Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. உள்ள பிரச்சினை விளங்காமல் எழுதிட்டன், நீங்கள் நேரமிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யுங்கோ அண்ணை.
  2. Kolkata Knight Riders 174/8 Royal Challengers Bengaluru (4.6/20 ov, T:175) 75/0 RCB need 100 runs in 90 balls. Current RR: 15.00 • Required RR: 6.66 Win Probability:RCB 92.74% • KKR 7.26%
  3. கனம் மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நிர்வாகிகளே, Tags ஐ அழுத்தினால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பெயர்களே Tags ல் காட்டுகிறது. இதனை நாங்கள் விரும்பிய பெயர்/விபரங்களை Tags செய்யக் கூடியதாக மாற்றலாமா?
  4. Published By: VISHNU 22 MAR, 2025 | 07:39 PM (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் '2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை. பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு நேரமும், காலமும் வழங்கப்படுகின்றது. இலங்கை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் தங்கள் புவிசார் அரசியலுக்கு ஏற்றவாறு தீவில் ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது வரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு அதிகாரப்பூர்வமான கட்டமைப்பை அங்கு நிறுவுவதற்கு முடியவில்லை. இதுவொரு மிகப்பெரிய குறைபாடாகும், ஏனெனில் மின்னஞ்சல் மற்றும் பிரதிநிதிளினால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் மட்டுமே ஆதாரங்களை சேகரிக்க முடியுமான நிலைமையே தற்போது உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு சரியான பொறிமுறையை நிறுவுவதற்குத் தவறிவிட்டது. எனவே, 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்' என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் அதைக் கொண்டுவருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இலங்கை அரசாங்கமானது ஐ.நா.வின் தீர்மானங்களுடன் ஒத்துழைக்கத் தவறியிருப்பதோடு, அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியும் உள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பேரவையானது உயர் வழிமுறைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209949
  5. 22 MAR, 2025 | 03:09 PM (எம்.மனோசித்ரா) ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று சனிக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் ‘MURASAME’ கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது 151 மீற்றர் நீளமும், மொத்தம் 200 அங்கத்தவர்களை கொண்டதாகும். கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஹயாகவா மசஹிரோ பணியாற்றுகிறார். மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளனர். வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்த பின்னர் இக் கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/209922
  6. நடராஜா ஜனகன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன . இந்நிலையில், தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை. தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் கள விஜயம் பாராட்டப்படக்கூடியவையே . ஆனாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய கௌரவத்தை உறுதிப்படுத்த நிலை நிறுத்தும் அரசியல் உரிமை சார்ந்த நகர்வுகள் பின்நிலைக்கு தள்ளப்பட்டு வருவது கவலை தரும் நிலையாகும். குறிப்பாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய புதிய அரசியல்யாப்பு வருகை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது புதிய ஆட்சியாளர் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பலவீன நிலையை நோக்கி நகர வைத்துள்ளது. மேலும் போர்க்காலத்தில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பேசப்படாத விடயங்களாக மாறி வருகின்றன. உதாரணமாக திருகோணமலை மாணவர்களின் படுகொலை தொடர்பான விடயம் மற்றும் போரின் இறுதிக்காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை தொடர்பான விடயம் போன்றவை காலம் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. காணாமல் போன உறவுகளை தேடி தாய்மார்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் ஆயிரக்கணக்கான நாட்களைத் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச விசாரணையை அவர்கள் கூறி வருகின்றனர். தமிழ அரசியல் கைதிகளின் நிலையும் தொடர் கதையாகவே மாறியிருக்கிறது. போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் 58வது கூட்டத்தொடரில் முன் வைத்திருக்கும் நிஜங்கள் நீதி கோரி போராடிவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் நிலையில் காணவில்லை. பொறுப்புக் கூறலில் அவர்கள் எதனையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாத நிலை உறுதி பெற்று வருகிறது. இதேநேரம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால்களுக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை நிரந்தர தீர்வை வழங்கும் நிலை காணப்படவில்லை. வடபகுதியில் தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் விஹாரை தொடர்பான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது தொடர்பில் புத்தசாசன சமய விவகார அமைச்சர் கனித்துவ சுனில் கெனவி நேரடியாக களத்தை பார்வையிட்டு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் தனது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உறுதிப்பாடு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுக் கொடுத்தால் சிறப்பாக அமையும். மேலும் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் தொடர்பான விடயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தில் மக்கள் அங்கே சென்று வழிபாட்டில் ஈடுபட மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல மாற்றங்களாகவே பார்க்கப்படுகிறது. இதேநேரம் வாகரைப் பகுதியில் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் உற்பத்தி முயற்சிகளை வன இலாகாவினர் எதுவித தயக்கமும் இன்றி அம்மக்களை அவர்களது பகுதிகளிலிருந்து வெளியேற்றியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் இன்று வரை நிலை நிறுத்தாதிருப்பது பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் வடக்கில் ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா வேதனமாக வழங்கப்பட்டிருக்கும் நிலை ராணுவம் அல்லாத தமிழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் 6000 ரூபாய் வழங்கப்படுவதாக வெளியிடப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனயீர்ப்பு விடயத்துக்கு அரசாங்கத்தின் உரிய பதில் வழங்கப்படாத நிலை தொடர்கின்றது. மேலும் நாயாறு பகுதியில் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு நிரந்தரமாக தங்கி உள்ளூர் மீனவர்களின் தொழிலை பாதிக்கும் வகையில் செயற்படுவதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது. இந்திய மீனவர்களின் செயற்பாடு காரணமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய இழப்புக்கள் போன்றே இந்த நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் மேல் வந்திருக்கிறது. மேலும் வன்னி நிலப்பரப்பில் 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் காட்டு மரங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு வெட்டுவது, அரிவது போன்ற செயற்பாடுகள் அது தொடர்பான ஓசைகள் கூட இல்லாதிருந்த நிலையில் தற்போது வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்கின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் புதிய ஆட்சியாளர்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி அதற்கான தீர்வை வழங்கும் நிலையை நோக்கி நகர வேண்டும். 1970ல் உருவான இடதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களை புறந்தள்ளிவிட்டு பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் முதன்மை நிலை பெற அது இறுதியில் ஆயுதப் போராட்டமாக மாறி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தை சந்தித்ததுடன், இறுதியில் நாடே வங்குரோத்து நிலைக்கு சென்றது வரலாறாகும். இத்தகைய நிலைகள் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு புதிய ஆட்சியாளர் அதிக கவனத்தை இதன் மீது குவிப்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதற்கான புதிய அரசியல் யாப்பின் வெளிவருகை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால் நிலைமைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் அழகிய இலங்கையை உருவாக்கும் முயற்சிகள் முதன்மை நிலை பெற வேண்டும். https://thinakkural.lk/article/316207
  7. INNINGS BREAK 1st Match (N), Eden Gardens, March 22, 2025, Indian Premier League Kolkata Knight Riders (20 ov) 174/8 Royal Challengers Bengaluru RCB chose to field Current RR: 8.70• Last 5 ov (RR): 29/3 (5.80) Win Probability:KKR 43.74% • RCB 56.26%
  8. LIVE 1st Match (N), Eden Gardens, March 22, 2025, Indian Premier League Kolkata Knight Riders (19.3/20 ov) 169/7 Royal Challengers Bengaluru RCB chose to field Current RR: 8.66 • Last 5 ov (RR): 26/3 (5.20) Live Forecast:KKR
  9. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்? படக்குறிப்பு, 21 வருடங்களுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக இணைந்த தலைவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 22 மார்ச் 2025, 12:06 GMT விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர். மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற பெயரிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் மீண்டும் இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம் படக்குறிப்பு,கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி, கிழக்கு தமிழர்களின் வளர்ச்சியையும், சுபீட்சத்தையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகமும் இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கடந்த 15ம் தேதி கைச்சாத்திட்டிருந்தனர். எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இன்று (22) இணைந்துக்கொண்டுள்ளது. இலங்கையில் தலைமறைவாக இருந்தபோலீஸ் மாஅதிபர் சரண் - 'பிரபாகரனை தேடுவதை போன்று தேடினோம்' இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் - எப்போது, எப்படி நடக்கும்? இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் கச்சத்தீவு, தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன? பிபிசிக்கு இலங்கை அமைச்சர் பேட்டி 21 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த கருணா அம்மான் - பிள்ளையான் படக்குறிப்பு, 21 வருடங்களுக்கு முன் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளாக விளங்கிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 21 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதாக 21 வருடங்களுக்கு முன்னர் மார்ச் மாதம் 04ம் தேதி கருணா அம்மான் அறிவிப்பை வெளியிட்டதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். தமிழீழ போராட்டத்தில் வடக்கு மாகாண தமிழர்களினால், கிழக்கு மாகாண தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து, அப்போதைய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் குரல் எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார். ''கிழக்கு மாகாண போராளிகள் மீது விடுதலைப் புலிகள் படையெடுத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, சகோதர படுகொலைகளை ஊக்குவிக்க முடியாது என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுமாறு கருணா அம்மான் பணித்ததை தொடர்ந்து நானும் வெளியேறினேன்'' என்கிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன். ''தமிழீழ போராட்டம் என்கின்ற போர்வையில் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து கருணா அம்மான் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நாமும், எம்மை போன்ற போராளிகளும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினோம். ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பதால் ஒரு ஜனநாயக பாதையில் ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றுப்பட்டு செயற்பட முயன்றோம்.'' என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ''தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நான் உருவாக்கியபோதிலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத துரதிஷ்டவசமான சில சம்பவங்கள் நடந்தது. நாங்கள் இரண்டு பேரும் தூர விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இருந்தாலும் நான் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டேன். கருணா அம்மான் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக வந்து மக்களுக்கு பணியாற்றினார்'' என சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார். அரசியல் ரீதியில் இணைய காரணம் என்ன? கிழக்கு மாகாண தமிழர்களுக்காக கடந்த காலங்களை மறந்து, சரி செய்து, இந்த புதிய கனவான் ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார். ''இந்த மாகாணத்தினுடைய பல்லின மக்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பது. கல்வி, பொருளாதார, சுகாதார, உட்கட்டமைப்பு மேம்பாடு, மாகாண சபையின் அதிகாரம் என்கின்ற போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டு கொண்டிருப்பது மக்களுக்கும் பின்னடைவை கொடுத்து, இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும். நான் குறிப்பிட்டதை போன்று பல்லின மக்கள் வாழ்கின்ற அடிப்படையில் எமது சமூகம் தொடர்ந்தும் பின்தள்ளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கடந்த காலங்களை மறந்து சரி செய்து, எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியல் இயக்கத்தை நிர்வ வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கை காரணமாக நாங்கள் இன்று பிரதான தளபதிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கனவான் ஒப்பந்தத்தை செய்திருக்கின்றோம்.'' என அவர் மேலும் குறிப்பிடுகின்றார். ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற 'லைக்கா' நாய் எவ்வாறு இறந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 கருணா அம்மான் என்ன சொல்கின்றார்? ''தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும்தான்'' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார். மட்டக்களப்பில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''இது இணைவு என்பதல்ல. நாங்கள் இணைந்து தான் தொடர்ந்தும் இருந்திருக்கின்றோம். இன்று தேவையை கருத்திற் கொண்டு கூடியிருக்கின்றோம். நான் மத்திய அரசாங்கத்தில் வேறொரு பாதையில் இருந்தபடியால், அதேபோன்று பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த அடிப்படையில் இருவரும் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தி பல மாற்றங்களை உருவாக்கியிருந்தோம். நானும் பிள்ளையானும் பல துயரங்களை சந்தித்திருக்கின்றோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும் தான். அந்த தலைமைத்துவத்தின் தவறான முடிவால்தான் நாங்கள் இன்று வெளியேறியிருந்தோம்.'' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். ''மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். எந்த நோக்கத்திற்காக நாங்கள் அன்று போராட்டத்திலிருந்து ஜனநாயக வழியில் வந்து கிழக்கு மாகாண மக்களையும், கிழக்கு மாகாண இளைஞர்களையும், கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்தோமோ, அதேநோக்கத்திற்காக தற்போது மீண்டும் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எமது இணைவு என்பது முடிவற்ற வளர்ச்சி பாதையை நோக்கியதாக இருக்கும் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். '' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குறிப்பிடுகின்றார். இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததன் பின்னர் தாம் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அரசியல் ரீதியான ஒருமைப்பாடு இருவருக்கும் இடையில் இருக்கவில்லை என சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். எனினும், இன்று தானும், கருணா அம்மானும் இணைந்துக்கொண்டு அரசியல் ரீதியில் செயற்படும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1en12d67njo
  10. ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையம் கட்டுரை தகவல் எழுதியவர், சைமன் ஜாக் பதவி, வணிக ஆசிரியர், பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட ஒரே ஒரு தீ விபத்து, உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றை மூடுவதற்கு வழிவகுத்தது என்பது வியப்பாக உள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (மார்ச் 21) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் விமானங்கள் இயக்கப்படாததால் சுமார் 2,00,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று (மார்ச் 22) விமான நிலையம் முழு செயல்பாட்டிற்கு திரும்பிவிடும் என அதன் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் மில்லியன் கணக்கான டன் வர்த்தகப் பொருட்களின் பயணங்களில் இடையூறு ஏற்பட இந்த விபத்து காரணமாக இருந்தது. மேலும், பிரிட்டனின் முக்கிய உள்கட்டமைப்பான ஹீத்ரோ விமான நிலையம், மோசமான சூழ்நிலைகளைச் சமாளித்து மீளும் திறனைக் கொண்டுள்ளதா? என்பது குறித்துப் பல கேள்விகளையும் இந்த விபத்து எழுப்பியுள்ளது. விமான நிலைய முடக்கத்திற்கு காரணம் என்ன? 'பேரிடர் மீட்புத் திட்டங்கள்', பல வணிகங்களின் உயர் நிர்வாகிகளை தொடர்ந்து சிந்தித்து வைக்கும் ஒரு விஷயம். வங்கிகள், தரவு மையங்கள், பங்குச் சந்தைகள், மருத்துவமனைகள் என அனைத்திலும் அவசரகாலத் திட்டங்கள் உள்ளன. "தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹீத்ரோ விமான நிலையம் போன்ற ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு, மாற்று வசதி ஏதும் இல்லாமல் ஒரே ஒரு மின்சார விநியோக அமைப்பை முழுமையாகச் சார்ந்திருப்பது எப்படி?" என்று விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் வில்லி வால்ஷ் கேள்வி எழுப்புகிறார். 'தெளிவான திட்டமிடல் இல்லாததே' விமான நிலையம் மூடப்படுவதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். ஹீத்ரோ விமான நிலையத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் விநியோக அமைப்புகள் இருந்தாலும், இந்த சம்பவத்தில் 'ஒரு முக்கியமான மின் விநியோக அமைப்பு' சேதமடைந்ததாக பிரிட்டனில் மின்சார விநியோக பணிகளை மேற்கொண்டு வரும் நேஷனல் கிரிட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதன் பொருள், உயர் மின்னழுத்த மின்சாரத்தை குறைந்த மற்றும் பாதுகாப்பான மின்னழுத்தமாக மாற்ற நேஷனல் கிரிட் பயன்படுத்தும் துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சமாளிக்க 'பேக்-அப்' அல்லது அவசரக் கால அமைப்புகள் போதுமானவை அல்ல என நிரூபிக்கப்பட்டது. இந்த செயல்முறை அதிக வெப்பத்தை உருவாக்குகிறது, பின்னர் (எரியக்கூடிய) குளிரூட்டும் திரவங்களைப் பயன்படுத்தி வெப்பம் தணிக்கப்படுகிறது. இந்த செயல்முறை, தற்போதைய சூழலில் கவனம் பெற்றுள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் ஏதேனும் சதித்திட்டம் நடந்ததா என்று பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். லண்டன் ஹீத்ரோ விமான நிலைய சேவைகளை முடக்கிய தீ21 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸ் பயணித்த விண்கலன் பூமிக்கு வர 17 மணிநேரம் ஆனது ஏன்? - ரஷ்யாவின் சோயுஸ் சில மணி நேரத்தில் வந்தது எப்படி?21 மார்ச் 2025 பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் 'மிகப்பெரிய அவமானம்' ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான அளவு மின்சாரத்தை ஹீத்ரோ விமான நிலையம் பயன்படுத்துகிறது. எனவே அதன் செயல்பாடுகளை எந்த பாதிப்புகளும் இல்லாமல் நடத்த, அதுவே ஒரு அவசரகால மின்விநியோக அமைப்பை சொந்தமாக வைத்திருக்க முடியாது. இருப்பினும், சில முக்கிய அமைப்புகளுக்கான அவசரகால வசதிகள் இருப்பதாக ஹீத்ரோவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறினார், ஆனால் முழு விமான நிலையத்திற்குமான மாற்று மின்சார விநியோகங்களைத் தொடங்குவதற்கு நேரம் எடுத்தது. ஹீத்ரோ விமான நிலைய அதிகாரி ஒருவர், அதன் பேக்-அப் டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் அமைப்புகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி இயங்கியதாகக் கூறினார். பிரச்னை நேஷனல் கிரிட்டில்தான் உள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார். விமான நிலையம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வீடுகளும் மின்சாரம் இல்லாமல் தவித்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹீத்ரோ விமான நிலையம் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் நேஷனல் கிரிட்டின் இரண்டு துணை மின்நிலையங்கள் உள்ளன. ஒன்று விமான நிலையத்தின் வடக்கே உள்ள வடக்கு ஹைட் பகுதியிலும், மற்றொன்று விமான நிலையத்தின் தெற்கே உள்ள லாலேஹாமிலும் இருப்பதாக எரிசக்தி பகுப்பாய்வு நிறுவனமான மான்டெல் குழுமம் தெரிவித்துள்ளது. உள்ளூர் மின்விநியோக வலையமைப்பு மூலம் வடக்கு ஹைட் துணை மின்நிலையம் மட்டுமே ஹீத்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று நிறுவனத்தின் இயக்குனர் பில் ஹெவிட் கூறினார். "ஒரு முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச உள்கட்டமைப்பு தளத்தில், இத்தகைய சூழ்நிலைகளை கையாள்வதற்கான வசதி இல்லாதது கவலையளிக்கிறது," என்று பில் கூறினார். "ஹீத்ரோ போன்ற ஒரு பெரிய மற்றும் முக்கியமான விமான நிலையம், ஒரே ஒரு அசம்பாவிதத்தால் பாதிக்கப்படக்கூடாது" என்றார். சாத்தம் ஹவுஸ் (Chatham House) எனும் சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சியாளர் ராபின் பாட்டர், "ஆனால், இத்தகைய அசம்பாவிதங்களை சமாளிக்கும் விதமாக ஓரளவு ஒழுங்குமுறையைக் கொண்ட பிரிட்டனின் இரண்டு விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ, மற்றொன்று கேட்விக்" என்றார். "இவை உண்மையில் பிரிட்டனின் சிறந்த விமான நிலையங்கள், அவற்றின் அவசரகால நிர்வாகத்திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது மற்றும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்ற அடிப்படையில்" என்று அவர் கூறினார். 2023ஆம் ஆண்டில், பிரிட்டனின் தேசிய உள்கட்டமைப்பு ஆணையம், "தொலைத்தொடர்பு, நீர், போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற சில முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளுக்கான தரநிலைகளை 2025ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்க வேண்டும்" என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் அரசாங்கம் அந்தத் துறைகளில் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை விவரிக்கும் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. "அவை அக்டோபர் 2023 முதல் அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார் ராபின் பாட்டர். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து அமெரிக்கக் கல்வித் துறையின் பணிகள் என்ன? டிரம்பால் அதை அகற்ற முடியுமா? சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்? சீனா அசுர வேகத்தில் ஏ.ஐ துறையில் வளர்ந்து வருவதன் பின்னணி விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்? சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அவசரகால மின்விநியோகம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று ஹீத்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சில சூழ்நிலைகளில், அதாவது தற்போதைய ஒன்றைப் போல, ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த வலிமை அல்லது வெற்றி அதன் பலவீனமான பகுதியைப் பொறுத்தது. ஒரு பகுதி தோல்வியடைந்தால், முழு அமைப்பும் பாதிக்கப்படலாம். ஹீத்ரோ போன்ற தனியாருக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய விமான நிலையம் முழுமையாக இயங்க ஒரு கூடுதல் மின்சார அமைப்பு தேவை என்றால், அதை உருவாக்குவதற்கு பெரும் பணமும், வளங்களும் தேவைப்படும். இந்த சம்பவத்தின் காரணமாக, 1,300க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக 'Flightradar24' என்ற கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிறுவனங்களின் அறிவுறுத்தல்கள் வரும்வரை விமான நிலையத்திற்கு பயணிகள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மார்ச் 21) ஏற்பட்ட இந்த மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியால், தாமதமான பயணிகளும் சரக்குகளும் தங்கள் இடங்களை அடைந்துவிட்டாலும் கூட, பெரும் செலவு செய்து ஹீத்ரோ விமான நிலையத்திற்கு கூடுதல் மின்விநியோக அமைப்புகளை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்குமா என்று மக்கள் தொடர்ந்து விவாதிப்பார்கள். செய்தி சேகரிப்பு: டாம் எஸ்பினர், தியோ லெகெட், பென் கிங் மற்றும் ஆலிவர் ஸ்மித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89ynq7p5n5o
  11. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 22 மார்ச் 2025, 06:18 GMT கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். பாம்பு பிடிப்பவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு கோவையைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 39) என்ற பாம்பு பிடிக்கும் நபர், கடந்த மார்ச் 17 அன்று, தொண்டாமுத்துார் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நாகப் பாம்பை பிடிக்கும் போது, பாம்பால் கடிபட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார். மார்ச் 19 இரவு அவர் மரணமடைந்துள்ளார். விஷ முறிவுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இதய செயலிழப்பால் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவையில் முரளீதரன் என்பவரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்பவரும் பாம்பு பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த உமர் அலி, கடந்த ஆண்டு ஏப்ரலில் குடியிருப்புப் பகுதியில் பிடித்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காகச் சென்ற போது அந்த பாம்பு கடித்து பலியானார். தற்போது கோவையில் மரணமடைந்த சந்தோஷின் நண்பரும், காட்டுயிர் ஆர்வலருமான ராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 20 ஆண்டுகளில் சந்தோஷ் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்து, காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அவரது மறைவால் இன்றைக்கு அவர் குடும்பம் நிர்க்கதியில் இருக்கிறது. அவருடைய இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.'' என்று கேட்டுக் கொண்டார். 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 கேரளாவில் 18 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான 'அனோரெக்சியா நெர்வோஸா' என்றால் என்ன?17 மார்ச் 2025 பட மூலாதாரம், HANDOUT பாம்பு பிடிப்பதில் பழங்குடிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் பாம்புக்கடி அதிகம் என்றாலும், பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவை விட அங்கே மிகவும் குறைவு என்று என்கிறார் மனோஜ். இவர் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியும் ஆவார். பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICMR) இணைந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னையைக் கையாளும் விதமும், விஷமுறிவு மருந்துகளும் மிகச்சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் மனோஜ். பாரம்பரியமாக பாம்பு பிடிக்கும் பழங்குடிகளுக்கும், மற்றவர்களும் பாம்புகளை அணுகும் முறையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனப் பழங்குடியினரான மாசி சடையன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு, அந்த அரசுகளின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள், 'பாம்பு பிடிப்பதில் தனித்துவமானவர்கள்' என்று இந்தியாவின் பாம்பு மனிதன் என்று அழைக்கப்படும் ராமுலஸ் விட்டோகர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் இருளர் பாம்பு பிடிக்கும் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதில் இவர்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாகவுள்ளனர். அவர்கள் பழையபெருங்களத்தூர், புதுப்பெருங்களத்தூர், சென்னேரி, மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரித்து, மீண்டும் காட்டுக்குள் விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பட மூலாதாரம்,MAANOJ படக்குறிப்பு,முனைவர் மனோஜ் "கடித்த பாம்பை மொபைலில் படமெடுப்பது அவசியம்" பாம்பு பிடிக்கும் போது, அங்குள்ள சூழ்நிலையையும், பாம்பு கடித்துவிட்டால் அந்த நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் உணர்ந்து பழங்குடிகளைப் போன்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உயிரிழப்புகளைத் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனரும், ஊர்வனவியலாளருமான ரமேஸ்வரன் மாரியப்பன். பாம்பு பிடிக்கும் போது வீடியோ எடுக்கும் ஆர்வத்துடன் பலரும் கூடுவது, பாம்புகளிடம் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதே பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆபத்தில் முடிவதாகக் கூறுகிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய ரமேஸ்வரன் மாரியப்பன், ''பாம்பைக் காப்பாற்றவே நாம் வந்துள்ளோம் என்பதையும், நம் உயிரும் முக்கியம் என்பதையும் உணர்ந்து பாம்பு பிடிப்பவர்கள் செயல்பட வேண்டும். சிறிய பாம்பு, பெரிய பாம்பு எதுவாயினும் கடித்து விட்டால் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல வேண்டும்.'' என்றார். மேலும் "பாம்பு பிடி வீரர் என்ற வார்த்தை தவறு. அவர்களை பாம்பு பிடிப்பவர்கள் அல்லது பாம்புகளை பாதுகாப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீரர் என்ற வார்த்தைதான், பாம்பைப் பற்றி அடிப்படை அறிவும், அனுபவமும் இல்லாதவர்களையும் பாம்புகளைப் பிடிக்கத் துாண்டி வருகிறது.'' என்றார். பட மூலாதாரம்,RAMESWARAN MARIAPPAN படக்குறிப்பு, இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ரமேஸ்வரன் மாரியப்பன். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களில் என்ன செய்தார்?19 மார்ச் 2025 ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025 பாம்பு கடித்துவிட்டால், அது எந்த வகைப் பாம்பு என்று அறிவதற்கு, அதனை உடனே போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறும் விஞ்ஞானி மனோஜ், கட்டு வரியனைத் தவிர மற்ற பாம்புகள் கடித்தால் அந்த இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாற்றம் ஏற்படும் என்றார். எந்த பாம்பு கடித்தாலும் பதற்றமடைந்தால் ரத்தத்தில் விஷம் வேகமாகப் பரவும் என்பதால், பயம், பதற்றம் இல்லாமல் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்பதை மீண்டும் அவர் வலியுறுத்துகிறார். பாம்பு பிடிக்கும் இடங்களில் இப்போது கூட்டம் எளிதாகச் சேர்ந்து விடுவதால், பாம்பு பிடிப்பவர்கள் செல்வதற்குள் அந்த பாம்பு ஒரு வித அச்சத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்குமென்பதால், அதைக் கையாள்வதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டுமென்கிறார் ரமேஸ்வரன் மாரியப்பன். ''கோவை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள பகுதிகளில் ராஜநாகங்கள் அதிகமுள்ளன. அது தீண்டினால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். நாகப் பாம்பு கடித்துவிட்டால் ஒரு மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையை எடுத்தால் மட்டுமே பிழைக்க முடியும்.'' என்கிறார் விஞ்ஞானி மனோஜ். ஔரங்கசீப் இந்துக்களை வெறுத்தாரா? வரலாற்று உண்மை என்ன?21 மார்ச் 2025 சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 பாம்பு பிடிப்பவர்களுக்கு அரசே காப்பீடு வழங்க கோரிக்கை கோவையைச் சேர்ந்த அமீன், கடந்த 27 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வருகிறார். "இதுவரை பிடித்துள்ள பாம்புகளைக் கணக்கில் வைத்துக் கொண்டதும் இல்லை; எதையுமே சமூக ஊடகங்களிலும் பகிர்ந்ததில்லை" என்கிறார். சமூக ஊடகங்களில் பகிர விரும்பி கண்மூடித்தனமான துணிச்சலில் பாம்பு பிடிக்க பலரும் முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டியது வனத்துறையின் பொறுப்பு என்கிறார் அமீன். ''நான் ஒரே நாளில் 4 பாம்புகளை பிடித்துள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன், முதல்முறை பாம்பு பிடித்த போது இருந்த அதே அச்சத்துடனும், விழிப்புடனும் இப்போதும் பிடிக்கிறேன். எங்களைப் போன்று தொழில் முறையில் பாம்பு பிடிப்பவர்களுக்கு வனத்துறை அடையாள அட்டை, மேலைநாடுகளில் பாம்பு பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணம் (TONG) போன்றவற்றை வழங்க வேண்டும். வனத்துறையால் அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பாம்பு பிடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார் அமீன். உலகில் பாம்புகளே இல்லையென்றால் என்ன நடக்கும்? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? பாம்பு கடித்தால் என்ன செய்யக் கூடாது? பாம்புகளை மீட்கும் இந்தப் பெண் கூறுவது என்ன? பாம்புகளின் இனப்பெருக்கம் பற்றிய புரிதலை மாற்றுமா புதிய கண்டுபிடிப்பு? பட மூலாதாரம்,HANDOUT கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், பாம்புகளைப் பிடிப்பதற்கு அங்குள்ள வனத்துறைகளின் சார்பில், மொபைல் ஆப்கள் உருவாக்கப்பட்டு, அதைக் கொண்டு பாம்பு பிடிப்பவர்களும் பொதுமக்களும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் பாம்பு பிடிக்கும் பணியை வனத்துறை ஒருங்கிணைக்கவும் காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இது குறித்து தமிழக வனத்துறைத் தலைவரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான சீனிவாச ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, ''பாம்பு பிடிப்பதை ஒருங்கிணைப்பதற்கான எல்லாப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் 'சர்ப்பா' என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் (SARPA) உருவாக்கப்பட்டது போல, இங்கும் ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்படவுள்ளது. அதேபோன்று பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கவும். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற சற்று கால அவகாசமாகும். அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பாம்புகள், மனிதர்கள் என இரு தரப்புக்கும் பாதுகாப்பு கிடைக்கும்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr529m4p9g2o
  12. மகிந்த, ரணில் அரசை விட அநுர அரசு தொடர்பில் வெளியான அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) அரசாங்கங்களை விட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் ரூபாய்கள் அதிகம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனம் பெரிய வாகன அணிவகுப்புகள் இருக்காது என்றும், நாடாளுமன்றத்திலிருந்து உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் கூறினாலும், சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனத்தைப் பராமரிக்க முன்பை விட அதிக செலவுகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். அநுரவின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை ஜனாதிபதி சமீபத்தில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அவருடன் ஒரே ஒரு துணை வாகனம் மட்டுமே சென்றதாக ஊடகங்கள் காட்டியதாகவும், ஆனால் அவரது பாதுகாப்பிற்காக சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். https://ibctamil.com/article/anura-government-s-expenditure-is-high-1742648815
  13. பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம் Published By: RAJEEBAN 22 MAR, 2025 | 01:06 PM பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது என சட்டத்தரணியும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமா சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார். கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக சுதந்திர பலஸ்தீன இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். யுத்த நிறுத்த உடன்பாட்டினை மீறி இஸ்ரேல் மீண்டும் தனது இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேலின் வன்முறையையும் காசாவிற்கு எதிரான கூட்டு தண்டனையை நிறுத்தக்கோரியும், இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா நிதி வழங்குவது மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவஸ்திகா அருளிங்கம் மேலும் தெரிவித்ததாவது. பலஸ்தீனிய தேசத்திற்கும் மக்களிற்கும் ஆதரவாகவும் நாங்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கு காரணம், போர் நிறுத்த உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு, பலஸ்தீனிய மக்கள் மீதும் நாட்டின் மீதும் இன்னமும் வன்முறையையும், இன ஒழிப்பையும் நடத்திக்கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அதனை கண்டிப்பதற்கும் மேலும் மேலும் பலஸ்தீனிய மக்கள் மீது வன்முறையை செலுத்தவேண்டாம் எனவும் போரை நிறுத்தவேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களிற்கு உரித்தான நிலங்களை விடுவிக்குமாறும் கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது. அதனால்தான் பாலஸ்தீன நாட்டு மக்களிற்கு எதிராக நடத்தப்படுகின்ற, இனக்குற்றங்களிற்கு எதிராகவும், போர்குற்றங்களிற்கு எதிராகவும், கைதுகளிற்கு எதிராகவும், அவர்களுடைய காணிகளை கைப்பற்றுவதற்கு எதிராகவும் நாங்கள் இன்று இலங்கையிலிருந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இஸ்ரேலிற்கும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற, முற்றுமுழுதாக உதவிகளை செய்துகொண்டிருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிராகவும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/209918
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 22 மார்ச் 2025, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர். அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது. இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது. வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும். நாஜி பொறியாளர் ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது. "ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்" என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார். 1928-ல், அவர் ஜெர்மனியின் விண்வெளி பயண சமூகத்தில் இணைந்தார். விரைவில் ஜெர்மன் ராணுவத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை மிரட்டிய வி2 என்ற ஏவுகணையை இவரே உருவாக்கினார். இந்த வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். வி2 என்றால் அது 'vergeltungswaffen' (பழிவாங்கும் ஆயுதம்) என்ற பொருள் ஆகும். பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு,வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். V2 ராக்கெட் தொழில்நுட்பம் இரண்டாம் உலகப் போரில் லண்டன், அண்ட்வெர்ப், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்குவதற்கு, V2 ராக்கெட்டை நாஜி ஜெர்மனி பயன்படுத்தியது. ஒவ்வொரு V2 ராக்கெட்டும் 14 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். அவை கிட்டத்தட்ட ஒரு டன் வெடிபொருள்களை சுமந்து சென்றன. 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி லண்டன் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 மீட்டர் பரப்பளவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி மூன்று பேரை கொன்று 22 பேரை அது காயப்படுத்தியது. இவை ஹிட்லரின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. V2 ராக்கெட் திரவ எத்தனால் மற்றும் ஆக்சிஜனால் உந்தப்படும். சுமார் 190 கி.மீ எறிபாதையில், பூமிக்கு மேலே 80 கி.மீ உயரத்தில் செல்லக் கூடிய V2 , உலகின் முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ராக்கெட் ஆகும். அதுவரை உலகம் இதைப் போன்று வேறு எதையும் பார்த்ததில்லை. சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?21 மார்ச் 2025 ஆங்கிலேயே தொல்லியலாளர் ஜான் மார்ஷலுக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டது ஏன்?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,SPL 'ஆபரேஷன் பேப்பர்கிளிப்' இரண்டாம் உலகப் போரின் முடிவில், V2 தொழில்நுட்பத்தை வசப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டி போட்டன. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ப்ரான் அமெரிக்காவிடம் சரணடைந்தார். " ஸ்டாலினுக்கு வேலை செய்ய விருப்பம் கொள்ளாத வான் ப்ரான் அமெரிக்கர்களிடம் சரணடைவது என்ற முடிவை எடுத்தார். அதேநேரம், ரஷ்யர்கள் V2 தொழிற்சாலையை கைப்பற்றினர்" என்று பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் ஹாலிங்மன் தெரிவிக்கிறார். சோவியத்துக்கு எதிராக நாஜி விஞ்ஞானிகளின் திறனை பயன்படுத்தும் அமெரிக்காவின் 'ஆப்பரேஷன் பேபர்கிளிப்' திட்டத்தில் வான் ப்ரானுடன் சேர்ந்து 125 நாஜி விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் சரணடைந்தனர். நாசா விஞ்ஞானியாக அமெரிக்காவில் ப்ரானுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவரது குழு அமெரிக்காவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான ரெட்ஸ்டோனை உருவாக்கியது. இந்த ஏவுகணை ஒரு அணு ஆயுதத்தை 250 மைல்கள் வரை வீசக்கூடியது ஆகும். ரெட்ஸ்டோனின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பான ஜூபிடர்-சி, 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர் 1-ஐ விண்ணில் ஏவியது. அவர் 1960-ல் நாசாவில் மார்ஷல் விண்வெளி பயண மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். அங்கே, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு உந்திச் சென்ற சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட் அவரது தலைமையில் உருவாக்கப்பட்டது. 1950 களில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து விண்வெளிப் பயணத்தை பிரபலப்படுத்திய Man in Space (விண்வெளியில் மனிதன்) என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். "மனிதன் எங்கு செல்ல விரும்புகிறானோ அங்கெல்லாம் அவன் சொந்தமாகிறான்" என்று ப்ரான் கூறுவார். பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் போது அவரது இந்த நம்பிக்கை அமெரிக்காவை உற்சாகப்படுத்தியது. 1969-ல் அமெரிக்காவின் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு வரலாற்றின் மிகச் சிறந்த ராக்கெட் பொறியாளர்களில் ஒருவராக ப்ரானை நிலை நிறுத்தியது. அப்போதும் அவரது கடந்த காலம் குறித்த கேள்விகள் நீடித்தன. "இயற்கை அழிவை அறியவில்லை; அதற்குத் தெரிந்ததெல்லாம் உருமாற்றம்" என்று கூறிய ப்ரான் இந்த சந்தேகங்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றே கூறலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது? பனாமா: கடலுக்கு அடியில் 11 மீட்டர் ஆழத்தில் வீடு கட்டி 120 நாட்கள் வாழ்ந்த மனிதர் புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி? கடந்த காலம் அவரை விடவில்லை ப்ரான் ஆராய்ச்சியில் உருவான V-2 பொறியியல் அதிசயமாக இருந்தது, ஆனால் ஒரு இருண்ட வரலாற்றையே கொண்டிருந்தது. வதை முகாம்களில் இருந்து கட்டாய உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிட்டல்வெர்க் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் - முன்னேற்றத்தையும், மனிதத் துயரத்தையும் ஒருசேர அடையாளப்படுத்தியது. "வான் ப்ரான் இந்த கொடூரங்களை அரிதாகவே எதிர்த்தார்" என்று குறிப்பிடுகிறார் வான் ப்ரான்: ட்ரீமர் ஆஃப் ஸ்பேஸ், இன்ஜினியர் ஆஃப் வார் என்ற புத்தகத்தின் ஆசிரியரான மைக்கேல் நியூஃபெல்ட். அவர் நிலவுக்கு அப்பால் செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த 1964ஆம் ஆண்டில், அவர் சமர்ப்பித்த மாநாட்டு அறிக்கை ஒன்று என்னிடம் உள்ளது. இந்த அறிக்கையில் அவர் நிலவில் மனிதனை தரையிறக்குவதற்கான ஜெமினி திட்டத்திற்கு முன்பே, அவர் தனது சகாக்களிடம் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும் என கூறியதை உள்ளடக்கியிருந்தது," என்று, மார்ஷல் விண்வெளி மையத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனரான ஜான்சன் குறிப்பிடுகிறார். "இன்று நாம் செய்யும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது, 1964ஆம் ஆண்டிலேயே இன்று நாம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்" என்று அவர் கூறினார். வரலாற்று ஆசிரியரும், வான் ப்ரான் குறித்து நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள மைக்கேல் நியூஃபெல்ட், "வான் ப்ரான் முழுவதுமாக வில்லனும் இல்லை, முழுவதுமாக ஹீரோவும் இல்லை. அவர் லட்சியமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மனிதர்" என தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yx4xz8jllo
  15. யாழில் பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் : இளவாலை காவல்துறையினர் தூக்கத்திலா? யாழ்ப்பாணம் (Jaffna) - சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பித்த நாள் முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை எதிர்கொண்டுள்ள மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக அன்றைய பாடத்தினை இறுதி மீட்டல் செய்யும் போது காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் என்ற பெயரில் மக்களால் சகிக்கமுடியாத மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒலியெழுப்ப படுவதால் மக்களும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. மக்கள் விசனம் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பல இடங்களில் குறிப்பாக இளவாலை காவல்துறை பிரிவிலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பரீட்சை தவிர்ந்த காலங்களிலும் ஆக கூடியது நான்கு ஒலிபெருக்கிகள் மட்டும்தான் பாவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதுவும் 1980ஆம் ஆண்டு, 924/12 ம் இலக்க சுற்றாடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சத்தத்தின் எல்லை (Noise Level) பகல் நேரத்தில் 55 dB எல்லையை தாண்டாமலும், இரவு நேரத்தில் 45 dB எல்லையை தாண்டாமலும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனையும் மீறி இவ்வாலயத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுவது இளவாலை காவல்துறையினதும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினதும் அசண்டையீனத்தையே புலப்படுத்துகின்றது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அண்மைக்காலங்களில் இதே பிரிவில் சில வணக்க ஸ்தலங்களில் இவ்வாறான சட்ட மீறல்களை பொதுமக்கள் காவல்துறையினருக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினாலும் ஒலிபெருக்கிகள் குறித்த கட்டுப்பாடுகளும் அவை தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அந்தந்த பிரதேச செயலர்களால் செயலகங்களின் உத்தியோகபூர்வ முகநூல்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பட்டபோதும் யாழ். மாவட்டத்தில் ஒலிபெருக்கியால் பெரிதும் பாதிக்கப்படும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் அவ்வாறு எவையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வில்லை. யாழ். மாவட்ட அரச அதிபர் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். https://ibctamil.com/article/loudspeakers-that-blare-even-during-olexam-periods-1742633792#google_vignette
  16. சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், புதிய விதிகள் உள்பட ஐபிஎல் பற்றிய முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 15 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், கோடைகால விளையாட்டுத் திருவிழா 2025ம் ஆண்டு சீசனுக்கான 18-வது ஐபிஎல் டி20 தொடர் இன்று தொடங்க இருக்கிறது. கடந்த சீசனைப் போல் இல்லாமல் ஒட்டுமொத்த அணிகளிலும் உள்ள வீரர்கள் மாற்றப்பட்டு ஏராளமான புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, லக்னெள அணி ஆகியவற்றுக்கு புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி கோப்பையைத் தக்க வைக்குமா, நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா, சிஎஸ்கே, மும்பை அணிகள் தங்களது வேட்டையைத் தொடருமா, புதிய அணிகள் ஏதேனும் கோப்பையை வெல்லுமா என்பன போன்ற பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் வருண் தவான், ஷ்ரதா கபூர், பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது (கோப்பு புகைப்படம்) ஐபிஎல் 2025 1. ஐபிஎல் டி20 போட்டித் தொடர் எந்த தேதியில் தொடங்குகிறது, எப்போது முடிகிறது? 18வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் இன்று (மார்ச் 22-ஆம் தேதி) தொடங்குகிறது. மே 25-ஆம் தேதி முடிகிறது. 65 நாட்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கிறது. 2. 2025 ஐபிஎல் தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? 2025 ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. 3. ஐபிஎல் டி20 போட்டியில் முதல் ஆட்டம் எப்போது? எந்தெந்த அணிகள் மோதுகின்றன? மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. 4. 10 அணிகளின் கேப்டன்கள் யார்யார்? ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) சஞ்சு சாம்ஸன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அக்ஸர் படேல் (டெல்லி கேபிடல்ஸ்) சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரிஷப் பந்த் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) அஜிங்கயே ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரஜத் பட்டிதார் (ராயல் சேலஞ்சர்ஸ்) பேட் கம்மின்ஸ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்) டபுள் ஹெட்டர்ஸும், குவாலிஃபயர் போட்டிகளும்! 5. ஐபிஎல் தொடரில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கின்றன? 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசனில் மொத்தம் 74 போட்டிகள் 65 நாட்களில் நடத்தப்படுகின்றன. இதில் 12 போட்டிகள் டபுள் ஹெட்டர்ஸ் முறையில் அதாவது ஒரே நாளில் இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6. ஐபிஎல் போட்டிகள் எந்தெந்த நகரங்களில் நடக்கின்றன? ஐபிஎல் டி20 போட்டிகள் இந்த முறை 13 நகரங்களில் நடக்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், லக்னெள, புதுடெல்லி, அகமதாபாத், முலான்பூர், ஜெய்பூர், தரம்சாலா, கெளஹாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. 7. ஒரே நாளில் 2 ஆட்டங்கள் (டபுள் ஹெட்டர்ஸ்) எந்தெந்த தேதியில் நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் மொத்தம் 12 டபுல் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் டபுள் ஹெட்டர்ஸ் மார்ச் 23ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30, ஏப்ரல் 5,6, 12,13 தேதிகளில் நடக்கிறது. அதன்பின 19,20, 27 தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டி நடக்கிறது. மே மாதத்தில் 4, 11 , 18 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் இரு ஆட்டங்கள் நடக்கின்றன. 8. ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் முதல் போட்டி மே மாதம் 20ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது. 9. ஐபிஎல் தொடரில் குவாலிஃயர் 2 போட்டி எப்போது, எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 2வது போட்டி மே மாதம் 23ம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது 18 சேனல்களில் நேரலை 10. ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டி எப்போது எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மே மாதம் 21ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இரவு நடக்கிறது. 11. ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி எப்போது எங்கு நடக்கிறது? ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே மாதம் 25-ஆம் தேதி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. 12. ஐபிஎல் போட்டியை எந்த சேனல் நேரலை செய்கிறது, எந்த செயலியில் பார்க்கலாம்? 2025 சீசனுக்கான ஐபிஎல் டி20 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக காணலாம். இது தவிர மொபைலில் ஜியோ சினிமாவில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரடியாகப் போட்டியைப் பார்க்க முடியும். 13. ஐபிஎல் தொடரில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் பிற்பகலில் எத்தனை மணிக்குத் தொடங்கும்? ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 12 டபுள்ஹெட்டர்கள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது சென்னையில் நடக்கும் போட்டிகள் எத்தனை? 14. சிஎஸ்கே அணி எத்தனை லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது, தேதிகள் என்ன? 2025 ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் சிஎஸ்கே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்ளென சூப்பர் ஜெயின்ஸ்ட் அணிகள் உள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள சிஎஸ்கே அணி தன்னுடைய குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளும், பி குரூப்பில் உள்ள அணிகளுடன் மும்பை தவிர்த்து மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டி என 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது. மார்ச் 23ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மும்பை அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 28 (ஆர்சிபி), மார்ச் 30 (ராஜஸ்தான்), ஏப்ரல் 5 (டெல்லி), ஏப்ரல்8 (பஞ்சாப்), ஏப்ரல்11 (கொல்கத்தா), ஏப்ரல் 14 (லக்னெள), ஏப்ரல்20 (மும்பை), ஏப்ரல்25 (சன்ரைசர்ஸ்), ஏப்ரல் 30 (பஞ்சாப்), மே3 (ஆர்சிபி), மே7 (கொல்கத்தா), மே12 (ராஜஸ்தான்), மே18 (குஜராத்) ஆகிய தேதிகளில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது. 15. சென்னை சேப்பாகத்தில் எத்தனை ஆட்டங்கள் நடக்கின்றன? சென்னையில் 2025 ஐபிஎல் டி20 தொடரில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. மார்ச் 23, மார்ச் 28, ஏப்ரல்-5, ஏப்ரல் 11, ஏப்ரல் 25, ஏப்ரல் 30,மே 12 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. 16. சென்னையில் இறுதிப்போட்டி, குவாலிஃபயர் ஆட்டங்கள் நடக்கிறதா? இல்லை, சென்னையில் லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. குவாலிஃபயர் ஆட்டங்களோ, இறுதிப்போட்டியோ நடக்காது. 17. ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் எப்போது தொடக்கம்? சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரீசெல் டிக்கெட் விற்பனை செய்யும் தளமான வியாகோகோவில் சிஎஸ்கே-மும்பை ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.1.23 லட்சத்துக்கு பேரம்பேசப்படுகிறது, குறைந்தபட்சமாக ரூ.17ஆயிரத்துக்கு பேரம் பேசப்படுகிறது. 18. சிஎஸ்கே-மும்பை அணி ஆட்டங்கள் எந்தெந்த தேதியில், எங்கு நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-மும்பை அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 23ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் ஏப்ரல் 20ம் தேதி மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது. 19. சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டங்கள் எப்போது, எங்கு நடக்கின்றன? 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் 2 முறை லீக்ஆட்டங்களில் மோதுகின்றன. முதல் ஆட்டம் மார்ச் 28ம் தேதி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் மே 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதிகள் 20. ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் என்ன? ஐபிஎல் அணிகளில் உள்ள வீரர்களின் ஓய்வறைக்குள் நண்பர்கள், சப்போர்ட் ஸ்டாப், குடும்ப உறுப்பினர்கள் செல்ல அனுமதியில்லை. அணி வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்க வேண்டும், தனியாக காரில் பயணிக்கக் கூடாது. போட்டி நடக்கும் நாட்களில் பயிற்சி கிடையாது. திறந்தவெளி வலைப்பயிற்சி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வீரர்கள் ஓய்வறைக்குள் செல்ல முடியும். எல்இடி போர்டுகளில் வீரர்கள் பந்தை அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்இடி போர்டுக்கு முன் வீரர்கள், அணியின் ஊழியர்கள் அமரக்கூடாது. அவர்களுக்கான இடத்தில்தான் அமர வேண்டும். ஆரஞ்சு, பர்ப்பிள் தொப்பி வாங்கிய வீரர்கள் அதனை குறைந்தபட்ச நேரம் அணிந்திருக்க வேண்டும். வீரர்கள் ப்ளாப்பி தொப்பி, ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸி அணிய அனுமதியில்லை. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையும் 2வது முறை அபராதமும் விதிக்கப்படும். ஜெர்ஸியில் எண்கள் மாற்றப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக ஓர் அணி தெரிவிக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2g47xp5x6o
  17. பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக பிள்ளையான் (Pillayan) தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த தீர்ப்பானது நேற்று மட்டக்களப்பு (Batticaloa) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரனால் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு - சந்திவெளியில் கடந்த 2007 மார்ச் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மரண தண்டனை அப்போது அந்தப் பகுதியில் இயங்கிய பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) தலைமையிலான ஆயுதக் குழு அவரை ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில், சந்திவெளி மற்றும் கிரானை சேர்ந்த தி. கிருஷ்ணரூபன்இ வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நால்வரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் முடிவில் நால்வரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதையடுத்து நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார். https://ibctamil.com/article/4-members-from-pillayan-sentenced-to-death-1742607786?itm_source=parsely-top
  18. அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்க கையெழுத்திட்டார் ட்ரம்ப் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப். அதுமட்டுமல்லாமல் கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்தும்படியும் கல்வித் துறை செயலாளருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில் சிறப்பு மாணவர்களுக்கான நிதித் திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்ற ஒரே ஒரு ஆறுதலை மட்டும் ஜனாதிபதி ட்ரம்ப் அளித்துள்ளார். அமெரிக்க கல்வித் துறையின் கீழ் சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவீத செலவுகளை மாகாண அரசுகள் தான் செய்கின்றன. ஆனாலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கான கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறை கவனித்து வருகிறது. இதன் மூலம் ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் மாணவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது. இது மத்திய கல்வித் துறைக்கு பெரும் சுமையாக இருக்கின்றது. இந்நிலையில் தான் இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக கல்வித் துறையைக் கலைத்து கல்வி சார்ந்த முழு பொறுப்பையும் மாகாண அரசுகளிடம் தள்ளிவிடும் ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக குடியரசுக் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கல்வியின் தரத்தை கண்காணிக்கும் ஒரு துறையை அதிபர் கலைப்பது என்ன மாதிரியான நடவடிக்கை என்று கடும் விமர்சனங்களை கல்வி ஆர்வலர்களும் முன்வைத்து வருகின்றனர். ஏற்கெனவே அரசு ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் கல்வித் துறையைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்வித் துறையை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் ட்ரம்ப். இந்த நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பேசுகையில், “இன்று நாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். 45 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடவடிக்கை. அமெரிக்க கல்வித் துறையை கலைக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன். கல்வித் துறையைக் கலைப்பது குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நன்மை சேர்க்கும். தோல்வியடைந்த ஓர் அமைப்பின் பிடியில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். கல்வியை நாம் மாகாண அரசுகளின் வசம் ஒப்படைக்கிறோம். கல்வியின் பொறுப்பு அவர்களுடையதே. இந்த முடிவு பொது அறிவின் பேரின் எடுக்கப்பட்டது. இது நிச்சயமாக நன்மை பயக்கும். உலக நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்கா தான் மாணவர்கள் மீது அதிகம் செலவிடுகிறது. ஆனால் இங்குள்ள 8-ம் நிலை கல்வி பயிலும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை. கணித அறிவும் இல்லை. ஆனால் கல்வித் துறையின் செலவு மட்டும் 600 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மீதான செலவினங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானது.” என்று கூறியுள்ளார். https://thinakkural.lk/article/316353
  19. கனகராசா சரவணன் மட்டக்களப்பு – சந்திவெளியில் 2017 ம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி .ரி.ஜே.பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் ரி. 56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதக்குழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிசார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். https://thinakkural.lk/article/316338
  20. இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி; இந்திய அரசுடன் இணைந்து சம்பூரில் மின்நிலையம் அமைக்க தீர்மானம் - ஜனாதிபதி Published By: VISHNU 21 MAR, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளோம். மன்னாரில் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்திய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து சாம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. அனைத்து சுமைகளையும் தோளில் சுமந்துக்கொண்டு செல்கிறோம். அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரச சேவையாளர்கள் வினைத்திறனான முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வேன். ஓய்வுப்பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகயை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது. ஆகவே நாட்டுக்காக எம்முடன் ஒன்றிணையுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒருசிலரின் உரையில் வேதனை மற்றும் அச்சம் வெளிப்பட்டுள்ளதை கண்டு நாங்கள் குழப்பமடையவில்லை. இவர்களின் வேதனை மற்றும் கோபத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. சிறந்ததை ஏற்றுக் கொள்ளவும், விமர்சனங்களை புறக்கணிப்பதற்கும் தயாராகவுள்ளோம். நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் பயனுடையதான வகையில் பொருளாதாரத்தை செயற்படுத்துவோம். உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். இந்த ஆண்டு 4990 பில்லியன் ரூபா அரச வருவாய் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், கடன்களுக்கான வட்டி செலுத்தலுக்கு 2950 பில்லியன் ரூபாய், அரச சேவையாளர்களுக்கு சம்பள ஒதுக்கீடு 1352 பில்லியன் ரூபாய், ஓய்வுதிய கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு 4042 பில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் காணப்படுகிறது. மிகுதி 256 பில்லியன் ரூபாய் இதுவே தற்போதைய பொருளாதார நிலைமை. ஆகவே அவசரமடைய கூடிய நிலையில் பொருளாதாரம் இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். அரச நிறுவனங்களின் கடன் மற்றும் நட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளன. வருடாந்தம் இந்த நிலைமையே காணப்படுகிறது. ஈட்டிக் கொள்ளும் வருமானத்தை காட்டிலும் செலவுகள் அதிகளவில் காணப்பட்டுள்ளது. பொருளாதாரத்துக்கு இயைவானதாக செயற்படும் நிறுவனங்களுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் எம்மிடம் பல கேள்விகள் காணப்பட்டன. ஆட்சி பொறுப்பினை ஏற்கும் போதே நாணய நிதியத்தின் செயற்திட்ட யோசனை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் இருந்து விலகுவோம் என்றே ஒரு தரப்பினர் எதிர்பார்த்தார்கள். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். முழுமையான அரசாங்கத்தை நான்கு மாதங்களுக்கு முன்னரே அமைத்தோம். பொருளாதார ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தினோம். கடந்த டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறினோம். பிரதான கடன் வழங்குநர்களுடன் இணக்கமான தீர்மானத்துக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையடைந்ததால் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டோம். கடவத்தை - மீரிகம அபிவிருத்திக்கு சீன எக்சிம் வங்கி கடன் வழங்கியது. வங்குரோத்து என்று அறிவித்ததன் பின்னர் சீன வங்கி கடன் வழங்கலை இடைநிறுத்தியது. இந்த அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் நிர்மாணிப்பு கம்பனிக்கு 46 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இது ஒரு எடுத்துக்காட்டு மாத்திரமே. வங்குரோத்து நிலையில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் 11 கருத்திட்டங்களும், சீனாவின் 76 கருத்திட்டங்களும் மீள ஆரம்பிக்க இணனக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுவே பொருளாதாரத்தில் ஸ்திர நிலைமை, சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து சம்பூர் பகுதியில் மின்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனத்துக்கும், மின்சார சபைக்கும் 50: 50 என்ற வகையில் உரிமத்தை கொண்டதாக கூட்டு நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இதனூடாக சம்பூர் பகுதியில் 120 மெகாவோட் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படும். மின்சார சபை இதனை கொள்வனவு செய்யும். குறைந்தளவான விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைத் தருவார் இதன்போது சம்பூர் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வழங்கியுள்ளோம். மன்னாரில் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை திட்டம் ஆரம்பிக்கப்படும். பொருளாதார ரீதியில் தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மற்றும் கடன் வழங்நர்களுக்கும் நம்பிக்கையளித்துள்ளோம். டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை உறுதிப்படுத்தியுள்ளோம். வங்கிக் கட்டமைப்பின் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம். வங்கி வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். வரி வருமானத்தை அதிகளவில் ஈட்டிக் கொள்ளும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளோம். இந்த மூன்று மாத காலங்களில் இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வருமானம் எதிர்பார்த்த நிலைமை காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்த சாதக நிலையை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வோம். தனிப்பட்ட முயற்சியாளர்கள் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையை இல்லாது நம்பிக்கை கொள்ளும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். தரவுகளை அடிப்படையாக்க கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளாந்தம் மீளாய்வு பணிகளை முன்னெடுத்துள்ளோம். அவதான நிலையில் இருந்துக் கொண்டு தான் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளோம். பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வகையிலான பொய்யை மக்கள் மத்தியில் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனை தவிர்த்து வேண்டிய அளவில் அரசியல் செய்துக் கொள்ளுங்கள். பொருளாதார ஸ்திரப்படுத்தல் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும். ஆகவே பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம். பொருளாதார ரீதியில் ஏதேனும் சந்தேகம் காணப்பட்டால் எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். சந்தேகத்துடனான விடயங்களை மக்கள் மத்தியில் குறிப்பிட வேண்டாம். பொருளாதார ரீதியிலான விடயங்களுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளேன். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்தவுடன் முன்னெடுத்தேன். நெற்பயிர்ச்செய்கைக்கான நிவாரண கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தேன். அஸ்வெசுன நலன்புரித் திட்டத்தின் சகல கொடுப்பனவுகளையும் அதிகரித்துள்ளோம். நலன்புரி கொடுப்பனவு திட்டத்தில் இருந்து நீக்கப்படும் பட்டியலில் இருந்த 8 இலட்ச பயனாளர்களை மீண்டும் திட்டத்துக்குள் உள்வாங்கியுள்ளோம். நெருக்கடியான நிலையில் எவரையும் புறக்கணிக்கவில்லை. 16 இலட்ச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 6000 ரூபா வழங்கியுள்ளோம். அதேபோல் நீரிழிவு நோயாளர்கள், சிரேஷட பிரஜைகளுகள், விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். புலமை பரிசில் மற்றும் மாஹபொல கொடுப்பனவுகளை சடுதியாக அதிகரித்துள்ளோம். பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கும் வி சேட கொடுப்பனவுகளை வழங்கும் முன்மொழிகளை முன்வைத்துள்ளோம். அநாதை இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை மறக்கவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்களும், மூளைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையே காணப்பட்டது. நெருக்கடியான நிலையில் அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை அரச சேவைக்குள் உள்ளடக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்களின் அடிப்படை சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் இதர கொடுப்பனவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பு எதிர்வரும் மாதம் முழுமையாக கிடைக்கப்பெறும். உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே வினைத்திறனான சேவையை எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வேண்டாம் என்று கடிதம் வழங்கியுள்ளேன். மாற்றத்தை என்னில் இருந்தே ஆரம்பிப்பேன். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வூதிய கொடுப்பனவையும், ஜனாதிபதிக்கான கொடுப்பனவையு; பெற்றுக்கொண்டு பலர் திருட்டு பூனை போல் இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சரானதன் பின்னர், உறுப்பினருக்கான கொடுப்பனவும் கிடைக்கப்பெறும், அமைச்சருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும். கரண்டி கையில் உள்ளதால் இவர்கள் தமக்கு வேண்டியதை போன்று பரிமாற்றிக் கொண்டார்கள். என் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகளுக்கான கொடுப்பனவுகளை மாத்திரமே பெறுகிறார்கள். இந்த நாட்டை திருத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். மக்களின் வரிப்பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை வரையறுப்பதற்கும் உரிய சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அனைவரும் கையுயர்த்த தயாராக இருங்கள். 10 இலட்சமாக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி கொடுப்பனவு 250000 ரூபாவாக குறைக்கப்படும். கோவப்பட வேண்டாம் எவருக்கும் வாகன இறக்குமதிக்கான அனுமதிபத்திரம் கிடையாது. நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகள் அர்ப்பணிப்பு செய்வார்களாயின், அரச சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காணப்படும். 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும். தகுதிகளின் அடிப்படையில் தான் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும். முறையற்ற வகையில் நியமனங்களை வழங்க முடியாது. கடந்த கால அரசாங்கங்கள் முறையற்ற வகையில் அரச சேவைகளுக்கு நியமனங்களை வழங்கியதால் தான் அரச சேவை கட்டமைப்பு இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஆகவே இதனை மாற்றியமைக்க வேண்டும். அரசியலுக்காக இவ்விடயத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் உபகுழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெகுவிரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த மாற்றததை எதிர்பார்த்துள்ளோம். அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். வரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செலுத்தப்படும் வரியின் ஒவ்வொரு ரூபாவும் சிறந்தமுறையில் பயன்படுத்தப்படும் என்று வரிச் செலுத்துவோருக்கு உறுதியளிக்கிறேன். வரி செலுத்துங்கள். நாங்கள் அதனை பாதுகாக்கிறோம். வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை பொதிகள் வழங்கப்படும். வரி செலுத்தும் வர்த்தகர் வீதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். வரியை செலவிடுபவர்கள் சுகபோகமாக செல்கிறார்கள். இவ்வாறான நிலையில் எவ்வாறு வர்த்தகர்கள் வரி செலுத்துவார்கள். இந்த நிலையை மாற்றியமைப்போம். மக்களின் வரி சிறந்த முறையில் பயன்படுத்தப்படுமாயின் வரி செலுத்துவோர் முறையாக வரி செலுத்துவார்கள். இதற்கான சூழலை உறுதிப்படுத்துவோம். சுங்கம் மற்றும் இறைவரித் திணைக்களத்தில் இருந்து இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஊழல் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். ஊழல் என்பது பொருளாதார குற்றம். ஆகவே ஊழல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஆகவே அரச ஊழியர்கள் அனைவரும் தயவு செய்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊழல் இருந்தால் வேலையில்லை, வீடு செல்ல வேண்டும். மன்னார் காற்றாலை மின்திட்ட உற்பத்திக்கு குறைவான விலையில் ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுமைகளை தோளில் சுமந்துக் கொண்டு தொங்கு பாலத்தில் செல்கிறோம். ஒரு ரூபா கூட மோசடி செய்வதற்கு எவருக்கும் இடமளிக்க போவதில்லை. இதனை எவ்வாறு ஒன்றும் செய்யவில்லை என்று குறிப்பிடுவீர்கள். இது குடும்ப அரசாங்கமோ அல்லது நண்பர்களின் அரசாங்கமோ இல்லை. மக்களின் அரசாங்கம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி எதிர்கால இலக்கு நோக்கி பயணிக்கிறோம்.இதில் என்ன தவறுள்ளது. ஏன் இதனை மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும். எம்மை ஆசிர்வதிப்பதும், ஏற்றுக்கொள்வதும் தவிர வேறொன்றும் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. ஊடகங்கள் அரசியல் செய்த காலம் முடிவடைந்துள்ளது. அதனால் தான் நான் ஜனாதிபதிபதியாகியுள்ளேன். ஊடக அரசியல் தோல்வியடைந்துள்ளது. மக்களுடனான எமது அரசியல் தான் வெற்றிப்பெற்றுள்ளது. எவருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது. ஆகவே தயவு செய்து மாற்றமடையுங்கள். நாட்டை கட்டியெழுப்பும் அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோம். சுதந்திரத்துக்கு பின்னர் கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் தவறவிட்டோம். பெருந்தோட்ட மக்கள் மற்றும் வடக்கு மக்களை இணைத்துக் கொண்டு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 1948 ஆம் ஆண்டு கிடைத்த சிறந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைந்திருக்கலாம். ஆகவே தற்போதைய அரிய வாய்ப்பை ஒருபோதும் பலவீனமடைய போவதில்லை. நாட்டை முன்னேற்றும் இலக்கினை வெற்றிக்கொள்வோம். இந்த சிறந்த வாய்ப்பில் எதிர்க்கட்சிகளும் பங்குதாரர்களாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/209876
  21. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் Published By: VISHNU 21 MAR, 2025 | 08:05 PM 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/209875
  22. வேட்பாளருக்கு ஆள் பிடிக்கிறது ரொம்ப கடினம் அண்ணை!
  23. பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 10:15 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் என இஸ்ரேலை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காராகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ஜனநாயக முறைமையை செயல் இழக்கச் செய்து அதிகாரத்தின் மீதான தனது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே யுத்தநிறுத்தத்தை சிதறடித்த விமானதாக்குதல்களிற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டார் என இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பொறுப்பான புலனாய்வு அமைப்பான சின்பெட்டின் தலைவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் அறிவித்திருந்த நிலையிலேயே காசா மீது விமானதாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. 'இந்த வான்தாக்குதல் அரசியல் நலனிற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது என்பதே யதார்த்தம், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை உருவாக்கி, உள்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்களை ஜனநாயக விரோதிகள் என சித்தரிப்பதே அவர்கள் வழமையாக செயற்படும் விதம்" என இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவரும், இஸ்ரேலிய கடற்படையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியுமான ஒரா பெலெட் நகாஸ் தெரிவித்துள்ளார். ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் இந்த வாரம் இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் உடனடி யுத்த நிறுத்தத்தினை கோரும் அறிக்கைகளை வெளியிடவுள்ளன. ஹமாசிடம் தனது சகோதரன் நடாவ் பொப்லேவெலை இழந்த அய்லெட் ஸ்வாடிஸ்ட்கி ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்களை இன்னமும் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். 'அவர்களை மீட்கலாம், உயிர் பிழைக்காதவர்களை, அவர்களின் உடலை நாட்டிற்கு கொண்டுவந்து கௌரவமான முறையில் புதைக்கவேண்டும், நாங்கள் மீண்டும் யுத்த நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் திரும்பவேண்டும், அனைவரையும் மீள அழைத்து வருவதற்கு உடன்பாடே ஒரே வழி, என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209612
  24. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது. ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலமே வடக்கு – கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/316288
  25. Published By: DIGITAL DESK 2 20 MAR, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளதா அல்லது சேவை மற்றும் இறக்குமதி இலக்காகக் கொண்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் காலங்களில் 7 முதல் 8 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரமே அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இருப்பினும் அதற்குரிய சிறந்த திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவு ஒதுக்கீடுகள் மற்றும் அரச செலவுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இது தேசிய பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செலுத்தும் என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் பொருளாதார கட்டமைப்புக்குள் உட்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக்கொண்டுள்ளது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தலைத்தூக்கியதை தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருப்பவர்களில் எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். அதனை விடுத்து ஒட்டுமொத்த இராணுவத்தையும், பொலிஸாரையும் குற்றஞ்சாட்ட வேண்டாம். இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209776

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.