Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வடக்கு கடலில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198493
  2. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணாநிதி யசோதினி.
  3. ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்கி பிரயோகத்திற்கு உட்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை சேவையிலிருந்து நிறுத்தியுள்ளோம், ஹெய்ட்டிக்கான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் ஜெட்புளு விமானசேவைகளும் ஹெய்ட்டிக்கான தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை ஹெய்ட்டியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த தனது விமானமொன்றில் துப்பாக்கி ரவைகளால் ஏற்பட்ட சேதத்தை கண்டுபிடித்துள்ளதாக ஜெட்புளு விமானசேவை தெரிவித்துள்ளது. ஜெட்புளு 935 நியுயோர்க் ஜோன் எவ் கென்னடி விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது ஆனால் விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்கிரவைகள் தாக்கியுள்ளமை தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெய்ட்டியின் புதிய பிரதமராக அலிக்ஸ் டிடியர் பில்ஸ் ஐம் என்ற வர்த்தகர் பதவியேற்ற தினத்திலேயே இந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒருவருடகாலமாக ஹெய்ட் காடையர் கும்பல்களின் வன்முறை, அரசியல் குழப்பங்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தலைநகரில் ஐநாவின் ஹெலிக்கொப்டர் தாக்குதலிற்குள்ளானது. அமெரிக்க தூதரக வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதை தொடர்ந்து அமெரிக்கா தனது பணியாளர்கள் சிலரை வெளியேற்றியுள்ளது. ஹெய்ட்டியின் கும்பல் வன்முறை சமீபத்திய ஆண்டுகளில் ஆபத்தான அளவை எட்டியுள்ளது. இது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்குகிறது மற்றும் நாட்டின் பெரும்பகுதி முழுவதும் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. இந்த வன்முறையின் வேர்கள் சிக்கலானவை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை பொருளாதார கஷ்டங்கள் மற்றும் வலுவான திறமையான அரசாங்கத்தின் பற்றாக்குறை ஆகியவற்றின் கலவையிலிருந்து உருவாகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவெனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட அமலாக்கம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பலவீனமடைந்து அதிகார வெற்றிடத்தை உருவாக்கி கும்பல் செல்வாக்கு அதிகரித்தது. இன்று கும்பல்கள் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் பிற பகுதிகளின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இது பரவலான மிரட்டி பணம் பறித்தல் கடத்தல் மற்றும் இடப்பெயர்வுக்கு வழிவகுக்கிறது. ஹெய்ட்டியில் உள்ள கும்பல்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவை மற்றும் போக்குவரத்து வழிகள் சந்தைகள் மற்றும் சுற்றுப்புறங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்துகின்றன. சில பகுதிகளில் குடியிருப்பாளர்கள் சுதந்திரமாக செல்வதற்கோ வணிகங்களை நடத்துவதற்கோ கும்பல் தலைவர்களுக்கு "வரி" செலுத்த வேண்டும். மீட்கும் பொருளுக்காக கடத்தப்படுவது ஒரு முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உதவி தொழிலாளர்கள் இருவரும் பெரும்பாலும் குறிவைக்கப்படுகிறார்கள். அச்சத்தின் இந்த சூழல் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளை குடிமக்கள் அணுகுவதை கடினமாக்குகிறது. ஹெய்ட்டிய அரசாங்கமும் சர்வதேச சமூகமும் திறம்பட பதிலளிக்க போராடியுள்ளன. ஹெய்ட்டிய தேசிய காவல்துறை குறைந்த நிதியுதவி மற்றும் குறைவான பணியாளர்களைக் கொண்டுள்ளது. இந்த கும்பல்களை எதிர்கொள்ள வளங்கள் இல்லை. அவை பெரும்பாலும் சிறந்த ஆயுதங்களுடன் உள்ளன. சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நிதி மற்றும் அரசியல் தலையீடு காரணமாக பின்னடைவுகளை எதிர்கொண்டன. இதற்கிடையில் உதவிகளை வழங்க முயற்சிக்கும் மனிதாபிமான முகமைகள் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றன. இதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சென்றடையும் திறன் சிக்கலானது. சர்வதேச சமூகம் கவலையை வெளிப்படுத்தியுள்ளது சில அமைப்புகளும் அரசாங்கங்களும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஒரு பன்னாட்டு தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும் வெளிநாட்டு தலையீடுகள் மீது ஹைட்டியர்களிடையே ஆழ்ந்த வரலாற்று அவநம்பிக்கை உள்ளது. குறிப்பாக கடந்த கால அனுபவங்கள் காரணமாக பலர் ஹைட்டிய சுயாட்சியை புறக்கணித்ததாக உணர்கிறார்கள். ஹைட்டியில் கும்பல் வன்முறைகளை எதிர்கொள்வதற்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் பொருளாதார மேம்பாடு கல்வி மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதில் நீண்டகால முதலீடுகளும் தேவைப்படுகின்றன. https://www.virakesari.lk/article/198500
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் எழுதியவர், தீபாலி ஜக்தாப், சுசீலா சிங் பதவி, பிபிசி "எனது ஆறு வயது மகளுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் நடக்கிறதே என்று நினைத்து நான் பயந்தேன். சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட ஆரம்பித்தாள். இந்த மாற்றங்கள் என்னை கவலையடையச் செய்தன." என்று விவரித்தார் அர்ச்சனா. ஆறு வயது மகளின் தாயான அர்ச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) , மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அர்ச்சனாவின் கணவர் ஒரு விவசாயி. இவர்கள் தங்கள் வயல் அருகே ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். மகள் மூத்தவள். அர்ச்சனா தன் ஆறு வயது மகளின் உடலில் வித்தியாசங்களை பார்த்தார். அந்த சிறுமி, ஆறு வயதுக்கு ஏற்ற வளர்ச்சியாக இல்லாமல், பதின் வயது பெண் போல் தோற்றமளிக்க ஆரம்பித்தார். இதனால் அச்சத்தில் உறைந்த அர்ச்சனா, தன் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். டெல்லியில் வசிக்கும் ராஷியும் தனது மகளின் உடலில் இதுபோன்ற பல மாற்றங்களைக் கவனித்தார், ஆனால் அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். ராஷியின் ஆறு வயது மகள் 40 கிலோ எடையுடன் இருந்ததை, 'ஆரோக்கியமான குழந்தையாக' கருதினார். ஒரு நாள் திடீரென ராஷியின் மகளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பார்த்த போது, அவரது 6 வயது மகளுக்கு மாதவிடாய் தொடங்கியிருப்பது தெரியவந்தது. "அதை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவர் சுசித்ரா சர்வே கூறுகையில், முன்கூட்டிய பருவமடைதல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதை ஆய்வில் கண்டறிந்துள்ளார். "எங்கள் மகளுக்கு மாதவிடாய் தொடங்கியதை ஏற்றுக்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. என் மகளுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ராஷி கூறினார். அதே சமயம், மகளிர் மருத்துவ நிபுணரை அணுகுமாறு அர்ச்சனாவுக்கு உள்ளூர் மருத்துவர் அறிவுறுத்தினார். புனேவில் உள்ள `மதர்ஹுட்’ மருத்துவமனையில் மருத்துவர் சுஷில் கருட் (விங் கமாண்டர்) கூறுகையில், "அர்ச்சனா தனது மகளை எங்களிடம் கொண்டு வந்தபோது, பரிசோதனையில் அந்த சிறுமிக்கு பருவமடைவதற்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். சிறுமியின் உடல் அமைப்பு 14-15 வயதுடைய பதின் வயதினர் போல் இருந்தது. அவருக்கு மாதவிடாய் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்." என்றார். சிறுமியின் ஹார்மோன் அளவு அவரது வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்ததாகவும் இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும் மருத்துவர் சுஷில் விளக்குகிறார். மருத்துவர் சுஷில் மேலும் கூறுகையில், "அர்ச்சனா தனது வீட்டில் இரண்டு கொள்கலன்களில் 5 கிலோ பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருப்பதாகவும், அவரது மகள் அதைச் சுற்றி வந்து விளையாடுவது வழக்கம் என்றும் கூறினார். எனவே இது அவரது ஹார்மோன் மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்." என்றார். "குழந்தைகளின் உடலில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவதை மருத்துவ மொழியில் சிறு வயதிலேயே பூப்படைவது/பருவமடைவது (Precocious Puberty) என்று கூறப்படுகிறது” என்று சுஷில் விளக்குகிறார். உடலில் மாற்றங்கள் ஏற்படுவதால் குழந்தை பருவத்தை கடந்து, பருவ வயதில் அடியெடுத்து வைப்பதையே பருவமடைதல் என்கிறோம். தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் (National Center for Biotechnology Information) இணையதளத்தின்படி, பருவமடைதல் என்பது ஒரு ஆண் அல்லது பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். அவர்களின் பாலியல் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெறுகின்றன. அந்த இணையதள தகவலின் படி, 8 முதல் 13 வயது வரையிலான பெண் குழந்தைகளிலும், 9 முதல் 14 வயது வரையிலான ஆண் குழந்தைகளிலும் பருவமடைதல் பருவம் தொடங்குகிறது. மகப்பேறு மருத்துவர் எஸ்.என்.பாசு கூறுகையில், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் முன்கூட்டியே பருவமடைதல் நிலையை எட்டுவார்கள். ஆனால் மருத்துவ புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சராசரி வயதுக்கு முன்னதாக பருவமடையும் போது, அது `முன்கூட்டிய பருவமடைதல்’ என்று அழைக்கப்படுகிறது. இளம் பருவத்தினரின் ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழந்தை நல மருத்துவரும் நாளமில்லாச் சுரப்பி நிபுணருமான மருத்துவர் வைஷாகி ருஸ்தேகி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னதாக 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை உடல் மாற்றங்கள் நிகழ்ந்து முதல் அறிகுறிகள் காணப்படும். அதன் பின்னரே மாதவிடாய் வரும். ஆனால் இப்போது உடலில் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து 3 முதல் 4 மாதங்களுக்குள் பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது" என்றார். "இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் பருவமடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள் தாடி மற்றும் மீசையை வளர்க்கத் தொடங்குகிறார்கள், முன்பெல்லாம் பருவமடைந்த ஆண் பிள்ளைகளுக்கு மீசை, தாடி வளர 4 ஆண்டுகள் வரை எடுக்கும்” என்றும் அவர் கூறுகிறார். தற்போது அர்ச்சனா மற்றும் ராஷியின் மகள்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்கூட்டியே பருவமடைய காரணங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காய்கறிகளை வேகமாக விளைய வைக்கவும், பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து அதிக பால் உற்பத்தியை பெறவும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தால் (NCBI) வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பருவமடைதல் சிறுமிகளுக்கு பல உடல் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குழந்தை சுகாதார ஆராய்ச்சி துறையை சேர்ந்த மருத்துவர். சுசித்ரா, முன்கூட்டியே பருவமடையும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை தன் ஆய்வு மூலமாகக் கண்டறிந்ததாகக் கூறுகிறார். 2000 சிறுமிகளிடம் ICMR-NIRRCH நடத்திய ஆய்வில், மகள்களின் அம்மாக்கள் பெரும்பாலும் பருவமடைவதற்கான அறிகுறிகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, இந்த அமைப்பு 9 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் முன்கூட்டிய பருவமடைதல் பிரச்னையுடன் தொடர்புடைய காரணங்கள் மற்றும் அபாயங்களை ஆய்வு செய்து வருகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். "அர்ச்சனாவின் 6 வயது மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம்’’ என்று மும்பையில் உள்ள சிறுமிகளிடையே இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் மருத்துவர் பிரசாந்த் பாட்டீல் கூறுகிறார். இது ஒரு அரிதான காரணமாக இருக்கலாம் என்றாலும், நச்சுக்கள் நிறைந்த பூச்சிக்கொல்லிகள் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அவை முன்கூட்டியே பருவமடைவதற்கு வழிவகுக்கும். மும்பையில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான, மருத்துவர் அவினாஷ் போந்த்வே கூறுகையில், "பயிர்களை காக்க பல வகையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக நம் உடலுக்குள் நுழையும். பல பூச்சிக்கொல்லிகள் உணவின் மூலம் உடலுக்குள் நுழைகின்றன. அவை ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் மூளையில் உள்ள சுரப்பியை பாதிக்கின்றன.இது தவிர, காய்கறிகளை வேகமாக விளைய வைக்கவும், பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து அதிக பால் உற்பத்தியை பெறவும் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மனித உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது." என்றார். மேலும் பல காரணங்கள் ``முன்கூட்டிய பருவமடைதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதால் யாரையும் குற்றம்சாட்ட முடியாது” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மும்பையின் பிஜே வாடியா மருத்துவமனை இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து 2020-ஆம் ஆண்டில் சிறுவயதிலேயே பருவமடைதல் தொடர்பான முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முகாம் 6 முதல் 9 வயதுடைய பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் சுதா ராவ் கூறுகையில், "முகாமில் கலந்து கொண்ட சிறுமிகளில் 6 முதல் 9 வயதுக்குட்பட்ட 60 பேர் முன்கூட்டியே பருவமடைந்துள்ளனர். சிலர் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் வரலாம் என்ற நிலையில் இருந்தனர்.” என்றார். உடல் பருமனான குழந்தைகள் மத்தியில் முன்கூட்டிய பருவமடைதல் காணப்படுவதாகவும், கொரோனா காலத்தில் குழந்தைகளிடையே அதிகரித்த உடல் பருமன் இந்த பிரச்னைக்கு வழிவகுத்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார். டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சானிடைசர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்தத்தின் வழியாக சருமத்தில் நுழைந்து ஹார்மோன்களை பாதிக்கிறது. உடல் பருமன் மட்டுமின்றி செல்போன், டிவி போன்ற மின்னணு சாதனங்களை பார்ப்பது, உடற்பயிற்சியின்மை போன்றவையும் முன்கூட்டியே பருவமடைவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணங்களைப் புரிந்து கொள்ள பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் எஸ்.என்.பாசு கூறுகிறார். பூச்சிக்கொல்லிகள், உணவில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தும் ரசாயனங்கள் (preservatives), மாசுபாடு, உடல் பருமன் போன்றவை வெளிப்புற காரணங்களாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது. மேலும், உடலில் ஒரு கட்டி அல்லது மரபணு கோளாறு இருப்பதும் உடலின் சர்க்காடியன் ஒத்திசைவை சீர்குலைக்கிறது, இது இதை ஏற்படுத்துகிறது. மருத்துவர் வைசாகி கூறுகையில், கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக, அவரது புறநோயாளிகள் பிரிவில் தினமும் ஐந்து முதல் ஆறு சிறுமிகள் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர் என்கிறார். அவர் மேலும் கூறுகையில், "சில அம்மாக்கள் ஏப்ரலில் தங்கள் மகளின் உடலில் மாற்றங்களை உணர்ந்ததாகவும், ஜூன்-ஜூலையில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதாக கூறுயுள்ளனர். குறுகிய இடைவெளியில் இது நடக்கிறது. தற்போது ஆண் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதாக பெற்றோர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்" என்றார். அதிகப்படியாக டிஜிட்டல் சாதனங்களில் நேரம் செலவிடுவது மறைமுகமாக முன்கூட்டியே பருவமடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார். அவரைப் பொருத்தவரை, "மூளையில் இருந்து வெளியாகும் மெலடோனின் ஹார்மோன் நாம் தூங்க உதவுகிறது. ஆனால் டிஜிட்டல் திரையின் நேரத்தை அதிகரிப்பது தூக்க சுழற்சியை அதாவது சர்க்காடியன் ரிதத்தை சீர்குலைக்கிறது. ஏனெனில் டிஜிட்டல் திரையின் ஒளி அதன் சமநிலையை சீர்குலைக்கிறது.” "இந்த ஹார்மோன் நமது பாலியல் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது, ஆனால் மெலடோனின் சமநிலையின்மை காரணமாக, பாலியல் ஹார்மோன்கள் விரைவாக வெளியிடப்படுகின்றன" என்றார். சானிடைசர்களில் உள்ள ரசாயனங்கள் ரத்தத்தின் வழியாக சருமத்தில் நுழைந்து ஹார்மோன்களை பாதிக்கிறது. நம் உடலில் கிஸ்ஸ்பெப்டின் (Kisspeptin) என்ற ஹார்மோன் இருப்பதாகவும், அது முன்கூட்டிய பருவமடைதலுக்கு காரணமாகிறது என்றும் மருத்துவர் எஸ்.என்.பாசு கூறுகிறார். மற்ற காரணங்களும் சேர்ந்து ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து, முன்கூட்டியே பருவமடைவதற்கு காரணமாகின்றன. ஆனால் இந்த காரணங்கள் அனைத்தும் இன்னமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அர்ச்சனா மற்றும் ராஷியின் மகள்களுக்கு குறிப்பிட்ட வயது வரை மாதவிடாய் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சிறிய வயதில் பெண் குழந்தைகள், மாதவிடாய் காலங்களில் தங்களைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் பற்றியும் தெரிந்திருக்க வாய்பில்லை என்கின்றனர். அதே நேரத்தில், முன்கூட்டியே பருவமடைதலில் உளவியல் ரீதியான எதிர்மறையான விளைவுகள் காணப்படுகின்றன. சிறுமிகளை சுற்றியுள்ள பெண்கள் அவர்களை வித்யாசமாக பார்க்கும் நிலை ஏற்படலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce31k9p0ez3o
  5. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒருங்கிணைந்து செவ்வாய்கிழமை பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களின் 66 படகுகளை சிறைப்பிடித்து, 497 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பபடுகிறது. இதில் 90 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நவம்பர் 12-ல் பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்தனர். இந்த போராட்ட அறிவிப்புக்கு நாட்டுப்படகு மீனவ அமைப்புகளும் ஆதரவு அளித்தன. முன்னதாக திங்கட்கிழமை ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய அமைதிக்குழு கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீனவர்கள் அறிவித்தபடியே இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணியளவில் பாம்பன் சாலைப் பாலம் துவங்கும் இடத்தில் மறியல் போராட்டம் துவங்கியது. இந்த சாலை மறியல் போராட்டத்தினால் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. போராட்டம் துவங்கிய போது மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.பாம்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் சுமார் ஐநூறு மீனவர்களும், பெண்களும் கொண்டனர். https://www.virakesari.lk/article/198511
  6. வாக்களித்துவிட்டேன். அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேன்!
  7. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார். https://globaltamilnews.net/2024/208189/
  8. அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம, இந்த விடயம் தொடர்பில் மாளிகாகந்த நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/198476
  9. பொதுத் தேர்தலில் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்படமாட்டாது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க,மாறாக இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம். பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன. எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும். இன்னும் 3 நாட்களில் இடம்பெறவுள்ள 10ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/311956
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அப்போதிருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையைத் தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. இலங்கையில் புதிய அரசியல் சூழலை உருவாக்க புதிய நாடாளுமன்றம் அவசியம் என்றும், தான் ஜனாதிபதியானால், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத்தை அமைப்பேன் என்றும் பிரசாரத்தின்போது சொல்லிவந்தார் அநுர குமார திஸாநாயக்க. அதன்படி தான் பதவியேற்ற அடுத்த நாளே, செப்டம்பர் 24-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை அவர் கலைத்து உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர் 14-ஆம் தேதி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் யார் போட்டியிடுகின்றனர்? இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல முனைப் போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அங்கத்துவம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் நோக்கத்துடன் களத்தில் நிற்கிறது. ஜனதா விமுக்தி பெரமுனவை தலைமையாகக் கொண்டு 2019-ஆம் ஆண்டு உருவான இந்த முன்னணியில், 21 கட்சிகளும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமாகி ஜன பலவெகய (SJB) என்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியாக களத்தில் நிற்கிறது. இந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் களத்தில் இருக்கிறது. இவை தவிர, எஸ். ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன பலய, ரஞ்சன் ராமநாயகே தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், இலங்கையில் அமைப்பு ரீதியான பல மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக அநுர குமார திஸாநாயக்க வாக்குறுதிகளை அளித்தார். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமலில் இருந்தாலும், ஜனாதிபதி விரும்பிய மாற்றங்களைச் செய்ய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது அவசியம். அதன் காரணமாகவே, ஜனாதிபதி தேர்தலில் இருந்த ஆதரவு அலையின் வேகம் தணியும் முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் அநுர குமார திஸாநாயக்க அறிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கின்றன. இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலும் ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கும் கட்சியே ஆட்சியை அமைத்திருக்கிறது. ஆனால், அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஒரு ஸ்திரமற்ற நிலை உருவாகும் என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர். "அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெறாவிட்டால், வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்கப் பார்ப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றால், அது ஒரு ஸ்திரமற்ற நிலையையும் சிக்கல்களையும் உருவாக்கும்" என்கிறார் அகிலன் கதிர்காமர். காரணம், இலங்கையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் மட்டுமே ஜனாதிபதியின் கீழ் வரும் என்று கூறும் அவர் பிற அமைச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும் என்பதால் முடிவுகளை எடுப்பதில் இழுபறி நீடிக்கும் என்கிறார். இது முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் என கூறுகிறார் அகிலன் கதிர்காமர். பட மூலாதாரம்,UNIVERSITY OF JAFFNA படக்குறிப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சியாக இருந்தால்... நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, இலங்கையின் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் பிரதமர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலை 2001-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. 1999-ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார். அந்தச் சமயத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய பொது ஜன முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கூட்டணியிலிருந்து விலகியது. இதற்குப் பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பல கேபினட் அமைச்சர்கள் துணை அமைச்சர்களானார்கள். இதில் அதிருப்தியடைந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர். அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முடிவெடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார். இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டார் ஜனாதிபதி. அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்தது. தேசியப் பட்டியலில் 13 இடங்கள் உட்பட 109 இடங்கள் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன. இதையடுத்து 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே உரசலுடன்தான் இருந்துவந்தது. குறிப்பாக, ரணில் மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இது முற்றிக்கொண்டே சென்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகள் முற்றிய நிலையில், 2003 -ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சகம், காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு விவகாரங்கள் துறை, ஊடக அமைச்சகம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவில் இருந்த ரணில், நாடு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சு தன்வசம் இல்லாவிட்டால், அமைதிப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்வது கடினம் என்றும் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பைத் தராவிட்டால் இனி ஜனாதிபதியே நேரடியாக அதில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார். பிறகு, இரு தரப்பும் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து, முடிவுகளை எட்டலாம் என தீர்மானித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2004 ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார். இரு தரப்புப் பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சு வார்த்தை குறித்துப் பேசிவந்த நிலையில், 2004 ஜனவரி 20-ஆம் தேதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. யாரும் எதிர்பாராத நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் ஜனாதிபதி. ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனதா விமுக்தி பெரமுனவும் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களைப் பெற்று மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார். ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 இடங்களே கிடைத்தன. இத்துடன் இரு ஆண்டுகளாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்தன. 2018-ஆம் ஆண்டிலும் இதுபோல, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, இலங்கையை ஒரு அரசியல்சாஸன நெருக்கடிக்குத் தள்ளியது. 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரி பால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்குப் பிறகு, அதே ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைத்தன. இதற்குப் பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் உள்ளடக்கிய தேசிய அரசு ஒன்று அமைக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன பதவி ஏற்றார். ஆனால், விரைவிலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்ற ஆரம்பித்தன. 2018-ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த அபார வெற்றிக்கு, தற்போதைய அரசின் மோசமான செயல்பாடுகளே காரணம் எனக் கூறும் குரல்கள் தேசிய அரசுக்குள்ளேயே எழுந்தன. இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி. ஆனால், இதனை ஏற்க மறுத்த ரணில், தனக்கு இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதோடு, நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி சபாநாயகரிடம் கோரினார். இதனால், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதிவரை முடக்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி. நவம்பர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தையே கலைப்பதாகவும் அறிவித்தார். இது அரசியல்சாஸனத்திற்கு முரணானது எனக் குற்றம்சாட்டிய ரணில் விக்ரமசிங்க, உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றமும் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து டிசம்பர் 15-ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டிசம்பர் 16-ஆம் தேதி ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கிடைத்தால் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருக்கிறார் ஆனால், இந்த ஒட்டுமொத்த விவகாரமும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற நாடுகளும் பல அமைப்புகளும் வழங்கவிருந்த பல கடன்களும் உதவித் திட்டங்களும் இதனால் தடைபட்டன. ஆனால், இந்த முறை இதுபோல நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா. "சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ள கருத்துகளை கவனிக்க வேண்டும். தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தாலும் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இந்தக் கட்சிகளை வைத்து கூட்டணி அரசை அமைக்க முயல்வார்கள்." என்கிறார் அவர். இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே துவங்கி, அடுத்த நாளுக்குள் அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/clygl1egddgo
  11. தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது கட்சி அரசாங்கத்தை அமைத்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் உள்ளிட்ட பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். ஆனால் அனுர குமார திஸாநாயக்க தற்போது ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாறான கருத்துக்களை தெரிவிக்கிறார். ஜேவிபி இராணுவத்துடன் பேசியே தமிழ் மக்களின் காணி விடுவிக்கும் என்றால் அது சாத்தியப்படாது. ராஜபக்ஷ காலத்திலும் இதே நிலைதான் காணப்பட்டது. சோசலிச வழி வந்த அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு சொன்னால் காணி விடுவிப்பு என்பது குதிரைக் கொம்பு தான். அவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். ஆகவே இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றால் தமிழ் மக்கள் தமது பிரச்சினையை கையாள்வதில் நெருக்கடி ஏற்படும். ஊழல் இலஞ்சத்துக்கு ஒழிப்புக்கு மட்டும் ஆதரவளிக்கலாம். ஆனால் சிஸ்டம் சேஞ் என்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நிலை இருக்கிறதா? ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும் என ஜேவிபி ஸ்தாபகர் ரோஹன விஜேவீர மகனே சொல்கிறார். தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு கிடைக்காதுவிட்டால் நெருக்கடி ஏற்படும். இது சந்திரிகா குமாரதுங்க காலத்தில் நிகழ்ந்தது. ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றொரு கட்சியாகவும் கிடைத்தால் நிலைமை மோசமாகும். தமிழர் தரப்பு சரியான ஒரு வலுவான கொள்கை கொண்ட தரப்பை ஆதரிக்க வேண்டும். தமிழ் தேசிய பிரச்சினையை கையாளக்கூடியவர்களை தவிர்த்தால் நிலைமைகள் மோசமாகும். இளைஞர்கள், யுவதிகள் அதீத கற்பனையில் மிதக்காமல் இந்த கால கட்டத்தில் யார் பாராளுமன்றம் சென்றால் சிறந்தது என்பதை பார்த்து தெரிவு செய்ய வேண்டும் - என்றார். https://www.virakesari.lk/article/198473
  12. பாராளுமன்றத் தேர்தல் வாக்களிக்கும் முறையும் வாக்கு எண்ணும் பணியும்! ந.ஜெயகாந்தன் இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 14ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தல் நடத்தப்படுவதாலும், வழமையை விட அதிகளவான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த பெருமளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலர் போட்டியிடாத தேர்தலாகவும் இருப்பதாலும் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியை வெளியிட்டதுடன், நவம்பர் 14ஆம் திகதி அதற்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த வர்த்தமானியூடாக அறிவித்தார். இதற்கமைய பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் நடைபெற்றது. இந்தக் காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய 690 குழுக்கள் தேர்தல் களத்தில் போட்டியிட தகுதி பெற்றன. இந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,765,351 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 17 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 902 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் . தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவதற்காக 1,881,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 13 சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,024,244 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,191,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 429,991 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 11 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தென் மாகாணம் காலி மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 903,163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 220 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 686,175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் 250 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 520,940 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் , 21 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 27 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 459 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 306,081 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 22 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் , 42 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 640 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 217 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வட மேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,417,226 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 15 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 429 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 663,673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வட மத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 741,862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பொலனறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் , 2 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 120 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 351,302 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 705,772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 3 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 399,166 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சப்ரகமுவ மாகாணம் இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 923,736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் , 4 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 216 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 709,622 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 225 ஆசனங்களை கொண்ட பாரராளுமன்றத்திற்கு இந்த குழுக்களின் வேட்பாளர்களில் இருந்து 196 பேரே தெரிவு செய்யப்படவுள்ளனர். விகிதாசார தேர்தல் முறை 1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது அதற்கு முன்பிருந்த தேர்தல் தொகுதி முறைமைக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கும் அடிப்படை மாற்றமொன்றை அறிமுகம் செய்தது. முந்திய முறைமையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட, தனிப்பட்ட வேட்பாளர்களுடன் அல்லது சுயேச்சை வேட்பாளர்களுடன் தேர்தல் தொகுதிகளையும் கொண்டமைந்திருந்தது. குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். இம் முறையானது 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பிட்ட 22 தேர்தல் மாவட்டங்களிலுமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையாக மாற்றப்பட்டது. அரசியலமைப்பின் 98(8) உறுப்புரைக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் நிர்ணயம் தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமாகக் குறித்த தேர்தல் மாவட்டங்களின் வாக்களிப்பின் அடிப்படையில் 196 உறுப்பினர்கள் அனுப்பப்படுகின்றனர். அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகம் செய்த, 99 (அ) உறுப்புரை, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் அல்லது சுயேச்சை வேட்பாளர்களால் தேசிய மட்டத்தில் (தேசியப்பட்டியல்) பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட ஏற்பாடு செய்கிறது. இவ்வாறு ஒரே தேர்தலிலேயே நாம் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் ஒரு விகிதாசார முறைமையைக் கொண்டிருக்கிறோம். வாக்களிப்பு முறை வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளருக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலாவதாக, வாக்காளர் தாம் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சை குழுவின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் புள்ளடியிட்டு வாக்கைப் பதிவுசெய்ய வேண்டும். பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சி அல்லது சுயேச்சைக்கு சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் வேட்பாளர்கள் மூவருக்கு விருப்பு வாக்கை அளிக்க முடியும். அந்த வேட்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு வாக்கு இலக்கத்திற்கு மேலே புள்ளடிகளை இட்டு விருப்பு வாக்குகளை பதிவு செய்யலாம். இதேவேளை ஒரு வேட்பாளருக்கோ அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கோ தமது விருப்பு வாக்கை பதிவு செய்யவும் முடியும். எனினும் எவருக்கும் தனது விருப்ப வாக்கை செலுத்தாமலும் விடலாம். ஆனால் ஒன்றுக்கு மேட்ட கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்களுக்கு புள்ளடி இடுதல் அல்லது ஏதேனும் கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கான கட்டத்தில் புள்ளடி இன்றி வேறு அடையாளங்களை இடுதல் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும். அதேபோன்று கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு புள்ளடியிட்டு, மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு விரும்பு வாக்குகளுக்கான புள்ளடி இட்டிருந்தால் வாக்கு எண்ணப்படும் போது கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு வழங்கிய வாக்கு எண்ணப்பட்டாலும் வேட்பாளர்களின் விரும்பு வாக்கு எண்ணப்படும் போது அந்த எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது. வாக்கு எண்ணப்படும் முறை வாக்களிப்புகள் முடிந்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். இதன்போது முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் ஆசனம் வழங்கப்படும். பின்னர் செல்லுபடியான வாக்குகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். இதனால் அவ்வாறான கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் எவருக்கும் பாராளுமன்றம் செல்ல முடியாது. இதையடுத்து 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் மொத்த வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும். இதேவேளை இந்த கணக்கீட்டின் பின்னர் குறித்த மாவட்டத்துக்காக மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற கட்சிக்கான போனஸ் ஆசனத்தை ஓதுக்கிய பின்னர் வரும் ஆசன எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும். இதன்போது கிடைக்கும் எண்ணிக்கையே அந்த மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும். இவ்வேளையில் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும். பின்னர் ஆசனத்திற்கு தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைசக் குழுக்கள் பெற்ற வாக்குகளை அடிப்படையாக்க கொண்டு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேச்சைக்குழு பெற்ற மொத்த வாக்குகள் ஒரு ஆசனத்திற்கான எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்கான ஆசன ங்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும். இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்திற்கான ஆசனம் எஞ்சியிருக்குமாயின் ஆசனத்திற்கான தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு அது ஒதுக்கீடு செய்யப்படும். விருப்பு வாக்கு எண்ணல் இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு எவ்வளவு ஆசனங்கள் என்று முடிவான பின்னர், அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று எண்ணப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கீழாக கூடுதலான வாக்குகளை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவர். இதன்படி 196 பேர் மாவட்ட ரீதியில் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுவர். தேசியப் பட்டியல் தெரிவு முறை இதேவேளை எஞ்சிய 29ஆசனங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நாடு முழுவதும் பெற்றுள்ள வாக்கு விகிதாசாரங்களுக்கு ஏற்ப பகிரப்படும். குறித்த கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற வாக்குகள் நாடு முழுவதும் செல்லுபடியான வாக்குகளால் வகுக்கப்பட்டு வரும் எண்ணிக்கை 29ஆல் பெருக்கப்பட்டு வரும் எண்ணிக்கை (கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகள் /தேர்தலில் அளிக்கப்பட மொத்த வாக்குகள் X 29) கிட்டிய முழு எண்ணிற்கு மட்டம் தட்டப்படும் போது கிடைக்கும் தொகை அந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்குரிய தேசியப் பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கையாகும். தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை அந்தந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு பாராளுமன்றத்திற்கு தேவையான 225 உறுப்பினர்களும் தெரிவாகிய பின்னர் அவர்கள் தொடர்பான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும். https://thinakkural.lk/article/311959
  13. சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/311951
  14. (இராஜதுரை ஹஷான்) விடுதலை செய்யும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயரை ஜனாதிபதி குறிப்பிட்டால் அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாட்டை நான் குறிப்பிடுவேன். பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த சட்ட வரைவினை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவில் பதவி வகித்த லால் விஜயநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் முன்னிலையில் இருந்தார். ஒற்றையாட்சி அரசியலமைப்பினை இரத்துச் செய்து சமஷ்டியாட்சி முறைமையிலான அரசியலமைப்பை உருவாக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதால் தான் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படுகிறது. அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாக வாழ்கிறார்கள். சமஷ்டியாட்சி முறைமையிலான அரசியலமைப்பை உருவாக்கினால் 9 மாகாணங்களுக்கு மாறுப்பட்ட சட்டங்கள் இயற்றப்படும் இதனால் நாட்டின் தேவையற்ற முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும். நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தனர். அதேபோல் 14 ஆயிரம் இராணுவத்தினர் அங்கவீனமானார்கள். பாரிய இழப்பு மற்றும் தியாகத்துக்கு மத்தியில் பாதுகாத்த ஒற்றையாட்சியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரபாகரனின் சமஷ்டியாட்சி நோக்கத்தை புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றவும் எம்மால் இடமளிக்க முடியாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு சென்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் கிடையாது. விடுதலை செய்யும் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி குறிப்பிட்டால் அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாடுகளை நான் குறிப்பிடுவேன். தமது அரசியல் பிரபல்யத்துக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சுதந்திரம் ஒன்றும் இலகுவாக கிடைத்ததொன்றல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தீர்மானமிக்கது. படித்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதை காட்டிலும் நாட்டு பற்றுள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அதிகாரத்தில் இருந்த போதும், இல்லாத போதும் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க குரல் கொடுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை கிடையாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/198446 பிரபாகரன் தனிநாடு கேட்டுத் தானே போராடினவர்?! வீரசேகர ஐயாட்ட சமஸ்டி வேணும் என்று கேட்டவராம்!!
  15. தொடக்க வாழ்க்கையும் கல்வியும் [தொகு] ரணில் 1949 மார்ச் 24 இல் எசுமண்ட் விக்கிரமசிங்க, நளினி விக்கிரமசிங்க (விஜேவர்தன) ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார். வழக்கறிஞரான தந்தை,[23] ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் சிரில் விக்கிரமசிங்க, டி. ஆர். விஜயவர்தனா ஆகியோர் ஆவர். ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் கல்வி கற்றவர்களில் அனுரா பண்டாரநாயக்கா, தினேஷ் குணவர்தன குறிப்பிடத்தக்கவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1972 இல் வழக்கறிஞரானார்.[24] 2017 இல் பொருளாதாரம், கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக விக்கிரமசிங்கவிற்கு ஆத்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் ரணிலுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது.[25] அரசியல் வாழ்க்கை [தொகு] ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, 1970களின் நடுப்பகுதியில் களனி தொகுதிக்கான கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர் பியகமை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, 1977 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டார்.[26] 1989 பெப்ரவரியில் ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழிற்றுரை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ரணில் பியகமை சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.[27] 1990-இல்லறிவியல், தொழிநுட்பத்துக்கான அமைச்சுப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்குப் போட்டியாக கட்சியில் செயற்பட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய மூத்த அரசியல்வாதிகளிடம் இருந்து ரணிலுக்கும் போட்டி இருந்து வந்தது.[28] 1988-1990 காலப்பகுதியில், ஜேவிபியின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழும்பிற்கு வெளியே பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் ஒன்றின் பின்னணியில் அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.[29][30] சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம், பட்டலந்த முகாமின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக சிறப்பு சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. 1997 செப்டெம்பர் 3 அன்று விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.[31][32] ஆணைக்குழுவின் அறிக்கை 1998 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.[33] ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, "பட்டலந்தா வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சட்டவிரோத சித்திரவதை அறைகளைப் பராமரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மூத்த காவல்துறை அதிகாரி நளின் டெல்கொடவுக்கும் மறைமுகப் பொறுப்பு" இருந்ததாகக் கூறப்பட்டது.[34][35] அத்துடன், "வீட்டு வளாகத்தில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களை நடத்தினார் நடத்தினார், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.[29] https://ta.wikipedia.org/wiki/ரணில்_விக்கிரமசிங்க
  16. கூட அண்ணை! திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர். இலங்கை முழுவதுமான வேட்பாளர் விபரத்திற்கு கீழுள்ள வீரகேசரி இணைப்பைப் பாருங்கள். https://www.virakesari.lk/article/196141
  17. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் நவம்பர் 29இல் ஆரம்பம் (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி துபாயிலும் ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய ஐந்து நாடுகள் உட்பட 8 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நடப்பு சம்பியன் பங்களாதேஷுடன் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன பி குழுவில் இடம்பெறுகின்றன. பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த இரண்டு நாடுகளுடன் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகியனவும் இக் குழுவில் இடம்பெறுகின்றன. ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், ஜப்பான் ஆகியன 19 வயதுக்குட்பட்ட ஆசிய பிறீமியர் கிண்ணப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதன் மூலம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது முதலாவது போட்டியில் நேபாளத்தை ஷார்ஜாவில் நவம்பர் 28ஆம் திகதியன்றும் ஆப்கானிஸ்தானை ஷார்ஜாவில் டிசம்பர் 01ஆம் திகதியன்றும் பங்களாதேஷை துபாயில் டிசம்பர் 03ஆம் திகதியன்றும் இலங்கை சந்திக்கவுள்ளது. இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று முடிவடைந்தவுடன் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகள் துபாயிலும் ஷார்ஜாவிலும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள், 19 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் துபாய் விளையாட்டரங்கில் டிசம்பர் 8ஆம் திகதி விளையாடும். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ணப் போட்டி 1989இல் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்துள்ள 10 அத்தியாங்களில் இந்தியா 7 தடவைகள் சம்பியனானதுடன் பாகிஸ்தானுடன் ஒரு தடவை இணை சம்பியனானது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன தலா ஒரு தடவை சம்பயினாகியுள்ளன. இலங்கை ஐந்து தடவைகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/198468
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எந்த பதற்றமும் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஞாயிற்றுக்கிழமை அன்று, பல நாடுகள் டிரம்ப் தலைமையில் உள்ள அமெரிக்கா குறித்து பதற்றத்தில் இருக்கின்றன, ஆனால் 'இந்தியா அவற்றில் ஒன்று அல்ல' என்று தெரிவித்துள்ளார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான டொனால்ட் டிரம்புடன் முதல் பதவிக் காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருடன் நல்லுறவைப் பகிர்ந்து கொண்டார். ஆனால், டிரம்பின் நிர்வாகம் அமல்படுத்திய கடுமையான வரி விதிப்பு கொள்கைக்கு இந்தியா இலக்காகியது. இது இரண்டு தரப்பினரின் வணிகங்களை பாதித்தன. பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர்களுடன் சிறப்பாகப் பணியாற்றி வரும் இந்தியா, அமெரிக்காவில் இரு கட்சியின் ஆதரவையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு தலைவர்கள் நீண்ட காலமாக சீனாவை எதிர்க்க இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஜெய்ஷங்கர், டிரம்ப் ஆட்சியின் கீழ் இந்தியா -அமெரிக்கா உறவுகள் சிறப்பாக வளரும் என்பதில் இந்தியாவுக்கு எந்த அச்சமும் இருக்காது என்றார். "அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவரை அழைத்து வாழ்த்திய முதல் மூவரில் பிரதமர் மோதி ஒருவர்", என்றும் அவர் கூறினார். ஆனால் பொருளாதார சிக்கல்கள் இருநாட்டு உறவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோதியை "சிறந்த தலைவர்" என்று பாராட்டியுள்ளார். ஆனால் அவர் இந்தியா அதிகமாக வரி விதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். தலைவர்களுக்கிடையிலான நட்பு இரு நாடுகளிடையே இருக்கும் வணிக சிக்கல்களை சமாளிக்க உதவுமா என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில் டிரம்பும் மோதியும் அடிக்கடி ஒருவரையொருவர் பாராட்டி வந்துள்ளனர். 2019-ஆம் ஆண்டில், டெக்சாஸில் இந்திய பிரதமரை பாராட்டுவதற்காக நடத்தப்பட்ட "ஹௌடி, மோதி!" என்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான நிகழ்ச்சியில், இரு தலைவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டனர். இதில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சி அமெரிக்காவில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இதற்கு அடுத்த ஆண்டு, டிரம்பின் அதிகாரப்பூர்வ முதல் இந்தியப் பயணத்தின் போது, அவரை மோதி தான் பிறந்த மாநிலமான குஜராத்தில் வரவேற்றார். அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 1,25,000 பேரை கொண்ட ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார். ஆனால் இது போன்ற பெரிய நிகழ்வுகள் இரு நாடுகளில் நடந்தாலும், இந்தியா - அமெரிக்கா உறவுகள் பாதிப்புகளை சந்தித்தது. அவரது முதல் பதவிக்காலத்தில், இரு நாடுகளுக்கிடையிலான கடுமையான வரி விதிப்பின் போது டிரம்ப் இந்தியாவுக்கு வழங்கியிருந்த முதன்மை வணிக உரிமையை ரத்து செய்தார். H-1B விசாக்களுக்கான மறுப்பு விகிதம் 2016-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில், அது 2019 -ஆம் ஆண்டு 21 சதவீதமாக உயர்ந்தது என்பதை அமெரிக்கத் தொழிலாளர் துறையின் தரவு தெரிவிக்கின்றது. இந்த விசாக்களில் பெரும்பாலானவை இந்தியத் தொழில்நுட்பத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இதனிடையே, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கிடையேயான அதிகாரச் சமநிலை மாறிக் கொண்டிருப்பதாக ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கா போன்ற பழைய தொழில்மயமான பொருளாதாரங்களும் மிகவும் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார். "அவை பெரிய சந்தைகள், வலிமையான தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான மையங்களாக இருக்கின்றன. ஆகவே, இந்த மாற்றத்தை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் அதில் அதிகமாக ஆர்வம் செலுத்தாமல் இருந்து, மற்ற உலக நாடுகள் குறித்தான புரிதலை மாறாமல் வைத்திருக்கவும் வேண்டும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c30pvq0y4n9o
  19. இவர்களின் கட்சி முதன்முதல் ஆட்சியமைக்கும்போது இவர்கள் எல்போட் தானே அண்ணை?
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன? இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்கள் மாத்திரமே இருந்ததால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை. இந்தத் தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும். இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன. இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும். நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 இடங்களை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்கும். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அமலான பிறகு, ஜனாதிபதி அங்கம் வகிக்கும் கட்சியே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சில சந்தர்ப்பங்களில் வேறொரு கட்சி அதிக இடங்களைப் பெற்ற வரலாறும் இருக்கின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குசீட்டில், கட்சிகளின் பெயர்களும் அவற்றின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும். சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள், ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ, அத்தனை பேராக இணைந்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடலாம். ஒவ்வொரு சுயேச்சைக் குழுவுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டிருக்கும். இதற்குக் கீழே, ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்கள் இருக்கின்றனவோ அத்தனை எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வன்னி மாவட்டத்தில் 9 இடங்கள் எனில், 1 முதல் 9 வரையிலான எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு வேட்பாளரைக் குறிக்கும். ஒவ்வொரு வாக்காளரும் மூன்று பேருக்கு விருப்ப வாக்களிக்க முடியும். முதலில் வாக்காளர் தனக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டில், விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு முன்பாக தேர்வுசெய்வதற்கான குறியிட வேண்டும். அதன் பின்னர் வாக்குச் சீட்டின் கீழ் பகுதியிலுள்ள இலக்கங்களில், தான் விரும்பும் வேட்பாளருக்கான இலக்கத்தின் மீது விருப்பக் குறி இட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு வாக்காளர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களை தேர்வுசெய்யலாம். கட்சி எதையும் தேர்வுசெய்யாமல், வெறுமனே வேட்பாளர்களுக்கான எண்களை மட்டும் தேர்வுசெய்தால் அந்த வாக்கு செல்லாத வாக்காகக் கருதப்படும். ஆனால், கட்சியை மட்டும் தேர்வு செய்து, வேட்பாளர்கள் யாரையும் தேர்வுசெய்யாமல் இருந்தால், அந்த வாக்கு கட்சிக்கான வாக்காக கருதப்படும். ஒரு கட்சியைத் தேர்வுசெய்வதற்குப் பதிலாக 2 - 3 கட்சிகளைத் தேர்வுசெய்தாலோ, வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது மூன்று பேருக்கு அதிகமாகவோ தேர்வு செய்தாலோ அந்த வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும். தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்காளர்கள் காலை ஏழு மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குகளைச் செலுத்தலாம். வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். முதலில் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படும். அதற்குப் பிறகு, பிற வாக்கு சீட்டுக்களை எண்ணும் பணிகள் துவங்கும். அடுத்த நாள் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். சமீப காலங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இலங்கையின் பிரதான கட்சிகளைத் தவிர்த்து, மற்றொரு கட்சியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களத்தில் நிற்கிறது. எனினும், தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்கக்கூடாது என்ற நோக்கில், பிரதான எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இலங்கையின் நாடாளுமன்றம் காலனியாதிக்கக் காலத்துக்கு முன்பாக இலங்கை ஒரு முடியாட்சி நாடாக இருந்தது. அதன் பின்னர் போர்த்துக்கீசியர், ஹாலந்து நாட்டவர், ஆங்கிலேயர் ஆகியோரது ஆதிக்கத்தின் கீழ், நிர்வாக மற்றும் அரசாங்க மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடற்கரையோரங்களில் இருந்த ஹாலந்து குடியேற்றங்களும் அதனைத் தொடர்ந்து கண்டி ராச்சியமும் 1815ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஆட்சியின் கீழ்வந்தது. ஹோல்புறூக் - கெமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் உருவாக்கப்பட்டன. காலனித்துவ இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபைகள் 1833ஆம் ஆண்டு ஆளுநர் சர் ராபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் கொழும்பு காலி முகத்திடலில் கடலை நோக்கி அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றப்படும் வரை தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கும் கோடன் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடத்தில்தான் கூட்டப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்ற கட்டடம் தற்போது பழைய நாடாளுமன்றக் கட்டடம் என அழைக்கப்படும் கட்டடம் 1930ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அப்போதைய மகா தேசாதிபதி சர் ஹேபட் ஸ்டான்லி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்படும்வரை சட்டமன்றம் இக்கட்டிடத்தில்தான் நடைபெற்றது. இதற்கிடையில், 1944ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழுவினரால் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி அறிமுகப் படுத்தப்பட்டது. நாடாளுமன்றம், மகாராணியையும் (மகா தேசாதிபதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்) செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு சபைகளையும் கொண்டிருந்தது. பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். செனட் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினரால் தேர்வுசெய்யப்பட, 15 பேர் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். 1971ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி செனட் சபை இல்லாமலாக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் பலமுறை பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது: 1. 1833- 1931 சட்டவாக்கப் பேரவை (49 உறுப்பினர்கள்) 2. 1931-1947 ராஜ்ய சபை (61 உறுப்பினர்கள்) 3. 1947-1972 பிரதிநிதிகள் சபை (முதலில் 101 உறுப்பினர்களும் 1960க்குப் பிறகு 157 உறுப்பினர்களும் இருந்தனர்) 4. 1972-1978 தேசிய அரசுப் பேரவை (168 உறுப்பினர்கள்) 5. 1978 - இப்போதுவரை நாடாளுமன்றம் (225 உறுப்பினர்கள்). - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg5pnnzp7po
  21. இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது இலங்கை (Sri Lanka) கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர். இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகில் வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது இலங்கையர்களும் நெடுந்தீவு கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அண்மையில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகச் சென்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. https://tamilwin.com/article/23-indian-fishermen-arrested-in-sri-lanka-1731294860?itm_source=parsely-api
  22. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நாளை சிஐடியினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆசாத்மௌலானா விடுத்த சனல்4 ஊடகத்திற்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் செய்ய்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காக பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல தெரிவித்த முரணாண தகவல்கள் தொடாபில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198465
  23. (எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும். ஜனாதிபதி இதுவரை பொருளாதார இலக்கு தொடர்பில் தெரிவிக்கவில்லை. அதனால் பாரிய நிச்சியமற்ற நிலை இருந்துவருகிறது. தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு, தேங்காயின் விலை தேங்காய் மரத்தைவிட உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை தாமரைக்கோபுரம் போன்று உயர்ந்து செல்கிறது. முட்டை விலை அதிகரித்து செல்கிறது. இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியுமா? இந்த அரசாங்கம் நாணய நிதியத்துடன் எவ்வாறு கலந்துரையாடுகிறது? ஜனாதிபதி தேர்தலில் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கையை கொண்டுவந்தார்கள். அவற்றை செயற்படுத்த முடியுமா? வரி நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்தார். அவை கிடைக்கிறதா இல்லையா? என தெரிவிக்க வேண்டும். நாடு முன்னுக்கு செல்வதாக இருந்தால் நூற்றுக்கு 8வீத வருடாந்த பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? சிறிலங்கன் விமான சேவையை வைத்துக்கொள்வதா எனதெரிவிக்க வேண்டும். திசைகாட்டி முன்வைத்திருக்கும் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு அமைய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியில் வியத்மக வைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி போட்டாபயவை இல்லாமலாக்கினார்கள். இவர்களையும் இல்லாமலாக்க அவர்கள் தற்போது திசைகாட்டியில் போட்டியிடுகின்றனர். நாட்டுக்கு திறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும். நான் எப்போதும் பொருளாதாரத்தை திறந்து விட்டிருந்தேன். திசைகாட்டியில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாங்கள் அறிமுகப்படுத்திய பயணத்தில் செல்லுங்கள். இந்த பயணத்தில் இருந்து தூரமாக வேண்டாம். அவ்வாறு இடம்பெற்றால் இந்த பொருளாதாரத்தை கையாள முடியாது. மேலும் உதய செனவிரத்ன அறிக்கையை செயற்படுத்த, திசைகாட்டி அரச ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு? இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். திசைகாட்டியின் பொருளாதார சபையில் வேலை செய்ய முடியாது. அந்த சபையில் வணிகக் கல்வி தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். வியாபார முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களும் இருக்கிறார்களாம். என்றாலும் பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன தெரியும்.? இது அறியாதவர்கள் இருக்கின்ற அனுபவமில்லாத அரசாங்கமாகும். ஜனாதிபதி முதல் யாருக்கும் அனுபவமில்லை. அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? மறைந்திருக்கும் வேட்பாளரை கண்டுபிடித்து உறுப்பினராக்குமாறு தெரிவிக்கிறார்கள். அதனால் அனுபமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதா? அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா? பாராளுமன்றத்தை சிலிண்டருக்கு கொடுத்தால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும். அதனை நாங்கள் நடைமுறையில் காட்டி இருக்கிறோம். பொருளாதாரத்தை பாதுகாக்க சிலிண்டரில் போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். குப்பைகளை அகற்றுவதற்கு திசைகாட்டியை அபான்சுக்கு அனுப்புங்கள் என்றார். https://www.virakesari.lk/article/198463
  24. தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி முழங்கி வருகிறார்கள். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ் தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்தில் தடம் மாறாது பயணிக்க விரும்பும் இம்மக்கள் யாவரும் மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் தேசியம் என்பது உள்ளுடன் அற்ற ஒரு வெற்றுக்கோது அல்ல. ஓர் இனம் பேசுகின்ற மொழி, அது வாழ்கின்ற சூழல், அதன் பண்பாடு ஆகியன பற்றிய ஒருகூட்டுப் பிரக்ஞையே தேசியமாகும். இது அந்த இனத்தின் ஆன்மா போன்றது. தேசியத்தின் கூறுகளாக உள்ள மொழி, சூழல், பண்பாடு ஆகியவனவற்றுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிகழுகின்ற போதெல்லாம் உண்மையான தேசியவாதிகள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். சிங்கள - பௌத்த தேசியவாதத்தால் தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வுநிலை மேலெழுந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டது. முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்தது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவோடு ஒரு தொடர் அஞ்சலோட்டம் போல தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பாதையில் இருந்து விலக ஆரம்பித்தது. இன்று அது தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மை வகித்த தமிழ் அரசுக் கட்சி முதலில் கூட்டமைப்பைப் புலிநீக்கம் செய்தது. இப்போது தமிழ் தேசியக் கோட்பாட்டையும் முற்றாக நீக்க முனைந்துள்ளது. தமிழ் தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும், சூழலியத்தையும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கை நோக்கிய இரண்டு வழிமுறைகளாகக் கருதி உறுதியோடு பயணித்து வருகிறது. தமிழ் தேசியத்தில் தடம்மாறாது பயணித்து வரும் நாம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். மக்கள் போலித் தமிழ் தேசியவாதிகளை நிராகரித்து எம்மை ஆதரிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198449

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.