Everything posted by ஏராளன்
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2025 | 05:26 PM "வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே சீனப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனப் பிரதமர் லி சியாங் சிநேகபூர்வமாக வரவேற்றார். மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் சீனப் பிரதமர் லி சியாங் உறுதியளித்தார். ஊழலற்ற நாட்டை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு சீனப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பாஹியன் பிக்குவின் காலத்திற்கு முன்பிருந்தே சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு காணப்பட்டதென கூறினார். அதேபோல் வறுமையை ஒழித்து இலங்கையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் சீனப் பிரதமரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். தற்போதும் இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்தல் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கலாசார பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203990
-
அதானி குழுமத்தை அசைத்துப் பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானியின் குழுமம் பங்குச்சந்தை சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023இல் அதானி குழுமத்தை ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளதாக அதன் நிறுவனர் அறிவித்துள்ளார். ஏன்? அவர் கூறுவது என்ன? அமெரிக்காவில் இயங்கி வந்த ஷார்ட்-செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முக்கிய நிதி நிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டது. இந்த நிறுவனம் தற்போது மூடப்பட உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன், நிறுவனத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை மூடப் போவதாக புதன்கிழமையன்று அறிவித்தார். முன்னதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய பணக்காரர் கெளதம் அதானியின் குழுமத்தைப் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் தலைப்புச் செய்தியாக மாறியது. இதன் விளைவாக, அரசியல் விவாதங்களும், அதானி நிறுவனத்திற்குக் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளும் ஏற்பட்டன. ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் அதை மூடுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டும் அதானி குழுமத்தின் பதிலும் - முழு விவரம் ஹிண்டன்பர்க் vs செபி தலைவர்: இந்த மிகப்பெரிய கேள்விக்கு பதில் எங்கே? அதானி குழுமம் ரூ.35,200 கோடி சரிவு: மொரிஷியஸ் வழியே முறைகேடாக பணம் முதலீடா? புதிய ஆய்வறிக்கை ஹிண்டன்பர்க் என்பது என்ன? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம், உண்மையில் ஒரு ஷார்ட் செல்லர் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பதுதான் ஷார்ட் செல்லிங் எனப்படும். பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதைக் குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள். முதலீட்டுத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கம் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணை குழு அறிக்கை, செபி செயல்பாடுகளில் குறைகளை கண்டதா?20 மே 2023 அதானி, நரேந்திர மோதியை லண்டனில் தாக்கிப் பேசிய ராகுல் காந்தி - பாஜக தலைவர்கள் பதிலடி6 மார்ச் 2023 அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் ராஜீவ் ஜெயின் யார்? அவரது அமெரிக்க நிறுவனம் என்ன செய்கிறது?5 மார்ச் 2023 ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது. சுருக்கமாகச் சொல்வதெனில் அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது" என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியது ஹிண்டன்பர்க் அறிக்கை. அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதானிக்கு செக் வைத்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன் நாயகனா? வில்லனா?18 பிப்ரவரி 2023 அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்?20 பிப்ரவரி 2023 மஹூவா மொய்த்ரா: அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேச பணம் வாங்கினாரா?18 அக்டோபர் 2023 ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் யாவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் தீவிர அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சில புகழ்பெற்ற வணிகங்களில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்பலப்படுத்தியதன் மூலம் பிரபலமானது. அது மட்டுமின்றி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்கள் சந்தை மதிப்பில் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்க வழிவகுத்தன. "எங்களது பணியின் மூலம் கோடீஸ்வரர்கள் மற்றும் தன்னலக்குழுக்கள் உள்பட கிட்டத்தட்ட 100 நபர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சில பேரரசுகளை நாங்கள் அசைத்துள்ளோம்" என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவது குறித்து தனது முடிவை அறிவித்த அறிக்கையில் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில், மின்சார டிரக் தயாரிப்பாளரான நிகோலா கார்ப், அதன் தொழில்நுட்பங்கள் குறித்து முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்துவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. அதன் பிறகு, 2022ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ட்ரெவர் மில்டன், முதலீட்டாளர்களிடம் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டு மோசடி செய்ததாகக் கண்டறியப்பட்டார். கடந்த 2023ஆம் ஆண்டில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக, "பங்கு கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாக" குற்றம் சாட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானியும் அவரது நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை "தீங்கிழைக்கும்" நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகவும் "இந்தியா மீதான தாக்குதல்" என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கைகைக்கு பதில் கூறியது. அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அதானி குழுமம், அதன் சந்தை மதிப்பில் சுமார் 108 பில்லியன் டாலரை இழந்தது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்: ரிசர்வ் வங்கி, செபி என்ன செய்ய முடியும்?8 பிப்ரவரி 2023 அதானியின் சரியும் வணிக சாம்ராஜ்ஜியம், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்குமா?5 பிப்ரவரி 2023 அதானி - ஹிண்டன்பெர்க்: ஷார்ட் செல்லிங், ஷெல் நிறுவனம், சந்தை மூலதனம் - எளிய விளக்கம்6 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷார்ட்-செல்லிங் என்பது ஒரு பங்கைக் கடனாகப் பெற்று, அதை உடனடியாக விற்று, பின்னர் அதன் மதிப்பு குறையும்போது ஏற்படும் வித்தியாசத்தில் லாபம் பெறுவதற்காக அதை மீண்டும் வாங்குவதை உள்ளடக்கிய முறை. கடந்த ஆண்டு, அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி பூரி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது. ஆனால் மாதபி பூரி புச் மற்றும் அதானி நிறுவனம், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் இந்தியாவில் தீவிர அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தது. அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக ஆட்சி தவறிவிட்டதாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி, பிரதமர் மோதிக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுகிறார். இந்த அரசியல் தொடர்புகளால் அவர் பயனடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர், ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். மறுபுறம், ஆண்டர்சன் வெளியிட்டுள்ள அவரது அறிக்கையில், எதிர்காலத்தில் ஹிண்டன்பர்க்கின் ஆராய்ச்சி முறை குறித்து பொதுவெளியில் அறிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். "அடுத்த ஆறு மாதங்களில், அவர்களது ஆராய்ச்சி மாதிரி மற்றும் விசாரணை முறைகள் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தகவல்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று ஆண்டர்சன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஹிண்டன்பர்க் பகுப்பாய்வு நிறுவனம் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள், தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில், மோசடி அல்லது நிதி சார்ந்த பிற தவறுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் நம்பும் நிறுவனங்களின் பங்குகளுக்கு எதிராக முதலீடு செய்கின்றனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இத்தகைய நிறுவனங்களை ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளைக் கடன் வாங்கி, அதை உடனடியாக விற்று, பின்னர் அதன் மதிப்பு குறையும்போது மீண்டும் வாங்குவதன் மூலம் லாபம் பெறுகின்றன. ஷார்ட்-செல்லிங் என்பது ஒரு பங்கைக் கடனாகப் பெற்று, அதை உடனடியாக விற்று, பின்னர் அதன் மதிப்பு குறையும் போது ஏற்படும் வித்தியாசத்தில் லாபம் பெறுவதற்காக அதை மீண்டும் வாங்குவதை உள்ளடக்கிய ஒரு பங்குச்சந்தை முறை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj3e0dx05vzo
-
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது - சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர்
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2025 | 05:22 PM இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோருக்கு இடையில் இன்று வியாழக்கிழமை (16) காலை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் சிநேகபூர்வமாக வரவேற்பளித்தார். மேலும், கருத்து தெரிவித்த ஜாவோ லெஜி, இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே சீன தேசிய காங்கிரஸின் எதிர்பார்ப்பாகும் எனவும் கூறினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203985
-
வெறும் 350 கிராம் தான்: தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. "கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தையை தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் தொடர்ந்து 100 நாட்கள் வைத்து சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்? மகா கும்பமேளா: ஆயுதப் பயிற்சி, புனித சாம்பல்களுடன் வாழ்க்கை - நாகா துறவி ஆவதற்கான செயல்முறைகள் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருந்த 24 அக்பர் சாலை தலைமையகம் நீலகிரி, கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா? தீவிர வானிலை நிகழ்வுகளால் 3200 பேர் உயிரிழப்பு 2024-ம் ஆண்டு தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வருடாந்திர காலநிலை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. "இந்தியாவில் இது வரையிலான மிக வெப்பமான ஆண்டான 2024-ல் 1,374 பேர் இடி, மின்னலுக்கு பலியாகியுள்ளனர், வெள்ளம் கனமழை காரணமாக 1,287 பேர் உயிரிழந்துள்ளனர், வெப்ப அலை காரணமாக 459 பேர் உயிரிழந்துள்ளனர். இடி மற்றும் மின்னலுக்கு பிஹார் மாநிலத்தில் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களில் கேரளாவில் அதிகமானவர்கள் உள்ளனர்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களை தவிர உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை, அதிக உயிரிழப்புகள் கொண்ட முதல் ஐந்து மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. "தேசிய வானிலை தரவுகள் ஆவணப்படுத்தத் தொடங்கிய 1901-ம் ஆண்டு முதல் இது வரையிலான காலத்தில் 2024ம் ஆண்டு தான் மிகவும் வெப்பமான ஆண்டு என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?16 ஜனவரி 2025 குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீசா கைது செய்தனா் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரிக்கு வெளியே உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றபோது, அங்கு பணியாற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் (30) என்ற நபா், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இது குறித்து, சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி - தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீா்க் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனா். போலீசார் அந்த நபரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடா்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேசிப்பாயா விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? விஷ்ணுவர்தனின் கம்பேக் படமாக அமையுமா?15 ஜனவரி 2025 'எனக்கும் பயம் இருக்கும்' - 224 மீ. உயரம், 100 மீ. நீளம்; துபாய் கோபுரங்களுக்கு இடையே அந்தரத்தில் நடந்து சாதனை16 ஜனவரி 2025 பட மூலாதாரம்,MADRAS IIT இலங்கை ஜனாதிபதி சீனா குறித்துக் கூறியது என்ன? இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல துறைகளிலும் 'ஒரே சீன' கொள்கையில் இலங்கை முன்னிற்கும் என்று சீனா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழ் வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியில் சீனா வரலாற்றுக் காலம் முதல் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தியோகபூர்வ விஜயம் சீனா - இலங்கை நாட்டு மக்களின் அடையாளம் மற்றும் அபிவிருத்திக்கு பலமுடையதாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சீனாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை (15) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சீன அதிபருடன் பீஜிங் தலைநகரில் உள்ள சீன மக்கள் மண்டபத்தில் இலங்கையுடனான உறவு தொடர்பில் உரையாற்றியதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டங்களை தெளிவுப்படுத்தி உரையாற்றினார். பொருளாதார கைத்தொழில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி ஆகியவற்றில் சீனாவின் அபரிமிதமான முன்னேற்றம் குறித்து இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் சீனாவின் கொள்கையுடன் முன்நிற்கிறது" என்று இலங்கை ஜனாதிபதி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?15 ஜனவரி 2025 காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9w5lxzxp5jo
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
16 JAN, 2025 | 06:07 PM மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகிறது. நாட்டில் அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளன. மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டுக்கு நல்லதல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் மதுபானசாலைகளுக்கான அனுமதி தொடர்பான உண்மைகளை உடன் வெளியிடுங்கள். இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான். இலங்கை விடயம் சம்பந்தமாக தி.மு.க கனிமொழியை சந்தித்து கலந்துரையாடினோம். மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது. இலங்கை தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகிறது. அவ்வாறு தேவையில்லை. ஏற்கனவே இணங்கிக்கொண்ட விடயம். எனவே இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம். தமிழ் அரசு தலைமை தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ச.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் பேச வருகிற விடயம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மத்திய குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் என்று சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204001
-
ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ இன்று ஏவும் விண்கலங்கள் என்ன செய்யும்? அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியா வருமா?
ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ வரலாற்று சாதனை - 'டாக்கிங்' செயல்முறை வெற்றி என அறிவிப்பு பட மூலாதாரம்,ISRO ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்துள்ளது. இந்த இணைப்பு செயல்முறையை (Docking) வெற்றிகரமாக செய்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளதாக, இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன், இணைப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக, இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அவை தற்போது வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு செயல்முறை துல்லியமாக தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று லாவகமாக மீண்டும் விலக்கப்பட்டன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல் சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம் சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி? மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம் 'ஸ்பேடெக்ஸ்' என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணி) என்பதன் சுருக்கம். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை 'டாக்' (Dock- இணைப்பு) மற்றும் 'அன்டாக்' (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும். பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரு விண்கலன்கள் விண்ணில் ஏவப்பட்டன. அந்த 2 விண்கலங்களையும் 15 மீட்டர் வரை நெருங்கி வரச் செய்து பரிசோதிக்க திட்டமிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள், பின்னர் அதையும் தாண்டி 3 மீட்டர் வரை இரு விண்கலங்களையும் வெற்றிகரமாக நெருங்கி வரச் செய்தனர். அதன் பிறகு, இரு விண்கலங்களும் பாதுகாப்பான இடைவெளிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த பரிசோதனையில் கிடைத்தத் தரவுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், இணைப்பு செயல்முறை (Docking) மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இரு விண்கலங்களும் நெருங்கி வந்த காட்சியையும், ஒன்றையொன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, குறைந்த அளவு இடைவெளியில் இருக்கின்ற அந்த செயற்கைக்கோள்கள் ஒன்றையொன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஸ்பேடெக்ஸ் திட்டம் என்றால் என்ன? ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இரண்டு சிறிய விண்கலங்களை சுமந்து செல்கிறது. இந்த இரண்டு விண்கலங்களும் தோராயமாக 220 கிலோ (தனித்தனியாக) எடை கொண்டவை. இவை பூமியில் இருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, புவியின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கும். இவற்றில் ஒன்றின் பெயர் சேசர் (Chaser- SDX01), மற்றொன்று டார்கெட் (Target- SDX02). இந்த திட்டத்தின் நோக்கங்கள் என்பது, வெற்றிகரமாக விண்கலன்களை ஒருங்கிணைப்பது (Docking), இணைக்கப்பட்ட விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றம், இணைப்பைத் துண்டித்த பிறகு பேலோட் (Payload- ஒரு விண்கலம் சுமந்து செல்லக்கூடிய பொருட்கள் அல்லது அதன் திறன்) தொடர்பான நடைமுறைகளை கையாளுதல். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு விண்கலத்தை 'டாக்' மற்றும் 'அன்டாக்' செய்வதற்கான திறன் நிரூபிக்கப்படும். ஒரு விண்கலத்தை மற்றொரு விண்கலத்துடன் இணைப்பது 'டாக்கிங்' (Docking) என்றும், விண்வெளியில் இணைக்கப்பட்ட இரண்டு விண்கலங்களைப் பிரிப்பது 'அன்டாக்கிங்' (Undocking) என்றும் அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,X/@ISRO படக்குறிப்பு, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன், இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஸ்பேடெக்ஸ் திட்டம் ஏன் மிகவும் முக்கியமானது? ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் மற்றொரு நோக்கம் குறைந்த செலவில் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டுவதாகும். இந்தியாவின் விண்வெளி தொடர்பான எதிர்கால லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். விண்வெளியில், இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கி, அதை செயல்படுத்துவது, இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவது போன்றவை இந்த எதிர்கால திட்டங்களில் அடங்கும். அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்29 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் இரண்டு சிறிய விண்கலங்கள் ஏவப்பட்ட உள்ளன ஒரு பொதுவான திட்டத்திற்காக பல ராக்கெட்டுகளை ஏவ வேண்டியிருக்கும் போது 'இன்-ஸ்பேஸ் டாக்கிங்' (In-space docking) தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படும் இரண்டு செயற்கைக்கோள்களில் ஒன்று சேசர் (Chaser- SDX01) மற்றும் மற்றொன்று டார்கெட் (SDX02), இவை இரண்டுமே அதிவேகத்தில் பூமியைச் சுற்றி வரும். அவை இரண்டும் ஒரே சுற்றுப்பாதையில் ஒரே வேகத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால் இரண்டுக்கும் இடையே சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும். இந்த உத்தி 'ஃபார் ரெண்டெஸ்வஸ்' (Far Rendezvous) என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் இந்தியாவுக்கு இத்திட்டம் ஏன் முக்கியமானது? விண்வெளியில் இந்த டாக்கிங் என்பது மிகவும் சிக்கலான ஒரு பணி. அதாவது விண்கலன்களை இணைப்பது விண்வெளியில் அவ்வளவு சுலபமல்ல. தற்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த டாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டம் மூலம் விண்வெளித் துறையின் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் கால் பாதிக்கிறது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறுகையில், "டாக்கிங் தொழில்நுட்பத்தில் நாம் நிபுணத்துவம் பெறுவதன் மூலம், விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்" என்று கூறினார். 'சந்திரயான் -4' போன்ற இந்தியாவின் நீண்ட கால விண்வெளித் திட்டங்களுக்கும், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் முக்கியமானது என்று ஜிதேந்திர சிங் கூறினார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்கும் இந்த 'டாக்கிங்' தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் சுழலும் இரண்டு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயற்சிக்கும் வேறு என்ன நடக்கும்? இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று, 'டாக்கிங்' தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும் விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது. இது ஸ்பேஸ் ரோபோடிக்ஸ் (Space robotics- விண்வெளித் திட்டங்களில் மனிதர்களுக்கு மாற்றாக பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்துவது) போன்ற எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். இதுதவிர, விண்கலத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது மற்றும் இணைப்பைத் துண்டித்த பிறகு (Undock) பேலோட் தொடர்பான நடைமுறைகளை கையாள்வது போன்ற விஷயங்களும் இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒரு பகுதியாகும். ஸ்பேடெக்ஸ் பிஎஸ்எல்வி-இன் நான்காவது கட்டத்தை, அதாவது POEM-4 (PSLV Orbital Experimental Module) என்பதை சோதனைகளுக்குப் பயன்படுத்தும். இந்த கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 24 பேலோடுகள் எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இரண்டு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயற்சிக்கும். இது மிகவும் சவாலான ஒரு பணியாக இருக்கும். எனவே இதை மிகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, இது ஸ்பேஸ் ரோபோடிக்ஸ் போன்ற எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் சந்திரயான்-4 திட்டம் என்றால் என்ன? சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் எல்எம்வி-3 மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, நிலவுக்கு வெவ்வேறு கருவிகளின் இரண்டு தொகுப்புகள் அனுப்பப்படும். இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி, மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, ஒரு பெட்டியில் வைத்து நிலவில் இருந்து பூமிக்கு திரும்பும். இதில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்ற பல்வேறு கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா மேலும் ஒருபடி முன்னோக்கிச் செல்லும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, 2104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் இலக்கை நோக்கிய இந்தியாவின் அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முன்னர் பிபிசி தமிழிடம் பேசிய மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்." என்று கூறியிருந்தார். சந்திரனின் மேற்பரப்பு மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும் த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார். "1967 முதல் சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள சந்திரன் ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு தனி நாடும் சந்திரனுக்கு உரிமை கோர முடியாது. அந்த ஒப்பந்தத்தின்படி, சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்." என்று கூறியிருந்தார் த.வி.வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சந்திரயான்-3க்கு பிறகு இஸ்ரோ தற்போது சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyjp4rjrz4o
-
யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள் கைது
Published By: DIGITAL DESK 2 16 JAN, 2025 | 11:27 AM யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து , மாணவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் , மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸார் அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/203940
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
Published By: DIGITAL DESK 2 16 JAN, 2025 | 11:26 AM யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொலைபேசி இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறுக்கப்பட்ட வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/203939
-
இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2025 | 09:55 AM கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, 2 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (15) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், நிபந்தனை அடிப்படையில் 6 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். அதேவேளை, விசைப்படகை ஓட்டிய 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும், 40 இலட்சம் ரூபாயை அபராதமாக தனித்தனியாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/203930
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காற்றில்லாத பையில் அடைக்கப்பட்ட மனிதர்கள்!
-
யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக பணம் கொள்ளை!
Published By: DIGITAL DESK 2 16 JAN, 2025 | 10:12 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07 ஆம் திகதி இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. 0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் (Dialog) சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்று அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000/= பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் செவ்வாய்க்கிழமை (14) 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர். குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வங்கியில் முறையிட்ட போதும், மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/203931
-
குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிரேஸ் டிர்ரெல் பதவி, குளித்த பின்னர் துடைப்பதற்காக நாம் அதிகம் பயன்படுத்தும் துண்டுகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். அப்படியென்றால், அதை துவைப்பதற்கு முன் எவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டும்? இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே ஒரு துண்டின் மூலம் உங்கள் உடலை துடைத்திருப்பீர்கள். ஆனால், அந்த துண்டு உண்மையில் எவ்வளவு சுத்தமாக உள்ளது? நம்மில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை துண்டை வாஷிங் மெஷினில் துவைப்போம். ஒரு ஆய்வில் பங்குபெற்ற 100 பேரில், மூன்றில் ஒருபங்கு மக்கள், மாதத்திற்கு ஒருமுறை தங்களது துண்டுகளை துவைப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், சிலர் ஆண்டுக்கு ஒருமுறை துவைப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். துண்டுகளில் உள்ள மென்மையான இழைகள், அதில் அழுக்கு இருப்பதற்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்காது. ஆனால், பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வளர்வதற்கான இடமாக அது இருக்கும். நம்முடைய துண்டுகள், மனித குடல் மற்றும் தோலில் பொதுவாகக் காணப்படும் பாக்டீரியாக்களால் மாசடைகிறது என பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நாம் குளித்த பின்னர் கூட நமது உடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கும். நமது உடலை துடைக்கும்போது அந்த நுண்ணுயிரிகள் துண்டுக்கு இடம்பெயர்ந்துவிடும். ஆனால், நமது துண்டில் காணப்படும் நுண்ணுயிரிகள் வேறு ஆதாரங்களின் வழியே கூட வரும், அதாவது காற்றின் வழியாக பரவும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள்கூட துண்டின் இழையில் ஒட்டிக்கொள்ளும். மேலும், நாம் அந்த துண்டை துவைக்கப் பயன்படுத்தும் தண்ணீரிலிருந்தும் பாக்டீரியாக்கள் துண்டில் ஒட்டிக்கொள்ளும். யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்? நீரிழிவு நோயாளிகள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்வது அவசியம் ஏன்? இந்த 6 கிராமங்களில் மக்களுக்கு தலை வழுக்கையாகும் அளவுக்கு திடீரென முடி கொட்டுவது ஏன்? பெண்கள் அச்சம் '9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர் பாக்டீரியாக்களின் ஆபத்து ஜப்பானில் சில வீடுகளில் குளிப்பதற்கு பயன்படுத்தி மீதமுள்ள தண்ணீரையே அடுத்த நாள் துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஜப்பானின் டொகுஷிமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இப்படிச் செய்வது தண்ணீரை சேமிப்பதற்கான வழி என்றாலும், அந்த தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் துண்டு மற்றும் ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் என தெரியவந்துள்ளது. மேலும், கழிவறையிலேயே தங்களது துண்டை காய வைப்பவர்களுக்கு இன்னுமொரு அருவருப்பான செய்தி உள்ளது. அதாவது, நீங்கள் கழிவறையை உபயோகித்த பின்னர் ஒவ்வொருமுறை ஃபிளஷ்ஷை அழுத்தும்போதும் அங்கு காயவைக்கப்பட்டிருக்கும் துண்டில், உங்கள் குடும்பத்தினரின் உடலின் கழிவுகளின் எச்சங்களுடன் நீங்கள் பாக்டீரியாக்களை பரவவிடுகிறீர்கள். காலப்போக்கில் இந்த நுண்ணுயிரிகள் பயோஃபிலிம்களை (biofilms ) உருவாக்கும். பயோஃபிலிம்கள் என்பது நுண்ணுயிரிகள் உருவாக்கும் மெல்லிய அடுக்கு. இது, உங்கள் துண்டின் தோற்றத்தையே மாற்றிவிடும். இரண்டு மாதங்களுக்குப் பின், நீங்கள் துண்டை தினமும் துவைத்தாலும் பருத்தி துண்டுகளின் இழைகளில் உள்ள பாக்டீரியாக்களால், அந்த துண்டின் தோற்றம் மங்கிவிடும். நாம் வீட்டில் துண்டை எப்படி துவைக்கிறோம் என்பதைப் பொறுத்து, பாக்டீரியாக்கள் எந்தளவுக்கு இருக்கும், என்ன வகையான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பது மாறுபடும். உங்கள் துண்டுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் குறித்து நீங்கள் எந்தளவுக்குக் கவலைப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி. லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்15 ஜனவரி 2025 டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா?15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களது துண்டை மற்றவர்களுடன் பகிரும்போது நோய்த்தொற்றுக்கான ஆபத்து ஏற்படுகிறது துண்டை துவைப்பது குறித்து விவாதிப்பது அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள சிமோன்ஸ் பல்கலைக்கழகத்தின் உடல்நல இயல் மற்றும் சுகாதார மையத்தின் இணை இயக்குநர் எலிசபெத் ஸ்காட், துண்டில் உள்ள நுண்ணுயிரிகள் எப்படி வீடு முழுவதும் பரவுகின்றன என்பது குறித்த ஆய்வில் ஆர்வமாக உள்ளார். "நம்முடைய துண்டுகளில் அந்த நுண்ணுயிரிகள் வெறுமனே இருப்பதில்லை," என்கிறார் அவர். "அந்த துண்டிலிருந்து நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுகிறதென்றால், அது மனிதர்கள் மூலமாகவே ஏற்பட்டிருக்கும்." நம்முடைய தோலில் ஏராளமான வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் தவிர்த்து ஆயிரக்கணக்கிலான வெவ்வேறு இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் இருக்கும். அதில் பெரும்பாலானவை நமக்கு நன்மையையே பயக்கும். அவை, நம்மை மற்ற தீமை பயக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கு உதவிபுரியும். மேலும், அவை நம் நோயெதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேசிப்பாயா விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? விஷ்ணுவர்தனின் கம்பேக் படமாக அமையுமா?15 ஜனவரி 2025 நீலகிரி, கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?15 ஜனவரி 2025 தீங்கு ஏற்படுத்துமா? நம்முடைய துண்டுகளில் காணப்படும் பெரும்பாலான பாக்டீரியாக்கள், நம் தோலில் காணப்படும் பாக்டீரியாக்கள்தான். எனினும், அவை நம்முடைய சுற்றுபுறத்திலும் பொதுவாகக் காணப்படுகின்றன. இவற்றுள் ஸ்டாஃபைலோகோக்கஸ் பாக்டீரியா (Staphylococcus) மற்றும் மனித குடலில் பொதுவாகக் காணப்படும் எஸ்செரிஷியா கோலி (Escherichia coli இ. கோலி) ஆகியவையும் அடங்கும். மேலும், உணவால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள் மற்றும் வயிற்றுப்போக்குக்குக் காரணமான சால்மோனெல்லா (Salmonella) மற்றும் ஷிகெல்லா (Shigella) பாக்டீரியாக்களும் துண்டுகளில் காணப்படுகின்றன. இவை சில சமயங்களில் தீங்கை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளாக உள்ளன. அதாவது, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளுக்குள் அவை நுழையாதவரை தீங்கற்றதாக உள்ளன. உதாரணமாக, நம் உடலில் ஏதேனும் வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதற்குள் இந்த பாக்டீரியாக்கள் நுழைந்து சில நச்சுகளை உற்பத்தி செய்கின்றன அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன. நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்கும் அமைப்பாக நமது தோலும் செயல்படுகின்றது. பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளிலிருந்து நம்மை காக்கும் முதல் தடுப்பு அரணாக தோல் செயல்படுகின்றது. எனவே, துண்டிலிருந்து பாக்டீரியாக்கள் நம்முடைய தோலுக்கு இடம்பெயர்வது குறித்து நாம் அவ்வளவு கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால், அந்த துண்டின் மூலம் நம் உடலை துடைப்பது, நோய்க்கிருமிகளை தடுக்கும் தோலின் திறனில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES துண்டை காயவைக்கும்போது, அதிலிருக்கும் நுண்ணுயிரிகளை நம் வாய், மூக்கு மற்றும் கண்களுக்குள் செல்லும்போதுதான் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. எனவே, நாம் அடிக்கடி கைகளால் கையாளும் துண்டுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பாத்திரங்களை துடைக்க, கைகள் மற்றும் தரைகளைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகள், உணவுப்பொருளால் ஏற்படும் நோய்க்கிருமிகளை பரப்பும் ஆதாரங்களாக உள்ளன. இரைப்பை குடல் தொற்றுகளை ஏற்படுத்தும் சால்மோனெல்லா, நோரோவைரஸ் (Norovirus) மற்றும் இ.கோலி ஆகியவை, "துண்டுகளின் வாயிலாக தொற்றக்கூடியவை" என்கிறார் ஸ்காட். நோய்த்தொற்று இருந்த இடங்களை தொடுவது கோவிட்-19 போன்ற வைரஸ்கள் பரவுவதற்கான முதன்மையான வழி என்பது பெரும்பாலும் நம்பப்படவில்லை என்றாலும், பருத்தித் துணியில் அந்த வைரஸ் 24 மணிநேரம் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும் எம்பாக்ஸ் வைரஸும் ஆபத்தான ஒன்றாக உள்ளது, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் துண்டுகளை பரிமாறிக்கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். மருக்கள் போன்றவற்றுக்கு பொதுவான காரணமாக கருதப்படும் பாபில்லோமாவைரசஸ் (papillomaviruses), மற்றவர்களுடன் துண்டுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் பரவலாம். துண்டுகள் மூலம் தொற்றுகள் பரவுகிறது என்பதால்தான் மருத்துவமனைகள் மற்றும் பொதுக் கழிவறைகளில் தற்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் காகிதத் துண்டுகளும் ஏர் டிரையர்களும் பயன்படுத்தப்படுகின்றன, எனினும், எது சிறந்தது என்பதில் உறுதியற்ற ஆதாரங்களே உள்ளன. ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா15 ஜனவரி 2025 இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துண்டை துவைத்த பிறகு சூரிய வெப்பத்தில் அதை காயவைப்பது பாக்டீரியாக்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது என்ன செய்ய வேண்டும்? நாம் எவ்வளவு நேரம் துண்டுகளை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, அவை எவ்வளவு நேரம் ஈரமாக இருக்கும் என்பது மாறுபடும், அதனடிப்படையில் மருத்துவமனைகளின் சூழலைப் பொறுத்து, ஆபத்து விளைவிக்கும் நுண்ணுயிரிகள் துண்டுகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. துண்டுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது உலகளவில் இன்று சந்திக்கும் முக்கிய சுகாதாரப் பிரச்னைகளை தடுப்பதற்கு உதவலாம் என்கின்றனர் ஸ்காட்டும் அவருடைய சகாக்களும். எம்ஆர்எஸ்ஏ போன்ற ஆன்டிபயாடிக்குகளை எதிர்த்து வாழும் திறனுடைய பாக்டீரியாக்கள், இந்த நோய்க்கிருமி தாக்கிய இடங்களை தொடுவதன் மூலம் பரவுகிறது என்பதால், அதைத்தடுக்க துண்டுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழியாக அமையலாம். கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மருந்து நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஜூந்ய்வெஸ் மைல்லார்ட் கூறுகையில், தொடர்ந்து துண்டுகளை துவைத்து சுத்தமாக வைத்திருப்பது, பாக்டீரியா தொற்றுகளை குறைக்கும் என்றும் அதன்மூலம், ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு குறையும் என்றும் கூறுகிறார். "வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது தடுப்பு வழிமுறைகளுள் ஒன்று, தடுப்பு முறைதான் சிகிச்சையை விட சிறந்தது," என்கிறார் மைல்லார்ட். காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்15 ஜனவரி 2025 'என் தந்தை ஒரு குற்றவாளி' - மனைவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மகள் பேட்டி15 ஜனவரி 2025 எத்தனை முறை நாம் துண்டுகளை துவைக்க வேண்டும்? வாரத்திற்கு ஒருமுறை துண்டுகளை துவைக்க வேண்டும் என ஸ்காட் பரிந்துரைக்கிறார். எனினும், இது ஒரே விதியல்ல. "இதை அப்படியே அர்த்தம் கொள்ளக்கூடாது. வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால், அவர்களுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும்," என்கிறார் அவர். "அவர்கள் தனியே துண்டுகளை வைத்துக்கொள்ள வேண்டும், அந்த துண்டுகளை தினசரி துவைக்க வேண்டும்." இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 20% பேர், தங்களது துண்டுகளை வாரத்திற்கு இருமுறை துவைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இப்படி குறிப்பாக மேற்கொள்ளப்படும் சுகாதார வழிமுறையை 'டார்கெட்டட் ஹைஜீன்' என்கின்றனர், இது சுகாதார துறையில் ஆபத்தைக் கையாளும் ஒருவழிமுறையாகும். இதனை உலக சுகாதார கழகம் மற்றும் சர்வதேச வீட்டு சுகாதாரத்திற்கான அறிவியல் மன்றத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். சுகாதாரம் என்பது எல்லா சமயங்களிலும் முக்கியம் எனும்போதிலும், இப்படி குறிப்பாக சில சமயங்கள் அல்லது சில இடங்களில் சுகாதாரத்தைக் கடைபிடிப்பது மிக முக்கியமாகும். யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?15 ஜனவரி 2025 தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES துண்டை எப்படி துவைக்க வேண்டும்? 40-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலோ அல்லது வீட்டின் மற்ற துணிகளை விட நீண்ட நேரத்திற்கு நுண்ணுயிரிகளைத் தடுக்கும் டிடர்ஜென்ட்டுகள் சேர்த்துத் துவைக்கப்பட வேண்டும் என்கிறார் ஸ்காட். டிடர்ஜென்ட்டுகள் துணிகளில் பாக்டீரியாக்கள் புகாமல் செய்யும், சில வைரஸ்களை செயலிழக்கவும் செய்யும். அதிக வெப்பநிலையில் தொடர்ச்சியாக துவைப்பது, சூழலியல் ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும். குறைவான வெப்பநிலையில் துவைக்கும்போது நொதிகள் சேர்த்தோ அல்லது பிளீச் செய்யும்போதோ துண்டுகளில் பாக்டீரியாக்கள் தங்காமல் சுத்தம் செய்ய முடியும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், டிடர்ஜென்ட் மற்றும் கிருமிநாசினி சேர்த்து சூரிய வெப்பத்தில் துண்டுகளை காய வைப்பது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை குறைப்பதில் மிகுந்த செயலாற்றுவதாக தெரியவந்துள்ளது. வீட்டில் சுகாதாரத்தைக் கடைபிடிப்பது பல வழிகளில் நோய்த்தடுப்பு வழிமுறையாக உள்ளதாக ஸ்காட் கூறுகிறார். உங்களை பாதுகாக்கும்பொருட்டு நீங்கள் செய்யும் எவ்வித சிறிய முயற்சிகளும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் காக்கும். "இதை ஸ்விஸ் சீஸ் ( Swiss cheese) மாடல் என்கிறோம்," என்கிறார் அவர். "ஸ்விஸ் சீஸின் ஒவ்வொரு துண்டைப் போல, ஒவ்வொரு சிறிய சுகாதார முயற்சிகளும் நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்கின்றன. "அசுத்தமான துண்டுகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உள்ளன, அவற்றை நாம் சில சிறிய வழிமுறைகளை கையாள்வதன் மூலம் தடுக்க முடியும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8r5jgzezglo
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
16 JAN, 2025 | 10:34 AM மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளது. மன்னார் நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தவர்களே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/203933
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம், "காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அதே நேரம் இதை 'ஊக்குவித்ததற்காக' அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் காலில் அல்-ஹய்யா இது பாலத்தீனத்தின் "மீண்டு எழும் திறனின்" விளைவாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். இரானிய அணு விஞ்ஞானியை ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் 'மொசாட்' கொன்றது எப்படி? அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு 10 ஆண்டு ரகசிய திட்டம்: லெபனானில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்களை மொசாட் வெடிக்கச் செய்தது எப்படி? டிரம்ப், ரஷ்யா, ஐரோப்பா: சீனா முன்னுள்ள 5 சவால்களையும் அதிபர் ஜின்பிங் சமாளிப்பாரா? பாலத்தீனர்கள் பலரும், இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த செய்தி அறிந்து கொண்டாடினர். ஆனால், காஸாவில் போர்முனையில் பதற்றம் குறையவில்லை. கத்தார் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. இதில் காஸா நகரில் உள்ள ஷேக் ரத்வான் குடியிருப்புப் பகுதியில் இருந்த 12 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து இதுகுறித்து உடனடியாக பதில் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், "போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை" சரி செய்வதே முதல் வேலை என்று தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பயங்கரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அப்போது முதல் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. மனிதநேய உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உணவு, எரிபொருள், மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருந்த 24 அக்பர் சாலை தலைமையகம்15 ஜனவரி 2025 மகா கும்பமேளா: ஆயுதப் பயிற்சி, புனித சாம்பல்களுடன் வாழ்க்கை - நாகா துறவி ஆவதற்கான செயல்முறைகள்15 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார் ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா15 ஜனவரி 2025 குளித்த பிறகு பயன்படுத்தும் துண்டை வாரத்திற்கு எத்தனை முறை, எப்படி துவைக்க வேண்டும்?3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலகும் ஹமாஸ் 94 பணயக்கைதிகளை கொண்டிருப்பதாகவும், அதில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், போருக்கு முன்பாக இஸ்ரேலை சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர், அதில் இருவர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கிறது. ஆறு வார கால முதல் கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்கள் அதிகமாக வாழும் காஸாவின் பகுதிகளிலிருந்து விலகி கிழக்கு திசையில் இஸ்ரேல் படை நகரும். இடமாற்றம் செய்யப்பட்ட பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர், மக்களுக்குத் தேவையான உதவிகளை கொண்டு வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஒவ்வொரு நாளும் உள்ளே வர அனுமதிக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஒப்பந்தம், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை இலங்கையில் மீள் குடியேற்ற புதிய திட்டம் - நாளிதழில் வெளியான 5 முக்கிய செய்திகள்14 ஜனவரி 2025 லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்? என்ன சொல்கின்றனர்?13 ஜனவரி 2025 அடுத்த கட்ட போர் நிறுத்தத்தின்போது என்ன நடைபெறும்? இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஜனவரி 16ம் தேதி) தொடங்கவுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின்போது மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலகி, அந்த பகுதியில் 'நீடித்த அமைதி' நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி கட்ட போர் நிறுத்தத்தின்போது காஸாவின் மறுகட்டமைப்பு நடைபெறும் - இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளின் உடல்கள் இருந்தால் அவை திருப்பி கொடுக்கப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள 'தெளிவான நடைமுறை' இருப்பதாக, ஷேக் முகமது தெரிவித்தார். இதன் "விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஓரிரு நாட்களில்" ஒப்பந்தம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகியவை கூட்டாக வேலை செய்யும். "இதுவே போரின் கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்" என்றார் ஷேக் முகமது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr7evj0zm2ro
-
தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்ட100க்கும் அதிகமானவர்கள் பலி
தென்னாபிரிக்க தங்க சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்கள் மீட்பு 15 JAN, 2025 | 05:13 PM தென்னாபிரிக்காவின் தங்கச்சுரங்கத்திலிருந்து 70க்கும் அதிகமான உடல்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தென்னாபிரிக்காவின் சட்டவிரோத சுரங்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்களிற்கான உணவு நீர் போன்றவற்றை அதிகாரிகள் துண்டித்து சில மாதங்களின் பின்னர் சுரங்கத்திற்குள் இருந்து 70 உடல்களை மீட்டுள்ள மீட்பு பணியாளர்கள் 92 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதேவேளை மேலும் பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர் எனவும் பலர் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளியேற முடியாத பலவீனமான நிலையில் காணப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை முதல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தென்னாபிரிக்க மீட்பு பணியாளர்கள் சிகப்பு நிற கூண்டு போன்ற ஒன்றை தங்கச்சுரங்கத்திற்குள் இறக்கி 60 பேரின் உடல்களை மீட்டுள்ளதுடன் 92 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளனர். உள்ளே மேலும் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தெரியாது என தெரிவித்துள்ள பொலிஸார் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவருடகாலமாக தென்னாபிரிக்காவின் சுரங்கமொன்றிற்குள் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் நிலை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக கடந்த வருடம் குடிநீர் உணவு மருந்துபோன்றவை அந்த சுரங்கத்திற்குள் செல்வதை பொலிஸார் தடுத்திருந்தனர். உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் கடிதத்தை அடிப்படையாக வைத்து உள்ளே சிக்குண்டுள்ள ஒருவரின் சகோதரி நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலேயே அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஸ்டில்பொன்டெய்னிற்கு அருகில் உள்ள பவல்பொன்டெய்னில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ளவர்களில் 109 ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என உள்ளேயிருந்து அனுப்பப்பட்ட கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களில் சட்டவிரோதமாக அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது இந்த சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக அகழ்வில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்காக அதிகாரிகள் குடிநீர் உணவு போன்றவற்றை நிறுத்தியதை தொடர்ந்து இந்த சுரங்கம் பொலிஸ் அகழ்வில் ஈடுபடுபவர்கள் சிவில் சமூகத்தினரிடையே கடும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. உள்ளே சிக்குண்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என்பதால் அவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் உதவிகளை அனுப்பாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதே தங்களின் நோக்கம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். எனினும் உணவு, குடிநீரை துண்டிக்கும் நடவடிக்கைகளை சிவில் சமூகத்தினரும் பொதுமக்களும் கடுமையாக கண்டித்துவந்தனர். இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து தென்னாபிரிக்க அரசாங்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சுரங்கத்திற்குள் பட்டினி நோய் போன்றவற்றால் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. சுரங்க அகழ்வில் ஈடுபட்டவர்கள் உள்ளே நுழைவதற்கு பயன்படுத்திய கயிறுகள் போன்றவற்றை அகற்றியிருந்த அதிகாரிகள் உள்ளேயிருப்பவர்களால் வெளியில் வரமுடியும் எனினும் கைதுசெய்யப்படுவோம் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் வெளியே வரமறுக்கின்றனர் என குறிப்பிட்டிருந்தனர். எனினும் இதனை நிராகரித்த சிவில் சமூக அமைப்புகள் சுரங்கத்திற்குள் சிக்குண்டுள்ளவர்களிற்கு உணவு குடிநீர் போன்றவற்றை வழங்கவேண்டும் என கோரி நீதிமன்றம் சென்றனர். அவர்களின் இந்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது எனினும் தென்னாபிரிக்க அரசாங்கம் அனுப்பும் உணவு நீர் போன்றவை உள்ளேயிருப்பவர்களிற்கு போதாது என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/203864
-
யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும் வரை போர்புரியப்போவதில்லை - இஸ்ரேலிய இராணுவவீரர்கள் போர்க்கொடி
Published By: RAJEEBAN 15 JAN, 2025 | 12:31 PM telegraph.co.uk காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும்வரை யுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என இஸ்ரேலிய படையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுமார் 200 இஸ்ரேலிய படையினர் இது குறித்து கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கடிதத்தில் 15 மாதத்தில் யுத்தம் ஒழுக்க நெறி குறித்த எல்லைகளை மீறிவிட்டது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யுத்த நிறுத்த உடனபடிக்கையில் கைச்சாத்திடாவிட்டால் நாங்கள் போரில் ஈடுபடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழு இஸ்ரேலிய படையினர் ஏற்கனவே தங்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர் அவர்கள் இது குறித்து ஏபி செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படுகின்றனர் வீடுகள் அழிக்கப்படுகின்றனர். இஸ்ரேலிய படையினருக்கு ஆபத்து இல்லாத போதிலும் இது இடம்பெறுகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யுத்த சூன்ய பிரதேசத்தில் அனுமதிவழங்கப்படாத எவரையும் சுட்டுக்கொல்லுமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் வில்க் என்ற அதிகாரியொருவர் தான் இராணுவத்தில் தொடர்ந்தும் பணிபுரியப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். காசாவில் இரண்டு மாதகாலம் பணியாற்றியவேளை தனது படையினர் வீடுகளை அழிப்பதை சூறையாடுவதையும், காசா மக்களின் உடமைகளை நினைவுப்பொருட்களாக திருடுவதையும் பார்த்த பின்னர் 2024 ஜனவரியில் தனது பதவியை துறந்ததாக யுவல் கிறீன் என்ற 27 வயது அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதிருப்தியடைந்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சிறியதாக தோன்றினாலும்; உண்மையில் மேலும் பலர் அதிருப்தியடைந்துள்ளனர் அவர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புகின்றனர் என இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படும் சூழலிலேயே யுத்த நிறுத்தம் அவசியம் என இஸ்ரேலிய இராணுவத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். https://www.virakesari.lk/article/203858
-
மகா கும்பமேளா: ஆயுதப் பயிற்சி, புனித சாம்பல்களுடன் வாழ்க்கை - நாகா துறவி ஆவதற்கான செயல்முறைகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான ஒரு மகாமண்டலேஷ்வரால் நிர்வகிக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்… இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள். பொதுவாக, வட இந்தியாவில் 'அகரா' (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாது-துறவிகளின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரிவேணி நதி சங்கமிக்கும் இடத்திலும், உத்தராகண்டில் உள்ள ஹரித்வாரிலும், மகாராஷ்டிராவில் நாசிக்கில் கோதாவரி ஆற்றின் கரையிலும், மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது, புதிய துறவிகளை அகராவில் சேர்த்துக்கொள்ளும் வைபவமும் நடத்தப்படுகிறது. உலகின் சாமானிய வாழ்க்கையைத் துறப்பவர்கள் 15 வெவ்வேறு அகராக்களில் ஏதேனும் ஒன்றில் இணைகிறார்கள். இருப்பினும், இதற்கு முன் அவர்கள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் இந்த 'அகரா' உலகில் சேர்க்கப்படுவதற்கு முன்பு சில முக்கியமான சடங்குகளையும் செய்ய வேண்டும். கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஏன்? பிரயாக்ராஜ் நகரின் சிறப்பு, முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம் மனித மாமிசம், பிணம் எரிக்கும் இடத்தில் உடலுறவு - அகோரிகளின் ரகசிய வாழ்க்கை எப்படி இருக்கும் ? சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி கனக சபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள் மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன? ஒரு நாகா துறவிக்கு அகராக்கள் எவ்வாறு தீட்சை அளிக்கின்றன? அகராக்கள் ஒரு வகையில் இந்து மதத்தின் மடங்கள். ஆதி சங்கராச்சாரியார், பௌத்தம் பரவுவதைத் தடுக்க அகராக்களை நிறுவியதாக நம்பப்படுகிறது. பிபிசியிடம் பேசிய மகாநிர்வாணி அகராவின் செயலாளரான மஹந்த் ரவீந்திரபுரி, "வேதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆயுதங்களால் இணங்க வைக்கப்பட்டனர். அகராக்கள் இந்து மதத்தை உயிர்ப்பித்தன" என்று கூறினார். முன்பு நான்கு அகராக்கள் மட்டுமே இருந்தன, ஆனால் கருத்தியல் வேறுபாடுகளால் அவை பிரிந்தன. தற்போது 15 முக்கிய அகராக்கள் உள்ளன. இதில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கான பரி அகரா, கின்னர் அகரா ஆகியவையும் அடங்கும். கும்பத்தின் மையத்தில் சாதுக்கள் மற்றும் நாகா துறவிகள் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக மற்றும் மத கருத்துகளின் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் புனித நூல்களின் ஆய்வும் நடைபெறுகிறது. ஒவ்வொரு அகராவும் அதன் சொந்த பாரம்பரியத்தின்படி சீடர்களுக்கு தீட்சை அளிக்கிறது மற்றும் ஏற்கெனவே உள்ள சாதுக்களுக்கு பட்டங்களை வழங்குகிறது. இந்தியாவில் அந்தப்புர பெண்ணுக்காக நடந்த கொலையால் 'மகுடம் இழந்த மன்னர்' யார் தெரியுமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகை வரலாறு: எப்போது தொடங்கியது? பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்?14 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். ஆரம்பக்கால அகராக்களில், சைவ சமயத்தவர்கள் (சிவனை வணங்குபவர்கள்) மற்றும் வைணவர்கள் (விஷ்ணுவை வணங்கும் துறவிகள்) முக்கியமானவர்களாக இருந்தனர். இப்போது அவர்களில் உதாசி மற்றும் சீக்கிய அகராக்களும் அடங்கும். இங்குள்ள சாதுக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துறவி எந்த பிரிவைச் சேர்ந்தவரோ அந்தப் பிரிவின் பெயரும் குடும்பப் பெயரும் அவருடன் இணைக்கப்பட்டுள்ளன. சந்நியாசி ஆன பிறகு, குடும்ப உறவுகளையும் பின்னணியையும் துறக்கிறார். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயரும் அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு துறவி எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கிறாரோ, அந்தப் பிரிவின் பெயரும் பட்டப் பெயரும் அவரின் பெயருடன் இணைக்கப்படும். அவர்கள் சந்நியாசிகளான பிறகு குடும்ப உறவுகளையும் அதன் பின்னணியையும் துறக்கிறார்கள். தந்தையின் பெயரைப் போலவே குருவின் பெயர், அவரது பெயருடன் இணைக்கப்படும். லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ வேகமாகப் பரவியது எப்படி? எளிதாக விளக்கும் ஐந்து புகைப்படங்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?13 ஜனவரி 2025 ஒருவர் நாகா துறவி ஆவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கும்பமேளா இந்தியாவில் நான்கு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது ஆயிரக்கணக்கான துறவிகளை ஈர்க்கிறது. வரலாற்று பேராசிரியர், முனைவர் அசோக் திரிபாதி, பிரயாக்ராஜை மையமாகக் கொண்டு 'நாகா சந்நியாசிகளின் வரலாறு' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதன் மூன்றாவது அத்தியாயத்தில் பல்வேறு பிரிவுகளின் பெரும்பாலான விதிகளை அவர் தொகுத்துள்ளார். அதன்படி, அகராவில் சேர அல்லது நாகா துறவியாக மாற, எந்தவொரு நபரும் ஒரு நாகா துறவியின் சீடராகத் தன்னை அர்பணித்துக்கொள்ள வேண்டும். அந்த நபருக்கு எந்த உடல் குறைபாடும் இருக்கக்கூடாது. வழக்கமாக, 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தீட்சை பெறுவார்கள். தீட்சையின் ஆரம்பத்தில், அவர்களின் தலைமுடி மொட்டையடிக்கப்பட்டு, அவர்களுக்கு 'மகாபுருஷ்' அல்லது 'வஸ்திரதாரி' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. மூத்த நாகா துறவி ஒருவரின் மேற்பார்வையில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், ஒருவருக்கு தனிப்பட்ட குரு இருப்பதில்லை. ஆனால் அகராவின் மூலவர், உண்மையான குருவாகக் கருதப்படுவார். காலப்போக்கில் அந்த நபர் ஒரு மூத்த துறவியுடன் சேர்வார். அவரே அவரது ஆன்மீக வழிகாட்டியாகவும் மாறுவார். காவி அங்கி அணிந்து துறவிகளுடன் உலாவுவார். சுத்தம் செய்தல், சமைத்தல், புல்லாங்குழல் வாசித்தல், ஆயுதங்களில் பயிற்சி பெறுதல் போன்ற தனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் அந்த புதிய நபர் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, மூத்த நாகா துறவிகள் புதியவரின் செயல்திறனில் மகிழ்ச்சி அடைந்தால், அவர் நாகா திகம்பராக தீட்சை பெறுகிறார். இந்த நேரத்தில், அந்தப் புதியவர் 'டாங்தோட் சன்ஸ்கார்'-க்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப முடியாது. அகராவின் 'மஹந்த்' அவரை உறுதிமொழி எடுக்கச் செய்வார். 1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அரிய வால் நட்சத்திரம் - வெறுங்கண்களால் எங்கே, எப்படி பார்ப்பது?14 ஜனவரி 2025 யாரை பழிவாங்க இவர்கள் இரவு 2 மணி வரை கண் விழிக்கிறார்கள்? ஆண், பெண்ணில் என்ன மாற்றம் நிகழும்?8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பல்லாயிரக்கணக்கான துறவிகள் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளனர் இதுதவிர, நாகா துறவி ஆவதற்கான பிற விதிகள் உள்ளன, அவற்றை தீட்சை பெற்றவர்கள் பின்பற்ற வேண்டும். கும்பமேளாவின்போது, அவர் மூன்று நாள் விரதத்தைக் கடைபிடித்து 'பிரேஷ் மந்திரத்தை' உச்சரிக்க வேண்டும். தனக்கென சிரத்தையையும், 21 தலைமுறை பிண்ட தானங்களையும் தனது கைகளாலேயே செய்து உலக பந்தங்களை அறுத்துக்கொள்ள வேண்டும். அவர் தனது உலக வாழ்க்கையின் அடையாளமான முடியையும் அகற்றுகிறார். அதிகாலையில், கும்பமேளா நடைபெறும் ஆற்றில் நீராடி, இடுப்புத் துணி மட்டும் அணிந்து, ஒரு துறவியாக 'மறுபிறவி' எடுக்கிறார். நாகா துறவிகள் பபூதத்தையும் (புனித சாம்பல்) சாம்பலையும் தங்கள் உடலில் பூசிக்கொள்கிறார்கள். பயிற்சி காலத்தில், தீட்சை பெற விரும்பும் நபருக்கு மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்பப் போதுமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு, நாகா துறவியாக மாற இரண்டு முதல் 12 ஆண்டுகள் வரை ஆகலாம், இதற்கு எல்லையே இல்லை. இருப்பினும், பெண் நாகா துறவிகள் முழு நிர்வாணமாக இருக்கவும், காவி ஆடைகளை அணியவும் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த முறை பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவின்போது, மகிளா அகராவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. 'மாய் அகரா' என்ற பெயர் 'சந்நியாசினி அகரா' என மாற்றப்பட்டது. பெண்களும் தங்கள் மத ஒழுங்குகளை நிறுவ அனுமதிக்கப்பட்டனர். கோவை: மஞ்சளாக மாறிய நிலத்தடி நீர், துரத்தியடிக்கும் துர்நாற்றம் – வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் பாதிப்புகள்12 ஜனவரி 2025 பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த 'கேதன் பரேக்' சிக்கியது எப்படி?13 ஜனவரி 2025 நாகா துறவிகள் எங்கு வாழ்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாகா துறவிகள் தங்களுக்கான அகராவில் வாழ்கின்றனர். பல துறவிகள் ஆயுதப் பயிற்சியும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான மகாமண்டலேஷ்வரால் (Mahamandaleshwar) நிர்வகிக்கப்படுகிறது. மகாமண்டலேஷ்வர் முன்பு 'பரமஹம்ஸர்' என்று அழைக்கப்பட்டதாக ஜாதுநாத் சர்க்கார், தனது 'தசநாமிகளின் வரலாறு' என்ற புத்தகத்தில் (பக்கம் எண் 92) தெரிவித்துள்ளார். ஒரு அகராவில் 8 அறைகள் மற்றும் 52 மடாலயங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் மண்டலாஷ்வர் உள்ளது. அகராவின் அளவைப் பொறுத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கலாம். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மஹந்த் தலைமையில் மத நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்த மஹந்த்களின் பிரதேசங்கள் இந்து அரசர்களுக்கு உட்பட்டிருந்தன. எந்த அரசரும் இந்தத் துறவிகளைக் கௌரவித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார். பதிலுக்கு, நாகா துறவிகளும் ராணுவ ஆதரவை வழங்குவார்கள். "அகராவின் பாரம்பரியம் அலெக்சாண்டரின் படையெடுப்பு காலத்தில் இருந்தே தொடங்கியதாக நம்பப்படுகிறது" என்று அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வரலாற்று பேராசிரியர் ஹேரம்பா சதுர்வேதி கூறுகிறார். "சர் ஜாதுநாத் சர்க்கார் தனது 'தசநாமி நாக சந்நியாசிகளின் வரலாறு' என்ற புத்தகத்தில் இது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்" என்கிறார் அவர். அக்பரின் ஆட்சிக் காலத்தில், இந்து துறவிகளுக்கு ஆயுதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, ஔரங்கசீப் காலத்தில் துறவிகளுக்கும் முகலாயர்களுக்கும் ஆயுத மோதல்கள் நடந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இந்தியாவில் ஆங்கிலேய அரசு உருவான பிறகு ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நிர்வாணமாக சுற்றுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கிரீன்விச்சை அடிப்படையாகக் கொண்டு உலகின் நேர மண்டலம் உருவானது எப்படி தெரியுமா?12 ஜனவரி 2025 சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி சுனாமி, புயல், கள்ளக்கடல் பாதிப்புகளை தடுப்பது பற்றி ஆய்வு12 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹா கும்பமேளாவின்போது யானைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் மீது துறவிகள் சுற்றித் திரிவார்கள் சமீபத்திய ஆண்டுகளில், கும்பமேளா, மஹா கும்பமேளா அல்லது சிவராத்திரி திருவிழா போன்ற பண்டிகைகளின் போது மட்டுமே நாகா துறவிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவை தவிர்த்து, அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் அவர்களின் அகராக்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. துறவிகள் அகராவுக்குள் எளிதில் நுழைய முடியாது. அதற்காக, அவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒருவர் அரங்கில் நுழைந்தவுடன், அவர் சாதி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, தனது தனிப்பட்ட செல்வத்தையும் உலக ஆசைகளையும் துறக்கிறார். துறவிகளை அகராவில் நுழைய அனுமதிக்க வெவ்வேறு ஏற்பாடுகள் உள்ளன. தசநாமியின் நான்கு முக்கிய மையங்கள் கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம் மற்றும் ஜோர்திம் மடம், முறையே பூரி (கிழக்கில் ஒடிசா), துவாரகா (மேற்கில் குஜராத்), சிருங்கேரி (தெற்கில் கர்நாடகா) மற்றும் ஜோஷிமத் (வடக்கில் உத்தராகண்ட்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. கோவர்தன் பீடம், சாரதா பீடம், சிருங்கேரி மடம், ஜோஷிமத் ஆகியவை முறையே பிரகாஷ், ஸ்வரூப், சேத்தன் மற்றும் ஆனந்த் (அல்லது நந்தா) என்று தீட்சை பெறுபவர்களால் அறியப்படுகிறது. இவற்றின் மூலவர்கள் முறையே ஜகந்நாதர், சித்தேஷ்வர், ஆதி வராஹா மற்றும் நாராயணா ஆவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2pvq8dywgo
-
இலங்கை - இந்திய உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இந்திய அரச பிரதிநிதிகளுடன் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்
15 JAN, 2025 | 05:43 PM (நா.தனுஜா) பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை (14) இந்தியாவுக்குச் சென்றுள்ளார். பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் இந்தியாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்புகளின் ஓரங்கமாக அமைந்திருக்கும் இவ்விரு நாள் (14 - 15) விஜயத்தின்போது, மிலிந்த மொரகொட இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைக்குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்து பரந்;துபட்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடனான சந்திப்புக்களும் இதில் அடங்குகின்றன. மிலிந்த மொரகொடவினால் நிறுவப்பட்ட பாத் ஃபைன்டர் பவுன்டேஷன் அமைப்பானது இந்திய அரசாங்கத்துடனும், ஏனைய சிந்தனைக்குழுக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் துறையினருடனும் நெருங்கிய பிணைப்பைப் பேணிவருவதுடன் தொடர் கலந்துரையாடல்களையும் நடத்திவருகின்றன. அதன்படி இவ்வமைப்பினால் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை முன்முயற்சிகள் நிலையமானது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஊக்குவிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான கூட்டிணைந்த ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் இலங்கை, இலங்கை மற்றும் ஏனைய தொடர்புடைய நாடுகளை ஓரணிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பாத் ஃபைன்டர் அமைப்பு ஈடுபட்டுவருகிறது. https://www.virakesari.lk/article/203897
-
நாட்டிற்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திரும்பிச் சென்ற அவலம்
கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். ஒருகொடவத்தை RCT முற்றத்தில் இன்று (15) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விவாதித்து உடனடி தீர்வுகளைக் காண, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார். இதன்போது, சுங்க அதிகாரிகள் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய ஒப்புக்கொண்டனர். அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, அனுமதி வழங்கும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒருகொடவத்தை சுங்க முற்றத்திற்கு அருகில் வரிசைகள் இன்னும் காணப்படுகின்றன. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம், அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்த செயல்முறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198817
-
15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother"
83வது பிறந்தநாளில் கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன்.
-
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மின்சாரம் துண்டிப்பு; குளிரூட்டப்பட வேண்டிய தடுப்பூசிகள் காலாவதியாகுமா?
Published By: VISHNU 15 JAN, 2025 | 06:06 PM வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சாரம் 15ஆம் திகதி புதன்கிழமை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் செல்லுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மின்சார கட்டணம் செலுத்தப்படாத நிலையில் காலை மின்சார சபை ஊழியர்களால் குறித்த அலுவலகத்துக்கான மின் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு மின்சாரம் தடைப்பட்டதோடு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏதுவான சூழல் காணப்படாமையினால் மின் பிறப்பாக்கி மூலமாகவும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அங்கு கர்ப்பிணித் தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊசிகள் சில குளிரூட்டிகளில் வைக்க வேண்டிய நிலைமை காணப்பட்ட போதிலும் மின் துண்டிக்கப்பட்டமையினால் அவை பழுதடைந்து விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த தடுப்பூசிகளைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மின் கட்டணம் நீண்ட காலமாக செலுத்தப்படாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/203904
-
முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது. மேலும், வீதியை பயன்படுத்துபவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=198811
-
சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
Published By: VISHNU 15 JAN, 2025 | 06:41 PM சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார். மேலும், சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார ஆகியோரும் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/203909
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார். இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198808
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர Published By: DIGITAL DESK 3 15 JAN, 2025 | 04:51 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இருவருக்கும் இடையிலான சந்திப்பு சீன நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது. https://www.virakesari.lk/article/203871