Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 20 JAN, 2025 | 03:47 PM பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டாடும் அதே விதமாக இங்கு கொண்டாடப்பட்டமை எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், மகளிர் குழு ஒன்று ஒழுங்கு செய்தமை எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான பொதுப் பணிகளில் மகளிர் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஊக்குவித்தல் வேண்டும். ஆனால், இங்கு நடந்த வைபவத்தை நோக்கும்போது மேற்படி பெண்களது தொழிற்பாட்டுக்கு ஆண்கள் துணையாக நின்றிருப்பர் என என்னால் உணர முடிந்தது. இது இன்னும் வரவேற்கத்தக்க விடயமாகும். அந்த வகையில் இதனை ஒழுங்கு செய்த கண்டி இந்து மகளிர் அமைப்பு மற்றும் அதற்கு துணையாக நின்ற பொது அமைப்புக்கள், இவர்களுக்கு ஊக்கம் வழங்கிய ஆண்கள் எனப் பலரையும் பாராட்டுகிறேன் என்றார். கண்டி இந்து மகளிர் சங்கத்தின் தலைவி ஆர். கலையரசி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் விசேட அதிதிகளாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா அபேசிங்க, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேசா பெர்னாண்டோ உட்பட கண்டி நகர வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தகொண்டனர். https://www.virakesari.lk/article/204350
  2. பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப் 20 JAN, 2025 | 10:26 PM அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் கப்பிட்டல் ரொட்டுன்டா அறைக்குவந்துள்ளார். அவரது மனைவி தற்போதைய ஜனாதிபதி துணை ஜனாதிபதி ஆகியோரும் அங்கு காணப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/204389
  3. @வீரப் பையன்26வந்துட்டேன்💪✌️ ஏற்கனவே தூக்கிற்றாங்கள் அண்ணை! இலங்கை தகுதி பெறவில்லை. 8 அணிகள் பங்குபற்றுகின்றன. @தமிழ் சிறி அண்ணை வந்தால் தான் களைகட்டும், ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும்.
  4. கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலை சர்ச்சைகளுக்கு மத்தியில் திறந்து வைப்பு 20 JAN, 2025 | 11:13 AM அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலையானது பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (19) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திருவள்ளுவர் சிலை நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையிலும் பல சர்ச்சைக்கு மத்தியிலும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ , வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மற்றும் கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் உட்பட கல்முனை பிராந்திய இளைஞர் அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/204315
  5. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். 19 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதின், "ரஷ்யாவும், இரானும் வெளிநாட்டு அழுத்தங்களை கடுமையாக எதிர்க்கும்," என்று கூறினார். இந்த ஒப்பந்தங்கள், இரு நாட்டின் மூலோபய ஒத்துழைப்பின் புதிய துவக்கம் என்றும், இரானின் 'அண்டை நாடுகள் கொள்கையில்' ரஷ்யாவுக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு என்றும் பெசெஷ்கியன் கூறினார். எந்தெந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 ஆண்டுகளுக்கான மூலோபய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் வழங்கி வருகிறது என்று மேற்கத்திய நாடுகளின் உளவு முகமைகள் குறிப்பிடுகின்றன. இரானுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ரஷ்யாவோ, ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் இரானோ தத்தம் பிராந்தியங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யாவும் இரானும், ராணுவ மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆலோசனை மற்றும் பதிலடி தருவோம் என்று முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளிலும் கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்? இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி இரான் மற்றும் அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? டிரம்ப் 2.0: யுக்ரேன், நேட்டோ, சீனா, இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா? இதற்குப் பிறகு இருநாட்டிலும் எரிசக்தி மற்றும் வர்த்தகத்துறை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அரசுமுறை பயணம் மட்டுமல்ல, இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பயணம் என்று இரான் தலைவர்கள் கூறியுள்ளனர். இது இருநாட்டு உறவையும் வலுப்படுத்தும் ஒப்பந்தம். இது ஒரு அரசியல் உடன்படிக்கை அல்ல. இது எதிர்காலத்திற்கான பாதை என்று இரான் வெளியுறத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, டெலிகிராம் வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பரஸ்பர பாதுகாப்புக்கு இரு நாடுகளும் ஒப்புதல் ரஷ்யாவை தாக்க இரானும், இரானைத் தாக்க ரஷ்யாவும் மற்ற நாடுகளுக்கு உதவாது கூட்டு ராணுவ பயிற்சிகள் இரு நாட்டு அதிகாரிகளின் கூட்டு பயிற்சி திட்டத்திற்கு ஒப்புதல் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் ஆகியவை இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்?19 ஜனவரி 2025 திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு பலியிட தடை, முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தம் - இன்றைய முக்கிய செய்திகள்19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இது ஒரு அரசுமுறை பயணம் மட்டுமல்ல. இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பயணம் என்று இரான் தலைவர்கள் கூறியுள்ளனர் இரானில் புதிய அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் புதின் குறிப்பிட்டார். தன்னிடம் உள்ள எரிவாயுவை ரஷ்யா இரானுக்கு வழங்க உள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கிய போது, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதை குறைத்தது. இதனால் தற்போது ரஷ்யா புதிய வாடிக்கையாளர்களை தேடி வருகிறது. ரஷ்யாவில் இருந்து இரான் வரை எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான முடிவு எட்டப்பட்டால், அஜர்பைசான் வழியாக அந்த குழாய் இரானுக்கு செல்லும். ரஷ்ய எரிசக்தி துறை அமைச்சர் செர்கெய் சிவிலியெவ் இந்த தகவலை அளித்ததாக ஜனவரி 17-ஆம் தேதி இன்டர்ஃபேக்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது. ராணுவ விவகாரங்களை விட பொருளாதார பிரச்னைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுக்க விருப்பம் கொண்டிருக்கும் இரு நாடுகளையும் இந்த ஒப்பந்தங்கள் மேலும் நெருக்கமாக்கும் என்று கூறியுள்ளது அந்த செய்தி. துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் பலம், பலவீனம் என்ன? ரோஹித், கோலி ஃபார்ம் பிரச்னையாகுமா?19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ விவகாரங்களை விட பொருளாதார பிரச்னைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பல துருவ உலகை உருவாக்கும் முயற்சியில் இரான், ரஷ்யா பெசெஷ்கியன், இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் இதர அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை அன்று மாஸ்கோ சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவரை வரவேற்றார் ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்கெய். சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரானின் நிலை பலவீனம் அடைந்து வருவதாக கருத்து நிலவுகிறது. இத்தகைய சூழலில் இரான் அதிபர், ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி, புதினுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாக புதினிடம் பெசெஷ்கியன் கூறினார். இரு நாட்டுக்கும் இடையே ராணுவம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இரு நாட்டினரும் சந்திக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்க்க ஒரு நாட்டுக்கு மற்றொரு நாடு உதவும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன என்ற ரஷ்யாவின் அதிபர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ராய்ட்டர்ஸ் முகமை வெளியிட்டுள்ள செய்தியின் படி, 'பல துருவ உலகை' உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் உள்ளன என்று இரான் அதிபர் கூறியுள்ளார். ஆனால் இரானிய தூதர் கஸிம் ஜலாலி, இரானிய செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ.விடம் பேசிய போது, "நம்முடைய நாட்டின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் சுயசார்பு போன்றவை தான் முக்கியமானது. எந்த பிரிவிலும் இணைய இரானுக்கு விருப்பமில்லை" என்று கூறியுள்ளார். 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது படையெடுத்த பிறகு பெலராஸ், இரான், சீனா, மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ரஷ்யா தனது உறவை ஆழப்படுத்தியுள்ளது. கொல்கத்தா: சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு - பெண் மருத்துவர் வழக்கு கடந்து வந்த பாதை19 ஜனவரி 2025 கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா?18 ஜனவரி 2025 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி புதினுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாக பெசெஷ்கியன் புதினிடம் கூறினார் இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தையும் வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். மத்திய கிழக்கு விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற ரஷ்ய நிபுணர் ருஸ்லான் சுலேமானோவ், "இது இரு நாட்டு உறவிலும் அடுத்த அத்தியாயம் இல்லை. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே இருந்த உறவை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்துள்ளது," என்று குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசிய அவர், "இரானில் இருந்து வரும் ஆயுதங்களை ரஷ்யா நம்பியுள்ளது. பொருளாதாரத்திற்கு ரஷ்யா அமீரகத்தை அதிகம் நம்பியுள்ளது. சர்வதேச விஅவகாரங்களில் ஒற்றை துருவ உலகம் மற்றும் ஒரு நாட்டின் மேலாதிக்கத்தை இந்த ஒப்பந்தங்கள் மூலமாக ரஷ்யாவும் இரானும் நிராகரிக்கின்றன," என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யா வட கொரியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. டிசம்பரில் பெலாரஸ் நாட்டுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது. அதன் மூலம் பெலாரஸில் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமின்றி பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பையும் ரஷ்யா வழிநடத்துகிறது. காகசஸ் பிராந்தியத்தில் உள்ள பெலாரஸ், ஆர்மீனியா, மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் அடங்கிய அமைப்பை ரஷ்யா வழிநடத்தி வருகிறது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் தாக்குல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்ற அடிப்படையில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெரியாருடன் முரண்பட்ட திமுக அவரது சித்தாத்தங்களை ஆதரிப்பது ஏன்? 1967 தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது?18 ஜனவரி 2025 சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீது படையெடுத்த பிறகு பெலராஸ், இரான், சீனா, மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ரஷ்யா தனது உறவை ஆழப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலா? யுக்ரேன் மீது போர் துவங்கிய நாளில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளுடன் பிரச்னையை சந்தித்து வருகிறது ரஷ்யா. தற்போது, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது ரஷ்யாவின் அந்தஸ்தை உலக அரங்கில் மேம்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். அவர் ஆட்சியில் இரானை தனிமைப்படுத்தி, அதன் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இரான் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யா சமீபத்தில் வடகொரியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் இரானுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் அதுபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தம் ஏதும் இல்லை. யுக்ரேனுக்கு எதிராக தாக்குதல் நடத்த வட கொரிய துருப்புகளை ரஷ்யா அனுப்பியது என்று மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலை தரும் அம்சமாக கருதப்படும் ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ரஷ்யா - இரான் ஒப்பந்தங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1dg4ee3kvgo
  6. 20 JAN, 2025 | 10:33 AM யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து, யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று, சடலத்தின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204313
  7. சென்னை பரந்தூர் போராட்ட குழுவினருடன் விஜய் இன்று சந்திப்பு - இன்றைய முக்கிய செய்திகள் பட மூலாதாரம்,TVK 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (20/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம். பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கப் போவதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வந்த நிலையில், பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முன்னதாக விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. அதன்படி அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டம் கூடாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வரவேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு உதவியால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி - இன்றைய 5 முக்கிய செய்திகள் கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - செயற்கை நுண்ணறிவு மூலம் 19 ஆண்டுக்கு பிறகு துப்பு துலங்கியது எப்படி? புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி? கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை மே மாதம் திறக்க திட்டம் சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையத்தை வரும் மே மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் இடம்பெற உள்ளன. இந்த நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்த முடியும். தற்போது, ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மே மாதத்தில் பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களிலிருந்து நீண்ட தூர பேருந்துகளில் கிளாம்பாக்கத்தை அடையும் பயணிகள் எளிதாக நகருக்குள் செல்ல மின்சார ரயில்களைப் பயன்படுத்த இந்த ரயில் நிலையம் உதவியாக இருக்கும். பட மூலாதாரம்,NTK நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட விவசாயி சின்னம் - இன்று அறிவிப்பு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க இருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் சுயமாக வரைந்து அனுப்பப்பட்ட விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அந்த செய்தி கூறுகிறது. அண்மையில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாதக கேட்ட விவசாயி, புலி ஆகிய இரு சின்னங்களையும் வெவ்வேறு காரணங்களால் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. இதையடுத்து, பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தையோ, அல்லது கட்சி விரும்பும் சின்னத்தை 3 மாதிரிகளாக வரைந்தோ அனுப்பலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்த நிலையில், நாதக சார்பில் விவசாயி சின்னம் 3 மாதிரிகளாக வரையப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு சின்னம் தேர்வு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு இன்று ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்ட நிலையில் திமுக, நாதக மற்றும் 55 வேட்பாளர்கள் தற்போதைய நிலையில் களத்தில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லம் கிடையாது - இலங்கை ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை, எனக்கும் வீடு வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது. களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், "எந்த அமைச்சருக்கும் அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் வழங்கவில்லை. அனைத்து அரச இல்லங்களும் பொதுநிர்வாக அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தவிர்த்து ஏனைய அரச இல்லங்கள் அனைத்தையும் என்னசெய்வது என்பது தொடர்பில் யோசனை முன்வைக்கும் பொறுப்பை விசேட குழுவுக்கு வழங்கியுள்ளேன். இந்த மாற்றம் நாட்டுக்கு அவசியம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன்." என்றார். காஸா போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது - 3 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்19 ஜனவரி 2025 ஏமன்: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா?19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES செக் மோசடி வழக்கில் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது. ஷகிப் அல் ஹசன் மீது கடந்த டிசம்பர் 15-ம் தேதி 'செக்' மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஜனவரி 19-ம் தேதிக்குள் ஆஜராகும் படி டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஷகிப் அல் ஹசன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj3enkxpdlgo
  8. 'சரத் என் சில்வா பிரதமநீதியரசராக பதவியேற்கும் படத்தை தலைகீழாக பிரசுரித்து நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என தலைப்பிட்டவர் விக்டர் ஐவன் "- அவரது துணிச்சல் குறித்து சாலிய பீரிஸ் புகழஞ்சலி Published By: RAJEEBAN 20 JAN, 2025 | 11:21 AM சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்கும் படத்தை ராவயவில் விக்டர் ஐவன் தலைகீழாக பிரசுரித்து இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என குறிப்பிட்டிருந்ததை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அச்சமற்ற துணிச்சலான ஒருமனிதர். அவர் பல செல்வாக்குமிகுந்த நபர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். அவர்களில் ஒருவர் இலங்கையின் சட்டமா அதிபராக பிரதம நீதியரசராக பதவி வகித்த சரத் என். சில்வா. சரத் என்சில்வா பிரதம நீதியரசராக பதவியேற்றதை ராவயவின் தலைப்புச் செய்தியாக வெளியிட்டடிருந்தது - இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மரணம் என குறிப்பிட்டிருந்தது. சரத் என்சில்வா பதவியேற்கும் படத்தை தலைகீழாக வெளியிட்டு இலங்கையின். நீதித்துறையின் மரணம் என ராவய தலைப்பிட்டிருந்தது. அடுத்த பத்து வருடங்களில் விக்டர் ஐவன் சரத் சில்வாவுடன் பல சந்தர்ப்பங்களில் மோதினார். தனது பதவிக்காலத்தில் சரத் என்சில்வா பலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்திய போதிலும் விக்டர் ஐவனிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு எதனையும் சுமத்தவில்லை. இவ்வாறான நபர்களையே மியன்மாரின் ஆங் சாங் சூ கி தனது வாழ்க்கை வரலாற்று நூலில் அச்சமற்றவர்கள் என குறிப்பிடுகின்றார். "தனிநபர் அல்லது தேசத்தின் பெரும்கொடை என்னவென்றால் அச்சமற்றவராக விளங்குதல், அது உடல் ரீதியில் துணிச்சல் கொண்டவராக விளங்குவது மாத்திரமில்லை, மனதிலும் அச்சமற்றவராகயிருத்தல்." https://www.virakesari.lk/article/204323
  9. 'Tournament-ல ஜெயிச்சிதான் நல்ல ஷூ வாங்குனேன்' - Arjuna Award பெற்ற Thulasimathi Murugesan தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'அர்ஜுனா விருது' துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  10. பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி 18 JAN, 2025 | 05:16 PM (நெவில் அன்தனி) மலேசியாவில் சனிக்கிழமை (18) ஆரம்பமான இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பிற்பகல் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பங்களாதேஷும் தென் ஆபிரிக்காவும் வெற்றியீட்டின. நேபாளத்துக்கு எதிராக YSD - UKM கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் 5 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 53 ஓட்டங்கள் என்ற குறைந்த மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சிறு தடுமாற்றத்திற்கு மத்தியில் 13.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மூன்றாவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்த பங்களாதேஷுக்கு மத்திய வரிசை வீராங்கனைகளான சாடியா இஸ்லாம் (16), அணித் தலைவி சுமய்யா அக்தர் (12) ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கைகொடுத்தனர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சானா ப்ரவீன் 19 ஓட்டங்களையும் சீமனா கே.சி. 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜனாத்துல் மவ்வா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தென் ஆபிரிக்கா வெற்றி சி குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அணிகளான நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 22 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. மழை காரணமாக இப் போட்டி அணிக்கு 11 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 11 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது. ஜெம்மா போத்தா (32), சிமோன் லோரென்ஸ் (21) ஆகிய இருவரும் 5.2 ஓவர்களில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து மத்திய வரிசையில் கராபோ மெசோ 25 ஓட்டங்களைப் பெற்று அணியை மேலும் பலப்படுத்தினர். பந்துவீச்சில் ஆயான் லெம்பட் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டாஷ் வேக்லின் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 11 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆரம்ப வீராங்கனை எம்மா மெக்லியொட் 34 ஓட்டங்களையும் ஈவா வொலண்ட் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோனாலிசா லிகோடி 8 ஓட்டங்களுக்கு 2 விக்டெக்களையும் கேலா ரெனேக் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை - மலேசியா போட்டி நாளை ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை நாளை காலை நடைபெறவுள்ள ஏ குழுவுக்கான முதலாவது போட்டியில் மலேசியாவை எதிர்த்தாடும். அப் பொட்டியைத் தொடர்ந்து நாளை பிற்பகல் நடைபெறவுள்ள இதே குழுவுக்கான இரண்டாவது போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/204179
  11. 19 JAN, 2025 | 07:02 PM (எம்.நியூட்டன்) 'கிளின் சிறிலங்கா' என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். ஆனால் தை பிறந்தால் வழி பிறந்ததா என்பதை தேடிப் பார்த்தால் எங்கள் நாட்டில் தை பிறந்தால் என்ன நடந்திருக்கும் தாட்டில் மாற்றம் எற்பட்டதா சிறுவர்களுக்கு மகிழ்சி ஏற்படுத்தப்பட்டதா என்று தேடி பார்த்தால் எதுவுமே இல்லை. இந்த வருட தை பிறப்பு என்பது 75 வருடங்களுக்கு பிறகு நாங்கள் நீங்கள் எல்லோருமே கூட்டிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் நடைபெறுகின்றது. முதலில் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு தலைவணங்கி நன்றி கூறுகின்றோம். நீங்கள் வழங்கிய மாற்றத்துக்கான ஆணையூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்தவிதமான பந்தாக்களும் இல்லாமல் தான் நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம். இந்தப் பொங்கலிலிருந்து புதிய பாதையில் பயணிப்போம் என்பது எனது வேண்டுகோளாகும். அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கிறது. ஜனாதிபதி புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்தப் பாதையில் நாங்கள் மாத்திரமல்ல. நீங்களும் பயணிக்க வேண்டும். உங்களைத் தான் நாங்கள் நம்பியிருக்கின்றோம். நீங்கள், நாங்கள் இணைந்து நாசமாக்கப்பட்டுள்ள இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/204273
  12. காஸா போர்நிறுத்தம் தொடங்கியது - 33 பணயக்கைதிகளை விடுவிக்க உள்ள ஹமாஸ்; பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல் பட மூலாதாரம்,REUTERS 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட காஸா போர்நிறுத்தம் மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று தொடங்கியுள்ளது. காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை நிறுத்தப்படும். மேலும் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கே போர்நிறுத்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணயக்கைதிகளில் பெயர் பட்டியலை குறிப்பிட்ட நேரத்திற்கு ஹமாஸ் வழங்காததால், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது. இந்தநிலையில், முதலில் விடுவிக்கப்பட உள்ள மூன்று பணயக்கைதிகளில் பெயரை ஹமாஸ் வெளியிட்டது. இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக கூறியுள்ள இஸ்ரேல், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட பட்டியலில், அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸால் பிடிக்கப்பட்ட மிக இளைய மற்றும் மூத்த பணயக்கைதிகள் இடம்பெற்றுள்ளனர். கஃபிர் பிபாஸ் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டபோது ஒன்பது மாதக் குழந்தை. தனது இரண்டு பிறந்தநாளை பணயக்கைதியாக அந்த குழந்தை கழித்தது. 86 வயதான ஷ்லோமோ மன்ட்சூர், கடத்தப்பட்ட மிக வயதான பணயக்கைதி ஆவார். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் சில மணிநேரத்திற்கு முன்புவரை கூட, இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலில் இன்று காலை முதல் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது இன்று காலை ஏற்பட்ட தாமதம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன கைதிகளின் முதல் கட்ட பரிமாற்றத்திற்கான நேரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்கு முதல்கட்ட பரிமாற்றம் நடைபெறவிருந்தது. போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த போர்நிறுத்தம் "பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி" என்று அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் மீது எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் நோக்கில், ஹமாஸை அழிக்க உறுதிபூண்டது இஸ்ரேல். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இதர பல நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பு என்று கூறி தடை செய்துள்ளன. காஸாவில் இதுவரை 46,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காஸாவில் இருந்து அநேக மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தாக்குதலில் பல இடங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத்தர பல நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணயக் கைதிகளில் ஏற்கனவே 94 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர் என்றும், அவர்களில் 34 பேர் ஏற்கனவே இறந்திருக்கக்கூடும் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17eqxqz2x4o Gaza போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி? BBC-க்கு கிடைத்த முக்கிய தகவல்கள்
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்மர் கடாஃபி சிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார் கட்டுரை தகவல் எழுதியவர், வலீத் பத்ரன் பதவி, பிபிசி அரபு ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார். கடாஃபி, ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான அனைத்து வகையான எதிர்ப்புகளையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார். லிபியாவில் வேறு எந்த தலைமையும் உருவாக முடியாமல் போனதற்கு அவரது இந்த அணுகுமுறையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் 2011-ஆம் ஆண்டு, துனிசியாவில் இருந்து தொடங்கிய 'அரபு எழுச்சி இயக்கம்' கர்னல் மும்மர் கடாஃபியை ஆட்சியில் இருந்து அகற்றவும் வழிவகுத்தது. 2011-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட மும்மர் கடாஃபி, பெடோயின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன். கிராம பின்புலத்தில் இருந்து வந்த கடாஃபி, அரபு உலகின் திறமையான தலைவராக எப்படி மாறினார்? லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கடாஃபி வீழ்ந்தது எப்படி? என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி இரான் மற்றும் அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? டிரம்ப் 2.0: யுக்ரேன், நேட்டோ, சீனா, இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் - ஒப்பந்தம் எப்போது, எவ்வாறு அமலாகும்? ராணுவப் பயிற்சி மற்றும் பதவி உயர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்மர் கடாஃபி ஒரு பெடோயின் விவசாயியின் மகன் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் படி, மும்மர் கடாஃபி 1942-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு பெடோயின் விவசாயி என அறியப்படுகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மும்மர் கடாஃபி பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர பெங்காஸி நகருக்கு சென்றார். 1961-ஆம் ஆண்டில், அவரது அரசியல் நாட்டம் மற்றும் சித்தாந்தம் காரணமாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இக்காலகட்டத்தில் கடாஃபி, லிபியா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இங்கு அவருக்கு லிபிய நாட்டு ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தது. ராணுவத்தில் வேலை செய்வதன் மூலம் ஒருவர் லிபியாவில் சிறந்த கல்வியைப் பெற முடியும். ராணுவத்தில் இணைவது ஒரு நல்ல பொருளாதாரத் தேர்வாகவும் பார்க்கப்பட்டது. அதனால் தான், மும்மர் கடாஃபி தனது உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பே ராணுவத்தில் சேர்ந்தார். இந்த முடிவு அவரை ஒரு அதிகார நிலைக்கு இட்டுச் சென்றது. தனது இளமை பருவத்தில், எகிப்தின் ஜமால் அப்துல் நாசரையும் அவருடைய கொள்கைகளையும் கடாஃபி ரசித்தார். 1956-இல், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் எகிப்து ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களில் மும்மர் கடாஃபி இணைந்தார். பிரிட்டன் மற்றும் பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாயை எகிப்து கைப்பற்றிய பின்னர் இந்த படையெடுப்பு நடந்தது. அதன் பிறகு, லிபியாவில் ராணுவப் பயிற்சியை முடித்த கடாஃபி 1965-ஆம் ஆண்டு, பயிற்சிக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். விதிவிலக்காக மும்மர் கடாஃபி லிபிய ராணுவத்தில் வேகமாக உயர் நிலைகளை அடைந்தார். அதே நேரத்தில் அரச குடும்பத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் திட்டமிடத் தொடங்கினார். ராணுவப் பயிற்சி நாட்களில் இருந்தே, லிபியாவில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சித் திட்டத்தை கடாஃபி தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, 1969-ஆம் ஆண்டில், பிரிட்டனில் பயிற்சி பெற்ற பிறகு, பெங்காஸி நகரத்தை மையமாகக் கொண்டு ராணுவக் கிளர்ச்சியைத் தொடங்கினார் கடாஃபி. இந்தக் கிளர்ச்சியின் முடிவில் அவர் லிபியாவின் ஆட்சியாளராக உருவெடுத்தார். ஏமனில் மரண தண்டனை: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா?18 ஜனவரி 2025 இலங்கை: சீனாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கடன் பொறியில் சிக்க வைக்கப் போகிறதா?17 ஜனவரி 2025 அமெரிக்க அதிபரின் பொது மன்னிப்பு அதிகாரம் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துகிறார்கள்?17 ஜனவரி 2025 கிளர்ச்சி மற்றும் எண்ணெய் வளங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அவரது ஆட்சியில், கடாஃபி மது மற்றும் சூதாட்டத்தை தடை செய்தார். செப்டம்பர் 1, 1969-இல், கர்னல் மும்மர் கடாஃபியின் தலைமையிலான ராணுவம் லிபிய மன்னரை வீழ்த்தியது. புரட்சிக் கவுன்சிலின் புதிய தலைவராக பதவியேற்ற போதே, ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும், ஆட்சித்தலைவராகவும் கடாஃபி பதவி வகித்தார். ஆனாலும் தனது கர்னல் பதவியையும் தக்க வைத்துக் கொண்டார் கடாஃபி. கடாஃபி ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களை அழித்தார். 1970-இல் இத்தாலிய மற்றும் யூத குடியிருப்பாளர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றினார். 1973-ஆம் ஆண்டில், நாட்டின் அனைத்து எண்ணெய் வள மையங்களையும் தேசிய அளவில் கையகப்படுத்தினார். அது மட்டுமின்றி, நாட்டில் மதுபானம் மற்றும் சூதாட்டத்தை தடை செய்தார் கடாஃபி. அந்தச் சூழலில், சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் , "5 ஆயிரம் வருடங்கள் எண்ணெய் இல்லாமல் உயிர் வாழ்ந்தவர்கள், இன்னும் சில வருடங்கள் உரிமைகளுக்காக போராடலாம்" என எச்சரித்தார். அவரது இந்த சவாலுக்கு பலன் கிடைத்தது. வளரும் நாடுகளில் எண்ணெய் உற்பத்தியில் தனது பெரும் பங்கைப் பெற்ற முதல் நாடாக லிபியா உருவானது. இந்த உதாரணத்திலிருந்து, விரைவில் மற்ற அரபு நாடுகள் பாடம் கற்றுக்கொண்டன. அரபு பிராந்தியத்தில் பெட்ரோலின் ஏறுமுகம் அந்த நிகழ்வில் இருந்து துவங்கியது. அதாவது 1970-களில் அரபு நாடுகளில் எண்ணெய் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த வழியைப் பின்பற்றி, 'கருப்பு தங்கம்' என்று அழைக்கப்படும் எண்ணெய் வளங்களில் இருந்து பயனடையத் தொடங்கியது லிபியா. ஏனெனில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி, வளைகுடா நாடுகளைப் போலவே இருந்தது. பரந்த எண்ணெய் உற்பத்தி இருந்த போதிலும், ஒப்பீட்டளவில், 3 மில்லியன் எனும் அளவிலான சிறிய மக்கள் தொகையே லிபியாவில் இருந்தது. ஆனால் பரப்பு அடிப்படையில் ஆப்பிரிக்காவில் லிபியா பெரிய நாடுகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் மிக விரைவாக லிபியா பணக்கார நாடாக மாறியது. கர்னல் கடாஃபி, இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை கடுமையாக எதிர்த்தவர். அதனால்தான் அவர் அரபு உலகில் ஒரு குறிப்பிடத்தக்கத் தலைவராக உருவெடுத்தார். எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்தார். ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 புத்தர் பிறந்த லும்பினி அழியும் ஆபத்தில் இருக்கிறதா? கசியும் கூரை, வாடிய நிலையில் தாவரங்கள் - பிபிசி கள ஆய்வு17 ஜனவரி 2025 இந்தியா: ஒருபுறம் டிரம்ப், மறுபுறம் சீனா, பாகிஸ்தான் - மோதி அரசுக்கு 2025இல் காத்திருக்கும் சவால்கள்17 ஜனவரி 2025 கடாஃபியின் பார்வை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடாஃபி அரசாங்கம் பல கொடிய சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 1970-களின் முற்பகுதியில், கடாஃபி தனது அரசியல் கருத்துகளை 'கிரீன் புக்' என்ற புத்தகத்தின் மூலம் முன்வைத்தார். இதன் கீழ் இஸ்லாமிய சோசலிசத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொருளாதார நிறுவனங்களை தேசம் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த புத்தகத்தின்படி, சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வு ஜனநாயகத்திலோ அல்லது வேறு எந்த அமைப்பிலோ இல்லை. மிகப்பெரிய கட்சியின் சர்வாதிகாரம் தான் ஜனநாயகம் என்று கடாஃபி குறிப்பிட்டார். கடாஃபியின் கூற்றுப்படி, அனைத்துக்கும் பொறுப்பான குழுக்களால் தான் அரசாங்கம் நடத்தப்பட வேண்டும். 1979-இல், லிபியாவின் முறையான தலைமைப் பதவியை கடாஃபி துறந்தார். அதன் பிறகு, தன்னை ஒரு புரட்சித் தலைவர் என்று கூறினார். ஆனால் அதிகாரமும் உரிமைகளும் அவரிடமே இருந்தன. அதனால் கடாஃபியும் அவரது அரசும் எதிர்பாராத முடிவுகளால் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். பல அமைப்புகளுக்கு நிதி வழங்கத் தொடங்கினார் கடாஃபி. இதில் அமெரிக்க பிளாக் பாந்தர்ஸ் மற்றும் நேஷன் ஆஃப் இஸ்லாம் ஆகியவை அடங்கும். வடக்கு அயர்லாந்தில் உள்ள ஐரிஷ் குடியரசு ராணுவத்தையும் (IRA) கடாஃபி ஆதரித்தார். லிபிய உளவுத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் உள்ள விமர்சகர்களை தொடர்ந்து குறிவைத்தனர். அந்த காலகட்டத்தில், கடாஃபி அரசும் பல கொடிய சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னர் 1986-இல், நடந்த ஒரு சம்பவம், மிகவும் முக்கியமானது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமெரிக்க வீரர்கள் செல்லும் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பானது இந்த வழக்கு. இச்சம்பவத்துக்கு லிபியா மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் இரண்டு வீரர்கள் இறந்த பிறகு, திரிபோலி மற்றும் பெங்காஸி ஆகிய நகரங்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்த அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டார். இந்த தாக்குதல்களில் லிபியா பெரும் இழப்புகளை சந்தித்தது. ஏராளமான பொதுமக்கள் இறந்தனர். கடாஃபியின் வளர்ப்பு மகளும் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கடாஃபி தப்பிவிட்டார். இதற்குப் பிறகு, 1988-இல், ஸ்காட்லாந்தின் லாக்கர்பி நகரில் பான் அமெரிக்கன் எனும் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கும் லிபியா மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜப்பான்: 56 ஆண்டு கால போராட்டம்; தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய 91 வயது அக்கா16 ஜனவரி 2025 வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்16 ஜனவரி 2025 இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?16 ஜனவரி 2025 லாக்கர்பி ஒப்பந்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கர்னல் கடாஃபி ஒரு கூடாரத்தில் வாழ்வதை அடிக்கடி தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. லாக்கர்பி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்களை ஸ்காட்லாந்து அரசிடம் ஒப்படைக்க கடாஃபி தொடக்கத்தில் மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முயற்சிகள் 1999-இல் முடிவடைந்தது. இறுதியாக, குற்றவாளிகளை ஸ்காட்லாந்திடம் ஒப்படைத்தார் கடாஃபி. அவர்களில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மற்றவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2003-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை லிபியா ஏற்றுக்கொண்டது. மேலும் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சுமார் 2.7 பில்லியன் டாலர் வழங்கியது. இதன் விளைவாக, செப்டம்பர் 2003 இல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது விதிக்கப்பட்ட தடைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. 1989-ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட பிரெஞ்சு பயணிகள் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பெர்லின் கிளப்பிற்கும் லிபியா இழப்பீடு வழங்கியது. லாக்கர்பி உடன்படிக்கை, கர்னல் கடாஃபியின் ரகசிய அணுசக்தி மற்றும் ரசாயன திட்டங்களை ஒப்புக்கொள்வது, அவற்றைக் கைவிட்டது போன்ற முடிவுகள், லிபியாவிற்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் ஏற்பட வழிவகுத்தன. சர்வதேசத் தடைகள் முடிவுக்கு வந்த பிறகு, லிபியா சர்வதேச அரசியலுக்கு திரும்பியது. இதற்குப் பிறகு, பிரிட்டன் அதிபர் டோனி பிளேயர் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கடாஃபியின் பெடோயின் கூடாரத்தில் உள்ள அற்புதமான அரண்மனையில் ஒன்று கூடியதை காணமுடிந்தது. கர்னல் கடாஃபி ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும் போது கூடாரங்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்தப் பயணங்களின் போது, ஐரோப்பிய ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் பல வணிக ஒப்பந்தங்களைச் செய்தது லிபியா. தனித்துவமான முறைகளைக் கடைபிடிப்பதில் புகழ் பெற்ற கர்னல் கடாஃபி, ஒரு கூடாரத்தில் வாழும் காட்சிகளை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பெரும்பாலும் பெண்கள் என்றும் கூறப்பட்டது. லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 இலங்கை ஜனாதிபதியின் சீன பயணத்தை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா - என்ன காரணம்?15 ஜனவரி 2025 தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?15 ஜனவரி 2025 அரபு உலகில் ஏற்பட்ட மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளர்ச்சி ஏற்பட்ட போதும் திரிபோலியில் கடாஃபியின் கட்டுப்பாடு அப்படியே இருந்தது. பிப்ரவரி 2011-இல், துனிசியா மற்றும் எகிப்தில் பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஜைனுல் அபேடின் மற்றும் ஹோஸ்னி முபாரக்கின் நீண்ட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன. அதேநேரத்தில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போராட்டங்கள் லிபியாவிலும் தொடங்கின. நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்க, கடாஃபியின் அரசாங்கம் வலுக்கட்டாயமாக அவற்றைத் தடுக்க முயன்றது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டக்காரர்களுக்கு எதிராக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் லிபியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மறுபுறம், கடாஃபியின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் கோபமடையத் தொடங்கினர். சட்ட அமைச்சர் ராஜினாமா செய்தார் பல தூதர்கள் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி, கர்னல் கடாஃபி அரசு தொலைக்காட்சியில் ஒரு உரையில் ராஜினாமா செய்ய மறுத்தார். அது மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களை 'துரோகிகள்' என்று அழைத்தார் கடாஃபி. எதிர்க்கட்சிகள் அல்-கொய்தாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், எதிர்ப்பாளர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். போராட்டக்காரர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் படிப்படியாகக் அதிகாரத்தின் மீதான கடாஃபியின் பிடி வலுவிழந்தது. பிப்ரவரி இறுதிக்குள் லிபியாவின் பெரும் பகுதிகளை அவரது எதிரிகள் கைப்பற்றினர். இதற்குப் பிறகு, கடாஃபி வசித்த திரிபோலி பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டது. அவர் ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் அதிகரித்தது. மறுபுறம் பிப்ரவரி 28 அன்று, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கடாஃபியின் அரசாங்கத்தின் மீது புதிய தடைகளை விதித்தது மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துகளையும் முடக்கியது. கடாஃபிக்கு சொந்தமான 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதே நாளில் மேற்கத்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் இன்னும் தன்னை நேசிப்பதாக கடாஃபி கூறினார். போராட்டக்காரர்களுக்கு எதிராக தனது அரசின் படைகளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். தனது எதிரிகள் அல்கொய்தாவின் பாதுகாப்பில் செயல்படுகிறார்கள் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். மறுபுறம், கடாஃபியின் ராணுவமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றியது. அத்தகைய சூழலில், லிபிய இராணுவம் பெங்காஸியை நோக்கி நகர்ந்த போது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மார்ச் 17 அன்று ராணுவத் தலையீட்டிற்கு வாக்களித்தது. இதையடுத்து 'நேட்டோ' நடத்திய விமான தாக்குதல் கடாஃபியின் இராணுவத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. மார்ச் மாத இறுதியில், இரண்டு மூத்த அதிகாரிகள், கடாஃபி மீதிருந்த தங்களது விசுவாசத்தை மாற்றிக்கொண்டதால் கடாஃபியின் அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் கடாஃபி திரிபோலியின் கட்டுப்பாட்டை கையில் வைத்திருந்ததோடு, தன்னால் முடிந்த எல்லா வகையிலும் போராட்டக்காரர்களை எதிர்ப்பதாக அறிவித்தார். ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று, நேட்டோ விமானப்படைகள் திரிபோலியில் கடாஃபியின் இளைய மகன் சைஃப் அல்-அரப் மற்றும் மூன்று பேரன்களைக் கொன்றன. இந்த தாக்குதலில் கடாஃபி இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார். ஆடை உலகில் ஐந்தே ஆண்டுகளில் சிகரம் தொட்ட சீன நிறுவனம் - உள்ளே என்ன நடக்கிறது?14 ஜனவரி 2025 1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அரிய வால் நட்சத்திரம் - வெறுங்கண்களால் எங்கே, எப்படி பார்ப்பது?14 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை இலங்கையில் மீள் குடியேற்ற புதிய திட்டம் - நாளிதழில் வெளியான 5 முக்கிய செய்திகள்14 ஜனவரி 2025 கடாஃபியின் தலைமையகத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது எதிரிகள் அல்-கொய்தாவால் பாதுகாக்கப்படுவதாக கடாஃபி குற்றம் சாட்டினார். ஜூன் 27 அன்று, கடாஃபி, அவரது மகன் மற்றும் உளவுத்துறைத் தலைவர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம், லிபிய தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்து ஆகஸ்ட் 23 அன்று கடாஃபியின் தலைமையகமான பாப் அல்-அஜிசியா வளாகத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஆனால் கடாஃபி குறித்த தகவல்கள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆடியோ செய்திகளில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக லிபிய மக்கள் ஒன்றிணைந்து நிற்குமாறு கடாஃபி வேண்டுகோள் விடுத்தார். மறுபுறம், கடாஃபி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1.17 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். அதே சூழ்நிலையில், சிர்டே என்ற கடலோர நகரம் முற்றுகை இடப்பட்டது. சில ஆதாரங்களின்படி, கடாஃபி தனது ஆதரவாளர்கள் சிலருடன் முற்றுகையை உடைத்து தப்பிக்க முயன்றார். கடாஃபி மற்றும் அவரது நண்பர்கள் வாகனங்களில் சவாரி செய்து, தங்களுக்கு எதிராகவுள்ள போராளிகளிடமிருந்து தப்பிக்க முயன்றனர். அதில், கடாஃபியின் ராணுவத் தளபதி அபுபக்கர் யூனுஸ் மற்றும் கடாஃபியின் மகன் மோட்டாசிம் ஆகியோரும் இருந்தனர். அந்த வாகனங்களின் மீது நேட்டோ போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 15 வாகனங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் கர்னல் கடாஃபி மற்றும் அவரது சில நண்பர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பினர். கடாஃபி இரண்டு பெரிய வடிகால் குழாய்களில் ஒளிந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து, கடாஃபி எதிர்ப்புப் போராளிகளும் அங்கு வந்தனர். இரானிய அணு விஞ்ஞானியை ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் 'மொசாட்' கொன்றது எப்படி?13 ஜனவரி 2025 தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 இயேசு குறித்து விவேகானந்தர் மரணப் படுக்கையில் என்ன கூறினார்?12 ஜனவரி 2025 கர்னல் கடாஃபியின் கடைசி நிமிடங்கள் "முதலில் நாங்கள் கடாஃபி மற்றும் அவரது ஆட்களை துப்பாக்கிகளால் சுட்டோம், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை" என்று சலீம் பேக்கர் என்ற போராளி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். "பின்னர் நாங்கள் நடந்தே அவர்களை நோக்கிச் சென்றோம். கடாஃபி மற்றும் அவரது நண்பர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு அருகே சென்ற போது, திடீரென்று கடாஃபியின் போராளிகளில் ஒருவர் துப்பாக்கியை காற்றில் அசைத்தபடி வெளியே வந்தார். அவர் என்னைக் கண்டவுடன் என்னை நோக்கி சுட்டார்" என்று விவரிக்கின்றார். "எனது தலைவர் இங்கே இருக்கிறார், என் எஜமானர் இங்கே இருக்கிறார், அவர் காயமடைந்துள்ளார்" என்று கடாஃபியின் நண்பர் கத்தியதாக சலீம் பேக்கர் கூறினார். அதைத் தொடர்ந்து, "கடாஃபியை வெளியே வருமாறு வற்புறுத்தினோம். அப்போது அவர் என்ன நடக்கிறது என்று கேட்டார்" என்கிறார் சலீம் பேக்கர். கடாஃபியை பார்த்தவுடன் 9 மில்லிமீட்டர் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த மற்றொருவர் கூறினார். இதன் பின்னர் பலத்த காயமடைந்த நிலையில் கடாஃபி கைது செய்யப்பட்டார். அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காட்சிகளில், கடாஃபி பலத்த காயமடைந்தார் மற்றும் எதிர்ப்பாளர்களால் அவர் அதே நிலையில் தாக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. ஆனால் லிபியாவின் தற்காலிக தேசிய கவுன்சிலின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கடாஃபியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்தார் எனக் குறிப்பிட்டார். அதனை விளக்கிய மஹ்மூத் ஜிப்ரில், "கடாஃபி உயிருடன் பிடிபட்டார். அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட போது, வாகனம் இரு தரப்பிலிருந்தும் போராளிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சூட்டில் சிக்கியது. ஒரு தோட்டா கடாஃபியின் தலையில் தாக்கியது. இதன் விளைவாக அவர் இறந்தார்" என்று விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடாஃபி தன்னை ஆப்பிரிக்காவின் 'ராஜாக்களின் ராஜா' என்று அழைத்தார். கடாஃபி நாற்பது ஆண்டுகள் சர்வாதிகார முறையில் லிபியாவை ஆட்சி செய்தார். அவரது குடும்பம் நாட்டின் எண்ணெய் மற்றும் பல்வேறு தொழில்களில் இருந்து செல்வத்தை குவித்தது. மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்காக செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் கடாஃபி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்று நம்பப்படுகிறது. மறுபுறம், கடாஃபி பல திட்டங்களைத் தொடங்கினார். அதில் ஒன்று நாட்டின் வடக்குப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்குவதாகும். அவர் தனது உடையில் மட்டுமல்ல, அவரது அறிக்கைகள் மூலமாகவும் பிரபலமானார். அப்படியான ஒரு அறிக்கையில், பாலத்தீனர்களும் இஸ்ரேலியர்களும் ஒரே நாட்டில் ஒன்றிணைய வேண்டும், ஏனெனில் இரண்டு தனி நாடுகளை உருவாக்க போதுமான நிலம் இல்லை என்று கூறியிருந்தார். அரபு லீக் கூட்டங்களில் சுருட்டு புகைத்து, தன்னை ஆப்பிரிக்காவின் 'ராஜாக்களின் ராஜா' என்று அழைத்துக் கொண்டார். காலப்போக்கில் கடாஃபியின் சித்தாந்தமும் மாறிக்கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அரபு தேசத்தை ஒன்றிணைக்கும் முழக்கத்தை முன்னெடுத்து ஜமால் அப்துல் நாசரைப் போல அரபு தேசியவாதத் தலைவராக தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் இந்தக் கனவு நிஜத்தில் சாத்தியப்படுவது கடினம் என்பதை உணர்ந்த அவர், ஆப்பிரிக்காவை நோக்கிப் பார்க்கத் தொடங்கி, தன்னை ஆப்பிரிக்காவின் தலைவனாகக் காட்டத் தொடங்கினார். பின்னர் அவர் இஸ்லாமிய உலகில் கவனம் செலுத்தத் தொடங்கிய ஒரு காலம் வந்தது. மேலும் சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வட ஆப்பிரிக்காவில் இரண்டாவது புனித தலத்தை (ஃபாத்திமிட் கலிபாவை) நிறுவ வேண்டும் என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1kmj7nvzpko
  14. 19 JAN, 2025 | 05:09 PM மன்னார் நீதிமன்றத்துக்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுக்குடா கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பின்னர், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்கலாக நான்கு பேர் மீது நீதிமன்றத்துக்கு முன் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். அதனையடுத்து, பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகள் நடத்தப்பட்டது. அதன் பிரகாரம், தொடர்ச்சியாக மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/204276
  15. சீனாவின் உதவிகள் கடன்பொறியா? - அனுரகுமார திசநாயக்க மறுப்பு - சீனா இலங்கையை இராணுவ மயப்படுத்தவில்லை என்றும் தெரிவிப்பு Published By: RAJEEBAN 19 JAN, 2025 | 10:55 AM by Xinhua writers Ma Zheng, Liu Chen சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த இலங்க ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹ_வாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திசநாயக்க செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது. 2004 இல் நான் முதல்தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டேன்,20 வருடங்களிற்கு பின்னர் திரும்பிவரும் நான் பாரிய மாற்றங்களை பார்க்கின்றேன் என திசநாயக்க தெரிவி;த்தார். இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 68 வருடங்களாக நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றும் நிலைத்திருக்கும் நட்புறவின் மூலம் சீனாவும் இலங்கையும் தங்கள் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை ஆழமாக்கியுள்ளன. இருதலைவர்களிற்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதியபட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு,விவசாய ஒத்துழைப்பு, சமூக நலம் ஊடகம் உட்பட பல விடயங்;கள்தொடர்பில் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. வறுமை ஒழிப்பு தொழில்நுட்ப முன்னேற்றம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல விடயங்களில் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்த திசநாயக்க இந்த சவால்களில் இருந்து மீள்வதற்கு சீனா குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைக்கு உதவமுடியும்என தெரிவித்தார். சீன அரசாங்கம் என்பது மக்களை அடிப்படையாக கொண்டது மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என்பதை நான் அவதானித்தேன் இலங்கையின் புதிய அரசாங்கமும் மக்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டது என இலங்கையின் 56 வயது புதிய ஜனாதிபதி தெரிவித்தார். வறுமையை ஒழிப்பதில் சீனாவின் சாதனைகளை பாராட்டிய திசநாயக்க சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் என்பது உலகத்திற்கான முன்மாதிரி ஐக்கிய நாடுகளும் அதனை பாரட்டியுள்ளது சீனாவும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என தெரிவித்தார். சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகம் தன்னைமிகவும் கவர்ந்ததாக தெரிவித்த திசநாயக்கஅது சீனா எப்படி கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சவால்களை எதிர்கொண்டு தற்போது வெற்றியை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார். இது சீன மக்களிற்கு மாத்திரம் முக்கியமானதில்லை, இது அனைவருக்கும் வளர்ச்சிக்கான புதிய முன்னோக்குகளை வழங்குகின்றது என தெரிவித்தார். கடந்த வருடங்களில்புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கையும் சீனாவும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளன.சீனாவின் நிறுவனங்கள் துறைமுகங்கள் பாலங்கள் மருத்துவநிலையங்கள் மின்னிலையங்கள் போன்றவற்றை அமைத்துள்ளன.இதன் மூலம் அவை இலங்கையின் உட்கட்டுமானத்திலும் முதலீட்டு சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளன. சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கு முக்கியமான நாடு,அபிவிருத்தி உதவிகளை வழங்கும் முக்கியநாடு. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய பட்டுப்பாதைதிட்ட ஒத்துழைப்பில் கொழும்பு துறைமுக நகரமும் அம்பாந்தோட்டை துறைமுகமும் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டுதிட்டங்களும் இலங்கைக்கு நீண்டகால அளவில் பெரும் பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் இதில் சந்தேகமில்லை என திசநாயக்க தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்புதுறைமுக நகரம் ஆகியவற்றிற்கு அருகில்கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் என தெரிவித்த திசநாயக்க இதன் மூலம் அதிகளவு முதலீட்டை பெறமுடியும் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டார். சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204210
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி சேர்க்கப்படாதது இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களிலும் இந்த நோயின் பரவல் அதிகமாக இருக்கலாம் என்று மூத்த மருத்துவர்களும், துறை சார்ந்த நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். அரசு திட்டத்தில் புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த நோய்ப் பரவலைக் கண்டறிய, இந்த நோயை 'தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக' மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர். பொன்னுக்கு வீங்கி வெகு காலமாக சமூகத்தில் இருந்து வரும் நோயாகும். பொதுவாக குழந்தைகளிடம் இந்த நோய் காணப்பட்டாலும் பெரியவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்த நோய் மலட்டுத் தன்மையை, குறிப்பாக ஆண்களிடையே அதிகம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால், இதன் பரவலை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 61 பேருக்கும் 2022-2023ஆம் ஆண்டில் 129 பேருக்கும் பொன்னுக்கு வீங்கி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் சுமார் 8 மடங்கு அதிகமாக சுமார் 1,091 பேருக்கு தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி இருப்பது கண்டறியப்பட்டது. குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்? அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன? நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்? தமிழ்நாட்டின் நிலத்தடி நீரில் அதிகரிக்கும் நைட்ரேட் - அந்த நீரை குடித்தால் என்ன பிரச்னை வரும்? இந்தத் தரவுகளைக் குறிப்பிடும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆய்விதழில் வெளிவந்துள்ள கட்டுரை, மேலும் சில தரவுகளையும் கூறுகிறது. "ஒரு லட்சத்தில் எத்தனை பேருக்கு நோய் ஏற்படும் என்ற விகிதம் 2021இல் 0.07 ஆக இருந்தது. அந்த விகிதம் 2024இல் 1.3 ஆக அதிகரித்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட நோய் பாதிப்புகளில் 31% சென்னையில் பதிவாகியுள்ளது." இதனால் பொன்னுக்கு வீங்கியை 'தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக' அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நர்மதா, அபிநயா உள்ளிட்டோர் எழுதிய அந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்கிறது. கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்?12 ஜனவரி 2025 பொன்னுக்கு வீங்கி நோய் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆங்கிலத்தில் மம்ஸ் (mumps) என்றழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி நோய், பாராமிக்சோவைரஸ் எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸால் ஏற்படும் நோயாகும். இது காற்றில் எளிதாகவும் வேகமாகவும் பரவக்கூடியது. காதுகளுக்கு முன்பாக இருபுறமும் இருக்கும் உமிழ்நீர் சுரப்பியின் (parotid gland) வீக்கம் இந்த நோயின் பிரத்யேக அறிகுறி. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இடது அல்லது வலது அல்லது இருபுறமும் காதுகளுக்கு கீழே பெரிய வீக்கம் தென்படும். காதுகளுக்குக் கீழே மிகுந்த வலி ஏற்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும். "ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்கள் வரைகூட அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாக அவர் மற்றவருக்கு அந்த நோயைப் பரப்பியிருக்க முடியும். எனவே குழந்தைகளிடம் குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் மிக வேகமாக இந்த நோய் பரவும்" என்று தொற்றுநோய் நிபுணரும் மூத்த மருத்துவருமான சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகிறார். இதைக் குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து கிடையாது. இது தானாகவே சீராகும் நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் ஏற்பட்ட காலத்தில் அதிகமான நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு மட்டுமே மருந்து கொடுக்க முடியும். "சில குழந்தைகளிடம் இந்த நோய் மிக லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நோய் வந்ததேகூட தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பொருத்தே இது அமையும்" என்று மாநில பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி தெரிவிக்கிறார். தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று- எவ்வாறு பரவும்? தற்காப்பு என்ன?6 ஜனவரி 2025 மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன?5 ஜனவரி 2025 பாதிப்புகள் என்ன? இந்த நோய் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தானாகவே குணமாகக் கூடியது என்றாலும், இது தீவிரமாக தாக்கினால், உடலில் வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் மூளைக் காய்ச்சல் (Meningitis) ஏற்பட வாய்ப்புண்டு. இதன் விளைவாக மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும். அதோடு, கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படும். இதனால் கணைய செயல்பாடுகள் நாளடைவில் பாதிக்கப்படும். ஆர்கைடிஸ் (Orchitis) எனப்படும் ஆண் விரைப்பைகளில் உண்டாகும் பாதிப்பு ஏற்படும். விரைப்பைகளில் வலியும் வீக்கமும் ஏற்படும். இதே போன்று பெண்களின் கருப்பைகளையும் பாதிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நோய் மலட்டுத் தன்மையை, குறிப்பாக ஆண்களில், ஏற்படுத்தக் கூடியது என்பதால் இதை அரசுத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாக முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி தெரிவித்தார். "உயிருக்கு ஆபத்தான பெரும்பாலான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. அடுத்து, மலட்டுத் தன்மையை உருவாக்க வாய்ப்பு இருப்பதால் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை வழங்க வேண்டிய அவசியம் மிகவும் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களில் பிறப்புறுப்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதற்கான குறிப்பிடும்படியான தரவுகள் இல்லை என்றாலும், இது மருத்துவ ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல்," என்றார் அவர். மேலும், "தனியார் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு இந்த நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள மக்கள் இடையேதான் இந்த நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு தேவை" என்றார். பொன்னுக்கு வீங்கி நோயின் நோய் பரவும் விகிதம் (R0- ஆங்கிலத்தில் 'ஆர் நாட்' என்று சொல்லப்படும் விகிதம்) -10 முதல் 12 ஆக உள்ளது. "அதாவது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து முதல் 12 பேருக்கு இந்த நோயைப் பரப்பக்கூடும். இது எந்த வயதினருக்கும் ஏற்படக் கூடும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களிடம் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது" என்கிறார் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன். காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்15 ஜனவரி 2025 இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?15 ஜனவரி 2025 பொன்னுக்கு வீங்கி நோய் பரவலுக்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,SUBRAMANIAN SWAMINATHAN படக்குறிப்பு, தொற்றுநோய் நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன் தமிழ்நாடு சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி வழங்கப்படாததே இந்த நோய் பரவலுக்கான முக்கியக் காரணம் என்றார். "தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த வேண்டிய வயதில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் அரசு மருத்துவமனைகளில் இருந்து தங்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அப்படி இருக்கையில், 85% மக்களுக்கு இந்த தடுப்பூசி சென்று சேரவில்லை. சமூகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காதபோது நோய்ப் பரவல் அதிகரிக்கும். இனி வரும் ஆண்டுகளிலும் இந்த நோய்ப் பரவல் அதிகமாகவே இருக்கும்" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி. பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி பொதுவாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கான தடுப்பூசிகளுடன் சேர்த்து ஒரே தடுப்பூசியாக வழங்கப்படும். அரசுத் திட்டத்தின் கீழ் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. "இரண்டும் சகோதரர்கள் போலத்தான். ஒரு நோயைக் கட்டுப்படுத்தும்போது, கட்டுப்படுத்தப்படாத மற்றொரு நோய் அதிகரிப்பது இயல்பே" என்றும் அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார். தமிழ்நாடு உதவியால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி - இன்றைய 5 முக்கிய செய்திகள்15 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TNDPH படக்குறிப்பு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.செல்வவிநாயகம். மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.செல்வ விநாயகம், "இந்த நோய்க்கான தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான அவசியம் உள்ளது. ஆனால், புதிய தடுப்பூசிகளை அரசுத் திட்டத்தின் கீழ் சேர்ப்பது மத்திய அரசின் கொள்கை முடிவு" என்றார். இந்த நோய் தமிழ்நாட்டில் மட்டும் அதிகரிக்கவில்லை, பிற எல்லா மாநிலங்களிலும், உலக அளவிலும்கூட பரவல் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நோயை தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, அனைத்து காய்ச்சல்களும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்று பதிலளித்தார். பொன்னுக்கு வீங்கி நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஒன்பது மாதங்களில், 15 மாதங்களில், பின்பு ஐந்து வயதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வயதில் எடுத்துக் கொள்ளத் தவறிய 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசியை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy7gkgl8lngo
  17. ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிக அலுவலக அதிகாரிகளிடம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 18 JAN, 2025 | 10:05 PM (நா.தனுஜா) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு கடந்த 15 - 16 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளரும், கிளிநொச்சி மாவட்டத் தலைவியுமான லீலாதேவி ஆனந்த நடராஜா, முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி, கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 மாணவர்களில் ஒருவரின் தாயான ஜெனிஃபர் மற்றும் 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். கொழும்பிலுள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்துகொண்ட மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர், மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்களுடன் தொடர்புபட்ட விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடல்களில் பங்கேற்று, தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். அதேவேளை இலங்கையிலிருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினர், இம்மாநாட்டுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் அதிகாரிகள் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இச்சந்திப்புக்களின்போது தற்போது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்படவேண்டும் என வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பினர், இருப்பினும் அதற்குச் சமாந்தரமாக இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இலங்கையைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளையும், வேண்டுகோள்களையும் செவிமடுத்த ஐ.நா அதிகாரிகள், அவை தொடர்பில் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினர். https://www.virakesari.lk/article/204186
  18. நிலைபேறற்ற சீன முதலீடுகள் கடன்சுமையை அதிகரிக்கும் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த இந்திய உயர்ஸ்தானிகர்; சீனத்தூதுவரின் உள்விவகார தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டு 18 JAN, 2025 | 10:00 PM ஆர்.ராம் நாடொன்றின் நிலைபேறன எதிர்காலத்தினை உறுதிப்படுத்தாத சீனாவின் முதலீடுகள் அந்நாட்டின் கடன்சுமையையே அதிகரிக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் தனியார் விடுதியொன்றில் இராப்போசனத்துடன் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், பவானந்தராஜா, ரஜீவன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் யாழ்.இந்திய துணைத்தூதர் சாய்முரளியும் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் திருகோணமலையில் நடைபெறும் மத்திய குழுக்கூட்டத்தில் பங்குபற்றவேண்டி இருந்தமையால் இச்சந்திப்புக்கு சமூகமளித்திருக்கவில்லை. இராப்போசனத்துடன் சந்திப்பு ஆரம்பமாகியிருந்த நிலையில் சொற்ப நேரத்தில் அமைச்சர் சந்திரசேகரர் அங்கிருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது கருத்துக்களை வெளிப்படுத்தலானார். முதலில், இந்தியா போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதில் கொண்டிருக்கின்ற கரிசனைகளை வெளிப்படுத்தியதோடு, தமது நலத்திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் நோக்கங்களை பிரஸ்தாபித்தார். இதன்போது போரால் பாதிக்கப்பட்ட மக்களினதும், பிரதேசங்களினதும் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடுகளில் இந்தியா கரிசனைகளைக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அத்துடன், எதிர்காலத்திலும் வடக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியா எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரதேசத்தின் அல்லது நாட்டின் எதிர்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு நிலைபேறான அபிவிருத்தியை அடைவதை இலக்காகக் வைத்தே தமது முதலீடுகளாக இருந்தாலும் சரி, நன்கொடைகளாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்த செயற்பாடுகளும் அமைகின்றன என்று குறிப்பிட்டார். இந்தியாவைப் போன்றே அமெரிக்கா, மேற்குலக நாடுகள் அவை கொண்டிருக்கின்ற இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் எந்தவொரு நாட்டிலும் முதலீடுகள் மற்றும் நன்கொடைகளை வழங்கம் போது ஆழமாக கரிசனை கொள்கின்றன என்றும் கூறினார். ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் அவர்களின் முதலீட்டுத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படுவதோடு அவை நிலைபேறான இலக்குகளை பெரிதாக மையப்படுத்துவதில்லை. ஆகவே அந்நாட்டின் நிலைபேறற்ற முதலீடுகள் எந்தவொரு நாட்டையும் அதீதமான கடன்சுமைக்குள்ளேயே கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனையடுத்து, இலங்கைக்கான சீனத்தூதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்தமையை வரவேற்கின்றேன் என்று கூறிமை தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இராஜதந்திர வரமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு நாட்டின் இராஜதந்திரியும் மக்களால் வழங்கப்பட்ட ஆணை தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிடுவதானது, தான் இராஜதந்திர சேவையை ஆற்றும் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையீடு செய்வதாகவே அமையும். ஆகவே அவரது பிரதிபலிப்புக்கள் தவறானவை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களைப் பார்த்து, சீனத்தூதுவரின் கருத்தை நீங்கள் உங்களுக்குச் சாதகமாக தற்போது கருதினாலும், எதிர்காலத்தில் மாறுபட்ட நிலைமையொன்று ஏற்படுகின்றபோது அது உங்களுக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டதோடு தமது நாடு உட்பட வேறெந்த நாடுகளிலும் இத்தகைய கருத்துக்களை இராஜதந்திர சேவையில் இருப்பவர்கள் பகிரங்கமாக தெரிவிப்பார்களாக இருந்தால் வெளிவிவகார அமைச்சின் எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், குறித்த சந்திப்பின்போது, ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களை விடவும் படுமோசமாக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று குறிப்பிட்ட கஜேந்திரகுமார், உதாரணமாக, துறைசார்ந்த குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அங்கத்துவங்களை வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவ்விடயங்களை தெரியப்படுத்தும்போது தீர்வுகளை பெறமுடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளதோடு, பவானந்தராஜா உள்ளிட்டவர்கள் இராஜதந்திர விடயத்தில் தமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் இருதரப்பு, பல்தரப்பு உறவுகளை சீராகப் பேணுகின்றது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204189
  19. Published By: DIGITAL DESK 2 18 JAN, 2025 | 10:11 PM (நா.தனுஜா) சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சன்செஸ் ஆமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ ஆகியோருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை கோரும் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டனர். அதற்குப் பதிலளித்த சிறிதரன், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வட - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுடன்கூடிய தீர்வு என்பது தான் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை அடுத்து இலங்கை அரசு இறுதியாக இணங்கிக்கொண்ட விடயம் எனச் சுட்டிக்காட்டினார். அத்தோடு அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கும் சமஷ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13 ஆவது திருத்தத்தைப் புறந்தள்ளி சமஷ்டி முறைமையிலான அதிகாரப்பகிர்வை வழங்கவேண்டியதன் தேவைப்பாடுகள், கனடா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஷ்டி முறைமையையும், இந்திய மாநில சுயாட்சி முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் சமஷ்டி முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் என்பன பற்றியும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் சிறிதரன் எடுத்துரைத்தார். அதேவேளை இச்சந்திப்பின்போது தமது தேர்தல் கண்காணிப்புக்குழுவினால் தயாரிக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான இறுதி அறிக்கையின் பிரதியொன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளால் சிறிதரனிடம் வழங்கிவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/204182
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தும் கொள்கைகளால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சைமன் ஜாக் & டாம் எஸ்பினர் பதவி, பிபிசி வணிக ஆசிரியர் & செய்தியாளர் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது. வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரம் குறுகிய காலத்தில் விரைவாக வளர உதவும் அதே வேளையில், அவை பணவீக்கம் உயர்வதற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று இஎம்எப் குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி, 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 3.3 சதவீதம் என்ற அளவில் சீராக, ஆனால் மெதுவாக இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது கடந்த காலத்தில் சராசரியாக இருந்த 3.7 சதவீத வளர்ச்சி விகிதத்தைவிடக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்ததைப் போலவேதான் 2025ஆம் ஆண்டின் ஐஎம்எஃப் அறிவிப்பும் உள்ளது. ஏனென்றால் முன்பு எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கருதுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த கூடுதல் வளர்ச்சி உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கியமான பொருளாதாரங்களில் மெதுவான வளர்ச்சியைச் சமநிலைப்படுத்த உதவும். டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? அவரது உத்தி என்ன? டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா? அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு பிரிட்டனின் பொருளாதார உற்பத்தி 2025ஆம் ஆண்டில் 1.6 சதவீதம் அதிகரிக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது கடந்த அக்டோபரில் அவர்கள் கணித்த 1.5 சதவீதத்தைவிட சற்று அதிகம். இருப்பினும், அந்த அமைப்பு கணித்ததைவிட, கடந்த ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரம் அதன் வளர்ச்சியில் பலவீனமடைந்துள்ளதை சமீபத்திய ஐஎம்எஃப் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டுகின்றன. "அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் பெரிய ஐரோப்பிய பொருளாதாரமாக பிரிட்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்கா தவிர, இந்த ஆண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை மேம்படுத்தும் ஒரே ஜி7 பொருளாதாரம் பிரிட்டன்தான்" என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கூறுகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் வருகையோடு தொடர்புடைய அபாயங்களை, உலகப் பொருளாதாரம் குறித்த ஐஎம்எஃப்-இன் கணிப்பு எடுத்துக்காட்டுகிறது. ஜிம்மி கார்டர் காலமானார்: வெள்ளை மாளிகையில் தடம் பதித்த வேர்க்கடலை விவசாயி30 டிசம்பர் 2024 டிரம்ப் திட்டம்: சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்கள் - காரணம் என்ன?26 நவம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சீனா, மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோது, சீனாவுடன் வர்த்தகப் போரைத் தொடங்கினார். இதன் விளைவாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ஒருவருக்கொருவர் வரிகளை விதித்துக் கொண்டன. இப்போது, சீனா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும் ஒன்பது நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்க டாலருக்கு போட்டியாக புது நாணயத்தை உருவாக்கினால் அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். வரி குறைப்பு மற்றும் அதன் கட்டுப்பாடுகளை நீக்குவது போன்ற இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் விரைவாக வளர உதவும் என்று ஐஎம்எஃப் கருதுகிறது. உலகளவிலான இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீத வரியும், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீன பொருட்களுக்கு 60 சதவீத வரியும் விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் உலகின் பிற பகுதிகளிலும் இறுதியில் அமெரிக்காவிலும் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டுமின்றி, அமெரிக்கப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து விலைகள் உயர்ந்தால், அது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஐஎம்எஃப் எச்சரிக்கிறது. மேலும் "இதனால் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் முதலீடு செய்வதற்கு குறைந்த பாதுகாப்பு உடையவையாக மாற்றப்படுகின்றன." கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா?29 நவம்பர் 2024 கொல்கத்தா: சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு - பெண் மருத்துவர் வழக்கு கடந்து வந்த பாதை2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JORGE LUIS PÉREZ VALERY படக்குறிப்பு, டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தினால், அது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித் திறனைக் குறைக்கக்கூடும். (கோப்புப் படம்) முதலீட்டாளர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், வணிகங்கள் மீதான பல கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டால், அமெரிக்க டாலர் மிகவும் வலுவாக மாறக்கூடும். இது வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இருந்து பணத்தை உறிஞ்சி, உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம், டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தினால், அது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித் திறனைக் குறைத்து, "நிரந்தரமாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளை அதிகரிக்கலாம்." ஏனென்றால், டிரம்பின் எதிர்காலக் கொள்கைகள் குறித்த "மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை" ஏற்கெனவே உலகளவில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐஎம்எஃப்-இன் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவிர் கோரிஞ்சஸ் கூறினார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க கட்டணங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கலாம் என்றும் இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கலாம் என்றும் வியாழக்கிழமையன்று உலக வங்கி எச்சரித்தது. மேலும் 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதாவது கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது காணப்பட்ட சரிவைத் தவிர, 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார சரிவாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp9xxk7ex4go
  21. நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம்; இரண்டு மாடுகள் மாயம் 18 JAN, 2025 | 11:50 AM நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்குள்ளான போது லொறியினுள் 9 மாடுகள் இருந்துள்ளதாகவும் அவற்றில் 2 மாடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளமையால் அருகில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாடுகள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான வாகனங்கள் மாத்திரம் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிஸாரும் இணைந்து இந்த வீதியின் போக்குவரத்து தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும் ஏராளமான பதாதைகள் வீதியில் இருபுறமும் காட்சிப்படுத்தப்பட்டள்ளன. இருந்த போதிலும் சட்டங்களை மீரும் சாரதிகள் இந்த வீதியில் ஐந்து தொன்களுக்கும் அதிக எடையுள்ள வாகனங்களைச் செலுத்துவதன் காரணமாகவே அதிக விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது . எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் இங்கு செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/204133
  22. Published By: DIGITAL DESK 2 18 JAN, 2025 | 12:41 PM கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோரின் விஜயம் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது. இதன் போது, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (WaSSIP கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும், அதன் செயற்பாடுகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடம் கேட்டறிந்து கொண்டனர். இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/204139
  23. ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லட் லிட்டன் பதவி, ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரூ.1.73 கோடி இரண்டாவது வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரையோஜெனிக்ஸ் (cryogenics) தொழில்நுட்பம், உண்மையில் சாத்தியமா அல்லது வெற்று வாக்குறுதியா? கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையை எவ்வாறு அடைவது மற்றும் அத்தகைய வெப்பநிலையை பொருட்கள் அடையும் போது அவை எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய படிப்பாகும். ஜெர்மனியின் மத்திய பெர்லினில், ஒரு சிறிய, கிட்டத்தட்ட பொம்மை போன்ற ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் உள்ளே, மேல்புறத்தில் பல்வேறு வகையான கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகமான டுமாரோ பயோ (Tomorrow bio), மறுசீரமைத்து இயக்கும் மூன்று ஆம்புலன்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நோயாளிகளை இறந்த பிறகு உறைய வைப்பது, பிறகு ஒருநாள் அவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும். இவை அனைத்துக்கும் 2,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.73 கோடி) செலவாகும். நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்? ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்? சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம் பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? பெர்ஃப்யூஷன் (Perfusion) பம்பில், டுமாரோ பயோவின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான எமில் கெண்ட்சியோரா உள்ளார். உலகின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு மிச்சிகனில் திறக்கப்பட்டது. அது மனித குலத்தின் எதிர்காலம் என்று நம்புபவர்களுக்கும், அதை சாத்தியமற்ற ஒன்று என்று நிராகரிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. கெண்ட்சியோரா இத்தகைய ஆய்வகத்துக்கான தேவை படிப்படியாக உருவாகிறது என்று கூறுகிறார். இதுவரை அவர்கள் 'மூன்று அல்லது நான்கு' நபர்களையும் ஐந்து செல்லப்பிராணிகளையும் உறைய வைத்துள்ளனர் (அல்லது கிரையோபிரிசர்வ் (cryopreserved) செய்யப்பட்டுள்ளன). கிட்டத்தட்ட 700 பேர் இதற்காக பதிவு செய்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் அவர்கள் அமெரிக்கா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவார்கள். உடல் பருமன்: பி.எம்.ஐ கணக்கீடு ஆரோக்கியம் பற்றி தெளிவாக உணர்த்துகிறதா?17 ஜனவரி 2025 ஆஸ்திரேலியா: நீர் இருக்கும் இடமெங்கும் நிரம்பி வழியும் முதலைகள், பணம் புரளும் தோல் வியாபாரம்17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,CHARLOTTE LYTTON படக்குறிப்பு, ஐரோப்பாவின் முதல் கிரையோனிக்ஸ் ஆய்வகமான டுமாரோ பயோ மறுசீரமைத்து இயக்கும் மூன்று ஆம்புலன்ஸ்களில் இதுவும் ஒன்றாகும் மனிதர்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியுமா? கிரையோபிரெசர்வேஷன் முறையில் யாரும் இதுவரை வெற்றிகரமாக புத்துயிர் பெறவில்லை. அப்படி யாரேனும் வந்தாலும் கூட, அதன் சாத்தியமான விளைவு என்பது மூளையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது. மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதே இந்த திட்டம் அபத்தமானது என்பதைக் காட்டுகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார். 'நானோ தொழில்நுட்பம் (செயல்முறையின் கூறுகளை நானோ அளவில் மேற்கொள்வது) அல்லது கனெக்டோமிக்ஸ் (மூளையின் நியூரான்களை மேப்பிங் செய்தல்) ஆகியவை கோட்பாட்டு உயிரியலுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான தற்போதைய இடைவெளியை குறைக்கும்' என்பது போன்ற வாக்குறுதிகள் மிகையானவை என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,CHARLOTTE LYTTON படக்குறிப்பு, சரியான வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும் வரை, இங்கு கால வரம்புகள் கிடையாது என்கிறார் கெண்ட்சியோரா இத்தகைய விமர்சனங்கள் டுமாரோ பயோவின் லட்சியங்களை மழுங்கடிக்கவில்லை. ஒரு நோயாளி டுமாரோ பயோ நிறுவனத்துடன் இறுதி செயல்முறைக்கு கையெழுத்திட்டதும், அவர் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருப்பதை ஒரு மருத்துவர் உறுதிப்படுத்துவார். பிறகு நிறுவனம் அவர்களின் இருப்பிடத்திற்கு ஆம்புலன்ஸை அனுப்புகிறது. சட்டப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், அந்த நபரின் உடல் டுமாரோ பயோவின் ஆம்புலன்சுக்கு மாற்றப்படும். அங்கு கிரையோனிக்ஸ் செயல்முறை தொடங்குகிறது. மருத்துவ வரலாற்றில், சில நோயாளிகளின் இதயம் உறை வெப்பநிலையில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சம்பவங்களில் இருந்து, தங்களுக்கான உந்துதலை டுமாரோ பயோ நிறுவனம் பெற்றது. ஒரு உதாரணம் அன்னா பேகன்ஹோம் , 1999ஆம் ஆண்டில் நார்வே நாட்டுக்கு, விடுமுறையைக் கழிக்கச் சென்ற நபர். பனிச்சறுக்கு விளையாட்டின் போது, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இரண்டு மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார் (Clinically dead). ஆனால் மீண்டும் புத்துயிர் பெற்றார். குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 மனித உடல் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ் சென்றால் என்னவாகும்? இந்த செயல்முறையின் போது, உடல்கள் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன, கிரையோபுரோடெக்டிவ் திரவமும் செலுத்தப்படுகின்றது. "மனித உடலை பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ், உடலை உறைய வைப்பது மட்டும் போதாது, அதை கிரையோப்ரெசர்வ் செய்ய வேண்டும். இல்லையெனில், எல்லா இடங்களிலும் உறைபனி படிகங்கள் இருக்கும், உடலின் திசுக்கள் அழிந்துவிடும்" என்கிறார் கெண்ட்சியோரா. "அதை எதிர்க்க, உடலின் அனைத்து நீரையும், உறையக்கூடிய அனைத்தையும், கிரையோபுரோடெக்டிவ் திரவம் கொண்டு மாற்ற வேண்டும். அதைச் செய்தவுடன், மிக வேகமாக சுமார் -125C டிகிரி (257F) வெப்பநிலையை அடைய வேண்டும். பின்னர் மிகவும் மெதுவாக, -125C முதல் -196C (384.8F) வெப்பநிலை வரை செல்ல வேண்டும்." என்கிறார் கெண்ட்சியோரா. பிந்தைய வெப்பநிலையில், நோயாளி சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சேமிப்பு அலகுக்கு மாற்றப்படுகிறார். அதன் பிறகு 'காத்திருக்க வேண்டும்' என்று கெண்ட்சியோரா கூறுகிறார். "திட்டம் என்னவென்றால், எதிர்காலத்தின் ஒரு கட்டத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியிருக்கும். அப்போது புற்றுநோய் அல்லது அந்த நோயாளியின் மரணத்திற்கு எது வழிவகுத்ததோ அதை குணப்படுத்த வழி இருக்கும். மேலும் கிரையோபிரெசர்வேஷன் செயல்முறையை மீண்டும் தொடங்கிய கட்டத்திற்கே கொண்டுவரவும் அப்போது வழி இருக்கலாம்." ஆனால் அத்தகைய மருத்துவத் தொழில்நுட்பம் எப்போது கிடைக்கும்? 50, 100 அல்லது 1,000 ஆண்டுகளில் நடக்குமா என்பது தெரியாது. "ஆனால், அது உண்மையில் முக்கியமில்லை. நீங்கள் சரியான வெப்பநிலையில் உடலை வைத்திருக்கும் வரை, இது சாத்தியம். இங்கு கால வரம்பு கிடையாது" என்கிறார் கெண்ட்சியோரா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த செயல்முறையின் போது, உடல்கள் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன (சித்தரிப்பு படம்) கிரையோனிக்ஸ் - நடைமுறையில் சாத்தியமா? கிரையோனிக்ஸ் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு இந்த யோசனை முட்டாள்தனமாகவும் அச்சுறுத்தக் கூடியதாகவும் தோன்றலாம். "ஆனால் கோட்பாட்டளவில் இது ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என கெண்ட்சியோரா கூறினாலும், கிரையோபிரெசர்வேஷன் செயல்முறைக்கு பிறகு வெற்றிகரமாக உயிர்ப்பிக்கப்பட்ட மனிதர்களின் தற்போதைய எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்த செயல்முறையின் திறனைக் காட்டும் ஒப்பீட்டு விலங்கு ஆய்வுகளும் குறைவு. எம்பாமிங் திரவத்தை உட்செலுத்துவதன் மூலம் ஒரு எலியின் மூளையைப் பாதுகாப்பது இப்போது சாத்தியம். எதிர்கால உயிர்ப்பித்தலுக்காக மனிதர்களின் மூளையும் ஒருநாள் இப்படி பாதுகாக்கப்படுவது சாத்தியமாகலாம் என்ற நம்பிக்கையை, மேற்கூறிய செயல்முறை அளிக்கிறது. ஆனால் இந்த செயல்முறை, விலங்கின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ வேண்டும், அதாவது அந்த விலங்கை கொல்வதன் மூலம். கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித உடல் பூஜ்ஜிய டிகிரிக்கு கீழ் சென்றால், உடலை உறைய வைப்பது மட்டும் போதாது, அதை கிரையோப்ரெசர்வ் செய்ய வேண்டும் என்கிறார் கெண்ட்சியோரா கெண்ட்சியோரா கூறுகையில், "பெரும்பாலான மருத்துவ முறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்போது அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டத்திற்கு இருக்கும் எதிர்ப்புக்கு காரணம், மரணத்தில் இருந்து ஒருவரை உயிர்ப்பிப்பது விசித்திரமாக தோன்றுவதால் தான்" என்றார். சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு நூற்புழு, கிரையோப்ரிசர்வ் செய்யப்பட்டு, மீண்டும் முழு செயல்பாட்டிற்கு திரும்ப முடியும் என்பதைக் காட்டும் ஆராய்ச்சி, ஒரு உயிரினம் மரணத்தைக் கடக்க முடியும் என்பதற்கான சான்றுகளை ஊக்குவிக்கிறது என்றும் அவர் நினைக்கிறார். கொறித்துண்ணிகளிடையே (Rodents), உறுப்புகள் புத்துயிர் பெற்றதற்கான சில சான்றுகளும் உள்ளன. 2023ஆம் ஆண்டில், 'மினசோட்டா ட்வின் சிட்டிஸ் பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் சிறுநீரகங்களை 100 நாட்கள் வரை கிரையோஜெனிக் முறையில் சேமித்து வைத்தனர். பிறகு மீண்டும் அதை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து, கிரையோப்ரொடெக்டிவ் திரவங்களை அகற்றி, அவற்றை மீண்டும் ஐந்து எலிகளுக்கு பொருத்தினர். 30 நாட்களுக்குள் அந்த உறுப்புகளின் முழு செயல்பாடு மீட்டெடுக்கப்பட்டது. "இன்னும் பல விஷயங்கள் உள்ளன. யாரும் அதை முயற்சிக்கவில்லை என்பதால் அது பயனளிக்காது என்ற எண்ணம் உள்ளது. முயற்சித்தால் தான் பயன்கள் தெரியும்" என்கிறார் கெண்ட்சியோரா. அதே சமயம், ஒருமுறை முயற்சித்துப் பார்த்தால், அவை பயனளிக்காது என்பதையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கொறித்துண்ணிகள் அல்லது புழுக்கள் போன்றவற்றுக்குப் பொருந்துகிற பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு பொருந்தாது என்பதை தெரிந்துகொண்டதைப் போல. கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 மனித ஆயுளை நீட்டிப்பது குறித்த விவாதங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரையோனிக்ஸ் என்பது, அதிகரித்து வரும் 'மனித ஆயுள் நீட்டிப்பு' குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாகும். நீண்ட ஆயுளைப் பற்றிய விஷயத்தில் இப்போது விவாதங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் அதிக ஆண்டுகள் வாழ முடியும் என அவை உறுதியளிக்கின்றன. ஆனால் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நன்றாக சாப்பிடுவதைத் தாண்டி, நடைமுறை ஆராய்ச்சி இந்த விஷயத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. கோயென், கிரையோனிக்ஸ் பற்றிய ஒரு மற்றொரு பார்வையை முன்வைக்கிறார், இது "ஆண்டிஃபிரீஸ் (Antifreeze) தொடர்பாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கை மற்றும் உயிரியல், இயற்பியல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் இயல்பு பற்றிய தவறான புரிதல்" என்று அவர் விவரிக்கிறார். இதயம் துடிப்பதை நிறுத்தியவுடன், நமது செல்கள் சிதைவடையத் தொடங்குகின்றன, இதனால் பெரும் சேதம் ஏற்படுகிறது. "ஒரு உடல் பின்னர் கிரையோப்ரிசர்வ் நிலையில் இருந்து மீண்டும் சாதாரண வெப்பநிலைக்கு வரும் போது, மரணத்திற்குப் பிந்தைய கட்டத்தில் நடந்த அனைத்து சிதைவுகளும் இப்போது மீண்டும் தொடங்கும்" என்கிறார் கோயென். இங்கு கிரையோனிக்ஸ் மீது தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதாவது திசுக்கள் மற்றும் உறுப்புகள் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலையில் நீண்டகால கிரையோபிரசர்வேஷன் மூலம் சேமித்து, பின்னர் பயன்படுத்தலாம். டுமாரோ பயோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் உடல்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளையில் சேமிக்கப்படுகின்றன, இது உடல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கெண்ட்சியோரா கூறுகிறார். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் ஒரு சந்ததியினருக்கு, நீண்டகாலமாக உறையவைக்கப்பட்ட அவர்களது மூதாதையர் சடலத்தின் பொறுப்பை திடீரென்று கொடுப்பது என்றால், அந்த சூழ்நிலையைக் கற்பனை செய்வது விசித்திரமாக உள்ளது அல்லவா? செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பணம் இத்தகைய இறுதி செயல்முறைக்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் மகிழ்ச்சியடையவில்லை கிரையோனிக்ஸின் ஆதரவாளர்கள் நோயாளியின் இறப்புக்கு காரணமான நோய்க்கான ஒரு சிகிச்சை எதிர்காலத்தில், அவர்கள் மீண்டும் உயிர்பிக்கப்படும் போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அல்லது அதேபோல இரண்டாவது முறையாக உயிர் பெற்றாலும் அது நீடிக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. இந்த செயல்முறைக்கான அதீத செலவு பற்றிய கவலையும் உள்ளது, பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பணம் இத்தகைய இறுதி செயல்முறைக்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் மகிழ்ச்சியடையவில்லை. "ஒன்றை தேர்வு செய்வதற்கான உங்களது சுதந்திரம், அதுவே மற்ற அனைத்து சாத்தியமான நெறிமுறை பரிசீலனைகளையும் முறியடிக்கிறது என்று நான் வாதிடுவேன்" என்று கெண்ட்சியோரா கூறுகிறார். "சிலர் தங்களது 85 வயதில் கூட சொகுசுப் படகுகளை அதிக விலைக்கு வாங்குகிறார்கள். அவர்களுக்கு அதை அனுபவிக்க குறைவான காலமே இருக்கலாம், உதாரணமாக மூன்று ஆண்டுகள். எனக்குத் தெரியவில்லை. அந்த அடிப்படையில், மீண்டும் உலகிற்கு திரும்ப 2,00,000 டாலர்கள் முதலீடு என்பது ஒரு நியாயமான ஒப்பந்தம் போல் தெரிகிறது" என்று அவர் கூறுகிறார். தங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் 60 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்கள் என்றும், ஆயுள் காப்பீடு மூலம் செயல்முறையின் கட்டணங்களுக்கு நிதியளிப்பதாகவும் அவர் கூறுகிறார் (இது நிறுவனம் மூலமாகவோ அல்லது சுயாதீனமாகவோ ஏற்பாடு செய்யப்படலாம்). '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்10 ஜனவரி 2025 பேனிக் அட்டாக்: சில நிமிடங்கள்தான்; ஆனால் உயிர் பயம் ஏற்படும் - சமாளிப்பது எப்படி?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, மரணம் மற்றும் உடலைப் பாதுகாப்பதற்கான உந்துதல் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 51 வயதான லூயிஸ் ஹாரிசனைப் பொறுத்தவரை, அவர் இந்த செயல்முறைக்கு கையெழுத்திட்டது 'ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டு'. "எதிர்காலத்தில் ஒரு புதிய வாழ்க்கைக்கு, மீண்டும் உயிர்பிக்கப்படலாம் என்ற யோசனையால் நான் ஈர்க்கப்பட்டேன். இது காலப் பயணத்தின் ஒரு வடிவம் போல் தோன்றியது," என்று அவர் கூறுகிறார். "இதில் திரும்பி வருவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு இருப்பது கூட ஒரு தர்க்கரீதியான தேர்வாகத் தோன்றியது." என்கிறார் ஹாரிசன். உறுப்பினர் கட்டணம் மற்றும் ஆயுள் காப்பீட்டிற்காக மாதத்திற்கு சுமார் $87 (7,535 ரூபாய்) செலுத்தும் ஹாரிசன், தனது முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறுகிறார். "மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், 'மீண்டும் வருவது எவ்வளவு கொடுமையானது, நமக்கு தெரிந்த அனைவரும் இருக்கமாட்டார்கள் அல்லவா' என்று. ஆனால் அது என்னைத் தடுக்கவில்லை. நாம் வாழ்நாள் முழுவதும் தெரிந்த, நெருக்கமான மனிதர்களை இழக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து வாழ ஒரு காரணத்தை தேடுகிறோம் அல்லவா?" என்கிறார் ஹாரிசன். சமீபத்திய கொரோனா பெருந்தொற்று, மரணம் மற்றும் உடலைப் பாதுகாப்பதற்கான உந்துதல் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அந்த காரணத்திற்காக தான் டுமாரோ பயோ நிறுவனம் சில லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவரின் நினைவகம், அடையாளம் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் நரம்பியல் கட்டமைப்பை இந்த வருடத்திற்குள் பாதுகாப்பது, பின்னர் 2028க்குள் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையில் இருந்து மீட்டுக் கொண்டுவருதல். "திட்டமிட்டபடி அனைத்தும் நடக்குமா என என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. இருப்பினும், குறைந்தபட்சம் தகனத்துடன் ஒப்பிடும் போது, இந்த செயல்முறையில் உயிர்ப்பித்தலுக்கான வாய்ப்பு அதிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் கெண்ட்சியோரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge775gjd3zo
  24. கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு - விசாரணையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சீல்டா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தச் சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 9, 2024 அன்று, மருத்துவமனையின் கலந்தாய்வுக் கூடத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. அதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தின் சுகாதார சேவைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடங்கின. இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. தற்போது ஜனவரி 18 அன்று, கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதாக பெற்றோர் கைது - ஆபாச வீடியோக்களை விற்று வருமானம் ஈட்டியதாக புகார் ஏமனில் மரண தண்டனை: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா? இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா? சிறப்பு நீதிபதி அனிர்பன் தாஸ், இந்த வழக்கை விசாரித்தார். இந்நிலையில் இன்று காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனுடன், ஏராளமான ஜூனியர் மருத்துவர்களும் அங்கு கூடியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் சல்மான் ராவி சம்பவ நீதிமன்றத்தில் இருந்து தகவல் தெரிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டம் பங்களா போகோ என்ற பெங்காளி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், சம்பவம் நடந்த நேரத்தில் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் தலா பகுதி காவல் நிலைய பொறுப்பாளர் அபிஜித் மண்டல் இருவர் மீதும் சிபிஐ-யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலவில்லை. டிரம்ப் 2.0: யுக்ரேன், நேட்டோ, சீனா, இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?3 மணி நேரங்களுக்கு முன்னர் ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?7 மணி நேரங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் "குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஆதாரங்களைச் சிதைத்ததாக" குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது சந்தீப் கோஷ், அபிஜித் மண்டல் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது அறிக்கையில், சிபிஐ இந்த வழக்கை 'அரிதிலும் அரிதானது' எனக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. அதேநேரம், இறந்த மருத்துவரின் பெற்றோர் சிபிஐ விசாரணையில் அதிருப்தி அடைந்து, வழக்கைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் சீல்டா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பதை நிறுத்தி வைத்து, முழு விஷயத்தையும் மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இன்று நீதிமன்றத்தில், கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோர் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gwwnyx1d2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.