Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் : மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி பலஸ்தீன (Palestine) அரசை பிரான்ஸ் (France) அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ள கருத்திற்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால், மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இஸ்ரேல் அரசை அங்கீகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா உட்பட சுமார் 150 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முதன்மையான மேற்கத்திய நாடுகள் இதுவரை பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. அதேவேளை, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலையும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அது பயங்கரவாதத்திற்கான வெகுமதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பதிலடி மேலும், கற்பனையான ஒரு பலஸ்தீன நாட்டை எந்த ஒரு நாடும் ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது, நாம் அனைவரும் அறிந்த யதார்த்தத்தில், பயங்கரவாதத்திற்கான பரிசாகவும், ஹமாஸ் படைகளுக்கு ஒரு ஊக்கமாகவும் இருக்கும் என அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருபோதும் கொண்டு வராது என குறிப்பிட்டுள்ள அவர், நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார். https://ibctamil.com/article/france-could-recognise-palestinian-state-1744359024
  2. அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. பாடசாலைகளுக்கான இந்த ஆண்டின் முதல் தவணையின் இரண்டாவது கட்டம் இன்று நிறைவடைகிறது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதல் தவணையின் மூன்றாவது கட்டம் அதன்படி, மூன்றாவது கட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் தவணையின் மூன்றாவது கட்டம் மே மாதம் 9ஆம் திகதி முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/april-15-public-holiday-school-holiday-sri-lanka-1744340752
  3. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் பெறாத கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொலிஸாரின் உதவியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யுமாறு தொலைபேசி விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையகத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரண தெரிவித்தார். அபராதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடர்புடைய உரிமத்தைப் பெறுவதற்கு 1,50,000 ரூபாய் செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இனிமேல் இந்த உரிமம் இல்லாமல் ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசி கருவிகளை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத ஒரு மில்லியன் ரூபாய்க்கு அதிகரிக்காமல் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உரிமங்கள் இல்லாத கடைகள் குறித்து ஏற்கனவே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத வணிகர்கள் இருந்தால், உடனடியாக உரிய உரிமத்தைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/trc-raids-on-unregistered-phone-shops-in-sl-1744338808
  4. டொமினிகன் இரவு விடுதியில் பலி 221 ஆக அதிகரிப்பு சான்டோ டொமின்கோ: கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமின்கோவில் கடந்த 8ம் தேதி அதிகாலை இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரவுவிடுதியில் இருந்தனர். மேற்கூரை இடிந்ததில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த மீட்பு பணியில் பலி எண்ணிக்கை 221 ஆக அதிகரித்தது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 3 நாள் மீட்புப் பணியில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்பதால் மாயமானவர்களின் உறவினர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். https://www.dinakaran.com/dominican_nightclub_bali/ டொமினிகன் குடியரசு இரவு விடுதி விபத்து: 221 ஆக உயர்ந்த பலியானோர் எண்ணிக்கை டொமினிகன் குடியரசில் இரவு விடுதி கூரை சரிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த இரவு விடுதி டொமினிகன் குடியரசு நாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் சிமெண்ட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த துர்திஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக வியாழக்கிழமை நினைவஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. அதே நேரத்தில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய எஞ்சிய நபர்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் மூலம் சான்டோ டொமிங்கோவின் தேசிய திரையரங்கம் துயரத்தின் மையமாக மாறியுள்ளது. மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டனர். இருப்பினும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் யாரும் உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விபத்தில் 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் எட்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த பேரழிவுகரமான சரிவின் காரணங்கள் குறித்து விசாரணைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு இந்த பெரிய இழப்பால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. https://news.lankasri.com/article/dominican-republic-nightclub-death-toll-rise-1744302457
  5. பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும் கட்டுரை தகவல் எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 ஏப்ரல் 2025 ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். 'ராஸ்மஸ் மங்க்' என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய "இன்டர்மீடியா" எனும் ஒருவகை இனிப்பு தின்பண்டத்துக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல அலைமோதும் கூட்டம் காணப்படுகிறது. பிரெட் அல்லது காய்கறிகளில் பூஞ்சை பூத்துவிட்டால் அருவருப்புடன் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், இந்த இன்டர்மீடியா தின்பண்டத்தில் தங்க நிறத்தில் இருக்கும் இந்த உணவானது நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சை பூத்த பிறகுதான் பக்குவப்படுகிறது. அறிவியலையும் சமையல் கலையையும் கலந்திணைப்பு செய்து வயு-ஹில்-மைனி (Vayu Hill-Maini) எனும் நுண்ணுயிரி பொறியாளர் துணையோடு இந்த உணவுப் பண்டத்தை உருவாக்கியுள்ளார்கள். பெரியவர்கள் தாய்ப்பால் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்குமா? ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம் தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன? குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்? உணவில் பூஞ்சை தாவரம், விலங்கு, மீன், பூச்சிகள் போலவே பூஞ்சை இனமும் மனித உணவுகளில் பல்வேறு வகையில் பங்களிப்பு செலுத்துகிறது. சாக்கரோமைசஸ் செரிவிசியா எனும் ஈஸ்ட் வகை ஒரு செல் உயிரியைக் கொண்டு நொதிக்க வைத்துத்தான் ரொட்டி, பீர், ஒயின், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளைத் தயார் செய்கிறார்கள். ஐரோப்பாவில் பிரபலமான ப்ளு சீஸ் எனப்படும் உணவை ஒரு வகையான பெனிசிலியம் எனும் பூஞ்சையின் உதவியோடு தயார் செய்கிறார்கள். ஆஸ்பெர்கிலஸ் ஓரிசேயி எனும் பூஞ்சை இனத்தை வைத்து மிசோ, சோயா சாஸ், ஜப்பானிய/கொரிய பீர் வகையான ஷேக் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. பேசிலஸ் புமிலஸ் எனும் பூஞ்சையைக் கொண்டு இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் புரோபயாடிக் மருந்துகளைத் தயார் செய்கிறார்கள். கற்பாசி எனப்படும் பதர் கே பூல் அல்லது தாகப் பூல் என்பது ஒருவகைப் பாசி. பர்மோட்ரேமா பெர்லாட்டம் எனப்படும் இந்த உயிரி உள்ளபடியே ஒருவகை ஆல்கே பூஞ்சையுடன் கூட்டுவாழ்வு உறவைக் கொண்ட கலவை. வட இந்தியாவின் கரம் மசாலா, செட்டிநாட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் இந்தப் பூஞ்சை சாதாரணமாக எந்தச் சுவைமனமும் கொண்டிருக்காது. ஆனால், சூடான எண்ணெய் அல்லது நெய்யில் தாளிக்கும்போது புகை, மரம், மண் வாசனையைத் தூக்கி உணவின் சுவை மணத்தைக் கூட்டுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க சரியான 'ரெஸ்யூம்' தயாரிப்பது எப்படி?31 மார்ச் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 கலந்திணைப்பு பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,வயு ஹில்-மைனி, சிறுவயதில் இருந்தே சமையல் மற்றும் அறிவியல் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் வயு-ஹில்-மைனியின் தந்தை கியூபாவை சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவர். பின்னர் நார்வேவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தாயின் முன்னோர்கள் கென்யாவில் இருந்து ஸ்வீடனுக்கு புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினர். அவரது தாய் அக்கம்பக்கம் குடியிருந்தவர்களுக்கு இந்திய சமையல் கலை கற்றுக் கொடுத்து வந்தார். எனவே, அவரது வீட்டில் எப்போதும் உலகின் பல்வேறு உணவுகளின் சுவை மணம் பரவி விரவியிருந்தது. "சிறு குழந்தையாக இருந்தபோது சமையல் அறையில்தான் நான் வளர்ந்தேன்" என நினைவுகூர்கிறார் ஹில்-மைனி. பல்வேறு பண்பாடுகள் கொண்டவர்கள் அவர்களுடைய வீட்டில் இருந்ததன் காரணமாக உலகின் பல்வேறு பண்பாடு சார்ந்த கறிமசால் பொருள்கள், சுவைமனம் ஊட்டும் பொருள்கள் அவர்கள் வீட்டில் இருந்தன. இவற்றைக் கலப்பு செய்து சிறுவயது முதலே புதுப்புது சமையல்களைச் செய்து பரிசோதனை செய்வதில் ஆர்வம் கொண்டார். அதுபோலவே பள்ளியில் அறிவியல் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். "சிறுவயது முதலே சமையல் மீதும் அறிவியல் மீதும் எனக்கு ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது" என்கிறார் ஹில்-மைனி. சமையலறை அறிவியல் பள்ளிக் கல்வி முடிந்த பின்னர் அல்கிமிஸ்ட் உள்பட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னணி சமையல் கல்விக் கூடங்களில் சமையல் கலையைப் பயின்றார். பின்னர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கே முதலில் பல உணவகங்களில் கடைநிலை சிப்பந்தியாகவும் சமையல் எடுபிடியாகவும் கலையை மேலும் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். இவர் தயாரித்த புதுவித சாண்ட்விச்சை சுவைத்துப் பார்த்த ஓர் உணவக முதலாளி வியந்து இவருக்கு வாய்ப்பு அளித்தார். சமையல் கலையில் திறமை கூடியது; அதே நேரத்தில் அறிவியலின் துணை கொண்டு சமையல் கலையை அணுகும் ஆர்வமும் முளைத்தது. உணவகங்களில் வேலை செய்துகொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் 2020இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். அங்கே உணவு உள்பட நாம் உட்கொள்ளும் பல்வேறு வேதிப் பொருள்கள் மீது குடல் நுண்ணுயிரிகள் எத்தகைய உயிரி வேதிவினை ஆற்றுகிறது என ஆய்வு செய்தார். உற்பத்தியாகும் உணவும் சமைக்கப்படும் உணவும் பெருமளவில் வீணாவது கண்டு கவலை கொண்டார் ஹில்-மைனி. அமெரிக்காவில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது," என்கிறார். முட்டையின் ஓடு, பழத்தோல் போன்றவை மட்டுமல்ல பெருமளவில் உணவே வீணாகிறது எனப் பல்வகை ஆய்வுகள் சுட்டிக்கட்டுகின்றன. உலகளவில் உணவுத் துறை ஏற்படுத்தும் கார்பன் மாசில் பாதிக்குப் பாதி அளவு உணவு வீண் செய்யப்படுவதால் ஏற்படுகிறது. எனவே, விவசாயக் கழிவுகளை உணவாக மாற்ற முடியுமா என அடுத்து ஆய்வு செய்ய ஆர்வம் கொண்டார். பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 சனி கிரகத்தை போலவே பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்தனவா? புதிய கண்டுபிடிப்பு30 மார்ச் 2025 பாரம்பரிய இந்தோனீசிய உணவு பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,வாயு ஹில்-மைனி நியூரோஸ்போரா வெற்றுருவங்களை ஆய்வு செய்தார். அவற்றில் ஒன்று மனித உணவுக் கழிவுகளுக்குத் தகவமைத்து படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளது என அறிந்துகொண்டார் உணவகங்களில் வேலை செய்தபோது சக இந்தோனீசியா சமையல் கலை வல்லுநர்கள் தங்கள் நாட்டில், குறிப்பாக மேற்கு ஜாவா தீவில் விரும்பி உண்ணும் அஹ்ன்சாம் எனும் உணவை அறிமுகம் செய்திருந்தனர். சோயா விதைகளை அழுத்திப் பிழிந்து சோயா பால் எடுத்த பிறகு எஞ்சும் கழிவில் இருந்தும் நிலக்கடலையைச் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் கழிவில் இருந்தும் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. பாலில் தயிராய் சிறிதளவு உறையூட்டித் தயிர் செய்வது போல இந்தக் கழிவுகள் மீது சிறிதளவு நியூரோஸ்போரா இன்டர்மீடியா எனும் பூஞ்சையை இடுவார்கள். பூஞ்சை வளர்ந்து கழிவை நொதித்து மனிதன் உண்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உணவைத் தயார் செய்துவிடும். உயிரி வேதிவினை நடைபெறும்போது உமிழும் சில வேதிப்பொருள்கள் பக்குவம் செய்த கழிவு ஸ்பான்ஜ் போன்ற பதமும் செட்டார் சீஸ் வைத்து டோஸ்ட் செய்யப்பட்ட ரொட்டி போன்ற சுவை மனத்தையும் பெற்றுவிடும். ஈஸ்ட் எனும் பூஞ்சை ரொட்டி மாவை நொதிக்கச் செய்து ரொட்டி தயார் செய்கிறது என்றாலும் உணவுப் பொருளை வேறு வடிவு கொண்ட உணவுப் பொருளாக மாற்றுகிறது. ஆனால் இந்தோனீசியா அஹ்ன்சாம் உணவில் நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை கழிவைப் பதப்படுத்தி உணவாக மாற்றுகிறது. நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சையை ஹில்-மைனி தனது முனைவர் பட்ட மேலாய்வுக்கு எடுத்துக்கொண்டார். மேலும் தனது ஆய்வுக்காக, தான் படித்த சமையல் கலை நிறுவனங்களையும் அங்குள்ள சமையல் கலை வல்லுநர்களையும் இணைத்துக்கொண்டார். மரபணுவியல் இந்தோனீசியாவில் இருந்து ஆய்வுக்காக என அங்கே பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அஹ்ன்சாம் மாதிரிகள் பலவற்றை வரவழைத்து ஆய்வு செய்தார். பக்குவம் செய்த இந்த உணவில் என்னென்ன வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா உள்ளது என மரபணு வரிசை செய்து ஆராய்ந்து பார்த்தார். ஆய்வில் இன்டர்மீடியாவின் வேற்றுருவும் எல்லா அஹ்ன்சாம் மாதிரிகளில் இருந்த வேற்றுருவும் வேறுவேறு என்று புலப்பட்டது. அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா வேற்றுரு வேறு எங்கும் காணப்படவில்லை; அதே போல அஹ்ன்சாம் உணவு மாதிரிகளில் வேறு எந்த வேற்றுருவும் இருக்கவில்லை. மனிதன் அணியும் ஆடையில் உள்ள சீலைப் பேன் தலை முடியில் வளர முடியாது; அதேபோல, தலைமுடியில் வாழும் பேன் வகை சீலை போன்ற ஆடைகளில் வாழ முடியாது. பரிணாமப் படிநிலையில் இரண்டும் இருவேறு இடங்களில் வாழும் தன்மையைப் பெற்றுவிட்டன. அதேபோல, மனிதன் விவசாயம் செய்யத் துவங்கிய பின்னர் பல்வேறு விதமான விவசாயக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உருவாயின. இந்தப் புதிய இடங்களுக்குத் தக்கவாறு தகவமைத்து அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியா பூஞ்சை பரிணமித்தது என்கிறார் ஹில்-மைனி. அக்வாபோனிக்ஸ்: மீன்களின் கழிவுகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கும் தம்பதி29 மார்ச் 2025 சிறுநீரை உரமாக மாற்றும் அமெரிக்க விவசாயிகள்29 மார்ச் 2025 கழிவிலிருந்து கருவூலம் பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,சமைத்த அரிசிச் சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி வைத்துத் தங்க நிறச் சாதத்தைத் தயாரிக்கும் முறை அஹ்ன்சாம் வகை நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை 30 வகையான தாவரக் கழிவுகளில் இட்டு ஆய்வு செய்தனர். தாவரங்களில் உள்ள செலுலோஸ் போன்ற பொருள்களை மனிதனால் செரிக்க வைக்க முடியாது. மேய்ந்து உண்ணும் ஆடு மாடு போன்றவற்றால் இவற்றை ஜீரணிக்க முடியும். எனவேதான் நாம் அரிசி கோதுமை போன்ற தானியங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விவசாயக் கழிவாக அப்புறப்படுத்தி விடுகிறோம். முக்கிய தாவரக் கழிவுகளில் என்னென்ன வேதியியல் மாற்றங்களை இந்தப் பூஞ்சை தூண்டுகிறது என இனம் கண்டனர். சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரும்புக் கழிவு, தக்காளி கெட்சப் செய்த பின்னர் வரும் கழிவு, பாதாம் பருப்புக் கழிவு, வாழைப்பழத் தோல் உள்படப் பெருமளவில் குவியும் விவசாயத் தொழில் உற்பத்திக் கழிவுகள் மீது கவனம் செலுத்தினர். இந்தக் கழிவுகளில் உள்ள மனிதனால் ஜீரணிக்க முடியாத பெக்டின் செல்லுலோஸ் போன்ற தாவர செல்களின் சுவர் பாலிசாக்கரைடு பொருட்களைச் சுமார் 36 மணிநேரத்தில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய, சத்தான மற்றும் இனிமையான உணவாக இந்தப் பூஞ்சை மாற்றுகிறது என்று தங்கள் ஆய்வில் கண்டனர். மேலும் இயற்கை வேற்றுரு வகை போலன்றி மனிதன் உற்பத்தி செய்யும் விவசாயக் கழிவுகளில் வளரும் இந்த வகை நியூரோஸ்போரா பூஞ்சை மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த நச்சுப் பொருள்களையும் உற்பத்தி செய்யவில்லை எனவும் கண்டுபிடித்தனர். அதாவது இந்தப் பூஞ்சையை உண்பதில் தீங்கு ஏதுமில்லை. "பூஞ்சையை ஜீரணம் செய்து மாற்றம் செய்யும் விவசாயத் தாவரக் கழிவுகளில் மனிதனால் ஜீரணிக்கக்கூடிய புரத உள்ளடக்கம் கூடுகிறது. அதே போல, பூஞ்சை செய்யும் வேதியியல் மாற்றம் காரணமாகக் கழிவின் சுவை மணத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. நாம் விரும்பாத சோயாபீன்களுடன் தொடர்புடைய சில சுவை மணம் முற்றிலும் அகன்று விடுகிறது. இப்போது அதே கழிவு கூடுதல் புரத ஆற்றலுடன் மனிதன் உண்ண ஏற்ற சுவை மணத்துடன் மாறிவிடுகிறது" என்கிறார் ஹில்-மைனி சுவைக்கும் உணவு சத்தான உணவாக இருக்கலாம்; ஆனால் சுவை இல்லை என்றால் யாரும் சீண்ட மாட்டார்கள்." "குறிப்பாக ஒரு சமையல் கலை வல்லுநருக்கு மிக முக்கியக் கேள்வி- இந்த 'உணவு சுவையாக உள்ளதா?'" என்கிறார் ஹில்-மைனி. பிரெஞ்சு மக்கள் விரும்பி உண்ணும் ப்ளு சீஸ் எனும் வகைப் பாலாடைக் கட்டியின் மணம் மற்றும் சுவையைக் கண்டு வேறுபல பண்பாட்டைச் சார்ந்தவர்கள் முகம் சுளிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கலாசாரச் சூழலுக்கு வெளியே மக்கள் அதை நேர்மறையாக உணரவில்லை என்றால் அனைவரும் ஏற்கும் வகையில் சுவை மணம் உள்ளது என அறியலாம். இதுவரை அஹ்ன்சாம் உணவைச் சுவைத்துப் பார்த்திராத ஐரோப்பிய நபர்களிடம் அல்கெமிஸ்ட் உணவகத்தில் வைத்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்தோனீசிய அஹ்ன்சாம் மட்டுமின்றி வேர்க்கடலை, முந்திரி, பைன் பருப்பு, அரிசிச் சோறு போன்றவற்றிலும் இந்தப் பூஞ்சையை வளர்த்து உணவு உருவாக்கி அல்கெமிஸ்ட் சமையல் கலை வல்லுநர்கள் பரிசோதனை நடத்தினர். பூஞ்சை வளர்ந்த அரிசிச் சோறு போன்றவற்றில் இனிமையான பழச் சுவை மனம் உருவானது. நூடுல்ஸ் போன்றவற்றில் காணப்படும் ஜப்பானிய சுவை மணமான உமாமி சுவை மணத்தையும், மிதமான காரச் சுவை மணத்தையும் உணர முடிந்தது என வாடிக்கையாளர்கள் கூறினார். சுவைத்துப் பார்த்த உணவாக வாடிக்கையாளர்களிடம் ப்ளூ சீஸ் போல விருப்பு அல்லது வெறுப்பு என்ற இரு துருவ நிலைப்பாடு ஏற்படவில்லை. எவரும் வெறுத்து ஒதுக்கவில்லை. கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 வெனிசுலாவில் இந்த சோம்பல் கரடி தனது இனம் முழுமைக்கும் உதவியது எப்படி?28 மார்ச் 2025 புதிய தின்பண்டம் பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,அல்கிமிஸ்ட் உணவகத்தில் பிரபலமாகி வரும் இன்டர்மீடியா இனிப்பு தின்பண்டம். இந்த ஆய்வின் தொடர்ச்சிதான் அல்கெமிஸ்ட் உருவாக்கிய இன்டர்மீடியா இனிப்புப் பண்டம். கீழே ஜெல்லி அடுக்கு. அதன் மேலே ப்ளம் ஒயின் அடுக்கு. இதற்கு மேலே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அரிசிச் சோறு கஸ்டர்ட். சமைக்கப்பட்ட சோற்றில் நியூரோஸ்போரா பூஞ்சையை உறையூற்றி அறுபது மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். அரிசிச் சோறு தங்க நிறமாக மாறிவிடும். இந்த அரிசிச் சோற்றை வைத்துக்கொண்டு கஸ்டர்ட் தயார் செய்ய வேண்டும். இதன் மேலே எலுமிச்சையை சிறு துளி விடவேண்டும். வருத்த எலுமிச்சை தோல் சீவலைப் பொடியாகத் தூவிவிடவேண்டும். இதுதான் 'இன்டர்மீடியா' இனிப்புப் பண்டச் செய்முறை. "இந்தப் பூஞ்சை மிதமான காரச் சுவை மணம் தருவதால் முதலில் நாங்கள் காரத் தின்பண்டம் தயாரிக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால் சமைத்த அரிசிச் சோற்றில் இந்தப் பூஞ்சையை நொதிக்கும்போது ஊறுகாய் சுவையும் பழத்தின் சுவை மனமும் ஒருங்கே சேர்ந்து வருவதால் இனிப்புத் தின்பண்டம் செய்யத் துவங்கினோம். இறுதியில் நாங்கள் தயாரித்த இந்த இனிப்புப் பண்டம் எங்களுக்கே வியப்பாக இருக்கிறது," என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட அல்கெமிஸ்ட் உணவகத்தின் தலைமை சமையல் கலை வல்லுநரான மங்க். நேச்சர் மைக்ரோபையாலஜி எனும் ஆய்விதழில், "பாரம்பரிய நொதித்தல் துணை கொண்டு உணவுக் கழிவுகளை உணவுக்காகப் பதம் செய்தல்" என்கிற ஆய்வுக் கட்டுரையும் இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் காஸ்ட்ரோனமி அண்ட் பூட் சைன்ஸ் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. அதேபோல, "ஆய்வகத்தில் இருந்து உணவு மேசைக்கு: உணவாக உட்கொள்ளக்கூடிய நியூரோஸ்போரா இன்டர்மீடியாவை பயன்படுத்தி சமையல் கலை முனைப்பு காணுதல்" என்கிற ஆய்வுக் கட்டுரையையும் இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின் வெளிச்சத்தில் அறிவியல் துணைகொண்டு சமையல் கலையை வளர்த்து எடுக்கும் நோக்கில் அல்கெமிஸ்ட் உணவகம் "ஸ்போரா" என்கிற சமையல் கலை ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளது. "அறிவியல் பார்வையில் புதிய சமையல் கலை - உணவு குறித்த புதிய அறிவியல் பார்வை' இதுதான் நான் மேற்கொள்ளும் அறிவியல் ஆய்வு" என்கிறார் ஹில்-மைனி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0jzpq4ndleo
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நேற்று தெரிவித்தார். உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22 கிராட்) 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது. ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்கு (22 கிராட்) 65 ரூபாய் உயர்ந்து சுமார் 8,390 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் உயர்ந்து ஒரு கிராம் 8,660 ரூபாய்க்கு விற்பனையானது. பொதுவாக, பொருளாதார நெருக்கடி அல்லது சந்தை குழப்பத்தின் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதன் மீது முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை உயரும். ஆனால் இந்த முறை மாறாக டிரம்ப் வரி விதிப்புக்கு பிறகு, தங்கத்தின் விலை சரிந்து தற்போது உயர்ந்துள்ளது. டொனல்ட் டிரம்ப்: பங்குச்சந்தையின் மொத்த சரிவுக்கும் ஒற்றைக் காரணம்8 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுக்கும் போது இந்தியா மௌனம் காப்பது ஏன்?9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தங்கத்தின் விலை ஏன் சரிந்தது? இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், எப்போதும் விலை உயர்ந்துகொண்டேதான் இருந்துள்ளது. 2000களின் தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு சுமார் 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின்போது தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் சுமார் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகு கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பிறகு ரஷ்யா – யுக்ரேன் போர் போன்ற பல காரணங்களினால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி, தற்போது ஒரு சவரன் சுமார் 67,000 முதல் 69,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ள தங்கத்தின் விலைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "டிரம்பின் வர்த்தக வரி விதிப்பின் காரணமாக உலக பொருளாதாரமே குழப்பத்தில் இருக்கிறது. அதனால்தான் தங்கம் விலை இறங்கி தற்போது எறியுள்ளது", என்று கூறினார். "தங்கம் ஒரு நிலையான முதலீடு. இதனால் மக்கள் மத்தியில் தங்கத்திற்கு அதிக தேவை இருக்கிறது. தற்போது பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தாலும், தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வை எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சி ஒரு குறுகிய கால தாக்கம் மட்டுமே", என்றும் அவர் குறிப்பிடுகிறார். தங்கம் வைப்பு திட்டத்தை நிறுத்திய மத்திய அரசு – தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு பாதிப்பா?3 ஏப்ரல் 2025 திருநங்கையுடன் திருமணம் - பாலியல் ஈர்ப்பில்லாமல் வாழும் தம்பதி சமூகத்தில் சந்திக்கும் சவால்கள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் டிரம்பின் வரி விதிப்பு காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 38 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மார்னிங்ஸ்டார் என்னும் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார். இது நடக்க வாய்ப்பில்லை என்று ஜோதி சிவஞானம் தெரிவிக்கின்றார். "வெறும் அமெரிக்காவின் வரி விதிப்பினால் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை'' என்று ஜோதி சிவஞானம் கூறுகிறார். "சமீபகாலமாக தங்கத்தின் விலையேற்றத்தில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான தங்கத்தை கொள்முதல் செய்வது ஆகும். தங்கம் ஒரு நிலையான மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதலீடு என்பதாலும், அது வர்த்தக பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் சார்ந்துள்ளன", என்று பேராசிரியர் ஜோதி சிவஞானம் தெரிவித்தார். உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் சுமார் 20% தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்குகின்றன. தங்கத்தை வாங்கும் துறைகளில், மூன்றாம் இடத்தில் மத்திய வங்கிகள் உள்ளன. அதிக அளவிலான தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம். தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,பேராசிரியர் ஜோதி சிவஞானம் "எப்போதும் எறிக்கொண்டே இருக்கும் அதன் விலை மற்றும் நிலைத்தன்மை காரணமாக இந்தியாவைப் போல மற்ற நாடுகளிலும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தாண்டி பொது மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணியாக இருக்கின்றது", என்று அவர் கூறினார். மேலும் பணவீக்கம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவையும் சேர்ந்து தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டார் ஜோதி சிவஞானம். தொடர்ந்து பேசிய அவர், "இது போன்ற காரணிகளில் பாரிய மாற்றம் நிகழ்ந்து, தங்கத்திற்கான தேவை குறைந்தால் மட்டுமே அதன் விலையிலும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்படும். மற்றபடி, தங்கத்தின் விலையில் அவ்வப்போது சரிவு இருந்தாலும், அதன் மதிப்பு மேல்நோக்கி உயர்ந்துகொண்டேதான் இருக்கும்", என்று தெரிவித்தார். "அமெரிக்கா தொடங்கியுள்ள வர்த்தக போரால் தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பு முதலீடாக கருதப்படுகிறது. இது தங்கத்தின் விலையை நிச்சயமாக அதிகரிக்கவே செய்யும்", என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c98ggg7ery0o
  7. மின்சார சபையின் அறிவிப்பால் அதிருப்தியில் பயனாளர்கள் நாட்டில் உருவான மின்சார தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சூரிய மின்கல திட்டத்தை (Solar Panel) நாடு முழுவதும் உருவாக்கி உள்ளது. இதில் சூரிய மின்கல திட்டத்தை பயன்படுத்தும் பாவனையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மேலதிகமாக வரும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21வரை, அனைத்து சோலார் உற்பத்தியாளர்களையும் துண்டிக்குமாறு இலங்கை அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டுள்ளது. அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு.. ஏப்ரல் புத்தாண்டுக் காலத்தில் நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மின்சார அமைப்பைப் பாதுகாக்கும் வகையில் இதை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திடீர் அறிவிப்பினால் சூரிய மின்கல திட்டத்தை வாழ்வாதாரமாகவும் வங்கிக் கடன் அடிப்படையில் திட்டத்தை மேற்கொள்பவர்களுக்கும் குறித்த அறிவிப்பானது பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால் பயனாளர்கள் தமது அதிருப்தியினையும் வெளியிட்டுள்ளனர். https://tamilwin.com/article/uninterrupted-power-supply-during-festive-season-1744362889#google_vignette
  8. Published By: DIGITAL DESK 3 09 APR, 2025 | 03:40 PM சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன ஓநாய் இனத்திற்கு விஞ்ஞானிகள் உயிர் கொடுத்துள்ளனர். டையர் ஓநாய் உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000 - 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஏனைய அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. எப்படி சாத்தியம்? இதற்காக விஞ்ஞானிகள் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர். ஓநாய் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர். இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன. பின்னர் அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை ஈன்றுள்ளது. இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211592
  9. நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொருங்கிய ஹெலிக்கொப்டர் – சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி 11 APR, 2025 | 06:45 AM அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியவேளை அதில் காணப்பட்டுள்ளனர். ஹெலிக்கொப்டர் தலைகீழாக ஆற்றிற்குள் விழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நீச்சல் வீரர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள், ஹெலிக்கொப்டரிலிருந்து கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நால்வர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/211764
  10. 11 APR, 2025 | 03:30 PM முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் கடந்த வருடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். அதற்கு தீர்வுகள் கிடைக்க பெறாத நிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை (10) கேப்பாபிலவு மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவி செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆவணங்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என கூறியிருந்தனர். இதனையடுத்தே இன்றையதினம் கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் ஐனாதிபதி செயலகத்தில் கூறப்பட்ட விடயங்களை கூறி அரச அபரிடம் புதிய மகஜரை கையளித்திருந்தனர். இதன்போது முல்லை மாவட்ட அரச அதிபர் கேப்பாபிலவு காணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரினையும் அதற்கான பதில் கடிதத்தையும் கேப்பாபிலவு மக்களுக்கு காண்பித்து அது தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார். கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம், ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் புதிய மகஜர் ஒன்றினை கையளித்து இருந்தனர். அத்தோடு எதிர்வரும் 26 ஜனாதிபதி அனுரகுமார திசாநயாக்கா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வருகைதர இருப்பதனால் அவரிடமும் கேப்பாபிலவு மக்கள் மகஜரினை கையளிக்க இருப்பதும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/211808
  11. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,121 முறைப்பாடுகள் பதிவு! 11 APR, 2025 | 02:44 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ) 1,121 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,062 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211803
  12. சஹஸ்தனவி மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்து! 11 APR, 2025 | 12:50 PM சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் (PPA) இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது திறந்த சுழற்சி செயல்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும். இம்மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும். சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தினால் 2028 ஆம் ஆண்டில் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு (R-LNG ) மாறி எரிபொருள் செலவுகளை 50 சதவீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றது. https://www.virakesari.lk/article/211789
  13. 11 APR, 2025 | 03:51 PM தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு; சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது. இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி போல தோன்றுகின்றது. இவ்வாறான விடயங்களை செய்யவேண்டாம், என அரசாங்கத்தை வலியுறுத்தும் நான் தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். வீதியை திறக்கவேண்டும் என்றால் முழுமையான பாதுகாப்பு சரிபாப்பிற்கு பின்னரே அதனை திறக்கவேண்டும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்தவித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அதனை திறக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211817
  14. கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி பட மூலாதாரம்,PONMUDI கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், 'இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஏன்? சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியது என்ன? திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா, கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. தி.மு.க இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடந்த இந்த விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்படப் பலர் கலந்து கொண்டனர். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள இரான் விரும்புகிறதா? டிரம்ப் நினைப்பது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் நேரடி மோதலில் ராமதாஸ், அன்புமணி - கட்சிக்குள் என்ன நடக்கிறது? கூட்டணிக் கணக்கு காரணமா?8 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்முடி பேசியது என்ன? பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றத்தை (18 வயதுக்கு மேற்பட்டோர்) திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்ததாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பட்டிமன்றத்தில் நானும் சபாபதி மோகனும் (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) கலந்துகொள்வோம். கோவையில் இந்தப் பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். இதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு திரளாகக் கலந்து கொள்வார்கள்" எனக் கூறினார். "பட்டிமன்ற தலைப்பு என்ன தெரியுமா?" எனச் சிரித்தபடியே கேள்வி எழுப்பிய பொன்முடி, மேடையில் இருந்தவர்களைப் பார்த்து, "அதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது" எனக் கூறினார். "கடவுள் கொள்கைளில் காமச் சுமையை அதிகம் பரப்புவது சைவமா வைணவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும்" என்று குறிப்பிட்டார். மேலும், அந்தப் பட்டிமன்றத்தில் "ஓர் இடத்தில் சொல்வோம். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். "மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்" என மீண்டும் கூறிவிட்டு இதற்கான விளக்கத்தையும் பொன்முடி அளித்தார். பிறகு தொடர்ந்து பேசிய அவர், "இவையெல்லாம் திராவிடத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள்" எனவும் அவர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, கருணாநிதியின் 'பராசக்தி' படம், திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் வெளியான 'ரத்தக் கண்ணீர்' படம் ஆகியவை குறித்துப் பேசினார். வங்கதேசம் இந்தியா வழியாக ஏற்றுமதி செய்ய அனுமதி மறுப்பு - சீனாவுடன் நெருங்கியது காரணமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?4 மணி நேரங்களுக்கு முன்னர் கனிமொழி கண்டனம், கட்சிப் பதவி பறிப்பு பட மூலாதாரம்,KANIMOZHI/X பொன்முடியின் இந்தப் பேச்சு குறித்த காணொளி, கடந்த வியாழக்கிழமை இரவில் இணையதளத்தில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து, தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஓர் அமைச்சரே இவ்வாறு அவதூறாகப் பேச முடியுமா? தி.மு.க கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். பொன்முடியின் பேச்சுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, ' அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை' எனப் பதிவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்தப் பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?3 மணி நேரங்களுக்கு முன்னர் அதேநேரம், அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திராவிடர் கழக மேடைகளில் பேசியவற்றைத்தான் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டிருந்தார். அதற்காக அவரது கட்சிப் பதவியைப் பறித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "1985ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகக் கூட்டங்களில் இதுபோன்று பேசப்பட்டு வந்தது. அதையே திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழா மேடையில் பொன்முடி பேசினார். அது ஏதோ புதிதாகப் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல" எனக் குறிப்பிட்டார். "கம்ப ரசம் என்ற பெயரில் இதுபோன்ற பேச்சுகளை அண்ணாவும் பேசியிருக்கிறார். அதையே பொன்முடியும் பேசினார். அதற்காக இப்படியொரு நடவடிக்கை தேவையில்லை" எனவும் கோவை கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார். நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 நொந்து நூடூல்ஸ் ஆனது யார்? ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வார்த்தை மோதல்7 ஏப்ரல் 2025 பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள் பட மூலாதாரம்,TPDK/X தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது இருந்தே சர்ச்சைப் பேச்சுகளில் அதிகம் அடிபடும் நபராக அமைச்சர் க.பொன்முடி இருந்து வருகிறார். தி.மு.க அரசின் திட்டங்களில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தத் திட்டத்தால் மாதந்தோறும் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை மகளிர் சேமிப்பதாகவும் மேடைகளில் அவர் குறிப்பிடுகிறார். இந்தத் திட்டம் தொடர்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகக் குறிப்பிட்டார். 'எல்லாம் ஓசி' எனவும் சிரித்தபடியே அவர் பேசினார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி, "ஓசி பயணம் என விளையாட்டாகக் கூறியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு மொழியில் கலோக்கியலாக பேசியதைத் தவறாகத் புரிந்து கொண்டனர்" எனக் கூறினார். முன்னதாக, விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் தொகுதியில் உள்ள குறைகளைக் கூறிய பெண்களிடம், "ஆமாம்... நீங்க எல்லாம் அப்படியே எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சிட்டீங்க...' எனக் குறைபட்டுக் கொண்டார். இந்தப் பேச்சு இணையத்தில் அதிகமாகப் பரவியது. அடுத்து, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள மணம்பூண்டியில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார். பட மூலாதாரம்,TNDIPR அப்போது முகையூர் ஒன்றிய குழு தலைவரைச் சுட்டிக்காட்டிய பொன்முடி, "அவரே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" எனக் கூறிவிட்டு அவரிடம் சாதியை உறுதி செய்துகொள்ளும் வகையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே வரிசையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், கே.என்.நேரு உள்பட சில அமைச்சர்களும் சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கினர். இதுதொடர்பாக, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அப்போது பேசிய அவர், "என்னைத் துன்புறுத்துவது போல மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக் கூடாது. யாரும் புதுப் பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்" எனக் கூறினார். அனைத்து இடங்களிலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பொதுவெளியில் அமைச்சர்களும் கட்சியினரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்ந்தன. கடந்த 2023 மார்ச் மாதம் திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி, ஆட்சிக்கு வந்து 22 மாதங்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர், நிறைய குறைகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதை ஏற்காத பொன்முடி, அவரை ஒருமையில் பேசி அதட்டியதோடு, அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட செய்தியை கேலி செய்வது போலப் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தற்போது பாலியல் தொழிலாளர் குறித்த சர்ச்சைப் பேச்சில் தனது கட்சிப் பதவியை இழந்திருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czrv884g4z6o
  15. அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி - சீனா 11 APR, 2025 | 02:41 PM அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா எதிர்காலத்தில் விதிக்கவுள்ள வரிகளிற்கு பதிலளிக்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா விதித்த அசாதாரணமான வரிகள் சர்வதேச மற்றும் பொருளாதார விதிமுறைகளை அடிப்படை பொருளாதார சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா இது ஒரு தலைப்பட்சமான மிரட்டும் வற்புறுத்தும் தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211801
  16. கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT / GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் முதல் மாதவிடாயைத் தொடர்ந்து தேர்வு எழுத சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''தேர்வு எழுதிவிட்டு வந்த என் மகள் இரவில் மிகவும் கால் வலிப்பதாகக் கூறினாள். பருவமடைந்து 3 நாட்கள்தான் ஆன நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட வலியாக இருக்குமென்று என் மனைவி அவரின் காலில் எண்ணெய் தேய்த்துவிட்டுள்ளார். அதன்பின் என் மனைவி விசாரித்த போதுதான், வகுப்பறை படிக்கட்டில் 3 மணி நேரம் நகராமல் உட்கார்ந்து தேர்வெழுதியதால் கால் வலி ஏற்பட்டது என்று அழுது கொண்டே கூறினார்," என்று கூறுகிறார் மாணவியின் தந்தை. பெற்றோர் விடுத்த வேண்டுகோளின்படியே, தனியாக உட்கார வைத்து தேர்வெழுத வைத்ததாகக் கூறிய பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், ''தனி வகுப்பறையில் உட்கார வைக்காமல், வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்தது ஏன்'' என்று விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள செங்குட்டைப் பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள், 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதியன்று அந்த மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பின் தேர்வு எழுத வந்த அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வெழுத வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்?21 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நேரில் வந்து வீடியோ எடுத்த தாய்! தேர்வு நடந்த நேரத்தில் பள்ளிக்கு வந்த அந்த மாணவியின் தாயார், இதை வீடியோ எடுத்துள்ளார். அவர் எடுத்த காணொளி, காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், பள்ளியில் வகுப்பறைக்கு வெளியில் படிக்கட்டில் தனியாக அமர்ந்து அந்த மாணவி தேர்வெழுதுவதும், அவரிடம் அதற்கான காரணத்தை அவரின் தாய் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் வந்து, எப்படி பள்ளிக்குள் வந்து அனுமதியின்றி வீடியோ எடுத்தீர்கள் என மாணவியின் தாயாரிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் தந்தை, ''என் இளைய மகள் கடந்த 5ஆம் தேதியன்று பருவமடைந்தாள். ஏழாம் தேதியன்று தேர்வு எழுதுவதற்குச் சென்றாள். அன்று அவளை வகுப்பறைக்கு வெளியே தனியாக படிக்கட்டில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். அன்று இரவுதான் எங்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அதை உறுதிப்படுத்தவே என் மனைவி சென்று வீடியோ எடுத்தார்.'' என்றார். அதே பள்ளியில்தான் தானும் படித்ததாகக் கூறிய அவர், அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்களும், சில ஊழியர்களும்தான், சமுதாய நோக்கில் மாணவர்களைப் பிரித்துப் பார்ப்பதாகவும், அவர்களால்தான் இது நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏப்ரல் 10 காலையில் கோவைக்கு வந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், கோவையில் தனியார் பள்ளிகளில் ''இத்தகைய அத்துமீறல்கள் அடிக்கடி நடக்கிறதே'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இதுபற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்றார். மகாவீர் ஜெயந்தி காரணமாக, அரசு விடுமுறை என்பதால் இன்று பள்ளி இயங்கவில்லை. காலையில் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகி கல்பனா தேவியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அவரிடம் இருந்து கருத்துகள் பெறப்படும் போது இந்த செய்தியில் சேர்க்கப்படும். தீண்டாமை காரணமாக நடைபெற்றதா? இந்த சூழலில் மக்கள் விடுதலை முன்னணியின் கோவை மாவட்டத் தலைவர் தம்பு தலைமையில் சிலர், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், ''அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி என்பதால்தான், தீண்டாமை எண்ணத்துடன் வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டிருந்தது. பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால்தான், மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத அனுமதித்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வேறு எந்த மாணவியையும் இப்படி எழுத வைத்ததில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், ''மாணவியின் தாயார் முதலில் வகுப்பு ஆசிரியரைத் போனில் தொடர்பு கொண்டு, அவருடைய மகளுக்கு முதன்முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. எனவே தனியாக தேர்வெழுத வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அவர் வடசித்துாரில் தேர்வுப்பணியில் இருப்பதால் பள்ளி முதல்வரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்பின் 7 ஆம் தேதியன்று மாணவியின் தாயார் நேரில் வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே தனியாக தேர்வெழுத வைத்ததாக பள்ளி முதல்வர் கூறுகிறார்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''அன்று இரவு கால்வலி என்று மாணவி சொன்னபோதுதான், அவரை வெளியே உட்கார வைத்து தேர்வெழுத வைத்த விஷயம், அவரின் தாயாருக்குத் தெரியவந்துள்ளது. மறுநாள் எல்லோருக்கும் வகுப்பு இருந்தும் அந்த மாணவியை அனுப்பவில்லை. ஏப்ரல் 9 அன்று தேர்வு என்பதால் அனுப்பியுள்ளனர். அன்றும் அதே இடத்தில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்தபோதுதான், மாணவியின் தாயார் நேரடியாக வந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.'' என்றார். மாதவிடாய்: பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் போராடும் அதிகாரி27 பிப்ரவரி 2018 மாதவிடாய் நாட்களில் விடுமுறை: - பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?19 ஜனவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறிய கருத்துகளை மறுத்த மாணவியின் தந்தை, தங்கள் மகள் பருவமெய்திய காரணத்தைக் கூறி, கட்டாயம் தேர்வெழுத வேண்டுமா என்று தாங்கள் கேட்டதாகவும், கட்டாயம் எழுத வேண்டுமென்று கூறியதால்தான், தனியாக அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''நாங்கள் தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்க வேண்டுமென்று கேட்டது உண்மைதான். ஆனால் தனி வகுப்பறையில் அல்லது ஏதாவது ஹாலில் தனியாக மேசை கொடுத்து அமர வைத்து எழுத வைப்பார்கள் என்றே அப்படிக் கேட்டோம். வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் உட்கார வைத்து 3 மணி நேரத் தேர்வை எழுத வைத்தது பள்ளி ஆசிரியர்கள்தான்.'' என்கிறார் மாணவியின் தந்தை. பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங். இதற்கு முன்பு இதே பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா என்று விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். ''முதல்வர் அறையில் நிறைய மேசைகள், நாற்காலிகள் இருக்கின்றன. அங்கே அவரை எழுத வைத்திருக்கலாம். வெளியே உட்கார வைத்து எழுத வைத்தது ஏன் என்பதே கேள்வி '' என்றார் சிருஷ்டி சிங். இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தந்தை அளித்த புகாரை ஏற்று, நெகமம் காவல் நிலையத்தில், பள்ளியின் உதவி தாளாளரும் முதல்வருமான ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி, தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய 3 பேர் மீது, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் 3(1) (r) மற்றும் 3 (1) (za) (D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள்23 ஏப்ரல் 2022 மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் தமிழ்நாட்டு கிராமம்10 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,@ANBIL_MAHESH/X படக்குறிப்பு,பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட ட்வீட் இந்த சம்பவத்தில் மாணவியின் பெற்றோர், அந்த மாணவி பருவமெய்திய காரணத்தைக் கூறி, தனியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதும் தவறுதான் என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராதிகா, ''அந்த மாணவியை தனியாக தேர்வெழுத வைக்க வேண்டுமென்று பெற்றோர் கேட்டதை சரியென்று சொல்ல முடியாது. ஆனால், எல்லோருடனும் சேர்ந்து உங்கள் குழந்தையும் தேர்வெழுதட்டும் என்று சொல்லி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. அதை செய்யாமல் வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் தனியாக உட்கார வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.'' என்றார். பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்! காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், ''இதுபோன்று மாணவிகளை தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்கக்கூடாது என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்,'' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், '' தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்,'' என்று பதிவிட்டுள்ளார். மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப் பற்றி அறிவது ஏன் முக்கியமானது?22 மே 2023 நேபாளம்: மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தினால் சிறை10 ஆகஸ்ட் 2017 கல்வித்துறை விசாரணை பள்ளியில் விசாரணை நடத்தியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோமதி, ''பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளோம். பெற்றோரிடம் இன்னும் பேசவில்லை. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை கல்வித்துறை உயரதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.'' என்றார். விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு வழங்கவுள்ளதாகவும், அதன்பின் இறுதிக்கட்ட நடவடிக்கை இருக்குமென்று மாவட்ட கல்வி அலுவலர் கூறினார். ''மாதவிடாய் காலங்களில் மாணவிகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. முக்கியமாக நாப்கின் மிஷினும், அதை எரியூட்டும் இடமும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் மாவட்ட கல்வி அலுவலர் கோமதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx255zkpenwo
  17. 11 APR, 2025 | 09:21 AM இலங்கை மின்சார சபை (CEB) இன்று வெள்ளிக்கிழமை (11) நாட்டின் மின்சாரத் துறையை மாற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதிய முயற்சியை அறிவிக்கவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு இன்றையதினம் மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சாரம் விலை நிர்ணயம், வலுவான மின் கட்டமைப்பு மற்றும் நிலைத்துறையான பசுமை ஆற்றல் நோக்கில் இலங்கை மேற்கொள்கின்ற பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் முறையை முற்றிலும் மாற்றக்கூடிய சக்தி இந்த திட்டத்துக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211766
  18. ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கான ஆதாரங்கள், மூட்டைகளாகக் கட்டப்பட்டு டன் கணக்கில் விற்கப்படுவது குறித்து ஆச்சர்யமாக இருக்கிறதா? இது, ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பு கர்னூல் மாவட்டமாக இருந்து தற்போது நந்தியால் மாவட்டமாக மாறியுள்ள பெட்டன்சரா யாகன்டிக்கு அருகே ஜுவாலாபுரம் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரிதான சாம்பல் கிடைத்துள்ளது. வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 அரிய வகை சாம்பல் இங்கு வந்தது எப்படி? படக்குறிப்பு,ஒரு டன் சாம்பல் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சில கிராமவாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர் நிலவியலாளர்களின் கூற்றுப்படி, "சுமத்ரா தீவில் (தற்போதைய இந்தோனீசியா) 74,000 ஆண்டுகளுக்கு முன்பு தோபா எனும் எரிமலை வெடித்தது. அந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது. அதனால் ஏற்பட்ட எரிமலைக் குழம்பு, பூமி முழுதும் பரவியது. இதனால் உருவான சாம்பல் அடுக்கு, சூரிய ஒளி பூமியை அடையாமல் தடுத்தது. இது, சூரிய ஒளி இல்லாமல் ஒரு வகையான பனி யுகத்தை உருவாக்கியது. அந்த எரிமலை வெடிப்பால் மனித இனம் கிட்டத்தட்ட அழிந்து போனது. அந்தப் பேரழிவிலிருந்து மிகக் குறைந்த சதவிகித மக்களே பிழைத்தனர்." அந்த எரிமலை வெடிப்பின் சாம்பல் இந்தியாவின் சில பகுதிகளிலும் விழுந்தது. அந்த சாம்பலின் பெரும்பகுதி ஜுவாலாபுரத்தில் உள்ளது. இந்த சாம்பலைக் கண்டறிவது அரிதானது. ஜுவாலாபுரத்தில் அந்த சாம்பலை கண்டறிந்த விஞ்ஞானி ரவி கோரிசெட்டர், அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். அந்த சாம்பல் அடுக்குக்கு மேலேயும் கீழேயும், மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் தடங்கள் இருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்தனர். ஏனெனில், 60,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் இந்தியாவுக்கு வந்தது என முன்பு விஞ்ஞானிகள் மதிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்தக் கூற்றுக்கு ஜுவாலாபுரம் சவால் விடுத்தது. 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள் காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா? இந்த எரிமலை சாம்பல், விஞ்ஞானிகள் கூறியது போன்று 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் சுற்றித் திரிந்ததாகப் புதிய கருதுகோளை முன்வைத்தது. எளிதாகக் கூறுவதென்றால், இந்தியாவின் கற்கால வரலாற்றுக்கே இந்த அகழாய்வுத் தளம் சவால் விடுத்துள்ளது. கடந்த 2009இல் பிபிசி டூ-வில் (BBC Two) 'தி இன்கிரெடிபிள் ஹியூமன் ஜர்னி' எனும் ஆவணத் தொடரில் ஜுவாலாபுரம் குறித்துப் பதிவு செய்யப்பட்டது. ரவி கோரிசெட்டருடன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் பெட்ராக்லியா உள்படப் பல விஞ்ஞானிகள் அந்தத் தளத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஜுவாலாபுரம் - ஏன் சிறப்பு வாய்ந்தது? படக்குறிப்பு,ஜுவாலாபுரத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் பெல்லாரியில் உள்ள ராபர்ட் புரூஸ் கோட்டை சங்கனகல்லு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன ஜுவாலாபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், இந்திய வரலாற்றுக்கு இரண்டு முக்கியப் பலன்களை அளித்ததாகக் கூறுகிறார் ரவி கொரிசெட்டர். "ஒன்று, இந்தியாவில் பழைய கற்கால குடியிருப்புகள் (Paleolithic) குறித்த முறையான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த சாம்பல்கள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன. இது, 74,000 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான அடையாளங்களை வழங்குகின்றன. இரண்டாவதாக, மனிதர்கள் இந்தியாவுக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாக முடிவு செய்கிறது" என்றார். தோபா எரிமலை வெடிப்பு, மனித இனத்தை முற்றிலுமாக அழிக்கவில்லை. மத்திய பழைய கற்காலமானது, இந்த வெடிப்புக்கு முன்பும் பின்பும் தொடர்ந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஜுவாலாபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கருவிகளில் ஒற்றுமைகள் உள்ளன. அதனால், மனித இனம் இங்கு 90,000 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். "ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் நுண் கற்காலக் கருவிகளை பயன்படுத்தி வெளியே வந்தார்கள் என்ற கோட்பாடும் தவறானது," என ரவி கொரிசெட்டர் பிபிசியிடம் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கற்காலத்துக்கு முந்தைய வரலாற்றை மீண்டும் எழுதுவதிலும் நவீன மனிதனின் முன்னேற்றத்துக்கும் ஜுவாலாபுரம் குறிப்பிடத்தக்க உறுதியான சான்றாக உள்ளது. ஆனால், இவையனைத்தும் தற்போது மாறி வருகின்றன. ஏனெனில், அந்த சாம்பலுக்குப் பின்னுள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித வரலாறு, தற்போது டன் கணக்கில் விற்கப்படுகின்றது. அங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமான சாம்பல் தோண்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இன்னும் விற்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆதிகால மனிதனின் தடங்கள் கிட்டத்தட்ட அப்பகுதியில் அழிந்து போய்விட்டன. உலக பொருளாதாரத்தில் குழப்பம்: தங்கத்தின் விலை குறையுமா? அல்லது மேலும் உயருமா?58 நிமிடங்களுக்கு முன்னர் சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?51 நிமிடங்களுக்கு முன்னர் டன் கணக்கில் விற்கப்படும் ஆதிகால சாம்பல் படக்குறிப்பு,பிபிசி நந்தியால் மாவட்ட ஆட்சியர் ராஜ குமாரியைத் தொடர்பு கொண்டபோது, அந்த இடத்தை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் மனிதர்களின் கைகளால் பக்குவமாக, கவனமுடன் அகழாய்வு செய்யப்பட வேண்டிய அந்த இடம், புல்டோசர்களால் அகழாய்வு செய்யப்படுகிறது. அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பழமையான மரங்களின் எச்சங்கள் சல்லடை மூலம் பிரிக்கப்படுகின்றன. மென்மையான சாம்பல் பைகளில் விற்கப்படுகின்றன. இந்த சாம்பல் சலவை மற்றும் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தப்படும் பவுடர்களில் பயன்படுத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த சாம்பல், மலிவான விலையில் ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்கப்படுவதாக கிராமத்தினர் சிலர் கூறினர். எனினும், இந்த சாம்பலை எந்த நிறுவனம் வாங்குகிறது, எதற்காகப் பயன்படுத்துகிறது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. அகழாய்வுப் பணிகளில் வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் பிபிசி பேசியபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் வேலைக்காக மட்டுமே இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இந்த சாம்பல் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள ஓர் இடத்தின் உரிமையாளரிடமும் பிபிசி பேசியது. அவர், "இங்குள்ள அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள சாம்பலைத் தோண்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அதனால்தான் நானும் விற்கிறேன். அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது," என்றார். நில உரிமையாளர்கள் ஏற்கெனவே நிலத்தைத் தோண்டி, சாம்பலை விற்றுவிட்டனர். கில்லியின் 'காரப்பொரி' சீனையும்... அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கிறது?56 நிமிடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 ஜுவாலாபுரம் குறித்து தெரிய வந்தது எப்படி? படக்குறிப்பு,ரவி கொரிசெட்டர் 2004-05 வரை இரண்டு ஆண்டுகள் ஜுவாலாபுரத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பில்லசர்கம் குகைகள், உயிரி பரிணாம கோட்பாட்டுக்கு மிக முக்கியமான தளமாக விளங்குகிறது. இந்திய தொல்லியல் துறையின் தந்தை எனக் கருதப்படும் ராபர்ட் புரூஸ் ஃபோர்ட், முதன்முதலாக இந்த குகைகள் குறித்து எழுதினார். இந்த குகைகளில் மனித எச்சங்கள் குறித்து தொல்லியலாளர் ரவி கொரிசெட்டரின் குழு தேடியபோது, அவர் ஜுவாலாபுரம் குறித்து உள்ளூர் மக்கள் வாயிலாக அறிந்தார். 2004 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுகள் ஜுவாலாபுரத்தில் ரவி கொரிசெட்டர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். "வழக்கமாக, ஆய்வுக்காக பழமையான தளங்களுக்குச் செல்லும்போது, புதிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். முன்பு கண்டறியப்படாத விஷயங்களை நீங்கள் கண்டறிவீர்கள். நான் கர்னூல் சென்றபோது, புதிய விஷயங்களை தேடினேன். அப்போதுதான் இந்திய நிலப்பரப்பு வரைபடம் மூலமாக ஜுவாலாபுரம் எனும் பெயர் குறித்து அறிந்தேன்." "எனவே அந்த உள்ளூர் மக்களிடம் பேசினேன், அவர்கள் நிறைய புதிய விஷயங்கள் குறித்துக் கூறினார்கள். யாகன்டி பகுதியைச் சேர்ந்த செங்கல ரெட்டி எனும் விவசாயி ஒருவரிடம் ஜுவாலாபுரம் மற்றும் பட்டபடு (Patapadu) ஆகிய பகுதிகளில், வெள்ளை நிறத்தில், மென்மையான சாம்பல்கள் இப்பகுதியில் உள்ளதா எனக் கேட்டபோது, அவர் எங்களை ஜுவாலாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்." "நான் முதலில் ஜுவாலாபுரம் சென்றபோது, தொலைவிலேயே காற்றில் தூசு பறந்தது. எனவே இங்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன்." மேலும் பேசியவர், "அப்பகுதிக்கு நெருங்கிச் செல்லும்போது, அங்கு என்ன தோண்டப்படுகிறது என்பதை உணர்ந்தேன், அது எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல். ஆனால், அங்கு ஏற்கெனவே கிராமவாசிகள் தோண்டிக் கொண்டிருந்தனர்" என்று விவரித்தார் ரவி கொரிசெட்டர். இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?10 ஏப்ரல் 2025 "இது எரிமலை வெடிப்பு சாம்பல் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அதை அவர்கள் சலவைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள்" என ஜுவாலாபுரத்துக்கு முதன்முறையாகச் சென்ற அனுபவத்தை நினைவுகூர்கிறார் ரவி கொரிசெட்டர். இதையடுத்து, பில்லசர்கம் சென்ற தனது குழுவில் இருந்து சிலரை ஜுவாலாபுரத்துக்கு அகழாய்வுக்காக அனுப்பினார். அவை தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் என்பதால், விவசாயிகளுக்குச் சிறிது பணம் கொடுத்து அங்கே பணிகளை மேற்கொண்டனர். ஓராண்டு அங்கே விடாமுயற்சியுடன் தோண்டிய நிலையில் சுவாரஸ்யமான விஷயங்கள் பல வெளியே வந்தன. "ஜுவாலாபுரம் அகழாய்வில் பழைய கற்காலத்தின் மத்திய காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகில் பழைய கற்காலத்தின் தொடக்க காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. ஜுரெரு நதிக்கரையில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. யாகண்டி கற்பாறைகளுக்கு அருகே நிலத்தில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. பழைய கற்காலத்தில் இருந்து பெருங்கற்காலம் வரை மனித வாழ்விடம் குறித்த பல ஆதாரங்கள் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. கிழக்கு ஆப்பிரிக்காவை ஒத்த ஆதாரங்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டன" என ஜுவாலாபுரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார். உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி படக்குறிப்பு,தொல்பொருள் ஆய்வாளர் ரவி கொரிசெட்டர் தற்போது, ஜுவாலாபுரம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் கர்நாடகாவில் பாதுகாக்கப்படுகின்றன. கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ராபர்ட் புரூஸ் கோட்டை சங்கனகல்லு அருங்காட்சியகத்தில் கற்கருவிகள் மற்றும் பிற முக்கிய நினைவுச் சின்னங்களை ரவி பாதுகாத்து வைத்துள்ளார். "நான் அங்கு சென்றபோது, அவர்கள் சாம்பலை விற்றுக் கொண்டிருந்தார்கள். அதன் முக்கியத்துவத்தை ஏற்கெனவே உணர்ந்து, அதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஒருவேளை யாராவது வணிக ரீதியாக விற்கத் தொடங்கியிருக்கலாம்." "அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றோம். நாங்கள் அங்கு சென்றபோது, அதில் 50 சதவிகிதம் சேதமடைந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். வேறு ஏதாவது அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து அங்கு செல்கிறேன். ஆனால், நீங்கள் தோண்டியதை ஏற்கெனவே மறைக்கும்போது, வேறு எதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது." "நாங்கள் இதுகுறித்து மக்களுக்கு விளக்கத் தொடங்கினோம். வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கிராம மக்களுக்கு விளக்கினோம். பள்ளிகளில் இதுகுறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஆனால் இப்போது, அதைச் சேமித்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதில் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது," என்று ரவி கோரிசெட்டர் பெருமூச்சுவிட்டார். டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 முக்கியமான விஷயங்களை மறைத்து, அவற்றைக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்ததாகவும், இங்கு வந்து யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் அவர் கூறினார். ஜுவாலாபுரத்தில் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை யார் செய்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். "ஏனென்றால் அங்கு கிடைக்கும் கருவிகள் ஒரு பகுதியளவு சான்றுகள் மட்டுமே. மனித எலும்புகள் கிடைத்தால், அவை உறுதியான ஆதாரமாக இருக்கும். அந்தக் கருவிகளை யார் உருவாக்கினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். ஆனால் அங்குள்ள சாம்பல் வணிகம் இந்த இடத்தை ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றதாக மாற்றுகிறது. உள்ளூர் நிர்வாகத்தில் யாரும் அதைத் தடுக்க முயலவில்லை," என்று ரவி குறிப்பிட்டார். இது குறித்து பிபிசி நந்தியால் மாவட்ட ஆட்சியர் ராஜ குமாரியைத் தொடர்பு கொண்டபோது, அந்த இடத்தை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்10 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?10 ஏப்ரல் 2025 ஜுவாலாபுரத்துக்கு இந்த பெயர் எப்படி வந்தது? படக்குறிப்பு, உள்ளூர்வாசிகள் தங்கள் விருப்பப்படி சாம்பலைத் தோண்டி எடுத்து விற்கிறார்கள் சமஸ்கிருதத்தில் ஜுவாலா என்றால் நெருப்பு என்று பொருள். அக்னி மலையில் இருந்து விழும் சாம்பலில் இருந்து இந்த கிராமம் அதன் பெயரைப் பெற்றதாகப் பலர் நம்புகிறார்கள். இருப்பினும், கிராமத்தின் பெயர் முதலில் ஜோலா, அதாவது "சோளம்" என்றும், படிப்படியாக அது ஜாவா என்று மாறியதாகவும் சிலர் கூறுகிறார்கள். இந்த கிராமத்துக்கு அருகிலுள்ள மலைகளில் உள்ள பாறை குகைகளில் ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன. இவை வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் (Painted Rock Shelters) என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிராமத்துக்கு அருகில் மட்டுமல்ல, யாகண்டியின் அருகிலும், பில்லசர்கம் குகைகள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். "யாகண்டி, பெட்டாஞ்சரா மற்றும் பில்லசர்கம் சுற்றி நூற்றுக்கணக்கான வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாகண்டியை சுற்றி இதுபோன்ற பல குகைகள் உள்ளன," என்று ரவி கூறினார். ஒருங்கிணைந்த கர்னூல் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் மனித குலத்தின் வரலாற்றுக்கு முந்தைய வரலாறு மற்றும் இந்தியாவின் கற்கால வரலாற்றின் வளமான சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த இடங்களின் அழிவு தொடர்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq677np07e2o
  19. பட்டலந்த வதை முகாமுக்கும் ரணிலுக்கும் நெருங்கிய தொடர்பு; சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 09:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜே. ஆர். ஜயவர்த்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான் அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார். அதன் பெறுபேறு தான் பட்டலந்த சித்திரவதை முகாமாகும். அவ்வாறிருக்கையில், 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது கணக்கில் வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது . உண்மை நிச்சயம் வெளிவரும். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மென பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த சித்திரவதை முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்லர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும். பட்டலந்த வீட்டுத்தொகுதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்கிரமசிங்க நிலத்துக்கு உரமாக்கினார். இந்த சித்திரவதை முகாமை போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்கு தலைமை தாங்கினார்கள். உண்மைக்காக போராடியே பலர் உயிர் தியாகம் செய்தார்கள். அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம். பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி மீது ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான் அவரது மருமகளான ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார். அதன் பெறுபேறு பட்டலந்த சித்திரவதை முகாம். 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். உண்மை நிச்சயம் வெளிவரும். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211726
  20. வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வென்று தோல்வியே இல்லாமல் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் தொடர்ந்து 2வது தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்து 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டத்தை மாற்றிய ஒற்றை மனிதர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச்சிறிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு ஆர்சிபி அணி டிபெண்ட் செய்வது மிகவும் கடினம். இரு அணிகளிலும் பிக்ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி ஹிட்டர்களை டெல்லி பந்துவீச்சாளர்கள் ஒடுக்கி வெற்றி கண்டனர். டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கே.எல்.ராகுல் என்ற ஒற்றை விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், கடைசி வரை ராகுல் விக்கெட்டை ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். தொடர்ந்து 2வது போட்டியாக டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ராகுல் அடித்த ஸ்கோர் அந்த அணிக்கு சம்மட்டி அடியாக இறங்கியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக ராகுல் 53 பந்தகளில் 93 ரன்கள்(6 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆர்சிபி அணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவதென்றால், முதல் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது. கடைசி இரு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி 15 ஓவர்களில் வெறும் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் ஆர்சிபி அணியின் நேற்றைய பேட்டிங்கின் சுருக்கம். கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது?10 ஏப்ரல் 2025 உலக பொருளாதாரத்தில் குழப்பம்: தங்கம் விலை குறையுமா அல்லது மேலும் உயருமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொடக்கத்தில் தடுமாறிய டெல்லி பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியை 163 ரன்களில் சுருட்டிவிட்டோம் என்று டெல்லி அணி மகிழ்ச்சியாக இருந்தாலும் அது களத்துக்கு வரும்போது நிலைக்கவில்லை. தொடக்கத்திலேயே ஆர்சிபி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியைத் தடுமாற வைத்தது. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள்தான் டெல்லி எடுத்திருந்தது. ஆனால், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து, 13 பந்துகள் மீதமிருக்கும்போது வெற்றி பெற வைத்தனர். அதாவது 7 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் சேர்த்துள்ளனர். முதல் 11 ஓவர்களில் டெல்லி அணி 68 ரன்களே சேர்த்தநிலையில் அடுத்த 7 ஓவர்களில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது. ஆர்சிபி அணி தங்களுக்குக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 4 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த ஆர்சிபியால் அடுத்ததாக ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியவில்லை. இந்த ஒரு விக்கெட்டில்தான் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. வியக்க வைத்த ராகுலின் அற்புதமான ஆட்டம் கே.எல்.ராகுல் இந்திய அணியில் மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துள்ளார். தொடக்க வீரராக வந்து அதிரடியாக ஆடக் கூடியவர், நடுப்பகுதியில் வந்து ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணயின் டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கடந்த சீசனில் சிறப்பாக ஆடியதை நம்பி ப்ரேசர் மெக்ருக்கை ஏலத்தில் தக்கவைத்து டெல்லி அணி எடுத்தது. இதுவரை ஒரு போட்டியில்கூட அவர் சிறப்பாக பேட் செய்யவில்லை. அபிஷேக் போரெலும் அதே நிலைதான். டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ராகுல் தனது ரன் வேகத்தைக் குறைத்து 29 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். 7 ரன்களுடன் இருந்தபோது ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கேட்சை நழுவவிட்டு ராகுலுக்கு வாய்ப்பளித்தார். 11வது ஓவரின்போது டெல்லி அணியின் வெற்றி சதவிகிதம் 67 சதவிகிதத்தில் இருந்து 14.31 சதவிகிதமாகக் குறைந்தது. அதன்பின் ராகுலின் அதிரடியால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் எங்காவது ஒளிந்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு பந்துவீச பயந்தனர். ராகுல் 29 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தொடங்கிய அதிரடி ஆட்டத்தால் அடுத்த 8 பந்துகளில் தனது அரைசத்ததை நிறைவு செய்தார். குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டார். டெல்லி அணி கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ராகுல் 22 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார். சூயஷ் ஷர்மா பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் சிக்ஸர், பவுண்டரி என விளாச வெற்றிக்கு அருகே டெல்லி சென்றது. யஷ் தயால் வீசிய ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ராகுல் முதல் 29 பந்துகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும், அடுத்த 24 பந்துகளில் 64 ரன்கள் என 266 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடினார். கே.எல்.ராகுலால் இப்படியும் ஆட முடியுமா என அனைவரையும் வியக்க வைத்தார். சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி; ருதுராஜுக்கு என்ன ஆனது?56 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 ஆர்சிபியின் நிலையற்ற ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியின் பில் சால்ட், கோலி ஆட்டத்தைத் தொடங்கிய வேகத்தைப் பார்த்தபோது, 250 ரன்களை எட்டிவிடும் எனக் கருதப்பட்டது. ஸ்டார்க் பந்துவீச்சில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார். ஏனென்றால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 53 ரன்களை தொட்டது, அதில் 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் அடுத்த 3 ஓவர்களில் ஆர்சிபி அணி 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விப்ராஜ் நிகம் பவர்ப்ளேவில் பந்துவீச வந்தவுடனே ஆர்சிபியின் ரன்ரேட் படுத்துக் கொண்டது. தடுமாறிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னில் முகேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி பவர்ப்ளேவில் 64 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு, விராட் கோலி 22 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகள் சரிந்தன. லிவிங்ஸ்டன் மீது பெரிய எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்து இதுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளார். ஜிதேஷ் சர்மா(3), க்ருனால் பாண்ட்யா(18), கேப்டன் பட்டிதார்(25) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஆர்சிபி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுப்பகுதியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் சேர்ந்து ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்டனர். கடைசியில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியால்தான் ஆர்சிபி அணி மூச்சுவிட்டு கௌரமான ஸ்கோரை பெற்றது. அதிரடியாக ஆடிய டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 37 ரன்கள் சேர்த்து, ஆர்சிபியின் ஸ்கோர் 150 ரன்களை கடக்க வைத்தார். டேவிட் 37 ரன்களுடனும், புவனேஷ்வர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் டிம் டேவிட் பேட்டிங்தான் ஆட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது. மற்றவகையில் நடுவரிசை பேட்டிங்கும், ஆட்டமும் ஏகச் சொதப்பலாக இருந்தது. காதல், வேலை என உடல் பருமனால் ஏற்படும் மனரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்வது?10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 களமாடிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சின்னசாமி மைதானத்தில் நேற்று ஹீரோக்களாக இருந்தவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் இருவர்தான். 8 ஓவர்கள் வீசிய இருவரும் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் 23 டாட் பந்துகளும் அடக்கம். நடுப்பகுதி ஓவர்களில் ஆர்சிபி பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். பவர்ப்ளே ஓவரில் பந்துவீசிய நிகம் ஓவரை ஆர்சிபி பேட்டர்களால் அடிக்க முடியவில்லை. டெல்லி அணியிடம் இருக்கும் அளவுக்கு வலுவான சுழற்பந்துவீச்சு ஆர்சிபி அணியிடம் இல்லை. சூயஷ் சர்மா மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசுகிறார், லிவிங்ஸ்டோன் வழக்கமான ஆஃப் ஸ்பின்னை வீசினாலே போதுமானது. ஆனால், தேவையில்லாமல் லெக் ஸ்பின்னுக்கு நேற்று முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டார். டெல்லியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் ஒரு முக்கியக் காரணமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மற்றொரு ஹீரோவாக ஜொலித்தனர். 'என் பணியை எளிதாக்கிய ராகுல்' வெற்றிக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் பேசுகையில், "4வது போட்டியையும் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுபட்டது, நன்றாக பவுன்ஸ் ஆனது. குல்தீப் எங்கள் அணியில் பல ஆண்டுகளாக விளையாடுகிறார், நிலைத்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். விப்ராஜ் முதல் இரு போட்டிகளில் பதற்றமாக இருந்தார், ஆனால் கடந்த ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு நம்பிக்கையளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் விப்ராஜ் பந்துவீச்சு மெருகேறுகிறது," என்று தெரிவித்தார். மேலும், "கேப்டனின் ஆதரவும், நம்பிக்கையுமே அவருக்குப் போதும். கே.எல்.ராகுல் என் பணியை எளிதாக்கிவிட்டார். அழுத்தமான தருணங்களில் சூழலை ராகுல் மாற்றிவிட்டார். நிதானமான ஆட்டத்தில் இருந்து திடீரென ஆக்ரோஷமாக பேட் செய்வது கடினம். ராகுல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதைச் செய்துள்ளார்" எனத் தெரிவித்தார். குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரின் எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 இடம் – லக்னெள நேரம் - இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – டெல்லி நேரம் - இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – ஜெய்பூர் நேரம் - மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 ரன்கள் (5போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8205nj4kno
  21. ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா? பட மூலாதாரம்,@DRARAMADOSS/X கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பா.ம.க-வின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாகவும் செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு உள்கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. "இந்த முடிவு தவறானது," என விமர்சித்துள்ளார், அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா. கட்சியின் கட்டுப்பாட்டை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 10) பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார். "என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்," என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் குறிப்பிட்டார். அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், "பா.ம.க-வை தொடங்கிய நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்," எனக் கூறினார். இப்படியொரு முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் கூற முடியாது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உழைக்க வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக நியமித்துள்ளதாகவும் கட்சியின் இதர பொறுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது?2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK படக்குறிப்பு,''இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு'' என திலகபாமா கருத்து 'முடிவு தவறானது' - பா.ம.க பொருளாளர் திலகபாமா ராமதாஸின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தைலாபுரம் தோட்டத்தின் முன்பு அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அங்கிருந்த பா.ம.க நிர்வாகிகள் சிலர், "இது மருத்துவர் எடுத்த முடிவு. இதற்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ''பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு''' என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா. ''சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அன்புமணியின் தலைமையில் மட்டுமே முடியும்'' எனக் கட்சியின் தொண்டர் பதிவிட்ட கருத்தையும் தனது முகநூல் பக்கத்தில் திலகபாமா பகிர்ந்திருந்தார். ராமதாஸின் முடிவு தொடர்பாக அன்புமணியிடம் இருந்தும் விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?9 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK படக்குறிப்பு,முகநூலில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த திலகபாமா டிசம்பரில் தொடங்கிய நேரடி மோதல் அதே நேரம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவாகிவிட்டதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாகவும் அன்புமணிக்கு உதவியாக அவர் செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தனின் நியமனத்துக்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவியை கொடுப்பதா? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் கொடுங்கள்" எனக் கூறினார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்குப் பதவி கொடுப்பதைத்தான் இவ்வாறாக அன்புமணி விமர்சித்தார். இதனை ஏற்க மறுத்த ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது" என்றார். மேலும், இது நான் உருவாக்கிய கட்சி எனக் கூறிவிட்டு முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, "பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளேன். அங்கு வந்து தொண்டர்கள் என்னைச் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். இதன்பிறகு ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிருமான கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "கட்சியின் பொதுக்குழுவில் இதுபோன்ற காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்," எனக் கூறினார். பா.ம.க ஜனநாயகக் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் முகுந்தன் பரசுராமனின் நியமனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "உள்கட்சிப் பிரச்னைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வேறு யாரும் பேச வேண்டியதில்லை" எனவும் பதில் அளித்தார். கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,@DRARAMADOSS/X படக்குறிப்பு,பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா? "கட்சியின் முக்கிய பொறுப்பில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனும் இருக்க வேண்டும் என ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், தன்னுடைய எண்ணத்தின்படி கட்சி செயல்பட வேண்டும் என அன்புமணி நினைக்கிறார். இதுவே பிரச்னைக்கு காரணமாக உள்ளது," எனக் கூறுகிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சியில் வாரிசுகளை நியமிக்க மாட்டேன் எனக் கூறிய ராமதாஸ், அன்புமணியை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார். ராமதாஸுடன் அன்புமணி இணைந்து போவது தான் அக்கட்சிக்குப் பலனைக் கொடுக்கும். இருவரும் மோதல் போக்கைத் தொடர்ந்தால் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்" எனவும் குறிப்பிட்டார். கூட்டணி காரணமா? மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "ராமதாஸின் முடிவில் அரசியல் நோக்கம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். பா.ஜ.க கூட்டணியின் மீது ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியுடன் மனதளவில் அவருக்கு நெருக்கம் உண்டு" எனக் கூறினார். "அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ராமதாஸின் இந்த முடிவு, தமிழ்நாடு அரசியலில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,DR S RAMADOSS/X ராமதாஸின் முடிவு தொடர்பாக பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியிடம் விளக்கம் கேட்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருளிடம் பிபிசி தமிழ் பேசியது. " இதை ஒரு பெரிய விஷயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயகப்பூர்வமான கட்சி. அதில் எல்லாம் நடக்கத் ன் செய்யும். இதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்" என்று மட்டும் பதில் அளித்தார். பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமாவின் முகநூல் பதிவு குறித்துக் கேட்டபோது, "அதற்குள் போக விரும்பவில்லை" என்றார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3xxk08kk2o
  22. பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார். முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித் பிரேமதாஸ, நரேந்திர மோதிக்கு வழங்கியிருந்தார். இவ்வாறு இந்த புகைப்படத்திலுள்ள சிறுத்தையின் வலது கண் நீல நிறத்தில் அமைந்திருந்ததுடன், அந்த கண்ணில் பார்வையில்லை என அறிய முடிகின்றது. தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?9 மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த விலங்கு, ''இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையாக சின்னம்'' என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். ஒருவேளை கிளௌகோமா (பார்வை நரம்பில் சேதம்) , கண்புரை காரணமாக சிறுத்தைக்கு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சவால்களுக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்கான அடையாளமாக இது இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். சிறுத்தை எங்கே? வில்பத்து தேசிய சரணாலயத்தில் வாழ்ந்து வரும் இந்த சிறுத்தை தொடர்பில் பிபிசி தமிழ், வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்கவிடம் வினவியது. இந்த பெண் சிறுத்தை தொடர்பில் இதுவரை எவரும் முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். ''சிறுத்தை ஒன்றுக்கு இரண்டு கண்களும் சரியாக தெரிய வேண்டும். உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு கண்கள் சரியாக தெரிய வேண்டும். ஆனாலும், ஒரு கண் பார்வையின்றி இந்த சிறுத்தை இருந்துள்ளது. ஒரு வருட காலமாக அந்த சிறுத்தை தொடர்பில் எமக்கு பதிவாகவில்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். இந்த சிறுத்தையின் கண்கள் இயற்கையாகவே அவ்வாறு காணப்பட்டதொன்றா என பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது. ''அது விபத்தினால் ஏற்பட்ட ஒன்று கிடையாது. எந்தவொரு விலங்கிற்கும் அவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் அவ்வாறு ஏற்படலாம். இந்த சிறுத்தை பல வருட காலமாக வாழ்ந்துள்ளது. இந்த கண் பார்வை விபத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.'' என அவர் குறிப்பிட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக சுமார் 350 சிறுத்தைகள் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இலங்கை சிறுத்தை அல்லது பென்தெரா பர்டஸ் கோடியா என இந்த சிறுத்தை வகை இலங்கையில் அழைக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த வகையான சிறுத்தை தற்போது இலங்கையில் அருகிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது முதல் முறையாக 1956 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT ''ஒன் ஐ சிறுத்தையை தேடுகிறோம்'' புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் வரை வில்பத்து வனப் பகுதி பரவியுள்ளது, மேலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையாகவும் இந்த வனப் பகுதி அமையப் பெற்றுள்ளது. கணக்கெடுப்பு பணி மற்றும் உடல் நலன் பற்றி அறிந்துக்கொள்வதற்காக ''ஒன் ஐ'' என அழைக்கப்படும் இந்த சிறுத்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''நாளொன்றிற்கு சரணாலயத்திற்குள் 70 முதல் 80 வரையான சஃபாரி வாகனங்கள் செல்கின்றன. இந்த சிறுத்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியும் பட்சத்தில் எமக்கு அறிவிக்குமாறு அவர்களை நாங்கள் தெளிவூட்டியுள்ளோம். அதேபோன்று, எமது வாகனங்களும் சரணாலயத்திற்குள் நாளாந்தம் செல்கின்றன. இதனூடாக அந்த மிருகத்தை கண்டுக்கொள்ள முடியுமா என ஆராய்கின்றோம்.'' என அவர் கூறினார். ''இந்த சிறுத்தையானது பெண் என்பதனால் நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லக்கூடிய திறனை அது கொண்டுள்ளது. ஆண் மிருகத்தை விட, பெண் மிருகம் அதிக தூரம் நடந்து செல்லும் ஆற்றலை கொண்டுள்ளது.'' என வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7055vpz7eno
  23. 10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட இரண்டு சீன இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சீனப்பிரஜையொருவர் தான் சரணடைந்தவேளை ரஸ்ய படையினர் எரிவாயு குண்டுகளை தன்மீது வீசியதாகவும் தான் உயிரிழக்கப்போகின்றேன் என அச்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒருவர் ரஸ்ய பிரஜாவுரிமை ரஸ்ய படையில் இணைவதற்காக தரகர் ஒருவருக்கு 2700 அமெரிக்க டொலர்களை வழங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/211704
  24. பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா? 10 APR, 2025 | 12:48 PM அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர். யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க விமானப்படையிடம் 20 பி-2 போர்விமானங்களே உள்ளன அவற்றை அமெரிக்கா மிகவும் முக்கியமான தாக்குதல்களிற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றது. அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளையும் அணுவாயுதங்களையும் கொண்டுசெல்லும் திறன்வாய்ந்தவை, மத்திய கிழக்கில் செயற்படுவதற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஈரானிற்கு செய்தியை தெரிவிப்பதற்காகவா இந்த விமானங்கள் டியாகோகார்சியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ஈரானே அதனை தீர்மானிக்கட்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சொத்து, இது அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப் தெளிவாக உள்ளார், ஈரானிடம் அணுக்குண்டு இருக்ககூடாது, அதனை அமைதிவழிமுறை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211698
  25. Missile City-ஐ பகிரங்கமாக வெளிப்படுத்திய இரான்; US - Israel-க்கு பாதிப்பா? இரானின் "ஏவுகணை நகரங்கள்" என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்? "Missile cities" is a term used by Iran's military force - the Islamic Revolutionary Guard Corps (IRGC) - to describe large underground missile bases. These bases are a series of vast, deep and interwoven tunnels across the country, often located in mountainous, strategic areas. They are used to store, prepare and launch ballistic and cruise missiles and other strategic weapons such as drones and air defence systems. According to IRGC commanders, these missile cities are not just missile storage sites, but some of them are also factories "for the production and preparation of missiles before they become operational". The exact location of these missile bases is unknown and has never been officially revealed. why is Iran choosing to reveal new capabilities now and what does it mean for potential conflict in the Middle East? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.