Everything posted by ஏராளன்
-
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை இலங்கையில் மீள் குடியேற்ற புதிய திட்டம் - நாளிதழில் வெளியான 5 முக்கிய செய்திகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8½ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தினத்தந்தி செய்தி கூறுகிறது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 14) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், கணக்கில் காட்டப்படாத ரூபாய் 8½ கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான 'என்.ஆர்'. மற்றும் 'ஆர்.சி.சி.எல்'. என்ற பெயர்களில் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு குடிநீர், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 7ஆம் தேதி கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு ஈரோடு சென்று இந்த கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் ராமலிங்கம், அவருடைய மகன்கள் வீடுகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அதேநேரம் இந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஈரோடு மற்றும் பெங்களூருவில் உள்ள 26 இடங்களிலும் 5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் கடந்த 11ஆம் தேதி இரவு முடிவடைந்தன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கத்தின் மகன் ஆர்.சந்திரகாந்த் ஆகியோர் சகோதரிகளை திருமணம் செய்த வகையில் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். கட்டுமான நிறுவனத்தில் நடத்திய சோதனையின் போது சிமெண்ட் மற்றும் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்களை வாங்கியதாகக் கூறி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.420 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாயை அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. அத்துடன் கணக்கில் காட்டப்படாத ரூ.8½ கோடி மற்றும் பல நிதி மற்றும் சொத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன என்றும் தினத்தந்தி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா? இந்திய தூதருக்கு வங்கதேசம் மீண்டும் சம்மன் - இருநாட்டு எல்லையில் என்ன பிரச்னை? கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - 19 ஆண்டுக்கு பிறகு ஏ.ஐ மூலம் துப்பு துலங்கியது எப்படி? அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன? ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 58 காசு வீழ்ச்சியடைந்தது என்றும் தினமணி செய்தி கூறுகிறது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூபாய் 86.62 என்ற நிலையை எட்டியது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 58 காசு வீழ்ச்சியடைந்தது என்றும் அந்த செய்தி கூறுகிறது. திங்கள் கிழமை அந்நியச் செலவாணி சந்தை தொடங்கிய போது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூபாய் 86.12 ஆக இருந்தது. அதிலிருந்து ஒரு காசு மட்டுமே உயர்ந்து பின்னர், 58 காசு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் பங்குச் சந்தையில் இருந்து ரூ.2,254.68 கோடியை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை ரூ.22,194 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் எதிர்பார்த்ததை விட வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வட்டி விகித மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்புகள், அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் குறித்து அந்நாட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது ஆகியவை டாலரை ஸ்திரப்படுத்தி வருகின்றன என்றும் தினமணி செய்தி கூறுகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க பாஜக மேலிடம் தயாராகிறதா?13 ஜனவரி 2025 கும்பமேளா: பல லட்சம் பேர் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம்5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்தில் மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் இளைஞர் சதீஷ்குமாரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், கைது செய்யப்பட்ட நபருக்கு விரைந்து தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன. பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த 'கேதன் பரேக்' சிக்கியது எப்படி?13 ஜனவரி 2025 கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 'தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் வட,கிழக்கில் விரைவில் மீள்குடியேற்றம்' படக்குறிப்பு, மண்டபத்தில் இலங்கை அகதிகள் குடியிருப்புப் பகுதி தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கூறியிருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அவர்களை ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது அவர்களுக்கான அடிப்படைய வசதிகள் உள்ளிட்ட இதர விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகள் உள்ளமையால் முன்னோடித்திட்டமொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கருதுவதாக அதில், சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு குறித்த அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்திய நிலையில், வடக்கு, அல்லது கிழக்கு மாகாணத்தின் குறித்த பகுதியொன்றில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் தாயகத்துக்கு வரவழைத்து மீள்குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனைக்கும் சம்மதத்தினை வெளியிட்டனர். இவ்வாறான நிலையில் விரைவில் முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து ஒருதொகுதி குடும்பங்கள் அழைத்துவரப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?13 ஜனவரி 2025 கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா? டிரம்ப் அதிபரானதும் என்ன நடக்கும்? 4 சாத்தியங்கள்13 ஜனவரி 2025 இந்திய தேர்தல் குறித்த ஜூக்கர்பெர்க் கருத்துக்கு மத்திய அமைச்சர் மறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், 2024 இந்தியத் தேர்தல்கள் குறித்து கூறிய கருத்துக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, 'கடந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன' என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். 2024 தேர்தலில் மூன்றாவது முறையாக மோதியின் அரசு அமைந்ததை சுட்டிக்காட்டி, "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர். பிரதமர் மோதி தலைமையிலான என்.டி.ஏ (NDA) மீதான தங்களது நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று அவர் கூறினார். 2024 தேர்தல்களில், இந்தியா உட்பட பெரும்பாலான அரசுகள் கொரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் தோல்வியடைந்தன என்ற ஜுக்கர்பெர்க்கின் கருத்து உண்மையில் தவறானது என்றும் அவரிடமிருந்து தவறான தகவல்கள் வருவது ஏமாற்றமளிக்கிறது, உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என அந்தச் செய்தி கூறுகிறது. மேலும், "80 கோடி பேருக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கொரோனா காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்துவது வரை, பிரதமர் மோதியின் 3-வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்" என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2pn7l55l0o
-
அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை - நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு
13 JAN, 2025 | 06:03 PM (ஆர்.ராம்) நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கும் முகமாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள். இவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன். அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது. அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. எனினும் அவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/203742
-
பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் பலி
Published By: RAJEEBAN 12 JAN, 2025 | 12:06 PM பிரிட்டனின் தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற ரோரி கலம் சைக்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். 1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பிரபலமான ரோரி கலம் சைக்ஸ் மாலிபுவில் உள்ள அவரது பங்களாவில் கார்பன்மொனாக்சைட் வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார். பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயிலிருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் தெரிவித்துள்ளார். எனது மகன் வீடு தீயில் சிக்குண்டது,நான் அவரை காப்பாற்ற முயற்சித்தேன் ஆனால் தண்ணீர் வரவில்லை அது நிறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் தீயணைப்பு பிரிவினரின் உதவியை கேட்பதற்காக ஓடினேன்,ஆனால் நான் திரும்பிவந்தபோது மகன் இருந்த பகுதி முற்றாக தீக்கிரையாகியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். அம்மா என்னை விட்டுவிட்டுபோகாதே என அவன் அலறினான், எந்த தாயும் அவ்வாறான சூழ்நிலையில் தனது மகனை விட்டுவிட்டு போகமாட்டாள்,எனது கை உடைந்திருந்தது அதனால் அவரை தூக்கமுடியவில்லை என தாயார் தெரிவித்துள்ளார். எனது அழகான மகனின் மரணத்தினால் நான் முற்றாக மனதுடைந்துள்ளேன் என சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள அவர் லாஸ்வேர்ஜெனெஸ் நீரை நிறுத்திவிட்டதால் என்னால் தீயை அணைக்க முடியவில்லை 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் அவர்களிடம் தண்ணீர் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203622
-
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் முரண்டு பிடித்த 'ஹிட்லர்' - என்ன நடந்தது? படக்குறிப்பு,மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த ஹிட்லர் என்ற மாடு 14 ஜனவரி 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 12 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இரண்டாவது சுற்றில் காளை குத்தியதில் இடுப்பில் காயமடைந்த மாடு பிடி வீரர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டில் 12 பேர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்பது நபர்கள் வீடு திரும்பி விட்டனர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி தற்போது வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம் 10 நாள் விடுமுறை, 10 படங்கள்: பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்களும் அவற்றின் கதையும் தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன்? தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா? படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது? முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். இரண்டாம் சுற்றில் விளையாடிய திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவர் இடுப்பில் காலை குத்தியதில் காயமடைந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சேது ராஜன் என்பவர் வாடிவாசலில் தனது காளையை அவிழ்க்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக காலில் அரிவாள் வெட்டியதில் காயமடைந்தார். தற்போது அவனியாபுரம மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறிய அளவில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். ஜல்லிக்கட்டு விதிகளை மீறி 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மாடு பிடிக்கும் வீரர்கள் இடையே இருப்பதை கண்டறிந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை வெளியேற்றினர். படக்குறிப்பு,மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6:30 மணிக்கு துவங்கியது. 'ஹிட்லரால்' அரைமணி நேரம் தடைபட்ட ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் மேலக்குடியைச் சேர்ந்த 'ஹிட்லர்' என்ற மாடு வாடிவாசல் பாதையில் 10 நிமிடம் படுத்துக்கொண்டதால் கால் மணி நேரம் மாடுகள் வெளிவருவதில் தடங்கல் ஏற்பட்டது. வெளியே வந்த பின்னும் படுத்துக்கொண்ட அந்த மாட்டை காவல்துறையினர் வெகு நேரம் போராடி வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்நடை பராமரிப்பு துறையின் அவசர சிகிச்சை வாகனம் கொண்டுவரப்பட்டு மிகுந்த சிரமத்துக்குப்பின் மாடு ஏற்றிச் செல்லப்பட்டது. முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. படக்குறிப்பு,முரண்டு பிடித்த 'ஹிட்லரால்' அரை மணி நேரம் ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. போட்டி நேரம் நீட்டிக்கப்படுமா? அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும். டிராக்டர், கார் - காத்திருக்கும் பரிசுகள் போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரு அண்டா, ஒரு வேஷ்டி பரிசாக வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் உற்சாகம் போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால மருத்துவ தேவைக்காக குழுக்களும், கால்நடை மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgrn0q1r791o
-
மருந்துகளை பரிசோதனை செய்ய ஆய்வகங்களை திறக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சின் செயலாளர்
Published By: DIGITAL DESK 2 13 JAN, 2025 | 01:28 PM (நமது நிருபர்) கொள்வனவு செய்யப்படும் மருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துகளின் தரம் தொடர்பில் குறிப்பிட்ட முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதை விடவும், பொதுமக்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்வதற்கு முன்னதாக பரிசோதனை செய்வதே மேலானது. ஆகவே மருந்துகளை ஆய்வு செய்வதற்கான பல ஆய்வகங்களை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. மருந்து இறக்குமதி தொடர்பாக நிறுவனமொன்றுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேநேரம், இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள் விரிவானவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அவதானமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/203700
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
பட மூலாதாரம்,TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத்தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரசின் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் காங்கிரசின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயாதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன? சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தம்பியை கொல்வதாக மிரட்டிய நபர் - பாட்டியால் ஒரே ஆண்டில் கிடைத்த நீதி பாலியல் தொல்லை: நடிகை ஹனிரோஸ் புகாரின் பேரில் நகைக்கடை அதிபர் கைது - என்ன நடந்தது? ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை குறித்து இந்திய அரசு கூறுவது என்ன? இரண்டாண்டுகளுக்குள்ளாகவே இளங்கோவனும் உடல்நலக் குறைவால் டிசம்பர் 14-ஆம் தேதி காலமானார். இதனால் மீண்டும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் காங்கிரசின் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என விவாதம் எழுந்த நிலையில், தி.மு.கவே அந்தத் தொகுதியில் போட்டியிடும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்குப் பிறகு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே 2011 முதல் 2016வரை தே.மு.தி.கவின் சார்பில் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில், இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) ஆகியவை அறிவித்துள்ளன. இதற்கு முன் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அ.தி.மு.கவும் தே.மு.தி.கவும் புறக்கணித்துவிட்ட நிலையில் இந்தத் தேர்தலையும் அக்கட்சிகள் புறக்கணித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தே.ஜ.கூவின் சார்பில் பா.ம.க. போட்டியிட்டது. ஆனால், இந்தத் தேர்தலை தே.ஜ.கூ. முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. ஆகவே, இந்தத் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நீக்க பாஜக மேலிடம் தயாராகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள பின்லேடன் கூட்டாளியை விடுவிக்க மனைவி கோரிக்கை - அமெரிக்கா செவி சாய்க்குமா?13 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றிபெறுவது பொதுவான வழக்கமாக இருக்கிறது. ஆனால், வெகு சில தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. 2001ஆம் ஆண்டில் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இடையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.கவைத் தோற்கடித்து, தி.மு.கவின் வேட்பாளரான வி. கணேசன் வெற்றிபெற்றார். 2006 முதல் 2011வரையிலான சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளும் கட்சியான தி.மு.கவே வெற்றிபெற்றது. 2011 முதல் 2016வரையிலான இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவே வெற்றிபெற்றது. 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல், ஒரு வித்தியாசமான முடிவைத் தந்தது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் மதுசூதனனும் தி.மு.கவின் சார்பில் மருது கணேஷ் என்பவரும் சுயேச்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார். ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாவது இடத்தையே பிடித்தது. எதிர்க்கட்சியான தி.மு.கவின் வேட்பாளர் தனது டெபாசிட் தொகையை இழந்தார். 2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆளும் கட்சியைச் சேராத ஒருவர் வெற்றிபெற்றது அதுவே முதல் முறையாக அமைந்தது. இதற்குப் பிறகு, 2019ல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் எதிர்க்கட்சியான தி.மு.க வெற்றிபெற்றது. 9 தொகுதிகளில் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றிபெற்றது. படக்குறிப்பு, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார். இடைத்தேர்தல்களை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க. புறக்கணித்தது. 2015-ஆம் ஆண்டில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்ட நிலையில், அந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்தது. என்ன காரணத்திற்காக அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தாலும் அது தவறு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருப்பதன் மூலம், இந்த அரசையும் அரசின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், அதே வெற்றி விக்கிரவாண்டியிலும் எதிரொலிக்கும் என அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருப்பது சரியாக இல்லை" என்கிறார் அவர். 2009-ஆம் ஆண்டு இடைத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தாலும் பிறகு அது தவறு என உணர்ந்த ஜெயலலிதா அடுத்த வந்த பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?8 மணி நேரங்களுக்கு முன்னர் ரசிகர்களுக்காக கார் ரேஸை விட்ட நடிகர் அஜித் - மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "இடைத் தேர்தல் வந்தால், ஆளும் கட்சி அமைச்சர்கள் அனைவரையும் அந்தத் தொகுதியில் கவனம் செலுத்தச் சொல்கிறது என்ற காரணத்தை எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இடைத் தேர்தல் வந்தால் எல்லாக் கட்சிகளுமே தங்கள் முக்கியப் பிரமுகர்களை அப்படித்தான் குவிக்கும். இடைத் தேர்தலைப் பொறுத்தவரை தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க ஒரு வாய்ப்பு. விக்கிரவாண்டி தேர்தலில் நிச்சயம் சில எதிர்கட்சி தொண்டர்களாவது கட்சி மாறி வாக்களித்திருப்பார்கள். அதே போன்ற வாய்ப்பை இங்கேயும் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும். தோல்வி கிடைக்கும் எனத் தெரிந்தாலும் போராடித் தோற்பதுதான் அரசியல் கட்சிகளுக்கு அழகு" என்கிறார். இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.கவுக்கு எதிரான பிரதான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே நிற்பதால், எதிர்க்கட்சிகளுக்கு விழ வேண்டிய வாக்குகள் அனைத்தும் அந்தக் கட்சிக்கு விழுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராகத் தெரிவித்துவரும் கருத்துகள் இந்த இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்கத்தக்கது. "கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சி கூடுதலாக எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது எனப் பார்க்க வேண்டும். வேறு எதிர்க்கட்சிகளே இல்லை என்பதால், இந்தத் தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகள் அனைத்தையும் அந்தக் கட்சியின் வாக்குகளாகக் கொள்ள முடியாது. தவிர, பெரியாரைப் பெற்றி சீமான் பேசிவிட்டு, ஈரோட்டில் தேர்தலை எதிர்கொள்கிறார். அதன் தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் ப்ரியன். கும்பமேளா: பல லட்சம் பேர் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம்5 மணி நேரங்களுக்கு முன்னர் லாஸ் ஏஞ்சலிஸின் தற்போதைய நிலை என்ன? வரும் இரண்டு நாட்களில் காத்திருக்கும் அதிர்ச்சி?3 மணி நேரங்களுக்கு முன்னர் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள எல்லாக் கட்சிகளுமே ஆளும் தி.மு.க. மீது குற்றம்சுமத்தியே இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. "நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமைச்சர்களும் தி.மு.கவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும் பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்களையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" என அ.தி.மு.க. கூறியிருக்கிறது. "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்ததைப்போல மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை நடத்தி தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது" என்று சொல்லியிருக்கிறது தே.மு.தி.க. பா.ஜ.கவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தி.மு.க. மீது சுமத்தியிருக்கிறது. படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். "தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்றால் அது எப்படி? அது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்கள் நடந்தால் நீதிமன்றங்களை அணுக முடியும். இத்தனை இருந்தும் திட்டமிட்டு, ஆளுங்கட்சியின் மீது குற்றம்சுமத்திவிட்டு, தங்கள் ஜனநாயகக் கடமையிலிருந்து எதிர்க்கட்சிகள் தவறுகிறார்கள்" என்கிறார் கான்ஸ்டைன்டீன். வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளுகிறார் அவர். ஆனால், பல தருணங்களில் இதுபோல தி.மு.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. "அப்படிப் புறக்கணிப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக அதனை ஒரு முறை செய்யலாம். இப்படித் தொடர்ந்து செய்தால் எப்படி?" என்கிறார் கான்ஸ்டைன்டீன். 2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு எனக் கூறியிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தல் குறித்து இதுவரை எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy08gl08jrro
-
பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு : ரவிகரன் எம்.பி பங்கேற்பு
Published By: VISHNU 13 JAN, 2025 | 05:45 PM ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு - பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்தம் தைத்திருநாளை முன்னிட்டு இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகள் 13.01.2025 இன்றும் மிகச் சிறப்பாக இடம்பெற்றன. இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். இந் நிலையில் நீராவியடிப் பிள்ளையாருக்கு விசேட அபிஷேக பூசைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிள்ளையாருக்கு குழை சோறு படையலிட்டு மிகச் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும் இந்த வழிபாடுகளில் செம்மலை மற்றும், செம்மலை கிழக்கு கிராம மக்கள், அடியவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/203769
-
இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர் தெரிவிப்பு
Published By: VISHNU 13 JAN, 2025 | 05:47 PM இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் திங்கட்கிழமை காலை (13) இடம்பெற்றது. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. முன்னைய காலங்களில் நெல் அறுவடையின்போது மழை பெய்வதில்லை. ஆனால் இப்போது மழையின் பாதிப்பை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சில நாள்களுக்குள் கடும் மழை பெய்தபோதும் தெய்வாதீனமாக மிகப் பெரியளவு நெல் அழிவு ஏற்படவில்லை. அந்த மழை மற்றும் இப்போதும் பெய்யும் மழை என்பனவற்றால் உங்களின் வயல் நிலங்கள் ஈரலிப்பாக உள்ளன. எனவே இதை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நெல் அறுவடை முடிந்த பின்னர் சிறுதானியங்களை பயிரிடுங்கள். அதற்கான விதைகளை வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம், பிரதம செயலர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களும் குளத்தை நம்பி இருபோகத்தை மேற்கொள்கின்றன. யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை என்பது வான்பார்த்த பயிராகவே உள்ளது. மழையை நம்பி ஒருபோகம் மாத்திரமே செய்கின்றோம். எனவே தற்போதுள்ள காலநிலையின் மாற்றத்தைப் பயன்படுத்தி சிறுதானியப் பயிர்செய்கையில் ஈடுபட்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும். எமது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், எந்தப் பயிரை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டும். அதற்கு விவசாயத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். இன்றையதினம் நெல் அறுவடையுடன் சேர்த்து மூத்த விவசாயிகளை கௌரவித்திருந்தீர்கள். அதற்கு எனது மனமார்த்த பாராட்டுக்கள். இன்று இளையோர் விவசாயத்தில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவிட்டார்கள். வெளிநாட்டு மோகத்தில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள். அங்கு சென்ற பலர் இப்போது நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கள் இளையோர்கள் விவசாயத்தில் இறங்கினால் நாம் உற்பத்தியில் சிறப்பான இடத்தைப்பெற முடியும். வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்திலுள்ளதுபோன்று வளங்கள் ஏனைய மாகாணங்களில் இல்லை. ஆனால் அதை உரிய வகையில் நாங்கள் பயன்படுத்தத் தவறியிருக்கின்றோம். விவசாயமும், கடற்றொழிலும் எமது மாகாணத்தின் முக்கியமான பொருளாதாத் தூண்கள். அவை இரண்டையும் சார்ந்த தொழிற்சாலைகள் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாகவும் மாற்றியமைக்க முடியும், என்றார் ஆளுநர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கைதடி பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.கபில்ராஜூம் கலந்துகொண்டனர். பாடசாலை மாணவர்கள், ஊரவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/203768
-
கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - 19 ஆண்டுக்கு பிறகு ஏ.ஐ மூலம் துப்பு துலங்கியது எப்படி?
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 2006 -ஆம் ஆண்டு ஒரு பெண் மற்றும் அவரின் 17 நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ கண்டுபிடித்தது கைது செய்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த அவர்களை 19 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்ததில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த 19 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை அப்பெண்ணின் தாய் தனியாக நின்று நடத்தியுள்ளார். "இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்கத்தான் நான் இத்தனை ஆண்டுகள் என் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தேன். என் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டார்." என்கிறார் அந்த பெண்ணின் தாய். பிப்ரவரி 10, 2006. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் எனும் கிராம பஞ்சாயத்தில் வசித்துவந்த சாந்தம்மா, ஒரு வேலையாக பஞ்சாயத்து அலுவலகம் சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பியபோது, அவருடைய 24 வயது மகள் ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொடூரமாக, கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ரஞ்சினி தரையிலும் குழந்தைகள் கட்டிலிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதிர்ச்சியில் மயங்கினார் சாந்தம்மா. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான், தற்போது 67 வயதாகும் சாந்தம்மாவின் நீண்டகால வேண்டுதல். ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை குறித்து இந்திய அரசு கூறுவது என்ன? அங்குரிபாய்: கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய பெண் - யார் இவர்? இளைஞருக்கு மரண தண்டனை: கல்லூரி மாணவி கொலையில் தண்டனை கிடைப்பதை உறுதி செய்தது எப்படி? விசாரணை அதிகாரி தகவல் பஞ்சாபில் 11 பேரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் - சிக்கியது எப்படி? ஆனால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக வலைதளங்கள் இல்லாத, இணையம் வளர்ந்திராத காலகட்டத்தில் நிகழ்ந்த அந்த கொலையை செய்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒரிரு ஆண்டுகள் அல்ல, 19 ஆண்டுகளாகிவிட்டன. சாந்தம்மாவின் இத்தனை ஆண்டுகால வேண்டுதல், 2025 புத்தாண்டின் முதல் வாரத்தில் நிறைவேறியிருக்கிறது. அசாத்தியமான தொழில்நுட்ப யுகத்தில், சாந்தம்மாவின் மகள் மற்றும் அவருடைய இரட்டைக் பேரக்குழந்தைகளின் கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கேரள மாநில காவல்துறை கண்டுபிடித்தது. அவர்கள் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்ததையடுத்து, சிபிஐ அவர்கள் இருவரையும் கைது செய்தது. அதில் ஒருவர் ரஞ்சினியுடன் பழகியவரும், அவரின் இரட்டைக் குழந்தைகளின் தந்தையுமான டிவில் குமார் என போலீசார் கூறுகின்றனர். மற்றொருவர் அவரின் நண்பர் ராஜேஷ். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, இக்கொலை தொடர்பாக, பத்திரிகையில் அப்போது வெளியான செய்தி அதுமட்டுமல்லாமல், அவ்விருவரும் தங்கள் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றி, வேறொரு பெயரில் புதுச்சேரியில் தங்களுக்கென குடும்பங்களையும் உருவாக்கியிருந்தனர் என்கிறது காவல்துறை. டிவில் குமார் அஞ்சல் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர், ராஜேஷ் கண்ணூர் மாவட்டம் ஸ்ரீகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர். பிப்ரவரி, 2006-ல் அவர்களை கண்டுபிடிக்கும்பொருட்டு, சிபிசிஐடி வெளியிட்ட லுக் அவுட் நோட்டீஸில் அவர்கள் இருவரும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளை பேசுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. டிவில் குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் அப்போது ராணுவத்தில் பணிபுரிந்துவந்தனர். திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 ஜனவரி 2025 மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு8 ஜனவரி 2025 'கண்ணீருக்குக் கிடைத்த பரிசு' "என் இத்தனை ஆண்டுகால பிரார்த்தனைக்கும் கண்ணீருக்கும் கிடைத்த பரிசு இது. என் மகளை கொலை செய்தவர்களை கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகள் நான் நீதிக்காக போராடியுள்ளேன். தனியாக இந்த போராட்டத்தை நடத்துவதற்கான தைரியம் எனக்கு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இருவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்." என்கிறார் சாந்தம்மா. சாந்தம்மா தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை. அப்போது நடந்த அனைத்தும் அவருக்கு இன்றும் நன்கு நினைவில் இருக்கின்றது. மிக ஏழ்மையான பின்னணியை கொண்டவர் சாந்தம்மா. ஆரம்ப காலத்திலேயே கணவரிடமிருந்து பிறிந்துதான் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். மகளின் இறுதிச் சடங்குக்கு மட்டும் சாந்தம்மாவின் கணவர் வந்துள்ளார். தன்னுடைய மற்றொரு மகள் ரஜினி மற்றும் உறவினர்கள் சிலரின் உதவியுடன் தற்போது கொல்லத்தில் ஒரு சிறிய வீடு கட்டி அங்கே தனியாக வாழ்க்கை நடத்திவருகிறார். ஆஸ்துமா, தைராய்டு பிரச்னை போன்ற உடல்நலக் குறைகளுடன் இப்போராட்டத்தை நம்பிக்கையின் கயிற்றைப் பற்றிக்கொண்டு நடத்தியிருக்கிறார் சாந்தம்மா. இந்த சட்டப் போராட்டத்தில் தனக்கு யாரும் உடன் நிற்கவில்லை என சாந்தம்மா வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGMENT படக்குறிப்பு, தனியாக இந்த சட்டப் போராட்டத்தை நடத்தியதாகக் கூறுகிறார் சாந்தம்மா இந்த 19 ஆண்டுகள் ஒருகட்டத்தில் எந்த புள்ளியிலும் சட்டப் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கவில்லை என்கிறார் சாந்தம்மா. "இந்த நாள் வரும் என எனக்குத் தெரியும். கொலையாளிகள் என்றேனும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லாம் கைமீறியதாக தோன்றும் சமயத்தில், எல்லாம் சரியாகும் என எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன்." தன் மகளை கொலை செய்தவர்களை நிச்சயமாக பார்க்க வேண்டும் என சாந்தம்மா விரும்புகிறார். "என் மகளையும் அவளுடைய குழந்தைகளையும் ஏன் கொன்றீர்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும்." பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவைக்கு என்ன இடம்? எத்தனை மதிப்பெண்கள்?9 ஜனவரி 2025 ஆஸ்கர் பட்டியலில் 'கங்குவா' திரைப்படம் இடம் பிடித்தது எப்படி?9 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சாந்தம்மாவின் உறுதியான போராட்டம் சாந்தம்மாவின் உறுதிதான் இந்த வழக்கை இவ்வளவு தூரம் நகர்த்திவந்ததாக நம்மிடம் கூறுகிறார், கேரள காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜோதிகுமார் சமக்கலா. "சாந்தம்மாவுக்கு பெரிதாக ஆதரவு என யாரும் இல்லை.கொலையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் இத்தனை ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை." என்கிறார் ஜோதிகுமார். இந்த கொலை சம்பவம் நடந்த காலகட்டத்தில் கேரள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஜோதிகுமார், சாந்தம்மாவை அப்போதைய கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் அழைத்துச் சென்றார். கேரளாவில் இந்த வழக்கு கவனம் பெறுவதிலும் சாந்தம்மா சட்டப் போராட்டை தொடர்வதிலும் உறுதுணையாக இருந்துள்ளார் ஜோதிகுமார். கொலைக்குத் திட்டமிட்டது எப்படி? 2006, பிப்ரவரி 10 அன்று மதியம் அப்போதைய அஞ்சல் காவல்நிலைய ஆய்வாளர் ஷாநவாஸுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. "அஞ்சல் கிராமத்தில் ஏரம் எனும் பகுதியில் வாடகை வீட்டில் வசித்திருந்த ரஞ்சினி மற்றும் அவருடைய 17 நாள் இரட்டைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருந்ததை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர்." என நினைவுகூர்கிறார் ஷாநவாஸ். உடனடியாக தன் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார் ஷாநவாஸ், அங்கு சாந்தம்மா ஆக்ரோஷமாக கதறி அழுதது அவருக்கு இன்றும் ஞாபகத்தில் உள்ளது. அந்த கொலையில் நீடித்த சந்தேகங்களும் மர்மங்களும் அவருக்கு இன்னும் நினைவில் உள்ளது. மிக கவனமாக திட்டமிட்டு இக்கொலையை டிவில் குமாரும் ராஜேஷும் நிகழ்த்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர். "கொலை நிகழ்ந்த சமயத்தில், டிவில் குமார் கொல்லத்தில் இல்லாமல், பதான்கோட் ராணுவ தளத்தில் பணியில் இருந்தார். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என இப்படி திட்டம் தீட்டியுள்ளனர். அவருடைய நண்பர் ராஜேஷ் தான் இக்கொலையை செய்தார்" என்கிறார் அவர். டிவில் குமார் ரஞ்சினியுடன் உறவில் இருந்ததாகவும் பின்னர் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும் கூறுகிறார் ஷாநவாஸ். ''டிவில் குமாருடனான உறவில் தான் ரஞ்சினிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அதை டிவில் குமார் ஏற்காததால் மாநில மகளிர் ஆணையத்தில் வழக்கும் பதிவு செய்திருந்தார் ரஞ்சினி. இதுதான் அவரையும் அக்குழந்தைகளையும் கொலை செய்ததற்கான காரணம்'' என ஷாநவாஸ் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சிபிசிஐடி வெளியிட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரஞ்சினி குழந்தைகளை பெற்று அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ராஜேஷ் தன்னை அனில் குமார் எனும் போலியான பெயரில் ரஞ்சனியுடன் அறிமுகமாகிறார். தன் மனைவியும் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, ரஞ்சினிக்கும் சாந்தம்மாவுக்கும் மருத்துவமனையில் சில உதவிகளை செய்துள்ளார். வீடு திரும்பிய பிறகும் அவருக்கு உதவிகளை செய்துள்ளார் ராஜேஷ். ''கொலை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, டிவில் குமாரும் ராஜேஷும் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளனர். அதன் பதிவுச் சான்றிதழ் ஆவணம் சம்பவ இடத்தில் இருந்தது. அதுமட்டும்தான் எங்களிடமிருந்த ஒரே துப்பு. அந்த வாகனத்தின் உரிமையாளர் கொடுத்த அடையாளங்களை வைத்தே டிவில் குமாரும் ராஜேஷும்தான் இதை செய்ததாக தெரியவந்தது." என்றார் ஷாநவாஸ். டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா?8 ஜனவரி 2025 ஓயோ: திருமணமாகாத ஜோடிகள் இனி ஒன்றாக அறை எடுத்து தங்க முடியாதா? மீரட்டில் என்ன நடந்தது?8 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES பிடிக்க முடியாதது ஏன்? கொலை நடந்த பிறகு வாகனத்தை வேகமாக ஒருவர் ஓட்டிச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ''ராஜேஷை பிடிக்கும் முயற்சியில் இறங்கியது காவல்துறை. வழியே, ராஜேஷ் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க நிற்கவே, காவல்துறையை சேர்ந்த ஒருவர் அவரை பிடிக்க முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பின்னர் அந்த வங்கி விவரங்களை ஆராய்ந்ததில் அந்த கணக்கு, பதான்கோட்டில் உள்ள ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்மூலம் அவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்ததும் ராஜேஷ்- டிவில் குமாருக்கும் இடையேயான தொடர்பும் தெளிவானது. அந்த வங்கிக்கணக்கின் மூலம்தான் ராஜேஷின் முதல் புகைப்படம் எங்களுக்கு கிடைத்தது'' என்றார் ஷாநவாஸ் "இருவரையும் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், பதான்கோட், ஹரியாணா என பல்வேறு இடங்களில் தேடினோம். மஹாராஷ்டிராவில் இருவரையும் மிகவும் நெருங்கியும் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பல இடங்களில் அவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந்த குற்றச்சம்பவம் குறித்து ராணுவத்திற்கு தெரிவித்தோம், அங்கும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்றார் அவர் இதனிடையே, கேரள சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு, 2010ல் சிபிஐ வசம் செல்லவே, 2013-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஷாநவாஸ் பின்னாளில் ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்து, கேரள காவல்துறையில் உளவுப்பிரிவில் எஸ்.பியாக இருந்து 2022-ல் ஓய்வு பெற்றார். இந்த கொடூரமான கொலையின் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியாதது ஷாநவாஸுக்கு நெருடலான ஒன்றாகவே இருந்தது. "கொலையாளிகள் யார் என தெரிந்தும் கண்டுபிடித்து அதற்கான தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியாதது உறுத்தியது." உளவுப்பிரிவில் அவர் இருந்தபோது, தீர்க்கப்படாத வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கு குறித்து ஷாநவாஸ் தன் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கவே, தொழில்நுட்பத்தின் உதவியுடன் விசாரணையை தொடங்கினர் காவல்துறை ஏ.ஐ. உதவியுடன் கண்டுபிடித்தது எப்படி? "நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களிடம் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய டிவில் குமாரின் பழைய புகைப்படம் இருந்தது," என்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய கேரள மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம். கேரள காவல்துறை பிரத்யேகமாக வடிவமைத்த ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தினர். அதன்மூலம், டிவில் குமாரின் பழைய புகைப்படங்களை பயன்படுத்தி அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை உருவகப்படுத்த முடிந்திருக்கிறது. இதன்பின், அந்த படத்துடன் பொருந்திப்போகும், இணையத்தில் உள்ள பல லட்சக்கணக்கான படங்களுடன் ஒப்பிட முடியும். அப்படிதான் டிவில் குமாரை கண்டுபிடித்துள்ளனர். "இந்த தொழில்நுட்பம் மூலம் டிவில் குமாரின் முக அம்சங்கள், தலைமுடியில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் கூட தெரியவந்தது," என விளக்குகிறார் மனோஜ் ஆபிரஹாம். டிவில் குமாரின் தற்போதைய உருவகப் படம் ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு புகைப்படத்துடன் பொருந்தி போயிருக்கிறது. அந்த ஃபேஸ்புக் கணக்கில் உள்ள மொபைல் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரியில் டிவில் குமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சிபிஐ பிரிவில் தகவல் அளித்தனர். சிபிஐ டிவில் குமாரை கைது செய்து அவர்மூலம் ராஜேஷையும் கைது செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேரள காவல்துறை பிரத்யேகமாக வடிவமைத்த ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தினர் (சித்தரிப்புப்படம்) அடையாளத்தை மாற்றி வேறொரு வாழ்க்கை ''டிவில் குமாரும் ராஜேஷும் தங்கள் அடையாளங்களை முற்றிலுமாக மறைத்து இருவரும் திருமணமும் செய்துள்ளனர். அவர்கள் முறையே விஷ்ணு, பிரவீன் குமார் என பெயரை மாற்றிக்கொண்டு, இண்டீரியர் டிசைனிங் துறையில் தொழில் செய்து வந்துள்ளனர்.அவர்கள் குறித்து இத்தனை ஆண்டுகள் அவர்களின் குடும்பத்தினருக்கோ, அக்கம்பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை," என்கிறார் ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம். ''இப்படி ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் போக்கு உலகளவில் வளர்ந்துவருகிறது'' என்கிறார் அவர் "ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிவது, எளிதாகவும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் வருங்காலத்தில் ஏ.ஐ. இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படலாம்" என்பது மனோஜ் ஆபிரஹாமின் நம்பிக்கையாக இருக்கிறது. கைது செய்யப்பட்ட டிவில் குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் தற்போது சிபிஐ காவலில் உள்ளனர். ஜனவரி 18 வரை அவர்களை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இறந்துபோன குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வதற்காக, அக்குழந்தைகளின் மாதிரிகளை பாதுகாத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவையும் காவல்துறையினர் பெற்றிருந்தனர். ''டிவில் குமார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், டி.என்.ஏ பரிசோதனை இனி மேற்கொள்ளப்படும்'' என்கிறது காவல்துறை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/203768
-
சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம் - சரத் பொன்சேகா
13 JAN, 2025 | 03:08 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் இலக்கை அடைய முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் சிறந்தது. அரசியல் நோக்கத்துக்கு இந்த திட்டத்தைச் செயற்படுத்தக் கூடாது. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியிலிருந்து புதிய மாற்றங்கள் தோற்றம் பெற வேண்டும். சிங்கப்பூர் நாட்டில் க்ளீன் செயற்திட்டம் ஆரம்பமான போது அரசாங்கத்துக்கு அந்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். கொழும்பு பொது நூலகத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/203723
-
பல்லடம் மூவர் கொலை வழக்கில் 40 நாட்கள் கடந்தும் பிடிபடாத குற்றவாளிகள் - காவல்துறை என்ன சொல்கிறது?
படக்குறிப்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில், 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிய 9 படைகள் பணியாற்றி வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அலகுமலை –சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 78), அவருடைய மனைவி அலமேலு (வயது 75) ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும், பத்மாவதி என்ற மகளும் இருந்தனர். ஐடி ஊழியரான செந்தில்குமார், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார். மகள் பத்மாவதி, சென்னிமலையில் தனது கணவர் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று, காலை 6 மணியளவில் இவர்களின் தோட்டத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த வலுவூரான் என்கிற என்ற நபர், தெய்வசிகாமணிக்கு முடித்திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் ஏராளமான ரத்தக் காயங்களுடன் தெய்வசிகாமணி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் அலமேலுவும், செந்தில்குமாரும் படுகாயங்களுடன் இறந்து கிடந்தனர். பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா? தமிழக அரசின் மசோதாக்கள் சொல்வது என்ன? சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள் சத்தமிட்டு அருகிலுள்ள தோட்டக்காரர்களை அழைத்து, தெய்வசிகாமணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு மாவட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்துபோன 40 நாட்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக 14 படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் கொலை சம்பவம் நடந்து, 40 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவுமில்லை. இந்நிலையில், தமிழக காவல்துறையைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜனவரி 9ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை டிசம்பர் 6ஆம் தேதி, தான் சந்தித்துப் பேசியதாகவும், அன்றைக்கே வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியதாகவும் கூறிய அண்ணாமலை, ஒரு மாதமாகியும் பதில் இல்லாததால் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார். கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 படக்குறிப்பு, திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ''ஒரு சம்பவத்தில் குற்றவாளியை காவல்துறை கைது செய்யாவிட்டால், அந்தக் குற்றவாளிக்கு அச்சம் போய்விடும். கூலிப்படை தொடர்ந்து இயங்கத் துவங்கும். காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இப்பகுதியில் வாழும் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி, தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்து இதை வலியுறுத்துவோம்'' என்றார். அண்ணாமலை நடத்திய இந்தப் போராட்டத்துக்குப் பின், இந்த கொலை வழக்கு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அண்ணாமலையால் போராட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில், விழிப்புணர்வு பரப்புரையை காவல்துறையினர் முன்னெடுத்தனர். பண்ணை மற்றும் தோட்டத்து வீடுகளில் சிசிடிவி பொருத்தவும், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் தோட்டங்களில் உள்ளவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வருகின்றனர். சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு?8 ஜனவரி 2025 '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்10 ஜனவரி 2025 'ஒரே பாணியில் மூன்று சம்பவங்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மூவர் கொலைச் சம்பவத்தில் அரசியல் ரீதியாக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை என்று பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் நிறுவனத் தலைவரும், ஓய்வுபெற்ற கோவை மாநகர காவல் உளவுத்துறை உதவி ஆணையருமான ரத்தினசபாபதி, மூவர் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டது குறித்து சில கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். ''அதே பகுதியில் இதே பாணியில் தோட்டத்து வீடுகளில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு சம்பவத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மற்ற இரண்டு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது இந்தக் கோணத்தை வலுவாக்குகிறது'' என்று ரத்தினசபாபதி தெரிவித்தார். பாலியல் தொல்லை: நடிகை ஹனிரோஸ் புகாரின் பேரில் நகைக்கடை அதிபர் கைது - என்ன நடந்தது?11 ஜனவரி 2025 ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 காவல்துறையின் மீது உறவினர்கள் நம்பிக்கை படக்குறிப்பு, மூவர் கொலை சம்பவத்தில் அரசியல் ரீதியாக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன கொல்லப்பட்ட மூவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களைக் கொல்லும் அளவுக்கு யாருக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். சம்பவத்துக்கு முந்தைய நாளில், ஒரு திருமண நிகழ்வுக்காக தோட்டத்து வீட்டுக்கு வந்த செந்தில்குமார், தனது சகோதரி பத்மாவதியை சென்னிமலையில் காரில் இறக்கிவிட்டுத் திரும்பியதாகக் கூறிய அவர்கள், அன்று அவர் தோட்டத்தில் தற்செயலாகத் தங்கியதாகக் கூறினர். செந்தில்குமாரின் மனைவி கவிதா, யாரிடமும் பேச விரும்பாத நிலையில், பிபிசி தமிழிடம் பேசிய பெயர் கூற விரும்பாத நெருங்கிய உறவினர் ஒருவர், ''எங்களுக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் நாங்கள் சொல்லிவிட்டோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுவது வருத்தமாக இருந்தாலும் எப்படியும் கண்டிப்பாக சரியான குற்றவாளிகளை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்றார். பிபிசி தமிழிடம் பேசிய அவினாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ''சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி விசாரணையைத் தொடர்கிறோம்," என்று தெரிவித்தார். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த வழக்கில் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்லும் அளவில் 'க்ளூ' எதுவும் இதுவரை கிடைக்கவில்லை," என்றார். மேலும், "மொத்தம் 9 அணிகளாகப் பிரிந்து, பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எந்தவிதமாக விசாரணையைத் தொடர வேண்டுமென்று சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். காவல்துறையினரும் மிகக் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். வழக்கு முக்கிய கட்டத்தில் இருப்பதால் வேறெதையும் இப்போதைக்குக் கூற முடியாது'' என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c86397wxe2eo
-
கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
Published By: DIGITAL DESK 2 13 JAN, 2025 | 03:06 PM கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும், பிரத்தியேகமான இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/203722
-
யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி : ஒருவர் கைது
Published By: DIGITAL DESK 2 13 JAN, 2025 | 01:23 PM யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நிதி நிறுவனத்தில் பயணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த நிதி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விரிவான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/203712
-
பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி பசில் ராஜபக்சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பஷில் ராஜபக்சவின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/314547
-
கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா? டிரம்ப் அதிபரானதும் என்ன நடக்கும்? 4 சாத்தியங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிக்கையை டென்மார்க் பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் நிராகரித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், லோரா கோஸி (கோபன்ஹேகன்), ராபர்ட் கிரீனால் (லண்டன்) பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நாட்களாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். 2019-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தின் போது டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தினார். இந்த வாரம் அதற்கு ஒரு படி மேலே சென்ற அவர், கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா தனது பொருளாதார அல்லது ராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் விருப்பம் குறித்து கருத்து தெரிவித்த டென்மார்க் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? - அங்கு என்ன உள்ளது டிரம்பை எச்சரிக்கும் பிரான்ஸ்: கிரீன்லாந்தை அமெரிக்கா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவால் தடுக்க முடியுமா? டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புவது ஏன்? அவரது உத்தி என்ன? அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதால் இந்தியா சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன? கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும் அது விற்பனைக்கு இல்லை என்றும் கிரீன்லாந்து தன்னாட்சிப் பிரதேச பிரதமர் மூய்ச் பி ஏகா (Múte B. Egede) கடந்த மாதம் தெரிவித்தார். அனைத்திற்கும் மேலாக இரண்டு நேட்டோ நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய பிரதேசம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டு இந்த அசாதாரணமான சூழ்நிலை எவ்வாறு எழுந்தது? 80 சதவிகிதம் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதி ஏராளமான கனிம வளங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 300 ஆண்டுகளாக டென்மார்க் ஆளுகையின் கீழ் இருக்கும் கிரீன்லாந்தின் மக்கள் தொகை 56 ஆயிரம். இந்த நடப்பு சூழ்நிலை இவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்? கிரீன்லாந்தின் வருங்காலம் பற்றிய நான்கு சாத்தியக்கூறுகளை இங்கே நாம் ஆராய்வோம். கேரளாவில் மாணவி பாலியல் வன்கொடுமை, 64 பேரில் 20 பேர் கைது - 5 ஆண்டு கொடூரம் அம்பலமானது எப்படி?12 ஜனவரி 2025 கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 1. கிரீன்லாந்து மீது டிரம்ப் ஆர்வம் இழக்கலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் சமீபத்தில் கிரீன்லாந்து சென்றிருந்தார் டிரம்பின் அறிக்கை வெறும் பாசாங்கு என்று சில ஊகங்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் ரஷ்யாவும் முயற்சி செய்துவரும் நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பை அதிகரிக்க டென்மார்க்கை ஊக்குவிக்கும் வகையில் இது செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதம் டென்மார்க் கிரீன்லாந்திற்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ராணுவ உதவித்தொகுப்பை அறிவித்தது. இந்த உதவித் தொகுப்பை வழங்குவது தொடர்பான முடிவுகள் டிரம்பின் அறிக்கைகளுக்கு முன்பே இறுதிசெய்யப்பட்டது. ஆனால் டிரம்பின் அறிக்கை வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சரால் "விதியின் விளையாட்டு" என்று வர்ணிக்கப்பட்டது. "ஆர்க்டிக்கில் டென்மார்க் தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் அல்லது அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்காவை அனுமதிக்க வேண்டும் என்பதே டிரம்ப் கூறியதில் முக்கியமான விஷயம்," என்று டென்மார்க்கின் பாலிடிகன் செய்தித்தாளின் தலைமை அரசியல் செய்தியாளர் எலிசபெத் ஸ்வெயின் குறிப்பிட்டார். 'அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான டிரம்பின் முயற்சி இது' என்று ராயல் டேனிஷ் டிஃபென்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியரான மார்க் ஜேக்கப்சன் கருதுகிறார். அதே நேரத்தில் "கிரீன்லாந்து இந்த வாய்ப்பை சுதந்திரத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவும், சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்துகிறது," என்றார் அவர். டிரம்ப் கிரீன்லாந்தின் மீதான ஆர்வத்தை இனி இழந்தாலும் கூட, அவர் (ட்ரம்ப்) இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று ஜேக்கப்சன் தெரிவித்தார். கிரீன்லாந்தின் சுதந்திரம் பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது இந்த விவாதம் எதிர் திசையிலும் செல்லக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். 3 அடி அகல நிலக்கரிச் சுரங்கத்தில் 295 அடி ஆழத்தில் சிக்கிய இந்த தொழிலாளி உயிர் பிழைத்தது எப்படி?12 ஜனவரி 2025 டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்ற விரும்புவது ஏன்? அது சாத்தியமா?9 ஜனவரி 2025 2. சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கு கிரீன்லாந்து விருப்பம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1951-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் மூலம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க் தனது இறையாண்மையை நிறுவியது. தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற ஒருமித்த கருத்து கிரீன்லாந்தில் நிலவுகிறது. கிரீன்லாந்து இதை ஆதரித்து வாக்களித்தால் அதனை டென்மார்க் ஆதரிக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலப் பணிகளுக்கான மானியங்களை டென்மார்க் தொடர்ந்து அளிக்கும் என்ற உத்தரவாதம் கிரீன்லாந்து மக்களுக்கு கிடைக்கும் வரை இத்தகைய வாக்களிப்பு நடக்கும் சாத்தியக்கூறு இல்லை. "கிரீன்லாந்தின் பிரதமர் இப்போது கோபமாக இருக்கலாம். ஆனால் அவர் உண்மையில் ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால், கிரீன்லாந்தின் பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களை அவர் எவ்வாறு பாதுகாப்பார் என்பதற்கான ஒரு வலுவான வாதத்தை அவர் முன்வைக்க வேண்டும்" என்று டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான உல்ரிக் கெய்ட் பிபிசியிடம் கூறினார். இந்த விவகாரத்தில் சாத்தியமான தீர்வு என்பது, அமெரிக்கா தற்போது பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா மற்றும் பலாவ் நாடுகளுடன் சுதந்திர கூட்டமைப்பாக செயல்படுவது போன்று டென்மார்க்கும் செயல்படுவது. கிரீன்லாந்து மற்றும் ஃபரோ தீவுகள் இரண்டிற்கும் இதுபோன்ற அந்தஸ்தை டென்மார்க் முன்பு எதிர்த்தது. ஆனால், டென்மார்க்கின் தற்போதைய பிரதமர் மெட் ஃபெட்ரிக்சன் அதைப் பற்றி அவ்வளவு உறுதியாக இல்லை என்று முனைவர் கெய்ட் கூறுகிறார். "கிரீன்லாந்தின் வரலாற்று அனுபவத்தைப் பற்றிய டென்மார்க்கின் புரிதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளது. டென்மார்க் இப்போது தன் காலனித்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது," என்று அவர் கூறினார். சமீபத்திய விவாதங்கள், "டென்மார்க் ஆர்க்டிக்கில் நீடித்திருப்பது நல்லது. கிரீன்லாந்துடனான உறவு பலவீனமாக இருந்தாலும் கூட அதனுடன் ஏதோ ஒருவித உறவைப் பேண வேண்டும் என்று சொல்ல ஃபெட்ரிக்சனை வற்புறுத்தக் கூடும்," என அவர் மேலும் கூறினார். ஆனால் டென்மார்க்கின் பிடியில் இருந்து விடுபடுவதில் கிரீன்லாந்து வெற்றி பெற்றாலும் அமெரிக்காவிடமிருந்து விடுபட முடியாது என்பது சமீபத்திய ஆண்டுகளில் தெளிவாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு அமெரிக்கா, அதன் பிறகு உண்மையில் தீவை விட்டு முழுமையாக வெளியேறவில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்பிற்கு இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறது. 1951ஆம் ஆண்டின் ஒப்பந்தம் கிரீன்லாந்தின் மீது டென்மார்க்கின் இறையாண்மையை நிறுவியது. ஆயினும் அமெரிக்கா விரும்பிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டன. கிரீன்லாந்தின் அதிகாரிகள் கடந்த இரண்டு அமெரிக்க அதிபர்களின் நிர்வாகங்களுடன் தொடர்பில் இருந்ததாக டாக்டர் கெய்ட் கூறினார். "அமெரிக்கா அங்கிருந்து ஒருபோதும் வெளியேறாது என்பதை இப்போது கிரீன்லாந்து மக்கள் அறிவார்கள்" என்று அவர் கூறினார். தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தையால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 ஏவாள் உண்மையில் யார்? ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைக்கப்பட்டவர் என்பதற்கு புது விளக்கம்12 ஜனவரி 2025 3. டிரம்ப் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்தால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தினால் அது பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரம் குறித்த டிரம்பின் அறிக்கைகள் டென்மார்க்கிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். ஏனெனில் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கிரீன்லாந்து விஷயத்தில் சில சலுகைகளை வழங்க டென்மார்க் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டென்மார்க் அரசு இதற்கு தயாராகி வருகிறது. இது ஆர்க்டிக் பகுதி என்பதால் மட்டுமே நடக்கவில்லை என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறினார். அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 10% நேரடி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்துகிறார். இது ஐரோப்பிய நாடுகளுக்கு நிறைய சிரமங்களை உருவாக்கக் கூடும். அதனால் தான் சில டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து சிந்தித்து வருகின்றன. வரிகளை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளில் 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர கால பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) செயல்படுத்துவதும் அடங்கும் என்று சர்வதேச சட்ட நிறுவனமான பில்ஸ்பரியை சேர்ந்த பெஞ்சமின் கோடே, 'மார்க்கெட்வாட்ச்' வலைத்தளத்திடம் தெரிவித்தார். டென்மார்க்கின் முக்கிய தொழில்களில் ஒன்றான மருந்துத் துறையை இது பாதிக்கக்கூடும். அமெரிக்கா, காது கேட்கும் கருவிகள் (Hearing aid) மற்றும் இன்சுலின் போன்ற பெரும்பாலான தயாரிப்புகளை டென்மார்க்கிலிருந்து வாங்குகிறது. 'ஓசெம்பிக்' என்ற நீரிழிவு மருந்தை டேனிஷ் நிறுவனமான 'நோவோ நோர்டிஸ்க்' தயாரிக்கிறது. அவற்றின் விலை அதிகரிப்பதை அமெரிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்12 ஜனவரி 2025 4. கிரீன்லாந்தை அமெரிக்க ராணுவம் தாக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரீன்லாந்தில் அமெரிக்காவின் இருப்பு உள்ளது. அங்கு ஏராளமான அமெரிக்க வீரர்கள் உள்ளனர். அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் சாத்தியக்கூறு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ராணுவ நடவடிக்கையை டிரம்ப் நிராகரிக்காதது, அது ஒரு தெரிவாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்காது. ஏனெனில் அங்கு ஏற்கனவே அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வீரர்களும் உள்ளனர். "கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஏற்கனவே உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. டிரம்பின் அறிக்கைகள் அவருக்குப் புரியாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது" என்று பேராசிரியர் ஜேக்கப்சன் கூறுகிறார். கிரீன்லாந்தில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது சர்வதேச பிரச்னையாக மாறும். "டிரம்ப் கிரீன்லாந்தை தாக்கினால் நேட்டோவின் பிரிவு 5-இன் படி அவர் நேட்டோவைத் தாக்குவதாக பொருள்படும். ஆனால் ஒரு நேட்டோ நாடு மற்றொரு நேட்டோ உறுப்பு நாட்டைத் தாக்கினால், அங்கு 'நேட்டோ' இருக்காது." என்று ஸ்வெயின் கூறுகிறார். "சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவான் பற்றிப் பேசுவது போலவோ அல்லது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேன் பற்றிப் பேசுவது போலவோ டிரம்பின் பேச்சு இருக்கிறது," என்று கெய்ட் தெரிவித்தார். "இந்த நிலத்தை எடுத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். நாம் உண்மையில் அவரது வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டால், இது மேற்கத்திய நாடுகளின் முழு கூட்டணிக்கும் ஒரு மோசமான சமிக்ஞையாகும்," என்று அவர் குறிப்பிட்டார். Play video, "டிரம்ப்", கால அளவு 1,34 01:34 காணொளிக் குறிப்பு,டிரம்ப் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm238k136keo
-
இந்தியாவின் ரோ ஒற்று சேவையைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ
அப்ப கண்டி, ஹம்பாந்தோட்டையில் இல்லையோ அண்ணை?!
-
இந்தியாவின் ரோ ஒற்று சேவையைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ
இந்தியாவின் ரோ ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை தேடிபார்க்க வேணடும் - துமிந்த நாகமுவ Published By: VISHNU 13 JAN, 2025 | 04:22 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்த வேலைத்திட்டத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் அதனையும்விட சிறந்தமுறையில் முன்னெடுத்துச்செல்வதை காணமுடிகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கூட்டு பிரகடனம் ஒன்றை மேற்கொண்டார். அதில் வலுசக்தி ஊடாக இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதாக தெரிவித்திருந்தார். அதேபோன்று இலங்கையுடன் மேலும் பல வேலைத்திடங்களுக்கு தயாராக வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது. இலங்கை மின்சாரசபை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒன்றை அனுமதித்தார். குறித்த சட்டத்துக்கு தற்போதுள்ள அரசாங்கம் எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தது. மின்சார கட்டமைப்பை இந்தியாவுடன் சம்பந்தப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்து வந்தது. ஆனால் அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் சூது பொருளாதாரம் ஒன்றையே மேற்கொள்ளப்போகிறது. அதாவது சூது விளையாடி பணம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தயாரிக்கவே முயற்சிக்கிறது. சீனாவிடம் கடன் பெற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதன் விளைவு என்ன என்பதை எங்களுக்கு கண்டுகொள்ள முடியும். துறைமுகத்தை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தார்கள். அதேநிலையே இந்தியாவுடனும் எங்களுக்கு ஏற்படும். அத்துடன் அதானிக்கு உலகில் எங்கு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் இங்கு அதானியுடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது யாரும் கேட்டதற்கு ஜனாதிபதி தெரிவித்த ஒன்று அல்ல. இது முன்கூட்டிய அறிவிப்புகள். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துக்கு 2016ல் பாரிய எதிர்ப்பு வந்தது.இறுதியில் அந்த ஒப்பந்ததை வாபஸ்பெற்றுக்கொண்டது.அந்த எதிர்ப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பாரியளவில் முன்னின்று செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டோம். ஆனால் மீண்டும் அந்த எட்கா ஒப்பந்தம் பேச்சுக்கு வந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கையின் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்க செயற்பட்டு வருவதாக எமக்கு நினைக்க தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீரென தோன்றினார். இப்போது அவர் இல்லை. ஆனால் இனறு வடக்கின் பேச்சாளராக செயற்பட்டு வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள வைத்தியர் அர்ச்சுனா. அர்ச்சுனா போன்றவர்களை கொண்டுவந்து இந்தியா என்ன செய்யப்போகிறது என எமக்கு தெரியாது. அதேநேரம் உத்தியோகபூர்வமற்ற தகவலின் பிரகாரம் இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/203683
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையில் நாளை சந்திப்பு Published By: VISHNU 13 JAN, 2025 | 03:54 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு 14ஆம் திகதி செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கைக்கும் - சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார். இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியததின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பின்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ நான்கு நாள் அரசமுறை விஜயத்தை நாளை செவ்வாய்கிழமை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதியுடன் பரஸ்பர பல்துறை அபிவிருத்தி தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.மேலும் சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் சாவோ லெஜி ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 7 இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. மீன்பிடித்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சமூக நலன் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கும் வகையிலான திட்டங்கள், மீனவர்களுக்கான வீட்டுத் திட்டம், விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் சீன அரசின் ஒத்துழைப்புடன் மின்சக்தி திட்டங்களை அறிமுகப்படுத்துவது இந்த புரிந்துணர்வு திட்டங்களில் ஒன்றாக காணப்படுகிறது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம், சீனா மேர்ஷன்ட் குழுமம், சினொபெக், உவாவி, பி.வை.டி உள்ளிட்ட பிரதான சீன நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குபெறும் முதலீட்டாளர் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து டான்பெங் எலக்ட்ரிக் கோர்பரேஷன், ஜான் கி கிராமம், தியாங்கி லித்தியம் கோர்பரேஷன் மற்றும் செங்டு தேசிய வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடவுள்ளார். அத்துடன் சிச்சுவான் மாகாணக் குழுவின் சீனக் கம்யூனிசக் கட்சியின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் கடந்த வெள்ளிக்கிழமை (10) செய்தியாளர் சந்திப்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் ' இலங்கைக்கும் - சீனாவுக்குமு; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் செயற்திட்டம், சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்துறை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தில் விரிவாக ஆராயப்படும். இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும்' என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவும் இலங்கையும் நீண்டகால நண்பர்களாகவும், நெருக்கமான அயல்நாடாகவும் உள்ளது.1957 ஆம் ஆண்டில் இருந்து இரு நாடுகளும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புக் கொண்டுள்ளது.இருதரப்பு உறவுகள் மாற்றமடையும் சர்வதேச நிலைவரங்களுக்கு மத்தியில் நிலையானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203681
-
இரானிய அணு விஞ்ஞானியை ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் 'மொசாட்' கொன்றது எப்படி?
பட மூலாதாரம்,SIMON&SCHUSTER படக்குறிப்பு, இரானிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ர்சாதே மொசாட் தாக்குதலுக்கு இலக்கானார் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கருப்பு நிற காரில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஃபக்ர்சாதே காரில் இருந்து கீழே விழுந்தார். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் மாலை 6:17 மணிக்கு, இரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் இரானின் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்புக் கொடியால் மூடப்பட்ட அவரது சவப்பெட்டி இரானின் முக்கிய புனித இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியால், ஃபக்ர்சாதேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவரது பிரதிநிதி ஜியாவுதீன் அவர் சார்பாக இரங்கல் செய்தியை வாசித்தார். பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமி, ஃபக்ர்சாதேவின் சவப்பெட்டியை முத்தமிட்டு, "இதற்குப் பழித்தீர்க்கப்படும்" என்றார். கேரளாவில் மாணவி பாலியல் வன்கொடுமை, 64 பேரில் 20 பேர் கைது - 5 ஆண்டு கொடூரம் அம்பலமானது எப்படி?12 ஜனவரி 2025 தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?12 ஜனவரி 2025 ரகசிய வாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபக்ர்சாதேயின் சவப்பெட்டி இரானின் புனித தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'டார்கெட் டெஹ்ரான்' என்ற புத்தகத்தில், யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிட்டார் ஃபக்ர்சாதே பற்றி எழுதியுள்ளனர். "அவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாகக் காக்கப்பட்டன, அவருடைய சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன" என்று அந்தப் புத்தகத்தில் ஃபக்ர்சாதே பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அவரது பிறந்த இடம், தேதிகூடத் தெரியவில்லை. 2011ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் கிளர்ச்சி அமைப்பான 'நேஷனல் கவுன்சில் ஆஃப் ரெசிஸ்டன்ஸ் ஆஃப் இரான்' அவரது படத்தை வெளியிட்டது. அதில் அவர் கருப்பு நிற முடி மற்றும் சற்று நரைத்த தாடியுடன் நடுத்தர வயது மனிதராக இருப்பதைக் காட்டியது.'' ஃபக்ர்சாதே 1958இல் ஓமில் பிறந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 1979 புரட்சிக்குப் பிறகு அவர் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில் உறுப்பினரானார். பின்னர் இயற்பியலில் பட்டமும், அணுசக்தி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஃபக்ர்சாதே ஆரம்பத்தில் இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார், ஆனால் அதே நேரத்தில் புரட்சிகர காவல் படையில் பிரிகேடியர் ஜெனரலாக பணியாற்றினார். அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகமான பக்தர்கள் கூடும் 'கும்பமேளா'வின் சிறப்பு என்ன?12 ஜனவரி 2025 இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு: 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' என்று மக்கள் குமுறல்12 ஜனவரி 2025 'இரானிய அணுசக்தி திட்டத்தின் தந்தை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் முதல் அமெரிக்க அணுகுண்டை உருவாக்கினார் அவரது மரணத்திற்குப் பிறகு, இரானின் அணுசக்தி திட்டத்தில் அவரது பங்களிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசப்பட்டது. முதன்முறையாக அவரது புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் அவர் அதிபர் ஹசன் ரூஹானியிடம் இருந்து விருது பெறும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவரது குழுவின் மற்ற உறுப்பினர்கள் அலி அக்பர் சாலிஹி (இரான் அணுசக்தி அமைப்பின் தலைவர்) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹொசைன் டெஹ்கானி அனைவர் முன்னிலையிலும் கௌரவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் ஃபக்ர்சாதேவுக்கு யாரும் இல்லாத தனி அறையில் விருது வழங்கப்பட்டது. அவரின் இருப்பு பற்றி இந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்ட போதிலும், இரானுக்கு வெளியே உள்ள நிபுணர்களுக்கு ஃபக்ர்சாதே பற்றி நன்கு தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) பல அறிக்கைகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில், 'ஸ்பிகல்' என்ற ஜெர்மன் இதழில், 'இரானின் அணுசக்தி லட்சியங்களின் வரலாறு' என்ற புலனாய்வு செய்தியில் அவரை 'இரானின் ஓப்பன்ஹெய்மர்' (Oppenheimer) என்று விவரித்தனர். அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை ஓப்பன்ஹெய்மர் மேற்பார்வையில் தயாரித்தது. "இரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால், இரானின் அணுகுண்டு ஆயுதத்தின் தந்தை என ஃபக்ர்சாதே அழைக்கப்படுவார்'' என ஒரு மேற்குலக ராஜ்ஜீய அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்11 ஜனவரி 2025 மதுரை டங்ஸ்டன் திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு அறிவிப்பு வந்த பின்னரும் போராட்டம் ஏன்? பிபிசி கள ஆய்வு8 ஜனவரி 2025 அணு விஞ்ஞானிகள் உடனான தொடர்பு யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிடார் தங்கள் புத்தகத்தில், "ஃபக்ர்சாதே பலமுறை வடகொரியாவுக்கு சென்று அங்கு அணு ஆயுத சோதனைகளை நேரில் பார்த்தார். பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தலைவர் அப்துல் காதர் கானையும் சந்தித்தார். அவர்தான் யுரேனியத்தை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை இரானுக்கு விற்றார்." இது மட்டுமல்ல, "ஃபக்ர்சாதே ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டினார். இஸ்ஃபஹான் அணுமின் நிலையத்தை உருவாக்கிய சீன அணு விஞ்ஞானிகளுடன் ஃபக்ர்சாதே உறவுகளைப் பேணி வந்தார் என்று இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஃபர்காஷ் எங்களிடம் கூறினார்" என்றும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தலைவராக அப்துல் காதீர் கான் இருந்தார் ரிமோட்டால் இயக்கப்பட்ட இயந்திர துப்பாக்கியால் கொலை ஃபக்ர்சாதேவை கொல்ல திட்டமிட்டவர்கள் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர் செல்லும் பாதைகள் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தனர். செப்டம்பர் 18, 2021 அன்று நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட தங்கள் கட்டுரையில் ரோனென் பெர்க்மேன் மற்றும் ஃபர்னாஸ் ஃபசிஹி இதுகுறித்து எழுதியுள்ளனர். "ஃபக்ர்சாதேவின் மகன்களில் ஒருவரான ஹமீத், இரானிய உளவுத் துறைக்கு அன்றைய தினம் தனது தந்தையைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை வந்ததாகக் கூறுகிறார். அவர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ஃபக்ர்சாதே தனது பாதுகாப்புக் குழுவின் ஆலோசனையைப் பின்பற்றவில்லை". இரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஜெனரல் அலி ஷமகானி, 30 நவம்பர் 2020 அன்று ஃபக்ர்சாதேவின் இறுதிச் சடங்கில், "செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ர்சாதே கொல்லப்பட்டதாக" கூறினார். இஸ்ரேலிய உளவுத்துறை வட்டாரங்கள் 'டார்கெட் தெஹ்ரான்' ஆசிரியர்களிடம் இது அறிவியல் புனைகதை அல்ல என்றும், ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி உண்மையில் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் உறுதிப்படுத்தின. வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 மோதி - டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள்2 ஜனவரி 2025 ஃபக்ர்சாதேவை கண்காணித்த குழு பின்னர் அந்த ஆயுதம் பாகங்களாக இரானுக்குள் கொண்டு வரப்பட்டு ரகசியமாக ஒன்றிணைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வேலையை சுமார் 20 பேர் கொண்ட குழு எட்டு மாதங்களாகத் திட்டமிட்டு செய்தது. ஃபக்ர்சாதேவின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் கண்காணித்தனர். ஃபக்ர்சாதேவை கண்காணித்த ஒர் உளவு ஏஜென்ட், "நாங்கள் அந்த நபருடன் சுவாசித்தோம், அவருடன் தூங்கினோம், அவருடன் எழுந்தோம்" என்கிறார் (டார்கெட் டெஹ்ரான், பக்கம் 193). ஃபக்ர்சாதேவின் இறுதி ஊர்வலத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, புரட்சிகர காவல் படையின் துணைத் தளபதி, ரியர் அட்மிரல் அலி ஃபடாவி நடந்ததை விவரித்தார். "ஃபக்ர்சாதே தனது சொந்த காரை ஓட்டிச் சென்றார். அவரது மனைவி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார், அவரது மெய்க்காப்பாளர்கள் அவருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பயணம் செய்தனர்." இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 இலங்கை: பில்லியன் டாலர் கடன்; இந்தியா, சீனாவின் செல்வாக்கு - புதிய ஆண்டில் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் சவால்கள்3 ஜனவரி 2025 பட மூலாதாரம்,SIMON&SCHUSTER படக்குறிப்பு, இந்த காரில் தான் ஃபக்ர்சாதே பயணித்தார் இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் நியூஸில், 'இரானிய விஞ்ஞானியின் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஆயுதம்' என்ற தலைப்பிலான செய்தி வெளியானது. அதில் ''மொசாட்டில் பணிபுரியும் இரானிய ஏஜென்ட்கள்,சாலையில் நீல நிற நிசான் ஜிமியாட் வாகனத்தை நிறுத்தியிருந்தனர்" என்று அலி ஃபடாவி குறிப்பிட்டிருந்தார். "வாகனத்தின் பின்புறத்தில் 7.62 மிமீ அமெரிக்க தயாரிப்பான M240C இயந்திர துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிமோட் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்." "மற்றொரு கார் அங்கு நிறுத்தப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்தது. ஆனால் அதிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஃபக்ர்சாதே அந்த இடத்தை அடைவதற்கு முக்கால் மைல் தூரத்தில் படம் எடுத்து, காரில் அமர்ந்திருப்பது ஃபக்ர்சாதே என்பது உறுதி செய்யப்பட்டது." ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?12 ஜனவரி 2025 அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை நெருங்க முடியாதது ஏன்?10 ஜனவரி 2025 பட மூலாதாரம்,TEHRAN TIMES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் அலி ஃபதவி 13 ரவுண்டுகள் சுட்ட இயந்திர துப்பாக்கி "ஃபக்ர்சாதேவின் கார் தூரத்தில் தெரிந்தது. கட்டளை கொடுக்கப்பட்டவுடன், இயந்திர துப்பாக்கியில் இருந்து மொத்தம் 13 சுற்றுகள் சுடப்பட்டன. இதைத் தொடர்ந்து இயந்திர துப்பாக்கி தானாக வெடித்துச் சிதறி, அது வைக்கப்பட்டிருந்த வாகனமும் வெடித்துச் சிதறியது" என்கிறார் அலி ஃபடாவி. "அந்த இயந்திர துப்பாக்கி ஃபக்ர்சாதேவின் முகத்தைக் குறிவைத்தது. ஷாட் மிகவும் துல்லியமாக இருந்தது, அவருக்கு அருகில் 25 சென்டிமீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி காயமடையவில்லை." ஜூயிஷ் கிரானிக்கல் எனும் பத்திரிக்கையில் வெளியான 'இரான் விஞ்ஞானியின் கொலைக்குப் பின்னால் உள்ள உண்மை' என்ற கட்டுரையில் பிரபல பத்திரிகையாளர் ஜேக் வாலிஸ் சைமன்ஸ், இந்த விவரத்தை உறுதிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபக்ர்சாதேவின் இறுதி ஊர்வலம் அவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, ரோனென் பெர்க்மேன் டிசம்பர் 4, 2020இல் இஸ்ரேலிய செய்தி தாளான யெடியோத் அஹ்ரோனோத்தில் இதுபற்றி எழுதினார். "அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நினைவாக 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இரவு விருந்தில், அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் முயற்சிகள் பற்றிய ஃபக்ர்சாதேவின் டேப் ஒன்றை பிரதமர் எஹுட் ஓல்மர்ட் போட்டுக் காண்பித்தார்." "நான் உங்களுக்காக ஒரு டேப்பை போடப் போகிறேன். ஆனால் நீங்கள் யாருடனும் இதுபற்றி விவாதிக்க வேண்டாம், சிஐஏ இயக்குனருடன்கூட இதுபற்றிப் பேச வேண்டாம்" என்று ஓல்மர்ட் புஷ்ஷிடம் கூறினார். அவர் ஒரு டிஜிட்டல் மீடியா பிளேயரில் பாரசீக மொழியில் பேசும் ஃபக்ர்சாதேவின் பதிவை ஒலிப்பரப்பினார். அதில், "எங்கள் பாஸ் எங்களிடம் ஐந்து அணு ஆயுதங்களைக் கோருகிறார், ஆனால் இதற்குத் தேவையானவற்றை வழங்கத் தயாராக இல்லை" என்று ஃபக்ர்சாதே பேசியது ஒலித்தது. '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்10 ஜனவரி 2025 HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?12 ஜனவரி 2025 ஃபக்ர்சாதே பற்றி மொசாட்டில் எழுந்த விவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல்களை அனுப்பிய ஒரு இரானிய ஏஜென்டை இஸ்ரேலிய உளவு அமைப்புகள் ஃபக்ர்சாதே அருகே ரகசியமாக வைத்துள்ளதாக ஓல்மெர்ட் புஷ்ஷிடம் கூறினார். இந்த ஏஜென்ட்தான் ஓல்மெர்ட்டுக்கு ஃபக்ர்சாதேவின் ஆடியோ பதிவுகளை வழங்கினார். ஜூன் 10, 2021 அன்று இஸ்ரேலிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹன் "மொசாட் ஃபக்ர்சாதேவை பற்றி அதிகம் அறிந்திருந்தது, அது அவரது முகவரி, தொலைபேசி எண் மற்றும் அவரது பாஸ்போர்ட் எண்ணையும்கூட அறிந்திருந்தது" என்று கூறினார். ஃபக்ர்சாதே உடனடியாகக் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மொசாட்டில் கடும் விவாதம் நடந்தது. முன்னாள் இஸ்ரேலிய ராணுவ தலைவர் ஷால் மொஃபாஸின் கூற்றுப்படி, பிரதமர் ஏரியல் ஷாரோன் மொசாட்டின் தலைவராக மெய்ர் தாகனை நியமித்தபோது, அவரைத் தீவிமாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டார். பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: காலத்தால் அழியாத 15 பாடல்கள்10 ஜனவரி 2025 ஆஸ்கர் விருதுக்கு கங்குவா போட்டியிடுகிறதா? படங்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?9 ஜனவரி 2025 புதிய திசையை வழங்கிய ஃபக்ர்சாதே பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் முன்னணி அணு விஞ்ஞானி மொசீன் ஃபக்ர்சாதே கடந்த 2001 முதல் 2010 வரை இரானிய அணுசக்தித் திட்டத்தில் ஃபக்ர்சாதேவின் செல்வாக்கு, அவர் கொல்லப்பட்ட 2020இல் இருந்ததைவிட அதிகமாக இருந்தது. இரானின் அணுசக்தித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பிறகு ஃபக்ர்சாதே கொல்லப்பட்டார். கடந்த 2020இல் அவர் கொல்லப்பட்டது இரானின் நற்பெயருக்குப் பெரும் அடியாக விழுந்தது. அவர் இல்லாததால், இரானின் அணுசக்தித் திட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஈடுபட்டு வந்த அனுபவமும், அறிவும் கொண்ட ஒரு திறமையான நபரை இரான் இழந்தது. கடந்த 2018இல், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் இரான் அணுக் காப்பகங்கள் திருடப்பட்டது பற்றி அறிவித்தபோது, அவர் 'ஃபக்ர்சாதே. இந்த பெயரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபகர்சாதே வெளியேறிய பிறகு, இரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பான சவாலை எதிர்கொள்கிறது அணுசக்தித் திட்டத்தில் பின்னடைவு எதிர்காலத்தில் இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்க நினைத்தால், இந்தத் திட்டம் தொடர்பான ரகசிய தகவல்களை உலகுக்கு மறைக்கும் அனுபவம் ஃபக்ர்சாதேவின் வாரிசுகளுக்கு இருக்காது. ஜேக் வாலிஸ் சைமன்ஸ் எழுதியுள்ள தகவலின்படி, "ஃபக்ர்சாதேவுக்கு மாற்றாக ஒருவரைக் கண்டுபிடித்து செயல்பட வைக்க இரானுக்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் ஆகும் என்று இரானிய உள்நாட்டு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவரது மரணம் இரானின் வெடிகுண்டு தயாரிக்கும் திறனுக்கான காத்திருப்பைக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளதாக நம்புகின்றனர் இஸ்ரேலிய ஆய்வாளர்கள்." https://www.bbc.com/tamil/articles/c8r5de2gk2yo
-
மீனவர் கைது; ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய மு.க ஸ்டாலின்
உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் - இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி 11 JAN, 2025 | 06:06 PM இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் என யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதி மகேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் (11) யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தங்களுடைய மீனவர்கள் வாழ்வாதார நோக்கத்துக்காக எங்களுடைய கடல் எல்லைக்குள் வந்ததாகவும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 30 வருடங்களாக இந்திய மீனவர்களை கைது செய்வதும் விடுவதும் தொடர்கதையாக காணப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடலுக்கு வந்தால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக கடலுக்குச் செல்வதில்லை. நாங்களும் வாழ்வாதாரத்திற்காகத்தான் கடல் தொழிலுக்கு செல்கின்றோம். இந்திய இழுவைப் படகின் அட்டகாசத்தினால் எங்களால் எமது கடலில் தொழில் செய்ய முடியவில்லை. தமிழக முதலமைச்சரே எமது மக்களின் வாழ்வுரிமையை பற்றியும் சற்று நீங்கள் சிந்தியுங்கள். உங்களுடைய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீனவர்களோ அல்லது சீன மீனவர்களோ வந்து மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை வாழ்வாதார அடிப்படையிலோ அல்லது மனிதாபிமான அடிப்படையிலோ நீங்கள் விடுதலை செய்வீர்களா? நிச்சயம் நீங்கள் அவர்களை கைது செய்வீர்கள். இன்றைக்கும் உங்கள் எல்லையில் நீங்கள் சண்டை செய்துகொண்டுதான் இருக்கின்றீர்கள். அதுபோல எங்களது எல்லைக்குள் நீங்கள் வரவேண்டாம். எங்களது வளங்களை சுரண்டிக்கொண்டு, வாழ்வாதாரம் மனிதாபிமானம் என்று பொய்களை கூறிக்கொண்டு எங்களது மக்களை நிர்க்கதியாக்குகிறீர்கள். எனவே, உங்களது கடற்படையினை வைத்து உங்களுடைய மீனவர்களை எல்லை தாண்ட விடாமல் கட்டுப்படுத்துங்கள். எங்களது வளங்களை நாங்கள் பாதுகாத்துக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/203599
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா? கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? சீமான் என்ன பேசினார்? அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் 5 ச.கி.மீ. நிலத்தை வங்கதேசம் கைப்பற்றியதா? எல்லையில் ஒரு வாரமாக நீடிக்கும் பதற்றம்11 ஜனவரி 2025 கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர். இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆபாசப் பட நடிகை வழக்கு: டிரம்ப் 'குற்றவாளி' என்ற நீதிபதி தண்டனை விதிக்காதது ஏன்?11 ஜனவரி 2025 ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?11 ஜனவரி 2025 பெரியார் அப்படிப் பேசியது உண்மையா? இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது. இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது. இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை. தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdd97j831yro
-
"நான் நேசிச்சது எதுவுமே இப்ப இல்ல Gobi"💔 AR Rahman's 1st Heart Melting Interview with Gobinath
"Life-ல ஜெயிக்க கூடாதுனு Trap இது"😭Gobi-ன் Emotional கேள்விக்கு AR Rahman Honest Interview - Part 3
-
"நான் நேசிச்சது எதுவுமே இப்ப இல்ல Gobi"💔 AR Rahman's 1st Heart Melting Interview with Gobinath
இசையை தாண்டி Raja sir இப்படித்தான்!😱ARR Opens up about Ilaiyaraja🔥Goosebumps Interview - Part 2
-
சீனத் தூதுவர் சந்தித்தார் மிலிந்த மொரகொட!
10 JAN, 2025 | 06:25 PM இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் மற்றும் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்தும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தின் செயற்பாடுகளை மையப்படுத்திய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்றுக்கு முன்னரான காலகட்டத்தைப் போன்று சீன - இலங்கை ஒத்துழைப்பு கற்கைகள் நிலையத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மையப்படுத்திய கலந்துரையாடல்களுக்கு சீன புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்வாங்குவது பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு இலங்கை - சீன நல்லுறவு மற்றும் அதன் கூறுகளை உள்ளடக்கி சீன மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாத்ஃபைன்டர் பவுன்டேஷனின் தலைவர் பேர்னாட் குணதிலக மற்றும் சீனத் தூதரக அதிகாரி ஜின் என்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/203516
-
சாரதியற்ற காரில் மாட்டிக்கொண்ட பயணி
தானியங்கி காரில் ஒரே இடத்தில் சுற்றிவந்த பயணி!