Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 13 தொடர்பில் டில்வின் சில்வா விளக்கம் புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன்,மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றில் மாகாண சபை முறைமை தொடர்பில் ரில்வின் சில்வா கூறியதாக வெளியான செய்தி நாட்டில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்; வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 ஆவது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன். மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/313164
  2. 04 DEC, 2024 | 05:13 PM (எம்.மனோசித்ரா) வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2023 - 2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கு நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அந்த கால அவகாசத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பித்தால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளமாட்டார்கள் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200426
  3. மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார். https://thinakkural.lk/article/313167
  4. 04 DEC, 2024 | 04:51 PM பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று புதன்கிழமை (03) முதல் தடவையாக பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார். அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார். மேலும், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன அவர்களின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200407
  5. புலர் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2024 பகுதி 1 "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள்" நிகழ்வை சிறப்பாகச் செயல்படுத்த உதவி செய்த அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரங்கத்தைப் பொருள் படுத்திய சிறப்பான பேச்சாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள், அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது. முக்கியமாக, இன்று வருகை தந்த மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கும், அவர்களை ஆதரித்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியை உரத்து சொல்கிறேன். இத்தகைய நாள் வழக்கமாக நினைவில் கொள்ளப்பட்டு, பலருக்கும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டு வரத் தகுந்த நிகழ்வாக அமைய வேண்டும். எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றிய வட்டு இந்துக் கல்லூரி உப அதிபர் திரு கோகிலராஜன் அவர்களுக்கும் NIST கல்வி நிறுவன நிர்வாகிகள் திரு சிவராஜா(பொறியியலாளர்), நல்ல பல கருத்துகளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். திருமதி சி.சுகுணதேவி அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இயற்கைப் பண்ணையாளர் திரு ரவிசங்கர் அவர்களுக்கும் தாதிய உத்தியோகத்தர் திரு கிருஸ்ணகுமரன்(கிரி) அவர்களுக்கும் உளமார நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவறூபன்(விசேட தேவைப் பிரிவு), சிறப்புரையாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜீவானந்தம், சுழிபுரம் கிழக்கு கிராமசேவகர் திரு ராஜ்கண்ணா, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சிறப்புரையாற்றிய எமது புலர் அறக்கட்டளை நிர்வாகி கிராமசேவகர் திரு சிவறூபன், வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் கு.பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய உபசெயலாளர் திரு சிறிதரன் அவர்களுக்கும் எமது நிர்வாக உறுப்பினரும் யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர் திருமதி அபிராமி அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்புற நடத்திய செயலாளர் திரு பரணீதரனுக்கு சிறப்பு நன்றிகள். வருகை தந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். நான்காவது ஆண்டாகவும் இலவசமாக மண்டபம், ஒலிபெருக்கி மற்றும் தளபாடங்களைத் தந்துதவிய வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இன்றைய நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் தோள் கொடுத்த உறவுகள், நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நாள் சாத்தியமாகியிருக்காது. பரிசுப் பொருட்கள் வாங்க உதவிய திரு பரணீதரன் அவர்களுக்கும் உளமார நன்றி கூறிக்கொள்கிறோம். வீடியோ பதிவில் உதவிய செல்வன் ப.பிவிசன், திரு கண்ணன், திருமதி வனஜா அவர்களுக்கும் மேலும் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் (பணிச்சுமை காரணமாக) தன்னுடைய மனப்பூர்வ ஆதரவை வழங்கிய வர்களான, வடமாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களுக்கும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் Dr. R.சுரேந்திரகுமாரன் அவர்களுக்கும், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களுக்கும், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு பாலறூபன் அவர்களுக்கும், பல்மேரா றிசோட் நிறுவனர் திரு சுகந்தன் அவர்களுக்கும் எமது நன்றிகள். இன்று வரை எமக்கு உறுதுணையாக இருக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வசிக்கும் 110 கருணை உள்ளங் கொண்ட நன்கொடையாளர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய நன்கொடைகள் மூலமாகவே எமது அமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. உங்கள் எல்லோரினதும் ஆதரவினால் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்(5kg அரிசி, 1kg பருப்பு, 1kg சீனி, 2சோயாமீற் அடங்கிய முப்பது பொதிகள்), போர்வைகள் மற்றும் சிற்றுண்டிகள், தேநீர் ஆகியவற்றை இன்று வழங்கியுள்ளோம். சிற்றுண்டி வழங்கல் தேநீர் வழங்கல் மற்றும் பொதிகள் வழங்கலில் ஈடுபட்ட திரு கோபிக்குமரன், திரு அறிவுக்குமரன், செல்வன் ரேனுஜன், செல்வன் பிவிசன் ஆகியோருக்கும் தேநீர் தயாரித்து வழங்கிய திரு கிருபா அண்ணா, திரு மோகன், திரு சீலன் ஆகியோருக்கும் பெயர் தெரியாது உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பும் நன்றியும் உரித்தாகட்டும். எஞ்சியிருந்த மரக்கன்றுகள் மேலும் சிலருக்கு பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆதரவை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
  6. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது - எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? ஃபெஞ்சல் புயல் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. மேற்கு - தென்மேற்கு திசையில் புயல் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், 6 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து வந்து கரையை கடந்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது'' என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்றும் இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணியளவில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை எங்கு அதிக மழை? இன்று காலை 7 மணி நிலவரப்படி, ''கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன'' என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். ''புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என பாலச்சந்திரன் கூறியுள்ளார். படக்குறிப்பு, புயல் கரையை கடந்தாலும், புதுச்சேரியை சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள் புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது. ''மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம் படக்குறிப்பு, புதுச்சேரியில் புயலின் தாக்கத்தால் சாலையில் விழுந்துகிடக்கும் மரம் இன்று என்ன நிலை? இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. புதுவையில் கடும் பாதிப்பு புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் கூறுகிறார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ராணுவம் வந்துள்ளதாக பிபிசி தமிழ் செய்தியாளர் கூறுகிறார். '' மழையின் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்வட்ட சாலைகளில் முழுங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்'' என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த். படக்குறிப்பு,புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் ''இந்த நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுதான் வரலாறு காணாத மழை.இந்த அளவுக்கு மழையை நான் பார்த்ததில்லை. வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது'' என்கிறார் ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் நாராயணசாமி. ''வீடு முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை'' என்றார் ஜெனனி என்பவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ரமேஷ் குமார்,'' நாங்கள் படகுகளை கொண்டு வந்துள்ளோம். 20-30 பேரை மீட்டுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே எங்களது முதன்மை பணி'' என கூறுகிறார். படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் சென்னையில் மீண்டும் விமான சேவை மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. 226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது. புதுச்சேரியில் 4 பேர் உயிரிழப்பு புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது. ரெய்ன்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2l9lyjv79eo
  7. 01 DEC, 2024 | 08:25 PM வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை 29.11.2024 மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டடத் தொகுதியில் மிக நீண்ட காலமாக பயன்பாடில்லாது இருக்கும் தளத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நிரந்தர சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என வணிகர் கழப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். யாழ். மாநகர சபையுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை முன்னெடுக்க பலர் ஆர்வமாக உள்ளபோதும் அவர்களுக்கான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான இடங்களையும், அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக வணிகர் கழக பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அதற்குப் பொருத்தமான இடங்களை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒதுக்கினால் அவற்றை குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே கூரையில் அலுவலர்களை ஒழுங்குபடுத்தினால் இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பிரதேச செயலர் பிரிவுகளில் இடங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் அதற்கான தடைகள் இருக்காது என நம்புவதாகவும் அவற்றைச் செய்ய முடியும் எனவும் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கக் கூடிய இடங்களை அடையாளப்படுத்திய பின்னர் வருடத்தில் ஒரு தடவையாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் அனுகூலமான பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என வணிகர் கழகப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். விரைவில் அவற்றை ஆரம்பிப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். சத்திரசந்தையை புனரமைக்குமாறும் கடந்த காலத்தில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து செயற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனவும் யாழ் வணிகர் கழகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் கவனமெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் நிலவும் மணல் பிரச்சினைக்கு தெற்கிலிருந்து இங்கு மணலைக் கொண்டு வரும் யோசனையும், கடலிலிருந்து மணலைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார். பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய வணிகர் கழத்தினர் தீவகப் பகுதிகளின் பொருட்கள் போக்குவரத்து landing craft mechanism பயன்படுத்துவதன் அவசியத்தையும் முன்வைத்தனர். இவற்றுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பதிலளித்தார். வடக்கில் நலிவுற்றவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு சிறந்த பொறிமுறையை உருவாக்குமாறும் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/200184
  8. விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி வரை அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம்( Jaffna) நீதவான் நீதிமன்றம் இன்று(1) உத்தரவிட்டுள்ளது. பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றையதினம் குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் வழக்கில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/prabakaran-photo-post-youth-remanded-till-dec-4-1733058231
  9. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும். ஹோட்டல் திறப்பு விழாவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/312935
  10. 01 DEC, 2024 | 04:29 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 934 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 100 வீடுகள் முழுமையாகவும் 2379 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் 135 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 745 குடும்பங்களைச் சேர்ந்த15 ஆயிரத்து 464 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/200162
  11. காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய நகரங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மத்திய தரத்தில் காணப்படுகின்றது. சாதாரணமாக காற்றின் தரம் 50 புள்ளிகளுக்கு குறைவாகக் காணப்பட வேண்டுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. எனினும், யாழ். மாவட்டத்தில் காற்றின் தரம் 130 புள்ளிகளாகவும் கொழும்பு நகரில் காற்றின் தரம் 120 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலைமையின் காரணமாக சுவாசக் கோளாறுகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/312951
  12. 01 DEC, 2024 | 07:47 PM வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (01) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/200183
  13. அந்நிய மண்ணில் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து : சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது 01 DEC, 2024 | 04:45 PM (நெவில் அன்தனி) அந்நிய மண்ணில் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த நியூஸிலாந்து, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. இங்கிலாந்தின் வெற்றியில் ஹெரி குக் குவித்த சதம், ப்றைடன் கார்ஸின் 10 விக்கெட் குவியல் என்பன முக்கிய பங்காற்றின. இந்தப் போட்டி முடிவை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நியூஸிலாந்தின் வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நான்கு நாட்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்ற இப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஜேக்கப் பெத்தெல் 50 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பென் டக்கட் 27 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். முன்னதாக போட்டியின் நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களிலிருந்து மிகவும் இக்கட்டான நிலையில் தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதலாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 348 ஓட்டங்களையும் இங்கிலாந்து 499 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/200164
  14. தொடர்ந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் - அலப்போவிலிருந்து வெளியேறியது சிரிய இராணுவம் 01 DEC, 2024 | 11:29 AM கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதை தொடர்ந்து சிரிவின் அலப்போ நகரிலிருந்து சிரிய இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே சிரிய படையினர் பின்வாங்கியுள்ளனர். நகரின் பெரும்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவித்துள்ள சிரிய இராணுவம் எனினும் அந்த நகரை மீள கைப்பற்றுவதற்காக பதில் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. சிரியாவின் உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை தங்கள் நடவடிக்கையை ஆரம்பித்தது முதல் 20 பொதுமக்கள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை சிரிய ஜனாதிபதி தனது நாட்டின் ஸ்திரதன்மை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சிரியாவிற்கு அதன் நண்பர்கள் சகாக்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் திறன் உள்ளது என சிரிய ஜனாதிபதி அசாத் தெரிவித்தார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹயட் டஹ்ரிர் அல்சாம் என்ற அமைப்பே தற்போதைய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த அமைப்புடன் துருக்கி ஆதரவுபெற்ற குழுவும் இணைந்து செயற்படுகின்றது. இவர்கள் அலப்போவின் விமானநிலையம் உட்பட பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/200121
  15. 01 DEC, 2024 | 04:51 PM கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் மரக்கறிகளும் அழிவடைந்துள்ளன. இந்நிலையில், நுவரெலியாவில் மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1200 முதல் 1300 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது. ஏனைய மரக்கறி வகைகளின் விலை அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதால் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமானவர்கள் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன், நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரிகள் வியாபாரமின்றியும் அதிலும் பல மரக்கறிகள் இரண்டு, மூன்று நாட்களின் பின் பழுதடைந்து கழிவுகள் ஏற்படுவதாகவும் இதனால் பாரிய நட்டம் ஏற்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதுடன் சீரற்ற வானிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் விளைச்சல் இல்லாததால் காய்கறி விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/200161

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.