Everything posted by ஏராளன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
எதிர்பாராத கிளைமாக்ஸ்: 112 ரன் இலக்கை எட்ட விடாமல் கேகேஆரை சுருட்டிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் வியூகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,க. போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் முலான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்களில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் ரசிகர்களுக்கு மற்றொரு அருமையான விருந்தாக இந்தப் போட்டி அமைந்தது. கொல்கத்தாவின் வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆட்டம் நகர நகர இருக்கையின் நுனியில் முடிவு அமரவைத்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி முடிவில் பஞ்சாப் அணி வென்றபோது யாருமே எதிர்பாராத முடிவாக அமைந்தது. கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 245 ரன்கள் சேர்த்து, அதை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்தது. இந்த ஆட்டத்தில் அதே பஞ்சாப் அணி குறைந்த ஸ்கோரை எடுத்து டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது இதுதான் ஐபிஎல் தொடரின் அழகு. பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தாவின் திட்டமிட்ட பந்துவீச்சு கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் பஞ்சாப் அணியின் பேட்டர்களை தாக்கியது. இதனால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிரியன்ஸ் ஆர்யா(22), பிரப்சிம்ரன் சிங்(30) நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அதிவேகப்பந்துவீச்சில் இருவராலும் துல்லியமான ஷாட்களை அடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ்(0), ஜோஸ் இங்கிலிஸ்(2) என நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் சுனில் நரைன், வருண் இருவரும் சேர்ந்து பஞ்சாப் பேட்டர்களை மிரட்டினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய நேஹல் வதேரா(10), மேக்ஸ்வெல்(7), சஷாங் சிஹ்(18) என வரிசையாக சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்தது. 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி, 57 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. வருண், நரைன் இருவரும் 7 ஓவர்கள் பந்துவீசி, 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'15 ஏப்ரல் 2025 தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணியின் பதிலடி 111 ரன்களை டிபெண்ட் செய்வது கடினமானது என்ற போதிலும் பஞ்சாப் அணி முயன்று பார்க்கலாம் எனக் களமிறங்கியது. யான்சென், பார்ட்லென்ட் இருவரின் பந்துவீச்சும் துல்லியமாக இருந்தது. யான்சென் வீசிய முதல் ஓவரில் பந்து லேசாக ஸ்விங் ஆகி ஸ்டெம்பை தாக்கவே நரேன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பார்லெட் வீசிய ஓவரில் டீகாக் பெரிய ஷாட்டுக்கு முயலவே சூர்யான்ஷிடம் கேட்சானது. 3வதுவிக்கெட்டுக்கு ரகுவன்ஷி, ரஹானே கூட்டணி நம்பிக்கையளித்து ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தி, 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்பம் தந்த சஹல் சஹல் வீசிய 8வது ஓவரில்தான் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது. சஹல் வீசிய ஓவரில் கால்காப்பில் வாங்கி ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே ஆட்டமிழந்தவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியது, களநடுவர் தவறான முடிவை வழங்கினார் என ரீப்ளேயில் தெரிந்தநிலையில், ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்யாமல் வெளியேறினார். இந்த தருணத்தை சஹல் பயன்படுத்தி ஆட்டத்தை வசப்படுத்தினார். நிதானமாக ஆடிய ரகுவன்சி 37 ரன்களில் சஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சஹலின் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைவாகவும் பந்துவீச்சில் வேகத்தை மாற்றி அமைத்து வேரியேஷனோடு வீசியதால், பேட்டர்கள் ஆடுவதற்கு சிரமப்பட்டனர். இதனால் ரிங்குசிங் (2) ரன்னில் சஹல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டா், ராமன்தீப் சிங் வந்தவேகத்தில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர்(7) கால்காப்பில் வாங்கி மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெளியேறினார். 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 14 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையை அடைந்தது. வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்த கொல்கத்தா அணியினருக்கு இந்த நிலைமை பதற்றத்தை அளித்தது. வென்றது சிஎஸ்கே: ஒற்றை கையால் சிக்சர் அடித்த வின்டேஜ் தோனி14 ஏப்ரல் 2025 20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு13 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மிரட்டிய ரஸ்ஸல் கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்கால் இருந்ததால் அந்த அணிக்கு நம்பிக்கை சற்று உயிருடன் இருந்தது. ரஸ்ஸல் கடந்த 25 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 92 ஆக இருந்ததால் எவ்வாறு பேட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்சித் ராணா 3 ரன்னில் யான்சென் பந்தில் க்ளீன் போல்டாகினார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை, 2 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. சஹல் வீசிய ஓவரில் ரஸ்ஸல் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் வைபவ் அரோரா இருந்தார், அரோராவை அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அர்ஷ்தீப் வீழ்த்தினார். 15வது ஓவரை யான்சென் வீசினார், முதல் பந்தை ஆப்சைடு விலக்கி வீசவே அதை கிராஸ்பேட் மூலம் சிக்ஸருக்கு ரஸல் அடிக்க முயன்றபோது இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார். 17 ரன்னில் ரஸல் ஆட்டமிழக்கவே பஞ்சாப் அணி அபாரமான வெற்றியைப் பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணி அசத்தல் கடந்த சீசனில் இரு அணிகளும் மோதியபின் இப்போதுதான் விளையாடுகிறார்கள். கடந்த சீசனில் பஞ்சாப் அணி அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது, ஈடன் கார்டனில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்து வரலாற்றில் பதிவு செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே 111 ரன்கள் எனும் குறைந்த ஸ்கோரை அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்த அணி என்ற வரலாற்றை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணியை டிபெண்ட் செய்ததுதான் சாதனையாக இருந்தது அதை பஞ்சாப் முறியடித்துவிட்டது. வெற்றியை தவறவிட்ட கொல்கத்தா ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்று வலுவாக இருந்தது, 98% கொல்கத்தா வெற்றி என்று கணினியின் கணிப்பு தெரிவித்தது. ஆனால், அர்ஷ்தீப் சிங், யான்சென், சஹல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆட்டத்தையே திருப்பியது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் நுனுக்கமான கேப்டன்சியும்தான் காரணம். யுவேந்திர சஹல் மீண்டும் ஒரு அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார். இருவரின் பங்களிப்பு பஞ்சாப் அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்கதாகும். மிரட்டல் சதம் விளாசியதும் அபிஷேக் எடுத்துக் காட்டிய பேப்பரில் என்ன எழுதியிருந்தது? அவர் கூறியது என்ன?13 ஏப்ரல் 2025 தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கணிக்க முடியாத ஆடுகளம் ஆடுகளத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. சராசரியாக 0.5 டிகிரிதான் சீமிங் இருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான இருந்தாலும் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இரு அணிகளிலும் பேட்டர்களும் பெரிய எதிர்பார்ப்புடன்தான் ஆட்டத்தை அணுகினாலும் ஆடுகளத்தின் தன்மையை விரைவாக உணர முடியவில்லை. பஞ்சாப் அணி முதல் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது, ஆனால், அடுத்த 17 பந்துகளில் 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்குள் பஞ்சாப் இழந்தது. கொல்கத்தா அணியும் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 38 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என வெற்றிக்கு அருகே சென்றது. ஆனால் சஹல், யான்சென் பந்துவீச்சில் அடுத்த 33 ரன்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா. கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் சேர்த்த 3வது குறைந்தபட்சமாகும். 2009ம் ஆண்டுக்குப்பின் 100 ரன்களுக்குள் கொல்கத்தா அணி ஆட்டமிழந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் கொல்கத்தா சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோராகும். பட மூலாதாரம்,GETTY IMAGES "தோல்விக்கு நானே காரணம்" தோல்வி அடைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், "இந்த தோல்விக்கு நான்தான் காரணம். தவறான ஷாட்களை ஆடமுற்பட்டு ஆட்டமிழந்தேன். இதிலிருந்துதான் சரிவு தொடங்கியது. அந்த நேரத்தில் நான் டிஆர்எஸ் எடுத்திருக்க வேண்டும் தவறவிட்டேன். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது, 111 ரன்கள் சேஸ் செய்யக்கூடியதுதான். ஆனால் நாங்கள் மோசமாக பேட் செய்தோம் என ஒப்புக்கொள்கிறோம். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். வலுவான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த பஞ்சாபை குறைந்த ரன்னில் சுருட்டியது பாராட்டுக்குரியது. நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம், அணியாக தோல்விக்கு பொறுப்பேற்கிறோம். பல விஷயங்கள் என் தலைக்கு மேல் இருக்கிறது, வேதனையாக இருக்கிறது இந்த தோல்வி, நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டு, வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா - இரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் இஸ்ரேலுக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?15 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாசின் அபார வியூகம் போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ்,"ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை நான் பார்த்தேன். சாஹலிடம் முடிந்தவரை நாம் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். நான் பேட்டிங் செய்யச் சென்ற போது இரண்டு பந்துகளை எதிர்கொண்டேன், ஒன்று சற்று தாழ்வாக வந்தது. ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. நாங்கள் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த ஆடுகளத்தில் நாங்கள் நல்ல ஸ்கோரையே எடுத்துள்ளோம். ஆடுகளத்தில் பந்து ஒரே போல் பவுன்ஸ் ஆகவில்லை இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த அவர்களின் இரண்டு பேட்டர்கள் ஆட்டத்தை எதிரணியை நோக்கி திருப்பத் தொடங்கினர். ஆனால் சாஹலின் பந்தைத் திருப்பத் தொடங்கிய போது, எங்கள் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்தன. ஃபீல்டர்கள் பேட்ஸ்மேன்களைச் சுற்றி நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் அவர்கள் வெவ்வேறு ஷாட்களுக்கு முயற்சித்து எங்கள் வலையில் வீழ்வார்கள் என்று கணித்தேன். இந்த வெற்றி எங்களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும்." என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் கூடுதல் தகவல்கள் இன்றைய ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்: டெல்லி நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)- 329 ரன்கள் (6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 295 ரன்கள் (6 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c078v9p5xg5o
-
ஸ்மார்ட்போனுக்கு கவர் அவசியமா? பரிசோதனைக்காக கவர் போடாத செய்தியாளரின் போன் என்ன ஆனது?
பட மூலாதாரம்,ISA ZAPATA கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மார்ட்ஃபோன்கள் முன்பை விட உறுதியாக வடிவமைக்கப்படுவதால், ஒரு சிலர் தொலைபேசிகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கவர்கள் (போனின் பின்பக்கத்தை பாதுகாக்க பயன்படுவது) கோழைகளுக்கானது என்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களுடன் இணைந்து, போனை கவர் இல்லாமல் பயன்படுத்த முடிவு செய்து, நிபுணர்களின் ஆலோசனையை பெற்றேன் . போன் உடைவதற்கு வாய்ப்புள்ளது என மனதளவிலும் என்னைத் தயார் செய்துகொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு, நான் புதிய ஐபோன் வாங்க ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குச் சென்றேன். பல்வேறு போன் மாடல்கள் மற்றும் புது வரவுகளை பார்த்த பிறகு, ஒரு விற்பனையாளர் அதன் விலை 1,199 அமெரிக்க டாலர் (919 யூரோ) என்று கூறினார். அதன் விலை நான் செலுத்தும் ஒரு மாத வாடகைத் தொகைக்கு கிட்டத்தட்ட சமமாக இருப்பதாக நான் கூறிய போது, "ஆச்சர்யமாக உள்ளது அல்லவா?" என்று சிரித்தபடியே கூறிய அந்த விற்பனையாளர், "இப்போது சில போன் கவர்களைப் பார்ப்போம்" என்றார். இது தான் போன் வாங்குவதன் அடுத்த கட்டம். ஆனால் மொபைல் ஃபோன்களின் விலை விண்ணை எட்டும்போது, அதனை வாங்கும் சில வாடிக்கையாளர்கள் வேறு வழியைக் கடைபிடிக்கின்றனர். அவர்கள் தங்கள் போனை, கடினமான பகுதிகள் மற்றும் தூசிகளுக்கு இடையே எந்த பாதுகாப்பும் இல்லாமல் அல்லது போனின் திரையை எந்த பாதுகாப்பும் இன்றி உபயோகிக்கிறார்கள். நான் அறிந்த சிலர் இவ்வாறு தான் செய்கிறார்கள். அவர்களின் போன்கள் பளபளப்பாக உள்ளன, டைட்டானியம் பிரேம்களும் கவனமாக வடிவமைக்கப்பட்ட திரையுடன் இருக்கின்றன. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன், கவலையற்று உள்ளனர். இதைக் குறித்து நான் தான் அதிகம் யோசித்துக்கொண்டே இருக்கிறேனா ? போனை கவர் இல்லாமல் பயன்படுத்துவதற்கு எனது பயம் தான் தடையாக உள்ளதா ? " இது எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்" என்று ஒரு நண்பர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்னிடம் கூறினார். தனது போனை கவர் இல்லாமல் பயன்படுத்தும் அவர், பெருமையுடன் தனது ஐபோனை என்னிடம் கொடுத்தார். அது கவர் இல்லாமல் மிகவும் அழகாக இருந்தது, அதை பிடித்துக்கொள்ளவும் எளிதாக இருந்தது. "இப்போது போன்களை வலிமையாக உருவாக்குகிறார்கள். நான் அடிக்கடி அதை கீழே போடுவேன், அது நன்றாகத் தான் உள்ளது" என்றார் அந்த நண்பர். பட மூலாதாரம்,ISA ZAPATA படக்குறிப்பு,புதிய ஃபோன்கள் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தால் கூட தப்பித்துவிடும் போன் திரையில் உள்ள கண்ணாடியை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், போன்களுக்கு கவர் உபயோகிப்பதை எதிர்ப்பவர்கள் மற்றும் போன்களின் வலிமையை பரிசோதிக்க அதனை சேதப்படுத்துபவர்களுடன் நான் மேற்கொண்ட உரையாடல்களின்படி, அவர் சொல்வது சரிதான் என எனக்குத் தோன்றுகிறது. நவீன ஸ்மார்ட்போன்கள் அதன் பழைய மாடல்களை விட மிகவும் வலுவானவை என நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும், எனக்குத் தெரிந்த பெரும்பாலான மக்கள் இன்னும் போனின் பாதுகாப்புக்காக கவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படியானால் இங்கு போனை சரியாக பயன்படுத்துவது யார் தான் ? நான் இதை கண்டுபிடிக்க முடிவு செய்தேன். வீட்டிற்கு வந்ததும், எனது போனின் கவரைக் கழற்றி வைத்துவிட்டு, கவர் இல்லாமல் போனைப் பயன்படுத்த முடிவு செய்தேன். அதைப் பற்றிய ஒரு யோசனையை எனது பத்திரிக்கை ஆசிரியரிடம் பரிந்துரைத்தேன். அவர் இந்த யோசனையை விரும்பினார், ஆனால் நான் அதனை சோதனை செய்யும்போது, போனுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு பிபிசி பணம் செலுத்தாது என்று கூறிவிட்டார். அமெரிக்கா - இரான் சமாதானத்தால் இஸ்ரேலுக்கு என்ன கவலை? -மோதல் நிகழ்ந்தால் யாருக்கு இழப்பு?4 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சுயாட்சி: பேரவையில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார்? மூவர் குழு உறுப்பினர்களின் பின்னணி என்ன?15 ஏப்ரல் 2025 கண்ணாடியில் விரிசல் சிலர் தங்களின் போன்களை கவர் இல்லாமல் பயன்படுத்துவதை , தங்களது அந்தஸ்தின் அடையாளச் சின்னமாக கருதுகிறார்கள் என நிறைய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக, நான் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர்களை நேர்காணல் செய்யும்போது, அவர்கள் தங்களின் போன்களை கவருடன் பயன்படுத்துவத்தை மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. "எனது போன் உடைந்துவிட்டால் 'அதை என்னால் மாற்ற முடியும்' என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை, இது வெளித்தோற்றத்தைப் பற்றியது அல்ல. நான் எனது நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பே, எனது போனுக்கு கவர் பயன்படுத்தாதவனாகவே நான் இருந்தேன்" என்று டிஜேக்களுக்கான (இசைப் பதிவுகளை வாசிக்கும் கலைஞர்கள்) நேரடி ஆடியோ தளமான பிளாஸ்ட் ரேடியோவின் தலைமை நிர்வாகி யூசெப் அலி கூறுகிறார். இதுகுறித்து பேசிய அவர், " 1,000 டாலர் [766 யூரோ] மதிப்புள்ள ஆடம்பர போனை, அதன் அழகிய வடிவமைப்புக்கு ஆசைப்பட்டு வாங்கிவிட்டு, அதற்குப் பதிலாக 30 டாலர்[23 யூரோ ] மதிப்புள்ள பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்துவது எனக்கு முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இது துணியைப் பாதுகாக்க வேண்டி, அதன் மேல் பிளாஸ்டிக்கை விரிப்பது போன்று உள்ளது. என்னிடம் விலையுயர்ந்த கால்சட்டை உள்ளது என்றால், அதனைப் பாதுகாக்க கூடுதல் ஜோடி கால்சட்டை அணிய வேண்டுமா? இது எங்கே சென்று முடியும்" என்று கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES போனுக்கு கவர் இல்லாமல் பயன்படுத்தத் தொடங்கிய முதல் வாரம் எனக்குச் சற்று பயமாக இருந்தது என்பதை நான் மறுக்க மாட்டேன். இது ஒரு ஆபத்தான விளையாட்டு. டிரெண்டுகள் வரும் போகும். ஆனால் எனது தொலைபேசி தரையில் விழுந்து உடைந்துவிடும் என்ற கற்பனையில் பயப்படுவதை விட, நான் இதுகுறித்த உண்மைகளை அறிய விரும்புகின்றேன். நீங்கள் இதை ஒரு போனில் படித்துக் கொண்டிருந்தால், நீங்கள் வாசிக்கும் திரை 'கொரில்லா கிளாஸ்' என்ற தொழில்நுட்பத்தால் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இது கார்னிங் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற இது, திரை உடைவதை தடுக்கும் தன்மை கொண்ட ஒரு தொழில்நுட்பமாக செயல்படுகின்றது. ஆப்பிள், கூகுள், ஹவாய், சாம்சங் உள்ளிட்ட அனைத்து முக்கியமான தொலைபேசி நிறுவனங்களும் , தங்களது பெரும்பாலான செல்போன் திரைகளில் கொரில்லா கிளாஸ் அல்லது கார்னிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வேறு ஏதாவது ஒன்றை பயன்படுத்துகின்றன. சைகை மொழியில் சதி செய்து கொலை - அதே பாணியில் வழக்கை முடித்த போலீஸார்15 ஏப்ரல் 2025 ராஜமன்னார் குழு: மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் மாநில சுயாட்சி பரிந்துரைகள் என்ன?15 ஏப்ரல் 2025 பழைய மாடல்கள் மற்றும் குறைந்த விலையில் விற்கப்படும் பிராண்டுகள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இந்த சந்தையை கார்னிங் நிறுவனமே கைப்பற்றி வைத்துள்ளது. கொரில்லா கிளாஸை தயாரிக்கும் செயல்முறையானது, முதலில் 400°C வெப்பத்தில் உள்ள உருகிய உப்பு நீரில் கண்ணாடியை மூழ்கடிப்பதன் மூலம் தொடங்குகிறது. "இந்த உப்புக் குளியல், கண்ணாடியில் இருக்கும் லித்தியம் போன்ற சிறிய அயனிகளை வெளியே இழுத்து, அதற்குப் பதிலாக பொட்டாசியம் போன்ற பெரிய அயனிகளை சேர்க்கிறது," என்கிறார் கார்னிங் நிறுவனத்தில் தொழில்நுட்பத் தலைவர் லோரி ஹாமில்டன். "இதனால் கண்ணாடியின் மேற்பரப்பில் 'அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வகை அடுக்கு' உருவாகிறது. இதனால், சின்னச் சிதைவுகள் அல்லது கீறல்கள் கண்ணாடிக்குள் ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுகிறது." சுருக்கமாகச் சொன்னால், இது கண்ணாடியை ஒன்றாக இணைக்கிறது. அதனால் கண்ணாடி வலுவாகவும், எளிதில் உடையாததாகவும் மாறுகிறது. கார்னிங்கின் ஆராய்ச்சியில், என்ன தவறு நடக்கிறது என்று அறியவும், அதை எவ்வாறு தடுப்பது என்பதைக் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், அதனை பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி சோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். கண்ணாடியில் ஏற்படும் பாதிப்புகளைச் சோதிக்கும் சிறப்பு இயந்திரங்கள், நாம் பயன்படுத்தும் வாகனங்களின் சாவி ஆகியவற்றுடன் தொலைபேசியை ஒரு டம்ளரில் வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, எதிர்பாராத விதமான சேதங்கள் எப்படி ஏற்படுகின்றது என்பதை புரிந்துகொள்வதற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து உடைந்த போன்களையும் கார்னிங் நிறுவனம் சேகரிக்கிறது. பட மூலாதாரம்,ISA ZAPATA படக்குறிப்பு,போனுக்கு கவர் வேண்டுமா என்பதை ஆப்பிள் நிறுவனம் கூறாது, ஆனால் அதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் விற்கும் "பின்னர் 'ஃபிராக்சர் அனாலிசிஸ்' (fracture analysis) எனப்படும், சிஎஸ்ஐ வகையிலான (துப்பறியும் தொழில்நுட்பத்தைப் போன்ற) ஒரு பரிசோதனையை நாங்கள் மேற்கொள்கிறோம். அதில், முதலில் கண்ணாடி எப்படி உடைந்தது என்ற மூல காரணத்தை கண்டுபிடிக்க, மிகச் சிறிய துண்டுகளைக் கவனமாக ஆய்வு செய்கிறோம்," என்கிறார் ஹாமில்டன். உங்கள் மொபைல் போன் உடைந்தால், பெரும்பாலான நேரங்களில் திரையே முதலில் பாதிக்கப்படும். ஆனால் ஹாமில்டன் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது. இன்று உள்ள ஸ்மார்ட்போன்களின் திரை மிகவும் வலுவானது. 2016ல், கார்னிங் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரில்லா கிளாஸ் 5 ஆய்வகத்தில் 0.8 மீட்டர் (2.6 அடி) உயரத்திலிருந்து விழுந்தாலும் உடையவில்லை. 2020-இல் வந்த கொரில்லா கிளாஸ் விக்டஸ், 2 மீட்டர் (6.6 அடி) உயரத்திற்கு மேல் இருந்து விழுந்தும் நன்றாக இருந்தது. சமீபத்தில் அறிமுகமான கொரில்லா ஆர்மர் 2, சாம்சங் அல்ட்ரா S25 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.2 மீட்டர் (7.2 அடி) உயரத்திலிருந்து கீழே விழுந்த போதும், பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தொலைபேசி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அதன் உருவாக்கம், மற்றும் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன. சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? - இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு நடந்தது என்ன?15 ஏப்ரல் 2025 அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?15 ஏப்ரல் 2025 2024ஆம் ஆண்டு, மொபைல் பாதுகாப்பு திட்டங்களை விற்கும் காப்பீட்டு நிறுவனமான ஆல்ஸ்டேட் வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டில் இருந்த 87 மில்லியனுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு 78 மில்லியன் அமெரிக்கர்களின் ஃபோன்கள் சேதமடைந்துள்ளது. "உடைக்க முடியாதது" என்ற வார்த்தையை நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று ஹாமில்டன் கூறுகிறார். "எப்போதும் சில தோல்விகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் ஆழமான ஒரு குறைபாடோ அல்லது சரியான கோணத்தில் வளைந்ததாலோ கண்ணாடி உடையும்." ஆனால், ஒரு தொலைபேசிக்கு கவரைத் தவிர்ப்பது நியாயமான முடிவாக இருக்கலாம் எனக் கூறும் ஹாமில்டன், இது தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. "இறுதியில், ஒரு ஃபோன் என்பது ஒரு முதலீடு தான்," என்கிறார். "நான் ஸ்கிரீன் கவர் பயன்படுத்த மாட்டேன், ஆனால் உண்மையாக வேறு ஒரு கவர் மட்டும் உபயோகிக்கிறேன்." இது பாதுகாப்புக்காக அல்ல. அது பணம் வைக்கும் கவர். "எனக்கு கார்டு, பணம் வைக்க இடம் தேவை என்பதால் தான் அதனைப் பயன்படுத்துகிறேன்" என்கிறார் ஹாமில்டன் . "அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியது." "கொரில்லா கிளாஸ் ஐபோனுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய மாடல்கள் 'நானோ-செராமிக் படிகங்களால்' செய்யப்பட்ட 'செராமிக் ஷீல்ட்' என்ற கார்னிங் கிளாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஐபோன் 16-க்கான செராமிக் ஷீல்டின் சமீபத்திய மாடல், வேறு எந்த ஸ்மார்ட்போனின் கண்ணாடியிலும் கிடைக்கும் கண்ணாடியைவிட '2 மடங்கு கடினமானது' என்று ஆப்பிள் கூறுகிறது. "அந்த படிகங்களும் அயனிகளும் என்னை மொபைல் கவருக்கு பணம் செலவிடாமல் காப்பாற்றுவதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உற்பத்தியாளர்கள் கலவையான செய்திகளை தெரிவிக்கிறார்கள். பீங்கான்களின் அதிசயக் கூறுகளால் உருவாக்கப்பட்ட போனை, ஆப்பிள் நிறுவனம் உங்களிடம் விற்கும். ஆனால் ஆப்பிள் லோகோவுடன் முத்திரையிடப்பட்ட ஒரு கவரை உங்களுக்கு விற்பனை செய்வதிலும் அந்நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. எனது ஐபோன் விற்பனையாளர் 49 டாலர் (38 யூரோவுக்கு) ஒரு அழகான நீல நிற கவரைப் பாருங்கள் என்று பரிந்துரைத்தார். அப்படியென்றால், ஐபோனுக்கு கவர் தேவையா? ஆப்பிள் நிறுவனம் அப்படி கூறவில்லையே என்று கேட்டதற்கு, ஒரு விற்பனையாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மறுபுறம் போன்களுக்கான கவர்களை உற்பத்தி செய்யும் ஸ்பைஜென், இதுகுறித்து பேசுவதில் மகிழ்ச்சியடைந்தது. ஸ்பைஜென் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டின் மா கூறுகையில், "ஃபோன்கள் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளன என்பது உண்மைதான். ஆனால், இந்த முன்னேற்றங்கள் இருந்த போதிலும், அவை எப்போதும் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது," என்கிறார். பட மூலாதாரம்,APPLE ஆனால் ஜஸ்டின் கட்டாயமாக போனுக்கு ஒரு கவர் தேவை என்று கூற மாட்டார். "எல்லா போனுக்கும் ஒரு கவர் தேவை எனக் கூறுவோம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில், அது ஒவ்வொருவரின் தேவைக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப மாறுபடும்," என்கிறார் அவர். சிலர் கவர் இல்லாமல் போனின் பயன்பாட்டை அனுபவிக்க நினைக்கிறார்கள். சிலர் அதிகபட்ச பாதுகாப்பை விரும்புகிறார்கள். மற்றவர்கள் அழகுக்காகவே கவர் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஒவ்வொருவரின் காரணம் எதுவாக இருந்தாலும், அதிகமான மக்கள் போனுக்கு கவர் பயன்படுத்துகிறார்கள். ஜஸ்டின் கூற்றின் படி, ஸ்பைஜென் தயாரிக்கும் கவர்கள் மட்டும் 100 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 'Towards Packaging' என்ற ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, 2024ஆம் ஆண்டில் உலகளாவிய ஃபோன் கேஸ் சந்தை கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் (19 பில்லியன் யூரோ) மதிப்பைத் தொட்டுள்ளது. சமையலறையில் நின்று ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துக்கொண்டே, தூங்கச் செல்வதற்கு முன் சற்று நேரம் தொலைபேசியை உபயோகிக்கலாம் என நான் நினைத்தேன். போனை பாக்கெட்டிலிருந்து இழுத்தபோது, எனது விரல்கள் நழுவின. பளபளப்பான எனது ஐபோன் காற்றில் சுழன்று, குளிர்சாதனப் பெட்டியின் அருகே மோதி, எனது காலடியில் விழுந்தது. நான் அதனை எடுத்துப் பார்த்தபோது எனது ஃபோன் நன்றாகவே இருந்தது . அதற்கு வலிமையான கண்ணாடியோ, ஒரு வேளை அதிர்ஷ்டமோ அல்லது எனது மென்மையான லினோலியம் தரையோ காரணமாக இருக்கலாம். ஐபோன் கவர்களைப் பயன்படுத்தாத வடக்கு கரோலினாவைச் சேர்ந்த தம்பதியரில் ஒருவரான ஜோன்னா வாலண்டேவைப் பொருத்தவரை, ஒருவர் கவர் இல்லாமல் தொலைபேசியை உபயோகிப்பது, அறிவியல் மற்றும் அந்தஸ்தைப் பற்றியதல்ல. "நான் கடைசியாக ஃபோன் வாங்கும்போது, என் மகள் அதற்காக இளஞ்சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தாள். அவள் அதைக் கண்டு ஆனந்தப்பட்டதால், அதற்கு மேல் ஒரு கவர் போட நான் விரும்பவில்லை," என்கிறார் அவர். டைப்-5 நீரிழிவு என்ற புதிய வகை நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரக் கூடும்?15 ஏப்ரல் 2025 "எங்களை கேலி செய்வார்கள், வேடம் கட்டினால் நாங்கள் தெய்வம்" - இவர்கள் என்ன சொல்கிறார்கள்?15 ஏப்ரல் 2025 அதன் பிறகு போனுக்கு கவர் வாங்குவது குறித்து வாலண்டே சிந்திக்கவில்லை. பின்னர், கவர் இல்லாமல் இருப்பது தன் ஃபோனுடன் உள்ள உறவை மாற்றிவிட்டதென அவர் உணர்ந்தார். "எனது விரல்களின் மூலம் நான் ஃபோனை பிடிப்பதால், அதைப் பற்றிய விழிப்புணர்வு எனக்குள் அதிகரிக்கிறது," எனக் கூறும் அவர், "இது தொலைபேசி பற்றிய எனது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. முன்பு போல் கண்மூடித்தனமாக அதில் மூழ்குவதில்லை. நான் இதைச் சொல்வதை என்னாலே நம்ப முடியவில்லை, ஆனாலும் உண்மையில் நான் இப்போது ஃபோனை குறைவாக பயன்படுத்துவதாக உணர்கிறேன்"என்கிறார். வாலண்டே சொல்வதைக் கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அதையே என்னால் கூற முடியாது. நான் முன்பு இருந்ததைப் போலவே இணையத்தை எப்போதும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். ஒரு துளி நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில், Consumer Reports என்ற இதழில் நான் பணிபுரிந்தேன். அங்கே ஒரு முழுமையான ஆய்வகம் இருக்கிறது, இதில் பொறியாளர் குழுக்கள் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாகப் பொருட்களை மதிப்பீடு செய்யவும் விமர்சிக்கவும் அறிவியல் சோதனைகளை வடிவமைத்துள்ளனர். என் அலுவலகத்துக்கு அருகே, பல ஆண்டுகளாக ஃபோன்களை மதிப்பீடு செய்து வரும் ஒரு குழு இருந்தது. தொலைபேசிகளின் வலிமையைச் சோதிக்க Consumer Reports அவற்றை உடைக்கும் முறைகளைப் பயன்படுத்துகிறது. இதுகுறித்த உண்மையைக் கண்டுபிடிக்க ஒருவரால் முடியும் என்றால், அது நான் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் சக ஊழியரான ரிச் பிஸ்கோதான். "நாங்கள் இதை 'டிராப் டெஸ்ட்' (கீழே நழுவ விட்டு சோதனை செய்வது) என்று அழைக்கிறோம்," என்கிறார் நுகர்வோர் அறிக்கைகளின் மின்னணு சோதனைத் துறைத் தலைவர் ரிச் பிஸ்கோ. "போன்கள் மூன்று அடி நீளமுள்ள, இருபுறங்களிலும் கான்கிரீட் பலகைகள் உள்ள உலோகப்பெட்டிக்குள் வைக்கப்படுகின்றன. பின்னர் அந்த பெட்டி 50 முறை சுழலும், ஒவ்வொரு முறையும் தொலைபேசி கான்கிரீட்டில் மோதி விழும்." சோதனை முடிந்ததும், ஒரு பொறியாளர் அவற்றை பரிசோதிக்கிறார். "அது சேதமின்றி தப்பித்தால், அந்த ஃபோனை மீண்டும் பெட்டிக்குள் வைத்து, இன்னும் 50 முறை சோதனை நடத்துகிறோம்," என்று கூறுகிறார் பிஸ்கோ. டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 சிஎஸ்கேவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ஷேக் ரஷீத் - புதியவர்களுக்கான வாய்ப்பு தொடருமா?15 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,ISA ZAPATA படக்குறிப்பு,கவர் இல்லாமல் போன் உபயோகிப்பது சமூக அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது "டிராப் முறை சோதனைகள் முதலில் தொடங்கிய காலத்தில், மூன்றில் ஒரு பகுதி போன்கள் தோல்வியடையும்" என்கிறார் பிஸ்கோ. "ஆனாலும், பல ஆண்டுகளாக டிராப் சோதனையில் தோல்விடையும் போன்களைக் காண முடிவதில்லை. கண்ணாடியின் தரம் மிகவும் மேம்பட்டிருக்கிறது. அவை மிகவும் சிறப்பாக செயல்படுவதாகத் தோன்றுகிறது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். "அதாவது, திரையில் கீறல் ஏற்படாது என்று நான் கூறவில்லை. போனை நேரடியாக கீழே போட்டாலும், அல்லது அது ஒரு சிறிய கல்லில் விழுந்தாலும், அதற்கு விடையளிக்க வேண்டிய நேரம் வரும். ஆனால், நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது உங்கள் பாக்கெட்டிலிருந்து உங்கள் தொலைபேசி விழும்போது, அது உடைவதற்கான வாய்ப்பு குறைவு" என்று ஃபிஸ்கோ கூறுகிறார். "உண்மையில், இப்போது நீங்கள் ஒரு போன் கவர் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால், நீங்கள் கவர் இல்லாமல் போன்களை பயன்படுத்தும் அபாயத்தை எதிர்கொள்ள தயாரா என்பது தான்? ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு ஃபோன்கள் டிராப் டெஸ்டில் தேர்ச்சி பெறுவதைக் காட்டும் முடிவுகளை ஃபிஸ்கோ வெளியிட்டாலும், அவர் இன்னும் தனது சொந்த ஃபோனை ஒரு கவரில் பாதுகாத்து வைத்திருக்கிறார். "நிச்சயமாக நான் போனுக்கு கவர் பயன்படுத்துவேன். நான் பணத்தை இழக்க விரும்பவில்லை" என்கிறார் அவர். ஒரு மாதம் முழுவதும் போனுக்கு கவரில்லாமல் இருந்த 26வது நாளில், நான் அவசரமாக வெளியே புறப்பட்டேன். எனது கட்டடத்தின் படிக்கட்டுகளின் உச்சியில் நின்று, வேலைக்குச் செல்லும் வழியைச் சரிபார்க்க என் ஃபோனை எடுத்தேன். அடுத்த நிமிடம் நிழல் போல மங்கியது. ஒருவேளை நான் கவனக்குறைவாக இருந்திருக்கலாம் . என் கையில் இருந்த போன் திடீரென்று என் முன்னால் உருண்டு போனது. முதலாவது, இரண்டாவது, என மூன்றாவது படிகளில் உருளத் தொடங்கி, இறுதியில் கடைசி படிக்கட்டில் விழுந்தது. நான் அச்சத்துடனே நின்று கொண்டிருந்தேன். நான் அதை எடுப்பதற்காக கீழே விரைந்து சென்றேன். ஆச்சரியமாக, என் ஐபோனின் அலுமினியம் விளிம்பின் மூலையில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதிசயமாக, அதன் ஐபோனின் திரை பாதிக்கப்படாமல் இருந்தது. எனது பரிசோதனையின் மீதமுள்ள நாட்களில், நான் அதை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பாக நடந்துகொண்டேன் . மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, எனது போனை இறுக்கமாகப் பிடித்துகொண்டேன், அதை வெளியே எடுக்கும்போதும், உள்ளே வைக்கும் போதும் எச்சரிக்கையோடு செயல்பட்டேன், மொத்தத்தில் அதை சற்றே குறைவாகவே பயன்படுத்தினேன். 'நிரந்தரமாக காது கேட்காமல் போகலாம்' - இயர்போன், ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? மொபைலில் அதிகம் ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? 90'ஸ் மற்றும் 2கே கிட்ஸ்கள் போனில் பேச விரும்பாதது ஏன்? ஆய்வில் புதிய தகவல் இறந்தவர்களின் ஜிமெயில், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் என்ன ஆகும்? டிஜிட்டல் உயில் பற்றி தெரியுமா? மறுபுறம், என் நண்பருக்கு அந்தளவுக்கு அதிர்ஷ்டம் இல்லை. அடுத்த முறை நாங்கள் பூங்காவில் சந்தித்தபோது, அவருடைய தொலைபேசி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். "மோசம்" என்றார். "நான் கீழே தவற விட்டேன். போனின் முன்பக்கமும், கேமரா லென்ஸும் உடைந்துவிட்டன." என்றார். அதனை முதன்முதலில் முரண் என்று கூறியது அவர்தான். அவர் பழைய ஐபோன் ஒன்றைத் தான் பயன்படுத்துகிறார். ஒருவேளை புதிய செராமிக் திரை இருந்திருந்தால், அது அவரை காப்பாற்றியிருக்கலாம் அல்லது காப்பாற்றாமலும் போயிருக்கலாம். உற்பத்தியாளர்கள் உங்கள் போனின் திரைக்கு எத்தனை முறை உப்பு குளியல் முறையால் பாதுகாப்பு அளித்தாலும், கண்ணாடி என்பது உடையக்கூடியது தான். ஆனால் எனது கைகளை விட உறுதியான கைகள் (வசதி வாய்ப்புள்ளவராக) இருந்தால், சில அபாயங்களை ஏற்கத் தயாராக இருந்தால், ஒரு ஃபோன் கவர் என்பது உண்மையில் தேவையற்ற ஒன்று தான் என இப்போது எனக்கு உறுதியாய் தோன்றுகிறது. போனை சோதிக்க நான் எடுத்துக்கொண்ட ஒரு மாத காலம் முடியும்போது, எனது நரம்புகள் தளர்வடைந்துவிட்டன. நான் ஒரு இறுக்கமான நுண்கயிற்றில் நடந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை போன் கீழே விழும்போதும் , அது தப்பியிருந்தாலும், அது கைகளில் இருந்து தவறி விழும் ஒவ்வொரு முறையும், அது எனக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. இறுதியில், நான் போனுக்கு கவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். ஆனால் ஒவ்வொரு முறையும் போன் கீழே தவறும்போது ஏற்படும் சாகசமான அனுபவத்தை உணர்வதற்காகவும், எனது போன் அதன் திரையில் காற்றை உணர்வதற்காகவும், அதனை அவ்வப்போது நழுவ விடுகிறேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77n6g7p3j4o
-
மாகாண சபைகளை வலுப்படுத்த ஆளுநர்களின் அதிகாரங்களை குறையுங்கள் - அரசாங்கத்திடம் தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை
16 APR, 2025 | 09:30 AM அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை வரவேற்றிருக்கும் தேசிய சமாதானப் பேரவை மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பில் 'பொருளாதாரத்தை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அவசரமான சீர்திருத்தங்கள் தேவை' என்ற தலைப்பில் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படவிருக்கும் வரிகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மூன்று மாத கால அவகாசம் கிடைத்திருக்கிறது. இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குவதால் இந்த வரி விதிப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச் சலுகையை தற்போது அனுபவித்துவரும் இலங்கை அதன் ஏற்றுமதி சந்தைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இதையொத்த சவாலை எதிர்நோக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிக்குறைப்பு சலுகையை இலங்கை தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமானால் மனித உரிமைகள் தொடர்பான 27 விசேடமான சமவாயங்களை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பா அல்லது இந்தியா என்று எந்த முக்கியமான வல்லரசுடனும் ஒத்துழைப்பு உறவுமுறையொன்றைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானது என்ற யதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு அரசியல் தலைமைத்துவம் உட்பட இலங்கையர்கள் பழகிக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.பி.ப்ளஸ் வரிச்சலுகை தொடர்ந்து கிடைப்பதற்கு இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விதந்துரைக்கும் தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் 2021 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது என்பதை தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்ட விரும்புகிறது. 1979ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அடாத்தான கைதுகள், நீண்டகால தடுப்புக்காவல், மட்டப்படுத்தப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை குற்றவாளிகளாக காண்பது ஆகியவற்றுக்கு அனுமதிக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதன் காரணத்தினால் பரந்தளவில் மிகவும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வரலாறு ஒன்று இருக்கிறது. விசாரணைகளை துரிதப்படுத்தாமல் அரசாங்கங்கள் ஆட்களை நீண்டகாலத்துக்கு தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் அனுமதித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான விதப்புரைகளைச் செய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் செய்த அறிவிப்பை தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது. பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமலேயே குற்றச் செயல்களைக் கையாளக்கூடிய சட்டங்கள் இருக்கின்றன. அவை மிதமிஞ்சியவையாக உள்ளன என்று பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டத்தை ஒழிப்பது தொடர்பாக ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச் சலுகையை புதுப்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வித்தக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக நோக்கப்படக்கூடாது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை, போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்காலத்தில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளித்தல் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு தீராவுகளைக் காண்பதற்கு துரிதமானதும் பயனுறுதியுடையதுமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் ஒன்றின்போது பிரதமர் அமரசூரிய மீண்டும் மோதல்கள் மூலம் மக்களுக்கு சுமையை ஏற்றக்கூடாது என்றும் நாடு பூராகவும் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் உறுதி செய்வதில் அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்றும் கூறியதையும் நாம் வரவேற்கிறோம். பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக மூடப்பட்டிருந்த முக்கியமான வீதி ஒன்று மீண்டும் மக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியடனனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதையும் தேசிய சமாதானப் பேரவை வரவேற்கிறது. பயங்கரவாத தடைச்சட்ட விடயத்தில் செய்ததைப் போல மாகாண சபை முறையை வலுப்படுத்துவது குறித்தும் மாகாணங்களின் ஆளுநர்களின் அதிகாரங்களைக் குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை வலுவூட்டுமுகமாக கூடுதல் அதிகாரங்களையும் நிதி வளங்களையும் ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆராய்வதற்கு அமைச்சர்கள் மட்டக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம். இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக பொருளாதாரத்தயும் பரந்தளவில் நாட்டையும் முன்னேற்றுவதில் மனப்பூர்வமாக பங்கேற்கக்கூடியதாக நாட்டு மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். https://www.virakesari.lk/article/212090
-
வெப்பநிலை குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கடும் வெப்பநிலை எச்சரிக்கை! Published By: DIGITAL DESK 3 16 APR, 2025 | 10:54 AM நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தவிர்க்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும். அதிளவு நீர் பருகவும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்கவும். வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுங்கள். வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வெப்பநிலை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/212096
-
"மே 2009 கொடூரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்" - பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்
"மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது"- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் Published By: RAJEEBAN 16 APR, 2025 | 10:24 AM முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - இது புதிய ஆரம்பங்கள் பிரதிபலிப்புகள் மற்றும் நம்பிக்கைகளிற்கான தருணம்.மேலும் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள தமிழ் சமூகத்திற்காக பரப்புரை செய்வதற்கான எனது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு தருணம். தமிழ் பாரம்பரியத்தின் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது. எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம்,வலிமை மற்றும் மீள் எழுச்சியின் கதை. பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி இலங்கையிலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை,பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும். இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மாக்னி;ட்ஸ்கி பாணி தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன். அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை. 15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம். ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன். மாவீரர் தினத்தன்று வெளிவிவகார குழுவின் அமர்வில் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசென்றேன்.நீதி உண்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நான் உறுதியாக நம்புவதனால் நான் இதனை செய்தேன். இவை அருவமான கொள்கைகள் இல்லை,தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை இவை ஆழமானவை தனிப்பட்டவை. மே 2009 கொடுரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்,மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள்,'பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டவைகள் . காணமல்போன ஆயிரக்கணக்கானோர். மனித குலத்தின் மிகமோசமானவற்றை எதிர்கொண்டு தப்பிய தலைமுறை இன்னமும் சுமக்கும் அதிர்ச்சிகள் காயங்கள். நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது. பிரிட்டனில் நான், ஆயிரம்நாட்களிற்கு மேல் டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த தமிழர்கள் உட்பட தமிழ் அகதிகளிற்காக குரல்கொடுத்துள்ளேன். முன்னைய கென்சவேர்ட்டிவ் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் முட்டுக்கட்டை நிலையில் விடப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான பரப்புரைகளின் பின்னர் அவர்களிற்கு பிரிட்டனில் பாதுகாப்பான புகலிடம்வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212094
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Punjab Kings 111 Kolkata Knight Riders (11.3/20 ov, T:112) 76/6 KKR need 36 runs in 51 balls. Current RR: 6.60 • Required RR: 4.23 • Last 5 ov (RR): 19/4 (3.80) Win Probability:KKR 73.23% • PBKS 26.77 Kolkata Knight Riders (11.4/20 ov, T:112) 76/7 KKR need 36 runs in 50 balls. அடுத்தடுத்து விக்கெட் போகுதே!
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 பந்துகள் முறைமையில் மாற்றம் கொண்டு வர ஐசிசி பரிசீலனை; டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 செக். நடைமுறையும் பரிசீலனை
15 APR, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்துவருகிறது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 60 செக்கன் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலனை செய்து கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. துடுப்புக்கும் பந்துக்கும் (bat and ball) இடையில் சமநிலையைப் பேணும் முயற்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது. ஹராரேயில் இந்த வாரம் நடைபெற்ற ஐசிசி கூட்டங்களின்போது 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டது. பிரதம நிறைவேற்று அதிகாரிகளிடம் சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் குழுவினர் இந்த சிபாரிசை முன்வைத்தனர். தற்போது நடைமுறையில் உள்ளவாறு ஒவ்வொரு இன்னிங்ஸும் இரண்டு பந்துகளுடன் ஆரம்பமாகும். ஆனால், புதிய சிபாரிசின் பிரகாரம், 34ஆவது ஓவருக்குப் பின்னர், இரண்டு பந்துகளும் 17 ஓவர்கள் பழையதாக இருக்கும்போது, களத்தடுப்பில் ஈடுபட்டுள்ள அணி எந்த பந்தை வீச விரும்புகிறது என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படும். தேர்வு செய்யப்படாத பந்து, தேவைப்பட்டால் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்படும். முன்னதாக 25 ஓவர்களுக்குப் பின்னர் பந்தை மாற்றுவதற்கான பரிந்துரையை கிரிக்கெட் குழு முன்வைத்திருந்தது. ஆனால், குழு உறுப்பினர்கள் மத்தியில் இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு பந்தும் 17 ஓவர்களைப் பூர்த்திசெய்த பின்னர் எந்தப் பந்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது என்பதே பொருத்தமானது என குழு கருதியது. இந்த மாற்றம் குறித்து இந்த மாத இறுதிக்குள் கிரிக்கெட் சபைகள் தங்களது கருத்துக்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடயத்தில் சபைகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இந்த சிபாரிசு சம்பிரதாயபூர்வமாக முறைப்படுத்தப்படும். இது விளையாட்டுடன் தொடர்புடைய மாற்றம் என்பதால் ஐசிசியின் ஒப்புதல் தேவையில்லை எனக் கூறப்படுகிறது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு பந்துகள் என்ற விதிமுறை ஐசிசியனால் 2011இல் அமுல்படுத்தப்பட்டது. 1992 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து 2011வரை ஒரு இன்னிங்ஸில் பயன்படுத்தப்படும் பந்தை 34ஆவது ஓவருக்கு பின்னர் கட்டாயம் மாற்ற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வந்தது. வெள்ளைப் பந்துகளின் நிறம் மங்கிவிடுவதால் எளிதாகப் பார்க்கக்கூடிய பந்து 35ஆவது ஓவரிலிருந்து பயன்படுத்தப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 60 செக், நிறுத்தக் கடிகாரம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் 60 செக்கன்கள் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலித்து தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. மந்தகதி ஓவர் வீதத்தைக் கட்டுப்படுத்தும் இந்த விதிமுறை கடந்த வருடத்திலிருந்து ரி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்படுகிறது. குறிப்பிடப்பட்ட மற்றும் சலுகை நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசத் தவறும் அணிகளுக்கு 30 யார் வட்டத்திற்குள் ஒரு கூடுதல் வீரரைக் கொண்டுவருவது உட்பட அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/212033
-
சைகை மொழியில் சதி செய்து கொலை - அதே பாணியில் வழக்கை முடித்த போலீஸார்
கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பை காவலர் ஒருவரின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மகன், ஒரு சிக்கலான குற்றத்தை எவ்வாறு தீர்த்தார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மும்பையின் நெரிசலான தாதர் ரயில் நிலையத்தில் ஒரு சூட் கேஸில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், காது கேளாதவர்களாகவும், வாய் பேச முடியாதவர்களாகவும் இருந்தனர். இதனால், மும்பை காவல்துறை இந்த வழக்கை தீர்ப்பதிலும், விசாரணையிலும் பல சிரமங்களை எதிர்கொண்டனர். இறுதியாக, ஒரு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவரின் மகன் இந்த வழக்கின் மர்மத்தைத் தீர்த்தார். இந்த வழக்கு மும்பையில் உள்ள பைதுனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பைதுனி காவல்துறை, தாதர் ரயில்வே காவல்துறை மற்றும் மும்பை காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் விசாரணை நடத்தின. படக்குறிப்பு,தாதர் ரயில் நிலையம் என்ன நடந்தது? சம்பவம் நடந்தது தாதர் ரயில் நிலையத்தில். அன்று 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஆகும். நேரம் இரவு 11:50 மணி இருக்கும். ரயில் நிலையத்தில் மக்கள் தங்களுக்கான ரயில்களைப் பிடிக்க அவசர அவசரமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். அது தாதர் ரயில் நிலையம் என்பதால், வழக்கம் போல் உள்ளூர் ரயில்களும், விரைவு ரயில்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. திங்கள்கிழமை இரவு தாதரில் இருந்து சாவந்த்வாடி செல்லும் துடாரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பயணிகள் 11வது நடைமேடையில் காத்திருந்தனர். துடாரி எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்ததும், பயணிகள் ரயிலில் ஏற விரைந்தனர். அந்த 11வது நடைமேடையில் ஐந்து, ஆறு ஆகிய பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில், இரண்டு பேர் துடாரி எக்ஸ்பிரஸில் ஏறச் சென்றார்கள். அவர்கள் இருவரிடமும் சக்கரங்கள் கொண்ட ஒரு சூட்கேஸ் இருந்தது. அதனை ரயிலில் ஏற்ற அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். பெட்டியின் அதிக எடை காரணமாக இருவரும் தங்களது உடைமைகளை ரயிலில் ஏற்றுவதற்குள் சோர்ந்துவிட்டனர், வியர்வையில் அவர்களது உடைகள் நனைந்தன. 'U'-க்கு பதிலாக 'Y' எழுதியதால் சிக்கிய கொலையாளி - பெண் காவலர் கொலையில் 9 ஆண்டு மர்மம் தீர்ந்தது எப்படி?9 ஏப்ரல் 2025 சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் - தெருநாய் உதவியால் கொலை செய்தவர் கிடைத்தது எப்படி?4 ஏப்ரல் 2025 கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது13 ஏப்ரல் 2025 அந்த சமயத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் மாதவ் கேந்திரா நடைமேடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள், இருவரையும் தடுத்து நிறுத்தி பெட்டியை திறக்கச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் தயக்கம் காட்டினார்கள். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் , பெட்டியின் மோசமான நிலையைப் பார்த்து, அதைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, திறந்து பார்த்த பிறகு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதில் இரத்த வெள்ளத்தில் ஒரு உடல் இருந்தது. அந்த உடலின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. உடனடியாக காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார், மற்றவர் பிடிபட்டார். காவல்துறையினர் அந்த நபருடன் பையையும் கைப்பற்றி உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர் பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கினர். கைது செய்யப்பட்ட நபர், காது கேளாதவர். இதன் காரணமாக, ஆரம்பத்தில் அவரிடமிருந்து எந்த தகவலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். படக்குறிப்பு,விசாரணையில் காவல்துறைக்கு உதவிய கௌரவ் சத்புதே பாராட்டப்பட்டார். சைகை மொழி அறிந்த ஒருவரை தேடிய காவல்துறை இந்த வழக்கில் காவல்துறை அதிக ஈடுபாடு காட்டினாலும் கூட, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, நள்ளிரவில், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மக்களின் சைகை மொழியை அறிந்த ஒருவரை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆனால், நள்ளிரவு ஆகிவிட்டதே, இப்போது யார் வருவார்கள்? இந்த வழக்கின் மர்மத்தை தீர்ப்பது எப்படி? என்று கேள்விகள் எழுந்தன. சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி, பைதுனி காவல்துறையின் ஒரு குழு சென்றது. அந்தக் குழு நள்ளிரவில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சோதனைச் சாவடி பகுதியை அடைந்தனர். அந்த நேரத்தில், ஆர்.ஏ.கே கித்வாய் மார்க் காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே ரவுப் பணியில் இருந்தார். சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் தாதர் காவல்துறையின் வாகனத்தில் இருந்தவர்களிடம், "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டுள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக உதவி பெற, சைகை மொழி அறிந்த ஒருவரைத் தேடி 'சாதனா வித்யாலயா' என்னும் பள்ளிக்கு செல்வதாக தாதர் காவல்துறை தெரிவித்துள்ளது. அப்போது, அங்கு இருந்த கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, "இந்த நேரத்தில் யாரும் கிடைக்க மாட்டார்கள். ஆனால், என் மகனும் அந்தப் பள்ளியில்தான் படித்தான், அவன் உங்களுக்கு உதவ வாய்ப்பு உள்ளதா என பார்க்கலாம்" என்று கூறியுள்ளார். பைதோனி காவல்துறையினர், சத்புடேவிடம் உடனடியாக உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அதிகாலை 2 மணிக்கு, மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சத்புடே தனது வீட்டிற்குச் சென்றார். சிறிதும் தாமதிக்காமல், தனது மகன் கௌரவ் சத்புடேவை பைதோனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். 'மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன் நான்' - 5 போர்களை கண்ட செங்கல்பட்டு ஜெனரல் சுந்தர்ஜியின் கதை8 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது?12 ஏப்ரல் 2025 கௌரவ் மூலம் கிடைத்த முக்கியமான தகவல்கள் அதிகாலை 2 மணிக்கு குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்பு கொள்ள காவல்துறை குழு கௌரவிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்தது. கௌரவ் சைகை மொழியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். கைதான நபர் தனது பெயர் ஜெய் சாவ்தா என கூறினார். இதன் பின்னர் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தது, ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, விசாரணைக்குத் தேவையான முக்கியமான தகவல்கள் கிடைத்தன. இது குற்றப் பின்னணி, இணை குற்றவாளிகள் மற்றும் குற்றத்தின் நோக்கம் பற்றிய விரிவான தகவல்களை காவல்துறைக்கு வழங்கியது. பிபிசி மராத்தியிடம் பேசிய கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே, "நானும் என்னுடைய மகனும், இந்திய குடிமக்களாக எங்களது கடமையை நிறைவேற்றினோம்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கௌரவ், சாதனா வித்யாலயாவில் 10ஆம் வகுப்பு வரை படித்தார், மேலும் மஸ்கான் டாக் லிமிடெட்டில் 'பைப் ஃபிட்டர்' படிப்பை முடித்தார். அவர் தற்போது வீட்டில் இருக்கிறார். என் காவல்துறை சகாக்களுக்கு இந்த வழக்கில் உதவி தேவைப்பட்டதும், என் மகன் உடனடியாக உதவினான். கௌரவின் முயற்சியால், இந்த வழக்கு பற்றிய முழு தகவலையும் காவல்துறையினரால் பெற முடிந்தது. கௌரவ் மாற்றுத்திறன் கொண்ட ஒருவராக இருந்தாலும், எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வார். அவர் புத்திசாலி." என்றார். விசாரணையில் தெரியவந்தது என்ன? விசாரணையின் போது, தப்பித்து ஓடிய குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் ஷிவ்ஜித் சிங் என்பது தெரிய வந்தது. அவர் உல்ஹாஸ் நகரில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. உள்ளூர் காவல்துறை மற்றும் ரகசிய தகவல் அளிப்பவர்களின் உதவி மூலம் இரண்டாவது குற்றவாளியான ஷிவ்ஜித் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். ரயில் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டவர், அர்ஷத் சாதிக் அலி ஷேக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டது. அர்ஷத், சாண்டாக்ரூஸின் கலினா பகுதியில் வசித்துவந்தவர். அர்ஷத்தும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என காவல்துறை தெரிவித்தது. விசாரணையின் போது, ஷிவ்ஜித் சிங் மற்றும் ஜெய் சாவ்தா ஆகியோர் அர்ஷத் சாதிக் அலி ஷேக்கைக் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடலை கொங்கனுக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்த முடிவு செய்தனர். அர்ஷத்தின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து, துடாரி எக்ஸ்பிரஸ் மூலம் கொங்கனுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான், காவல்துறையினர் சந்தேகமடைந்து இருவரையும் அழைத்துச் சென்றதால், முழு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின் போது ஒப்புக்கொண்டனர். கொலையின் மர்மம் அங்கு முடிவடையவில்லை, கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடேவின் மகன் கௌரவ், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பேசிய பிறகு மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரு வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்தவர்கள். இதில் உலகின் பல நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். அர்ஷத்தைக் கொல்ல கொலையாளிகள் குழுவில் உள்ள மூன்று மாற்றுத்திறனாளிகளின் உதவியைப் பெற்றனர். கொலை நடந்த நேரத்தில், மூன்று மாற்றுத்திறனாளிகளும் வீடியோ அழைப்புகளில் பேசிக்கொண்டனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளியும் இதில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கௌரவிடம் தெரிவித்தனர். இந்த கொலை ஏன் செய்யப்பட்டது? அர்ஷத் ஷேக், ருக்சனா என்ற பெண்ணை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ருக்சனாவும் வாய் பேச முடியாதவர். அர்ஷத் சின்ன சின்ன வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாள் பைதோனியில் ஒரு வசதியான வீட்டில் வசித்து வந்த ஜெய் சாவ்தா மற்றும் ஷிவ்ஜீத் ஆகியோருடன் அர்ஷத் நட்பு கொண்டார். பின்னர், ஜெய் மற்றும் அர்ஷத்தின் நட்பு மேலும் வளர்ந்தது. அது வீட்டிற்கு வந்து போகும் அளவுக்கு வலுப்பட்டது. இதில் அர்ஷத்தின் மனைவி ருக்சனாவுக்கு ஜெய் சாவ்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே ஒரு தடையாக இருந்த அர்ஷத்தை கொல்ல ஜெய் ஒரு சதித்திட்டம் தீட்டினார். அவரை கொல்ல நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். இதற்காக, ஜெய் தனது நண்பர் ஷிவ்ஜித்தின் உதவியைப் பெற்றார். அர்ஷத்தை பைதோனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்ததாகவும், அவருக்கு மது அருந்த கொடுத்ததாகவும், அவர் அதிகமாக போதையில் இருந்தபோது சுத்தியலால் குத்திக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு,குற்றம் சாட்டப்பட்ட ஜெய் பிரவீன் சாவ்தா மற்றும் ஷிவ்ஜித் சிங் இந்த வழக்கில் காவல்துறையினரால் அர்ஷத்தின் மனைவி உள்பட மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, அர்ஷத்தின் மனைவியைப் பற்றிய ஆதாரங்களைக் கண்டறிந்த பின்னர் அவரையும் பைதோனி போலீசார் கைது செய்தனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டதால், அவரைக் காவலில் எடுக்க காவல்துறையினர் விரும்பினர். இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர காவல்துறையினர் முயற்சித்தனர். இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை நான்கு மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இருப்பினும், பல நாட்கள் விசாரணைக்குப் பிறகு, பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை காவல்துறையினர் மீட்டனர். பலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர், மேலும் உறுதியான ஆதாரங்களுடன், மேலும் விசாரணை நடத்தப்பட்டு, ஜெய் பிரவீன் சாவ்தா, ஷிவ்ஜித் சிங் மற்றும் ருக்சானா ஷேக் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த கொலை வழக்கைத் தீர்க்க அனைத்து காவல்துறை குழுக்களும் கடுமையாக உழைத்தன. கிட்வாய் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ் சத்புடே மற்றும் அவரது மகன் தங்கள் கடமைகளை உண்மையாகச் செய்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டனர். முக்கியமாக, கௌரவின் உதவியுடன், தாதர் ரயில் நிலையத்தில் நடந்த கொலை வழக்கை ஆரம்பத்திலிருந்தே தீர்க்க முடிந்தது. இது சம்பந்தமாக, பல சைகை மொழி நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8x852ry1ryo
-
புதிய அரசியலமைப்பு மக்களின் அபிலாஷைகளுக்கும் இன மோதலுக்கும் நீடித்த தீர்வை வழங்கும் - அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
Published By: VISHNU 15 APR, 2025 | 08:58 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக முரண்பாடற்ற தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். இந்த சட்டத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து தீவிர கரிசணை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்றப்படும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் கொள்கை, ஆகவே இந்த சட்டத்தை இரத்துச் செய்து, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்திய வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்பதை குறித்த குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளேன். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். காலம் காலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறப்பு ஆணை வழங்கியுள்ளார்கள். பொருளாதார ஸ்திரப்படுத்தலுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மாகாண சபைத் தேர்தலை நடவத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/212054
-
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
15 APR, 2025 | 12:30 PM சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்ததுடன் மாற்றங்களை செய்ய வலியுறுத்தியதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212028
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League Punjab Kings 111/10 Kolkata Knight Riders (2/20 ov, T:112) 12/2 KKR need 100 runs in 108 balls. Current RR: 6.00 • Required RR: 5.55 Win Probability:KKR 86.63% • PBKS 13.37%
-
மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு – ஸ்டாலின்
ராஜமன்னார் குழு: மத்திய அரசுக்கு தலைவலி கொடுக்கும் மாநில சுயாட்சி பரிந்துரைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து பதவி, பிபிசி தமிழ் 14 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ராஜமன்னார் குழு பரிந்துரைகள் தொடர்பாக பிபிசி தமிழ் 2023ம் ஆண்டு வெளியிட்ட செய்தித் தொகுப்பு மறுபதிப்பு செய்யப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில், 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, “மாநில சுயாட்சியை நாம் கேட்கிறோம் என்ற காரணத்திற்காக திமுக அரசை மத்திய அரசு கலைத்தால் அதைவிட என் வாழ்வில் புனிதமான சரித்திர சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது,” எனப் பேசினார். அன்று காலைதான் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மத்திய - மாநில அரசின் உறவுகளை ஆராய்ந்து மாநிலங்களுக்கான உரிமைகளைப் பேசிய ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் 54 ஆண்டுகள் கழித்து இப்போதும் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘இந்தியாவிற்காக பேசுகிறேன்’ என்னும் தலைப்பிட்ட வலையொலியில் (Podcast) பேசும்போது நடப்பு அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்யும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கண்டித்து சமீபத்தில் பேசும்போது ராஜமன்னார் குழுவைப் போன்று கூட்டாட்சியை மேம்படுத்த மற்றொரு கமிட்டியை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருந்தார். இப்படியாக, அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து முக்கியப் பேசுபொருளாக இருந்து வரும் ராஜமன்னார் குழு குறித்து இங்கு பார்ப்போம். மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசிய இளைஞர்கள்- 4 பேர் கைது -என்ன நடந்தது?13 டிசம்பர் 2023 தீரஜ் சாஹூ: 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம் - 285 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?13 டிசம்பர் 2023 ராஜமன்னார் கமிட்டி குறித்து இப்போது ஏன் பேசப்படுகிறது? பட மூலாதாரம்,DAILYTHANTHI தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நிதிப் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் தற்போது தமிழ்நாட்டு அரசியலிலும், சட்டப்பிரிவு 370 ரத்து தேசிய அளவிலும் மாநில சுயாட்சி குறித்த விவாதத்தை உயிர்ப்போடு வைத்துள்ளது. மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு மாநில உரிமைகளில் தலையிடுகிறது என பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்டவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து 54 ஆண்டுகளுக்கு முன்பே 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதுதான் ராஜமன்னார் குழு. இந்தக் குழுவின் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் லட்சுமணசாமி முதலியார், சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிபதி பி.சந்திரரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து மத்திய - மாநில உறவில் அதிகாரப் பங்கீடு தொடர்பான சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதாகும். ராஜமன்னார் கமிட்டியின் பரிந்துரைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையை 1971ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜமன்னார் குழுவின் அறிக்கையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநரின் விருப்பப்படி மாநில அமைச்சகம் செயல்பட வேண்டும் என அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும் இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல் பணி(IPS) உள்ளிட்ட அனைந்திந்திய பணிகள் ரத்து செய்யப்பட வேண்டும். மத்திய மற்றும் பொதுப்பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவுகள் 356, 357 மற்றும் 365 ஆகியவற்றை நீக்க வேண்டும் நிதிக்குழு நிரந்தரமாக்கப்பட வேண்டும் திட்டக்குழு அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் மாநிலங்களுக்கு இடையிலான குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளில் மாநிலங்களுக்கு இடையிலான குழு 1990ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி வி.பி.சிங் இந்திய பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது. சென்னை வெள்ளம்: ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் - பா.ஜ.க.வை அப்படியே பின்பற்றுகிறதா திமுக?12 டிசம்பர் 2023 ஆத்தூர் கோட்டையை கைப்பற்றிய சிவாஜி மருமகன் - ஔரங்கசீப் உதவியுடன் மீட்ட சிக்கதேவராயர்14 டிசம்பர் 2023 'பாஜக மாநிலங்களுக்கு அதிகாரத்தை கொடுக்காது' பட மூலாதாரம்,TN GOVERNMENT படக்குறிப்பு,சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார் ராஜமன்னார் குழு பரிந்துரைகளின் சமகால அரசியல் சூழலுக்குப் பொருந்துகிறதா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களுக்கான அதிகாரப் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் அதிகமாக எழுகின்றன. பாஜகவுக்கு அதிகாரப் பங்கீட்டில் நம்பிக்கை இல்லை என்பதை பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்களைப் பார்த்தாலே நமக்குப் புரியவரும். ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் இதற்கு முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களுக்கு முதல்வர் பதவி இம்முறை வழங்கப்படவில்லை. பாஜகவிற்குள் மாநில தலைவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதே இதன் உள்நோக்கம். எனவே பாஜகவிற்கு தங்களது கட்சிக்கு உள்ளேயே அதிகாரம் பரவலாக்கப்படுவதில் விருப்பம் இல்லை,” என அவர் தெரிவித்தார். மேலும் ராஜமன்னார் குழுவின் அடிப்படை கருத்தே அதிகாரப் பங்கீடுதான் என்றும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல 1970களில் மேற்கு வங்கத்திலும் பஞ்சாபிலும்கூட அதிகாரப் பங்கீட்டிற்கான குரல் எழுந்துள்ளது என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாக உள்ளது எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசுகையில், “நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது என்றால் எதுவெல்லாம் நடைமுறைபடுத்தும் வகையில் இருந்ததோ அதுவெல்லாம் அமல்படுத்தப்பட்டதா? ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளை நீக்க வேண்டும் என பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதற்கு காரணம் அந்தக் குழு அமைக்கப்பட்டது தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தில். அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர்த்து, ஆளுநர் மாநில அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்பது நியாயமான நடைமுறைபடுத்தக் கூடிய விஷயம்தான் அதை ஏன் செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். மாநிலங்களோடு மத்திய அரசு அதிகாரத்தைப் பகிர்வதில்லை என்ற குற்றச்சாட்டு பாஜகவிற்கு மட்டுமின்றி காங்கிரஸிற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே இருக்கக்கூடிய மத்திய அதிகாரத்திற்கும் பாஜகவிடம் இருக்கக்கூடிய மத்திய அதிகாரத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது மாநில அரசால் தங்களுக்கான உரிமையைப் போராடி பெற்றுவிடக்கூடிய சூழல் இருக்கும். காங்கிரஸ் இருக்கும்போதுதான் தேசியத் தலைவர்களாக மாநிலத் தலைவர்களாக இருந்த காமராஜரும் கர்நாடகாவை சேர்ந்த நிஜலிங்கப்பாவும் உருவானார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில்கூட மத்தியக் குழு ஒரு நிலைப்பாடு எடுத்தால் மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு மற்றொரு நிலைப்பாடு எடுப்பார். ஆனால், பாஜகவில் தற்போது வசுந்தரா ராஜேவுக்கோ, சிவ்ராஜ் சிங் சவுகானுக்கோ அல்லது நிதின் கட்கரிக்கோ அந்த அதிகாரம் கிடையாது,” எனத் தெரிவித்தார். ஆத்தூர் கோட்டையை கைப்பற்றிய சிவாஜி மருமகன் - ஔரங்கசீப் உதவியுடன் மீட்ட சிக்கதேவராயர்14 டிசம்பர் 2023 இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை13 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,X/ASPANNEERSELVAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் 'மாநிலங்களால் இந்தியா உருவானது என்ற கருத்தே தவறானது' இதுகுறித்து தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாரயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் தேவையற்றது மற்றும் அமல்படுத்த முடியாதது. ஏனென்றால், அரசமைப்பு சட்டத்தின்படிதான் தற்போது மத்திய - மாநில உறவுகள் உள்ளன. திமுகவினர் பேசுவதைப் பார்த்தால் அரசமைப்பு சட்டத்தையே மாற்றச் சொல்லுவார்கள் போல,” என்று தெரிவித்தார். மேலும், “இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பார்க்கும்போது ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் தேவையற்றது. இந்தியா தன்னுடைய நிர்வாக வசதிக்காகத்தான் இந்தியாவை மாநிலங்களாகப் பிரித்துள்ளது. மாநிலங்களால் இந்தியா உருவானது என்ற கருத்தே தவறானது. மாநிலங்களை இந்தியா உருவாக்கியது என்பதே சரியான பார்வை,” என அவர் தெரிவித்தார். அதிகாரப் பங்கீட்டை பாஜக தனது கட்சிக்குள்ளேயே செயல்படுத்த தயாராக இல்லை என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த நாரயணன் திருப்பதி, “பாஜகவில் ஒரு முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, ஆலோசித்து ஜனநாயக முறைப்படிதான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதை கேள்விக்கு உள்ளாக்குவது ஜனநாயகத்தையே கேள்விக்கு உள்ளாக்குவதைப் போன்றது,” எனத் தெரிவித்தார். அரபு நாடுகள் அமெரிக்கா மீது கோபம், ரஷ்யாவுடன் நெருக்கம் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2023 நெஞ்சுவலி மருந்து தேடலில் 'வயாகரா' கிடைத்தது எப்படி?சோதனையில் பங்கேற்ற இளைஞர்கள் கூறியது என்ன?4 மே 2024 'காங்கிரஸ் ஆட்சியிலும் மாநிலங்களுக்கு அதிகாரம் தரப்படவில்லை' பட மூலாதாரம்,X/NARAYANANTIRUPATHI படக்குறிப்பு,தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாரயணன் திருப்பதி இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியபோது அவர் கூறுகையில், “தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பான்மை பெற்ற மாநில அரசால் சுயாட்சி செய்ய முடியாத சூழல் உள்ளது. ஆளுநர் மாநிலத்தின் ஆட்சியில் தலையிடுகிறார். கல்வி உள்ளிட்ட முக்கியமான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. ஒரு பேரூராட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரம்கூட இப்போது பாஜக ஆளாத மாநிலங்களில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு இல்லாத சூழல் உள்ளது,” எனத் தெரிவித்தார். மேலும், “எங்கிருந்தோ வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் ஆட்சியில் தலையிடுகிறார். இந்தப் பிரச்னையை தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மற்ற பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் எழுப்பியுள்ளன,” என்றும் கூறினார் அவர். ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாததாக இருப்பதாக பாஜக கூறுகிறதே என்ற கேள்விக்கு, “அது தவறானது. மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் என எந்தக் கட்சி இருந்தாலும் அனைத்து அதிகாரங்களும் தங்களிடமே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த மனப்பான்மை மாற வேண்டும். தற்போது இந்தியா முழுக்க தேசிய கட்சிகளைவிட மாநில கட்சிகள்தான் வளர்ந்து வருகின்றன. எனவே ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் மட்டும்தான் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்படும்,” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c842w03dl51o
-
ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - புபுது ஜாகொட
15 APR, 2025 | 04:02 PM (எம். ஆர்.எம். வசீம்) பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பட்டலந்த விசாரணை அறிக்கை பூரணமான அறிக்கையல்ல. அது 280 பக்கங்களைக் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையாகும். சாட்சி அறிக்கைகள் உடன் மொத்தமாக அந்த விசாரணை அறிக்கை 700க்கும் அதிக பக்கங்களைக் கொண்டதாகும். அந்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறே நாங்கள் தெரிவித்திருந்தோம். அதேபோன்று இந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். என்றாலும் இந்த விசாரணை அறிக்கை 1998 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்த பின்னர் இந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டது. அது தொடர்பான பிரதிகளை அரச வெளியீட்டு நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியது இல்லை. ஏனெனில் பட்டலந்த ஆனைக்குழு அமைக்கப்பட்டிருப்பது, ஆணைக் குழுவின் அதிகாரங்கள் வரையறுக்கப்படும் 1948-ஆம் இலக்க சட்டத்திலாகும். அதன் பிரகாரம் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு மாத்திரமே முடியுமாகிறது. தற்போது அரசாங்கத்துக்கு இருப்பது பட்டலந்த ஆணைக்குழுவுக்கு ஏற்புடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை அமைப்பதாகும். உதாரணமாக, பட்டலந்த ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்று தான் சித்திரவதை முகாமை முன்னெடுத்துச் சென்றதாகச் சாட்சிகளுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நபர்களின் பிரஜா உரிமையை ரத்து செய்வதாகும். அது தொடர்பான சட்டங்களை அமைத்துக் கொள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் இருக்கிறது. அதனால் மீண்டும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்துடன் அரசாங்கம் இந்த ஆணைக் குழு தொடர்பில் பரிந்துரைகளை மேற்கொள்ள குழு ஒன்றை அமைப்பதாக தெரிவித்துள்ளது. என்றாலும் பட்டலந்த விசாரணை அறிக்கை என்பது குழு ஒன்றின் ஊடாக மிகவும் ஆழமாக சாட்சிவிசாரணைகளை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான அறிக்கையாகும். அதனால் மீண்டும் குழு அமைப்பது என்பது காலத்தை வீணடிக்கும் செயலாகும். அதே நேரம் பட்டலந்த ஆணை குழுவுக்கு முன்னால் சாட்சி கூறிய பலர் இன்று உயிருடன் இல்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு மீண்டும் சாட்சி பதிவு செய்ய முடியும்.? அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமல் இதனை தொடர்ந்து எழுத்தடிப்பதற்கு முயற்சிக்கின்றது போன்றே இருக்கிறது. ஏனெனில் பாராளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெறும் போதும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருக்கவில்லை. எனவே அரசாங்கத்துக்கு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நபர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212041
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 31st Match (N), Mullanpur, April 15, 2025, Indian Premier League PBKS chose to bat. Punjab Kings (15.3/20 ov) 111 Current RR: 7.16 • Last 5 ov (RR): 30/3 (6.00) Kolkata Knight Riders Win Probability:PBKS 15.02% • KKR 84.98%
-
அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியாவும் லேசர் ஆயுதம் தயாரிப்பு - எவ்வாறு செயல்படும்?
பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS படக்குறிப்பு,இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகடா பதவி, பிபிசி நிருபர் 15 ஏப்ரல் 2025, 08:16 GMT பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது. எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது. "இது அதிஉயர் தொழில்நுட்ப பயன்பாட்டின் தொடக்கம் மட்டுமே" என்று சோதனை வெற்றியடைந்த பின்னர் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி.காமத் அறிவித்தார். பிபிசியிடம் பேசிய முன்னாள் டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, "இந்தியாவின் இந்த சோதனை பாதுகாப்புத் துறையில் மிகவும் முக்கியமானது" என்றார். லேசர் ஆயுதம் எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS படக்குறிப்பு,எதிர்காலத்தின் "ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்" என்று அழைக்கப்படும் லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கிய சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போது, போர் முறைகளும் மாறி வருகின்றன. ஏவுகணைகளுக்குப் பதிலாக டிரோன் தொழில்நுட்பத்தைக் கொண்டு போர்கள் நடத்தப்படுகின்றன. யுக்ரேன் -ரஷ்யா போரில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிர்காலத்தில் போர்கள் நடக்கும்போது, டிரோன் தாக்குதல்களைத் தடுக்க ஒவ்வொரு நாடும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுவது அவசியமாகிவிட்டது. தற்காலிகமாக, அதிக சக்தி கொண்ட லேசரும், அதி நுண்ணலை போன்ற தொழில்நுட்பங்களையும் ஆயுதமாக மாற்றும் பணியில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) லேசரால் வழிநடத்தப்படும் ஆற்றல் ஆயுதமான 'டி.இ.டபிள்யூ ( DEW) Mk-II(A) ஐ உருவாக்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் டிரோன் தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள, டிரோன் மூலம் தாக்குதல்களை எதிர்க்கும் அமைப்புகளைத் தயாரிப்பது மிகவும் முக்கியம் என்று சதீஷ் ரெட்டி கூறினார். டி.ஆர்.டி.ஓ பரிசோதித்த லேசர் ஆயுதம், அதிக சக்தி கொண்டதாக இருப்பதாக அவர் கூறினார். தரையில் இருந்து இயக்கப்படும் லேசர் ஆயுதம், டி.ஆர்.டி.ஓவிலுள்ள உயர் ஆற்றல் அமைப்பு மற்றும் அறிவியல் மையத்தின் (CHES) ஆதரவின் கீழ் பரிசோதிக்கப்பட்டது. டிரோனை லேசர் கற்றைகள் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான காணொளி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு திறன்களில் ஒன்று என்று டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத் அறிவித்தார். உயர் சக்தி லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று சமீர் வி. காமத் ஏ.என்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்த அவர், "அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது." "இஸ்ரேலும் வளர்ச்சியடைந்து வருகிறது," என்று கூறினார். 'டி.இ.டபிள்யூ' (DEW) உதவியுடன் இலகுரக ஆளில்லா விமானங்களை மட்டுமல்ல, ஹெலிகாப்டர்களையும் கூட முற்றிலுமாக அழிக்க முடியும் என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்தது ஏன்?14 ஏப்ரல் 2025 2019 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் 'லேசர்' பரிசோதனைகள் பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA படக்குறிப்பு,DEW உதவியுடன் டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த முடியும் என்று DRDO அறிவித்துள்ளது. இந்த வகை லேசர் ஆயுத தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ 2019 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது. அந்த நேரத்தில் அது இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள இலக்குகளை அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, 30 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதத்தால், 4-5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை அழிக்க முடியும். "இந்த லேசர் தொழில்நுட்பம் டிரோன்களை கட்டமைப்பு ரீதியாக அழித்து அவற்றின் கண்காணிப்பு சென்சார்களை செயலிழக்கச் செய்யும்" என்று டி.ஆர்.டி.ஓ அறிவித்தது. டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் முன்னாள் தலைமைக் கட்டுப்பாட்டாளரும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி பிபிசியிடம் கூறுகையில், டிரோன்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் மட்டுமே லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் செயல்படும் என்றார். இதுகுறித்து பேசிய அவர், "டிரோன்கள் இலக்குகளை நெருங்கும் போது தரைக்கு அருகில் வர நேரிடும். அவை குறிப்பிட்ட வரம்பிற்குள் வந்ததும், லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சுட்டு வீழ்த்த முடியும்," என்றார். லேசர் கற்றைகள் தொலைவில் இருந்தால் அவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று விளக்கப்பட்டது. அமிட்டி பல்கலைக்கழகம் தற்போது டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து லேசர் கற்றைகளை குளிர்விக்கும் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது. டிரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்தார். "லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." "இந்த பரிசோதனையின் மூலம், லேசர் தொழில்நுட்ப ஆயுதங்களின் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். அமெரிக்கா - இரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியமா? மாறி வரும் சர்வதேச அரசியல் கணக்குகள்12 ஏப்ரல் 2025 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற பல லட்சம் ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,DRDO படக்குறிப்பு,லேசர் கற்றைகள் மூலம் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக DRDO கூறுகிறது. அதிக சக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம் டி.ஆர்.டி.ஓ தற்போது 'அதிக சக்தி' கொண்ட லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய 300 கிலோவாட் திறன் கொண்ட லேசர் ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. "நாங்கள் இப்போது மேற்பரப்பில் (நிலத்தில்) இருந்து செயல்படும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். காற்று மற்றும் நீர் மூலம் பயன்படுத்தக் கூடிய வகையில் அதை உருவாக்கி வருகிறோம்," என்று சமீர் வி. காமத் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று அவர் விவரித்தார். மறுபுறம், ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது லேசர் அடிப்படையிலான தீர்வுகள் குறைந்த விலையில் இருக்கும் என்று செல்வமூர்த்தி கூறினார். "ஏவுகணைகளை உருவாக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரம்."என்ற அவர், "லேசர் அமைப்பு குறைந்த செலவில் செயல்படுத்தப்படும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyw6ezyln6o
-
யாழ் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும் - வடக்கு ஆளுநர்
15 APR, 2025 | 03:58 PM யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வளவு விரைவாக இதனை மாநகர சபையே பொறுப்பேற்று இயக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். அது தொடர்பில் இந்தியத் துணைத்தூதுவர் கருத்து வெளியிடுகையில், இந்தக் கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டம் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை என்றும் அது எவ்வளவு விரைவாக இடம்பெறுகின்றதோ, அதற்கு அமைவாகவே ஏனைய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இணை முகாமைத்துவக் குழுவை உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும் என்றும், அத்துடன் இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே எதிர்காலத்தில் இருக்கும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார். அத்துடன் கலாசார மண்டபத்தின் ஒவ்வொரு மாடிக் கட்டடத் தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது சாதகமானதொரு நிலைமை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே பராமரித்து வரும் நிலையில் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக யாழ். மாநகர சபையால் அதிகாரிகளை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். மேலும், இணை முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கு ஏதுவாக மத்திய அரசாங்கத்தின் கலாசார அமைச்சுக்கு உடனடியாகக் கடிதம் அனுப்புமாறும் ஆளுநர் பணித்தார். கலாசார மண்டபம் யாழ். மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பான திட்டமிடல்களை முன்னெடுக்கலாம் என இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிதி எஸ்.குகதாஸ், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ;ணேந்திரன் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212038
-
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரெல்லே & அலிசன் ஃபிரான்சிஸ் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது. 1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது. டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி ஒன்றையும் இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகிறது. கப்பலின் விளக்குகளை தொடர்ந்து எரிய வைக்க, பொறியாளர்கள் இறுதிவரை வேலை செய்ததாக, அதனை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களை இது உறுதிப்படுத்துகிறது. கப்பலின் மேல் பகுதியில், ஏ4 பேப்பரின் அளவில் இருந்த சிறிய துளைகள், கப்பல் மூழ்குவதற்கு காரணமாக அமைந்தன என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது. "பேரழிவை கடைசியாக நேரில் கண்ட சாட்சி டைட்டானிக். அதனிடம் சொல்வதற்கு இன்னும் பல கதைகள் உள்ளன," என்கிறார் டைட்டானிக் ஆய்வாளரான பார்க்ஸ் ஸ்டீபன்சன். டிஜிட்டல் இரட்டையை உருவாக்க 7 லட்சம் புகைப்படங்கள் பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன் என்ற புதிய ஆவணப்படத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் சூழ்ந்த நீரில் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் உள்ளன. இந்த பாகங்கள், நீருக்கடியில் செயல்படும் ரோபோக்கள் மூலம் விரிவாக படமாக்கப்பட்டது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் எடுக்கப்பட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த சிதைந்த கப்பலின் "டிஜிட்டல் இரட்டையை" உருவாக்க பயன்படுத்தப்பட்டன. இது 2023 ஆம் ஆண்டில் இந்த டிஜிட்டல் இரட்டை பிபிசி மூலம் பிரத்யேகமாக உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது . பெரிய அளவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள், ஆழமான, இருண்ட கடல் பகுதியில் உள்ளன. அதனை நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் ஆராய்ந்தால் குறைந்த காட்சிகளையே பெற முடிகிறது. பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு,டைட்டானிக் கப்பல் குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது. ஆனால் இந்த ஸ்கேன், டைட்டானிக்கின் முழுமையான காட்சியை முதன்முறையாக வழங்கியுள்ளது. இன்னும் தனது பயணத்தைத் தொடர முயல்வது போல, டைட்டானிக் கப்பலின் முன்புறம் கடற்பரப்பில் நேராக உள்ளது. ஆனால், 600 மீட்டர் தொலைவில் உள்ள டைட்டானிக் கப்பலின் பின்பகுதி (ஸ்டெர்ன்) முற்றிலும் சிதைந்த உலோகங்களின் குவியலாகவே உள்ளது. கப்பல் பாதியாய் உடைந்து கடல் பரப்பில் மோதி நொறுங்கும் போது இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. புதிய வரைபடத் தொழில்நுட்பத்தின் மூலம், டைட்டானிக் கப்பலை ஆராய புதியதொரு வழி கிடைத்துள்ளது. "இது ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தைப் போல் தான். அந்த ஆதாரம் என்ன என்பதையும், அது எந்த இடத்தில் உள்ளது என்பதையும் நீங்கள் பார்ப்பது அவசியம்," என்கிறார் பார்க்ஸ் ஸ்டீபன்சன். "மேலும் சிதைந்த இடத்தின் முழுமையான பார்வையைக் கொண்டிருப்பது, இங்கே என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது," என்றும் அவர் கூறினார். பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளிட்ட, புதிய நுணுக்கமான விவரங்களை இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகின்றது. இச்சம்பவம் நடந்த போது சிலரின் அறைகளுக்குள் பனிக்கட்டிகள் நுழைந்ததை, நேரில் கண்டதாக உயிர் பிழைத்தவர்கள் அளித்த சாட்சியங்களுடன் இது ஒத்துப்போகிறது. மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பரவியது எப்போது? வரலாற்றைப் புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு12 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு,பனிப்பாறையால் உடைக்கப்பட்ட ஒரு ஜன்னல் போன்ற அமைப்பு உள்ளிட்ட, புதிய நுணுக்கமான விவரங்களை இந்த ஸ்கேன் வெளிப்படுத்துகின்றது நிபுணர்கள் கூறுவது என்ன? டைட்டானிக்கின் மிகப்பெரிய கொதிகலன் அறைகளில் ஒன்றைக் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பல் இரண்டாக உடைந்த இடத்தில், கப்பலுடைய முன்பகுதியின் கடைசியில் அந்த கொதிகலன் அறை அமைந்துள்ளது, எனவே ஸ்கேன் மூலம் அதை எளிதாகக் காணமுடிகிறது. அலைகளின் கீழ் கப்பல் மூழ்கும் போதும், விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது என்று விபத்தில் தப்பித்த பயணிகள் தெரிவித்தனர். சில கொதிகலன்கள் அடிப்பகுதியில் இருந்தன என்பதையும், அவை தண்ணீரில் மூழ்கியபோதும் செயல்பட்டன என்பதையும் இப்படங்கள் வெளிக்காட்டுகின்றன. கப்பலின் பின்பகுதியில், திறந்த நிலையில் ஒரு மூடி போன்ற அமைப்பு (வால்வு) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பிற்கு, நீராவி பாய்ந்து கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு,ஜோசப் பெல் தலைமையிலான பொறியாளர்களின் குழு விளக்குகள் அணையாமல் இருக்க, உலைகளில் நிலக்கரியை இட்டு நிரப்புவதற்காக கப்பலின் பின்புறத்தில் இருந்தனர். இதற்காக ஜோசப் பெல் தலைமையிலான பொறியாளர்களின் குழுவிற்கு நன்றி கூற வேண்டும். விளக்குகள் அணையாமல் இருக்க, உலைகளில் நிலக்கரியை இட்டு நிரப்புவதற்காக அவர்கள் கப்பலின் பின்புறத்தில் இருந்தனர். பேரழிவுகரமான இச்சம்பவத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தாலும், அவர்களின் வீரதீர செயல்கள் பலர் உயிர் பிழைப்பதற்கு வழிவகுத்தன என்று பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறினார். "முழுமையான இருட்டில் மூழ்கிவிடாமல், குறைந்தபட்ச வெளிச்சம் இருக்கும்படி, உயிர் காக்கும் படகுகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு தேவையான நேரத்தை குழுவினருக்கு வழங்க, அவர்கள் இறுதி வரை விளக்குகளையும் மின்சக்தியையும் இயங்க வைத்தனர்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "அவர்கள் குழப்பத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தி வைத்தனர். அதற்கான ஒரு அடையாளமாக அந்த திறந்த நிலை நீராவி வால்வு கப்பலின் பின்புறம் அமைந்திருந்தது," என்று அவர் கூறினார். 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி13 மார்ச் 2025 பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு,திறந்த நிலை நீராவி வால்வு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட டைட்டானிக் ப்ளூபிரிண்ட்ஸ் கணினியின் மூலம் உருவகப்படுத்தப்பட்ட ஒரு புதிய படம், டைட்டானிக் மூழ்கிய விதத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளது. இது டைட்டானிக்கின் வரைபடத்திலிருந்து உருவாக்கப்பட்ட கப்பலின் விரிவான கட்டமைப்பு மாதிரியையும், அதன் வேகம், திசை மற்றும் நிலை பற்றிய தகவல்களையும் பயன்படுத்தி, பனிப்பாறையை கப்பல் தாக்கியபோது ஏற்பட்ட சேதத்தை கணிக்க உதவுகிறது. "டைட்டானிக் மூழ்கியதை மீண்டும் உருவாக்க, மேம்பட்ட எண்ணியல் வழிமுறைகள், கணக்கீட்டு மாதிரிகள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் திறன்களைப் பயன்படுத்தினோம்," என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜியோம்-கீ பைக் கூறினார். கப்பல் பனிப்பாறையில் மோதியபோது, ஒரு மெல்லிய தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தியதால், கப்பலில் ஒரு குறுகிய பகுதியில், வரிசையாக சிறிய துளைகள் உருவாகின என்பதை கணினி மூலம் உருவாக்கப்பட்ட படம் காட்டுகிறது. டைட்டானிக்கின் நான்கு நீர்ப்புகா பெட்டிகளில் வெள்ளம் புகுந்தாலும், அது மிதந்து கொண்டே இருக்கும் வகையில், டைட்டானிக் மூழ்காமல் இருக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணினி மூலம் உருவகப்படுத்தப்பட்ட படம், பனிப்பாறையின் சேதம் ஆறு பெட்டிகளில் பரவியிருப்பதை கணிக்கின்றது. "டைட்டானிக்கின் மேல்பகுதியில், ஒரு காகிதத்தின் அளவில் இருந்த சிறிய துளைகள் தான் டைட்டானிக் மூழ்கியதின் காரணம்" என்கிறார் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் கடற்படைக் கட்டிடக்கலையின் இணை விரிவுரையாளர் சைமன் பென்சன். "அந்த சிறிய துளைகள் கப்பலின் நீளமான பகுதி முழுவதும் உள்ளன. அதனால் கடல் நீர் மெதுவாக, ஆனால் நிச்சயமாக அதன் எல்லா துளைகளுக்குள்ளும் நுழைந்து, பின்னர் பெட்டிகளுக்குள் புகுந்து, டைட்டானிக் மூழ்கியது தான் பிரச்னை" துரதிஷ்டவசமாக, கப்பலின் கீழ் பகுதி, மண்ணுக்கு அடியில் மறைந்திருப்பதால், ஸ்கேனில் அந்த சேதத்தை காண முடியவில்லை. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன் கொடுத்த இந்திய வணிகரைப் பற்றி தெரியுமா?2 மார்ச் 2025 பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN படக்குறிப்பு,இந்த புதிய ஸ்கேன் 1912 ஆம் ஆண்டின், ஒரு குளிர்கால இரவில் நடந்த சம்பவத்தைப் பற்றிய புதிய சான்றுகளை வழங்குகிறது. அதேபோல், டைட்டானிக் கப்பலுக்கு ஏற்பட்ட விபத்தால் மக்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் பெரிது. அக்கப்பலில் பயணித்த பயணிகளின் பொருட்கள் கடல் பரப்பில் சிதறிக் கிடக்கின்றன. இந்த புதிய ஸ்கேன் 1912 ஆம் ஆண்டின், ஒரு குளிர்கால இரவில் நடந்த சம்பவத்தைப் பற்றிய புதிய சான்றுகளை வழங்குகிறது. ஆனால் முப்பரிணாம படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் முழுமையாக ஆராய்ந்திட நிபுணர்களுக்கு பல ஆண்டுகள் தேவை. பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறுகையில், "டைட்டானிக், தனது கதையை கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு கூறுகிறது" "ஒவ்வொரு முறையும், இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது" என்கிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1j2j7l07o
-
அன்னை பூபதியின் நினைவேந்தலுக்காக வெளிநாட்டில் பணம் பெற்றுள்ள 3 பேருக்கு எதிராக பூபதியின் மகள் காத்தான்குடி முறைப்பாடு
15 APR, 2025 | 04:46 PM மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அமைதியாகச் செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இந்த மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர். இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி இவர்களைத் தடைசெய்து அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/212043
-
இளநீரில் என்ன இருக்கிறது?
இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னையின் செயல்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 15 ஏப்ரல் 2025 தேங்காயை உடைக்கும்போது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? தண்ணீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது? இளநீரில் கோடையில் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு இளநீரில் அதிக தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறும் தேங்காயில் குறைந்த அளவில் நீரும், அதிக வழுக்கையும் உள்ளது. ஒரு தேங்காயில் தண்ணீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது? வடிவம் பட மூலாதாரம்,GETTY IMAGES தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருப்பதால், தென்னை மரம் 'வாழ்க்கையின் மரம்' என்று அழைக்கப்படுகிறது. தென்னை மரங்கள் பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளிலும், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் காணப்படுகின்றன. தேங்காய் ஓட்டுக்குள் நீர் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், அதன் அமைப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எக்ஸோகார்ப், மீசோகார்ப் மற்றும் எண்டோகார்ப் எனப்படும் மூன்று அடுக்குகளைக் கொண்டது இளநீர். எக்ஸோகார்ப் என்பது இளநீரின் வெளிப்புற அடுக்கு. இது பச்சை நிறத்திலும் மென்மையாகவும் இருக்கும். பச்சை அடுக்கின் கீழ் உள்ள நார் நிறைந்த பகுதி மீசோகார்ப் என்று அழைக்கப்படுகிறது. எண்டோகார்ப் என்பது உள் மையப்பகுதி. எண்டோகார்ப் உள்ளே உள்ள வெள்ளை வழுக்கையை பாதுகாக்கிறது. எண்டோகார்ப் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வழுக்கை. இது எண்டோஸ்பெர்ம் என்று அழைக்கப்படுகிறது. இளம் தேங்காய்களில் மென்மையாகவும் ஜெல்லி போலவும் இருக்கும் இந்த வழுக்கை, தேங்காய் முதிர்ச்சியடையும் போது கடினமடைகிறது. இரண்டாவது உள்ளே இருக்கும் நீர். தேங்காய் வளரும்போது இயற்கையாகவே தண்ணீர் உருவாகிறது. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு14 ஏப்ரல் 2025 இந்திய ராணுவத்தை வழி நடத்திய 'செங்கல்பட்டு' ஜெனரல் சுந்தர்ஜி- ஆபரேஷன் புளூஸ்டாரில் நடந்தது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீர் எப்படி வருகிறது? அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் ஆய்வின்படி, தேங்காயில் உள்ள நீர் ஒரு வடிகட்டப்பட்ட திரவமாகும். மரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு (தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் அமைப்பு) மூலம், நீர் வேர்களில் இருந்து தேங்காய்க்குச் செல்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக மரத்தில் உள்ள xylem நாளங்கள் நீர் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேங்காய் ஓட்டுக்குள் நீர் உருவாகும் செயல்முறையை இந்த ஆய்வு விளக்கியது. தென்னை மரத்தின் வேர்கள் தரையில் இருந்து பூமிக்குள் சுமார் 1 முதல் 5 மீட்டர் ஆழம் வரை நீண்டுள்ளன. இந்த வேர்கள் சுற்றியுள்ள மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்த நீர் பின்னர் அதன் தண்டு வழியாக மேல்நோக்கி கொண்டு செல்லப்பட்டு இறுதியாக தேங்காயை அடைகிறது. தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு இந்த தண்ணீரை சேமிக்கிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர் இளநீர் முதிர்ச்சியடையும் போது ஒரு வெள்ளை வழுக்கையை (தேங்காய்) உருவாக்குகிறது. தேங்காயின் நீர் இயற்கையாகவே மரத்தில் உருவாகிறது. காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இளநீரில் என்ன இருக்கிறது? இளநீரில் சுமார் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது, அதனால்தான் இது உடலை நீரேற்றம் செய்யும் ஒரு அதிசய திரவமாகக் கருதப்படுகிறது. மீதமுள்ள 5 சதவீத இளநீரில் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் போன்ற புரதங்கள், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் தண்ணீருக்கு இனிப்பு சுவையைத் தருகின்றன. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் பி வைட்டமின்களும் உள்ளன. ஒரு தேங்காய் ஓட்டுக்குள் எவ்வளவு தண்ணீர் உள்ளது? பட மூலாதாரம்,INDEPENDENT PICTURE SERVICE ஒரு தேங்காயில் உள்ள நீரின் அளவையும் தரத்தையும் பல காரணிகள் பாதிக்கின்றன. அவற்றில் ஒன்று தேங்காயின் வயது. ஒரு இளநீரில் தண்ணீரில் நிறைந்திருக்கும். ஆறு முதல் எட்டு மாதங்கள் வயதுடைய தேங்காய்கள் இளநீராகக் கருதப்படுகின்றன. அவற்றில் 300 மில்லி முதல் ஒரு லிட்டர் தண்ணீர் வரை உள்ளது. முதிர்ந்த தேங்காய்கள், அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை, குறைவான தண்ணீரைக் கொண்டுள்ளன. எண்டோஸ்பெர்ம் அதாவது உள்ளே இருக்கும் வழுக்கை தண்ணீரை உறிஞ்சுவதால் அவை குறைவான நீரைக் கொண்டிருக்கின்றன. மழைப்பொழிவும் இதில் பங்கு வகிக்கிறது. அதிக மழை என்றால் அதிக நீர், தேங்காயை அடைகிறது. வறண்ட பகுதியில் வளரும் தென்னை மரங்கள் வளரும்போது, குறைவான நீர் தேங்காயை அடைவதால் அதற்குள் குறைந்த நீரே உருவாகிறது. கனிம வளம் நிறைந்த மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் மிக உயர்ந்த தரமான, ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைப் பெறுகின்றன. மண் கனிம வளம் நிறைந்ததாக இல்லாவிட்டாலோ, வேர்களில் இருந்து காய்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல முடியாவிட்டாலோ நீரின் தரம் சுமாராக இருக்கும். ஆரோக்கியமற்ற, நோயுற்ற மரங்கள் சிறிய காய்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றிலும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். மண் பரிசோதனை மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலையான விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தென்னை மரங்களில் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் தரமான இளநீரை உற்பத்தி செய்யலாம். - பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0zyqjpg0lo
-
யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
15 APR, 2025 | 01:12 PM யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது. விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/212029
-
ரூ.13,500 கோடி மோசடி: பெல்ஜியத்தில் கைதான மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நீரவ் மோதி விவகாரம் என்ன? 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஊழலில் நீரவ் மோதி, அவரது மனைவி ஏமி, அவரது சகோதரர் நிஷால், உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர். நீரவ் மோதி தற்போது லண்டன் சிறையில் உள்ளார், அவரது ஜாமீன் மனு பல முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடக் கூடாது என்று அவர் அங்கே சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து சதி செய்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியது. நீரவ் மோதி, மெஹுல் சோக்ஸி மற்றும் மற்றவர்கள் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புகார் அளித்தது. இந்த புகாரில், 280 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உள் விசாரணை முடிந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மோசடி குறித்து மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அளித்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடிகளுள் ஒன்றாகும். இந்த வழக்கில் மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்6 மணி நேரங்களுக்கு முன்னர் அரசை விமர்சிக்கும் பள்ளி மாணவர் நாடகத்தால் சர்ச்சை - கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது சாத்தியமா? மெஹுல் சோக்ஸியை ஒப்படைக்க பெல்ஜியத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. கரீபியன் பிராந்தியத்தை குறித்து செய்திகள் வெளியிடும் அசோசியேட்டட் டைம்ஸ் என்ற இணையதளம், மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் வசிப்பதாக ஒரு செய்தியில் குறிப்பிட்டிருந்தது. "மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தி சோக்ஸி ஆகியோர் தற்போது பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வருகின்றனர். அவர் அந்நாட்டின் எஃப் (F) ரெசிடென்சி கார்டை வைத்திருக்கிறார்." என்று அந்த செய்தி கூறியது. அசோசியேட்டட் டைம்ஸின் இந்த செய்தியானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பெல்ஜியம் அரசாங்கத்திடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் இதை இன்னும் உறுதி செய்யவில்லை. மெஹுல் சோக்ஸி பெல்ஜியம் நாட்டில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்தியாவில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கவும் செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். மெஹுல் சோக்ஸியின் சட்டக் குழு அவரது மோசமான உடல்நிலையை முன்வைத்து அதையே ஒரு வலுவான வாதமாக மாற்ற வாய்ப்புள்ளது என்றும் சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, மும்பை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் அளிக்கும் போது மெஹுல் சோக்ஸி இந்தியா வர அவரது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ள தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று மெஹுல் சோக்ஸி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கின்றது. லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்த புற்றுநோயினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் "100 சதவீதம்" பயணம் செய்ய முடியாது என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளதாக மெஹுல் சோக்ஸி கூறியிருந்தார். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி உள்ள இந்தியாவில் மெஹுல் சோக்ஸி முறையான சிகிச்சை பெற முடியும் என்று ஒரு அதிகாரி கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 பெல்ஜியம் அரசாங்கம் சொல்வதென்ன? பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பது குறித்தும் பெல்ஜியம் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக பெல்ஜியத்தின் பெடரல் பப்ளிக் சர்வீஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஜோர்டான்ஸ் கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியமில் மெஹுல் சோக்ஸி எங்கு இருக்கிறார் என்று கேட்டதற்கு, "எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்புக்கு இது குறித்து தெரியும் என்று நான் உறுதியாக கூற முடியும், அவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்", என்று டேவிட் ஜோர்டான்ஸ் கூறினார். "இருப்பினும் எந்தவொரு தனிப்பட்ட வழக்கு குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த இந்த வழக்கு பெடரல் பப்ளிக் சர்வீஸ் நீதிமன்றத்தின்கீழ் வருகிறது. இது தொடர்பான முன்னெடுப்புகளை எஃப்.பி.எஸ் வெளியுறவு விவகாரங்கள் அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்", என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த மெஹுல் சோக்ஸி? 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று, மும்பை நகரில் இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் நிறுவப்பட்டதாக செய்தி வந்தது. இந்த ஏடிஎம்மில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் அனைத்து வகையான நகைகளையும் வாங்க முடியும். ஆனால் இந்த இயந்திரத்தால் மக்களை கவர்ந்திழுக்க முடியவில்லை. வாடிக்கையாளர்கள் யாரும் இதைப் பயன்படுத்துவதில்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். இந்த ஏடிஎம்கள் மெஹுல் சோக்ஸியால் நிறுவப்பட்டவை. மெஹுல் சோக்ஸியின் கதை ஆரம்பத்தில் வைரம் போல பளபளப்பாக இருந்தது. அவரது பழக்கவழக்கங்கள் எப்போதும் தங்கத்தைப் போல நெகிழ்வாக இருந்தன. ஆனால் அவற்றின் விளைவு போலி நகைகளைப் போல ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. மெஹுல் தனது தந்தை சினுபாய் சோக்ஸியின் வைரம் வெட்டும் மற்றும் பாலிஷ் செய்யும் தொழிலை வாங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழி காட்டினார். ஆனால் நிறுவனத்தின் கெட்ட பெயர் காரணமாக ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய ஒரு காலம் வந்தது. அவரது நிறுவனமான கீதாஞ்சலி, 2006 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியீடு மூலம் ரூ.330 கோடியை திரட்டியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு, முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் மெஹுலின் நிறுவனம் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதை 6 மாதங்களுக்கு செபி தடை செய்தது. 2008-ஆம் ஆண்டில், கத்ரீனா கைஃப் இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த போது, இந்நிறுவனத்தின் விற்பனை ஒரு வருடத்தில் 60 சதவீதம் அதிகரித்தது. கீதாஞ்சலி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு போலி வைரங்களை விற்பனை செய்வதாக 2018 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவாஸ்தவா குற்றம் சாட்டினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxn09771vro
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல்; வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களுக்கு முக்கிய அறிவித்தல் 15 APR, 2025 | 03:55 PM எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுத்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளை குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்குமாறு அந்தந்த அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற முகவர்கள், சுயேட்சைக் குழுத் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (11) நீக்கியுள்ளது. குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எழுத்தாணை ஒன்றை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த இடைக்காலத் தடையுத்தரவை நீக்கியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரம் 22,23,24, ஆகிய தினங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/212031
-
நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு யாருக்கெல்லாம் வரக் கூடும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 15 ஏப்ரல் 2025, 03:03 GMT உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது. ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது) இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ். அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். டைப்-5 நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படுகிறது? அது எவ்விதம் ஏற்படுகிறது? அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்ய சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? முதன்முறையாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எந்தெந்த சமூகக் குழுக்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? <19 என்ற அளவில் குறைந்த பி.எம்.ஐ எண் கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே வகை ஐந்து நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு உடல் பருமன் குறைவாக இருக்கும் மக்களிடம் ஏற்படுகிறது. "டைப்-2 நீரிழிவு நோய் உடைய, உடல் பருமன் அதிகமாக இருக்கும் நோயாளிகளிடம், இன்சுலின் சுரந்தாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும். ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும். ஆனால் டைப்- 2 நீரிழிவு நோய்க்கு ஊசி செலுத்துவது போன்று இல்லாமல், மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். இவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். முட்டையில் இருக்கும் மூளைக்கு தேவையான அறியப்படாத ஊட்டச்சத்து – அறிவாற்றலை மேம்படுத்துமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வகை 5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது யாருக்கெல்லாம் இத்தகைய நீரிழிவு நோய் வரக் கூடும்? குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள் கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆண்கள் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்கள் ஆகியோருக்கு டைப்-5 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்கிறது வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி முடிவுகள். பட மூலாதாரம்,GETTY IMAGES டைப்-5 நீரிழிவு 1955-ல் கண்டுபிடிப்பு குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயை ஹூக் - ஜோன்ஸ் 1955-ஆம் ஆண்டில் உறுதி செய்தார். ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார். குறைவான மற்றும் மத்திய வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று வகைப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு. தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. WHO பட்டியலில் இருந்து டைப்-5 நீரிழிவு நீக்கப்பட்டது ஏன்? பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. 1985-ஆம் ஆண்டு அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது. 1980-ஆம் ஆண்டில் நிபுணர் குழு நீரிழிவு நோயின் இரண்டு பிரிவுகளான ஐ.டி.டி.எம் அல்லது டைப்-1 மற்றும் என்.ஐ.டி.டி.எம். அல்லது டைப்-2 நீரிழிவு நோயை பட்டியலில் இணைக்க பரிந்துரை செய்தது. 1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் 1999-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது புரத பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் MRDM வகை நீரிழிவு நோயை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது உலக சுகாதார அமைப்பு. ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நீரிழிவு நோயில் ஏற்பட்டிருக்கும் திரிபு என்று கூறி அந்த வகையை நீக்கியதோடு மட்டுமின்றி, அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றது முக்கிய அறிவிப்புக்கு வழிவகுத்த ஆராய்ச்சி கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர். இது தொடர்பாக அதே ஆண்டு "An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI," என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். "இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 'வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்' அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டது," என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். வேலூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பேராசிரியர்கள் நிஹல், மெரிடித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் செயல்பட்டார். இறைச்சி உண்பதை சில காலம் நிறுத்தி, பின்னர் மீண்டும் சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படுமா?16 மார்ச் 2025 உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 பட மூலாதாரம்,PROFESSOR PETER SCHWARZ/LINKEDIN படக்குறிப்பு,சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர் பீட்டர் ஸ்வார்ஸ் மற்றும் இதர துறைசார் நிபுணர்கள் டைப்-5 நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி ஏன் அவசியமாகிறது? "பொதுவாக இத்தகைய நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். அவர்களுக்கு, டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையை கையாள்வது தீங்காக போய் முடியக்கூடும். இன்றைய காலத்தில் ஆதாரங்கள் அடிப்படையில்தான் மக்கள் எந்த ஒரு சிகிச்சையையும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே இது தொடர்பாக அதிக அளவு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்கவும் இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது முக்கியமானது," என்று மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jz91lvgnlo
-
மியன்மாரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்!
14 APR, 2025 | 05:06 PM மியன்மாரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஒப்பரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதலால் விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட விமானிகள், அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர். இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை இந்திய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். https://www.virakesari.lk/article/212003
-
அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!
Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 12:43 PM அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 2 ஆம் திகதி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். இதற்கு ஏனைய நாடுகள் பணிந்த நிலையில், சீனா தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக வரியையும் அதிகரித்தது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் விதிப்பதாக அறிவித்தன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் ஏவுகணைகள் வரை தயாரிக்க தேவையான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க்க டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 கனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211989