Everything posted by ஏராளன்
-
மஹிந்தவின் சாதனையை முறியடித்த பிரதமர் ஹரிணி
15 NOV, 2024 | 06:47 PM கொழும்பு தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்கு பட்டியலில் 655,289 வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை முறியடித்துள்ளார். விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக பிரதமரின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக கருதப்பட்டார். விருப்பு வாக்குப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். https://www.virakesari.lk/article/198882
-
சக ஜனநாயக நாடாக இலங்கை மக்களின் ஆணையை வரவேற்கின்றோம் - ஜனாதிபதியை முதலில் சந்தித்து வாழ்த்திய இந்திய உயர்ஸ்தானிகர்
15 NOV, 2024 | 08:44 PM (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (15) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை முதன்முதலாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சக ஜனநாயக நாடாக, இந்தியா இந்த ஆணையை வரவேற்கிறது மற்றும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198886
-
'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?
பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தலைமையே தவறு செய்யும்போது கட்சியில் தொடர விரும்பவில்லை எனக் கூறுகிறார், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்த இளவஞ்சி. 'விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம்,' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது ஏன்? இதற்கு சீமான் கூறும் விளக்கம் என்ன? நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'ஒரே பதில்... விலகிவிட்டேன்' இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், 'தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கட்சியில் இருந்து வெளியேறுமாறு சீமான் கூறினார்" என்கிறார். இரண்டு முறை இதே பதிலை கட்சித் தலைமை கூறியதால், கட்சியில் இருந்து விலகியதாக கூறும் சுகுமார், "கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை. கட்சிக்காக பண விரயம் செய்ய வேண்டும். ஆனால், கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை" என்கிறார். மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் இளவஞ்சியும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளவஞ்சி, "நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த முதல் மருத்துவர் நான்தான். 14 வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சாதாரண பதவியில் இருக்கிறேன். இதே அணியில் எனக்குப் பின்பு வந்தவர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் எனப் பதவி கொடுத்தார் சீமான். என்னை செயல்படவே விடவில்லை" என்கிறார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டாக்டர் இளவஞ்சி 'யார் பொதுச்செயலாளர்... யார் பொருளாளர்?' முன்னதாக, சீமானுக்கு நெருக்கமாக இருந்த சென்னை மாவட்ட நிர்வாகி புகழேந்தி மாறன், அக்கட்சியில் இருந்து விலகினார். மேற்கு மண்டல பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான ராஜா அம்மையப்பனும் கட்சியில் இருந்து விலகினார். இவர் மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்திருந்தார். தனது முடிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராஜா அம்மையப்பன், 'நான் பயணிக்கும் கட்சியில் யார் பொதுச்செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமல் பயணிக்க விரும்பவில்லை. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களில் சிலரை தவிர பலரை களத்தில் பார்த்ததில்லை' எனக் கூறியிருந்தார். இதே கருத்தைக் கூறி கட்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவேந்திரன். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தேவேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேவேந்திரன், "இந்தக் கட்சியில் பொதுச்செயலாளர் யார்..பொருளாளர் யார் என்று தெரியாது. எந்த தகவல் கேட்டாலும் பதில் வருவதில்லை. ராணுவ பணியை துறந்து இந்தக் கட்சிக்குள் வந்தேன். இதே பாதையில் பயணித்தால் தமிழ்த்தேசியம் வெல்லாது" எனக் கூறியுள்ளார். அடுத்ததாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக, திங்கள் அன்று (நவம்பர் 11) சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், 'நாகப்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் த.வெ.கவில் இணைந்ததாக கூறியுள்ளனர். அதில், ஒருவர் கூட நாம் தமிழர் இல்லை. இது பொய்யான தகவல்' எனத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,HANDOUT ஆடியோ சர்ச்சை அதேநேரம், நாம் தமிழர் நிர்வாகிகள் குறித்து சீமான் பேசிய சில உரையாடல்கள் ஆடியோ வடிவில் பொதுவெளியில் பரவியதும் நிர்வாகிகள் விலகலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சியின் நிர்வாகி காளியம்மாளை சீமான் விமர்சித்துப் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. பெண்களை விமர்சித்துப் பேசியது தொடர்பான ஆடியோ வெளிவருவது தனக்கு மனவலியை தந்ததாக இளவஞ்சி கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சி நிர்வாகியான காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ வெளிவந்தது. சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பெண் ஒருவரை விமர்சித்த ஆடியோவும் வெளியானது. இதைப் பற்றி என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. இதைப் பற்றி கட்சியில் உள்ள மகளிரிடம் விவாதித்தோம். உடனே, ஆடியோவை நாங்கள் பரப்புவதாக குற்றம் சுமத்தினர். பெண்களைத் தவறாகப் பேசுவதை எவ்வளவு நாட்கள் சகித்துக் கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார். "கட்சிக்கு மருத்துவ பாசறை இருந்தாலும், மருத்துவம் சார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்சியில் எந்த அங்கீகாரமும் கொடுக்கப்படுவது இல்லை," என்கிறார் இளவஞ்சி. "உங்கள் குறைகளை சீமானை நேரில் சந்தித்துக் கூறியிருக்கலாமே?" என்று கேட்ட போது, "யார் மீதேனும் தவறு இருந்தால் சீமானிடம் சொல்லலாம். அவரிடமே தவறு இருந்தால் யாரிடம் சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார். "ஆடியோ விவகாரத்தில், தொழில்நுட்பத்தை வைத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாகக் கூட சீமான் கூறியிருக்கலாம். ஆனால் தான் பேசியதாக அவரே ஒப்புக் கொள்கிறார். இதற்கு மேலும் அந்தக் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை" என்கிறார் இளவஞ்சி. சீமானின் பதில் என்ன? பட மூலாதாரம்,SEEMAN நாம் தமிழர் கட்சியில் இருந்து மண்டல, மாவட்ட நிர்வாகிகள் விலகுவது குறித்து, சென்னையில் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுக்கு என்ன மரியாதையோ அது உரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். வேட்பாளர் தேர்வு சர்ச்சை குறித்துப் பேசிய சீமான், "வேட்பாளர்களை கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க முடியாது. விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம். அது என்னுடைய பிரச்னை. என் கட்சியின் பிரச்னை" என்றார். "வேட்பாளரை அவர்களே தேர்வு செய்வார்கள் என்றால் இந்தக் கட்சியை நான் நடத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறிய சீமான், "பேருந்தில் அமர்ந்துள்ள ஒவ்வொருவரிடமும், இந்த வண்டியை எப்படி ஓட்டுவது எனக் கேட்க முடியாது" என்றார். சிலர் விலகி செல்வது பலவீனம் அல்ல என்று கூறும் நாம் தமிழர் கட்சி பட மூலாதாரம்,HANDOUT கடந்த மூன்று மாதங்களாக, ‘நாம் தமிழர் கூடாரம் காலியாகிறது’ என்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் மூலம் சிலர் பெரிதாக்குவதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கூறுகிறார், "கட்சியை தொடங்கிய நாளில் இருந்து கட்சியை விட்டு சிலர் விலகிச் செல்வதும் இணைவதும் இயல்பாக நடக்கிறது" என்கிறார் அவர். "நாம் தமிழர் கட்சியில் தான் ஜனநாயகம் உயிர்ப்போடு உள்ளது. இங்கு அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவித பின்புலமும் இல்லாதவர்கள் கூட உயர்த்தப்படுகின்றனர்" என்கிறார், இடும்பாவனம் கார்த்திக். கட்சியை விட்டு வெளியேறுகிறவர்களுக்கு காரணம் தேவைப்படுகிறது. அதற்காக, ‘உள்கட்சி ஜனநாயகம் இல்லை, பெண்களை மதிப்பது இல்லை’ எனக் காரணங்களை கற்பிப்பதாக கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக். மேலும், " கட்சியை விட்டு வெளியேறுகிறவர்கள், விமர்சனம் செய்வதும் அவதூறு பரப்புவதும் இயல்பான ஒன்றுதான். அதை நாங்கள் புறம் தள்ளுகிறோம்" என்கிறார். கட்சியில் இருந்து சிலர் பிரிந்து செல்வது பலவீனம் அல்ல எனக் கூறும் இடும்பாவனம் கார்த்திக், "மோசமான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதுதான் ஒரு கட்சி பலவீனம் ஆகும். சிலர் பிரிந்து செல்வது பலவீனம் அல்ல" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx28g4gz8v1o
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வட்சப்பில் வந்த மீம் ஒன்று
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
வட்சப்பில் வந்த மீம் ஒன்று
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
12 பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு நடைபெற்று முடிந்துள்ள 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக 12 பெண்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மேற்படி வேட்பாளர்களில் நான்கு தமிழ் பெண்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/312172
-
அமைதியான, ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு ஜப்பான் தூதுவர் வாழ்த்து
15 NOV, 2024 | 03:37 PM அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198870
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அண்ணை சிறீதரன் டொக்ரரின் மனைவி பெயரைக் காணோம்?!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இறுதி முடிவுகள் தொகுப்புப் படங்கள்
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 159 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி
அநுர தரப்புக்கு 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள் : முழு விபரம் இதோ 15 NOV, 2024 | 03:26 PM பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசியபட்டியல் ஆசனங்கள் கிடைக்பெற்றதையடுத்து அந்த கட்சிக்கு மொத்தமாக 159 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேநேரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியப் பட்டியல் ஊடாக 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்தக் கூட்டணிக்கு 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தமாக 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணிக்கு 2 தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக அந்தக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. https://www.virakesari.lk/article/198868
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
15 NOV, 2024 | 04:31 PM (சி.சிவகுமாரன்) மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம். https://www.virakesari.lk/article/198879
-
தோல்வியடைந்த முன்னாள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள்
முன்னாள் எம்.பி.க்கள் பலர் அவுட்; விபரம் உள்ளே 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 10 வது பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் பின்வருமாறு; காஞ்சன விஜேசேகர – மாத்தறை நிபுண ரணவக்க – மாத்தறை மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை மனுஷ நாணயக்கார – காலி ரமேஷ் பத்திரன – காலி சஷீந்திர ராஜபக்ஷ – மொனராகலை அசங்க நவரத்ன – குருநாகல் அனுர பிரியதர்ஷன யாப்பா – குருநாகல் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல் சாந்த பண்டார – குருநாகல் டி.பி.ஹேரத் - குருநாகல் பிரமிதா தென்னகோன் – மாத்தளை https://thinakkural.lk/article/312155
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்.மாவட்டத்தில் வென்றவர்கள் யார்? யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய; தேசிய மக்கள் சக்தி சார்பாக கருணநாதன் இளங்குமரன் – 32,102 ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 இலங்கை தமிழரசு கட்சி சார்பாக சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135 சுயேட்சைக் குழு 17 சார்பாக இராமநாதன் அர்ஜுனா – 20, 487 ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். https://thinakkural.lk/article/312164 இது மட்டுமே காரணம் இல்லையண்ணை.
-
தோல்வியடைந்த முன்னாள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள்
சரத்வீரசேகர -நிமால் தோல்வி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார் இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார். 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் 35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். https://www.virakesari.lk/article/198860
-
தோல்வியடைந்த முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார். கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார். ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், முதன்முறையாக அவர் தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல்,வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார். அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார். பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர். https://thinakkural.lk/article/312174
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 159 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி
பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் அடங்களாக 145 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. எனினும், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்களின் விவரங்கள் விரிவாக: தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்) சர்வஜன அதிகாரம் (SB) - 178,006 வாக்குகள் (1 ஆசனம்) ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 வாக்குகள் (0 ஆசனம்) வேறு கட்சிகள் - 945,533 வாக்குகள் (9 ஆசனங்கள்) தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 61.56% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு, 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அது மொத்த வாக்களிப்பில் 17.66% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 35 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, 5 தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான அனுமதி கிடைத்துள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சி 500,835 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மொத்த வாக்களிப்பில் 4.49% வாக்குகளை சுவீகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய ஜனநாயக முன்னணிக்கு மொத்தமாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, அந்தக் கட்சிக்கு மொத்தமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. சர்வஜன அதிகாரம் கட்சிக்கு 178,006 வாக்குகள் கிடைத்துள்ள பின்னணியில், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. எனினும், கட்சி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. தமிழர் பகுதிகளின் இறுதித் தேர்தல் முடிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,975 வாக்குளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெற்றுக்கொண்டது. ஆனால், அதுதவிர இதர தமிழர் பகுதிகளை தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது. மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதுடன், இரண்டாவது இடத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், மூன்றாவது இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதேபோன்று, மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி அமைந்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம் கடந்த முறை காணப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்கள் அடங்கிய தேர்தல் மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் விளங்குகிறது. கண்டி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்தது. ஆனால், இந்த முறை 2020 தேர்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் காணப்பட்ட நுவரெலியா மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தது. அதோடு, இம்முறை அந்த வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை இம்முறை பெற்றுக் கொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் அப்போது எட்டாவது இடத்தை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தை பெற்றுள்ளது. ஆனால், முன்னர் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் கட்சிகள் பெற்ற வாக்கு வங்கியில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தை கடந்த முறை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அதே மூன்றாவது இடத்தில் இம்முறையும் காணப்படுகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை பாரிய பின்னடைவை திருகோணமலை மாவட்டத்திலும் எதிர்நோக்கியுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்த நிலையில், இம்முறை அந்தக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பிடித்துள்ளது. அதேவேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. பதுளை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்தது. ஆனால், அப்போது மூன்றாவது இடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை முன்னிலை வகிக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது. பட மூலாதாரம்,GETTY IMAGES எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார். மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா. பட மூலாதாரம்,R.SIVARAJA கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார். குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா. ராஜபக்ஸ குடும்பத்தை நிராகரித்த மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாமல் ராஜபக்ஸ இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்தில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பல ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நேரடி அரசியல் ஈடுபட்டு வந்த நிலையில், இம்முறை தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டார். நாமல் ராஜபக்ஸவின் பெயர், தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டதுடன், ஏனைய ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர். இந்த நிலையில், ஷஷிந்திர ராஜபக்ஸ மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட போதிலும், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், தேசியப் பட்டியலில் அக்கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், தனது சொந்த மண்ணில் தேர்தல் ஒன்றில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளது. சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டின் பெரும்பாலான இடங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை தேசிய கட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது. அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்? இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை. தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும். இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன. இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும். தகவல்கள்: இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr7nj9dp7nyo
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை
"இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத தேர்தல் வாக்களிப்பு"- கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க 15 NOV, 2024 | 11:01 AM 2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பை இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு என வர்ணித்துள்ள கிரிக்கெட் வர்ணணையாளர் ரொசான் அபயசிங்க நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2019இல் அப்போதைய அரசாங்கத்தின் வெற்றி மிகப்பெரியது என பாராட்டப்பட்டது. ஆனால் அந்த வெற்றியில் ஒரு முக்கியமான விடயமிருந்தது, அதாவது மக்கள் வாக்களித்த விதத்தில். வடக்கும் கிழக்கும் மலையகமும் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. அதன் மூலம் அவர்கள் தென்பகுதி தலைமைத்துவத்தை நம்பவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தினார்கள். 2024 தேர்தல் முடிவு மகத்தானது மாத்திரமில்லை இது ஒரு சுனாமி. மேலும் வாக்களிப்பு இடம்பெற்ற விதம்தான் இதற்கு மகுடம் போல காணப்படுகின்றது. இனம் மதம் என வாக்காளரை சிறையில் அடைத்த எல்லைக்குள் கட்டுப்படாத வாக்களிப்பு இது. நகரங்கள் கிராமங்கள் மாவட்டங்கள் மாகாணங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசியுள்ளன. இது இயற்கையாகவே நாட்டிற்கு சிறந்த விடயம். இலங்கை அதன் அரசியல் அத்தியாயத்தில் ஒரு புதிய பக்கத்திற்குள் நுழைகின்றது. உறுதியளிக்கப்பட்ட மாற்றத்திற்காக காத்திருக்கின்றது. https://www.virakesari.lk/article/198854
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தற்போதைய தேர்தல் நிலை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள் - பிள்ளையான், ஜோன்ஸ்டனின் பரிதாப நிலை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது. இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார். ஜோன்ஸ்டன் படுதோல்வி குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார். அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது. பிள்ளையான் தோல்வி இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். பலர் தோல்வி முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர். இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டீ.பி.ஹேரத், ஷாந்த பண்டார, அசங்க நவரத்ன ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர். சிரேஷ்ட அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன அனுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார். இந்நிலையில் பல முகங்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/main-candidates-lost-in-general-election-1731633861
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை
பெரும்வெற்றிகள் கொண்டுவரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - சாலிய பீரிஸ் பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம். தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை. 2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டை நோக்கி நெருங்கிச்சென்றது, 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் மூன்றில் இரண்டை நெருங்கிச் சென்றது. மூன்றில் இரண்டை பெறுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியை மாத்திரம் இந்த வெற்றியுடன் சமாந்திரம் வரையமுடியும். தேசிய மக்கள் சக்தி வடக்குகிழக்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதால் இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஐக்கியப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி விளங்க முடியும். இந்த தேர்தல் வெற்றி நிறைவேற்றதிகார முறையை நீக்குவேன் என்ற தனது வாக்குறுதியை ஜனாதிபதி விரைவில் நீக்குவதற்கு உதவும். ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடு சென்றுகொண்டிருக்கின்ற பாதை குறித்து அனேக இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், குறிப்பாக அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம் குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி காணப்படுகின்றது. எனினும் பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஜனாதிபதியே நேற்று தெரிவித்தது போன்று அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைகளை பயன்படுத்தியிருந்தன. ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல்களை தேசிய மக்கள் சக்தி தவிர்க்கவேண்டும். https://www.virakesari.lk/article/198845
-
காதல், உடலுறவு குறித்து சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி பெண்கள்
பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, ‘பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத்திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள்’ என்று ஹாலி கூறுகிறார் எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன் பதவி, பிபிசி வேல்ஸ் லைவ் “நீ மாற்றுத் திறனாளியாக இருப்பதால், எல்லோரையும் போல உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” என ஒருவர் ஹாலியிடம் கேட்டபோது அவருக்கு 16 வயது தான் ஆகியிருந்தது. “சக்கர நாற்காலியில் இருந்தவாறு மட்டும் தான் உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” எனக் கடந்த காலங்களில், அவரிடம் உடலுறவு குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. “ஒருவர் என்னைக் காதலிப்பதை ஏதோ மிகப்பெரிய தியாகம் செய்வது போன்று மக்கள் நினைக்கிறார்கள். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் என்னை இப்போது காயப்படுத்துவதே இல்லை” என்கிறார் ஹாலி. இப்போது 26 வயதாகும் ஹாலிக்கு நாள்பட்ட வலி மற்றும் ‘ஹைப்பர்மொபிலிட்டி சிண்ட்ரோம்’ (Hypermobility syndrome) உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் டேட்டிங் (Dating) மற்றும் காதல் உறவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் எதிர்மறையான நம்பிக்கைகள் மற்றும் மோசமான எண்ணங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் பல மாற்றுத் திறனாளி பெண்களில் ஹாலியும் ஒருவர். மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழ்ச்சியான உறவுகள் குறித்து சமூகத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம் என்று ஹாலி கிரீடர் கூறுகிறார். அவர் பதின்ம வயதில், தனது கணவர் ஜேம்ஸை ‘டேட்’ (Date) செய்யத் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகளாக அவரைக் காதலித்த ஹாலி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார். "பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத் திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள். எங்களுக்கு ஒரு சோகமான கதை உள்ளது எனக் காட்டவே விரும்புகிறார்கள்," என்று ஹாலி கூறுகிறார். தனது கணவர் ஜேம்ஸ், எப்போதும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், ஆனால் மற்றவர்களின் கருத்துகள் தன்னை சங்கடப்படுத்துவதாகவும் ஹாலி கூறுகிறார். "நாங்கள் முதன்முதலில் ஒன்றாக ஒரு வீட்டில் குடியேறியபோது, 'உன் உடல்நிலை மோசமடைந்தால், நீ ஒரு சுமையாக மாறிவிடுவாய். அதனால் உன் கணவர் உன்னை விட்டுச் சென்றுவிடுவார்' என்று சிலர் என்னிடம் கூறினர்” என்கிறார். பட மூலாதாரம்,RAM PHOTOGRAPHY & FILM படக்குறிப்பு, தனது கணவர் ஜேம்ஸ், எப்போதும் தனக்கு உறுதுணையாக இருப்பதாக ஹாலி கூறுகிறார். பள்ளியில் படித்த காலத்தில் தன்னைப் பற்றி பலர் தவறான அனுமானங்களைக் கொண்டிருந்தார்கள் எனவும், சிலர் முகத்திற்கு நேராகவே அதைக் கேட்டார்கள் என்றும் ஹாலி கூறுகிறார். "சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக மக்களுக்கு எழும் முதல் கேள்வி, இந்த நபரால் உடலுறவு கொள்ள முடியுமா என்பதுதான்." பள்ளியில் தனது வகுப்பில் உள்ள சிறுவர்கள், அந்தரங்கமான மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்டார்கள் என்று ஹாலி கூறினார். "’சக்கர நாற்காலியில் மட்டுமே தான் உன்னால் உடலுறவு கொள்ள முடியுமா?’, ‘உனது மூட்டு எலும்புகள் இடம் மாறிவிடுமா? ‘ஒருவர் உன்னுடன் முரட்டுத்தனமாக உடலுறவு கொள்ள விரும்பினால், உன்னால் தாங்க முடியுமா?' இப்படிப் பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.” சமூக ஊடகங்களில், செக்ஸ் பற்றித் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் வந்ததாகக் கூறும் ஹாலி, “அவ்வாறு ஒருவர் எனக்கு வாய்ப்பு அளிப்பதற்கே நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கிலே அந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன,” என்கிறார். 'பாலியல் கல்வி' (Sex Education) எனும் இணையத் தொடரில் வந்த ஐசக் குட்வின் என்ற கதாபாத்திரத்தை மேற்கோள் காட்டி, ‘சமீபத்தில் ஊடகங்களில்தான் பார்த்த, மாற்றுத் திறனாளிகள் குறித்த நல்லதொரு சித்தரிப்பு அது மட்டும்தான்’ என்று கூறும் ஹாலி, ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகள் குறித்து ஒரு சிறந்த, நேர்மறையான பிரதிநிதித்துவத்தைக் காண வேண்டுமென விரும்புகிறார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, நிக்கோலாவின் அடுத்ததாக ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் வேல்ஸ் நாட்டின் கேர்பில்லியை சேர்ந்த 38 வயதான நிக்கோலா தாமஸ், தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பதை முறையாகப் பதிவு செய்து, அரசின் சான்று பெற்றவர். "மக்கள் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, ‘நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்?’ இது எனக்கு ஒருவித அதிர்ச்சியை அளிக்கும். ஒருவரின் அந்தரத்தைக் குறித்த, அதே நேரம் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்வி இது” என்கிறார் நிக்கோலா தாமஸ். நிக்கோலாவுக்கு நியூரோமைலிடிஸ் ஆப்டிகா எனப்படும் ‘ஆட்டோ இம்யூன் நோய்’ உள்ளது. இதனால், அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்ணில் பார்வைத் திறனை இழந்தார். அடுத்து ஐந்து ஆண்டுகளில் மற்றொரு கண்ணிலும் பார்வைத் திறன் பறிபோனது. "நிறைய பேருக்கு பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்துத் தவறான முன்முடிவுகள் உள்ளன. அவற்றைப் பொய்யாக்க விரும்புபவர்களில் நிச்சயமாக நானும் ஒருத்தி" என்கிறார் நிக்கோலா. நிக்கோலாவின் பொழுதுபோக்குகளில் படகோட்டுதல், பேடல் போர்டிங் (நீர்நிலைகளில் துடுப்புப் பலகை பயன்படுத்தி விளையாடுவது) மற்றும் பயணம் செய்வது ஆகியவை அடங்கும். அவர் அடுத்ததாக ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பட மூலாதாரம்,NICOLA THOMAS படக்குறிப்பு, நிக்கோலாவும் அவரது காதலர் பாலும், ஒன்றாக உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறார்கள் நிக்கோலா தனது பார்வையை இழந்தபோது, அவருக்கு ஒரு காதலர் இருந்தார். ஆனால், பின்னர் அந்தக் காதல் உறவு முறிந்தது. "நான் ஏதோ ஒரு சுமையைப் போல நடத்தப்பட்டேன். ‘நீங்கள் எப்போதும் அவளுக்கு ஒரு காப்பாளராகவே இருக்க முடியாது’ என்று சிலர் என் காதலனிடம் கூறுவார்கள். உண்மை என்னவென்றால், எனக்கு எப்போதும் ஒரு காப்பாளர் தேவைப்பட்டதில்லை" என்கிறார் அவர். நிக்கோலாவிற்கு இப்போது ஒரு காதலர் இருக்கிறார், அவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. "நாங்கள் இருவரும் பார்வை மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், ஒரு நகரத்தை மகிழ்ச்சியாகச் சுற்றி வருவோம். யாருடைய உதவியும் இல்லாமல் டேட்டிங் செல்வோம். எதுவும் எங்களைத் தடுக்காது” என்கிறார். மக்கள் தன் மீது ஆர்வம் காட்டும்போது, ஒரு முன்முடிவோடு அவர்கள் தன்னை அணுகுவதை உணர்வதாக நிக்கோலா கூறுகிறார். "சமூக ஊடகங்களில் என்னை அணுகி, டேட்டிங் செல்லலாமா எனக் கேட்பார்கள். நான் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி என்று சொல்லும்போது அவர்களின் அணுகுமுறை மாறுகிறது அல்லது வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்." "அவர்கள் ஏதோ கஷ்டப்பட்டு உங்களுக்கு ஒரு உதவி செய்வதைப் போல நீங்கள் நடத்தப்படுவீர்கள். அது உடனடியாக உங்கள் உற்சாகத்தை குறைத்துவிடும்” என்கிறார் அவர். "எங்களது தனிப்பட்ட பண்புகளை, திறன்களைப் பார்க்காமல், ஒரு பொதுப் புத்தியுடன் எங்களை அணுகுகிறார்கள். அந்த எண்ணத்தை நான் உடைக்க விரும்புகிறேன், எனக்கென்று ஒரு முழுமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளது” என்று கூறுகிறார் நிக்கோலா. படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு ‘சுய அன்பு’ என்பது மிகவும் முக்கியமானது என்கிறார் கேட் தங்கள் பாலியல் அடையாளத்தை ஆராயவும், மற்றவர்களைப் போலவே தங்களது காதல் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிமை உண்டு என்று கேட் வாட்கின்ஸ் கூறுகிறார். இவர் வேல்ஸ் நாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 'டிஸ்-எபிலிட்டி வேல்ஸ்' (Disability Wales) எனும் அமைப்பு ஒன்றில் அரசியல் திட்ட அதிகாரியாக உள்ளார். "இந்தச் சமூகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பாலியல் மற்றும் காதல் உறவுகள் ஏன் தடைசெய்யப்பட்ட ஒன்றாக உள்ளன? வெறுமனே மூன்று வேளை சாப்பாடும், தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் போதும் என்ற நிலையை விட, வாழ்க்கையில் எங்களுக்கு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது" என்கிறார் கேட். "வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்தவாறு வாழ்வது அல்லது அனுபவிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. ஆனால், இந்த விஷயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை" என்று கூறுகிறார் கேட். மாற்றுத் திறனாளி பெண்களுக்கு மோசமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதும், அது குறித்து அவர்கள் கவலையுடன் புகார் கூறுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாகக் கூறும் கேட், “இது வருந்தத்தக்க ஒரு விஷயம்” என்கிறார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செக்ஸ் பொம்மைகள் மற்றும் கருவிகள் தன்னைப் போன்றோருக்கு நம்பிக்கை அளிக்க உதவும் என்றும், அவற்றை முக்கிய பாலியல்சார் பொருட்கள் விற்கும் தளங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார். "நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், இயல்பாக உணர வேண்டும். உங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மற்றவர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல முடியும். சுய அன்பு என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறுகிறார் கேட். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2075lkmvmlo
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் 15 NOV, 2024 | 09:55 AM மட்டக்களப்பு மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 (3 ஆசனங்கள்) தேசிய மக்கள் சக்தி 55,498 (1 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 (1 ஆசனம்) https://www.virakesari.lk/article/198850
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை
15 NOV, 2024 | 10:02 AM ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/198851
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உள்குத்து பலமாக இருப்பதால் நேரம் செல்லும் தெரியவர.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தற்போதைய தேர்தல் நிலை