Everything posted by ஏராளன்
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது பங்களாதேஷ் கடற்படை கப்பல்
31 JAN, 2025 | 03:42 PM (எம்.மனோசித்ரா) பங்களாதேஷ் கடற்படையின் பி.என்.எஸ். சொமுத்ரா ரோய் போர் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாட்டை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 115.2 மீற்றர் நீளமுடையதாகும். 274 பணியாட்களைக் கொண்ட இக்கப்பலின் கப்டனாக சஹ்ரியார் அலாம் செயற்படுகின்றார். இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்க உள்ளனர். அத்துடன் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரல்களை நிறைவு செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை இப்போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205438
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - ஜனாதிபதி பங்கேற்பு
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர : கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் 31 JAN, 2025 | 03:44 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மக்களின் நிலங்கள் மக்களிற்கு வழங்கப்படவேண்டும், வடக்கில் காணப்படும் காணி பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது. நிலங்களை மக்களிற்கு மீள வழங்க நடவடிக்கை பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பிராந்திய மக்களிற்கு நன்மையை குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்களிற்காக முழுமையாக விடுவிக்கப்படும். தமிழ் இளைஞர்களிற்கு பொலிஸ் சேவையில் மேலும் வேலைவாய்ப்பு பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகள் போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205436
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகள்: தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா, நடப்பு சம்பியன் இந்தியா எதிர் இங்கிலாந்து Published By: VISHNU 30 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன. தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து எதிர்த்தாடவுள்ளது. இந்த நான்கு அணிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. ஆனால், முதலாம் குழுவுக்கான தனது கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கையிடம் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவுஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது. தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக தென் ஆபிரிக்கா திகழ்கின்ற போதிலும் அவுஸ்திரேலியா தலைகீழ் முடிவுவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தென் ஆபிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில் (முதல் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்று) நான்கில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி முழமையாக கைவிடப்பட்டது. தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் எவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. ஏனெனில் அவர்களில் ஒருசிலரே துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சிறப்பான பந்துவீச்சே தென் ஆபிரிக்காவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தது. தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் சிமோன் லௌரென்ஸ் 4 போட்டிகளில் 66 ஓட்டங்களையும் ஜெம்மா போத்தா 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேலா ரினெக் 9 விக்கெட்களையும் மோனா லிசா லெகோடி 6 விக்கெட்களையும் நிதாபிசெங் நினி 5 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் பலம்வாய்ந்ததாக போட்டி முடிவுகளிலிருந்து தெரிகிறது. அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய கயோமே ப்றே 83 ஓட்டங்களையும் லூசி கேய் ஹெமில்டன் 71 ஓட்டங்களையும் கேட் மாரி பேலே 60 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஹஸ்ரத் கில் 8 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன், எலினோர் லரோசா, கயோமே ப்றே ஆகியோர் தலா 7 விக்கெட்களையும், லில்லி பாசிங்வெய்ட் 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தியா எதிர் இங்கிலாந்து இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை பலம்வாய்ந்த இந்தியா வெற்றிகொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைககளிலும் இந்தியா பலம்மிக்கதாக இருக்கிறது. முதல் சுற்றல் மிகக் குறைந்த எண்ணிக்கைளைக் கொண்ட போட்டிகளில் இலகுவாக வெற்றிபெற்ற இந்தியா, சுப்பர் சி;க்ஸ் சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி கணிசமான மோத்த எண்ணக்கைகளைப் பெற்றது. 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ட்ரிஷா கொங்காடி குவித்த முதலாவது சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ட்ரிஷா கொங்காடி ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட 230 ஓட்டங்களையும் குணாலன் கமலினி ஒரு அரைச் சதத்துடன் 71 ஓட்டங்களை யும் பெற்றுள்ளனர். ஆறு துடுப்பாட்ட வீராங்கனைகளின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேற்பட்டதாக இருப்பது இந்தியாவுக்கு பலம்சேர்ப்பதாக அமைகிறது. பந்துவீச்சில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுடன் வைஷ்ணவி ஷர்மா 12 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். ஆயுஷி ஷுக்லா 10 விக்கெட்களையும் வி.ஜே. ஜோஷித்தா 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு சவாலாக விளங்குவர் என நம்பப்படுகிறது. மறுபக்கத்தில் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகள் கைவிடப்பபட்டன. இதன் காரணமாக அதன் வீராங்கனைகளுக்கு துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிகளவில் ஈடுபட முடியாமல்போனது. ஆனால், விளையாடப்பட்ட 3 போட்டிகளில் இங்கிலாந்து வீராங்கனைகள் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர். இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் டாவினா பெரின் ஓர் அரைச் சதத்துடன் 131 ஓட்டங்களையும் ஜெமிமா ஸ்பென்ஸ் 66 ஓட்டங்களையும் ட்ருடி ஜோன்சன் 60 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் டில்லி கோர்டீன் கோல்மன் 7 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் இந்தியா பலம்வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே இந்தியாவை வெற்றிகொள்வதாக இருந்தால் இங்கிலாந்து அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிவரும். இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். https://www.virakesari.lk/article/205377
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
கவாஜா இரட்டைச் சதம், அறிமுகப் போட்டியில் இங்லிஸ் சதம்; இலங்கையை பந்தாடியது அவுஸ்திரேலியா இக்கட்டான நிலையில் இலங்கை Published By: VISHNU 30 JAN, 2025 | 08:03 PM (நெவில் அன்தனி) சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இரண்டு தினங்கள் தட்டையாகக் காட்சிகொடுத்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா கணிசமான ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், இலங்கை துடுப்பெடுத்தாடியபோது நிலைமை மாறி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப, அவுஸ்திரேலியா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மாலை மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் இன்னும் 7 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவை விட 610 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. பலோ ஒன்னை தவிர்ப்பதாக இருந்தால் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் மேலும் 410 ஓட்டங்ளைப் பெறவேண்டும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது. ஓஷத பெர்னாண்டோ (7), திமுத் கருணாரட்ன (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (8) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர். கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருப்பதுடன் அவர்கள் இருவரும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் ஆட்டமிழக்காமல் இருக்கவேண்டும். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மெத்யூ குணேமான், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது. தனது துடுப்பாட்டத்தை 104 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 251 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 3ஆவது விக்கெட்டில் கவாஜாவுடன் 266 ஓட்டங்களைப் பகிர்ந் து அணியை பலமான நிலையில் இட்டார். மறுபக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா, 352 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது அவுஸ்திரேலியர் என்ற வரலாற்றுச் சாதனையை கவாஜா நிலைநாட்டினார். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கவாஜா ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் அவுஸ்திரேலியா தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. இதனால் கவாஜாவால் இரட்டைச் சதத்தை பெறமுடியாமல் போனது. ஆனால், காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இரட்டைச் சதம் குவித்து அந்தக் குறையை கவாஜா நிவர்த்திசெய்துகொண்டார். இதேவேளை, உஸ்மான் கவாஜா, ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். அறிமுக வீரரான போதிலும் அனுவம்வாய்ந்தவர்போல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஷ் இங்லிஸ் 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார். அவரது மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுநர் அடம் வோக்ஸ் 2015இல் அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்த பின்னர் அறிமுகப் போட்டியில் சதம் குவித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை இங்லிஸ் பெற்றுக்கொண்டார். அத்துடன் மைக்கல் க்ளார்க், ஷோன் மார்ஷ் ஆகியோருக்குப் பின்னர் ஆசிய மண்ணில் அறிமுக வீரராக சதம் குவித்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரரானார் ஜொஷ் இங்லிஸ். ஜொஷ் இங்லிஸ் சதம் குவித்தபோது அவரது பெற்றோரும் காலி சர்வதேச அரங்கில் போட்டியை இரசித்துக்கொண்டிருந்தனர். பெற்றோர் முன்னிலையில் சதம் குவிக்க கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இன்னிங்ஸ் நிறைவில் இங்லிஸ் கூறினார். அதன் பின்னர் அலெக்ஸ் கேரி, போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். போ வெப்ஸ்டர் 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டபொது, அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மிச்செல் ஸ்டார்க் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 182 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 193 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் அசித்த பெர்னாண்டோ, நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய நான்கு பந்துவீச்சாளர்ளை மாத்திரமே இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தினார். அவரது இந்த செயல் இரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது. 61 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ள தனஞ்சய டி சில்வா ஏன் தன்னை பந்துவீச்சில் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்ற கேள்வியை எழவைத்துள்ளது. பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸையும் அவர் பயன்படுத்தவில்லை. குறைந்தது பத்து ஓவர்களாவது இருவரும் பந்துவீசியிருக்கலாம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் அபிப்பிரயாமாகும். எதிரணி பலமான நிலையில் இருக்கும்போது சில துணிச்சலான தீர்மானங்களை அணித் தலைவர் எடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாராணமாக விளங்கியவர்கள் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகியோராவர். அதேபோன்று தனஞ்சய டி சில்வாவும் எதிர்காலத்தில் துணிச்சலுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/205372
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
நடுவானில் மோதிய பயணிகள் விமானமும் ஹெலிக்கொப்டரும் - விபத்திற்கு முன்னர் இடம்பெற்ற உரையாடல்கள் வெளியாகின Published By: RAJEEBAN 30 JAN, 2025 | 05:22 PM அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ஹெலிக்கொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்து நொருங்கிய சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ள அதேவேளை விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற விடயங்களை உரையாடல்களை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் பதிவான விடயங்கள் வெளிப்படுத்தியுள்ளன. விமானங்களில் இடம்பெறும் உரையாடல்களை பதிவுசெய்யும் நம்பகதன்மை மிக்க லைவ்ஏடிசி. நெட் இறுதி நிமிட உரையாடல்களை வெளியிட்டுள்ளது. பட்25 என்ற அழைப்புகுறியை கொண்டிருந்த ஹெலிக்கொப்டரில் பயணித்த மூவரும் உரையாடிய விடயங்கள் வெளியாகியுள்ளன. அந்த ஹெலிக்கொப்டர் 64 பயணிகள் மற்றும் விமானப்பணியாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த சிஆர்ஜே 700 பயணிகள் விமானத்துடன் மோதுவதற்கு முன்னர் தங்களிற்குள் பேசிக்கொண்டிருந்த விடயங்கள் வெளியாகியுள்ளது. பட்25 உங்கள் பார்வையில் சிஆர்ஜே உள்ளதா? அதன் பின்னால் கடந்து செல்லுங்கள் என விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். இந்த உரையாடல் பதிவாகி ஒரிரு செகன்ட்களில் மற்றுமொரு விமானத்திலிருந்து விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் வருகின்றது. டவர் நீங்கள் அதனை பார்த்தீர்களா,? என அவர் கேட்கின்றார் அவர் விபத்து இடம்பெற்றதையே குறிப்பிடுகின்றார். இதன் பின்னர் ஒரு விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஏனைய விமானங்களை ரீகன் வோசிங்டன் தேசிய விமானநிலையத்தின் வேறு ஒடுபாதைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றார். விமானவிபத்து இடம்பெற்ற தருணத்தில் கிராஸ் கிராஸ் கிராஸ் இது எச்சரிக்கை மூன்று என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிப்பதை கேட்க முடிகின்றது. சற்று முன்னர் என்ன நடந்தது தெரியுமா? 33 வது ஓடுபாதைக்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது, நாங்கள் காலவரையறையின்றி நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றோம் என மற்றுமொரு விமான போக்குவரத்துகட்டுப்பாட்டாளர் தெரிவிக்கின்றார். ஹெலிக்கொப்டரும் விமானமும் விபத்துக்குள்ளாகி ஆற்றிற்குள் விழுந்துவிட்டன என மூன்றாவது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கின்றார். ஆற்றின் நடுப்பகுதியில் இது இடம்பெற்றிருக்கவேண்டும் நான் தீப்பிளம்புகளை பார்த்தேன், என மற்றுமொருவர் தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/205364
-
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை மீட்டு தாருங்கள் ; பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கை வடக்கு ஆளுநரினால் ஐ.ஓ.எம்மிடம் கையளிப்பு
31 JAN, 2025 | 11:36 AM ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழு தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றது. சந்திப்பின் போது, கிறிஸ்டின் பார்ஸோ, தான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் என ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். அதன் போது, தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருக்கின்றன. உதவிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுகிறது. இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமை இதற்குக் காரணம். வேலை வாய்ப்பு இன்மையால், இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது. முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து, இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்கிறோம். வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் ஐ.ஓ.எம்மிடம் கையளித்தார். https://www.virakesari.lk/article/205401
-
சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை
31 JAN, 2025 | 10:58 AM எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று வியாழக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்தேன். அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே வைத்திய அதிகாரிகளாகப் பணியாற்றினர். இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது. தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது. எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும். அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும். முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர் இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது. இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார். https://www.virakesari.lk/article/205400
-
உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒருவேளை உங்களால் தூங்க முடியாமல் இருக்கலாம், அல்லது நடு இரவில் எழ நேர்ந்து, அதன் பிறகு உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை (இன்சோம்னியா). ஆனால், சிலருக்கு இது ஒரு குறுகிய காலப் பிரச்னையாகத் தொடங்கி, பின்னர் தீவிரமான ஒன்றாக மாறலாம். நமக்கு ஏன் தூக்கமின்மை ஏற்படுகிறது? எப்பொழுது உதவியை நாட வேண்டும்? வயது முதிர்வு, இரவில் சிறுநீர் கழித்தல், மெனோபாஸ் (பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடுவது) அல்லது இரவு நேரப் பணிச்சூழல் போன்ற விஷயங்கள், நமது தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். இதற்காக, பிபிசி இன்சைட் ஹெல்த் குழு சில ஆச்சரியமான ஆலோசனைகளைத் தரும் நிபுணர்கள் குழுவை ஒன்றிணைத்தது. பிபிசி ரேடியோ 4 இன்சைட் ஹெல்த் நிகழ்ச்சியில், தூக்கமின்மை சார்ந்து நிபுணர்கள் அளித்த முக்கியக் குறிப்புகளை விவரிக்கின்றது இத்தொகுப்பு. வார நாட்களில் 8 மணி நேரம் தூங்காமல் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்கலாமா? உடலில் என்ன நடக்கும்? ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் - என்ன காரணம்? பரீட்சைக்குப் படிக்காமல் செல்வது போன்ற கனவு அடிக்கடி வருகிறதா? காரணம் இதுதான் குறட்டை விடுவதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஆபத்து? எப்படி தடுக்கலாம்? தூக்கமின்மை ஏற்படுவது ஏன்? "என் மூளை சற்று சோர்வாக இருந்தால், அல்லது நான் அதிகமாக யோசித்தால் எனக்கு தூக்கம் வராது. அதனால் தூக்கத்துக்கு தயாராவதற்காக, நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்," என்று தனது அனுபவத்தைப் பகிர்கிறார் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் விரிவுரையாளராக உள்ள டாக்டர் ஃபெய்த் ஆர்ச்சர்ட். "என் கணவர் படுக்கையில் புரண்டு புரண்டு குறட்டை விடுவதால் எனக்கு தூக்கம் வராது. அப்போது, 'ஸ்லீப் டிவோர்ஸ் (தம்பதிகள் தனித்தனி அறைகளில் உறங்குவது) செய்ய வேண்டியிருக்கும். மற்றொரு அறைக்கு நான் தூங்கச் செல்வேன்" என்கிறார் பிரிட்டிஷ் ஸ்லீப் சொசைட்டியின் தலைவர் மற்றும் லண்டனில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையின் தூக்க மருத்துவ ஆலோசகர், மருத்துவர் அல்லி ஹேர். "எனக்கு நன்றாக தூக்கம் வராதபோது, எழுந்துவிடுவேன். பிறகு சற்று நேரம் கழித்து, தூக்கத்தை வரவழைப்பதற்காக மீண்டும் படுக்கைக்குச் செல்வது என் வழக்கம். பெரும்பாலும் மனதில் ஏதோவொன்றை யோசித்துக்கொண்டே இருப்பதால், இவ்வாறு நடக்கலாம்." "அது மட்டுமல்ல, பலருக்கும் இப்படி நடப்பது பொதுவானது தான் என நான் நினைக்கிறேன்," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தூக்க மருத்துவத்தின் பேராசிரியராக உள்ள கொலின் எஸ்பி. உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்30 ஜனவரி 2025 புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?24 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கமின்மையின் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை, இது 50 சதவீத நபர்களை பாதிக்கிறது என்று மருத்துவர் ஹரே கூறுகிறார் தூக்கமின்மைக்கு ஒரு வரையறை உள்ளது. அதாவது, "ஒருநாள் தூங்காமல் இருப்பதால், அடுத்த பல நாட்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். அதன் பின்னர், பல வாரங்களுக்கு அதுவே தொடரலாம். அதனால் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால், அதனை தூக்கமின்மை என்கிறோம்." என்று தூக்கமின்மை குறித்து விளக்குகிறார் பேராசிரியர் எஸ்பி. தூக்கமின்மை சில வித்தியாசமான வழிகளில் வெளிப்படுகிறது என்று டாக்டர் ஆர்ச்சர்ட் கூறுகிறார். "தூங்குவதில் சிரமம் இருப்பதாக நாம் அடிக்கடி நினைக்கும் அதே வேளையில், தூக்கம் தொடர்பான வேறு சில சிக்கல்களும் இதில் உள்ளன. அதாவது, சிலர் நள்ளிரவில் எழுந்து மீண்டும் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள் அல்லது சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்தபிறகு, தூங்க முடியாமல் போகலாம்" என்று விவரிக்கிறார். அதனைத் தொடர்ந்து, தூக்கமின்மையின் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை, இது 50 சதவிகித நபர்களை பாதிக்கிறது என்று மருத்துவர் ஹரே கூறுகிறார். "மூன்று மாதங்களுக்கும் மேலாக வாரத்தில் மூன்று இரவுகளுக்கு மேல் தூங்குவதில் சிக்கல் இருந்தால், அது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தால், மருத்துவ உதவியைப் பெற வேண்டியது அவசியம். நீங்கள், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடம் பேசுவதில் தொடங்கி, பின்னர் உங்கள் மருத்துவரை அணுகலாம். தேவைப்பட்டால், உறக்கம் குறித்து இணையத்தில் கிடைக்கும் உதவிகளையும் பெறலாம்" என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஹரே. உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா?17 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 மூளையில் என்ன நடக்கிறது? தூக்கமின்மை ஏன் ஏற்படுகின்றது? பட மூலாதாரம்,GETTY IMAGES டாக்டர் ஆர்ச்சர்ட் தூங்குவதற்கும், எழுவதற்கும் இரண்டு செயல்முறைகள் உதவுகின்றன என்று விளக்குகிறார். "ஒன்று தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்கள். மற்றொன்று, நாள் முழுவதும் நாம் செய்யும் வேலை. இந்த செயல்முறைகள் இரண்டும் ஒன்றிணைய வேண்டும்." ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையவில்லை என்றால், உதாரணமாக, "மதியம் அல்லது மாலையில் நாம் நன்றாக தூங்கிவிட்டால், இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு சிக்கல் ஏற்படலாம்" என்கிறார். அது மட்டுமின்றி, "மன அழுத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும் தூக்கமின்மை ஏற்படலாம்" என்றும் டாக்டர் ஆர்ச்சர்ட் குறிப்பிடுகிறார். மறுபுறம், தூக்கமின்மைக்கு ஒரு பரிணாமக் காரணம் இருப்பதாக பேராசிரியர் எஸ்பி குறிப்பிடுகிறார். "நாம் இன்னும் தூக்கத்தை பெரியளவில் சார்ந்து இருக்கிறோம் என்றும், பரிணாமம் தூக்கத்தின் தேவையை நீக்கவில்லை" என்றும் அவர் விளக்குகிறார். "உண்மையில், நமக்கு நிறைய தூக்கம் தேவை, ஏனெனில் நீண்ட நேரம் இயங்கும் நமது மூளைக்கு அதிகளவிலான உதவி தேவைப்படுகிறது" என்று தூக்கத்துக்கும் பரிமாணத்துக்கும் உள்ள உறவை விவரிக்கிறார் பேராசிரியர் எஸ்பி. தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் நமக்கு அதிகமான தூக்கம் தேவைப்பட்டாலும், அச்சுறுத்தல் உணர்வை நாம் இன்னும் இழக்கவில்லை" என்று விளக்குகிறார். "அதாவது, உங்கள் மனதில் ஏதாவது இருந்தால், அது தீவிரமானதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருக்கலாம் என்பதால், விழித்திருந்து அதைப் பற்றி சிந்திக்கும்படி உங்கள் மூளை உங்களிடம் சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்பி. அதனைத் தொடர்ந்து, தூக்கமின்மையின் நுணுக்கங்களை விவரிக்கிறார் மருத்துவர் ஹரே. "தூக்கமின்மை பல்வேறு வகையான மக்களை பாதிக்கும். பொதுவாக தூக்கமின்மை ஒரு குறிப்பிட்ட வகை நபருக்கு மட்டும் ஏற்படுவது இல்லை. நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நாள்பட்ட வலி உள்ளவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றும் மருத்துவர் ஹரே விளக்குகிறார். "தூக்கமின்மை பெரும்பாலும் கவலை, மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்னைகளுடன் இணைந்து ஏற்படுகிறது" என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 பேனிக் அட்டாக்: சில நிமிடங்கள்தான்; ஆனால் உயிர் பயம் ஏற்படும் - சமாளிப்பது எப்படி?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மன அழுத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும் தூக்கமின்மை ஏற்படலாம் என்று டாக்டர் ஆர்ச்சர்ட் குறிப்பிடுகிறார் மறுபுறம், வயதும் தூக்கத்தைப் பாதிக்கும் என்று பேராசிரியர் எஸ்பி விளக்குகிறார். உங்களுக்கு வயதாகும்போது, உங்களது தூக்க அமைப்புக்கும், உடலின் கடிகார அமைப்புக்கும் வயதாகத் தொடங்கும். தூக்க அமைப்பு உங்களது தூக்கத்தின் அளவு மற்றும் அதன் ஆழத்தை கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் உடலின் கடிகார அமைப்பு உங்கள் தூக்கத்தின் நேரத்தைத் தீர்மானிக்கிறது. "அதனால், உங்களுக்கு வயதாகும்போது, தூக்கத்தில் அடிக்கடி முழிப்பு வரலாம்" என்கிறார். அதாவது, "இளம் வயதுடையோர், தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருப்பார்கள், அதே சமயம் வயதானவர்கள் முன்னதாகவே தூங்கி காலையிலும் விரைவாகவே எழுந்துவிடுவார்கள். மேலும், முதியவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுந்துவிட்டு, பிறகு மீண்டும் தூங்குவதற்குப் போராடுகிறார்கள்" என்று அதன் சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார். பேராசிரியர் எஸ்பி, மரபியலும் தூக்கமின்மையை பாதிக்கும் என்று கூறுகிறார். "மன அழுத்தத்தால் எளிதில் பாதிப்படைவது மற்றும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது போன்ற பண்புகள் பல குடும்பங்களில் பரம்பரையாகக் காணப்படுகின்றன. காலையில் சுறுசுறுப்பாக இருப்பது (ஒரு வானம்பாடி பறவை போல) அல்லது மாலையில் சுறுசுறுப்பாக இருப்பது (ஒரு ஆந்தையை போல) நமது மரபில் தொடரலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன." "ஆனால், இந்த பண்புகளால் மட்டுமல்லாமல், தூக்கமின்மை பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்பி. சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 தூங்க முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலை நேரம் நெருங்க நெருங்க, தூங்குவதற்கான நமது உந்துதல் குறைகிறது நள்ளிரவில் எழுந்தவுடன் மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நாம் தூங்க முயற்சிக்கும்போது அதில் ஒரு முரண்பாடு இருப்பதாக பேராசிரியர் எஸ்பி விளக்குகிறார். "காலை நெருங்க நெருங்க, தூங்குவதற்கான நமது உந்துதல் குறைகிறது. 'என்னால் மீண்டும் தூங்க முடியவில்லையே' என்ற கவலையில் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்தால், அது தூக்கத்திற்கு எதிரியாகிவிடும். உறங்கும்படி உங்களை நீங்களே கட்டாயப்படுத்த முடியாது." "நீங்கள் நிம்மதியாக இருக்கும்போது, இயற்கையாகவே உங்களுக்குத் தூக்கம் வரும். மேலும், நீங்கள் தூங்க முயற்சிக்கும்போது, விழித்திருப்பீர்கள். அதுவே, தூக்கமின்மை பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்," என்று தூக்கமின்மையில் உள்ள சிக்கல்களை விவரிக்கிறார் பேராசிரியர் எஸ்பி. எனவே, நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், விழித்துக்கொண்டே இருக்க முடிவெடுப்பதே சிறந்த தீர்வு என்கிறார் அவர். ஏனென்றால், தூக்கத்தை எதிர்ப்பதன் மூலம், அதனை இயற்கையாக வர அனுமதிக்கிறீர்கள் என்ற காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். டாக்டர் ஆர்ச்சர்ட், சில எளிய நடைமுறைகளை பின்தொடர்வதன் மூலம், நமக்கு நன்றாக தூக்கம் வரலாம் என்று குறிப்பிடுகிறார். நாகரிக வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்குள்ளேயே வேறுபாடுகள் இருந்தனவா?27 ஜனவரி 2025 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 என்னென்ன சிகிச்சைகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உறக்கம் கலைந்து, விழிப்பு வந்துவிட்டது உங்களுக்குத் தெரிந்தால், படுக்கையை விட்டு எழுந்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஹரே தூக்கத்துக்கு, நிலைத்தன்மை முக்கியம் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட். ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கும், விழிப்பதற்கும் நம்மைப் பழக்கப்படுத்துவன் மூலம், நமக்கு நன்றாக தூக்கம் வரலாம் என்றும் அவர் கூறுகிறார். மேலும், தூங்கும் இடத்துடன் நாம் ஒத்துப்போக வேண்டுமென டாக்டர் ஆர்ச்சர்ட் பரிந்துரைக்கிறார். "எந்த படுக்கையில் தூங்கப் போகிறோம் என்பதை மூளைக்கு பழக்கப்படுத்துவதும் அதற்கு உதவலாம். அதேபோல், சோஃபாவில் தூங்குவதையும் படுக்கையில் வேலை செய்வதையும் தவிர்ப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ஆர்ச்சர்ட் . நீங்கள் விழித்திருந்து, மீண்டும் தூங்கப் போவதாக உணரவில்லை என்றால், படுக்கைக்குத் திரும்புவதற்கு முன், நீங்கள் எழுந்து சுமார் அரை மணிநேரம் வேறு ஏதாவது செய்ய வேண்டும். "உறக்கம் கலைந்து, முழிப்பு வந்துவிட்டது உங்களுக்குத் தெரிந்தால், படுக்கையைவிட்டு எழுந்துவிடுங்கள்." என்று மருத்துவர் ஹரே பரிந்துரைக்கிறார். மறுபுறம், மருத்துவர் ஹரே மற்றும் பேராசிரியர் எஸ்பி ஆகிய இருவருமே தூக்கமின்மைக்கு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை. மேலும், புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (CBT) மேற்கொள்வது இதற்கு உதவலாம் என்கிறார்கள். தங்கள் சிந்தனை மற்றும் நடத்தையை மாற்றுவதன் மூலமும், சிக்கல்களை நிர்வகிக்க உதவும் ஒரு வகையான உளவியல் சிகிச்சையை மக்கள் எடுத்துக்கொள்வதன் மூலமும், தூக்கமின்மை சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கலாம் என்று அவர்கள் இருவரும் ஆலோசனை கூறுகிறார்கள். சான்றுகளின் அடிப்படையில், தூக்கமின்மைக்கான சிறந்த சிகிச்சையாக புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை உள்ளது (CBT) என்று மருத்துவர் ஹரே கூறுகிறார். இது 70-80 சதவிகித மக்களுக்கு வேலை செய்கிறது, மேலும் இவர்களில் 50 சதவிகித மக்கள் தூக்கமின்மையிலிருந்து முழுமையாக நலமடைகிறார்கள் என்கிறார் அவர். உ.பி.யில் சானிடரி நாப்கின் கேட்டதால் மாணவி வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டாரா? என்ன நடந்தது?30 ஜனவரி 2025 பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?30 ஜனவரி 2025 மறுபுறம், மருந்துகளை விட உளவியல் சிகிச்சை தூக்கமின்மைக்கு சிறப்பாக உதவி செய்யும் என சில நோயாளிகள் நம்புவதில்லை என்பதையும் பேராசிரியர் எஸ்பி தெரிவிக்கிறார். சிலர் தூக்கம் வருவதற்காக மெக்னீசியத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இது குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகள் இல்லை, சிறிய அளவிலான ஆய்வுகள் மட்டுமே உள்ளன என்று டாக்டர் ஆர்ச்சர்ட் சுட்டிக்காட்டுகிறார். பல நாடுகளில் மருத்துவரின் பரிந்துரையின்றி, மெலடோனினை வாங்கமுடியும். ஆனால் மற்ற நாடுகளில் அது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஏன் அப்படி என்ற கேள்விக்கு விடையளித்தார் மருத்துவர் ஹரே. "தூக்கத்தில் எளிதான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதாவது, மெக்னீசியம் மற்றும் பிற மருந்துகள் தூக்கத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, அது தூங்குவதற்கு உதவுகிறது என்று மக்கள் அவற்றை நம்பலாம்" என்று விளக்குகிறார். கும்பமேளா: மதக் கூடல்களில் ஏற்பட்ட மரணங்கள் - தமிழ்நாட்டின் 1992 மகாமகத்தில் நடந்தது என்ன?30 ஜனவரி 2025 திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்ததா? பாஜகவின் புகாரும் உண்மை நிலவரமும்30 ஜனவரி 2025 தூக்கத்தை பாதிக்கும் பிற காரணிகள் யாவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீலத் திரைகளும் மின்னணு சாதனங்களின் திரையில் இருந்து வரும் ஒளியும் நம்மை விழித்திருக்கச் செய்யும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட் மெனோபாஸ், மது அருந்துவது அல்லது இரவு நேரப் பணிச்சூழல் போன்ற விஷயங்கள் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கின்றன? என்ற கேள்விக்கு மருத்துவர் ஹரே விளக்கம் தருகிறார். மெனோபாஸ் என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான காலகட்டம் என்றும் அது அவர்களின் தூக்கத்தை பாதிக்கும் என்றும் மருத்துவர் ஹரே குறிப்பிடுகிறார். அவர்களால் இரவில் எவ்வளவு நேரம் தூங்க முடிகிறது என்பதையும், இரவில் எவ்வளவு நேரம் விழித்திருக்கிறார்கள் என்பதையும், அதனால் அவர்களின் தூக்கம் எவ்வளவு தடைபடுகிறது என்பதையும் மெனோபாஸ் பாதிக்கலாம் என்கிறார். "தூக்கத்தை சீர்குலைக்கும் திடீர் விளைவுகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மனநிலை மாற்றங்களின் காரணமாக தூக்கம் கெடலாம். ஆனால், மாதவிடாய் தொடர்பான ஹார்மோன் மற்றும் மனநிலை மாற்றங்கள் காரணமாக, நமக்கு இன்னும் அதிகமான மன அழுத்தம் ஏற்படலாம்." "கூடுதலாக, சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்புகளையும் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் மன அழுத்தமும் தூக்கத்தை பாதிக்கலாம்" என்று அதன் காரணங்களை பட்டியலிடுகிறார் மருத்துவர் ஹரே. மது அருந்துவது, நாம் தூங்கும் விதத்தை, குறிப்பாக தூக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் நாம் செலவிடும் நேரத்தை மாற்றியமைக்கும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட். "ஆனால் மது அருந்துவது, நமது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கலாம், எடுத்துக்காட்டாக, மது அருந்துவதால் தூக்கத்தின்போது அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல நேரிடலாம், இது தசைகளை தளர்த்தும். மது அருந்துவதால் நாம் குறட்டை விடக்கூடும், அது மட்டுமின்றி நமது ஹார்மோன்களையும் மது பாதிக்கலாம். ஏனென்றால், தூக்கம் வருவதற்கும், நீண்ட நேரம் தூங்குவதற்கும் உதவும் முக்கியமான செயல்முறையின் அங்கம் அந்த ஹார்மோன்கள்" என்பதை அவர் நினைவுறுத்துகிறார். கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு; என்ன காரணம்? - இன்றைய செய்திகள்30 ஜனவரி 2025 மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மது அருந்துவது, நாம் தூங்கும் விதத்தை, குறிப்பாக தூக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் நாம் செலவிடும் நேரத்தை மாற்றியமைக்கும் இரவு நேரப் பணிச்சூழல் மற்றும் பிற நேரங்களில் வேலை செய்தால் தூக்கத்தை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான வழிகள் யாவை என்ற கேள்விக்கு, மருத்துவர். ஹரே 'உறக்கத்தை மேம்படுத்த' சில வழிகளை முயற்சிக்குமாறு பரிந்துரைக்கிறார். "நீங்கள் இரவு நேரத்தில் வேலை செய்யாதபோது, உங்களால் சாதாரண நேரத்தில் தூங்க முடியும் அல்லவா. எனவே, அதை மேம்படுத்த முயற்சிப்பது, தூங்கும்போது இடையூறின்றி நன்றாகத் தூங்குவது ஆகியவற்றை நாங்கள் வழக்கமாக பரிந்துரைப்போம்" என்கிறார். நீலத் திரைகளும் மின்னணு சாதனங்களின் திரையில் இருந்து வரும் ஒளியும் நம்மை விழித்திருக்கச் செய்யும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட். "நாம் பயன்படுத்தும் சாதனங்களின் திரைகளில் உள்ள முக்கிய பிரச்சனை, வெளிச்சம் அல்ல. மாறாக அவற்றில் நாம் என்ன செய்கிறோம் என்பது தான்." "தூக்கத்தைக் கெடுக்காத வகையில், உங்கள் கைப்பேசியை அமைதியாகவும் நிதானமாகவும் பயன்படுத்தினால், உற்சாகமான அல்லது ஊக்கமளிக்கும் ஒன்றைச் செய்தால் அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்காது" என்று விவரிக்கிறார் மருத்துவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7wleq772o
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - ஜனாதிபதி பங்கேற்பு
31 JAN, 2025 | 11:12 AM (எம்.நியூட்டன்) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது. மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/205399
-
இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்
இளைஞர்கள் தான் அண்ணை மோசம். கிட்டவா போய் குறைச்சு போடச் சொல்லிற்று அங்கால போக கூட்டுவாங்கள்! நானும் அப்பிடியே வெளிக்கிட்டிடுவன்.
-
சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - நளிந்த ஜயதிஸ்ஸ
Published By: VISHNU 30 JAN, 2025 | 07:33 PM (செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் துரித சேவையை வழங்கி வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மையத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தற்போது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. (1990) சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம். ஊழியர்களின் சேவைக்கான கௌரவத்தை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், ஊழியர்களை நீண்ட காலத்திற்கு சேவையில் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஊழியர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குவதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வலுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஊழியர் பற்றாக்குறையால் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினரின் உதவியை பெறுவதற்கும் எதிர் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக சுமார் 150 புதிய அம்பியூலன்ஸ்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் பகுதிகளில் இச்சேவையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் தற்போது சுமார் 322 சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/205370
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இன்றைய இரண்டாம் நாளில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்தவீச்சில் பிரபாத் ஜெயசூரிய மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். https://tamil.adaderana.lk/news.php?nid=199530
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
காலமான மாவை சேனாதிராஜா - ஒரு பார்வை! காணொளி யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார். அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார். அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார். 1977 இல் மாவை சேனாதிராஜா 'பவானி' என்பவரை திருமணம் செய்தார். மேலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். 1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார். இந்நிலையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (29) காலமானார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82. அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு அன்று மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற பிரவேசம்... மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். 2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார். 2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின. இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார். அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1989 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ) - 2,820 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை. 2000 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (தவிகூ ) - 10,965 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார். 2001 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (தவிகூ) - 33,831 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார். 2004 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் - (ததேகூ) - 38,783 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார். 2010 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,501 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார். 2015 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம் (ததேகூ) - 58,782 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்பட்டார். 2020 பாராளுமன்றத் தேர்தல் - யாழ். மாவட்டம்- (ததேகூ) - 20,358 விருப்பு வாக்குகள் - தெரிவு செய்யப்படவில்லை. https://tamil.adaderana.lk/news.php?nid=199500
-
யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முககவசங்களை அணியவும் - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா Published By: VISHNU 30 JAN, 2025 | 06:49 PM (செ.சுபதர்ஷனி) கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக்கவசங்களை அணியுமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை (30) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் இந்நாட்களில் வளி மாசு அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் சிறுவர்களிடையே சுகாதார பிரச்சினைகளும் உயர்வடைந்துள்ளன. விசேடமாக மூச்சுத்திணறல், இருமல், ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் சார்ந்த வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கும் நோய் நிலைமை தீவிரமடையலாம். ஆகையால் அனைவரும் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். நாட்பட்ட சுவாச நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முககவசங்களை அணிவது நல்லது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதியான வைத்தியரை நாடுங்கள். அத்தோடு இன்புளுவென்சா, சிக்கன் குனியா போன்ற வைரஸ் தொற்றுகளும் சமூகத்தில் வெகுவாக பரவி வருகிறது. பாடசாலை மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள இக்காலத்தில் சிறுவர்கள் பல மணி நேரமாக வெளியிடங்களில் நடமாடுவதும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான இளைப்பு, தடிமன் உள்ளவர்களுக்கும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் வைரஸ் பரவல் காரணமாக நியூமோனியா ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலம் மாசடைந்த வளியை சுவாசிப்பது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இவ்வாறான சூழ்நிலைகளின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/205369
-
பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?
பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'பேட் கேர்ள்'. பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தை வெற்றிமாறனுடன் சேர்ந்து வழங்கவுள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஜனவரி 30 அன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில், டைகர் போட்டிப் பிரிவில் இது திரையிடப்படவுள்ளது. அஞ்சலி சிவராமன், ஷாந்தி ப்ரியா, ஹ்ரிது ஹரூன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ப்ரீதா ஜெயராமன், ஜகதீஷ் ரவி, ப்ரின்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பேட் கேர்ள் - கதை என்ன? "பள்ளி காலத்திலிருந்து கல்லூரி வரையிலும், பிறகு வெளி உலகிலும், ரம்யாவின் கனவு, தனக்கான கச்சிதமான ஓர் ஆணைத் தேடுவதே. சமூக நெறிகள், கண்டிப்பான பெற்றோர், நிறைவேறாத காதல், அவளது சொந்த மனதின் கட்டுப்பாடில்லாத குழப்பம் ஆகியவற்றால் அந்தக் கனவு தொடர்ந்து தடைபடுகிறது." "இதைக் குறும்பும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்தில் வர்ஷா பரத் எடுத்துள்ள படமே பேட் கேர்ள்" என்று இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ கதைச் சுருக்கமாக ராட்டர்டாம் விழாவுக்கான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. டீசரில் சர்ச்சைக் காட்சிகளா? பதின்ம வயது ஆண்களின் ஆசைகளை, தவறுகளைச் சொல்லும் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. ஆனால் ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் படங்கள் தமிழில் மிகச் சொற்பம். முக்கியமாக, ஒரு பெண்ணைப் பற்றி பெண்களே எடுத்திருக்கும் திரைப்படப் பதிவுகள் தமிழில் குறைவே. அந்த வகையில் பேட் கேர்ள் டீசர், புதிய களமாக உள்ளது. இந்த டீசரில் ரம்யா என்ற கதாபாத்திரம், தனக்கான ஆண் நண்பனைத் தேடி அலைவது, பள்ளியில் தவறு செய்து மாட்டிக் கொள்வது, பெற்றோரின் கண்டிப்பை எதிர்ப்பது, தன் மகிழ்ச்சிக்கு குறுக்கே வந்ததால் 'இனி தன் இஷ்டம் போலத்தான் நடப்பேன், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவள் அம்மாவை மிரட்டுவது, குடிப்பது, புகைப் பிடிப்பது, பல ஆண்களுடன் உறவில் இருப்பது எனக் காட்சிகள் வரிசை கட்டுகின்றன. ஒரு பக்கம் இது யாரும் எதிர்பார்க்காத அதிரடியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தக் காட்சிகள், அந்த டீசரின் யூட்யூப் பக்கத்தின் கருத்துப் பகிர்வு, ட்விட்டர், ரெட்டிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகவும் வலுவான விவாதத்தை எழுப்பியுள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா மேடையிலேயே நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை26 ஜனவரி 2025 தனித்துவமான இசையால் 6 வயதிலேயே சினிமா பிரபலங்களை ஈர்த்த நைஜீரிய சிறுமி22 ஜனவரி 2025 சமூக ஊடகங்களில் நடந்த விவாதம் பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO வர்ஷா என்ன மாதிரியான படத்தைத் தரப் போகிறார் என்று ஆர்வத்துடன் எதிர்நோக்குவதாகவும், பெண்களின் கதைகளை பெண்களே கூறும் ஒரு படம் என்பதால், கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்கப் போவதாகவும் ஒரு ரசிகை ட்வீட் செய்துள்ளார். "இறந்துபோன பெண் கதாபாத்திரத்தைக்கூட புறநிலைப்படுத்துவார்கள், பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு, தன்பால் ஈர்ப்பாளர்க்கு எதிரான நகைச்சுவையை ரசிப்பார்கள், பாலியல் வன்புணர்வு தொடர்பான நகைச்சுவைகளை எளிதாகக் கடந்து செல்வார்கள், பெண்களை வெறும் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களைக் கொண்டாடுவார்கள், ஆனால் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு பெண் எழுதினால் அங்கே தங்கள் எல்லைக் கோடுகளை வரைய ஆரம்பிப்பார்கள்" என்றும் ஒரு பெண் பயனர் ட்வீட் செய்துள்ளார். டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் வர்ஷாவும் இந்தக் கருத்தை ஒத்தே பேசியிருந்தார். "இதைவிட மோசமான ஆண் கதாபாத்திரங்களையும், அவர்கள் போற்றப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம், அப்படியான படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். தனது இந்த கதாபாத்திரத்தைப் போற்ற வேண்டாம், ஆனால் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தாம் நினைப்பதாக" வர்ஷா குறிப்பிட்டிருந்தார். டீசர் சொல்லும் கதை கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகவே இதை எதிர்க்கும் பலரது கருத்துகளின் அடிநாதம். டீசரின் முடிவில் இருக்கும் வசனத்தைக் குறிப்பிட்டுச் சிலர் விமர்சித்துள்ளனர். "இதே வார்த்தைகளை ஒரு ஆண் உச்சரித்தால், அவனை ஆணாதிக்கவாதி என்று பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கும், அத்தனை போலி பெண்ணியவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள். இது ஆண்களுக்கு எதிரான வெறுப்பை சகஜப்படுத்துகிறது" என்று சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். "தன் மகிழ்ச்சிக்கு குறுக்கே வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறும் வசனத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டீசரை பாராட்டியிருக்கும் சிலர் கூட, இந்த வசனம் பொறுப்பற்ற தன்மை கொண்டுள்ளதாகவும், இது போன்ற வசனங்கள் பள்ளி செல்பவர்களைப் பாதிக்கும் என்றும், கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் ரம்யா என்கிற கதாபாத்திரம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் 1997-ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா? அதன் கதை என்ன?18 ஜனவரி 2025 பாலியல் தொல்லை: நடிகை ஹனிரோஸ் புகாரின் பேரில் நகைக்கடை அதிபர் கைது - என்ன நடந்தது?11 ஜனவரி 2025 எதிர்ப்பிலும் அரசியலா? பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO முன்னதாக இயக்குநர் பா ரஞ்சித், பேட் கேர்ள் படத்தை, ''பேட் கேர்ள் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு தைரியமான, புத்துணர்வான திரைப்படம்" என்று பாராட்டியிருந்தார். மேலும், "இப்படி துணிச்சலான ஒரு கதையை ஆதரித்ததற்காகவே இயக்குநர் வெற்றிமாறனுக்கு அதிக பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். ஒரு தனித்துவமான, புதிய அலை பாணியில், பெண்களின் சிக்கல்கள் குறித்தும், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்தும் இந்தப் படம் வலிமையாகப் பதிவு செய்துள்ளது. வர்ஷாவுக்கு வாழ்த்துகள். அஞ்சலி சிவராமன் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதைத் தவறவிடாதீர்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். விஜய் சேதுபதி இந்த டீசரை வெளியிட்டு ட்வீட் செய்திருந்ததால், அவரையும் தனிப்பட்ட முறையில் பலர் தாக்கிப் பேசி வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவுப் பதிவுகளையும் ட்விட்டரில் பார்க்க முடிகிறது. மேலும், இந்தக் கதையின் நாயகியை பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்டியதால் வெற்றிமாறனையும், டீசருக்கு ஆதரவு தெரிவித்த பா.ரஞ்சித்தையும் தாக்கி பல ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன. இதைக் குறிப்பிட்டுள்ள சிலர், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் வர்ஷா ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், வழங்கியிருக்கும் அனுராக் காஷ்யப்பும் பிராமணரே, அப்படியிருக்க, இவர்கள் வெற்றிமாறனையும், ரஞ்சித்தையும் மட்டும் குறிவைத்து விமர்சிப்பதன் பின்னாலும் ஒரு அரசியல் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,HALITHA/IG இதுகுறித்து சில்லு கருப்பட்டி, ஏலேய் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஹலீதா ஷமீம் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இப்போது இந்த எதிர்வினைகளுக்கான காரணம், இந்தப் படத்தின் பின்னால் தயாரிப்பாளராக வெற்றிமாறன் இருப்பதும், பா ரஞ்சித், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பாராட்டிப் பகிர்ந்திருப்பதும்தான். எனவே இந்த நபர்களைக் குறிவைத்தே இது நடக்கிறது" என்று நினைப்பதாகக் கூறினார். அதோடு, "நாயகியை பிராமணப் பெண்ணாகக் காட்டியது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் ஒரு இயக்குநரால் அவர் வளர்ந்த சூழல், அவரை பாதித்த கதைகளைத்தான் எடுக்க முடியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இப்படி எதிர்க்கும்போது, ஏற்கெனவே படைப்பாளிகளின் சித்தாந்தங்களுடன் ஒத்து வராத எதிர்ப்பாளர்கள் இதை ஒரு எளிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது. லேடி பேர்ட் போன்ற அவர்கள் நினைத்த கதைகளை வெளிநாடுகளில் பெண்கள் சுதந்திரமாக படமாக எடுப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். அப்படி ஒரு படமாகத்தான் இந்த பேட் கேர்ளும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவக் கதைகளைப் படமாக எடுக்கும்போது அது நல்ல திரைப்படமாக வரும். ஆனால் அதை இந்த அளவுக்குத் தீவிரமாக எதிர்க்கும்போது இயக்குநருக்கு என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கும்?" என்று தனது கவலையை வெளிப்படுத்தினார். ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயாதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?30 டிசம்பர் 2024 மீள் பார்வை 2024: மசாலா, கனமான கதை என பன்முகம் காட்டி தனித்து நின்ற தமிழ் சினிமா30 டிசம்பர் 2024 பா.ரஞ்சித்தை நேரடியாக தாக்கிய மோகன் ஜி பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO திரௌபதி, பகாசுரன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜியும், தனது ட்விட்டர் பக்கத்தில், பேட் கேர்ள் டீசரை விமர்சித்துள்ளார். இயக்குநர் பா ரஞ்சித்தின் பாராட்டு ட்வீட்டை மீண்டும் பகிர்ந்திருந்த மோகன், "இந்தக் கூட்டத்துக்கு பிராமணப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கூறினால் தைரியமானதாக, புத்துணர்வு தருவதாக இருக்கும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? வயதான பிராமண அப்பாவை, அம்மாவைத் திட்டுவது நவநாகரீகம் கிடையாது. நீங்கள் சார்ந்த சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்களை, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை இப்படி சித்தரிக்க முயற்சி செய்ய்யுங்கள்" என்று நேரடியாகத் தாக்கிக் கருத்து தெரிவித்துள்ளார். "இயக்குநர் ரஞ்சித், ஏற்கெனவே ஒரு தலித் பெண் கதாபாத்திரத்தை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தைத் துணிச்சலாகத் தந்தவர்தான்" என்று மோகனின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுகின்றன. அதேவேளையில், "மோகன் சொன்னது சரியே, தமிழ் சினிமாவில் எப்போதுமே பிராமண சமூகத்தை இழிவுபடுத்துகின்றனர்" என்று அவரது கருத்துக்கு ஆதரவாக சிலர் சமூக ஊடகத்தில் அவருக்கு ஆதரவும் தெரிவித்திருந்தனர். இயக்குநர் வர்ஷாவின் பொறுப்புத் துறப்பு பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியிருந்த இயக்குநர் வர்ஷா பரத், "இந்த கதாபாத்திரம் ஒரு நாயகி கிடையாது. அவளிடம் குறைகள் உள்ளன, அவள் தவறான சில முடிவுகளை எடுக்கிறாள், அதில் காயப்படுகிறாள். அவள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவள். ஆனால் அவள் மற்றவர்களைக் காயப்படுத்துவதில்லை. எல்லோரையும் போலவே அவளும் வீழ்கிறாள், எழுகிறாள். அவள் வாழ வேண்டும் என்று முயல்கிறாள், போராடுகிறாள், வாழ்க்கையைக் கடக்க நினைக்கிறாள். அவள் நம் எல்லோரையும் போன்றவள்தான்" என்று நாயகி கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ளார். பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் - விஜயராஜ் கேப்டனாக உருவான தருணம்28 டிசம்பர் 2024 ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்12 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,KALILUR RAHMAN/X பெண்கள் மது அருந்தலாம், புகைப் பிடிக்கலாம் என்பதை இந்தப் படத்தில் தான் ஆதரிக்கவில்லை என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார். "இது ஒரு பெண்ணின் கதை. பெண்கள் மனிதர்களாக இருக்கலாம், எப்போதுமே புனிதர்களாக இருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து. இந்தப் படம் ஓர் உரையாடலுக்கான ஆரம்பமே. இதுவொன்றும் சுய உதவிப் புத்தகம் அல்ல" என்றும் வர்ஷா தெரிவித்துள்ளார். "இந்த கதாபாத்திரத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொள்ளவோ, பின்பற்றவோ வேண்டாம். பொதுவாகவே, நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்ல, இயக்குநர்கள் சரியான நபர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்" என்று அழுத்தமாகத் தெரிவித்திருந்தார். வெளியீட்டுக்கு முன் தொந்தளிப்பா? தமிழில் வெளீயான படங்களில் சாதிய அடக்குமுறை, பெண்ணுரிமை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் அரசியல் கதைகள் எனப் பல்வேறு படங்கள் இதே போல சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. வெளியீட்டுக்குப் பிறகு எதிர்ப்பைச் சம்பாதித்து, அதன் பிறகு படத்தில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI இதுகுறித்து யூட்யூப் சினிமா விமர்சகரான ரஹ்மானிடம் கேட்டபோது, "எனக்கு இந்தப் படத்தின் டீசர் மிகப் புதியதாக இருந்தது. தமிழில் இப்படி ஒரு படம் எடுக்கப்படுவது நல்ல விஷயமே. இன்னொரு பக்கம் நவீன போராளிகளின் ஆர்வமிகுதியும் சில இடங்களில் தெரிந்தது. ஆனால் ஒரு படம் வெளியாகும் முன்னரே, வெறும் முன்னோட்டத்தை வைத்து அந்தப் படத்தின் மொத்த வடிவம் இதுதான், அது சொல்ல வரும் செய்தி இதுதான் என்று அனுமானம் செய்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், கடுமையான வசவு நிறைந்த விமர்சனங்களை முன்வைப்பதும் எந்த ஒரு பண்பட்ட சமூகத்துக்குமே அழகல்ல," என்று தெரிவித்தார். இந்தப் படம் தொடர்பாகத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, "ஒரு படத்தை பெண் எழுதி இயக்கியுள்ளார். அவருக்கான அங்கீகாரம் ஏதுமில்லை. ஆனால் அதைத் தயாரித்த ஆணின் பின்னால் அனைவரும் செல்கின்றனர். வெறுப்பவர்கள்கூட பெண் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை," என்று குறிப்பிட்டிருந்தார். சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது. அதன் பிறகு "இந்தப் படத்தின் பின்னணி குறித்து தெளிவாகத் தெரிய வரும். அப்போது ஆக்கப்பூர்வமான கருத்துகளை, விமர்சனங்களை முன்வைக்கலாம்," என்றார் ரஹ்மான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3j954d3q3o
-
இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்
இவ்வளவும் நடக்க சந்தர்ப்பம் உள்ளது அண்ணை. வருமானம் அதிகரிக்க வழி தெரியாமல் தவிக்கும் அரசிற்கு வழிகாட்டி என உங்கள் பெயர் வரவும் சந்தர்ப்பம் உள்ளது. கலியாண வீடு, சாமத்திய வீடுகளில் சத்தமாகப் போடும் பாடல்களில் இருந்து இதயத்தையும் கேட்கும் திறனையும் பாதுகாக்க கிட்டவே போவதில்லை!!
-
முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை
வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சைபீரியன் புலியின் 250 கிராம் சிறுநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றும் 50 யுவான் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.600) விற்கப்பட்டுள்ளது. இதை, பார்வையாளர் ஒரு தனது எக்ஸ் தளத்தில் எடுத்து பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் எதிர்வினையாற்றியுள்ளது. அதை வாங்கிய பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு பயனர், “என் அப்பாவுக்காக இதை வாங்கினேன். ஆனால் எந்த விளைவையும் காண முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “சிறுநீரில் பாக்டீரியா பரவாதா? இதைப் பற்றி யோசிப்பது மிகவும் நல்லது” என அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து, இவ்விவகாரம் அந்த நாட்டு ஊடகத்துறை வரை விவாதத்தில் இறக்கியது. இதுகுறித்து சீனாவில் உள்ள ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், “ஆதாரம் இல்லாமல் அதன் மதிப்பை மிகைப்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தை சிதைக்கிறது. மேலும் இது புலியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கிறது. புலி சிறுநீர் ஒரு பாரம்பரிய மருந்து அல்ல. இதன் வாயிலாக எந்த மருத்துவ பயன்களும் நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். சீன மருத்துவ நூல்களில், புலி குறித்த மருத்துவக் குறிப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்தகைய வைத்திய முறைக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால், இவ்விவகாரமும் சீன அரசாங்க கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும் எனக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315053
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து - நேரில் பார்த்தவர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஜனவரி 2025, 03:26 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள ரோனால்ட் ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையம் அனைத்து விமானங்களையும் தரையிறக்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது. அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. கும்பமேளா: 'அங்கு செல்ல வேண்டாம்' என யோகி ஆதித்யநாத் கூறிய திரிவேணி சங்கமம் என்றால் என்ன? உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது? உயிரிழப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? சிபிஎஸ் செய்தி நிறுவனம் 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கிறது. இந்த விமானம் இரண்டாகப் பிளந்து போடோமேக் ஆற்றில் விழுந்திருப்பதைக் காண முடிவதாகவும் ஹெலிகாப்டர் தண்ணீரில் தலைகீழாக விழுந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல் மற்றும் தீயணைப்புப் படையினர் உயிருடன் இருப்பவர்களை தண்ணீரில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இருட்டும், உறையும் குளிரும் மீட்புப் பணிகளை சவாலாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தும். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்? விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?30 ஜனவரி 2025 விமானத்தை தாக்கிய மின்னல் - பின்னர் நடந்தது என்ன? (காணொளி)28 ஜனவரி 2025 அந்த நேரத்தில் அது "மிகவும் தவறு" என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார். வானில் ஒரு 'ஒளிவீச்சு' உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார். உறையும் குளிரில் மீட்புப் பணி படக்குறிப்பு,வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர் தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது. வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் "மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்" மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை மிகவும் துயரமானது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் விமான நிலையத்தில் இருப்பதாகக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு தலைவர் ஜான் டானலி, மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது என்று கூறுகிறார், "மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது" என்று குறிப்பிட்டார் அவர். உள்ளூர் நேரப்படி இரவு 8:58 மணிக்கு அவசர சேவை பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரில் விமானம் இருப்பதை கண்டனர். தற்போது 300 வீரர்கள் மீட்புப் பணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். வாசிங்டன் டிசியின் அவசர சேவை பிரிவினர், ரீகன் தேசிய விமான நிலையத்தில் திரண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. போடோமேக் ஆற்றுப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கியுள்ளது, இந்த ஆறு வாஷிங்டன் டிசி வாயிலாக பாய்கிறது என, டிசி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. தீயை அணைப்பதற்கு உதவும் படகுகள் மூலம், விமானத்தின் பாகங்கள் தேடப்பட்டு வருவதாக, அத்துறை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்" என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். "இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருந்தார். "விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன." "அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை" "இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை" என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். "எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் " - அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராபர்ட் ஐசோம், இந்த விபத்து குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்தார். இது குறித்து ஏர்லைன்ஸ் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த அவரது வீடியோவில், விமானத்தின் தகவல்களையும், அதில் இருந்தவர்கள் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் என்பதையும் உறுதி செய்திருக்கிறார். உள்ளூர், மாநில மற்றும் தேசிய அதிகாரிகளுடன் தங்கள் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்" என்று கூறிய அவர், வாஷிங்டன் டிசிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஒரு குழுவை அனுப்பியிருப்பதாகவும், தானும் அங்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6275988jyeo
-
குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர் சுவீடனில் சுட்டுக்கொலை
30 JAN, 2025 | 03:48 PM சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மொமிகா இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன. https://www.virakesari.lk/article/205351
-
ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை
கொங்கோவின் முக்கிய நகரம் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் - வீதிகளில் உடல்கள் Published By: RAJEEBAN 30 JAN, 2025 | 10:53 AM ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள் திங்கட்கிழமை நுழைந்ததை தொடர்ந்து கடும் மோதல் இடம்பெற்றது. ஒருதசாப்த காலத்திற்கு மேல்நீடிக்கும் மோதலின் ஒரு பகுதியாகவே இந்த புதிய திருப்பம் அமைந்துள்ளது. கொங்கோ கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தொடர்ந்து கோமா நகர வீதிகளில் உடல்களை காணமுடிகின்றது மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன. செவ்வாய்கிழமை இந்த நகரத்தின் பிரதான விமான நிலையத்தை கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களிற்கு நிவாரணங்களை கொண்டு செல்வதற்கான பிரதான வீதி நகரத்திலிருந்து துண்டிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. கோமா நகரத்தின் மீதான தாக்குதலிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல நாடுகள் ருவாண்டாவை கண்டித்துள்ளதுடன் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எடுக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிக் குழுவிற்கு டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது, அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது. 30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த மோதல்களில் சிக்குண்டுள்ளது. 30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹூட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹூட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது. அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர் என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சி இனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது. கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என குற்றம்சாட்டுகின்றது. https://www.virakesari.lk/article/205303
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கறுப்பு குறியிடப்பட்ட பகுதியை அழுத்துங்கள், பின்பு வருவது உங்களுக்கு நன்றாக புரியும் அண்ணை.
-
ஒரு கை, இரண்டு கால் இல்ல; ஆனாலும் Body Building-ல் பதக்கங்களை குவிக்கும் இளைஞர்
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 24 வயதான பாடிபில்டர் சுரஜ் கெய்வால் வாழ்க்கையில் ஒரு துயரம் நடந்தது. ஆனால், அது வாழ்க்கையையே மாற்றும் என இவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். எலக்ட்ரிக் ஷாக் அடித்ததில் இவருக்கு வலது கை மற்றும் இரண்டு கால்கள் பறிபோயின. ஆனால், அது எதுவும் இவரை தடுத்து நிறுத்தவில்லை. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காணொளி
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
அதிர்ச்சியில் US; ஒரே நாளில் அலறவைத்த China APP-ன் பின்னணி என்ன? Deep Seek எப்படி செயல்படுகிறது? Deep Seek App Explained: அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை தூண்டியிருக்கிறது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது. A Chinese-made artificial intelligence (AI) model called DeepSeek has shot to the top of Apple Store's downloads, stunning investors and sinking some tech stocks. Its latest version was released on 20 January, quickly impressing AI experts before it got the attention of the entire tech industry - and the world. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
தமிழ்நாட்டில்இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
30 JAN, 2025 | 02:19 PM மதுரை: திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் முகாமின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் 555 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் 943 ஆண்கள் 800 பெண்கள் 289 குழந்தைகள் என 2000-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். தற்போது 520-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடந்துள்ளது. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் முதியவர்களும் நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முகாமில் 20 கழிவறைகள் தான் உள்ளது. இது இங்குள்ள 2000 நபர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஏராளமானவர்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்கையில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுஇ கழிவறை வசதியோடு கட்டி தரவும்இ பொதுக் கழிவறை முறையான சாலை வசதி தெரு விளக்கு வசதிஇ முழுமையான மின்சார விநியோகம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் ஏ. டி.மரிய கிளாட் அமர்வு தமிழக மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலர் புலம்பெயர்ந்தோர் நல வாரியத்தின் ஆணையஇ மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திருவாதவூர் அகதிகள் முகாமின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். https://www.virakesari.lk/article/205335
-
உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு சிலர் மற்றவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதிக மகிழ்ச்சியாக இருக்க வழிகள் இல்லை என்பது இதற்கு அர்த்தமல்ல கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஃப்யூச்சர் பதவி, மகிழ்ச்சி என்றால் என்ன? இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி... இதற்கு பெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா? உண்மை என்னவென்றால் சிலர் மற்றவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. ஆனால், நீங்கள் குளிக்கும்போது பாடுபவராக இருந்தாலும், மழையில் நடனமாடும் நபராக இருந்தாலும் அல்லது சற்று கடினமான மனமும் அவநம்பிக்கையான ஆளுமை கொண்டவராக இருந்தாலும், 'மகிழ்ச்சி' என்ற எண்ணம் ஏற்படும் என்று சொல்லமுடியாது. நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நாம் அனைவரும் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். எனவே, 2025 இல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பயனுள்ள சில குறிப்புகளை இங்கே பெறமுடியும். 1. வயது ஏறும்போது புதிய நட்பை நாடுங்கள் நட்பு எல்லா வயதினருக்கும் பயனளிக்கிறது. ஆனால், முதிர்வயதில் அது மகிழ்ச்சியின் முக்கிய ஆதாரமாக மாறக்கூடும். வயதானவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்காக தங்கள் சமூக உறவுகளை மட்டுப்படுத்த முனைகிறார்கள். புதிய நட்பை உருவாக்கிக்கொள்ள தயாராக இருப்பது ஒரு நல்ல யோசனை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், உறவுடன் கூடவே வேறு நன்மைகளும் இதன்மூலம் கிடைக்கும். நட்புகள் நாமாக தேடிக்கொள்வதாகவே இருக்கின்றன. இந்த கட்டாயமற்ற உறவுகள் எந்த நேரத்திலும் தொடங்கலாம் அல்லது முடிவடையலாம். அதனால் அவை அதிக சுவாரசியமாகவும் குறைவான மன அழுத்தம் கொண்டதாகவும் இருக்கின்றன. சுவாரசியமான நிகழ்வுகளை தொடர்ந்து எதிர்நோக்குவது நமக்கு அதிக நம்பிக்கையான கண்ணோட்டத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. 'கார்' ஓட்டக் கற்றுக்கொண்ட எலிகள்; இந்த ஆய்வு முடிவுகள் தரும் மகிழ்ச்சிக்கான ரகசியம் என்ன? மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது? மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள் ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது? புதிய நபர்களை சந்திப்பது வயதானவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். ஆனாலும் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது அவர்களுக்கு எளிதாகவும் இருக்கலாம். ஏனெனில் வயது கூடும்போது ஆளுமை முதிர்ச்சியடைந்திருப்பதால் சமூக ரீதியாக எளிதில் இணையும் திறனை அவர்கள் பெற்றுள்ளனர். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் விரிந்துள்ளது. எனவே, அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. வயதாகும்போது தரமான நட்பைப் பேணும் முயற்சி சிறந்தது. ஏனெனில், இதன் நன்மைகள் உளவியல் நல்வாழ்வைத் தாண்டியதாக உள்ளன. இது, நமது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உண்மையில் நமக்கு வயதாகும்போது நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில், குடும்பத்தைப் போலவே நட்பும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதை ஆராய்ச்சிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன. நீங்கள் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்பவராக இருந்தால் அதில் உதவக்கூடிய சில ஆலோசனைகள் இதோ. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழ்ந்தது போன்ற அர்த்தமுள்ள தருணங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நெருக்கமாக உணரவும், நேர்மறையான உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வழியாகும். 2. மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள் இரக்கம் என்பது உண்மையான நட்பின் நன்கு நிறுவப்பட்ட தூண். "பகிரப்பட்ட வலி" என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்த இந்த வார்த்தை, நம் நண்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது வலுவான தொடர்புகளை உருவாக்க இரக்க குணம் உதவுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதற்கு நேர்மாறான உணர்ச்சி நிலை ஒன்று உள்ளது. அனைவராலும் குறைவாக அறியப்பட்ட ஆனால் முக்கியமான ஒன்று அது. அதுதான் "பகிரப்பட்ட மகிழ்ச்சி". இது நல்லுறவுகளில் குறைத்து மதிப்பிடப்படும் அம்சமாகும். இது நட்பைப் பேணுவதற்கு இரக்கத்தைப் போலவே முக்கியமானதாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது நண்பர்களின் நல்ல செய்தியை ஆர்வத்துடன் ஆதரிப்பதும், அதைப் பற்றி கேட்பதும், ஒரு நல்ல நண்பராக இருப்பதற்கான அடித்தளமாகும். உங்கள் நண்பரின் வெற்றியை உற்சாகமாக வரவேற்காமல் இருப்பது அல்லது பாராட்டாமல் இருப்பது அந்த உறவுகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். மேட்டுப்பாளையம்: தம்பி மற்றும் அவரின் காதலியை ஆணவக் கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை7 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நம் நண்பர்களின் அதிர்ஷ்டத்தை வரவேற்று அவர்களுடன் நல்ல உறவைப் பேணுவது மிகவும் முக்கியமானது 3. தன்னார்வ தொண்டு செய்யுங்கள் வேறொருவருக்காக ஏதாவது செய்வது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் என்று சொல்வது நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள். ஆனால், பரோபகாரத்தைப் பற்றி நாம் அதிகமாக அறிய அறிய இந்த வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்கிறோம். உண்மையில், நாள்பட்ட வலி மற்றும் மனச்சோர்வு போன்ற பல நிலைமைகளில் தன்னார்வத் தொண்டு உதவிகரமாக உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மற்றவர்களுக்கு உதவ நியமிக்கப்பட்ட, நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள் தன்னார்வத் தொண்டு செய்யும்போது குறைவான வலியை அனுபவித்ததாக 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இரு ஆய்வு கண்டறிந்தது. விலங்குகளை பராமரிப்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும், செடிகளை பராமரிப்பது நமக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு நல்வாழ்வைத் தரும் என்றும் மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன, சில மருத்துவர்கள் இப்போது தன்னார்வத் தொண்டை "சமூக பரிந்துரை"யின் ஒரு பயனுள்ள வடிவமாகப் பார்க்கின்றனர். மக்களை அவர்கள் வாழும் சமூகத்தின் வளங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் இணைக்கும் மருத்துவப் பரிந்துரை இது. கலை வகுப்புகள் முதல் சைக்கிள் ஓட்டும் குழுக்கள் வரை அனைத்தையும் செய்ய மக்களை வெளியே அனுப்புவது அல்லது தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிப்பது ஆகியவை சுகாதார சேவைகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறந்த வழிகள் என நிரூபணமாகியுள்ளன. கும்பமேளா: 'அங்கு செல்ல வேண்டாம்' என யோகி ஆதித்யநாத் கூறிய திரிவேணி சங்கமம் என்றால் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கியான் பரே சின்ட்ரோம் : மகாராஷ்டிராவில் அரிய நோய்க்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - என்ன அறிகுறி?29 ஜனவரி 2025 4. உங்கள் மூதாதையர்களுடன் இணையுங்கள் கடந்த காலமானது நிகழ்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய மற்றொரு வழியாக உள்ளது. நமது மூதாதையர்களுடன் இணைவது, ஆழ்ந்த உளவியல் நன்மைகளை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக தலைமுறைகள் வழியாக கதைகள் கடத்தப்படும்போது, துன்ப சூழல்களை சமாளிப்பது பற்றிய குடும்பக் கதைகளை அறிந்துகொள்வது நன்மை அளிக்கும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் சூசன் எம். மூர், தங்கள் குடும்ப வரலாற்றை அறிந்தவர்கள், அதிக அளவு திருப்தி மற்றும் மன நலனைக் கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார். உங்கள் 'ஃபேமிலி ட்ரீ' ( பரம்பரையை குறிக்கும் அட்டவணை) பற்றி ஆராய்ச்சி செய்யும் பணியை மேற்கொள்வது, உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடு உங்கள் கையில் இருப்பதை உணரவும், உலகில் உங்கள் நிலை பற்றிய சிறந்த புரிதலை வளர்க்கவும் உதவும். உங்கள் முன்னோர்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகளால் உங்கள் தற்போதைய வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் நன்றியுணர்வையும் அளிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு அழகிய நிலப்பரப்பில் வாகனம் ஓட்டுவதில் உள்ள இன்பம் 5. ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள் கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் உதவிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது ஒரு எளிய, ஆனால் நன்கு நிரூபணமான வழியாகும். நமக்கு நடந்த மூன்று விஷயங்களின் பட்டியலை எழுதும்போது அது நம் மனநிலையை மேம்படுத்த உதவும். அது ஒரு முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெறுவது அல்லது ஒரு குழந்தையைப் பெறுவது போன்ற வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது ஒரு பழைய நண்பரை சந்தித்தது அல்லது சூரிய அஸ்தமனத்தின் ஒளி போன்ற ஒரு அழகான தருணத்தை அனுபவிப்பது போன்ற நிகழ்வாகவும் இருக்கலாம். இந்த வகையான விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது நமது வாழ்வை மேம்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் பலி - நள்ளிரவில் என்ன நடந்தது?29 ஜனவரி 2025 'உயிரற்ற உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதை பார்த்தோம்'- மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு பிறகு பிபிசி நிருபர்கள் கண்டது என்ன?29 ஜனவரி 2025 6. குதூகலம் தரும் செயல்பாடுகளைத் தேடுங்கள் ஒரு அழகிய சூழலில் வாகனம் ஓட்டுவதை விட சிறந்தது எதுவுமில்லை என்று சொல்வார்கள். உங்கள் தலைமுடியை வருடும் சுகமான காற்று, ரேடியோவில் மனதை மயக்கும் இசை, உங்களுக்கு முன்னால் உள்ள சாலையின் சுதந்திரம். எலிகள்கூட வாகனத்தில் போகும் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதை இப்போது நாம் அறிவோம். வர்ஜீனியாவில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் சிறிய பிளாஸ்டிக் கார் போன்ற வாகனங்களை ஓட்ட எலிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். எலிகள் இந்தப் புதிய திறமையை கற்றுக்கொண்டன. விரைவில் அடுத்த பயணத்துக்குத் தயாராக இருப்பது போல் மிகுந்த ஆர்வத்துடன் கார்களில் ஏறத்தொடங்கின. இறுதியில் சில எலிகள் பயணத்தின் மகிழ்ச்சியை முன்கூட்டியே காட்டுவதைப்போல, உற்சாகத்தில் மேலும் கீழும் குதித்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இது ஒரு புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. மகிழ்ச்சியின் எதிர்பார்ப்பும் அந்த குறிப்பிட்ட செயலைப் போலவே திருப்திகரமாக இருக்க முடியுமா? மற்றொரு பரிசோதனையில் விஞ்ஞானிகள் சில எலிகளுக்கு வெகுமதிகளுக்காக காத்திருக்க பயிற்சி அளித்தனர். மற்ற சில எலிகளுக்கு உடனடியாக வெகுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் எலிகளின் மனநிலையை சோதித்தனர். வெகுமதிகளுக்காக காத்திருக்கப் பயிற்சி பெற்றவை அதிக நம்பிக்கையான மனநிலையுடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். மனிதர்களிடமும் இது இப்படித்தான் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர். மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகளை எதிர்பார்ப்பதன் மூலம் நம் மூளையை மிகவும் நம்பிக்கையுடன் இருக்கச் செய்யலாம். 'நான் கீழே விழுந்ததும் என் மீது நடக்க ஆரம்பித்துவிட்டனர்' - கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?29 ஜனவரி 2025 மகா கும்பமேளா கூட்ட நெரிசல் காட்சிகளை கண் முன்னே கொண்டு வரும் புகைப்படங்கள்29 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'எதுவும் செய்ய வேண்டாம்' என்பது மகிழ்ச்சியை கண்டறிய ஒரு நல்ல அறிவுரை 7. எதுவும் செய்யாமல் இருப்பது இப்போது அளிக்கப்படும் அடுத்த அறிவுரை உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி அதிகமாக கவலைப்படுவது உண்மையில் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஒரு உற்சாகமான அல்லது நம்பிக்கை தரும் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு, அதிக மகிழ்ச்சியை விரும்ப மக்களைத் தூண்டும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், படம் பார்த்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியை விட ஏமாற்றத்தையே உணர்ந்தனர். எனவே, எதிர்பார்ப்புகளை உயர்த்துவதன் மூலமும், மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி படித்துத் தங்களைப் பயிற்றுவிப்பதில் நேரத்தைச் செலவிடுவதன் மூலமும் மக்கள் உண்மையில் எதிர் விளைவை அனுபவித்து மனச்சோர்வை உணரக்கூடும். நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரிய நிகழ்வு அல்லது விருந்தின்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக அவை இருக்கவில்லையென்றால், இந்த உணர்வை நீங்கள் அனுபவித்திருக்கலாம். கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஐரிஸ் மாஸ், மகிழ்ச்சியை விரும்புவதும் தேடுவதும், தனிமை மற்றும் பிறரிடமிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வுகளை அதிகரிக்கும் என்பதை ஏற்கனவே காட்டியுள்ளார். உண்மையில் வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதையும், ஒரு திடமான அணுகுமுறையை பின்பற்றுவதையும் அவர் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgy4qp9ke0o