Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 06 DEC, 2024 | 06:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுர குமரதிசாநாயக்க அரசின் 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் இதன் மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விவாத முடிவில் எதிர்க்கட்சிகள் கணக்கு வாக்குப்பதிவு மீது வாக்கெடுப்பை கோராத காரணத்தால் அது ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அஷோக்க ரன்வல சபைக்கு அறிவித்தார். அதன் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபாவுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றது. https://www.virakesari.lk/article/200616
  2. 06 DEC, 2024 | 08:03 PM இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய படையினர் அனுப்பினர் அவர்கள் நோயாளிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர், இரண்டுமணிநேர நடவடிக்கையின் போது பல மருத்துவபணியாளர்கள் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் உட்பட் இளைஞர்களை கைதுசெய்தனர், என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையை இராணுவவாகனங்கள் சுற்றிவளைத்ததும், வானிலிருந்து தாக்குதல் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அபுசாபியா பின்னர் இஸ்ரேலிய படையினர் பலரை கைதுசெய்து கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மருத்துவமனையின் வடக்குமேற்கு திசைகளில் இருந்து தொடர்ச்சியாக விமானதாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னர் நேரடி தாக்குதல் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினர் என்னிடம் அனைத்து நோயாளிகளையும் வெளியேறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர் அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடச்செய்து கைதுசெய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில மணிநேரத்தின் பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பணியாளர்கள் வீதிகளில் பல உடல்களையும் காயம்பட்ட பலரையும் பார்த்துள்ளனர். அபுசய்பியா சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள படத்தில் மருத்துவமனையின் பின்புறத்தில் 17 உடல்கள் காணப்படுவதை காணமுடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/200620
  3. வாங்கிற்றாங்க பையா. இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.
  4. டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100 விக்கெட்கள் 06 DEC, 2024 | 03:35 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஒன்பதாவது வீரராக லஹிரு குமார 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பொறித்துக்கொண்டார். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் அவரது 100ஆவது விக்கெட்டாகப் பதவானது. இந்தப் போட்டியில் லஹிரு குமார 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். தனது 33ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லஹிரு குமார இதுவரை மொத்தமாக 103 விக்கெட்களைக் பைற்றியுள்ளார். முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத், சமிந்த வாஸ், சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா, ப்ரபாத் ஜயசூரிய, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்ந்து இலங்கையர்களுக்கான 100 விக்கெட்கள் பட்டியலில் லஹிரு குமார இணைந்துகொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/200594
  5. இங்கிலாந்தை மீண்டும் மீட்டெடுத்த ப்றூக், போப் 06 DEC, 2024 | 02:53 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 280 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹெரி ப்றூக் தொடர்ச்சியாக குவித்த இரண்டாவது சதம், ஒலி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நல்ல நிலையில் இட்டன. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்த்தப்பட்டன. அந்த டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தனர். முதலாவது போட்டியில் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்ளைப் பகிர்ந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டியில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 217 ஓட்டங்களாக உயர்த்தினர். முதலாவது டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்களைக் குவித்த ஹெரி ப்றூக் இந்தப் போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்றர். அப் போட்டியில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப், இப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட வெறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார். ப்றைடன் கார்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/200587
  6. ஸ்டார்க் பந்துவீச்சில் கவிழ்ந்த இந்திய அணி - எச்சரிக்கையுடன் களமாடும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக அடியெல்டில் இன்றைய நாள் ஆஸ்திரேலியா அணிக்கானது. பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கிலும் இந்திய வீரர்களுக்கு சவாலாக களத்தில் நிற்கிறார்கள். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 2வது செஷனிலேயே 44.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியில் சேர்த்த ரன்களைவிட கூடுதலாக 30 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது என ஆறுதல் அடைந்தாலும், டிபெண்ட் செய்து பந்துவீசுவதற்கு இது போதுமானதாக இருக்காது. இதுபோன்ற குறைந்த ஸ்கோர் பந்துவீச்சாளர்களுக்கே சுமையைக் கூட்டும். மூன்றாவது செஷனில் இருந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்துள்ளது. விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற தீவிரமான எச்சரிக்கையுடன் ஆஸ்திரேலிய பேட்டர்கள் களமாடி வருகிறார்கள். இந்திய பந்துவீச்சை குறிப்பாக பும்ரா பந்துவீச்சைச் சமாளிக்க பிரத்யேக பயிற்சி(ஹோம் ஓர்க்) செய்துள்ளார்கள் என்பது பேட்டிங்கில் தெரிய வந்தது. மின்னொளியில் பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், மின்னொளியில் நடந்த 3வது செஷனில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக எந்த விக்கெட்டும் வீழ்த்த முடியாத அளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலான பேட்டிங்கை ஆஸ்திரேலிய பேட்டர்கள் வெளிப்படுத்தினர். ரசிக்கக்கூடிய ஆரோக்கியமான போட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷேன் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொண்டாடினர். ஆனாலும், பும்ராவின் பந்துவீச்சு மின்னொளியில், பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது. குறிப்பாக லாபுஷேனுக்கு பாடிலைனில் பும்ரா பந்து வீசுவதும், அவரைச் சீண்டுவதும், லாபுஷேன் பந்தை லீவ் செய்து ஆடுவதும், பந்தை கவனமாகக் கையாண்டு டிபெண்ட் செய்வதும் பார்ப்பதற்கு மிக அழகாக, ரசிக்கும்படியாக இருந்தது. இரு அணிகளின் வீரர்களும் ஒருவொருக்கொருவர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாமல், ஆரோக்கியமான, ஆவேசமான, துல்லியமான பந்துவீச்சில் புன்னகையை வெளிக்காட்டும் பும்ரா, அதற்கு லாபுஷேனின் வார்த்தைகள், ஸ்லிப்பில் நின்றிருக்கும் இந்திய வீரர்களின் உற்சாகக் குரல் என டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆரோக்கியமாக நடைபெற்றது. பும்ராவின் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீச்சை மின்னொளியில் சமாளிக்க முடியாமல் லாபுஷேன், மெக்ஸீவினி இருவரும் கடும் அழுத்தத்தில் திணறுவதும், போராடியதும் பார்க்க அழகாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களிடம் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய லாபுஷேன், மெக்ஸ்வீனி இருவரும் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். லாபுஷேன் 20 ரன்களிலும், மெக்ஸ்வீனி 38 ரன்களிலும் களத்தில் உள்ளனர். பிங்க் பந்தில் எப்போதும் அசுரர்கள் என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த டெஸ்டிலும் நிரூபித்துள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கம்மின்ஸ், போலந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெஸ்ட் போட்டி தொடங்கி முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலுக்கு கால்காப்பில் வாங்க வைத்து கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்றினார். கடந்த டெஸ்டில் சீண்டியதற்கு ஜெய்ஸ்வாலுக்கு ஸ்டார்க் பதிலடி கொடுத்தார். பிங்க் பந்தில் வீசிய அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் 72 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பும்ரா பந்துவீச்சில் கைநழுவிய கேட்சுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே பும்ரா பந்துவீச்சில் மெக்ஸ்வீனிக்கு அவுட்சைட் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழக்க வேண்டியிருந்தது. ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடிக்க வேண்டிய கேட்சை பிடிக்காமல் கோட்டைவிட, அதை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவும் பிடிக்காமல் தவறவிட்டு பந்து கையில் பட்டுச் சென்றது. சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர், அதில் 8 கேட்சுகளை ரிஷப் பந்த் மட்டுமே நழுவவிட்டுள்ளார் என்று கிரிக்இன்ஃபோ தரவுகள் கூறுகின்றன. வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது அதைக் கவனித்து ரிஷப் பந்த் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிற்பதால்தான் கேட்சை அவரால் தாவிச் சென்று பிடிக்க முடியவில்லை. பும்ராவின் 50வது விக்கெட் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்கச் செய்த பும்ராவின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(13) விக்கெட்டை பும்ரா வீழ்த்தியபோது, இந்த காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டில் பும்ரா 48 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் 46 விக்கெட்டுகளுடன் இந்த காலண்டர் ஆண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவாஜாவுக்கு தொடர்ந்து இரு பந்துகளை உள்நோக்கி இன்ஸ்விங் செய்து, திடீரென கடைசிப் பந்தை இன்ஸ்விங் போல வீசி அதை அவுட்-ஸ்விங்காக பும்ரா மாற்றியது எந்த பேட்டரும் எதிர்பார்த்திராதது. இந்தப் பந்தை சற்றும் எதிர்பாராத கவாஜா பேட்டை வைத்து பந்தை தடுத்தவுடனே முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் அது கேட்சானது. பயம் அறியா நிதிஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் கடந்த பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை நிதிஷ் பதிவு செய்தார், இந்த டெஸ்டிலும் அதிகபட்ச ஸ்கோரை அவர் எடுத்துள்ளார். இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமாரின் பேட்டிங்கும் அவரின் 42 ரன்களும் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. போலந்த் ஓவரில் 6,4,6 என நிதிஷ்குமார் அடிலெய்ட் மைதானத்தில் அடித்தது சிறப்பான ஆட்டமாக இருந்தது. அதிலும் போலந்த் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நிதிஷ் அடித்த சிக்ஸரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். நிதிஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் சேர்த்து அச்சமில்லாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டாஸ் வென்றது மட்டுமே சாதகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற நிகழ்வு மட்டுமே சாதகமாக அமைந்தது. முதல் ஓவர், முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு சுப்மான் கில், ராகுல் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆறுதல் அளித்தனர். அதன் பிறகு வந்த விராட் கோலி(7), ரோஹித் சர்மா(3), ரிஷப் பந்த்(21) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த டெஸ்டிலும் தொடர்ந்து வருகிறது. கோலி, ராகுல் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் விராட் கோலிக்கும், கே.எல்.ராகுலுக்கும் ஒரே மாதிரியான பந்தை வீசி ஸ்டார்க் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்டார்க்கின் அதிவேகப் பந்து அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்பில் செல்லும்போது அந்தப் பந்தை தொடலாமா அல்லது வேண்டாமா என்று யோசிக்கும் கனநேரத்தில் "எக்ஸ்ட்ரா பவுன்ஸில்" பந்து பேட்டில் பட்டு கேட்சானது. ராகுல், கோலி இருவரையும் யோசிக்க நேரம் அளிக்காமலே ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தினார். அதாவது பந்தை லீவ் செய்வதற்கு இருவரும் பேட்டை உயர்த்துவதற்கு முன்பே பந்து இருவரின் பேட்டிலும் பட்டு ஸ்லிப்பில் கேட்சானது. ராகுல், சுப்மான் கில் களத்தில் இருந்தவரை ஓரளவுக்கு ரன்கள் இந்திய ஸ்கோர்போர்டில் வந்தது. இருவரும் பெவிலியன் சென்ற பிறகு மூத்த வீரர்கள் ரோஹித், கோலி இருவரும் வந்த வேகத்தில் சென்றனர். தொடரும் ரோஹித்தின் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித்தின் விக்கெட்டை கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலந்த் ரோஹித் சர்மாவுக்கு டிபெண்ட்ஸ் ஆடுவதில் இன்னும் திணறுகிறார் என்பது இந்த ஆட்டத்திலும் தெளிவானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக டிபெண்ட்ஸ் சதவீதம் 83 ஆக வைத்திருக்கும் ரோஹித் சர்மா, அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 79 ஆகக் குறைந்துவிட்டதாக கிரிக்இன்ஃபோ தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக பேட் செய்து அதிரடி(அட்டாக்கிங் பேட்டிங்) பேட்டிங் செய்து பழகிவிட்டதால், டெஸ்ட் போட்டியில் கால்களை நகர்த்தி டிபெண்ட்ஸ் ஆடுவது பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் ரோஹித் சர்மா களமிறங்கியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போதே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. 30வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. மிட்செல் ஸ்டார்க் வீசிய 39வது ஓவரில் அஸ்வின்(22), நிதிஷ் ராணா(0) இருவரும் ஓரே ஓவரில் ஆட்டமிழந்தது இந்திய அணியை பலவீனப்படுத்தியது. அதன் பிறகு நிதிஷ் ரெட்டிக்கு ஈடுகொடுத்து பும்ரா பேட் செய்து, ஸ்ட்ரைக்கை மாற்றினார். ஆனாலும் பும்ரா நிலைக்கவில்லை. நிதிஷ் கடைசிவரை போராடி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqjz05gl09vo
  7. 06 DEC, 2024 | 03:32 PM இலங்கையின் விழிப்புலனற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/200578
  8. 06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான ரஸ்ய எல்லையில் வடகொரிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த வருடத்தின் முற்றிலும் வழமைக்குமாறான சம்பவம் என அட்மிரல் சேர் டொனி ரடக்கின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/200556
  9. பும்ராவின் 'பந்து வீச்சு ஸ்டைல்' விமர்சிக்கப்படுவது ஏன்? ஆஸ்திரேலிய அணி கலக்கத்தில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக கிரிக்கெட்டில் ஒரு வீரரை திறமையால் எதிர்கொள்ள முடியாத நிலையில், எதிரணியினர் மனரீதியாக தாக்கி அந்த வீரரின் மனஉறுதியுடன் மோதி வெற்றி பெறுவது தந்திர உத்தி. இந்த தந்திர உத்தியை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியினரும், ஊடகங்களும், கடந்த காலங்களில் பல நேரங்களில் கையாண்டுள்ளனர், இதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். அந்த வகையில், இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்கள், கவுன்டி வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரி்த் பும்ராதான். ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்களில் அபாரமான வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, பும்ராவின் வேகப்பந்து வீச்சுதான். இந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்த் டெஸ்டுக்கு இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு, பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் பும்ரா இருந்தார். அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைவிட, பும்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியின் பேட்டர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக பும்ரா இருந்தார் என்பதை அந்த அணி வீரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். விமர்சனங்களில் சிக்கியவர்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களின் விமர்சனங்கள், வீரர்களின் ஸ்லெட்ஜிங்கில் சிக்கியவர்களில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், ஷாஹித் அஃப்ரிடி, ஷோயப் அக்தர் என பந்து வீச்சாளர்களின் பட்டியல் நீளும். அதேசமயம், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைப் பற்றி இந்திய நடுவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அம்பலத்தில் ஏறவில்லை. ஆஸ்திரேலிய அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் மனரீதியாகத் தாக்கப்பட்டு, பந்துவீச்சு மீது அவதூறு கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது. 'பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது' ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "பும்ராவின் பந்து வீச்சு விளையாட முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கிறது. பும்ரா ஓடி வரும் ஸ்டைலும், பந்து வீச்சு முறையும் வித்தியாசமாக இருக்கிறது, மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. வித்தியாசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பும்ராவின் பந்து வீச்சு இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். 'பேரன்களிடம் சொல்லி பெருமைப்படுவேன்' ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் 'டான்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் பார்த்த பந்து வீச்சாளர்களிலேயே சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். அவரின் பந்து வீச்சை சமாளித்து பேட் செய்வது சவாலானது. என் பேரக்குழந்தைகளிடம் பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" என டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கவலை இந்த சூழலில், அடிலெய்ட் டெஸ்ட் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பும்ராவின் பந்து வீச்சைப் பார்த்து நடுக்கத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், அதிவேக பெர்த் ஆடுகளத்திலேயே பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்டு சிதறிய ஆஸ்திரேயாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள், அடிலெய்டில் பிங்க் பந்தில் பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியினரை தற்போது சூழ்ந்திருப்பது, "பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது" என்ற கவலைதான். டாப் ஆர்டர்கள் பரிதாபம் ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை கடந்த 7 டெஸ்ட்களில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் சிதைத்துள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தானின் அமர் ஜமால், ஷாஹின் ஷா அஃப்ரிடி, மிர் ஹம்சா, அல்சாரி ஜோசப், ஷாமர் ஜோசப், மாட் ஹென்றி, பென் சீர்ஸ் ஆகியோர், கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டர்களை சிதைத்து, 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, டாப் ஆர்டர் பேட்டர்கள் எந்த அளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அன்று பிளின்டாப், இன்று பும்ரா கடந்த 2005ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்டுக்கு கடும் பிரச்னையாக பிளின்டாப் பந்து வீச்சு இருந்தது. 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பயணத்தில் கில்கிறிஸ்டை 6 முறை பிளின்டாப் ஆட்டமிழக்கச் செய்தார். பிளின்டாப் பந்து வீச்சை சமாளித்து ஆடமுடியாமல் கில்கிறிஸ்ட் விக்கெட்டை இழப்பது தொடர்ந்தது. இதை களைவதற்கு பேட்டிங் பயிற்சியாளர் பாப் மயூல்மேனிடம் பிரத்யேகமாக கில்கிறிஸ்ட் பயிற்சி எடுத்து 2007ம் ஆண்டு ஆஷஸ் தொடரை எதிர்கொண்டார். அந்த ஆஷஸ் தொடரில் பிளின்டாப் பந்து வீச்சை கில்கிறிஸ்ட் அனாசயமாக விளையாடினார். அதேபோல, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் கலக்கம் கொண்டுள்ளது. பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஸ்மித், லாபுஷேன், கவாஜா, மார்ஷ் என அனைவரும் பிரத்யேக பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிரத்யேக பயிற்சி எடுத்து வருகின்றனர் பும்ரா பந்து வீச்சை கண்டு ஏன் அச்சம்? பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு இருக்கும் பிரச்னை, "பும்ரா தனது கையில் வைத்திருக்கும் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளிதான். எப்போது, எப்படி பந்தை ரிலீஸ் செய்கிறார்" என்பதை ஆஸ்திரேலிய பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. இதனால் பும்ராவின் பந்து வீச்சில் அனைத்துப் பந்துகளையும் எதிர்கொண்டு விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் இருக்கிறார்கள். பும்ரா வீசும் ஓவரில் எந்த பந்து அவுட் ஸ்விங் (outswing) ஆகிறது, இன்ஸ்விங் (inswing) ஆகிறது, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் (stump to stump) வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறுகிறார்கள். வாசிம் அக்ரமின் விளக்கம் பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறுகையில், "பும்ரா தனது பந்து வீச்சில் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளி என்பது பேட்டர்களின் கால்களை நோக்கி இருக்கிறது. எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அங்குள்ள ஆடுகளங்களில் ஒரு பேட்டர் பேட்டின் நுனியில் பட்டு (அவுட்சைட் எட்ஜ்) ஆட்டமிழப்பதுதான் அதிகம். அதிகமான பவுன்ஸர், அதிகமான சீமிங் இதற்குக் காரணம். ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்வாகு, அதிகமான உயரத்தால், அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் வேகத்தால் எதிரணி பேட்டர்களை கிளீன் போல்ட் செய்ய சரியான லைன் அன்ட் லென்த்தில் பிட்ச் செய்வது கடினம். ஆதலால், ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை பேட்டர் ஒருவர் லீவ் செய்து பழகினாலே களத்தில் நிற்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" - வாசிம் அக்ரம் பேட்டர்களுக்கு சவால் ஆனால், பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை, பெர்த் டெஸ்டில் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் முறையைக் கையாண்டார். பும்ரா பந்துவீச்சில் எந்தப் பந்து இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. பும்ராவின் பந்து வீச்சில் இருக்கும் வேகம், பேட்டருக்கு அருகே அவரின் ரிலீஸ் பாயிண்ட் அமைந்திருப்பது, ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனால் பும்ராவின் பந்து வீச்சை லீவ் செய்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஆடுவது சிரமம். அவ்வாறு ஆடுவதும் ஆபத்தானது. ஏனென்றால், பும்ராவின் பந்துவீச்சு ரிலீஸ் பாயிண்ட் குழப்பமாக இருப்பதால், லீவ் செய்து விளையாட ஆஸ்திரேலிய பேட்டர்கள் முயன்றால், கால்காப்பில் வாங்கி ஆட்டமிழக்க நேரிடும். கடந்த பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். அதில், 4 எல்பிடபிள்யூ பும்ரா எடுத்தது. பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், லாபுஷேன் 52 பந்துகளை வீணடித்து 2 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தப் பந்தை லீவ் செய்வது, எந்தப் பந்தில் ஷாட் அடிப்பது என்ற குழப்பத்தில் லாபுஷேன் ஆடினார். 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்தை லீவ் செய்ய முயன்றபோது கால்காப்பில் வாங்கி லாபுஷேன் ஆட்டமிழந்தார். பிரத்யேகப் பயிற்சி ஆதலால், பும்ராவின் பந்து வீச்சை அடிலெய்டு டெஸ்டில் சமாளித்து ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பேட்டிங் ஆலோசகர் மைக் ஹசி, லாச்சலான் ஸ்டீவன்ஸ், பயிற்சியாளர் மெக்டோனல்ட் ஆகியோர் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என கிரிக்இன்போ (cricinfo) தளம் தெரிவித்துள்ளது. பும்ரா பந்து வீச்சு மீது விமர்சனம் இதற்கிடையே, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல், பந்தை எறிவது போன்று இருக்கிறது, அவரின் பந்து வீச்சை ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய கவுன்டி வீரர்கள் விமர்சித்துள்ளனர். இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவர் பந்தை எறிகிறார் என கூறுவதற்கு நடுவருக்கு அச்சமா என்றும் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளனர். "பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் சட்டவிரோதமானது, ஐசிசி விதிகளுக்கு புறம்பாக கை மணிக்கட்டை மடக்குகிறார், இதை ஆய்வு செய்ய வேண்டும்," என எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளனர். முதல்முறையாக குற்றச்சாட்டு ஆனால், பந்து வீச்சு எறிவது போல் இருக்கிறது என்ற பும்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு, விமர்சனம் வைக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பும்ராவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணி, 10 ஆண்டுகளுக்கு முன் பும்ராவின் பந்து வீச்சையும், இப்போதுள்ள பும்ராவின் பந்து வீச்சையும் வீடியாவாகப் பதிவு செய்து, "10 ஆண்டு சவால்" என எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிபிஎல் தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்தை எறிவதாக குற்றசாட்டு வந்து அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் ஆஸ்திரேலிய அணியினரால் விமர்சிக்கப்படுகிறது. ஐசிசி விதி கூறுவது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் இயான் பாண்ட், பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் விதிகளுக்கு புறம்பாக இல்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் " பும்ராவின் கையில் முழங்கை முதல் மணிக்கட்டுவரை நேராகவே இருக்கும் வளையாது. ஐசிசி விதிப்படி, "பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவரின் முழங்கை 15 டிகிரி அப்பால் வளையக்கூடாது" என்பதுதான். அந்த வகையில், பும்ராவின் கைகள் முன்நோக்கி வளைந்திருக்கும். ஆனால் 15 டிகிரிக்கு அதிகமாக வளையாது. இதனால்தான், பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டது என்று ஐசிசி அங்கீகரித்துள்ளது. முகமது ஹஸ்னைன் பந்து வீச்சில் ஐசிசி விதிகள் பின்பற்றப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார். பும்ராவுக்கு கிரேக் சேப்பல் ஆதரவு பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள், விமர்சகர்களை முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வெளிவரும் "தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்" நாளேட்டில் கிரேக் சேப்பல் எழுதிய கட்டுரையில், "பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து முட்டாள்தனமாக கேள்வி எழுப்புவதை முதலில் நிறுத்துங்கள். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் தனித்துவமானது, விதிகளுக்கு உட்பட்டது. அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்." என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சைவிட அவர்களின் பேட்டிங்தான் கவலைக்குரியதாக இருக்கிறது என எழுதியுள்ள கிரேக், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, கூர்மையான தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்துள்ளது. மேலும், டாப் ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும், அதிகமான மாற்றங்களைச் செய்யாமல் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். "லாபுஷேன் ஸ்திரமான ஃபார்மில் இல்லை. கடந்த 16 இன்னிங்ஸில் அவர் 330 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். பெர்த் டெஸ்டில் 52 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே லாபுஷேன் சேர்த்தபோதே, அவரின் பேட்டிங் பலவீனத்தை அறிய முடிந்தது. இதே, ஆஸ்திரேலிய அணி அடிலெய்ட் டெஸ்டிலும் விளைாயடும்போது யாரெல்லாம் மோசமாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிய முடியும்," என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு நடுக்கம் படக்குறிப்பு, பும்ராவை கண்டு ஆஸ்திரேலிய அணி அஞ்சுவதாக கூறுகிறார் எட்வர்ட் கென்னடி பும்ராவின் பந்து வீச்சு முறை சரியானதா, ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிப்பது ஏன் என்பது குறித்து, சென்னை எம்ஆர்எப் அணியின் துணைப் பயிற்சியாளரும், டிஎன்பிஎல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் பயிற்சியாளருமான எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழுக்கு அளித்தப் பேட்டியில் " பும்ராவின் பந்து வீச்சில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறதா? இது முற்றிலும் ஆஸ்திரேலிய அணியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. சிறப்பாகப் பந்துவீசும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற பந்து வீச்சில் குறை சொல்வதை ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்" என்றார். மேலும், இதை ஊடகங்களும் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார். "பும்ராவின் பந்து வீச்சு அடிலெய்ட் மைதானத்தில் பிங்க் பந்தில் எகிறும், விளையாட முடியாத அளவு கடுமையாக இருக்கும். அவரை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு பிசிசிஐ தகுந்த பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி பும்ரா பந்து வீச்சில் அஞ்சி நடுங்கி இருக்கிறது என்பதையே ரசிகர்கள் ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cpvnzxnp4mlo
  10. தென் ஆபிரிக்காவுக்கு உற்சாகமூட்டிய ரிக்ல்டன் சதம், பவுமா அரைச் சதம் 05 DEC, 2024 | 10:14 PM (நெவில் அன்தனி) இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்காவுக்கு ரெயான் ரிக்ல்டன் குவித்த கன்னிச் சதம், அணித் தலைவர் டெம்பா பவுமா பெற்ற அரைச் சதம் என்பன உற்சாகத்தை கொடுத்தது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் தீர்மானம் மிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் திறமையான பந்துவிச்சுகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. டோனி டி ஸோர்ஸி (0), ஏய்டன் மார்க்ராம் (20), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகிய முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். இந் நிலையில் ஜோடி சேர்ந்த ரெயான் ரிக்ல்டன், டெம்பா பவுமா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா, தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்டன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் ரிக்ல்டன், கைல் வெரின் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். ரிக்ல்டன் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 250 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த சற்று நேரத்தில் மார்க்கோ ஜென்சென் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கய்ல் வெரின் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/200536
  11. இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய 100 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்தும் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வருடம் முழுவதும் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படுவதுடன் இதில் 200க்கும் அதிகமானவை முழுமையான நிதி அனுசரணையினைக் கொண்டதுடன் முழுமையான கல்விக்கடணம், மாதாந்த உதவித் தொகை, காகிதாதிகள் மற்றும் புத்தகங்களுக்கான கொடுப்பனவு, மற்றும் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியதாக காணப்படுகின்றன. அத்துடன் பொறியியல் முதல் மனிதநேயம், விஞ்ஞானம், விவசாயம், பாரம்பரிய மருத்துவம் குறித்த கற்கைகள் வரையான பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் விசேட நிதி உதவியை பாராட்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “இவ்வாறு வழங்கப்படும் மாதாந்த நன்கொடை உதவியானது நிதி ரீதியான அழுத்தங்களை நிவர்த்தி செய்வதில் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கின்ற அதேவேளை, எனது கல்வியில் அதிக கவனம் செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது. அத்துடன் இந்த நிதி உதவியானது, நிதி ரீதியான சுமைகள் குறித்து கவனம் செலுத்தாமல், சீரான வருகையினைப் பேணி எனது கல்வியில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கின்றது. எனது கல்வி ரீதியான செயல்திறனுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இந்த ஆதரவு கணிசமான பங்களிப்பினை வழங்குகின்றது”, எனத் தெரிவித்திருந்தார். அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த உதவித் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும்போது, ‘இந்த உதவி மிகவும் பயனுள்ளதாகும். மாதாந்த கல்விச் செலவீனத்தை இதனால் ஈடுசெய்யமுடிகின்றது. அத்துடன் எனது கல்வித்தேவைக்கான நூல்களை கொள்வனவு செய்தல், நிழற்பிரதி எடுத்தல், அச்சு செலவீனங்கள் மற்றும் எனது உணவுத் தேவைகள் போன்ற செலவீனங்களுக்கு இந்த நன்கொடை உதவி ஆதரவாக உள்ளது”, எனக் குறிப்பிட்டார். மேலும், கலைப் பீடத்தில் கலாசார சுற்றுலாத்துறை குறித்து பயின்றுவரும் மற்றொரு மாணவர், தனது கள விஜயங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்த உதவி ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/313234
  12. பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்; ரணில் தரப்பு அறிவிப்பு கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/313245
  13. 06 DEC, 2024 | 11:10 AM இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிமுகமான நபரொருவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/200554
  14. வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 302 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 37 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 44 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 80 பேரும், வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 63 பேரும் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்டச் செயலர்கள், கடந்த காலங்களைவிட இம்முறை இடரின்போது உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்ததாகக் குறிப்பிட்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது உரையில், நாம் ஒவ்வொருவரும் எமது குடும்பங்களைப் பாதுகாக்க முற்படும்போது நீங்கள் எங்கள் மக்கள் எல்லோரையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் உண்டு. எனவே உங்களின் பாதுகாப்பும் மிக முக்கியம். ஒவ்வொரு பணியாளரது பாதுகாப்புத் தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் கவனம் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், நாம் எவ்வாறான தயார்படுத்தல்களுடன் இருந்தாலும் இடர்கள் வரும்போது சில வேளைகளில் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும். 4 நாள்களில் சுமார் 500 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றது. சகல இடங்களும் வெள்ளக்காடாகியது. ஆனாலும், சில நாள்களிலேயே வழமைக்கு திரும்பும் வகையில் நீங்கள் அனைவரும் பணியாற்றியிருக்கின்றீர்கள். உங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தாலும் நீங்கள் நித்திரை முழித்து இரவிரவாக மக்களைப் பாதுகாக்க களத்தில் நின்றிருக்கின்றீர்கள். அப்படிச் செயற்பட்ட உங்களை பாராட்டி மதிப்பளிப்பது எமது கடமை. இது உங்களுக்கு உற்சாகமளிக்கும். சவால்களை நாம் சந்திக்கும் போதுதான் எமது சேவைகள் இன்னமும் மேம்படும். இந்த இடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். நாம் அவற்றை மீளாய்வு செய்யவேண்டும். சரியான தீர்மானங்களை விரைந்து எடுக்கவேண்டும். தலைமைத்துவத்துக்கு அதுதான் அழகு. விரைந்து தீர்மானங்களை எடுக்கத்தவறினால் பிரச்சினைகளுக்குத்தான் முகம்கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழைக்கு முன்னதாக வெள்ளவாய்க்கால்களை துப்புரவு செய்வதை எமது வருடாந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்குவதன் ஊடாக முன்னாயத்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கலாம். இதேவேளை மத்தி, மாகாணம் என்று பாராது இவர்கள் எமது மக்கள் என்ற அடிப்படையில் இந்த இடர் நடவடிக்கையின்போது சகல திணைக்களங்களும் செயற்பட்டன. அது வரவேற்கப்படவேண்டியதுடன் தொடரவேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/313228
  15. பிரிட்டன் சென்றடைந்தமை குறித்து டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழர்கள் நிம்மதி பெரூ மூச்சு - கடலில் அனைவரும் இறந்துவிடுவோம் என நினைத்ததாக தெரிவிப்பு 06 DEC, 2024 | 10:34 AM மூன்று வருடகாலமாக டியாகோகார்சியாவில் தீவில் சிக்குண்டிருந்தஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றடைய முடிந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர். இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது, இந்துசமுத்திரத்தின் தொலைதூரதீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் சிக்குண்டிருந்தவர்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் தங்கள் பயணம் முடிவிற்கு வந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர். 47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர். இதேவேளை ருவாண்டாவிலிருந்து மேலும் எட்டு பேர் பிரிட்டன் வந்து சேர்ந்துள்ளனர்.இவர்களும் இலங்கை தமிழர்கள் இவர்களை அதிகாரிகள் மருத்துவசிகிச்சைக்காக ருவாண்டா அனுப்பியிருந்தனர். லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்ளனர். இவர்கள் தற்போது லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் ஒடித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. கடும் குளிர் முற்றிலும் பழக்கமில்லாத சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டமை குறித்து அவர்கள் நிம்மதியடைந்துள்ளதை உணரமுடிகின்றது. நாங்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பதை நம்பமுடியாமல் உள்ளது, சொக்கத்தை அடைந்துள்ளது போல உணர்கின்றோம் என ஒருவர் தெரிவித்தார். கனடாவில் புகலிடம் பெறும்நோக்கில் இவர்கள் பயணித்த படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்ததால் இவர்கள் டியாகோகார்சியாவில் சிக்குண்டனர். எங்கள் நாட்டில் வாழ்க்கை நன்றாகயிருந்திருந்தால் நாங்கள் ஒழுகும் படகில் சமுத்திரங்கள் ஊடாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கமாட்டோம் என மற்றுமொரு இலங்கை தமிழர் தெரிவித்தார். நாங்கள் அனைவரும் கடலில் உயிரிழந்துவிடுவோம் என நான் நினைத்தேன், ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு முயல்வதா அல்லது அனைவரும் கடலில் மடிவதா சிறந்தது என என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன். இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் டியாகோகார்சியா தீவை சென்றடைந்ததை பிரிட்டனின் உள்துறை அமைச்சர்கள் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக கருதினார்கள். இவர்களின் தலைவிதி குறித்து நீண்ட சட்டப்போராட்டங்கள் இடம்பெற்றன.தமிழர்கள் அந்த தீவில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகள் அந்த தீவிற்கு சென்றுவந்தனர். அந்த தீவில் மூன்றுநாட்கள் தான் தங்கியிருப்போம் என நினைத்தோம் ஆனால் மூன்றுவருடங்கள் தங்கியிருக்க நேர்ந்தது என பெண்ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200552
  16. மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றன, இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது. இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது காசாவில் புதிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். இது வரலாற்றில் வேறு எந்த மோதலையும் போல அல்ல. காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதேசமயம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Euro-Med Human Rights Monitor அமைப்பு, வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மறைந்து சாம்பலாக மாறியிருக்கலாம். அவர்களின் உடல் காணாமல் போயிருப்பது இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளின் வகை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மாயமாகியுள்ள 2,210 உடல்கள் காசா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகளில் இருந்தும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளில் இருந்தும் சுமார் 2,210 உடல்கள் மாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. தெர்மோபரிக் குண்டுகள் உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இது தொடர்பில், சர்வதேச விசாரணை நடத்தப்பட என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் நிரப்பிய மேகமூட்டத்தை உருவாக்குகிறது. அதன் பின் இரண்டாவதாக வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேக பகுதியை பற்றவைத்து, 2500 டிகிரி செல்சியஸ் வரை மிக அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது. இது தோல் மற்றும் உட்புற உடல் பாகங்களை கடுமையாக எரித்து சிதைகிறது. குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகும் அளவிற்கு எரிகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/313231
  17. 06 DEC, 2024 | 11:33 AM தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் உள்ள பயங்கரவாதஎதிர்ப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது,மேலும் சட்டபூர்வமான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்களிற்கு எதிராக இதனை பயன்படுத்தியுள்ளனர் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரஜைகளிற்கு சாதாரணமாக வழங்கப்படவேண்டிய மனித உரிமை பாதுகாப்புகளை முழுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கொடுரமான விதிமுறைகளிற்காக பெயர்போயுள்ளது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டிணைவு,பயங்கரவாதம் பற்றிய தெளிவற்ற மற்றும் பரந்துபட்ட வரையறையின் அடிப்படையில் கைது செய்வதற்கான காவலில் வைப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் நீதிஆய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை,மேலும் இது பரந்துபட்ட அசாதாரண ஜனாதிபதி அதிகாரங்களையும் வழங்குகின்றது என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது மனித உரிமைகளிற்கு மாத்திரமின்றி நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கும் அவசியமானது என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/200561
  18. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரங்கள் இதுவரை இல்லை. https://thinakkural.lk/article/313253
  19. நானும் உப்புப் பிரியன் தான்! 10 பைக்கற்ற வாங்கி வைப்பம்!!
  20. 05 DEC, 2024 | 11:58 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன், சூரிய சக்திகள வேலைத்திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய ஜனாதிபதி, ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் செயல்திறன் அற்றவையாக காணப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். வலுசக்தி அமைச்சர் மின் பொறியியலாளர் குமார ஜயகொடி, இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டீ.எம்.டபிள்யூ.ஜே.பண்டார, இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவன தலைவர் பொறியியலாளர் ஜனக அலுத்கே, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/200542
  21. யாழில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் பலி யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (05.12.2024) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் வாகனம் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார். நேயாளர் காவு வண்டி மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். சம்பவம் குறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில், “விபத்து ஏற்பட்டவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் கீழே விழுந்திருந்தனர். உடனே '1990' சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நேயாளர் காவு வண்டி வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்தும் அவர்கள் பல கேள்விகளை வினவினர். ஆனால், நோயாளர் காவு வண்டி வரவில்லை. இந்நிலையில், உறவினர்களுக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த மாணவனின் நண்பர்கள் வந்தனர். மேலதிக விசாரணைகள் இதனையடுத்து, பட்டா ரக வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்றோம். எனினும், தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டபொழுது அங்கு மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அத்துடன், மற்றைய மாணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர். இதேவேளை, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த மோட்டார் வாகனம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் பின்னர் மீட்கப்பட்டது” என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/school-student-killed-in-a-motor-vehicle-in-jaffna-1733386473
  22. புலர் அறக்கட்டளையால் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/24 பகுதி2 PULAR TRUST Contact +94777775448 (whatsapp, viber, telegram, signal) தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்வில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இருந்து பலர் கலந்து சிறப்பித்து இருந்தனர். ஒளிப்பதிவு உதவி செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், சகோதரி வனஜா.
  23. 05 DEC, 2024 | 06:06 PM எதிர்வரும் 7 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வானிலை நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த காற்றுச் சுழற்சியை பொறுத்தவரையில், உருவாகியதன் பின்னர் மிக மெதுவாக மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், அதாவது 10ஆம் திகதி அல்லது 11 ஆம் திகதி அளவில் இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி அளவில் சுமத்திரா தீவுகளுக்கு அண்மித்து காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 19ஆம் தேதி உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு நிலையை பொறுத்தவரையில் தற்போது சில மாதிரிகள் இது ஒரு தீவிரமான காற்றழுத்த தாழ்நிலையாக மாறும் எனவும், சில மாதிரிகள் இது ஒரு புயலாக மாறும் எனவும் வெளிப்படுத்துகின்றன. ஆகவே 19ஆம் திகதி ஏற்படக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பான இறுதியான முடிவுகளை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதியாக வெளிப்படுத்த முடியும். எதிர்வரும் ஏழாம் திகதி ஏற்படுகின்ற காற்றுச் சுழற்சியினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படாது விட்டாலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் உடைய சில பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. எனினும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. அதேவேளை எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி சுமத்திரா தீவுகளுக்கு அண்மதித்து உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அது ஒரு தீவிரமான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு வளிமண்டல அமைப்பாக மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும் இதனை எதிர்வரும் நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும். அந்த வகையில் எதிர்வரும் ஒன்பதாம் திகதியில் இருந்து வடக்கு - கிழக்கு கடற் பகுதிகள், வங்காள விரிகுடாவில் ஏற்படும் காற்றுச் சுழற்சி காரணமாக ஒரு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடற் தொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறப்பானதாக அமையும். அதேவேளை விவசாய நடவடிக்கைகளை பொறுத்தவரையில், இந்த பெங்கால் புயலால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்தவர்கள் மீண்டும் விவசாய விதைப்பு நடவடிக்கைகளை செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக 20ஆம் திகதியில் இருந்து 25ஆம் திகதி வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்க சந்தர்ப்பம் இருப்பதால் இக்காலப் பகுதியில் மீண்டும் விதைத்தல் செயற்பாடுகளை செய்கின்றமையால் மீண்டும் பாதிப்படையக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது என்றார். https://www.virakesari.lk/article/200525
  24. 05 DEC, 2024 | 05:30 PM நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது. நாட்டுக்கு உகந்த தூய்மையான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைய முதலீட்டுச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை போலவே நாட்டுக்குள் நிதி ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அது தொடர்பிலான பாரிய பொறுப்பு முதலீட்டுச் சபைக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். முதலீட்டுச் சபைக்கிருக்கும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அர்ப்பணிக்க வேண்டும் என்றும், நாட்டுக்கு உகந்த முதலீடுகளை கொண்டு வருவதற்கு முதலீட்டுச் சபைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். முதலீட்டுச் சபையின் செயற்திறனை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுப்பதற்கும், புதிதாக ஐந்து முதலீட்டு வலயங்களை அடுத்த வருடத்தில் ஆரம்பிப்பது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத், பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/200509
  25. ரோஹித் vs ராகுல்: பிங்க் பால் டெஸ்டில் ஜெய்ஸ்வாலுடன் யார் முதலில் களமிறங்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெர்த் டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய ராகுல் எழுதியவர், நிதிஷ் குமார் பதவி, பிபிசி தமிழ் ஆஸ்திரேலியா அணியுடனான அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு ஓப்பனராக ஜெய்ஸ்வாலுடன் யார் களமிறங்க வேண்டும் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த கேள்விக்கு விடை தேடும் முன், ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது என்று ஆராய்வது, இதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள உதவும். பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டி பெர்த் நகரின் ஆப்டஸ் மைதானத்தில் நவம்பர் 27 தொடங்கி நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, இந்த போட்டியில் அணியின் கேப்டனான பும்ரா, வீரர்கள் சிராஜ், கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர். இதில் பந்து வீச்சில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இந்திய அணியின் பேட்டர்கள், அதிலும் குறிப்பாக ஓப்பனர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுலின் பங்கு மிகப்பெரியது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளின் பேட்டர்களும் முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள் கூட பேட்டிங் ஆட முடியாமல் திணறினர். இரு அணியின் பந்துவீச்சும் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக இருந்தது. ஆட்டம் இந்தியா வசமானது இரண்டாம் இன்னிங்ஸில் தான், அதிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆடிய விதத்தில் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமானது. இந்த போட்டிக்கு முன் இந்தியா ஆடிய நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஆடாத ராகுல் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பேட்டிங் ஆட சவாலான ஆப்டஸ் மைதானத்தில் தான் ஆடியது மட்டும் இல்லாமல், ஜெய்ஸ்வாலிடம் ஆட்ட நுணுக்கங்களை கடத்தி அவரையும் சிறப்பாக ஆட வைத்தார். இதனை போட்டி முடிந்த பிறகு தனது சதத்தைப் பற்றி பேசும் போது ஜெய்ஸ்வால் கூறினார். "என்னை இந்த பாட்னர்ஷிப் முழுவதும் ராகுல் வழிநடத்தினார். நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக ஆடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். ஆட்டக் களத்தில் எப்போதெல்லாம் நான் பதற்றமாக உணர்ந்தேனோ, அப்போதெல்லாம் ராகுல் நான் கவனத்தோடு இருக்க உதவினார்," என்றார் ஜெய்ஸ்வால். 62 ஓவர்கள் ஆடிய இந்த இணை, ரன் குவித்தது மட்டுமின்றி ஆஸ்திரேலிய வீரர்களின் மன உறுதியை உடைத்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ராகுல் ஓப்பனராக தொடர வேண்டுமா? ஏன் இந்த கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியுடன் ரோஹித் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் ரோஹித் முதல் டெஸ்ட் போட்டியின் போது தனிப்பட்ட காரணத்திற்காக விடுப்பில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டாம் போட்டியான அடிலெய்ட் போட்டிக்கு முன் அணியுடன் இணைந்தார். அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் பிங்க் பால் போட்டிக்கு முன் இந்த பந்தை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சிகள் மேற்கொண்டனர். கூடுதலாக வார்ம்-அப் போட்டியும் பிரைம் மினிஸ்டர் XI அணியுடன் இந்திய அணி ஆடியது. இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி மழையின் காரணமாக, ஒரே நாளில் அணிக்கு தலா 50 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடைபெற்றது. இதில் ரோஹித் பங்கேற்று விளையாடினார். ஆனால், அவர் வழக்கமாக ஆடுவதை போல ஓப்பனராக ஆடவில்லை, மாறாக நான்காவது வீரராக களமிறங்கினார். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை இங்கும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 44 பந்துகள் ஆடிய ராகுல் விக்கெட் இழக்காமல் ஓய்வு பெற்றார். ஆனால், நான்காவதாகக் களமிறங்கிய ரோஹித் 11 பந்துகளில் விக்கெட் இழந்தார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெர்த் டெஸ்டில் இந்திய அணி ரோஹித் மற்றும் கில் போன்ற அணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்த வீரர்களை தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது. ரோஹித் விடுப்பிலும், கில் காயத்திலும் இருந்தார். அதனால் அணியில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஜூரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆடினர். ஆனால், அடிலெய்ட் டெஸ்டில் இவர்கள் இருவரும் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் அணிக்குத் திரும்பினால், படிக்கலுக்கு பதில் கில்லும், ஜூரேல் இடத்தில் ரோஹித்தும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால், அடிலெய்ட் டெஸ்டில் பேட்டர்களாக கேப்டன் ரோஹித், ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி, பந்த் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். ஆனால், இதில் ராகுல் எங்கு களமிறங்குவார் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், ஓப்பனிங்கில் யார் ஆட வேண்டும் என்ற கேள்வியும் தொடர்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியுள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் ரோஹித்தை எடுத்துக் கொண்டால், 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் தொடரில், ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் விளையாடினார். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 போட்டிகளில் 408 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 31 மற்றும் அதிகபட்ச ரன்கள் 63. இந்த 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஓப்பனராக 2 டெஸ்ட்களில் ஆடிய ரோஹித் 32 ரன்கள் சராசரியுடன் 129 ரன்களைக் குவித்தார். ராகுலை பொருத்தவரை, 2014-2015 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் மூலம் சர்வதேச டெஸ்டில் கால்பதித்து, இரண்டு போட்டிகளில் ஆடி, ஒரு சதத்துடன் மொத்தமாக 130 ரன்களை 33 ரன்கள் சராசரியுடன் அடித்துள்ளார். 2018-2019 ஆம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 3 போட்டிகளில் 5 இன்னிங்ஸ் ஆடிய ராகுல் 12 ரன்கள் சராசரியுடன் 57 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதன் பிறகு, கடைசியாக நடந்த பெர்த் டெஸ்டில் ராகுல் 26 மற்றும் 77 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் சராசரி 51. ஆஸ்திரேலியாவில் 11 இன்னிங்ஸில் விளையாடிய ராகுல் 9 இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஆடி 286 ரன்களை 32 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். ரோஹித்துக்கு சிறந்த இடம் எது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆறாவது இடத்தில் ரோஹித்தின் சராசரி 54.57 ஐசிசி தரவுகளின் படி, 64 டெஸ்டில் 111 இன்னிங்ஸ் ஆடியுள்ள ரோஹித் 4,270 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 42.27 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 212. 46 போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கியுள்ள ரோஹித் 2,685 ரன்களை 44 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். அதே வேளையில், 16 போட்டிகளில் ஆறாவது இடத்தில் ஆடிய ரோஹித் சர்மா, 54.57 சராசரியுடன் 1,037 ரன்களை குவித்துள்ளார். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் ரோஹித் 15 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 548 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். நடுவரிசையில் ராகுல் எப்படி செயல்படுகிறார்? ஐசிசி தரவுகளின் படி, 54 டெஸ்டில் 93 இன்னிங்ஸில் ஆடியுள்ள ராகுல் 5,867 ரன்களை 34 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார். இதில் பெரும்பாலும் இவர் ஓப்பனராக ஆடியுள்ளார். ஆறாவது இடத்தில் 9 இன்னிங்ஸில் ராகுல் ஆடியுள்ளார். அதில், 29.25 ரன்கள் சராசரியுடன் 231 ரன்களையும், 5 இன்னிங்ஸில் மூன்றாவது இடத்தில் ஆடிய ராகுல் 88 ரன்களையும் குவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்டில் நான்காவது இடத்திலும் ராகுல் களமிறங்கினார். அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 108 ரன்களை குவித்திருந்தார். சமீபத்திய ஃபார்ம் பட மூலாதாரம்,BOSSKEY BALASUBRAMANIAM/FACEBOOK படக்குறிப்பு, ரோஹித் ஓப்பனராக தான் ஆட வேண்டும் என்று கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான பாஸ்கி கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியாவிற்கு வெளியே நடந்த போட்டிகளில், அதிக பந்துகளைச் சந்தித்து விக்கெட் விட்ட இந்திய வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர். ராகுல் 19 இன்னிங்ஸ் ஆடி அதில், 757 ரன்களை குவித்துள்ளார். 90.7 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ராகுல் ஆடியுள்ளார். அதே வேளையில், ரோஹித் 23 இன்னிங்ஸ் ஆடி அதில், 919 ரன்களை குவித்துள்ளார். அவர் 89.1 பந்துகளைத் தனது விக்கெட் கொடுக்கும் முன் சராசரியாக ஆடியுள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து புஜாரா 87.5 பந்துகள், கோலி 84.4 பந்துகள் ஆடி விக்கெட் விட்டுள்ளதாக, க்ரிக்பஷின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்த் அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ரோஹித் 91 ரன்கள் மட்டுமே குவித்தார். ராகுல் பெர்த் டெஸ்டுக்கு முன் நியூசிலாந்த் உடன் ஆடிய டெஸ்ட் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,CRICANANDHA/FACEBOOK படக்குறிப்பு, ராகுல் வெளிநாடுகளில் பல கடினமான சூழ்நிலையில் நன்றாக ஆடியுள்ளார் என்று ஆனந்த் கூறினார் தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர் பாஸ்கி பாலசுப்ரமணியம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அடிலெய்ட் டெஸ்டில் ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவரால் புல் மற்றும் ஹூக் ஷாட்கள் (Pull and hook) நன்றாக ஆட முடியும். அவருக்குச் சிறந்த இடம் இதுவாகத்தான் இருக்கும் என்றார். கிரிக்கெட் விமர்சகரான ஆனந்த், "இந்த டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆட வேண்டும். அவர் இந்தியா இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பல சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார். அதிலும் குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2018-ஆம் ஆண்டு தி ஓவல் மற்றும் 2021-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக, 2021-ஆம் ஆண்டு சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இவர் அடித்த சதங்கள் இவரின் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தின," என பிபிசி தமிழிடம் கூறினார். ஒன்-டவுனைப் பொருத்தவரை, கில் மற்றும் இதர இடங்களில் இப்போது உள்ளது போலவே, ஆட வேண்டுமென இருவரும் உடன்பட்டனர். ராகுல் பற்றி பாஸ்கி பாலசுப்ரமணியம் பேசும் போது, "ராகுல் தற்போதுள்ள இந்திய அணியில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட வீரர். அவரால் ஓப்பனிங், ஒன் டவுன், மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் ஆட முடியும். அவர் ஆறாவதாகக் களமிறங்குவது அணிக்கு பலம் சேர்க்கும்" என்றார். ஆனால், ஆனந்தின் கருத்து இதனுடன் மாறுபட்டு இருந்தது. "ரோஹித் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவதாகக் களமிறங்கி ஆடியுள்ளார். அவரால் பந்து வீச்சாளர்களுடன் ஆடி அணிக்குத் தேவையான முக்கிய ரன்களை இறுதியில் குவிக்க முடியும்," எனக் கூறினார். மேலும், கடந்த போட்டியில் நன்றாக ஆடி ஃபார்மில் உள்ள ராகுல் ஓப்பனராக ஆடுவதே சிறந்தது," என அவரது கருத்தைப் பதிவு செய்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1593dldnq8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.