Everything posted by ஏராளன்
-
இந்தோனேசியா - பாலியில் எரிமலை குமுறல் ; விமான சேவைகள் இரத்து
எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. வானத்தில் எரிமலை சாம்பல் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் ஆகிய விமான சேவைகள் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஏர் ஏசியா மற்றும் விர்ஜின் ஆகிய விமான சேவைகளும் விமான பயணங்களை இரத்துசெய்துள்ளதாக ஃப்ளைட்ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதியாக பாலி காணப்படுவதோடு, அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழ்கிறது. பாலியில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் (497 மைல்) தொலைவில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்திலுள்ள லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை கடந்த 3 ஆம் திகதி முதல் தடவையாக குமுறியதில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இந்த எரிமலை செவ்வாய்க்கிழமை மீண்டும் குமுறத் தொடங்கி சாம்பல்களை வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கான 80 விமானங்கள் பாலியில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக Ngurah Rai விமான நிலையத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளது. பசிபிக் எரிமலைப் பகுதியில் (ரிங் ஆஃப் ஃபயர்) அமைந்துள்ளது. இது பல்வேறு டெக்டோனிக் தகடுகளின் மேல் அதிக நில அதிர்வு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், லெவோடோபி எரிமலை குமுறலினால் வெளியேறும் சாம்பல் துகள்கள் வானில் 10 கிலோ மீற்றர் உயரத்தை எட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/198596
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற ஒருவர் கைது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கற்பிட்டி அல்மனார் வாக்குச் சாவடிக்கு அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/311987
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்கா - இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா, அர்ஷ்தீப் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக திலக் வர்மாவின் அற்புதமான சதம், அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம், அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆகியவற்றால் செஞ்சுரியனில் நேற்று (நவ. 13) நடந்த 3வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஸ்கோர் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. இதுதான் இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை இந்த ஆட்டத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி முறியடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தோல்வி தொடர்கிறது கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வென்றதில்லை என்ற நிலை இந்தத் தொடரிலும் தொடர்கிறது. கடைசி ஆட்டத்தில் ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வென்றாலும், தொடர் சமநிலை ஆகுமே தவிர டி20 தொடரை வெல்ல முடியாது. 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி 5 டி20 தொடர்களை இழந்து, 2 தொடர்களை சமன் செய்துள்ளது. ஆனால், இதுவரை வெல்லவில்லை. ஆட்டநாயகன் திலக் செஞ்சுரிய மைதானத்தில், டி20 போட்டியில் சதம் அடித்த 12வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 32 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் தனது முதல் சதம் அடித்து 107 ரன்களுடன் (7 சிக்ஸர், 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மில்லரின் விக்கெட்டை கொண்டாடும் இந்திய அணி இந்திய அணி இந்த காலண்டர் ஆண்டில் 8வது முறையாக டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதுமட்டுமல்லால், ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணியில் 5 வீரர்கள் ரோஹித் சர்மா(121), அபிஷேக் சர்மா(100), சாம்ஸன்(111, 107), திலக் வர்மா(107) சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வாலுக்குப் பின் டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், 5வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் சதத்தை அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா ஒன்பதாவது ஓவரில் 100 ரன்களை இந்திய அணி எட்டியதாலும், நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் 85 ரன்களை குவித்ததால், ஸ்கோர் 240 ரன்களை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், 219 ரன்களுடன் சுருங்கியது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 65 ரன்கள் குவித்தாலும், யான்சென் வீசிய 20வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. திருப்புமுனை நாயகன் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இருவரின் விக்கெட் சரிந்த பின்புதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தியும், நடுப்பகுதியில் கிளாசன், யான்சென் என இரு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் திருப்புமுனை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தவிர ரவி பிஸ்னோய், அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினர். ஆனால், கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் பேட்டர்கள் அதிக ரன்களை குவித்துவிட்டனர். அதேபோல, ஹர்திக் பாண்டியா ஓவரும் வெளுக்கப்பட்டது. ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளாசனின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் நேற்று இந்திய அணி களமிறங்கியது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அர்ஷ்தீப் உறுதி செய்யும் விதத்தில் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் எண்ணிக்கையைக் கடந்து 59 இன்னிங்ஸ்களில் 92 விக்கெட்டுகளுடன் அர்ஷ்தீப் 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சஹல் 96 விக்கெட்டுகளுடன் உள்ளார். பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளுடனும், புவனேஷ்வர் குமார் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளுடனும் உள்ளனர். அனுபவமின்மை டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் தென் ஆப்ரிக்க அணி இன்னும் புதிய வீரர்களுடன் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. பேட்டிங்கில் எந்த வீரரைக் களமிறக்குவது, அதன் ஆழம், தீவிரத்தன்மை, திட்டங்கள் என எதுவும் தெளிவாக இல்லாமலே போட்டியில் விளையாடியது. அனுபவ பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நார்ஜே இல்லாமல் தென் ஆப்ரிக்க அணி புதிய வீரர்களுடன் விளையாடியது. இதனால், நேற்று 10 வைடுகள், 3 நோ பால்களை வீசி அனுபவமின்மையை வெளிப்படுத்தினர். போராடிய தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு ஓவருக்கு 12 ரன்ரேட் தேவைப்பட்டது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ரன்ரேட்டை தொட்டனர். ஆனால், கடைசி 5 ஓவர்களில் தேவைப்படும் ரன்ரேட் 17 ஆக உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், கிளாசன், மில்லர் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 35 பந்துகளில் 58 ரன்களை சேர்த்தவுடன் ஆட்டம் சூடுபிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது ஆனால், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமாரின் கேட்சை நினைவுபடுத்தியது போல மில்லருக்கு டீப் மிட்-விக்கெட்டில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் மில்லர்-கிளாசன் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. மில்லர் 18 ரன்களில் ஏமாற்றத்துடன் சென்றார். அதேபோல, கிளாசன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வருண் சக்ரவர்த்தியின் 14வது ஓவரை வெளுத்த கிளாசன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 23 ரன்களை குவித்தார். 22 பந்துகளில் 41 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்த கிளாசனின் விக்கெட்டை ஆஃப்சைடு விலக்கி ஸ்லோபாலாக வீசியதன் மூலம் எடுத்தார் அர்ஷ்தீப் சிங். யான்சென் மிரட்டல் அரைசதம் கிளாசன் ஆட்டமிழந்தபின் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணுகையில் யான்செனின் ஆட்டம் சூடுபிடித்தது. ரவி பிஸ்னோய் வீசிய 17வது ஓவரில் இரு சிக்சர்களை யான்சென் பறக்கவிட்டார். கடைசி இரு ஓவர்களில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்டு 26 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோட்ஸி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை சந்தித்த யான்சென் சிக்ஸர் விளாசி 16 பந்துகளில் முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால், 3வது பந்தில் கால்காப்பில் வாங்கி 54 ரன்களில் யான்சென் ஆட்டமிழந்தார். மூன்று பந்துளில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சிமிலேன் 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் சமிலேன் ஒரு ரன் எடுத்தவுடன் வெற்றி இந்தியாவின் பக்கம் சாய்ந்தது. தென் ஆப்ரிக்க அணியின் யான்சென், கிளாசன், மில்லர் ஆகியோர் கடைசி வரை போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. சாம்சன் டக்-அவுட், அபிஷேக் அதிரடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் டக்-அவுட்டில் யான்சென் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 சதங்களை அடித்த சாம்சன், தொடர்ந்து 2 டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் தன்னை நிலைப்படுத்தியபின் அதிரடிக்கு மாறினார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா இருவரின் பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. கோட்ஸி, சிபாலா, சிமிலேன் ஓவர்களை இருவரும் வெளுத்தனர். ஐந்து சிக்சர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. அபிஷேக்-திலக் கூட்டணி 107 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தது. அபிஷேக் 50 ரன்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் ஒரு ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 18 ரன்களில் மகராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ரிங்கு சிங்- திலக் வர்மா கூட்டணியில் திலக் வர்மா சேர்த்த ரன்கள்தான் அதிகம். இருவரும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதில் 45 ரன்களை திலக் வர்மாதான் சேர்த்தார். ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார். ராமன் தீப் சிங் 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ஆட்டத்தை நிறுத்திய ஈசல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் அதிரடிக்கு மாறினார் தென் ஆப்ரிக்க சேஸிங்கின் போது, மின் ஒளிக்கு ஏராளமான ஈசல்கள் மைதானத்தைச் சுற்றி வட்டமிட்டன. இதனால் இந்திய வீரர்களும் ஃபீல்டிங் செய்ய, பந்துவீசச் சிரமப்பட்டனர். தென் ஆப்ரிக்க பேட்டர்களின் கண்களில் ஈசல் பட்டதால் பேட் செய்ய முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ஈசல் பறப்பதை நிறுத்த மின்ஒளி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஈசலால் ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை. அச்சமில்லாத இளம் வீரர்கள் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் கூட்டத்தில் என்ன ஆலோசித்தோமோ அதை ஆட்டத்தில் செய்துள்ளோம். இளம் வீரர்கள் அச்சமின்றி ஆடுகிறார்கள். வலைபயிற்சியில் ஆடும் ஆட்டத்தைப் போன்று, ஐபிஎல் தொடரில் அணிக்கு ஆடுவதைப் போன்று தங்கள் மாநிலத்துக்கு ஆடுவதைப் போன்று இங்கும் விளையாட வேண்டும் எனக் கூறினோம்" என்றார். சில போட்டிகளில் சிலர் வாய்ப்பைத் தவறவிட்டாலும், வீரர்கள் மீண்டும் தங்களை ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், "3வது வீரராகக் களமிறங்கவா என என்னிடம் திலக் கேட்டார், இன்று உன்னுடைய நாள் அடித்து தூள் கிளப்பு என்று கூறினேன். திலக்கின் திறமை, பேட்டிங் குறித்து எனக்கு நன்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் தெரிவித்தேன்,” எனத் தெரிவித்தார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gmp7jdvk4o
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
குமாரசாமி அண்ணையின் பலம் பலம் பொ....பலம்!
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
அண்ணை மை காயமுதல் எழுதிறன்! அமைதியாக நடைபெறுகிறது, வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளது. வாக்களித்த பலரும் சீட்டில முதலாவதாக இருந்த சின்னத்திற்கு(தேடிப்பார்க்க கடினமாக இருப்பதால்) போட்டதாக சொல்லுகிறார்கள்.
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
நாடு முழுவதும் 10 மணி வரை பதிவான வாக்கு வீதம் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, நுவரெலியா -20% கண்டி -22% இரத்தினபுரி – 25% பதுளை -23% கேகாலை-20% மட்டக்களப்பு -09% திகாமடுல்லை -18% பொலன்னறுவை -23% மொனராகலை -14% மாத்தறை -10% புத்தளம் -22% மன்னார் -28% கம்பஹா-20% களுத்துறை-20% யாழ்ப்பாணம் -16% முல்லைத்தீவு-23% கிளிநொச்சி-25% குருநாகல்-22% அநுராதபுரம்-25% மாத்தளை-24% வவுனியா-25% திருகோணமலை-23% https://thinakkural.lk/article/311976
-
யுக்ரேன்-ரஷ்யா போரில் இருந்து மற்ற நாடுகளின் ராணுவத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதென்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை வழிநடத்தும் யுக்ரேனிய வீரர் எழுதியவர், பாவெல் அக்செனோவ், ஓலே செர்னிஷ் மற்றும் ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - யுக்ரேன் இடையே போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் யுக்ரேனும் மாறி மாறி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்திய நாட்களில் இந்த தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. யுக்ரேன் ரஷ்யாவிற்கு எதிராக 80 ட்ரோன்களை செலுத்தியது. அவற்றில் சில மாஸ்கோவை இலக்காகக் கொண்டவை. மற்றொருபுறம் யுக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 140க்கும் மேற்பட்ட ட்ரோன்களை செலுத்தியது. இந்த மோதலில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது போர் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. மின்னணுப் போர்முறை மற்றும் பீரங்கித் தாக்குதல்களோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் போது ட்ரோன்கள் ஒரு சிறந்த தற்காப்பு ஆயுதமாகவும், எதிரி படைகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்கும் மிகவும் பயனளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்: போர்களத்தில் அனைத்தையும் கண்காணிக்கும் கண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போரில் முக்கிய அம்சமாக ட்ரோன்கள் மாறியுள்ளன, மேலும் அவை போர் நடக்கும் விதத்தை ஆழமாக பாதித்துள்ளன என்று ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் போர் ஆய்வுகள் பேராசிரியரான பிலிப்ஸ் ஓ பிரையன் கூறுகிறார். "அவை போர்க்களத்தை மிகவும் வெளிப்படையானதாக மாற்றியுள்ளன" என்றும் அவர் கூறினார். கண்காணிப்புப் பணியில் இருக்கும் ட்ரோன்கள் மூலம் படை வீரர்களின் நகர்வை அல்லது போரின் முன்னணியில் தாக்குதலுக்கான ஏற்பாட்டை, நிகழ் நேரத்தில் நோட்டமிட முடியும். போர்க்களத்தில் ஒரு இலக்கினை கண்டால், அதை பற்றிய தகவல்களை கட்டளை மையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் அந்த இலக்கின் மீது பீரங்கித் தாக்குதலுக்கு உத்தரவிடப்படும். இலக்கைப் கண்டுபிடிப்பது முதல் அதைத் தாக்குவது வரையிலான இந்த செயல்முறை, ராணுவ அகராதியில் "கொலை சங்கிலி" (kill chain) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இதில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை மிகவும் துரிதமாக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஓ பிரையன் கூறுகிறார். "ஆழமான மறைவான பகுதிகளில் இல்லையென்றால் ட்ரோனின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. டாங்கிகள் மற்றும் பிற கவச ஆயுதங்களை ட்ரோன்களை தாண்டி கொண்டு செல்ல முடியாது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிழக்கு யுக்ரேனில் ரஷ்யா படைகள் இருப்பதாகக் கருதப்படும் ஒரு கிராமத்தின் மீது பறக்கும் ட்ரோனின் காட்சியைக் காட்டும் திரையை ஒரு யுக்ரேனிய ட்ரோன் இயக்குனர் கண்காணிக்கிறார். எதிரிகளைத் தாக்க பீரங்கிகளுடன் சேர்ந்து தாக்குதல் ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. யுக்ரேன் படைகள் ட்ரோன்களை மட்டும் பயன்படுத்தி ரஷ்ய டாங்கிகளின் குழுக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடிந்தது. போரின் தொடக்கத்தில் யுக்ரேன், துருக்கியில் தயாரிக்கப்பட்ட TB-2 Bayraktar-ஐ பயன்படுத்தியது, இது வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசக்கூடிய ராணுவ தர ட்ரோன் ஆகும். இருப்பினும், தற்போது இரு தரப்பினரும் விலைக் குறைந்த "காமிகேஸ்" (kamikaze) ட்ரோன்களுக்கு மாறி வருகின்றனர். இவை பெரும்பாலும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், அவற்றில் வெடிபொருட்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெடிகுண்டு பொருத்தப்பட்ட யுக்ரேனிய ட்ரோன் காற்றில் பறக்கிறது யுக்ரேனில் உள்ள ராணுவ மற்றும் பொது மக்கள் வசிக்கும் இலக்குகளை தாக்குவதற்கு இரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 போன்ற ஆயிரக்கணக்கான காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்துகிறது. யுக்ரேனிய வான் பாதுகாப்பைக் கடக்க அவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் குடியிருப்பு பகுதியில் ஷாஹெட்-136 ஆளில்லா விமானத்தின் சிதைவு பீரங்கி: படைகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயுதம் யுக்ரைன் போரில் பீரங்கிகளே அதிகம் பயன்படுத்தப்படும் ஆயுதமாக இருக்கிறது. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்ட்டின் கூற்றுப்படி, ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 10,000 ஷெல் குண்டுகளை வீசுகிறது மற்றும் யுக்ரைன் ஒரு நாளைக்கு 2,000 - 2,500 ஷெல் குண்டுகளை வீசுகிறது. எதிரி படைகளின் நடமாட்டத்தை சரிபார்க்கவும், அதன் கவச வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள், கட்டளை மையங்கள் மற்றும் சப்ளை டிப்போக்களை தாக்கவும் பீரங்கி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. "போரின் போது, வெடிபொருட்கள் என்பது மனிதர்கள் அருந்தும் தண்ணீரைப் போன்றது, அல்லது காருக்கு எரிபொருளைப் போன்றது" என்று பீரங்கி நிபுணர் மற்றும் ராணுவ வல்லுநர் பெட்ரோ பியாடகோவ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இரு தரப்பினரும் வெளிநாடுகளிலிருந்து வந்த மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றை யுக்ரேனுக்கு வழங்குகின்றன. ரஷ்யா வட கொரியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்கிறது. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிபிலின் தலைமை நிர்வாகி ஜஸ்டின் க்ரம்ப் கூறுகையில், ''மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு தேவையான குண்டுகளை வழங்க திணறுகின்றன. இது அந்த நாடுகளின் ராணுவத் தொழில்களில் உள்ள சிக்கலை எடுத்துக்காட்டுகிறது.'' அவர் மேலும் கூறுகையில் "மேற்கத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் இப்போது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான உயர் துல்லியமான ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன. இருப்பினும், ஷெல் குண்டுகள் போன்ற அடிப்படை ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் அவர்களுக்கு இல்லை" என்றார். க்ளைட் குண்டுகள்: எளிய, அழிவுகரமான ஆயுதம் பட மூலாதாரம்,GETTY IMAGES/RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் போர் விமானம் 3000 கிலோ எடையுள்ள வெடிகுண்டை ஏவியது 2023-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் யுக்ரேனிய நிலைகள் மீது குண்டுவீசுவதற்கும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதற்கும் ஆயிரக்கணக்கான "க்ளைட் குண்டுகளை" (Glide bombs) பயன்படுத்தியது. அவை மடிக்கக்கூடிய இறக்கைகள் கொண்ட செயற்கைக்கோளால் வழிநடத்தப்படும் அமைப்புகளுடன் கூடிய வழக்கமான "ஃப்ரீ-ஃபால்" குண்டுகள் ஆகும். ரஷ்யா க்ளைட் குண்டுகளை அதிகம் பயன்படுத்துகிறது. அவற்றின் எடை 200 கிலோ முதல் 3,000 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். "க்ளைட் குண்டுகள் வலுவூட்டப்பட்ட நிலைகளை உடைப்பதிலும் கட்டடங்களை அழிப்பதிலும் திறம்பட செயல்படுகின்றன" என்று வான்வழிப் போர் நிபுணரான ஜஸ்டின் ப்ரோங்க் கூறுகிறார். பிப்ரவரி 2024 இல் கிழக்கு யுக்ரேனில் ரஷ்யா கைப்பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அட்விவ்கா நகரத்தைச் சுற்றியுள்ள யுக்ரேனிய பாதுகாப்பு நிலைகளை அழிக்க ரஷ்யா இதை அதிகளவில் பயன்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வெடிக்காத இந்த ரஷ்ய க்ளைட் வெடிகுண்டு கார்கிவில் உள்ள ஒரு வீட்டின் சுவரை உடைத்தது யுக்ரேன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் வழங்கும் நீண்ட தூரம் செல்லும் க்ளைட் குண்டுகளையும் பயன்படுத்துகிறது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட சிறிய விட்டம் கொண்ட குண்டுகளுக்கு இறக்கைகளை இணைத்து அதன் சொந்த க்ளைட் குண்டுகளை உருவாக்குகிறது. எவ்வாறாயினும் யுக்ரேனில் ரஷ்யாவை விட குறைவான க்ளைட் குண்டுகளே உள்ளன. மின்னணு போர்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனிய மின்னணு போர் நிலையத்தில் ரேடியோ அலைகளை கண்காணிக்கும் சென்சார்கள் முன்னெப்போதையும் விட ரஷ்யா-யுக்ரேன் போரில் மின்னணுப் போர்முறை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஆயிரக்கணக்கான படைகள் சிறப்புப் பிரிவுகளில் வேலை செய்கின்றனர். மறுபக்கத்தின் ட்ரோன்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்கவும், எதிரி ஏவுகணைகளை இலக்கில் இருந்து வீழ்த்தவும் முயற்சி செய்கின்றனர். ரஷ்யப் படைகள் Zhitel போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை 10 கிமீ சுற்றளவில் அனைத்து செயற்கைக்கோள் தகவல் தொடர்புகள், வானொலி தொடர்புகள் மற்றும் மொபைல் போன் சிக்னல்களை முடக்கும் திறன் கொண்டவை. இது மின்காந்த ஆற்றலின் பெரும் துடிப்புகளை வெளியிடுவதன் மூலம் ரேடியோ அலைகளை முறியடிக்கிறது. அதன் Shipovnic-Aero பிரிவின் மூலம், ரஷ்யப் படைகள் 10கிமீ தொலைவில் இருந்து ஒரு ட்ரோனை வீழ்த்த முடியும். இந்த அமைப்பு ட்ரோன் இயக்குபவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, பின்னர் பீரங்கி பிரிவுகளுக்கு தகவல்களை அனுப்ப முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய மற்றும் யுக்ரேன் ஆயுதப் படைகள் கையடக்க ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றன லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையில் பணிபுரியும் மெரினா மிரோன்,''யுக்ரேனில் உள்ள ஹிமார்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை ரஷ்ய மின்னணு போர் அமைப்புகள் எவ்வளவு எளிதாக முடக்கியது என்பதை மேற்கத்திய நாடுகள் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும்.'' என்கிறார் "இது சமச்சீரற்ற போர்," என்று அவர் கூறுகிறார். "நேட்டோ படைகள் ரஷ்யா வைத்திருப்பதை விட தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவற்றைச் செயலிழக்கச் செய்ய ஒப்பீட்டளவில் மலிவான எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்று ரஷ்யா காட்டியது." என்றார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உள்ள ஃப்ரீமேன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸைச் சேர்ந்த டங்கன் மெக்ரோரி, ''யுக்ரேனில் ரஷ்யா தனது மின்னணுப் போர்முறையை நடத்தும் விதத்தில் இருந்து நேட்டோ நாடுகளில் உள்ள ராணுவத் தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். "மின்னணுப் போர்முறையை இனி எளிதாகக் எடுத்துக் கொள்ள முடியாது. உங்களின் தந்திரங்கள், பயிற்சி மற்றும் புதிய ஆயுத அமைப்புகளை உருவாக்கும் போதெல்லாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy4np93plzeo
-
கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
(எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலையில் இருந்து வெளியேறுவதற்கே இருந்தது. அதனை நாங்கள் மாத்திரம் அறிவித்தால் மாத்திரம் போதாது. சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு உலக நாடுகள் அதன்போது எங்களுக்கு தெரிவித்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு அறியத்தருமாறும் அந்த நாடுகள் தெரிவித்தன. நாங்கள் 18 நாடுகளிடம் கடன் பெற்றிருந்தோம். அதற்கு மேலதிகமாக பிணைமுறி பத்திரங்கள் உலகில் தனியாருக்கு விற்பனை செய்திருந்தது. ஆரம்பமாக இந்த வங்குராேத்து நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினோம். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்து கடன் செலுத்துவது தொடர்பில் நிலைபேரான தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். மீண்டும் கடன் செலுத்துவதற்கு எந்தளவு காலம் வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். எமது கடனில் எந்தளவு தொகையை குறைத்து வழங்க முடியுமா என்ற விடயம் தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்தோம். 2028ஆம் ஆண்டில் கடன் செலுத்துவது ஆரம்பமாகும் என நாணய நிதியம் எமக்கு தெரிவித்தது. 2028ஆம் ஆண்டு கடன் செலுத்தாவிட்டால் எமக்கு பிரச்சினையாகும். 2028இல் கடன் செலுத்த ஆரம்பித்து 2042 ஆகும்போது கடன் செலுத்துவதை முடிவுக்கு கொண்டுவருமாறும் அவர்கள் எமக்கு அறிவித்தார்கள். குறித்த 18 நாடுகள் மற்றும் பிணைமுறி பத்திரம் மூலம் எங்களுக்கு 8000 முதல் 12000 மில்லியன் டொலர் வரை பெற்றுக்காெள்ள முடியும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு பொருளாதார இலக்கு இருக்கிறது. அந்த பொருளாதார இலக்குக்கு அமைய செயற்பட்டாவிட்டால் எமக்கு நன்கொடைகள் கிடைப்பதில்லை. எமக்கு கடன் செலுத்த முடியாது என அறிவித்தால் மீண்டும் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு ஆளாகுவோம். இதனை நாங்கள் 18 நாடுகளுடன் கலந்துரையாடினோம். அந்த 18 நாடுகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தன. சிறிய திருத்தங்களை முன்வைத்தோம். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாடுகளுடன் இருந்த இரு தரப்பு ஒப்பந்தத்தை நாங்கள் பிணைமுறியாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். நாங்கள் தேர்தலுக்கு செல்ல முன்னர் அந்த விடயங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்தாேம். அதன் பிரகாரம் ஒக்டோபர் 4ஆம் திகதி புதிய அரசாங்கத்துக்கும் அறிவித்தாேம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தற்போது நாங்கள் அதன் பிரகாரம் வேலை செய்ய வேண்டும். எங்களுக்கு கடன் செலுத்த முடியும் என்பதை காட்ட வேண்டும். அதன் பின்னர் நாங்கள் 2028முதல் கடன் செலுத்த வேண்டும். கடன் பெற்ற பின்னர் அவற்றை செலுத்தும்போதும் இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட வேண்டி இருக்கிறது. ஆரம்ப சில வருடங்களில் எங்களுக்கு 300 மில்லியன் டொலர் செலுத்த இருக்கிறது. அதன் பிரகாரமே நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம். அதேபோன்று தேசிய கடன்களை மீள செலுத்துவதற்கும் வேலைத்திட்டங்களை தயாரித்தோம். தேசிய மற்றும் சர்வதேச கடன் என மொத்தமாக 84000 மில்லியன் டொலர் இருக்கிறது. அதில் 42 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனாகும். அடுத்த அரைவாசி தேசிய கடனாகும். எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினை 2028ஆம் ஆண்டில் இந்த கடனை செலுத்த இருப்பதாகும். இதனை செய்யாவிட்டால் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு தள்ளப்படும். அதனை தடுப்பதாக இருந்தால் நாங்கள் எமது பொருளாதார இலக்கை அடைந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் 2028ஆம்போது எமது அரச வருமானம் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 15வீதமாக இருக்க வேண்டும். தற்பாேது அது நூற்றுக்கு 12வீதத்துக்கும் குறைவாகும். ஒவ்வொரு வருடமும் அந்த அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு புதிய வரி சுமத்த முடியாது. வட் வரி அதிகரிக்க முடியாது. அப்படியானால் புதிய வருமானம் என்ன? அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அத்துடன் எங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா?. அடுத்த வருடம் நிதி தேடிக்கொவதாக இருந்தால் வாகனம் இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டும். அப்போது அதன் மூலம் தீர்வை வரி கிடைக்கும். அதேநேரம் எங்களுக்கு பொருளாதாரத்தை விரைவாக முன்னேற்ற முடியுமானால் நிறுவனங்களினால், வியாபாரங்களினால் எமது வரி வருமானத்தை அதிகரிக்கும். அத்துடன் வரி செலுத்தவேண்டிய சிலர் அதனை தவிர்த்து வருகின்றனர். அந்த வரிகளை அறவிட்டுக்கொள்ளும் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் புதிய வரிகள் தொடர்பில் எங்களுக்கு சிந்திக்க வேண்டி ஏற்படும். 2025ஆம் ஆண்டுக்காக இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பாகவே எமக்கு சிந்திக்க இரக்கிறது . இதுதொடர்பில் திறைசேரி எவ்வாறு கலந்துரையாடுகிறது என இன்று எனக்கு தெரியாது. அத்துடன் அந்த நடவடிக்கைகள் முடிவடைவதில்லை. அடுத்த வருடம் எங்களுக்கு 6 ரில்லியன் தேடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த பணத்தை எங்கிருந்து தேடிக்கொள்வது?. எந்தவொரு அரசாங்கமும் இதுதொடர்பாகவே அதானம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதுதொடர்பில் கவனம் செலுத்தாமல் சத்தமிட்டும், வேறு விடயங்களை கதைத்தும் பயன் இல்லை. அதனால் எங்களுக்கு பழைய முறையில் வியாபாரம் செய்ய முடியாது. பழைய முறைக்கு அரசியல் செய்ய முடியாது. பழைய முறைக்கு ஊடகங்களை கொண்டுசெல்ல முடியாது. ஒவ்வொருவரும் புதிய வேலைத்திட்டத்துடன் செயற்பட வேண்டும். அதனை மறக்க வேண்டாம். எமக்கு கடன் செலுத்தும் நிலை இல்லாமல் போனால் அனைத்தும் அழிந்துவிடும். நாங்கள் அதனை நினைவில் வைத்துக்கொண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198617
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் விளையாட மறுத்ததா இந்திய அணி? - அந்நாட்டில் என்ன விவாதிக்கப்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன. இந்த தகவலை ஐ.சி.சி எழுத்துப்பூர்வமாக பாகிஸ்தானுக்கு அளித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன. இதனால், பாகிஸ்தான் மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அடுத்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான போட்டியில் விளையாடாது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது? இதுகுறித்து பிபிசி உருது மொழிச் சேவையிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) செய்தித் தொடர்பாளர் ஒருவர், “ஐ.சி.சி இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது என்று பி.சி.சி.ஐ எழுத்துப்பூர்வமாக ஐ.சி.சி-க்கு தெரிவித்துள்ளது” என்றார். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பது குறித்து ஜியோ செய்தி சேனலிடம் (Geo News) பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா எம். ஆசிப், “பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், தெஹ்ரீக்-இ போன்ற அமைப்புகளை உள்ளடக்கியவர்களுடன் இந்தியா போரிட்டு வருகிறது என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் பாகிஸ்தான் தாலிபன்களும் அடங்குவர்,” என்றார். மேலும், "துபாயில் போட்டி (Hybrid Model) நடத்துவது குறித்து நான் கருத்து தெரிவிக்கப்போவதில்லை. காஷ்மீர் பிரச்னை குறித்துப்பேச ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருந்து அனைத்து இந்தியர்களும் தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றனர்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 போட்டியின் போது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இந்தியாவின் கவலை தங்கள் வீரர்களது பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி இது பற்றிக் கூறும் போது, “தெற்காசியாவில் பிறந்து கிரிக்கெட்டைப் பின்பற்றாத சிலரில் நானும் ஒருவன். ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட விரும்புகிறேன். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை அனுப்புவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமாக இருப்பதையே காட்டுகிறது,” என்றார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை சமூக ஊடகத்தில் குறிப்பிட்டு, “நிலைமையைச் சீரமைத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் நடைபெறுவதை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு,” என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் நௌமன் நியாஸ், தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியின் போட்டிகளை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தும் ஹைபிரிட் மாடலுக்கு ஆதரவாக இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் எந்த ஒரு இடத்திலும், எந்த விதமான போட்டிகளையும் இந்தியாவுடன் விளையாட விரும்பவில்லை என்ற முடிவைப் பரிசீலித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது ‘இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது’ பாகிஸ்தானின், கராச்சியைச் சேர்ந்த விளையாட்டுச் செய்தியாளர், ஃபைசன் லக்கானி, தனது எக்ஸ் தளப் பதிவில், "பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கு இந்தியா தயாராக இல்லை என்றால், பாகிஸ்தான் இந்தியாவுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார். ஜியோ செய்தி சேனல், எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு யோசித்து வருவதாக எழுதியுள்ளது. சாம்பியன் டிராபி தொடர் போட்டிக்கான அட்டவணை, நவம்பர் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது, ஆனால் இப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.சி.சி இது குறித்து ஒரு முடிவெடுக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி-யிடம் தெரிவித்தார். ஐ.சி.சி அட்டவணை எந்தவொரு ஐ.சி.சி போட்டியின் அட்டவணையும் போட்டிக்கு 100 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். இதனால் போட்டியை நடத்தும் நாடு, ஒளிபரப்பாளர்கள் மற்றும் மற்ற அமைப்பினர் தங்களை தயார் செய்து கொள்ள போதுமான கால அவகாசம் கிடைக்கும். இந்தச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைத் தவிர, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெறாத காரணத்தால் இலங்கை அணி இந்த தொடரில் பங்கேற்காது. 2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததையடுத்து, பல போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், 2025 சாம்பியன்ஸ் டிராபி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gzj2y4pg2o
-
கர்நாடகப் பெண்ணை மணந்த சூரியனார் கோவில் ஆதீனம் - ரூ.1,000 கோடி சொத்துக்களை அபகரிக்கச் சதி என்று குற்றச்சாட்டு
சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்? பட மூலாதாரம்,FACEBOOK/SOORIYANARKOVILAADHEENAM படக்குறிப்பு, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் அறநிலையத்துறையிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மடத்தை விட்டு வெளியேறியிருக்கிறார், கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம். உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாகவே, மடத்தைவிட்டு ஆதீனம் வெளியேறியதாகக் கூறுகின்றனர், மடத்தின் நிர்வாகிகள். இதன் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தூண்டுதல் உள்ளதாகக் கூறுகிறார், சூரியனார் கோவில் ஆதீனம். மடத்தின் நிர்வாக பொறுப்புகளில் இருந்து சூரியனார் கோவில் ஆதீனம் விலகியது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவில் ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக சங்கரலிங்க தேசிக சுவாமிகள் இருந்தார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து, 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் ஆதீனமாக பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதற்கு முன்னதாக, இவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் தம்பிரானாக இருந்துள்ளார். திருமண சர்ச்சை கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சூரியனார் கோவில் ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் மகாலிங்க தேசிக சுவாமிகள், அண்மையில் பெங்களூருவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை கர்நாடக மாநிலத்தில், இந்து திருமணச் சட்டத்தின்படி பதிவு செய்துள்ளார். ஆதீனம் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் பரவவே, "ஆமாம். நான் திருமணம் செய்து கொண்டது உண்மைதான். நான்கு பேருக்குத் தெரிந்து வெளிப்படையாகத் திருமணம் செய்து கொண்டேன்," என ஆதீனம் விளக்கம் அளித்தார். மேலும், மடத்தின் விதிகளுக்கு மாறாக தான் நடந்து கொள்ளவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால், மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றதாக, சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் (சமய, நிர்வாகப் பணிகளை மேற்கொள்பவர்) சுவாமிநாத தேசிக சுவாமிகள் குற்றம் சுமத்தினார். பிபிசி தமிழிடம் அவர் முன்னர் பேசும்போது, "சூரியனார் கோவில் மடத்தின் மரபுப்படி இல்லறத்தில் இருந்து துறவறம் மேற்கொள்ளலாம். ஆனால், துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது. இந்த மரபை ஆதீனம் மீறிவிட்டார்," என்றார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மடத்தில் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம், 'கர்நாடகாவில் அமைய உள்ள ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்புகளை மட்டும் ஹேமாஸ்ரீ கவனிப்பார். தமிழ்நாட்டில் உள்ள மடத்துக்கு உரிமை கோர மாட்டார்' என விளக்கம் அளித்தார். இதை பிபிசி தமிழிடமும் சூரியனார் கோவில் ஆதீனம் கூறியிருந்தார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, உள்ளூர் மக்கள் சூரியனார் கோவில் மடத்தின் முன்பாகத் திரண்டு கோஷம் எழுப்பினர் ஆதீனம் எடுத்த முடிவு இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) சூரியனார் கோவில் ஆதீனத்துக்கு எதிராகக் கும்பகோணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) அன்று உள்ளூர் மக்கள், மடத்தின் முன்பாகத் திரண்டனர். மடத்தின் மரபுகளை மீறியதால் ஆதீனப் பொறுப்பில் இருந்து வெளியேறுமாறு கூறி அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பதற்குப் காவல் துறை குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்படவே, மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகக் கூறி, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மடத்தின் சாவியை ஒப்படைத்திருக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க மடத்தின் முன்பு காவல் துறை குவிக்கப்பட்டனர் இதன்பிறகு நடந்த விவரங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத சுவாமிகள், "மடத்தின் முன்பு மக்கள் திரண்டதால், 'சொத்துகளுக்குச் சேதம் வரக் கூடாது' என்பதற்காக, நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதீனம் அறிவித்தார்.'' “அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள், மடத்தின் நிர்வாகப் பொறுப்பை திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். 'அவர்களிடம் கொடுக்க விரும்பவில்லை. அறநிலையத்துறையிடமே ஒப்படைக்கிறேன்' என ஆதீனம் கூறிவிட்டார்." என்றார். படக்குறிப்பு, சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள் ஒன்று கூடும் சைவ ஆதீனங்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்து மகாலிங்க தேசிக சுவாமிகள் விலகியுள்ள நிலையில், ஆதீன பொறுப்பில் இருந்தும் அவரை நீக்குவது குறித்து பிற சைவ மடங்களின் ஆதீனங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறுகிறார், சுவாமிநாத சுவாமிகள். "ஆதீனப் பொறுப்பில் இருந்து அவரை விலக்குவது தொடர்பாக, 16 மடங்களின் ஆதீனங்கள் கூட்டு அறிக்கை கொடுக்க வேண்டும் எனவும், திருவாவடுதுறை ஆதீனம் மட்டும் தனியாக கருத்துரு கொடுக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை கூறியுள்ளது," என்கிறார். பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மடத்தின் சம்பிரதாயத்தில் இருந்து ஆதீனம் விலகியதுதான் பிரச்னை. மடத்தின் சொத்துகளை மீட்கும் முயற்சியில் இறங்கியதால், தனக்கு எதிராகச் சிலர் செயல்பட்டதாக ஆதீனம் கூறுகிறார். அப்படியானால், மடத்தின் மரபை மீறித் திருமணம் செய்து கொண்டதை எவ்வாறு ஏற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார். "இனிவரும் நாட்களில் ஆதீனமாக மகாலிங்க தேசிக சுவாமிகள் தொடர்வது சிரமம் தான்," எனக் கூறும் சுவாமிநாத சுவாமிகள், "திருமணம் என்ற சூழ்ச்சி வலையில் ஆதீனம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை அவர்தான் உணர வேண்டும். திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது," என்கிறார். படக்குறிப்பு, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் சூரியனார் கோவில் ஆதீனம் சொல்வது என்ன? மடத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து விலகியது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள், "உள்ளூரில் சிலர் தேவையற்றப் பிரச்னைகளை ஏற்படுத்தியதால், அறநிலையத்துறையிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டேன்," என்றார். ஆனால், சூரியனார் கோவில் ஆதீனமாகத் தான் தொடர்வதாக பிபிசி தமிழிடம் கூறிய ஆதீனம், "இந்த விவகாரத்தின் பின்னணியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் தூண்டுதல் இருக்கிறது," என்கிறார். இதுகுறித்து விவரித்த ஆதீனம், "சூரியனார் கோவில் மடத்தின் சொத்துகள் பெருமளவு திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதைச் சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் இறங்கியதால், எனக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். இதைச் சட்டரீதியாக எதிர்கொள்வேன்," என்றார். ஆதீனங்கள் ஒன்றுகூடி முடிவெடுக்க உள்ளது தொடர்பாகக் கேட்டபோது, "அது வழக்கமான ஒன்றுதான்," என்று மட்டும் பதில் அளித்தார். திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகிகள் பதில் ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீன மடத்தின் பொதுமேலாளர் ராஜேந்திரன், "சூரியனார் கோவில் மடத்தின் ஆதீனத்தை நியமிப்பது மட்டும்தான் எங்களின் வேலை. அதன் நிர்வாகத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை," என்கிறார். துவக்கத்தில் இருந்தே தங்கள் மீது சூரியனார் கோவில் ஆதீனம் குறை கூறிவருவதாகக் கூறும் ராஜேந்திரன், "ஆதீனத்துக்கு எதிராக உள்ளூரில் உள்ள மக்கள் பிரச்னை செய்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அவர் மீதான சர்ச்சையை மறைப்பதற்காக எதையோ பேசி வருகிறார். இதில் எங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cpqd4v32z8yo
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
குசல் மெண்டிஸ் 143, அவிஷ்க 100; இலங்கை 324 - 5 விக். (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரண்டாவது தடவையாக மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன. குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார். அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர். https://www.virakesari.lk/article/198623
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் சொந்த மண்ணில் விளையாடிய நான்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றியீட்டிய இலங்கை, அந்த வெற்றி அலையைத் தொடரும் குறிக்கோளுடன் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை எதிர்கொள்ளவுள்ளது. ஸிம்பாப்வே (2-0), ஆப்கானிஸ்தான் (3-0), இந்தியா (2-0), மேற்கிந்தியத் தீவுகள் (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இலங்கை வெற்றியிட்டியிருந்தது. எவ்வாறாயினும் அந்நிய மண்ணில் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என பெரிதும் நம்பப்படுகிறது. உபாதை காரணமாக பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இலங்கை குழாத்தில் துஷான் ஹேமன்த இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். எனினும் அவரை விட அனுபவசாலியும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் 2ஆவது போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியவருமான ஜெவ்றி வெண்டசேக்கு இறுதி அணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அணித் தலைவர் சரித் அசலன்க தெரிவித்தார். அவருடன் மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவர். ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் அவரது முன்னைய ஆற்றல்களைக் கவனத்தில்கொண்டு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அசலன்க குறிப்பிட்டார். அத்துடன் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை இறுதி அணியில் இணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். இந்த 6 வீரர்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், ஜனித் லியனகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவர் (குசல் பெரேரா அல்லது சதீர சமரவிக்ரம) அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. நியூஸிலாந்து அணியில் புதிய வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு கேன் வில்லியம்சன், டிம் சௌதீ, டெவன் கொன்வே போன்ற பிரதான வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விடுகை பெற்றுள்ளனர். மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளவுள்ளது. நியூஸிலாந்து குழாத்தில் டிம் ரொபின்சன், ஸக்கரி பௌல்க்ஸ், மிச்செல் ஹே, நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெறுகின்றனர். டீன் பொக்ஸ்க்ரொவ்ட், ஜொஷ் க்ளாக்சன், ஜேக்கப் டவி ஆகியோர் மிகக் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிவர்களாவர். இந்த வருடம் நியூஸிலாந்து அணி விளையாடவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வீரர்களின் ஆற்றல்கள் பரீட்சிக்கப்படவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரே நியூஸிலாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடராகும். இலங்கை அணியைப் போன்றே நியூஸிலாந்து அணியிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் தாராளமாக இடம்பெறுகின்றனர். அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், இஷ் சோதி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். துடுப்பாட்ட வீரர்களாக ஹென்றி நிக்கல்ஸ், டிம் ரொபின்சன், வில் யங், விக்கெட்காப்பாளர் மிச்செல் ஹே ஆகியோரும் சகலதுறை வீரர்களாக ஜொஷ் க்ளார்க்சன், ஸக்கரி பௌல்க்ஸ், டீன் பொக்ஸ்க்ரொவ்ட் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டவி, அடம் மில்னே (உபாதைக்குள்ளான லொக்கி பெர்கஸனுக்கு பதில்), நேதன் ஸ்மித் ஆகியோரும் நியூஸிலாந்து குழாத்தில் இடம்பெறுகின்றனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நியூஸிலாந்து 5ஆம் இடத்திலும் இலங்கை 6ஆம் இடத்திலும் இருக்கின்றன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 102 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூஸிலாந்து 52 - 41 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. https://www.virakesari.lk/article/198579
-
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – இளைஞர்கள் 2 பேர் கைது!
சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கியது யார்? என்ன காரணம்? படக்குறிப்பு, சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை மற்றும் தாக்கப்பட்ட மருத்துவர் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 'தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை' எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது? அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH)செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர். மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மருத்துவமனை ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் படுகாயத்துடன் இருந்த மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை இயக்குநர் கூறியது என்ன? இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, "உடலில் நெறிக்கட்டுதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்னைக்காக தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன" என்றார். தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, "அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்" என்றார். விக்னேஷ் தாக்கியது ஏன்? சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது விக்னேஷ் என்ற நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார். தொடக்கத்தில், இந்தச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், "தாக்குதலில் ஈடுபட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர்" என்றார். பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அரசு மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை' மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளிக்கவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது" என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். "இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,X/STALIN எதிர்க்கட்சிகள் விமர்சனம் சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது." என்று சாடியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் அரசு மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8jywpkn4llo
-
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நிஹால் தல்துவ
கண்டியில் போலி இலக்கத்தகடுகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு கண்டியில் இரு வெவ்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, கண்டி - அஸ்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த ஜீப் வாகனத்தின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கண்டி - கட்டுகெலே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/198599
-
அரசாங்க சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்துக்கான பிரவேசம் : பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பெற முன்னோடித் திட்டம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடித் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கேற்ப வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் இந்த சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக பராமரிக்கப்பட்டு e-BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில் e-BMD தரவுக் கட்டமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ்கள் 01.01.1960க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் என்பதோடு தரவுக் கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்கள் பின்னர் திருத்தப்பட்டால், அத்தகைய சான்றிதழ்கள் தரவு அமைப்பில் புதுப்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. https://www.virakesari.lk/article/198595
-
வாக்களிக்க தயாரா?
ரொபட் அன்டனி 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை செய்யப்பட்ட நிலையில் 8,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தன. 9ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் காணப்படுகிறது. எனினும், பாராளுமன்றத்தை குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது 196 பேர் நேரடியாக வாக்குகள் ஊடாகவும் 29 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள். பாராளுமன்றத் தேர்தலானது 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமையவே நடைபெறும். அதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தல் தீர்க்கமானதாக அமையும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மிக விரைவாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கட்டாயம் வாக்களிக்கவேண்டும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் மக்கள் தமது ஜனநாயக உரிமையை பிரயோகிப்பது அவசியமாக இருக்கின்றது. நாடொன்றில் சகலருக்கும் பொறுப்புக்கூறல்கள் காணப்படுகின்றன. அதாவது, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் இந்த நாட்டை பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டு நிர்வகிக்க வேண்டும். அதாவது எப்போதுமே தாம் தமது கடமை தொடர்பாக மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சிந்தனை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். அதேபோன்று மக்களுக்கும் பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது. அதாவது, தகுதியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கின்றது. அதற்கு வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். காரணம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைவிதியை 10ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட போகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிப்பார்கள். சட்டங்களை இயற்றுதல், திட்டங்களை வகுத்தல், உள்ளிட்ட பாரிய பொறுப்புக்கள் பாராளுமன்றத்துக்கு காணப்படுகின்றது. எனவே, அதற்கு ஏற்றவகையில் தகுதியான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பு சகல வாக்காளர்களுக்கும் இருக்கிறது. இருவழிப் பாதை இது இருவழிப் பாதை. அதாவது வாக்காளர்களுக்கும் பொறுப்புக் கூறல் உள்ளது. அதேபோன்று வாக்காளர்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கும் சரியான முறையில் செயற்படுகின்ற பொறுப்புக்கூறல் இருக்கின்றது. எப்படியிருப்பினும் மக்கள் தேர்தல் வாக்களிப்பில் கட்டாயம் பங்கேற்பதுடன் தமது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துவது முக்கியமானதாக காணப்படுகிறது. வாக்களிக்க செல்லும் போது… பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற தெளிவை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று வாக்களிப்பதற்கு எவ்வாறு தயாராகுவது என்பதும் முக்கியமாகும். முதலில் வாக்களிக்க செல்லும் மக்கள் வீட்டுக்கு வந்திருக்கின்ற வாக்காளர் அட்டைகளை கையுடன் எடுத்துச் செல்வது அவசியமாகும். வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு இலகுவாக இருக்கும். அடையாள அட்டை கட்டாயம் வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும், தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அடையாள அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன ஏற்றுக்கொள்ளப்படும். பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவு மிக முக்கியமானதாக இருக்கின்றது. அதாவது வாக்குச் சீட்டில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பெயர்கள் மேலிருந்து கீழாக வரிசைக் கிரமத்தில் இருக்கும். கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அருகில் அவர்களுக்கான சின்னங்கள் இருக்கும். மக்கள் தமக்கு விருப்பமான கட்சியின் சின்னத்துக்கு அருகில் இருக்கின்ற வெற்றுப் பெட்டியில் புள்ளடியிட்டு வாக்களிக்க முடியும். அதேபோன்று அதற்கு கீழே வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் இருக்கும். வாக்காளர்கள் தாம் வாக்களிக்கின்ற கட்சியின் மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டு தமது விருப்பு வாக்குகளை அளிக்க முடியும். கட்சிக்கு வாக்களித்து விட்டு விருப்பு வாக்கை அளிக்காமல் வந்தாலும் அந்த வாக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால், கட்சிக்கு வாக்களிக்காது விருப்பு வாக்குகளின் இலக்கங்கள் மீது மட்டும் புள்ளடியிட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும். அதேபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கு வாக்களித்தாலும் வாக்கு நிராகரிக்கப்படும். அதுமட்டுமன்றி வாக்குச் சீட்டில் வேறு எந்த விடயங்களையும் எழுதவோ கிறுக்கவோ கூடாது. அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவான முறையில் தமது வாக்கை பயன்படுத்தி வாக்களிப்பில் ஈடுபடுவது அவசியமாகிறது. மக்களின் கடமை அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற 10ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்கின்ற உரிமை மக்களிடமே காணப்படுகிறது. எனவே, 10ஆவது பாராளுமன்றத்துக்கு தகுதியான உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் முன்வைக்கின்ற கொள்கைகள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள் அவற்றின் செல்லுபடி தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கருத்திற்கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும். வாக்களிக்க முடியுமான சூழல் நிலவும் போது மக்களை அதனை தவிர்க்கக் கூடாது. இதேவேளை தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள், அழுத்தங்கள் இன்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அமைதியான அழுத்தங்களற்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அரசியல்கட்சிகள், வாக்காளர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட சகலரதும் மிக முக்கியமான கடமையாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியான முறையில் வன்முறைகள் இன்றி, சுதந்திரமான தேர்தலுக்கு உதாரணமாக நடைபெற்றது. இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு தீர்க்கமான விடயமாக இது அமைந்தது. எனவே, இந்த முன்னுதாரணம் பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிக்காட்டப்பட வேண்டும். தலைவிதியை தீர்மானியுங்கள் மக்கள் ஜனநாயக செயற்பாட்டில் பங்கெடுத்து நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற தேர்தல் வாக்கெடுப்பில் தமது பங்களிப்பை வழங்குவதுடன் அந்த ஜனநாயக செயற்பாட்டில் ஆர்வத்துடன் செயற்படுவது அவசியமாகின்றது. பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையில் மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்புகின்றனர். சகல மக்களாலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அதனால், இந்த பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை ஊடாக மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். அந்த மக்களின் சார்பாக மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஐந்து வருடங்கள் செயற்பட வேண்டும். இங்கு மக்களுக்கு இருக்கின்ற அந்த இறைமை, அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த அதிகாரத்தைக் கொண்டு மக்களின் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இது சகல தரப்பினரதும் பங்களிப்புடன் நடைபெற வேண்டும். https://www.virakesari.lk/article/198577
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து ஏற்பட்ட கொதிநிலை அடங்குவதற்குள், அவர் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வெளிப்படுத்திய தகவல்கள் இலங்கை அரசியலிலும் அதற்கு அப்பாலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேரிடம் மதுபானசாலை நடத்தும் அனுமதிப்பத்திரம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 75 பேர் மணல் ஏற்றும் பெர்மிட் வைத்துள்ளதாகவும், இருவர் போதைத் தூள் வியாபாரம் செய்வதாகவும், இன்னொருவர் சூதாட்ட வியாபாரம் (காசினோ) நடத்துவதாகவும் தெரிவித்திருந்தமை பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறப்படும் சில ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகத் தொடங்கின. அவற்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடிய ஒலிப்பதிவுகள் முக்கியமானவையாகும். இவ்வாறு வெளியான தொலைபேசி உரையாடல்கள் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிவான் தம்மிக்க ஹேமபால மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய ஆகியோர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். https://www.bbc.com/tamil/sri-lanka-51218089 ஹிருணிக்காவைப் பற்றி எந்த செய்தியையும் காணவில்லை அண்ணை!
-
மேய்ச்சல் நிலம் இருந்தும் தர மறுக்கிறார்கள் : அதிகாரிகளும் அரசியல் வாதிகளுமே இடையூறு - நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு!
மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையெழுப்பதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடையூறு விளைவித்து வருகின்றனர். மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகாகு மேச்சல் தரவை நிலத்தில் திருட்டுத்தனமாக காணி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதனை மக்கள் பாவனைக்கு வழங்க விடாமல் அரசியல் பின்னணியில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேச்சல் தரவை நிலத்தை தருமாறு எட்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம் தருகிறோம் எனக் கூறுகிறார்கள் ஆனால் இதுவரை தரவில்லை. இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரிடம் எமது கோரிக்கையை கையளித்திருக்கிறோம் அவர் எதிர்வரும் 21ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே எமது பிரதேச மக்கள் வாழ்வாதார தொழிலாக பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் எமக்கான மேய்ச்சல் தரவை நிலத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/198574
-
உலக வரைபடத்திலேயே இல்லாத சோவியத் உருவாக்கிய மிதக்கும் 'மர்மத்தீவு' - உள்ளே என்ன இருக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி உலக செய்திக்காக காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது. அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தின் படி இந்த நகரம், கடலில் அமைந்துள்ள மிகப் பழமையான எண்ணெய் உற்பத்தி இடமாக அறியப்படுகிறது. இந்த நகரின் பெயரை ரஷ்ய மொழி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் 'எண்ணெய் பாறைகள்' என்றும் பொருள் தருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 29-வது காலநிலை மாற்ற மாநாடு (COP29), பாகு நகரில் நடப்பது குறிப்பிடத்தக்கது. சேதமான கப்பல்கள் மீது நகரம் எப்படி உருவானது? அஜர்பைஜானில் 1920ஆம் ஆண்டு செம்படைகள் நுழைந்த போது, பாகு நகரம் சோவியத் ஒன்றியத்துடன் (USSR) சேர்க்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில காலம் முன்பு வரை இந்நகரம் 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அதன் ஒரு அங்கமாகவே இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, கிழக்கு போர் முனையில் பயன்படுத்தப்பட்ட பெரும்பகுதி எண்ணெய் பாகுவிலிருந்து வந்ததால், இந்நகரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஜோசப் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக இந்நகரம் உருவாக்கப்பட்டது. பொருளாதாரம், குறிப்பாக தொழிற்துறை போன்ற துறைகளின் மேம்பாட்டிற்காக ஸ்டாலின் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். இந்த திட்டம் சோவியத் அதிகாரத்துவத்தின் முதன்மையாக இருந்தது. அதில் சில திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை, மேலும் சில கைவிடப்பட்டன அல்லது தோல்வியடைந்தன. 1949ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான எண்ணெய் வளங்கள் ஆய்வுக்கு பிறகு இந்நகரத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தொடங்கின. அதன் பிறகு இது மத்திய ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ள இடமாக மாறியது. பட மூலாதாரம்,SOCAR படக்குறிப்பு, குறைந்த பட்சம் தொழிலாளர்கள் தங்குவதற்கான வீடுகள் கொண்டு சிறிய அளவில் உருவான இந்நகரம், 1951 முதல் பெரிய கட்டுமானத்திற்கு வழிவகுத்தது. "நவம்பர் 7ஆம் தேதி அன்று, இங்குள்ள எண்ணெய் கிணற்றில், நாள் ஒன்றுக்கு 100 டன் வரை எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இங்குதான் உலகின் முதல் கடலோர எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. காஸ்பியன் கடல்பகுதியில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்வதில் அஜர்பைஜான் முதன்மையானது" என்று அஜர்பைஜானின் அரசின் எண்ணெய் நிறுவனமான SOCAR வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குவதற்கான வீடுகளை கொண்டு சிறிய அளவில் உருவான இந்நகரத்தில், 1951ஆம் ஆண்டு முதல் பெரிய கட்டுமானங்கள் நடந்தன. "இந்நகரம் ஒரு கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்ப அதிசயம்" என்று 1990களின் பிற்பகுதியில் இந்த நகரத்தை பார்க்க வந்த திரைப்படத் தயாரிப்பாளர் மார்க் வோல்ஃபென்ஸ்பெர்கர் கூறினார். கடற்கரையில் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, தனித்துவமான ஒரு செயல்பாடு செய்யப்பட்டது. பயன்படுத்தப்படாத கப்பல்களை கடலுக்கு அடியில் மூழ்க செய்து, அவற்றை அடித்தளமாக பயன்படுத்தி அதன் மீது தூண்கள் எழுப்பப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் அமைக்கப்பட்டது இந்த கப்பல்களுள் ஒன்று ஜோராஸ்டர் டேங்கர் ஆகும். இது உலகில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கப்பல்களுள் ஒன்று. இதனை உருவாக்கியவர் லுட்விக் நோபல் ஆவார். இவர் ஆல்பர்ட் நோபலின் சகோதரர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு தீர்வாக இந்த கப்பலை அவர் தயாரித்தார். "1951ஆம் ஆண்டில், இந்த தீவை காற்று மற்றும் அலைகளிலிருந்து பாதுகாக்க, கசார்டாங்கர் மற்றும் கசார்டோனன்மா நிறுவனங்களின் ஆறு கூடுதல் கப்பல்கள் பிரித்தெடுக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டன. இந்த கப்பல்களின் அறைகள் குழு உறுப்பினர்களின் தங்கும் அறைகள், உணவருந்தும் அறைகள், மருத்துவ அறைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டன. எனவே இந்த இடத்தின் உண்மையான பெயர் 'ஏழு கப்பல்களின் தீவு' ஆகும்" என்று SOCAR வலைதளம் தெரிவிக்கின்றது. அதிலிருந்து தற்போது வரை இந்த தீவு, 'நெப்ட் டேஷ்லரி' என்ற பெயரை கொண்டே அழைக்கப்படுகிறது. மக்கள் வாழும் பகுதி காலப்போக்கில் நெப்ட் டேஷ்லரி வளர்ச்சி அடைந்ததால், இந்நகரம் கடலின் மீதிருக்கும் பிரமாண்ட ஆக்டோபஸ் போல கட்சியளிக்கின்றது. அங்கு பணிபுரியும் நபர்களுக்காக, பேக்கரி, கடைகள், மருந்தகங்கள், கால்பந்து விளையாட்டு மைதானம், ஹெலிபோர்ட் மற்றும் திரையரங்கமும் கட்டப்பட்டன. கடலடியில் இருந்து தூண்கள் எழுப்பப்பட்டு, நெப்ட் டேஷ்லரி நகரமானது அடிமட்டத்திற்கு சில மீட்டர்களுக்கு மேல் கட்டப்பட்டுள்ளாதாக, அஜர்பைஜானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் மிர்வாரி கஹ்ராமன்லி பிபிசியிடம் கூறினார். இங்கு மக்கள் தங்கக்கூடிய கட்டடங்கள், மருந்தகம் மற்றும் கடைகள் இருக்கின்றன. கூடுதலாக, இங்கு மரங்கள் நடப்பட்டும், பூங்காக்கள் அமைக்கப்பட்டும் வருவதாகவும் அவர் தெரிவித்தார். நெப்ட் டேஷ்லரி நகரின் சிறப்புகள் "உலகில் திறந்தவெளி கடல்பரப்பில் முதலில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடமாக நெப்ட் டேஷ்லரி கருதப்படுகின்றது. சில சமயங்களில் இந்த இடம் இதன் தனித்தன்மைகளால் உலகின் எட்டாவது அதிசயம், ஏழு கப்பல்களின் தீவு, அதிசயங்களின் தீவு எனவும் அழைக்கப்படுகின்றது" என கஹ்ராமன்லி தெரிவித்தார். இங்கு சுமார் 2000 எண்ணெய் கிணறுகள் இருப்பதாகவும், அவை 12 கிலோ மீட்டர் நீளமும், 6 கிலோ மீட்டர் அகலமும் மற்றும் 200 கிலோமீட்டர் ஆழம் வரை இருப்பதாக, கஹ்ராமன்லியின் தரவுகள் கூறுகின்றன. "இங்கு முதலில் 5,000 ஊழியர்கள் பணிபுரிந்தனர். தற்போது இங்கு 3000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் 15 நாட்கள் கடலிலும் மற்றும் 15 நாட்கள் நிலத்திலும் இருக்கின்றனர்", என்று கஹராமன்லி கூறுகிறார். பட மூலாதாரம்,SOCAR படக்குறிப்பு, நெப்ட் டேஷ்லரி நகரின் குடியிருப்பு பகுதி நெப்ட் டேஷ்லரி அஜர்பைஜானின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான SOCAR-க்கு சொந்தமானது. இது எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களின் உற்பத்தி, சுத்திகரித்தல் மற்றும் ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்தல் போன்ற பணிகளுக்கு பொறுப்பாக உள்ளது. SOCAR-ஐ பொருத்தவரை, காஸ்பியன் கடலில் எண்ணெய் உற்பத்தி செய்வதில் இந்த தீவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தீவில் இருந்து சுமார் 180 மில்லியன் டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு 7.6 மில்லியன் டன் உற்பத்தி செய்து இந்த தீவு சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் SOCAR-இன் தரவுகளின் படி, தற்போது நாள் ஒன்றுக்கு 3000 டன் மட்டுமே எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, மிகவும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சரிவை சந்தித்தது எப்போது? 1960-களில் எண்ணெய் உற்பத்தியில் இந்த நகரம் உச்சத்தை எட்டியது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் நிலையற்ற எண்ணெய் விலை மற்றும் சோவியத் யூனியனின் சரிவு போன்றவை காரணமாக இந்நகரம் அதன் சிறப்பை இழக்க தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 300 கிலோமீட்டர் சாலை கொண்ட இந்த நகரத்தில் வெறும் 45 கிலோமீட்டர் சாலைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக டெர் ஸ்பியிகள் (Der Spiegel) என்ற ஜெர்மன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. Oil Rocks – City Above The Sea என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநர் மார்க் ஒல்ஃப்ஸ்பெர்கர் இந்த நகரத்தில் நடந்த சிலவற்றை பதிவு செய்துள்ளார். இந்த படத்தில், "நான் இளம் வயதில் இருந்தபோது, இந்த சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தன," என உள்ளூர் தொழிலாளி ஒருவர் தனது கனரக வாகனத்திலிருந்து பயணம் செய்தவாறு கூறினார். அடுத்த காட்சியில் முற்றிலும் சிதைந்த, கைவிடப்பட்ட கட்டடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. நகரத்தின் கட்டமைப்பு அல்லது காலநிலை மாற்றத்தால், இந்நகரம் கடலில் மூழ்குவதற்கான ஆபத்து உள்ளதா என்ற கேள்விக்கு, "இந்த நகரம் தற்போது மூழ்குவதற்கான சாத்தியமில்லை, தற்போது அது போன்ற ஆபத்து எதுவும் இல்லை" என்று மிர்வரி கஹ்ராமன்லி பதில் கூறினார். "நெப்ட் டேஷ்லரி என்பது கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நகரம். இங்கு கடல் படுக்கைகளும் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன, அதில் துளையிடப்பட்டு, எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது", என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நெப்ட் டேஷ்லரி குடியிருப்பு கட்டடங்களின் காட்சி, 1997-இல் எடுக்கப்பட்ட புகைப்படம் இந்த இடத்தைப் பற்றிய தற்போதைய படங்களை கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. 1990களின் பிற்பகுதியில் ஜேம்ஸ் பாண்ட் தொடரில் வெளியான The World is Never Enough உட்பட அந்தப் பகுதியில் படமாக்கப்பட்ட அனைத்து திரைப்படங்கள் பற்றியும் SOCAR வலைதளத்தில் பதிவுகள் இருக்கின்றன. இந்த நகரின் கட்டமைப்பினால் இங்கு கப்பல் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக தான் சென்றடைய முடியும். எளிதாக இந்த இடத்தை சென்றடையவோ அல்லது சுற்றிப் பார்க்கவே முடியாமல் போக இதுவும் காரணமாகியுள்ளது. இருப்பினும், எண்ணெய் உற்பத்தியில் சரிவு மற்றும் தீவின் கட்டமைப்புகளில் தொய்வு ஆகியவற்றால், இது ஒரு சுற்றுலா தலமாக மாறும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. மிர்வரி கஹ்ராமன்லி, "கடற்கரை ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா இருப்பிடங்கள் போன்றவை இந்த நகரத்தின் எதிர்காலமாக இருக்கும்", என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1e73nj97dlo
-
ஏர்ஷோ சைனா ஆரம்பம்: அமெரிக்காவும் பங்கேற்பு
ஏர்ஷோ சைனா அல்லது ஜுஹாய் ஏர்ஷோ 2024 என்றும் அழைக்கப்படும் 15ஆவது சீன சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சி, தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் தளபதி ஜெனரல் சாங் டிங்கியூ ஆரம்ப விழாவில் உரையை நிகழ்த்தினார்.தகவல் தொடர்புத் தளத்தை திறந்ததாகக் முன்னேற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் விமானப் படையைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விமானச் செயற்பாட்டைப் பார்வையிட்டனர். கண்கவர் விண்வெளி நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்காக சமீபத்திய மேம்பட்ட இராணுவ உபகரணங்களை காட்சிப்படுத்தும் இந்த விமான நிகழ்ச்சி நவம்பர் 12 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 47 நாடுகளில் இருந்து மொத்தம் 1,022 கண்காட்சியாளர்கள் இந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198583
-
'புல்டோசர்' நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் - 10 வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சில மாநிலங்களில் நடந்துள்ளது (கோப்புப்படம்) நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்?” என உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் கேள்வி எழுப்பியிருந்தது. இத்தகைய வழக்குகளில் வீடுகளை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வி. விஸ்வநாதன் இன்று (நவ. 13) பத்து வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளனர். குற்ற வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்கு சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “சாமானியர் ஒருவர் வீடு கட்டுவதென்பது, அவருடைய பல ஆண்டுகள் கடின உழைப்பு, கனவு மற்றும் லட்சியத்தின் வெளிப்பாடு,” என உத்தரவை பிறப்பிக்கும் போது நீதிபதி கவாய் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள 10 வழிகாட்டுதல்கள் 1. உள்ளூர் நகராட்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவு அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பான 15 நாட்கள், இரண்டில் எது அதிகமோ அதற்கேற்ப முன்பே நோட்டீஸ் அனுப்பாமல், எவ்வித கட்டட இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது. 2. இடிப்புக்கான காரணம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அடங்கிய நோட்டீஸ், பதிவு செய்யப்பட்ட தபால் வாயிலாக அனுப்பும் அதேவேளையில் அந்த கட்டடத்திலும் ஒட்டப்பட வேண்டும். 3. நடவடிக்கையை முன்தேதியிட்டு செயல்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டை தவிர்க்க, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உடன், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 4. ஒவ்வொரு நகராட்சி நிர்வாகமும் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இதற்கென டிஜிட்டல் இணையதளத்தை உருவாக்க வேண்டும். அதில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதற்கான பதில், அதுதொடர்பான உத்தரவுகள் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். 5. சம்பந்தப்பட்டவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த சந்திப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது 6. கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தல் மற்றும் நீதித்துறை ஆய்வுக்கு உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 7. கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். 8. உத்தரவிடப்பட்ட 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படாத கட்டடத்தை இடிக்க அல்லது அகற்றுவதற்கான வாய்ப்பு உரிமையாளருக்கு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 9. கட்டடம் இடிக்கப்படுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அதுதொடர்பான அறிக்கையும் தயார் செய்யப்பட வேண்டும். 10. இந்த வழிமுறைகளுள் ஏதாவது மீறப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கும். விதிகளை மீறி கட்டடத்தை இடித்தது கண்டறியப்பட்டால், இடிக்கப்பட்ட கட்டடத்திற்கான மறுசீரமைப்புக்கு ஆகும் செலவை அதிகாரிகளே தங்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து வழங்க வேண்டும். எனினும், சாலை போன்ற பொது இடத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கும், நீதிமன்றத்தால் இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது என, நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கின் பின்னணி நாட்டின் பல மாநிலங்களில் புல்டோசர்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஏப்ரல் 2022 இல் டெல்லி ஜஹாங்கிர்புரியில் இத்தகைய இடிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2022-ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி தினத்தன்று ஜஹாங்கிர்புரியில் நடந்த ஊர்வலத்தில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தன. அதன்பிறகு, அந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு விதிமீறல் கட்டுமான நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம், புல்டோசர் கொண்டு அவற்றை இடிக்கப் போவதாக கூறியிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகள் புல்டோசர்களை தண்டனையாகப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்க மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்த மனுதாரர்களில் ஒருவரான மாநிலங்களவை முன்னாள் எம்பியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பிருந்தா காரத் ஜஹாங்கிர்புரியில் புல்டோசர் நடவடிக்கையின் போது சம்பவ இடத்திற்கு வந்திருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, விதிகளை மீறி கட்டடங்களை இடித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழிவகுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது செப்டம்பர் 2023 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சில மனுதாரர்களின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை மாநில அரசு இடிப்பது அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார். வீடு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமையின் ஒரு அம்சம் என அவர் தெரிவித்தார். இடிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில்தான், குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாத் அமர்வு கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இத்தகைய இடிப்பு நடவடிக்கை தேவைப்படும் போது அதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உருவாக்கும் என்றும், நீதிபதிகள் அமர்வு அப்போது கூறியிருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdd05zp3vm8o
-
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – இளைஞர்கள் 2 பேர் கைது!
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் இருவரை கைது செய்த போலீசார் 4 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198587
-
மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: இந்தியமத்திய அரசுக்குதமிழக முதல்வர் கடிதம்
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்இ என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நவ.9ம் தேதி அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (நவ.12) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும்இ அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (நவ.12) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது. நவ.9ம் தேதி அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நவ.12ம் தேதி அன்று நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ம் ஆண்டில் தான் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்இ கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். https://www.virakesari.lk/article/198557
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
காணொளி
-
துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்பிகளுக்கு அறிவிப்பு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551