Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது. 'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் என்ன நடக்கும்? பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வதில் சிக்கல் உள்ளதா? ஆளுநரின் செயலும் தமிழ்நாடு அரசின் முறையீடும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. தீர்ப்பில் என்ன உள்ளது? இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது" எனக் கூறினர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசு வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "அதன்பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல" எனக் கூறினர். இந்த வழக்கின் போது ஆளுநரின் அதிகாரத்தை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக, அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. பங்குச் சந்தைக்கும் உங்கள் பதவி உயர்வுக்கும் என்ன தொடர்பு? - நீங்கள் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தீர்ப்பில், 'ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் (Veto) என்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்' என நீதிபதி ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதாகவும் தீர்ப்பில் ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார். "மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ் அவருக்கு என எந்த தனிப்பட்ட விருப்புரிமையும் இல்லை" என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'ஒரு மசோதா கிடைத்ததும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதைப் பற்றி மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் கூறியுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரலாற்றில் உயர்சாதி அல்லாத பொதுச்செயலாளர் - எம்.ஏ.பேபிக்கு காத்திருக்கும் சவால்கள்38 நிமிடங்களுக்கு முன்னர் ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் தொடர்வாரா? பட மூலாதாரம்,P WILSON உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், "பல்கலைக் கழகங்கள் மீது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர் நியமனம், தேர்வுக் குழு ஆகியவற்றில் அவரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்கலைக் கழகங்களில் இருந்து வேந்தர் என்ற பதவியை நீக்குவது தொடர்பானது அல்ல எனவும் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பின் போது இதையே குறிப்பிட்ட வில்சன், "பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளையும் தடுத்து வந்தார். அவர் வேந்தராக நீடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மாநில அரசு கூறும் நபரை வேந்தராக நியமிக்க வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது" எனக் கூறினார். '60 வயதில் 16 வயதைப் போல் உணருகிறேன்' - சர்வதேச கால்பந்தில் கலக்கும் மூதாட்டிகள்8 ஏப்ரல் 2025 ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால்8 ஏப்ரல் 2025 "இது பல்கலைக்கழகங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கிறார். பிற பல்கலைக்கழங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். அதிகாரத்தை முதலமைச்சர் எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படும்" என்கிறார். 'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் வரலாம்' "துணைவேந்தர் தேடுதல் குழுவில் (Search committee) பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து விதிகளை மீறி துணைவேந்தர்கள் நியமனங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் மீறப்படும் போது, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை நிறுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். "மசோதாக்களில் சட்டமீறல் உள்ளதா என்பதை ஆளுநர் ஆராய்வதற்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரை நீக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதைப் போல இந்த தீர்ப்பு உள்ளது" என ராமமூர்த்தி தெரிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். இனி ஆளுநர் செயல்பாட்டில் என்ன மாற்றம் இருக்கும்? - உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன பலன்? 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி 'திராவிட ஒவ்வாமை' அணுகுமுறையை கடைபிடிக்கிறாரா? 'திராவிடம்' இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன? "குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" பட மூலாதாரம்,TARASU SHYAM படக்குறிப்பு,தராசு ஷ்யாம் அதேநேரம், தீர்ப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது பிரதான கேள்வி" எனக் கூறுகிறார் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " இந்த தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவதுபோல இந்த உத்தரவு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்வது தான் சரியானதாக இருக்கும் எனக் கூறிய ஷ்யாம், "அரசியல் சாசனத்தை மதிக்காத ஒருவரை எவ்வாறு தொடர அனுமதிக்கிறீர்கள் எனக் குடியரசுத் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்பதாக இந்த தீர்ப்பை பார்க்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார். ஆளுநர் தனக்கு அனுப்பும் சட்ட முன்வடிவை எவ்வளவு நாள் தாமதிக்கலாம் என்றும் அவ்வாறு தாமதித்தால் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் கூறுவதாகவும் ஷ்யாம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn05jv95v8qo
  2. 09 APR, 2025 | 02:08 PM இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார். இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது உடன்படிக்கையில் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதா என்பதை எதிர்கட்சிகள் நிரூபிக்கவேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்தைய விஜயத்தின் போது செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை உடனடியாக பொதுமக்களிற்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்த உடன்படிக்கைகள் இரண்டு நாட்டிற்கும் நன்மை பயக்ககூடியவை என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவின் பல திட்டங்களிற்கு ஜேவிபி எதிர்ப்பு வெளியிட்டதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் இந்திய இராணுவம் இலங்கைக்கு வருவதற்கு காரணமான இந்திய இலங்கை ஒப்பந்தம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதால் அதற்கு எதிராக ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது என தெரிவித்துள்ளார். நாங்கள் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம், இந்தியா தற்போது மாறிவிட்டது, உலகமும் மாறிவிட்டது என தெரிவித்துள்ள ரில்வின் சில்வா 1987 இல் நாங்கள் எதிர்த்ததால் அந்த கோபத்தை கைவிடாமல் தொடர்ந்தும் அதே மனோநிலையில் இருக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/211600
  3. 09 APR, 2025 | 03:58 PM 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உண்மைக்கு புறம்பான முறையில் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211623
  4. 09 APR, 2025 | 02:41 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன குழுவினருக்கும் இடையே அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. மலையக மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இச்சந்திப்பின்போது தெரிவித்தார். அதேவேளை அவர், இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யமடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் சந்தோஷ் ஜா கலந்துரையாடினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் சுந்தர்லிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி சிவப்பிரகாசம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் வசந்தமூர்த்தி உட்பட இந்திய தூதரக அதிகாரிகள், அமைச்சின் ஏனைய அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/211605
  5. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள் பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் காலமானார். 44 நிமிடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தனது 93வது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். காந்தியவாதியாகவும், காமராஜரின் சீடராகவும் இருந்த குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் பதவி வகித்துள்ளார். அவரது மகளான தமிழ்நாடு பாஜகவின் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணியை தான் தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார். தமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை - ஆனாலும் சாதித்தது எப்படி? வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் மரணம் காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவு மிகக் குறைந்த தொகுதிகளில் போட்டி - வெற்றிக்கான வியூகமா? பலவீனமா? பட மூலாதாரம்,TN GOVT குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், வயது மூப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை இரவு அவர் காலமானார். அவர் உடல் நலன் குன்றியிருந்ததன் காரணமாகவே சமீபத்தில் பிரதமர் மோதி ராமேஸ்வரம் வந்திருந்த போது, தமிழிசை சவுந்தரராஜன் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பட மூலாதாரம்,X/@NAINARBJP படக்குறிப்பு,பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவராக குமரி அனந்தன் பொறுப்பு வகித்தார் "ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை44 நிமிடங்களுக்கு முன்னர் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 குமரி அனந்தன், தொழிலதிபராகவும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஹெச். வசந்த குமாரின் அண்ணன் ஆவார். வசந்த குமாரின் மறைவுக்கு பிறகு வசந்த குமாரின் மகன் தற்போது அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்சு 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு தலை மகனாக பிறந்தார். 1977-ம் ஆண்டு குமரி அனந்தன் நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் பயணத்தில் அவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடங்கினார். பிறகு அவை இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்டது. பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,"எனது தந்தை இன்று என் அம்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்டார்" என குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 தனது தந்தையின் இழப்பு குறித்து தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை, இன்று என் அம்மாவோடு இரண்டற கலந்து விட்டார். குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்தார். நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார். மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP படக்குறிப்பு,தமிழ் மீது பற்று கொண்ட அவர் 'இலக்கியச் செல்வர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் காந்தியவாதியாக இருந்த குமரி அனந்தன், காங்கிரஸ் கொள்கைகள் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர். காமராஜரின் சீடராக விளங்கி, பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றியுள்ளார். காந்தியவாதியான அவர் கதர் வேட்டி அணிந்து, நெற்றியில் விபூதியுடன் எளிய தோற்றமளிப்பவராக இருந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பனை மர பணியாளர்கள் நல வாரிய தலைவராக 2008-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார், 2011-ம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய கடிதத்தில், "நான், சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற காரணத்தினால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பனைச் செல்வம் பெருஞ்செல்வம், உடல் நலம் தரும் செல்வம். ஊதியம் இல்லாத வேலையினாலும், எளியோர்க்கும் நாட்டுக்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்" என்று குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம்,X@DRTAMILISAI4BJP பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 17 முறை தமிழத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மதுவிலக்கு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தமிழுக்கு முன்னுரிமை, நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணங்களை மேற்கொண்டுள்ளார். 2016-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை பூரண மதுவிலக்குக் கோரி அவர் மேற்கொண்ட நடைபயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அவர் சென்னையிலிருந்து தருமபுரிக்கு நடைபயணம் மேற்கொண்டார். சென்னை மெரினா கடற்கரையிலிருந்து அந்த நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசியிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், "தமிழக மக்களின் நலனுக்காக தனது 86வது வயதில் 16வது முறையாக நடை பயணம் மேற்கொள்கிறார். சுப்ரமணிய சிவாவால் தேர்வு செய்யப்பட்ட இடமான தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோவில் அமைக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு, நதிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபயணம் மேற்கொள்கிறார் " என்று கூறினார். பட மூலாதாரம்,TN GOVT மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர். அவரது மேடைப்பேச்சுகள் பலரையும் ஈர்க்கக்கூடியதாக இருந்தன. செம்பனை நாடு-மலேசிய அனுபவம், உலகம் சுற்றும் குமரி-பயண அனுபவங்கள், கடலில் மிதக்கும் காடுகள்- அந்தமான் பயணம், பாரதிரப் பாடிய பாரதி, தேசமும், நேசமும், விடுதலை வீரர்களின் வீரரும் தியாகமும், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், தமிழ் தரும் காட்சிகள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடி தேடி, பேச்சுக் கலைப் பயிற்சி என பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாளைக்கு ஒருமுறை, எவ்வாறு கழுவ வேண்டும்?24 மார்ச் 2025 பட மூலாதாரம்,TN GOVT படக்குறிப்பு,தமிழக அரசு குமரி அனந்தனுக்கு மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, தகைசால் தமிழர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் குமரி அனந்தன். அவருக்கு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதை வழங்கியது. கடந்த 2022-ம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ygg45jz8lo
  6. சீனாவிற்கு எதிராக 104 வீத வரி – டிரம்ப் 09 APR, 2025 | 08:02 AM அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளிற்கு எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை எடுத்தால் மேலதிகமாக 50 வீத வரியை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 20 வீத வரியை விதித்துள்ள நிலையில் தற்போது சீனா 104வீத வரியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/211551
  7. 09 APR, 2025 | 10:41 AM காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி அனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டு, அதன் விளைவாக 1984-ல் 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ மற்றும் அதற்குரிய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார். https://www.virakesari.lk/article/211566
  8. Published By: RAJEEBAN 08 APR, 2025 | 04:23 PM இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின் போது அந்த நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டுபெண் ஊழியர்களையே அந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது. ஒருவர், புகழ்பெறுவதற்காகவும், இந்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை அதிகபட்சமாக சீர்குலைப்பதற்காகவும் தவறான நடத்தையில் ஈடுபட்டனர் என மைக்ரோசொவ்ட் தனது பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. மற்றைய பணியாளர் ஏற்கனவே தனது இராஜினாமாவை அறிவித்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எனினும் ஐந்து நாட்களிற்கு முன்னதாகவே அவரை வேலையிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மைக்ரோசொப்டின் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி ஒருவர் புதிய தயாரிப்பு அம்சங்கள் மற்றும் மைக்ரோசொப்டின் செயற்கை நுண்ணறிவு குறித்த நீண்டகால தொலைநோக்கு குறித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த நிறுவனத்தின் பொறியியலாளர் இப்திஹல் அபொசாட் மேடைக்கு சென்று நீங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படவேண்டும் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள். ஆனால், மைக்ரோசொவ்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆயுதத்தை இஸ்ரேலிய இராணுவத்திற்கு விற்பனை செய்கின்றது என தெரிவித்தார். ஐம்பதினாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், மைக்ரோசொப்ட் இந்த இனப்படுகொலையை எங்கள் பிராந்தியத்தில் முன்னெடுக்கின்றது என அவர் நிறைவேற்றதிகாரியை நோக்கி சீற்றத்துடன் குறிப்பிட்டார். இதன் காரணமாக மைக்ரோசொப்ட் அதிகாரி தனது உரையை இடைநிறுத்தவேண்டிய நிலையேற்பட்டது. அபுசாத் தொடர்ந்தும் சீற்றத்துடன் மைக்ரோசொப்டின் அதிகாரியை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அந்த அதிகாரி உட்பட மைக்ரோசொப்டில் பணிபுரியும் அனைவரினது கரங்களிலும் இரத்தக்கறை படிந்துள்ளது என தெரிவித்தார். பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் அவர் தனது கெபியே ஸ்கார்வை மேடையில் வீசினார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார். இதன் பின்னர் வானியா அகர்வால் என்ற ஊழியரும் மைக்ரோசொப்டின் நடவடிக்கைகளிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டு நிகழ்வை குழப்பினார். https://www.virakesari.lk/article/211507
  9. சென்னையை கலங்கடித்த 'தனி ஒருவன்': ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியுடன் சதம் தொட்ட 'இடது கை சேவாக்' யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியன்ஸ் ஆர்யா மற்றும் தோனி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஏப்ரல் 2025, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின அதிரடி சதம், சஷாங் சிங்கின் அரைசதம் ஆகியவை பஞ்சாப் அணி வெல்லக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி சந்திக்கும் தொடர் 4வது தோல்வியாகும். வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை ஏடுகளில் இடம் பிடித்த இளம் வீரரான பிரியான்ஷ் ஆர்யா யார்? சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்? ஆர்யா தனி ஆவர்த்தனம் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தநிலையில் பிரியான்ஷ் ஆர்யா மட்டும் தனது பேட்டிங் ஸ்டைலையும், அதிரடியையும் குறைக்கவில்லை. தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்க வேண்டிய நிலையில் கலீல் அகமது கேட்சை தவறவிட்டார், 35 ரன்களில் இருந்தபோது விஜய் சங்கர் கேட்சை கோட்டைவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திய ஆர்யா சிஎஸ்கே பந்துவீச்சை காலி செய்தார். அஸ்வின் பந்துவீச்சையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பொதுவாக இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்துவீச்சை ஆடுவது கடினம் . ஆனால், நேற்று அஸ்வின் ஓவரில் 10 பந்துகளில் 28 ரன்களை ஆர்யா விளாசினார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 3 விக்கெட்டுகளுக்கு 75 ரன்கள் வரை ஆர்யா உயர்த்தினார். பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ஆர்யா அரைசதம் அடித்திருந்தார். 5-வது விக்கெட்டுக்கு சஷாங் சிங்குடன் சேர்ந்து ஆர்யா அமைத்த 67 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சிஎஸ்கே பந்துவீச்சை விளாசித் தள்ளிவிட்டார் ஆர்யா. குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 310 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்யா பேட் செய்தார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர்களின் 20 பந்துகளைச் சந்தித்து 62 ரன்களை ஆர்யா குவித்தார். அதிலும் பதிராணாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து சதத்தை ஆர்யா நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்த மகிழ்ச்சியில் பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஆர்யா, அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டினார், அதாவது 13-வது ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்களைத் தொட்டபோது, ஆர்யா சதம் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட் விழுந்தபின் பஞ்சாப் அணி 136 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் 5வது விக்கெட்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட 4வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தாலும், சிஎஸ்கேவுக்கு எதிராக இதுதான் அதிகபட்சமாகும். ஆர்யா ஆட்டமிழந்தபின் சஷாங் சிங் ஆட்டத்தை கையில் எடுத்து, யான்செனுடன் சேர்ந்து சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த சஷாங் சிங் 52 ரன்களுடனும், யான்சென் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்க இருவரின் அதிரடி பேட்டிங் முக்கியக் காரணமாக இருந்தது. பஞ்சாப் அணியில் ஆர்யா(103), சஷாங் சிங்(52), யான்சென்(34) ஆகியோர் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற பேட்டர்கள் ஸ்ரேயாஸ்(9), பிரப்சிம்ரன்(0), ஸ்டாய்னிஷ்(4), நேஹல் வதேரா(9), மேக்ஸ்வெல்(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சஷாங் சிங் கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ஆட்டம் எப்படி? சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை கடந்த 4 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் பவர்ப்ளேயில் கான்வே, ரவீந்திரா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன, ஓவருக்கு எத்தனை ரன்கள் சேர்க்க வேண்டும், ரன்ரேட் என்ன என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ரவீந்திரா, கான்வே இருவரும் ஆடியது போல் இருந்தது. அதனால்தான் 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஷிவம் துபே களத்துக்கு வந்த பின்புதான் சிஎஸ்கே அணி முதல் சிக்ஸரை அடித்தது. ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகவே, அடுத்துவந்த கேப்டன் ருதுராஜ், ஒரு ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குஷன் பந்துவீச்சில் 42 ரன்னில் துவே க்ளீன் போல்டாகினார். நடுப்பகுதியில் சிஎஸ்கே அணிக்கு ஓவருக்கு 17 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. விளைநிலத்தில் யானைகள் நுழையாமல் தடுக்கும் தேனீக்கள் - பல ஆண்டு ஆய்வில் தெரியவந்த ரகசியம்25 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 கான்வே களத்தில் 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தாலும், கடைசி நேரத்தில் அவரால் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. இதனால் ரிட்டயர் அவுட் முறையில் கான்வேயை 69 ரன்னில் சிஎஸ்கே வெளியேற்றியது. தோனி 18-வது ஓவரில் வந்து 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பைன் லெக் திசையில் சஹலிடம் கேட்ச் கொடுத்து தோனி 27 ரன்னில் ஆட்டமிழந்தவுடன் சிஎஸ்கே வெற்றிக் கனவு கலைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கான்வே சிஎஸ்கேவும், சிக்ஸரும் பஞ்சாப் அணியில் மட்டும் நேற்று 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதாவது 16 பந்துகளில் 96 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி 10-வது ஓவரில்தான் முதல் சிக்ஸரை விளாசியது, ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர் மட்டுமே அடித்தது அதாவது 48 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசும் பிக்ஹிட்டர்கள் யாரும் இல்லை. 200 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் சேஸ் செய்திருந்தது, அதற்கு அப்போது சுரேஷ் ரெய்னா, ஹேடன், வாட்ஸன், ஹசி போன்ற பெரிய ஹிட்டர்கள் இருந்ததால், இலக்கை எளிதாக அடைந்தது. ஆனால், இப்போதிருக்கும் சிஎஸ்கே பேட்டர்களை வைத்து இதுபோன்ற பெரிய ஸ்கோரை இந்த சீசனில் சேஸ் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு7 ஏப்ரல் 2025 கொண்டை ஊசி வளைவில் எந்த கியரில் செல்வது? மலைப் பாதையில் காரில் செல்லும் போது கவனிக்க வேண்டியவை7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி சிஎஸ்கேவும் 180 ரன்கள் இலக்கும் 180 ரன்களுக்கு மேல் எதிரணி இலக்கு வைத்துவிட்டாலே சிஎஸ்கே சேஸ் செய்ய இயலாது என்பது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுக்குப்பின் 11 முறை 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. போட்டி நாயகன் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முழுமையான காரணம் அன்கேப்டு வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் அச்சமில்லா, அற்புதமான ஆட்டம்தான். பிரியான்ஷ் ஆர்யாவின் பேட்டிங்கை நேற்று பார்த்தபோது, "வின்டேஜ் சேவாக்", இடதுகையில் பேட் செய்வது போல் இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரியன்ஸ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (9 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். 245 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட் செய்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாஸ், 39 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயில்(30பந்து), யூசுப் பதான்(37), டேவிட் மில்லர்(38) ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஆர்யா வருகிறார். "ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை8 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரியான்ஷ் ஆர்யா யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான். இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தை டீப் பாக்வேர்டு பாயிண்டில் ஒரு அபாரமான சிக்ஸர் வைத்து ஆட்டத்தை துவங்கினார் பிரியான்ஷ் ஆர்யா. அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. ஆர்யா பேட்டிங் ஸ்டைலைப் பார்த்தால் சேவாக் இடதுகையில் பேட்டிங் செய்ததுபோல்தான் இருந்தது, அதாவது சேவாக் அதிரடியைப் போன்று ஆர்யாவின் அதிரடி ஆட்டமும் இருந்தது. பதிராணா வீசிய வைடு யார்கர், புல்டாஸ் என எது வீசினாலும் பந்து சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. சிஎஸ்கே அணியில் நேற்று ஒரு பந்துவீச்சாளரையும் ஆர்யா விட்டுவைக்கவில்லை. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறி வந்தனர். பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி அவர் பெற்றார். டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். ஐபிஎல் டி20 வலைதள தகவல்படி, ஆர்யா 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியை வழிநடத்துகையில் தனது சிக்ஸர் அடிக்கும் திறனுக்காக பெரிதும் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அதனாலேயே ஆர்யாவை ஸ்பெஷல் ப்ளேயர் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அழைத்துள்ளார். அந்த ஆட்டத்தில் அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார். புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் அநாயசமாக சிக்ஸர்களை விளாசி அதீத ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து ஆர்யா கவனம் ஈர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் அணிகளின் பார்வை பட, கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள் என்ன? சிஎஸ்கே அணியில் பெரிய இலக்கை துரத்திச் செல்லும்போது, அதிரடியாக பெரிய ஷாட்களை அடிக்கும் பிக் ஹிட்டர்கள் யாருமில்லை. ஷிவம் துபே தவிர மற்ற யாரையும் பிக்ஹிட்டர்கள் வரிசையில் சேர்க்கமுடியாது. பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் படுமோசமாக இருந்தது. 200 ரன்களை சிஎஸ்கே தொட்டது பெரிதாக இருந்தாலும், கடந்த போட்டிகளைவிட இதில் பரவாயில்லை என ஆறுதல்படலாம். மற்றவகையில் சிஎஸ்கே பந்துவீச்சும், பீல்டிங்கும் சுமார் ரகத்துக்கும் குறைவுதான் என்று பயிற்சியாளர் பிளெம்மிங் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தில் மட்டும் நேற்று 9 கேட்சுகளை இரு அணி வீரர்களும் நழுவவிட்டனர். கேட்சை நழுவவிட்டாலும் பஞ்சாப் வெற்றியை தவறவிடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி 5 கேட்சுகளை தவறவிட்டு ஆட்டத்தையும் கோட்டைவிட்டது. குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யாவுக்கு கலீல் அகமது, ரவீந்திரா, கேட்ச் பிடித்திருந்தாலே ஆட்டம் மாறியிருக்கும். சனிப் பெயர்ச்சி நிகழும் நாளை கணிப்பதில் ஜோதிடர்கள் முரண்படுவது ஏன்? அறிவியல் உண்மை என்ன?30 மார்ச் 2025 கோடையில் எந்தெந்த பாம்புகள் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும்? எப்படி தவிர்க்கலாம்?29 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேஅணியில் ஃபார்மில் இல்லாத வீரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஒருபோட்டியில் சிறப்பாக ஆடினாலும், பல போட்டிகளில் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுவார்கள். மோசமான கேப்டன்சியும், பேட்டிங்கும் தோல்விக்கு முக்கியக் காரணம். ஏனென்றால் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யாமல் போன பல போட்டிகளில் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அந்த போட்டிகளில் ருதுராஜ் பேட்டிங் சராசரி 13 ரன்களுக்கும் குறைவாக இருக்கிறது, இந்த ஆட்டத்திலும் ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் அதிகமான அழுத்தம், நெருக்கடியில் கேப்டன்சி பொறுப்பை ருதுராஜால் சரிவர செய்ய முடியவில்லை. சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. ஜடேஜா மட்டும் 6 ரன்ரேட்டில் பந்துவீசியுள்ளார். ஆனால் மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் குறைவில்லாமல் ரன்களை வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர் தோனியின் போராட்டம் வீண் - சென்னை அணி மீண்டும் தோல்வி ஹர்திக் தடாலடியால் மும்பைக்கு கிடைத்த சாதகத்தை ஒரே ஓவரில் காலி செய்த சகோதரர் க்ருணால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யான்சென் ஆட்டத்தை மாற்றிய 3 சிக்ஸர்கள் சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் " இந்த ஆட்டத்தில் பேட்டிங் மட்டுமே சற்று நேர்மறையாக இருந்தது. டாப் ஆர்டர் வலுவாகஇருந்த போதிலும் அதிலும் சின்ன தவறு நடந்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. குறிப்பாக ரன்ரேட்டை சரியாகக் கொண்டு சென்றிருந்தாலே போட்டியை இன்னும் நெருக்கமாக வந்திருக்கலாம். களத்தில் நாங்கள் பீல்டிங், பந்துவீச்சில்தான் ஆட்டத்தை இழந்தோம். குறிப்பாக மந்தமான பீல்டிங், பந்துவீச்சில் பலமுறை லென்த்தை தவறவிட்டோம். ஆர்யாவின் அதிரடி ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி தவறான லென்த்தில் பந்துவீச வைத்தது. அப்போதே ஆட்டம் எங்களைவிட்டு சென்றது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் இந்த ஆட்டத்தில் 18 ரன்களில் தோல்வி அடைந்தோம், அதாவது 3 சிக்ஸர்கள். இந்த 3 சிக்ஸர்களை பேட்டர்கள் கூடுதலாக அடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும், இந்த சீசன் மிகவும் வெறுப்படைய வைக்கிறது. கேட்ச் பிடிப்பது மோசமாக இருக்கிறது, பஞ்சாப் தரப்பிலும் பல கேட்சுகளை நழுவவிட்டனர். மின் ஒளியில் கேட்சை தவறவிட்டார்கள் என்று நான் நழுவவில்லை, உண்மையில் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். அது கவலைக்குரியதுதான். ஐபிஎல் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், டாப்3 பேட்டர்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. இன்னும் வலுவான தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதே ஆட்டத்தை நடுப்பகுதிவரை கொண்டு வர வேண்டும். நல்ல பந்துவீச்சு இருந்தாலே பேட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும். அனைத்தையும் மறுஆய்வு செய்வோம். ஆனால் இது மோசமான ஆட்டமாக சேஸிங்காக இல்லை. 3 சிக்ஸர்கள்தான் எங்களை தோல்வியில் தள்ளியது" எனத் தெரிவித்தார் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் இடம் - ஆகமதாபாத் நேரம் - இரவு 7.30 மணி சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நாள் - ஏப்ரல் 11 இடம் - சென்னை சேப்பாக்கம் மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் - டெல்லி ஆர்சிபி அணியின் அடுத்த ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் அணி நாள் - ஏப்ரல் 10 இடம் - பெங்களூரு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன் ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 (5 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) - 199 (5 போட்டிகள்) நீலத் தொப்பி நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட் (5 போட்டிகள்) கலீல் அகமது (சிஎஸ்கே) - 10 விக்கெட் (5 போட்டிகள்) ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) - 10 விக்கெட் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39jjkydlxdo
  10. அரச சொத்துக்களில் ஊழல், மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது - சுனில் ஹந்துன்நெத்தி 08 APR, 2025 | 09:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் கடந்த காலங்களில் அரச சொத்துக்களில் ஊழல் மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த தற்போது அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதற்கு தேவையான சட்டமாகவே குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்ட திருத்தம் அமைகிறது. ஆனால், இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குமான ஒரு சட்டமாகவே இந்த சட்டம் அமைகிறது. எமது நாட்டில் மோசடிகளுக்கு எதிரான அதிகமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளால் அந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சட்டத்தை அவர்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதனால் உரிமையாளர் இல்லாத பொருட்கள் வெளிப்பட்டன. அதனால் இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம். அதனால் இந்த சட்டம் மக்களுக்காகவும் மக்களின் அபிலாசைகளுக்காகவுமே பயன்படுத்தப்படும். யாரையும் பாதுகாக்க பயன்படுத்தப்படாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த சபையில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஒரு தடவை அன்று ஆளும் கட்சியில் முதலாம் வரிசையை பாரத்து, தனக்கு அதிகாரம் இருக்குமானால் இங்கு முன்வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வழங்கியுள்ளது. ஆனால் சொன்ன விடயத்தை இன்னும் செயற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எமக்கு எதிராக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் எமது அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எமக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் சட்ட ரீதியில் இதனை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதனாலே தற்போது இந்த சட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.இந்த சட்டம் மூலம் முறையற்ற முறையில் சொத்து சேர்த்தவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமான சூழல் அமைகிறது. நாட்டு மக்கள் எமக்கு வாக்களிக்க பிரதான காரணம்தான் பிணைமுறை மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதேபோன்று சீனி வரி மோசடி, சீனாவில் இருந்து கழிவு உரம் கொண்டுவந்தமையால் ஏற்பட்ட நட்டம். கரவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவருவதன் மூலம்16 பில்லியன் ரூபா மோசடி போன்ற மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர தற்போது இந்த சட்டம் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே இதுபோன்று நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட அனைத்து மோசடிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்தி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/211537
  11. விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது - இலங்கையில் நடப்பது என்ன? படக்குறிப்பு, 8 ஏப்ரல் 2025, 16:02 GMT தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர். சிவில் ஆடைகளில் வேன் ஒன்றில் வருகைத் தந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பிள்ளையானை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை, பிபிசி தமிழுக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில், பிள்ளையான் மறுத்திருந்தார். இந்த நிலையில், காரணங்கள் குறிப்பிடப்படாது பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. "விடுதலைப் புலிகளுடன் ஆயுதப்பரிமாற்றத்தில் இருந்த ஆளும் ஜேவிபி கட்சி"- புலிகளின் முன்னாள் போராளி பிள்ளையான் பிபிசி தமிழுக்கு பேட்டி37 நிமிடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?22 மார்ச் 2025 கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?27 மார்ச் 2025 யார் இந்த பிள்ளையான்? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிள்ளையான் என அழைக்கப்பட்டார். 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தனது 16வது வயதில் இணைந்த பிள்ளையான், முக்கிய தாக்குதல்களில் முன்னிலை வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கைகோர்த்து 2004ம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிள்ளையான், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தார். இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்து அதனை இன்று வரை செயற்படுத்தி வருகின்றார். வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்திற்காக நடத்தப்பட்ட முதலாவது மாகாண சபைத் தேர்தலில் முதலாவது கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறைச்சாலையில் இருந்தவாறே போட்டியிட்ட பிள்ளையான், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர் 2020ம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kvg7xzk9eo
  12. 'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஏப்ரல் 2025, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. "10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம் என்ன? வழக்கு விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் வாதாடிய ராகேஷ் திவேதி சில விஷயங்களை முன்வைத்தார். "மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநில பட்டியலில் உள்ளவற்றுக்காக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் அனைத்தையும் ஆராய்ந்து மசோதா நிறைவேற்றப்படுவதாகக் கூறிய ராகேஷ் திவேதி, "ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படுவதில்லை. ஆனால், எந்த விளக்கமும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல" என வாதிட்டார். "மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்" எனவும் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது நீதிபதிகள், "ஆளுநர் விளக்கம் அளிக்காமல் திருப்பி அனுப்பினால் அவர் மனதில் என்ன உள்ளது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர். மேலும், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஆளுநரிடம் உள்ளதா? ஒப்புதல் அளிக்க முடியாது என அவர் எப்போது உணர்ந்தார்? ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர். ஆளுநர் தரப்பு வாதங்கள் என்ன? ஆளுநர் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, "அனைத்து சூழ்நிலைகளிலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். 'மாநில அரசின் மசோதாக்களில் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அரசும் ஆளுநரும் இணைந்து முடிவெடுக்கும் வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்' எனவும் ஆளுநர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநரை மாநில அரசு கேட்கலாமே தவிர, இது எந்த வகையிலும் மாநில உரிமைகளைப் பறிப்பது அல்ல எனவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது. "சட்டவிதிகளுக்கு எதிராக இருந்தது" துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் நடைமுறை, மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக வாதிட்டது. அதேநேரம், மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநர் முட்டுக்கட்டை போட முடியாது" எனத் தெரிவித்தனர். ஆனால், ஆளுநர் தரப்போ, "மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது நிராகரித்தாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்ற அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதாக இல்லை" என ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம் தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்டிவாலா கூறுகையில், "தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்." என தெரிவித்தார். "ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது. இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்." என்று நீதிபதி பர்டிவாலா குறிப்பிட்டார். "ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. (இந்திய அரசு சட்டம்) 1935-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது" என்றார் நீதிபதி பர்டிவாலா. இந்த வழக்கில் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி ஜே.டி.பர்டிவாலா மேற்கோள் காட்டியுள்ளார். 'ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாக அமையும்' என்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார். 10 மசோதாக்கள் என்ன? தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. கறுப்பு திங்கள்: இந்திய பங்குச் சந்தையில் ரூ 19 லட்சம் கோடி இழப்பு – இனி என்ன நடக்கும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல்8 ஏப்ரல் 2025 ஹர்திக் தடாலடியால் மும்பை பக்கம் திரும்பிய ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றிக் காட்டிய சகோதரர் க்ருணால்6 மணி நேரங்களுக்கு முன்னர் வழக்கின் பின்னணி தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது. இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு உடனே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. பட மூலாதாரம்,DIPR உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஸ்டாலின் கருத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், "ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்." என முதலமைச்சர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdjlyn82vjzo
  13. 08 APR, 2025 | 07:31 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். இதற்கான முதல் கட்டமாகவே முறையற்ற வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தண்டனை சட்டக்கோவை, பொது சட்டம், ஊழல் சட்டம் ஆகிய சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகள் இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் முறையற்ற வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இந்த புதிய சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும். இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் அழுத்தமாக வலியுறுத்தினார்கள். மக்களின் அபிலாசைக்கு அமைவாகவே இந்த சட்டம் சர்வதேச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறைகள் வகுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211536
  14. கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு - தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு 08 APR, 2025 | 03:06 PM (நா.தனுஜா) தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் பிரகாரம் வருடாந்தம் மே மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும். தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு கடந்த வாரம் கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கனேடியத் தமிழர் பேரவை, 'தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவு இதுவாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இந்த உயர்நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அப்பேரவை, குறிப்பாக 'கனேடிய உயர்நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை' எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக பொய்யான விடயம் உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது. 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கை கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக குறித்த கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்ட அடிப்படையில் தவறான கருத்து என்பதுடன் கனேடியத் தமிழர்களின் நீண்டகால முயற்சியின் விளைவாகக் குவிந்திருக்கும் அவதானத்தைக் கலைக்கும் செயலாகும்' எனவும் தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211480
  15. 08 APR, 2025 | 07:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டேன். ஆனால், அவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நிதி பெற்ற விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகிறார். மஹிந்த ராஜபக்ஷவுடன் நாங்கள் 2006 - 2009 வரையான காலப்பகுதியில் ஒன்றிணைந்து செயற்படவில்லை. இது அரசியல் சத்தியம். தமிழ் அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இல்லாதொழித்தவர்களுடன் ஒன்றிணைந்து தான் இவர்கள் செயற்பட்டார்கள். இவர்கள் ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் வாக்கு கோரினார். பிள்ளைகளை கடத்தி, கப்பம் பெற்ற பிள்ளையானின் மேடையிலும் இவர் இருந்துள்ளார். 2005ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தான் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைக்கு கவலையடைகிறேன். சபாநாயகரை இவர் மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சிக்கிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படவில்லை. மூன்றாம் தரப்பு அரசியல்வாதி போல் செயற்படவில்லை. 2005ஆம் ஆண்டு ரணில் - சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர் ராஜபக்ஷர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும், பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றார். https://www.virakesari.lk/article/211534
  16. சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் டிரம்ப் பல்வேறு நாடுகளுடனான அமெரிக்காவின் வணிகத்தை சமன் செய்யும் வகையில் பதில் வரி அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதை ஏற்காத சில நாடுகள் தாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தின. சீனப்பொருட்களுக்கு ட்ரம்ப் 34% வரியை அதிகரித்த நிலையில் பதிலுக்கு சீனாவும் 34% வரி அதிகரிப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதனால் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். தங்களுடனான வணிகத்தில் சீனா ஏற்கனவே பல தில்லுமுல்லுகளை செய்து வருவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், 34% வரியை சீனா இன்றைக்குள் திரும்பப்பெறாவிட்டால் நாளை மேலும் 50% வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். இதை ட்ரம்ப் செய்யும் பட்சத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியின் மொத்த மதிப்பு 104% ஆக அதிகரிக்கும் நிலை ஏற்படும். மேலும், சீனாவுடனான வரி தொடர்பான சமரச பேச்சுகள் அனைத்தையும் கைவிட்டுவிடுவேன் என்றும் ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க சந்தை ஏறக்குறைய மூடப்படுவதன் விளைவாக சீன பொருட்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குவியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316920
  17. 08 APR, 2025 | 07:29 PM (நா.தனுஜா) இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான முன்னாள் செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் எழுப்பப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இன்றளவிலே அத்தியாவசிய சேவை வழங்கலுக்கு நிதி அளிக்கக்கூடிய மட்டத்துக்கு அரசாங்கத்தின் இயலுமை விரிவடைந்திருப்பதற்கு வரி செலுத்துபவர்கள் அவர்களது தோள்களில் அதிக சுமையைச் சுமப்பதே காரணமாகும். அதேபோன்று தற்போது எரிபொருள் மற்றும் மின்கட்டணங்கள் முழுவதுமாக பயனாளர்களாலேயே செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்குச் சொந்தமான நிதியை சமூகப் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் உள்ளடங்கலாக முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயங்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை தற்போதைய நலிவடைந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்சியடைவதற்கும், 2022ஆம் ஆண்டு முகங்கொடுக்க நேர்ந்ததைப் போன்ற மிக மோசமான நெருக்கடியொன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் இந்தத் தியாகங்கள் இன்றியமையாதனவாகும். நான் 2022ஆம் ஆண்டு அதிகாலை 4 மணிக்கு இலங்கையில் தரையிறங்கியபோது கார்கள், லொறிகள், கனரக வாகனங்கள் அனைத்தும் மிக நீண்ட வரிசைகளில் நிற்பதைப் பார்த்தேன். மக்கள் அனைவரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருந்ததால் பகல் வேளைகளில் பொருளாதார செயற்பாடுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. அவ்வேளையில் மின்துண்டிப்பும் நடைமுறையில் இருந்தது. மின்துண்டிப்பின் விளைவாக நாம் அவ்வப்போது இருண்ட அறைகளில் அமர்ந்திருந்தோம். இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களில் குறிப்பிட்டுக் கூறத்தக்க முக்கிய அடைவுகளை எட்டுவதற்கு ஏதுவான மிகக் கடினமான மறுசீரமைப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்களுக்கான வரிசைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மின்துண்டிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியிலிருந்து மீண்ட பொருளாதாரம், கடந்த ஆண்டு 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211523
  18. Published By: DIGITAL DESK 2 08 APR, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எவரேனும் நபர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியிருந்தால் அவற்றை சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கிக் கொள்ளும் இயலுமை காணப்படுகிறது. அத்துடன் குறித்த சொத்தின் முதல் உரித்தாளருக்கு சொத்தை உரித்தாக்கவும் முடியும். குற்றம் தொடர்பில் முறையான காரணிகள் மற்றும் சாட்சியங்கள் இருக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட அனைவரும் முறையற்ற வகையில் சொத்து சேர்த்திருந்தால் அது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே பேசப்பட்டது. மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்குவது தொடர்பில் 2015.05.01 ஆம் திகதியன்று ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியில் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நீதியரசர் யசந்த கோதாகொட உட்பட13 பேர் சேவையாற்றினார்கள். இந்த சட்டம் உருவாக்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, இந்த சட்ட வரைவு பணிகள் நிறைவுப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு இந்த சட்டமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் காணப்படும் ஒருசில பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். இந்த சட்டமூலத்தில் உறுப்புரை 53, 55, 56 உட்பட பல பிரிவுகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதிப்புக்களில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த சட்டம் சிறந்த முறையில் இயற்றப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211508
  19. 08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் கூச்சல்கள் எழுந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் மேலே குறிப்பிடப்பட்ட வகையில், அறிவித்தல் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இவ்வாறான சம்பவம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/211517
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பைக் கொண்டிருக்கும் தர்பூசணியில் ரசாயனம் ஊசி மூலமாக ஏற்றப்படுகிறது என்று வெளியான தகவலைத் தொடர்ந்து, உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் உள்ள அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தர்பூசணியில் நிறமிகள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று சமீபத்தில் உணவுத்துறை பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ தான் இதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள். இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் விவசாய சங்கத்தினர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்று விளக்கம் அளிக்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? பாதிக்கப்பட்ட விவசாயிகள் வைக்கும் கோரிக்கை என்ன? விளக்குகிறது இந்த செய்தி. நாங்கள் விவசாயிகளுக்கு எதிரிகள் அல்ல – பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரியின் விளக்கம் சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக இருந்த சதீஷ்குமார் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், " தர்பூசணி பழங்களில் நிறம் மற்றும் சுவைக்காக ரசாயனங்கள் ஏற்றப்படுகிறது" என்று கூறினார் . இவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதை 'டெமோவாக' செய்துக் காட்டிய அவர், பழத்தில் நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும் போது, அதில் 'டிஸ்யூ' காகிதம் ஒன்றை வைத்துத் தேய்த்தால், அடர் சிவப்பு நிறத்தில் அந்த காகிதம் மாறிவிடும் என்றும் கூறினார். இதற்கு முன்னதாகவும் இது போன்ற அவரின் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்த ஆண்டில் தர்பூசணிக்கு பெரிய அளவில் விலை ஏதும் கிடைக்காததற்கு இது தான் காரணம் என்று விவசாயிகள் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு விளக்கத்தை அளித்தார் சதீஷ்குமார். அதில், "தர்ப்பூசணிகள் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு வாய்களில் புண்கள் வருகிறது என்ற புகார்கள் ஆங்காங்கே வருகிறது. யாரோ ஒரு சிலர் செய்த தவறு மூலமாக ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல," என்று அவர் கூறினார். மேலும், அவர் ஆய்வு செய்த பகுதியில், எலிக்கடித்த பழங்களை மட்டுமே அழித்ததாகவும், அந்த பழங்களில் எந்தவிதமான நிறமூட்டிகளும் சேர்க்கப்படவில்லை என்றும் உறுதியளித்தார். மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் என்றும் கூறினார் அவர். "ரசாயனமேற்றப்பட்ட பழங்கள் அடர் சிவப்பு நிறத்திலும் அதீத இனிப்பு சுவையும் கொண்டிருக்கும். அதனை உட்கொண்ட சில மணி நேரத்திற்குள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திப்பார்கள்," என்று விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார். ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று, சதீஷ்குமாரை தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்தது தமிழக அரசு. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை13 ஜூலை 2024 தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை - அவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?17 பிப்ரவரி 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மக்கள் எந்த விதமான அச்சமுமின்றி இப்பழங்களை உட்கொள்ளலாம் விவசாயிகள் கூறுவது என்ன? தாராபுரத்தில் 3 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி விவசாயம் செய்து வருபவர் சக்திவேல் குப்புசாமி. ரசாயனம் தொடர்பான செய்தி வெளியான பிறகு நஷ்டத்தை சந்தித்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் அவர். "எங்கள் குடும்பத்தில், நான், என் மனைவி, என் அக்கா மற்றும் அம்மா என்று நான்கு பேரும் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறோம். இருப்பினும் உரம், மருந்து, மின்சாரம் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு ஏக்கருக்கு (ஒரு விளைச்சலுக்கு) ரூ. 15 ஆயிரம் வரை இரண்டு மாதங்களுக்கு செலவு மட்டும் ஆகும். நல்ல விளைச்சலும் நல்ல விலையும் இருந்தால், ஒரு ஏக்கருக்கு எங்களால் ரூ.15- 20 ஆயிரம் வரை லாபம் பார்க்க இயலும்," என்று விளக்கினார் சக்திவேல். "தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வியாபாரிகள் தர்பூசணிகளை வாங்கிச் செல்வதுண்டு. இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு வியாபாரிகள் எங்களிடம் ஒரு கிலோ பழத்தை ரூ. 7-க்கு வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது 2 ரூபாய்க்கு தர முடியுமா என்று கேட்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 3 டன் எடை கொண்ட பழங்கள் தேக்கமடைந்து நிலத்திலேயே வெடித்து அழுகிப்போனது," என்று கூறுகிறார் அவர். சுட்டெரிக்கும் கோடை என்பதால் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த பழங்களை அறுவடை செய்யாததால் வெடித்தும், வெம்பியும் வீணாகிப் போவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். பட மூலாதாரம்,FOOD SAFETY AND DRUG ADMINISTRATION DEPARTMENT TAMIL NADU/ FACEBOOK படக்குறிப்பு,பாலக்கோடு பகுதியில் தர்பூசணியின் தரம் குறித்து ஆய்வு நடத்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக வேலையில்லை! ஒட்டன்சத்திரம் விவசாயிகளிடம் இருந்து பழங்களை வியாபாரிகளுக்கு கைமாற்றிவிடும் இடைத்தரகராக பணியாற்றி வருகிறார் ராமசாமி ஆறுமுகம். வீடியோவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசும் போது, "இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பழங்களை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலங்களுக்கு வாரம் ஒரு முறை சென்று விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு நான் வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிப்பேன். அவர்கள் பெரிய வண்டிகளில் வந்து பழங்களை வெட்டி எடுத்துச் செல்வார்கள். ஒரு கிலோவுக்கு எனக்கு ஐம்பது காசுகள் கமிஷனாக கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை இந்த வேலையை நான் பார்த்து வந்தேன். தற்போது வீடியோ வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக எந்த வியாபாரிகளும் என்னிடம் பழங்கள் இருப்பு குறித்து கேள்வி எழுப்பவில்லை. வருகின்ற காலங்களிலும் தர்பூசணிக்கு நல்ல விலை இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு எனக்கு வேலை ஏதும் இல்லாமல் வருமானமின்றி இருக்க நேரிடும்," என்று குறிப்பிடுகிறார் ராமசாமி. பால், நெய், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?28 அக்டோபர் 2024 கோழி இறைச்சியை ஆரோக்கியமான முறையில் கழுவுவதும், சமைப்பதும் எப்படி?7 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக பணியாற்றிய சதீஷ்குமார் பழங்களை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது! இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலர், காய்கனி வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ வைத்தியலிங்கம் பேசுகையில், "ஒரு வீடியோவுக்கு பிறகு தர்பூசணி விவசாயிகளின் நிலைமை தலைகீழாக ஆகிவிட்டது," என்று குறிப்பிடுகிறார். கோவிந்தராஜூ அளித்த தகவலின் படி, திண்டிவனம், செய்யாறு, வந்தவாசி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரியபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் தர்பூசணி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தர்பூசணிகளே சென்னையில் விற்பனைக்கு வருகிறது. "சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. மீத பழங்கள் அனைத்தும் ஒவ்வொரு வார்டிலும் உள்ள உள்ளூர் வியாபாரிகளிடம் கொடுத்து சந்தைப்படுத்துகின்றனர் விவசாயிகள்," என்று கூறுகிறார் கோவிந்தராஜூ. பழத்தின் தரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று குறிப்பிடும் அவர், உணவுத்துறை அதிகாரிகளின் வீடியோ வருவதற்கு முன்பு, முதல்நிலை தரம் கொண்ட பழங்கள் கிலோ ஒன்று ரூ.20-க்கும், மத்திய தரம் கொண்ட பழங்கள் ரூ.15-க்கும், சிறிய ரக பழங்கள் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கிறார். "வீடியோ வெளியான பிறகு பழங்களின் விற்பனை மந்தமடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். வியாபாரிகள் ஏற்கனவே வாங்கிய பழங்களை குப்பையில் கொண்டு போய் கொட்டுகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பழங்களை, விலை போகவில்லை என்று தெரிந்தும், விவசாயிகள் நேரடியாக வந்து வியாபாரிகளிடம் இலவசமாக கொடுத்துவிட்டு செல்கின்றனர். அந்த பழங்களும் தற்போது குப்பைக்குத் தான் செல்கிறது," என்று தெரிவிக்கிறார் கோவிந்தராஜூ. வெயில் காலத்தில் அதிக காலம் இந்த பழங்களை பாதுகாத்து வைப்பது கடினம். பழத்திற்கான விலை வருங்காலங்களில் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் ஆனால் அத்தனை காலம் வரை இருப்பில் இருக்கும் பழங்கள் தாக்குபிடிக்குமா என்பது கேள்வி தான் என்று தெரிவிக்கிறார் அவர். பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் சந்தைப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் தர்பூசணிகளில் 5 முதல் 10 சதவிகித பழங்கள் மட்டுமே நேரடியாக கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இந்த இழப்பீட்டிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். முறையான ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமின்றி இத்தகைய வீடியோவை உணவுத்துறை அதிகாரிகள் எவ்வாறு வெளியிட முடியும் என்ற கேள்வியை எழுப்பிய அவர், "பொறுப்பற்ற வகையில் இவர்கள் வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா என்பதை அரசு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்," என்றும் தெரிவித்தார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த அவர்,"சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடுமா? தமிழகத்தில் மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தர்பூசணி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இதனால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒரு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்," என்றார் பாண்டியன். விவசாயிகள் அடைந்த நஷ்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பழங்கள் சாப்பிட பாதுகாப்பானவையாகவே இருக்கிறது என்று கூறினார். மேலும், "விவசாயிகள் இத்தகைய கலப்படத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது," என்று தெரிவித்தார். இழப்பீடு குறித்து எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y40j9lr3jo
  21. பிள்ளையான் கைது! Published By: VISHNU 08 APR, 2025 | 08:57 PM முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211540
  22. 08 APR, 2025 | 10:50 AM அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது. தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அநுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்சனையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள். மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் பிரச்சனைகளை கையாள கூடியதாக இருந்தது. இம்முறை மக்கள் சிந்தித்து இவ் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். சாணக்கியன் இராசமாணிக்கம் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை. அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளை தமிழ் பேசும் மக்களே கையாள வேண்டும். அதனால் மக்களே சிந்தியுங்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211444
  23. ரகசிய 'ஏவுகணை நகரங்கள்': இந்தியாவுக்கு தெற்கே உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்குவோம் என இரான் மிரட்டல் பட மூலாதாரம்,TASNIM படக்குறிப்பு,கய்பர் ஷெகான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ரகசிய அறை. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்சாத் செய்ஃபிகரன் பதவி, பிபிசி பெர்சியன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நாம் இன்று தொடங்கி, ஒவ்வொரு வாரமும் ஒரு ஏவுகணை நகரத்தை வெளியிட்டால் கூட, இரண்டு ஆண்டுகளில் அது முடிவடையாது. அத்தனை ஏவுகணை தளங்கள் உள்ளன." மேற்கூறியவாறு குறிப்பிட்டு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழலில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணைகளை பதுக்கி வைத்துள்ள புதிய ரகசிய நிலத்தடி தளங்களை, இரான் சமீபத்தில் வெளிப்படுத்தியது. கடந்த வாரம் அமெரிக்கா, ரகசிய தொழில் நுட்பம் மற்றும் சக்தி வாய்ந்த குண்டுகளைச் சுமந்து செல்லக் கூடிய திறன் கொண்ட ஆறு கூடுதல் போர் விமானங்களை, இரான் மற்றும் யேமன் நாடுகளை எளிதில் அணுகக் கூடிய ஒரு இராணுவ தளத்திற்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இத்தகவலை வழங்கினார்கள். இதற்கு பதில் அளித்த இரான், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ ஆற்றலை கொண்டிருப்பது, அவர்களை 'கண்ணாடி அறையில்' அமர்ந்துள்ளவர்களாக மாற்றுகிறது. எனவே அவர்கள் 'மற்றவர்கள் மீது கற்களை எறியக் கூடாது' என்று குறிப்பிட்டது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தெற்கே அமைந்துள்ள பிரித்தானியப் பிரதேசமான டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவத் தளத்தை தாக்கப்போவதாக இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த டியாகோ கார்சியா தீவின் கட்டுப்பாட்டை மொரீஷியஸிடம் திருப்பி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ள முடியும் என இரான் இதற்கு முன் எப்போதும் கூறியதில்லை. இந்த "ஏவுகணை நகரங்கள்" என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் விட்டுச் சென்ற லட்சக்கணக்கான ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் வக்ஃப் சட்டத் திருத்தம் பற்றி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தவர் கூறுவது என்ன?7 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,IMA MEDIA படக்குறிப்பு,இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தளத்தில் ஏவுகணைகள் பொருத்தப்படும் காட்சி இரானின் 'ஏவுகணை நகரங்கள்' எவை? "ஏவுகணை நகரங்கள்" என்பது இரானின் ராணுவப் படைப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையானது (IRGC) நிலத்திற்கு அடியே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளங்களை குறிப்பதற்காக பயன்படுத்தும் சொல். இந்த தளங்கள் நாடு முழுவதும் பரந்த, ஆழமான மற்றும் ஒன்றோடொன்று சுரங்கங்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்துள்ளன. அவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூயிஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற பிற முக்கிய ஆயுதங்களை சேமிக்க, தயாரிக்க மற்றும் ஏவுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) தளபதிகளின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை நகரங்கள் ஏவுகணை சேமிப்பு தளங்கள் மட்டுமல்ல, அவற்றில் சில தளங்கள், "ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக செயல்படும் தொழிற்சாலைகளாகும்." இந்த ஏவுகணை தளங்கள் அமைந்துள்ள துல்லியமான இடங்கள் தெரியவில்லை. அவற்றின் அமைவிடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஐ.ஆர்.ஜி.சி வான்வழிப் படையின் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே, இரான் அரசுக்குச் சொந்தமான ஐஆர்ஐபிக்கு (IRIB) அளித்த பேட்டியில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை டிரோன்கள் அந்த தளங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியுடன் "ஏவுகணை நகரம்" தொடர்பான வீடியோவை வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவில் காணப்படுவதை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. தற்போது இதனை வெளியிடுவதற்கான காரணமாக, "இரானுக்கு எதிரான எந்தவொரு விரோதச் செயலுக்கும்" பதிலடி அளிக்க தெஹ்ரான் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் என அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டது. "பிராந்தியத்திலோ அல்லது இரானிய ஏவுகணைகளின் எல்லைக்குள்ளாகவோ இரான் தாக்கப்பட்டால், பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் படைகளை குறி வைப்பதில் எந்த விதமான வேறுபாடும் இருக்காது" என்று இரான் எச்சரித்துள்ளது. ஏராளமான ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை சேமித்து வைத்துள்ள நிலத்தடி சுரங்கங்களின் படங்களை, ஐ.ஆர்.ஜி.சி. கடந்த பத்து ஆண்டுகளில், அவ்வப்போது வெளியிட்டு, அவற்றை "ரகசிய ஏவுகணை நகரங்கள்" என கூறி வருகிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் டிரம்புக்கு எதிராக போராட்டம்7 ஏப்ரல் 2025 இலங்கையில் மோதி வழிபட்ட அநுராதபுரம் பௌத்த விகாரையின் முக்கியத்துவம் என்ன?7 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,இரான் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை தாக்கக் கூடும் என்பதை காட்டும் வரைபடம். இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட தாக்குதல்களைத் தடுக்க இரான் முயல்கிறது. சமீபத்தில் வெளியான காட்சிகளில் கெய்பர் ஷெகான், ஹஜ் காசிம், எமாத், செஜ்ஜில், காதர்-எச் மற்றும் பாவே போன்ற ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தங்களால் தாக்க முடியும் என இரான் பெருமையுடன் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2024-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியபோது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் எமாத் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் உள்ள நவதிம் விமானத் தளத்தில் சேதம் ஏற்பட்டது. இராக், சிரியா மற்றும் ஜோர்டான் வழியாக இரானில் இருந்து இஸ்ரேலுக்கான குறைந்தபட்ச தூரம் சுமார் 1,000 கிலோ மீட்டராகும். 2024 ஏப்ரலில் இரான் மேற்கொண்ட தாக்குதலின் போது, ஏவப்பட்ட ஏவுகணைகளில் 99 சதவிகிதம் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அக்டோபரில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், இரான் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் வரை தாக்கும் என்பது தொடர்பாகவும், அவற்றின் திறன் தொடர்பான சந்தேகங்களும் உள்ளன. இதுபோன்ற சூழலில், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அடைய முடியும் எனச் சொல்லப்படும் சமீபத்திய கூற்று, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 1970களின் முற்பகுதியில் இருந்து, அங்கு ஒரு பிரிட்டன்- அமெரிக்க ராணுவத் தளம் செயல்பட்டுவருகிறது. ஆனால் அந்த தளம் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளது. அது இரானில் இருந்து சுமார் 3,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வாரம், தனது ஷாஹெட் 136பி ட்ரோன்கள் மூலம் 4,000 கிமீ தூரம் வரை தாக்க முடியும் என்று இரான் மீண்டும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அது நிரூபிக்கப்படவில்லை. தற்போது 2,000 கிலோமீட்டருக்கு மேல் செல்லக்கூடிய ஏவுகணை இரானிடம் இல்லையெனத் தோன்றினாலும், கோட்பாட்டளவில் அந்தத் தீவை அடைய, கடற்படை வளங்களைப் பயன்படுத்துதல் அல்லது தற்போதுள்ள ராக்கெட் அமைப்புகளை மாற்றியமைத்தல் போன்ற பிற வழிகளும் உள்ளன. மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழ்நாடு மீனவர்கள் பற்றி மோதி கூறியது என்ன?6 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,டியாகோ கார்சியாவுக்கும் இரானுக்கும் இடைப்பட்ட தூரம் மத்திய கிழக்கில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்காவின் ராணுவ துருப்புகள் உள்ளன. அமெரிக்கா அந்தப் பகுதியில் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருக்கும். டியாகோ கார்சியா தீவில் அமெரிக்காவின் பி-2 ரகசிய குண்டுவீச்சுப் போர் விமானங்கள் இருப்பதை கீழே உள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இவை, யேமனில் ஹூதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. "இரான் அல்லது இரானால் ஆதரிக்கப்படும் குழுக்களால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், எங்கள் மக்களைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும்" என்று அமெரிக்க ராணுவத் தலையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். டியாகோ கார்சியா தீவை எத்தனை பி-2 விமானங்கள் சென்றடைந்தன என்பதைப் பற்றி அமெரிக்கா தகவல் வழங்க மறுத்துள்ளது. அவர்களின் பயிற்சிகள் அல்லது செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியாது என்றும் அது கூறியுள்ளது. அமெரிக்க விமானப்படையில் சக்தி வாய்ந்த பி-2 வகை குண்டுவீச்சு விமானங்கள் மொத்தம் 20 மட்டுமே உள்ளன. எனவே, அவை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 இந்திய ஆடை உற்பத்தி துறை டிரம்பின் வரி விதிப்பால் லாபம் அடைவதற்கான வழிகள்4 ஏப்ரல் 2025 ஏவுகணை நகரங்களை இரான் தெரியப்படுத்தியதன் காரணம் என்ன ? இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மூன்று முக்கிய பிரச்னைகளின் காரணமாக அதிகரித்துள்ள பதற்றத்தின் மத்தியில் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இரான் ஆதரவு பெற்ற ஹூதி இயக்கத்தின் அச்சுறுத்தல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் லெபனானில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் தாக்குதல்கள் தான் அந்த மூன்று பிரச்னைகள். இரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராவிட்டால், ராணுவ தாக்குதல் மற்றும் இரண்டாம் நிலை வரி விதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, கடந்த ஆண்டு இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கப்படுகின்றது. இரானால் தன்னைக் குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி அளிக்க முடியும் என்ற எச்சரிக்கையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஐ.ஆர்.ஜி.சியின் ஏவுகணை தளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிகிறது. இஸ்ரேல் மீது மூன்றாவது முறையாக தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக இரான் தொடர்ந்து உறுதியளித்து வந்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் ஏவுகணை திறன்களை பாதித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இரானின் திறன் குறித்தும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். மறுபுறம், அமெரிக்காவிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்க்கும் திறன் தன்னிடம் உள்ளதாகவும், தாங்கள் இன்னும் வலிமையாக உள்ளதாகவும் தனது குடிமக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறது இரான் அரசாங்கம். நிலத்துக்கு அடியில் ஏவுகணை நகரங்களை கட்டுவதன் நோக்கம், வான்வழி தாக்குதல்களுக்கெதிரான எதிர்ப்பு திறனையும், நீடித்து நிற்கும் திறனையும் அதிகரித்து, தாக்குதல்களைத் தடுக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிப்பதாகும். இத்தகைய ஏவுகணை நகரங்களை உருவாக்குவதன் மூலம், தனது தளங்கள் தாக்கப்பட்டாலும், திருப்பி தாக்கும் திறன் தனக்குள்ளதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இரான் தெரியப்படுத்த விரும்புகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c93gl3xekz7o
  24. 08 APR, 2025 | 10:24 AM வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக திங்கட்கிழமை (07) வன்னி பாராளுமன்ற கே. மஸ்தான் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பிப்பதன் ஊடாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி மற்றும் வவுனியா வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் முயற்சியினால் முதற்கட்ட பேச்சுக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தினரோடு இடம்பெற்றிருந்தது. இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கான நிதி பலத்தினை பெற்று கொள்வது தொடர்பிலும் அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதுடன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர், பல்கலைக்கழகத்தின் துறை தலைவர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/211443
  25. 08 APR, 2025 | 08:32 AM இலங்கையில் தற்போது ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய் சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது இந்நாட்டு சுகாதாரத் துறையில் அடையப்பட்ட ஒரு சாதனையாகும். ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபன இலங்கை அலுவலகத்தின் பதில் தலைவர் வைத்தியர் பரூக் குரேஷி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கிடையில், சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உலக சுகாதார தினம் வருடாந்தம் ஏப்ரல் 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை ஆரோக்கியமான தொடக்கங்கள் நம்பிக்கையான எதிர்காலம் என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பல்வேறு பொது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இம்முறை முன்மொழியப்பட்டுள்ள கருப்பொருளுக்கமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு உயிரிழப்பைத் தடுக்கும் முகமாகவும், சர்வதேச சமூகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் பங்கேற்புடன் ஏப்ரல் 1ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் இணையவழி சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு, தாய்மார்களின் மனநலம் மற்றும் தாய்மார்களின் நல்வாழ்வு ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக் கருத்தரங்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுகாதார அமைச்சின் வேலைத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அவை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. தற்போதைய அரசாங்கம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்நாட்டின் எதிர்கால உயிர்நாடி எனவே அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிசு மரண வீதத்தை ஒரு இலட்சத்துக்கு எழுபதாகக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எனினும் தற்போது இலங்கையில் ஒரு இலட்சம் பேரில் 25 தாய், சிசு மரணங்கள் பதிவாகுகின்றன. அந்தவகையில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய், சிசு மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை காணலாம். இது இந்நாட்டு சுகாதாரத் துறையால் அடையப்பட்ட ஒரு சாதனையாகும். நாட்டிலுள்ள அனைத்து சுகாதார நிபுணர்களின் வலுவான அர்ப்பணிப்பின் காரணமாக இத்தகைய திருப்திகரமான நிலையை அடைய முடிந்துள்ளது. ஆகையால் மரண எண்ணிக்கையை மேலும் குறைத்து தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதே சுகாதார அமைச்சின் நோக்கம் என்றார். https://www.virakesari.lk/article/211438

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.