Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் லைசென்ஸை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/198703
  2. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்காத 232,233 பேர்! இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நிறைவடைந்துள்ளன. யாழ்ப்பாணம் இந்நிலையில், 2 இலட்சத்து 32 ஆயிரத்து 233 பேர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களில் 36087 பேர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐனாதிபதி தேர்தலில் 3,97,041 பேர் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 593187 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 360,954 பேர் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் பி.ப 03.00 மணி நிலவரப்படி 47% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. செய்தி-கஜிந்தன் கிளிநொச்சி அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை மக்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. செய்தி- காண்டீபன் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தில் 64.09 வீதம் வாக்கு பதிவு வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமான முல்லைத்தீவு மகா வித்தியாலயத்துக்கு கொண்டுவரப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதிய தலைவர்களை தெரிவு செய்ய அமைதியான முறையில் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் இன்றையதினம் வாக்களிக்க இருக்கின்றனர். அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. செய்தி- சதீசன் மன்னார் மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும். அதே நேரம் இதுவரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது. காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. செய்தி-ஆசிக் வவுனியா வவுனியாவில் சுமுகமான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதுடன், இன்று காலை 10 மணி வரை 25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் 22.74 வீதமும், மன்னாரில் 18.5 வீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளது. அந்தவகையில் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் காலை 10 மணிவரை 22 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தி-திலீபன் வன்னி தேர்தல்மாவட்டத்தில் 65.5சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பி,ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார். அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் 65.5 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 63.75 வாக்குகளும், முல்லைத்தீவில் 62.45 வாக்குகளும், மன்னாரில்70 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. மாலை 4.30மணியளவில் தபால் மூலமான தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மாலை 7மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செய்தி-திலீபன் https://tamilwin.com/article/voting-begins-in-northern-province-1731559325#google_vignette
  3. (இராஜதுரை ஹஷான்) ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பதவிகள் தொடர்பில் எமது அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (21) கூடும். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த கொள்கைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு நாங்கள் குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் பழையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பழையவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும். அத்துடன் அனுபவமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அரச நிதியை மோசடி செய்த அனுபவமும், பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் செயற்பட்ட அனுபவமும் எமக்கு கிடையாது. ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றார். https://www.virakesari.lk/article/198729
  4. ஒரே ஒரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை - மஹிந்த தேசப்பிரிய (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் காண்பித்துள்ள வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கண்காணிப்பின்போது ஒரேயொரு கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரமே ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிந்தது. ஏனைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதனை அவதானிக்க முடியவில்லை. எவ்வாறிருப்பினும் இது துரதிர்ஷ்டவசமான விடயமாகும். சிலரிடம் நாம் இது குறித்து வினவியபோது, எவருக்கும் இதில் ஆர்வமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குறித்த கட்சிகளும் கவலையடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பாரியளவிலான வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை. ஆனால் சில பிரதேசங்களில் கட்சி அலுவலகங்கள் நீக்கப்படாமலிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் இடம்பெற்றுள்ளது. 225 பேரும் வேண்டாம் என்ற கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறையும் நான் அதனை எதிர்த்திருந்தேன். ஆனால் எமக்கு தவறானவர் எனத் தோன்றுபவர்களை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் எமக்கிருக்கிறது. எனவே வாக்களிப்பின் போது வாக்காளர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198734
  5. முதலாவது உத்தியோகபூர்வ தபால் முடிவுகள் வெளியாகின 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,964 – வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,846 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள் https://thinakkural.lk/article/312030 இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய; தேசிய மக்கள் சக்தி – 27,776 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி – 2,969 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி – 1,528 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1,031 வாக்குகள் https://thinakkural.lk/article/312032
  6. அரசு மருத்துவர் மீது தாக்குதல்: குற்றம் சுமத்தப்பட்டவரின் குடும்பத்தார் கூறுவது என்ன? எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தனது தாயின் உடல்நிலை மோசம் அடைவதற்கு மருத்துவர் பாலாஜியின் சிகிச்சையே காரணம் என்கிறார், குற்றம் சுமத்தப்பட்ட விக்னேஷின் சகோதரர். இதனை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனையின் இயக்குநர் பார்த்தசாரதி மறுத்துள்ளார். சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? என்ன நடந்தது? சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் புற்றுநோய் மருத்துவப் பிரிவு செயல்படுகிறது. இத்துறையின் தலைவராக மருத்துவர் பாலாஜி ஜெகந்நாத் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமையன்று (நவம்பர் 13) காலை 10:30 மணியளவில் மருத்துவர் பாலாஜியின் அறைக்குள் புகுந்த நபர் ஒருவர், அந்த அறையின் கதவைத் தாழிட்டதாக கூறப்படுகிறது. இதன்பிறகு பாலாஜியின் அறைக்குள் இருந்து பலத்த சத்தம் வரவே, எதிர் அறையில் பணியில் இருந்த வாய் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவத்துறையின் மருத்துவர் சேதுராஜன் வந்து பார்த்துள்ளார். முதல் தகவல் அறிக்கை சொல்வது என்ன? இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் மருத்துவர் சேதுராஜன் அளித்துள்ள புகாரில், "சத்தம் கேட்டு அங்கு சென்றேன். டாக்டர் பாலாஜியின் அறைக்கதவை தட்டியபோது, அது உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவின் கண்ணாடி வழியாகப் பார்த்தபோது, மருத்துவர் பாலாஜி ஜெகந்நாதனிடம் ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அறையின் கதவைத் தட்டிய போது அதைத் திறக்காமல் மேற்படி நபர் வாக்குவாதம் செய்து கொண்டே கையால் அவரை அடித்தார். தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலைப்பகுதி, இடது கழுத்துப் பகுதி, இடது காது மடல் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வெட்டினார்," எனக் கூறியுள்ளார். அதன்பின்னர், அறையின் கதவைத் திறந்து அந்த நபர் தப்பித்து வெளியே வரும்போது மருத்துவர் சேதுராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அப்போது, 'என் அம்மாவுக்குச் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்பதால் அவரைக் கொலை செய்ய வந்தேன். அவர் பிழைக்க மாட்டார்' என அந்த நபர் கூறியதாகவும் பிறகு மருத்துவமனையின் அலுவலகக் கண்காணிப்பாளர் முத்து ரமேஷ் மற்றும் ஊழியர்கள், தரைதளத்தில் வைத்து மேற்படி நபரை மடக்கிப் பிடித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் ஏழு பிரிவுகளில் வழக்கு போலீஸ் நடத்திய விசாரணையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய நபரின் பெயர் விக்னேஷ் என்பதும், அவரது தாய் பிரேமாவுக்கு ஏற்பட்டப் புற்றுநோய் பாதிப்புக்கு மருத்துவர் பாலாஜி உரிய சிகிச்சை அளிக்காத கோபத்தில் இப்படியொரு செயலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் சேதுராஜன் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தாக்குதலில் மருத்துவர் பாலாஜிக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்ரமணியன் சந்தித்துப் பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ காலில் வந்து மருத்துவர் பாலாஜியிடம் நலம் விசாரித்ததாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மருத்துவர் மீதான தாக்குதல் அரசு மருத்துவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பின் புகார்களும் பேசுபொருளாக மாறியுள்ளன. படக்குறிப்பு, சம்பவம் நடந்த மருத்துவர் பாலாஜியின் அறை சிகிச்சையில் அலட்சியமா? மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் சகோதரர் கமலேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. "என் அம்மா பிரேமாவுக்கு ஹாட்கின் லிம்போமா (Hodgkin lymphoma) என்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. உடலில் நெறிக்கட்டுவதைப் போல பிரச்னைகள் ஏற்படும். அம்மாவுக்கு வயிற்றில் நெறி கட்டியது. கடந்த ஜனவரி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரையில் கிண்டி அரசு மருத்துவமனையில் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துவக்கத்தில் இருந்தே மருத்துவ சிகிச்சையில் டாக்டர் பாலாஜி அலட்சியம் காட்டி வந்தார்," என்கிறார். தன் தாயாருக்கு எட்டு ஊசிகளை மருத்துவர் பாலாஜி செலுத்தியதாகக் கூறும் கமலேஷ், "ஐந்தாவது ஊசியை போடும் போது, 'எனக்கு மூச்சு வாங்குகிறது' என அம்மா சொன்னார். அதற்குப் பதில் அளித்த டாக்டர் பாலாஜி, 'நீ டாக்டரா... இல்லை நான் டாக்டரா?' எனச் சத்தம் போட்டார்,” என்கிறார். “ஓர் ஊசியைப் போடும்போது, அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது மருத்துவருக்கு தெரியும். அதற்கும் சேர்த்து அவர்கள் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். அம்மாவுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், அந்த ஸ்கேனை டாக்டர் பொருட்படுத்தவில்லை," என்கிறார். எட்டாவது ஊசியைப் போடும்போது தனது தாய்க்கு மூச்சு விடுவதில் அதிகச் சிரமம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்துக் கேட்டபோது 'இந்த ஊசியைப் போட்டால் அப்படித்தான் ஆகும்' என மருத்துவர் பாலாஜி கூறியதாகவும் கமலேஷ் கூறுகிறார். படக்குறிப்பு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவனை சம்பவ நாளில் என்ன நடந்தது? "ஒருகட்டத்தில், அம்மாவுக்கு நுரையீரலில் பாதிப்பு அதிகரித்தது. ஆனால், அதற்கான சிகிச்சை கிண்டியில் இல்லை எனக் கூறி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்," என்கிறார் கமலேஷ். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர்களும், 'சிறிய அளவில் தொற்று ஏற்பட்டாலும் சீரியஸான நிலைக்குப் போய்விடுவார்' எனக் கூறினார்கள் என்கிறார் அவர். இதனால் தனது அண்ணன் விக்னேஷூக்கு மன வருத்தம் ஏற்பட்டதாகக் கூறும் கமலேஷ், "ஒருகட்டத்தில் ஓமந்தூராரில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அம்மாவை அழைத்துச் சென்றோம்," என்கிறார். தனியார் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, தாயார் எழுந்து நடமாடுவதற்குச் சிரமப்பட்டார் என்றும் தற்போது ஆக்சிஜன் உதவியோடு அவர் வாழ்ந்து வருகிறார் என்றும் கமலேஷ் கூறுகிறார். இதையடுத்து, புதன்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்தை விவரித்தார். "நேற்று (நவம்பர் 13) காலை 7:30 மணியளவில் அம்மாவுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பெருங்களத்தூரில் இருந்து வடபழனிக்குச் சென்றோம். எங்களுடன் வருவதற்கு விக்னேஷ் மறுத்துவிட்டார். நாங்கள் வெளியில் சென்றவுடன், கிண்டிக்குச் சென்றிருக்கிறார். இப்படி செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை," என்கிறார். ஆட்டோமொபைல் என்ஜினியரிங் துறையில் பட்டயப் படிப்பை முடித்துள்ள விக்னேஷ், சில மாதங்களுக்கு முன்பு இதயநோய் பாதிப்புக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் பிபிசி தமிழிடம் கமலேஷ் குறிப்பிட்டார். தங்கள் தந்தை இறந்துவிட்டதாகவும் உடன்பிறந்த மற்றொரு அண்ணனின் தயவில் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் கமலேஷ் கூறுகிறார். படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் புகாரை மறுக்கும் மருத்துவர்கள் விக்னேஷ் தரப்பின் குற்றச்சாட்டுக்குக் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி மறுப்பு தெரிவித்துள்ளார். "பாதிக்கப்பட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். தாக்குதலுக்கு ஆளான மருத்துவரிடம் கேட்டால் அவரும் குற்றம் சுமத்துவார். மருத்துவர் பாலாஜி குணமாகி வந்து விளக்கம் அளித்தால் உண்மை தெரியும். அதுவரை ஊகத்தின் அடிப்படையில் பதில் சொல்வது நன்றாக இருக்காது," எனக் கூறுகிறார். "விக்னேஷின் தாயார், கிண்டி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார். பிறகு மருத்துவமனைகளை மாற்றி சிகிச்சை பெற்றுள்ளனர். அடிப்படையில் அவர்களிடம் தவறு இருக்கிறது," என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியைத் தான் சந்தித்தபோது, நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தன்னை தாக்கியிருக்கலாம் என நினைத்ததாகவும் அந்த நோயாளியின் விவரம் எதுவும் தனக்குத் தெரியவில்லை எனக் கூறியதாக குறிப்பிடுகிறார், மருத்துவர் சாந்தி. புற்றுநோய் மருத்துவத்தில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் பாலாஜி குறித்து இதுவரையில் யாரும் புகார் கூறியதில்லை எனக் கூறும் மருத்துவர் சாந்தி, "நோயாளியின் உடலுக்கு ஏற்ற அளவிலேயே மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வேண்டும் என்றே மருத்துவர் செயல்பட்டதாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது,” என்கிறார். “நோயாளிக்குப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவமனையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் புகார் கூறலாம். அதைவிடுத்து ஆயுதத்தால் தாக்குவதை ஏற்க முடியாது," என்கிறார். படக்குறிப்பு, கிண்டி மருத்துவமனையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவர்கள் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் இந்தச் சம்பவம், அரசு மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவசர சிகிச்சையைத் தவிர்த்து, புறநோயாளிகள் பிரிவு, திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் உட்பட இதர மருத்துவச் சேவைகளை முற்றாகப் புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், உரிய பணிப் பாதுகாப்பை வழங்கக் கோரி, வியாழன் (நவம்பர் 14) அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படக்குறிப்பு, மருத்துவமனைக்கு வந்திருந்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நோயாளிகள் தவிப்பு இதனால், அரசு மருத்துவனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்கள் பாதிப்புக்கு ஆளாகினர். கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பலரும் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுவதைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனைக்கு வந்திருந்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேமா, "இதயப் பிரச்னைக்காக மருந்து வாங்க வந்தேன். போராட்டம் நடப்பதால் மருந்து கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்கள். டெஸ்ட் எடுக்கவும் மறுத்துவிட்டார்கள். இனி எப்போது வரவேண்டும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தனது மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக சங்கரன்கோவிலில் இருந்து சென்னை வந்திருந்த வேலுச்சாமி என்பவர், "அஞ்சு மாதமாக என் மனைவியை சிகிச்சைக்காக இங்கு அழைத்து வருகிறேன். இன்று செக்அப் செய்துகொண்டு மருந்து வாங்கிப்போக வந்தேன். டாக்டர் மேல் தாக்குதல் நடந்ததால் இன்றைக்கு மருந்து தர வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்,” என்கிறார். படக்குறிப்பு, அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில் தொடரும் போராட்டம் இதுதொடர்பாக, மருத்துவ சங்கங்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில், "திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்," என்றார். தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய டாக்டர் செந்தில், "ஒவ்வொரு டாக்டருக்கும் ஒரு போலீஸ் என்பது சாத்தியமில்லை. ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். நோயாளி உடன் வருகிறவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வர வேண்டும். இந்தமுறை உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்கிறார். இதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவமனைக்கு நோயாளியுடன் வருவோருக்கு நீல நிற டேக் பொருத்தப்படுவது, அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையம் அமைப்பது உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c5y5455ld47o
  7. வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார். வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார்! எல்போர்ட் நாடாளுமன்றமும் உருவாகக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198723 படத்தில் கடைசியாக உள்ள எழுத்து உள்குத்தாக இருக்குமோ?!
  8. முதலில் திரியைத் தொடங்கினால் அதனோடு தொடர்வது யாழின் வழமை தானே அண்ணை. வாசிப்பவர்களுக்கும் இலகுவாக இருக்கும். இப்ப அடிக்கடி முகப்பு மேம்படுத்தப்படுவதால் முகப்பிலும் திரி தோன்றுமே!
  9. பிட்காயின் விலை திடீரென உயரக் காரணம் என்ன? கிரிப்டோகரன்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கான பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அபினாவ் கேயல் பதவி, பிபிசி செய்தியாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் எனும் இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) 90,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை, இந்த வருடம் 80%-க்கு மேல் உயர்ந்துள்ளது. பிட்காயின் மட்டுமின்றி இதரக் கிரிப்டோகரன்சியான டோஜ்காயினும் (Dogecoin) டிரம்பின் ஆதரவாளரான ஈலோன் மஸ்க் ஊக்குவித்ததால் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அரசு, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக கேரி ஜென்ஸ்லரை நியமித்திருந்தது, இவர் கிரிப்டோ சந்தையின் பின்னணியைத் தகர்க்க வேலை செய்தவர். ஸ்டோன்எக்ஸ் நிதி நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் மேட் சிம்ப்சன் பிபிசி-யிடம், டிரம்ப் தலைமையிலான அரசு கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாட்டை மாற்றினால், பிட்காயினின் விலை 1 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தாண்டக் கூடும் எனக் கூறினார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்) இது இவ்வாறிருக்க, கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதை எப்படி வாங்குவது? அதற்கு வரி விதிக்கப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைக் காணலாம். கிரிப்டோகரன்சி என்றால் என்ன? பெரியக் கணினிகள் ஒரு சூத்திரத்தை அல்லது வழிமுறையைத் தீர்க்கின்றன. இது ‘சுரங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன்மூலமே கிரிப்டோகரன்சி உருவாகிறது. பிட்காயின் உட்பட 4,000 வகையான மெய்நிகர் நாணயங்கள் (Virtual Coins) சந்தையில் இருக்கின்றன. இந்த நாணயங்கள்தான் ‘கிரிப்டோகரன்சி’ என்று அழைக்கப்படுகின்றன. சாதாரண நாணயங்கள் ஏதேனும் ஒரு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், கிரிப்டோகரன்சியை எந்த நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை. கிரிப்டோகரன்சி எவ்வாறு செயல்படுகிறது? கிரிப்டோகரன்சியின் அனைத்து பறிமாற்றங்களும் உலகெங்கும் உள்ள பல கணினிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. எளிமையாகச் சொல்வதெனில், உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரு பெரிய அறையில் அமர்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு ஒருவர் ஒரு கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்தால், அது அந்த அறையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் தெரியவரும். அதற்காகத்தான், இந்தத் தகவல்கள் பல இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள பல கணினிகள் இந்தத் தரவுகளைச் சேகரிக்கின்றன. அதனால், இதனை நெறிப்படுத்தத் தனியாக வங்கிகள் போன்ற நிறுவனங்கள் தேவைப்படுவதில்லை. 2008-ஆம் ஆண்டு, பிட்காயின் எனப் பெயரிடப்பட்ட கிரிப்டோகரன்சி உருவக்கப்பட்டது. அப்போதிருந்து எந்த வாலட்டிலிருந்து (பணப்பை) எந்த வாலட்டுக்கு பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற்றது என அனைத்து தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதிலிருக்கும் பிரச்னை என்னவென்றால், இந்த வாலட் யாருக்குச் சொந்தமானது என்ற தகவல் தெரியாமலிருப்பது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நான்-ஃபஞ்சிபிள் டோக்கன் என்பது ப்ளாக் செயினில் கணினித் தரவு வடிவில் பதிவு செய்யப்படிருக்கும் ஒரு குறியீடு மெய்நிகர் சொத்து (Virtual Asset) என்றால் என்ன? மெய்நிகர் என்பதை நம்மால் தொட்டுப்பார்த்து உணரமுடியாத ஒன்று. பிட்காயின், டோஜ்காயின், எத்தரியம், உள்ளிட்ட அனைத்து கிரிப்டோகரன்சியும் மெய்நிகர் சொத்துகளே. இவை நான்-ஃபஞ்சிபிள் டோக்கன்கள் (Non-fungible tokens - NFT) எனும் தொழில்நுட்பத்தின் மூலமாகச் செயல்படுகின்றன. நான்-ஃபஞ்சிபிள் டோக்கன் என்பது ப்ளாக் செயினில் கணினித் தரவு வடிவில் பதிவு செய்யப்படிருக்கும் ஒரு குறியீடு. இந்தக் குறியீடு ஒரு கலைப்படைப்பையோ, ஒரு பொருளையோ குறிக்கும். இந்தக் குறியீட்டை வேறு பொருளுக்கு மாற்ற முடியாது. அதனால்தான் அது ‘நான்-ஃபஞ்சிபிள்’ என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, உலகில் முதல் முதல் அனுப்பப்பட்ட SMS குறுஞ்செய்தியை ஒரு நபர் நான் ஃபஞ்சிபிள் டோக்கனாக மாற்றிப் பாதுகாத்து வைத்திருக்கிறார். NFT மூலம் பலர் ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கினர். அவறை மெய்நிகர் வடிவில் வாங்கவோ விற்கவோ முடியும். 'டிஜிட்டல் வாலட்' என்றால் என்ன? ஒரு நபர் தனது பணத்தைத் தனது வாலட்டில் (பணப்பை, பர்ஸ்) வைத்துக்கொள்கிறார். அதுபோல, கிரிப்டோகரன்சியை வைத்துக்கொள்ள டிஜிட்டல் வாலட் (Digital Wallet) தேவைப்படுகிறது. டிஜிட்டல் வாலட்டைத் திறக்கக் கடவுச்சொல் அவசியம். டிஜிட்டல் வாலட்டின் கடவுச்சொல்லை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் கிரிப்டோகரன்சியை வாங்கவும், விற்கவும் முடியும். டிஜிட்டல் வாலட்டிற்கு 40 முதல் 50 இலக்க முகவரி உள்ளது. இந்த முகவரி, எண்கள் மற்றும் எழுத்துக்களால் ஆனது. அனைத்து டிஜிட்டல் வாலட்டுகளுக்கும் ஒரு தனிப்பட்ட முகவரி இருக்கும். டிஜிட்டல் உலகில் இதுபோல பல கோடி வாலட்கள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கும் உள்ள பல கணினிகள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றன ப்ளாக்செயின் (Blockchain) என்றால் என்ன? கிரிப்டோகரன்சி தொடர்பான ஒரு பரிவர்த்தனை மேற்கொண்டால், அது ‘ப்ளாக்’ (Block) ஆகப் பதிவு செய்யப்படும். ஒரு ப்ளாக் என்பது பல கணினித் தரவுகள் கொண்ட ஒரு திரட்டு. ஒரு ப்ளக்கில் ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனைக்கான தரவுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரு ப்ளாக் நிறைந்தபிறகு, பரிவர்த்தனை தரவுகள் மற்றொரு ப்ளாக்கில் பதிவு செய்யப்படும். இதுபோல அடுத்தடுத்த ப்ளாக்-கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொள்ளும். இந்தச் சங்கிலிப் பிணைப்புதான் ‘ப்ளாக் செயின்’ என்று அழைக்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை என்றால் என்ன? கிரிப்டோகரன்சியை வாங்கவும், விற்கவும் ஒரு தளம் உள்ளது. பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்ற அதற்கான பரிமாற்றுத் தளத்தை அணுகி மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் ஒரு கிரிப்டோகரன்சியை விற்றுவிட்டு மற்றொன்றை வாங்கவும், இந்தப் பரிமாற்ற நடவடிக்கை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்குவது போல, கிரிப்டோ பரிமாற்ற தளங்களின் உதவியுடன் கிரிப்டோகரன்சி வாங்கப்படுகிறது. இங்கு கிரிப்டோகரன்சியை வாங்குபவர்களும், விற்பவர்களும் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் உறவினருக்கு நீங்கள் கிரிப்டோகரன்சி பரிசளித்தால், அதற்கு வரி விதிக்கப்படும் கிரிப்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு வரி விதிக்கப்படுமா? இந்தியாவில் கிரிப்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு நபர் ரூ.1 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி வாங்கி, இரண்டு மாதங்கள் கழித்து அதை ரூ-2 லட்சத்துக்கு விற்பனை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதன்படி, அவர் ரூ.1 லட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார். இப்போது, அந்த நபர் அந்த லாபத்திலிருந்து 30%, அதாவது ரூ.30,000-த்தை இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும். கிரிப்டோகரன்சி மீதான 1% வரிப் பிடித்தம் என்றால் என்ன? ஒரு நபர் ரூ.1 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை மற்றொரு நபரிடமிருந்து வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது, முதல் நபர் 1% வரிப் பிடித்தத்தை (TDS), அதாவது ரூ.1,000 தவிர்த்து மீதம் ரூ.99,000 ரூபாயைச் செலுத்துவார். இந்த ரூ.1,000 இந்திய அரசின் வருமானப் வரி பிடித்தமாக (TDS) வைப்பு வைக்கப்படும். பிறகு இது வரியாக வரவு வைக்கப்படும். இது அரசிற்கு அந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் பற்றிய தகவல்களை அறிய உதவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரிப்டோகரன்சி மூலம் எற்படும் லாபம் அல்லது இழப்புகளை ஆண்டு வருமானத்தில் சேர்க்க முடியாது பரிசாக வழங்கப்படும் கிரிப்டோகரன்சியின் மீது வரி விதிக்கபடுமா? ஆம், சில சமயங்களில், நெருங்கிய உறவுகளுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படாது. ஆனால், இந்தியாவில், கிரிப்டோகரன்சி பரிசுப் பொருட்களின் பிரிவில் சேர்க்கப்படவில்லை. அதனால், உங்கள் உறவினருக்கு நீங்கள் கிரிப்டோகரன்சி பரிசளித்தால், அதற்கு வரி விதிக்கப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் இழப்பு எற்பட்டால் என்ன ஆகும்? கிரிப்டோகரன்சி மூலம் எற்படும் லாபம் அல்லது இழப்புகளை ஆண்டு வருமானத்தில் சேர்க்க முடியாது. ஒருவேளை நீங்கள் உங்கள் தொழில் மூலம் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளீர்கள். அதேசமயம் கிரிப்டோகரன்சியில் ரூ.1 லட்சம் இழந்துள்ளீர்கள். இந்நிலையில், உங்களுக்கு லாபமாகக் கிடைத்த ரூ.5 லட்சத்துக்கான வரியை நீங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும். இதில், கிரிப்டோகரன்சி மூலம் எற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. இழப்பைக் கழித்துவிட்டு உங்கள் வருமானத்தை ரூ.4 லட்சமாகக் கணக்கு காட்ட முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேடிஎம் மூலம் ஒருவர் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி அல்லது இ-வாலட்டைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளில் இருக்கும் பணத்துக்கும் டிஜிட்டல் பணத்துக்கும் என்ன வித்தியாசம்? டிஜிட்டல் நாணயம், உங்கள் கைபேசியில் அல்லது டிஜிட்டல் வாலட்டில் டிஜிட்டல் வடிவில் (கணினித் தரவுகளாக) இருக்கும். இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய வங்கி தேவையில்லை. ஆனால், பேடிஎம் போன்ற இ-பரிவர்த்தனை நிறுவனங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் போன்ற சாதாரணப் பணத்தை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய உதவும் நிறுவனங்கள். இவை இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ஒருவர் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி அல்லது இ-வாலட்டைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இ-பரிவர்த்தனை - கிரிப்டோகரன்சி என்ன வேறுபாடு? பிட்காயின்களின் மொத்த மதிப்பு 2.1 கோடியைத் தாண்ட முடியாது. பிட்காயினின் இருப்பு வரையறுக்கப்படதால், பிட்காயின்கள் குறைவாகவே உள்ளன. பிட்காயினின் தேவை அதிகரிக்கும் போது அதன் விலை அதிகரிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன், பிட்காயினின் விலை ரூ.22,000 ஆக இருந்தது. 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது ரூ.30 லட்சமாக உயர்ந்தது. இன்று ஒரு பிட்காயினின் மதிப்பு 90,000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம். பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மறுபுறம், இ-பரிவர்த்தனை மூலம் அனுப்பப்படும் ரூபாய் போன்ற நாணயங்களின் மதிப்பு மாறாது. இ-பரிவர்த்தனை மூலம் ரூ.10-ஐ எப்போது அனுப்பினாலும், அதன் மதிப்பு ரூ.10-ஆகத்தான் இருக்கும். இ-பரிவர்த்தனைகள் நாம் பணம் அனுப்பும் முறையை மட்டுமே மாற்றியுள்ளன. https://www.bbc.com/tamil/articles/cvgx1dwvpldo மேலுள்ள செய்தி பற்றி நம்மட யாழ்கள உறவு சரியாகக் கணித்திருந்தவர்! யாரென்று ஞாபகம் வரவில்லை.
  10. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வியாழக்கிழமை (24) அம்பாந்தோட்டை, டீ.ஏ.ராஜபக்ஷ தேசிய பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். எமது அணிக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/198722
  11. நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.
  12. (எம்.மனோசித்ரா) நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வியாழக்கிழமை (14) தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம். மாறாக மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். சர்வஜன பலய கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் தஹம் சிறிசேன தெரிவிக்கையில், குறுகிய காலத்துக்குள் எமது கட்சி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாது போயுள்ளது. எனவே எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை எம்மால் சிறந்த முறையில் நிறைவேற்ற முடியும் என்றார். https://www.virakesari.lk/article/198717
  13. அமெரிக்கா: டிரம்ப் 2.0 ஆட்சியில் ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியின் பங்கு எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், அந்தோணி ஸர்ச்சர் பதவி, வட அமெரிக்க செய்தியாளர், பிபிசி டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்நிலையில், வெள்ளை மாளிகை பதவிகளுக்கான அவரது புதிய நியமனங்கள், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து உணர்த்துவது என்ன? டிரம்ப், முதல் கட்டமாகத் தனது வெள்ளை மாளிகை நியமனங்கள் மற்றும் முக்கிய அரசாங்கத் துறைகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். அவர், 2025 ஜனவரி மாதம் பதவியேற்கும்போது அவரது முன்னுரிமைகள் என்ன என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும், குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கருத்து தெரிவித்துள்ளார். தனது முதல் பதவிக் காலத்தின்போது, சில நேரங்களில் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை உணர்ந்த டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நிர்வாகத்திற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்து வருகிறார். அதற்கென தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டத்தையும், அதைச் சரி வரச் செயல்படுத்தும் பணியாளர்களையும் நியமித்துள்ளார். அதுகுறித்து இதுவரை தெரிய வந்திருப்பதை இங்கு காணலாம். கடுமையான நிலைப்பாட்டுடன் குடியேற்றக் குழு “அமெரிக்காவில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் முறையான ஆவணங்களின்றி வசிக்கின்றனர். அவர்களை நாடு கடத்துவதாக அளிக்கப்பட்ட டிரம்பின் பிரசார வாக்குறுதி மிகையானதல்ல” என்று டிரம்ப் அரசாங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டிரம்பின் நெருங்கிய ஆலோசகராகவும், அவரது உரையாசிரியராகவும் இருந்து வரும் ஸ்டீபன் மில்லரை, வெள்ளை மாளிகை கொள்கைகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாகத் தேர்வு செய்துள்ளார். பெருமளவிலான நாடு கடத்தல் தொடர்பான கொள்கைகளை ஸ்டீபன் மில்லர் வடிவமைப்பார். மேலும், ஆவணமற்ற மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்த இரண்டு கொள்கைகளையும் மில்லர் சரி பார்ப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை உருவாக்குவதில் மில்லர் ஈடுபட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் பதவிக்காலத்தில் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (Immigration and Customs Enforcement) செயல் இயக்குநராகப் பணியாற்றிய தாமஸ் ஹோமன், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணமற்ற மக்களைக் கண்டறியும் அதிபரின் கொள்கையை ஆதரித்தார். இப்போது அவர் டிரம்பின் “குடியேற்றத் திட்டங்களின் நிர்வாக அதிகாரியாக” இன்னும் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார். "இந்த நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நாடு கடத்தல் படையைத் தான் இயக்கப் போவதாக" ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஹோமன் கூறினார். டிரம்பின் இந்த மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், "செலவு” ஒரு பிரச்னை இல்லை என்று கடந்த வாரம் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார். "அவர்கள் மக்களைக் கொலை செய்தார்கள், போதைக் கடத்தல்காரர்கள் நாடுகளை நாசமாக்கினார்கள். இப்போது அவர்கள் அந்தந்த நாடுகளுக்கே திரும்பச் செல்லப் போகின்றனர். அவர்கள் இனிமேலும் இங்கே தங்க முடியாது," என்று தனது நாடு கடத்தல் திட்டம் குறித்து அவர் கூறினார். சீனாவை கடுமையாக எதிர்ப்போருக்கு வெளியுறவு பதவிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலர் நம்புகின்றனர். வர்த்தகம் என்ற எல்லைக்குள் சீனா குறித்தான தனது விமர்சனங்களை டிரம்ப் கவனமாக வெளிப்படுத்துகிறார். தனது வெளியுறவுக் கொள்கைக் குழுவுக்கு ஆதரவாக சீன விமர்சகர்களைக் குரல் எழுப்ப வைக்கிறார். தனது தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகராக, டிரம்ப் ஃப்ளோரிடா நாடாளுமன்ற உறுப்பினரான மைக் வால்ட்ஸை தேர்வு செய்துள்ளார். அவர் ஓர் ஓய்வுபெற்ற ராணுவ கர்னல். இது வெள்ளை மாளிகையின் முக்கிய வெளியுறவுக் கொள்கைப் பதவி. அமெரிக்கா சீனாவுடன் "பனிப்போரில்" இருப்பதாகத் தெரிவித்த அவர், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்கா அழைப்பு விடுத்தபோது நாடாளுமன்ற கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் வால்ட்ஸ் இருந்தார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் ஸ்டெஃபானிக், கடந்த அக்டோபர் மாதம், சீனா அமெரிக்க தேர்தலை முடக்கத் திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சீன ஆதரவு ஹேக்கர்கள் டிரம்பின் செல்போனில் உள்ள தகவல்களைத் திருட முயல்வதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் தற்போது டிரம்பால் ஐ.நா சபைக்கு அமெரிக்க தூதுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிரம்ப் தனது வெளியுறவுத் துறை செயலராக, ஃப்ளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோவை அறிவிக்கவுள்ளார். அவரும் சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020இல் ரூபியோ சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் போராடி வரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அதனால், சீன அரசு அவர்மீது பயணக் கட்டுப்பாடு மற்றும் வணிகரீதியாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தது. டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், வர்த்தக சச்சரவுகள், கோவிட் பேரிடர் என அமெரிக்கா – சீனா உறவு நிலையற்றதாக, பதற்றம் நிறைந்து இருந்தது. சீனா மீதான டிரம்பின் பல கடுமையான கொள்கைகளை பைடன் நிர்வாகம் தொடர்ந்த போதிலும், மேலும் சில புதிய வரிகளைச் சேர்த்தது, சிறிதளவு பதற்றத்தைக் குறைக்க உதவியது. ஆனால், முழுமையாகப் பதற்றம் குறையவில்லை. இந்நிலையில், டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்து, சீனா மீதான அதே கடினமான நிலைப்பாட்டைத் தொடர்வார் எனத் தெரிகிறது. ஈலோன் மஸ்க் புதிய அவதாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நியமனங்களின் பட்டியல் வளரும் அதேவேளையில், மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு சிறிய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ தலைமையகத்தில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். டிரம்ப் தனது அமைச்சரவைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் மஸ்க் உதவுவதாகவும், டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி இடையிலான தொலைபேசி உரையாடலிலும் அவர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியுடன் இணைந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்க “அரசாங்கத் திறன் துறையை” உருவாக்குவார் என்று டிரம்ப் அறிவித்தார். மஸ்க் தன் அரசியல் கருத்துகளைத் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். மேலும், ஃப்ளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட்டை அடுத்த செனட் பெரும்பான்மைத் தலைவராக ஆதரித்துள்ளார். மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைக் குழு டிரம்பின் பிரசாரத்திற்கு உதவுவதற்காக சுமார் 200 மில்லியன் டாலர்களை செலவிட்டது. எதிர்காலத் தேர்தல்களில் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுக்கு நிதியளிக்கும் முயற்சிகளைத் தொடர மஸ்க் திட்டமிட்டுள்ளார். ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் டிரம்ப் நிர்வாகத்தில் எப்படிப் பங்கு வகிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்பை ஆதரிப்பதற்காக சுயேச்சையாகப் போட்டியிடுவதில் இருந்து விலகிய அவருக்கு அமெரிக்காவை மீண்டும் “ஆரோக்கியமானதாக” மாற்றுவது தொடர்பான வேலையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் பதவியேற்கத் தயாராகும்போது, குடியரசுக் கட்சியினர் செனட் சபையில் சிறிய வித்தியாசத்திலாவது பெரும்பான்மை பெறக்கூடும். ஆனால், டிரம்ப் நாடாளுமன்றத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதைவிட தனது அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார். செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர், செனட் சபையின் ஒப்புதலின்றிச் செயல்பட அவருக்கு உதவ வேண்டுமென்று பரிந்துரைத்தார். இது நாடாளுமன்ற அமர்வு இல்லாதபோது செனட் ஒப்புதலின்றி முக்கியமான அரசுப் பதவிகளை நிரப்புவதற்கான ஒரு வழி. புதிய நியமனங்களை அங்கீகரிப்பதில் செனட்டின் பங்கைப் புறக்கணிப்பதன் மூலம் இது அவருக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும். நாடாளுமன்றத்தில், குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையையும் டிரம்ப் மெதுவாகக் குறைத்து வருகிறார். அவரது நிர்வாகத்தில் சேர்வதற்காக செனட்டர்கள் வெளியேறினால், அவர்களின் இடங்களை மாகாண ஆளுநர்களால் விரைவாக நிரப்ப முடியும். ஆனால், செனட் சபை உறுப்பினர்கள் வெளியேறினால், சிறப்புத் தேர்தல்கள் தேவை. அதற்குச் சில மாதங்கள் ஆகலாம். ஈலோன் மஸ்க் உள்பட டிரம்பின் ஆலோசகர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையைக் குறைப்பது, சட்டங்களை இயற்றும் அவரது திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை இயற்ற நிறைய நேரமும், பேச்சுவார்த்தையும் தேவைப்பட்டாலும், குடியேற்றம் போன்ற விஷயங்களில் அதிபர் ஒரே கையெழுத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். டிரம்ப் இப்போது, நாடாளுமன்றத்தின் மூலம் பணியாற்றுவதற்குப் பதிலாக, அதிபராகத் தனது நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES மூத்த அரசாங்க ஊழியர்களை மாற்றுவது உள்பட புதிய அதிபரின் கீழ் நிர்வாகம் தொடங்கும்போது உருவாக்கப்படும் பதவிகளை நிரப்ப டிரம்ப் இப்போதுதான் தொடங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டில், அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதால், முக்கியப் பாத்திரங்களுக்கு அவர் பாரம்பரிய குடியரசுக் கட்சியினரையே நம்ப வேண்டியிருந்தது. ஆனால், இப்போது நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, முதல் முறை ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கட்சிக்குள் இருந்து அவருக்கு விசுவாசமான நிறைய ஆதரவாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். கடந்த செவ்வாயன்று, டிரம்ப் தெற்கு டகோட்டா ஆளுநர் கிறிஸ்டி நோயமை உள்நாட்டு பாதுகாப்புச் செயலராகவும், ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் பீட் ஹெக்செத்தை பாதுகாப்புச் செயலராகவும் நியமித்தார். இருவரும் ஆரம்பம் முதலே டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். மார்கோ ரூபியோ, எலிஸ் ஸ்டெஃபானிக் போன்ற சிலர் ஆரம்பத்தில் டிரம்பை விமர்சித்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டியுள்ளனர். புகழ் அல்லது கவனம் ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோரை நியமிப்பதில் டிரம்ப் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கிறார். எனவே, அவர் தனது ஆரம்பக்கால பணியாளர் தேர்வுகளில் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார். ஆனால், ஆட்சியின்போது ஏற்படும் அழுத்தங்களை அவர் எப்படி நிர்வகிக்கிறார் என்பதைப் பொறுத்தே, அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் ஆட்சி, முதல் ஆட்சியில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது தெரிய வரும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cev9882w723o
  14. வீட்டில(வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம்) இருப்பதை பிடுங்காமல் விட்டாலே போதுமண்ணை!
  15. பாராளுமன்றத் தேர்தல் 2024 : வாக்குப் பதிவு வீதம்! இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் இடபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. அந்தவகையில், கொழும்பில் 65 சத வீத வாக்குப் பதிவும், நுவரெலியாவில் 68 சத வீத வாக்குப் பதிவும் புத்தளத்தில் 56 சத வீத வாக்குப் பதிவும் மாத்தறையில் 64 சத வீத வாக்குப் பதிவும் பதுளையில் 67 சதவீத வாக்குப் பதிவும் மட்டக்களப்பில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, அநுராதபுரத்தில் 65 சத வீத வாக்குப் பதிவும் குருணாகலில் 64 சதவீத வாக்குப் பதிவும் இரத்தினபுரியில் 65 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளன. கேகாலையில் 64 சத வாக்குப் பதிவும் பொலன்னறுவையில் 65 சத வீத வாக்குப் பதிவும் வன்னியில் 65 சத வீத வாக்குப் பதிவும் ஹம்பாந்தோட்டையில் 60 சத வீத வாக்குப் பதிவும் காலியில் 64 சத வீத வாக்குப் பதிவும் திருகோணலையில் 67 வீத வாக்குப் பதிவும் மொனராகலையில் 61 சத வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/198710 நம்மூர்ல 1400இல் 400 தான் வாக்களித்ததாக சொல்கிறார்கள்! யாழ்ப்பாண வாக்களிப்பு வீதம் குறைவு தான் போல?
  16. வட்டமோ சதுரமோ நானும் படிக்காதவன் தான்! கற்றது கையளவு கல்லாதது உலகளவு! நம் வாழ்க்கையில் கற்றலுக்கான தேடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கும். எந்த சமயத்திலும், “நான் கற்று தேர்ந்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்லும் தருணம் வரப்போவதில்லை. ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஏதோ ஒன்றை கற்று தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். அதற்கான அவசியமும் நம் வாழ்வில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் கற்றதை விட நமக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்க்கொள்ளும்போது எப்படி தப்பிப்பது என்பதை எந்த பித்தகோரஸ் தியரத்தை வைத்தும் தீர்த்து விட முடியாது. அந்த தருணத்தில் நாம் இதுவரை கற்ற அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடும். ஒரு மெரைன் இஞ்சினியருக்கோ, கம்ப்யூட்டர் இஞ்சினியருக்கோ அவரவர் துறையிலே அவர்கள் கோலோச்சினாலும் அதை தவிர்த்து வேறு என்ன தெரியும் என்று வரும்போது கேள்விக்குறியாகி விடுகிறது. உலகத்திலே பெரிய மலைத்தொடரான ஆன்டீஸில் மாட்டிக்கொண்டு உயிர் தப்பியவர்களின் கதையை கேட்கும்போது வியப்பாகவே உள்ளது. நம் வாழ்க்கையில் எதிர்ப்பாராத தருணம் எந்த நொடி வேண்டுமானாலும் வரலாம் அதற்கு நாம் எப்போதுமே தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. சமைக்க தெரிந்திருக்க வேண்டியது கூட சர்வைவலுக்கான முதற்படியேயாகும். நம் தேவைக்கு நாம் சமைக்க கற்று கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க கூடாது. எப்போதும் வாழ்க்கையில் கம்பர்ட் ஸோனிலேயே இருந்து விட முடியாது. கஷ்டங்களை எதிர்க்கொண்டால் தான் தேவையான நேரத்தில் அதற்கு தகுந்தார் போல நம்மை மாற்றி கொண்டு வாழ முடியும். கற்றல் என்பது புத்தகத்தில் இருப்பதை மட்டும் பயில்வதில்லை. அதை தாண்டி வாழ்வில் அவசர தேவைகளுக்காக நாம் புதிதாக என்ன கற்றுக்கொண்டோம் என்பதிலும் உள்ளது. நம் வாழ்க்கையில் கற்றல் என்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது வேறு யாருடைய வாழ்க்கையை பார்த்து வந்ததாகவோ இருக்கலாம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கற்றலே நம்மை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. https://kalkionline.com/lifestyle/motivation/katradhu-kai-alavu-kalladhathu-ulagalavu-motivation-articles
  17. உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராளமான இந்தியக் குடும்பங்கள் இதே போல் போராடி வருகின்றன. சுமதிக்கு தற்போது 54 வயது ஆகிறது. இரு மகள்களும் படித்துக் கொண்டுள்ளார்கள். கணவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். “வேலை இருக்கும் போதுதான் வருமானம் இருக்கும். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். சாப்பாட்டைக் குறைத்துக்கூட இன்சுலின் வாங்கினோம் என்று கூறலாம்” என்றார் சுமதி. அவரது மூத்த மகளுக்கு 21 வயது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு வகை 1 கண்டறியப்பட்டது. இன்னொரு மகளுக்கும் நீரிழிவு பாதிப்பு தெரிய வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. இருவரும் குறுகிய காலத்துக்கு வேலை செய்யும் இன்சூலினை பகலில் நான்கு முறையும், நீண்ட நேரத்துக்கு வேலை செய்யும் இன்சுலினை இரவில் ஒரு முறையும் எடுத்துக் கொள்கின்றனர். “சர்க்கரை அளவைச் சரிபார்க்க பயன்படுத்தப்படும் 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டிரிப், ஒரு நாளுக்கு நான்கு தேவைப்படும். அதற்காக சிறிய ஊசிகள் 100 வாங்க ரூ.1000 ஆகும். இன்சுலின் செலுத்த தேவைப்படும் 100 ஊசிகள் ரூ.1700, இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு. ஒரு ஊசியை நான்கு முறை பயன்படுத்தலாம். இன்சுலினை செலுத்துவதற்குத் தேவையான பேனாவை போன்ற கருவி ரூ.1500 ஆகிறது. அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். இவ்வாறு இருவருக்கும் நாளொன்று சுமார் ரூ.450 முதல் ரூ.500 செலவாகிறது” என்று விவரித்தார். இந்தியாவில் நீரிழிவு நோய் உடலில் இன்சுலின் குறைவாக இருப்பவர்களுக்கு செயற்கையாக வெளியிலிருந்து உடலில் செலுத்திக் கொள்ள முடியும். பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வரும் இந்த அறிவியல் மைல்கல்லை கண்டுபிடித்தவர் சர் ப்ரெட்ரிக் பேண்டிங் (Sir Fredrick Banting) அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவர் இன்சுலினை கண்டுபிடித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது இன்னமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சார்பில் 2023 மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வகை -1, வகை -2 இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். (மரபணு உள்ளிட்ட காரணங்களால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காமல் இருப்பது வகை 1 நீரிழிவு. வாழ்க்கை முறை காரணமாக உடலில் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை அளவு அதிகரிப்பது வகை 2 நீரிழிவு. வகை 1 நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.) டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் மேஹக் நந்தா, ஹரியாணா குருக்ஷேத்ராவில் உள்ள என்.ஐ.டி.யின் ராஜேஷ் ஷர்மா ஆகியோர் இணைந்து இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான நிதி சுமை குறித்து 2018ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட 38% குடும்பங்கள் மிக அதிகமான செலவுகளைச் செய்வதாகவும், 10% குடும்பங்கள் இந்தப் பாதிப்பின் காரணமாகவே வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் மருந்துகளுக்கே கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், விளிம்பு நிலை சமுதாயங்களுக்கும், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ளோருக்கும், தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவோருக்கும் நிதிச்சுமை கூடுதலாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் வரப் போகிறதா என்பதை எளிதில் கண்டறிவது எப்படி?20 நவம்பர் 2023 பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு நோய் ஏற்படுமா?1 நவம்பர் 2022 இன்சுலின் அனைவருக்கும் கிடைக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு சிகிச்சை குறித்து பிபிசியிடம் பேசிய பலர், இன்சுலின் கிடைப்பதில் எழும் சிக்கல்களைத் தெரிவித்தனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் சுமை இந்தியாவில் அதிகரித்துள்ள கடந்த 10 ஆண்டுகளில் இன்சுலின் கிடைப்பதிலும் சவால்கள் எழுந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர் கார்த்திக். அவரது மகளுக்கு 5 வயதில் நீரிழிவு நோய் வகை 1 கண்டறியப்பட்டது. இந்நிலையில், தனது மகளுக்குத் தேவைப்படும் இன்சுலினுக்காக கெஞ்சவும், கடன் வாங்கவும் நேர்ந்ததாகக் கூறுகிறார் அவரது மனைவி லீலாவதி. “நாங்கள் சாப்பிடாமல் இருந்துகூட குழந்தைக்கு இன்சுலின் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். எங்களுக்கு அது மிகப்பெரிய தொகை. ராகி உள்ளிட்ட தானிய வகைகளை முதலில் வாங்கிக் கொடுத்தோம், ஆனால் காசு இல்லாததால் இப்போது ரேஷன் அரிசியைத்தான் குழந்தைக்குக் கொடுக்கிறோம். காய்கறிகள், பழங்கள் வாங்கவே காசு போதவில்லை” என்கிறார். மேலும், “இன்சுலின் குப்பிகளைப் பயன்படுத்தும்போது பெரிய ஊசிகள் தேவைப்படும். முதல் மூன்று ஆண்டுகள் அதைப் பயன்படுத்தினோம். ஆனால் குழந்தைக்கு வலியும் காயமும் அதிகமானது. எனவே இப்போது இன்சுலின் பேனா வாங்குகிறோம். இதில் ஊசியின் அளவு மிகச் சிறியது. ஒரு பேனா சுமார் ரூ. 3 ஆயிரம் வரை ஆகும். இது அரசு மருத்துவமனையில் கிடைத்தால் எங்களுக்கு மிகப் பெரிய வரமாக இருக்கும்” என்கிறார் லீலாவதி. பட மூலாதாரம்,SRIDHAR RAJMOHAN படக்குறிப்பு, ஸ்ரீதர் ராஜ்மோகன் லீலாவதி தனது குழந்தைக்கு, கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இன்சுலின் பெற்று வருகிறார். தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த 36 வயது ஸ்ரீதர் ராஜ்மோகன், “பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஹூமன் இன்சுலின் எனப்படும், உடலில் செலுத்தி 45 நிமிடங்கள் கழித்து செயல்படத் தொடங்கும் இன்சுலின்தான் கிடைக்கிறது. ஆனால் வெளிச் சந்தையில் அனலாக் எனப்படும், உடலில் செலுத்திய ஐந்து நிமிடங்களில் செயல்படத் தொடங்கும் இன்சுலின்கள் கிடைக்கின்றன. எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாதம் 60 முதல் 100 குழந்தைகளுக்கு இன்சுலின் இலவசமாக வழங்குகிறோம்” என்கிறார். சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், இன்சுலின் கிடைப்பது, அதுவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைப்பது ஆகியவை ஒவ்வொரு மாநிலத்துக்கு வேறுபடும் என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவர் ஆர்.வி.அசோகன். “இந்தியாவில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைவிட, தென் மாநிலங்களில் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேற்கில் மகாராஷ்டிராவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும் தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில், மாநில அரசுகள் பரவலாக இன்சுலின் வழங்கி வருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் வீடுகளுக்கே மருத்துவக் குழுக்கள் சென்று இன்சுலின் வழங்குகின்றனர்” என்றார். பட மூலாதாரம்,DR R V ASOKAN படக்குறிப்பு, இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.அசோகன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு நிறுவனத்தின் இயக்குநர் தருமராஜன் அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் இலவசமாக வழங்கப்படுவதாகக் கூறுகிறார். “நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, அவர்களுக்குத் தேவையான அளவு இன்சுலின் குறிப்பிட்ட கால அளவில் வழங்கப்படுகிறது. இன்சுலின் குப்பிகள் மட்டுமல்லாமல், பேனாக்களும் சில நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நீரிழிவு வகை 1 பாதிப்புடைய நான்கு ஏழை எளிய பிள்ளைகளுக்கு இன்சுலின் பம்ப் (ரூ.2 லட்சம் மதிப்பிலான கருவி) இலவசமாக வழங்கப்பட்டது” என்றார். இன்சுலின் பம்ப் என்பது கையில் கட்டிக் கொண்டால் தானியங்கியாக இன்சுலின் ஏற்றக் கூடிய கருவியாகும். இன்சுலின் சந்தையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,DR DHARMARAJAN படக்குறிப்பு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு நிறுவனத்தின் இயக்குநர் தருமராஜன் லான்செட் டயபடீஸ் மற்றும் எண்டோக்ரைனாலஜி ஆய்விதழில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரையில், உலக இன்சுலின் சந்தையில் எலி லில்லி, நோவோ நோர்டிஸ்க், சனோஃபி ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் சந்தை மதிப்பின் 99% இந்த நிறுவனங்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்தியாவில் இப்போது நிலைமைகள் மாறி வருவதாக, இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் விராஞ்சி ஷா தெரிவிக்கிறார், “பயோகான், லூபின், மான்கைண்ட் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள் இன்சுலின் தயாரிப்பு சந்தையில் உள்ளனர். பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இன்சுலினை பெற்று வணிகம் செய்கின்றனர். எனினும் சந்தையில் 30-40 ஆண்டுகளாக சில நிறுவனங்கள் இருக்கும் நிலையில், புதிதாக வரும் நிறுவனங்களுக்கு பொதுவான சவால்கள் இருக்கத்தானே செய்யும். இதனால் இந்திய நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மையோ, தரம் குறைந்தது என்றோ அர்த்தம் கிடையாது” என்கிறார். இந்தியாவில் நீரிழிவு மருந்துகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.22,000 கோடி எனக் கூறும் விராஞ்சி ஷா, இதில் இன்சுலின் மருந்துகளின் மதிப்பு மட்டும் 20% (ரூ.4,400 கோடி) என்கிறார். பட மூலாதாரம்,DR VIRANCHI SHAH படக்குறிப்பு, இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் விராஞ்சி ஷா மேலும், பெரும்பாலான ஹூமன் இன்சுலின்கள் சில விதிவிலக்குகளைத் தவிர, விலைக் கட்டுப்பாட்டில் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். "கடந்த 2021ஆம் ஆண்டில், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM) இன்சுலின் கிளார்ஜின் சேர்க்கப்பட்டது. இதனால் அதன் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டது, விலைக் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 80% இன்சுலின் பயனர்கள் ஹூமன் இன்சுலினை பயன்படுத்துகிறார்கள்" என்றார். மேலும், இந்தச் சந்தையில் பத்துக்கும் குறைவான தயாரிப்பாளர்களே உள்ளதாகக் கூறும் அவர், “உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இன்சுலின் கிடைக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய இதர வளர்ந்து வரும் நாடுளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இன்சுலின் விலை மிகவும் குறைவு. அரசின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அது இருப்பதால், விலை கட்டுப்படுத்தப்படுகிறது” என்றார். தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தொற்றா நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளின் பகுதியாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குகிறது. மாநிலங்கள் இதிலிருந்து உதவி பெற முடியும். இந்நிலையில், மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் இன்சுலின் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார் சுமதி. “நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தபோது காப்பீட்டுத் திட்டத்தில் இன்சுலின் கிடைத்தது மிகவும் உதவியாக இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், இன்சுலின் பம்ப் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து பம்ப் வாங்க ரூ.10 லட்சம் செலவாகும். அதுதவிர மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.30 ஆயிரம் செலவாகும்” என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c704r1dx94ko
  18. ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றது. சொற்கள் பொருள் உணர்த்துகின்ற தன்மையை விளக்குகின்ற இயல், சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (Semantics) என்று வழங்கப்படுகின்றது. அதாவது மொழியின் உள்ளடக்கத்தில் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவற்றின் பொருள் அல்லது பொருள் பற்றிய ஆய்வு பொருண்மையியல் ஆகும். இந்தக் குறிப்பின் தலைப்பிற்கு இந்த விளக்கம் ஏன் அவசியப்படுகிறது என்று சிலர் நினைக்கலாம். ஒரு சொல்லின் உள்ளார்ந்த அர்த்தம், அதன் பயன்பாடு, நடைமுறை, விளைவு குறித்த புரிதலுக்கு இந்த விளக்கம் உதவக்கூடியது. நடைமுறையிற் பல தமிழ்ச் சொற்கள் அதன் உண்மையான பொருளிலிருந்து நழுவி முற்றிலும் வேறான அர்த்தத்தை அழுத்தமாக மனங்களிற் பதியச் செய்துள்ளன. உதாரணமாகக் ‘கற்பு’ என்ற சொல்லைக் குறிப்பிடலாம். கற்பு என்பதற்கு ‘நிறுமனமயப்பட்ட’ ஒழுங்கிற்கு இணங்கி நடத்தல் என்ற பொருளைத் தொல்காப்பியம் தருகின்றது. அடிப்படையில் கடப்பாடு, உறுதிப்பாடு போன்ற சொற்களே அதற்கு நெருங்கி நிற்கக்கூடியவை. ‘கற்பு’ என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் ‘சொல் வழுவமை’, கொடுத்த வாக்கிற்கு ஒழுக நடத்தல் (commitment ) என்பதாகும். அதாவது கடப்பாட்டுடன் உறுதிப்பாட்டுடன் ஒரு நிறுவன ஏற்பாட்டுக்குள் ஒழுகுவதைக் குறிப்பது. அச்சொல் நடைமுறை அர்த்தத்தில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் ‘உடல்’, ‘ஒழுக்கம்’ சார்ந்ததாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. புனிதம் என்ற போர்வையிற் பெண்ணை ஒடுக்குவதற்கான ஆணாதிக்க விளைவாக அதன் பயன்பாடு ஆக்கப்பட்டிருக்கின்றது. கற்பைப் பெண்ணின் பிறப்புறுப்பிற் கொண்டுபோய் வைத்த பெருமை ‘தமிழ்ப்பெருங்குடி’யின் ‘வழித்தோன்றல்’களைச் சாரும். இது இப்படியிருக்க தமிழ்ச் சூழலில் உள்ளடக்கப் பெறுமதி இழக்கச் செய்யப்பட்ட ஒரு அரசியற் சொல்லாகத் ‘தேசியம்’ ஆக்கப்பட்டிருக்கின்றது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வலியுத்தல் – விடுதலை வேணவா – சமூகத்திரள் மற்றும் மொழி, கலை, பண்பாட்டு வாழ்வியலின் முற்போக்கான அம்சங்களைக் கருத்து ரீதியாகவும் செயல்பூர்வமாகவும் தொலைநோக்கு ரீதியாகவும் சுட்டிநிற்க வேண்டிய சொல் அது. ஆனால் அது எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்பது இலகுவாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் பின்-கொலனித்துவ இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதிவழி எதிர்ப்புகள் – ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் – பின்-முள்ளிவாய்க்கால் எனவான காலப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இக்காலங்கள் அனைத்திலும் தேசம், தேசியம் என்பன பிரயோக முக்கியத்துவம் கொண்ட சொற்களாகவும் இருந்திருக்கின்றன, இருந்தும் வருகின்றன. இலங்கையின் வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்பது உரிய கோட்பாட்டுருவாக்கதுடன் முன்னெடுக்கப்பட்டதா என்பது ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியது. பின்-முள்ளிவாய்க்கால்’ ஒன்றரைத் தசாப்பங்களைக் கடந்துவிட்டது. சமகாலத்தில் ஈழம், புலம்பெயர் சூழலில் அதிகம் மலினப்படுத்தப்பட்ட சொல்லாடலாக தேசியம் என்பது ஆக்கப்பட்டிருக்கின்றது. அச்சொல்லைத் தமிழர்களைப் போன்று அர்த்தமற்றதாக ஆக்கிய மக்கள் உலகில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை. இன்று தமிழ்ச் சூழலில் தேசியம் என்பது – முதன்மையான வெற்றுக் கோஷமாக, – வெறும் கோறையாக, – பிற்போக்குத் தனமாக, – அதிகாரத் துஸ்பிரயோகக் கருவியாக, – சுயவிமர்சனங்களை மறுப்பதற்கான முலாமாக, – தவறுகளை மூடிமறைக்கும் ஆயுதமாக , – தேர்தல் முதலீடாக, – அரசியல்வாதிகள், கட்சிகளின் இருப்பினை தற்காத்துக் கொள்கின்ற துருப்புச் சீட்டாக, – உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பவையாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தருணங்களில் தமிழ் இனவாதம் என்று சொல்லக்கூடிய வடிவத்திற்கூட அது வெளிப்படுகின்றது. தேசம், தேசியம் என்பவற்றை உரிய உள்ளடக்கக் கனதி- செயல்வலு- உரிய-உகந்த திட்டங்களுடனும் தொலைநோக்குடனும் முன்னிறுத்தவும் முன்னெடுக்கவும் அரசியல்வாதிகளும், கட்சிகளும், சிவில் சமூகம் உட்பட்ட சமூக – கலை-பண்பாட்டு நிறுவனங்களும் அங்கு இல்லை என்பதே அடிப்படையான சிக்கல். நிலவும் போதாமைகளின் பட்டியலில் ‘கல்வியாளர்களையும்’/Think tanks, ஊடகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அரசியல் உரையாடல், கோரல், நிர்ப்பந்தித்தல், ஜனநாயக வழிமுறைகளில் இயங்குதல் முதலான தொலைநோக்குப் பார்வையுடனான அரசியற் செயற்திட்டம் தமிழர் தரப்பிடம் போதாமையாகவுள்ளது. நிலவும் அரசியல் வெளி, வாய்ப்புகளை எவ்வாறு மாற்றத்தை நோக்கிய சாத்தியம்மிக்க கருவிகளாகக் கையாள்வது – அறிவார்ந்த தளத்தில் இயங்குவது – வசப்படுத்துவது – செயற்திட்டங்களை வகுப்பது – நிறைவேற்றுவது – இலக்கை நோக்கி நகர்வது போன்ற சிந்தனைகளின்றி முட்டுச்சந்தியில் நிற்கின்றது. உள்ளடக்கமற்ற, செயலற்ற, தொலைநோக்கற்ற தமிழ்த் தேசிய வெற்றுக் கோஷங்களை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். உள்ளடக்கம், நடைமுறை சார்ந்து அதிகம் மாற்றம் கோரிநிற்கின்ற சொல் அதுவாகத்தான் இருக்கும். இன்றுள்ள தேர்தல் அரசியல், கட்சி அரசியல் வெளிகளுக்கூடாக அத்தகைய மாற்றம் சாத்தியமில்லை. மக்கள்சார் சமூக, கலை, பண்பாட்டு இயக்கம், அறிவு,கல்விசார் இயங்குதல்களுக்கு ஊடாகவே அது சாத்தியமாகும். https://thinakkural.lk/article/311995
  19. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை பத்து மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 16%, நுவரெலியாவில் 20%, கண்டியில் 22%, இரத்தினபுரியில் 25%, பதுளையில் 23%, கேகாலையில் 20%, மட்டக்களப்பில் 09%, திகாமடுல்லையில் 18%, பொலன்னறுவையில் 23%, மொனராகலையில் 14%, மாத்தறையில் 10%, புத்தளத்தில் 22%, மன்னாரில் 28%, கம்பஹாவில் 20%, களுத்துறையில் 20%, முல்லைத்தீவில் 23%, கிளிநொச்சியில் 25%, குருநாகலில் 22%, அநுராதபுரத்தில் 25%, மாத்தளையில் 24% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டன. இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, மிகவும் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்த பல மூத்த அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்கள் இந்த முறை களத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும். இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்றே அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வருகின்றன. அநுர குமார திஸாநாயக்கவை பொறுத்தவரை, அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத் தான் விரும்பிய அமைச்சரவையை அமைக்க விரும்புவார். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுப்பது, தங்கள் கட்சி ஆட்சியமைக்க முயல்வது ஆகியவையே நோக்கமாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டு வந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரம் மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பதுதான் முக்கியமான எதிர்பார்ப்பு. "இலங்கையின் வாக்காளர்களிடம் பொதுவாக, பொருளாதார நிலை மேம்பட வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, வேலை வாய்ப்பும் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலிக்கிறது. சிறுபான்மை மக்களிடம் 13வது சட்டத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது" என்கிறார் கொழும்பு நகரில் இருந்து செயல்படும் சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேடிவ்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து. அவரைப் பொறுத்தவரை, புதிய ஜனாதிபதியான அநுர குமார திஸாநாயக்க சரியான திசையில் செல்வதாகத் தோன்றினாலும், புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பிறகே அவர் எந்த அளவுக்குத் திறம்படச் செயல்படுகிறார் என்பது குறித்த முடிவுக்கு மக்களால் வர முடியும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்னமும் கடன் நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, அந்நிய செலாவணிக் கையிருப்பையும் அதிகரித்தாக வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக அதிகரித்திருப்பதால், அரசு ஊழியர்களிடம் ஊதிய உயர்வு கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மீனவர்கள், விவசாயிகள் போன்ற பிரிவினரிடம் மானிய உதவி எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் நிலாந்தன். "ஜனாதிபதித் தேர்தலின்போது தென்னிலங்கையில் மாற்றத்துக்கான ஒரு அலை வீசியது. அந்த அலையின் தாக்கம் இன்னமும் அப்பகுதியில் இருக்கிறது. ஆனால் தமிழ், இஸ்லாமிய மக்களின் கவலைகளும் கரிசனங்களும் வேறு" என்கிறார் அவர். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, சிங்கள மக்களின் எதிர்பார்ப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றானதல்ல என்கிறார் நிலாந்தன். "தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, இனப் பிரச்னைகள் தொடர்பான கவலைகள் இருக்கின்றன. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் முக்கியக் கட்சியான ஜே.வி.பி. இன்னமும் அதை ஒரு மனிதாபிமானப் பிரச்னையாகவே பார்க்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் இன்னும் 13வது சட்டத் திருத்தம் தேவையில்லை எனப் பேசுகிறார்கள். மேலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் ராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இதையொட்டி அமைந்த ராணுவ வளையங்கள் பல கிராமங்களை ஊடறுத்துச் செல்கின்றன. இலங்கை ராணுவத்தின் பெரும் பகுதி வடக்கு - கிழக்கு பகுதியில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதியில் ராணுவ மய நீக்கம் முக்கியமான பிரச்னை" என்கிறார் அவர். வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, பல சுயேச்சைக் குழுக்கள் களத்தில் நிற்பதால் ஒரே கட்சியே பெருமளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்த முறை குறைந்திருப்பதாகவும் சொல்கிறார் நிலாந்தன். வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் துவங்கும். அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm270ggv957o இந்த மாதிரி வாக்குச்சீட்டுகளை எந்த ஒரு கட்சியும் வீடுவீடாக மக்களிடம் சென்று தெளிவுபடுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. வாசிக்கத் தெரிந்தவர்களே குழம்பும் அளவுக்கு கட்சிகளும் சுயேட்சைகளும் கூடிப்போயிற்று!
  20. இலங்கைத் தேர்தலில் முக்கியமான குறைபாடு ஒன்றுள்ளது. தொகுதிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் என எவரும் இல்லை, மாவட்டத்திற்கு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இருப்பர். இதனால் தொகுதிக்குரிய பிரச்சனைகளை எந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடுவது எனத் தெரியாது. தொகுதியின் வளர்ச்சி பாதிக்கப்படும், மாவட்டம் முழுவதும் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டும்.
  21. முதல் தேர்தல் முடிவு எப்போது?; வெளியானது அறிவிப்பு 2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். இந்த தகவலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். https://thinakkural.lk/article/311982 முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும் 2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (14) தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவரும் நிலையில் மாலை 4 மணிக்கு நிறைவடையும். முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும். 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 17,140,354 நபர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/198680
  22. குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபார சதங்கள்; DLS முறையில் இலங்கை வெற்றியீட்டியது (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (13) மழையினால் பாதிக்கப்பட்டு தொடரப்பட்ட இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 45 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்தை முதல் தடவையாக இலங்கை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பெற்ற சதங்களும் அவர்கள் பகிர்ந்த இரட்டைச் சத இணைப்பாட்டமும் இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டிருந்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மாலை 6.35 மணியளவில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. வெகு நேரம் மழை தொடர்ந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் அத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் இரவு 9.00 மணிக்கு ஆட்டம் தொடர்ந்துபோது நியூஸிலாந்துக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. வில் யங், டிம் ரொபின்சன் ஆகிய இருவரும் 80 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். வில் யங் 48 ஓட்டங்களையும் டிம் ரொபின்சன் 35 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், அதன் பின்னர் சிரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. 28 பந்துகளில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்ததால் நியூஸிலாந்து ஆட்டம் காணத் தொடங்கியது. இந்த 5 விக்கெட்களும் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர் களால் வீழ்த்தப்பட்டது. (110 - 5 விக்.) அதன் பின்னர் மைக்கல் ப்றேஸ்வெல், அறிமுக வீரர் மிச்செல் ஹே ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால், 22ஆவது ஓவரில் பந்துவீச அழைக்கப்பட்ட டில்ஷான் மதுஷன்க மிக சாதுரியமாக பந்துவீசி மிச்செல் ஹேயை ஆட்டம் இழக்கச் செய்தார். மத்திய வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இலங்கையின் இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன. குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார். அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு இலங்கையின் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர். ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ். https://www.virakesari.lk/article/198630
  23. மற்றவை எங்க இருக்கென்று பாக்கவே இல்லை அண்ணை! வாக்குச் சீட்டு பெரிதாக இருந்தது. என்னுடைய முச்சக்கர வாகனம் உட்செல்லக் கூடியவாறு வாக்குச் சாவடி அமைந்துள்ளது, அத்தோடு சிரேஸ்ட வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர் சகல வசதிகளையும் ஏற்புடுத்தித் தந்தார். புள்ளடி இட்டவுடன் சீட்டை மடித்து அவரிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பெட்டியில் போட வைத்தேன்.
  24. அண்ணை இருப்பவர்களில் ஒப்பீட்டளவில் கழிசடை வேலைகளில் ஈடுபடாதவர்கள் அவர்கள் என்பதும் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவர்களும் அவர்கள் தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.