Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜோனியை பாராட்ட ஒருத்தரும் முன்வரவில்லை! ரேபிஸ் அச்சமா?!
  2. டொனால்ட் டிரம்ப்: ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நிபந்தனையின்றி விடுவிப்பு பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் 34 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி மெர்ச்சன், "உங்கள் இரண்டாவது பதவிக் காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று கூறியுள்ளார். டிரம்பை நிபந்தனையின்றி விடுவிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த வழக்கில் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை, சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை. இந்த வழக்கில் டிரம்பை நிபந்தனையின்றி விடுவிப்பது நாட்டின் மிக உயர்ந்த பதவியை மீறாமல் வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனை என்று நீதிபதி மார்ச்சன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த ஆண்டு மே மாதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். ஜனவரி 20ஆம் தேதியன்று டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவேற்கவுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy173eryg2o
  3. இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபான் வாங்க் பதவி, பிபிசி நியூஸ் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய, இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் பௌத்த துறவிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பேசி வந்த ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இது இரண்டாவது முறை. கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனைவியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போதைய வழக்கை விசாரித்த கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவருக்கு 1500 இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறையீடு செய்துள்ளார். கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் ஒருவராக ஞானசார அறியப்படுகிறார். 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். 'தண்டனையை தாமதிக்க முடியாது': டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - தீர்ப்பு குறித்து காட்டம்5 மணி நேரங்களுக்கு முன்னர் 'எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள்?' - வாரத்திற்கு 90 மணிநேரம் பணி செய்யுமாறு கூறிய எல்&டி தலைவர்10 ஜனவரி 2025 பொது மன்னிப்பு பெற்ற ஞானசார படக்குறிப்பு, தனது மகனுடன் சந்தியா எக்னெலிகொட கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள பௌத்த தேசிய குழுவை வழி நடத்தினார் ஞானசார. மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பணிக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரதீக் எக்னெலிகொட அரசியல் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். ஆளும் சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த அவரை 2010ஆம் ஆண்டு முதல் காணவில்லை. இந்நிலையில், அவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொடவை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் 2018ஆம் ஆண்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்கள் கழித்து, அன்றைய ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்ரிபால சிறிசேன அவருக்கு பொது மன்னிப்பை வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd64y49e48qo
  4. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/314531
  5. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் நினைவேந்தல் யாழில்! 10 JAN, 2025 | 06:33 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (10) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவுகூரி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வி.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது வட மாகாண அவைத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/203518
  6. ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு விசாரணை கோரியிருக்கும் அமெரிக்கா சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து, முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள் தமிழ்ச் செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார். உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழு ஆவணப்படுத்தி இருக்கிறது. 1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள். எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் திட்ட இயக்குநர் கோரியுள்ளார். https://thinakkural.lk/article/314539
  7. நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சி! - விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா 10 JAN, 2025 | 07:08 PM கடந்த பத்து வருடங்களை கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2024ஆம் ஆண்டாகும்போது 228,000ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடங்கள் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன் 2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது. சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது. குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார். https://www.virakesari.lk/article/203510
  8. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் 10 JAN, 2025 | 04:06 PM (எம்.நியூட்டன்) உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இன்று (10) காலை நடைபெற்றது. இதன்போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிவகு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சோலமன் சிறில் இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ விகே சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கஜதீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் இறுதியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூ மரக்கன்றுகள் அப்பகுதியில் நட்டு வைக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/203490
  9. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்று (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், மன்னார் பொலிஸார் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கையளிக்கப்பட்டது. 76 இலக்கம் தொடக்கம் 156 வரையிலான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக பகுப்பாய்விற்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் கையளிக்கப்பட்டது. மிகுதி 75 எலும்புக்கூட்டு பெட்டிகள் நாளை (10) கையளிக்கப்பட உள்ளது. இவை பகுப்பாய்வு செய்து மேலதிக அறிக்கைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். கையளிக்கப்பட்டுள்ள 'சதோச' மனித புதைகுழி எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் இறப்புக்கான காரணம், வயது, பால் நிலை போன்ற விடயங்களையும் இறப்பு ஏற்பட்டமைக்கான காரணங்களும் மன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சில தினங்களில் மன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம்பெற்றது.இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித மச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், வயது, பால் நிலை போன்ற காரணங்கள் குறித்த 27 மனித உடலங்களுக்கான அறிக்கைகள் மன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி மனித எச்சங்களுக்கான அறிக்கை 6 மாத காலத்தில் மன்றில் கையளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=198551
  10. இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198559
  11. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பங்குச் சந்தையில் நிதியத்தால் செய்யப்பட்ட முதலீடுகளின் மொத்த கொள்முதல் செலவு 88.67 ரூபாவாகும், மேலும் பங்குச் சந்தையில் முதலீடுகளிலிருந்து ஊழியர் சேமலாப நிதியம் ஈட்டிய மொத்த இலாபம் 21.01 பில்லியன் ரூபாவாகும். 2024 ஜூன் 30 ஆம் திகதிக்கு, கொழும்பு பங்குச் சந்தையில் ஊழியர் சேமலாப நிதியம் செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 110.03 பில்லியன் ரூபாவாகும். தற்போது, ஊழியர் சேமலாப நிதியம் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 66 ஆகும். 2024 ஜூன் 30ஆம் திகதிக்கு அந்த எண்ணிக்கை 67 ஆக இருந்த நிலையில், கடந்த காலாண்டில் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸில் உள்ள அதன் முதலீடுகளை முழுமையாக வெளியேற்ற நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=198584
  12. 09 JAN, 2025 | 08:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. இதனால் நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நலன்புரி திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். மீன் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீன் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26209 பேருக்கு இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு - வாகரை, வவுனியா - வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள். அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் மிக கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. லன்டனில் உள்ள ஒருவர் தன்னை தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை. 1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல் 1983ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2000 எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/203434
  13. ஞானசார தேரர் வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314542
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மருத்துவர் தேஷம் பி.ஆர். பதவி, பிபிசிக்காக ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார். கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார். ஆனால், இவ்வளவு சீதாப்பழங்களை சாப்பிட்டதற்கு மருத்துவர் தன்னைக் கடிந்துகொள்வார் என்று அவர் அஞ்சினார். எனவே, அவர் 2-3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க முடிவு செய்தார். மருத்துவரிடம் செல்வதற்கு முந்தைய மதியம் மற்றும் இரவு வேளையில் ஒரு சிறுதானிய ரொட்டியும் ஒரு முட்டையும் மட்டுமே அவர் சாப்பிட்டார். அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, வழக்கமாக அவரை பரிசோதனை செய்யும் மருத்துவருக்குப் பதிலாக புதிதாக ஒரு மருத்துவர் இருப்பதை அவர் கண்டார். அவரது மருத்துவர் பத்து நாள் விடுப்பில் சென்றிருப்பதால், வேறு ஒரு புதிய மருத்துவர் அங்கு இருந்தார். இதனால் ரங்கா ராவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. ரங்கா ராவுக்கு வழக்கமான ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் (உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் பரிசோதனை) மற்றும் உணவு உண்ட பிறகு எடுக்கும் பரிசோதனைக்குப் பதிலாக, புதிய ஒரு பரிசோதனை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. ரங்கா ராவுக்கு இந்த பரிசோதனை செய்துகொள்வதில் விருப்பமில்லை. இருப்பினும், மருத்துவர் பரிந்துரைத்ததால் அவர் அதைச் செய்தார். ரங்கா ராவின் பரிசோதனை முடிவுகள் வந்தன. உணவுக்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு 150 mg/dl என இருந்தது. ஆனால், சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்டில் குளுக்கோஸ் அளவு 270 mg/dl என இருந்தது. மருத்துவர் செய்த புதிய பரிசோதனையில் குளுக்கோஸ் அளவு 9 சதவிகிதம் என்று இருந்தது. ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி? தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்? சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம் இதற்கு முன்பு இருந்த மருத்துவர், பரிசோதனை முடிந்த பிறகு சாதாரணமாகப் பேசி ஆலோசனை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால், இந்த புதிய மருத்துவர் சற்று கண்டிப்பானவராக இருந்தார். "உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் இவ்வளவு அதிகரித்தது?" என்று புதிய மருத்துவர் கேட்டார். ரங்கா ராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாகவில்லை தானே டாக்டர்?" என்று ரங்காராவ் தயக்கத்துடன் பதிலளித்தார். அதற்கு அந்த புதிய மருத்துவர், "நான் டாக்டரா அல்லது நீங்கள் டாக்டரா?" என்று கேட்டார். ரங்காராவ் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். புதிய மருத்துவர் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து அதில் சில எண்களை எழுதத் தொடங்கினார். "வழக்கமான சர்க்கரைப் பரிசோதனையில், சோதனை செய்வதற்கு முந்தைய நாள் நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும். ஆனால் இந்த புதிய சோதனையில், கடந்த 3 மாதங்களாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவு கணக்கிடப்படும். இது ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது," என்றார் புதிய மருத்துவர். "இந்த பரிசோதனையில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது", என்று அவர் ரங்கா ராவிடம் கூறினார். "உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது குறிக்கிறது. ஒருவர் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் இது நடக்கிறது", என்று அவர் ரங்கா ராவிடம் விளக்கினார். HbA1C பரிசோதனை என்றால் என்ன? HbA1C பரிசோதனை, A1C பரிசோதனை அல்லது 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' பரிசோதனை அல்லது ஹீமோகுளோபின் ஏ1சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள புரதத்துடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸின் அளவைக் கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது. கடந்த 3 மாதங்களில் (8 முதல் 12 வாரங்கள்) ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இந்த HbA1C அளவிடுகிறது. இந்த பரிசோதனையின் முடிவுகள் பரிசோதனைக்கு ஒரு நாள் முன்பு சாப்பிட்ட உணவை அடிப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக, மூன்று மாதங்களாக நாம் உண்ட உணவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவு நோய்க்கு முந்தையை நிலையை கண்டறியவும் (pre diabetic) தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த பரிசோதனைக்காக உணவு உண்ணாமல் இருப்பது போன்றவை தேவையில்லை. நீங்கள் என்ன உணவை எப்போது உட்கொண்டீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள முடியும். இறந்துவிட்டதாக ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டவருக்கு மீண்டும் 'உயிர்' கொடுத்த வேகத்தடை6 ஜனவரி 2025 விண்வெளியில் ரோபோ மூலம் தட்டைப்பயறு விதையை இஸ்ரோ முளைக்கச் செய்தது எப்படி?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது HbA1C முடிவுகளை வைத்து பிரச்னைகளை அறிந்துகொள்வது எப்படி? நீரிழிவு நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு HBA1C அளவு பொதுவாக 4% முதல் 5.6% வரை இருக்கும். HbA1c அளவு 5.7% முதல் 6.4% வரை இருந்தால், அந்த நபர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார். அதாவது, அந்த நபருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த அளவு 6.5% மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த அளவு 9% க்கு மேல் இருந்தால், அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். இதனால் உடலில் உள்ள சில உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் ஏற்படலாம். இந்த பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்? 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வயது வித்தியாசமின்றி ஆண்டுதோறும் HbA1C பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 30-45 வயதுக்குட்பட்டவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கை சாப்பிடும் புழுக்கள் – நெகிழி மாசுபாட்டை தடுக்க உதவுமா?5 ஜனவரி 2025 சீனாவில் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் வேகமாக பரவும் புதிய வைரஸ் - இந்தியா என்ன செய்கிறது?6 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன? ப்ரீ-டயாபடீஸ் என்றால், உடலால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டால் சில வருடங்களில் உறுப்புகள் சரியாகச் செயல்படாமல் போகலாம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் போகலாம். உங்கள் அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு நோயிலிருந்து விலகி இருக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனை மீண்டும் பெறலாம். HbA1c பரிசோதனையில் உங்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது? HbA1c பரிசோதனை என்பது மற்ற ரத்தப் பரிசோதனைகளைப் போலவேதான் இருக்கும். அங்கீகாரம் பெற்ற எந்த ஆய்வகத்திலும் இதை செய்துகொள்ளலாம். 5 நிமிடங்களுக்குள் உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அன்றே வழங்கப்படும். இந்த பரிசோதனையின் மூலம் கடந்த 3 மாதங்களில் உடலில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவை அறிந்துகொள்ள முடியும். எனவே, சோதனைக்கு முன் நீங்கள் என்ன உண்ணும் உணவோ அல்லது நீராகாரங்கள் அருந்தினாலோ இந்த பரிசோதனையின் முடிவுகளை மாற்றாது. இருப்பினும், HbA1C பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களால் மருந்து பரிந்துரைக்க முடியாது. உணவுக்கு முன்பும் அதன் பிறகும் எடுக்கும் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். HbA1C அளவுகளை எவ்வாறு குறைக்கலாம்? HbA1C என்பது மூன்று மாத காலத்திற்கான சராசரியான ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாக இருப்பதால், உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவோ அல்லது மருந்துகளை உட்கொள்வதன் மூலமோ இரண்டு அல்லது மூன்று நாட்களில் சர்க்கரை அளவை குறைக்க முடியாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்வது போன்றவற்றினால் மட்டுமே HbA1C அளவைக் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், தினமும் தவறாமல் மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே, HbA1C-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அமல்படுத்தப்படாத ஆட்டோ மீட்டர் கட்டணம் - காரணம் என்ன?5 ஜனவரி 2025 மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த HbA1C பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் HbA1C என்றால் என்ன? நாம் உண்ணும் உணவைப் பொறுத்து, செரிமான மண்டலத்திலிருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் நகரும். ரத்தத்தில் பல்வேறு புரதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹீமோகுளோபின் ஆகும், இது ரத்த சிவப்பணுக்களில் காணப்படுகின்றது மற்றும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இந்த ஹீமோகுளோபின் புரதம் உடல் முழுவதும் சுற்றும் குளுக்கோஸ் மூலக்கூறுடன் இணைக்கப்படும். இந்த செயல்முறை கிளைகேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் புரதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸ் 'கிளைகேட்டட் ஹீமோகுளோபின்' என்று அழைக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் என்பதால், கடந்த மூன்று மாதங்களில் அவற்றில் எவ்வளவு குளுக்கோஸ் (சர்க்கரை) சேர்ந்துள்ளது என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். ரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தால், அது அதிகமான ஹீமோகுளோபினுடன் இணைக்கப்படும் என்பதையே இந்த பரிசோதனை காட்டுகிறது. இந்த பரிசோதனை அனைவருக்கும் அவசியமா? குளுக்கோஸ் ஹீமோகுளோபின் புரதத்துடன் மட்டும் சேர்வதில்லை. கூடுதலாக அல்புமின், ஃபெரிடின் மற்றும் ஃபைப்ரினோஜென் போன்ற புரதங்களுடனும் சேர்க்கிறது. ஆனால், அனைவருக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடுமையான ரத்த சோகை (ரத்தத்தில் மிகக் குறைவான அளவில் ஹீமோகுளோபின் இருப்பது), சிறுநீரகப் பிரச்னைகள் இருப்பவர்கள், உடலில் போதுமான ரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாதவர்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த HbA1c பரிசோதனையால் அதிகம் பயனடைய மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு மட்டுமே ஹீமோகுளோபினைத் தவிர மற்ற புரதங்களுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸை தீர்மானிக்கும் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. (குறிப்பு: கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ரீதியாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn9gr52pvj1o
  15. பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள்; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ Published By: RAJEEBAN 09 JAN, 2025 | 12:04 PM லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதேவேளை காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால் தீயணைப்பு படையினர் நிம்மதியடைந்துள்ள போதிலும் ஆபத்து இன்னமும் முடிவிற்கு வரவில்லை. ஹொலிவூட் ஹில்ஸ் பகுதியில் புதிதாக காட்டுதீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் லொஸ் ஏஞ்சல்ஸின் சன்டா மொனிகாவில் வசிக்கும் மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆயிரம் கட்டிடங்கள் அனேகமாக வீடுகள் முற்றாகதீக்கிரையாகியுள்ளன. நகரப்பகுதியிலிருந்து 13000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பசுபிக் கரை முதல் பசெடானா வரையில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நாங்கள் இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து விடுபடவில்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்துள்ளார். பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டு தீ ஆபத்து செல்வாய்கிழமையே உருவானது. ஒரு சக்திவாய்ந்த காற்று புயல் இயற்கை எழில் கொஞ்சும் பசுபிக்கின் பாலிசோட்ஸ் சுற்றுப்புறத்தில் தீப்பிழப்புகளை மூண்டெழச்செய்த போது ஆயிரக்கணக்காணவர்கள் அங்கிருந்து தப்பி விரைவாக வெளியேறவேண்டிய நிலை உருவானது. கடும் காற்றுகாரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் திணறியதால் இரவில் அவசரநிலைமை தீவிரமடைந்தது. அந்த இரவை நகரின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான திகிலூட்டும் இரவு என அதிகாரியொருவர் வர்ணித்துள்ளார். அந்த பகுதியை சுற்றிவளைத்திருந்த நான்கு காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக மறுநாள் காலை கலிபோர்னியாவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். காட்டுதீ காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்களிற்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. நான்கு பகுதிகளில் இவ்வளவு ஆக்ரோசமாக பரவிவரும் காட்டுதீயை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடம் போதிய தீயணைப்பு வீரர்கள் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸின் தீயணைப்பு பிரிவின் தலைவர் கிறிஸ்டின் எம் குரோலி தெரிவித்தார். நாங்கள் இரண்டு மூன்று காட்டுதீ பரவலிற்குதான் தயாராகயிருந்தோம் நான்கு ஐந்தை எதிர்பார்க்கவில்லை,அன்று மாலை அது ஆறாக மாறிவிட்டது என அவர் குறிப்பிட்டார். பாலிசேட்ஸ் காட்டுதீயே லொஸ்ஏஞ்சல்ஸின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒன்று என அதிகாரிகள் கருதுகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 50 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். தீயினால் அந்த பகுதியின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. அதிகரித்த தேவை காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில இடங்களில் நீரை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களை நீரை சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸின் சில பகுதிகளில் காட்டுதீ மிகவேகமாக பரவியதால் அப்பகுதி மக்கள் தாங்கள் கார்களை விட்டுவிட்டு இறங்கி ஓடவேண்டிய நிலைக்கும் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். ஹெலிக்கொப்டரிலிருந்து காட்டுதீயை அணைப்பதற்காக நீர் வீசப்பட்டவேளையே எனக்கு எங்கள் பகுதியில் காட்டுதீ மூண்டுள்ளமை தெரியும் என அந்த பகுதியை சேர்ந்த ஷெரீஸ் வலஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார். எனது சகோதரி என்னை அழைத்து அதனை தெரிவித்தார் என்கின்றார் அவர். நான் மழை பெய்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் அவர் எனது சகோதரி இல்லை உங்கள் பகுதியில் காட்டு தீ மூண்டுள்ளது அதனை அணைக்க முயல்கின்றனர் நீங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என தெரிவித்தார் என வலஸ் தெரிவித்துள்ளார். நான் வீட்டு கதவை திறந்ததும் காட்டுதீக்கு எதிரே நின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/203378
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றங்களைக் கொண்டு வரும் மனநிலையில் கிரிக்கெட் நிர்வாகிகள் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை (two-tier system) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி மெல்போர்ன் ஏஜ் பத்திரிகையில் இதுகுறித்து ஒரு செய்தி வெளியானது. அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா கூடிய விரைவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் மைக் பேர்ட், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டம் குறித்து, இம்மாத இறுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி விவரித்தது. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டி 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? புதிய இரண்டு அடுக்கு முறை 2027 முதல் நடைமுறைக்கு வருகிறதா? 'இரண்டு அடுக்கு' முறை செயல்படுத்தப்பட்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் வரிசையில் (Tier-1) இருக்கக்கூடும். மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இரண்டாம் வரிசையில் (Tier-2) இடம்பெறக்கூடும். தற்போது நடைமுறையில் இருக்கும் கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டம் 2027இல் முடிவடைய உள்ளதால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகலாம். கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த அணிகள் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இதை மாற்றவே, 'இரண்டு அடுக்கு' என்ற புதிய முறையைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இந்தப் புதிய முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 'டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால், சிறந்த அணிகள்தான் ஒன்றோடொன்று விளையாட வேண்டும்' என்று கூறியுள்ளார். கன்னியாகுமரியில் கடல் மீது அமைந்த இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் - வடிவமைத்தவர் கூறும் தகவல்கள்2 ஜனவரி 2025 யுக்ரேன் வழியே ஐரோப்பாவுக்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தம் - யாருக்கு பாதிப்பு?1 ஜனவரி 2025 ரசிகர்களை ஈர்த்த பார்டர்-கவாஸ்கர் தொடர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்தத் தொடரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டனர். செய்திகளின்படி ஆஸ்திரேலியாவில் இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் இந்தத் தொடர் நான்காவது இடத்தில் உள்ளது. இது தவிர, இன்று வரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராகவும் இது அமைந்தது. எனவே, சிறந்த டெஸ்ட் அணிகள் மோதும் போட்டிகளை மட்டுமே மக்கள் அதிகம் ரசிப்பதாக ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. HbA1C: நீரிழிவு நோயாளிகள் மட்டும்தான் இந்த பரிசோதனையை செய்ய வேண்டுமா? முடிவுகள் உணர்த்துவது என்ன?9 ஜனவரி 2025 10 நாள் விடுமுறை, 10 படங்கள்: பொங்கலை முன்னிட்டு வெளியாகும் படங்களும் அவற்றின் கதையும்8 ஜனவரி 2025 முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், முடிந்த வரை முன்னணியில் இருக்கும் அணிகளை மோதவிடுவதே ஒரே வழி என்று தான் நம்புவதாக ரவி சாஸ்திரி கூறுகிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது போட்டிகளைப் பிரபலமாக்குவதோடு, வணிக ரீதியாகவும் பலனளிக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஐபிஎல், பிபிஎல், தி ஹன்ட்ரட் போன்ற லீக்குகளின் மீது பார்வையாளர்கள் மிகுந்த அன்பைப் பொழிகிறார்கள், இது இந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு லாபம் தருகிறது. ``டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், முடிந்த வரை முன்னணியில் இருக்கும் அணிகளை மோதவிடுவதே ஒரே வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதிக்கிறார். டெலிகிராஃப் தளத்தில் அவர் எழுதிய கட்டுரையில், "டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கு நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் தேவையான ஓவர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு தொடரில் குறைந்தது மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்க வேண்டும். டெஸ்ட் அணிகளின் இரண்டு குழுக்கள் இருக்க வேண்டும்." "டெஸ்ட் கிரிக்கெட்டில், 2027ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு முறையை ஐசிசி பரிசீலித்து வருவதைப் படித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் பொருள் இனி நாம் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஆஷஸ் தொடரைப் பார்க்கலாம்" என்று அவர் எழுதியுள்ளார். துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரம்: புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு ஏன்?9 ஜனவரி 2025 திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம் - வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை வாங்கச் சென்றபோது நிகழ்ந்த அசம்பாவிதம்9 ஜனவரி 2025 லாபம் ஈட்டும் என்ணம் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்மொழியப்பட்ட இரண்டு-அடுக்கு டெஸ்ட் முறை குறித்து கிளைவ் லாயிட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். `எனக்கு பொருளாதாரம் தெரியும்' என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்துள்ளார். "இது மூன்று வாரியங்களுக்குப் பயனளிக்கும். ஆனால் விளையாட்டு என்பது பவுண்டுகள், டாலர்கள் மற்றும் ரூபாய்களைப் பற்றியது அல்ல. இந்த விளையாட்டில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக அதன் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும்" என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் `பிபிசி ரேடியோ 5' உடன் பேசுகையில் இதுபற்றிக் கருத்து தெரிவித்தார். அப்போது, "இந்தப் புதிய முறை சரியானதல்ல. இது கிரிக்கெட்டின் சிறந்த நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதில் நம்பிக்கை இல்லை. இது பேராசை என்று நான் நினைக்கிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்ற விளையாட்டை அழிக்கப் போகிறது" என்றார். கடந்த 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணிக்கு தலைமை தாங்கிய கிளைவ் லாயிட், இந்தத் புதிய டெஸ்ட் தொடர் முறையுடன் உடன்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த முடிவை இப்போதே நிறுத்த வேண்டும். டெஸ்ட் நாடுகள் அந்தஸ்தை பெற கடுமையாக உழைத்த நாடுகளுக்கு இது மிகவும் மோசமான முடிவு. இப்போது அவர்கள் பலவீனமான அணிகளுடன் தங்களுக்குள் விளையாடுவார்கள்" என்பது அவரின் கருத்து. "அது எப்படி பலவீனமான அணிகள் முன்னேற உதவப் போகிறது? உங்களைவிடச் சிறந்த அணிகளுடன் நீங்கள் விளையாடும்போது, உங்கள் ஆட்டம் மேம்படும். நீங்கள் உண்மையில் எவ்வளவு சிறப்பாக விளையாடுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நான் இதை நினைத்து வருத்தப்படுகிறேன்" என்று லாயிட் கூறினார். அதோடு, "அனைத்து அணிகளுக்கும் சமமான பணம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும். இதனால் அவர்கள் தொடர்ந்து தங்கள் விளையாட்டை மேம்படுத்துவதில் பணியாற்ற முடியும்" என்றும் அவர் கூறினார். மேற்கிந்திய தீவுகள் ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 முதல் 1995 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்ல முடியாத அணியாக இருந்தனர். ஆனால் அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி திணறி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் ஐயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றன. அதன் பின்னர், பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக சில போட்டிகள் நடந்தன, ஆனால் அதன் முடிவுகள் பெரியளவில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre7e1evz95o
  17. US-ஐ சோதிக்கும் இயற்கை: பற்றி எரியும் California; பனியில் உறைந்த Texas - என்ன நடக்குது? அமெரிக்காவின் ஒருபகுதியில் கடும் பனி மக்களை வாட்டி வதைக்க, மற்றொரு பகுதியில் காட்டுத் தீ கடும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குறைந்தது 30 ஆயிரம் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் செங்கொடி எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். அதாவது தீ விபத்துக்கான அதிகப்படியான ஆபத்தில் அவர்கள் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலசேட்ஸில் 10 ஏக்கரில் இருந்த காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 2,900 ஏக்கருக்கும் பரவியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் வேறு வழியின்றி வெளியேறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். Strong winds fuelled a massive fire in southern California, flattening homes, overtaking roads and and forcing at least 30,000 to evacuate. The fire in Pacific Palisades exploded from 10 acres to more than 2,900 acres in mere hours. Los Angeles declares a state of emergency. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  18. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், திரிபுவன் பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார். இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்து பெரியளவில் நீர் வெளியேறியது, ஆனால் அது மூன்றாவது நாளில் நின்றுவிட்டது. வயல்களைச் சுற்றிலும் ஏழடி தண்ணீர் நிரம்பி அதில் இருந்த சீரகப் பயிர்கள் நாசமாயின. தமிழ்நாட்டின் நிலத்தடி நீரில் அதிகரிக்கும் நைட்ரேட் - அந்த நீரை குடித்தால் என்ன பிரச்னை வரும்? நிலத்தடி வெப்பநிலை மாற்றம்: சென்னை போன்ற நகரங்களில் கட்டடங்களுக்கு என்ன ஆபத்து? ஜமாஜாமா: 'நிலத்தடியில் 3 மாதம், ஒரு தளத்தில் எலும்புகள்' - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல் படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரந்த தார் பாலைவனத்தில், பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வெளிவரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. "நிலத்தைத் தோண்டியபோது, பூமியில் இருந்து ஒரு நீரோடையைப் போன்று தண்ணீர் வெளியேறியது. 22 டன் இயந்திரமும் தண்ணீரில் மூழ்கியது" என்கிறார் விக்ரம் சிங் பதி. "போர்வெல் இயந்திரத்துடன் லாரியும் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரின் ஓட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், நிலத்தின் மேல் அடுக்கு பத்து அடி ஆழத்திற்கு மூழ்கியது" என்று விளக்கினார். வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?4 ஜனவரி 2025 பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வந்தது எப்படி? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் தனது பயிர்கள் அழிந்துவிட்டதாக விக்ரம் சிங் பதி கூறுகிறார் மூத்த நிலத்தடி நீர் விஞ்ஞானியும், ராஜஸ்தான் நிலத்தடி நீர் வாரியத்தின் பொறுப்பாளருமான முனைவர் .நாராயணதாஸ் இன்கையா தலைமையில், நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. வழக்கமாக 300 முதல் 600 அடி ஆழத்தில் தண்ணீர் வெளியேறும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆனால், "850 அடி வரை தோண்டியதால் பாறைகள் உடைந்து நீர் ஊற்று வெடித்தது. இவை களிமண் பாறைகள் என்பதால் அதன் அடுக்கு மிகவும் வலுவானது. அந்த அடுக்கு உடைந்தபோதுதான் தண்ணீர் இவ்வளவு ஆற்றலுடன் அதிவேகமாக வெளியேறியுள்ளது" என்று இன்கையா விளக்கினார். இப்படி நடப்பது முதல் முறையா? "பூமிக்குள் 850 அடி ஆழத்தில் பலமான களிமண் அடுக்குகள் உள்ளன. அவற்றுக்கிடையே நிறைய தண்ணீர் தேங்கியிருக்கும். பாறைகள் உடைந்தால் தண்ணீர் முழு வீச்சில் வெளியேறத் தொடங்கும்" என்று இன்கையா விளக்குகிறார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானின் நாச்சனாவிலுள்ள ஜலுவாலா என்னும் பகுதியில் இதேபோல் தண்ணீர் வெளியேறியது. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ஜெய்சல்மரின் இந்தப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (CAZRI) முனைவர் வினோத் சங்கர், சுரேஷ் குமார் என்ற இரு மூத்த விஞ்ஞானிகள் 1982இல் அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். அதில் மோகன்கர் பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் இருப்பதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டன. முனைவர். சுரேஷ் குமார் இப்போது கஜரியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், அவர் இதுபற்றி விவரித்தார். இந்தப் பகுதியில், "176 முதல் 250 மி.மீ மழை மட்டுமே பெய்யும், சில குறிப்பிட்ட இடங்களில் முட்கள் நிறைந்த லானா புதர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன, சில இடங்களில் அதுகூட இல்லை" என்று விளக்கினார் அவர். மேலும், "இங்கு நாங்கள் பார்த்த விஷயங்கள் எங்களை ஆச்சர்யப்படுத்தின. நாங்கள் நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை தோண்டியபோது, இந்தப் புதர்களின் வேர்கள் மிகவும் ஆழமாகச் செல்வதைக் கண்டோம், அதேநேரம் மழைநீர் மூன்று முதல் நான்கு அடி வரை மட்டுமே செல்லும். சில நிலத்தடி நீர் ஆதாரங்கள் இருந்ததால் மட்டுமே, இந்தப் புதர்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது என்பதை இது குறிக்கிறது" என்றார். ஒரே ஆண்டில் 268 பேர் தானம்: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பு தானம் அதிகரிப்பது ஏன்?7 ஜனவரி 2025 ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஒரு விரிவான அலசல்7 ஜனவரி 2025 சரஸ்வதி நதியின் சுவடுகளா? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,கடந்த 2006ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அதிகபட்சமாக 12 மணிநேரத்திற்கு 550 மி.மீ. மழை மட்டுமே பதிவானது தார் பகுதியில் காணப்படும் ஒரு பொதுவான தாவரம் `லானா' (Lana) என்றழைக்கப்படுகிறது. இது பாலைவனப் பகுதிகளில், ஆடு மற்றும் ஒட்டகங்களின் உயிர் காக்கும் தாவரம். இது வறண்ட மற்றும் தரிசுப் பகுதிகளில் வளரும் ஒரு புதர்த் தாவரம். ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மற்றும் மத்திய ஆசியாவின் பாலைவனப் பகுதிகளில் இந்த லானா வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் ஹலோக்சின் சாலிகோர்னியம் (Haloxylon salicornicum). இது அமரன்தேசி (Amaranthaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தச் செடி மணல் மற்றும் தரிசு மண்ணில் வளரும், அப்பகுதிகளில் பொதுவாக ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும். மேலும் இந்தச் செடி உப்புத்தன்மை மற்றும் உரம் குறைந்த மண்ணிலும் நன்றாக வளரும். 16 அடி ஆழம் வரை செல்லும் இதன் வேர்கள் மிகவும் ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கும். லானா தாவரம் வறண்ட பகுதிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் முக்கியப் பகுதியாக உள்ளது மற்றும் தரிசு நிலங்களைத் தக்கவைக்க உதவுகிறது. முனைவர் சுரேஷ் குமார் இதை புராணங்களில் கூறப்பட்ட ஒரு நதியுடன் தொடர்புப்படுத்துகிறார். "தொன்ம நூல்களைப் படித்து, ரிமோட் சென்சிங் தரவுகளுடன் பொருத்திப் பார்த்த பிறகு, அழிந்துபோன சரஸ்வதி நதியின் பகுதி இது என்பதை உணர்ந்தோம்" என்றார். சுற்றியுள்ள தாவரங்களை ஒப்பிடும்போது, லானா செடி மற்ற இடங்களில் காணப்படவில்லை. பின்னர், ராணுவம் இந்தப் பகுதிகளில் ஆழமாகத் தோண்டியபோது, நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சரஸ்வதி நதியின் விளக்கம் முக்கியமாக ரிக்வேதத்தில் காணப்படுகிறது, அதில் சரஸ்வதி "நதிகளின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர, மகாபாரதம், புராணங்கள் (மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம்) மற்றும் பல நூல்களிலும் இதன் குறிப்புகள் உள்ளன. தொல்பொருள் மற்றும் நிலவியல் ஆய்வுகளின்படி, சரஸ்வதி நதி ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகள் வழியாகப் பாய்ந்ததாகவும் தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் வெளியீடு திரைப்படங்கள் சொல்லும் கதை என்ன? இறுதிப் பட்டியலில் எத்தனை படங்கள்?8 ஜனவரி 2025 ஓயோ: மீரட்டில் திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அறை கிடைக்காதா? - புதிய விதி கூறுவது என்ன?8 ஜனவரி 2025 இந்த நீரூற்று சரஸ்வதி நதியை சேர்ந்தது என்பது உண்மையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கஜ்ரி ஜோத்பூர் விஞ்ஞானிகள் மற்றும் நிலத்தடி நீர் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்தால், ஜெய்சல்மரில் உள்ள மோகன்கர் வயல்களில் வெளியான நீரோடை உண்மையில் அழிந்துபோன சரஸ்வதி நதியின் ஓடை என்று சொல்ல முடியாது. இருப்பினும், பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதிக்கான தேடல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, இப்போது அது மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து நிலத்தடி நீர் விஞ்ஞானி நாராயணதாஸ் இன்கையா விளக்கமளிக்கையில், "சரஸ்வதி நதியின் ஓடை அறுபது மீட்டர் கீழே மட்டுமே இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இப்போது வெடித்த நீரோடை 360 மீட்டருக்கும் மேலான ஆழத்தில் இருந்து வந்துள்ளது." இருப்பினும், மூத்த நிலவியலாளர்கள், சுரங்க வல்லுநர்கள் மற்றும் சரஸ்வதி நதி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நாங்கள் அறிய முயன்றபோது, ஜெய்சல்மரில் நடந்த சமீபத்திய சம்பவம் பற்றி எதுவும் கூற முடியாது என்று பெரும்பாலான நிபுணர்கள் தெரிவித்தனர். நீர், மண் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே இப்போது சில உறுதியான கூற்றுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சரஸ்வதி நதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழுவின் தலைவருமான முனைவர்.ஜே.ஆர்.சர்மா, "ஜெய்சல்மரில் இப்போது வந்த தண்ணீர் சரஸ்வதி நதியில் இருந்து வந்ததா இல்லையா என்பது அந்த நீரை கார்பன்டேட்டிங் மூலம் காலக் கண்டக்கிடல் செய்த பிறகுதான் தெரிய வரும்" என்றார். "கார்பன்டேட்டிங் இந்த நீரின் வயதை வெளிப்படுத்தும். இது சரஸ்வதி நதியின் நீர் என்றால், குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்" என்று விவரித்தார். "இந்தத் தண்ணீர் பழைமையானதாக இருந்தால், இந்த பாலைவனத்திற்கு முன்பு இங்கிருந்த கடல் நீராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நீரின் கார்பன்டேட்டிங் மும்பையிலுள்ள பாபா ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆய்வகத்தில் இருந்து செய்யப்படலாம்" என்றார் ஜே.ஆர்.சர்மா. ஹெச்.எம்.பி.வி: கொரோனா போன்றதா? பயப்பட வேண்டுமா? 7 முக்கிய கேள்விகளும் பதில்களும்8 ஜனவரி 2025 'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்லைகக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?8 ஜனவரி 2025 சரஸ்வதி நதியைக் கண்டறியும் முயற்சி பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,இந்தப் பகுதியில் நிலத்தடியில் சரஸ்வதி நதி புதைந்திருக்கலாம் எனப் பல அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஜூன் 15, 2002 முதல், சரஸ்வதி நதியின் வழித்தடத்தைக் கண்டறிய அகழாய்வு நடத்த அப்போதைய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜக்மோகன் அறிவித்திருந்தார். இந்தப் பணிக்காக அவர் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO), ஆமதாபாத்தின் பல்தேவ் சஹாய், தொல்பொருள் ஆய்வாளர் எஸ் கல்யாண் ராமன், பனிப்பாறை நிபுணர் ஒய்.கே. பூரி, நீர் ஆலோசகர் மாதவ் சித்தலே ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தனர். ஹரியாணா மாநிலம் அதிபத்ரியில் இருந்து பகவான்புரா வரை முதல் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும், அதன் பிறகு ராஜஸ்தான் எல்லையில் உள்ள பகவான்புரா முதல் கலிபங்கா வரை இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, எல்லையோர மாநிலங்களிலும் இந்தக் குழுவினர் சென்று தகவல்களைச் சேகரித்தனர். இந்த முதல்கட்ட தகவலின் அடிப்படையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சரஸ்வதி நதி குறித்த அறிக்கையை நவம்பர் 28, 2015 அன்று வெளியிட்டது. மூத்த விஞ்ஞானிகளான முனைவர் ஜே.ஆர் சர்மா, முனைவர். பிசி பத்ரா, முனைவர். ஏகே குப்தா, முனைவர். ஜி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் அறிக்கை 'சரஸ்வதி நதி: ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த ஆய்வு' என்ற தலைப்பில் வெளியானது. இஸ்ரோவின் விண்வெளித் துறையின் ஜோத்பூரைச் சேர்ந்த பிராந்திய தொலை உணர் மையத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பல பெரிய ஆறுகள் ஓடியதாக இந்த அறிக்கை கூறுகிறது. தற்போதைய சிந்து நதி அமைப்பைப் போலவே, வேத இலக்கியங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிக்கு இணையான நதி அமைப்பு இருந்தது, இது கிமு ஆறாயிரம் (அதாவது சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) ஒரு பெரிய நதியாக ஓடியது. சரஸ்வதி நதி அமைப்பு இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாகச் சென்று இறுதியாக குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்சில் கலந்தது. இமயமலைப் பகுதியில் தட்பவெப்ப நிலை மற்றும் கண்டத்தட்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, கி.மு.3000 வாக்கிலேயே, இந்த நதி வறண்டு முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78689z2n66o
  19. பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்! Published By: VISHNU 09 JAN, 2025 | 09:56 PM பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (9) காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 16,000 பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள் 5, கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். 4 முறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார். https://www.virakesari.lk/article/203442
  20. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். அவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுடன் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திருமணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/314475
  21. இந்தியாவின் முதல் முயற்சி: Chennai-ல் Matsya 6000 Submarine எப்படி தயாராகிறது? |Samudrayaan சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம். இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம். For the past three years, a team of scientists from the National Institute of Ocean Technology has been designing a submarine called Matsaya 6000 under the Samudrayan project. The BBC Tamil team visited the submarine, which is being developed on the premises of the National Institute of Ocean Technology, Pallikaranai, Chennai, based on the concept and design of scientists. Scientists will soon be testing the submarine in the Chennai sea area. We met the Matsaya 6000 team at the National Institute of Ocean Technology to learn more about this project, which will send humans to the deep sea for the first time in India by 2026. Producer: Subagunam Shoot and Edit: Wilfred Thomas
  22. டக்கென்று ஞாபகத்தில் வந்தது உங்கள் இருவரையும் தான், அத்துடன் இருவரின் வட்சப் இருந்தபடியால் படுத்திருந்து கொண்டே செய்திகளை அனுப்பினேன். யாழிணையம் முகந்தெரியாத பல புதிய உறவுகளை வழங்கி இருக்கிறது. யாழுக்கும் அதை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.