Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 04 APR, 2025 | 08:56 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு பிரதமர் மோடியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு' என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைந்துள்ளது. . இதன்போது வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்ந்நிகர் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் அதிகபட்ச பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை (04) மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதியை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமை (05) காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை அபேகம ஆகிய பகுதிகளையும் அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை (06) காலை 07.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அநுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் ஸ்ரீ மகாபோதியை அண்மித்த பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211185
  2. தென்கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் - அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அரசியல் கண்டனப் பிரேரணையை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம் 04 APR, 2025 | 10:56 AM தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலிற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் நிறைவேற்றிய அரசியல் கண்டனப்பிரேரணை சரியானது என அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் அரசமைப்பு நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். யூன் மார்ஷல் சட்டத்தை அறிவித்தவேளை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். யூன் தேசிய அவசரகால சட்டங்களை பயன்படுத்தியதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211101
  3. 03 APR, 2025 | 05:22 PM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை (4) இலங்கைக்கு வருகை தருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர். இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இராணுவ மரியாதை அணிவகுப்புக்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்துடன் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு கலந்துரையாடல்களுக்கு பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சனிக்கிழமை (5) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு, திருகோணமலை எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய வகையில் 8 ஒப்பந்தங்கள் அன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளது. அதுமாத்திரமின்றி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் அரசியல் தரப்புகளுடனான சந்திப்பு சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்புகளின் பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கும் விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ஞாயிற்றுக்கிழமை (6) காலை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்து, ஸ்ரீ மகா போதியில் ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி, வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படவுள்ள சம்பூர் சூரிய சக்தி மின்னுற்பத்தி பூங்கா உட்பட திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடல்களில் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை முக்கிய விடயமாக கருத்தில் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211055
  4. 03 APR, 2025 | 08:06 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் விளைவை என்றோ ஒரு நாள் நிச்சயம் எதிர்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை வெள்ளிக்கிழமை (04) மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாடுகள் குறித்து இலங்கை ஊடகங்கள் முக்கிய பல விடயங்களை வெளிப்படுத்தவில்லை. அரசாங்கமும் உண்மையை வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுடன் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் அதனால் இலங்கைக்கு கிடைக்கும் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்து போதுமான விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. தீர்மானமிக்க வகையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்தாத பல விடயங்களை இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்திய ஊடகங்களில் ஒருசில ஊடகங்கள் இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு இணையாக பாதுகாப்பு தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் எழுந்து வரும் சீன இராணுவ எழுச்சியை எதிர்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் சாதகமாக அமையும் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கோ, நாட்டு மக்களுக்கோ அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு கூட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தின் சுருக்கம் மாத்திரமே அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கம் எவருக்கும் வழங்கப்படவில்லை. சாதக அம்சங்கள் மாத்திரமே சுருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எதிர்விளைவுகள் ஏதும் குறிப்பிடப்பிடவில்லை. இருதரப்பு பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் சக்தி வலு தொடர்பான ஒப்பந்தங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.ஏன் ஒப்பந்தங்களை மறைக்க வேண்டும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை காட்டிலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் இருந்த கொள்கையில் இருந்து முழுமையாக மாற்றமடைந்துள்ளதாக தமிழ் கார்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியாவுடன் கைச்சாத்திப்படவுள்ள ஒப்பந்தங்கள் சாட்சிபகிர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மறைமுகமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உடந்தையாக செயற்படுகிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போன்று இவரும் இலங்கையை காட்டிக்கொடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்படவுள்ளது.இலங்கையின் இருப்பினை இந்தியாவுக்கு கையளிக்கவும், அவர்களின் அனுதாபத்துடன் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்ட விடயங்களுக்கும், தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையை இந்தியாவிடம் காட்டிக்கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.தற்போது இவர் என்ன செய்கிறார். என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211046
  5. 03 APR, 2025 | 08:07 PM (இராஜதுரை ஹஷான்) வழக்குத் தாக்கல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும். என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) அபேவிக்ரம திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். ஆணைக்குழுவின் சுயாதீனத்தை மலினப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சட்ட நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக தேசிய மட்டத்திலான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே 2025-2029 வரையான காலப்பகுதிக்கான கருத்திட்டம் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகவே கடந்த ஆண்டு காலப்பகுதியில் நாட்டு மக்கள் கடுமையாக குரல் கொடுத்தார்கள். ஊழல் மற்றும் இலஞ்சத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்தியை நடைபெற்று முடிந்த தேர்தல்களில் வெளிப்படுத்தினார்கள். இந்த செய்தி அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்துக்கும் மாத்திரம் வரையறுத்ததல்ல, ஆணைக்குழுவுக்கும் பொறுப்பானதாகும். 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தின் பிரகாரம் ஆக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியிலும், சட்டத்தரணிகள் மத்தியிலும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கும் போதுமான தெளிவு இல்லை என்பதை அண்மைகாலமாக குறிப்பிடப்படும் கருத்துக்கள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது. 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு சட்டத்துக்கும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்துக்கும் இடையில் பரஸ்பரமான பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு மாத்திரம் அதிகாரமளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் வழக்குத் தாக்கலுக்கு அப்பாற்பட்டு விரிவான அதிகாரமளிக்கப்பட்ட பொறுப்புக்கள் உரித்தாக்கப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தேசிய கொள்கைத் திட்டத்தை தயாரிப்பதற்கு தலையீடு செய்யும் அதிகாரம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சமவாயங்கள், ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் எதிர்ப்பு கோட்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை காட்டிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறைப்பாடு யாதெனில் நாட்டு மக்கள் சட்டத்தின் உள்ளடக்கத்தை தெரிந்துக்கொள்வதில்லை. குறிப்பாக சட்டத்தை இயற்றிய அரசியல்வாதிகள் சட்டத்தின் விதிமுறைகளை தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்வதில்லை. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக ஊடகங்கள் மத்தியில் கருத்துக்களை குறிப்பிடும் அரசியல்வாதிகள் தாம் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன். ஊழல் மோசடி தொடர்பில் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படும் போது அரசியல் பழிவாங்கல்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அரசியல் பழிவாங்கல்கள் என்பதற்கு ஆணைக்குழுவை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சுயாதீன ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் அவரேனும் அரசியல் நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிட்டால் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 118 ஆவது உறுப்புரிரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும். ஆகவே விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் சட்டத்தின் உள்ளடக்கத்தை தெளிவாக வாசித்து விளங்கிக்கொள்ளுமாறு தயவுடன் வலியுறுத்துகிறேன். வரையறுக்கப்பட்டுள்ள மனித மற்றும் பௌதீக வளங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டியுள்ளது. ஆணைக்குழுவின் வசம் 4000 முறைப்பாடு கோப்புக்கள் நிலுவையில் உள்ளன. எதிர்வரும் காலப்பகுதியில் நிலுவையில் உள்ள முறைப்பாட்டு விசாரணைகளை நிறைவுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வழக்குத் தாக்கல் செய்வதில் ஆணைக்குழுவுக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சாட்சியத்துடன் தான் வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை. எமக்கு தெரிவுகள் ஏதும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் வெகுவிரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211051
  6. அரோரா, வெங்கடேஷ் அபாரம் - கொல்கத்தாவின் பந்துவீச்சில் சிதைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 3 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் கடைசியில் ஒருதரப்பாக முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியின் சேஸிங் தொடங்கியது முதல் கொல்கத்தா அணியின் ஆதிக்கமே இருந்தது. முழுமையாக 20 ஓவர்கள்கூட ஆடாமல் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 மியான்மர் நிலநடுக்கம்: குலுங்கிய மருத்துவமனை, கைக்குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்1 ஏப்ரல் 2025 தடுமாறி வரும் சன்ரைசர்ஸ் அணி பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் பாதளத்தில் இருக்கிறது. கடந்த முறை 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த முறை தொடக்கம் தடுமாற்றமாக அமைந்துள்ளது. அதேநேரம் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் மும்பையிடம் 116 ரன்களுக்கு சுருண்ட நிலையில் மீண்டு வந்து 200 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது. வருண், அரோரா அமர்க்களம் சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், கிளாசன் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அற்புதமாகப் பந்துவீசினார். அரோரா எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும் ஆட்டத்தில் அடுத்தடுத்த திருப்பத்தை ஏற்படுத்தின. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனுக்கு இணையாகப் பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மீண்டு வந்த வெங்கடேஷ் அய்யர் கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யர் மீதான ஐபிஎல் விலை பெரிய அழுத்தமாக இருந்து வந்த நிலையில் நேற்று இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பி நெருக்கடியிலிருந்து மீண்டார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், 29 பந்துகளில் 60 ரன்கள் என்று வெங்கடேஷ் அதிரடியாக ஆடியது, ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் என கேமியோ ஆடியது, அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தியது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 78 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நரேன், டீகாக் விரைவாக விக்கெட்டுகளை இழந்த பிறகு, ரஹானே, ரகுவன்ஷி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களும் தான் கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தன. ரஹானே மற்றும் ரகுவன்ஷி தலா 38, 50 ரன்கள் சேர்த்துப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன், வதேராவின் அதிரடியில் தடுமாறிய லக்னௌ சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? 13 பந்துகளில் சன்ரைசர்ஸின் டாப்ஆர்டர் காலி பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் நேற்று பொறுப்பற்ற வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பந்தையும் பெரிய ஷாட்டாக மாற்ற நினைத்து பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 13 பந்துகளிலேயே டாப்ஆர்டரில் இருந்த டிராவிஸ் ஹெட்(4), அபிஷேக் சர்மா(2), இஷான் கிஷன்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். வைபவ் அரோரா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இதேபோன்று அரோரா பந்துவீச்சில்தான் ஹெட் விக்கெட்டை இழந்தார். டாப் ஆர்டரில் இருந்த 3 பேட்டர்களும் மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினர். இந்தச் சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்த சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அடுத்த 55 ரன்களுக்குள் மீதமிருந்த வி்க்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா ஆடுகளம் நேற்று பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு வீசப்படும் பவுன்ஸர்களுக்கும், ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சன்ரைசர்ஸ் பேட்டர்களால் விளையாட முடியவில்லை, தவறான ஷாட்கள்தான் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கொல்கத்தா அணியில் நேற்று மிட்ஷெல் ஸ்டார்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் வேகப்பந்துவீச்சில் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை பரிதாபமாக மாறியிருக்கும். டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் ஆகியோர் ஆட்டமிழந்த 3 பந்துகளும் சாதாரண பந்துகளே. அவற்றில் தவறான ஷாட்களை அடிக்க முயன்று அவர்கள்தம் விக்கெட்டை இழந்தனர். அரோராவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழந்தார். ரானாவின் ஸ்லோவர் பந்தில் அபிஷேக் விக்கெட்டை இழந்தார். இஷான் சாதாரண பந்தில் ரஹானேவிடம் கையில் கேட்ச் கொடுத்தார். நடுப்பகுதியில் நிதிஷ் ரெட்டி(19), கமிந்து மெண்டிஸ்(27), கிளாசன்(33) ஆகியோர் மட்டுமே ஓரளவு பேட் செய்தனர். ஆனாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அவர்களால் போராட முடியவில்லை. சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச வந்த பிறகு சன்ரைசர்ஸ் அணியின் ரன்வேகம் படுத்துக்கொண்டது. இறுதியாக இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். வருண் சக்ரவர்த்தி 16வது ஓவரில் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் பேட்டிங் மீது கேள்வியை எழுப்பியுள்ளது. மனிதர்களைப் போலவே பேசி ஆச்சர்யப்படுத்தும் காகம்2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 நரேன், டீகாக் ஏமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணி பேட்டர்களுக்கு ஏதுவாக நேற்று இருந்த போதிலும், தொடக்க ஆட்டக்கார்கள் நரேன்(7), டீ காக்(1) இருவரும் கம்மின்ஸ், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியது. ரஹானேவும் ரகுவன்ஷியும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். பவர்ப்ளேவை பயன்படுத்த இருவரும் தவறவில்லை. பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தனர். ரஹானே பவர்ப்ளேயில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாச, ரகுவன்ஷியும் ஷமி, கம்மின்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இருவரின் அதிரடி ஆட்டத்தைக் குறைக்க லெக் ஸ்பின்னர் அன்சாரி வரவழைக்கப்பட்டார். அதற்குப் பலன் கிடைத்து, கொல்கத்தா ரன்ரேட் திடீரென குறைந்தது. அன்சாரி பந்துவீச்சுக்குத் திணறிய ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகுவன்ஷி நிதானமாக பேட் செய்து 30 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார். வெங்கடேஷ், ரிங்கு ஜோடி சேர்ந்த பிறகு, கொல்கத்தா அணியின் ரேன்ரேட் உயரத் தொடங்கியது. ரிங்கு தொடர்ந்து 3 பவுண்டரிகளை ஹர்சல் படேல் பந்துவீச்சில் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். கம்மின்ஸ் பந்துவீச்சில் 3 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹர்சல் வீசிய கடைசி ஓவரையும் விட்டு வைக்காத வெங்கடேஷ் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தார். வெங்கடேஷ் 60 ரன்களில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மம்மூட்டி மீதான அன்பால் மோகன்லால் செய்த செயல் சர்ச்சையாவது ஏன்?28 மார்ச் 2025 சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு - சிபிஐ முடிவறிக்கை குறித்து ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் கூறுவது என்ன?23 மார்ச் 2025 ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் நேற்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசினார். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசியது இதுதான் முதல்முறை. 13வது ஓவரை வீசிய கமிந்து மெண்டிஸ், முதல் 3 பந்துகளை இடது கையில் லெக் ஸ்பின்னாகவும், அடுத்த 3 பந்துகளை வலது கையில் ஆஃப் ஸ்பின்னாகவும் வீசினார். கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் இரு கைகளாலும் பந்து வீசுவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், பந்துவீச்சை வேறு கைக்கு மாற்றும் போதெல்லாம் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். மெண்டிஸ் வலது கையில் வீசும் ஆஃப் ஸ்பினைவிட இடதுகையில் வீசும் லெக் ஸ்பின் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் இலங்கை வீரர் ஹசன் திலகரத்னே, பாகிஸ்தானின் ஹனிஃப் முகமது ஆகியோர் இதுபோன்று பந்துவீசியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce82n96dy56o
  7. 04 APR, 2025 | 09:26 AM யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது. இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார். இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/211086
  8. Published By: RAJEEBAN 03 APR, 2025 | 02:22 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. கத்தார் குறித்து இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும், இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் இஸ்ரேலின் அரசியலின் உயர்பீடம் வரை தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதும் இஸ்ரேலில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரதான நாடான கத்தார் தான் ஹமாசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய பொலிஸார் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை சந்தேகநபராக சேர்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என தெரிவித்துள்ள அவர் தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி இதுவென தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் எதிர்கொண்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீண்டகாலமாக ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். சமீபத்தை சர்ச்சையை இஸ்ரேலிய ஊடகங்கள் கத்தார்கேட் என குறிப்பிட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமரின் இரண்டு நெருங்கிய சகாக்கள்hன ஜோனட்டன் உரிச், முன்னாள் பேச்சாளர் எலிபெல்ட்ஸ்டெய்ன் இருவரும் இஸ்ரேலில் கத்தார் குறித்து நல்லபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக, பொதுமக்கள் தொடர்பாடல் நிறுவனமொன்றை நடத்துவதற்காக பணம் பெற்றுள்ளனர். கத்தார் ஹமாசின் சார்பில் யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரு சூழ்நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சேர்ந்த ஒருவர் மூலமே இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அந்த நபரும், ஜோனட்டன் உரிச் என்பவரும், கத்தார் குறித்து சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் எகிப்து குறித்து எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவும் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தினார்கள் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211025
  9. Published By: DIGITAL DESK 2 03 APR, 2025 | 04:53 PM (இராஜதுரை ஹஷான்) 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு காலப்பகுதில் அமுல்படுத்தப்படவுள்ள ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை (09) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழிப்பு என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது அந்தப் பொறிமுறையை வலுப்படுத்தும் முதன்மையான அரச கட்டமைப்பாக காணப்படுகிறது. ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் வலுவான ஊழலுக்கு எதிரான தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் முதன்மைப் பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஊழல் எதிர்ப்புக் கொள்கை உருவாக்கம் மற்றும் கண்காணித்தல் வரையான ஆணைக்குழுவின் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் உட்பட ஊழலுக்கு எதிரான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தின் 5ஆவது பிரிவின் கீழான கடப்பாடுகளுக்கு அமைவாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தேசிய செயற்திட்டம் (2019-2023) 2019.02.05 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது. 2019-2023 காலப்பகுதிக்கான தேசிய செயற்திட்டத்தின் அடைவுகள் மீளாய்வுக்கு உட்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட விடயங்கள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் ஒழிப்பு எதிர்ப்பு செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரின் பங்களிப்புடன் 2025-2029 வரையான காலப்பகுதிக்கான புதிய ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் இறுதி வரைவு, 2025.01.21 ஆம் திகதியன்று தொடர்புடைய தரப்பினரின் பரிசீலனைக்காக ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211043
  10. 03 APR, 2025 | 08:13 PM "மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில் ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர். ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 850 மாற்று திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை ஏர் முனை மாற்று திறனாளிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது. இன்றை கூட்டத்தில் ஏறாவூர் பற்று மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட நிதியுதவியை வழங்குவதற்கு சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் முன் வந்ததோடு அதனை ஆரம்பிக்கும் முகமாக முதல் மாதத்திற்கான காசோலையை சங்க நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார். அத்துடன் ஒரு வருடத்திற்கான நிதியுதவியையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். ஏறாவூர் பற்றில் உள்ள மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான நிரந்தர பந்தல், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதற்கான உதவிகளை புலம்பெயர் சமூகம் ஊடாக பெற்றுத் தருவதாகவும், மாற்று திறனாளிகள் குடும்பத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தேவைப்படும் உதவிகளை பெற்று தருவதற்கும், விசேட தேவையுடைய குடும்பங்களின் சில சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், திடீர் அனர்த்தங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படும் போது மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கான ஒரு தொகை நிதியை திரட்டுவதற்கான உதவிகளை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக அங்கு இருப்பதாக தெரிவித்தார். இதன் போது அடுத்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து மாற்று திறனாளிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/211062
  11. 03 APR, 2025 | 06:55 PM கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குரியது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (03) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனை கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார். ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என்றார். https://www.virakesari.lk/article/211061
  12. அண்ணை, எங்கள் வீட்டில் பசு வளர்த்த காலங்களில் 20 நாட்களுக்கு மேல் கன்று மட்டுமே ஊட்டும், ஆனால் கடும்புப் பாலை கன்றுக் குட்டியால் முழுதும் அருந்த முடியாத சூழலில் மடி கட்டாமல் இருக்க கடும்புப்பாலை எடுப்பார்கள்.
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அல்பேஷ் கர்கரே பதவி, பிபிசிக்காக 3 ஏப்ரல் 2025, 12:36 GMT மகாராஷ்டிராவின் நவி மும்பையின் புறநகர் பகுதியான நெருலின் பரபரப்பான சாலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிடைத்த ஒரு சிறிய துப்பின் மூலம் இந்த கொலையை செய்தவர் யார் என காவல்துறை தேடிவந்தது. சடலம் குறித்த தகவலை அறிந்தவுடனேயே அந்த இடத்துக்கு விரைந்த காவல்துறை, கொலையாளி யார் என விசாரிக்கத் தொடங்கியது. எனினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியொரு மோசமான கொலையை செய்தவர், எந்தவொரு ஆதாரத்தையும் அங்கு விட்டு வைக்கவில்லை. எனினும், பல்வேறு கோணங்களில் சில நாட்கள் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, சாலையில் இருந்த ஒரு தெருநாயின் மூலம் கொலையாளியை கண்டுபிடித்தனர். பல்லடம் ஆணவக்கொலை: அவசரமாகப் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? "ஆசிரியர் இப்படி அடிப்பார் என நினைக்கவில்லை" - ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை - என்ன நடந்தது? கடன் கொடுக்க மறுத்த வங்கியிலேயே கொள்ளை - ரூ.13 கோடி தங்கத்தை கிணற்றில் பதுக்கிய உசிலம்பட்டி சகோதரர்கள் குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா? என்ன நடந்தது? நவி மும்பையின் நெருல் பகுதியில் ஏப்ரல் 13, 2024 அன்று காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள சாலையொன்றில் காலை 6.30-7.00 மணிக்குள் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார். இந்த தகவல் தெரிந்தவுடனேயே போலீஸார், நெருல் பகுதியின் செக்டார் 10-க்கு சென்றடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்நபரை நெருல் போலீஸார் மருத்துவமனைக்கு அனுமதித்த நிலையில், அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, தன் விசாரணையை ஆரம்பித்தது. பட மூலாதாரம்,ALPESH KARKARE பல்வேறு கோணங்களில் விசாரணை இதுதொடர்பாக விசாரிக்க இரண்டு அல்லது மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவம் நெருல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை காவல் ஆணையர் விவேக் பன்சாரே, உதவி ஆணையர் ராகுல் கெய்க்வாட் ஆகியோரின் தலைமையில், நெருல் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் தனாஜி பகத்தின் வழிகாட்டுதலில் விசாரணை தொடங்கியது. டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது?7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீது 26% வரி விதித்த டிரம்ப் - பிரதமர் மோதி பற்றிக் கூறியது என்ன?3 ஏப்ரல் 2025 அந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள தெருக்களில் கடைகளில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆராயத் தொடங்கினர். குற்றப் பின்னணி கொண்ட சிலரை காவல் துறையினர் தடுப்புக் காவலில் வைத்தனர். விசாரணையில் இறந்த நபர் குப்பைகளை சேகரிப்பவர் என போலீஸார் கண்டறிந்தனர். எனினும், இந்தக் கொலையை செய்தவர் யார், ஏன் செய்தார் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாள் முழுக்க ஒரு போலீஸ் குழு சிசிடிவி பதிவுகள் முழுவதையும் ஆராய்ந்தது. மற்றொரு குழு, சம்பவ இடத்தில் இருந்த பலரிடம் விசாரணை நடத்திவந்தது. எனினும், இரண்டு நாட்கள் கழித்தும் உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நீடித்த சிக்கல் சிசிடிவி பதிவுகள், சந்தேக நபர்கள், ஊடக செய்திகள் என பலவற்றை ஆராய்ந்தும் இறந்த நபர் குறித்தோ, கொலையாளி குறித்தோ மேலதிக தகவல்கள் கிடைக்காமல் விசாரணையில் பல சிரமங்கள் ஏற்பட்டன. ஆரம்பகட்ட விசாரணையில் இறந்த நபர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக தெரியவந்தது. எனினும், இறந்த நபரின் பாக்கெட்டுகளில் எதுவும் இல்லை என்பதால், அவர் யார் என்பதை விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகேவும் அவருடைய குழுவும் சிசிடிவி பதிவு ஒன்றில் இறந்த நபரை அடையாளம் கண்டனர். அதில், இரு நபர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது தெரியவந்தது. கழிவறை இருக்கும் பகுதிக்கு அருகில் இரு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிசிடிவி பதிவில் தெரியவந்தது. அதன்பின், சிசிடிவி பதிவில் எதுவும் தெரியவில்லை. இதனால், விசாரணையில் பல சிரமங்கள் ஏற்பட்டன. பூஞ்சை உதவியுடன் உணவுக் கழிவுகளை தங்க நிறத்தில் சுவைமிக்க உணவாக மாற்றும் சமையல் கலைஞர்8 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் மோதியின் இலங்கை பயணம்: அதானி, தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றி விவாதிக்கப்படுமா?3 ஏப்ரல் 2025 மேற்கொண்டு விசாரித்தபோது, உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகே, சம்பவம் நடந்த இடத்துக்கு சிறிது தொலைவில் ஒருவர் இருந்ததை சிசிடிவி பதிவில் கண்டறிந்தார். எனினும், முகம் தெளிவாக தெரியாததால், விசாரணையில் சிக்கல்கள் தொடர்ந்தன. இறுதியாக, தாகேவும் அவருடைய சகாக்களும் சந்தேகத்துக்கிடமான நபருடன் வெள்ளைக் கோடுகள் கொண்ட கருப்பு நாய் ஒன்று இருந்ததை சிசிடிவி பதிவுகளில் கண்டனர். இன்னும் சில சிசிடிவி பதிவுகளிலும் அந்நபருடன் அந்த நாய் இருந்தது தெரியவந்தது. எனினும், அந்த நாய் மற்றவர்களை பார்க்கும்போது குரைப்பதையும், அந்த நபரிடம் மட்டும் குரைக்காமல் இருப்பதும் சிசிடிவியில் இருந்தது. அந்த நபரிடம் மட்டும் தெரு நாய் குரைக்காமல் இருப்பது ஏன் என போலீஸார் ஆச்சரியப்பட்டனர். அந்நபருக்கும் அந்த நாய்க்கும் இடையே ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர். எனவே, அந்த நாயை கண்டுபிடிக்க போலீஸார் முயற்சித்தனர். நாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிக்கிய கொலையாளி நெருலில் உள்ள ஷிர்வானே பகுதியில் போலீஸார் அந்த நாயை கண்டுபிடித்தனர். அப்பகுதியின் நடைபாதையில் ஒருவருடன் அந்த நாய் இருந்தது. சிசிடிவி பதிவுகளில் பார்த்த நாயைப் போன்றே அச்சு அசலாக அந்த நாய் இருந்தது. அந்த நாய் குறித்து அப்பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்தபோது, வழக்கமாக புர்யா என்பவருடன் அந்த நாய் இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். ஒருநாள் புர்யா எனும் நபர், நடை மேம்பாலத்தில் உறங்கிக் கொண்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்நபரை காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரித்தனர். அந்நபர் என்ன நடந்தது என்ன என்று போலீஸாரிடம் கூற ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கொலைக்கு என்ன காரணம்? போலீஸாரின் கூற்றுப்படி, இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் புர்யா என்கிற மனோஜ் பிரஜாபதி (20). சில கடைகளில் அவர் கிளீனராக வேலை செய்துவந்தார். கொலையான 45 வயது நபர், மனோஜ் பிரஜாபதியை சில சமயங்களில் அடித்து, அவர் உறங்கும்போது பாக்கெட்டில் இருந்து பணத்தைத் திருடிச் சென்றுவிடுவார் என்பதால் அவரை கொலை செய்ததாக மனோஜ் கூறியுள்ளார். ஏப்ரல் 13 அன்று இரவு, கொலையான நபருக்கும் மனோஜுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. மனோஜ் பிரஜாபதி கோபமடைந்து, அந்நபரை அங்கிருந்த தடியால் தலையில் தாக்கியுள்ளார், இதனால் அந்நபரின் தலையிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. கொலை எப்படி நிகழ்ந்தது என நடந்த எல்லாவற்றையும் மனோஜ் ஒப்புக்கொண்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மனோஜை பார்த்து நாய் குரைக்காதது ஏன்? அந்த தெரு நாய்க்கு தினமும் உணவளிப்பதால், தன்னைப் பார்த்து குரைக்காது என மனோஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். "எனக்கு அந்த நாயை மிகவும் பிடிக்கும். எனவே, அது மற்றவர்களை பார்த்து குரைக்கும், ஆனால் என்னை பார்த்து குரைக்காது. என்னுடன்தான் அந்த நாய் இருக்கும்" என மனோஜ் தெரிவித்துள்ளார். 'இது வர்த்தகப் போரை ஏற்படுத்தும்' - டிரம்ப் அறிவிப்பால் கொந்தளிக்கும் உலகத் தலைவர்கள்3 ஏப்ரல் 2025 தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் விசாரணைக்கு உதவிய தெருநாய் பிபிசி மராத்தியிடம் பேசிய அப்போதைய உதவி காவல் ஆய்வாளர் சச்சின் தாகே, "இந்த வழக்கை விசாரித்தபோது பல சிக்கல்கள் இருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில்தான் அந்த நபரை நாங்கள் கண்டுபிடித்தோம்" என தெரிவித்தார். "காவல்துறையினர், அதிகாரிகளின் அனுபவம் இந்த வழக்கில் எங்களுக்கு உதவியாக இருந்தது. சிசிடிவி பதிவுகள், போலீஸாருக்கு தகவல் அளிப்பவர்கள், சந்தேக நபர்கள் மூலம்தான் நாங்கள் அந்த நபரை கண்டுபிடித்தோம். இந்த வழக்கில் முக்கியமான துப்பாக அந்த நாய்தான் இருந்தது" என்றார். இதையடுத்து, மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். போலீஸ் விசாரணையில் அந்நபர் மும்பை மற்றும் நவி மும்பைக்கு வேலைக்காக புலம்பெயர்ந்த ஒருவர் என்பது தெரியவந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly5vpx2k61o
  14. LIVE 15th Match (N), Eden Gardens, April 03, 2025, Indian Premier League Kolkata Knight Riders 200/6 Sunrisers Hyderabad (7/20 ov, T:201) 51/4 SRH need 150 runs in 78 balls. Current RR: 7.28 • Required RR: 11.53 • Last 5 ov (RR): 42/2 (8.40) Win Probability:SRH 4.71% • KKR 95.29%
  15. நேற்று மழை பெய்தபோது மண்வாசம் வீசியது அண்ணை.
  16. Published By: RAJEEBAN 03 APR, 2025 | 05:04 PM குச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என 'குச்சவெளி" நில ஆக்கிரமிப்பு குறித்து ஆவணப்படத்தின் இயக்குநர் செல்வராஜா ராஜசேகர் தெரிவித்துள்ளார். மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தயாரித்துள்ள குச்சவெளி ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தல் கலந்துரையாடல் கொழும்பு லக்ஸ்மன்கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராஜா ராஜசேகர் மேலும் தெரிவித்ததாவது, குச்சவெளி ஆவணப்பட காட்சிப்படுத்தலில் பெரும் சவால்களை எதிர்கொண்டோம். அந்த இடத்திற்கு செல்வது மக்களை சந்திப்பது வீடியோ எடுப்பது எல்லாமே சவாலான விடயங்கள். சில சந்தர்ப்பங்களில் பின்வாங்கினோம். அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அந்த பகுதிகளில் கண்காணிப்பும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. குச்சவெளியை பவானி பொன்சேகாபரிந்துரைத்ததும் அது சவாலான விடயமாக விளங்கியது. குச்சவெளியில் உள்ள 32 விகாரைகளில் 24 விகாரைகளிற்கு நான் தனியாளாக பயணம் செய்துள்ளேன். அங்கு இடம்பெறும் நில அபகரிப்பிற்கு ஒரு சாட்சியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். என்னுடைய பெயரை மதத்தை மொழியை மாற்றவேண்டிய நிலையேற்பட்டது. சுற்றுலாப்பயணிக்கு வழிகாட்டி போல அங்கு சென்றேன். தூண்டிலில் மீன்பிடித்தேன். சில காட்சிகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த ஆவணப்படத்தில் நீங்கள் டிரக்டரில் அரிசி மூடையை ஏற்றிச்செல்வதை பார்க்கலாம் அது தமிழ்மக்களின் நிலத்தில் சிங்களவர்கள் விவசாயம் செய்து கொண்டு செல்லும் நெல். நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை அதனை அறிந்த பிக்கு மலையிலிருந்து தனது ஆட்களுடன் கீழே வந்து எங்களை சுற்றிவளைத்தார். காலை பத்து மணிமுதல் நான்கு மணிவரை நாங்கள் காட்டு பாதை ஒன்றின் ஊடாக பத்து கிலோமீற்றர் நடந்து தப்பி வந்தோம். இந்த ஆவணப்படத்திற்காக இவ்வாறான பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. புல்மோட்டை பொன்மலைக்குடா முஸ்லிம் மக்களின் மையவாடி பிரச்சினை தொடர்பாக குறித்த ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்தில் வீடியோப் பதிவுகளை மேற்கொண்டிருந்த போது கடற்படையைச் சேர்ந்த இருவர் முச்சக்கரவண்டியில் அச்சுறுத்தும் தொனியும் நடந்துகொண்டார்.' நான் வரலாற்றுத்துறை சார்ந்த ஆய்வாளனோ அல்லது கல்வியாளனோ அல்ல. சரியான ஆண்டுகளும் தெரியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பின்பற்றப்பட்ட ஒரு நடைமுறை ஏதோவொரு காரணமாகஇ ஆக்கிரமிப்பாகக் கூட இருக்கலாம் அது அப்படியே அழிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னர் வந்த ஒரு சமூகம் இனக்குழுவொன்று அந்த இடத்தில் வழிபாட்டு நடைமுறைகளை கடந்த 500 வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. இப்போது திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்துவார்கள். இதுவரை காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்களின் அடையாளத்தை பாரம்பரியத்தை கலாசாரத்தை பொருளாதாரத்தை அந்த மண்ணுடனான அவர்களது வாழ்வியலை ஒரு இரவில் அறுத்துதெறிந்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிலைநிறுத்துவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. 2500 ஆண்டுகால வரலாறு முக்கியத்துவம் அளிக்கப்படும்இ 500 ஆண்டுகால மக்களது வாழ்வியல் சான்றுகள் மீது கொள்ளத் தேவையில்லை என்பதா அர்த்தம். அப்படியென்றால் இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்தான் ஆகிறது. அவர்களுக்கு அப்படி ஒன்றும் வழங்கவேண்டிய அவசியமில்லைஇ இந்திய வம்சாவளிகள்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா? ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில் காணப்படும் விகாரை ஊடாகவே தெட்டத்தௌிவாகிறது. இது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அமைப்பு என்று. https://www.virakesari.lk/article/211041
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்தாண்டு டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு அரசமுறை பயணமாக வந்திருந்தபோது கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார். காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன? படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள் மீண்டும் கரம் கோர்த்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் - காரணம் என்ன? இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். மேலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், இந்திய பிரதமருடன் சந்திப்புகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிகிறது. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பௌத்தர்களின் புனிதத் தலமாக போற்றப்படும் அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் மோதி கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் மோதி கலந்துகொள்ள உள்ளார். அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த பயணத்தின் போது கையெழுத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் வைப்பு திட்டத்தை கைவிட்ட அரசு - விலை உயர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை இந்தியாவால் வழங்க முடியுமென இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையில், 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக, தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது. எனினும், இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை, அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அதனை முழுமையாக அமல்படுத்த இலங்கை மத்திய அரசாங்கம் மறுத்து வருகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், தமிழர்களுக்கான தீர்வாக 13வது திருத்தத்தையேனும் முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையக தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது. மேலும், பௌத்த மத முன்னேற்றத்துக்காக இந்தியா பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கையில் முன்னெடுத்து வருகின்றது. கடந்த 2014ல் மோதி முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தற்போதுவரை மூன்று முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மோதி முதல் தடவையாக 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் மாதக் கணக்கில் நீடிப்பது ஏன்? 5 கேள்வி பதில்கள்2 ஏப்ரல் 2025 டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்2 ஏப்ரல் 2025 இந்தநிலையில், மோதி நான்காவது தடவையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் புதிய அரசாங்கம் இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர், உலக அரசத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது. மோதியின் இம்முறை பயணத்தை இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? வக்ஃப் என்றால் என்ன? வக்ஃப் சட்டத்திருத்த மசோதா கூறும் மாற்றங்கள் என்ன?2 ஏப்ரல் 2025 விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ்2 ஏப்ரல் 2025 தமிழ் அரசியல் கட்சிகளின் பார்வை மோதி இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம். இந்தியாவினால் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோதியிடம் தாம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமரிடம் கோர உள்ளதாக, மனோ கணேசன் தெரிவித்தார் ''இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பிரதானமான காரணம் பொருளாதார வீழ்ச்சி. அதிலிருந்து எழுந்து விடவில்லை. இன்னும் இரண்டு வருடங்களிலே மீள் திருத்தப்பட்ட கடன்களை கட்ட வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஐ.எம்.எஃப் பிரதான செயற்பாட்டில் அது பிரதானமான அங்கமாக இருக்கின்றது. ஆகவே, இந்தியா முன்னேறுகின்றது என்றால், பக்கத்தில் இருக்கின்ற நாமும் அவர்களோடு சேர்ந்து முன்னேற வேண்டும். தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையின் அதிகாரப் பகிர்வு என்பது தேவையான விடயமாக இருக்கின்றது." என்கிறார் அவர். தற்போது ஆளும் கூட்டணியின் முதன்மையாக அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம், அதிகார பகிர்வு, மாகாண சபை ஆகியவற்றுக்கு எதிராக முன்னர் போராடியதாக அவர் கூறுகிறார். "மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டாலும் கூட மாகாண சபைக்கு எதிராக அநுர குமாரவையும் மீறி, அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முரணான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றார். உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம்தான் எங்களுக்கு இருக்கின்றது." என்கிறார் அவர். மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன், வதேராவின் அதிரடியில் தடுமாறிய லக்னௌ2 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திருநங்கை மகளின் திருமணத்திற்காக போராடிய தாய் - நெகிழ வைக்கும் பாசப் போராட்டம்2 ஏப்ரல் 2025 'ஓ.சி.ஐ முறையை இலகுப்படுத்துக' "எங்களுடைய அரசியல் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைக்க விரும்பவில்லை. அரசாங்கம், எதிர்க்கட்சிகளிடம் அந்த கோரிக்கைகளை வைப்போம். ஏனெனில், இந்தியாவிடம் அக்கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் அவை நடக்காது என்று எங்களுக்கு தெரியும். " என்றும் கூறுகிறார் மனோ. இந்தியாவிடம் அவர் முன்வைக்க உள்ள சில பொதுவான கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார். பெருந்தோட்ட மலையக மக்களுக்கான பொருளாதார உதவிகள் கல்வி உதவிகளை வழமை போன்று இந்தியா அதனை அதிகரிக்க வேண்டும். இந்திய நாட்டிலே ஓ.சி.ஐ என்ற முறை இருக்கின்றது. இந்திய வம்சாவளி மக்களுக்கு, கடல் கடந்த பிரதிகள் என்ற அந்தஸ்தை வழங்கினார்கள். அந்த அந்தஸ்து இலங்கைக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சமீப காலத்தில் அதனை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஓ.சி.ஐ அந்தஸ்தை வழங்க வேண்டும். படக்குறிப்பு,ஸ்ரீதரன் கூட்டாட்சி தீர்வு சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதற்கான ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஈழத் தமிழர்களுக்கு காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஈழத் தமிழர் சார்பான தரப்பாக இந்தியாவே அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது, அந்த ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தமிழர் தரப்புக்கு முழுமையாக இதுவரை தெரிய வந்ததில்லை." என கூறுகிறார் ஸ்ரீதரன். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்கள், இலங்கையின் இறையாண்மை, இந்தியாவின் இறையாண்மை தொடர்பாகவே அதில் அதிகமாக பேசப்பட்டிருப்பதாக கூறப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். "இந்திய பிரதமரின் வருகையால் தங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு அல்லது அரசியல் எதிர்காலம், நிரந்தரமான அரசியல் வாழ்வு கிடைக்கும் என்ற ஈழத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் பிரதமரின் வருகை அமையும் என நம்புகின்றோம்." என்கிறார் அவர். " 2015ம் ஆண்டில் பாரத பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சமஷ்டி (கூட்டாட்சி) முறை பற்றி கூறியிருந்தார். சமஷ்டி அரசியல் தீர்வுதான் தமிழர்களுக்கு பொருத்தமானது. அந்த வகையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்," என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார். ஐபிஎல் போட்டியில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்து திருட்டில் ஈடுபட வைத்த கும்பல் - இன்றைய முக்கிய செய்திகள்2 ஏப்ரல் 2025 டிரம்பின் பரஸ்பர வரி: இறக்குமதிகள் மீது இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறது? எளிய விளக்கம்3 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,மலையக மக்களுக்கான தொடர் உதவிகளை எதிர்பார்ப்பதாக, செந்தில் தொண்டமான் கூறுகிறார் மலையக மக்களுக்கு இந்தியா இதுவரை பெரும் உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதே உதவிகளை தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார். ''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அரசியலையும் தாண்டிய ஒரு கலாசார உறவு காணப்படுகின்றது. இரண்டு பேரும் சகோதரர்கள். இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இலங்கையுடன் முதன்முதலில் இருந்தது இந்தியா. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக இந்தியா பெரும் உதவிகளை வழங்கியது." என்றார். பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்திய பிரதமர் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தருகின்றார். "உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த வகையில் இலங்கை பயணிக்கும் போது பொருளாதார ரீதியில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இந்தியா அரசாங்கம் மலையக மக்களுக்காக பெரும் உதவிகளை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இந்தியா அதிக உதவிகளை வழங்கியுள்ளது. அதே உதவிகளையே நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்'' என செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். டிரம்பின் '3வது முறை அதிபராகும்' ஆசை - சாத்தியமாக வல்ல கனவா? கானல் நீரா?2 ஏப்ரல் 2025 இணையத்தைக் கலக்கும் ஜிப்லி - இதை உருவாக்கியவர் பழைய வீடியோவில் கூறியது என்ன?1 ஏப்ரல் 2025 சீன விவகாரம், அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், தமிழர் பிரச்னை, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை பயணத்தின் போது கவனம் செலுத்தப்படக்கூடும் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,SIVARAJA படக்குறிப்பு,மோதியின் பயணம் பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும் என்கிறார் சிவராஜா ''இந்திய பிரதமரின் வருகையானது, மிக முக்கியத்துவமான காலக் கட்டத்தில் நடைபெறுகின்றது. இந்த அரசாங்கம் சீன சார்பான அரசாங்கம் என்ற ஒரு முத்திரை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனது ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக அதன் பிரதமரே நேரடியாக வருகின்றார் என்பது இந்த அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும்." என்கிறார் அவர். "அதானி காற்றாலை திட்டம் கிடப்பில் இருக்கின்றது. எனவே, அது புத்துணர்ச்சி பெறுமா? அதேபோன்று, பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை இந்தியா செய்யவுள்ளதாக ஒரு தகவல் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பதை பொருத்து இந்த பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரியும். தமிழர்கள் திட்டத்தில் இந்தியா நிச்சயம் வலியுறுத்தும். பிரதமர் மோதி இந்த விஜயத்தில் அதனை சொல்வார் என நான் நினைக்கின்றேன்." என்றார் அவர். 13வது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அது நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. "ஆனால், இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் தமிழர் பிரச்னை குறித்து நிச்சயம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றபோது கூட, இது தொடர்பான விடயத்தை இந்தியா பேசவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. எனவே, இந்த பயணத்தில் மோதி அதனை வலியுறுத்துவார் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது," என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2delxgg9lyo
  18. 03 APR, 2025 | 04:16 PM பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/211035
  19. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைடன்ஸ் 8 விக்கெட்களால் அபார வெற்றி Published By: VISHNU 03 APR, 2025 | 02:43 AM (நெவில் அன்தனி) பெங்களூரு எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 14ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சகலதுறைகளிலும் அபரிமிதமாக விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்களால் அபார வெற்றியை ஈட்டியது. தனது முதல் இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸையும் சென்னை சுப்பர் கிங்ஸையும் இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இந்தப் போட்டியில் தனது முதலாவது தோல்வியைத் தழுவியது. அதேவேளை தனது முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ், அதனைத் தொடர்ந்து மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளையும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகொண்டது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்களில் சிரமத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (14), விராத் கோஹ்லி (7), தேவ்டத் படிக்கல் (4), அணித் தலைவர் ரஜாத் பட்டிடார் (14) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். (42 - 4 விக்.) மத்திய வரிசையில் லியாம் லிவிங்ஸ்டோன், 33 ஓட்டங்களைப் பெற்ற ஜித்தேஷ் ஷர்மா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜித்தேஷ் ஷர்மா ஆட்டம் இழந்த பின்னர் க்ருணல் பாண்டியா 5 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (104 - 6 விக்), லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர். லியாம் லிவிங்ஸ்டோன் 40 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாய் கிஷோர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றீட்டியது. அணித் தலைவர் ஷுப்மான் கில் (14), சாய் சுதர்ஷன் ஆகிய இருவரும் 28 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷுப்மான் கில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஜொஸ் பட்லருடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்த சாய் சுதர்ஷன் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஜொஸ் பட்லர், ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றி அடையச் செய்தனர். ஜொஸ் பட்லர் 39 பந்துகளில் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடனும் ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் 18 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்கள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன்: மொஹம்மத் சிராஜ். https://www.virakesari.lk/article/210969
  20. மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் யாழிலிருந்து 17 மாற்றுத்திறனாளிகள் 02 APR, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான தடகள போட்டிகள் ஹோமாகம, தியமக மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (03) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 600 மாற்றுத்திறனாளிகள் தடகள போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். யாழ். மாவட்டதிலிருந்து 17 மாற்றுத்திறனாளிகள் இப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். அவர்களில் பலர் பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுககான கனிஷ்ட ஆசிய பரா விளையாட்டுப் போட்டிக்கான திறன்காண் போட்டியாகவும் அமைகின்றது. பங்குபற்றுவோர் விபரம் தேவராசா சிவரூபி (சண்டிலிப்பாய் - TF/45, 46, 47 வகைப்பிரிவு - நீளம் பாய்தல். குணசேகரம் ஆனந்தி (சண்டிலிப்பாய் - T/F/57 வகைப்பிரிவு - தட்டெறிதல், குண்டெறிதல் வசந்தன் அழகுராணி (சண்டிலிப்பாய் - T/F/63, 64 வகைப்பிரிவு - குண்டெறிதல் ராசகுமார் யதுஜா (சண்டிலிப்பாய் - T/F/45, 46, 47 வகைப்பிரிவு நீளம் பாய்தல்) விஜயகுமாரன் விஜயலதன் (கோப்பாய் - T/F11 வகைப்பிரிவு தட்டெறிதல்) கணேஷ் பவளரஞ்சனி (கோப்பாய் - T/F/57 வகைப்பிரிவு தட்டெறிதல், குண்டெறிதல்) சார்ள்ஸ் அகிலோசியஸ் (மருதன்கேணி - T/F/57 வகைப்பிரிவு குண்டெறிதல்) செல்வராசா அஜந்தன் (பருத்தித்துறை - TF/45, 46, 47 வகைப்பிரிவு 100 மீற்றர்) தர்மலிங்கம் ஸ்ரீகாந்த் (பருத்தித்துறை - T/F/41, 40 வகைப்பிரிவு குண்டெறிதல்) கஜேந்திரன் ரஞ்சித்குமார் (நல்லூர் - T/F/57 வகைப்பிரிவு குண்டெறிதல்) ஜோன் கொலின்ஸ் விஜயலக்ஷ்மி (நல்லூர் - T/F/57 வகைப்பிரிவு குண்டெறிதல்) சூரியகுமார் திவன்ராஜ் (ஊர்காவற்றுறை - TF/20 வகைப்பிரிவு 100 மீற்றர்) பேதுருபிள்ளை குமுதினி (ஊர்காவற்றுறை - TF/45, 46, 47 வகைப்பிரிவு 100 மீற்றர், நீளம் பாய்தல்) அருந்தவன் நிலக்சன் (சங்கானை - TF/20 வகைப்பிரிவு 100 மீற்றர்) பாலச்சந்திரன் கிருஷிகா (சங்கானை - TF/41/40 வகைப்பிரிவு தட்டெறிதல்) சந்திரகுமார் கிசோபன் (தெல்லிப்பழை - TF/20 வகைப்பிரிவு 100 மீற்றர்) மனோகரன் விதுஷன் (யாழ்ப்பாணம் - TF/20 வகைப்பிரிவு 100 மீற்றர்) இந்த மாற்றுத்திறனாளிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கிய யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் மருதலிங்கன் பிரதீபன், அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார். இந்த வைபவத்தில் பிரதம கணக்களார் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி ரி. உமாசங்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளுடன் அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் கொழும்பை நோக்கி யாழ்ப்பாணத்திலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் புறப்பட்டனர். https://www.virakesari.lk/article/210948
  21. பாலஸ்தீன துணைமருத்துவர்கள் படுகொலை - இஸ்ரேல் தெரிவிப்பதை நிராகரித்தார் உயிர் பிழைத்தவர் Published By: RAJEEBAN 03 APR, 2025 | 12:30 PM பாலஸ்தீன துணைமருத்துவர்களை இஸ்ரேல் கொலை செய்தவேளை அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் இது தொடர்பில் இஸ்ரேல் தெரிவித்துள்ளவற்றை நிராகரித்துள்ளார். எனது சகாக்களிற்கு என்ன நடந்ததுஎன்பதை பார்த்த உயிர்தப்பிய ஒரேயொரு நபர் நான்தான் என முன்தெர் அபெட் கையடக்க தொலைபேசியில் தனது சகாக்களின் படங்களை பார்த்தவாறு தெரிவித்தார். மார்ச் 23ம் திகதி அம்புலன்ஸின் முன்பக்கத்திலிருந்த தனது இரண்டு சகாக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்புலன்ஸின் பின்பக்கத்தின் ஊடாக நிலத்தில் குதித்து இவர் உயிர்தப்பினார். இந்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். நாங்கள் அதிகாலையில் எங்களின் தலைமையகத்திலிருந்து வெளியேறினோம் என அவர் காசாவில் பணிபுரியும் பிபிசியின் நம்பகதன்மை மிக்க சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்தார். துப்பாக்கி சூடு காயமடைந்தவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும்பாலஸ்தீன செம்பிறை சங்கத்தினர்சிவில் பாதுகாப்பு அமைப்பினர்இபாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரவாவில் கூடி அதிகாலையில் புறப்பட்டதாக அவர் தெரிவித்தார். "4.40 மணியளவில் முதல் இரண்டு வாகனங்கள் புறப்பட்டு சென்றனஇ4.50 அளவில் இறுதி வாகனம் வந்தது ஐந்து மணியளவில் ஐநா அமைப்பின் கார் மீது வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது" என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 ஹமாஸ் உறுப்பினர்களும் பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் ஒரு உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும் முன்தெர் இதனை நிராகரித்துள்ளார். 'பகலும் இரவும் ஒரே மாதிரியே செயற்படுவோம் வெளி உள் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இது பாலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் என தெரிவிப்பதற்கான அனைத்து விடயமும் காணப்பட்டது. வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வரை அதன் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்." 'என்னை இஸ்ரேலிய படையினர் வாகனத்தின் சிதைவுகளிற்குள் இருந்து வெளியே இழுத்தனர். கண்களை கட்டினர் கைதுசெய்தனர். 15 மணித்தியலாங்கள் விசாரணை செய்தனர்" என அவர் தெரிவித்துள்ளார். அம்புலன்சினை ஹமாஸ் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அனைவரும் பொது மக்கள் நாங்கள் எந்த குழுவையும் சேர்ந்தவர்கள் இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக அம்புலன்ஸ் சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம் வேறு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211013
  22. டிரம்பின் வரி வதிப்பு நடவடிக்கையால் உலகளவில் ஏற்படப் போகும் பாதிப்புகள் பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக சேவை 2 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் புதிய வரி விதிப்புகள் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புகளுக்காக உலகம் முழுவதும் காத்திருந்த நேரத்தில், உலகளாவிய பங்குச் சந்தைகள் நிலையற்றதாக உள்ளன. அமெரிக்காவில் பங்குச்சந்தைகளின் நேரம் முடிவடைந்ததும் மாலை 4 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி ஏப்ரல் 2ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு உலக நாடுகளுக்கான புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நடைபெற்ற இந்த அறிவிப்பு நிகழ்ச்சிக்கு "அமெரிக்காவை மீண்டும் செழிப்பாக மாற்றுவோம்" (Make America Wealthy Again) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்காவின் புதிய "விடுதலை தினம்" என்று குறிப்பிட்டுள்ளார் டிரம்ப். புதிய வரிகள் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட நாடுகளை மட்டுமல்ல, "அனைத்து நாடுகளையும்" பாதிக்கக்கூடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். சீனாவில் இருந்து வரும் பொருட்களான அலுமினியம், எஃகு மற்றும் வாகனங்கள் மீதான தற்போதைய வரிகளுடன் சேர்த்துக் கூடுதல் வரிகளும் விதிக்கப்படுவதால், இந்தக் கட்டண அதிகரிப்பு எவ்வாறு உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பது குறித்து காணலாம். 'இந்தியா மிகவும் மோசம்' - டிரம்ப் கூறியது என்ன? இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி?26 நிமிடங்களுக்கு முன்னர் வக்ஃப் மசோதா: மக்களவையில் சவால் விட்ட ஆ.ராசா - மத்திய அமைச்சரின் பதில் என்ன?2 ஏப்ரல் 2025 உலகளாவிய வரிவிதிப்பு போர் பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் நடவடிக்கைகளுக்கான மோசமான எதிர் விளைவுகளில் ஒன்று உலகளாவிய வரிவிதிப்புப் போர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். "கோட்பாடுகளின்படி, வெளிநாட்டுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்நாட்டுப் பொருட்களுக்கான மானியங்களாகச் செயல்படுகின்றன, இறக்குமதியைக் குறைத்து நிகர ஏற்றுமதியை அதிகரிக்கின்றன" என்று அமெரிக்க வரி விதிப்புகளைக் குறிப்பிடுகிறது, பிரிட்டனில் இயங்கி வரும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் பொருளாதார ஆலோசனை நிறுவனம். இருப்பினும், இது மற்ற நாடுகள் தங்களின் வரிவிதிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பதிலடி தரும் சூழலை உருவாக்கக் கூடும். இது அனைவருக்கும் உவப்பற்ற விளைவை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போது உலக நாடுகளின் நிலையை கைதிகளின் குழப்பக் கோட்பாட்டுடன் (Prisoner's Dilemma theory) ஒப்பிட்டு காணலாம். ஒரே குற்றத்தை இணைந்து செய்து சிக்கியுள்ள இரண்டு கைதிகளின் மனநிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இதில் ஒரு கைதி தனது சொந்த நலன்களை மட்டுமே மனதில் கொண்டு சுயநலமாக முடிவெடுத்து மற்றவரைக் காட்டிக் கொடுத்தால் இருவரின் நிலையும் சிக்கலாகிவிடும். மாறாக இருவரும் அமைதியாக இருந்ததால் தலா ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மற்றவர் அமைதியாக இருந்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டவர் விடுதலை செய்யப்படுவார், இன்னொருவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுவார். இருவரும் ஒப்புக்கொண்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் சிறையிலிருக்கும் கைதிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாது என்பதால் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதே இருவருக்கும் சமமான, சாதகமுடைய குறைந்தபட்ச பாதிப்புக்கு வழி வகுக்கும். ஆஸ்டன் வணிகப் பள்ளியின் பொருளாதார வல்லுநர்கள், டிரம்பின் வரிகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகப் பல்வேறு சூழ்நிலைகளை மாதிரியாகக் கொண்டுள்ளனர். அதில் "பரஸ்பர வரிகளுடன் கூடிய முழு உலகளாவிய பதிலடி" என்பதும் இருக்கிறது. முழு அளவிலான வர்த்தகப் போர் ஏற்படும் பட்சத்தில் உலகளாவிய பொருளாதாரத்தில் 1.4 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்றும், இது விரிவான உலகளாவிய சீர்குலைவு, குறைக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பரவலான விலை உயர்வுகளை முன்னறிவிப்பதாகவும் அவர்கள் முடிவு செய்தனர். பிரேசிலிய பொருளாதார நிறுவனத்தின் (IBRE) இணை ஆராய்ச்சியாளரான லிவியோ ரிபேரோ, அபாயகரமான விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார். உதாரணமாக, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதால் அமெரிக்காவில் சீன பொருட்கள் நுழைவது தடுக்கப்படும். மாறாக மற்ற நாடுகளில் சீன பொருட்களின் உபரி புழக்கத்திற்கு வழிவகுக்கும் என்று ரிபேரோ விளக்குகிறார். இந்தப் பொருட்கள் இன்னும் குறைந்த விலையில் மற்ற நாடுகளை நிரப்பும். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த நாடுகள் சீனாவின் மீதும் வரிகளை விதிப்பதன் மூலம் தங்கள் சொந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். "நீண்ட காலமாக, நிலைமை இப்படியே தொடர்ந்தால், இறுதியில் நாம் அனைவரும் தோற்றுவிடுவோம்" என்று ரிபேரோ பிபிசியிடம் கூறினார். கடன் கொடுக்க மறுத்த வங்கியிலேயே கொள்ளை - ரூ.13 கோடி தங்கத்தை கிணற்றில் பதுக்கிய உசிலம்பட்டி சகோதரர்கள்2 ஏப்ரல் 2025 டிரம்பின் '3வது முறை அதிபராகும்' ஆசை - சாத்தியமாக வல்ல கனவா? கானல் நீரா?2 ஏப்ரல் 2025 தங்கத்தின் விலை மேலும் உயரும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மைகளில் தங்கத்தின் விலை உயர்வது இயல்பு ஆனால் டிரம்பின் வரி விதிப்பால் பாதிக்கப்படுவது முதலில் அமெரிக்கர்கள்தான். இறக்குமதிக்கு அதிகரிக்கும் செலவுகள் விலைகளை உயர்த்தும் என்பதால், டிரம்பின் திட்டங்களால் அமெரிக்க நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது டிரம்பின் முதல் பதவிக் காலத்திலும் நடந்தது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு, 2018ஆம் ஆண்டு அவர் வாஷிங் மெஷின்கள் மீது வரி விதித்ததைக் குறிப்பிடலாம். அது தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான உபகரணங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த வரிகளின் விளைவாக அமெரிக்காவில் உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் அதிகரித்தது. ஆனாலும்கூட சலவை இயந்திரங்களின் விலை சராசரியாக 12% உயர்ந்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இறுதியில், "வர்த்தக மோதலின் விலையை நுகர்வோர் ஏற்கிறார்கள்" என்று ஜெர்மனியில் உள்ள ஐஎன்ஜி வங்கியில் உலகளாவிய வர்த்தகத்திற்கான மூத்த பொருளாதார நிபுணர் இங்கா ஃபெக்னர் கூறினார். விலை உயர்வு எரிபொருள் பணவீக்கமாக மாறக்கூடும். இதனால் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் நீண்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களை விதிக்க வேண்டிய கட்டடாயம் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது அமெரிக்க டாலரை வலுப்படுத்த வாய்ப்புள்ளது, ஏனெனில் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் வட்டி விகிதம் சார்ந்த முதலீடுகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். "ஆனால் அது நுகர்வோரை எதிர்மறையான தாக்கங்களில் இருந்து தணிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் டாலர் மதிப்பு உயர்வு, ஏற்றுமதியையும் பாதிக்கும்" என்று லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வரி சட்டம் மற்றும் கொள்கைப் பேராசிரியர் கிம்பர்லி கிளாசிங் கூறினார். விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை அபாயம் ஆகியவற்றின் கலவையானது பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஃபெடரல் வங்கியின் முயற்சிகளைச் சிக்கலாக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "பதிலடி நடவடிக்கைகளால் சர்வதேச உறவுகள் பாதிக்கப்படுவது மற்றோர் அம்சம் என்றாலும், அதற்கு முன்னதாகவே இது விவேகமற்ற கொள்கைகளின் தொகுப்பாக உள்ளது" என்று கிளாசிங் கூறினார். பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், மார்ச் மாத இறுதியில் தங்கத்தின் விலை சாதனை உச்சத்தை எட்டியது. அது மேன்மேலும் உயர வாய்ப்புள்ளது. "புவிசார் அரசியல் மற்றும் வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வருகிறது. இதனால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரக்கூடும்" என்று சிங்கப்பூரில் உள்ள சாக்ஸோ சந்தைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் சாரு சனானா கூறினார். டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்2 ஏப்ரல் 2025 காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி1 ஏப்ரல் 2025 பல துறைகளிலும் விலைவாசி உயரும் அபாயம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செமிகண்டக்டர் நிறுவனங்கள் வரிவிதிப்புகளால் பாதிக்கப்படலாம் டிரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்புகள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளாக உள்ள நாடுகளிடம் இருந்து வெளிப்படவுள்ள பழிவாங்கும் நடவடிக்கைகள் உலகளாவிய விலை ஏற்றத்திற்கு வித்திடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். சனானாவின் கூற்றுப்படி, இதில் எண்ணெய் மற்றும் எரிவாயு, கணினி சில்லுகள் மற்றும் செமிகண்டக்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள், சோயாபீன்ஸ், தானியங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை அடங்கும். "இந்த விலை உயர்வு, விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் அதிக இறக்குமதி செலவுகளின் முதன்மையான விளைவாக இருக்கும்" என்று சனனா விளக்கினார். "வரி உயர்வுகள் முழுமையாக நடைமுறைக்கு வராவிட்டாலும், வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்தக்கூடும். அதாவது அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குறைவான வரி கொண்ட நாட்டை நோக்கி நகரக்கூடும். இது சந்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் செலவு அழுத்தங்களை அதிகரிக்கும்." தைவானின் டிஎஸ்எம்சி (TSMC), நெதர்லாந்தின் ஏஎஸ்எம்எல் (ASML) உள்ளிட்ட செமிகண்டக்டர் துறையில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பாளர்களான டிஎஸ்எம்சி, ஆப்பிள், என்விடியா, ஏஎம்டி, குவால்காம், இன்டெல் போன்றவை, முக்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கு செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்கின்றன. இதற்கிடையில், ஏஎஸ்எம்எல் நிறுவனம் சிப் உற்பத்திக்குத் தேவையான தீவிர புற ஊதா லித்தோகிராஃபி (EUV) இயந்திரங்களைத் தயாரித்து அமெரிக்கா, தைவான் மற்றும் தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. தொழில்துறையின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டணங்கள் அதிக செலவுகள் மற்றும் விநியோகப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தேவை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தத் துறையை மேலும் பாதிக்கலாம். இருப்பினும், ஆலோசனை நிறுவனமான கேபிடல் எகனாமிக்ஸின் குழும தலைமைப் பொருளாதார நிபுணரான நீல் ஷியரிங், தனது பார்வையில் எச்சரிக்கையாக இருக்கிறார். "கட்டணங்களின் தாக்கம் பெரும்பாலும் எந்தப் பொருட்கள் குறி வைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தது" என்று அவர் விளக்கினார். பிரெஞ்சு முதலீட்டு வங்கியான நாடிக்சிஸின் ஆசிய பசிபிக் பகுதிக்கான தலைமைப் பொருளாதார நிபுணர் அலிசியா கார்சியா-ஹெர்ரெரோ, கட்டணங்கள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படும் வரை எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்பதைக் கணிப்பது கடினம் என்கிறார். அப்படியிருந்தும்கூட, "பிற அதிகார வரம்புகளில் இருந்து அமெரிக்காவுக்குள் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் வகையில் மாற்றுப் பாதை அமைக்கப்படலாம்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்திய மாநிலங்களுக்காக சீனாவிடம் வர்த்தகம் பேசும் வங்கதேசம் - முகமது யூனுஸின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்?2 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திருநங்கை மகளின் திருமணத்திற்காக போராடிய தாய் - நெகிழ வைக்கும் பாசப் போராட்டம்2 ஏப்ரல் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் ஆபத்து பட மூலாதாரம்,GETTY IMAGES பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் மீதான அமெரிக்க வரிகளின் தாக்கம் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன், இந்த ஆண்டு உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம் 40% இருப்பதாக எச்சரிக்கிறது. இது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 30% ஆக இருந்தது. "அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படும் ஆபத்தை நாம் அதிகமாகக் காண்கிறோம்," என்று ஜே.பி. மோர்கனின் தலைமை உலகளாவிய பொருளாதார நிபுணர் புரூஸ் காஸ்மேன் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தார். "கட்டணக் கொள்கையைப் பயன்படுத்துவதில் நிர்வாகத்தின் மாற்றம் மற்றும் உணர்வுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் இந்த ஆபத்து நிலை அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன." ஆனால் முழு தாக்கமும் தெளிவாக இல்லை என்று பிரேசிலிய பொருளாதார நிபுணரும் நிதிச் சந்தைகளில் நிபுணருமான ஆண்ட்ரே பெர்ஃபீட்டோ கூறுகிறார். வரி விதிப்புகள் டிரம்புக்கு "தோல்விக்கான அதிக ஆபத்தை" ஏற்படுத்துகின்றன, ஆனால் எதுவும் நடக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார். "இந்த அணுகுமுறை முன்பு இந்த அளவுக்கு முயன்று பார்க்கப்படாததால், அது தோல்வியடையும் என்று யாரும் உறுதியாகக் கூற முடியாது," என்றும் அவர் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99pv59dnlgo
  23. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிடிபட்ட தங்க நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன 2 ஏப்ரல் 2025 கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில் முக்கிய திருப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 அக்டோபர் 28 ஆம் தேதி, திங்கள்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. வங்கிக் கிளையின் ஜன்னல் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த சுமார் 17 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக, திங்கள்கிழமையன்று (மார்ச் 31) தாவனகரே போலீஸார் தெரிவித்துள்ளனர். 'இது அவர்களின் முதல் குற்றம். சிறு தடயம் கூட இல்லாமல் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்' எனக் கூறுகிறார் தாவனகரே கிழக்கு மண்டல ஐ.ஜி ரவிகாந்தே கவுடா. எஸ்.பி.ஐ வங்கி நகைக் கொள்ளை சம்பவத்தில் என்ன நடந்தது? 5 மாதங்களுக்குப் பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைதானது எப்படி? கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. வங்கியின் இரும்பு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கேஸ் கட்டர் மூலம் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைத்துள்ளனர். அங்கிருந்த சுமார் 17 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளதை ஊழியர்கள் அறிந்தனர். வங்கியின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிவிஆர் பெட்டியை எடுத்துச் சென்றதோடு, கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிவிட்டுச் சென்றுள்ளதையும் வங்கி ஊழியர்கள் கவனித்துள்ளனர். தகவல் அறிந்து வங்கிக்கு வந்த சன்னகிரி காவல் உள்கோட்ட ஏஎஸ்பி சாம் வர்கீஸ் மற்றும் எஸ்.பி உமா பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வங்கிக் கொள்ளை தொடர்பாக நியாமதி காவல்நிலையத்தில் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக எஸ்.பி உமா பிரசாந்த் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வங்கியில் இருந்து 8 கி.மீ தொலைவு மற்றும் 50 கி.மீ சுற்றளவில் உள்ள சிசிடிவி காட்சிகள், கொள்ளை நடந்த நேரத்தில் செல்போன் டவர்களில் பதிவான எண்கள் ஆகியவற்றை வைத்து தாவனரே போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா? கத்தார்: தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த இந்தியர் கைது - குடும்பத்தினர் கூறுவது என்ன? மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை "தடயமே இல்லாமல் கொள்ளை" பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,புலனாய்வு செய்த தனிப்படை காவல்துறையினர் இதேபோன்ற கொள்ளைச் சம்பவம் பத்ராவதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையிலும் நடந்திருந்ததால், 'வடமாநில கொள்ளைக் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம்' என காவல்துறை கருதியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் ஐந்து தனிப்படைகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளன. "கொள்ளை தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களாக எந்த தடயமும் கிடைக்கவில்லை. கைரேகை உள்பட எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை" எனக் கூறுகிறார், தாவனகரே கிழக்கு மண்டல ஐ.ஜி ரவிகாந்தே கவுடா. செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். "கொள்ளை போன நேரத்தில் பதிவான செல்போன் எண்களை ஆராய்ந்தபோது ஒரு எண் மீது சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக சிக்கினார்கள்" எனவும் அவர் தெரிவித்தார். கைதான உசிலம்பட்டி சகோதரர்கள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தாவனகரே கிழக்கு மண்டல ஐ.ஜி ரவிகாந்தே கவுடா இந்த வழக்கில் நியாமதியில் வசிக்கும் மஞ்சுநாத் என்ற நபர் மீது காவல்துறைக்கு முதலில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அஜய்குமார், விஜயகுமார், பரமானந்தம் ஆகியோரின் பெயர்களை கூறியுள்ளார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜயகுமாரும் அஜய்குமாரும் சகோதரர்கள் எனவும் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவர்களின் உறவினர் பரமானந்தம், நியாமதி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அபிஷேக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய ஐ.ஜி ரவிகாந்தே கவுடா, கொள்ளையடிக்கத் தேவையான கேஸ் கட்டர், தொப்பி, கையுறை ஆகியவற்றை நியாமதி மற்றும் ஷிவமோகா பகுதியில் இவர்கள் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினார். தங்கம் வைப்பு திட்டத்தை கைவிட்ட அரசு - விலை உயர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?2 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டில் திருநங்கை மகளின் திருமணத்திற்காக போராடிய தாய் - நெகிழ வைக்கும் பாசப் போராட்டம்2 ஏப்ரல் 2025 பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?2 ஏப்ரல் 2025 "கடன் கொடுக்காததால் கொள்ளை" பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கைதான நபர்கள் தொடர்ந்து கொள்ளை வழக்கில் கைதான விஜயகுமாரின் பின்னணி குறித்தும் செய்தியாளர் சந்திப்பின்போது ரவிகாந்தே கவுடா தெரிவித்தார். தனது தந்தையுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நியாமதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ள விஜயகுமார், கடந்த ஆண்டு எஸ்.பி.ஐ வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது உறவினரின் பெயருக்குக் கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து, சில மாதங்களாக இணையதளங்கள் மூலமாக அதற்குரிய பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட தொப்பி, கையுறை, கேஸ் சிலிண்டர், ஹைட்ராலிக் கட்டர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை சவலங்கா ஏரியில் அவர்கள் வீசியுள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிணற்றில் 17 கிலோ தங்கம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி மஞ்சுநாத்தை தொடர்ந்து கைதான சகோதரர்களிடம் போலீஸார் விசாரணையை நடத்தியுள்ளனர். அப்போது, உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கருப்பன்பட்டி கிராமத்தில் உள்ள தங்களின் கிணற்றில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து, தமிழ்நாட்டு காவல்துறையின் உதவியுடன் கருப்பன்பட்டியில் உள்ள விஜயகுமாரின் சகோதரிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, சாக்கு மூட்டைக்குள் தங்க நகைப் பெட்டியை வைத்து, கல்லைக் கட்டி கிணற்றில் வீசப்பட்டிருந்த சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ தங்க நகைகளை பாதுகாப்பாக மீட்டதாக செய்தியாளர் சந்திப்பின் போது ரவிகாந்தே கவுடா ஐ.பி.எஸ் தெரிவித்தார். "தங்க நகைகளை வைப்பதற்கான பெட்டியை விலைக்கு வாங்கி அதில் நகைகளை வைத்துள்ளனர். 35 அடி ஆழமுள்ள கிணற்றில் அந்தப் பெட்டியை போட்டு வைத்துள்ளனர்" எனக் கூறுகிறார் ஐ.ஜி ரவிகாந்தே கவுடா. பட மூலாதாரம்,MARX TEJASWI படக்குறிப்பு,கிணற்றில் தங்கம் 20 அடி ஆழம் அளவுக்கு தண்ணீர் உள்ள அந்தக் கிணறு கைப்பிடி இல்லாத பயன்பாடில்லாத கிணறு எனவும் அது கைதான நபர்களின் உறவினர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்துள்ளது எனவும் ரவிகாந்தே கவுடா குறிப்பிட்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகையில் அரை கிலோ நகைகளை மட்டும் விற்று பணம் திரட்டியதாகவும் அந்தப் பணத்தை தன்னுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்2 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிடிபட்ட நகைகளைப் பார்வையிடும் காவல்துறையினர் முக்கியமான இந்த வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து மக்களின் நகைகளை மீட்ட தனிப்படையில் இருந்த பத்து பேருக்கு முதலமைச்சர் பதக்கமும் பணப் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.ஜி ரவிகாந்தே கவுடா தெரிவித்தார். "வங்கி ஜன்னலில் சிறிய துளையைப் போட்டு 17 கிலோ தங்கத்தையும் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் முதல் குற்றம் இது. ஆனால், குற்றத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் போன்று துல்லியமாக செய்துள்ளனர். கைது செய்யாமல் இருந்திருந்தால் பெரிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பார்கள்" எனக் கூறுகிறார் ரவிகாந்தே கவுடா ஐ.பி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g32x06enwo
  24. 03 APR, 2025 | 11:57 AM இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்தார். தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். உவிந்து விஜேவீர மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் நியாயத்தை எதிர்ப்பார்க்கின்றோம். இதற்காக எதிர்வரும் காலங்களில் எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் எடுப்போம். ஏனென்றால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியம் என நாம் நம்புகின்றோம். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாம் பாரிய மாற்றங்களை கண்டோம். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான கட்சிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த கால அரசியலில் இடம்பெற்ற போலி வாக்குறுதிகள் மற்றும் திருப்தியற்ற செயற்பாடுகள் குறித்து மக்கள் அனைவரும் நன்கு சிந்தித்து புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். தற்போது அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த பின்னணியில் இரண்டாம் தலைமுறை அமைப்பு சார்பில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம் என உவிந்து விஜேவீர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211005
  25. ஆயிரம் தமிழ் சொற்களுக்கான ஆங்கில அர்த்தங்களை கூறிய இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறமை 02 APR, 2025 | 07:14 PM ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி, சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி அசத்தியுள்ளார். சிறுமியின் இந்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000க்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும்போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார். சிறுமியின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதியாகவும் தாயார் இல்லத்தரசியாகவும் உள்ளனர். பெரிய அளவிலான கல்விப் பின்புலங்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த இந்த சிறுமி இதுவரை ஏடு தொடக்கப்படாத நிலையில் இத்தகைய அதிசிறந்த ஞாபகசக்தியை கொண்டுள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுமியின் சாதனை தொடர்பாக தெரிவிக்க, சிறுமியின் பெற்றோர் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை இன்றைய தினம் (2) நடத்தினார். இந்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210960

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.