Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 05 DEC, 2024 | 05:13 PM பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் கழிகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாமல், அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களிலிருந்து பழக்கப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். யுஎன்டீபி நிறுவனத்தால் மன்னாரில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான அபிவிருத்தி திட்ட மீளாய்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது . அதில் கலந்துகொண்டு கருத்து தெரவித்தபோதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுஎன்டிபி அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் ஆறு குழுக்களுக்கு நிதி வழங்கி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சூழல் நேயத்தை முன்னிருத்தி இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளது. சூழல் மாசடையாது அதாவது உச்சக்கட்டத்துக்கு செல்லாதிருக்கும் நோக்கம் கொண்டு இத்திட்டம் நடைபெறுகிறது. நாங்கள் முன்னெடுத்துச் செல்லுகின்ற எந்த அபிவிருத்தித் திட்டமும் சூழலோடு சேர்ந்த திட்டமாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் இவை நிலைத்திருக்கும். சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை பிரதேச செயலாளர்களுடன் பங்குதாரர்கள் இணைந்து செயற்படும்போதுதான் இவை சிறப்பாக அமையும். இங்கு முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களை நோக்கும்போது மிகவும் பிரயோசனமானதாக இருக்கிறது. ஆகவே அனைத்து பங்குதாரர்களும் உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இங்கு பங்குதாரர்கள் கொண்டு நடைமுறைப்படுத்தும் இவை ஒரு சிறந்த திட்டங்களாக காணப்படுவதால் இதில் அக்கறைக் கொண்டுள்ள திணைக்களங்கள் இதில் தொடர்ந்து அக்கறை கொண்டு செயற்பட வேண்டும். இன்று ((03) இது முதலாவது மீளாய்வுக் கூட்டமாக அமைவதால் இனி அடுத்துவரும் கூட்டங்களில் மேலும் பரீட்சித்து முன்னெடுப்புக்களை தொடங்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை மற்றும் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாமல் அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொருட்களை உரிய இடங்களில் போடும் பழக்கத்தை பொது மக்களும் கொண்டிருக்க வேண்டும். நகர சபை மற்றும் பிரதேச சபைகள் இவற்றை நடைமுறைப்படுத்துகிறபோதும் இவை விஸ்தரிக்கப்பட வேண்டும். பிரதேச சபைகள் மற்றும் நகர சபை, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் யாவரும் இதில் கலந்துகொள்வதால் மன்னார் மாவட்டத்தை சுற்றுச்சூழல், பச்சையம் கொண்ட மாவட்டமாக வைத்திருக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/200496
  2. 30,000 மெட்ரிக் தொன் அரிசி முன்பதிவு! 05 DEC, 2024 | 11:49 AM அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவிலிருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம், தனியாருக்காகவும் இந்த அரிசி இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் குறைவாக இருப்பதால், குறைந்த அளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நாடு, பச்சை, சம்பா ஆகிய அரிசி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/200469
  3. மூன்று வயதில் தன்னுடைய காலில் பெரும் காயத்தை அடைந்த டின்கில் கோர்கா தற்போது இந்தியாவுக்காக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். விபத்தின் போது இடது காலின் கணுக்கால் மற்றும் பாதத்தில் பெரும் காயத்தை அடைந்த அவர், அதன் பாதிப்பை நிரந்தரமாக அனுபவித்து வருகிறார். குத்துச்சண்டை பயிற்சியின் போது கடுமையான வலியையும் சவாலையும் உணர்ந்ததாக கூறும் அவர், இந்தியாவுக்காக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார். தன்னம்பிக்கை அற்ற நாட்களிலும் விடாமுயற்சியுடன் அவர் பயிற்சிகள் மேற்கொண்டது எப்படி? தற்போது இந்தியாவுக்காக விளையாடும் அவரின் கனவு என்னவாக இருக்கிறது? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு விபரம் வீடியோ கீழுள்ள இணைப்பில் https://www.bbc.com/tamil/articles/clyjk4xkpzgo
  4. பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர். ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. பட மூலாதாரம்,ISRO இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தில் விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்? இரண்டு செயற்கைக் கோள்கள் எதற்காக? இந்தத் திட்டம் ஒருவகையில் மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இதில் ஒன்றல்ல, இரண்டு செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிலையம் பயன்படுத்துகிறது. அவற்றுக்காக, புதிய வகைத் தொழில்நுட்பங்கள், புதிய அல்காரிதம்கள், புதிய மென்பொருள்கள், சென்சார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரிதான வகையில், ப்ரோபா-3 திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுவது ஏன்? பட மூலாதாரம்,ESA SCIENCE\X இரண்டு செயற்கைக் கோள்களையும் "துல்லியமான பாதையில் நிலைநிறுத்தி" அவற்றை ஒன்றாகப் பறக்கச் செய்து ஒரு நிலையான கட்டமைப்பு பராமரிக்கப்படும். அதாவது, இரண்டும் விண்வெளியில் நெருக்கமாக, ஒரு நிலையான வடிவத்தில் நகரும். இந்த வகையான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. செயற்கைக்கோள்கள் இரண்டுக்கும் இடையே ஒரே தொலைவையும் நோக்குநிலையையும் பராமரிக்க ஒன்றிணைந்து செயல்படும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், போர் விமான சாகசங்களின்போது, இரண்டு போர் விமானங்கள் நெருக்கமாக இணைந்து பறப்பதைப் பார்த்திருப்போம். அதைப் போன்ற ஒரு செயல்முறையை இந்தத் திட்டத்தில், விண்வெளியில் இரண்டு செயற்கைக் கோள்கள் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம். ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-1, 2 ஆகியவை இந்தத் திட்டத்தின் முன்னோடிகள். இதில் ப்ரோபா-1, 2001ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ப்ரோபா-2 2009இல் ஏவப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுக்கள் ப்ரோபா-3 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர். ப்ரோபா-3 சூரியனை எப்படி ஆய்வு செய்யும்? பட மூலாதாரம்,ESA SCIENCE\X இரண்டு செயற்கைக் கோள்களும் இணைந்து பறக்கும்போது அவற்றின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரண்டுக்குமான இடைவெளியில் ஒரு மில்லிமீட்டர் மாறுபட்டாலும், இது பலனளிக்காது. ஒரு செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும், அதனுடனான தொடர்பை, பாதை அமைப்பை நிலைநிறுத்த மற்றொரு செயற்கைக் கோளும் அதே வகையில் துல்லியமாக நகர வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே இந்த இணைப்பு சாத்தியப்படும். சூரிய ஒளியால் கண்கள் கூசுவதைத் தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துவோம், அல்லவா! அதையே தொலைநோக்கி போட்டுக் கொண்டால் எப்படியிருக்குமோ, அப்படிப்பட்ட கருவிகள்தான் ப்ரோபா-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு செயற்கைக்கோள்கள். சூரியனின் பிரகாசம் அளவிடற்கரியதாக இருப்பதால், அதன் வளிமண்டலம் மற்றும் அதிலுள்ள பிற சிறிய பொருள்களை ஆய்வு செய்வது மிகக் கடினம். ஆகவே, அதற்கு உதவும் வகையில் இவை செயல்படுகின்றன. பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY\X படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-3 இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், சூரியனின் பெரும்பகுதியை மறைப்பதன் மூலம் அக்கல்ட்டர் என்ற செயற்கைக்கோள் ஒரு செயற்கையான கிரகணத்தை உருவாக்கும். இதன் விளைவாக, சூரியனின் மிகப் பிரகாசமான ஒளி தடுக்கப்படும். இதன்மூலம், சூரியனின் கொரோனா படலம், கொரோனாகிராஃப் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் மற்றொரு செயற்கைக் கோளுக்கு தெரியும் வகையிலான அமைப்பை இரண்டும் இணைந்து உருவாக்கிக் கொள்ளும். பிறகு குறைவாக அறியப்பட்ட சூரியனின் மேற்பரப்பில் உள்ள அம்சங்களைப் படம்பிடித்து கொரோனாகிராஃப் ஆய்வு மேற்கொள்ளும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும். அந்த வேளையில் மற்றொன்று சூரியனை கண்காணிக்கும். இந்த இரண்டுமே நீள்வட்டப் பாதையில் ஒன்றாக நிலைநிறுத்தப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ப்ரோபா-3 ஆய்வு செய்யும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் தொலைநோக்கியாகச் செயல்படும், மற்றொன்று துல்லியமாக 150 மீட்டர் தொலைவில் அதற்கு உதவும் வகையில் நிலைநிறுத்தப்படும். இப்படி நிலைநிறுத்துவது, சூரியனின் கொரோனா படலத்தைக் கண்காணிப்பதை எளிதாக்கும். சூரியனை ஆய்வு செய்யும் கொரோனாகிராஃப் கருவி, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் ப்ளாஸ்மா கதிர்களின் வெப்பத்தை, கொரோனா படலத்தில் இருக்கும் சூரியக் கதிர்களை ஆய்வு செய்யும். சூரிய மண்டலத்தின் விண்வெளிப் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்களான, சூரியப் புயல், சூரியக் காற்று ஆகியவற்றின் தோற்றுவாயாக இந்த கொரோனா படலம் இருப்பதால், அதை ஆய்வு செய்யும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், சூரியனால் வெளியேற்றப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சூரியத் துகள்கள் மூலம் விண்வெளியில் ஏற்படும் நிலைமைகளை அறியலாம். இந்த ஆய்வுத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9dpl57q0wjo
  5. அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றம் 04 DEC, 2024 | 07:03 PM அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், புதன்கிழமை (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200445
  6. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் விளையாடவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பங்களாதேஷ் எதிர்த்தாடும். இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் வெற்றிபெற்றதை அடுத்து அரை இறுதிப் போட்டிகளில் எந்தெந்த அணிகளை எந்தெந்த அணிகள் எதிர்த்தாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது. எட்டு அணிகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற இலங்கையும் ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தானும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. இந்த இரண்டு குழுக்களிலிருந்து முறையே பங்களாதேஷும் இந்தியாவும் தலா ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்கு முன்னேறின. இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழு போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முஹம்மத் ரெயான் (36), அக்சத் ராய் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் யூதாஹித் குஹா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வைபவ் சூர்யாவன்ஷி 46 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் அயுஷ் முஹாத்ரி 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய ஏ குழு போட்டியில் ஜப்பானை 180 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. முஹம்மத் ரியாஸுல்லா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைவும் ஷாஹ்பாஸ் கான் 45 ஓட்டங்களையும் பஹாம் உல் ஹக் 34 ஓட்டங்களையும் அஹ்மத் ஹுசெய்ன் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிஹார் பாமர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 28.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. நிஹார் பாமர் மாத்திரமே (25) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். ஜப்பானின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக 10 உதிரிகள் அமைந்திருந்தது. பந்துவீச்சில் மொஹம்மத் ஹுசெய்வா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அரை இறுதிப் போட்டிகள் நாளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி துபாயிலும் நாளை நடைபெறவுள்ளன. https://www.virakesari.lk/article/200446
  7. South korea-வில் ராணுவ ஆட்சி அறிவிப்பை பின்வாங்க வைத்த மக்கள் போராட்டம் தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை நாட்டின் அதிபர் அறிவித்து எதிர்ப்பின் காரணமாக அதை திரும்பப் பெற்ற நிலையில் அதிபர் யூன் சாக் யோல் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  8. மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் 15 வருடங்களின் பின்னர் பங்களாதேஷுக்கு டெஸ்ட் வெற்றி; தொடர் சமனானது 04 DEC, 2024 | 02:29 PM (நெவில் அன்தனி) ஜெமெய்க்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 101 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்களாதேஷ், 2 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது. அத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் 15 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக வெற்றியீட்டி வரலாறு படைத்தது பங்களாதேஷ். மேற்கிந்தியத் தீவுகளுக்கு 287 ஓட்டங்கள் என்ற சற்று இலகுவான வெற்றி இலக்கை நிர்ணயித்த பங்களாதேஷ், கடைசி இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பந்து வீசி எதிரணியை 185 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி அபார வெற்றியீட்டியது. ஜேக்கர் அலி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற அரைச் சதம், நஹித் ரானா, தய்ஜுல் இஸ்லாம் ஆகியோரின் 5 விக்கெட் குவியல்கள் என்பன பங்களாதேஷுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸில் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்திய ரானா தனது முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இஸ்லாம் 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இரண்டு அணிகளும் துடுப்பாட்டத்தில் சிரமத்தை எதிர்கொண்ட இப் போட்டியில் பங்களாதேஷ் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 268 ஓட்டங்களே முழுப் போட்டியிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எண்ணிக்கை சுருக்கம் பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (ஷத்மான் இஸ்லாம் 64, மெஹிதி ஹசன் மிராஸ் 36, ஜேடன் சீல்ஸ் 5 - 4 விக்., ஷமர் ஜோசப் 49 - 3 விக்., கெமர் ரோச் 45 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (கியசி கார்ட்டி 40, க்ரெய்க் ப்றத்வெய்ட் 39, நஹித் ரானா 61 - 5 விக்., ஹசன் மஹ்முத் 19 - 2 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 268 (ஜேக்கர் அலி 91, ஷத்மான் இஸ்லாம் 46, மெஹிதி ஹசன் மிராஸ் 42, கெமர் ரோச் 36 - 3 விக்., அல்ஸாரி ஜோசப் 77 - 3 விக்., ஷமர் ஜோசப் 80 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 287 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 185 (கவெம் ஹொஜ் 55, க்ரெய்க் ப்றத்வெய்ட் 43, தய்ஜுல் இஸ்லாம் 50 - 5 விக்., ஹசன் மஹ்முத் 20 - 2 விக்., தஸ்கின் அஹ்மத் 45 - 2 விக்.) ஆட்டநாயகன்: தய்ஜுல் இஸ்லாம் தொடர்நாயகன்: ஜேடன் சீல்ஸ் https://www.virakesari.lk/article/200404
  9. மலேசியா, தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட்(224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இதே போல் தெற்கு தாய்லாந்தில் கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. இதற்கிடையே, சில பல பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://thinakkural.lk/article/313120
  10. ‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். வெளிநாடுகளில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அறக்கட்டளை அலுவலங்களில், இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப் பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவுடன் தொடர்புடையதுதான். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார். இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். பில்கேட்ஸ் பேட்டி குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்தியர் ஒருவர், ‘‘இந்தியா சோனைக்கூடம் தான். இந்தியர்கள்தான் பில்கேட்ஸ் போன்றோர்களுக்கு பரிசோதனை எலிகள். பில்கேட்ஸ் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், ஊடகம் என அனைவரையும் சமாளிக்கிறார். இந்தியாவில் அவரது அலுவலகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாமல் செயல்படுகிறது. நமது கல்விமுறை அவரை ஹீரோவாக்கியுள்ளது. நாம் எப்போது விழிப்போம் என தெரியவில்லை’’ என கூறியுள்ளார். இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ‘‘ பில்கேட்ஸ் மீதான குற்றச்சாட்டு தேவையற்றது. இந்தியாவில் பில்கேட்ஸ்க்கு எதிரான மனநிலை ஏன் என புரிந்து கொள்ளமுடியவில்லை’’ என தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313118
  11. Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக இந்தியா - ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் முற்றிலும் வேறுபட்டது. பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து, டெஸ்ட் போட்டியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுரா(எஸ்ஜி, டியூக்ஸ்) பந்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பேட்டர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும். பேட்டர்களின் பேட்டிங் திறமைக்கு பெரிய சவாலாக அமையும். டெஸ்ட் போட்டி பாரம்பரியம் காக்க கிரிக்கெட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டி என்றாலே பகலில் தொடங்கி மாலையில் முடிக்கப்படும் என்ற நிலை மாறி, பிற்பகலில் தொடங்கி இரவு வரை நடக்கும் பகலிரவு டெஸ்ட் முறை 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குரிய இடத்தை டி20 போட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியபின், டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களின் ஆர்வம் மெல்ல குறையத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், மாலை நேரத்தில் ரசிகர்களின் கூட்டத்தை கவர்ந்திழுக்கவும் பகலிரவு டெஸ்ட் நடத்தும் புதிய சிந்தனை உதயமானது. பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், புதிய கோணத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றவும் கொண்டுவரப்பட்டதே பகலிரவு டெஸ்ட் போட்டி. இந்த டெஸ்ட் போட்டியின் முற்பகுதி சூரியஒளியிலும் பிற்பகுதி ஆட்டம் மின்னொளியில் நடக்கும். வழக்கமான சிவப்பு பந்துக்குப் பதிலாக எந்த நிறத்தில் பந்தைப் பயன்படுத்துவது என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரஞ்சு நிறம், மஞ்சள், பிங்க் ஆகிய வண்ணங்களில் பந்துகள் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் இளஞ்சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்(ஈசிபி) ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கதேசத்துக்கு எதிராக 4 நாட்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்பட்டு அதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் துர்ஹாம் மற்றும் வோர்ஷெஸ்டர்ஷையர் அணிகள் அதற்கு மறுத்துவிட்டன. இதனிடையே 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கிந்தியத்தீவுகளில் பிங்க் பந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. கவுன்டிஅணிகளைச் சமாதானம் செய்தபின் 2010-ஆம் ஆண்டு “சாம்பியன்ஸ் கவுன்டி” போட்டித் தொடரை அபுதாபியில் மின்னொளியில் பிங்க் பந்தில் நடத்த ஈசிபி முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கேன்டர்பரி கிளப்பும் கவுன்டி சாம்பியன்ஷிப்பை பிங்க் பந்தில் மின்னொளியில் நடத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2010-11-ஆம் ஆண்டில் “குவாதி-இ-ஆசம்” கோப்பைத் தொடரை பகலிரவாக ஆரஞ்சு பந்தில் நடத்திப் பரிசோதித்து, இறுதிப்போட்டியை பிங்க் பந்தில் நடத்தியது. 2012ல் தென் ஆப்பிரிக்காவும், 2013-ஆம் ஆண்டில் வங்கதேச அணியும் பிங்க் பந்தில் விளையாடி பரிசோதனை செய்தன. ஆஸ்திரேலியாவில் 2014-ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிகள் அனைத்தும் பிங்க் நிற கூக்கபுரா பந்திலேயே நடத்தி பரிசோதிக்கப்பட்டது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் பகலிரவு டெஸ்ட் பட மூலாதாரம்,SAEED KHAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 27, 2015 அன்று அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது பந்து வீசத் தயாராக இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிங்க் நிறப் பந்தை டாஸ் செய்தார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. 3 நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிங்க் பந்து பயன்பாட்டுக்காக பிட்ச்சில் கூடுதலாக புற்கள் வளர்க்கப்பட்ட நிலையில் பந்துக்கு லேசாக மட்டுமே தேய்ந்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பிங்க் பந்து அமைந்திருந்தது. அதிகமான ஸ்விங், கூடுதல் வேகம், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் போட்டியாக பிங்க் டெஸ்ட் அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் 81 சதவீத ரசிகர்கள் பிங்க் டெஸ்ட் போட்டியை ரசிப்பதாகவும், பிற்பகலில் தொடங்கும் டெஸ்டை இரவுவரைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அடுத்தார் போல் ரசிகர்கள் கூட்டமும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இருந்தது. 2வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே துபாயில் நடத்தப்பட்டது. பல அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியநிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் 2019-ஆம் ஆண்டுதான் இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடியது. 2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பிங்க் பந்தில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் 2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அளவில் 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று அசுரத்தனமாக இருக்கிறது. அடியெல்ட் மைதானத்தில்தான் அதிகபட்சமாக 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய நாடுகள்தான் 22 போட்டிகளில் 18 ஆட்டங்களில் வென்றுள்ளன, 4 போட்டிகளில்தான் விருந்தினராக வந்த அணிகள் வென்றுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை அணிகள் தங்கள் நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 இல் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஈடன் கார்டன் மைதானம் அருகே கட்டிடங்களில் பிங்க் நிற விளக்குகள் ஒளிர்ந்தன ஏன் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும்போது, இரு அணிகளின் வீரர்களும் வண்ண உடைகளில் விளையாடுவார்கள், அப்போது பந்து தெளிவாக பேட்டர்களுக்கு தெரிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெள்ளை ஆடையயில் வீரர்கள் களமிறங்கி, வெள்ளைப் பந்து பயன்படுத்தப்பட்டால் பேட்டர்களால் பந்தை அடையாளம் காண்பதும், கவனிப்பதும் கடினம். மேலும் ஆடுகளத்தின் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு எதிராக பந்து தெளிவாக தெரிய வேண்டும், பேட்டர்களுக்கு நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே “பிங்க் நிற” பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த பிங்க் நிறத்துக்காகவே பந்தில் சிறப்பு ரசாயனப் பூச்சு பூசப்படுகிறது. வழக்கமான வெள்ளைப்பந்து விரைவில் நிறத்தை இழந்துவிடும்நிலையில் இந்த பிங்க் நிறம் எளிதாக தனது நிறத்தை இழக்காது, பந்தை தேய்ந்துபோகவிடாமல் ரசாயனப்பூச்சு பாதுகாக்கிறது. ரசயான பூச்சால் பிங்க் பந்து கூடுதல் பளபளப்பாக இருப்பதால் வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஸ்விங் செய்ய முடியும், ஸ்விங் அளவும் அதிகரிக்கும். அதாவது புதிய சிவப்பு பந்தில் குறைந்த ஓவர்கள்தான் ஸ்விங் செய்ய முடியும், ஆனால், பிங்க் பந்தில் 40 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும். பிங்க் - சிவப்பு பந்து வேறுபாடு என்ன? கிரிக்கெட்டில் விளையாடப்படும் பந்தின் எடை 156 கிராம் முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பந்து நிராகரிக்கப்படும். இதற்காகவே கிரிக்கெட் பந்து தரமான தோலால் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு பந்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தோலைவிட, பிங்க் பந்து தயாரிக்க அதிக தரமான தோல் பயன்படுத்தப்படுகிறது. ஹாக்கி பந்து அளவுக்கு இணையாக, பிங்க் பந்து இருக்கும், இதன் விட்டம் 22.5 செ.மீ ஆகும். இதில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும். பிங்க் பந்தில் பந்துவீசும் போது, தொடக்க ஓவர்களில் வழக்கமான சிவப்பு பந்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஸ்விங் ஆகும். இதற்கு பந்தின் மீது பூசப்பட்ட பிரத்தேய பிங்க் நிறமும், ரசாயன பாலிஷ்தான் காரணம். சிவப்பு பந்து வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிங்க் பந்தில் கறுப்பு நூலால் தைக்கப்பட்டிருக்கும். பேட்டர்களுக்கு பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நூலால் தைக்கப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் பயன்படுத்தப்படும் கூக்கபுரா பிங்க் பந்தில் மொத்தம் 6 தையல்கள் போடப்பட்டிருக்கும். இரு தையல்கள் கையாலும்,4 தையல்கள் எந்திரத்திலும் போடப்பட்டிருக்கும். இதன் விலை சர்வதேச அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம்வரை விற்கப்படுகிறது. 3 வகை பந்துகள் சர்வதேச அளவில் கிரிக்கெட் பந்துகள் 3 வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஜி’ பந்துகளும் , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தானில் ‘டியூக்ஸ்’ பந்துகளும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ‘கூக்கபுரா’ பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பந்திலும் அதன் தையல்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் பந்தின் வேகமும், உழைப்பும் மாறுபடும். அதாவது எஸ்ஜி(சான்ஸ்பேரல் க்ரீன்லாந்த்), டியூக்ஸ் பந்துகள் முற்றிலுமாக கையால் தைக்கப்படுபவை. ஆனால், கூக்கபுரா பந்துகள் எந்திரத்தாலும், கையாலும், சில நேரங்களில் முழுவதும் எந்திரத்தாலும் தைக்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏன் சாதகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும் பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பந்தின் மீது பூசப்பட்ட ஒருவகை ரசாயனத்தால் பந்தின் பளபளப்பு 40 ஓவர்கள்வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் நன்கு ஸ்விங் செய்யலாம், பந்தின் வேகமும் அதிகரிக்கும். பிங்க் பந்தில் இருக்கும் பாலிஷ் காரணமாக வழக்கமான சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதைவிட கூடுதலாக 20 சதவீதம் ஸ்விங் ஆகும். அதாவது, பிங்க் பந்தை பந்துவீச்சாளர் வீசும்போது கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையிலான வேகம் வழக்கமான சிவப்பு பந்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டர் தனது பேட்டிங்கின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும். ஆனால், சிவப்பு நிறப் பந்து மீது போடப்பட்ட வேக்ஸ்(மெழுகு) தேயும்வரை மட்டும் ஸ்விங் ஆகும், அது தேய்ந்தவுடன் ஸ்விங் தன்மை குறைந்தவிடும். ஆனால், 40 ஓவர்களுக்குப்பின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். ஆனால், பிங்க் பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்து நன்றாகத் தேய வேண்டும். பிங்க் பந்தைத் தயாரிக்கப்படும் செயற்கை சணல் இரவு நேர பனிப்பொழிவின் போது ஈரப்பதத்தை உறிஞ்சிகொள்ளவும், பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசவும் பயன்படுத்தப்படுகிறது. 40 ஓவர்களுக்கு மேல் பந்து தேயும்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்து ஓரளவுக்கு உதவும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c623r5l6883o
  12. 19இன் கீழ் ஆசிய கிண்ணம்: தின்சார அபார சதம்; பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது. விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார். அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.) ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர். இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது. கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை. ஆட்டநாயகன்: விமத் தின்சார19இன் கீழ் ஆசிய கிண்ணம்: தின்சார அபார சதம்; பங்களாதேஷை வீழ்த்தி பி குழுவில் முதலிடம் பிடித்தது இலங்கை (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது. விமத் தின்சார குவித்த சதம், விஹாஸ் தெவ்மிக்கவின் துல்லியமான பந்துவீச்சு, குகதாஸ் மாதுளனின் சாதுரியமான கடைசி ஓவர், சண்முகநாதன் ஷாருஜனின் புத்திகூர்மையான களத்தடுப்பு என்பன இலங்கை இளையோர் அணியை வெற்றிபெறச் செய்தன. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசிய மாதுளன் முதல் இரண்டு பந்துகளில் ஒரு வைட் உட்பட 2 ஒட்டங்களைக் கொடுத்தார். அவரது 3ஆவது பந்தில் மொஹமத் பாரித் ஹசன் பைசால் அவசரமான ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்தபோது அவரை ரன் அவுட் ஆக்கிய ஷாருஜன் தனது அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை பி குழுவில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. பங்களாதேஷுடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது. முதலிரண்டு போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சண்முகநாதன் ஷாருஜன் இன்றைய போட்டியில் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் 5ஆவது ஓவரில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட்ட வீரராக களம் நுழைந்த றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார 132 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க (22), லக்வின் அபேசிங்க (21), விரான் சமுதித்த (20) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் மொஹமத் அல் பஹாத் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ரிஸான் ஹொசன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி அலீன் ஆகிய இருவரும் 57 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அப்ரார் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (98 - 3 விக்.) ஆனால், அலீன், தெபாசிஷ் சர்க்கார் தெபா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர். இதன் காரணமாக பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷின் கடைசி 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது. கலாம் சித்திக்கி அலீன் 95 ஓட்டங்களையும் தெபாசிஷ் சர்க்கார் தெபா 31 ஓட்டங்களையும் மொஹமத் பரித் ஹசன் பைசால் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரவீன் மனீஷ 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் விரான் சமுதித்த 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ரஞ்சித்குமார் நியூட்டன் திறமையாக பந்துவீசியபோதிலும் அவரை 5 ஓவர்களுக்கு அப்பால் அணித் தலைவர் விஹாஸ் தெவ்மிக்க பயன்படுத்தவில்லை. ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/200359
  13. பட மூலாதாரம்,NIK BORROW படக்குறிப்பு, கடந்த 2018இல் கண்டுபிடிக்கப்பட்ட மத்திய ஆப்பிரிக்க மெலிந்த வாய் கொண்ட முதலை (Mecistops leptorhynchus) வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் ஆகியவற்றால் அழிந்து வரும் சூழலில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கோ படுகையில் 700க்கும் மேற்பட்ட புதிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) என்னும் ஒரு தன்னார்வ இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்புகளுள், ஒரு புதிய வகை காபி செடி, விசித்திரமாக ஓசை எழுப்பும் ஒரு ஆந்தை, ஒரு மெல்லிய வாய் கொண்ட முதலை, தாவரங்களுக்கு மத்தியில் உருமறைப்பு செய்து தந்திரமாகத் தாக்கும் திறன் கொண்ட நச்சுப் பாம்பு ஆகியவையும் அடங்கும். "ஆப்பிரிக்காவின் நுரையீரல்" என்று அழைக்கப்படும் காங்கோ படுகை, ஆறு நாடுகளில் பரவியுள்ள உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு. இது உலகின் மிகப்பெரிய கரிம உறிஞ்சியாகவும் உள்ளது (வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரிமத்தைக் கிரகித்துக் கொள்ளும் சூழலியல் அமைப்பு). உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்களின் பணியை இந்த அறிக்கை விவரிக்கிறது. “இந்த அறிக்கை உலகின் மிக முக்கியமான சூழலியல் அமைப்புகளுள் ஒன்றில் இருக்கும் சிறந்த பல்லுயிர்ப் பெருக்கத்தையும், அதன் அவசர பாதுகாப்புத் தேவைகளையும் முன்னிலைப்படுத்துவதாக” உலக காட்டுயிர் நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், உலக காட்டுயிர் நிதியம், உலகளவில் காட்டுயிர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகம் முழுக்க காட்டுயிர்களின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. "காங்கோ படுகை பற்றி அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது, மேலும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பலர் அறிந்திருக்கவில்லை" என்று தன்னார்வ அமைப்பான காங்கோ படுகை பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஜாப் வான் டெர் வார்டே பிபிசியிடம் கூறினார். பல தனிச் சிறப்புமிக்க உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பது மட்டுமின்றி, கரிமத்தை உறிஞ்சும் திறன்கொண்ட உலகின் கடைசி மழைக் காடுகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதாக வான் டெர் வார்டே தெரிவித்தார். மேலும், தனது கரிம கிரகிப்புத் திறனை இழந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகளை விடவும் அதிகமான கரிம வாயுவை, இந்தப் படுகை உறிஞ்சுவதாக விளக்குகிறார் அவர். “புதிய இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அவற்றின் இருப்பு பற்றி உலகிற்கு தெரியப்படுத்தவேண்டும். மேலும், காலநிலை மாற்றத்தில் ஸ்திரத்தன்மை கொண்டுவர காங்கோ படுகை மிகவும் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது”, என்றும் அவர் குறிப்பிட்டார். "புதிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், அவை குறித்து உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதோடு, காலநிலை நிலைத்தன்மையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் காங்கோ படுகைக்கு மிக முக்கியப் பங்கு இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது," என்றும் தெரிவித்தார் வான் டெர். 'மியாவ்' என்று குரல் கொடுக்கும் ஆந்தை பட மூலாதாரம்,WWF படக்குறிப்பு, பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை மிகவும் தனித்துவமான ஒலியை எழுப்புகிறது கடந்த 2022ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை (Otus bikegila), சிறிய தீவு நாடான சௌ தோமே மற்றும் பிரின்சிபியில் மட்டுமே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் காணப்படும் கொம்பன் ஆந்தையைப் போல், அதன் காதுகளைச் சுற்றி மேல்நோக்கிய வடிவில் இறகுகள் இருக்கும். மேலும் இது பூனையைப் போல 'மியாவ்' என்ற தனித்துவமான ஒரு சத்தத்தைக் கொடுக்கும். பறவைகளைப் பற்றிய தரவுகளை வைத்திருக்கும் ‘பேர்ட்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ அமைப்பின்படி, இந்த ஆந்தை விரைவாக அழிந்து வரும் நிலையில் இருக்கிறது. உலகில் வெறும் 1,100 முதல் 1,600 வரையிலான பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தைகளே வாழ்கின்றன. ‘ஊமா குமா’ வகை ஊசித் தும்பிகள் பட மூலாதாரம்,JENS KIPPING படக்குறிப்பு, ‘பிங்க் ஃபிலாய்ட்’ ராக் இசைக் குழுவின் பாடல் தொகுப்பைத் தொடர்ந்து இந்த ஊசித் தும்பிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ராக் இசைக் குழுவான ‘பிங்க் ஃபிலாய்ட்’ லண்டன் நகரில் பன்றி வடிவம் கொண்ட ஒரு பலூன் போன்ற ஒன்றை பறக்கச் செய்தது. இந்த நிகழ்வு, காங்கோ படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை ஊசித் தும்பிக்குத் பெயரிடவும் வித்திட்டது. கடந்த 1969இல், பிங்க் ஃபிலாய்ட் இசைக்குழுவின் ஊமா குமா பாடல் தொகுப்பு வெளியானது. ஊமா என்பது ஒரு பூச்சி இனத்தைக் குறிக்கக்கூடிய பெயர் என்பதால், 'ஊமா குமா' பாடலையொட்டி, விஞ்ஞானிகள், இதற்கு ஊமா குமா ஊசித் தட்டான் எனப் பெயரிட்டனர். பட மூலாதாரம்,JEAN-FRANÇOIS TRAPE படக்குறிப்பு, மோங்கோ ஹேரி புஷ் எனப்படும் விரியன் வகைப் பாம்பு, அதன் வீரியம் மிக்க நஞ்சுக்காக மட்டுமின்றி அதன் உருமறைப்புத் திறனுக்காகவும் அறியப்படுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு கடந்த 2020ஆம் ஆண்டுதான் மோங்கோ ஹேரி புஷ் வைப்பர் (Atheris mongoensis) எனப்படும் விரியன் வகைப் பாம்பு கண்டறியப்பட்டது என்றாலும், அதற்குள்ளாகவே ஆப்பிரிக்காவில் மிகவும் வீரியம் மிக்க நஞ்சுள்ள பாம்புகளில் ஒன்றாகப் பிரபலம் அடைந்துவிட்டது. இந்தப் பாம்பின் செதில்கள், பச்சை, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களின் கலவையைக் கொண்டவை. ஆகவே, இவற்றால் காட்டிலுள்ள தாவரங்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொள்ளும், உருமறைப்புத் திறனைக் கொண்டுள்ளது. நஞ்சு மட்டுமின்றி, இந்த உருமறைப்புத் திறன் காரணமாகவும் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் குட்டித் தவளை பட மூலாதாரம்,VACLAV GVOZDIK படக்குறிப்பு, காங்கோலியஸ் ரோபஸ்டஸ் என்னும் தவளை, அது வாழும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் குறிக்க உதவுகிறது. ரோபஸ்ட் காங்கோ தவளை (Congolius robustus) என்றழைக்கப்படும், 4 செ.மீ அளவே இருக்கும் இந்தக் குட்டித் தவளை, ஓர் இரவாடி (பகலில் ஓய்வெடுத்து இரவில் இயங்கும் உயிரினம்) உயிரினமாகும். இது காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே இதுவரை காணப்படுகிறது. இது காங்கோ ஆற்றின் தெற்கே பல இடங்களில் வாழ்கிறது. உலகில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ் உயிரினம் (Endemic) என்பதால், அப்பகுதியின் சூழலியல் அமைப்பினுடைய தரநிலையையும் இதன் இருப்பு உணர்த்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgrw4d0n97o
  14. (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர். மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார். பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்ற சிபான் ஹசன், மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். இதேவேளை, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 19.46 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை வென்றமைக்காக பொட்ஸ்வானாவின் லெட்சைல் டெபோகோவுக்கு வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநருக்கான விருது வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/200268
  15. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும். தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு, இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். விரிவடைய வேண்டும். புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம். தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கெட்ட தேசமாக அமையட்டும். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும். சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம். உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம். கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது. தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே. தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர் ,படைத்தளங்களை கூடுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர் கைதும் செய்கின்றனர்). இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை. தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம். மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும். https://thinakkural.lk/article/313160
  16. 'சம்பியன்ஸ்' கிண்ணம், எதிர்கால ஐசிசி சுற்றுப் போட்டிகளை ஈரிடங்களில் நடத்த இந்தியா, பாகிஸ்தான் இணக்கம் (நெவில் அன்தனி) சம்பியன்கள் கிண்ணம் (Champions Trophy), எதிர்கால ஐசிசி சுற்றுப் போட்டிகளை ஈரிடங்களில் நடத்தும் முறைமையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட சபையும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகாலவரை ஏட்டிக்கு போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையும் அதிலிருந்து பின்வாங்கி, தங்களுக்கு இடையிலான ஐசிசி போட்டிகளை ஈரிடங்களில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண பொட்டியை நடத்துவதற்கான வழிமுறையை, போட்டி அட்டவணையை தயாரிக்கும் ஐசிசியின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. 2025 பெப்ரவரி 19ஆம் திகதியிலிருந்து மார்ச் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஆராய்வதற்கான இணையவழி கூட்டம் ஒன்றை சர்வதேச கிரிக்கட் பேரவை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தின்போது ஈரிடங்கள் முறைமை குறித்த ஒருமித்த முடிவுக்கு வந்து பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினதும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினதும் பிரதிநிதிகள் சனிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந் நிலையில், இந்திய அரசாங்கம் அதன் அணியை பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதிக்க மறுத்ததால் அடுத்துவரும் மூன்று வருடங்களில் இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும்போது, அதே மாதிரியை தனது அணிக்கும் பயன்படுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கான இறுதி அனுமதியை சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர்கள் சபை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்னிறிருந்தது. அதன் பின்னர் ஈரிடங்கள் என்ற திட்டத்தை ஏற்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியாக இருந்துவருகிறது. தமது அணி எவ்வாறு உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியாவுக்கு பயணித்ததோ அதேபோன்று சம்பியன்கள் கிண்ண போட்டியில் பங்குபற்ற தமது நாட்டிற்கு இந்தியா வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எதிர்பார்த்தது. 1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக நட்த்திய பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி கிரிக்கெட் போட்டி சம்பியன்கள் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இந் நிலையில் எதிர்காலத்தில் தயவுதாட்சண்யங்களை எதிர்பார்க்கவேண்டாம் என்ற சமிக்ஞையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பாகிஸ்தான் கொடுத்துள்ளது. 'ஆமாம், கடந்த கால அனுபவம் பாகிஸ்தானுக்கு கசப்பானது, எதிர்காலத்தில் ஈரிடங்கள் என்ற முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு ஐசிசி உறுதியான உத்தரவாதத்தை நல்லெண்ணத்துடன் எழுத்துமூலம் அளிக்க வேண்டும். மேலும் எந்தவொரு பாகிஸ்தான் அணியும் ஐசிசியின் எந்தப் போட்டிகளிலும் விளையாட இந்தியாவுக்குச் செல்லாது. அதே மாதிரி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தராது'' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வட்டாரம் ஒன்று அந் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இரண்டு கிரிக்கெட் சபைகளும் பரஸ்பர புரிந்துணர்வடன் ஒரு முடிவை எட்டுமாறு ஐசிசி கேட்டுக்கொண்டதாக அந்த வாட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது. துபாயில் இணையவழி கூட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கான ஏற்பாட்டை ஐசிசி செய்திருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் சனிக்கிழமைக்கு பிற்போடப்பட்டிருந்தது. அன்றைய தினம்தான் (டிசம்பர் 1) ஐசிசியின் தலைவர் பதவியை இந்தியாவின் ஜெய் ஷா பொறுப்பேற்றார். அத்துடன் இரண்டு கிரிக்கெட் சபைகளும் ஆலோசகைகளில் ஈடுபட்டிருந்ததால் அன்றைய தினமும் இணையவழி கூட்டம் நடைபெறவில்லை. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம் அனுஷ்டிக்கப்படுவதால் நாளை செவ்வாய்க்கிழமைவரை அந் நாட்டில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் எந்த நேரத்திலும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படலாம் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை இந்திய அரசு அனுமதிக்கவில்லை என்பதற்கான கடிதத்தை காட்டுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அத்தகைய கடிதம் எதுவும் காட்டப்படவில்லை என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. 'அரசாங்கத்திடம் இருந்து எந்தக் கடிதமும் இல்லை என்றும் அக்டோபர் 21ஆம் திகதி நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் வழங்கப்பட்ட சம்பியன்கள் கிண்ணத்துக்கான முதன்மை பாதுகாப்பு திட்டத்தை ஒப்புக்கொண்டது என்றும் ஒருவேளை, விளையாட்டுத்துறை நியாயாதிக்க சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை அணுகி வழக்கு தொடுத்தால் அது இந்தியாவுக்கு பலவீனமதாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டச் சபையை மறைமுகமாக பின்வாசல் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன' என கூறப்படுகிறது. ஐசிசியின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. கிரிக்கெட்டின் நிர்வாகக் குழுவின் வருமானத்தில் பெரும்பங்கை இந்தியா பெறுகிறது எனவும் இரண்டு அணிகளும் மோதும் போட்டிகளின் மூலமே அதிக வருவாய் கிடைப்பதால் பாகிஸ்தான் அதிக பங்கைக் கேட்கலாம் எனவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. 'சம்பியன்கள் கிண்ண சிக்கல் தீர்க்கப்பட்டவுடன் எதிர்கால வருமானத்திலிருந்து தனக்கு சேரவேண்டிய சரியான பங்கை பெறும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இந்த விடயங்களை பாகிஸ்தான் எடுத்துக்கூறும்' எனஅந்த வட்டாரம் கூறி முடித்துள்ளது. https://www.virakesari.lk/article/200267
  17. சர்வதேச அரங்கில் ஷாருஜன் கன்னிச் சதம்: ஆப்கானையும் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது இலங்கை (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு போட்டியில் 131 ஓட்டங்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றி பெற்றது. அப் போட்டியில் சண்முகநாதன் ஷாருஜன் குவித்த அபார சதம் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றியதுடன் அணியின் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. சர்வதேச அரங்கில் ஷாருஜன் குவித்த முதலாவது சதம் இதுவாகும். நேபாளத்திற்கு எதிரான முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்து ஆட்ட நாயகனான ஷாருஜன், இந்தப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி இரண்டாவது தொடர்ச்சியான ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார். ஆரம்ப வீரர் துல்னித் சிகேரா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி தடுமாற்றம் அடைந்தது. (0 - 1 விக்.) ஆனால், கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் அணித் தலைவர் ஷாருஜன் மிகவும் பொறுப்புணர்வுடன் அதேவேளை அனுபவசாலிபோல் துடுப்பெடுத்தாடி புலிந்து பெரேராவுடன் 2ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். 132 பந்துகளை எதிர்கொண்ட ஷாருஜன் 7 பவுண்டறிகளுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார். புலிந்து பெரேரா 5 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட விமத் தின்சார 26 ஓட்டங்களையும் லக்வின் அபேசிங்க 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அல்லா கஸன்பார் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களுக்கு சுருண்டது துடுப்பாட்டத்தில் நஸிபுல்லா அமிரி (33), ஹம்ஸா அலி கில் (32) ஆகிய இருவரே 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரவீன் மனீஷ 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஹாஸ் தெவ்மிக்க 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரஞ்சித்குமார் நியூட்டன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷாருஜன் சண்முகநாதன். https://www.virakesari.lk/article/200185
  18. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார். அமைச்சர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில், ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். அவர்களின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. சில சலுகைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதை பரிசீலித்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313115
  19. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவர் பதவியை ஏற்றார் இந்தியாவின் ஜெய் ஷா 01 DEC, 2024 | 02:51 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) புதிய தலைவராக ஏகமனதானத் தெரிவான இந்தியாவின் ஜெய் ஷாவின் பதவிக் காலம் இன்று டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பமானது. லொஸ் ஏஞசிலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் மூலம் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வளர்ச்சி குறித்து முக்கிய கவனம் செலுத்துவதே தனது குறிக்கோள் என ஷா தெரிவித்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிரிக்கெட் நிர்வாகத்தில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள ஷாவின் பயணம் இந்தியாவின் ஒரு மாவட்டத்திலும் மாநிலத்திலும் 2009இல் ஆரம்பமானது. குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் (ஜிசிஏ) பணியாற்றிய அவர் விரைவாக பதவிகளில் உயர்வு பெற்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராக 2019ஆம் ஆண்டு தெரிவான ஷா, அப் பதவிக்கு மிக இளவயதில் தெரிவானவர் என்ற பெருமையைப் பெற்றார். கௌரவ செயலாராக ஐபிஎல் கிரிக்கெட்டுக்கென சாதனை மிகு மிகப் பெரிய தொகைக்கு ஊடக உரிமை ஒப்பந்தத்தை ஏற்படுத்திய அவர், மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட், புதிய அதிநவீன மேம்பாட்டு நிலையம், டெஸ்ட் கிரிக்கெட் ஊக்குவிப்புத் திட்டம் உட்பட இன்னும் பல விடயங்களை ஆரம்பித்தார். ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விடயங்கள் குழுவின் தலைவராகவும் உலக கிரிக்கெட்டில் ஷா மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். ஐசிசி தலைவராக பதவியேற்ற ஜெய் ஷா கருத்து தெரிவிக்கையில், 'ஐசிசி தலைவர் பதவியில் எனது பணியை ஆரம்பப்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் இந்த முக்கியமான பணியை ஏற்பதற்கு என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவளித்த ஐசிசி பணிப்பாளர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் சபைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 'லொஸ் ஏஞ்சிலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு நாங்கள் தயாராகும் இவ் வேளையில், முன்னரை விட சகல அம்சங்களை உள்ளடக்கிய விளையாட்டாக கிரிக்கெட்டை பிரபல்யம் அடையச் செய்ய முயற்சிப்பதால், இந்தத் தருணம் கிரிக்கெட்டிற்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைகிறது. 'மூவகை கிரிக்கெட்களிலும் சகவாழ்வை ஏற்படுத்துதல், பெண்களின் கிரிக்கெட் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்ற விடயங்களில் நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். சமகால மற்றும் புதிய இரசிகர்களின் ஈடுபாட்டுடன் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை உலககெங்கும் உள்ள நமது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகச் சிறந்த வளங்கள் மற்றும் தளங்கள் உறுதி செய்யப்படுகிறது. 'கடந்த நான்கு வருடங்களாக இப் பதவியில் தலைமை தாங்கியதற்காக கிரெக் பார்க்லேவுக்கும், அவரது பதவிக் காலத்தில் ஈட்டப்பட்ட மைல்கற்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். உலக அரங்கில் விளையாட்டின் வரம்பையும் பரிணாமத்தையும் நிலையாக விரிவுபடுத்த ஐசிசி அணியினருடனும் உறுப்பு நாடுகளுடனும் நான் நெருக்கமாக பணியாற்ற தயாராக இருக்கிறேன்' என்றார். https://www.virakesari.lk/article/200152
  20. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான யாழ். இளைஞனுக்கு பிணை 04 DEC, 2024 | 04:43 PM பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாவீரர் நாள் தொடர்பிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவிலை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். கைது செய்த இளைஞனை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 72 மணித்தியால விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இன்று புதன்கிழமை (04) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (04) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, குறித்த நபரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் அந்த நபருக்கு பயணத் தடையும் விதித்ததுள்ளது. https://www.virakesari.lk/article/200411
  21. பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக தென் கொரியா மாறுமா?. அதற்கான காரணமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா?. ஒரு காலத்தில் அதன் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டால், இது பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கும் என்று சொல்லப்படுகிறது. 1960-களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்த பிரச்சனையும் தொடங்கியது. அந்த நேரத்தில், தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு ஆறு குழந்தைகளாக இருந்தது. அதே நேரத்தில் அதன் தனிநபர் வருமானம் உலக சராசரியில் 20% மட்டுமே. இந்த நிலையில், தென் கொரியாவில் இன்று கருவுறுதல் விகிதம் உலகளவில் மிகக் குறைந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மக்கள் தொகை தற்போது 52 மில்லியனாக இருக்கிறது தற்போதைய நிலையே தொடர்ந்தால் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை 17 மில்லியனாக அல்லது 14 மில்லியனாக சுருங்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தென் கொரிய அரசாங்கம் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கான ராணுவ சேவை விலக்குகள் ஆகியவையும் அடங்கும். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல தென் கொரிய பெண்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில், குடும்பங்களை தொடங்குவதை விட தொழிலைத் தேர்வு செய்கிறார்கள். https://thinakkural.lk/article/313108
  22. 04 DEC, 2024 | 01:50 PM இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன், அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை டெமோகிரட் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் இஸ்ரேலிய அரசாங்கம் கைப்பற்றுவதற்கும் தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கும் இன சுத்திகரிப்பினை மேற்கொள்வதற்கும் என அவர் தெரிவித்துள்ளார். கடும்போக்காளர்கள் காஜாவில் யூதகுடியேற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர், காசாவின் வடபகுதியில் உள்ள மக்களை காலவரையறையின்றி அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/200401
  23. மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை- சபை முதல்வர் விளக்கம் மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாகாண சபை முறை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ள கருத்து பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் கேட்டபோதே சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம்.இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடனும் அன்று ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். https://thinakkural.lk/article/313098
  24. யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரம் 04 DEC, 2024 | 04:57 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம் 42 பேரும், ஒக்டோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாளுக்கு நாள் டெங்கு தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகிறது. யாழ்ப்பாணம், கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கொழும்புத் துறையிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/200408

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.