவும் நெருக்கமாகவும், அதிக அளவிலும் அடுக்கி சேமிக்க முடியும். ஆனால் உயர்மட்ட அணுக்கழிவுகள் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் இதைக் குறைந்த அளவிலும், நல்ல தொலைவிலும் வைப்பது அவசியம். இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சைத் தடுக்க ஒரு தடுப்பை அமைப்பது மிகவும் அவசியம். இந்தத் தடுப்பு ஜி.டி.எஃப்-இன் வடிவமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாறையின் தன்மையைப் பொருத்தது. ஆனால் காலப்போக்கில் இது தோல்வி அடையலாம் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். அணுக்கழிவுகளை 500மீட்டர் (1650 அடி) எடுத்துச் செல்ல லிப்ட் ஒரு நல்ல வழியாகத் தெரிந்தாலும் அதில் பல அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். அதாவது அணுக்கழிவுகளைக் கொண்டு செல்லும் கொள்கலன் லிஃப்டில் மாட்டிக் கொள்ளலாம். அல்லது எடை தாளாமல் லிஃப்ட் நிலைகுலைந்து, வேகமாகக் கீழே விழ வாய்ப்பிருக்கிறது. 12% சாய்வு கொண்டிருக்கும் ஒரு சறுக்கல் பாதை மற்ற வழிகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது. இந்த இரண்டையுமே கட்டுவது மிகவும் சிறப்பு. ஜி.டி.எஃப்-ஐ உருவாக்குவதற்கான சவாலுக்கு ஒரு தீர்வு, மற்ற நாடுகளுடன் பகிரப்பட்ட வடிவமைப்பில் பணியாற்றுவதாகும். இதைத்தான் சுவீடனை சேர்ந்தவர்களும் பின்லாந்தை சேர்ந்தவர்களும் செய்தார்கள். அவர்கள் அதை ‘KBS3’ என்று அழைத்தனர். "அவர்கள் எங்கு பாறையைத் தோண்டினாலும் கடினமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கான தேர்வுகள் ஏற்கெனவே அவர்களுக்கென வகுக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் நாங்கள் (பிரிட்டனில்) இன்னும் சரியான நிலவியல் அமைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ஹயாத். வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே. “அடுத்து வரும் 20 முதல் 200 ஆண்டுகளில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோமா என்பது தெரியாது. ஆனால் வருங்காலத்தில் வரும் சிக்கல்களுக்கு நம்மிடம் இன்றே தீர்வு உள்ளது எனத் தெரியப்படுத்த வேண்டும்,” என்கிறார் ஹயாத். பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?22 ஏப்ரல் 2025 கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?22 ஏப்ரல் 2025 'அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான தீர்வு' பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவுக்கு வசதிகள் வலுவாக இருக்க வேண்டும் ஃப்ரெஞ்சு பொறியாளர்கள், கட்டுப்பாடிழந்த கொள்கலன் ஒன்றைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையாக கேபிளுடன் கூடிய 4 கி.மீ நீளமுள்ள சரிவுப் பாதையை கட்டி நிரூபித்துள்ளனர். அதோடு, பாஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய தானியங்கி நாய்கள் போன்ற ரோபாட்டுகள், "நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கழிவுக் கொள்கலன்களை, மனிதர்களின் தலையீடு இல்லாமலே இடமாற்றம் செய்ய முடியும்" என்று செய்து காட்டியுள்ளனர்," என்கிறார் டிலே. மேலும் இந்தப் பொறியாளர்கள், அதிக அளவிலான அணுக்கழிவுகள் இருக்கும் நீளமான, குறுகலான சுரங்கங்களுக்குள் ஊர்ந்து சென்று அங்கிருக்கும் 'துருப்பிடித்த செல்களில் இருக்கும் கொள்கலனை' எடுத்து வரக்கூடிய ஒரு ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். ஏதாவது அடைப்பு இருந்தால் அவற்றை நீக்கி, கழிவுக் கலன்களை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து வருவது அதன் பணி. சுவீடனில், திட்டங்கள் மேலும் முன்னேறியுள்ளன. “2080களில் இந்தக் கிடங்கு 60கி.மீ நீளம் இருக்கும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செப்புக் குப்பிகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவு இருக்கும். தொலைவில் இருந்து துல்லியமாக இயக்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் அணுக்கழிவுகள் அகற்றப்படும்” என்று கூறினார் பொரேலியஸ். “நாங்கள் உருவாக்கிய மேக்னே ஒரு முன்மாதிரி இயந்திரம். இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு. பாறைகளுக்கு அடியில் 500மீட்டர் ஆழத்தில் செப்புக் குப்பிகளை வைக்க இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்” என்றார் பொரேலியஸ். நாம் தொழில்நுட்பம் எவ்வாறு பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வாறே அது வளர்ச்சி அடையும். இன்றைய தொழில்நுட்பதை மட்டுமே சார்ந்து ஜி.டி.எஃப் போன்ற அமைப்பை நாம் உருவாக்க நினைத்தால் அது முட்டாள்தனம். அதனால் நாம் கட்டமைக்கும் இந்தக் கிடங்கு மறுசீரமைக்கும்படி, மேம்படுத்தும்படி, மாற்றக்கூடிய வடிவில் அமைக்கப்பட வேண்டும்” என்று கூறினார் ஹயாத். மீட்டெடுப்புக் கொள்கை என்ற மற்றொரு சிக்கலை ஜி.டி.எஃப் வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டும். பிரான்ஸில் செயல்பாட்டுக் கட்டத்தில் உள்ள ஒரு ஜி.டி.எஃப்-இல் இருக்கும் எந்தவொரு கழிவையும் மீட்டெடுப்பதற்கான சட்டபூர்வ தேவை உள்ளது. பிரிட்டனில், இது ஒரு பொதுவான வழிகாட்டுக் கொள்கை. ஆனால் இந்த மீட்டெடுக்கும் பணி ஒவ்வொரு பெட்டகமும் சீல் வைக்கப்படுவதால் மிகவும் கடினமாகிறது. மற்றவர்கள் இதைப் பெரிதும் நம்புகிறார்கள். “நாங்கள் பயன்படுத்தபட்ட எரிபொருளை நிரந்தரமாகப் புதைக்கின்றோம். ஆனால் இதை மீட்டெடுக்க முடியும்” என்கிறார் டுவோஹிமா. சீல் வைத்தால் சீல் வைத்ததுதான். “ஆனால் 100 ஆண்டுகளில் உலகம் மிகவும் வித்தியாசமாக மாறிவிடலாம். இது சீல் வைக்கப்பட்டால் கேள்வி சமூகத்திற்கானது, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அல்ல” என்கிறார் டிலே. இறுதியில் இந்த அணுக்கிடங்கை முழுமையாகக் கட்டி முடிக்கப் பல நூறாண்டு காலம் ஆகும். ஆனால் எந்தக் காரணம் இந்த வல்லுநர்களைத் தங்களால் வருங்காலத்தில் பார்க்க முடியாத ஒரு செயல்திட்டத்தை செய்யத் தூண்டுகின்றது? “எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இது எங்கள் வாழ்க்கையின் பயன். நாங்கள் யாருமே இந்தச் செயல்திட்டம் முழுமை அடையும்போது பார்க்க முடியாது. ஆனால் இப்போது நாங்கள் செய்யும் இந்தச் செயல் வரும் காலங்களில் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு தீர்வாக அமையும். இதுதான் நாங்கள் செயல்பட எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது” என்கிறார் பொரேலியஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7nvrn3vl8o
-
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு வருகை
06 MAY, 2025 | 04:16 PM உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை புதன்கிழமை (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். உலக வங்கியின் தலைவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அஜய் பங்காவின் வருகை உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அஜய் பங்கா இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அஜய் பங்காவின் வருகை உலக வங்கி மற்றும் இலங்கைக்கும் இடையிலான 70 ஆண்டு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. அஜய் பங்காவின் வருகையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு , முதலீட்டை அதிகரிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இலங்கை வருகையின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் தனியார் துறைத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://www.virakesari.lk/article/213843
-
உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி!
உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வரலாற்றில் மிக நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பிற்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை உலக பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு சுமார் 15 மணி நேரம் நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி முய்சு பத்திரிகையாளர்களிடமிருந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்ததுடன் ஊடகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பொது கேள்விகளுக்கு பதிலளித்தார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முந்தைய சாதனையை மாலைதீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/317574
-
கண்முன்னே தாய், தந்தை பலி: இரவு முழுவதும் கால்முறிந்து தவித்த சிறுமி - தாராபுரம் விபத்துக்கு காரணம் யார்?
பட மூலாதாரம்,VIGNESH கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 5 மே 2025 உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது சட்ட விரோதமானதாகும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதம் மாறுபடுகிறது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகவும், ஒப்பந்ததாரர் 4வது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து வழக்கில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரை வழக்கில் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை என்பதோடு, 2 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கேயம் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் குள்ளக்காய் பாளையம் என்ற இடத்தில், மாந்தோப்புக்கு அருகில் சாலை விரிவாக்கத்துடன் அங்குள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக பாலத்தை ஒட்டி 12 அடி அளவுக்கு மிகப்பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (42), அவருடைய மனைவி ஆனந்தி (38) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் மகள் தீக்சனா (13) பலத்த காயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரவெல்லாம் சத்தமிட்டும் உதவி கிடைக்காத சிறுமி தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ், திருப்பூர் பஞ்சம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் தீக்சனாவும் திருநள்ளாறு கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மே 4 அன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூவரும் திருநள்ளாறு சென்றுவிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, ஆனந்தியும் அவருடைய நாகராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் விபத்து பற்றி நாகராஜின் சகோதரர் வேலுசாமி தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வந்தபோது, அந்த இடத்தில் எதுவுமே தெரியவில்லை என்றும் பள்ளத்தில் வண்டி விழுந்ததும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பெற்றோர் இறந்து விட்டதாகவும் தீக்சனா தங்களிடம் தெரிவித்ததாக வேலுசாமி கூறியுள்ளார். "தீக்சனா இரவெல்லாம் கத்திக் கொண்டிருந்தாலும் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால், காலையில் அந்த வழியே சென்ற கல்லுாரி மாணவர்கள் பேருந்து ஒன்றிலிருந்து இந்த சத்தம் கேட்டு, பின்பு தகவல் தெரிவித்தனர். தீக்சனாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள்தான் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.'' என்றும் வேலுசாமி புகாரில் தெரிவித்துள்ளார். முறையான அறிவிப்புப் பலகை, தடுப்புகள் வைக்காததால்தான் தனது தம்பி குடும்பத்துக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக வேலுசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குண்டடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா தீ விபத்தில் பலியான தமிழக குடும்பம்: சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சோகம் யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு முக்கிய சாலை திறப்பு - அதில் என்ன இருக்கிறது? முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - அனகோண்டா காட்டில் விமான விபத்தில் சிக்கியவர்களின் கதை சாலை நடுவே 3 பேரின் உயிரை பறித்த எஸ்யுவி கார் - சிசிடிவி காட்சி பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோரும் அடுத்தடுத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிஎன்எஸ் 285 (அலட்சியத்தால் பொதுவழியில் ஆபத்தை ஏற்படுத்துதல்), பிஎன்எஸ் 125 (a) -(அவசரமாக அல்லது அலட்சியமாக செய்யும் காரியத்தால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) மற்றும் 106(1) (அலட்சியத்தால் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் கீழ், பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. அமைச்சர் வருவதற்கு முன் அவசரமாக வைத்த தடுப்பு விபத்து நடந்த இடத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான கயல்விழி, விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு, அந்த இடத்தில் அவசர அவசரமாக தகரத்தாலான தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. அமைச்சர் வந்தபோது அங்கிருந்த ஆனந்தியின் தாயார், ''இத்தனை பேர் இருந்தும் இப்படி என் பிள்ளையை அநியாயமாக இறக்கவிட்டு விட்டீர்களே...இதையெல்லாம் முதலிலேயே செய்திருந்தால் இப்படி இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்களே...நான் இருக்கும்போது என் பிள்ளை போய்விட்டதே.'' என்று கூறி கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 'ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்' - பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்த ராஜ்நாத்சிங்5 மணி நேரங்களுக்கு முன்னர் சந்தாரா: 3 வயது குழந்தை சாகும் வரை உண்ணாவிரதம் - மதச்சடங்கா? கருணையற்ற நிகழ்வா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தீக்சனா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இறந்து போன இருவருக்காகவும் தலா 3 லட்ச ரூபாய், சிகிச்சை பெறும் தீக்சனாவுக்கு ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஏழு லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் போன உயிருக்கு இது எந்த வகையில் ஈடு செய்யும் என்று இறந்து போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைப் பணி செய்வோருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்து போலீசார் சமாதானம் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் பொள்ளாச்சி அருகில் சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் வாகனம் விழுந்ததில், அதில் இருந்த கான்கிரீட் கம்பிகளால் இருவர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் பெரியநாயக்கன்பாளையம் புதிய பாலத்தின் கீழே இருந்த நடுத்திட்டில் ஒளிர் விளக்கு இல்லாததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் நடுத்திட்டில் மோதி உயிரிழந்தார். சென்னையிலும் இதேபோன்று பல விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. ஆனால் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் யார் மீதும் பெரும்பாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. உரிய அடையாளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்காததால், சாலைப்பணிகளில் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே குற்றவியல் அலட்சியத்துக்கு பொறுப்பாவார் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலையில் ஓர் உத்தரவை வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்களை விட, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு: தேர்தல் அரசியலா? திசை திருப்பும் நடவடிக்கையா? - ஒரு விவாதம்5 மே 2025 முகலாயர்களின் ஆட்சி இருண்டகாலமா? - பாடப் பகுதிகள் நீக்கம் குறித்து அரசு கூறுவது என்ன?5 மே 2025 விபத்துகளை ஏற்படுத்தும் காரணிகள் சாலைகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு தரப்படும் கோல்டன் ஹவர் (விபத்து நடந்த முதல் ஒரு மணிநேரத்திற்குள் வழங்கப்படும் அதிஅவசர நிலை சிகிச்சை) சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டுமென்று 'உயிர்' அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முக்கியக் காரணமாக இருந்த கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், இந்த கோரிக்கையையும் வலியுறுத்தியிருந்தார். அதன்படி, இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில், விபத்துக்குக் காரணமாக இருந்த அதிகாரிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்ற 198 ஏ என்ற பிரிவு அதன்பின்பே சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,VIGNESH படக்குறிப்பு,தாராபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது ''இந்த விபத்து தொடர்பாக, உதவிப் பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஒரு நல்ல துவக்கமாக கருதுகிறோம். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த விபத்திலும் எந்த அதிகாரிகளையும் வழக்கில் சேர்ப்பதில்லை. இப்போது சேர்த்திருப்பதால், அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும், இத்தகைய தவறுகளை களையவும் வாய்ப்பு ஏற்படும்.'' என்றார் கதிர்மதியோன். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இன்ஜினியரிங் தவறே காரணம் என்பதை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இதுவரை 3 முறை ஒப்புக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கதிர்மதியோன், அதை ஒப்புக் கொள்வதால் மட்டும் விபத்துக்கள் குறைந்து விடாது என்கிறார். அதற்கேற்ப கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்கிறார் அவர். 20 வயதில் தொலைந்த பெண் 82 வயதில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?5 மே 2025 அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டால் விரைவில் மரணம் நெருங்குமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடக்கும் விபத்துக்களை அவர் பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார். * வேகத்தடை அமைத்துவிட்டு, அதற்கான அறிவிப்புப் பலகை வைக்காமலும், வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்காததாலும் விபத்துகள் நடக்கின்றன. * இந்திய சாலைக்குழும விதிகளின்படி, பெரும்பாலான வேகத்தடைகளை அமைக்காமல் இஷ்டத்துக்கு அமைப்பதும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன. * பல இடங்களில் வேகத்தடைக்கும், பாதசாரிகள் கடப்பதற்கும் ஒரே மாதிரியாக கோடுகள் அமைப்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசம் தெரியாமலிருப்பதும் விபத்துக்குக் காரணமாகிறது. பட மூலாதாரம்,VIGNESH படக்குறிப்பு, பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம் * ஒரே சாலையாக இருந்து அகலமான சாலையை இரு சாலையாகப் பிரிக்கும்போது, நடுத்திட்டில் ஒளிர் விளக்கு அமைக்காததால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. * சர்வீஸ் சாலைகளை ஒரே அளவில் அமைக்காமல் ஓரிடத்தில் அகலமாகவும், மற்றொரு இடத்தில் குறுகலாகவும் அல்லது வளைவாகவும் அமைப்பதும் விபத்துக்களுக்குக் காரணமாகிறது. * சாலைகளில் உள்ள குழிகளை அவ்வப்போது மூடாமல் இருப்பதால், குழியில் விழாமலிருக்க வாகனங்கள் வலது அல்லது இடது புறமாகத் திடீரெனத் திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. இத்தகைய விபத்துகள் அனைத்துக்கும் அந்தப் பணியை சரியாகச் செய்யாத அல்லது கண்காணிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காரணமென்று குற்றம்சாட்டுகிறார் கதிர்மதியோன். அல்காட்ராஸ்: மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு5 மே 2025 மேடையில் சரிந்த மின்விளக்கு - நொடியில் தப்பிய ஆ.ராசா5 மே 2025 'மண் சுவர் எழுப்பி கருப்பு வெள்ளை வர்ணமடிக்க வேண்டும்' இதே கருத்தை வலியுறுத்தும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணகுமார், ''ஒவ்வொரு ஒப்பந்தப் பணிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும்போது, அந்தப் பணியின்போது எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்பது குறித்து தெளிவாக அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் மிச்சம் பிடிப்பதே விபத்துக்கு வழிவகுக்கிறது.'' என்றார். சாலை விரிவாக்கத்துக்காக தோண்டும் மண்ணை வைத்து, குழியை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து, அதில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பதுடன், அதற்கு 100 மீட்டர் துாரத்துக்கு முன்பே, 'சாலைப்பணி நடக்கிறது, மெதுவாகச் செல்லவும்' என்றோ அல்லது மாற்றுப்பாதையில் செல்லவும் என்றோ அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணகுமார். நீளமான இடங்களில் மாற்றுப்பாதை அமைப்பது மிக முக்கியம் என்று கூறும் அவர், தற்போது பல இடங்களில் இதை அமைப்பதில்லை என்கிறார். தற்போது விபத்து நடந்த இடத்தில் எந்தவித தடுப்புகளும், எச்சரிக்கை அறிவிப்புகளும் இல்லாமல் அங்கு பணி நடந்ததற்கு, அந்த இடத்தை எந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்யாததுதான் காரணம் என்று கூறும் கிருஷ்ணகுமார், இப்போதுள்ள பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் அவர். பட மூலாதாரம்,VIGNESH படக்குறிப்பு, பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணகுமார் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ரமேஷ், ''அந்த இடத்தில் இரண்டு தடுப்புகளை வைத்திருந்துள்ளனர். இந்த விபத்து நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு, அவ்வழியே வேகமாக வந்த இளைஞரின் பைக் அந்தத் தடுப்புகள் மீது மோதியதில் வண்டியும் தடுப்புகளும் குழிக்குள் விழுந்துவிட்டன. ஆனால் அவர் மேலேயே சாலையில் விழுந்து விட்டார். அவரே எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்.'' என்றார். அந்தத் தடுப்புகள் இல்லாததால்தான், குழி இருப்பது தெரியாமல் நாகராஜ் வாகனத்துடன் உள்ளே விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இருவருடைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் தரப்பட்டிருப்பதுடன், உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ''அமெரிக்காவில் சாலை பாதுகாப்பு வாரியம் (Road Safety Board) என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு உள்ளது. அதற்கு தனித்துவமான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையின் தலையீடும் இல்லாத சாலை பாதுகாப்பு ஆணையத்தை (Road Safety Authority) மத்திய அரசு உருவாக்கி, அதற்கு சகலவித அதிகாரங்களையும் அளிக்க வேண்டும். அதுவரை இந்தியாவில் விபத்துக்களை குறைக்கவே முடியாது.'' என்கிறார் கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினராகவுள்ள கதிர்மதியோன். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c045wgg169lo
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நிறைவு : சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்! Published By: DIGITAL DESK 3 06 MAY, 2025 | 04:23 PM உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளதாகவும் அமைதியான முறையில் செயற்படுமாறும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், சற்றுநேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று இடம்பெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் குறித்து வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/213845
-
தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
06 MAY, 2025 | 01:19 PM 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் என தனது வாக்கை செலுத்திய பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல். எங்களின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற விடயம், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். அந்த வகையிலே எங்கள் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக நடத்தி வருகின்ற பிரச்சார முயற்சிகள் ஊடாக இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு, அனைவரும் கட்டாயம் வாக்குசாவடிகளிற்கு சென்று தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். எங்கள் அமைப்பு கடந்த 2010 ஆண்டு முதல் ஒரு நேர்மையான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது, கொள்கை என்ற விடயத்தில் நாங்கள் மிகவும் இறுக்கமாக உள்ளோம் அதிலே நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்ய தயாராகயில்லை. கொள்கை என்ற விடயத்தில் இணைவதற்கு தயாராகவுள்ள அனைத்து தரப்பினரையும் அரவணைத்துசெல்வதற்கு தயாராக உள்ளோம் என்பதை நாங்கள் அண்மைக்காலங்களில் நிரூபித்துள்ளோம். ஒரு சிலர் அந்த முயற்சியை ஏற்றுக்கொள்ளாமல் இனத்துடைய நலன்கருதி செயற்படாமலிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இந்த தேர்தலிலே சைக்கிள் சின்னத்திற்கு கிடைக்கின்ற ஆணை பலமாகயிருக்கின்ற பட்சத்திலே மற்றவர்களும் தவறிச்செல்கின்ற பாதையிலே இருந்து திரும்பி சரியான பாதைக்கு வருவதற்கு வழிவக்கும். இதன் காரணமாக மக்கள் அதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/213809
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த பெண் கைது 06 MAY, 2025 | 03:21 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவர் இருப்பதாக குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர். இது தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இஷாரா செவ்வந்தியின் விபரங்கள் : பெயர் - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வயது - 25 தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம https://www.virakesari.lk/article/213834
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம்! Published By: DIGITAL DESK 3 06 MAY, 2025 | 05:05 PM நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த வைகயில் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் மன்னார் மாவட்டத்தில் 70 சத வீத வாக்குப் பதிவுகளும் அநுராதபுரம் மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 64 சத வீத வாக்குப் பதிவுகளும் மொனராகலை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 58 சத வீத வாக்குப் பதிவுகளும் காலி மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும் வவுனியா மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 55 சத வீத வாக்குப் பதிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 67 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/213847
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பமானது. தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். இதற்கமைய பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் குறிந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். அத்துடன் அமைதிக் காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317535
-
'ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்' - பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்த ராஜ்நாத்சிங்
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,'பிரதமர் மோதி தலைமையின் கீழ் என்ன நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அது நடக்கும்' என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டபிறகு, இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதற்கிடையே இரண்டு நாடுகளின் அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட அரசியல்வாதிகள் பலர் இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி, பல கருத்துகள் இந்தியாவில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், 'இந்த நாட்டுக்கு எதிராகக் கண்களை உயர்த்துவோருக்கு' ராணுவத்துடன் சேர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பது தன்னுடைய கடமை என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ராஜ்நாத் சிங் அங்கு கூடியிருந்த சாதுக்கள், சாமியார்களை நோக்கி தனக்கு அவர்களின் ஆசி வேண்டும் என கூறினார் ராஜ்நாத் சிங் என்ன சொன்னார்? டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனாதன் சன்ஸ்கிருதி ஜாக்ரான் மஹோத்சவ நிகழ்ச்சியில் பேசினார் ராஜ்நாத் சிங். இந்த சமயத்தில் அவர் பஹல்காம் தாக்குதலையோ, பாகிஸ்தானையோ குறிப்பிடாமல் பல விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தினார். "ஒரு நாடாக, இந்தியாவின் பகுதிகளை நமது தைரியமான வீரர்கள் காத்து வருகிறார்கள். அதன் ஆன்மாவை சாதுக்களும், அறிஞர்களும் காத்து வருகிறார்கள். ஒரு பக்கம் போர்க்களத்தில் வீரர்கள் சண்டையிட்டால், மறுபக்கம் சாதுக்கள் நிலத்துக்குள் சண்டையிடுகிறார்கள்." என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் முன் கூறினார் பாதுகாப்பு அமைச்சர். "நண்பர்களே, ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சராக, இந்த நாட்டின் எல்லைகளை எனது வீரர்களோடு சேர்ந்து பாதுகாப்பது என் கடமை. இந்த நாட்டுக்கு எதிராக கண்களை உயர்த்துவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதும் என் கடமைதான்". அவருடைய இந்தக் கருத்துக்கு நிறைய கைதட்டல்களும், முழக்கங்களும் கேட்டன. இதற்குப் பிறகு ராஜ்நாத் சிங், "உங்கள் அனைவருக்கும் நம் பிரதமர் நரேந்திர மோதியை நன்றாகத் தெரியும். அவருடைய வேலை செய்யும் முறையும், உறுதிப்பாடும் நன்றாகத் தெரியும்". பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல் - என்ன நடந்தது? பஹல்காம் தாக்குதல் குறித்து முன்னாள் ரா தலைவர் அமர்ஜித் சிங் கூறுவது என்ன? போர் மூண்டால் சீனா பாகிஸ்தானுக்கு எந்தளவு உதவும்? பாகிஸ்தான் இறக்குமதிக்கு தடை - இந்தியாவின் முடிவால் விளைவு என்ன? "தனது வாழ்க்கையில் அபாயங்களை எதிர்கொள்வது எப்படி என்று அவர் நன்றாக கற்றுக் கொண்டார் என உங்களுக்குத் தெரியும். பிரதமர் மோதியின் தலைமையில் நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதெல்லாம் நடக்கும்". அதோடு, அங்கிருந்த சாதுக்கள் மற்றும் சாமியார்களிடம் ஆசீர்வாதம் கேட்ட ராஜ்நாத் சிங், அப்போதுதான் அர்த்தம் இழந்திருக்கும் அரசியல் என்ற வார்த்தையை இந்திய அரசியலில் மறு உருவாக்கம் செய்ய முடியும் என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோதி கூட்டம் நடத்தினார் யார் என்ன சொன்னார்கள்? இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகா குரு ராம்தேவும் தனது கருத்தை வெளியிட்டிருந்தார். 'பாகிஸ்தான் இந்தியாவுடன் போருக்கு வந்தால் நான்கு நாள் கூடத் தாங்காது. நாம் நமது அடுத்த குருகுலத்தை கராச்சியில் ஒன்று, லாகூரில் ஒன்று என ஆரம்பிப்போம்," என்று நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்திப் பேசினார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அரசியல்வாதிகளிடமிருந்து கருத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினரான மனோஜ் ஜா, "புல்வாமா எப்படி நடந்தது என்று இப்போது வரை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். புல்வாமா அறிக்கை வந்திருந்தால் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்காது. யாரோ ஒருவருடைய அறிக்கையை எடுத்து குழப்பம் விளைவிப்பதால் ஒன்றும் நடக்காது. இந்த நாடு ஒரே குரலில் சிந்திக்க வேண்டும்," என்று பாட்னாவில் குறிப்பிட்டார். கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற ஒரு ஊர்வலத்தில், ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைஸி, "இப்படிப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் நிற்க வேண்டுமென்றால், பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகள் மீதும், பாகிஸ்தான் போன்ற தோற்ற நாட்டின் மீதும் நாட்டின் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு நேரமும் அதன் பின்னணியும்6 மணி நேரங்களுக்கு முன்னர் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டால் விரைவில் மரணம் நெருங்குமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் என்ன சொன்னார்? இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தானின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற பயத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப். அதோடு அப்படி நடந்தால் பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும் என்பதையும் சேர்த்தே தெளிவாகக் கூறுகிறார். சமீபத்தில் பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவாஜா ஆசிஃப், 'ஒருவேளை பாகிஸ்தானுக்கு வரக்கூடிய நீரைத் தடுக்கவோ, திசை மாற்றவோ கூடிய அணைகளையோ கட்டடங்களையோ கட்டினால் அவை அழிக்கப்படும்," என்று கூறியிருக்கிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, 1960-ல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வது உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸில் வரும் 'நயா பாகிஸ்தான்' நிகழ்ச்சியில் பேசியபோது, "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி தண்ணீரை நிறுத்தவோ, திசை திருப்பவோ கட்டடங்கள் கட்டினால் அதை பாகிஸ்தான் மீதான தாக்குதலாகத்தான் கருதுவோம். அந்தக் கட்டடத்தை அழிப்போம்," என்றார் பாதுகாப்பு அமைச்சர். "சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல. அது பாகிஸ்தான் மீதான போர்தான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் தாக்குவது மட்டும் தாக்குதல் அல்ல, அதில் பல வகைகள் உள்ளன. அதில் இது ஒன்று. இதனால் இந்த நாட்டு மக்கள் பசியாலும், தாகத்தாலும் இறந்து போகலாம்." என்றார் அவர். இதற்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கு, இந்தியாவில் கடுமையான எதிர்வினை இருந்தது. பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில், 'சிந்து நதியில் ஒன்று தண்ணீர் பாய வேண்டும் அல்லது அவர்களின் ரத்தம் பாய வேண்டும்' என்றார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய நீர்மின் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் போன்ற இந்தியாவின் பெரிய தலைவர்கள் இந்தக் கருத்துக்குத் தீவிரமான எதிர்வினை ஆற்றியுள்ளனர். ஆனால் பிபிசியுடனான உரையாடலில், 'சராசரி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை' மட்டுமே தான் பிரதிபலித்ததாகத் தன் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் பிலாவல் பூட்டோ. அல்காட்ராஸ்: மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு5 மே 2025 மேடையில் சரிந்த மின்விளக்கு - நொடியில் தப்பிய ஆ.ராசா5 மே 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலிருந்து அனைத்துவித இறக்குமதிகளையும் இந்தியா தடை செய்துள்ளது பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது இந்தியா. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தது தவிர பாகிஸ்தானில் இருந்து எல்லா விதமான இறக்குமதியையும் நிறுத்தி வைத்துள்ளது இந்தியா. அதே நேரத்தில், இந்தியத் துறைமுகங்களுக்குள் பாகிஸ்தானியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றொரு உத்தரவை கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. "அடுத்த உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லா விதமான இறக்குமதிகளும் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது" என்று மே 2ம் தேதி வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) அறிக்கை வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை , கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், "1958ஆம் ஆண்டு வணிக கப்பல் சட்டத்தின் 411ம் பிரிவைப் பயன்படுத்தி இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடி பறக்கும் எந்தக் கப்பலும், எந்த இந்தியத் துறைமுகத்திலும் அனுமதிக்கப்படாது. அதேபோல், இந்தியக் கொடி பறக்கும் எந்தக் கப்பலும் பாகிஸ்தானின் எந்தத் துறைமுகத்துக்குள்ளும் போகாது," என்று தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல்: சென்னை விமான நிலையத்திற்கு போலி மின்னஞ்சல் - என்ன நடந்தது?5 மே 2025 திருமணத்துக்கு ஆன்லைனில் வரன் தேடும்போது மோசடிகளை தவிர்க்கும் 10 வழிகள்5 மே 2025 பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் எதிர்வினையாற்றியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் செயல்படுத்தப்படும் எல்லா விமானங்களுக்கும் தன் வான்வெளியில் அனுமதி மறுத்துள்ளது பாகிஸ்தான். வாகா எல்லையும் மூடிவைக்கப்பட்டுள்ளது. சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் SAARC விசா தள்ளுபடி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விசாக்களை நிறுத்தி வைத்துள்ள பாகிஸ்தான், அவை ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றிருக்கிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgp2nk6236o
-
பலத்த மின்னல் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published By: VISHNU 05 MAY, 2025 | 05:42 PM பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/213753
-
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பும் வாக்குகள் எண்ணப்படும் முறையும்!
ந.ஜெயகாந்தன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு கிடைத்த வாக்கு விகித அடிப்படையில் ஆசனங்கள் பகிரப்பட்டு விருப்பு வாக்கினை அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவர். ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் அவ்வாறானது அல்ல. உள்ளூராட்சி பிரிவு பல வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு கலப்பு விகிதாசார முறையிலேயே நடத்தப்படுகின்றது. அதேபோன்று வாக்குச் சீட்டும் மற்றைய தேர்தல் வாக்குச் சீட்டுகளை போலல்லாது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் சுயேச்சைக் குழுவின் இலக்கம் மற்றும் சின்னம் ஆகியவற்றை கொண்டதாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்குச் சீட்டுகள் வித்தியாசப்படும். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் விகிதாசார முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்தப்பட்ட போதும், 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கமைய அதன் பின்னர் அந்தத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடத்தப்படுகிறது. கலப்பு விகிதாசார முறை என்றால் என்ன? ஏதேனும் ஒரு உள்ளூர் அதிகார சபையில் வட்டார மட்டத்திலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை கலப்பு விகிதாசார முறையாகும். குறிப்பாக வட்டார மட்டத்தில் 60 வீதமும் விகிதாசார அடிப்படையில் 40 வீதமும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். வட்டாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை எவ்வாறு கணிக்கப்படும்? சனத்தொகை மற்றும் நிலத்தின் அளவு என்பன தொடர்பாகவும், இன ரீதியான அடிப்படையிலும் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வட்டாரங்களும் உறுப்பினர் எண்ணிக்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கமைய நாடு முழுவதும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் அடங்கலாக 341 உள்ளூராட்சி சபைகளுக்காக 4919 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரங்களில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4750 வட்டாரங்களும், இரண்டு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 165 வட்டாரங்களும், மூன்று உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4 வட்டாரங்களும் உள்ளன. இந்த வட்டாரங்களில் இருந்து மொத்தமாக 5092 உறுப்பினர்கள் (60 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர். இதேவேளை குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைக்கு சகல வட்டாரங்களிலும் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகுதி 3264 உறுப்பினர்கள் (40 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர். எனினும் இம்முறை கல்முனை மாநகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்காகவே மே 6 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாக்குச் சீட்டின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்? தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பெயர்களும் சிங்கள மொழி அகராதியின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு வாக்குச் சீட்டில் மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு கீழே தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட இலக்கங்களின் பிரகாரம் சுயேச்சைக் குழுக்களது இலக்கங்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு முன்பாகவும், சுயேச்சைக் குழுக்களுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் அச்சிடப்படுவதுடன், அச்சின்னங்களுக்கு முன்பாக புள்ளடி இடுவதற்கான வெற்றுக்கூடும் காணப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வட்டார மட்டத்திலும் விகிதாசார மட்டத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையின் கீழ் கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர்களினதும் பெயர்ப்பட்டியல் வாக்காளர்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தவிர குறித்த அட்டவணையில் உள்ளபடி கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர் பெயர்ப்பட்டியல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு குறித்த வாக்களிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும். இதன் பிரகாரம் வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்படாவிட்டாலும், தமது வாக்கினை அளிக்கவிருக்கும் கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர் தொடர்பாகவும், மேற்குறிப்பிட்ட அட்டவணையின் மூலம் தாம் விரும்பிய வேட்பாளர் யாரென்பதனையும் அறிந்து கொள்ள முடியும். இதன்படி தமக்குரிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு தேவையான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்த பின்னர், வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் கட்சிகளின் பெயர் அல்லது, சுயேச்சைக் குழுவுக்கு முன்பாக குறிப்பிடப்பட்டுள்ள சின்னத்திற்கு முன்பாக காணப்படும் வெற்றுக்கூண்டில் புள்ளடி இட்டு வாக்கை பதிவு செய்ய வேண்டும். வாக்கெண்ணும் நிலையங்கள் எவ்வாறு அமைக்கப்படும்? ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமிடத்து, அதே வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணல் நடத்தப்படும். ஒரு வட்டாரத்தினுள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருக்குமிடத்து, தெரிவத்தாட்சி அலுவலரால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு வாக்களிப்பு நிலையத்திலோ, அல்லது வாக்களிப்பு நிலையங்களிலோ வாக்குகள் எண்ணப்படும். உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு? இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படும் போது முக்கியமாக நான்கு விடயங்கள் கவனம் செலுத்தப்படும். இதன்படி ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் மற்றும் பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் என்பனவாகும். ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் குறித்த வட்டாரத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோன்று பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும். இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும். ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும். இதற்கு ஏற்றால் போன்று ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பாளர் பட்டியல்கள் வட்டார அடிப்படையிலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அமைக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்நிலையில் வட்டார முறையில் இந்தத் தேர்தல் நடைபெற்றமையினால் தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது கேட்டு விலகினால் அல்லது வேறேதேனும் காரணத்தினால் வெற்றிடம் ஏற்படுமிடத்து இடைத்தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்பதுடன், வெற்றிடத்திற்காக ஒருவரைப் பெயர் குறித்து நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் செயலாளர் கொண்டுள்ளார். இதன்படி அந்த இடைவெளி நிரப்பப்படும். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317505
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் 04 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் Published By: VISHNU 05 MAY, 2025 | 07:32 PM இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. வியட்நாம் ஜனாதிபதி மாளிகையில் திங்கட்கிழமை (05) இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. இதன்போது, வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான இயந்திர உற்பத்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்,வியட்நாம் விவசாய விஞ்ஞான அகாடமிக்கும் இலங்கை விவசாயத் திணைக்களத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் வியட்நாமின் இராஜதந்திர அகாடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவர் நிறுவனத்திற்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் (MoU) கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளல், இராஜதந்திரிகள், நிபுணர்கள்,அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் அதேபோன்று, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்ச்சிகள், பல்வேறு பாடநெறிகள், கருத்தரங்குகள், இராஜதந்திரத் துறையில் ஏனைய கல்வி நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி தொடர்பான நிபுணத்துவத்தை ஒழுங்கமைக்கவும் பரிமாறிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினருக்கும் பொருத்தமான வர்த்தகத் தகவல் மற்றும் சந்தை நுண்ணறிவு பரிமாற்றம், இரு நாடுகளிலும் நடைபெறும் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் ஊக்குவிப்பு வாய்ப்புகளில் கூட்டு பங்கேற்பு மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பரந்த அளவில் வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு வகையான வாய்ப்புகளை வழங்கும். இந்த இணக்கப்பாடுகள் ஊடாக குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், கடற்றொழில் நடவடிக்கைகள், ஆடைக் கைத்தொழில் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட விவசாயத்திற்கு குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்புகளை இரு நாடுகளுக்கும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/213760
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக நிரூபிக்க வேண்டியது கட்டாயம்: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து
அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர் ஒன்றியத்தால் இன்றையதினம் வெளியிடப்பட் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகெங்கிலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டில் நடாத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூறும் மே மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தமிழ்ச் சமூகத்திற்கான தெளிவூட்டல். தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை குறைவடைந்து இருக்கும் இந்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாறி மாறி வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் என்.பி.பி முலாம் பூசப்பட்ட ஜே.வி.பி அரசும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது கொண்ட அதிருப்தி தேசிய மக்கள் சக்திக்கு, தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றது என்ற விம்பத்தினை அளித்திருக்கின்றது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாத கட்சி, தாம் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இலங்கையில் இனமுரண்பாடு இல்லை என்றும் சர்வதேச ரீதியில் கூறுகின்றது. ஆனால் இவர்கள் ஆட்சி பீடம் ஏறி 06 மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்றவர்கள் இன்று வரை ஒழிக்கவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று கூறியவர்கள் இன்று வரை அதனை நீக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி வேதனைகளை அறிவோம் என்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நீதியும் வழங்கவில்லை. இன்றளவும் அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை, நில அபகரிப்பும், சிங்கள பௌத்தமயமாக்கலும் தமிழர் நிலங்களில் தொடர்ச்சியாக இன்றளவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. உயர் பாதுகாப்பு வலயங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமையின் அடிப்படையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்க தயாரில்லை. இவ்வாறான காலப்பகுதியில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தாங்கள் விட்ட தவறினை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமே இது. அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். தென்னிலங்கை தரப்புக்களைப் புறக்கணித்து உங்களுடைய கிராமங்களில் உள்ள உங்களுக்கு நம்பிக்கையான, நேர்மையான இறந்தகாலத்தைக் கொண்ட தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களை உங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களினை நெஞ்சில் நிறுத்தி உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமாக கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/317548
-
ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்; ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக வரவேற்பு Published By: VISHNU 04 MAY, 2025 | 09:16 PM வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார். இலங்கை மற்றும் வியட்நாம் தேசியக் கொடிகளை ஏந்திய வியட்நாம் மக்களால் ஜனாதிபதிக்கு அதன் நுழைவாயிலில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. விகாரை வளாகத்தை சுற்றிப் பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை காண வீதியின் இருபுறமும் ஏராளமானோர் கூடியிருந்தனர், மேலும் அவர்கள் இரு நாடுகளின் தேசியக் கொடிகளையும் அசைத்து தமது மரியாதையை செலுத்தினர். ஜனாதிபதி, விகாரையில் வழிபாடு நடத்திய பிறகு, தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். பின்னர், ஜனாதிபதி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதியை வழிபட்டதுடன், இந்த போதி, 2023 ஆம் ஆண்டு பாய் டின் (Bai Dinh) விகாரை வளாகத்தில் நடுவதற்காக இலங்கையிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையாகும். இலங்கை மத்திய கலாசார நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போதியை சுற்றி நிர்மாணிக்கப்பட்ட மதிலையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விகாரை வளாகத்தில் சால் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையையும் பார்வையிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விகாராதிபதி தேரருக்கு நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/213674
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 54th Match (N), Dharamsala, May 04, 2025, Indian Premier League LSG chose to field. Punjab Kings (20 ov) 236/5 Current RR: 11.80 • Last 5 ov (RR): 75/2 (15.00) Lucknow Super Giants Win Probability: PBKS 85.41% • LSG 14.59%