Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா? கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களின் நரம்பியல் வளர்ச்சியில் கோலின் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் கோலின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட தாய்மார்கள், குறியீடுகள் மற்றும் தகவல்களை விரைவாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட குழந்தைகளைப் பெற்றேடுத்தனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்தது. விஞ்ஞானிகள் கோலின் ஒரு அதிசய ஊட்டச்சத்து என்கிறார்கள். ஆனால் அது பெரிதும் கவனிக்கப்படவில்லை. கோலின் எந்த பொருட்களில் இருந்து கிடைக்கும்? நீங்கள் அதை போதுமான அளவு பெறுகிறீர்களா? ஒரு முக்கிய ஊட்டச்சத்து நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கோலின் காணப்படுகிறது என்கிறார் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் ஜின்யின் ஜியாங். கோலின் ஒரு "அத்தியாவசிய" ஊட்டச்சத்து. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான இதனை, நமது உடல் தானாகவே போதுமான அளவு உற்பத்தி செய்யாது. அதற்கு பதிலாக, நாம் அதை நமது உணவிலிருந்து பெற வேண்டும். இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைப் போன்றது என்றாலும், உண்மையில் பி வைட்டமின்களுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று அறிவியல் எழுத்தாளர் மற்றும் ஒர் ஊட்டசத்து ஆலோசனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எம்மா டெர்பிஷயர் கூறுகிறார். மாட்டிறைச்சி, முட்டை, மீன், கோழி மற்றும் பால் போன்ற விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோலின் காணப்படுகிறது. அதே சமயம், வேர்க்கடலை, கிட்னி பீன்ஸ், காளான் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றிலும் உள்ளது. இருப்பினும், விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில், தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ளதை விட அதிக அளவு கோலின் காணப்படுகிறது. நம் உடலில் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டுக்கு கோலின் அவசியம். போதுமான அளவு கோலின் இல்லாவிட்டால், பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். "கோலின், கல்லீரலிலிருந்து கொழுப்பை வெளியே அனுப்புவதற்கு உதவுகிறது. மேலும், ஒருவருக்கு கோலின் குறைபாடு இருந்தால், அவருக்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படியலாம் (fatty liver) " என்கிறார் ஜியாங். தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் சருமத்தை பாதுகாக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?14 ஏப்ரல் 2025 மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சோயாபீன்களின் மூலம் 100 கிராமுக்கு 120மிகி அளவில் கோலினைப் பெற முடியும். தாய்மார்களின் கர்பகாலத்தில் கரு வளர்ச்சியடையும்போது, மூளையில் செல் பெருக்கம் குறைய, கோலின் குறைபாடு காரணமாக அமைகிறது. இது பல்வேறு தீங்குகளை விளைவிக்கலாம். எனவே மூளையில் கோலினின் பங்கு மிகவும் முக்கியமானது. இது முதன்மையாக "மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து" என டெர்பிஷயர் கூறுகிறார். நரம்பு செல்களின் மூலம் மூளையிலிருந்து நமது உடலுக்கு செய்திகளை கொண்டு செல்லும் அசிட்டைல்கோலின் என்ற நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்யவும் கோலின் உதவுகிறது. அசிட்டைல்கோலின், நமது நினைவாற்றல், சிந்தனை மற்றும் கற்றலுக்கு தேவைப்படும் மூளை நரம்பு செல்களில் முக்கிய பங்காற்றுகிறது. 36 முதல் 83 வயதுக்குட்பட்ட 1,400 பேரை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், அதிக கோலினை உட்கொண்டவர்கள், சிறந்த நினைவாற்றலுடன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், நடுத்தர வயதில் கோலினை சேர்த்துக்கொள்வது நமது மூளையைப் பாதுகாக்க உதவக்கூடும். கோலின் பொதுவாக "நூட்ரோபிக்ஸ்" எனப்படும் சப்ளிமென்ட் மருந்துகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு பொருட்களின் கலவையாகிய இது, கற்றல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாக சிலர் நம்புகின்றனர். மறுபுறம், கோலின் குறைபாடும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்புச் சிதைவுக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு ஆய்வில், அதிக அளவில் கோலினை உட்கொண்டால், பதற்றம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில், அதிக அளவில் கோலினை சேர்த்துக்கொள்வதற்கும், மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து குறைவதற்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. போதுமான அளவு கோலினை எடுத்துக்கொண்டால், பல நன்மைகள் கிடைக்கக்கூடும். தனித்தனியாக, எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கும் கோலின் உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், அதிக அளவில் கோலினை உட்கொண்டவர்கள், அதிக எலும்பு அடர்த்தி கொண்டிருப்பதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் அடர்த்தி நன்றாக இருந்தால், எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் எலும்பு முறிவின் அபாயமும் குறையும். "எலும்பு வலுவிழப்புக்கு எதிராக கோலின் செயல்படக்கூடும்" என்று கோலின் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்த நார்வேயின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஓயென் ஜனிக் கூறுகிறார். ஒரே வீடியோ தர்பூசணி விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது எப்படி? என்ன நடந்தது?11 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 முதல் 1000 நாட்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை என்பதும், கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது தாயின் உணவுமுறை இதில் ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நன்கு நிறுவப்பட்டுள்ளது. கருப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் தங்களின் தாய்மார்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக கோலினுடன் பிறக்கின்றன. இதன் மூலம் கர்ப்ப காலத்தில் கோலினின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது என்கிறார் டெர்பிஷயர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குழந்தையின் வளர்ச்சிக்கு கோலின் மிகவும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பையில் உள்ள கோலினின் அளவு, குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த நன்மைகள் குழந்தை வளர்ந்த பிறகும் பல ஆண்டுகள் தொடரக்கூடும். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாத காலம் (வாரம் 13 முதல் 28 வரை) 'இரண்டாம் ட்ரைமெஸ்டர்' எனப்படுகின்றது. அக்காலத்தில் அதிக அளவு கோலின் உட்கொண்ட கர்ப்பிணி பெண்களின் குழந்தைகள், தங்கள் ஏழு வயதில் செய்துக்கொண்ட நினைவாற்றல் பரிசோதனையில் உயர் மதிப்பெண்கள் பெற்றதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவர் போதிய அளவில் கோலின் பெறவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகளில் கவனக்குறைவு/அதிக செயல்பாட்டு குறைபாடு (ஏடிஎச்டி) தொடர்புடைய நடத்தைகள் காணப்படலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. "பள்ளி மாணவர்களிடையே ஏடிஎச்டி மற்றும் டிஸ்லெக்ஸியா அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது. இதில் சில மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றாலும், கருப்பையில் முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதாலும் இது ஏற்படக்கூடும். நரம்பியல் வளர்ச்சியில் மிக நுணுக்கமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை பிற்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இப்போது நாங்கள் அதற்கான பின்விளைவுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் " என்று டெர்பிஷயர் விளக்குகிறார். கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் வழங்கும் காலத்தில், கோலின் உட்கொள்வதற்கும் மூளை வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பை ஜியாங் ஆய்வு செய்துள்ளார். "விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தாய்க்கு அதிக கோலின் இருந்தால் அவற்றின் குட்டிகளின் அறிவாற்றல் வளர்ச்சி மேம்பட்டதாக இருக்கும்" என்று கூறும் அவர், "மனிதர்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும், ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கவில்லை" என்று விளக்குகிறார். நீங்கள் குடிக்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?4 ஏப்ரல் 2025 பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 நமக்கு போதுமான அளவு கோலின் கிடைக்கிறதா? ஐரோப்பாவில், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையமான ஈஎப்எஸ்ஏ (EFSA), கோலினை உட்கொள்வதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. பெரியவர்களுக்கு தினசரி 400 மில்லிகிராம், கர்ப்பிணிகளுக்கு 480 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு 520 மில்லிகிராம் கோலின் பரிந்துரைக்கப்படுகிறது. கோலின் உட்கொள்வதற்கான பரிந்துரைகளை, அமெரிக்காவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் (IOM) முதன்முதலில் 1998ம் ஆண்டு வெளியிட்டது. ஆண்களுக்கு தினசரி 550 மில்லிகிராம், பெண்களுக்கு 425 மில்லிகிராம், கர்ப்ப காலத்தில் 450 மில்லிகிராம், மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 550 மில்லிகிராம் என அதில் பரிந்துரைக்கப்பட்டது. ஒரு முட்டையில் சுமார் 150 மில்லிகிராம் கோலின் உள்ளது. ஒரு கோழியின் மார்புத் துண்டில் சுமார் 72 மில்லிகிராம், மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் சுமார் 24 மில்லிகிராம் கோலின் காணப்படுகிறது. மூளைக்கு அதிகம் தேவை 38 விலங்கு மற்றும் 16 மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கோலின் சப்ளிமெண்ட் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என கூறுகிறது. இருப்பினும், தற்போது வரை கோலின் மற்றும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுக்கிடையிலான வலுவான தொடர்பை விலங்குகளை அடிப்படையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மட்டுமே வெளிக்காட்டுகின்றன. அந்த ஆய்வுக் கட்டுரை கோலின் சப்ளிமெண்ட்டுக்கான சரியான அளவை குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்களை கொண்டு நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள் தினசரி 930 மில்லி கிராம் அளவு கோலின் வழங்கும் சப்ளிமெண்ட்களை பயன்படுத்தின. இது சுமார் ஆறு கோழி முட்டைகளில் உள்ள கோலின் அளவுக்கு இணையானது. இதனால் எந்தவொரு மோசமான விளைவுகளும் பதிவாகவில்லை. பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை விட அதிக கோலின் தேவைப்படும் சிலரும் இருக்கலாம் என்று ஓயென் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாகக் காணப்படும் மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தவர்களுக்கு கோலின் அதிகம் தேவைப்படலாம். ஒவ்வொருக்கும் இடையே உள்ள மரபணு வேறுபாடுகளால், சிலருக்கு கோலினின் தேவை அதிகமாக இருக்கலாம் என டெர்பிஷயர் கூறுகிறார். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 தினமும் நிம்மதியாக மலம் கழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேர்க்கடலையில் அதிக அளவு கோலின் உள்ளது. இருப்பினும், நம்மில் பலர் போதுமான அளவு கோலினை பெறவில்லை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆய்வில், அமெரிக்க மக்களில் 11 சதவிகித மக்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை தினசரி உட்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. முட்டைகளில் அதிக அளவு கோலின் உள்ளது. சைவ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர், இந்த ஊட்டச்சத்தை போதுமான அளவில் பெற முடியாது என்ற சில கவலைகள் உள்ளன. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் கோலின் சப்ளிமெண்ட்கள் பரவலாகவும் கிடைக்கின்றன. முட்டை உண்பவர்கள், முட்டை உண்ணாதவர்களை விட, சுமார் இரண்டு மடங்கு அதிக கோலினை உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், "முட்டை உண்ணாமலோ அல்லது சப்ளிமெண்ட் எடுக்காமலோ, தினசரி போதுமான அளவு கோலின் கிடைப்பது மிகவும் கடினம்" என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கோலின் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை ''நீங்கள் உங்கள் உணவை கவனமாகத் திட்டமிட்டால், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் என்று, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவு கோலினை பெற முடியும்'' என்று ஜியாங் கூறுகிறார். போதுமான கோலின் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் தினசரி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஓயென் கூறுகிறார். இதற்கிடையில், ஆரோக்கியத்துக்கு கோலின் எவ்வாறெல்லாம் உதவும் என்பதை நன்கு புரிந்து கொள்ள விலங்குகளிடமும், மனிதர்களிடமும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், "மருத்துவர்கள் கோலின் குறித்து அதிகம் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்," என்கிறார் டெர்பிஷயர். பெரும்பாலும் சற்று கவனிக்கப்படாததாகத் தோன்றினாலும், கோலின் விரைவில் பரவலாக அறியப்படும் என்று அவர் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c05nez8lqe4o
  2. 15 APR, 2025 | 11:46 AM யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டுகிறார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுமார் 600க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் யாழ். செம்மணியில் புதைக்கப்பட்டமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த பகுதி மறைக்கப்பட்டு இரவிரவாக கனரக வாகனங்கள் மூலம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை மூடி மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோன்று தற்போதைய ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில் செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை அகழ்வதற்கு அனுமதி வழங்காது இழுத்தடிப்பு செய்கின்றது. அரசாங்கத்தை பொருத்தவரையில் மனிதப் புதைகுழி ஒன்றை அகழ்வதற்கு 20 இலட்சம் ரூபா என்பது சிறிய தொகை. அதனை வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கம் அக்கறை செலுத்தாது இழுத்தடிப்பு செய்கிறது. இந்த மனித புதைகுழியை தமிழ் பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்வதற்காக அமர்த்தப்பட்ட நிலையில் அவரைக் கூட தற்போதைய அரசாங்கம் மாற்றுவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பியினர் தொடர்பில் தமிழ் மக்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இறுதி யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத இராணுவத்துக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டவர்கள், பெயரை மாற்றிக்கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வினை தரப் போகிறோம் என மக்களை ஏமாற்றி தமது சிங்கள ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச விசாரணைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதற்கு தற்போதைய பட்டலந்த விவகாரம் மிகச் சரியான உதாரணமாகும். அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை தமிழ் மக்கள் அறிந்த விவகாரமாக பட்டலந்த விவகாரத்தை கொள்ளலாம். பட்டலந்த வீட்டுத் திட்ட குடியிருப்பில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தோழர்கள் தொடர்பாக சர்வதேச தரப்புக்களை இணைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தயார் என கூறுகிறார்கள். இதிலிருந்து என்ன புரிகிறது..? இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலைகளை சர்வதேச ரீதியில் விசாரிப்பதற்கு மறுத்து உள்ளூர் விசாரணை மூலம் தீர்வு என கூறுகிறார்கள். ஆனால், பட்டலந்தவில் படுகொலை செய்யப்பட்ட தமது ஜே.வி.பி. தோழர்களுக்கு சர்வதேச தரப்புக்களை அழைத்து விசாரணைக்கு தயார் என கூறும் தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் போர் குற்றங்களுக்கும் ஏன் சர்வதேச விசாரணைகளை நடத்தி தீர்வு காண மறுக்கிறார்கள். தமது அரசியல் நோக்கத்துக்காக பட்டலந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தியினர், செம்மணி மனிதப் புதைகுழியை தோண்டுவதற்கு சிறிய பணத்தொகையை கூட வழங்க பின்னிற்கும் இவர்கள், புதைகுழி விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கிறார்களா? ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்கள் கடந்து செல்கின்ற நிலையில், ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தியை பற்றி தத்துவார்த்த ரீதியாக தமிழ் மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, தமிழ் மக்களை தத்துவார்த்த ரீதியாக அழிப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை வகுத்துக் கொடுத்த தற்போதைய தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் விரட்டியடிப்பதற்கான காலம் கனிந்துள்ளது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/212020
  3. 15 APR, 2025 | 10:30 AM நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212018
  4. முழுவதும் பெண்களே அடங்கிய குழு தனது 11 நிமிட விண்வெளிப் பயணத்தில் என்ன செய்தது? பட மூலாதாரம்,BLUE ORIGIN 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், 6 பெண்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் இருந்து புறப்பட்டது. 11 நிமிட விண்வெளி பயணத்தை இவர்கள் மேற்கொண்டனர். பாடகி கெட்டி பெர்ரியுடன் தொழிலதிபர் ஜெஃப் பெசோசின் காதலி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் தொலைகாட்சியின் தொகுப்பாளர் கேல் கிங், நாசாவின் ராக்கெட் விஞ்ஞானி ஆயிஷா போவே, மனித உரிமை ஆர்வலர் அமாண்டா இங்குயென் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோரும் விண்வெளிக்குச் சென்றனர். ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த விண்வெளி பயணத்தை ஏற்பாடு செய்தது. பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,6 பெண்களுடன் விண்ணில் பறந்த விண்கலம் இந்த விண்வெளி பயணம் 11 நிமிடங்களை உள்ளடக்கியது. இந்த விண்கலம், ஆறு பெண்களையும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் கார்மன் எல்லைக் கோடு வரை கொண்டு சென்றது. கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த அவர்கள், விண்வெளியில் இருந்து பூமியின் அற்புதமான காட்சியைக் கண்டு களித்தனர். பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு,பாராசூட் மூலம் தரையிறங்கிய விண்கலம் இவர்கள் பயணித்த விண்கலமானது பைலட் தேவையின்றி முழுவதும் தானாக இயங்கக் கூடியது. பயணிக்கும் பெண்கள் குழு இந்த விண்கலத்தை எந்த வகையிலும் இயக்கத் தேவையில்லை. விண்வெளி பயணம் முடிந்த பின்னர் விண்கலமானது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது. இதே நேரத்தில் இந்த விண்கலத்திற்காக பயன்படுத்திய ராக்கெட் பூஸ்டர், ஏவுதளத்திலிருந்து 2 மைல்கள் தொலைவில் தானாக தரையிறங்கியது. பட மூலாதாரம்,BLUE ORIGIN இந்த விண்வெளி பயணம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாடகி கெட்டி பெர்ரி "முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் அனைத்து மகளிர் குழுவில் நானும் இருப்பேன் என நீங்கள் கூறினால் அதனை நான் நம்பியிருப்பேன். ஒரு குழந்தையாக எதுவுமே எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது கிடையாது." என்று கூறியுள்ளார். கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்று வந்த பிறகு, பெண்கள் மட்டுமே விண்வெளிப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. "இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,X/BLUE ORIGIN கார்மன் எல்லைக்கோடு என்றால் என்ன? கார்மன் கோடு என்பது ஒரு கற்பனையான எல்லைக்கோடு. இது பூமியின் கடல் மட்டத்தில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருப்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, பூமியில் இருந்து பயணித்தால் விண்வெளியை அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இடம் எனப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, புவி வளிமண்டலத்தின் முடிவாகவும், விண்வெளியின் தொடக்கமாகவும் இந்தப் புள்ளி கருதப்படுகிறது. கார்மன் கோடு, விமானவியல் மற்றும் வானியலுக்கு இடையே ஒரு வேறுபாட்டைக் குறிப்பதற்காக, ஃபெடரேஷன் ஏரோநாடிக் இன்டர்நேஷனல் என்ற அமைப்பால் தீர்மானிக்கப்பட்டது. இந்த உயரத்தை அடைவது, விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாகக் கருதப்படுகிறது. "சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி, இதுதான் விண்வெளி என்று ஒரு வரையறை உருவாக்கப்பட்டுள்ளது. அதுவே இந்த கார்மன் எல்லைக்கோடு," என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் முன்னாள் விஞ்ஞானியுமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அவரது கூற்றுப்படி, கார்மன் எல்லைக்கோடு எனத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் 100 கி.மீ என்ற உயரத்துக்குக் கீழேதான் 99.9% வரையிலான வளிமண்டலம் உள்ளது. ஆகையால்தான் அதற்கு மேலே இருக்கும் பகுதி விண்வெளி என்று முடிவு செய்யப்பட்டது. இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் பயணிப்பவர்கள் "விண்வெளிக்குச் சென்றவர்கள்" என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அதனால்தான் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணங்களும் இந்தக் கோட்டுக்கு மேலே சென்று, அதன் பயணிகளுக்கு உண்மையான விண்வெளி அனுபவத்தை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,BLUE ORIGIN 'விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே நோக்கம்' விண்வெளி சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "இத்தகைய விண்வெளிச் சுற்றுலா பயணங்களை இந்த நிறுவனம் பலமுறை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்தப் பயணம் குறித்துக் கேள்விப்பட்டதும், சுனிதா வில்லியம்ஸ் சென்றதைப் போன்றதொரு பயணமோ எனக் கருதிவிடக்கூடாது," என்கிறார் அவர். சுனிதா வில்லியம்ஸ் சுமார் 400 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய விண்வெளிப் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனால், இது அப்படியான பயணமல்ல என்கிறார் வெங்கடேஸ்வரன். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் மட்டுமே செல்லும் இந்த விண்வெளிப் பயணம் குறித்து விளக்கிய அவர், "விண்வெளி தொடங்கும் இடமான கார்மன் எல்லைக் கோட்டுக்குச் சற்று மேலே சென்றுவிட்டு, ஒரு சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி விடுவார்கள்," என்றார். விண்வெளிக்கு பயணிக்கும் 6 பெண்கள் யார்?14 ஏப்ரல் 2025 விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?2 ஏப்ரல் 2025 அதுகுறித்து விரிவாக விளக்கிய வெங்கடேஸ்வரன், "இந்தப் பயணத்தின் மொத்த நேரமே சுமார் 11 நிமிடங்கள்தான் இருக்கும். ஏழு நிமிடங்களுக்கு ராக்கெட்டில் பயணிப்பார்கள். சுமார் 48 கி.மீ வரை அதில் பயணித்த பிறகு, அங்கிருந்து ஒரு கல் மேல்நோக்கி வீசப்படுவதைப் போல, ராக்கெட்டில் இருந்து பயணிகள் இருக்கும் விண்கலம் விண்வெளி நோக்கி வீசப்படும். ராக்கெட்டில் இருந்து வீசப்படும் விண்கலம், கார்மன் கோட்டுக்குச் சற்று மேலே வரை சென்றுவிட்டு பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்," என்று விவரித்தார். விண்வெளி சுற்றுலாத் துறைக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதும் இதன்மூலம் ஒரு புதிய தொழிலை உருவாக்கலாம் என்பதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் அவர். அதே நேரத்தில், இத்தகைய முயற்சி "பெண்கள் முன்னேற்றம் மீதான கவனத்தையும் எதிர்கால சந்ததிகளுக்கு ஓர் உத்வேகத்தையும்" ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70zxk97e1do
  5. தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 15 ஏப்ரல் 2025, 02:06 GMT லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகனாக ஜொலித்த கேப்டன் தோனி, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். லக்னெளவை ஏமாற்றிய பேட்டர்கள் லக்னெள அணிக்கு நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை செய்யவில்லை. மார்க்ரம்(6), நிகோலஸ் பூரன்(8) இருவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியுடன் முன்னணியில் இருக்கும் பூரன் விரைவாக விக்கெட்டை இழந்தது சிஎஸ்கேவின் நல்லநேரம். அதேபோல மார்ஷ் 30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததும், லக்னெளவுக்கு பெரிய ஸ்கோரை வழங்க முடியவில்லை. பூரன், மார்ஷ் இருவரும் களத்தில் நின்றிருந்தால், சிஎஸ்கேவுக்கு 6வது தோல்வி கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும். கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் லக்னெள அணிக்காக முதல் அரைசதத்தை அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரிஷப்பந்த் பேட்டிலிருந்து பெரிதாக ரன்கள் வரவில்லை. அதன்பின் ரிஷப் பந்த் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி லக்னெள ஸ்கோரை உயர்த்தினார். பதிரானா, கலீல் அகமது ஓவர்களை குறிவைத்த ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி லக்னெள அணியை 150 ரன்கள் கடக்க உதவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மில்லர் ஏன் விரைவாக வரவில்லை? அதேபோல நெருக்கடியான நேரத்தில் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை களமிறக்காமல், அப்துல் சமதையும், ஷர்துல் தாக்கூரையும் களமிறக்கி லக்னெள அணி தவறு செய்துவிட்டது. அப்துல் சமது களமிறங்க வேண்டிய இடத்தில் மில்லர் களமிறங்கி இருந்தால், லக்னெள ஸ்கோர் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருக்கும். அப்துல் சமது 20 ரன்கள் சேர்த்தும் அதில் 2 சிக்ஸர்கள் மட்டுமே சிரமப்பட்டு அடித்தார், 'ஷாட்' ஏதும் சிக்கவில்லை. ஆனால், மில்லரை அணியில் வைத்திருந்தும் அவரை நடுவரிசையில் களமிறக்காமல் கடைசிவரிசையில் களமிறக்கி லக்னெள அணி அவரை வீணாக்கியது. சிறப்பான அறிமுகம் சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோர் அணியின் துணைக் கேப்டன் ஷேக் ரஷீத் நேற்று அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு சீசனில் இருந்து இவரை சிஎஸ்கே பாதுகாத்தாலும், விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், ரஷீத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேற்று பயன்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள், விராட் கோலி ஸ்டைலில் பிளிக் ஷாட்டில் சூப்பர் பவுண்டரி என 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் மிகவும் கூலாக ரஷித் பேட் செய்தார். கெய்க்வாட் பேட்டிங் ஸ்டைலில் ரஷீத் பேட் செய்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்தாலும், ரஷீத்தின் ஆட்டம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பவர்ப்ளேயில் நல்ல தொடக்கத்தை அளிக்க உதவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது. ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதிக்கு கிடைத்த 5வது வாய்ப்பையும் வீணடித்து 9 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு சுமையாக மாறிவருகிறார். ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் தவறான ஷாட்களால் ஆட்டமிழந்தனர். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று சிஎஸ்கே தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், சிஎஸ்கே வெற்றி மதில்மேல் பூனையாக மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஓவர் போட்டிகளில் கோலியின் 100 வது அரை சதம் - வெற்றிப்பாதைக்கு திரும்பிய பெங்களூரு13 ஏப்ரல் 2025 மிரட்டல் சதம் விளாசியதும் அபிஷேக் எடுத்துக் காட்டிய பேப்பரில் என்ன எழுதியிருந்தது? அவர் கூறியது என்ன?13 ஏப்ரல் 2025 தோனி, துபே சிரமப்படவில்லை ஷிவம் துபே களத்தில் இருந்தபோது, அவருக்கு லக்னெள சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரன் சேர்க்கக் கடும் சிரமப்பட்டு, 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். விஜய் சங்கர், ஜடேஜா ஆட்டமிழந்தபின் துபேயின் ரன்சேர்ப்பில் தொய்வு ஏற்பட்டது. தோனி களமிறங்கியபின், லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு வாய்ப்புக் கொடுத்தார் எனப் புரியவில்லை. 2024 ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக ஆடியுள்ளார். ஆனால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்காமல் தாக்குர், ஆவேஷ்கானை வைத்து வைடு யார்கர், ஃபுல்டாஸ், ஷார்ட் பிட்ச்சில் பந்துவீச வைத்து தோனி, துபே ரன் சேர்ப்பை லக்னெள எளிதாக்கியது. ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் துபே 2 பவுண்டரி, நோபாலில் சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தபோது வெற்றி லக்னெளவின் கைகளைவிட்டு சென்றுவிட்டது. 6-வது விக்கெட்டுக்கு தோனி, துபே கூட்டணி 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். துபே 43, தோனி 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே வெற்றிக்கான காரணம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் முகமது இருவரும்தான். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடுப்பகுதியில் லக்னெள ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். நூர் முகமது விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஜடேஜா 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பதிராணா, கலீல் அகமது, ஓவர்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கம்போஜ் 3 ஓவர்கள் வீசி 20 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது, நூர் முகமது, ஜடேஜாவின் பந்துவீச்சுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது எப்படி? வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த போட்டிகள் துரதிர்ஷ்டமாக நாங்கள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. இந்த வெற்றி அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆட்டம் கடினமாக இருந்தது, எங்கள் தருணத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். கடந்த போட்டிகளில் தொடக்க ஓவர்களில் சிறிது சிரமப்பட்டுள்ளோம் ஆனால் நடுப்பகுதியில் மீண்டு வந்துள்ளோம் சென்னை ஆடுகளமாக இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். சிறந்த ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "முதல் 6 ஓவர்களில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, அஸ்வினை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்து அதிக அழுத்தம் கொடுப்போம், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்களை மாற்றுவோம். அந்த வகையில் பந்துவீச்சு என்பது இன்று பேட்டிங்கைவிட சிறப்பாக இருந்தது. ரஷித் உண்மையாகவே நன்றாக பேட் செய்தார், கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுடன் பயணிக்கிறார். வலைப்பயிற்சியில் ரஷீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது, முன்னேற்றம் காணப்பட்டது. பேட்டிங் வரிசையிலும் எங்களுக்கு மாற்றம் தேவைப்பட்டதால் ரஷீத்தை கொண்டுவந்தோம்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? மனம் திறந்தார் சாய் சுதர்சன்12 ஏப்ரல் 2025 நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றியை தாரை வார்த்த ரிஷப் பந்த் லக்னெள அணி இன்னும் கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். உண்மையில் இன்னும் 40 ரன்கள் கூடுதாக அடித்திருந்தாலும், ரிஷப் பந்தின் தவறான, மோசமான கேப்டன்சியால் லக்னெள அணி தோற்றிருக்கும். சிஎஸ்கே அணியை சுருட்டுவதற்கு, லக்னெளவின் கருப்பு மண் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால், கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை திட்டமிட்டு பயன்படுத்தாமல் ரிஷப் பந்த் செய்த கேப்டன்சி தவறுதான் இந்த விலையைக் கொடுத்தது. கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் ஆட்டம் லக்னெளவின் பக்கம்தான் இருந்தது. கடைசி 18 பந்துகளில் சிஎஸ்கேவுக்கு 31 ரன்கள் தேவை என்கிற வரையிலும் லக்னெளவின் கைகளில்தான் வெற்றி இருந்தது. 2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற ரீதியில் சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் லக்னெள அணி விழிக்கவில்லை. தேவையின்றி கடைசி இரு ஓவர்களை ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கானுக்கு வழங்கி, அணியின் வெற்றியை தனது குருநாதர் தோனிக்கு பரிசாக ரிஷப் பந்த் அளித்துள்ளார். லக்னெள அணி வெற்றிக்கு உரித்தானது, நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வெற்றிக்கு அருகே வந்துவிட்டனர், லக்னெள அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் திக்வேஷ் ராதி, ரவி பிஸ்னாய், மார்க்ரம் ஆகியோர் 11 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 19 ரன்கள் கொடுத்ததுதான் லக்னெளவை தோல்விக்குழியில் தள்ளியது. ரவி பிஸ்னோய்க்கு 3 ஓவர்கள் மட்டுமே வழங்கிய நிலையில் ஏன் 4வது ஓவரை ரிஷப்பந்த் வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், ரிஷப்பந்தின் தவறான கேப்டன்சி சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் செய்த தவறு என்ன? லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தார். ஆனால், அவருக்கு 4வது ஓவரை ரிஷப் பந்த் ஏன் வழங்கவில்லை என்பது கேள்வியாக வர்ணனையாளர்கள் வைத்தனர். ரிஷப்பந்தின் இந்த தவறான முடிவுதான் லக்னெள அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 166 ரன்களை லக்னெள அணி சொந்த மைதானத்தில் டிபெண்ட் செய்திருக்க முடியும். இந்த ஸ்கோரையே கடைசி 3 பந்துகள் இருக்கும்போதுதான் தோனி, துபேயால் அடிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது, ஏதேனும் ஒரு ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும் ரவி பிஸ்னோய் 13வது, 9வது ஓவரில் திரிபாதி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தினரார். இவர் வீசிய 18 பந்துகளில் 9 பந்துகள் டாட் பந்துகள். அனுபவம் இல்லாத திக்வேஷ் ராதிக்கும், மார்க்ரமுக்கும் 4 ஓவர்களை முழுமையாக வழங்கிய ரிஷப் பந்த் ஏன் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய்க்கு 4வது ஓவரை வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. கடைசி 30 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 56 ரன்கள் என்பது லக்னெள மைதானத்தில் கடின இலக்குதான். ஆவேஷ்கானுக்கு 3 ஓவர்களும், தாக்கூருக்கு 2 ஓவர்களும் மீதம் இருந்தன, பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் இருந்தது. ஆவேஷ் கானுக்கு 16வது ஓவரை வழங்கிய நிலையில் 12 ரன்களை வாரி வழங்கினார். பனியின் தாக்கத்தால் பந்து மாற்றப்பட்டு புதிய பந்து தரப்பட்டது. ஆனால் புதிய பந்தை சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னோய்க்கு ரிஷப் பந்த் வழங்கவில்லை. பெரும்பாலும் புதிய பந்து மாற்றப்பட்டவுடன் தோனி களத்தில் இருந்தால் சுழற்பந்துவீச்சைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் தேர்ந்தெடுப்பார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த போட்டியில் கெளகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 18 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்றபோது, ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன், தீக்சனாவுக்கு ஓவரை வழங்கினார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 72 ரன்கள் தேவை என்ற போது அக்ஸர் படேல் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே சேஸ் செய்யும்போது, 24 பந்துகளில் 68 ரன்கள் தேவை இருந்தது. களத்தில் தோனி இருந்ததால், கேப்டன் ஸ்ரேயாஸ் உடனடியாக யஜுவேந்தி சஹலுக்கு ஓவரை வழங்கினார், தோனியால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 2020 ஐபிஎல் சீசனில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 94 மட்டும்தான், 243 பந்துகளைச் சந்தித்த தோனி 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்தான் அடித்துள்ளார். ஆனால் 2024 ஐபிஎல் சீசனில் இருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தோனிக்கு ஒரு ஓவரை ரவி பிஸ்னோய் மூலம் பந்துவீச வைத்திருந்தால், ரன் நெருக்கடி அதிகமாகி சிஎஸ்கே தோல்வியில் விழந்திருக்கலாம். லக்னெள அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை கேப்டன் ரிஷப் பந்த் தனது குருநாதர் தோனிக்கு தாரை வார்த்துவிட்டார். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?11 ஏப்ரல் 2025 தோனி புதிய சாதனை இந்த போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன்-அவுட், ஸ்டெம்பிங் செய்து 11 பந்துகளில் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்த கேப்டன் மகிகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டுக்குப்பின் தோனி ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றார். ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் லக்னெள வீரர் ஆயுஷ் படோனி இறங்கி அடிக்க முற்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து படோனியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பீல்டிங்கில் 200-வது வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். அதன் பிறகு கடைசி ஓவரில் லக்னௌ கேப்டன் ரிஷப் பந்தை கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. இதுவரை 271 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 201 பேட்டர்கள் ஆட்டமிழக்க காரணமாக இருந்துள்ளார். அதில், 155 கேட்ச்களும், 46 மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே எங்கே? சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த நிலையில் தோனி கேப்டன்ஷிப் ஏற்றபின் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை, தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தால் சிஎஸ்கே அணியின் நிலை மாறும். லக்னெள அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: முலான்பூர் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly1vzy80mko
  6. 'துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம்' - சஜித் பிரேமதாஸ 11 APR, 2025 | 05:13 PM 'துக்கம் கண்ணீர் இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் என தமிழ், சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள - தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் செல்லுவதை பாரம்பரியமாக புத்தாண்டின் பிறப்பு அல்லது சூரிய பகவானைக் கொண்டாடுவதற்கு இந்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு செயல்பட்டு வருகின்றனர். இக்காலத்தில் மரங்கள் கனிகளால் நிறைந்து, விளைச்சல் செழித்து, களஞ்சியங்கள் நிரம்பி, அனைவரின் உள்ளங்களிலும் செழிப்பின் ஒளி பிறக்கும். சிங்கள - தமிழ் புத்தாண்டு என்பது சரியான நேரத்தில் துல்லியமாக செயல்படுவதை பழக்கப்படுத்திய, நன்றி உணர்வை வளர்த்தெடுத்த கலாசார விழாவாகும். மேலும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறுதியான தொடர்பையும், ஒருவருக்கொருவர் இடையேயான உறவுகளின் மதிப்பையும் வெளிப்படுத்தும் இவ்விழா, அனைத்து வேறுபாடுகளையும் மறந்து புதிய மனிதர்களாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த புத்தாண்டில் வழக்கமான சவால்களுடன் புதிய சவால்களும் நம் முன் உள்ளன. அவற்றை சரியாக நிர்வகித்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். அத்தகைய சூழ்நிலைகளில் குறுகிய கருத்தியல்களில் ஒட்டிக்கொண்டிருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இதன் உண்மையான பொருளை புரிந்துகொண்டு, கூட்டு முயற்சியின் மூலம் நமக்கு எதிரான சவால்களை வென்று அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த புத்தாண்டிற்கு நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டு, அந்த சவால்களை வென்று அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கிய இந்த பயணத்தில், அனைவரின் உள்ளங்களிலும் துக்கம், கண்ணீர், வலி இல்லாமல் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டிற்காக ஒன்றிணையுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211820
  7. LIVE 30th Match (N), Lucknow, April 14, 2025, Indian Premier League Lucknow Super Giants166/7 Chennai Super Kings(18.1/20 ov, T:167) 154/5 CSK need 13 runs in 11 balls. Current RR: 8.47 • Required RR: 7.09 • Last 5 ov (RR): 42/1 (8.40) Win Probability: CSK 83.13% • LSG 16.87% கிட்ட வந்திட்டாங்கள்...
  8. உவங்களை நம்பி கண்ணை மூடி சென்னையை தெரிவு செய்த நேரம் எதிரணியை தெரிவு செய்திருக்கலாமோ?!!
  9. பந்தை அடிக்காமல் விட்டு மரம் நட்டு சாதனை படைக்குதாம் சென்னை அணி!
  10. யாழிணைய உறவுகளுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.
  11. Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 03:23 PM நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை (14) காலை இடம் பெற்றன. விஜிதாகரன் சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. திங்கட்கிழமை (14) காலை ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , காலை 07 மணிக்கு வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு பூஜை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் 'விசுவாவசு' சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கட்கிழமை (14) காலை முதல் ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. காலை 4:00 மணியளவில் சுப்ரபாதமும், 5 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம், அபிஷேகமும், 6 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும் 6:45 மணி அளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது. அதை தொடர்ந்து 7:30 மணியளவில் கை விசேஷமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் மாவட்டத்தின் பல பாகங்களில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211975
  12. Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 04:49 PM ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். இன்று மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. சுகாதாரம் என்பது சேவையல்ல, அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும். இலவச மருத்துவம் என்ற மக்களின் மனித உரிமையைக் கூட அரசாங்கம் மீறியுள்ளது. இன்று அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இலவச மருத்துவ சேவை காணப்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமையினால் உயிர்காக்கும் மருந்துகளை கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலைக்கு இன்று நாடு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. இன்று நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது . ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வறுமை அதிகரித்து வருகின்றன. மேடைகளில் மக்களுக்காக கோஷங்கள் எழுப்பினாலுர், ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பிரகாரம் செயல்படத் தவறியுள்ளனர். வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வறுமையை அதிகரிக்கச் செய்து, நிவாரணங்களை குறைக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. அரச ஊழியர்களினது சம்பளத்தை ரூ. 20,000 ஆல் அதிகரிப்போம் என சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் சம்பளத்தை அதிகரித்துத் தருவோம் என்றனர். அதுவும் நடந்தபாடில்லை. ஆகவே இந்த அரசாங்கம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகிறது. தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் செய்தது ஒன்றுமில்லை. திறம்பட ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அரசாங்கமானது இன்னும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு தமது இயலாமையை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியாக சரியான பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211999
  13. 14 APR, 2025 | 07:14 AM இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. (FBI) மூலம், கலிஃபோர்னியாவின் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஆணையிலேயே 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என உறுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 268 பேர் கொல்லப்பட்டனர். நுட்பமான நீதிமன்ற சாட்சியங்கள், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எப். பி. ஐ. அறிக்கையில், இலங்கையில் இயங்கிய உள்ளூர் ஐ.எஸ். அமைப்பை சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய விதமும், அந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் திட்டத்தை எப்படி திட்டமிட்டார் என்பதையும் விளக்குகிறது. இந்த அறிக்கை மிக முக்கியமான ஆதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், இலங்கையினால் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை எப்.பி.ஐ. யின் அறிக்கையின் உறுதித்தன்மை சுட்டிக்காட்டுகின்றன. எப். பி. ஐ. அறிக்கையை பார்வையிட https://cdn.virakesari.lk/uploads/medium/file/281832/Easter_Attack_Report_US_District_Court_SLGuardian_Copy-3.pdf https://www.virakesari.lk/article/211972
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 ஏப்ரல் 2025 (தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிபிசி தமிழின் பழைய கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி? தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை. தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்று. பெண் விடுதலை முதல் சாதி ஒழிப்பு வரை - அம்பேத்கர் கூறும் ஜனநாயகத்தின் 3 சக்திகள் எவை?6 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது?14 ஏப்ரல் 2025 இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது. வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது. அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும். ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன. ஒரே ஒரு மரத்திற்காக ரூ.1 கோடியை டெபாசிட் செய்த ரயில்வே - விவசாயிக்கு ஜாக்பாட்7 மணி நேரங்களுக்கு முன்னர் முழுவதும் பெண்களே நிரம்பிய குழு இன்று விண்வெளி பயணம் - இந்த 6 பேரும் யார்? என்ன செய்யப் போகிறார்கள்?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES எப்போதிலிருந்து 'சம்வத்சர' பட்டியல் கடைப்பிடிக்கப்படுகிறது? வட இந்தியாவில் நீண்ட காலமாக இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் 13-14ஆம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த முறை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளர் அ.கா. பெருமாள். "தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 13-14ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்துதான் இந்த பெயர்களைக் குறிப்பிட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தென்காசி கோவிலில் பல இடங்களில் இந்த வருடப் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்த சுழற்சி ஆண்டு முறையையும் இந்தப் பெயர்களையும் தமிழ்நாட்டில் பரவலாக்கியது பாண்டிய மன்னர்கள்தான். சோழமன்னர்களின் கல்வெட்டுகளில் இவை கிடையாது" என்கிறார் அ.கா. பெருமாள். இலக்கியங்களைப் பொறுத்தவரை, இடைக்காடர் எழுதிய வருடாதி வெண்பாவில் இந்த அறுபது ஆண்டுப் பெயர்களும் வருகின்றன. இந்தப் பெயர்களையும் சொல்லி, அந்தந்த ஆண்டுகள் எப்படியிருக்கும் எனப் பாடியிருக்கிறார் இடைக்காடர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் இந்த அறுபது ஆண்டுகளும் வரிசைப்படி காணப்படுவது இந்த வருடாதி வெண்பாவில்தான். "கல்வெட்டுகள், இடைக்காடரின் பாடல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது 14-15ஆம் நூற்றாண்டில் இது பிரபலமாக ஆரம்பித்திருக்கலாம்" என்கிறார் அ.க. பெருமாள். இதே கருத்தையே முன்வைக்கிறார் கல்வெட்டு ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன். "15ஆம் நூற்றாண்டில்தான் இது பிரபலமாகியிருக்க வேண்டும். ராஜராஜசோழனின் கல்வெட்டுகளிலோ, அவனுக்குப் பிந்தைய சோழ மன்னர்கள் கல்வெட்டுகளிலோ இந்த வருடப் பெயர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சியாண்டையும் சக ஆண்டையும்தான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்கிறார் அவர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. "தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார் அவர். ஆனால், இந்த சம்வத்சர முறையிலான பெயர்களை ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தப் பெயர்கள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பவும் அதே பெயர் வருமென்பதால், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம் குறிப்பிட விரும்பும் ஆண்டு எது என்ற குழப்பம் ஏற்படும். 'நானே தலைவர்' - மோதிக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி; பாமகவில் என்ன நடக்கிறது? முழு பின்னணி14 ஏப்ரல் 2025 காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் அ.கா. பெருமாள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலத்தைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சங்க காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. அதற்கு நல்ல உதாரணம், புறநானூற்றின் 229வது பாடல். கூடலூர் கிழார் பாடிய இந்தப் பாடல், கோச்சேரமான் யானைகட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. அவன் குறிப்பிட்ட நாளில் இறப்பான் எனக் கணித்து, அதேபோல அவன் இறந்துவிட கையறு நிலையில் பாடிய பாடல் இது. இந்தப் பாடலின் பல இடங்களில், ராசிகள், நட்சத்திரத்தின் நிலை, மாதத்தின் பெயர் ஆகியவை வருகின்றன. ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz7wz3eggl0o
  15. இந்தப் பண்டிகைக்காலம் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும் - புத்தாண்டு வாழ்த்துசு் செய்தியில் வடக்கு ஆளுநர் 11 APR, 2025 | 05:06 PM 'இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும்' என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும். ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம். சமூகங்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவோம். கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்திருந்த எமது நாடும், மாகாணமும் மீண்டெழுந்து வரும் இந்தத் தருணத்தில் புதிய உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் நாம், எதிர்காலத்தில் சிறப்பான இலக்கை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211818
  16. LIVE 30th Match (N), Lucknow, April 14, 2025, Indian Premier League Lucknow Super Giants 166/7 Chennai Super Kings (11/20 ov, T:167) 87/3 CSK need 80 runs in 54 balls. Current RR: 7.90 • Required RR: 8.88 • Last 5 ov (RR): 28/2 (5.60) Win Probability: CSK 67.50% • LSG 32.50% தொடக்கம் எல்லாம் நல்லாத்தான் தொடங்குது! பினிசிங் சரியில்லையே?!
  17. பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT கட்டுரை தகவல் எழுதியவர், பாக்யஶ்ரீ ராவத் பதவி, பிபிசி செய்தியாளர் 14 ஏப்ரல் 2025, 03:06 GMT 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செம்மரம் ஒன்றுக்காக ரூ. 1 கோடியை மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மத்திய ரயில்வே செலுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ரயில்வே ரூ. 1 கோடியை செலுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயி, இந்த பணத்தில் இருந்து பாதியை அதாவது ரூ. 50 லட்சத்தை எடுத்துக் கொள்ளவும் ஏப்ரல் 9-ஆம் தேதி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. செம்மரம் ஒன்றுக்காக விவசாயி ஒருவர் இழப்பீடு பெற்றது எப்படி? நடந்தது என்ன? இங்கே பார்க்கலாம்! உண்மையில் நடந்தது என்ன? மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ளது கர்ஷி என்ற கிராமம். இங்கே தன்னுடைய ஐந்து மகன்களோடு வாழ்ந்து வருகிறார் விவசாயி கேசவ் ஷிண்டே. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி அன்று செம்மரம் ஒன்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கர்ஷி கிராமத்தில் அவருக்கு 2.29 ஹெக்டர் நிலம் சொந்தமாக உள்ளது. வர்தா - யவத்மால் - புசத் - நந்தெத் ரயில் பாதை அவருடைய நிலத்தின் ஊடாக செல்கிறது. இந்த திட்டத்திற்காக மத்திய ரயில்வே அவருடைய நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்திற்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றார். கையகப்படுத்த வந்த அதிகாரிகளிடம், அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று கேட்டார். அவருடைய நிலத்தில் இருந்த யேனா மற்றும் கருங்காலி மரத்திற்கும், நிலத்திற்கு அடியே இணைக்கப்பட்டுள்ள பைப்புகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஷிண்டே. அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்?27 ஜனவரி 2025 பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செம்மரக்கட்டைகள் அதற்கு அதிகாரிகள், முதலில் செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். வனத்துறை அந்த ஆய்வை நடத்த வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்றையும் அவர்கள் வழங்கியுள்ளனர். கேசவ் ஷிண்டேவின் மகனும் இந்த வழக்கின் மனுதாரருமான பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, அந்த நிலத்தில் இருந்த மா உள்ளிட்ட சில மரங்களுக்கான இழப்பீட்டை ஷிண்டே பெற்றுள்ளார். அங்கே இருந்த கிணறுக்காக ரூ. 8 லட்சம் வரை இழப்பீட்டைப் பெற்றதாக தெரிவிக்கும் பஞ்சாப் ஷிண்டே, செம்மரம் உள்ளிட்ட இதர மரங்களுக்கும், பைப் இணைப்புகளுக்கும் இழப்பீடு அப்போது வழங்கப்படவில்லை என்று கூறுகிறார். இது தொடர்பாக அவர் 2014-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர், ரயில்வே, நீர்பாசனத்துறை உள்ளிட்ட பல துறைகளிடம் மனு கொடுத்திருக்கிறார். "இருப்பினும் எங்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நாங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்றத்தை அணுகினோம்," என்று கூறுகிறார் பஞ்சாப் ஷிண்டே. நேபாளம்: தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்4 ஜூலை 2024 மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்15 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,கேசவ் ஷிண்டே (இடது), அவருடைய மகன் பஞ்சாப் ஷிண்டே (வலது) செம்மரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இழப்பீடு அதிகரிக்குமா? நீதிமன்றத்தை அணுகிய ஒரே வருடத்தில் இழப்பீட்டைப் பெற்றனர் ஷிண்டேவின் குடும்பத்தினர். இருப்பினும் அவருடைய நிலத்தில் இருக்கும் செம்மரத்தின் மதிப்பு இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மரத்தின் மதிப்பு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பாக ரூ. 1 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி பணமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே பிபிசி மராத்தியிடம் தெரிவிக்கிறார். வனத்துறை அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்படும். அதன் பிறகே, நிலத்தில் இருக்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது என்பது முடிவு செய்யப்படும். அதன் மதிப்பைப் பொருத்து மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். பேய் மரம்: விசாகப்பட்டினம் மக்களை இந்த மரம் அஞ்சி நடுங்கச் செய்வது ஏன்?16 டிசம்பர் 2023 மரங்களுக்கு 75 வயதானால் ஓய்வூதியம் - ஹரியாணாவில் வியக்க வைக்கும் திட்டம்6 டிசம்பர் 2023 பட மூலாதாரம்,ISTOCK படக்குறிப்பு,மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் அதன் விலையானது ரூ. 5 கோடி வரை செல்லலாம் என்று என்று ஷிண்டேவின் வழக்கறிஞர் அஞ்சனா ராவத் நர்வதே தெரிவிக்கிறார் மதிப்பீடு செய்வதில் உள்ள சிக்கல் காரணமாகவே இழப்பீட்டை வழங்கவில்லை என்று ரயில்வே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜா சௌபே கூறுகிறார். "உயிருடன், அந்த நிலத்தில் நிற்கும் மரத்தின் மதிப்பை எப்படி ஆய்வு செய்வது? ஆய்வு செய்யாமல் எப்படி இழப்பீட்டை வழங்குவது? இந்த காரணங்களால் தான் இழப்பீட்டை ரயில்வே வழங்கவில்லை. இப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது ரயில்வே. இது செம்மரத்திற்கான இழப்பீடு மட்டுமே," என்று பிபிசி மராத்தியிடம் பேசும் போது அவர் தெரிவித்தார். செம்மரத்தின் விலை தொடராக ஆந்திர பிரதேசத்தில் உள்ளவர்களிடம் பேசியதாக தெரிவிக்கிறார் ஷிண்டே. தனியார் பொறியாளர் ஒருவரை வைத்து செம்மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ததாகவும் அவர் கூறுகிறார். ஷிண்டேவின் கருத்துப்படி, இந்த மரம் ரூ. 4 கோடி 94 லட்சம் மதிப்புடையது. நிலத்தை கையகப்படுத்திய காலம் முதல் இந்த நாள் வரையில், இந்த மதிப்பிற்கான வட்டியையும் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார். நிலத்திற்கு அடியே பதிக்கப்பட்டுள்ள பைப் மற்றும் இதர மரங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என்று ஷிண்டேவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் செம்மரம் இருப்பது தெரியவந்தது எப்படி? கேசவிற்கு இப்போது வயது 94. அவருடைய மகன்கள் அனைவருக்கும் வயது 50-ஐ தாண்டிவிட்டது. அவருடைய குடும்பத்தினர் உதவியுடன்தான் இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் கேசவ். அவருடைய நிலத்தில்தான் ரயில் நிலையம் அமைய உள்ளது என்பதால் அவருடைய பெரும்பான்மை நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவருடைய நிலத்தில் மா மற்றும் இதர மரங்கள் பயிரப்பட்டிருந்தன. ஆனால் அங்கே செம்மரம் ஒன்று இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. ரயில்வே திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் போதுதான் அவர்களுடைய நிலத்தில் செம்மரம் இருந்தது தெரிய வந்தது. ரயில்வே நிர்வாகம் அந்த மரத்தை அடையாளப்படுத்த உதவியது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் ஷிண்டே அளித்த தகவலின் படி, நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பே சில ரயில்வே ஊழியர்கள் வந்து நிலத்தை அளவிட்டுள்ளனர். அவர்கள் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலமாகவே அந்த மரம் செம்மரம் என்பதை ஷிண்டேவின் குடும்பத்தினர் அறிந்துள்ளனர். அவர்களின் நிலத்தில் அப்படி ஒரு மரம் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதை அவர்களால் நம்பவே இயலவில்லை. செம்மரம் உண்மையாகவே பார்க்க எப்படி இருக்கும் என்று அவர்கள் யுடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளனர். பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்: மரங்களின் காவலர் சுபாஷ்6 செப்டெம்பர் 2019 சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தையும் மீறி நடக்கும் கரிமூட்டத் தொழில்28 மார்ச் 2022 பட மூலாதாரம்,BHAGYASHREE RAUT படக்குறிப்பு,மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். இதில் அனுபவம் உள்ள ஆட்களிடம் மரம் குறித்து விசாரித்த போதுதான் இந்த மரம் செம்மரம் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். எனவேதான் நிலம் கையகப்படுத்தப்படும் போது, செம்மரத்திற்கும் இழப்பீடு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். "ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்," என்று ஷிண்டே தெரிவிக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரூ. 1 கோடி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 50 லட்சத்தை எடுக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். தற்போது மரத்தின் மதிப்பை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு முடிந்த பிறகு, செம்மரத்தின் மதிப்பைப் பொறுத்து அதற்கான இழப்பீட்டை ஷிண்டேவின் குடும்பம் பெறும். ரூ. 1 கோடி இழப்பீடு பெறப்பட்டது குறித்து ஷிண்டே கூறியது என்ன? "நாங்கள் எதிர்பார்த்த இழப்பீடு எங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், மரத்தின் மதிப்பு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகு முறையான இழப்பீடு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்று பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார் பஞ்சாப் ஷிண்டே. பஞ்சாப் ஷிண்டே பொதுத்துறையில் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் இந்த வழக்கிற்காக செலவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். தற்போது ஷிண்டேவின் நிலத்தில் ரயில்வே பாதைக்கான பணிகள், வழக்கு காரணமாக தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் பெருகி வரும் குறுங்காடுகள்: பசுமை அதிகரிக்குமா?24 மே 2022 10 கோடி மரங்கள் நடுவதற்காக தேசிய விடுமுறை அறிவித்த நாடு எது தெரியுமா?22 நவம்பர் 2023 செம்மரம் என்றால் என்ன? அதன் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில், சேஷாசலம் மலைத்தொடரில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது தமிழ்நாடு - ஆந்திரபிரதேசம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர், கடப்பா, கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் செம்மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஐந்து லட்சம் சதுர ஹெக்டர் பரப்பில் உள்ள செம்மரங்களின் சராசரி உயரமானது 8 முதல் 11 மீட்டர்கள் ஆகும். இது மிகவும் மெதுவாக வளரக் கூடியது. அதனால்தான் இது மிகவும் அடர்த்தியான மரமாக உள்ளது. சீனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த மரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62z5v9997xo
  18. அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் - புத்தாண்டு வாழ்த்தில் பிரதமர் ஹரிணி 14 APR, 2025 | 06:16 AM வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என தமிழ், சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'வளமான நாடு, அழகான வாழ்க்கை'க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வரும் இவ் வேளையில் மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும் புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம். ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது. எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும் நேர்மறையான மாற்றத்தை அடைந்து கொள்வதற்கு இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது. அண்மைய வரலாற்றில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம். இருப்பினும் ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்துக்கு வழி வகுத்துள்ளன. அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைல் கல்லைக் குறித்து நிற்கிறது. இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும். எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை. புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத் தருணத்தில் அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம். மலரும் இந்த சிங்கள - தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்துக்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்! உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211832
  19. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி 14 APR, 2025 | 06:25 AM 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம். வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும். சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டிற்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலை போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன. இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளை கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும். மேலும், மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும். நாட்டிற்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும் நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும்! என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211727
  20. தோல்வியின் பிடியில் இருந்த மும்பையை காப்பாற்றிய அபூர்வ நிகழ்வு - அந்த 3 பந்துகளில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குல்தீப் யாதவ் ரன்அவுட் ஆன காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 13) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்து 12 ரன்களில் தோற்றது. மும்பை அணியின் தோல்வி நிச்சயமாகிவிட்டதாக ரசிகர்கள் கருதிய போதுதான் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. நேரிலும், நேரலையிலும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்புக்கு மாறாக, மூன்றே பந்துகளில் டெல்லியிடம் இருந்து வெற்றியை மும்பை அணி பறித்தது. மேற்கு வங்கத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து டிரம்ப் விலக்கு அளித்தது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் ரோஹித் மீண்டும் ஏமாற்றம், கைகொடுத்த திலக் வர்மா மும்பை அணிக்கு 5வது போட்டியிலும் ரோஹித் சர்மா(18) நல்ல தொடக்கத்தை இந்த ஆட்டத்திலும் வழங்கவில்லை. பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 2வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டன்(41), சூர்யகுமார்(40) ஆகியோர் 38 ரன்கள் சேர்த்தனர். 3வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி 60 ரன்கள் சேர்தது நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஹர்திக் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 6 பந்துகள் இடைவெளியில் ஹர்திக், சூர்யகுமாரின் விக்கெட்டுகள் போனதால் மும்பை சற்று தடுமாறியது நமன்திர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணியில் திலக் வர்மா அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி கடைசி நேரத்தில் 33 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஸ்கோர் 200 ரன்களைக் கடக்க உதவினர். திலக் வர்மாவைப் பொருத்தவரை இதுவரை மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் 5 அரைசதங்களை விளாசியிருந்தார் ஆனால் ஒருமுறைகூட மும்பை அணி வென்றதில்லை. இந்த முறைதான் திலக் வர்மா அரைசதம் அடித்து மும்பை அணி வென்றுள்ளது. டெல்லி அணியின் ரி்ஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், விப்ராஜ் நிகம் 8 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES 7ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய கருண் நாயர், 3 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் நேற்று ஆடினார். ஏறக்குறைய 7ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் நேற்று அரைசதம் அடித்தார். அதிரடி ஆட்டம் ஆடிய கருண் நாயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் என 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அசுரத்தனமான ஃபார்மில் இருந்த கருண் நாயர் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கருண் நாயர் இதுபோன்று அதிரடியாக ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மும்பை அணியில் பும்ரா, ஹர்திக், சான்ட்னர் என யார் பந்துவீசினாலும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் கருண் நாயர் பேட்டிலிருந்து பறந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் பந்துவீச்சையும் விளாசிய கருண் நாயர் பவர்ப்ளேயில் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் களத்தில் இருந்த வரை டெல்லி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. டெல்லி அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட் இழப்புக்கு 72 ரன்களும், 9வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் போரெல், கருண் நாயர் 100 ரன்கள் சேர்த்தனர். சதத்தை நோக்கி நகர்ந்த கருண் நாயர் 89 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகினார். 119 ரன்கள்வரை டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் வெற்றிக்கு 86 ரன்கள்தான் தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த 26 ரன்களுக்குள் அபிஷேக் போரெல், கருண் நாயர், அக்ஸர் படேல், ஸ்டெப்ஸ் ஆகியோரின் விக்கெட்டை இழக்கவே ஆட்டம் தலைகீழானது. டெல்லி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தங்கத்தில் முதலீடு செய்வது உண்மையாகவே பாதுகாப்பானதா?13 ஏப்ரல் 2025 இந்திய ராணுவத்தை வழி நடத்திய 'செங்கல்பட்டு' ஜெனரல் சுந்தர்ஜி- ஆபரேஷன் புளூஸ்டாரில் நடந்தது என்ன?13 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 3 பந்துகள் 18-வது ஓவர்கள் முடிவில் டெல்லி வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா ஸ்டார்க் களத்தில் இருந்தனர். இதுபோன்ற சூழலில் பலமுறை அசுதோஷ் சர்மா ஆட்டத்தை வென்று கொடுத்ததால் நம்பிக்கை இருந்தது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அசுதோஷ் அடிக்கவே, வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன. பும்ரா வீசிய 4வது பந்தில் அசுதோஷ் 17 ரன்னில் ஜேக்ஸால் ரன்அவுட் ஆகினார், அடுத்துவந்த குல்தீப் யாதவ் ராஜ்பாவாவால் ரன் அவுட் ஆகினார், கடைசி விக்கெட்டுக்கு வந்த மோகித் சர்மா சான்ட்னரால் ரன்அவுட் ஆகவே மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி கைகளில் இருந்த ஆட்டம், வெற்றி வாய்ப்பு மூன்றே பந்துகளில் மும்பை அணியின் கரங்களுக்கு மாறியது எப்படி? என்பது அவர்களுக்கே புரியவில்லை. மாயாஜால வித்தை போன்று 3 பந்துகளில் ஒட்டுமொத்த ஆட்டத்தின் முடிவும் தலைகீழாக மாறியது ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 3 பந்துகளில் 3 ரன்அவுட் நடந்தது இதுதான் முதல்முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பனிப்பொழிவு இருந்தால் 11வது ஓவர் முடிந்தபின் பந்தை மாற்றும் விதி அறிமுகமானது. இது டெல்லி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 11வது ஓவர் முடிந்தபின் பனிப்பொழிவை ஆய்வு செய்து நடுவர்கள் பந்தின் தன்மையையும் ஆய்வு செய்து புதிய பந்து அறிமுகப்படுத்தினர். புதிய பந்து மும்பைக்கு கிடைத்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. அடுத்த 4 ஓவர்களில் டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கருண் நாயர், அக்ஸர் படேல் (9), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(1), கே.எல். ராகுல் (15) என 12வது ஓவரில் இருந்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை டெல்லி இழந்தது. 24 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம் களத்தில் இருந்தனர். அசுதோஷ் இருந்ததால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது. 17-வது ஓவரை வீசிய டிரன்ட் போல்ட் 5 யார்கறை வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டு 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் விப்ராஜ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி அவுட் ஆகினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 200 ரன்களும் வெற்றியும் மும்பை அணியும், டெல்லி அணியும் 200 ரன்களை அடித்தவிட்டால் அதை இந்த ஆட்டம் வரை டிபென்ட் செய்து வெற்றி பெறும் வரலாற்றை தக்கவைத்துள்ளன. மும்பை அணி 15 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அனைத்திலும் வென்றுள்ளது. அதேபோல டெல்லி அணியும் 13 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்து அதை வெற்றிகரமாக டிபெண்ட் செய்து வென்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டம் 18-வது ஓவர் வரை டெல்லியின் பக்கம்தான் இருந்தது. பும்ரா வீசிய 19 வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறி ஒரே ஓவரில் ஹாட்ரிக் ரன்அவுட் நடந்து, டெல்லியின் வெற்றி 3 பந்துகளில் மும்பைக்கு கைமாறியது. மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மும்பை அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில் 2வது வெற்றியைப் பெற்று, 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. டெல்லிகேபிடல்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எங்கே தோற்றோம் எனப் புரியவில்லை" தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் " ஆட்டம் எப்படி முடிந்தது, எந்த இடத்தில் தோற்றோம் என்று எங்களுக்கே புரியவில்லை. ஆட்டம் எங்களிடம் இருந்ததுஎப்படி மும்பை கரங்களுக்கு மாறியது, வென்று என்பது பிரமிப்பாக இருக்கிறது. நடுப்பகுதியில் பல விக்கெட்டுகளை சாப்ட் டிஸ்மிசல்களில் இழந்தது தோல்விக்கான காரணமாக இருக்கலாம். 12 ரன்னில் தோற்றுள்ளோம், ஒரு ஓவர்வரை மிச்சம் இருந்ததால் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். டெய்லெண்டர் பேட்டர்கள் சேஸிங்கின்போது ஒவ்வொரு முறையும் அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு. சில நேரங்களில் தவறான ஷாட்களும், தவறான முடிவைக் கொடுக்கும். ஆடுகளம் சேஸிங்கிற்கு ஏற்றதாக இருந்தது, பனிப்பொழிவு இருந்து புதிய மாற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எங்கள் சுழற்பந்துவீச்சு திருப்தியாக இருக்கிறது, பவர்ப்ளேயில் 2 பேர் வரை பந்துவீசுகிறோம். குல்தீப் இந்த சீசனில் மிரட்டலாக பந்துவீசுகிரார். விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் குல்தீப்பை அழைத்தால் விக்கெட் கிடைக்கிறது. இந்த ஆட்டத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் இருந்தன, தோல்வியை மறந்துவிட்டு நகர்கிறோம்" எனத் தெரிவித்தார். ஜெர்மனியில் 68வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான கொரில்லா13 ஏப்ரல் 2025 மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?12 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டங்கள் லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்: லக்னெள நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நாள் - ஏப்ரல் 17 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-349 ரன்கள்(6 போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்) பரப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) ஷர்துல் தாக்கூர் (லக்னெள) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்) 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crm3vgvjwlvo
  21. இரண்டு அவிச்ச முட்டை இரவு சாப்பிட்டதிற்கும் இன்றைய போட்டிகளில் முட்டைகள் வாங்குவதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமா?! சுவி அண்ணை 38 புள்ளிகளோட முன்னிலை....
  22. பட மூலாதாரம்,HAPPER COLLINS படக்குறிப்பு,ஜெனரல் கே சுந்தர்ஜி கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் முகர்ஜி, பானர்ஜி அல்லது சாட்டர்ஜி போல சுந்தர்ஜி பெங்காலியா அல்லது ஃபிரோஜி அல்லது ஜாம்ஷெட்ஜி போல பார்ஸியா என்று மக்கள் அடிக்கடி கேட்பார்கள். சிலர் அவரை ஒரு சிந்தி என்றும் கருதினர். ஜெனரல் சுந்தர்ஜியின் மனைவி வாணி சுந்தர்ஜி தனது 'எ மேன் கால்ட் சுந்தர்ஜி' என்ற கட்டுரையில், "உங்கள் பெற்றோர் இருவரும் தமிழர்கள். ஆனாலும் உங்களுக்கு சுந்தர்ஜி என்ற பெயர் எப்படி வந்தது என்று எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில் நான் அவரிடம் கேட்டேன்," என்று எழுதியுள்ளார். "எனக்கு மூன்று வயதாக இருந்தபோது என் பெற்றோர் காந்திஜியை பற்றி அடிக்கடி பேசுவதை நான் கேட்பேன். ஒரு நாள் நான் என் தந்தையிடம், நீங்கள் எந்த காந்திஜியை பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். மகாத்மா காந்தி ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரை கௌரவிக்கும் விதமாக நாம் அவரது பெயருடன் 'ஜி'யை சேர்க்கிறோம் என்று என் தந்தை பதிலளித்தார். அன்று முதல் என்னையும் சுந்தர்ஜி என்று அழைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். என் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார் என்று அவர் பதில் சொன்னார்," என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டில்கூட அவரது பெயர் கிருஷ்ணசாமி சுந்தர்ஜி என்று பதிவு செய்யப்பட்டது. அவரது ஊழியர்களும் சகோதரர்களும் அவரது பெயருடன் 'ஜி'ஐ சேர்க்கத் தொடங்கினர். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த சிங்கப்பூர் நீதிமன்றம் – என்ன விவகாரம்?12 ஏப்ரல் 2025 அதிமுக - பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்12 ஏப்ரல் 2025 களைப்பில் போர்க் களத்திலேயே உறங்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,72 மணிநேர தொடர்ச்சியான தாக்குதலுக்குப் பிறகு களைப்படைந்த சுந்தர்ஜி போர்க்களத்திலேயே தூங்கிவிட்டார். பெயரைப் போலவே மற்ற விஷயங்களிலும் சுந்தர்ஜி வித்தியாசமானவராக இருந்தார். ஒருமுறை டேராடூனில் உள்ள அதிகாரிகள் உணவகத்தில் ஒரு ராணுவ கேப்டன் அவரிடம் ஓடி வந்து, "சார், நாங்கள் உங்களுக்காக முழு சைவ உணவைத் தயார் செய்துள்ளோம்" என்றார். "என் இளம் நண்பரே, நான் மாட்டிறைச்சி உண்ணும் பிராமணன். எனக்கு சுவை பிடித்திருந்தால் நகரும், நீந்தும், ஊர்ந்து செல்லும் அனைத்தையும் நான் சாப்பிடுவேன்," என்று சுந்தர்ஜி பதிலளித்தார். தனது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் உயிரியலில் ஹானர்ஸ் படிக்கத் தொடங்கினார். ஆனால் படிப்பின் பாதியிலேயே ராணுவத்தில் சேர முடிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. அவர் தனது வாழ்க்கையில் ஐந்து போர்களில் பங்கு கொண்டுள்ளார். அவர் மேஜராக இருந்தபோது ஐ.நா படைகளின் சார்பாகப் போரிட காங்கோவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே கடுமையான சண்டை நடந்தது. ஒருமுறை 72 மணிநேரம் தொடர்ந்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சாப்பிடாமலும் தூங்காமலும் ஈடுபட்ட சுந்தர்ஜி மிகவும் சோர்வடைந்ததால் தாக்குதலின் நடுவே இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டார். "அவரது பிகாரி உதவியாளர் லட்சுமண் அவரைப் பதுங்கு குழிக்குள் இழுக்க முயன்றார். ஆனால் சுந்தர்ஜி அவரை நோக்கி கோபமாக 'F…off' (இங்கிருந்து செல்) என்று கத்தினார். 24 மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோதுதான் போர்க்களத்தில் இருப்பதையே அவர் உணர்ந்தார். அவரைச் சுற்றி 36 மோர்டார் குண்டுகள் கிடந்தன. அவர் அவற்றைக் கவனமாக எண்ணினார். ஆனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்குப் பிறகும் அவருக்கு ஒரு கீறல்கூட ஏற்படவில்லை" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது அதே லட்சுமண் அவருக்காக வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யைக் கொண்டு வந்தார். காங்கோ நாட்களை நினைவுகூர்ந்த சுந்தர்ஜி தனது முன்னாள் உதவியாளரிடம், "அன்று என்னைப் போர்க்களத்தில் தூங்க விட்டுவிட்டு ஏன் சென்றுவிட்டீர்கள்?" என்று நகைச்சுவையாகக் கேட்டார். "நீங்கள் என்னைத் திட்டினீர்கள். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் சென்றுவிட்டேன்" என்று லட்சுமண் பதில் அளித்தார். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு ஜப்பான் தவிர, அமெரிக்க அணுகுண்டுகள் விழுந்த இன்னொரு நாடு எது தெரியுமா? என்ன நடந்தது? 1998 முதல் 2025 வரை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக 'இயல்பான' கூட்டணி கடந்து வந்த வரலாறு பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேஜர் ஜெனரல் கே.எஸ்.பிரார், ஜெனரல் ஏ.எஸ். வைத்யா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சுந்தர்ஜி (நடுவில்), ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது... கடந்த 1928ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்த கிருஷ்ணசாமி சுந்தர்ஜி, 1945ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வடமேற்கு எல்லைப் பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார். கடந்த 1971 போரின்போது அவர் வங்கதேச போரின் முன்வரிசையில் இருந்தார். 1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் பொற்கோவிலில் இருந்த ஆயுதமேந்தியவர்களை விரட்டியடிக்க மேற்கொள்ளப்பட்ட, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு சுந்தர்ஜி தலைமை வகித்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ஜெனரல் சுந்தர்ஜி மேற்கு கமாண்டின் தலைவராக இருந்தார். 1984 ஜூன் 3ஆம் தேதியன்று இந்திரா காந்தி அவரை டெல்லிக்கு அழைத்தார். அன்றிரவு அவர் இந்திரா காந்தியுடன் தனியாக ஒரு மணிநேரம் பேசினார். இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம், 'இது எனக்கான மிகப்பெரிய சோதனை' என்றார். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். அவருடைய சிரிப்பு மறைந்துவிட்டது. இது குறித்து அவரது மனைவி தனது கவலையை வெளிப்படுத்தியபோது, 'நான் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவேன்' என்று கூறினார். ஆனால் அவரால் அதிலிருந்து ஒருபோதும் மீள முடியவில்லை. "எதிரியை எதிர்த்துப் போராடவே எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. என் சொந்த மக்களை எதிர்ப்பதற்கு அல்ல என்று அவர் அடிக்கடி கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். மக்கள் உண்மையை அறியும் வகையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் அனுபவங்களைப் பற்றி எழுதுமாறு பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் அவரைக் கேட்டுக் கொண்டார். தனது ஓய்வு நேரத்தில் அது பற்றி எழுதுவதாக அவர் கூறினார். ஆனால் அந்த நேரம் ஒருபோதும் வரவில்லை. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தனது 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தி ட்ரூ ஸ்டோரி' என்ற புத்தகத்தில் "நாங்கள் பொற்கோவிலுக்குள் நுழைந்தது கோபத்துடன் அல்ல, சோகத்துடன். உள்ளே நுழையும்போது எங்கள் உதடுகளில் பிரார்த்தனையும், எங்கள் இதயங்களில் பணிவும் இருந்தது. அந்த நேரத்தில் வெற்றி, தோல்வி என்ற எண்ணமோ, வெகுமதிக்கான விருப்பமோ எங்களுக்கு இருக்கவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகவே அதை நாங்கள் கருதினோம்" என்று ஜெனரல் சுந்தர்ஜி கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆபரேஷன் பிராஸ்டாக்ஸின் கதை பட மூலாதாரம்,WWW.BHARATRAKSHAK.COM படக்குறிப்பு,ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ் காரணமாக பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்தது ஜெனரல் சுந்தர்ஜியின் பெயருடன் தொடர்புடைய மற்றொரு நடவடிக்கை 'ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்'. இந்தியாவின் போர் தயார்நிலையைச் சோதிப்பதற்காக இந்தப் பயிற்சி 1986 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்தில் தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது இருந்தது. இந்த அளவிலான ராணுவப் பயிற்சி இதற்கு முன்பு ஆசியாவில் நடத்தப்பட்டதில்லை. போர் சூழ்நிலையில் எல்லா ராணுவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் சோதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர்ஜி விரும்பினார். இந்தப் பயிற்சியில் ராணுவத்தின் பெரும் பகுதியினர் ஈடுபட்டனர். இந்தியா தன்னைத் தாக்க நினைக்கிறது என்று பாகிஸ்தான் தவறாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி மிகவும் தீவிரமாக இருந்தது. பாகிஸ்தான் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து அவர்களைப் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டது. இந்தப் பயிற்சி காரணமாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங்கின் துறை மாற்றப்பட்டது. "ஒருமுறை நாங்கள் ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றபோது ராஜீவ் காந்தி என்னிடம் 'நட்வர், நாம் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கப் போகிறோமா?" என்று கேட்டார்," என்று 'ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப்' என்ற தனது சுயசரிதையில் நட்வர் சிங் எழுதுகிறார். இந்தப் பயிற்சிக்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அருண் சிங் அளித்திருந்தார். இது குறித்து ராஜீவ் காந்திக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை ராஜீவ் காந்தி நட்வர் சிங் மற்றும் நாராயண் தத் திவாரியிடம், 'பாதுகாப்புத் துறை இணை அமைச்சரை நான் என்ன செய்வது' என்று கேட்டார். "அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன். இதற்கு ராஜீவ் 'அருண் சிங் என் நண்பர்' என்று கூறினார். இதற்கு நான், 'நீங்கள் டூன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ல. நீங்கள் இந்தியாவின் பிரதமர். பிரதமர்களுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்று சொன்னேன்," என்று நட்வர் சிங் குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அருண் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார். இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 'ஸ்காலர் ஜெனரல்' என்று பெயர் பெற்ற ஜெனரல் சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய ராணுவம் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஜெனரல் சுந்தர்ஜி பரிந்துரைத்தார். இந்த ஆபரேஷனின்போது ஒரு விஷயம் ஒருபோதும் நிற்கவில்லை. ஜெனரல் ஜியா, ஜெனரல் சுந்தர்ஜிக்கு மாம்பழங்கள் மற்றும் கின்னு டேஞ்சரின் பழங்கள் நிரம்பிய பெரிய கூடைகளைத் தொடர்ந்து அனுப்பி வந்தார். "அந்தப் பழக்கூடைகளில் 'ஜெனரல் சுந்தர்ஜிக்கு வாழ்த்துகள். நீங்கள் இவற்றை ரசித்து உண்பீர்கள் என்று நம்புகிறேன். ஜியா" என்று ஜெனரல் ஜியா எழுதிய குறிப்பு இருக்கும்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். ஜெனரல் ஜியா விமான விபத்தில் இறக்கும் வரை இந்த பழக் கூடைகள் சுந்தர்ஜிக்கு வந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க பரிந்துரைத்ததற்காக ஜெனரல் சுந்தர்ஜி நினைவுகூரப்படுகிறார். ஜெனரல் சுந்தர்ஜியை 'ஸ்காலர் ஜெனரல்' என்றும் அழைப்பார்கள். அவர் 'அணுசக்திக் கோட்பாட்டை' வகுத்தார். அதைப் பின்பற்றி இந்தியா 1998 அணுஆயுத சோதனைக்குப் பிறகு 'முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை' என்று அறிவித்தது. 'தி பிரின்ட்' இதழில் வெளியான 'General Sundarji gave China strategy four decades ago' என்ற தனது கட்டுரையில் ஜெனரல் ஹெச்.எஸ். பனாக், "இந்திய ராணுவத்தில் வேறு எந்த ஜெனரலுக்கும் இவ்வளவு அறிவுசார் ஆழம், செயல் உத்திக் கண்ணோட்டம் மற்றும் அமைப்பை மாற்றியமைக்கும் திறன் இல்லை என்பதை அவரது மோசமான விமர்சகர்கள்கூட ஒப்புக்கொண்டனர். தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாத கால பதவிக் காலத்தில் அவர் இந்திய ராணுவத்தை 21ஆம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்தார்," என்று குறிப்பிட்டுள்ளார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 அக்பரை பின்பற்றுமாறு ஔரங்கசீப்பை அறிவுறுத்திய சிவாஜி - ஒரு வரலாற்றுப் பார்வை23 மார்ச் 2025 'விஷன் 2000' வரைவை உருவாக்கிய சுந்தர்ஜி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவின் பாடலை பண்டிட் ரவிசங்கர் இயற்றினார். ஜெனரல் சுந்தர்ஜி 'பகட்டானவர்' என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பற்றிய இந்தக் கருத்து நியாயமானதல்ல என்று அவரது மனைவி கருதுகிறார். சுந்தர்ஜியிடம் குழந்தைத்தனமான எளிமையும் நேர்மையும் தெரிந்தன என்று அவர் குறிப்பிடுகிறார். "அவர் ஸ்டைலாக வாழ விரும்பினார். அவர் பெரும்பாலும் சீருடை அல்லாத உடைகளில் காணப்பட்டார். அவர் பைப் புகைப்பார். அதன் தண்டைப் பயன்படுத்தி சுவரில் உள்ள வரைபடங்களை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு விளக்குவார். இடையிடையே பைப்பில் இருந்து ஒரு பஃப் அல்லது இரண்டு பஃப் உள்ளிழுப்பார். அவரது மனதில் புதிய யோசனைகள் எப்போதும் பிறந்து கொண்டே இருக்கும்" என்று வாணி சுந்தர்ஜி கூறுகிறார். அந்த நேரத்தில் அவர் மனதளவில் 21ஆம் நூற்றாண்டை ஏற்கனவே அடைந்திருந்தார். 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய ராணுவத்தின் உத்தி மிக விரிவாக விளக்கப்பட்ட 'விஷன் 2000' என்ற வரைவை அவர் தயாரித்தார். அணுசக்தி விவகாரங்கள் குறித்த அவரது கருத்துகள் நன்கு அறியப்பட்டவை. அதைப் பற்றியும் அவர் நிறைய எழுதியிருந்தார். அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. "லியோனார்டோ டா வின்சி மற்றும் செங்கிஸ் கானை சுந்தர்ஜிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய, மேற்கத்திய, பாரம்பரிய, நாட்டுப்புற இசை என அனைத்து வகையான இசையையும் அவர் விரும்பினார். இரவு முதல் விடியல் வரை ரவிசங்கரின் இசை நிகழ்ச்சிகளில் நாங்கள் அமர்ந்திருப்போம். அவர் எங்கள் நாற்பது ஆண்டுக்கால நண்பர்" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். சுந்தர்ஜியின் வேண்டுகோளின் பேரில் மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி படைப் பிரிவுக்காக ரவிசங்கர் ஒரு பாடலை இயற்றினார். அவர் அடிக்கடி பிரபல விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் வீட்டிற்குச் சென்று அவர் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். வேலை செய்யும்போது சுந்தர்ஜி அடிக்கடி பிஸ்மில்லா கான், யெஹுதி மெனுஹின், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் இசையைக் கேட்பார். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள் அமைத்த 'பெருவழிகள்' பற்றி தெரியுமா?17 மார்ச் 2025 பலுசிஸ்தான் இந்தியாவுடன் சேர விரும்பிய போது நேரு நிராகரித்தாரா? பாகிஸ்தான் என்ன செய்தது?16 மார்ச் 2025 வானியல் மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பறவைகளைப் பார்த்து ரசிக்க ஜெனரல் சுந்தர்ஜி இரண்டு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். சுந்தர்ஜி எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஒவ்வொரு விஷயம் பற்றிய அவரது அறிவு மேலோட்டமாக இல்லாமல் ஆழமானதாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு ஒருமுறை அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது சீன மொழியைக் கற்றுக்கொள்ள இரண்டு புத்தகங்களை அவர் வாங்கினார். 60 வயதைக் கடந்த அவர் சீன மொழியை சரளமாகப் பேசத் தொடங்கினார். "அவர் என்னிடமிருந்து இரண்டு விஷயங்களை கற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்று வானியலில் ஆர்வம். என் தந்தை ஆறு வயதில் இருந்தே கோள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காட்ட என்னை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்வார். சுந்தர்ஜி எனக்காக வானியல் பற்றிய சில புத்தகங்களைக் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவருக்கும் இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது" என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். "இரண்டாவது விஷயம் பறவைகள் மீதான ஆர்வம். என்னைப் பார்த்து உத்வேகம் பெற்ற அவர் இந்த விஷயத்தில் சாலிம் அலி மற்றும் டிலான் ரிப்லி எழுதிய பல புத்தகங்களை வாங்கினார். பறவைகளைப் பார்த்து ரசிக்க இரண்டு சக்திவாய்ந்த தொலைநோக்கிகளையும் வாங்கினார். மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது மீன்பிடிக் கருவியும், 12 Bore துப்பாக்கியும் இன்னும் என்னிடம் உள்ளன" என்று வாணி சுந்தர்ஜி குறிப்பிடுகிறார். சுந்தர்ஜியின் ஒவ்வொரு வேலையிலும் வேகம் இருந்தது. அவர் மிக வேகமாக நடப்பார். உடன் நடப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அவர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்தார். முகலாய பேரரசர் ஔரங்கசீப் மகராஷ்டிராவில் மிகவும் எளிய கல்லறையில் புதைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி13 மார்ச் 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி பீரங்கியும் ஓட்டுவார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் செல்ல கவச வாகனத்தைத் தயார் செய்யும் ஓர் இந்திய ராணுவ வீரர். சுந்தர்ஜிக்கு வாகனங்களை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பீரங்கிகள், ஏபிசிகள் (Armored personnel carrier) மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வரை அனைத்தையும் அவரால் ஓட்ட முடியும். அவர் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளன்று அவரது முன்னாள் ADC ஒரு மோட்டார் சைக்கிளில் அவரைச் சந்திக்க வந்தார். "அப்போது டெல்லியில் உள்ள இன்ஸ்பெக்‌ஷன் பங்களாவின் வராண்டாவில் நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். சுந்தர்ஜி மோட்டார் சைக்கிளைப் பார்த்தவுடன் "என்னுடன் வா" என்றார். நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தோம். அந்த நேரத்தில் சுந்தர்ஜி குர்தா பைஜாமா அணிந்திருந்தார், நான் இரவு உடையில் இருந்தேன். அடுத்த அரை மணிநேரத்திற்கு அவர் மோட்டார் சைக்கிளில் கன்டோன்மென்ட் முழுவதும் சுற்றினார்" என்று வாணி சுந்தர்ஜி நினைவு கூர்ந்தார். ஒருமுறை அவர் பாலைவனத்தின் 44 டிகிரி வெப்பத்தில் APCஐ ஓட்டினார். சிறிது நேரத்திற்குள் அவரது தோழர்கள் பலர் வெப்பத்தால் துவண்டு போனார்கள். ஆனால் 51 வயதான லெப்டினன்ட் ஜெனரல் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு வாகனத்தை தொடர்ந்து ஓட்டினார். "சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராணுவ தளபதியானபோது நாங்கள் ஒன்றாக பபீனா என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கு பல பீரங்கிகள் வரிசையாக நிற்பதை அவர் கண்டார். உடனடியாக அருகிலுள்ள ஒரு டாங்கின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவர் உடன் அமரும்படி என்னையும் அழைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் முழு வேகத்தில் பீரங்கியை ஓட்டினார்" என்று வாணி நினைவு கூர்ந்தார். ஆப்ரகாம் லிங்கனின் மனைவியை சூழ்ந்த சர்ச்சைகள், விமர்சனங்கள் - ஓர் வரலாற்று பார்வை17 பிப்ரவரி 2025 திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?7 பிப்ரவரி 2025 'மோட்டார் நியூரான் நோயால்' அவதிப்பட்டார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெனரல் சுந்தர்ஜி, இந்தியாவின் 'அணுசக்திக் கோட்பாட்டை' உருவாக்கினார் அவர் பாகிஸ்தானுக்கு சென்றபோது, அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஆசிப் நவாஸ் ஜன்ஜுவாவின் விருந்தினராக இருந்தார். இஸ்லாமாபாத், பெஷாவர், கைபர் கணவாய் ஆகிய இடங்களுக்கு சுந்தர்ஜி சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் 50 மீட்டர் உள்ளே சென்றார். இதன் பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம் தக்ஷசீலா, மொஹஞ்சதாரோ மற்றும் லாகூருக்கும் பயணம் மேற்கொண்டார். ஜெனரல் சுந்தர்ஜி 'மோட்டார் நியூரான் நோயால்' பாதிக்கப்பட்டிருப்பதை 1998 ஜனவரி 10ஆம் தேதி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள மோட்டார் நியூரான்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் நோய். இது தசை பலவீனத்தையும் இறுதியில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். இந்த நோயைப் பற்றி ஜெனரல் சுந்தர்ஜியிடம் சொல்வதற்கு மருத்துவர்கள் சிறிது தயங்கினர். ஆனால் விரைவில் அவர் இந்த நோயைப் பற்றிய அனைத்தையும் இணையம் மூலம் கண்டுபிடித்தார். உயிர் காக்கும் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்வாழ அவர் விரும்பவில்லை. அவர் தனது மருத்துவர்களிடம் கருணைக் கொலை பற்றிய கேள்விகளைக் கேட்டார். மார்ச் 28ஆம் தேதிக்குள் அவர் உயிர்காக்கும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த நிலையிலும்கூட அவர் தனது மனைவிக்கு 'ப்ளீஸ் லெட் மீ கோ' (அதாவது தயவுசெய்து என்னைப் போக விடு) என்று நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு குறிப்பை எழுதினார். "வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை அவர் முழு சுயநினைவுடன் இருந்தார். தனது கண்கள் மூலம் என்னிடமும், மருத்துவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு போக்ரான் அணு ஆயுத சோதனை பற்றிச் சொன்னேன். அந்த நிலையிலும் அவர் தினமும் மூன்று நாளிதழ்களைப் படிப்பார். பெரிய தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் பார்ப்பார்," என்று வாணி சுந்தர்ஜி எழுதுகிறார். நோய் கண்டறியப்பட்ட பிறகு 'ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம்' அவர் உயிருடன் இருந்தார். கடந்த 1999 பிப்ரவரி 8ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vnr5zlnnzo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.