Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மியான்மர் நிலநடுக்கத்தில் 1,002 பேர் பலி, 2,376 பேர் காயம் - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 28 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1002 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 30 பேரைக் காணவில்லை. மாண்டலே நகரில் மட்டும் 694 பேர் உயிரிழந்துவிட்டதாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது மியான்மருக்கு இந்தியா உதவி நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,INDIAN GOVERNMENT ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்? மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. 2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES தாய்லாந்தில் 6 பேர் பலி இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது. கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். Play video, "பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்", கால அளவு 0,13 00:13 காணொளிக் குறிப்பு,பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது. பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம் 'நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம்' மியான்மரின் மாண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார். ''உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்," என்று அவர்கள் கூறுகின்றனர். ''உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை ,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்" என்று அவர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 'நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்' மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார். நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள் விமான நிலையத்தில் பதற்றம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது. அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது. ''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது. ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,MYANMAR'S MILITARY REGIME படக்குறிப்பு,மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்? மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது. இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை. பட மூலாதாரம்,REUTERS தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன. பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார். "நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்." "எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்," என்கிறார் அவர். "பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்," - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kgk5nyv4eo
  2. கே-8 பயிற்சி விமான விபத்து; விசாரணைகளின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுமா? 28 MAR, 2025 | 09:43 PM பயிற்சி நடவடிக்கையின் போது வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கே-8 பயிற்சி விமானம் மார்ச் 21 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தின் போது பயிற்சி நடவடிக்கையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் விமான விபத்திற்கான உண்மையான காரணிகளை கண்டறிவதற்காக விமானப்படை உத்தியோகப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்தது. தனி குழு அமைத்து இந்த விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்புகளிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொண்டு வருவதாகவும் விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார். இருப்பினும், விமானியின் தவறினாலேயே விமானம் விபத்துக்குள்ளானது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மார்ச் 23 ஆம் திகதி தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விசாரணைகளை விமானப்படை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது விபத்திற்கான உண்மை காரணத்தை கண்டறிவதை திசைத்திருப்பும் வகையில் அமைச்சர் பிமல், அடிப்படையற்ற விதமாக விமானிகளை சாடியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். மேலும் துறைசார்ந்த அறிவின்றி விமானப்படையின் விசாரணை அறிக்கை வெளிவரும் முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க எவ்வாறு விமானிகள் மீது குற்றம் சுமத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அதேபோன்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தெளிவுப்படுத்தல் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளன. விபத்துக்குள்ளான கே-8 விமானத்தின் சீன உற்பத்தியாளர் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு சீன தரப்பை அவதானத்திற்கு உட்படுத்துவதை திசைதிருப்ப இத்தகைய கூற்றுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இலங்கை விமானப்படையின் தொழில்முறை மற்றும் வெளிப்படைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறித்த கவலைகளை எழுப்புகிறது. ஏனெனில் விபத்து நடந்த தினத்தன்று இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவ விமான விபத்து விசாரணைகளின் போது பொதுவாக இடிபாடுகள் ஆய்வு, விமானத் தரவு மதிப்பீடு மற்றும் விமானிகள் வாக்குமூலம் என்பவை ஊடாக விரிவான பகுப்பாய்வு செய்யப்படும். ஆனால் வாரியபொல பகுதியில் விபத்துக்குள்ளான கே-8 பயிற்சி விமான விபத்து குறித்து இவ்வாறானதொரு விரிவான விசாரணைக்கு முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமானிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் ஹோங்டு விமானப் போக்குவரத்துத் தொழில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கே-8 விமானங்கள், பாக்கிஸ்தான், சிம்பாப்வே மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறுகளுடன் தொடர்புடைய விபத்துகளை எதிர்க்கொண்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையிலும் இடம்பெற்ற கே-8 விமானத்தின் விபத்து குறித்து முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும். ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிற பயிற்சி விமானங்களுடன் இலங்கை விமானப்படையின் முந்தைய சிக்கல்கள் பல உள்ளன. இதேவேளை விமானப் பாதுகாப்பு கவலைகளுக்கு அப்பால், இவ்வாறான விபத்துக்கள் குறித்து அரசாங்க அதிகாரிகளின் முன்கூட்டிய அறிவிப்புகள் விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன. எனவே விசாரணை குழுக்களுக்கு வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எவ்வாறாயினும் எந்தவொரு நாட்டையும் பொறுத்த வரை, தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை விட வேறு எதுவும் இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும். https://www.virakesari.lk/article/210474
  3. 29 MAR, 2025 | 09:08 AM பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் "அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்" என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில், பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/210500
  4. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 03:27 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட ஒத்துழைப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 - 6 வரை பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீமகா போதியில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறிப்பாக இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாத்திரமின்றி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 'பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான' கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளமை விசேட அம்சமாகும். பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளுடன் நாகரிக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவும், மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணம் மற்றும் 6ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை, 'கிழக்கு நோக்கி செயல்படுங்கள்' கொள்கை, 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசுபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210434
  5. சிஎஸ்கே வரலாற்றுத் தோல்வி: சிக்ஸர்களை விளாசியும் தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வரலாற்றுத் தோல்விக்கு காரணம் என்ன? நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியும் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது ஏன்? சால்ட், படிக்கலின் அதிரடி சிஎஸ்கே அணி கலீல் அகமதுவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மற்றொருபுறம் அஸ்வினை பந்துவீசச் செய்தது. அவரின் முதல் ஓவரிலேயே பில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் வேறு வழியின்றி நூர் முகமதுவை பந்துவீச அழைத்தனர். சால்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் முகமது பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் சிறிய கேமியோ ஆடிக்கொடுத்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. ஜடேஜாவின் முதல் ஓவரை கட்டம் கட்டிய படிக்கல் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். படிக்கல் 27 ரன்கள் சேர்த்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி பேட்டிங்கில் தடுமாற்றம் சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட் செய்ய முடியவில்லை. நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக வந்துள்ளதால் சிக்ஸர், பவுண்டரிக்கு பலமுறை கோலி முயற்சித்தார். பெரிதாக ஷாட்கள் அமையவில்லை. இதனால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடினார். பதிராணா வீசிய ஓவரில் கோலியின் ஹெல்மெட்டில் பந்துதாக்கியது. முதலுதவிக்குப்பின், ஒரு சிக்ஸர், பவுண்டரியை கோலி அடித்தார். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் (31) பேட்டிங் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இல்லை. முதல் ஆட்டத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த கோலி நேற்று 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரி மட்டுமே அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் களத்துக்கு வந்த பின் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. பட்டிதாருக்கு மட்டும் நேற்று 3 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். கை மேல் கிடைத்த கேட்சை தீபக் ஹூடாவும், கலீல் அகமதுவும், ராகுல் திரிபாதியும் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்டிதார், சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். விராட் கோலி ஆட்டமிழந்தபின் பட்டிதாருக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லிவிங்ஸ்டோன் (10), ஜிதேஷ் ஷர்மா(12) என நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மனம் தளராமல் ஆடிய பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 15.6 ஓவர்களில் ஆர்சிபி 150 ரன்களை எட்டியது. டெத் ஓவர்களில் ஆர்சிபி அணி சற்று தடுமாறியது. பதிராணா ஓவரை சமாளிக்க முடியாமல் பட்டிதார் விக்கெட்டையும், குர்னல் பாண்டியா விக்கெட்டையும் இழந்தது. ஆனால் சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார். மியான்மரில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்பு50 நிமிடங்களுக்கு முன்னர் மியான்மரை புரட்டுப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்- புகைப்படத்தொகுப்பு40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹேசல்வுட், புவனேஷ் மிரட்டல் ஆடுகளத்தில் சிறிய அளவு ஒத்துழைப்பு கிடைத்தாலும் பந்துவீச்சை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை புவனேஷ்வர் குமாரும், ஹேசல்வுட்டும் நேற்று செய்து காண்பித்தனர். புவனேஷ் 6-8 மீட்டர் லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை ஒருபுறம் திணறடிக்க, ஹேசல்வுட் 8-10 மீட்டர் லென்த்தில் பவுன்ஸரையும், சீமிங்கையும் அளித்து திக்குமுக்காடச் செய்தனர். தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் சிஎஸ்கே பேட்டர்களின் திறமை என்ன என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது. காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த புவனேஷ்வரின் அவுட்ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்டர்கள் திணறினர். அதிலும் டெஸ்ட் பந்துவீச்சு போன்று ஹேசல்வுட் வீசியதை சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே ஹேசல்வுட் எடுத்து அதிர்ச்சியளித்தார். புவனேஷ்வர் தனது பவர்ப்ளே ஓவரில் 73-வது விக்கெட்டாக தீபக் ஹீடாவின் விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளே முடிவதற்குள் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாம்கரனும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் 8 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் இருவரின் விக்கெட்டும் வீழ்ந்தது. யாஷ் தயால் வீசிய 13-வது ஓவரில் ரவீந்திரா 41 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகினார். அதே ஓவரில் ஷிவம் துபேயும் 19 ரன்னில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். இருவரும் ஆட்டமிழந்தபோதே சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இல்லை. ஆடுகளம் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகி இருக்கிறது. ஸ்கோர் செய்வதும் கடினமாக இருக்கிறது என்பதை சிஎஸ்கே பேட்டர்கள் உணர்ந்தனர். அஸ்வின் 11 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சிலும் , ஜடேஜா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்க 9-வது இடத்தில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கேயின் தோல்வியை விரும்பாத ரசிகர்களுக்கு, தோனியின் பேட்டிங் ஆறுதலாக அமைந்தது. சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தவிர்க்கும் வகையில் தோனியும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?28 மார்ச் 2025 பாங்காக்: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்28 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கோலி கொண்டாட்டம் ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி ரசித்து கொண்டாடினார். தீபக் ஹூடா பேட்டில் பந்து உரசிச் சென்றது பந்துவீச்சாளர் புவனேஷுக்கு கூட தெரியவில்லை. ஆனால், கோலி விரலை உயர்த்திக்கொண்டே அவுட் என குரலை உயர்த்தி ஓடிவந்தார். அது மட்டுமல்லாமல் டிஆர்எஸ் எடுங்கள் என்று சைகையால், பட்டிதாரையும் வலியுறுத்தினார். மூன்றாவது நடுவர் கணிப்பில் பேட்டில் பந்து உரசியது தெரிந்தது. ஹூடா விக்கெட்டை வீழ்த்தியதில் பெரும்பங்கு கோலிக்கு உரியது. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமே மோசமான பீல்டிங்கும், இன்னும் வயதான வீரர்களை நம்பி இருப்பதும்தான். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பட்டிதாருக்கு 3 கேட்சுகளை தீபக் ஹூடா,கலீல் அகமது, திரிபாதி ஆகியோர் கோட்டைவிட்டனர். தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேட்சை கோட்டைவிட்டார். அடுத்தார்போல் ஜடேஜா, அஸ்வின், தோனி, சாம் கரன், ஷிவம் துபே என கடந்த பல சீசன்களாக ஆடிய வீரர்களை இன்னும் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என எதிரணி எளிதாக ஹோம்ஓர்க் செய்துவரும். சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஒருவருக்கு கூட பரிசோதனை அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் புதிய வீரரை களமிறக்கி பரிசோதிக்கிறார்கள். சிலநேரம் அது வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக இருந்தது. நூர் அகமது மட்டும் தப்பினார். வேகப் பந்துவீச்சில் பதிராணா, கலீல் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர துல்லியமான லென்த், பவுன்ஸ், ஸ்விங் இல்லை. ஹேசல்வுட், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஈட்டிபோல் இறங்கிய துல்லியம், லென்த் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் இல்லை. அடுத்ததாக 196 ரன்கள் எனும் பெரிய ஸ்கோர் மனரீதியாகவே வீரர்களுக்கு பதற்றத்தையும், ரன் சேர்க்கவேண்டி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் விக்கெட் வீழ்ந்தவுடன் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? தோனி 16 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன் சேர்த்தாலும் கூட, பேட்டிங் வரிசையில் 9-வதாக அவர் களம் இறங்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டையும் யாஷ் தயால் வீழ்த்தினார். சிஎஸ்கே வெற்றி பெற ஓவருக்கு 16 ரன்கள் சராசரியாக தேவைப்பட்ட அந்த நேரத்தில் தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கியது. ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட சிஎஸ்கே கையைவிட்டு போய்விட்டிருந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தனது ரசிகர்களை தோனி பரவசப்படுத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சேஸிங்கில் தோனி மிகவும் பின்வரிசையில் இறங்கியதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பட மூலாதாரம்,X சேஸிங்கில் அனுபவம் கொண்ட, பதற்றம் கொள்ளாமல் ரன் ரேட்டை பராமரிக்கும் திறன் கொண்ட தோனி அணிக்குத் தேவையான, இக்கட்டான நேரத்தில் களமிறங்காதது ஏன்? என்பது அவர்களின் கேள்வி. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த அனுபவமான வீரர், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தாமாக முன்னெடுத்து நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், டெய்லெண்டர்கள் போல் கடைசியில் 9-வது இடத்தில் களமிறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி 'என் மகனிடம் தோனி சொன்னது இதுதான்' - சிஎஸ்கே அணியை மிரட்டிய விக்னேஷ் புத்தூரின் தந்தை நெகிழ்ச்சி ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஆட்ட நாயகன் பட்டிதார் ஆர்சிபி அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரை 3-வது முறையாகத் தொடங்கியுள்ளது. 2014-வது சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளுடனும், 2021 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளுடனும் ஐபிஎல் சீசனை ஆர்சிபி தொடங்கியது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப் பந்துவீச்சாளர்களும், கேப்டன் பட்டிதார், சக வீரர்களான பில்சால்ட், கோலி, படிக்கல், டிம்டேவிட் ஆகியோரின் கூட்டு உழைப்புதான். 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து நடுப்பகுதியில் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆர்சிபி எப்படி சிஎஸ்கே அணியின் 12 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வரின் தரமான ஸ்விங், ஸீமிங்,எஸ்ட்ரா பவுன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது சிஎஸ்கே. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். சிஎஸ்கே அணியின் வலிமையே சுழற்பந்துவீச்சுதான் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை பில்சால்ட், படிக்கல், கோலி வெளுத்து வாங்கினர். இதனால் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் 5 ஓவர்களே வழங்கப்பட்டது. இருவரும் 5 ஓவர்கள் வீசி 59 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 95 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தை மாற்றிய 6 ஓவர்கள் மாபெரும் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் " இந்த ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர். பந்து சிலநேரம் நின்று வந்தது, பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது சிறப்பானது. ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக இருக்கும்போது அதை மீறி சிஎஸ்கே அணியை வென்றோம். என்னுடைய பேட்டிங் முக்கியமானது. 200 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல திட்டமிட்டேன். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் எங்களின் பந்துவீச்சாளர்களும் நன்கு பந்துவீசினர். குறிப்பாக லிவிங்ஸ்டோன் சிறப்பாகப் பந்துவீசினார். ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். கடினமான லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களை திணறவிட்டனர்" எனத் தெரிவித்தார். வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாம் மோசமான நிலையில் இருப்பது ஏன்?28 மார்ச் 2025 படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்25 மார்ச் 2025 3-வது முறை தோல்வி 50 ரன்களில் தோற்றது என்பது சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும். இதற்கு முன் 50 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் 2 முறை மட்டுமே சிஎஸ்கே தோற்றுள்ளது. மும்பைக்கு எதிராக 2013ல் 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2022ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே தோற்றது. அதன்பின் இப்போது 50 ரன்களில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mnm72eg17o
  6. தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது 29 MAR, 2025 | 10:20 AM பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என்பதுடன் மற்றையவர் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆவார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/210505
  7. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பிரதமர் அல்பனிஸ், “எங்கள் அரசாங்கம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றி அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்,” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210424
  8. 28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் புதிய வரிகளிற்கு எதிரான பதில் நடவடிக்கையை அடுத்தவாரம் அறிவிப்போம், வரிகளிற்கு எதிராக போராடுவது, பாதுகாப்பது கட்டியெழுப்புவதே எங்கள் வழிமுறை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210421
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட. மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர். அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர். கடந்த காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும். எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம். ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக் பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர். கோவிட் பேரிடரின் சோதனைக் காலம் மக்கள் வாழ்வை 5 ஆண்டுகளில் எப்படி மாற்றியுள்ளது?26 மார்ச் 2025 ஆனைமலை நெல்லி, காட்டு காபி, காட்டு ஆப்பிள் - அழியும் ஆபத்தில் தமிழ்நாட்டின் 25 பூர்வீக தாவரங்கள்25 மார்ச் 2025 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர். இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம். பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது. சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன. சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும். தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும். சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும். கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை. இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர். ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் என்ன பெயர் வைக்கலாம்? இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும். செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர். இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம். ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள். வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா? சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்? சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்? மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது? ஆகத்தொலைவான பிளேசர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது. இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது. இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும். இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது. பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர். ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும். எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன. (த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8x407d9z4no
  10. Published By: VISHNU 28 MAR, 2025 | 07:08 PM நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறுகிறது. அதன்படி, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து மக்கள் கவனமாக இருக்கவும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், வெளிர், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/210493
  11. LIVE 8th Match (N), Chennai, March 28, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 196/7 Chennai Super Kings (5.1/20 ov, T:197) 27/3 CSK need 170 runs in 89 balls Current RR: 5.22 • Required RR: 11.46 • Last 5 ov (RR): 27/3 (5.40) Win Probability:CSK 5.02% • RCB 94.98%
  12. மியான்மரை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படத்தொகுப்பு பட மூலாதாரம்,AP ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்திய மியான்மர் பகுதியில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சர்காயிங் நகருக்கு வடமேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. வலுவான நில நடுக்கங்கள் தாய்லாந்து மற்றும் தென்மேற்கு சீனாவின் யுனான் வரை நீண்டிருந்தது. பட மூலாதாரம்,AFP நேபிடோவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவிற்கான நுழைவாயில் சேதமடைந்தது. மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேய்ங் பாதிப்புகளை ஆய்வு செய்து, தப்பிப்பிழைத்து மைதானங்களில் திரண்டவர்களை சந்தித்தார் பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP நில நடுக்கத்தின் தாக்கத்தால் சாலைகள் சிதிலமடைந்தன, மியான்மர் தலைநகர் முழுவதும் கட்டடங்கள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP பட மூலாதாரம்,AFP நேபிடோவில் பெளத்த மத மட வளாகத்தின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,AP பட மூலாதாரம்,AP பட மூலாதாரம்,AP மத்திய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தாய்லாந்தின் பாங்காக் வரை நீண்டது. தாய்லாந்து தலைநகரில் ஒரு பெரிய கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq9q3qd1zyo
  13. 28 MAR, 2025 | 06:16 PM பட்டலந்த அறிக்கை பற்றி பேசுபவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின; இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர்; அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றங்களில் சிறப்பாக செயற்பட்டால் அதன் பின்னர் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களுக்கு பின்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான வெற்றியை பெற முடியும். முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் கடந்த 7 வருடங்களாக வேலை கிடைக்காமையால் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றுகிறார்கள். பிரதேச சபைகள் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கு ஏற்பட்ட சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும். கட்சியை பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம். அத்துடன் மக்களுக்கு சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக தியாகங்களை செய்த தாய் கட்சி ஆகிய தமிழ் அரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம். வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு நீர் வரவில்லை. ஆனால் மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் திட்டமிட்ட இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. அதேபோன்று, செட்டிக்குளம் பிரதேசத்தின் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்கு செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் உள்ளன. இதனை கடந்த கால அரசாங்கங்கள் செய்தன. தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கிறது. வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கூற, ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கமும் தயாரில்லை. அண்மையில் 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் இருந்த பலரில் 4 பேரை பிரித்தானியா தடை செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தினர் அந்த ஒருதலைப்பட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள். பட்டலந்த அறிக்கை பற்றி பேசும் அவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின. இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை. கடந்த கால அரசாங்கங்கள் என்ன பதிலை சொன்னார்களோ அதே பதிலை தான் இவர்களும் சொல்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக மாயாஜாலம் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாக செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/210485
  14. 'த.வெ.க - தி.மு.க இடையில்தான் போட்டி' - பொதுக்குழுவில் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம்,TVK கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார். த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது? சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை த.வெ.க தலைவர் விஜய்க்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பேசி முடித்த பிறகு விஜய் பேசினார். "கதறல் சத்தம் எப்படி உள்ளது" எனத் தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய விஜய், "ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?" என பேச்சைத் தொடங்கினார். மன்னராட்சி விமர்சனம் இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 பட மூலாதாரம்,TVK தொடர்ந்து பேசிய அவர், "எல்லாருக்கும் நல்லது நடப்பதுதான் அரசியல். அது தான் நமது அரசியல். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் எனக் கூறி மக்கள் பிரச்னைகளை மடை மாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போன்று நடத்துகிறார்கள்" என விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியில் உள்ளவர்கள் இடையூறு செய்வதாகக் கூறிய விஜய், த.வெ.க மாநாட்டில் தொடங்கி பரந்தூர் மக்கள் போராட்டம், பொதுக்குழு வரை எத்தனையோ தடைகளைத் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தான் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். தனது பேச்சில், 'மன்னராட்சி முதல்வரே' என இரண்டு முறை முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய் பேசினார். "பெயரில் உள்ளதைப் போல செயலிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீரத்தைக் காட்ட வேண்டும்" எனக் கூறினார். பட மூலாதாரம்,TVK தொடர்ந்து பேசிய அவர், "மத்திய பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி எனக் கூறுகிறார்கள். அதற்குக் குறைவில்லாத பாசிச ஆட்சியைத் தானே நீங்களும் கொடுக்கிறீர்கள்? கட்சித் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்?" எனக் கேட்டவர், சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருப்பதாக குறிப்பிட்டார். "நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆக கனவு காண்பதாக கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது எனக் கூறுகிறீர்கள். பிறகு ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை த.வெ.க-வுக்கு கொடுக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளதாகவே தெரியவில்லை எனவும் விமர்சித்தார் விஜய். தி.மு.க ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரையில் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகக் கூறிய அவர், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என போராட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்" என்றார். அடுத்து மத்திய பா.ஜ.க ஆட்சியை தனது பேச்சில் விஜய் விமர்சித்தார். "பிரதமர் மோதியின் பெயரைச் சொல்வதற்கு பயம் உள்ளதாக கூறுகிறார்கள். மத்தியில் ஆள்கிறவர் எனக் கூறுகிறோம். அங்கு என்ன காங்கிரஸா உள்ளது? பிறகு ஏன் பெயரைக் கூற வேண்டும் என சொல்கிறார்கள் " எனக் கூறினார். "தமிழ்நாடு.. தமிழர்கள் என்றாலே பிரதமர் மோதிக்கு அலர்ஜி" எனக் கூறிய விஜய், "ஜி.எஸ்.டியை சரியாக வாங்கிவிட்டு நிதியை ஒதுக்குவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் எனத் தொடங்கியபோதே உங்கள் திட்டம் தெரிந்துவிட்டது. உங்களிடம் சொல்ல விரும்புவது எல்லாம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்" என பிரதமர் மோதியை சுட்டிக் காட்டி பேசினார். இந்திரா - முஜிபுர் உடன்பாட்டை 'அடிமை ஒப்பந்தம்' என்று வங்கதேச எதிர்க்கட்சிகள் அழைத்தது ஏன்?25 மார்ச் 2025 சோவியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வித்திட்ட 'ஹிட்லரின் விஞ்ஞானி'23 மார்ச் 2025 பட மூலாதாரம்,TVK "தி.மு.க, த.வெ.க இடையில்தான் போட்டி" 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அறுதிப் பெரும்பான்மை மற்றும் அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைத்ததும் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் என தனது பேச்சில் நடிகர் விஜய் தெரிவித்தார். "அடுத்த ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்" எனக் கூறிய விஜய், "இரண்டு கட்சிக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று த.வெ.க, இன்னொன்று தி.மு.க" எனவும் தெரிவித்தார். தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் பெயரைக் கூற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உள்ளதாக கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன். தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி உள்ளதாக விஜய் பேசியதையும் அவர் மறுக்கிறார். " தி.மு.க என்பது நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி. த.வெ.க அப்படி இல்லை" எனக் கூறுகிறார். முன்னதாக, த.வெ.க பொதுக்குழுவில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது; மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; இரு மொழிக் கொள்கையில் உறுதி; நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்பன உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு ஆகியவற்றை தனது தீர்மானங்களாக த.வெ.க வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2828w5l5zo
  15. Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 04:48 PM பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி இது தொடர்பில் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை யும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை இரண்டு கிலோவாகவும்,இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை மூன்று கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை நான்கு கிலோவாகவும் இருத்தல் வேண்டும். பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை ஏழு கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/210460
  16. INNINGS BREAK 8th Match (N), Chennai, March 28, 2025, Indian Premier League CSK chose to field Royal Challengers Bengaluru (20 ov) 196/7 Current RR: 9.80 • Last 5 ov (RR): 58/4 (11.60) Chennai Super Kings Win Probability:RCB 74.99% • CSK 25.01%
  17. SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 23 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் 190 ரன்கள் சேர்த்தால்கூட டிஃபென்ட் செய்ய முடியாது என்பதை நேற்றைய ஆட்டம் உணர்த்திவிட்டது. கடந்த சீசனில் லக்னெள சேர்த்த 165 ரன்களை ஹெட், அபிஷேக் இருவரும் 9.5 ஓவர்களில் சேஸ் செய்து அவமானப்படுத்தியதற்கு பதிலடி கொடுத்தது லக்னெள அணி. லக்னெள அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டி 0.963 என்று 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. லக்னெள அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் சரிவால் பின்தங்கியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்3 மணி நேரங்களுக்கு முன்னர் மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 விலை போகாத வீரர் விஸ்வரூபம் பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் வெற்றிக்கு 3 பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய மூவரும்தான் லக்னெள வெற்றிக்கு மூலதாராமாக இருந்தவர்கள். அதிலும் ஐபிஎல் டி20 ஏலத்தில் விலை போகாத விரக்தியில் இங்கிலாந்தில் கவுண்டி தொடர்களில் விளையாட ஷர்துல் ஆயத்தமானார். காயம் காரணமாக மாற்று வீரர் தேவை என்றபோது ஷர்துல் தாக்கூரை லக்னெள வாங்கியது. தனது திறமையை எந்த அணியினரும் மதிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வெளிப்படுத்திச் சிறப்பாக ஆடி வருகிறார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சீசனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தபோதும் விலை போகாத வீரராக ஒதுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 வெற்றியை பெரிதாக எடுக்கவில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் வெற்றிக்குப்பின் லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "உண்மையாகவே பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். வெற்றி பெற்றவுடன் உயரத்தில் பறக்கவும் இல்லை. தோற்றவுடன் நம்பிக்கை இழக்கவும் இல்லை. அணியாக கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஆவேஷ், ஷர்துல் சிறப்பாகப் பந்துவீசினர். பூரனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டோம். அந்தச் சுதந்திரம்தான் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலுடன் வந்தோம், பயிற்சி எடுத்தோம், பின்னர் அதைச் செயல்படுத்தினோம்," என்று தெரிவித்தார். ரிஷப் பந்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு லக்னெள அணி வாங்கியது. முதல் வெற்றி கிடைக்காமலும், தன்னுடைய விலை அழுத்தத்தாலும், ரிஷப் பந்த் கடும் நெருக்கடியில் இருந்தார். இந்த வெற்றியால் ரிஷப் பந்த் நிம்மதி அடைந்தார் என்பதோடு, அணியின் நிர்வாகிகள் வெற்றிக்குப் பின் ஓடி வந்து ரிஷப் பந்தை கட்டியணைத்துப் பாராட்டியதன் மூலம் லக்னௌ அணிக்கு இந்த வெற்றியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் வியூகத்தை உடைப்பாரா கோலி? கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் சன்ரைசர்ஸை சிதைத்த வீரர்கள் நிகோலஸ் பூரனின் ஆட்டம் நேற்று மிரள வைத்துவிட்டது. இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகமாக 18 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை பூரன் படைத்தார். பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி என 269 ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்ரதாண்டவமாடினார். அதேபோல கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சரியாக ஆடாத மார்ஷ் நேற்று சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அநாயாசமாகக் கையாண்டார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இருவரும் சேர்த்த ரன்கள்தான் லக்னெள வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தது. குழம்பிய கம்மின்ஸ் நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, கேப்டன் கம்மின்ஸ் எவ்வாறு இருவரையும் பிரிப்பது எனத் தெரியாமல் குழம்பினார். இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் 9வது ஓவருக்குள் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். பவர்பளே ஓவர்களில் 77 ரன்களும், 7.3 ஓவர்களில் 100 ரன்களையும் லக்னெள எட்டியது. நிகோலஸ் பூரன் 70 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது லக்னெள வெற்றிக்கு 68 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், லக்னெள அணி சிறிதுகூட பதற்றப்படாமல் இலக்கைத் துரத்தியது. டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். பூரன், மார்ஷ் இருவரையும் பிரிக்கவும், லக்னெள பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்யவும் கம்மின்ஸ் நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சராசரியாக ஓவருக்கு 12 என்ற ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்27 மார்ச் 2025 பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி27 மார்ச் 2025 இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 சன்ரைசர்ஸை கட்டம் கட்டிய லக்னெள பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிச்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய சன்ரைசர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த தொடக்கத்திலயே விக்கெட் வீழ்த்துவதுதான் சரியானது என்பதை அறிந்த லக்னெள அணி அதற்குரிய திட்டமிடலுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட்டுக்கு வைடர் யார்கர்களையும், அபிஷேக் சர்மாவுக்கு ஷார்ட் பந்துகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியது. ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அதற்குரிய பலன் கிடைத்தது. அபிஷேக் ஷர்மா ஷார்ட் பந்தில் தூக்கி அடித்து 6 ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் வந்த வேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட்டுக்கும் குறிவைக்கப்பட்டது, ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பூரன் தவறவிட்டார். ஆனால் ஹெட் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவருக்கு வலுவான யார்கரை வீசி பிரின்ஸ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். டாப் ஆர்டர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயுதங்களையும், திட்டங்களையும் லக்னெள வைத்திருந்தது. கிளாசனுக்கு நேர்ந்த கொடுமை கிளாசன் களத்துக்கு வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 11வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பிரின்ஸ் முயன்றபோது அவரின் கைகளில் பட்டு பந்து நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டது. அந்த நேரத்தில் கிளாசன் க்ரீஸைவிட்டு வெளியே நின்றிருந்தால் பரிதாபமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியை 32 ரன்களில் ரவி பிஸ்னோய் வெளியேற்றினார். ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?27 மார்ச் 2025 மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 புதிய கண்டுபிடிப்பான அனிகேத் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியை எப்படி வீழ்த்துவது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர் அனிகேத் வர்மாவை தனது புதிய கண்டுபிடிப்பாகப் பிடித்துள்ளது. 21 வயதாகும் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்து பிஞ்ச் ஹிட்டராக மாறினார். இந்த ரன்களை அனிகேத் அடிக்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். அனிகேத் வர்மா ஆட்டமிழந்த பிறகு, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கம்மின்ஸ் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களையும் பயன்படுத்த சன்ரைசர்ஸ் அணியில் கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியை எப்படி காலி செய்வது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ். அதிரடி வீரர்களுக்கு யார்கர் ஆயுதம் என்பதை உணர்ந்து, நேற்று மட்டும் 16 ஓவர்களில் 14 யார்கர்களை லக்னெள பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதிலும் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய 4 ஓவர்களிலும் யார்கர்களை திட்டமிட்டு வீசினார். ஒருதரப்பாக ஆட்டத்தை மாற்றிய பூரன் லக்னெள அணி 190 ரன்களை துரத்தியது. ஆனால் மார்க்ரம் தொடக்கத்திலேயே ஏமாற்றினார். அடுத்து வந்த பூரன், பவுண்டரியுடன் கணக்கையும், அதிரடியையும் தொடங்கினார். பூரன் இடதுகை சுழற்பந்துவீச்சுக்குத் திணறுவார் என்று அபிஷேக் சர்மாவை பந்துவீச கம்மின்ஸ் அழைத்தார். ஆனால், அபிஷேக் பந்துவீச்சைத் துவைத்து எடுத்த பூரன் சிக்ஸர், பவுண்டரி எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடம் ஸம்பா பந்துவீச்சை விட்டு வைக்காத பூரன், 2 சிக்ஸர்களை விளாசினார். பூரன் சந்தித்த முதல் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். 18 பந்துகளில் பூரன் அரைசதத்தை எட்டினார். பூரன் அதிரடியாக ஆடியபோது மார்ஷ் சிறிது பொறுமை காத்து 22 பந்துகளில் 37 ரன்களுடன் இருந்தார். பூரன் ஆட்டமிழந்தவுடன் மார்ஷ் அதிரடியாக ஆடத் தொடங்கி, ஷமி பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள், கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 பவுண்டரி என விளாசி 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 11 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பந்த்(15), பதோனி (6) விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், மில்லர், அப்துல் சமது வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் சன்ரைசர்ஸ் அணியில் கடந்த சீசனில் இருந்த இளம் வீரர் அப்துல் சமது 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 8 பந்துகளில் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மில்லர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedld161z54o
  18. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முக்கியத்தும் உள்ள இந்தத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனக் குறைத்து மதிப்பிட கூடாது. இந்தச் சபைகள் அனைத்தையும் கைப்பற்ற ஆளுங்கட்சியினர் முழு வேலையையும் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் வசம் நிதிப் பலம், ஆட் பலம், முப்படைப் பலம் என சகலதையும் பயன்படுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்வார்கள். இதற்கு மேலாக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கட்சிகளுக்கு எதிராகவும் இல்லாத பொல்லாத பல பிரச்சாரங்களை அவர்கள் செய்யக் கூடும். ஆகையினால் இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக முழு வீச்சுடன் உங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் சில சபைகளில் எங்களது வேட்புமனுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறான தீர்ப்பு வந்த பின்னர் சகல இடங்களிலும் நாம் எமது பிரச்சார நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இதனூடாக எங்களது சங்கு கூட்டணியைப் பலப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தவறிழைக்கக் கூடாது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று ஒரு பகுதியினர் விரும்பி வாக்களித்தனர். அதனூடாக முகம் தெரியாத மூன்று பேரைக் கொண்டு வந்தார்கள். அவர்களை நாடாளுமன்றமும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு திசைகாட்டியில் வென்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை யாராவது பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை. இப்படி முகம் தெரியாதவர்களையே வாக்களித்து அனுப்பியிருக்கின்ற நிலையில் தங்களுக்கு மக்கள் ஆதரவு பலம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அப்படியான மனோநிலையில் மக்கள் இல்லை என்பதை அவர்களுக்கு இந்தத் தேர்தலின் ஊடாகத் தெரியப்படுத்த வேண்டும். அப்படியாக இந்த அரச தரப்பினர் மீண்டும் ஒரு தடவை வெல்வார்களாக இருந்தால் தமிழ் மக்களின் இத்தனை அழிவுகள், போராட்டங்கள், தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போன சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம். ஆகவே, அரச தரப்பில் இருந்து அல்லது சிங்கள தரப்பில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் உங்களது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த ஆளுந்தரப்பினருக்கு எதிராகவே நீங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியதாக உள்ளது. கடந்த தேர்தல் போன்று இதிலும் தவறிழைத்தால் அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இன்றைக்கு அதிக பலத்துடன் ஆளும் தரப்பாக ஜே.வி.பி. உள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறைத் தமிழ் மக்கள் இழைக்கக் கூடாது. ஆகையினால், இந்தச் சிங்கள தேசிய கட்சிகளை விலக்கி வைத்துவிட்டு தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மேலும் சுயேச்சையாகவும் ஒரு எம்.பி. வந்திருக்கின்றார். அவர் யார் என்பதும் இப்போது அவர் என்ன என்ன செய்து வருகின்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில்தான் இந்த வைத்தியரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதேவேளை, இந்தத் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்றும், தேர்தல் முடிந்த பின்னர் கூட்டுக்களை அமைக்கலாம் என்றவாறாக சுமந்திரன் கூறுவார். ஆனால், சபைகளில் நாங்கள் பெரும்பான்மையை எடுக்க வேண்டும். இதனூடாக கூட்டுச் சேராமலும் ஆட்சியமைக்க முடியும். கூட்டுச் சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்கலாம் என்றில்லை. அதேநேரத்தில் யாருடன் கூட்டு என்று பலர் கேட்கலாம். உண்மையில் மக்களின் முழுமையான ஆதரவுடன் நாங்கள் வெல்வோமாக இருந்தால் யாருடனும் கூட்டுச் சேர வேண்டிய தேவை கிடையாது. எனவே, கடந்த தேர்தலில் இழைத்த தவறுகளை மறுபடியும் இழைக்காமல் தமிழ் மக்களின் போராட்டங்களும், தியாகங்களும் வீண்போகாத வகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/316619
  19. Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 10:58 AM பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தரம் - 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு , பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார். இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து , கடுமையாக எச்சரித்து , மாணவிகளை தடியால் அடித்து , தண்டனை வழங்கியுள்ளார். அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். https://www.virakesari.lk/article/210417
  20. தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம் 28 MAR, 2025 | 10:25 AM சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது. இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன். கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது. https://www.virakesari.lk/article/210411
  21. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார். ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக உள்ளது. உயர் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது ஹொசைன் பகேரி மற்றும் ஐஆர்ஜிசி விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே ஆகியோர் கோட்டை வளாகத்தை சுற்றிப் பார்ப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. மேலும் அதில், ஈரானின் மிகவும் அதிநவீன ஏவுகணைகள் காண்பிக்கப்படுகின்றன. அதாவது கெய்பர் ஷேகான், காதர்-எச், செஜில் மற்றும் பாவே லேண்ட் அட்டாக் குரூஸ் ஏவுகணைகள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து நீண்ட, திறந்த சுரங்கப்பாதைகள் மற்றும் பரந்த குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளும் காட்டப்படுகின்றன. மேலும் அந்த வீடியோவில், ’இன்று தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம்’ என்றும் ஈரான் கூறியுள்ளது. இந்த வீடியோ அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட ஈரானின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளுக்கு ஈரான் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற ஏவுகணை நகரம் மற்றும் கடற்படை சுரங்கம் தொடர்பான வீடியோக்களை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/316587
  22. 28 MAR, 2025 | 10:11 AM புதுடெல்லி: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவது குறித்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன. 1996-ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீர்வாழ் வளச் சட்டம் மற்றும் 1979-ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்கு முறைச் சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், அதிக அபராதங்கள் மற்றும் அதிக தடுப்புக்காவல் ஆகியவை விதிக்கப்படுகின்றன. படகு உரிமையாளர்கள், படகை இயக்குபவர்கள், மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் இலங்கை சிறையில் கைதிகளாக இருக்கிறார்கள். இது தீர்வுக்கான முயற்சிகளை சிக்கலாக்குகிறது. நமது அரசு இந்தப் பிரச்சினையை பாரம்பரிய வழியில் பெற்றுள்ளது என்பதை சபை அறிந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை 1974-இல் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது தொடங்கியது. அதைத் தொடர்ந்து 1976-இல் மீன்பிடி அதிகார வரம்பை வரையறுக்கும் கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. இந்த முடிவுகள்தான் நிலைமைக்கான மூல காரணம். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மீனவர்கள் புவியியல் அருகாமை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக இருப்பது இயல்பானது. நேற்று வரை, இலங்கை காவலில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று, மேலும் ஒரு இழுவை படகும், 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, மொத்தம், 97 பேர் காவலில் உள்ளனர். இவர்களில், 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், இன்று 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று சென்னை விமான நிலையத்தை அடைந்தனர். இவர்களில் 4 பேர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியும், 3 பேர் பிப்ரவரி 22-ஆம் தேதியும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/210409
  23. ஸ்மார்ட் போன்களின் நீலத்திரையை இரவில் மெல்லிய மஞ்சள் திரையாக மாற்றி பாவிக்கவேண்டும்.
  24. காசாவில் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றோம், காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரிக்கின்றோம் - சிபிஎஸ் நியுசிற்கு இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவிப்பு Published By: RAJEEBAN 27 MAR, 2025 | 01:44 PM கட்டிடங்களிற்குள் வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்கான காசாவில் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீனியர்களையே பயன்படுத்துகின்றனர் என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் காசாவில் பொதுமக்களை தாங்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காசாவிற்கு மீண்டும் யுத்தம் வந்துள்ளது,மார்ச் 17ம் திகதி யுத்தநிறுத்தத்தை கைவிட்டது முதல் இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன பகுதி மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்,ஹமாசின் இலக்குகளை தாக்குவதாக அது தெரிவிக்கின்றது. இந்த தாக்குதல்கள் காரணமாக காசாவில்இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை கடந்துள்ளது,என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இ;ஸ்ரேலின் இராணுவதந்திரோபாயங்கள்குறித்து கேள்வி எழுப்பிய இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவருடன் சிபிஎஸ் சமீபத்தில் உரையாடியது.டொம்மி ,உண்மையான பெயரில்லை,தன்னை அடையாளம் காட்ட விரும்பாமல் சிபிஎஸ் உடன் பேசுவதற்கு இணங்கினார், காசாவிற்குள் போரிட்ட இவர், இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தியாக தெரிவித்த சில தந்திரோபாயங்கள் கேள்வியை எழுப்பகூடியவையாக காணப்பட்டன. 'நாங்கள் காரணம் இல்லாமல் கட்டிடங்களை தீயிட்டு எரித்தோம்,இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல்" என அவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்தார்.'நாங்கள் பாதுகாப்பிற்காக மனிதக்கேடயங்களை பயன்படுத்தினோம்" கட்டிடங்களிற்குள் உள்ள வெடிபொருட்களை தேடுவற்கு நாய்களிற்கு பதில் பொதுமக்களை பயன்படுத்துமாறு எனக்கு பொறுப்பாகயிருந்த அதிகாரி தெரிவித்தார் என டொம்மி குறிப்பிட்டார். 'அவர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்த அவர் கட்டிடங்கள் ஆபத்தானவையா என பார்ப்பதற்காக முதலில் அவர்களை அனுப்பினோம்,கண்ணிவெடிகள் உள்ளனவா என பார்ப்பதற்காக அவர்களை அனுப்பினோம் அவர்கள் அச்சத்தி;ல் நடுங்கினார்கள்" என அவர் தெரிவித்தார். நாங்கள் எங்கள் தளபதியிடம் சென்று இதனை நிறுத்துமாறு கேட்டோம், ஆனால் அவர் அதனை தொடருமாறு உத்தரவிட்டார் அது தற்போது கொள்கையாகவிட்டது என டொம்மி சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/210332
  25. Sunrisers Hyderabad 190/9 Lucknow Super Giants (8.4/20 ov, T:191) 120/2 LSG need 71 runs in 68 balls. Current RR: 13.84 • Required RR: 6.26 • Last 5 ov (RR): 78/1 (15.60) Win Probability:LSG 94.26% • SRH 5.74

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.