Everything posted by ஏராளன்
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை 21 JAN, 2025 | 12:04 PM (நெவில் அன்தனி) கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை, இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது. மலேசியாவுக்கு எதிரான போட்டியில் போன்றே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் சகலதுறைகளிலும் மிகவும் பொறுப்புணர்வுடன் விளையாடிய இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். சுமுது நிசன்சலா 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவி மனுதி நாணயக்காரவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 48 ஓட்டங்களை சஞ்சனா காவிந்தி பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய சஞ்சனா காவிந்தி 6 பவுண்டறிகளுடன் 38 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹிருணி குமாரி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். எனினும் மனுதி நாணயக்காரவும் தஹாமி சனெத்மாவும் 4ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர். மனுதி நாணயக்கார 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 37 ஓட்டங்களைக் குவித்தார். மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்தபோது மனுதி நாணயக்கார, ரஷ்மிக்கா செவ்வந்தி (0) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தஹாமி சனெத்மா ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் ஷஷினி கிம்ஹானியுடன் 29 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். கிம்ஹானி 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் செலினா ரொஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.4ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்துவீசியதால் மேற்கிந்தியத் தீவுகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. அணித் தலைவி சமாரா ராம்நாத் (24 ஓட்டங்கள்), ஜஹ்ஸாரா க்ளெக்ஸ்டன் (15), கெனிக்கா கசார் (12), அம்ரிதா ராம்தஹால் (11) ஆகிய நால்வரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஓரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: சமுதி ப்ரபோதா. https://www.virakesari.lk/article/204423
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும் முன்வைக்க இயலாது - அது ஓர் தொடர் முயற்சி என்கிறது பா.ஜ.க
Published By: VISHNU 21 JAN, 2025 | 10:42 PM இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. நீண்டகாலமாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக ஓர் ஒற்றைத்தீர்வை யாராலும் முன்வைக்கமுடியாது. மாறாக இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த வாரம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினையானது பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாற்றமடைந்துகொண்டிருக்கக்கூடிய சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியின் பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் நீண்டகாலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வை யாராலும் முன்வைக்க முடியாது. ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும். அதனை முன்னிறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறது. அதேவேளை உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் தங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானதாகும். ஒரு நாடானது பல்வேறு விதமான இராஜதந்திர உத்திகளுடன் தான் இயங்கும். 2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, "யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன்" என்ற அவரது நிலைப்பாட்டைக் காண்பித்தது. பொருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு "அனைவருக்கும் வீடு" என்னும் திட்டத்தை இந்தியாவில் செயற்படுத்துவதுடன் மாத்திரமன்றி, இலங்கையிலும் அதனைச் செயற்படுத்தியது எனச் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/204488
-
யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
22 JAN, 2025 | 11:08 AM காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (20) சிறுமிக்கு கடும் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். அவ்வேளை, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து அறிக்கையிட்டுள்ளனர். அதனையடுத்து, சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் நிமோனியா காய்ச்சல் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204514
-
340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில் நடத்தப்படலாம்! - பெப்ரல்
22 JAN, 2025 | 10:44 AM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம். எந்த வகையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை பிற்போட முடியாது. சகல தரப்பினரதும் இணக்கத்தின்படி, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாம் நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு ஒன்றைப் பெற்றுள்ளோம். தற்போது கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு மீண்டும் கோரப்படுதல் வேண்டும். அப்படிச் செய்வதன் ஊடாக இளம் வாக்காளர்கள் 4 இலட்சம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கிறது. அதேவேளை ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்யக் கூடாது என்று உத்தரவிடும்படி, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும் உரிமையும் எமக்குண்டு. ஆறு வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி தேர்தல் பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு உண்டு. ஒரு தேர்தலுக்கு சுமார் 100 பில்லியன் ரூபா அரசுக்கு செலவாகிறது. இவை பொதுமக்களது வரிப்பணமாகும். கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சகல தரப்பினரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதால் அது வெற்றிகரமாக முடிந்தது. எல்லோரது பங்களிப்பும் கிடைத்தது. அந்த வகையில் ஐரோப்பிய சங்கம் இலங்கை தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் நாட்டின் தேர்தல் தொழிற்பாடுகள் தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளது. அடுத்து நடக்கப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஊனமுற்றவர்களது வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட அவர்கள் இலகுவான முறையில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204507
-
இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்
22 JAN, 2025 | 10:05 AM இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் விசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/204501
-
மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது - பிரதமர்
Published By: VISHNU 22 JAN, 2025 | 05:07 AM மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் செவ்வாய்க்கிழமை (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த நோக்கத்திற்காக பேசுகின்றது என்றும் நான் சிந்தித்தேன். அவர்களின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சித்தேன். எதிர்க்கட்சி என்ற விடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு பாரதூரமும் தெரியவில்லை. எந்தவொரு காரணமும் இன்றி கூச்சலிடுகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு இருக்கும் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதம் எதற்காக என்பது குறித்தும் புரிந்துகொள்ள முடியாத ஒரு எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இந்த நாட்டிற்கு தேவையான பரிணாமத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடான எமது பிரதான நோக்கமாகும். பரிணாம மாற்றத்தை மேற்கொள்வதை அரசாங்கத்திற்கோ, அரச அதிகாரிக்கோ தனியாக மேற்கொள்ள முடியாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மக்களின் இணக்கப்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்பட வேண்டிய பரிணாமம் எவை? அந்த பரிணாமம் எவ்வாறு அமைய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்குள் கருத்தாடல் அவசியமாகும். எமது அரசாங்கம் மக்கள் மயமான அரசாங்கமாகும். மக்கள் மயமான அரசாங்கம் செயற்படுவதில் ஒரு கலாசாரம் உள்ளது. அதில் மக்களும் பங்குகொள்வார்கள். மக்கள் எதிர்ப்பு அரசாங்கத்தினுள் இருந்தவர்களுக்கும், மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் அதனை புரிந்துகொள்ள முடியாமை குறித்து நான் ஆச்சரியப்படப் போவதில்லை. சட்டங்களை அமுல்படுத்தி கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் அல்ல Clean Sri Lanka வேலைத்திட்டம். இந்த நாட்டிற்காக நாட்டின் முதலாளிமார்கள், வர்த்தகர்கள் அர்ப்பணிப்புகளைச் செய்ய விருப்பத்துடன் உள்ளனர். இது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இதுவரைக் காலமும் இருந்த அரசாங்கங்கள் வர்த்தகர்கள் அல்லது முதலாளிமார்களை சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமது பையை நிரப்பிக்கொள்ளவே பயன்படுத்தினர். அவ்வாறானவர்களுக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது. எதிர்க்கட்சியில் சிலர் இந்த வேலைத்திட்டத்தை விமர்சித்துக்கொண்டு நல்லவற்றிற்காக முன்னிற்பதாக கூறுகின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு ஒரே நிலைப்பாட்டில் கூட இருக்க முடியவில்லை. ஆசிரியர்களை மண்டியிடச் செய்த, தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை தாம் விரும்பிய பாடசாலைகளுக்கு சேவையில் அமர்த்த முயற்சித்த, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு கடிதங்களை வழங்குவதை மாத்திரம் கடமையாகக் கொண்ட யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Clean Sri Lanka விவாதத்தின் போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204495
-
அமெரிக்காவில் டிரம்ப் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியுமா? கட்டுப்படுத்தும் 6 வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ் பதவி, பிபிசி உலக சேவை அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களோடு அவர் பதவியேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, நவம்பர் 5-ஆம் தேதி அன்று, அவருடைய முதல் அதிபர் தேர்தல் பரப்புரையில் தான் பேசிய விசயங்களை அவர் நினைவு கூர்ந்தார். தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார். அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அவர் முன்மொழிந்த திட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும், அமெரிக்கா - மெக்ஸிகோ இடையே சுவர் எழுப்பி எல்லையை மூடும் திட்டம், ஆவணமில்லாத லட்சக்கணக்கான குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் ஆகியவை அடங்கும். அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய 'நாடு கடத்தும் நடவடிக்கையாக' இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார். அரசின் அதிகாரங்களும், வரிகளும் குறைக்கப்படும், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு 10-20 சதவீத வரி விதிக்கப்படும், குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி வழங்கினார். அமெரிக்க அதிபராக முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட முக்கிய உத்தரவுகள் என்ன? யாருக்கெல்லாம் சிக்கல்? டிரம்ப் தனது பதவியேற்புக்கு மோதியை அழைக்கவில்லையா? அமெரிக்க அதிபரின் உத்தி என்ன? டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள் - இந்தியாவை பாதிக்கும் ஒரு அறிவிப்பு என்ன? இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் - மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள் இந்தத் வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற, தனக்குப் பின்னால் உள்ள குடியரசுக் கட்சியின் ஆதரவை டிரம்ப் எதிர்நோக்கியுள்ளார். பிரதிநிதிகள் அவை (கீழவை) மற்றும் செனட் (மேலவை) ஆகிய இரண்டிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. இது அமெரிக்காவில் 'ட்ரிஃபெக்டா' அல்லது ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அமெரிக்காவின் அரசாங்க அமைப்பில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் ஆளுங்கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் போது ஒரு 'ட்ரிஃபெக்டா' அல்லது ஐக்கிய அரசாங்கம் ஏற்படுகிறது. நிபுணர்கள் கூறுவது என்ன? "ஐக்கிய அரசாங்கம்" என்பது ஒற்றை அவை உள்ள அரசாங்கத்தைப் போல் செயல்படும் என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் பிபிசியிடம் கூறுகிறார். தொடர்ந்து பேசிய பீட்டர்சன், "ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற்று அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தும் போது அது ஒரு ஐக்கிய அரசாங்கமாக இயங்குகிறது. இது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும், குறைந்தபட்ச எதிர்ப்புடன் முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கிறது" என்றும் விவரிக்கின்றார். பேராசிரியர் மார்க் பீட்டர்சன், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (UCLA) பொதுக் கொள்கை, அரசியல் அறிவியல் மற்றும் சட்டத் துறையில் பேராசிரியராக உள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாட்டின் மூன்றாவது சுதந்திரப் பிரிவு. அதிலும் தற்போது ஆறு பழமைவாத நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். உச்ச நீதிமன்றத்தில் மூன்று தாராளவாத நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதனால் அரசின் முடிவுகளுக்கு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து எளிதாக ஒப்புதல் கிடைக்கும். அப்படியானால், தனது அரசாங்கத்தை எந்த வித சிக்கல்களும் இல்லாமல் டிரம்பால் அமெரிக்காவில் ஆட்சி நடத்த முடியுமா? எனும் கேள்வி எழுகின்றது. ஆனால் உண்மையில் டிரம்பால் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்க முறைப்படி டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதைத் தடுப்பதற்கு 6 கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. பெரியாருடன் முரண்பட்ட திமுக அவரது சித்தாத்தங்களை ஆதரிப்பது ஏன்? 1967 தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது?18 ஜனவரி 2025 சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சில அமைப்புகள் உள்ளன 1. இரு அவைகளிலும் பெரும்பான்மை இருந்தாலும்… நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அந்த கட்சியால், தான் முன்மொழிந்த அனைத்திற்கும் மிக எளிதாக அங்கீகாரம் பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி 220 இடங்களைப் பெற்றது. அதேசமயம் ஜனநாயக கட்சி 215 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தார். மேலும் இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பிற அரசாங்கப் பதவிகளை ஏற்பதற்காக விரைவில் ராஜினாமா செய்ய உள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, பிரதிநிதிகள் அவையில் பழமைவாத குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மையை விட 2 இடங்கள் மட்டுமே கூடுதலாக இருக்கும். இது அந்தக் கட்சிக்கு கடினமான சூழலாகவே இருக்கும். "சமீப காலத்தில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை பலவீனமாக உள்ளது. அவர்கள் மிகுந்த ஒற்றுமையோடு இருந்த போதிலும், குறைவான பெரும்பான்மை உள்ள சூழலில் பிரதிநிதிகள் அவையைக் கட்டுப்படுத்த, கடினமான சூழ்நிலைகளிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது மிகவும் சவாலானது"என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு 43 உறுப்பினர்களும் உள்ளனர். குடியரசுக் கட்சிக்கு கூடுதல் உறுப்பினர்கள் இருந்தாலும் கூட, மிக முக்கிய முன்மொழிவுகளை நிறைவேற்ற அந்தக் கட்சிக்கு 7 இடங்கள் குறைவாகவே உள்ளன. குடியரசுக் கட்சியினர் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் விளக்குகிறார். ஏனென்றால், குடியரசுக் கட்சியினர் முன்மொழிந்துள்ள திட்டங்களில் எதை வேண்டுமானாலும் தடுக்கும் அதிகாரம் ஜனநாயகக் கட்சிக்கு உள்ளது. செனட்டில் 60 வாக்குகளுக்குப் பதிலாக 51 வாக்குகள் என்ற எளிய பெரும்பான்மையுடன் வரவு-செலவுத் திட்ட விதிகளை அங்கீகரிக்க பேச்சுவார்த்தை நடத்துவது தான் வழக்கமான செயல்முறையாகும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிளவு அதிகரித்து வருவதால் இந்த செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், எல்லா சூழ்நிலைகளிலும் இதைப் பயன்படுத்த முடியாது. இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன் கூறும்போது , "பெரிய மாற்றங்களைச் செய்த அதிபர்கள் இரு அவைகளிலும் 60 சதவிகிதம் போன்ற பெரிய பெரும்பான்மையைப் பெற்றனர். ஆனால் இப்போது அது இல்லை. குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்து நின்றாலும், தேர்தல் வாக்குறுதிகளை டிரம்பால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்" என்றார். டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் கூட இரு அவைகளிலும் வலுவான பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில், அவர் ஒரு முக்கியமான வரி குறைப்பு சட்டத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது என்று குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள். ஹிண்டன்பர்க்: அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த நிறுவனம் மூடப்படுவது ஏன்?17 ஜனவரி 2025 இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் - மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. 2. சுதந்திரமான நீதித்துறை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையான பழமைவாத நீதிபதிகள் இருந்தாலும், அவர்களில் மூன்று பேர் டிரம்பின் முதல் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், டிரம்பின் அனைத்து நிர்வாக முயற்சிகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. டிரம்ப் தனது 2016-ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்ததைப் போலவே, 1970 முதல் நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமைகளுக்கான பெடரல் பாதுகாப்புச் சட்டத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றது என்பது உண்மைதான். இந்த முடிவை புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் ஆதரித்தனர். உச்ச நீதிமன்றத்தின் படி, " தனது பதவிக் காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்கிலிருந்தும் முழுமையான விலக்கு பெற உரிமை அதிபருக்கு உண்டு." இதன் காரணமாகவே, நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார் இருப்பினும் அவரின் தனிப்பட்ட விஷயங்களில் இந்த விலக்கு கிடைக்காது. இது தவிர, அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் அளித்த புகார்களையும் 2022-ஆம் ஆண்டில் நீதிமன்றம் நிராகரித்தது. அமெரிக்காவின் டாகா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த திட்டத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. ஆவணங்கள் இல்லாமல் சிறு வயதில் நாட்டிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது டாகா திட்டம். ஒபாமாகேர் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்திலிருந்து சில பாதுகாப்புத் திட்டங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனுடன், பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதிலிருந்து பால் புதுமையினரைப் பாதுகாக்கும் பிற விதிகளையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த இரண்டு விதிகளும் குடியரசுக் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக இருந்தன. பியூ ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, "உச்ச நீதிமன்றத்தைத் தவிர, அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றங்களில் 60 சதவிகித நீதிபதிகள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர். அங்குள்ள நீதிபதிகளில் 40 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சி அல்லது டிரம்பின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர்" என அறியமுடிகின்றது. இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன் குறிப்பிடும் போது, "அமெரிக்க அரசியல் அமைப்பின் மூன்றாவது முக்கிய தூண் நீதித்துறை. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் டிரம்ப் அல்லது குடியரசுக் கட்சியால் நியமிக்கப்படவில்லை" என்கிறார். உச்ச நீதிமன்றச் சட்டம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களின் படி நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று பீட்டர்சன் கூறுகிறார். சரஸ்வதி நதி: உண்மையா, கட்டுக்கதையா? இஸ்ரோ ஆய்வில் தெரிய வந்தது என்ன?16 ஜனவரி 2025 கும்பமேளா: நாகா துறவி ஆவதற்கு முன்பு எதிர்கொள்ளும் 'கடினமான சோதனைகள்', சடங்குகள் என்னென்ன?16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேடிவ் நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளனர். 3. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்கா ஒரு கூட்டாட்சி நாடு. இந்த கூட்டாட்சி அமைப்பு வெள்ளை மாளிகையில் இருந்து செயல்படுத்தப்படும் மாற்றங்களுக்கு முக்கியமான வரம்புகளை விதிக்கிறது. அமெரிக்க அரசியலமைப்பின் 10வது திருத்தம், மாகாண அல்லது யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு பெரிய அளவிலான அதிகாரத்தை வழங்குகிறது. பாரம்பரியமாக, பாதுகாப்பு, சுகாதாரம், சமூக நலன்கள், கல்வி, தேர்தல் செயல்முறை, குற்றவியல் சட்டம், தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் சொத்து தொடர்பான உரிமைகள் மாகாணங்களுக்கு உள்ளன. இதேபோல், மாவட்ட மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு பொதுப் பாதுகாப்பு, நகர்ப்புறத் திட்டமிடல், நிலப் பயன்பாடு மற்றும் பல பொறுப்புகள் உள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் சில முயற்சிகளை எதிர்க்கும் அதிகாரம், மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரப்புற நிர்வாகங்களுக்கு உள்ளது. மேலும் "டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக, இந்த அதிகாரங்களை ஜனநாயகக் கட்சி நிச்சயமாகப் பயன்படுத்தும்" என்றும் பீட்டர்சன் கணித்துள்ளார். அதைத் தொடர்ந்து, "நான் அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் உள்ள கலிபோர்னியாவில் வசிக்கிறேன். இது முற்றிலும் ஜனநாயகமாகவோ, தாராளவாத போக்குடனோ, முற்போக்கானதாகவோ இல்லை. ஆனால் அந்த திசையை நோக்கி வலுவாக முன்னேறுகிறது " என்று பீட்டர்சன் குறிப்பிடுகிறார். பீட்டர்சனின் கூற்றுப்படி, " டிரம்ப் நிர்வாகத்தை பொருட்படுத்தாமல் அல்லது எதிர்க்கும் வகையில் கலிபோர்னியா செயல்படும். டெக்சாஸ் மற்றும் சில மாகாணங்கள் சமீப காலங்களில் ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகங்களைப் பற்றி கவலைப்படவில்லை."என அறியப்படுகின்றது. தற்போது, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 23 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் குடியேறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு இந்த மாகாணங்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கலாம். ஏனெனில் இத்தகைய சிக்கலான மற்றும் கடினமான பணிகளுக்கு உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது. பல நகரங்கள் மற்றும் மாகாணங்கள், புலம்பெயர்ந்தோருக்கு "பாதுகாப்பான" இடங்களாக தங்களது பகுதிகளை அறிவித்துள்ளன. இதன் காரணமாக புலம்பெயர்ந்தோர் பிரச்னையில் பெடரல் அரசுடன் அவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த நபர் லாரி மோதி மரணம் - நடந்தது என்ன?21 ஜனவரி 2025 காரை செலுத்தி 35 பேரை கொன்றவருக்கு சில மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல நகரங்கள் மற்றும் மாகாணங்கள், புலம்பெயர்ந்தோருக்கு "பாதுகாப்பான" இடங்களாக தங்களது பகுதிகளை அறிவித்துள்ளன. 4. தொழில்முறை அதிகாரத்துவம் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர் தனது அரசியல் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்று குடியரசுக் கட்சிக்குள் புகார்கள் எழத் தொடங்கின. அரசு மற்றும் அதிகாரத்துவத்தின் செயல்பாடு பற்றிய புரிதல் இல்லாதது மற்றும் அதிகாரிகள் அல்லது சிவில் சேவைகளின் எதிர்ப்பு ஆகியவை இதற்குக் காரணமாக அறியப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுகளை சட்டவிரோதமானதாகவோ அல்லது தவறானதாகவோ கருதி அவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தாமதம் செய்தனர். தனது முதல் பதவிக் காலத்தின் முடிவில், டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவிற்கு ஒப்புதல் அளித்தார். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அவர்களுக்குப் பதிலாக தனது ஆதரவாளர்களை நியமிப்பதற்கானதாக அந்த உத்தரவு இருந்தது. இந்த உத்தரவை பைடன் நிர்வாகம் ரத்து செய்தது. இருப்பினும், தனது பிரசாரத்தின் போது, அவர்களை நீக்குவதற்கான நிர்வாக ஆணையை, மீண்டும் மறுபரிசீலனை செய்ய டிரம்ப் பரிந்துரைத்தார். உண்மையில், டிரம்பின் அரசியல் சித்தாந்தத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிபுணர்களின் தரவுத் தளத்தை, டிரம்பிற்கு நெருக்கமான பழமைவாதக் குழு, அவரது இரண்டாவது பதவிக்காலத்துக்காகத் தயாரித்துள்ளது. அதனால் அவர்கள் அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக நியமிக்கப்படலாம். இந்த முயற்சியால் நிறுவன, சட்ட, அரசியல் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது குறித்து பேராசிரியர் பீட்டர்சன் கூறுகிறார், "டிரம்பின் இந்த முயற்சிக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்படும் என்று நான் நினைக்கிறேன். பொதுச் சேவைகள் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டன மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. புதிய அரசாங்கம் உருவாகும் வரை அரசு ஊழியர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாது" எனக் கருதப்படுகின்றது. ஆனாலும், குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம். எடுத்துக்காட்டாக, வாஷிங்டனுக்கு வெளியே வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்ற அரசாங்கம் முடிவு செய்தால், சில அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அதாவது அந்த அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு செல்ல முடியாது என்பது அதற்கு காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் - யார் இவர்?21 ஜனவரி 2025 ரஷ்யாவில் விநோதம்: - 50 டிகிரி செல்சியஸ் உறைய வைக்கும் குளிரில் மாரத்தான்21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பும் நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவின் விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ. உள்ளது 5. ஊடகம் மற்றும் சிவில் சமூகம் டிரம்ப் முதன் முறையாக அதிபராகப் பதவியேற்ற போது, அவரது நிர்வாகத்தை ஊடகங்கள் விமர்சித்தன. இது தவிர, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் அவரது அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கின. ஆனால், ஊடக சூழல் சற்று மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் எத்தனை முறை பொய் சொன்னார் அல்லது தவறான தகவல்களை அளித்தார் (நான்கு ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை) என்ற பதிவை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இம்முறை இதற்கு மாறாக, அமெரிக்கத் தேர்தல் குறித்த தனது தினசரி தலையங்கத்தை வெளியிடுவதில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் முடிவெடுத்தது. இதற்கு முன்பு அதன் தலையங்கத்தில், தேர்தல்கள் குறித்த தனது கருத்தை வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை விளம்பரப்படுத்த, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை திட்டமிட்டிருந்தது. லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் எனும் மற்றொரு பாரம்பரிய தாராளவாத செய்தித்தாளும் இதே அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது. மறுபுறம், அமேசான் நிறுவனர் மற்றும் தி வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ், புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்பைச் சந்தித்தார். ஆனால் பல ஊடக நிறுவனங்கள் டிரம்ப் அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் விமர்சன நிலைப்பாட்டை தக்கவைத்து வருகின்றன. இது தவிர, அமெரிக்கன் சிவில் லிபெர்ட்டிஸ் யூனியன் (ஏசிஎல்யூ) போன்ற பல சிவில் சமூக அமைப்புகள் குறித்தும் இதே போன்ற கருத்தைக் கூற முடியும். 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, புதிய அதிபரான டிரம்ப் முன்மொழிந்துள்ள சில திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அதன் நோக்கங்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்ப் முதல்முறையாக பதவியேற்றபோது, அவரது நிர்வாகத்திற்கு எதிராக 430 முறை சட்ட நடவடிக்கை எடுத்தோம். அவரை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான வியூகம் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது. மற்றொரு அறிக்கையில், "இந்த முறை அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், 2020-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகும் போது அவர் கூறிய கொள்கைகளை மீண்டும் அமல்படுத்துவார் என்றும் அர்த்தமாகும். அதாவது, அதிகமான புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள். மறுபுறம் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளைக் குறிவைக்க அரசாங்கத்தைப் பயன்படுத்துவார்" எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. புத்தர் பிறந்த லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள் - பிபிசி கள ஆய்வு17 ஜனவரி 2025 ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்திலும் சிவில் நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 6. குடிமக்களின் முன்னுரிமைகள் ட்ரம்ப் தனது அரசாங்கத் திட்டங்களை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பது, அவரது திட்டங்கள் குடிமக்களின் உண்மையான சிக்கல்களோடு எவ்வளவு தூரம் பொருந்துகின்றன என்பதையும், அந்தச் சிக்கல்களை டிரம்ப் எந்தளவுக்கு புரிந்துகொள்கிறார் என்பதையும் பொறுத்தது. இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் டிரம்ப் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும், அவர் உண்மையில் குடிமக்களிடமிருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன், "டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இது தான் உண்மை. ஆனால் மொத்த வாக்காளர்களில் பாதி கூட இல்லாத 49.9 சதவீத பாப்புலர் வாக்குகளையே டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிவை விட 1.5 சதவீத வாக்குகளே கூடுதல் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் கிடைத்த மிக நெருக்கமான வெற்றிகளில் இதுவும் ஒன்று" என்று டிரம்பின் வெற்றியைக் குறிப்பிடுகிறார். தேர்தலில் டிரம்ப்பை ஆதரித்த வாக்காளர்கள் கூட, அவரது தீவிர யோசனைகள் அல்லது அவர் முன்மொழிந்த திட்டங்களை ஆதரிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் டிரம்பின் ஆதரவாளர்களில் பலரும், "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குதல்' (மேக் அமெரிக்கா கிரேட் அகைன்) எனும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் டிரம்ப் என்ன செய்ய விரும்பினாலும் அதை ஆதரிப்பார்கள். மற்றொரு குழுவில் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் டிரம்பை அதிகம் விரும்புவதில்லை, ஆனால் அவர் ஒரு பழமைவாதி என்பதால் அவரை ஆதரிக்கின்றனர். அவர்கள் வரி குறைப்பு மற்றும் குறைவான கட்டுப்பாடுகளில் ஆர்வமாக உள்ளனர்" என்பது நிபுணர்களின் கூற்றாகும். "பணவீக்கம் அதிகரித்து வருவதால் டிரம்பிற்கு வாக்களித்த ஒரு குழுவும் உள்ளது. அவர்கள் மாற்றத்தை விரும்பினர், டிரம்ப் மட்டுமே அவர்களுக்கு ஒரே வழி" என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். "அவர்களில் பலர் ஒபாமாகேரை முடிவுக்குக் கொண்டுவருவது, சிவில் சேவைகளை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற முடிவுகளில் டிரம்பை ஆதரிக்க மாட்டார்கள்" என்று பேராசிரியர் பீட்டர்சன் விவரிக்கின்றார். இது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை. இந்தச் சூழல், டிரம்பின் பிரபலத்தை மட்டும் பாதிக்காது. 2026-ஆம் ஆண்டில் நடக்கவுள்ள அடுத்த முக்கியமான தேர்தலிலும் குடியரசுக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். "டிரம்ப் தேவைகளுக்கு ஏற்ப மாறுபவர் மற்றும் தனது இலக்குகளை அடையாததற்காக மற்றவர்களைக் குறை கூறுபவர்" என பீட்டர்சன் பதிலளிக்கிறார். "டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் தொடக்கத்தில், ஒபாமாகேரின் செல்வாக்கு அதிகரித்த போது, டிரம்ப் அரசாங்கம் அதை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தது. ஆனால் இறுதியில், சில மாற்றங்களுடன் அவர்களின் முடிவில் இருந்து டிரம்ப் நிர்வாகம் பின்வாங்க வேண்டியிருந்தது" என பேராசிரியர் பீட்டர்சன் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwye74p79gqo
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத வரி - டிரம்ப் அறிவிப்பு Published By: RAJEEBAN 22 JAN, 2025 | 11:00 AM சீனாவை இலக்குவைத்து மேலும் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பெப்ரவரி முதலாம் திகதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிற்கும் பத்துவீத இறக்குமதியை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மெக்சிக்கோ கனடாவிலிருந்து வரும் பொருட்களிற்கு 25 வீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி பின்னர் சீன பொருட்கள் மீதான வரிகள் குறித்துஅறிவித்துள்ளார். சீனாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களிற்கும் 60 வீத வரியை விதிப்பேன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்திருந்தார். சீனாவிலிருந்து மெக்சிக்கோ கனடா வழியாக அதிகளவு பெண்டானையில் வருகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் வரிகளை அதிகரித்தால் சீனா இந்த ஆபத்தான போதைபொருளை கட்டுப்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204512
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ BAN 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK NZ Select NZ NZ BAN Select BAN 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG Select AFG Select AFG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) AFG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yashasvi Jaiswal 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mitchell Starc 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) David Miller 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
-
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்
Published By: VISHNU 21 JAN, 2025 | 06:41 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந் துள்ளதுடன் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்தொழல் பாதிக்கப்பட்டதுடன் மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களுக்கு; வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ம் திதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. இந்த நிலையில் வெள்ளத்தினால் மாவட்டதிலுள்ள தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து 3737 குடும்பங்களைச் சோர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டதுடன் 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 9 முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்டதிலுள்ள பல பிரதேசத்திகளில் வீதிக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்தும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்குமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதுடன் அதற்கான படகு சேவைககள் இடம்பெற்று வருகின்றது. இந்த வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதுடன் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தினால் இன்னும் பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழைபெய்துவருவதால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/204482
-
மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை சேவையை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம்
Published By: DIGITAL DESK 2 21 JAN, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை இயக்குவதற்கான ஆலோசனை சேவையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான அலைதாங்கியை நீடிப்பதற்கான விபரங்களுடன் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆலோசனை சேவைகளுக்கான நிதி மற்றும் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குறிகாட்டிகளுக்கமைய விருப்பக் கூற்றுப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 20 விண்ணப்பதாரிகள் விருப்பக் கூற்றுப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், 7 விண்ணப்பதாரிகள் முன் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளனர். அவற்றில் 5 நிறுவனங்கள் விபரங்களுடன் கூடிய முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர். தொழிநுட்ப விபரக்கூற்றுக்களைப் பூர்த்தி செய்துள்ள 03 நிறுவனங்களின் நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், குறித்த ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தத்தை எம்.எஸ். தொஹ்வா எஞ்சினீரிங் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/204465
-
ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஓ'கலஹன் ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும். இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சி அல்ல. இது சூரிய மண்டலத்தில் நமக்கான இடம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும். விண்வெளியில் இருந்து எரிந்தபடி விழுந்த 'ராட்சத வளையம்' - எங்கிருந்து வந்தது? ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு 1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அரிய வால் நட்சத்திரம் - வெறுங்கண்களால் எங்கே, எப்படி பார்ப்பது? கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா? ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிகழும் வானியல் அதிசயங்கள் புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன. அதே நேரம் யுரேனஸ் மற்றும் நெப்டியூனை காண பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் தேவைப்படும். இந்த நிகழ்வு நடப்பதை நாம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காணலாம். கிரகங்கள் உண்மையில் நேர் கோட்டில் இல்லை. சூரிய மண்டலத்தில் அவற்றின் சுற்றுப்பாதை காரணமாக அவை வானில் அரைவட்ட வடிவில் தென்படும். இவ்விரு மாதங்களில் தெளிவான இரவுகளின் போது புதன் கோளை தவிர மற்ற கோள்கள் அனைத்தையும் காணமுடியும். இந்நிகழ்வை கோள்களின் அணிவகுப்பு என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும். "கோள்களை உங்களது கண்களால் காண்பதில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது", என்கிறார் பிரிட்டனில் அமைந்திருக்கும் ஃபிப்த் ஸ்டார் லேப்ஸ் நிறுவனத்தின் வானியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான ஜெனிஃபர் மிலார்ட். "நீங்கள் கூகுள் செய்து இந்த கோள்களின் சிறப்பான காட்சிகளை பார்க்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் நேரடியாக காணும் போது, விண்ணில் பல லட்சம் அல்லது கோடி மைல்கள் கடந்து வந்த போட்டான்கள் உங்கள் விழித்திரையை தொடுகின்றன." கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளி 'சஞ்சய் ராய்க்கு' ஆயுள் தண்டனை20 ஜனவரி 2025 சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன?21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? காண்பதற்கு அற்புதமாக தோன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? அல்லது சூரிய மண்டலம் மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவற்றை குறித்த நமது புரிதலை அதிகரிக்க இந்நிகழ்வுகள் பயன்படுகின்றனவா? உண்மையில், "அவை அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் இந்த நிலையில் இருப்பது தற்செயலானதுதான்" என்கிறார் மில்லார்ட். இதுபோன்ற கோள்களின் வரிசை பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தாலும், அந்த கூற்றுகள் அறிவியல் அடிப்படையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் கோள்களின் ஒத்திசைவு சூரிய செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர், சூரியனைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளில் ஒன்று- சூரியன் உச்ச செயல்பாடு(நாம் தற்போது இருப்பது) மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு என 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதற்கு என்ன காரணம்? என்பது. இதற்கு வெள்ளி, பூமி மற்றும் வியாழன் கோள்களில் ஏற்படும் கூட்டு அலைஈர்ப்பு பதிலாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார் இயற்பியலாளர் ஃபிரான்க் ஸ்டெபானி. ஜெர்மனியின் டிரெஸ்டென்- ரோஸண்டார்ஃப்-பில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஜெண்ட்ரம் ஆய்வு மையத்தில் அவர் பணிபுரிகிறார். சூரியன் மீதான ஒவ்வொரு கோளின் அலைஈர்ப்பு மிகவும் குறைவானது என்ற போதிலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் சூரியனுடன் ஒரே வரிசையில் இருக்கும் போது, இது சிசிஜி(syzygy) என அறியப்படுகிறது. அவை ஒருங்கிணைந்து நட்சத்திரத்திற்குள் 'ராஸ்பி வேவ்ஸ்' எனப்படும் சிறிய சுழற்சிகளை ஏற்படுத்துகின்றன. அதன் மூலம் வானிலை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என சொல்கிறார் ஸ்டெபானி. "பூமியில் ராஸ்பி அலைகள் சூறாவளிகளையும், எதிர் புயல்களையும் உருவாக்குகின்றன," என்கிறார் ஸ்டெபானி. "சூரியனிலும் இதே ராஸ்பி அலைகள் இருக்கின்றன." வெள்ளி, பூமி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் ஒத்திசைந்து 11.07 ஆண்டுகள் என்ற கால இடைவெளியில் சூரிய ஆற்றல் செயல்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்டெபானியின் கணக்கீடுகள் காட்டுகின்றன. இது நாம் காணும் சூரிய செயல்பாட்டு சுழற்சியை கிட்டத்தட்ட மிகச்சரியாக ஒத்திருக்கிறது. இந்த கருத்து சரியானதுதானா என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. சூரியனுக்குள் மட்டும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நடைமுறைகள் மூலமே சூரிய செயல்பாட்டை விளக்க முடியும் என சிலர் கூறுகின்றனர். "கோள்கள் சூரிய செயல்பாட்டில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன என்பதற்கு கவனிக்கப்பட்டவரை ஆதாரங்கள் இல்லை" என்கிறார் இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை 2022ஆம் ஆண்டு வெளியிட்ட ராபர்ட் கேமரன். அவர் ஜெர்மனியின் சூரிய மண்டல ஆய்வுக்கான மேக்ஸ் பிலான்க் நிறுவனத்தில் சூரிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். "எந்த வகையான ஒத்திசைவுக்கான எந்த ஆதாரமும் இல்லை," என்றும் அவர் கூறுகிறார். பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே கொடுக்கும் ஆண் - பூச்சிகள், பறவைகளில் என்ன நடக்கிறது?5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா, சௌதி அரேபியா மற்றும் உலகிற்கு டிரம்ப் ஆட்சிக் காலம் எப்படி இருக்கும்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டு செவ்வாய், வியாழனை வெறும் கண்களால் காணமுடிந்தது. ஆனால் ஜனவரி 2025-ல் வெள்ளி, சனி, யுரேனஸ்,மற்றும் நெப்டியூன் கோள்களையும் காணமுடியும் வானியல் ஆராய்ச்சிக்கு உதவும் வானியல் நிகழ்வு ஆனால் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக சர்ச்சைகளற்ற கோள்களின் ஒத்திசைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அறிவியல்பூர்வ ஆய்வுகள் குறிப்பாக சூரிய மண்டலத்தை ஆராய்வதில் அவை பயனுள்ளவையாக இருக்கின்றன. "சாதகமான இடத்தில் உள்ள வியாழன் போன்ற கோளின் ஈர்ப்பு விசை, ஒரு விண்கலத்தை உண்டி வில் போல் வெளிநோக்கி செலுத்துவதற்கு பயன்படுத்துவது, விண்கலத்தின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். " தொலைதூரத்தில் உள்ள கோள்களை விண்கலம் மூலம் சென்றடைவது கடினமாக இருக்க காரணம், அவை பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளன என்பதுடன் அவற்றை சென்றடைய பல பத்தாண்டுகள் ஆகும். அதே சாதகமான இடத்தில் உள்ள வியாழன் போன்ற கோளின் ஈர்ப்பு விசை, ஒரு விண்கலத்தை வெளிநோக்கி உண்டிவில் போல் விசையுடன் செலுத்துவதற்கு பயன்படுத்துவது, பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். இதை நாசாவின் வாயேஜர் விண்கலன்கள் போல் வெறு எந்த விண்கலமும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என சூரிய மண்டலத்தின் வெகுதொலைவில் உள்ள நான்கு கிரகங்களும் 1977ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் வானில் தோன்றின. அந்த சமயத்தை பயன்படுத்தினால் அக்கோள்களுக்கு 12 ஆண்டுகளிலேயே சென்றுவிடலாம் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். 1966-ஆம் ஆண்டில் கேரி ஃபிளான்ரோ என்ற நாசா விஞ்ஞானி தான் அவர். இந்த ஒத்திசைவு நேரத்தில் இல்லாவிட்டால் இந்த நான்கு கோள்களுக்கு சென்று திரும்ப 30 ஆண்டுகள் ஆகும். 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ஏற்படும் இந்த சாதகமான அமைப்பு, சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய 1977ஆம் ஆண்டு வாயேஜர் 1 மற்றும் 2 இரட்டை விண்கலத்தை நாசா ஏவ காரணமாக அமைந்தது. வாயேஜர் 1 விண்கலம் 1979ஆம் ஆண்டு வியாழனையும், 1980ஆம் ஆண்டு சனி கோளையும் கடந்தது. சனி கோளின் நிலவான டைட்டனை கடந்து சென்று ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் விரும்பியதால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை வாயேஜர் 1 தவிர்த்துவிட்டது. ஆனால் வாயேஜர் 2, கோள்களின் ஒத்திசைவை பயன்படுத்திக் கொண்டு நான்கு கோள்களையும் சென்றடைந்தது. யுரேனஸ் மற்றும் நெப்டியூனை 1986 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் கடந்து வரலாற்றில் இவ்விரு கிரகங்களையும் கடந்த ஒரே விண்கலம் என்ற பெயரை பெற்றது. "அது சிறப்பாக செயல்பட்டது" என்கிறார் அமெரிக்காவின் போல்டரில் உள்ள கொலரேடோ பல்கலைக்கழகத்தில் வானியல் இயற்பியலாளராக உள்ள பிரான் பேகெனல். " வாயேஜர் 2 விண்கலம் 1980ஆம் ஆண்டு புறப்பட்டு சென்றிருந்தால் அது நெப்டியூனை அடைய 2010ஆம் ஆண்டு ஆகியிருக்கும். அப்படி செய்வதற்கு ஆதரவு கிடைத்திருக்கும் என தோன்றவில்லை. அப்படி செய்வதற்கு யார் நிதியளிக்கப் போகிறார்கள்?" என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். பாகிஸ்தானில் அதிக அளவில் தங்கம் கிடைப்பதாக கூறப்படுவது உண்மையா?21 ஜனவரி 2025 3 ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் முதல் கோல்ஃப் வீராங்கனை - யார் இவர்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது சூரிய மண்டலத்தில் கிரகங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால் அவற்றில் பல சில நேரங்களில் வான்வெளியில் ஒரே நேரத்தில் ஒரே கோட்டில் தெரியும். அண்டை சூரிய குடும்பத்தையும் ஆராய உதவும் வானியல் நிகழ்வு இது கோள்களின் இணைவு நமது சூரிய மண்டலத்திற்குள் மட்டும் பயன்படுவதில்லை. பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய கோள்களின் இணைவை வானியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் புறக்கோள்களை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற உலகங்களை கண்டறிய பெயர்ச்சி முறை என்ற நடைமுறை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. நமது பார்வையில் ஒரு நட்சத்திரத்தின் முன்புறமாக புறக்கோள் ஒன்று கடக்கும் போது அது நட்சத்திரத்தின் ஒளியை மங்கச் செய்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு அந்த புறக்கோளின் அளவு மற்றும் சுற்றுப்பாதை கண்டறியப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட சில நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்களை நாம் கண்டறிந்திருக்கிறோம். பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள டிராபிஸ்ட் -1 எனப்படும் செந்நிற குறுவிண்மீனைச் சுற்றி பூமி அளவில் 7 கோள்கள் நமது பார்வையில் படும்படி சுற்றி வருகின்றன. அந்த மண்டலத்தில் உள்ள கோள்கள் ஒத்திசைவுடன் உள்ளன. அதாவது வெளிப்புறத்தில் உள்ள கோள் அதற்கு அடுத்து உட்புறம் உள்ள கோளின் மூன்று சுழற்சிகளுக்கு, இரண்டு சுழற்சிகளை நிறைவு செய்கிறது, அதன் பின் நான்கு, ஆறு என தொடர்கிறது. இதனால் பல கோள்கள் ஒரே நேர் கோட்டில் வரும் காலங்கள் இருக்கின்றன. ஆனால் இதுபோல் நமது சூரிய மண்டலத்தில் ஏற்படுவதில்லை. பெயர்ச்சிகளை பயன்படுத்தி இது போன்ற கோள்களில் காற்றுமண்டலம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யமுடியும். "காற்று மண்டலம் உள்ள ஒரு கோள் ஒரு நட்சத்திரத்தின் முன் சென்றால், கோளின் காற்று மண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்கள் குறிப்பிட்ட ஒரு அதிர்வலையில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன." என்கிறார் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நாசா புறக்கோள்கள் அறிவியல் மையத்தில் வானியலாளராக உள்ள ஜெஸ்ஸி கிறிஸ்டியன்ஸன். இது கார்பன் டைஆக்ஸைடு, ஆக்ஸிஜன் போன்றவற்றை கண்டறிய பயன்படுகிறது. "காற்றும ண்டலத்தின் கலவை தொடர்பான எங்களது பெரும்பாலான ஆய்வுகள் இதுபோன்ற கோள்களின் ஒத்திசைவாலேயே முடிந்தது," என்கிறார் அவர். சென்னை பரந்தூர் போராட்ட குழுவினருடன் விஜய் இன்று சந்திப்பு - இன்றைய முக்கிய செய்திகள்20 ஜனவரி 2025 அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்ட பெண்கள் - என்ன காரணம்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சனி கோளின் நிலவான டைட்டனை கடந்து சென்று ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் விரும்பியதால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை வாயேஜர் 1 தவிர்த்துவிட்டது இவற்றைவிட பெரிய இணைவுகள் தொலைதூரத்தில் உள்ள பிரபஞ்சத்தை, அதாவது விண்மீன் குழுக்களை ஆய்வு செய்ய உதவுகிறது. ஆரம்ப கால விண்மீன் குழுக்கள் வெகு தொலைவாகவும், மங்கலாகவும் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்வது கடினம். ஆனால் தொலைதூர ஆரம்பகால பிரபஞ்சத்தை நோக்கிய நமது பார்வைக்கு குறுக்கே ஒரு பெரிய விண்மீன் குழுவோ, குழுக்களோ கடந்தால் அதன் வலுவான ஈர்ப்புவிசை, தொலைதூரத்தில் உள்ள பொருளின் ஒளியை பெரிதாக்கி , அதை நாம் ஆய்வு செய்ய உதவும். இதை 'கிராவிடேஷனல் லென்சிங்' என அழைக்கிறார்கள். "இவை பிரபஞ்சத்தின் அளவுகோலில் மிகப்பெரிய ஒத்திசைவுகளாகும்," என்கிறார் கிறிஸ்டியன்சென். பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள இயரெண்டெல் (Earendel) விண்மீன் குழு உள்ளிட்டவற்றையும் தொலைதூர நட்சத்திரங்களையும் காண்பதற்கு ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் போன்ற டெலஸ்கோப்கள் இந்த இணைவுகளை காண பயன்படுத்துகின்றன. பிரபஞ்சத்தின் 13.7 பில்லியன் வருட வரலாற்றில் முதல் 100 கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட ஒளிதான் டெலஸ்கோப்பால் பார்க்கப்பட்டது. கிராவிடேஷனல் லென்சிங் இருந்ததால்தான் இது சாத்தியமானது. நமது பார்வையில் புறக்கோள்கள் ஒன்றையொன்று கடக்கும்போது பிற நட்சத்திர குடும்பங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வது போன்ற வேறு சில நூதன பயன்களும் கோள்களின் ஒத்திசைவுகளால் ஏற்படுகின்றன. பூமியிலிருந்து நமது சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் போன்ற கோள்களுக்கு செல்லும் விண்கலங்களுடன் தொடர்பு கொள்ள நாம் சமிக்ஞைகளை அனுப்புவது போல், டிராபிஸ்ட் 1 அமைப்பில் உள்ள உலகங்களுக்கு மத்தியில் ஏதேனும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இந்த கோள் ஒத்திசைவுகளை கடந்த 2024-ஆம் ஆண்டில் பயன்படுத்தினார் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக பட்டதாரி மணவர் நிக் டுசே என்பவர். "எந்த இரண்டு கோள்களும் ஒரு கோட்டில் வரும் எந்த சந்தர்ப்பமும் ஆர்வமூட்டக்கூடியதுதான்." என்கிறார் டுசே. இம்முறை அந்த தேடல்களில் வெற்றி கிட்டவில்லை. ஆனால் இதேபோல் வேற்றுலக உயிரினங்கள் நம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்தால் இதே போன்ற நோக்கத்திற்கு இதே ஒத்திசைவுகளை பயன்படுத்தக்கூடும். இம்மாத கோள்களின் வரிசை உங்களது பார்வையை பொறுத்தது என்றாலும்- நமது அமைப்பில் நீங்கள் சரியான கோணத்தில் இருந்தால் எந்த இரண்டு கோள்களையும் நேர் கோட்டில் கொண்டுவர முடியும்- மறுபுறத்திலிருந்து வேறு யாரோ கவனித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்வது சாத்தியமான ஒன்றுதான். "அவர்களது ஆய்வை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என வேற்றுக்கிரகவாசிகள் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது." என்கிறார் டுசே. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckg019y8g9lo
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல்; பொ.ஐங்கரநேசன் ஆதங்கம் 21 JAN, 2025 | 03:19 PM இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள்கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் அழுத்தங்களைப் பிரயோகித்தபோது மாநகரசபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இப்போது, இரு சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திடுதிப்பென்று நிகழ்ந்த இப்பெயர் மாற்றம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா நாசுக்காக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது என்றே எண்ண வைத்துள்ளது. சமயச்சாயத்தை தன் மீது ஒருபோதும் பூசிக்கொள்ளாத திருவள்ளுவரின் பெருமையை ஈழத்தமிழ் மக்கள் எப்போதும் போற்றுபவர்களாகவே உள்ளார்கள். அவர் தமிழுக்குத்தந்த பெரும் கொடையாம் திருக்குறளின் மகிமையை ஈழத்தமிழ் மக்கள் ஒரு போதும் மறவார்கள். இதனாலேயே, தமிழகத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப்போன்று அத்தனை குறள்களையும் காலத்தால் அழியாதவாறு கருங்கல்லில் பொறித்து திருக்குறள் வளாகம் ஒன்றைச் சிவபூமி தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன் யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார். ஆனால், இத்தகைய பெரும் பற்றைத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடையே யாழ் கலாச்சார மையத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளமை பெரும் அதிருப்தியையே தோற்றுவித்துள்ளது. யாழ். கலாசார மையம் தனித்துவமானதெனத் திறப்புவிழாக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று அது இந்தியா எமக்கு உவந்தளித்த தனித்துவமான பெரும் கொடையே ஆகும். ஆனால், அதன் தனித்துவம் நெடிதுயர்ந்த அழகான அதன் கட்டுமானங்களால் மாத்திரம் உருவானதன்று. பண்பாட்டுச் செழுமையும் பாரம்பரியமும் மிக்க யாழ்ப்பாணம் என்ற பெயரைச் சூடியிருப்பதும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அளப்பரிய ஓர் சிறப்பாகும். இப்போது, பெயர் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அதன் தனித்துவம் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்பதே நிதர்சனம். அது மட்டுமல்ல, இப்பெயர் மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையிலும் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/204443
-
சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து குழந்தை சடலமாக மீட்பு!
Published By: DIGITAL DESK 2 21 JAN, 2025 | 01:04 PM சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/204430
-
2024 ஆம் ஆண்டில் 386 யானைகள் உயிரிழப்பு!
21 JAN, 2025 | 05:12 PM கடந்த 2024 ஆம் ஆண்டில் 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 81 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 11 யானைகளும், நீரில் மூழ்கி 10 யானைகளும், கிணற்றில் தவறி விழுந்து 07 யானைகளும், யானை வெடி வெடித்ததில் 51 யானைகளும் உயிரிழந்துள்ளன. இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204467
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள் - இந்தியாவை பாதிக்கும் ஒரு அறிவிப்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். 21 ஜனவரி 2025, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 21 ஜனவரி 2025, 02:47 GMT அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார். டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் "எதிர்காலம்" எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார். "அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றார் அவர். டிரம்பின் முதல் உரையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம். "அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலை" அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கவுள்ளது என்றும் டிரம்ப் கூறினார். மேலும், "மெக்சிகோவிலேயே இருங்கள்" என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மற்றும் எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். இது தவிர, விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் " அமெரிக்க வளைகுடா" என மாற்றப்படும் என்றார் டிரம்ப். உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா? பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே கொடுக்கும் ஆண் - பூச்சிகள், பறவைகளில் என்ன நடக்கிறது? தொலைதூர தீவில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் - ஏன்? டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன? பனாமா கால்வாய் - சீனாவை சாடும் டிரம்ப் பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது "ஒரு முட்டாள்தனமான பரிசு" என்று குறிப்பிட்ட டிரம்ப், "பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது" என்று கூறினார். அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை, திரும்பப் பெறுவோம் என்றும் தெரிவித்தார். அவர் இதை கூறிய போது, கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னாள் அதிபர் பைடனும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் எந்த எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். கடந்த மாதம், டிரம்ப், பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பனாமாவை வலியுறுத்தியிருந்தார். பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் இந்த கால்வாய் தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த கால்வாய் மீது சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று பனாமா அதிபர் கூறுகிறார். கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா?18 ஜனவரி 2025 அமெரிக்கா: காட்டுத்தீயில் பிழைத்த ஆடுகளை கண்டதும் உணர்ச்சிவயப்பட்ட உரிமையாளர்19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். "அமெரிக்க விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வார்கள்" டிரம்ப், அமெரிக்காவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று பேசினார். அமெரிக்கா தனது செல்வத்தை பெருக்கும், தனது எல்லையை விரிவுபடுத்தும், செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும் என்று அவர் உறுதிபூண்டார். "நாங்கள் நட்சத்திரங்களை அடைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றுவோம்," என்று அவர் கூறினார். மத்திய கிழக்கு விவகாரம் : டிரம்ப் கூறியது என்ன? மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பேன் என்று டிரம்ப் தனது தொடக்க உரையில் கூறினார். காஸாவில் ஹமாஸிடம் பணய கைதிகளாக இருந்த மூன்று இஸ்ரேலியர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்ததை அவர் குறிப்பிட்டு பேசினார். "உலகின் மிகப் பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மதிப்புக்குரிய நாடாக அமெரிக்கா அதன் சரியான இடத்தை மீண்டும் பெறும். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்" என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமா? பைடன், இரான் கூறுவது என்ன?20 ஜனவரி 2025 அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்ட பெண்கள் - என்ன காரணம்?20 ஜனவரி 2025 பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/ EPA படக்குறிப்பு, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இரு பாலினங்கள் மட்டுமே இன்று முதல் அமெரிக்க அரசு கொள்கையின் படி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே இருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். பைடன் தலைமையிலான நிர்வாகம், புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். பிபிசி ராஜதந்திர விவகார நிருபர் பால் ஆடம்ஸ் இந்த உரை உலகிற்கு டிரம்பின் தீர்க்கமான செய்தியை தெரிவிக்கிறது என்று குறிப்பிடுகிறார். டிரம்பின் பேச்சு உலக அரங்கில் அமெரிக்காவின் பலம் மற்றும் சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டும் ஒரு வலுவான செய்தியை அளித்துள்ளது என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் டிரம்ப் பேசினார். கட்டணங்கள் குறித்தும் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "மற்ற நாடுகளுக்கு வரி மற்றும் கட்டணங்கள் விதித்து நமது மக்களை பணக்காரர்களாக்குவோம்" என்று டிரம்ப் கூறுகிறார். 'ஆரியரே உயர்ந்தவர்' என்ற ஹிட்லரின் கொள்கையை ஜெர்மனியிலேயே எதிர்த்து நின்ற இந்தியப் பெண்21 ஜனவரி 2025 கடாஃபி: விவசாயி மகன் 'ராஜாக்களின் ராஜா' ஆனது எப்படி? 42 ஆண்டு ஆட்சியும் வீழ்ச்சியும் கடைசி நிமிடங்களும்19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பணவீக்கம் மற்றும் எரிசக்தி தேவைகள் அதிகரிப்பது குறித்தும் டிரம்ப் பேசினார். தேர்தல் பிரசாரத்தில் இவற்றை முக்கிய பிரச்னைகளாக அவர் முன்வைத்திருந்தார். பணவீக்கத்தை குறைக்கவும், செலவுகள் மற்றும் விலையை விரைவாகக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தனது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துவதாக அவர் கூறினார். டிரம்ப் "தேசிய எரிசக்தி அவசரநிலையை" அறிவிப்பதாகவும் கூறினார். தனது ஆட்சியில் அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்கான வாக்குறுதியை அளித்தார். அமெரிக்கா மீண்டும் 'பொருட்களின் உற்பத்தி மையமாக' மாறும் என்றார். உலகிலேயே அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்துவோம் என்று டிரம்ப் கூறினார். 'டிரில் பேபி டிரில்' என்ற கோஷத்தையும் முன் வைத்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு இனி வரும் காலங்களில் இந்தியாவையும் பாதிக்கும். எண்ணெய் நுகர்வில் உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36074zj2gyo
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
டிரம்ப் பதவியேற்பு விழா: கேமராவில் உறைந்த வரலாற்றுத் தருணங்கள் பட மூலாதாரம்,JULIA DEMAREE NIKHINSON/AFP படக்குறிப்பு, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். மகத்தான பாரம்பரியம் கொண்ட அந்த நிகழ்வின் சில குறிப்பிடத்தக்க சில புகைப்படங்களை இங்கே காணலாம். பட மூலாதாரம்,ANDREW HARNIK/GETTY IMAGES விழாவில் கடைசி நிமிட மாற்றம் இந்த விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் நடைபெறும். முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த விழாவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், -13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் குளிர் காற்றுடன் உறைபனி குறித்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், இந்த விழா நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டா அரங்குக்குள் மாற்றப்பட்டது. விழாவைக் காண தலைநகருக்குச் சென்ற டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பை கண்டனர். பட மூலாதாரம்,KENNY HOLSTON/POOL/REUTERS படக்குறிப்பு, ரோட்டுண்டா அரங்கு டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன? இலங்கை ஜனாதிபதியின் சீன பயணத்தை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா - என்ன காரணம்? இந்தியா, சௌதி அரேபியா மற்றும் உலகிற்கு டிரம்ப் ஆட்சிக் காலம் எப்படி இருக்கும்? யுக்ரேன், நேட்டோ, இஸ்ரேல் மீதான டிரம்பின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? தேவாலயத்தில் பிரார்த்தனை பட மூலாதாரம்,JEENAH MOON/REUTERS படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் பதவியேற்புக்கு முந்தைய இரவை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து பென்சில்வேனியா அவென்யூவுக்கு சற்று குறுக்கே உள்ள பிளேயர் மாளிகையில் கழித்தார். இது புதிதாக பொறுப்பேற்கும் அதிபர்களுக்கான பாரம்பரியமாகும். டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் பொறுப்பேற்க இருக்கும் துணை அதிபர் ஜே டி வான்ஸ், அவரது மனைவி உஷா ஆகியோர் செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பட மூலாதாரம்,JEENAH MOON/REUTERS படக்குறிப்பு, ஜே டி வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் பட மூலாதாரம்,CARLOS BARRIA/REUTERS படக்குறிப்பு, ஜே டி வான்ஸ் மற்றும் டிரம்ப் பிரார்த்தனையில் பங்கேற்ற போது. காஸா: போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி? பிபிசிக்கு கிடைத்த தகவல்18 ஜனவரி 2025 இந்திய கடற்படையில் 3 போர்க் கப்பல்கள் சேர்ப்பு - இந்திய பெருங்கடலில் சீனாவின் சவாலை சமாளிக்க முடியுமா?19 ஜனவரி 2025 ரோட்டுண்டா விழா பட மூலாதாரம்,SHAWN THEW/POOL/AFP படக்குறிப்பு, பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஈலோன் மஸ்க் ( வலதுபுறத்தில் முதலில் இருப்பவர்) நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டாவில் நடந்த விழாவில் முன்னாள் அதிபர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், டிரம்பின் குடும்பத்தினர் மற்றும் அவரது புதிய நிர்வாகத்திற்கு டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர். பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா (வலதுபுறத்தில் முதலில் இருப்பவர்) இந்நிகழ்வில் பங்கேற்றார். பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/REUTERS படக்குறிப்பு, டிரம்பின் மகள் இவாங்கா, தந்தையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/AFP டிரம்பின் தொடக்க உரையைத் தொடர்ந்து நாட்டுப்புற இசை நட்சத்திரம் கேரி அண்டர்வுட் "அமெரிக்கா தி பியூட்டிஃபுல்" என்ற பாடலை பாடினார். ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,EVELYN HOCKSTEIN/REUTERS இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மைலி ஆகியோர் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்களாவர். பட மூலாதாரம்,SAUL LOEB/POOL/AFP இந்த நிகழ்வில், ஜே டி வான்ஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். பட மூலாதாரம்,SHAWN THEW/POOL/AFP விழா முடியும் முன்பு, பாதிரியார் லொரென்சோ செவெல் ஆசி வழங்கி துதிப்பாடல் பாடினார். பட மூலாதாரம்,JULIA DEMAREE NIKHINSON/AFP டிரம்ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, குடும்பத்தினருடன் கொண்டாடினார். பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/EPA தனது தொடக்க உரையில், குடியேற்றத்தை சமாளிப்பது, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக்கொள்வது மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை நாட்டுவது உள்ளிட்ட தனது அதிபர் பதவிக்கான திட்டங்களை டிரம்ப் அறிவித்தார். வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்16 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 பொதுமக்கள் எதிர்வினை பட மூலாதாரம்,AMANDA PEROBELLI/REUTERS பட மூலாதாரம்,AMANDA PEROBELLI/REUTERS கேபிடல் ஒன் அரங்கில் இருந்த டிரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். மயாமி உள்ளிட்ட நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள், பதவியேற்ற விழாவை ஒன்றாக கூடி காணும் நிகழ்வுகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பட மூலாதாரம்,CRISTOBAL HERRERA-ULASHKEVICH/EPA-EFE குளிர் காலத்தில் காய்ச்சலா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?19 ஜனவரி 2025 டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?18 ஜனவரி 2025 பட மூலாதாரம்,JACK GRUBER/POOL/REUTERS விழாவுக்குப் பிறகு, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர். பட மூலாதாரம்,ANNA ROSE LAYDEN/EPA-EFE படக்குறிப்பு,ஹெலிகாப்டரில் ஜோ மற்றும் ஜில் பைடன் புறப்பட்டனர். பட மூலாதாரம்,JOE RAEDLE/GETTY IMAGES ஜோ மற்றும் ஜில் பிடன் ஹெலிகாப்டரில் வெளியேறிய போது உஷா வான்ஸ், ஜே.டி.வான்ஸ், டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ezg3x6y8jo
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்; மலேசியாவுடனான போட்டியில் இலங்கைக்கு அமோக வெற்றி 19 JAN, 2025 | 12:39 PM (நெவில் அன்தனி) கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 139 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய இலங்கை, இந்த வெற்றி மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துகொண்டுள்ளது. இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இரண்டாம் நாள் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. தஹாமி சனெத்மாவின் பொறுமையான துடுப்பாட்டம், சஞ்சனா காவிந்தியின் அதிரடி துடுப்பாட்டம், சமுதி ப்ரபோதா, ரஷமி செவ்வந்தி, லிமன்சா திலக்கரட்ன ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றிபெறச்செய்தன. மலேசியாவினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது. 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்களாதேஷுக்கு எதிராக 4 விக்கெட்களை இழந்து பெற்ற 155 ஓட்டங்களே இலங்கை இதற்கு முன்னர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். மலேசியாவுடனான போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சஞ்சான காவிந்தி 13 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 30 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் சுமுது நிசன்சலாவுடன் 19 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார். அதன் பின்னர் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய தஹாமி சனெத்மா, இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களில் பங்கெடுத்ததுடன் அரைச் சதம் குவித்து அசத்தினார். 14 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவி மனுதி நாணயக்காரவுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் 28 ஓட்டங்களைப் பெற்ற ஹிருணி குமாரியுடன் 4ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் தஹாமி சனெத்மா பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார். 52 பந்துகளை எதிர்கொண்ட தஹாமி சனெத்மா 5 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்தபோது ஆட்டம் இழந்தார். சஷினி கிம்ஹானி 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் சித்தி நஸ்வா அலிஅஸிஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மலேசிய மகளிர் அணி 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 23 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது. மலேசிய அணியில் ஆறு வீராங்கனைகள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். நூர் ஆலியா 7 ஓட்டங்களையும் சுவாபிக்கா 6 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சமுதி ப்ரபோதா 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லிமன்சா திலக்கரட்ன 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மனுதி நாணயக்கார 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/204225
-
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா- உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்
21 JAN, 2025 | 08:30 AM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இதற்கான உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்கா அதிகளவு நிதியை வழங்கியுள்ளது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை பாரிஸ் காலநிலை உடன்படிக்பையிலிருந்து வெளியேறும் உடன்படிக்கையிலும் டிரம்ப் கைசாத்திட்டுள்ளார். https://www.virakesari.lk/article/204398
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் 20 JAN, 2025 | 10:19 PM டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ் பில்கிளின்டன் பராக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். எனினும் மிச்செல் ஒபாமா டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. https://www.virakesari.lk/article/204388 அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப் 20 JAN, 2025 | 10:45 PM அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அரசியலமைப்பை பாதுகாப்பேன் என அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஜனாதிபதி தேர்தலொன்றில் தோல்வியுற்ற ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றுள்ளமை 1890ம் ஆண்டின் இதுவே முதல் தடவை. டிரம்ப் இரண்டு பைபிள்களை பயன்படுத்தி பதவியேற்றார் ஒன்று அவரது தாயார் வழங்கியது மற்றையது லிங்கன் பைபிள். 1861 முதல் ஏனைய ஜனாதிபதிகள் அனைவரும் இந்த பைபிளை பயன்படுத்தி வந்துள்ளனர். https://www.virakesari.lk/article/204390
-
நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம் செலுத்தப்படும் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது. ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது. தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன. எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல.” – என்றார். https://thinakkural.lk/article/314713
-
இந்தியா- சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் புபுது ஜாகொட கருத்து தெரிவிப்பு !
Published By: DIGITAL DESK 2 20 JAN, 2025 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன அரசாங்கத்தின் ஒரே மண்டலம் ஒரே பாதை வேலைத்திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஆதரவளிப்பதாகவும் அந்த வேலைத்திட்டத்துக்குள் அடங்கிய பல வேலைத்திட்டங்களை இலங்கைக்குள் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பது பாரிய விடயமாகும். ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்திய விஜயத்தின் பின்னர் வெளியிட்ட கூட்டு பிரகடனத்தில், இலங்கையின் பூமியை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகும் வரை வேறு எந்த நாட்டுக்கும் பயன்படுத்த இடமளிப்பதில்லை என தெரிவித்திருந்தார். அதேநேரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கும் பல்வேறு வாங்குறுதிகளை வழங்கியிருப்பதை பார்க்கும்போது, இலங்கைக்குள் பல்வேறு உலகளாவிய அரசியல் வேலைத்திட்டங்களுடன் இந்து சமுத்திரத்தில் செயற்பட்டுவரும் பல்வேறு அதிகாரம் படைத்தவர்களுக்கு, ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை வாக்குறுதி வழங்கி வருகிறது. இது அரசியல் ரீதியில் மிகவும் எச்சரிக்கையான நடவடிக்கையாகும். இதன்மூலம் வலயத்தில் அதிகாரமுடையவர்கள் உலக அதிகாரம் படைத்தவர்களுக்கு ஏகாதிபத்தியவாதிகளுடன் ஏற்படுகின்ற சண்டையின்போது இலங்கை முழுமையாக ஈடுபட இடமிருக்கிறது. யுத்தமொன்றுக்கு இலங்கை இலக்காக இடமிருக்கிறது. கூட்டு பிரகடனம் இரண்டையும் மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறைமுகத்தை அண்மித்ததாக எண்ணெய் சுத்திகரிப்பு ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் கப்பல் மூலமான எண்ணெய் விநியோகம் முற்றாக சீனாவுக்கு செல்லும். தற்போதும் திருகோணமலை எண்ணெய் குதங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் உரிமம் இந்தியாவுக்கே இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து திருகோணமலை வரை செல்லும் எண்ணெய் குழாய், கொழும்புவரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு இறங்குதுறை இந்தியாவிடமும் தெற்கு இறங்குதுறை சீனாவிடம் இருக்கும் நிலையில், கொழும்பு முறைமுகத்தின் இருந்தும் எங்களுக்கு கப்பல் மூலம் எண்ணெய் வருமானம் எங்களுக்கு இல்லாமல் போகிறது. எனவே அம்பதந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய பின்னர், அவர்களின் யுத்தக்கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதை எங்களுக்கு தடுக்க முடியாது. இந்தியாவுடன் இதனை பார்த்தால் அதே பிரச்சினை திருகோணமலை துறைமுகத்திலும் இடம்பெறும். எனவே இவ்வாறான இணக்கப்பாடுகள் மூலம் நாங்கள் மிகவும் பயங்கரமான உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/204364
-
225 எம்.பிக்களுக்கும் வாகனங்கள் வழங்க திட்டம்
எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314702
-
'நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார் : எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார்" - அனுரவிற்கு மகிந்த பதிலடி
Published By: RAJEEBAN 21 JAN, 2025 | 10:32 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ளார். அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போல நடந்து கொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உகந்தவை என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அனுரகுமார திசநாயக்க அரசியல் மேடைகளில் மக்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்களையும் பாதுகாப்பினையும் பறித்த பின்னர் அவர்களிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார், தனது தோல்விகளை மறைப்பதற்காகவே அவர் இதனை செய்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204409
-
யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!
30 லட்சத்தை தூக்கிக் கொடுக்குமளவுக்கு ஏன் போனார்?! பரவாயில்லை உடனடியாக முறையிட்டு மீட்டுவிட்டார்!