Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 10 APR, 2025 | 09:08 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்று வியாழக்கிழமை (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில், பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது . இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211736
  2. LIVE 24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 163/7 Delhi Capitals (5/20 ov, T:164) 31/3 DC need 133 runs in 90 balls. Current RR: 6.20 • Required RR: 8.86 Win Probability: DC 41.26% • RCB 58.74%
  3. சீமான் ஏன் பெரியாரை தொடர்ந்து குறிவைக்கிறார்? சமஸ் உடன் பளிச் உரையாடல் | Seeman | Periyar
  4. 10 APR, 2025 | 04:31 PM 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது. தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர். நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள். உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்றார். https://www.virakesari.lk/article/211724
  5. Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 04:31 PM நாட்டில் நுளம்புகளால் பரவும் சிக்கன்குன்யா நோய் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெவித்துள்ளதாவது, சிக்குன்குன்யா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தன்சானியாவில் கண்டறியப்பட்டது. இந்நோய் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பரவியது. உலகளாவிய ரீதியில் 115 நாடுகளுக்கு சிக்கன்குன்யா நோய் பரவியுள்ளது. 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்த காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கும் மூட்டு வலி மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். நுளம்புகள் பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதால் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் ஏற்படுவதை குறைத்துக் கொள்ள முடியும். நுளம்புகளில் 75 சதவீதமானவை வெளிப்புறங்களிலும், 53 சதவீதமானவை பாடசாலைகளிலும், 33 சதவீதமானவை பிராந்தியப் பகுதிகளிலும் உற்பத்தி ஆகின்றன. சிக்கன்குன்யா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/211723
  6. Published By: VISHNU 10 APR, 2025 | 08:06 PM ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒரே நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வியாழக்கிழமை (10) அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த நாட்களில் மதியம் 12 மணி வரை மட்டுமே டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் சேவைக்காக சேவை, 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211755
  7. சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி; ருதுராஜுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில், இனி வரும் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் தோனி தலைமை ஏற்பார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ருதுராஜுக்கு இடது முழங்கையில் பந்து தாக்கியதில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக காலம் எடுக்கும் என்பதால், அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விலகியதையடுத்து, ஓர் ஆண்டுக்குப்பின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கிறார். சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாகியுள்ள நிலையில் நாளை (ஏப்ரல்11) சென்னை அணி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி வகித்த தோனி 2023-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இந்த 15 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தோனி பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்10 ஏப்ரல் 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தலைமுறை மாற்றத்துக்கு ஏற்ப புதிய கேப்டன்களை நியமித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் நியமிக்காமல் இருந்தது. அதுமட்டுமின்றி, தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கேப்டனாக செயல்படுவதும் சிரமம் என்று கூறப்பட்டது. தோனிக்கு அடுத்தாற்போல் கேப்டன் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்று யோசித்து, கெய்க்வாட்டை தேர்வு செய்தனர். ஆனால், கடந்த சீசனில் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லமுடியாமல் கடைசி ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது. சிஎஸ்கே அணி தோனி தலைமையில் செயல்பட்டபோது, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில்யே "கன்சிஸ்டென்ட் டீம்" அதாவது நிலைத்தன்மையான அணியாக சிஎஸ்கே வலம் வந்தது. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 142 போட்டிகளில், தோனி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும், ஓர் அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2023-ஆம் ஆண்டு கடைசியாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு, 5வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக, ருதுராஜ் கெய்வாட்டிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில் 2024ம் ஆண்டு அவர் கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அந்த சீசனில் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட செல்லவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோற்று படுமோசமான நிலையில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட்டின் இடது முழங்கையில் பந்து தாக்கி, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் " ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழி நடத்துவார். ருதுராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகள்," எனத் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly11l08w1po
  8. INNINGS BREAK 24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League DC chose to field. Royal Challengers Bengaluru (20 ov) 163/7 Current RR: 8.15 • Last 5 ov (RR): 46/1 (9.20) Delhi Capitals Win Probability: RCB 33.03% • DC 66.97%
  9. பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்! Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 11:18 AM யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக வியாழக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று (10) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211674
  10. 10 APR, 2025 | 10:51 AM வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாவட்டச் செயலராக வடக்கின் 4 மாவட்டங்களிலும் பணியாற்றிய காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல திட்டங்களுடன் இணைந்து பணியாற்றியமையை நினைவுகூர்ந்ததுடன் வடக்கு மாகாண மக்களுக்கான உதவிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். வடக்கு மாகாணத்தின் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக முதலீட்டு வலயங்களை வடக்கில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவற்றுக்கும் குடிநீர் தேவை என்பதால், அதையும் கருத்திலெடுக்க வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தீவகப் பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும்போது அங்கும் குடிநீருக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் எனவும் அதனை நிவர்த்திக்கும் வகையில் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாடுகளை அங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதனால் சுற்றுலாத்துறைக்கு பின்னடைவு இருக்கின்றது என்று தெரிவித்தார். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதேபோன்று விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டு 60 ஆண்டுகள் அடுத்த ஆண்டுடன் நிறைவு செய்யப்படவுள்ளதைக் குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தமது உறவுகள் - திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர். அத்துடன் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்றடைவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினர் குறிப்பிட்டனர். இதேவேளை பாலியாறுத் திட்டத்துக்கான முற்கூட்டிய சாத்தியக்கூற்றாய்வுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்கி வருவதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதேநேரம், இரணைமடுவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கடலுடன் கலக்கும் நீரை, யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், கடலைநீரை நன்னீராக்கும் திட்டத்தின் பொறியியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/211671
  11. Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 09:43 AM தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதனுடன் பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இது தொடர்பாக திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனமாகக் கவனிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. https://www.virakesari.lk/article/211666
  12. பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி,‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், "தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை" கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி நிருபர் கிறிஸ் ப்ராஷர் அங்கு சென்றார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வாரத்தில், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவம் 80 நாட்களாக தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த, காணாமல் போன அணு ஆயுதம் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் சக்தியைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது அந்த அணுகுண்டு. அதை மத்திய தரைக் கடலின் 2,850 அடி (869 மீ) ஆழத்தில் இருந்து கவனமாக அகற்றி, USS பெட்ரெல் கப்பலில் கவனமாக இறக்கினர். அதைக் கப்பலில் ஏற்றியதும், அதிகாரிகள் அதன் வெப்ப அணுசக்தி சாதனத்தின் உறைக்குள் கடும் சிரமத்தோடு வெட்டி செயலிழக்கச் செய்தனர். அதன் பிறகுதான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அமெரிக்கா எதிர்பாராமல் ஸ்பெயின் மீது தவறவிட்ட நான்கு ஹைட்ரஜன் குண்டுகளில் கடைசி அணுகுண்டு மீட்கப்பட்டது. கடந்த 1968ஆம் ஆண்டு சம்பவ இடத்திலிருந்து செய்திகளை வெளியிட்ட பிபிசி நிருபர் கிறிஸ் பிராஷர் இதை, "அணு ஆயுதங்கள் தொடர்புடைய முதல் விபத்து இது அல்ல," என்று கூறினார். "ஹைட்ரஜன் குண்டுகளை சுமந்து செல்லும் விமானங்கள் தொடர்புடைய குறைந்தது ஒன்பது விபத்துகளையாவது அமெரிக்க ராணுவ தலைமையகம் பட்டியலிட்டுள்ளது. ஆனால் இதுதான் வெளிநாட்டு மண்ணில் நடந்த முதல் விபத்து. அதுவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட முதல் விபத்து மற்றும் உலகின் கவனத்தை ஈர்த்த முதல் விபத்து." அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்?9 ஏப்ரல் 2025 பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் - காணொளி9 ஏப்ரல் 2025 இந்த பயங்கரமான சூழ்நிலை, குரோம் டோம் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அமெரிக்க நடவடிக்கையால் ஏற்பட்டது. 1960களின் தொடக்கத்தில், தன்னுடன் பனிப்போர் செய்து கொண்டிருந்த சோவியத் யூனியன், தாக்குதல் தொடங்குவதைத் தடுக்க, அமெரிக்கா ஒரு திட்டத்தை உருவாக்கியது. ஒரே கனநேர எச்சரிக்கையில் மாஸ்கோவை தாக்கும் வகையில், அணு ஆயுதம் ஏந்திய B-52 விமானங்களை வானத்தில் தொடர்ந்து ரோந்து செல்ல வைத்தது அமெரிக்கா. ஆனால் இப்படி தொடர்ந்து நீண்ட வட்டம் அடித்துக் கொண்டிருந்த விமானங்கள் பறப்பதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை இருந்தது. இப்படி ஒரு குண்டுவீசும் விமானம், 1966 ஜனவரி 17 அன்று, தெற்கு ஸ்பெயினின் அல்மேரியா பகுதியில், 31,000 அடி (9.5 கி.மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதோடு, KC-135 டேங்கர் விமானம் மூலம், வழக்கம் போல வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முயன்றது. "அணுகுண்டுகளை ஏந்தியிருந்த விமானம் மிக அதிக அளவிலான வேகத்தில் டேங்கர் விமானத்தை நெருங்கி வந்ததோடு, தன்னையும் நிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்," என்று இந்தப் படுமோசமான விபத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த அமெரிக்க மேஜர் ஜெனரல் டெல்மர் வில்சன் பிராஷரிடம் கூறினார். தொடர்ந்து, "இதன் விளைவாக அந்த இரண்டு விமானங்களும் மிக அருகில் மோதிக்கொண்டன," என்றார். B-52 விமானம், எரிபொருள் விமானத்தைக் மோதிக் கிழித்துக் கொண்டு சென்றதில், KC-135 சுமந்து சென்ற ஜெட் எரிபொருள் தீப்பற்றி, அதிலிருந்த குழுவினர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பில் B-52 விமானத்தின் வால் பகுதியில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர். மூன்றாவது நபர் விமானத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் அவரது பாராசூட் சரியான நேரத்தில் திறக்காததால் இறந்துவிட்டார். குண்டுவீச்சு விமானம் உடைந்து நொறுங்கி கீழே விழும் முன், அதன் மற்ற நான்கு உறுப்பினர்கள் வெற்றிகரமாக வெளியேறினர். அதன்பின் எரியும் விமானத் துண்டுகளும், அந்த விமானத்தில் இருந்த கொடிய தெர்மோநியூக்ளியர் குண்டுகளும் ஒதுக்குப்புற ஸ்பானிய கிராமமான பாலோமேர்ஸ் மீது பொழிந்தன. "உடல் பருமனால் காதல் கைகூடவில்லை" - மனரீதியான சவால்களை எதிர்கொள்வது எப்படி?9 ஏப்ரல் 2025 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு மைல் தூரத்தில் இருந்தும்கூட அந்தப் பெரிய தீப்பிழம்பைக் காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக, அது அணு வெடிப்பைத் தூண்டவில்லை. குண்டுவீச்சு விமானத்தின் ஏவுகணைகள் ஆயுதமாக மாற்றப்படவில்லை. மேலும் எதிர்பாராத அணு சங்கிலி எதிர்வினைகளைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு அமைப்புகளையும் அவை உள்ளே கொண்டிருந்தன. ஆனால் இந்த அணுக்கரு சாதனங்களைத் தூண்டத் தேவையான முறையின் ஒரு பகுதியாக அவற்றின் புளூட்டோனியம் மையங்களைச் சுற்றி வெடிபொருட்கள் இருந்தன. விபத்து ஏற்பட்டால், தரையிறங்கும்போது ஏற்படும் தாக்கத்தைத் தணிக்கவும், கதிரியக்க மாசுபாட்டைத் தடுக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பாராசூட்கள் குண்டுகளில் இணைக்கப்பட்டிருந்தன. வெடிக்காத ஒரு குண்டு ஆற்றுப் படுகைகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மறுநாளே அது முழுமையாக மீட்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு அணுகுண்டுகளின் பாராசூட்கள் திறக்கத் தவறிவிட்டன. அன்று காலை, ஸ்பானிஷ் விவசாயி பெட்ரோ அலார்கான், பேரக் குழந்தைகளுடன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது தக்காளித் தோட்டத்தில் அணுகுண்டு ஒன்று விழுந்து வெடித்துச் சிதறியது. "நாங்கள் அடித்துச் செல்லப்பட்டோம். குழந்தைகள் அழத் தொடங்கினர். நான் பயத்தில் முடங்கிப் போனேன். வயிற்றில் ஒரு கல் தாக்கியது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். குழந்தைகள் அழும்போது, நான் மரணித்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் 1968இல் பிபிசியிடம் கூறினார். வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பேரழிவும் குழப்பமும் இன்னொரு ஹைட்ரஜன் குண்டு ஒரு கல்லறைக்கு அருகில் தரையில் மோதியபோது வெடித்தது. இந்த இரட்டை வெடிப்புகள் பெரிய பள்ளங்களை உருவாக்கி, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த, கதிரியக்க புளூட்டோனியம் தூசியை பல நூறு ஏக்கர்களுக்குச் சிதறடித்தன. அந்த ஸ்பானிய கிராமத்தின் மீது எரியும் விமானத்தின் மிச்சங்களும் மழையாகப் பொழிந்தன. "நான் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தேன்," என்று 1968இல் பிபிசியிடம் கூறினார் செனோரா புளோரஸ் என்ற கிராமவாசி. "என் மகள், 'அம்மா, அம்மா, நம்ம வீட்டைப் பாருங்க, அது எரிகிறது' என்று அழுதாள். எல்லாப் பக்கமும் புகையாக இருந்ததால் அவள் சொன்னதை உண்மை என்றே நினைத்தேன். எங்களைச் சுற்றி நிறைய கற்களும் குப்பைகளும் விழுந்து கொண்டிருந்தன. அவை எங்களைத் தாக்கும் என்று நினைத்தேன். அதுவொரு பயங்கர வெடிப்பு. உலகமே அழிந்து கொண்டிருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்." குண்டுவீசும் விமானம் அணு ஆயுதங்களுடன் கீழே விழுந்தது என்ற செய்தி அமெரிக்க ராணுவத் தலைமைக்கு எட்டியதும், ஒரு பெரும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. பேரழிவு நடந்த நேரத்தில், கேப்டன் ஜோ ராமிரெஸ், மேட்ரிட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் வழக்கறிஞராக இருந்தார். "நிறைய பேர் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள், மாநாட்டு அறை பரபரப்பாக இருந்தது. எல்லோரும் திரும்பத் திரும்ப 'உடைந்த அம்பு' பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் 'உடைந்த அம்பு' என்பது அணு விபத்துக்கான குறியீட்டு வார்த்தை என்பதை நான் அறிந்தேன்," என்று அவர் 2011இல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். கேப்டன் ராமிரெஸ், பாலோமேர்ஸை வந்தடைந்தபோது, விபத்தால் ஏற்பட்ட பேரழிவையும் குழப்பத்தையும் உடனடியாகக் கண்டார். புகைந்து கொண்டிருந்த பெரிய துண்டுகள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. எரியும் B-52 விமானத்தின் பெரும்பகுதி கிராமப் பள்ளியின் முற்றத்தில் விழுந்திருந்தது. "அதுவொரு சிறிய கிராமம். ஆனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். புகைந்து கொண்டிருந்த இடிபாடுகளை என்னால் பார்க்க முடிந்தது. சில தீப்பிழம்புகளையும் என்னால் பார்க்க முடிந்தது." பெரும் சேதம் நடந்திருந்த போதிலும், அதிசயமாக கிராமத்தினர் யாரும் பலியாகவில்லை. "கிட்டத்தட்ட 100 டன் எரியும் குப்பைகள் கிராமத்தின் மீது விழுந்திருந்தன, ஆனால் ஒரு கோழிகூட சாகவில்லை," என்று பிராஷர் கூறினார். உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும் தீப்பிடித்துக் கருகிய மலைப் பகுதியில் ஏறி, கொல்லப்பட்ட அமெரிக்க விமானப் படை வீரர்களின் எச்சங்களை மீட்டெடுத்தனர். "பின்னர், கிடைத்த உடல் பாகங்களை ஐந்து சவப்பெட்டிகளில் வரிசைப்படுத்தி வைத்தனர். ஆனால் அமெரிக்கர்கள் அந்த மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நான்கு உடல்களை மட்டுமே உரிமை கோர, அது ஒரு பெரும் அதிகாரபூர்வ குழப்பத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது" என்று பிரேஷர் கூறினார். B-52 குழுவினரில் மூன்று பேர் கடற்கரையில் இருந்து பல மைல்கள் தொலைவில் மத்திய தரைக் கடலில் தரையிறங்கினர், விபத்து நடந்த ஒரு மணிநேரத்திற்குள் உள்ளூர் மீன்பிடிப் படகுகளால் மீட்கப்பட்டனர். நான்காவது நபரான, B-52 விமானத்தின் ரேடார்-நேவிகேட்டர், விமானம் வெடித்த பகுதி மூலமாக வெளியேறினார். இதனால் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதோடு இருக்கையில் இருந்தும் தன்னைப் பிரித்துக்கொள்ள அவரால் முடியவில்லை. இருந்த போதிலும் அவர் பாராசூட்டை திறக்க முடிந்தது. அதோடு கிராமத்திற்கு அருகில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், விமானத்தின் கொடிய அணுகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் சிக்கல் இன்னும் இருந்தது. "அந்த குண்டுகளை மீட்டெடுப்பதே எனது முக்கியக் கவலையாக இருந்தது, அதுதான் முதன்மையான பிரச்னை" என்று ஜெனரல் வில்சன் 1968இல் பிபிசியிடம் கூறினார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள்4 ஏப்ரல் 2025 'அணுகுண்டுகளில் ஒன்றைக் காணவில்லை' "முதல் நாள் இரவு, கார்டியா சிவில் [ஸ்பானிஷ் தேசிய காவல் படை] பாலோமேர்ஸில் உள்ள சிறிய பாருக்கு வந்தனர். மின்சாரம் இருந்த ஒரே இடம் அதுதான். அவர்கள் வெடிகுண்டு என்று கருதியதைப் பற்றி எங்களிடம் தெரிவித்தனர். எனவே நாங்கள் உடனடியாக எங்கள் ஆட்களில் சிலரை நகர மையத்தில் இருந்து, அருகே இருந்த அந்த ஆற்றுப் படுகைக்கு அனுப்பினோம். உண்மையாகவே அதுவொரு வெடிகுண்டுதான். எனவே நாங்கள் அங்கே ஒரு காவலரை நிறுத்தி வைத்தோம். பின்னர் மறுநாள் காலை, வெளிச்சம் வந்தவுடனேயே, நாங்கள் எங்கள் தேடலைத் தொடங்கினோம். மறுநாள் காலை 10, 11 மணியளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இரண்டு குண்டுகளைக் கண்டுபிடித்தோம்." மூன்று அணுகுண்டுகள் கிடைத்துவிட்டன. ஆனால் இன்னும் ஒன்று கிடைக்கவில்லை. அடுத்த நாளுக்குள், அருகிலுள்ள தளங்களில் இருந்து அமெரிக்க துருப்புகள் நிரப்பப்பட்ட லாரிகள் அனுப்பப்பட்டன. கதிரியக்க மாசுபாடு ஏற்பட்டிருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், நான்காவது அணுகுண்டைத் தேடவும் வந்திருந்த, சுமார் 700 அமெரிக்க விமானப் படை வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாலோமேர்ஸ் கடற்கரை ஒரு தளமாக மாறியது. "தேடல் தீவிரமாகத் தொடங்கியது. விமானப் படை வீரர்கள் 40, 50 பேர் கைகோர்த்து வரிசையாக இணைந்திருப்பதுதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். அவர்களுக்கென பகுதிகளைப் பிரித்துத் தேடச் சொன்னார்கள். கெய்கர் கவுன்டர்களுடன் சிலர் வரத் தொடங்கினர். அவர்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்கத் தொடங்கினர்," என்று கேப்டன் ராமிரெஸ் 2011இல் கூறினார். அமெரிக்க வீரர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைக் கண்டுபிடித்ததும், அந்தப் பகுதியில் இருக்கும் மேல் மண்ணில் மூன்று அங்குல அளவுக்குத் தோண்டி அதை பீப்பாய்களில் அடைத்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புவார்கள். இப்படி சுமார் 1,400 டன் கதிரியக்கத்தால் பாதித்த மண், தெற்கு கரோலினாவில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பப்பட்டது. பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 அந்த நேரத்தில் அமெரிக்காவும், ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் கொடூரமான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த ஸ்பெயினும் இந்தப் படுமோசமான விபத்தின் வீச்சைக் குறைத்துக் காட்டுவதில் ஆர்வமாக இருந்தன. குறிப்பாக, கதிர்வீச்சு பற்றிய அச்சங்கள் ஸ்பெயினின் சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் என்று ஃபிராங்கோ கவலைப்பட்டார். அது அவரது ஆட்சிக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது. உள்ளூர் மக்களுக்கும் வெளி உலகுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளிக்கும் முயற்சியில், ஸ்பெயினுக்கான அமெரிக்க தூதர் ஆஞ்சியர் பிடில் டியூக், விபத்து நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, சர்வதேச பத்திரிகைகள் முன்னிலையில் பாலோமேர்ஸ் கடற்கரையில் கடலில் நீந்த வேண்டியிருந்தது. ஆனால் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஒரு வாரமாக சுற்றியுள்ள பகுதியில் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் தேடுதல் நடத்திய போதிலும், அவர்களால் நான்காவது குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கேப்டன் ராமிரெஸ் ஓர் உள்ளூர் மீனவரிடம் பேசினார். அவர் கடலில் விழுந்த சில விமான வீரர்களை உயிருடன் காப்பாற்ற உதவியிருந்தார். அமெரிக்க விமானிகளில் ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக மீனவர் கேப்டன் ராமிரெஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆழத்துக்கு மூழ்கிச் சென்றதாக மீனவர் நினைத்தார். காணாமல் போன அணுகுண்டைத்தான், மீனவர் உண்மையில் பார்த்திருக்க வேண்டும் என்பதை கேப்டன் ராமிரெஸ் உணர்ந்தார். "அனைத்து உடல்களும் கணக்கில் வந்துவிட்டன, அது எனக்குத் தெரியும்," என்று அவர் கூறினார். பின்னர் தேடல் விரைவாக மத்திய தரைக் கடலுக்கு மாற்றப்பட்டது, அமெரிக்க கடற்படை 30 க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை கடல் அடிவாரத்தில் தேடத் திரட்டியது. இதில் கடலடி கன்னிவெடியைக் கண்டுபிடிக்கும் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். மைல்கணக்கில் நீண்டு கிடக்கும் கடல் தளத்தை ஆய்வு செய்வது தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கலானது மற்றும் மிகவும் பொறுமையாகச் செய்ய வேண்டிய செயல்முறை. ஆனால் பல வாரங்கள் முழுமையான தேடலுக்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட பெரும் ஆழத்துக்குச் செல்லக்கூடிய டைவிங் கப்பல், ஆல்வின், ஒருவழியாக காணாமல் போன குண்டை, நீருக்கடியில் இருந்த அகழி ஒன்றில் இருந்து கண்டுபிடித்தது. தொலைந்து போனதில் இருந்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஏவுகணை இறுதியாக மீண்டும் அமெரிக்காவிடம் பாதுகாப்பாக வந்தடைந்தது. இத்தனை நாள் அந்த அணுகுண்டைப் பற்றிய செய்திகளை அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போதிலும், அடுத்த நாளே உலக ஊடகங்கள் முன்பாக அந்த குண்டைக் காட்டும் எதிர்பாராத செயலைச் செய்தது. மக்கள் தாங்களே அந்தக் குண்டைப் பார்க்காவிட்டால், அது உண்மையில் மீட்கப்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப மாட்டார்கள் என்று கூறி இந்தச் செயலை தூதர் டியூக் நியாயப்படுத்தினார். கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் அல்மேரியா பகுதியில் அதன் நிழலைப் பார்க்க முடிகிறது. அமெரிக்க சுத்திகரிப்பு நடவடிக்கையில், சில கதிரியக்க மாசுபட்ட இடங்கள் விட்டுப் போயிருந்தன. அதனால், அமெரிக்காவும் ஸ்பெயினும் பாலோமேர்ஸ் குடியிருப்பாளர்களுக்கான வருடாந்திர சுகாதார சோதனைகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டன. அதோடு, மண், நீர், காற்று மற்றும் உள்ளூர் பயிர்களைக் கண்காணிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் பாலோமேர்ஸில் இன்னமும் சுமார் 100 ஏக்கர் நிலம் (40 ஹெக்டேர்), கதிரியக்க மாசுபாட்டால், வேலி அமைக்கப்பட்டு பயனற்று இருக்கிறது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஸ்பெயினும் அமெரிக்காவும் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இரண்டு நாடுகளும் ஒன்றும் செய்யவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2ww3n59zgo
  13. 10 APR, 2025 | 12:49 PM புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211693
  14. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள். சுதந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர். இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தினோம், மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள். மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள், மக்கள் வழங்கும் ஆணையை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்பட வேண்டும்” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316942
  15. 10 APR, 2025 | 11:04 AM தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்? யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது. ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனை விட முக்கியமான கேள்வி? தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? https://www.virakesari.lk/article/211683
  16. இலங்கையை ஏன் டிரம்ப் தனது வரிப்பட்டியலில் சேர்த்தார்? சிஎன்என் கலந்துரையாடலில் கேள்வி? 10 APR, 2025 | 10:52 AM அமெரிக்க ஜனாபதியின் வரிகள் குறித்த சிஎன்என் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது இலங்கை குறித்தும் பொருளாதார நிபுணர்கள் எதிர்பாராதவிதமாக கருத்து வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் எரின்பேர்னாட்டும், சிக்காக்கோ பல்கலைகலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் பிரென்ட் நெய்மனும், டிரம்ப் இலங்கையை தனது வரிப்பட்டியலில் சேர்த்தமை எவ்வளவு அர்த்தபூர்வமான நடவடிக்கை என கேள்வி எழுப்பியுள்ளனர்? அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக சமநிலையின்மையை கொணடுள்ள போதிலும் டிரம்ப் ஏன் இலங்கையை பட்டியலில் இணைத்தார் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்கர்கள் இலங்கையிடமிருந்து பெருமளசு ஆடைகளை கொள்வனவு செய்கின்றனர், ஆனால் இலங்கை அமெரிக்காவிடமிருந்து அதிக எரிவாயு விசையாழிகளை கொள்வனவு செய்வதில்லை இது சரிசெய்யப்படவேண்டிய வர்த்தக ஏற்றத்தாழ்வல்ல என எரின்பேர்னார்ட் கேள்வி தெரிவித்துள்ளார். இலங்கை ஜோர்தான், ஜம்பியா போன்றவை டிரம்பின் பட்டியலில் காணப்படுவது குறித்து ஆச்சரியமடைந்ததாக சிக்காக்கோ பல்கலைகலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் பிரென்ட் நெய்மன் தெரிவிததுள்ளார். பரஸ்பர வர்த்தகம் கணிப்பிடப்படுவதில் தவறான தத்துவம் பயன்படுத்தப்படுவதை இது வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211681
  17. 35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; பொங்கல் பொங்கி கொண்டாடிய மக்கள் இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த யாழ்ப்பாணம் வசாவிளான் – பலாலி வீதி இன்று காலைமுதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது. 35 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளதுடன் வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஒரு தேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்டகால மூடப்பட்டிருந்த வீதி விடுவிப்பினை மக்கள் பொங்கல் வைத்து தேங்காய் அடித்து கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316935
  18. 10 APR, 2025 | 11:46 AM காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பனவற்றால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது. சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் காணி, நீர்ப்பாசனத்துறை பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் பாதுகாவலர்நாயகங்கள், காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்களும் இதில் பங்கேற்றனர். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் இ.சந்திரசேகரன், வன்னித் தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். காணி, நீர்பாசனத்துறை பிரதி அமைச்சர், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து வனவளத் திணைக்கள பாதுகாப்பு நாயகம் வடக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விவரித்தார். குறிப்பாக முன்னைய ஆட்சியில் இது தொடர்பில் விசேட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் வவுனியா மாவட்டச் செயலர் தவிர்ந்த ஏனைய மாவட்டச் செயலர்கள் அதனை முழுமைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். அத்துடன் வனவளத் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளை முழுமையாக நியாப்படுத்தியிருந்தார். அவரது கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நிலைப்பாட்டை முன்வைத்தார். மிக நீண்ட காலப் போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களது காணிகள் ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் அவையே காடுகளாக வளர்ந்துள்ளன என்றும் அவற்றை கூகுள் வரைபடம் மூலமே வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக அடையாளப்படுத்தி 2012ஆம் ஆண்டின் பின்னர் அரசிதழ் வெளியிட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசிதழ் வெளியிட்டப்பட்டவை தொடர்பில் எந்தக் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை மாத்திரம் பயன்படுத்தி, கள அலுவலர்களுக்கும், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் ஆகியோருக்கும் தெரியாமலேயே அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதுவே தற்போதுள்ள சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது எனவும் தெளிவுபடுத்தினார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமக்குரியதாக 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிட்ட அரசிதழ்களில் குறிப்பிடப்படும் பகுதிக்குள் மக்கள் முன்னர் வாழ்ந்தமைக்கான கட்டடங்களின் எச்சங்கள், கிணறுகளின் எச்சங்கள், வயல்கள் செய்தமைக்கான அடையாளங்கள் என்பன இப்போதும் காணப்படுகின்றன என்றும் அவை மக்களின் வாழ்விட மற்றும் வாழ்வாதார நிலங்கள்தான் என்பனவற்றுக்கு இவை சிறந்த சான்று எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதால், மக்களின் வாழ்வாதாரம், குடியேற்றம் என்பன மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் திட்டமிட்ட ரீதியில் முடக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும் அதற்கு தீர்வு காணப்படாமல் இழுதடித்துச் செல்லப்படுகின்றது என விசனத்துடன் குறிப்பிட்ட ஆளுநர், மக்களின் காணிகளையும், அபிவிருத்திக்குத் தேவையான காணிகளையும் விடுவிப்பதே தீர்வாகும் என்பதையும் அதனை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆளுநரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன், ஆளுநர் குறிப்பிட்ட விடயங்கள் மிகச் சரியானது. இந்த விடயங்களால் வடக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வனவளத் திணைக்களம் முன்வைத்த காலை எப்படி பின்வைப்பது என்று யோசிக்காமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றுக்கு எதிராக மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள மாவட்டச் செயலர் இருக்கின்றார். அந்த மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக சிங்களவரான நான் இருக்கின்றேன். அப்படியிருக்கையிலேயே எனக்குத் தெரிந்து மடுகந்த குளத்தின் கீழ் வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்த காணிகளை விடுவிப்பதற்கு மறுக்கின்றது. அது மக்கள் வயல் செய்த காணிகள். சிங்களவர்களுக்கே இவ்வாறான நிலைமை என்றால் தமிழ் மக்களின் நிலைமை சொல்லத்தேவையில்லை. இந்த நாட்டில் போர் உருவாகுவதற்கு காணிப் பிரச்சினையும் பிரதான காரணம் என்பதை மறவாதீர்கள் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் தமது மாவட்டத்தில் இந்த இரு திணைக்களங்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைப் பட்டியல்படுத்தினர். முன்னைய ஆட்சியில் விடுவிப்பதற்கு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் 10 சதவீதத்தையே விடுவிக்க இணங்கியமையும் சுட்டிக்காட்டிய அவர்கள் அது போதாது எனவும் குறிப்பிட்டனர். இதற்கு மேலதிகமாக, விடுவிக்க இணங்கியதைவிட பல காணிகளை புதிதாக காடுகளாக அரசிதழ் வெளியிடுவதற்கு வனவளத் திணைக்களம் கோரியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனாலேயே முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இணங்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். வவுனியா மாவட்டச் செயலர், கடந்த ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்தவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பட்டியல்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் மேலதிக விடயங்களைத் தெரியப்படுத்தினார். வடக்கில் மிகப்பெரும் பாரதூரமான விடயமாக வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவற்றின் செயற்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட சுற்றாடல்துறை பிரதி அமைச்சர், இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும், ஜனாதிபதியின் செயலருடன் இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. அதேநேரம், ஆளுநர் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதியுடன் சந்தித்து அவரின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மாவட்டச் செயலர்களால் தமது மாவட்டங்களில் விடுவிப்பதற்கு கோரிக்கை முன்வைத்த காணிகளை மீளவும் களப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/211675
  19. தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து 58 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதோடு, 1.413 என வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்குச் சரிந்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு தமிழக வீரர்களான சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டும் காரணமாகியுள்ளனர். அதிலும் தமிழக பேட்டர் சாய் சுதர்சன் கடந்த 5 போட்டிகளிலும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஆரஞ்சு தொப்பியை நோக்கி முன்னேறியுள்ளார். சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து குஜராத் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனவும், சாய் கிஷோர் 2.2 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனவும் ராஜஸ்தான் அணியை நெருக்கடியில் தள்ளினர். சிஎஸ்கே பவுலர்களின் தூக்கம் கெடுத்த இந்த 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் சரியில்லாத பேட்டிங்தான் தோல்விக்கான முக்கியக் காரணம். 3 பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சிவப்பு மண் கொண்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்தது. ஆனால் பேட்டர்கள் யாரும் நிதானமாக ஆடவில்லை என்பதுதான் விக்கெட் சரிவுக்கு காரணம். அது மட்டுமின்றி ராஜஸ்தான் அணியில் ஹெட்மெயருக்கு அடுத்தார்போல் நடுப்பகுதியில் பெரிதாக பேட்டர்கள் யாருமில்லை. டாப்ஆர்டர் 3 பேர்தான் ஓரளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர்கள். நடுப்பகுதியும், கீழ்வரிசையும் ராஜஸ்தான் அணியில் பலவீனமாக இருக்கிறது. இதைச் சரிசெய்யாவிட்டால் ராஜஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுவிடும். நடுப்பகுதியில் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய வகையில் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடக் கூடிய பேட்டர்கள் யாருமில்லை. ஷுபம் துபே, ஜூரெல் இருவரும் கடந்த சில போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார்கள். ஷிம்ரன் ஹெட்மயர்(52) மட்டுமே அரைசதம் அடித்தார். கேப்டன் சஞ்ஜூ சாம்ஸன்(41), ரியான் பராக்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற வகையில் ஜெய்ஸ்வால்(6), நிதிஷ் ராணா(1), ஜூரெல்(5), ஷுபம் துபே(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன?6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு வெற்றிக்குப் பின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "நன்கு ஸ்கோர் செய்திருந்தோம். சேஸிங்கும் எளிதாக இருக்கவில்லை. முதல் 4 ஓவர்களில் நாங்கள் நெருக்கடி கொடுத்துவிட்டோம். சாய், பட்லர் பார்ட்னர்ஷிப் ஆட்டம் அற்புதமாக இருந்தது, அதனால்தான் 200 ரன்களை கடக்க முடிந்தது. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினர்," என்று தெரிவித்தார். அதோடு, ஒவ்வொருவரும் தனது பங்கை உணர்ந்து ஆடியதாகக் குறிப்பிட்ட அவர், "நாம் நினைத்தது போல் பந்துவீச்சாளர்கள் செயல்படும்போது கேப்டன்சி எளிதாகிறது. நான் யாரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தாலும் 100 சதவீத பங்களிப்பு செய்கிறார்கள். இஷாந்த் சர்மாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்து வீசினார்," எனத் தெரிவித்தார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இந்த சீசன் சிறப்பாகத் தொடங்கவில்லை. முதல் இரு போட்டிகளில் 6.3 ஓவர்களில் 109 ரன்கள்வரை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த போட்டிகளில் மீண்டு வந்த ஆர்ச்சர் 7 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் அதிரடியைக் காட்டியுள்ளார். இந்த ஆட்டத்திலும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. சாய் சுதர்சன் சந்தித்த முதல் ஓவரில் ஆர்ச்சர் 152 கி.மீ வேகத்தில் பந்துவீசித் திணறடித்தார். 147 கி.மீ வேகத்தில் இன்ஸ்விங் வீசி சுப்மன் கில்லை கிளீ்ன் போல்டாக்கி மகிழ்ச்சியில் ஆர்ச்சர் திளைத்தார். அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லருக்கு 2 ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி, ஷார்ட் லெக்கில் ஃபீல்டர் அமைத்து ஆர்ச்சர் அவுட் ஸ்விங் வீசியும், பவுன்ஸர் வீசியும் திணறவிட்டார். ஆனால், பட்லர் கடைசியில் பவுண்டரி அடித்து ஆர்ச்சருக்கு பதிலடி கொடுத்தார். ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 சாய் சுதர்சன் எனும் நங்கூரம் பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் டைட்ன்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன், நங்கூரம் என்று தமிழக வீரர் சாய் சுதர்சனை குறிப்பிடலாம். இதுவரை 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்பட 40க்கும் அதிகமான ரன்களை 4 முறை அடித்துள்ளார். குஜராத் அணி ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்கப் புள்ளியாக சாய் சுதர்சன் ஆட்டம் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சுதர்சன் ஸ்கூப், டிரைவ், கட்ஷாட் என அடித்து ரன்களை சேர்த்தார். இதன்மூலம் 5.1 ஓவர்களில் குஜராத் 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் குஜராத் 56 ரன்கள் சேர்த்தது. அதில் 39 ரன்கள் சாய்சுதர்சன் சேர்த்தது. ஜாஸ் பட்லர் ஒரு கட்டத்தில் திணறி 12 பந்துகளில் 13 ரன்கள் என இருந்தார். அதன் பின்னர், அடுத்த 6 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 பந்துகளில் 31 ரன்களுக்கு முன்னேறினார். பட்லரும், சாய் சுதர்சனும் 2 விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். தீக்சனா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குஜராத் ரன்ரேட் திடீரென சரிந்தநிலையில் மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி 20 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்திக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி எல்லையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஷுபம் துபே கைக்கு வந்ததைத் தவறவிட்டார். ஆனால், அதன் பிறகு ஒரு ரன் மட்டுமே சேர்த்த சுதர்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 46 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆங்கர்ரோல் எடுத்தார். ராகுல் திவேட்டியா(24) மற்றும் ரஷித்கான்(12) குஜராத் அணி 200 ரன்களை கடக்க உதவினர். 20 ஓவர்களில் குஜராத் அணி 217 ரன்கள் சேர்த்தது. யாரையும் நெருங்க விடாத இந்தியாவின் சென்டினல் தீவு பழங்குடிகளை பார்க்க சென்ற அமெரிக்கர் என்ன ஆனார்?8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 ராஜஸ்தான் திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி 218 ரன்கள் எனும் பெரிய இலக்குடன் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 3வது முறையாக ஏமாற்றினார். அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை அடிக்க முயன்று டீப் தேர்டு திசையில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா ஒரு ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் கெஜ்ரோலியாவிடம் கேட்ச் கொடுக்கு விக்கெட்டை இழந்தார். ரியான் பராக் வந்த வேகத்தில் சிராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசினார். சாம்சன், ரியான் பராக் ஓரளவுக்கு ஆடி 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்திருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் பராக் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது. குல்வந்த் கெஜ்ரோலியா வீசிய 7வது ஓவரில் ரியான் பராக் பந்தை அடிக்க முற்பட்டு பட்லரிடம் கேட்சானது. பேட் தரையில் மோதியபோது சத்தம் கேட்டது, ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தமா அல்லது பேட் தரையில் மோதியதால் சத்தம் வந்ததா என்ற குழப்பத்தில் 3வது நடுவர் ரியான் பராக்கிற்கு அவுட் வழங்கினார். இதுகுறித்து கள நடுவரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்து பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபார்முக்கு வந்த ரஷித் கான் கடந்த 4 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்த ரஷித் கான் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். தனது முதல் ஓவரிலேயே துருவ் ஜூரெல் விக்கெட்டை எடுத்தார் ரஷித் கான். அதன்பின் ஹெட்மெயர் வந்தவுடன் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் பந்து சிறிது லெக்ஸ்டெம்புக்கு தள்ளி பிட்ச் ஆனதால் அவுட் வழங்கவில்லை. ஆனால் ரஷித் கான் குறிவைத்துப் பந்து வீசியதில் ஹெட்மயர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். ஷுபம் துபே ஒரு ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 நெருக்கடியளித்த சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா பட மூலாதாரம்,GETTY IMAGES நடுப்பகுதியில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா இருவரும் கடைசி வரிசை விக்கெட்டுகளை கவனித்துக்கொண்டனர். சாம்சன், ஹெட்மெயர் இருவரும் அணியை மெல்ல வெற்றியை நோக்கி நகர்த்தினர். 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வலுவாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு ஷார்ட் தேர்டு திசையில் கேட்ச் கொடுத்து சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய 16வது ஓவரில் ஷார்ட் பந்தில் ஆர்ச்சர்(4), ஹெட்மெயர்(52) இருவரும் விக்கெட்டுகளை இழந்தனர். ராஜஸ்தான் அணி, 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது. அதன் பிறகு அடுத்த 14 ரன்களுக்குள் மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் சாய் கிஷோரிடம் இழந்து ராஜஸ்தான் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்த ஆட்டம் யாருக்கு? இன்றைய ஆட்டம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் இடம்: பெங்களூரு நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) -288 ரன்கள் (5 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்) பர்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cevddnllzgdo
  20. 09 APR, 2025 | 07:20 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில், வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். இதற்கு எழுந்து பதிலளித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இந்த விடயம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211630
  21. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். சென்னை பூவிருந்தவல்லியில் பார்வைத் திறன் குறைபாடு உடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை கணினி உதவியுடன் ஆனந்த் எழுதியுள்ளார். மாநில பாடத் திட்டத்தில் பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் கணினி உதவியுடன் எழுதுவது இதுவே முதல்முறை. இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலியின் உதவியுடன் அவர் தேர்வு எழுதியுள்ளார். கேள்விகளை ஒருவர் வாசித்தால் மட்டும் போதும். அதற்கான பதில்களை விரைவாக கணினியில் தட்டச்சு செய்கிறார் மாணவர் ஆனந்த். முன்னதாக தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இரு மாணவிகள் இதே முறையில் தேர்வு எழுதியுள்ளனர். வரும் ஆண்டில் தன்னைப் போலவே 10க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுத பயிற்சி எடுத்து வருவதாகக் கூறுகிறார், ஆனந்த். Producer: Vijayanand Shoot & Edit : Wilfred Thomas இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக உடனடியாக வேலை இழப்புகள் இருக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர், மரியா சக்காரோ பதவி, பிபிசி உலக சேவை 8 ஏப்ரல் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிவிதிப்புகளால் உலக நாடுகள் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் சரிவைச் சந்திக்கின்றன. இது தங்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலர் யோசிக்கிறார்கள். திங்களன்று, ஷாங்காயில் இருந்து டோக்கியோ மற்றும் சிட்னியில் இருந்து ஹாங்காங் வரை ஆசிய பங்குகள் பல தசாப்தங்களில் கண்டிராத அளவில் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன, வங்கிகள், நிதி பாண்டுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டன. அதே நேரத்தில் அமெரிக்க சந்தைகள் 2020-ல் கொரோனா தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னதாக ஒரே நாளில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டன. பெரும்பாலான நாடுகளுக்கு 10% முதல் 46% வரை புதிய வரிவிதிப்புகளை அதிபர் டிரம்ப் புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தற்போதைய பங்குச் சந்தை குழப்பங்கள் மக்களின் வாழ்க்கையையும் நிதியையும் பல வழிகளில் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வேலை இழப்புகள் ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குச் சந்தைகள் வீழ்ச்சி மக்களை பல வகைகளில் பாதிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பங்கு விலைகள் நீண்ட காலத்துக்கு வீழ்ச்சியை சந்தித்தால் அது வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒருவர் அதிலிருந்து லாபத்தை எதிர்பார்ப்பார். நிறுவனத்தின் பங்குகள் சில காலத்துக்கு வீழ்ச்சியடைந்து வந்தால், அதை தடுப்பதற்கு நிறுவனம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர் எதிர்பார்ப்பார். உதாரணமாக வேலைகளை குறைப்பதன் மூலம் செலவுகளை குறைக்கலாம். ஆனால், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக இருக்கும் மார்டன் ராவ்ன் "தற்போது" ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப, நிறுவனங்கள் தயங்குவார்கள் என்று கூறுகிறார். "இது இன்னும் மோசமடையும், இந்த வரி விதிப்புகள் திரும்ப பெறப்பட மாட்டாது என்று கருதினால் ஒழிய" வேலை இழப்புகள் இருக்காது என்கிறார். ஆனால் நீண்ட காலத்தில் "வேலை குறைப்பு குறித்து ஒரு முடிவு விரைவில் எடுக்க வேண்டியிருக்கும்" என்கிறார். கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 வரியும் வட்டி விகிதங்களும் உயருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்போதைய நிலை உலக பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். பங்குச் சந்தைகளின் தற்போதைய வீழ்ச்சி மக்கள் செலுத்தும் வரிகள், கடன்கள், அடமானங்கள் மற்றும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அவை அனைத்தும் பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் கூறுகிறார். சந்தை குழப்பங்கள் அரசாங்கங்களின் நிதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் விளக்குகிறார், அதாவது அவர்கள் செலவுகளைக் குறைப்பதையும் வரிகளை அதிகரிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். வட்டி விகிதங்களும் பாதிக்கப்படலாம், அவற்றில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். "இது எந்த வழியிலும் செல்லலாம்," என்று அவர் கூறுகிறார். அமெரிக்க வரி விதிப்புக்கு நாடுகள் எவ்வாறு பதிலடி கொடுக்கின்றன என்பது உட்பட பல காரணிகளைப் பொறுத்து விகிதங்கள் உயரலாம் அல்லது குறையலாம். உதாரணமாக, ஒரு நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது சில வகையான அடமானங்களை மலிவானதாக மாற்றக்கூடும் - இருப்பினும் பண சேமிப்பாளர்கள் தங்கள் சேமிப்புகளில் குறைந்த வருமானத்தைப் பெறுவார்கள். மாறாக, வட்டி விகிதங்களின் அதிகரிப்பு கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கச் செய்யும், ஆனால் சேமிப்பாளர்களுக்கு சிறந்த வருமானத்தைக் கொண்டுவரும். மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 ஓய்வூதியம் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ஓய்வூதிய தொகுப்புகள் பங்குச் சந்தையின் உறுதியற்ற நிலை காரணமாக பாதிக்கப்படலாம். சிலர் நேரடியாக பங்குகளை வைத்திருந்தாலும், பலருக்கு பங்குச் சந்தையுடனான தொடர்பு ஓய்வூதிய திட்டங்கள் மூலம் வருகிறது. சில வகையான ஓய்வூதிய பங்களிப்புகள் பங்குச் சந்தைகளில் உள்ளன. இந்தப் பங்குகளின் மதிப்பு குறைந்தால், மக்களின் ஓய்வூதிய தொகுப்பின் மதிப்பு பாதிக்கப்படலாம் என்று ராவ்ன் விளக்குகிறார். ஆனால் சில ஓய்வூதிய பங்களிப்புகள் அரசாங்க பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் உள்ளன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது இவற்றின் மதிப்பு அதிகரிக்கும், ஏனெனில் அவை தங்கம் போன்ற பிற சொத்துக்களுடன் "பாதுகாப்பான புகலிடமாக" பார்க்கப்படுகின்றன. எனவே, அரசாங்க பத்திரங்களின் மதிப்பு உயர்ந்தால், பங்குகளின் சில அல்லது எல்லா வீழ்ச்சியையும் ஈடுசெய்ய முடியும். ஆனால் அவை மக்களின் ஓய்வூதிய சேமிப்புகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. ஓய்வு பெறும் வயதை நெருங்க நெருங்க, மக்களின் ஓய்வூதிய தொகுப்பில் அதிக சதவீதம் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வாய்ப்புள்ளது, ஏனென்றால் அவர்கள் குறைவாக பாதிக்கப்படுவார்கள். இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் முழு அளவிலான வர்த்தகப் போர் உருவானால் அதை கவலை அளிக்கக் கூடியதாக இருக்கலாம். மந்தநிலை என்பது ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மக்களின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று மாத காலங்களுக்கு சுருங்குவதாகும். உலகம் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படுமா என்பதை விரைவில் கூற முடியாது என்று ராவ்ன் கூறுகிறார். "அடுத்த வாரம் அல்லது இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு முழு அளவிலான வர்த்தகப் போராக அதிகரித்து, மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி கொடுத்தால் நான் கவலைப்படுவேன்" என்று அவர் மேலும் கூறுகிறார். பங்குச் சந்தைகளின் தற்போதைய நிலைமை உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுத்தால், வேலை இழப்புகள் "மிகவும் சாத்தியம்" என்று அவர் கூறுகிறார். ஒரு மந்தநிலை மக்களுக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பல விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, சிலர் வேலை இழக்கக்கூடும், வேலையின்மை உயரக்கூடும். மற்றவர்களுக்கு பதவி உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம், அல்லது விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்க போதுமான சம்பள உயர்வு பெறுவது கடினமாக இருக்கலாம். இருப்பினும், மந்தநிலையின் வலி பொதுவாக சமூகம் முழுவதும் சமமாக உணரப்படுவதில்லை, இதனால் சமத்துவமின்மை அதிகரிக்கக்கூடும். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9281rpxzxo
  23. INNINGS BREAK 23rd Match (N), Ahmedabad, April 09, 2025, Indian Premier League RR chose to field Gujarat Titans (20 ov) 217/6 Current RR: 10.85 • Last 5 ov (RR): 72/4 (14.40) Rajasthan Royals Win Probability: GT 73.46% • RR 26.54%
  24. அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பென் சூ பதவி, பிபிசி வெரிஃபை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைததுக்கும் இந்த 84 சதவிகிதம் வரி அமலாகும் என சீனா அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புகளுக்கு எதிராக தேவைப்பட்டால் "கடைசி வரை போராடுவோம்" என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை "கொடுமையான நடைமுறைகளை" பின்பற்றுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 6 அமெரிக்க நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சீனா இணைத்துள்ளது. சீனாவின் பதிலடி வரி விதிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து , அமெரிக்காவுக்கு திரும்புவதற்கான நேரம் என குறிப்பிட்டுள்ளார். அதிகரித்து வரும் இந்த வர்த்தக மோதல் உலகப் பொருளாதாரத்தை என்ன செய்யும்? அமெரிக்கா - சீனா வரிக்கு வரி யுத்தம்: டிரம்ப் நடவடிக்கை பற்றி சீனா கூறுவது என்ன? டொனல்ட் டிரம்ப்: பங்குச்சந்தையின் மொத்த சரிவுக்கும் ஒற்றைக் காரணம் பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள் இந்திய பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.19 லட்சம் கோடி நஷ்டம் – எதிர்காலம் எப்படி இருக்கும்? இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் எவ்வளவு? இரண்டு பொருளாதார சக்திகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு சுமார் 585 பில்லியன் டாலர் (சுமார் 50,65,661 கோடி ரூபாய்கள்). ஆனால், சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ததை விட (145 பில்லியன் டாலர்), அமெரிக்கா வெகு அதிகமாக (440 பில்லியன் டாலர்) சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதனால் அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக வித்யாசமான 295 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை அமெரிக்கா கடந்த 2024 ம் ஆண்டு சந்தித்துள்ளது. இந்தக் கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்கப் பொருளாதரத்தில் சுமார் 1 சதவிகிதத்துக்கு சமம். ஆனால், இந்த வாரம் முழுக்க டிரம்ப் பலமுறை கூறிய 1 டிரில்லியன் டாலர் அளவிலான பற்றாக்குறை என்பதை விட குறைவானதே. ஏற்கெனவே டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவர் சீனாவின் மீது குறிப்பிடத்தக்க இறக்குமதி வரி விதித்திருந்தார். அவர் பதவிக் காலத்துக்குப் பின்பும் தொடர்ந்த அந்த இறக்குமதி வரிகளை ஜோ பைடன் அரசும் அதிகரித்தது. இந்த வர்த்தகத் தடைகள் சேர்ந்து 21 சதவிகிதமாக அமெரிக்காவில் இருந்த சீன இறக்குமதியை சென்ற ஆண்டு 13 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் வர்த்தகத்துக்காக சீனாவை அமெரிக்கா நம்பி இருப்பது குறைந்துள்ளது. வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 Y மற்றும் U ஆகிய எழுத்துகளால் பெண் காவல் அதிகாரி கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எனினும், சில சீனப் பொருட்கள் நேரடியாக அல்லாமல் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உதாரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி தகடுகளுக்கு, 2018ல் டிரம்ப் நிர்வாகம் 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்தது. ஆனால், அதன்பிறகு சீனத் தயாரிப்பாளர்கள் தங்கள் சூரிய சக்தித் தகடுகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை (assembly operations) மலேஷியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற இடங்களுக்கு மாற்றி முடிக்கப்பட்ட தயாரிப்புகளை அங்கிருந்தே அமெரிக்காவுக்கு அனுப்புவதன் மூலம் இறக்குமதி வரியைத் தவிர்க்கிறார்கள் என, 2023ல் அமெரிக்க வர்த்தகத் துறை ஆதாரங்களை சமர்ப்பித்தது. அந்த நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் 'பரஸ்பர வரிகள்', அடிப்படையில் சீனாவில் உற்பத்தியான கணிசமான பொருட்களுக்கு அமெரிக்காவில் விலை ஏறும். இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்கள் 2024 இல் அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததில் முதன்மையானது சோயாபீன்ஸ் - சீனாவின் 44 கோடி பன்றிகளின் உணவாக அவை பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா சீனாவுக்கு மருந்துகளையும், கச்சா எண்ணெயையும் கூட ஏற்றுமதி செய்கிறது. மறுபுறம் சீனாவிடம் இருந்து அமெரிக்கா மிக அதிக அளவிலான மின்னணு சாதனப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள் போன்றவற்றை வாங்குகிறது. மின்சார வாகனங்களுக்கு இன்றியமையாத தேவையான பெருமளவிலான மின்கலன்களும் (battery) சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் ஸ்மார்ட்ஃபோன் வகைகள் மிக முக்கியமானவை. இவை மொத்த இறக்குமதியில் 9 சதவிகிதத்தைப் பிடித்துள்ளன. இதில் பெரும்பகுதி, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்காக சீனாவில் தயாரிக்கப்படுபவை. கடந்த சில வாரங்களில் ஆப்பிளின் சந்தை மதிப்பு இறங்குவதற்கு அமெரிக்கா சீனாவின் மீது விதித்திருக்கும் இறக்குமதி வரிகள் மிக முக்கிய காரணியாகும். கடந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு 20 சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்?9 ஏப்ரல் 2025 மின்சார பைக், கார்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பொது சார்ஜிங் மையம் அமைக்க திட்டம் - இன்றைய டாப்5 செய்திகள்9 ஏப்ரல் 2025 டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங்கின் மீது விதித்துள்ள 20 சதவிகித இறக்குமதி வரியின் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும், அமெரிக்காவில் கணிசமாக விலை ஏறும். எல்லாப் பொருட்களும் இறக்குமதி வரி – 100 சதவிகிதமாக உயர்ந்தால் – அதன் விளைவாக விலை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம். சீனாவின் பதிலடி வரி விதிப்பால் அமெரிக்க இறக்குமதிப் பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்து, இதேபோன்ற வழியில் சீன நுகர்வோரைத்தான் இறுதியாக பாதிக்கும். ஆனால், இறக்குமதி வரியைத் தவிரவும், இரண்டு நாடுகளும் வர்த்தகம் மூலமாக ஒன்றை ஒன்று சேதப்படுத்திக் கொள்வதற்கு பிற வழிகளிலும் முயற்சிக்கலாம். தொழில்துறைக்குத் தேவையான தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உலோகங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காமல் செய்வதற்கான தடைகளை பெய்ஜிங் ஏற்படுத்தலாம். ராணுவ தெர்மல் இமேஜிங்கிலும், ரேடாரிலும் பயன்படுத்தப்படும் ஜெர்மானியம் மற்றும் கேலியம் இரண்டு பொருட்களின் விஷயத்திலும் சீனா இதை ஏற்கெனவே செய்துள்ளது. விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன?8 ஏப்ரல் 2025 கட்டுக்குள் வருகிறதா ஆளுநர் அதிகாரம்? - மத்திய அரசு அடுத்து என்ன செய்யும்?8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தாமிரம், லித்தியத்தில் இருந்து பல அரிய தாதுக்கள் வரையிலான முக்கிய உலோகங்களை சுத்திகரிப்பதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ஏற்கெனவே ஜோ பைடன் தொடங்கிய சீனாவின் மீதான தொழில்நுட்ப முற்றுகையைத் தொடரலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியமான மேம்பட்ட மைக்ரோசிப்கள் போன்ற சீனா இன்னமும் தயாரிக்க முடியாத பொருட்களின் இறக்குமதியை சீனாவுக்கு அமெரிக்க கடினமாக்க முடியும். அமெரிக்காவுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய விரும்பினால் சீனாவுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று கம்போடியா, மெக்ஸிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முடியும் என்று இந்த வாரம் குறிப்பிட்டார் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ. மற்ற நாடுகளை இது எப்படி பாதிக்கும்? சர்வதேச நாணய நிதியத்தின் படி (ஐ.எம். எஃப்), அமெரிக்காவும், சீனாவும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு , அதாவது 43 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டு அவற்றின் வளர்ச்சி குறைந்தாலோ, அல்லது பொருளாதார மந்தநிலையை நோக்கித் தள்ளப்பட்டாலோ, அது உலக வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும். சர்வதேச முதலீடும் பாதிக்கப்படலாம். வேறு விளைவுகளுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சீனா உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடு. அது தன் சொந்த மக்கள் தொகை நுகர்வதை விட மிக அதிகமான பொருட்களைத் தயாரிக்கிறது. ஏற்கெனவே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீனா உபரியாக உற்பத்தி செய்து வருகிறது - அதாவது தான் இறக்குமதி செய்வதை விட உலகின் பிற பகுதிகளுக்கு அது ஏற்றுமதி செய்கிறது. மலிவாகக் கிடைக்கும் கடன்கள் போன்ற அரசு நிதி உதவிகள், உள்நாட்டு மானியங்கள் போன்றவற்றால், சலுகை பெறும் நிறுவனங்கள், அந்தப் பொருட்களின் உண்மையான உற்பத்திச் செலவை விடவும் குறைவான விலைக்கே பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. எஃகு இதற்கு ஒரு உதாரணம். கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தப் பொருட்களை சீனா அமெரிக்காவுக்குள் நுழைக்க முடியவில்லை என்றால், சீன நிறுவனங்கள் இவற்றை உலகின் எங்கு வேண்டுமானாலும் 'தள்ளிவிடும்' ஆபத்து இருக்கிறது. சில நுகர்வோருக்கு இதனால் நன்மை பயக்கும் என்றாலும், உலகெங்கும் இதே பொருட்களைத் தயாரிக்கும் மற்ற நாடுகளுக்கு சம்பளம் மற்றும் வேலை இழப்பை இது ஏற்படுத்தலாம். 'லாபி' அமைப்பான யுகே ஸ்டீல், அதிகப்படியான எஃகு பிரிட்டன் சந்தைக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. முழுமையான சீன- அமெரிக்க வர்த்தகப்போர் பாதிப்பின் எச்சம், உலகம் முழுவதும் உணரப்பட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jzzn1ep62o
  25. Published By: VISHNU 09 APR, 2025 | 07:24 PM இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி செய்வதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இலஞ்ச மற்றும் ஊழல் குற்றங்கள் காரணமாக உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பல தசாப்தங்களாக பின்தங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை என்பதையும் வலியுறுத்தினார். சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும், இதற்கு கருத்தரங்குகளும், பயிற்சி பட்டறைகளும் மாத்திரம் போதாது என்றும், குற்றமொன்றிற்கு தண்டனை வழங்கப்படுமென நடைமுறையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார். கிராமத்தில் மண் வீதியில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல், பிரஜைகளை கண் பார்வை இழக்கச் செய்யும் மருந்துப் பொருட்களைக் கொண்டுவருவது வரையிலும், எளிய இடங்களில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் உச்சகட்ட மனிதாபிமானமற்ற நிலைமை வரையிலும், பிரதேச சபை முதல் மத்திய வங்கியில் திருடித் தின்பது வரையிலும் பரவியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி முன்னைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர் என்பதையும் நினைவுபடுத்தினார். பொது நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் சிலர் மற்றும் ஆயுத குற்றக் கும்பலும் உள்ளடங்கியதான இலஞ்சம் மற்றும் ஊழலை செய்யும் திருடர்களின் வளையம்பொன்று உருவாகியுள்ளதாகவும், அதனை தற்போது அடையாளம் காண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தேசிய நிகழ்ச்சி நிரலுடன் முன்னேறியதன் பலனாக விண்வெளி மற்றும் மென்பொருள் துறைகளில் பெருமளவான சிரமப் படையினை உருவாக்கியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் அதிகார தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடாக மாறியது என்றும் கூறினார். மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையில் தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீது பிரஜைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும், குற்றத்தை செய்துவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். "தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029" ஊடாக நாட்டை "வளமான தேசத்தை நோக்கி" கொண்டு செல்வதே நோக்கமாகும் என்பதுடன், ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகார பிரிவுகளை நிறுவி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதைக் கண்காணிக்கக்கூடிய ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கல்வி மற்றும் சமூக பங்களிப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் மூலோபாய முன்னுரிமைத் துறைகளுக்காக இந்த செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியது முக்கியமானதாகும், இலங்கைக்குள் அந்த பொறிமுறையை மிகவும் வலுப்படுத்தக்கூடிய முன்னணி அரச நிறுவனமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கூறலாம். அதன்படி, இலஞ்சம் இல்லாத சமூகத்தை உருவாக்க, அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் ஒரு வலுவான தேசிய ஊழல் எதிர்ப்புக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேசிய செயல் திட்டத்தை தயாரிக்கும்போது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அனைத்து பங்குதாரர்களினதும் ஆதரவுடன், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மூன்று மொழிகளிலுமான பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஊழல் பிரச்சினைகள் குறித்த பொதுமக்களின் கருத்தை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்பட்ட விரிவான கணக்கெடுப்பும் அதற்குள் அடங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரச அதிகாரிகள், தனியார் துறை, சர்வதேச அமைப்புகள், சிவில் அமைப்புகள். சமூக அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு தேவைகள் உள்ள குழுக்கள், ஊடகம், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுபவங்கள், மற்றும் சகல மாகாணங்களில் உள்ள பல்வேறு குழுக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகியவை தேசிய செயல் திட்டத்தை தயாரிப்பதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிராகப் போராடும், ஊழலை நிராகரிக்கும் பிரஜைகள் குழு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அனைத்து வழிகளிலும் ஆதரிக்கும் அரசியல் விருப்பம், சட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து பின்னணிகள் மற்றும் அரச சேவையுடன் அனைத்து துறைகளிலும் நேர்மைத்திறனை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததிக்கு நேர்மைத் திறனான நாட்டை உருவாக்க அனைவரினதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாகக் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படை தூண்கள் என்று ஜப்பான் உறுதியாக நம்புவதால், உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிப்பதாகவும் ஜப்பானிய தூதுவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தித் திட்டப் பிரதிநிதி அசுசா கொபோடாவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார். கடந்த ஆண்டு இலங்கையின் முதல் தேசிய வரி செலுத்துவோர் தொடர்பான தொகை மதிப்பின் படி, 84% வீதமானோர் வரி செலுத்தும் விருப்பத்தை ஊழல் நேரடியாக பாதிக்கிறது என்று குறிப்பிட்டனர். ஊழல் முதலீட்டைத் தடுக்கிறது என்றும் வர்த்தகம் செய்வதற்கான செலவை அதிகரிக்கிறது எனவும் நிலையான அபிவிருத்தி மற்றும் மனித பாதுகாப்பை தடுக்கிறது என்றும் ஊழல் காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கின்றன என்றும் கொபோடா சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதத்திற்கும் அரச பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற இந்த செயல் திட்டம், இலங்கை சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். பிரதம நீதியரசர் முர்து நிருபா பிந்துஷினி பெர்னாண்டோ, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211652

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.