Everything posted by ஏராளன்
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம் அம்பாறை, கார்த்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றுமொரு பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று (30) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். "மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பஸ்ஸில் வந்தோம். அப்போது மாலை 3.30 மணி இருக்கும். அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள். நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக டிராக்டரின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது. உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம்.அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது. அந்நேரத்தில் ஒரு அண்ணன் வந்து இரண்டு பேரை இழுத்துக் காப்பாற்றானார். நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன். பின்னர் மரத்தில் ஏறினேன். ஒரு படகு அருகில் வந்தது. நான் கத்தினேன், கேட்கவில்லை. மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன். அப்போது கத்தினேன், அவர்கள் வந்தார்கள். நான் படகில் ஏற்றப்பட்டேன். நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். அப்போதும் ஒருவர் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்" https://tamil.adaderana.lk/news.php?nid=196673
-
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம்!
லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம் சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கு லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 309 ரூபாவாகும். 283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை - 371 ரூபா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை - 313 ரூபா https://tamil.adaderana.lk/news.php?nid=196672
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
உழவு இயந்திர விபத்து - மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு அம்பாறை, கார்த்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றுமொரு பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று (30) காலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியில் இருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இதன்படி, சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=196663
-
இலங்கையின் அரச துறை ஏனைய ஆசிய நாடுகளை விடப் பெரியது - வெரிட்டே ஆய்வில் தகவல்
30 NOV, 2024 | 01:43 PM தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது. வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு ரீதியில், பிராந்தியத்தில் உள்ள ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர். தமது தொழிற்படையில் இந்தியா 9 வீதமும் வியட்நாம் 8 வீதமும் பங்களாதேஷ் 5 வீத உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன. அரச துறைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும், இதன் காரணமாக அதிக செலவு ஏற்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 940 பில்லியன் ரூபாவினை அதன் மீண்டெழும் பாதீட்டில் 20 வீதத்தையும் அதன் வருமானத்தில் 31 வீதத்தையும் அரச துறை சம்பளங்களுக்காகச் செலவிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23 வீதம் சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிதியே எஞ்சியுள்ளமை ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200075
-
காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்
“ஃபெஞ்சல்” புயல் தாக்கம்; காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை! 30 NOV, 2024 | 12:26 PM தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 - 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரம் குறைவடைவதன் மூலம் வளிமண்டலத்தில் மாசு அதிகரிக்கக்கூடும். இதனால் காற்று மாசுபாடு ஏற்படும். காற்று மாசுபாடு ஏற்படுவதால் மனிதர்கள் மத்தியில் நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். குறிப்பாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/200072
-
நாட்டு அரிசி இறக்குமதிக்கு விலைமனு கோரல் ஆரம்பம்!
30 NOV, 2024 | 12:05 PM இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/200067
-
அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரங்களைக் காட்டிலும் துல்லியமானதாக இருக்கும் (சித்தரிப்பு படம்) எழுதியவர், அலெஹாண்ட்ரா மார்டின்ஸ் பதவி, பிபிசி நியூஸ் “கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.” “இன்னும் நாங்கள் அந்த அளவுக்குத் துல்லியமான ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அதை நெருங்கிவிட்டோம்,” என்று அமெரிக்காவிலுள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIST) ஆராய்ச்சியாளரும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான இயற்பியலாளர் ஜன் யே தெரிவித்துள்ளார். இங்கு அவர் குறிப்பிடும் கடிகாரம், அணுக்கரு கடிகாரம் (Nuclear clock). சமீபத்தில் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் ஜன் யேவும் சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவும் இந்தக் கடிகாரத்தின் முதல் முன்மாதிரியை விவரித்தனர். மேலும் இப்படிபட்ட ஒரு கடிகாரத்தை உருவாக்கத் தேவையான அனைத்து சாதனங்களும் இப்போது நமக்கு நேரடியாகக் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது காலத்தை அளவிட உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் தரநிலையாக, அணுக் கடிகாரங்கள் (Atomic clock) உள்ளன. அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரத்தைவிட மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் இதன் வழியாக பிரபஞ்சத்திலுள்ள கரும்பொருள் (Dark matter) போன்ற பல்வேறு மர்மங்களை அறிஞர்களால் கண்டறிய முடியும். அணுக்கரு கடிகாரங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் நேச்சர் இதழில் இதைப் பற்றி வெளியான கட்டுரை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது? அணுக் கடிகாரத்துக்கும் அணுக்கரு கடிகாரத்துக்கும் என்ன வித்தியாசம்? அணுக் கடிகாரம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கணினிகள், செல்போன்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல தொழில்நுட்பங்களில் அணுக் கடிகாரங்களின் பங்கு உள்ளது. அணுக் கடிகாரங்கள் எலக்ட்ரான்களில் இருந்து வரும் சமிக்ஞைகளைப் பதிவு செய்து அதன் ஆற்றலை மாற்றுகிறது. இதைத்தான் குவாண்டம் லீப் எனக் குறிப்பிடுவர். "எந்தவொரு கடிகாரத்திற்கும், டிக் என்று சுழலும் பெண்டுலம் போன்ற ஒன்று, அதுபோக இந்த ஊசலைக் கணக்கிடும் ஓர் அமைப்பு என இரண்டு அமைப்புகள் இருக்கும்,” என்று கொலம்பியாவின் விஞ்ஞானி ஆனா மரியா ரே கூறினார். இவர் என்.ஐ.எஸ்.டி-இல் அணு இயற்பியலாளராகவும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், அணுக் கடிகாரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணராகவும் இருக்கிறார். “ஒரு சாதாரண கடிகாரத்தில் ஒரு பெண்டுலம் இருக்கும். அதை இயக்கவும், எத்தனை முறை அந்த பெண்டுலம் நகர்ந்தது என்று நமக்குச் சொல்லவும் ஓர் இயக்கமுறை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்” என்கிறார் ரே. “அணுக் கடிகாரத்தைப் பொறுத்தவரை, அலைவுறுவது (ஊசலுக்குச் சமமானது) ஒளியின் மின்காந்த அலையாகும். ஒளியியல் அணுக் கடிகாரங்களில் வழக்கமாக லேசர் இருக்கும். அதில் அலைவுகளைக் கணக்கிடுவது அணுக்களின் எலக்ட்ரான்கள்” என்கிறார் ரே. “அணுக் கடிகாரத்தின் அலைவுகளை (Oscillation) சாதாரண எலக்ட்ரான்களால் அளவிட முடியாது. ஏனென்றால் அது மிகவும் வேகமாக அசையும். எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையில்தான் ஆற்றலை உள்வாங்குகிறது. இதைத்தான் எலக்ட்ரானின் அதிர்வெண் என்று கூறுவர். இந்த நிலையில்தான் எலக்ட்ரான்கள் தூண்டப்படும்” என்று ரே விளக்கினார். “லேசர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான அலைவுகளைக் கொண்டுள்ளதால், உலகம் முழுக்க நேரத்தைக் கணக்கிட இது சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜிபிஎஸ் பயன்படுத்தி, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வாறு செல்வது என்பதற்கான வழிகளைக் கேட்கும்போது, நாம் அணுக் கடிகாரங்களையே சார்ந்துள்ளோம். கணினிகள், செல்போன்கள், விண்வெளி ஆய்வு உள்படப் பல தொழில்நுட்பங்களில் குறைந்தபட்சம் 16வது இலக்க துல்லியத்துடன் (Sixteenth digit accuracy) தற்போதைய உலகளாவிய ஒத்திசைவுக்கு அணுக் கடிகாரங்களே பொறுப்பாகும். 'பதினாறாவது இலக்க துல்லியம்' என்பது குறைந்தபட்சம் நேரத்தைக் கணிப்பதில், இந்தக் கடிகாரம் 16 தசம இடங்களுக்குத் துல்லியமாக இருக்கும் என்று பொருள். இந்த நிலை என்பது நம்ப முடியாத அளவிற்குத் துல்லியமானது. அதாவது, ஒரு நொடியின் ஒரு பின்னம் வரை நம்மால் நேரத்தைத் துல்லியமாக அளவிட முடியும். அது பில்லியன் கணக்கான ஆண்டுகளில் ஒரு விநாடியை அளவிடுவதற்குச் சமமாக இருக்கும். “அனைத்து அளவீடுகளுமே நேரத்தைக் கொண்டுதான் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒளியின் வேகத்தை அறிந்ததால்தான் நம்மால் தூரத்தின் அளவைக் கணக்கிட முடிகிறது” என்கிறார் ரே. அனைத்திலுமே அணுக் கடிகாரங்களின் பங்கு உள்ளதாகக் குறிப்பிடும் ரே, “ஜிபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் செயற்கைக்கோள்களில்கூட அணுக் கடிகாரம் இடம்பெற்றுள்ளது. அதுதான் நாம் ஜிபிஎஸ் பயன்படுத்தி, ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் வழியைக் காண்பிக்க உதவுவதாக” ரே தெரிவிக்கிறார். அணுக்கரு கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது? அணுக்கரு கடிகாரத்தைப் பொறுத்தவரை, அணுவின் உட்கருவில் இருந்து வரும் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக எலக்ட்ரான்களில் இருந்து வரும் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. “அணுக் கடிகாரங்களைப் பொறுத்தவரை அவை அணுவிலுள்ள எலக்ட்ரான்களை தூண்டும். ஆனால் ஓர் அணு என்றால் அதில் எலக்ட்ரான், அணுவின் கருவில் நியூட்ரான் மற்றும் ப்ரோடோன் இருக்கும். அதனால் இவையும் சேர்த்துத் தூண்டப்படலாம்,” என்றார் ரே. “ஆனால் இந்தத் தூண்டுதலுக்கு அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படும். தோரியம் போன்ற மிகக் குறைந்த அளவிலான அணுக்களிலே இந்தத் தூண்டுதலுக்கான ஆற்றல் குறைவாகத் தேவைப்படுகிறது." இதன் மையப்பகுதி லேசரில் இருந்து குறைந்த அளவிலான அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும். மையப்பகுதியை மாற்றியமைக்கத் தேவைப்படும் மிகத் துல்லியமான லேசர் அதிர்வலைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு வரும் முயற்சியாகவே இருக்கிறது. இந்த மாற்றம் 70களில் கணிக்கப்பட்டு இருந்தாலும் இது "வைக்கோல் போரில் ஓர் ஊசியைக் கண்டுபிடிப்பதைப்" போன்றது என்பதால் அது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ரே சுட்டிக்காட்டுகிறார். திடமான ஒரு படிகத்தில் பொறிக்கப்பட்ட தோரியத்தின் கருவில் ஏற்பட்ட ஆற்றல் மாற்றத்தைப் புறஊதா கதிர்களைக் கொண்டு அதன் அதிர்வெண்ணை துல்லியமாகக் கணக்கிட்டதைத்தான் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு முடிவுகளில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். "ஓர் அணுவைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும் அணுவின் கருவில்தான் அணுக்கரு கடிகாரத்தின் குவாண்டம் ஜம்ப் நிகழும். முதல்முறையாக எங்களின் செயல் இதை நிரூபித்துள்ளது" என்று ஜெர்மன் விஞ்ஞானியும் வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான தோர்ஸ்டன் ஷாம் கூறுகிறார். அவர், இதைப் பற்றிக் கூறுகையில் “இந்த நிலையில் நியூட்ரான்தான், ஒரு ஆற்றல் நிலையில் இருந்து மற்றொரு ஆற்றல் நிலைக்கு மாறுவதாகத்,” தெரிவித்தார். பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரத்தில், அதி-துல்லியமான லேசர் ஒன்று ஒரு படிகத்தில் உள்ள அணுவின் கருவைத் தூண்டுகிறது (சித்தரிப்பு படம்) அணுக்கரு கடிகாரங்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஷாம் நம்புகிறார். “இனி எல்லாமே மிக விரைவில் நடக்கும். இந்த ஒரு ஆண்டிலேயே பல முன்னேற்றங்களைப் பார்த்துவிட்டோம். லேசரில்தான் பெரும்பான்மையான முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. அதைச் செய்து முடிக்க ஐந்து ஆண்டுகள் மட்டுமே போதும்” என்கிறார். மேலும், “முதல் மாதிரியின் மூலம் தோரியத்தை கொண்டு மிகத் துல்லியமான அளவீடுகளுக்காக அதை ஒரு குரோனோமீட்டராக பயன்படுத்தலாம். இன்னும் சில தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் தேவைப்படுகிறதே தவிர வேறெந்தத் தடையும் கிடையாது” என்றும் ஷாம் தெரிவித்தார். ‘பிரபஞ்சத்திற்கான ஒரு புதிய பாதை’ அணுக்கரு கடிகாரம், அணுக் கடிகாரத்தைவிடத் துல்லியமாக இருந்தாலும், அது அதிகமாக அறியப்படுவது அதன் செயல் திறனால் அல்ல, அதன் நிலைத் தன்மையால்தான். “ஏனென்றால் இதன் மையம் மிகவும் சிறியதாக உள்ளதால், இதில் ஈடுபடும் அணுக்கரு ஆற்றல் அதிகம். வெப்பநிலை, காந்தம் புலம் போன்ற வெளிப்புறக் காரணிகளால் இந்தக் கரு பாதிப்படையாது” என்கிறார் ஷாம். “மிகவும் எளிமையான கண்ணாடி போன்ற பொருட்களில் நிறைய எண்ணிக்கையிலான மையங்களை அதன் செயல்திறனைக் குறைக்காமல் பொறிக்க முடியும்” என்கிறார். தொழில்நுட்பத்தில் இந்த அணுக்கரு கடிகாரங்களின் பயன்பாட்டைவிட, விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் அதிகம் உற்சாகமடையைக் காரணம், இனி பிரபஞ்சத்தைப் பற்றி ஆய்வு செய்ய நிறைய புதிய பாதைகள் திறக்கப்படும் என்பதுதான். “இந்த அணுக்கரு கடிகாரம் வெளிப்புறக் காரணிகளால் பாதிப்படையவில்லை என்றாலும் உட்புறக் காரணிகளால் பாதிப்படையும். மின்காந்த சக்தியும் அணுக்கருவின் சக்தியும்தான் இந்தக் கருவைப் பாதுகாக்கிறது. இதைப் பற்றி ஆராய்வது மிகவும் கடினமான ஒன்று. அதனால் இந்த அணுக்கரு கடிகாரம் சில இயற்கையான சக்திகளுக்கு சென்சாராக செயல்படுகிறது” என்று விளக்குகிறார் ஷாம். பட மூலாதாரம்,WILKE PHOTO படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று ஷாம் நம்புகிறார் எந்தெந்த கேள்விகளுக்கு அணுக்கரு கடிகாரத்தால் பதிலளிக்க முடியும்? “இந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன,” என்கிறார் ரே. “உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தில் உள்ள 80% ஆக்கக் கூறுகள் கரும்பொருள் என்று நமக்குத் தெரியும், ஆனால் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. அணுக் கடிகாரத்தால் உணரப்படாத பல விளைவுகள் அணுக்கரு கடிகாரங்களில் உணரப்படுவதால், கரும்பொருளின் மூலப்பொருளைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியும்” என்கிறார். அணுக்கரு கடிகாரங்களை, அணுக் கடிகாரங்களுடன் ஒப்பிடுகையில் ஒளியின் வேகம் போன்ற உலகளாவிய மாறிலிகள் நேரம் மற்றும் வெளியில்கூட மாறுபாடின்றி செயல்படுமா என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியும். "எங்களுக்கே இன்னும் தெரியாத பல கேள்விகள் உள்ளன" என்று ரே கூறுகிறார். "எனவே இது எதிர்கால ஆராய்ச்சிக்கான புதியதொரு வழி. இது பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் விஷயங்களைக் கண்டறிய அனுமதிக்கும். இது நிகழும்போதெல்லாம், நமக்குச் சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கிடைக்கும்” என்கிறார். ‘இயற்பியலின் அழகை உணர்ந்தேன்’ தோரியத்தின் அணுக்கரு நிலையை மாற்றும் மிகத் துல்லியமான அதிர்வலையைக் கண்டுபிடித்தது எத்தகைய உணர்வை அளித்தது என்பது குறித்து பிபிசியிடம் ஷாம் பகிர்ந்து கொண்டார். “இது மிகவும் அருமையான உணர்வு. பெரும்பாலான நேரத்தை நாங்கள் உடைந்துபோன விஷயங்களை சரி செய்வதில்தான் செலவிடுவோம், அப்பொழுதில் இதை நாங்கள் சரியாகச் செய்து முடித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வோம். இறுதியாக அதைச் செய்து முடித்துவிட்டோம். சில ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சிறந்த தருணத்தில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய குழுவினருக்கும், கூட்டுப் பணியாளர்களுக்கும் இந்த நீண்ட பயணத்தில் துணை நின்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” பட மூலாதாரம்,GETTY IMAGES அணுக் கடிகாரங்களும் அணுக்கரு கடிகாரங்களும், கோட்பாட்டு இயற்பியலில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் எப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படத்துகின்றன என்பதை உணர்த்துகின்றன. “கோட்பாட்டு இயற்பியலைக் கொண்டு இந்த பிரபஞ்சம் செயல்படும் விதத்தைப் பல ஆய்வுகளின் மூலம் நம்மால் அறிய முடியும்,” என்கிறார் ஆனா மரியா ரே. “உதாரணமாக எல்லாக் கணினிகளும் டிரான்சிஸ்டர்களை கொண்டுதான் செயல்படுகின்றன. குவாண்டம் மெக்கானிக்ஸ் தெரிந்தால்தான் நம்மால் டிரான்சிஸ்டர்களை பயன்படுத்த முடியும். ஓர் உலோகத்தில் உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை அறியவும் குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றிய புரிதல் மிக அவசியம்” என்கிறார் ரே. “இயற்கை புதிய வழிகளில் எவ்வாறு செயல்படும் என்பதை அறியவும், அதை விவரிக்கவும், விவாதிக்கவும் கோட்பாட்டு இயற்பியல் வழிவகுக்கிறது. இதன் விளைவாகவே மின்னணுவியல், தொடர்பியல், போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளில் அனுதினமும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடந்துகொண்டே உள்ளன. இதுவும் குவாண்டம் மெக்கானிக்ஸ் புரிதலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது” என்றும் கூறுகிறார். மேலும், “அணுக்கரு கடிகாரங்களின் மூலம் குவாண்டம் மெக்கானிக்ஸை புரிந்துகொள்வதற்கான மற்றொரு புதிய வழியை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். என்கிறார் ரே. பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION படக்குறிப்பு, இது பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் விஷயங்களைக் கண்டறிய அனுமதிக்கும் என்று ரே கூறுகிறார் அறிவியல் முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் அமெரிக்க நிறுவனமான ‘ஆப்டிகாவுடனான’ நேர்காணலில், ஆனா மரியா ரே தனது முதல் இயற்பியல் வகுப்பில் நிகழ்ந்த ‘யுரேகா தருணத்திற்கு’ பிறகு தன்னுடைய வாழ்க்கைத் தொழில் எதுவென்பதைக் கண்டுகொண்டதை நினைவுகூர்ந்தார். “என் மனதில் இருந்த அனைத்து சிந்தனைகளும் உயிர்பெற்றன. இயற்பியலின் அழகை உணர்ந்தேன். இதுதான் நமது பிரபஞ்சத்தை வழிநடத்துகிறது. ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான் நகர்வு முதற்கொண்டு கருந்துளைகளின் செயல்பாடு வரை அனைத்துமே இயற்பியலால்தான் செயல்படுகிறது” என்று கூறினார். “உலகத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும் புதிராக இது இருந்தது, அதைத் தீர்க்க முடிந்ததால் நான் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்” என்கிறார் ரே. தற்போது ஈடுபட்டிருக்கும் கடிகாரங்களின் ஆராய்ச்சியிலும் அதே அழகை உணர்கிறாரா ரே? இந்தக் கேள்விக்கு, “ஆம், நிச்சயமாக, ஒவ்வொரு நாளுமே,” என்று பிபிசியிடம் அவர் பதிலளித்தார். “தினமும் வேலைக்கு வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் வருவேன். இயற்பியலின் சமன்பாடு மூலமாக இந்தப் பிரபஞ்சம் செயல்படும் விதத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” “கணித மாதிரிகளைக் கொண்டு அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கணிப்பது மாயாஜாலத்தை போன்றது. அதுதான் எனக்கு உற்சாகமாக இருந்தது. எனது கோட்பாட்டைக் கொண்டு ஒரு பரிசோதனையாளரிடம் ‘இதைப் பயன்படுத்துங்கள், அதை அளவிடுங்கள், நீங்கள் இதைக் கண்டுபிடிப்பீர்கள், நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள்’ என்று என்னால் சொல்ல முடிந்தால், அதுதான் எனக்கு நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்" என்கிறார் ரே. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrd4yzl30po
-
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம்!
30 NOV, 2024 | 08:29 PM இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அதேநேரம் மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200105
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
வெற்றியின் விளிம்பில் தென் ஆபிரிக்கா; டேர்பனில் முதலாவது தோல்வியை எதிர்கொண்டுள்ள இலங்கை 30 NOV, 2024 | 12:20 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பன் கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இதற்கு முன்னர் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்த இலங்கை முதல் தடவையாக இந்த விளையாட்டரங்கில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம், 3ஆம் நாட்களில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என முன்னிலை அடையக்கூடிய பலமான நிலையில் இருக்கிறது. அத்துடன் உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இலங்கையின் எதிர்பார்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 516 ஒட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முன்வரிசை வீரர்கள் பெத்தும் நிஸ்ஸன்க (23), திமுத் கருணாரட்ன (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (25), கமிந்து மெண்டிஸ் (10) ஆகியோருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய (1) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர். தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்ளைவிட பிரதான வீரர்களில் குசல் மெண்டிஸ் மாத்திரமே எஞ்சியுள்ளார். பந்துவீச்சில் மாக்கோ ஜென்சென் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசொ ரபாடா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸீ 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக போட்டியின் மூன்றாவது நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, 5 விக்கெட்களை இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 249 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 221 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 122 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 228 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 113 ஓட்டங்களையும் பெற்றனர். தனது ஆட்டம் இழப்புடன் இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்வதாக டெம்பா பவுமா அறிவித்தார். பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 2 விக்pகெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 132 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதலாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 191 ஓட்டங்களையும் இலங்கை 42 ஓட்டங்களையும் பெற்றன. https://www.virakesari.lk/article/200049
-
பெற்றோரை தேடிய தத்து கொடுக்கப்பட்ட பெண் - ஃபேஸ்புக்கில் நடந்த அதிர்ச்சி என்ன?
பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE எழுதியவர், ஃபே நர்ஸ் பதவி, பிபிசி செய்திகள் தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார். தன்னைப் பெற்ற தாயாக இருக்கலாம் என்று நினைத்த பெண்ணை கடைசியில் கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது தெரிந்தே இருந்தது. ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. "தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினார், கூச்சலிட்டார். என்னுடன் பேச எதுவும் இல்லை" என்று அவர் பேசியதை நினைவுகூர்ந்தார் தமுனா. அந்த பெண்ணின் பதிலால் வருத்தமடைந்ததை விட, தான் வியப்படைந்ததாக என கூறினார் தமுனா. "நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். ஆனால் அவருடைய எதிர்வினை என்னால் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது" என்கிறார் 40 வயதான தமுனா. ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயை தொலைபேசியில் அழைத்தபோது, அவரது தாய் தன்னை விரும்பவில்லை என்பது தமுனாவுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் தமுனா தனது முயற்சியைக் கைவிடவில்லை. தன்னைத் தத்துக்கொடுத்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள விரும்பினார். மேலும் முக்கியமாக, தனது தாய்க்கு மட்டுமே தெரிந்த தன் தந்தையின் பெயரை அறிய விரும்பினார். பெற்றோரை அறிந்துகொள்ளும் தமுனாவின் தேடல் 2016-ல் தொடங்கியது. தன்னை வளர்த்த தாய் மறைந்த பிறகு, அவரது வீட்டை ஒரு முறை சுத்தப்படுத்திய போது, தனது பெயரில் இருந்த பிறப்புச் சான்றிதழைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதில் தனது பிறந்த தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட பிறகு, தான் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமுனாவிற்கு ஏற்பட்டது. சில தேடல்களை மேற்கொண்ட பிறகு, தன்னை பெற்றெடுத்தவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, “வெட்ஸெப் (Vedzeb)” (“நான் தேடிக்கொண்டிருக்கிறேன்”) என்ற பேஸ்புக் குழுவை தொடங்கினார். தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, அவர் ஜார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதித்து வந்த குழந்தை கடத்தல்களை வெளிக்கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக, பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பொய் சொல்லப்பட்டு, அந்த கைக்குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன என்பது அதில் தெரியவந்தது. தமுனா ஒரு பத்திரிகையாளர். அவரது செயலால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் அதுவரை, அவரால் தனது சொந்த பிறப்பின் மர்மத்தை தீர்க்க முடியவில்லை. மேலும் தானும் அவ்வாறு திருடப்பட்ட குழந்தையோ என்று அவர் வியந்தார். பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, தனது உறவினருடன் தமுனா. திருப்புமுனையாக அமைந்த ஃபேஸ்புக் செய்தி ஒரு கோடை நாளில் பேஸ்புக் குழுவின் மூலம் கிடைத்த ஒரு தகவல், தமுனாவின் தேடலில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த செய்தி ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. 1984 செப்டம்பரில் தபலீசியில், தான் கருவுற்றதை மறைத்து, குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே பொது வெளியில், தான் பிறந்த நேரம் என தமுனா பகிர்ந்திருந்த நேரத்தை ஒட்டியே அதுவும் இருந்தது. தகவலை அனுப்பிய அந்த நபர், தான் அறிந்த அந்த பெண்தான் தமுனாவின் தாய் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். மிக முக்கியமாக, தமுனாவின் தாய் என நம்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரையும் கூறினார். உறுதி செய்த டிஎன்ஏ பரிசோதனை தமுனா உடனடியாக இணையதள பக்கங்களில் அந்தப் பெண்ணைத் தேடினார். ஆனால் அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், ‘அவரை யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்தப் பதிவைப் பார்த்த ஒரு பெண் விரைவில் பதிலளித்தார். கருவுற்றதை மறைத்த அந்தப் பெண் தனது சொந்த அத்தை என்றும், அந்த பதிவை நீக்குமாறும் தமுனாவிடம் அவர் கூறினார். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில்தான் தனது தாயை தொலைபேசியில் அழைத்திருந்தார் தமுனா. ஒரு வாரம் கழித்து, டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வந்தன. தமுனாவும் பேஸ்புக்கில் தொடர்புகொண்ட அந்தப் பெண்ணும் உண்மையில் உறவினர்கள் என்பதைக் கண்டறிந்தனர். இதை ஆதாரமாக வைத்து , உண்மையை ஒப்புக்கொள்ளவும், தன் தந்தையின் பெயரை கூறும்படியும், தமுனா தன்னை பெற்ற தாயை சம்மதிக்க வைத்தார். தந்தையுடன் இணைந்த தமுனா பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, தனது தந்தையை சந்தித்த போது தமுனா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் பின்னர் ‘குர்கன் கொரவா’ என்பவரே தனது தந்தை என்பதை தமுனா கண்டறிந்தார். "இந்த சம்பவம் நடந்த முதல் இரண்டு மாதங்கள் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை." என்கிறார் தமுனா. குர்கனின் பெயரைத் தெரிந்து கொண்டவுடன், தமுனா அவரை பேஸ்புக் மூலம் விரைவிலேயே கண்டுபிடித்தார். தமுனாவின் சமூக வலைதளப் பதிவுகளை குர்கன் பின்தொடர்ந்து வந்ததும் பின்னர் தெரியவந்தது. குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் தமுனாவின் பணி ஜார்ஜியா நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்தது. ''அவர், என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் மூன்று வருடங்களாக இருந்திருக்கிறார்" என்று ஆச்சரியமாக கூறுகிறார் தமுனா. "என்னைப் பெற்ற தாய் கருவுற்றிருந்தது கூட அவருக்குத் தெரியாது" என்று கூறிய தமுனா, "அவருக்கு இது மிகவும் வியப்பாக இருந்தது" என்றார். தபலீசியில் அவர் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 160 மைல் தொலைவில் மேற்கு ஜார்ஜியாவில் உள்ள அவரது சொந்த ஊரான ஜுக்டிடியில், அவர்கள் விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் . குர்கனுக்கு தற்போது 72 வயதாகிறது. அவரும் தமுனாவும் பார்த்த கணத்தில், இருவரும் ஆர தழுவிக்கொண்டு, பின்பு ஒருவரை ஒருவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டார்கள். "எனக்கு பல கலவையான உணர்வுகள் எழுந்தன. என்னிடம் பல கேள்விகள் இருந்தன. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தோம்” என்கிறார் தமுனா. இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை27 நவம்பர் 2024 மனமுடைந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம் இளவரசி; இந்திய நகரில் தொடர்ந்து ஒலிக்கும் அவரது பெயர் - யார் அவர்?25 நவம்பர் 2024 அவர்கள் பேசத் தொடங்கியதும். அவர்களிடம் பல பொதுவான விருப்பங்கள் இருப்பதை அறிந்து வியந்தனர். குர்கன் ஒரு அறியப்பட்ட நடன கலைஞராக இருந்தார். தமுனாவின் மகள்களுக்கும் – அதாவது குர்கனின் பேத்திகளுக்கும் - நடனத்தில் ஆர்வம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தார். "அவர்கள் இருவருமே நடனத்தில் ஆர்வம் கொண்டவர்கள், எனது கணவரும்தான்," என்று கூறுகிறார் தமுனா. குர்கன் தனது முழுக் குடும்பத்தையும், தமுனாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு அழைத்திருந்தார் - சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் மாமாக்கள் அத்தைகள் என பெரிய குடும்பத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினார். தமுனாவும் அவரது தந்தையும் மிகவும் ஒத்திருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். "அவரின் எல்லா பிள்ளைகளிலும் நானே தந்தையை அதிகமாக பிரதிபலிக்கிறேன்," என்கிறார் தமுனா. அவர்கள் ஒரு மாலை முழுவதும், கதைகளை பேசியபடி, பாரம்பரிய ஜியார்ஜிய பண்டங்களை உண்டபடி கழித்தனர். தன் தந்தையை சந்தித்த பின்னரும், வேறு ஒரு கேள்வி தமுனாவை உறுத்திக் கொண்டிருந்தது - வேறு பல ஜியார்ஜிய குழந்தைகளைப் போல அவரும் தன்னை பெற்ற தாயிடமிருந்து திருடப்பட்டு விற்கப்பட்டாரா? என்பதே அது. அவரை தத்தெடுத்த பெற்றோர் இப்பொழுது இல்லை, அவர்களிடம் கேட்க வழி இல்லை. பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE படக்குறிப்பு, புதிதாக சொந்தமான தனது சகோதரிகளுடன் தமுனா திருடப்பட்ட குழந்தையா? அக்டோபரில் அவரை பெற்ற தாயிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு போலந்து தொலைக்காட்சி நிறுவனம் தமுனா பற்றிய ஆவணப்படம் பதிவு செய்தபோது, அவரை தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அவரது தாய், தமுனாவை தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டார். அப்போது தான் திருடப்பட்ட குழந்தை அல்ல என்பதை தமுனா அறிந்துகொண்டாளர். மாறாக, அவரது தாய் அவரை கைவிட்டதுடன், அந்த பிறப்பையே 40 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தார். தமுனாவின் தாயும், தந்தையும் சிறு சந்திப்புக்கு பின்னர் எவ்வித நீடித்த உறவிலும் இல்லை. கருவுற்றதலை அவமானமாக உணர்ந்த தாய், அதனை மறைக்கத் தீர்மானித்தார். 1984 செப்டம்பரில் அவர் தபலீசிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகச் சொல்லி, அங்கே தன் மகளை பெற்றெடுத்தார். தமுனாவின் தத்தெடுப்பிற்கு ஏற்பாடு ஆகும் வரை அங்கேயே தங்கியிருந்தார். தமுனாவின் தாய், தான் ஒரு திருடப்பட்ட குழந்தை என்று வெளி உலகுக்கு பொய் சொல்லும் கேட்டுக் கொண்டுள்ளார். "நீ திருடப்பட்ட பிள்ளை என்று சொல்லவில்லை என்றால், நமக்கு இடையில் எந்த உறவும் கிடையாது" - என அவர் கூறியதாக தமுனா கூறினார். ஆனால் தமுனா அப்படி பொய் சொல்ல ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் தமுனாவின் தாய் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படியும் இனிமேல் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார். "நான் மீண்டும் இவை எல்லாவற்றையும் செய்வேனா என்று கேட்டால், கண்டிப்பாக செய்வேன், நான் எனது புதிய குடும்பம் குறித்து நிறைய கண்டுபிடித்துள்ளேன்” என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99reeyj88go
-
ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
30 NOV, 2024 | 10:17 AM ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200059
-
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி; லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்
லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. காசா போருக்கு இணையாக நடைபெற்று வரும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இரண்டு மாத போர்நிறுத்த காலத்தில், ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய தனது போராளிகளை தெற்கு லெபனானில் இருந்து திரும்பப் பெற வேண்டும். அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும். எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில், லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வர். இதனிடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட போர் ஒப்பந்தத்திற்கு பிறகு வியாழன்று, தெற்கு லெபனானில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் இருவர் காயமடைந்ததாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு, தெற்கு மண்டலத்தில் வாகனங்களில் வந்த “சந்தேக நபர்கள்” மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது. தொடர்ந்து வான்வழித் தாக்குதலையும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியது. ராக்கெட் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதால் தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இரண்டே நாட்களில் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்நிலையில் வியாழன் அன்று காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பின் (UNRWA) தலைவர் Philippe Lazzarini வியாழனன்று காசாவில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறினார். கடந்த ஏழு வாரங்களாக காசாவின் வடக்கு விளிம்பில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் 130,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 44,330 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 104,933 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். https://thinakkural.lk/article/312913
-
டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்!
30 NOV, 2024 | 10:47 AM நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/200057
-
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் காலமானார்
மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: 40,000 கோடியை உதறி துறவியான மகன் மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் “ஏகே” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் காலமானார். இதுகுறித்து அவரது தனியார் முதலீட்டு நிறுவனமான உசாஹா தேகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களது தலைவர் டி. ஆனந்த கிருஷ்ணன் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். மலேசியாவை தன்னிறைவு பெற்ற தேசமாக கட்டியெழுப்புவதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்பை ஏகே வழங்கியுள்ளார். அவரது சமூக தொண்டு அடித்தட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளது. மலேசியாவில் மேக்சிஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஏகே கடந்த 2005-ல் இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை 1 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ.800 கோடி) வாங்கினார். ஏர்செல்-மேக்சி்ஸ் முறைகேடு வழக்கில் இவரின் பெயரும் சேர்க்கப்பட்டது. மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் ஏகே. அந்த வகையில், தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஒளிபரப்பு துறையில் ஏராளமான உரிமங்களை பெற்றார். மலேசியாவின் அடையாளமான 88 மாடி இரட்டை கோபுரங்களை கட்டமைப்பதற்கு காரணமாக இருந்தவர். ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர். அப்போதுதான் ஏகே கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தார். மலேசியாவின் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்க கல்வியை தொடங்கி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். ஆனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். புத்தமத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தை துறந்துவிட்டு புத்த துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது. கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312904
-
சுற்றுலா வருபவர்களுக்கு வாடகை மனைவிகளாக மாறும் இளம்பெண்கள்.. எங்கு தெரியுமா?
இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். எங்கு? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம். தாய்லாந்து ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், இதைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ளது. இங்குள்ள மக்கள் இதை “wife for hire” என்று அழைக்கின்றனர். இது ஒரு தற்காலிக திருமண ஏற்பாடாகும். அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள். இந்த நடைமுறை முக்கியமாக தாய்லாந்தின் பட்டாயாவின் red-light மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் இரவு விடுதிகளில் நிகழ்கிறது. இது தாய்லாந்தில் ஒரு வணிகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இது குறித்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. அதன் ஆசிரியர் லாவர்ட் ஏ.இம்மானுவேல். புத்தகத்தின் பெயர் Thai Taboo-The Rise of Wife Rental in Modern Society: Exploring Love, Commerce and Controversy in Thailand’s Wife Rental Phenomenon Wife Rental Phenomenon ஆகும். இதில், தாய்லாந்தில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சர்ச்சைக்குரிய மற்றும் மறைக்கப்பட்ட நடைமுறை இப்போது மீண்டும் எப்படி அதிகரித்து வருகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த வணிகம் தாய்லாந்தின் முக்கிய வருமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய வேலைகளில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்க முடியாத இளைஞர்களுக்கு இது உதவுகிறது. அவர்கள் “வாடகை மனைவி” அல்லது “வாடகை காதலி” போன்ற சேவைகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். தாய்லாந்தில் “வாடகை மனைவிகள்” என்ற கருத்து சர்ச்சைக்குரிய நடைமுறையாக இருந்தாலும் , பெண்கள் மனைவிகளைப் போலவே வாழ்கிறார்கள் மற்றும் சேவை செய்கிறார்கள். பொருளாதாரத்தில் ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனைவிகளை போல வாழத் தொடங்குகிறார்கள். இந்த ஏற்பாடு முறையான திருமணம் கிடையாது. ஒரு தற்காலிக ஒப்பந்தம் போன்றது. இந்த பந்தம் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பெண்கள் இந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/312871
-
கருத்துச்சுதந்திரத்தை மட்டுப்படுத்தக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்துங்கள்; பரிந்துரைகளுடன் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம்
29 NOV, 2024 | 03:14 PM (நா.தனுஜா) கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பல்துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையைப் புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியம் என உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் (குளோபல் நெட்வேர்க் இனிசியேட்டிவ்) வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை வரவேற்கின்றோம். நாம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதனை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். அதுமாத்திரமன்றி தனியுரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றின்மீது இச்சட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து எமது முன்னைய அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்த கரிசனைகளை மீளவும் சுட்டிக்காட்டுகின்றோம். கடந்த ஓகஸ்ட் மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் முதற்கட்டமாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கையால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள மனித உரிமைசார் கொள்கைகளை மீறும் வகையிலான சில சரத்துக்கள் இன்னமும் இச்சட்டத்தில் உள்ளடக்கியிருக்கின்றன. எனவே விசேட நிபுணர்கள் மற்றும் பல்துறைசார் வல்லுனர்களின் பங்கேற்புடன், மனித உரிமைகளுக்கு ஏற்புடையவாறு இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குரிய வலுவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான அணுகுமுறையை தற்போதைய புதிய பாராளுமன்றம் பின்பற்றவேண்டியது அவசியமாகும். அதேவேளை பரந்துபட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்பதால், நிகழ்நிலை பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் உலகின் சிறந்த நடைமுறைகளுடன் இணைந்த, தெளிவான நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட புதியதொரு சட்டத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்பNது எமது பரிந்துரையாகும். இச்சட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பிரகாரம் நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்கல் போன்ற சில சாதக மாற்றங்கள் உள்வாங்கப்பட்டிருப்பினும், சட்டத்தில் உள்ள ஏனைய எதிர்மறை விடயங்கள் நிவர்த்திசெய்யப்படவில்லை. அதுமாத்திரமன்றி சில திருத்தங்களின் ஊடாக ஏற்கனவே காணப்பட்ட சிக்கல் தன்மை மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 'தவறான' மற்றும் 'தடைசெய்யப்பட்ட' ஆகிய பதங்களின் வரையறைகள் தெளிவற்றவையாகவே காணப்படுகின்றன. இது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீது மட்டுமீறிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. எனவே, இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டக்கட்டமைப்பினுள் சட்டபூர்வத்தன்மை, விகிதாசாரத்துவம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள்சார் கொள்கைகள் என்பவற்றை இணைப்பதன் மூலமும், கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமை ஆகியவற்றை இச்சட்டத்தை நெறிப்படுத்தும் கொள்கைகளாக சாதமான முறையில் உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் இச்சட்டத்தின் ஊடாக நிகழக்கூடிய மீறல்களைத் தடுக்கமுடியும் என்று உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199988
-
நினைவேந்தலுக்கு அநுர அரசு அனுமதிக்கக்கூடாது என்கிறார் விமல்
“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும். தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை. எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா? வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார். https://thinakkural.lk/article/312897
-
அபா இசை நிகழ்ச்சிக்காக 10 இலட்சம் ரூபா செலவிடுவது தான் முறைமை மாற்றமா ? - ராஜித கேள்வி
29 NOV, 2024 | 05:32 PM (எம்.மனோசித்ரா) அபா இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 10 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (29) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் நாளுக்கு நாள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. ஜே.வி.பி.யும் தேசிய மக்கள் சக்தியும் தம்மைத் தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் என்பதையே மக்கள் மனதில் பதியச் செய்துள்ளனர். ஏனைய அரசியல்வாதிகள் அனைவரையும் கள்வர்களாக்கியுள்ளனர். ஆனால் இன்று அவர்கள் என்ன செய்கின்றனர்? 50000 ரூபா டிக்கட் பெற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இவர்களது ஆட்சியைப் பார்க்கும் போது ரஷ்ய ஆட்சியே நினைவுக்கு வருகிறது. அந்த இசை நிகழ்ச்சியில் ஒரு மேசைக்கு 5 இலட்சம் ரூபாவாகும். இவர்கள் 10 இலட்சத்துக்கு இரு மேசைகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். அந்த 10 இலட்சம் ரூபாவில் வருமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்கலாமல்லவா? பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அதிசொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர். ஆனால் இன்று அவர்களும் அதே வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் எவருக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படவில்லை. முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியவர்கள் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. தாம் பதவிகளை ஏற்றாலும் பேரூந்திலேயே பாராளுமன்றம் வருவோம் என்றும், வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவோம் என்றும் கூறியவர்கள் இன்று அதனை பின்பற்றுகின்றனரா? என்றார். https://www.virakesari.lk/article/200027
-
அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!
அமைச்சுகளுக்கு சொந்தமான அதிசொகுசு வாகனங்கள் ஏலத்தில் கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய பல அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதிசொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அத்துடன், 05 வருடங்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/312899
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் - இதுவரை 08 சடலங்கள் மீட்பு 30 NOV, 2024 | 09:36 AM அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட சிலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது. அதன்போது இதுவரை மொத்தமாக 08 பேரின் சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும், சாரதியின் சடலமும், மற்றுமொரு இளைஞரின் சடலமாக மொத்தம் 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று சனிக்கிழமை (30) காலை இறுதியாக ஒரு சடலங்கள் மீட்கப்பட்டது. மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றது. மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன. திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/200054
-
பதவியேற்ற முதல் நாளே கனடா மெக்சிக்கோ சீன பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு - டிரம்ப்
கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் கனடாவிற்கு பல சிக்கல்களை அவர் உருவாக்குவார் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப், கடந்த திங்களன்று கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 25 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறினார். கனடாவை தவிர, மற்றோர் அண்டை நாடான மெக்சிகோவின் பொருட்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு அந்த எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்கு புலம் பெயர்வோர் மற்றும் அந்த வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் சட்ட விரோதமான போதைப் பொருட்களைத் தடுத்து நிறுத்துவதற்கானது என்று டிரம்ப் தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன், கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரி விதிக்கும் "நிர்வாக உத்தரவில்" தான் கையெழுத்திட இருப்பதாகத் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார். “அனைவருக்கும் தெரிந்தாற்போலவே கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் வழியாக அமெரிக்காவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமான முறைகளில் நுழைகின்றனர். வருபவர்கள் தங்களுடன் போதைப் பொருட்களைக் கொண்டு வருகின்றனர், அதோடு பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுவரை இந்த அளவிற்கு அமெரிக்காவிற்கு மக்கள் புலம்பெயர்ந்தது இல்லை,” என்றார் டிரம்ப். டிரம்ப் vs ட்ரூடோ பட மூலாதாரம்,REALDONALDTRUMP/TRUTHSOCIAL படக்குறிப்பு, கனடா மீது 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் வெளியிட்ட பதிவு உலகளவிலேயே மிக நீண்ட தரை வழி எல்லையைப் பகிரும் நாடுகளாக கனடா மற்றும் அமெரக்கா உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற உடனே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்திருந்தார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்கள் இடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவில் பதவியேற்ற பிறகு பாரம்பரிய வெளிநாட்டுப் பயணம் கனடா அல்லது மெக்சிகோவாக இருந்தது. ஆனால் டிரம்பின் முதல் வெளிநாட்டுப் பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு இருந்தது. அதாவது டிரம்ப், தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு செய்தியை வழங்கினார். தனிப்பட்ட முறையிலும் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை தீவிர இடதுசாரி என்று சாடுகிறார். கனடாவின் பொருளாதார நிலை ஏற்கெனவே மிகுந்த கவலைக்குரிய வகையில் உள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு மேலும் பொருளாதாரம் மந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும். கனடாவின் 75 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவுடன்தான் நடக்கிறது. இந்நிலையில் இந்த 25 சதவீத வரி விதிப்பு அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். கனடாவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ட்ரூடோவிற்கு இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் கட்சியிடம் ட்ருடோ தோல்வியடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் வாழ்வதற்கான செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் சீனா மற்றும் இந்தியா உடனான சிக்கல்களால் அமெரிக்கா உடனான வர்த்தகத்தை கனடாவால் தவிர்க்க முடியாத சூழல் நிலவுகிறது. காலிஸ்தானி இயக்கத்தை ட்ருடோ ஊக்குவிப்பதாக பிரதமர் மோதி அரசு குற்றம் சாட்டுகிறது. மற்றொரு பக்கம் காலிஸ்தானி பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ட்ருடோ குற்றம் சாட்டுகின்றார். இந்த வழக்கில் பைடன் தலைமையிலான அரசு கனடாவிற்கு சாதகமாக உள்ளது. ஆனால் டிரம்ப் பதவியேற்ற பிறகு காலிஸ்தானி இயக்கம் தொடர்பான விஷயங்களில் ட்ருடோவிற்கு எந்தவோர் ஆதரவும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. டிரம்ப் - ட்ருடோ மற்றும் மோதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், டிரம்பின் கொள்கைகளால் கனடா பெரும் இழப்பை சந்திக்கும். டிரம்புக்கும் ட்ருடோவுக்கும் இடையிலான உறவு சுமூகமானதாக இருந்ததில்லை. அதேபோல ட்ருடோவுக்கும் மோதிக்கும் சாதகமான உறவு இருந்ததில்லை. முதல் முறையாக 2014ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக மோதி தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் 2015இல் ஜஸ்டின் ட்ருடோ முதல் முறையாக கனடா பிரதமராகப் பதிவியேற்றர். கடந்த 2019ஆம் ஆண்டு நரேந்திர மோதியும் ஜஸ்டின் ட்ருடோவும் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றனர். ட்ருடோவின் கனடா லிபரல் கட்சி, தன்னை ஒரு முற்போக்கான கட்சியாக அடையாளப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோதியின் பாஜக, தன்னை இந்துத்துவ, வலது சாரி கட்சியாக அடையாளப்படுத்துகிறது. பிரதமராகப் பதவியேற்ற பின்னர் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு நாள் பயணமாக மோதி கனடா சென்றிருந்தார். அந்த நேரத்தில் கனடா பிரதமராக இருந்தவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்டீபன் ஹார்பர். கடந்த 2010ஆம் ஆண்டில், அப்போதிருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜி20 உச்சி மாநாட்டிற்காக கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டிற்காக என்று மட்டுமல்லாமல் 42 ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக கனடா சென்றார். கனடா பிரதமராக ட்ருடோ பதவியேற்ற பின்னர் நரேந்திர மோதி கனடாவிற்கு செல்லவில்லை. உலகிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் கனடா நான்காம் இடத்தில் உள்ளது. டிரம்ப் அரசு விதிக்கும் வரி, இதன் உற்பத்தியைப் பாதிக்கும். அதேநேரம் டிரம்ப், அமெரிக்கா உள்நாட்டிலேயே எரிவாயு சக்தியை அதிகரிக்க முற்படுகிறார். கடந்த 2022ஆம் ஆண்டில், ட்ரூடோ அமெரிக்காவில் இருந்து வரும் டிரக் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கினார். இதற்காக, ட்ரூடோவை "கடுமையான-இடது பைத்தியக்காரன்" என்று டிரம்ப் அழைத்தார். இதை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். 2018ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டின் இடையில் டிரம்ப் வெளியேறினார். மேலும் ட்ருடோவை, “மிகவும் நேர்மையற்ற பலவீனமான” தலைவர் என்று விமர்சித்தார். ட்ரூடோவுக்கு ஏற்கெனவே இருந்த அச்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மோதி, டிரம்ப் இடையிலான உறவு பலமாக இருக்கும் நிலையில், மோதி, ட்ரூடோ இடையிலான உறவு பலவீனமாக உள்ளது கனடாவில் உள்ள அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தலை உற்று நோக்கினார். டிரம்பின் வெற்றி கனடாவின் சிக்கல்களை அதிகரித்துள்ள செய்தியை வெளிப்படுத்துகிறது. டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் ராய்ட்டர்ஸிடம் பேசிய கனடா நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், “அமெரிக்க தேர்தலை நினைத்து கனடாவில் நிறைய மக்கள் பதற்றத்துடன் இருந்தனர். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இங்கு அனைத்தும் நலமாக உள்ளது. அமெரிக்காவுடன் ஆழமான உறவு மற்றும் டிரம்புடன் பலமான உறவு கனடாவிற்கு உள்ளது,” என்று தெரிவித்தார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் கனடா மக்களுக்கு மிகுந்த சிக்கல்களை உருவாக்கும். நாட்டின் வளர்ச்சி ஒரு அடி பின்னால் தள்ளப்படும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, டிரம்ப் உருவாக்கும் பொருளாதார திட்டங்களால் 2028ஆம் ஆண்டின் முடிவில் கனடாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.7% சரிவடையும் என்று நிதி விவகார சிந்தனைக் குழுவான டிஜார்டியன்ஸின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு டிரம்ப் முதல் முறையாக அதிபரானபோது மெக்சிகோ மற்றும் கனடா உடனான வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்ததை மறு ஆய்வு வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஆபத்தாக இருப்பதாகவும் மற்ற இரு நாடுகளும் லாபமடைவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் கனடா இடையே 18 மாதங்கள் நடந்தும் பலனளிக்காததால், இந்த இரு நாடுகளும் மற்ற நாட்டின் பொருட்கள் மீது வரி விதித்தன. இதற்குப் பின் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்று வெளியானது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி டிரம்ப் இதை மறு ஆய்வு செய்வது பற்றிப் பேசினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ட்ருடோ தனது லிபரல் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இரண்டாவது முறையாக டிரம்ப் ஆட்சி அமைத்தால், கடந்த ஆட்சியைவிட இம்முறை கனடாவிற்கு கடினமாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். இது ராய்ட்டர்ஸிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாகப் பதிவு செய்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdd01l60d0zo
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஜென்சனின் 7 விக்கெட் குவியலால் இலங்கை 42 ஓட்டங்களுக்கு சுருண்டது; இலங்கையின் 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை 29 NOV, 2024 | 12:11 AM (நெவில் அன்தனி) டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மார்க்கோ ஜென்சனின் வேகப்பந்துவீச்சில் சிக்கித் திணறிய இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை தனது 42 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும். பாகிஸ்தானுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் இலங்கை பெற்ற 71 ஓட்டங்களே அதன் முந்தைய குறைந்த மொத்த எண்ணிக்கையாகும். இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க அவ்வணி 281 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாட ஆரம்பித்துள்ளது. ஜென்சனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்த 7 இலங்கை வீரர்களில் நால்வர் ஓட்டம் பெறாததுடன் மூவர் ஒற்றை இலக்கங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் (13), லஹிரு குமார (10 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். தனஞ்சய டி சில்வா (7), பெத்தும் நிஸ்ஸன்க (3), திமுத் கருணரட்ன (2), ஏஞ்சலோ மெத்யூஸ் (1) ஆகிய நால்வர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் ஓட்டங்கள் பெறாமல் களம் விட்டகன்றனர். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 6.5 ஓவர்களில் 13 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் ஜெரால்ட் கொயெட்ஸீ 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் டெம்பா பவுமா 70 ஓட்டங்களையும் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 149 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென் ஆபிரிக்கா, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க, தென் ஆபிரிக்கா 281 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. ஏய்டன் மார்க்ராம் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெம்பா பவுமா 24 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ப்ரபாத் ஜயசூரிய 100 டெஸ்ட் விக்கெட்கள் இந்தப் போட்டியில் இலங்கை மோசமான நிலையில் இருக்கின்றபோதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் டோனி டி ஸோர்ஸியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ப்ரபாத் ஜயசூரிய தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர்கள் வரிசையில் சார்ளி டேர்னர், சிட்னி பார்ன்ஸ், க்லெரி க்ரிம்மெட், யாசிர் ஷா ஆகியோருடன் ப்ரபாத் ஜயசூரிய இணைந்துகொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த 16 போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனை தொடர்ந்தும் ஜோர்ஜ் லோமானுக்கு சொந்தமாக இருக்கிறது. 1896இல் நிலைநாட்டப்பட்ட இந்த சாதனை 128 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது. மார்க்கோ ஜென்சன் அபாரம் இந்தப் போட்டியில் ஜென்சன் 41 பந்துகளில் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது வீரரானார். 120 வருடங்களுக்கு முன்னர் 1904இல் இங்கிலாந்துக்கு எதிரான மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஹியூ ட்ரம்ப்லின் 41 பந்துகளில் 28 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி இந்த மைல்கல் சாதனையை முதலாவது வீரராக நிலைநாட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/199964
-
டிரம்ப் புத்திசாலி, அனுபவசாலி; தீர்வுகளை காணக்கூடியவர் - புட்டின்
29 NOV, 2024 | 01:54 PM அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தம் தொடர்பில் மேற்குலகிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கஜகஸ்தானில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள புட்டின் புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சாடியுள்ளார். ஒரேசினிக் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயு அணு ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனை தாக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஏடிசிஎம்எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்கு பைடன் அனுமதியளித்துள்ளமை வோசிங்டன் மொஸ்கோவிற்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு டிரம்ப் பதவியேற்ற பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என புட்டின் தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்தவரை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி புத்திசாலி ஏற்கனவே அனுபவம் உள்ளவர் அவர் தீர்வுகளை கண்டறிவார் என புட்டின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199995
-
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!
மருதங்கேணி பாலத்தை நேரில் சென்று பார்த்த கடற்றொழில் அமைச்சர் Published By: VISHNU 29 NOV, 2024 | 10:55 PM யாழ்ப்பாணம், மருதங்கேணி பாலத்தின் அருகில் வீதி தாழ் இறங்கியமையால், பாலம் ஆபத்தான நிலையில் காணப்பட்டமையை அடுத்து உடனடியாக அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீதி தாழிறங்கி காணப்பட்டமை தொடர்பில் தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மருதங்கேணி பகுதிக்கு நேரில் சென்று, திருத்த வேலைகளை நேரில் பார்வையிட்டதுடன், அதிகாரிகளிடம் அது தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். புதுக்கட்டு சந்தியில் இருந்து தாளையடி செல்லும் வீதியில், மருதங்கேணி பாலம் அமைந்துள்ள வீதியின் பகுதி, அதிக நீரோட்டம் காரணமாக தாழிறங்கி காணப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மண் மூடைகள் போடப்பட்டு, சீர் செய்யப்பட்டமையால் மேலும் வீதி சேதமடையாமல் தடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/200048