Everything posted by ஏராளன்
-
நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்
துறைமுகத்தில் 2,724 கொள்கலன்கள் தேக்கம் இதுவரை 24 கப்பல்கள் திரும்பிச் சென்றன - சுங்கத் திணைக்களப் பேச்சாளர் தகவல் Published By: DIGITAL DESK 2 25 JAN, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் துறைமுகத்தில் 2724 கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுங்கத்திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணிவரை 2,724 கொள்கலன்கள் பரிசோதனைக்காக (Clearance) துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பதிதல் நெறிசல் காணப்படுகின்றமை இந்த எண்ணிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறிருப்பினும் இவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய உத்தியோகத்தர்கள் மேலதிக நேர கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து வெகுவிரைவில் இவற்றை விடுவிப்பதற்கு முயற்சிக்கின்றோம். அதேவேளை குறுகிய கால திட்டமாக கடந்த வாரம் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இரு இடங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றை அபிவிருத்தி செய்து, கொள்கலன்களை அங்கு வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கொள்கலன்களுடன் துறைமுகத்தை வந்தடையும் கப்பல்கள் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் அவற்றிலிருந்து கொள்கலன்களை தரையிறக்குவதற்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கை சுங்கப்பிரிவால் முன்னெடுக்கப்படும். எனவே கொள்கலன் நெறிசலால் கப்பல்கள் திருப்பியனுப்பப்பட்டதாகக் குறிப்பிடுவது குறித்து எமக்கு எதுவும் தெரியாது. எவ்வாறிருப்பினும் கப்பல் முகவர்களின் சங்கம், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றின் பிரதி சுங்கத்திணைக்களத்துக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் 24 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் விபரங்களும் எம்மிடம் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/204875
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு Published By: VISHNU 25 JAN, 2025 | 09:57 PM மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் அனைவரும் இன்று துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204892
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
'பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளியா?' - சிபிசிஐடி அறிக்கைக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு படக்குறிப்பு,வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது(கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், வேங்கைவயல் மக்களும் பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இதை ஏற்கவில்லை. அதே ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில், நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி, இதுதொடர்பான நிலை அறிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி வெளியான பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க. ஆகியவை சி.பி.சி.ஐ.டி. சொல்வதை ஏற்க முடியாது என்றும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரியுள்ளன. வேங்கைவயல் மக்களும் இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கின் பின்னணி என்ன? வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதியில் இருந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். இந்த விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் சர்சையான நிலையில், காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது. குடிநீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு வேங்கைவயல்: மலம் மாதிரியை டி.என்.ஏ. பரிசோதனை செய்வது குற்றவாளியை அடையாளம் காட்டுமா? தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்? கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதை சி.பி.சி.ஐ.டியின் துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்கத் தொடங்கியது. இந்தக் குழு பலரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டது. இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார். மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கு நடுவில் இந்த விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி 2023ஆம் ஆண்டில் வழக்கறிஞர்கள் கே. ராஜ்குமார், மார்க்ஸ் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இலங்கை: கலாசார மண்டபத்துக்கு 'திருவள்ளுவர்' பெயரை சூட்டியதால் சர்ச்சையா? - இந்தியா செய்தது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் அண்ணா நகர் போக்சோ வழக்கு: '15 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை அவள், இப்படியொரு நிலையா?' - கலங்கும் தாய்4 மணி நேரங்களுக்கு முன்னர் 3 பேர் மீது வழக்குப் பதிவு படக்குறிப்பு,(கோப்புப் படம்) இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமையன்று நீதிபதிகள் கே.ஆர். ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே. ரவீந்திரன், இந்த விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.சி.ஐ.டி. நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வேங்கைவயலைச் சேர்ந்த ஜே. முரளிராஜா (33), பி. சுதர்சன் (21), கே. முத்துகிருஷ்ணன் (23) ஆகியோர் மீது 277, 427, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள எஸ்.சி./எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 20ஆம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அப்போது மனுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் ஜி.எஸ். மணி காவல் துறை தெரிவித்துள்ள தகவல்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் சாதி குறிப்பிடப்படாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றமாக இதைக் காட்டாமல், உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவருக்கும் இந்த மூன்று பேருக்கும் இடையிலான பகையால் இந்த விவகாரம் நடந்ததைப் போலக் காட்ட காவல்துறை முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, குற்றவியல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தலையிட முடியாது என்றும், மனுதாரர் விரும்பினால், நிலை அறிக்கைக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, விரிவான மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென வழக்கறிஞர் மணி கோரினார். அதையடுத்து, வழக்கு மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்குள் இருவேறு தொல்லியல் காலகட்டங்கள் இருந்ததா? வரலாற்றில் சில காலகட்டங்கள் இல்லாதது ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் ராமர் கோயில் திறந்து ஓராண்டு நிறைவு - மாறி வரும் அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம்7 மணி நேரங்களுக்கு முன்னர் சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன? படக்குறிப்பு,இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது (கோப்புப் படம்) பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா என்பவருக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும் இடையிலான மோதலே, இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்றதாக சி.பி.சி.ஐ.டியின் நிலை அறிக்கை குறிப்பிடுகிறது. "வேங்கைவயலைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தன்னுடைய 6 வயது மகள் காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டதாக டிசம்பர் 24ஆம் தேதி புகார் அளித்தார். அந்த ஊரில் மேலும் நான்கு பேரும் இதேபோல பாதிக்கப்பட்டனர். டிசம்பர் 26ஆம் தேதி தங்களுக்கு வரும் தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாகச் சிலர் கூறினர். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியின் மீது ஏறிப் பார்த்தனர். அதில் மனிதக் கழிவுகள் இருந்ததைப் பார்த்த அவர்கள், அதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்," என்று அந்த நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 26ஆம் தேதி கனகராஜ் அளித்த புகாரின் பேரில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி 14ஆம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் பின்வரும் தகவல்கள் தெரியவந்ததாக நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு பஞ்சாயத்தின் தலைவரான எம். பத்மா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் ஆபரேட்டரான சண்முகத்தை வேலையிலிருந்து நீக்கினார். சண்முகத்திற்கு வேங்கைவயல்காரர்களின் ஆதரவு இருந்தது. பத்மாவின் கணவரான முத்தையாவிடம், சண்முகத்தை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும்படி வேங்கைவயல்காரர்கள் கோரியும் அந்த வேண்டுகோள் எடுபடவில்லை. அதுதவிர, தங்கள் ஊரின் குடிநீர்த் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாதது குறித்தும் வேங்கைவயல்காரர்களுக்கு அதிருப்தி இருந்தது." படக்குறிப்பு,வேங்கைவயலில் மலம் கலக்கட்ட குடிநீர்த் தொட்டி (கோப்புப் படம்) மேலும், "கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முத்தையாவுக்கும் தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜாவின் தந்தையான ஜீவானந்தத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்தையாவை பழிவாங்குவதற்காக குடிநீர்த் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரில் துர்நாற்றம் வருவதாகக் கூறிய முரளிராஜா, டிசம்பர் 26ஆம் தேதி முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரோடு குடிநீர் தொட்டியின் மீது ஏறினார். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்தக் குற்றத்தைச் செய்தனர்," என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, "இந்த வழக்கிற்கென உருவாக்கப்பட்ட புலனாய்வுக் குழு 397 சாட்சியங்களை விசாரித்தது. 196 பேரின் மொபைல் போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன், முத்தையா ஆகியோரின் போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த போன்களில் பல படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டு, ஆராய்ந்ததில் இந்த மூவரும் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இறையூர் ஐயனார் கோவிலுக்குள் வேங்கைவயல் மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் இறையூரில் உள்ள தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது. இந்த இரு விவகாரங்கள் தொடர்பாகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது" என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐடி. தாக்கல் செய்த நிலை அறிக்கை கூறுகிறது. நடிகர் பாலகிருஷ்ணா மேடையிலேயே நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் சர்ச்சை44 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்: சென்னை ஆடுகளம் யாருக்குச் சாதகம்? இரு அணிகளின் வியூகம் என்ன?25 ஜனவரி 2025 அரசியல் கட்சிகள் கண்டனம் படக்குறிப்பு,இப்போது வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது (கோப்புப் படம்) மாநிலத்தையே அதிரவைத்த இந்த விவகாரத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் என்று தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களே குற்றம் சாட்டப்பட்டிருப்பதற்கு வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், "பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "சி.பி.சி.ஐ.டி. சமர்ப்பித்திருக்கும் நிலை அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது" எனவும் கூறியிருக்கிறார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். "சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்குக் காரணம் என்பது சரியல்ல" எனத் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரியிருக்கிறார். தமிழ்நாட்டில் அரிசி விலை ரூ.8 குறைய வாய்ப்பு - நெல் உற்பத்தி குறைந்தும் அரிசி விலை உயராதது ஏன்?41 நிமிடங்களுக்கு முன்னர் 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 வேங்கைவயல் மக்கள் கடும் எதிர்ப்பு படக்குறிப்பு,வேங்கைவயலைச் சேர்ந்த முருகன் (கோப்புப் படம்) சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த நிலை அறிக்கையை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள் வேங்கைவயல் மக்கள். இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய வேங்கைவயலைச் சேர்ந்த முருகன், "இது மிக மிக மோசமான நடவடிக்கை. இதை எதிர்த்து உண்ணாவிரதத்தைத் துவங்கியிருக்கிறோம். தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். பல்வேறு அரசியல் கட்சிகளோடு இணைந்து போராடப் போகிறோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்" என்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். "எப்படி பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்க முடியும்? சில அரசியல் தலைவர்கள் ஊர்த் தலைவரின் கணவரான முத்தையாவுக்குச் சாதகமாக இருக்கிறார்கள். அதனால்தான் காவல்துறையும் இப்படி நடந்து கொள்கிறது. நாங்களே மலத்தை அள்ளிப்போட்டு, நாங்களே அந்தத் தண்ணீர் குடிப்போமா? இதுதவிர, நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டது முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் அல்ல, சதாசிவம் என்பவரும் ரத்தினசாமி என்பவரும்தான். முரளிராஜாவை குற்றவாளியாக்க ஜீவானந்தம் பெயரை இழுக்கிறார்கள்" என்கிறார் முருகன். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சண்டை போட்டதாக முருகன் குறிப்பிடும் சதாசிவத்திடம் கேட்டபோது, "அன்றைய கிராமசபைக் கூட்டத்திற்கு 12.15 மணியளவில் நான் போனேன். அதற்கு முன்பே அங்கே ஜீவானந்தம் வந்திருந்தார். ஆனால், அவர் எதுவுமே பேசவில்லை. அந்தக் கூட்டத்தில், வேங்கைவயல் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்பட்டதாக நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுத்தார்கள்." படக்குறிப்பு,வேங்கைவயலைச் சேர்ந்த சதாசிவம் (கோப்புப் படம்) "நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். எங்களுக்கு எப்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தீர்கள், அதற்கான ஆவணத்தைக் காட்டுங்கள் என்று கேட்டேன். கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார். அவரிடமும் போய், 'இதற்கான ஆதாரம் எங்கே என்று காட்டுங்கள். நீங்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறீர்களா?' எனக் கேட்டேன். அவர் எதுவும் பேசவில்லை. பிறகு எழுத்தர் வைத்திருந்த தீர்மான நோட்டைப் பிடுங்கினேன். உடனே தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து கூட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்" என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், "அப்போதும் ஜீவானந்தம் பேசாமல்தான் இருந்தார். நான்தான் அவரிடம் போய், நீ கூட்டத்திற்கு எனக்கு முன்பே வந்துவிட்டாயே, இதைக் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறாயே எனக் கேட்டேன். அதற்குள் மங்களத்து முருகையன், மொசக்குட்டி அஞ்சப்பன் ஆகிய இருவரும் தலைவரை காரில் அழைத்துச் சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் சிபிசிஐடியிடம் வாக்குமூலமாகக் கொடுத்தேன். இருந்தாலும் சிபிசிஐடி நாங்கள் சொன்னதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது" என்கிறார் சதாசிவம். இப்போது நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், முத்தையா தரப்பினரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முரளிராஜா, ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். இப்போது வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று போராட்டம் நடத்தவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm271zg74k2o
-
மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூடு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் 25 JAN, 2025 | 09:50 AM மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன்,பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் தொடர்ச்சியாக சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கடற் தொழிலாளி குறித்த கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204831
-
சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன?
பிகார்: சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,சிது திவாரி பதவி,பிபிசி செய்தியாளர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ. அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (SKMCH) நடந்த இந்த அறுவை சிகிச்சை விவாதப் பொருளாக மாறியுள்ளது. குழந்தையின் வயிற்றுக்குள் இவ்வளவு முடி எப்படிச் சென்றது என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்தது பிபிசி. தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் - கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா? 'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்? மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன? என்ன நடந்தது? ஜனவரி 18ஆம் தேதி, வயிற்று வலியால் அவதிப்பட்ட தங்கள் 9 வயது மகளை, ஒரு தம்பதி முசாபர்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர், சிறுமிக்கு மூன்று வயதிலிருந்தே தலைமுடியைப் பறித்துச் சாப்பிடும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. சிறுமியின் தந்தை பிபிசியிடம் கூறுகையில், "அவர் தனது தலையில் உள்ள முடியை பறித்துச் சாப்பிடுவார். அப்படிச் செய்யக்கூடாது என்று பலமுறை கூறியும் அவர் அதை நிறுத்தவில்லை," என்றார். பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி தனது தலைமுடியைச் சாப்பிடுவதை வாடிக்கையாகச் செய்துள்ளார். இதனால் சோர்ந்துபோன பெற்றோர், தங்கள் மகளுக்கு மொட்டையடித்து விடுவதாகவும் கூறினார். ஆனால், அந்தச் சிறுமிக்கு 15 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வயிற்று வலியைத் தாங்க முடியாமல் சிறுமி உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டார். அவர் எதையாவது சாப்பிட முயன்றால்கூட வாந்தி வரும் என்கிறார் அவரது தந்தை. அதைத் தொடர்ந்து, மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில் குடும்பத்தினர் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு வந்த நோயின் பின்னணி என்ன? முசாபர்பூர் மருத்துவக் கல்லூரியில் சிறுமி ப்ரீத்தி அனுமதிக்கப்பட்டபோது, அவரது ஹீமோகுளோபின் அளவு 5.2 மட்டுமே இருந்தது. ஜனவரி 21 அன்று மற்ற இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமார் ப்ரீத்திக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம்23 ஜனவரி 2025 வங்கதேசம்: சீனாவுடன் நெருக்கம், இந்தியாவுடன் மோசமடையும் உறவு: எதை உணர்த்துகிறது?23 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குழந்தையின் வயிறு முழுக்க முடி நிறைந்திருந்தது. "ப்ரீத்தி என்னிடம் வந்தபோது, அவரது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. வயிற்றைப் பார்த்தாலே உள்ளே ஒரு கட்டி இருப்பதை கண்டறிய முடிந்தது. முதலில் ரத்தம் ஏற்றி, அவரது உடல்நிலையை நிலைப்படுத்தினோம். பின்னர், சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடியை அவரது வயிற்றுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது" என்று பிபிசியிடம் விளக்கினார் அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமார். சிறுமியின் வயிறு முழுக்க முடியால் நிறைந்திருந்தது. இதனால் கடந்த 15 நாட்களாக திட உணவு சாப்பிட முடியாமல் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து வந்தார் ப்ரீத்தி. இப்படியான சூழ்நிலையில், தலைமுடியை உண்ணும் இந்த நோய் குறித்த கேள்வி எழுவது இயல்புதான். அதற்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் அசுதோஷ். "ப்ரீத்திக்கு டிரைக்கோட்டிலோமேனியா என்ற மனநோய் உள்ளது. அதன் விளைவாக அவருக்கு டிரைக்கோபெசோர் என்ற நோய் உருவானது. இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு வயிற்றில் முடி ஒன்றுகூடி, கொத்தாகச் சேர்ந்துகொள்ளும். அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படும்" என்று அவர் குறிப்பிட்டார். சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது?22 ஜனவரி 2025 வயதாக ஆக ஆரோக்கியம் கூடும் அதிசய மீனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?23 ஜனவரி 2025 ட்ரைக்கோட்டிலோமேனியா, ட்ரைக்கோபெசோர் மற்றும் பிகா என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டிரைகோட்டிலோமேனியா என்பது ஒரு மனநோய் என்று மருத்துவர் அசுதோஷ் குமார் கூறினார். இந்த நோயைப் பற்றி மேலும் அறிய, பாட்னா பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக உள்ள மருத்துவ உளவியலாளரான நிதி சிங்கிடம் பிபிசி பேசியது. அப்போது, "டிரைக்கோட்டிலோமேனியா என்பது ஒரு மனநோய். அதில் ஒரு நபர் தனது புருவம், தலை மற்றும் தோலில் உள்ள முடிகளைப் பிடுங்கி எறிந்துவிடுவார். ஆனால் அப்படிப் பிடுங்கப்படும் முடிகளைச் சிலர் சாப்பிடுகின்றனர். அந்தப் பழக்கத்தைத் தூண்டும் உளவியல் நிலைக்கு 'பிகா' என்று பெயர். இந்த உளவியல் சிக்கலில் உள்ள மனிதர்கள், முடி மற்றும் குப்பை போன்ற சாப்பிட முடியாத பொருட்களைக்கூட சாப்பிடுவர்," என்று நிதி சிங் இந்த நோய் குறித்து விளக்குகிறார். நிதி சிங்கின் கூற்றுப்படி, பிகா நோய் ஏற்பட மூன்று காரணங்கள் இருக்கலாம். முதலாவது காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி குறைபாடு. இரண்டாவதாக உண்ணும் பழக்கம்/கோளாறு பிகா நோயை ஏற்படுத்தலாம். மூன்றாவதாக கவலை, மனச்சோர்வு அல்லது ஏதேனும் தீவிரமான மனநோயின் தொடக்கமாக இருக்கலாம். இந்த மனநோய்களால் உருவாகும் மருத்துவ நிலை டிரைகோபெசோர் என்று அழைக்கப்படுகிறது. டிரைகோபெசோர் பற்றி மருத்துவர் அசுதோஷ் விவரித்தபோது, "முடி ஜீரணமாகாது. அது வயிற்றுப் பகுதியின் மேல் பரப்பில் ஒட்டிக்கொள்கிறது. ஒருவர் முடி உண்ணும் பழக்கத்தைத் தொடர்ந்தால், கொத்து போன்ற வடிவத்தில் அந்த முடி ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும். இதன் காரணமாக, ஒரு நபர் திட உணவை உண்ண முடியாமல் போவதால் டிரைகோபெசோர் கோளாறு ஏற்படுகிறது" என்று நோயின் தன்மைகளை எடுத்துரைத்தார். பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது?21 ஜனவரி 2025 அமெரிக்காவில் தடை அமலாவதற்கு முன்பே செயலிழந்த டிக்டாக் - என்ன நடந்தது?19 ஜனவரி 2025 தொலைதூர தீவில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் - ஏன்?19 ஜனவரி 2025 இதுபோன்ற பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிகள் முடி சாப்பிடுவதை நிறுத்தினால், அவர்களால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும். எத்தனை பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேட்டபோது, உளவியலாளர் நிதி சிங், பிகாவை விட டிரைக்கோட்டிலோமேனியாவின் பாதிப்புகள் அதிகம் என்று விளக்கினார். அதேவேளையில், "வளரும் நாடுகளில் பிகா நோய் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இதற்குக் காரணமாக உள்ளன." "ஆனால், அதன் காரணமாக ஏற்படும் மனநோய் சிக்கல்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது," என்று குறிப்பிடுகிறார் அவர். மேலும், வயது மற்றும் பாலின பாகுபாடின்றி இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். முசாபர்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் ப்ரீத்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவரது தையல் குணமாக ஒரு வாரம் ஆகும். ப்ரீத்தியின் தையல் குணமான பிறகு அடுத்தகட்ட சிகிச்சை முறை என்னவாக இருக்கும் என்று அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமாரிடம் கேட்டோம். "பிரீத்தி நடத்தை சிகிச்சைக்காக மனநல பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவார். இருப்பினும், இந்த விஷயத்தில், சிறுமியின் உடல் பலவீனமாக இருப்பதால், அவரது காயம் சரியாக குணமடைவதை உறுதி செய்வது மிகவும் அவசியம்" என்று விளக்குகிறார். இதே கேள்வியை, மருத்துவ உளவியலாளர் நிதி சிங்கிடம் கேட்டபோது, "அடுத்ததாக சிறுமிக்குத் தேவையான நடத்தை முறையைத் தூண்டுவதற்கு, நடத்தை மாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, சிறுமிக்கு உளவியல் மற்றும் ஊட்டச்சத்துப் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, அவருடைய பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார் நிதி சிங். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czrly6ln2mko
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
கையடக்க தொலைபேசிகள் / சாதனங்களுக்கான ஒப்புதல் சிம் ஒன்றைபவித்து தொலைத்தொடர்பு வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள எந்த வகையான கையடக்கத் தொலைபேசிகளையும்/ சாதனங்களையும் இறக்குமதி செய்வதற்கு/கொண்டு வருவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடமிருந்து (TRCSL) அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல் அவசியமானதாகும். தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கையடக்க தொலைபேசிகள் / சாதனங்கள் ஐந்து (5) அலகுகள் வரை மட்டுமே இறக்குமதி / தனிப்பட்ட பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். விண்ணப்பமானது பின்வரும் ஆவணங்களை இணைத்து பரிசீலனைக்காக TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். பெறுனரின் பெயர் மற்றும் இறக்குமதி செய்ய/விடுவிப்பு செய்யவுள்ள உபகரணங்களின் விபரங்களை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விலைப்பட்டியல் / தடுப்பு பற்றுச்சீட்டு (Detention Receipt) / விமான வழி பற்றுச்சீட்டு (Air way Bill) / பொருள் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு (Parcel Receipt) . மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களின் தொழில்நுட்ப விபரக்குறிப்பு (Specifications). தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர் சார்பில் வேறு யாரேனும் அனுமதியைப் பெற வேண்டுமாயின் அதிகாரமளித்தல் கடிதம் மற்றும் இருவரினதும் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டின் பிரதிகள். TRCSL இனால் செயல்முறைப்படுத்தப்படும் விண்ணப்பப் படிவம். இறக்குமதிசெய்ய/விடுவிக்க உத்தேசித்துள்ள உபகரணத்திற்காக கட்டணங்கள் ஏற்புடையதாயின் வரி விலைப்பட்டியல் TRCSL மூலம் விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கீகாரத்தை பெறுவதற்கு பணம் செலுத்தப்படவும் வேண்டும். மேலே 2 (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் விண்ணப்பதாரிக்கு பின்வரும் இரண்டு கடிதங்கள் வழங்கப்படும். ஏற்றுமதி மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம். சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதம். கையடக்க தொலைபேசிகள்/ சாதனங்களின் மொத்த இறக்குமதி TRCSL இனால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வியாபாரி உரிமம் இருக்க வேண்டும். இந்த வகையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் / சாதனங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. வகை ஒப்புதல் பெறுவதற்கான விவரங்கள் விண்ணப்பபடிவமானது பரிசீலனைக்காக பின்வரும் ஆவணங்களுடன் TRCSL க்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள உபகரணங்களின் விபரங்களைக் குறிக்கும் கோரிக்கைக் கடிதம் முன்மாதிரி விலைப்பட்டியல் (Pro-forma Invoice) (அசல் + 3 நகல்கள், அசல் சரிபார்பின் பின் மீளளிக்கப்படும்) வகை ஒப்புதல் இலக்கம் மற்றும் திகதி அல்லது வகை அனுமதி தொடர்பாக TRCSL ஆல் வழங்கப்பட்ட வேறு ஏதாவது ஆவணங்கள் (ஏற்புடையதாயின்) செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தின் நகல் பாதுகாப்பு அனுமதிக்காக (ஏற்புடையதாயின்) விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு (MOD) அனுப்பப்படும் வரி விலைவிவரப் பட்டியல் TRCSL இனால் தயாரிக்கப்பட்டு விண்ணப்பதாரிக்கு வழங்கப்படுகின்றது (கட்டணங்கள் ஏற்புடையதாக இருப்பின்) TRCSL விடயங்கள் 3(i) மற்றும் 3(ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு ஆட்சேபனை இல்லை கடிதத்தை அனுப்பி வைக்கும். கீழ்குறிப்பிடப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் TRCSL சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஆட்சேபனை இல்லை கடிதமொன்றை விண்ணப்பதாரருக்கு வழங்கும் . கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்ட அதிகாரமளித்தல் கடிதத்தின் பிரதி (இறக்குமதி உரிமம்) வணிக விலைப்பட்டியல் (அசல் +3 பிரதிகள், அசல் சரிபார்த்தத்தின் பின்னர் மீள்ளளிக்கப்டும் அல்லது LC இன் TT ஆல் பணம் அனுப்பப்பட்டது / பணம் செலுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வங்கியால் முறையாக சான்றளிக்கப்பட்ட வணிக விலைப்பட்டியலின் நகல்) கட்டுப்பாட்டாளர்/இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு முகவரியிடப்பட்ட TRCSL யால் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதி (மேலே 6 வது விடயம்) படிவ விலைவிவரப் பட்டியலின் பிரதி (மேலே உள்ள விடயம் 3(ii) ) கையடக்க தொலைபேசி /சாதனங்களின் IMEI எண்களை இணைப்பு 1 வடிவத்தில் trives@trc.gov.lk மின்னஞ்சல் செய்ய வேண்டும் மேலே 05 ஆம் விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைவிவரப் பட்டியலுக்கு முழுமையாக பணம் செலுத்துவதற்கான ஆதாரம் (ஏற்புடையதாயின்) கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் இறக்குமதி விடயத்தில் TRCSL குறிப்பு இலக்கமொன்றை வழங்குவதுடன் அது கையடக்கத் தொலைபேசியின்/ சாதனத்தின் பெட்டியில் வாடிக்கையாளர் குறிப்புக்கான (மாதிரி ஸ்டிக்கர்) ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்படும். வகை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவைகள் கையடக்க தொலைபேசிகள் கையடக்க தொலைபேசிகள் பற்றிய தகவல்கள் பதினைந்து இலக்க சர்வதேச கையடக்க உபகரண அடையாளம் (IMEI) என்பது பேட்டரியை அகற்றும்போது பொதுவாக உள்ளே காணப்படும் ஒவ்வொரு தொலைபேசிக்கும் வழங்கப்படும் தனித்துவமான எண் ஆகும். கையடக்க தொலைபேசியில் உள்ள கீபேடில் *#06# என உள்ளிடுவதன் மூலமும் இதை மொபைலின் திரையில் காண்பிக்க முடியும். வகை ஒதுக்கீடு குறியீடு (TAC) என்பது IMEI எண்ணின் முதல் எட்டு இலக்கங்கள் ஆகும், இது குறிப்பிட்ட சாதனத்தின் MARKETING பெயர் மற்றும் உற்பத்தியாளரை தனித்துவமாகக் குறிக்கிறது. மொபைல் தொலைபேசியின் IMEI எண்ணை பின்வரும் வடிவத்தில் 1909 க்கு SMS அனுப்புவதன் மூலம் சரிபார்க்கலாம். IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI எண் அனைத்து கையடக்க தொலைபேசி விற்பனையாளர்களும் TRCSL ஆல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விற்பனையாளர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் விற்பனை நிலையங்களில் உரிமம் காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்/ சாதனங்கள் TRCSL இணையத்தளத்தில் காணப்படுகின்றன www.trc.gov.lk மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க: எஸ்.பி.புலத்கம உதவிப் பணிப்பாளர் (ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவம் / IT) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுஇல No. 276, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 08 Extension : +94 112689345 (Ext: 4105) E-mail : bulathgama@trc.gov.lk https://www.trc.gov.lk/pages_t.php?id=63 28 ற்கு பின்பு வெளிநாட்டில் இருந்து Mobile phones கொண்டுவரும் நடைமுறை !! TRCSL approved check
-
குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை
வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய புள்ளி 188 Published By: DIGITAL DESK 3 24 JAN, 2025 | 03:28 PM (எம்.மனோசித்ரா) புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஒரேயொரு பரீட்சாத்தி 188 என்ற அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளார். 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். 77.96 சதவீதமான மாணவர்கள் 70க்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 37.70 சதவீதமானோர் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு 45 சதவீதமான மாணவர்கள் நூறுக்கும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தனர். அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 18 மாணவர்களில் 11 மாணவர்களும், 7 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் 140 மாணவர்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 76 பேரும், 64 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். 51,244 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 15.02 சதவீதமானவர்கள் ஆண் மாணவர்களாவர். 17.10 சதவீதமானோர் மாணவிகளாவர். வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் சப்ரகமுவ மாகாணம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் மாகாணம் இரண்டாவது இடத்தையும், ஊவா மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இரத்தினபுரி, குருணாகல், யாழ்ப்பாணம், மொனராகலை, கேகாலை, பதுளை, மாத்தறை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பான பெயர் பட்டியலை வெளியிடுவதில்லை என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் 188 என்ற அதிகூடிய புள்ளியை ஒருவர் பெற்றுள்ளார். வெளியானதாகக் கூறப்பட்ட 3 வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்ட போதிலும், அதன் மூலம் அதிக கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் பலன் பெறவில்லை. காரணம் அவர்கள் குறித்த மூன்று வினாக்களுக்கும் சரியான பதில்களையே அளித்திருந்தனர். எனவே 3 புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தால் பாரிய பாதிப்புக்கள் எவையும் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/204785
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES 54 நிமிடங்களுக்கு முன்னர் எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது. ''புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது, அந்த கையடக்கத் தொலைபேசி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாததாக இருந்தால், அந்த தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று கிடைக்கப் பெறும்." ''இந்த குறுந்தகவல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அதனால், கையடக்கத் தொலைபேசிகள் சட்டரீதியானதாகக் காணப்படுகின்றமையானது, பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்" என அவர் கூறுகிறார். 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம் இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா? பரிசாக கிடைக்கும் செல்போன்களை என்ன செய்வது? நாட்டிலுள்ள நபர் ஒருவருக்கு பரிசாக அல்லது வெளிநாட்டிலிருந்து மீண்டும் வருகை தரும் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்தல் அத்தியாவசியமானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கின்றார். ''இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்குப் பரிசு வழங்குவதற்கு அல்லது தமது பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகளை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் இருக்குமானால் அந்த கையடக்கத் தொலைபேசியை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்துகொள்ள முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்த்தகர்கள் தமது வர்த்தக அபிலாஷைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது?22 ஜனவரி 2025 இலங்கை ஜனாதிபதியின் சீன பயணத்தை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா - என்ன காரணம்?15 ஜனவரி 2025 இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சட்டம் அமலாகுமா? படக்குறிப்பு, நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன என்கிறார் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தமது தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளைப் பதிவு செய்ய வேண்டுமா என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் வினவினோம். ''இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்." ''அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சிம் அட்டையானது, வெளிநாட்டு பிரஜை நாட்டைவிட்டு வெளியேறும்போது பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வெளிநாட்டு பிரஜை தனது தொலைபேசியை இலங்கையிலுள்ள ஒருவருக்கு பரிசாக வழங்குவாராக இருந்தால், அவர் புதிய சிம் அட்டையை உட்செலுத்த வேண்டும். அப்போது அந்த தொலைபேசிக்கு பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி என்ற குறுந்தகவல் கிடைக்கும். தொலைபேசியை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படும்" என்று அவர் குறிப்பிடுகின்றார். புகைப் பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடத் தோன்றுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் 'நம்புவது கடினம்': 6 வயதிலேயே பருவமடையும் பெண்கள் - என்ன காரணம்?24 ஜனவரி 2025 குறைந்த விலையில் செல்போன்களை வாங்க முடியாதா? இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்களை விடவும், பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்கள் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்து வருவதை சந்தையில் காண முடிகின்றது. இந்த நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரும்போது முன்னெடுக்கப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் காரணமாக, மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இல்லாது போகுமா என அவரிடம் வினவினோம். ''குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இந்தப் புதிய நடைமுறையின் ஊடாக இல்லாது போகின்றது எனச் சிலரால் கூற முடியும். எனினும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்து இன்றும் அதிக விலையில் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன." வயதாக ஆக ஆரோக்கியம் கூடும் அதிசய மீனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?23 ஜனவரி 2025 'புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க விருப்பமா?' - நேபாளத்தில் வெற்றிக்கதையே ஆபத்தாக மாறியது எப்படி?21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ''எனினும், நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் பதிவு செய்து, பயன்பாட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாங்கள் முயல்கின்றோம்.' ''ஒரே ரகமான கையடக்கத் தொலைபேசிகள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை நாங்கள் காண்கின்றோம். குளிரூட்டப்பட்ட விற்பனை நிலைகளிலும், சாதாரண விற்பனை நிலையங்களிலும் இரண்டு விதமான விலைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்படும். விற்பனையாளர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற போட்டித் தன்மை காரணமாக, பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்." ''பாரியளவிலான கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் அதிகளவான லாபம் ஈட்டுகின்றன. பாரியளவிலான தொலைபேசிகளை இறக்குமதி செய்யும்போது கிடைக்கின்ற சலுகைகளின் பிரகாரம் அதிக லாபத்தைப் பெறுகின்றனர். எனினும், அந்தச் சலுகை பொது மக்களுக்கு கிடைப்பதில்லை" என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgxly20edvo
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள்! Published By: DIGITAL DESK 7 24 JAN, 2025 | 03:00 PM மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய் விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய் மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து - மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/204781
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை - பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் 24 JAN, 2025 | 03:58 PM நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லைஎன வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. https://www.virakesari.lk/article/204796
-
மதுரை: 'புதைக்க சுடுகாடுகூட இல்லை' - விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து போராடும் மக்கள்
கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "தங்கள் விளைநிலங்களில் இருந்து வெளியேற மாட்டோம்" எனக் கூறி 50 நாட்களைக் கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள், மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை போல சின்ன உடைப்பு கிராம மக்களும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 2009ஆம் ஆண்டு 633 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியது. நிலத்தை இழந்த மக்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அரசு இழப்பீடு வழங்கிவிட்டது. ஆனாலும், மக்களின் போராட்டம் தொடர்வது ஏன்? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சின்ன உடைப்பு கிராமம் அமைந்துள்ளது. சுற்றிலும் விவசாய நிலங்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமத்தின் பல இடங்களில் விமான நிலைய ஆணையத்தால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர்கள் தென்படுகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் விவசாயமே பிரதானத் தொழில். விமான நிலைய விரிவாக்கத்துக்காக சின்ன உடைப்பு, பெருங்குடி, குயவன் குன்று, பாப்பானோடை உள்பட ஆறு கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள 633 ஏக்கரில் 462 ஏக்கர் பட்டா நிலமாகவும் மற்றவை நீர்நிலை உள்பட புறம்போக்கு நிலங்களாகவும் உள்ளதாகக் கூறுகிறார், மதுரை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன். இவற்றில் சுமார் 300 ஏக்கர் நிலம், சின்ன உடைப்பு கிராம எல்லைக்குள் வருகிறது. இந்தத் திட்டத்தால் தங்கள் கிராமத்துக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், இதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மதுரை வீரன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2009ஆம் ஆண்டில் நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், 2018ஆம் ஆண்டு வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அவனியாபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த சின்ன உடைப்பு கிராமம், தற்போது மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிட்டது. தற்போது நிலத்தின் மதிப்பும் கூடிவிட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை என்பது மிக சொற்பமாக உள்ளது," என்கிறார் அவர். இந்தப் பணத்தை வாங்கவில்லையென்றால் வங்கியில் டெபாசிட் செய்துவிடுவதாக அதிகாரிகள் கூறியதால் மக்கள் பயந்து போய் பணத்தை வாங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் மக்களில் சுமார் 80 சதவீதம் பேர் மாநில அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டனர். இதர 20 சதவீதம் பேர் இழப்பீட்டை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் - கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா? ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்? மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன? தெலங்கானாவில் அதிர்ச்சி: மனைவியைக் கொன்று குக்கரில் வேக வைத்ததாக கணவர் கைது போராட்டம் நீடிப்பது ஏன்? தொடக்கத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்த சின்ன உடைப்பு மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும் மாற்று இடத்தில் தங்களைக் குடியமர்த்தும் வரை தங்களை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் மனு அளித்துள்ளனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் ஒன்றரை சென்ட் நிலம் தருவதாக முடிவானது. ஆனால், "ஆடு, மாடுகளுடன் தாங்கள் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டதால், குறைந்தது இரண்டு சென்ட் நிலம் வேண்டும்" என சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்பதால், போராட்டமும் தீவிரம் அடைந்ததாக கூறுகிறார் வழக்கறிஞர் மதுரை வீரன். பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - ஒருவருக்கு முடியை சாப்பிடும் மனநோய் ஏற்படுவது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 பதற்றம் - போலீஸ் குவிப்பு படக்குறிப்பு, சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுரை வீரன் "கடந்த நவம்பர் மாதம் மதுரை விமான நிலையத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வந்திருந்தார். அவரிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவை அமைச்சர் மூர்த்தியிடம் உதயநிதி கொடுத்தார். பின்னர் அமைச்சர் மூர்த்தியை ஊர் மக்கள் சந்தித்தபோது, 'பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அவகாசம் கொடுக்கிறேன்' எனக் கூறினார். ஆனால், இரண்டே நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் குவிந்துவிட்டனர். அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தினோம்" என்றார் வழக்கறிஞர் மதுரை வீரன். கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடந்த இந்தப் போராட்டத்தால் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாற்றும் இடம் கொடுக்காமல் காலி செய்வதற்கு முயன்றதாகக் குற்றம் சாட்டிய சிலர், ஊரின் நடுவே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறிக்கொண்டு, அதிகாரிகள் ஊரை விட்டு வெளியேறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தனர். இதன்பிறகு வீடுகளைக் காலி செய்வதற்குப் போதிய அவகாசம் கொடுக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். ஆனால், 'எப்போது வேண்டுமானாலும் தங்கள் வீடுகள் இடிக்கப்படலாம்' என்பதால் ஊரின் நுழைவாயிலில் சமைத்துச் சாப்பிட்டு தினந்தோறும் இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். "எங்கள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை" எனக் கூறுகிறார் சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிராணி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு வசிக்கும் சுமார் 300 குடும்பங்களும் அமைதியான முறையில், மூன்று மாதங்களாகப் போராடி வருகிறோம். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. நிலத்துக்கு இழப்பீடாக பணம் வாங்கிய பிறகு எதற்காகப் போராடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். அதற்கு மாறாக, எங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலத்திற்கு ஈடாக நிலத்தையும் வீட்டையும் அரசு ஒதுக்கித் தரவேண்டும்" என்றார். 'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்?8 மணி நேரங்களுக்கு முன்னர் 'திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டேனா?' - பாஜக எழுப்பிய புகாருக்கு நவாஸ்கனி எம்.பி கூறிய பதில் என்ன?24 ஜனவரி 2025 'புதைப்பதற்கு சுடுகாடு இல்லை' படக்குறிப்பு, தங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்துக்குப் பதிலாக வீடும் நிலமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் சின்ன உடைப்பு மக்கள் நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தி எல்லைகளை வகுத்துக் கொடுத்த பிறகு மதுரை விமான நிலைய ஆணைய நிர்வாகத்தால் சின்ன உடைப்பு கிராமத்தில் சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சுமார் 50 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால், விளைநிலங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வெளியேற மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருவதால் அதிகாரிகளால் கிராமத்துக்குள் நுழைய முடியவில்லை. மக்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். "விவசாயம்தான் எங்களுக்குச் சாப்பாடு போடுகிறது. இதையும் பறித்துவிட்டால் எங்கே போவது?" எனக் கேள்வி எழுப்பினார் சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் சுமித்ரா. அதோடு, "விமான நிலைய விரிவாக்கத்தில் எங்கள் முன்னோர்களைப் புதைத்த மயானமும் வருகிறது. அதுவும் பறிபோய்விட்டால் எங்களுக்கென்று எந்த அடையாளமும் இல்லை. நாங்கள் செத்தால் புதைப்பதற்குக்கூட இடமில்லை" என்கிறார் அவர். தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலமும் பறிபோக உள்ளதாகக் கூறும் ராமுத்தாய், "என் நிலத்தில் கொத்தவரங்காய், தட்டைப்பயறு, பூச்செடிகள் பயிரிட்டு வாழ்ந்து வருகிறோம். இந்தப் பிரச்னையால் நிம்மதியே போய்விட்டது" எனக் கூறினார். ரஷ்யாவுக்கு 'அன்பு' கலந்த எச்சரிக்கை விடுத்த டிரம்ப் - யுக்ரேன் எதிர்பார்ப்பது என்ன?23 ஜனவரி 2025 கேரளா: காதலனுக்கு விஷம் கொடுத்த காதலிக்கு, டிஜிட்டல் 'ஆதாரங்கள்' மரண தண்டனை பெற்று தந்தது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சமா? படக்குறிப்பு, முன்னோர்களைப் புதைத்த மயானமும் பறிபோனால், புதைப்பதற்குக்கூட இடமில்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர். சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் மதிமுக-வை சேர்ந்தவருமான முத்துலட்சுமி அய்யனாரின் வீடும், விமான நிலைய விரிவாக்கத்தால் பறிபோக உள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தத் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் இருந்தது. அதை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எடுத்துவிட்டனர். இதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் கடன்களை அடைத்துவிட்டோம். இப்போது பிழைப்புக்காக நாங்கள் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட உள்ளது" எனக் கூறினார். அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "இழப்பீட்டுத் தொகையை கையெழுத்துப் போட்டு வாங்கியது தவறு" எனக் கூறியதாக முத்துலட்சுமி குறிப்பிட்டார். மேலும், அரசின் இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், வழக்கறிஞர் மதுரை வீரன். "நிலத்துக்கு இழப்பீடாக சதுர அடிக்கு 68 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். ஒரு சென்ட்டுக்கு அதிகபட்சமாக 29,649 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009ஆம் ஆண்டு மதிப்பீடு. சில இடங்களில் சென்டுக்கு 900 ரூபாயை நிர்ணயித்துக் கொடுத்துள்ளனர்" என்றார். மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சூரிய மீன் - மீண்டும் புத்துணர்வு பெற வைத்த விநோத யோசனை24 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்ததா? ஸ்டாலின் கூறியது என்ன?23 ஜனவரி 2025 நீதிமன்றத்தில் வழக்கு படக்குறிப்பு, நிலங்களை இழந்த விவசாயிகள் தற்போது கூலி வேலைகளுக்குச் சென்று வருவதாகத் தெரிவிக்கின்றனர் சின்ன உடைப்பு பொதுமக்கள் இதற்கிடையில், மறுகுடியமர்வு மற்றும் கூடுதல் இழப்பீடு தொகையை வழங்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சின்ன உடைப்பு மக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மனுவில், 'தொழில்துறையின் தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால், தொழில்துறை சட்டப்படி மாநில அரசு நோட்டீஸ் கொடுக்கவில்லை. இங்கு ஒரு கிராமத்துக்கே மறுகுடியமர்வு தேவைப்படுகிறது. எனவே, நிலத்தை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்வும் போதிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "முறையாக நோட்டீஸ் வழங்கிய பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்றும் அதுவரை எந்த நடவடிக்கைகையும் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார். இதன்பிறகு, நிலங்களை காலி செய்யுமாறு சின்ன உடைப்பு மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகித்துள்ளனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், "அம்மக்களுக்கு முழுமையான வசதிகளை செய்து கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்" எனக் கூறி உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக நிலங்களில் சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணியும் வருவாய்த்துறை அதிகாரிகளின் நில அளவைப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 'நம்புவது கடினம்': 6 வயதிலேயே பருவமடையும் பெண்கள் - என்ன காரணம்?24 ஜனவரி 2025 பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம்23 ஜனவரி 2025 நில எடுப்பு தாசில்தார் சொல்வது என்ன? படக்குறிப்பு, மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக பலரின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டம் தொடர்பாக, மதுரை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் பிரபாகரனை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது. "வருவாய்த்துறை கணக்கின்படி அங்கு 63 வீடுகள் மட்டுமே உள்ளன. கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் நான்கைந்து பேர் வசித்து வருவதால் 300 வீடுகள் வரையில் வேண்டும் எனக் கூறுகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விரைவில் முடிவு கிடைத்துவிடும்" என்றார். தொடர்ந்து பேசிய பிரபாகரன், "1997ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்தைக் கையகப்படுத்தினோம். ஆனால், அப்பகுதி மக்கள் 2013ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின்படி (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabiliation and Resettlement Act) இழப்பீடு கேட்கின்றனர்" எனக் கூறினார். இதன் காரணமாகவே சிக்கல் நீடிப்பதாகக் கூறும் பிரபாகரன், நிலத்தைக் கையகப்படுத்திய காலத்தில் என்ன மதிப்பு இருந்ததோ அதன்படியே அப்பகுதி இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார். "அரசுக்கு நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை சுமார் 170 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சுமார் 30 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது" என்கிறார். குஜராத்: வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அரசு - 'சட்டவிரோத வீடுகள் என்றால் ஏன் மின்சார, தண்ணீர் இணைப்பு கொடுத்தீர்கள்?' என கேட்கும் மக்கள்22 ஜனவரி 2025 சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது?22 ஜனவரி 2025 மதுரை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிலத்தைக் கையகப்படுத்திய காலத்தில் என்ன மதிப்பு இருந்ததோ அதன்படியே இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "சின்ன உடைப்பு கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு அவர்கள் கேட்கின்றனர். இழப்பீடு கொடுக்கப்பட்ட பிறகு மாற்று இடம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறினார். ஆனாலும், அவர்களுக்கு மதுரை புறநகரில் நிலம் கொடுக்க உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியும் மாநகராட்சி எல்லைக்குள் தங்களுக்கு நிலம் வேண்டும் என அவர்கள் கேட்பதாகவும் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆடு, மாடுகள் மற்றும் விவசாய நிலங்களுடன் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை கிராமத்தில் இருந்து அகற்றுவதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை. சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் 80 சதவீத மக்கள் இழப்பீட்டைப் பெற்றுவிட்ட காரணத்தால், மறுகுடியமர்வு செய்யாமல் தங்களை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கையுடன் போராடி வருகின்றனர். அரசின் இழப்பீட்டைப் பெறாத மக்களோ, "தங்கள் விளைநிலங்களில் இருந்து தங்களை அப்புறப்படுத்தக் கூடாது" எனக் கூறி சின்ன உடைப்பு கிராம மக்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகே விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர், வருவாய்த் துறை அதிகாரிகள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crm7vvp0nzro
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஊழியர் சங்கமும் ஆதரவு!
Published By: VISHNU 24 JAN, 2025 | 08:47 PM மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு அறிக்கை ஒன்றின் மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக மாணவர்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள். பல்கலைக் கழகங்கள் எமது சமுதாயத்தின் நீண்ட கால வளர்ச்சியினை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். இருப்பினும் அண்மைக் காலங்களில் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு மிக்கவர்களாகவும், வினைத்திறன் உள்ளவர்களாகவும் மாணவர்களை வலுப்படுத்துவதில் பல்கலைக் கழகங்கள் பின் தங்கிவிட்டதாக எமது சமுதாயத்தில் கருத்து நிலவி வருகின்றது. எமது பல்கலைக்கழகம் எப்பொழுதும் மாணவர்கள் நலன் சார்ந்தே தனது தீர்மானங்களை எடுத்து வருகின்றது என்பது வரலாறு இனியும் அது தொடர வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 24/01/2025 வெள்ளிக்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தமாகச் செயற்படுவது எமக்கு வேதனையை தருகின்றது. எனவே மாணவர்களின் சாத்வீக முறையான இப்போராட்டம் வெற்றி பெற அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன், உரிய சட்டதிட்டங்களுக்கமைய, நீதியாக, காலந்தாழ்த்தாது விரைவில் தீர்த்துவைக்குமாறும் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக ஊழியர் சங்கமாகிய நாமும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது https://www.virakesari.lk/article/204819
-
Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்? பட மூலாதாரம்,NISHANTH RAVI கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை பங்குனி ஆமைகள் அல்லது ஆலிவ் ரிட்லி என்ற ஆமை இனங்கள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வருகின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள நீரில் இனப்பெருக்கம் செய்யும் இந்த ஆமைகள், முட்டைகளை இடுவதற்காக கடற்கரைக்கு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கிட்டத்தட்ட 350 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு இந்த ஆமைகள், கடற்கரையை நோக்கி வரும்போது மரணங்கள் நிகழ்வது உண்டு. ஆனால், இந்தாண்டு இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் தான் (trawl boats) இந்த இறப்புக்குக் காரணம் என்று கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள். விசைப்படகுகளில் உள்ள மோட்டர்களில் சிக்கி இந்த ஆமைகள் உயிரிழக்கும் வாய்ப்புகள் உண்டு என்றும் அவர்கள் கூறுகின்றனர். உள்ளூரில், நாட்டுப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், "இந்த ஆமைகள் எங்கோ இறந்திருக்கலாம். சென்னையை ஒட்டியுள்ள கடற்கரையில் கரை ஒதுங்குவதால் மீனவ சமுதாயம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறக்கூடாது" என்கின்றனர். வனத்துறையினர், இழுவை வகை படகுகள் பயன்படுத்துவது குறித்து மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர். ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறக்கக் காரணம் என்ன? வனத்துறை அளிக்கும் பதில் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்? பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே கொடுக்கும் ஆண் - பூச்சிகள், பறவைகளில் என்ன நடக்கிறது? புலிகளை செல்லப் பிராணியாகக் கொடுக்க இந்த நாட்டின் பிரதமர் பரிந்துரைப்பது ஏன்? பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர் இந்தாண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. எவ்வளவு ஆமைகள் உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வனத்துறை தெரிவிக்கவில்லை. இருப்பினும், தமிழக வனத்துறையோடு இணைந்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்டு வரும் வன ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர் நிஷாந்த் ரவி, இதன் எண்ணிக்கை முந்நூற்றுக்கும் அதிகம் என்று குறிப்பிடுகிறார். "சென்னையில், மெரினா முதல் நீலாங்கரை வரையிலான பகுதிகளில் குறைந்தது 350 ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவை தவிர்த்து கோவளம் உள்ளிட்ட பகுதிகளை கணக்கிடும்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக உள்ளது. 800 ஆமைகள் இறந்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார். எனினும், அவருடைய இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை. ஆமைகளின் இறப்புக்கான காரணம் என்ன என்று சென்னை வனத்துறை கண்காணிப்பாளர் மணீஷ் மீனாவிடம் கேட்டபோது, "இறந்த உடல்களை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் என்ன என்பதை கூற இயலும்," என்று தெரிவித்தார். அளவுக்கு அதிகமாக ஆமைகள் கரை ஒதுங்கியதால், ஜனவரி 17 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டலம், இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. மீண்டும் ஜன. 22 அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகானந்தன், ஆமைகளுக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது என்றும் ஆமைகளின் இறப்புக்குக் காரணம் ஆமைகளின் உடலின் முன்பாகத்தில் ஏற்பட்ட காயங்களும், அதிர்ச்சியும் தான் என்று குறிப்பிட்டதாக, 'டிடி நெக்ஸ்ட்' (DT Next) நாளிதழ் செய்தி கூறுகிறது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை கண்காணிக்கத் தவறினால், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்கக் காலத்தில் ட்ராலர் வகை படகுகளுக்குத் தடை விதிக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலம். நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணர் சத்யகோபால் கொர்லாபட்டி அடங்கிய அமர்வு இந்த வழக்கை 22-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தது. அப்போது, ஆமைகள் கொல்லப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தீர்ப்பாயத்தில் சமர்ப்க்க உத்தரவு பிறப்பித்தது அந்த அமர்வு. மேலும் டி.இ.டி. (turtle excluder devices) என்று அழைக்கப்படும் கருவிகள் இந்த படகுகளில் பொருத்தப்படுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 350க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழப்பு புலிகளை செல்லப் பிராணியாகக் கொடுக்க இந்த நாட்டின் பிரதமர் பரிந்துரைப்பது ஏன்?21 ஜனவரி 2025 கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளி 'சஞ்சய் ராய்க்கு' ஆயுள் தண்டனை20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,NISHANTH RAVI படக்குறிப்பு, சென்னையில், மெரினா முதல் நீலாங்கரை வரையிலான பகுதிகளில் குறைந்தது 350 ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன இழுவை படகுகள் தான் காரணமா? தமிழகத்தில், ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தன்னார்வல அமைப்பில் தன்னுடைய பங்களிப்பை அளித்து வருகிறார் நிஷாந்த். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.எஸ்.டி.சி.என் என்ற தன்னார்வல அமைப்பு, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் இந்த ஆமைகளை பாதுகாப்பதன் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. "கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து இந்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். வனத்துறை சார்பில் நான் மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறேன். ட்ரோலர் வகை படகுகளை பயன்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றாமல் மீன் பிடிப்பதே இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணம்," என்று குறிப்பிடுகிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இறப்பை குறைக்க ஆமைகளின் இனப்பெருக்கக் காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில், ஐந்து நாட்டிக்கல் மைலுக்குள் இயந்திரப் படகுகள் செயல்பட தடை விதித்து, நிலையான இயக்க முறைமை (SOP), 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "பொதுவாக ஆலிவ் ரிட்லி ஆமைகள், சுவாசிப்பதற்காக ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வரும். ஆனால், ட்ரோலர் கப்பல்களில் இருந்து வீசப்படும் வலைகளில் இது சிக்கிக் கொள்ளும்போது, அதனால் சுவாசிக்க இயலாது. மூச்சடைப்பு ஏற்பட்டு அந்த வலைக்குள்ளேயே ஆமைகள் இறந்து விடுகின்றன. அந்த வலையை மேலே எடுத்து பார்க்கும்போது தான் அந்த வலைக்குள் ஆமைகள் இறந்து கிடப்பதே தெரியும். அதனை எடுத்து அவர்கள் கடலில் போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஐந்தாறு நாட்களில் அவை கரை ஒதுங்குகின்றன,"என்று விளக்குகிறார் அவர். "ஆலிவ் ரிட்லி ஆமைகள் தங்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முதல் ஐந்து நாட்டிக்கல் மைல்களில் மேற்கொள்கின்றன. ட்ரோலர் படகுகளை ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இதனை பல ட்ரோலர் படகு உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை," என்று கூறுகிறார் நிஷாந்த். "ஐந்து மைல்களுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றால் அதற்கான எரிபொருள் அதிகம். அங்கு சென்று அவர்களுக்கு வருவாயை ஈட்டும் வகையில் மீன்கள் கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இருக்கும் பகுதிகளில் மீன்பிடிக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்," என்று கூறுகிறார் நிஷாந்த். பாகிஸ்தானில் அதிக அளவில் தங்கம் கிடைப்பதாக கூறப்படுவது உண்மையா?21 ஜனவரி 2025 காஸாவில் அமைதி: பிரிந்த சொந்தங்கள் மீண்டும் சேர்ந்த உணர்ச்சிமிகு தருணங்கள்20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோலர் படகுகளை ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது ட்ரால் படகு உரிமையாளரும், சென்னை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ரகுபதி இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசினார். "இழுவை வலைகளில் விழும் கடல் உயிரினங்கள் பற்றி யாருக்குமே தெரியாது. ஒருமுறை வலையை கப்பலில் ஏற்றினால் தான் அதில் என்ன மீன்கள் சிக்கியிருக்கும் என்பதே தெரியும். யாரும் வேண்டுமென்றே ஆமைகளை பிடிப்பதில்லை," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், இது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கப்பல்கள் என்றும், ஆமைகளை மட்டுமே கருத்தில் கொண்டால் இங்கு பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற தகவல்களையும் பகிர்ந்தார். "நான் 70-களில் இருந்து மீன் பிடிக்க செல்கிறேன். அன்று 6 மணிநேரத்தில் மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவோம். இன்று காலநிலை மாற்றம், கடல் நீர் அசுத்தம், மீன்களின் எண்ணிக்கை குறைவு போன்றவை காரணமாக 20 நாட்களுக்கு நாங்கள் கடலில் இருக்கும் நிலை ஏற்படுகிறது," என்று கூறினார். படக்குறிப்பு, மீனவர்கள், ஒவ்வொரு காலத்திலும் எந்தெந்த இடங்களில் எந்தெந்த வகை மீன்கள் வரும் என்ற அனுபவ அறிவுடன் தான் மீன்பிடிக்க செல்வதாக கூறுகிறார் ரகுபதி ரகுபதி மேற்கொண்டு பேசுகையில், "அரசாங்கம் நினைத்தால் இந்த ஆமைகளின் ஓட்டம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு அளிக்க இயலும். ஆனால் அதனை செய்யவில்லை. அதற்கு மாறாக அனைத்து மீனவர்களையும் ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன் பிடிக்க கூறுவது சரியான தீர்வாகாது," என்றார். மீனவர்கள், ஒவ்வொரு காலத்திலும் எந்தெந்த இடங்களில் எந்தெந்த வகை மீன்கள் வரும் என்ற அனுபவ அறிவுடன் தான் மீன்பிடிக்க செல்வதாக அவர் கூறுகிறார். "அரசு இந்த ஆமைகளை பாதுகாப்பதற்கு முன்பில் இருந்தே இந்த ஆமைகளை நாங்கள் பார்த்து வருகின்றோம். பாதுகாத்தும் வருகின்றோம். ஆமைகள் வலையில் ஏறினால், அதற்கு தேவையான முதலுதவிகளை அளித்து கடலுக்குள் விடுகிறோம். ஆமையை இங்கே தெய்வமாக வணங்கும் போக்கும் இருக்கிறது. மீனவர்களை மட்டுமே குற்றவாளிகள் போல் சித்தகரிக்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார். மீனவர்கள் கூறுவது என்ன? ஆமைகளின் இறப்பு குறித்து பெசண்ட் நகரில் உள்ள மீனவ சமுதாயத்தை சேர்ந்த பாளையத்திடம் பேசியது பிபிசி தமிழ். "இங்கு காலநிலை மாறி வருகிறது என்பதையும், போதுமான மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் அவதியுறுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பொதுவாக நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் கைவலையில் ஆமைகள் சிக்கினால் நாங்கள் வலையை அறுத்து அந்த உயிரை பிழைக்கவிட்டுவிடுவோம். அன்று எங்களுக்கு வருமானமே கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் இதனைத் தான் செய்கிறோம். நாங்கள் இங்கு ஆமைகளை 'குட்டியம்மா' என்ற தெய்வமாக வழிபடுகிறோம். எங்கோ இறந்து போய் சென்னை கடற்கரையில் ஆமைகள் கரை ஒதுங்கினால் அதற்கு சென்னையில் வாழும் மீனவர்கள் தான் காரணம் என்று பொதுப்படையாக கூறுவது, அந்த சமூகம் ஆமைகள் மீது வைத்திருக்கும் மரியாதையை அவமதிக்கும் செயலாகும்," என்று கூறுகிறார். ஆமைகள் அசுத்தமான இடங்களில் முட்டையிடுவதில்லை, பாதுகாப்பான சூழல் இல்லை என்று தெரிந்துவிட்டால் முட்டைபோட வரும் ஆமைகள் திரும்பி நீருக்குள் சென்றுவிடுகின்றன என்று அவர் கூறினார். "சென்னையில் உள்ள பெரும்பாலான கடற்கரைகள் அசுத்தமாக, குப்பைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இதனை யார் சரி செய்வது? இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை," என்றும் அவர் தெரிவித்தார். ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்?19 ஜனவரி 2025 உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா?17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எங்கோ இறந்து போய் சென்னையில் ஆமைகள் கரை ஒதுங்கினால் அதற்கு சென்னை மீனவர்கள் தான் காரணம் என்று பொதுவாக குற்றம்சாட்ட வேண்டாம்" என மீனவர் பாளையம் கூறுகிறார் தடுக்க என்ன வழி? "ட்ரோலர் வகை படகுகளை இயக்கும் மீனவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை கொடுத்து வருகின்றோம். அவர்களுக்கு மட்டுமின்றி விசைப்படகு மீனவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோ" என்று கூறினார் வனத்துறை கண்காணிப்பாளர் மணீஷ் மீனா. இதுதொடர்பாக மேற்கொண்டு பேசிய நிஷாந்த், இங்கே போதுமான கண்காணிப்பு அம்சங்கள் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடுகிறார். "ஆமைகளுக்கான பாதுகாப்பு என்று வரும்போது வனத்துறை, மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை என்ற மூன்று துறைகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். ஏன் என்றால், இந்த ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு உள்ளே மீன்பிடிக்கும் படகுகளை அடையாளம் காண ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். அதனை வனத்துறையோ, மீன்வளத்துறையோ மேற்கொள்ள இயலாது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆமைகளின் பாதுகாப்புக்காக ரோந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது," என்று கூறினார். 'ஆரியரே உயர்ந்தவர்' என்ற ஹிட்லரின் கொள்கையை ஜெர்மனியிலேயே எதிர்த்து நின்ற இந்தியப் பெண்21 ஜனவரி 2025 3 ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் முதல் கோல்ஃப் வீராங்கனை - யார் இவர்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TNFORESTDEPT/X படக்குறிப்பு, கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை, நாய்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வைக்கிறது தமிழ் நாடு வனத்துறை வலசை வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பற்றி ஒரு பார்வை எஸ்.எஸ்.டி.சி.என். என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறை, கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை சேகரிக்க ஒவ்வொரு நாளும் இரவு, 'டர்ட்டில் வாக்' நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டையை, நாய்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாத்து காப்பகங்களில் வைக்கிறது தமிழ்நாடு வனத்துறை. 40 முதல் 45 நாட்களில் ஆமைகள் குஞ்சு பொரித்து வெளி வரும்போது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி அதனை கடலில் விடும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடற்கரைகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், தமிழக கடற்கரைகளில் இருந்து 2 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடலில் சூடான நீரோட்டம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன இந்த ஆமைகள். கடல் ஆமைகளில் மிகவும் சிறிய, ஆனால் அதிக அளவில் காணப்படும் ஆமைகளாக இவை இருக்கின்றன. இரண்டு அடி நீளம் கொண்ட இந்த ஆமைகள் 50 கிலோ வரை எடை கொண்டவை. தங்களின் வாழ்நாள் முழுவதும் கடல் நீரிலே வாழும் இந்த ஆமைகள், இனப்பெருக்கம் செய்யவும், முட்டைகளிடவும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் வலசை வருகின்றன. இதில் பெண் ஆமைகள் மட்டுமே கடற்கரைக்கு வருகின்றன. இந்த பெண் ஆமைகள் பொதுவாக, அவைகள் எங்கு பிறந்தனவோ அதே கடற்கரையை நோக்கி முட்டையிட வருகின்றன. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசாவில் அதிகளவில் இந்த ஆமைகள் முட்டையிடுகின்றன. ஆந்திரா, தமிழ்நாடு கடற்கரைகளிலும் இந்த ஆமைகள் அதிகமாக முட்டையிடுகின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ மற்றும் கோஸ்டரிகா நாடுகளில் உள்ள கடற்கரைகளில் இவை முட்டையிடுகின்றன. ஒவ்வொரு பெண் ஆமையும் 80 முதல் 120 முட்டைகளை இடுகின்றன. இந்தியாவில் இந்த ஆமைகள், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ், அட்டவணை 1-ல் இணைக்கப்பட்டுள்ளது. இறைச்சி, தோல் மற்றும் ஓடுகளுக்காக இந்த ஆமைகளை வேட்டையாடுவதோ அல்லது உணவுக்காக இதன் முட்டைகளை எடுத்துச் செல்வதோ சட்டப்படி குற்றமாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp9x1np22zko
-
காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதானி குழுமத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து - அமைச்சரவை தீர்மானம்
Published By: RAJEEBAN 24 JAN, 2025 | 11:09 AM மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்துசெய்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுசூழல்; அறக்கட்டளை நிறுவனம் உட்பட பல அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுசூழல் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என்பதாலும் மன்னார் வலசப்பறவைகளிற்கான பகுதி என்பதாலும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன. மன்னார் ஆயர் உட்பட மன்னார் மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த திட்டத்தை இரத்துச்செய்வேன் என உறுதியளித்திருந்த அனுரகுமாரதிசநாயக்க இலங்கையில் காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச கேள்விப்பத்திரத்தை கோருவேன் என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/204752
-
அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி; யாழில் பறிபோன இளம் குடும்பஸ்தரின் பணம்
யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குப்பிழான் வடக்கு பகுதியில் கட்டட விற்பனைப் பொருள் நிலையமொன்றை நடத்திவரும் 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட நபர், தாங்கள் ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகவும், கடந்த வருஷம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக குறிஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், நீங்கள் குறிஞ்செய்தியை பார்க்கவில்லையா? எனவும் வினவியுள்ளார். அதற்கு அப்படியொரு தகவலை நான் பார்க்கவில்லை என இளம் குடும்பஸ்தர் பதில் வழங்கியுள்ளார். நீங்கள் குறிஞ்செய்தியை நீக்கிவிட்டீர்களா? என வினவப்பட்ட போது, அதற்கு குடும்பஸ்தர் ஆம் எனப் பதில் வழங்கியுள்ளார். இந் நிலையில் மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதால் தான் தற்போது உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளதாகத் தெரிவித்து, உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே, குறித்த இளம் குடும்பஸ்தரும் தனக்கு உண்மையிலேயே ஐந்து லட்சம் ரூபா கிடைத்திருப்பதாக எண்ணி தனது வங்கி இலக்கத்தைத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உங்களுக்கு ஆறு இலக்கங்களைக் கொண்ட ஒரு குறிஞ்செய்தி வரும். அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினவவே, இளம் குடும்பஸ்தரும் அதனைக் கூறியுள்ளார். இதனையடுத்துக் குறித்த இளம் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத்தொகை குறைவடைந்து சென்றது. இதனை சுதாகரித்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர், புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தனது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு விரைந்து சென்று நடந்தவற்றைத் தெரிவித்து, தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார். இதனால், அவரது எஞ்சிய பணம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, அண்மைக் காலமாக இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்களை அவதானமாகச் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். https://thinakkural.lk/article/314853
-
'5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு உருக்கு தொழில்நுட்பம்' - ஸ்டாலின் சொன்ன முக்கிய அறிவிப்பு என்ன?
'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்? பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY படக்குறிப்பு, சிவகளை தொல்லியல்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது. ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்திருக்கிறது. 'இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா? ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி? இரும்பின் மீதான ஆர்வத்தின் தொடக்கம் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான ஆர்வத்தைத் தூண்டியது, சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த இரும்பு வாள்தான். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. 1,604 முதல் கி.மு. 1,416 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. அவ்வளவு தொன்மையான இரும்பு கிடைத்தது தமிழ்நாட்டில் அதுதான் முதல்முறை. இந்தக் கண்டுபிடிப்புதான் தமிழக தொல்லியல் வட்டாரத்தில், இரும்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம் தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. அதிசய மீன்: வயதாக ஆக ஆரோக்கியம் கூடும்; 100 ஆண்டுகளை கடந்து வாழும் - இதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?23 ஜனவரி 2025 எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்தபோது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை23 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY படக்குறிப்பு, தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இரும்பின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களின் காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 3,345 வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அதன் வாழ்விடப் பகுதியில் 220 செ.மீ. ஆழத்தில் கிடைத்த இரும்புப் பொருளுடன் கிடைத்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவற்றின் காலம் சராசரியாக கி.மு. 2613ஆக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY படக்குறிப்பு, ஆதிச்சநல்லூர் தொல்லியல்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள் ஹரப்பா நாகரீகமும் இரும்பு காலமும் அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதில் இருந்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த ஒரு கரிமப் பொருளின் காலம் கி.மு. 3,345 எனத் தெரியவந்திருப்பதாக தமிழக அரசின் அறிக்கை கூறுகிறது. ஆகவே, அந்தக் கரிமப் பொருளுடன் இருந்த இரும்பின் காலமும் அதுவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார், பிபிசி தமிழிடம் பேசிய தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம். "ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில் நிலவியது." "தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட இந்தியா செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்திய மலைக்கு தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக் காலத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வர முடியும்" என்கிறார் டாக்டர் ஆர். சிவானந்தம். ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற இடத்தில் ஹிட்லரின் இனவெறி கொள்கைகளை எதிர்த்து நின்ற இந்திய பெண் - என்ன செய்தார்?21 ஜனவரி 2025 டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?18 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது, செப்பு தான் பயன்படுத்தப்பட்டது" இரும்புக் காலம் - ஏன் முக்கியம்? மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கும். ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரலாறு: எப்போது தொடங்கியது? பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்?14 ஜனவரி 2025 கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY படக்குறிப்பு, இந்தியாவில் தொடக்ககால இரும்பு கிடைக்கும் இடங்களின் பட்டியல் உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை இரும்புத் தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை. இரும்புத் தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில் அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது. அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் கருதப்பட்டது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் துவங்கி, எப்படிப் பரவியது என்பது தொடர்பான விவாதங்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துவருகின்றன. பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY படக்குறிப்பு, வட எகிப்தின் அல் - கெர்சே என்ற இடத்தில் கிடைத்த எரிகல்லால் ஆன மணிகள் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டவை இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்தின. "உதாரணமாக உத்தர பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின் கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம். மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன?23 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்ததா? ஸ்டாலின் கூறியது என்ன?23 ஜனவரி 2025 படக்குறிப்பு, 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்கிறார், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம் ஆனால், இதுவே இறுதியானதல்ல என்பதையும் குறிப்பிடுகிறார் அவர். "எதிர்காலத்தில் இந்தியாவிலும் உலக அளவிலும் கிடைக்கும் இரும்பு தொல்பொருட்களும் அவற்றின் மீது நடத்தப்படும் ஆய்வுகளும் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் முறை எப்போது உருவானது என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தைத் தரலாம்" என்கிறார் சிவானந்தம். வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம் வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப் பொருட்களின் உற்பத்தி மையம் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn8y673vzdno
-
உச்சம் தொடும் இலங்கையின் பங்கு சந்தை | Share Market Sri Lanka | Rj Chandru Report
புதிய ஆட்சியின் பின் ஏற்றம் பெறும் பங்குச் சந்தை... உச்சம் தொட்ட பங்கு சந்தை.. வெளிநாட்டு பணத்திற்கு வரி? | Share Market | Rj Chandru Report
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!
23 JAN, 2025 | 08:49 PM 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது 244,092 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மாவட்டங்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலங்களுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தமிழ் மொழி மூலத்துக்கான வெட்டுப்புள்ளி 141 ஆகும். இதுவே அதிகூடிய வெட்டுப்புள்ளியாகும். இதேபோன்று இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆகக் கூடிய வெட்டுப்புள்ளி 139 ஆகும். நுவரெலியா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 139 ஆகும். மேலும் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 138 ஆகும். இரத்தினபுரி மாவட்டத்துக்கு மாத்திரம் 136 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204710
-
அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர் சந்திப்பு : அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வது தொடர்பில் பேச்சு
23 JAN, 2025 | 06:46 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்படக்கூடிய மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட செயற்றிட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (21) சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத்துறையின் தற்போதைய நிலைமை, சுகாதார மற்றும் ஊடகத் துறையின் எதிர்கால அபிவிருத்திக்காக அமெரிக்க அரசாங்கம் வழங்கிய உதவிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. நாட்டின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதன் மூலம் தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவையை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம், ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள செயற்றிட்டம் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்திருந்தார். மேலும், சுகாதார சேவையுடன் ஆயுர்வேத வைத்திய முறையையும் ஒன்றிணைத்து சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் விசேட செயற்றிட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படக்கூடிய மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில், இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அரச ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் ஊடக நிறுவனமொன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் தயாராகி வருவதாக அமைச்சர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், இலங்கையின் இலவச சுகாதார சேவைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறைந்த செலவில் உயர்தரமான சேவை இந்நாட்டில் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் சுகாதார அமைச்சுக்கும் இந்நாட்டின் சுகாதார சேவையின் அபிவிருத்திக்கும் தேவையான உதவிகளை அமெரிக்க அரசாங்கம் வழங்கியிருந்தது. இலங்கையில் தற்போது நிலவும் சுகாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத் துறையின் அபிவிருத்திக்கும் நிதி, தொழில்நுட்ப, அறிவு மற்றும் உடல் ரீதியான ஆதரவைத் தொடர்ந்து வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று உறுதியளித்திருந்தார். https://www.virakesari.lk/article/204707
-
மனிதர்களைக் காணாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூரியமீன், மீண்டும் புத்துணர்வு பெற உதவிய வினோத யுக்தி
பட மூலாதாரம்,KAIKYOKAN படக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி' காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கோ ஈவ் பதவி, பிபிசி நியூஸ் ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால். இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், சூரிய மீன் நீந்தும் பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீருடைகளுக்கு மனித முகங்களின் முகமூடிகள் இணைக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி' என்றும், தனிமையின் காரணமாக மீனுக்கு இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என ஒரு ஊழியர் கண்டறிந்ததாகவும், இந்த மாத தொடக்கத்தில் கைக்யோகன் மீன் காட்சியகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தது. 'புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க விருப்பமா?' - நேபாளத்தில் வெற்றிக்கதையே ஆபத்தாக மாறியது எப்படி? பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது? தொலைதூர தீவில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் - ஏன்? ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம் பயனளித்த புதிய முயற்சி ஆனால் இந்த முயற்சி பலனளித்தது. "சூரிய மீன் மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது!" என அதற்கு அடுத்த நாள் கைக்யோகன் மீன் காட்சியகம் தெரிவித்தது. கடந்த டிசம்பரில் மறுசீரமைப்பிற்காக இந்த மீன் காட்சியகம் மூடப்பட்டது. அதன் பின்னர், சூரியமீன் தன்னுடைய உணவான ஜெல்லி மீன்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதன் உடலை தொட்டியில் தேய்க்கத் தொடங்கியது என்று ஜப்பானிய செய்தித்தாளான 'மைனிச்சி ஷிம்பன்' திங்களன்று (ஜனவரி 20) செய்தி வெளியிட்டது. ஒட்டுண்ணிகள் அல்லது செரிமான பிரச்னைகள் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் சில ஊழியர்கள் சந்தேகித்தனர். ஆனால், 'மீனைப் பார்வையிட பார்வையாளர்கள் யாரும் வரவில்லை என்பதால், அது தனிமையை உணர்ந்திருக்கலாம்' என்று ஒரு ஊழியர் பரிந்துரைத்தார். உலகின் ஒவ்வொரு ஆழ்கடலிலும் காணப்படும் இந்த சூரியமீன், ஜப்பானில் ஒரு சுவையான உணவு வகையாகும். அவற்றை தொட்டிகளில் 10 ஆண்டுகள் வரை வளர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அதைப் பராமரிப்பது கடினம் என்பதால், அவை பொதுவாக நீர்வாழ் உயிரினங்களுக்கான காட்சிச்சாலைகளில் காணப்படுவதில்லை. கைக்யோகன் மீன் காட்சியகத்தில் உள்ள சூரியமீன் சுமார் 80 செ.மீ நீளமும் (31 அங்குலம்), கிட்டத்தட்ட 30 கிலோ எடையும் கொண்டது. 'மைனிச்சி ஷிம்பன்' செய்தித்தாளிடம் பேசிய மாய் கடோ எனும் ஊழியர், தனித்துவமான நடத்தை கொண்ட இந்த சூரியமீன் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார். "பார்வையாளர்கள் யாரேனும் தொட்டியை நெருங்கி வந்தால், இந்த மீன் அவர்களை நோக்கி நீந்தும்" என்றும் அவர் கூறியுள்ளார். எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்த போது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை7 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் ஒவ்வொரு கடலிலும் காணப்படும் சூரியமீன், ஜப்பானில் ஒரு சுவையான உணவு வகையாகும். சீருடைகளுக்கு மனித முகங்களின் புகைப்படங்களை (முகமூடி) மாட்டி அவற்றை தொட்டிக்கு முன் நிறுத்தியபிறகு, மீனின் உடல்நிலை சற்று தேறியதாகவும், தொட்டியில் சில செய்கைகள் மூலம் அது தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியதாகவும் கைக்யோகன் மீன் காட்சியகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தது. இந்த பதிவுக்கு சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. சிலர், இதற்கு முன் அந்த மீன் காட்சியகத்துக்கு சென்றபோது சூரியமீனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டனர். பலரும், இந்த மீன் காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்போது நிச்சயம் சென்று சூரிய மீனைப் பார்ப்போம் எனக் கூறினர். ஜப்பானிய நீர்வாழ் உயிரினங்களுக்கான காட்சிச்சாலை ஒன்று, தங்கள் பராமரிப்பில் இருக்கும் உயிரினங்களை மகிழ்விக்க புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது உலகின் பல உயிரியல் பூங்காக்கள், மனிதர்களின் வருகை இல்லாததால் விலங்குகள் தனிமையை உணர்கின்றன என தெரிவித்திருந்தன. அப்போது, டோக்கியோவின் ஒரு மீன் காட்சியகம் அதன் ஈல் (Eel) மீன்களுக்காக ஒரு 'அவசர' வீடியோ அழைப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. வெகு நாட்களாக, மனிதர்களைப் பார்க்காததால், அந்த ஈல் மீன்கள் ஒருவித சங்கடத்தை உணர்ந்தன என்று மீன் காட்சியக நிர்வாகத்தினர் நம்பினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2yqny6yr4o
-
யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனிக்கிழமை ஆரம்பம்!
Published By: DIGITAL DESK 7 23 JAN, 2025 | 06:34 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு இன்று வியாழக்கிழமை (23) காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஊடக விவரிப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சை சர்மா கிஷான் லால், சட்டத்துறை விரிவுரையாளர் சுபாசினி ருமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது, சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு பற்றி விளக்கமளித்தார். அதன் விவரம் வருமாறு: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டபீடத்தின், இந்தியாவின் புகழ்பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இம்மாநாடானது யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட செயற்படல், நிலைமாற்றம், நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் , தகவல் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். முதல் நாள் நிகழ்வில் ஆளுகை நிலைமாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டியான் ஷாவும், இலத்திரனியல் நிலைமாற்றம் தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரட்னவும் திறப்புரைகளை ஆற்றவுள்ளனர். முதல் நாள் நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு , அதன் எதிர்காலம் என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன் , ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்தா டி அல்மெய்டா குணரட்ண , பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கலன சேனாரட்ண ஆகியோர் உரையாளர்களாகவும் மாற்றுக் கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன் சேகா உரையாளர் மற்றும் நெறியாளராகவும் பங்கு கொள்ளவுள்ளனர். இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டீ சில்வா பிரதம விருந்தினராகவும் , இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட நிலையியற் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சமந்தா உனம்பூவே சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும், கலாசார நிலைமாற்றம் தொடர்பாக சமத்துவத்திற்கும் நீதிக்குமான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷாமலா கோமஸ்ம், முறையியல் நிலைமாற்றம் தொடர்பில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் நாகநாதன் செல்வக்குமரனும் திறப்புரைகளை ஆற்றவுள்ளனர். அவ்வாறே நிலைமாற்றம் , சவால்களும் வாய்ப்புக்களும் என்னும் தொனிப்பொருளிலான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெறவுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.த.தமிழ்மாறன் , கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன், சட்டத்தரணி சந்துணி ஆகியோர் வளவாளர்களாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் நெறியாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அதேநேரம், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்படட ஆய்வுச் சுருக்கங்கள் பொருளாதார வளர்ச்சியும் முதலீடும், சுற்றுச்சூழல் சவால்கள் , உரிமைகள், நீதி, குடும்பச் சட்டமும் பாரபட்சமும் , செயற்கை நுண்ணறிவும் தொழிநுட்பமும் , புதிய எண்ணக்கருக்கள் என்னும் 7 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வருட மாநாட்டின் புதிய முயற்சியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் சிலர் முறையான ஆய்வு மேற்பார்வைக்குட்பட்ட தமது ஆய்வுக் கட்டுரைகளை முதல் நாள் மாலை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மாநாட்டின் மற்றொரு அங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது நாளை வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 4 .30 மணி முதல் 6.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் கனதியானதும் காலப் பொருத்தம் வாய்ந்ததுமான சர்வதேச சட்ட மாநாட்டில் ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/204704
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் 23 JAN, 2025 | 12:37 PM (நெவில் அன்தனி) கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (23) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான கடைசிக்கு முந்தைய லீக் போட்டியில் மலேசியாவை 53 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் கடைசி அணியாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பைப் பெறும் என்ற சூழ்நிலையில் இரண்டு அணிகளும் வெற்றியைக் குறிவைத்து களம் இறங்கின. ஆனால், இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் தடவையாக திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. அதேவேளை, இந்தத் தோல்வியால் வரவேற்பு நாடான மலேசியா போட்டியிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அசாபி கெலண்டர் 30 ஓட்டங்களையும் ஜஸாரா க்ளக்ஸ்டன் 19 ஓட்டங்களையும் அபிகெய்ல் ப்றைஸ் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 27 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. பந்துவீச்சில் நூர் இஸத்துள் சியாபிக்கா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஸ்வா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுடன் வெளியேறியது. அணித் தலைவி நூர் டானியா சியுஹதா 12 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டி முழுவதிலும் மலேசியா சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்ற ஒரே ஒரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மலேசியாவின் மொத்த எண்ணிக்கையில் 21 உதிரிகளே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் சமாரா ராம்நாத் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எரின் டியேன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நய்ஜன்னி கும்பபெச் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: சமாரா ராம்நாத். https://www.virakesari.lk/article/204650
-
இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?
ஒரு ஐம்பதாயிரம் போட்டு அது இருபதாயிரமா இருந்தது வரை ஞாபகம்! இப்ப வருசத்தில ஒருக்கா 200/300ரூபா செக் அனுப்புவாங்கள், வங்கில போட்டிட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டிருப்பன். பிசி ஹவுஸ்(அப்பவே அது விழுந்துகொண்டிருந்த கணனி உதிரிப்பாக விற்பனை செய்யும் கம்பனி) என்ற தற்போது மூடப்பட்ட கம்பனி பங்குகளை புரோக்கர் தம்பி எங்களைக் கேக்காமலே வாங்கி 50ஆயிரத்தை 20 ஆயிரமாக்கின பெருமை அவரையே சாரும்!! இப்ப பங்கு வர்த்தகம் ஏற்றத்தில போறதாக செய்திகள் சொல்லுது அண்ணை. இலங்கையில் பங்குவர்த்தக முதலீட்டாளர்களுக்கு வருமானவரி இல்லையாம்! கீழுள்ள காணொளிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உச்சம் தொடும் இலங்கையின் பங்கு சந்தை | Share Market Sri Lanka | Rj Chandru Report உச்சம் தொட்ட பங்கு சந்தை.. வெளிநாட்டு பணத்திற்கு வரி? | Share Market | Rj Chandru Report
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு!
"குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்" டிரம்பின் முன்னிலையில் வேண்டுகோள் விடுத்த வோசிங்டன் ஆயர். 23 JAN, 2025 | 12:42 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் ஆயர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியேற்றவாசிகள் மற்றும் எல்ஜிபிடிகியு சமூகத்தினர் குறித்து டிரம்ப் அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறித்து டிரம்ப் கருணை காட்டவேண்டும் என வோசிங்டனின் எபிஸ்கொபல் தேவாலயத்தின் ஆயர் மரியன் புடே Episcopal Bishop Mariann Edgar Budde""வேண்டுகோள் விடுத்துள்ளார். டிரம்ப் அவரது மனைவி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட ஆராதனையின் போது அவர்களின் முன்னிலையில் ஆயர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜனநாயக, குடியரசு மற்றும் சுயேட்சை குடும்பங்களில் எல்ஜிபிடிகியு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அச்சமடைந்துள்ளனர் என அவர்தெரிவித்துள்ளார். கடவுளின் அன்பான கையை நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்கள், எங்கள் தேசத்தில் தற்போது அச்சமடைந்துள்ள மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆண்டவனின் பெயரால் நான் கேட்டுக்கொள்கின்றேன் என ஆயர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204651