Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்படி நிச்சயம் செய்யப்பட்டு, 2021 ஆண்டு தன்னுடைய 22 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய தந்தை ஒரு விவசாயி. “கடந்த மூன்று ஆண்டுகளில் நான் மிகுந்த வன்முறைக்கு ஆளானேன். என்னிடம் ஐந்து லட்சம் பணமும், இருசக்கர வாகனமும் கேட்டனர். அதை என்னால் தரமுடியாததால் என்னுடைய தந்தை வீட்டுக்கு திரும்பி வந்தேன்,” என்றார் கெளஷல்யா. சமூக அழுத்தத்திற்கும் திருமண உறவிலிருந்து வெளிவர பயந்தும் கெளஷல்யாவின் குடும்பத்தினர் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல் மீண்டும் அவரை அவரது கணவர் வீட்டிற்கு பலமுறை அனுப்பிவைத்து விட்டனர். “நான் துன்புறுத்தப்பட்டேன். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து 18 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து என்னை இந்த உறவிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டு கெளஷல்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவ்வளவு பணத்தை கொடுக்க இயலாது என்பதை உணர்ந்த குடும்பத்தினர் இவரை மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இந்த விஷயம் கிராமப் பஞ்சாயத்து வரை சென்றது. அங்கு, இத்திருமணத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ரூ.18 லட்சத்தை கொடுத்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கெளஷல்யா, சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரச்னைகளை தீர்க்க காவல்துறையிடமோ நீதிமன்றமோ செல்வதில்லை. கிராமப் பஞ்சாயத்திற்கு மட்டும் தான் செல்கிறார்கள். படக்குறிப்பு, கெளஷல்யா சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். ராஜஸ்தானிலும் தொடரும் இந்த பழக்கம் பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கிறது. இங்கு பெரும்பாலும் மண் சாலைகள் தான் இருக்கின்றது. அதே போல பெரும்பாலான பெண்கள் முக்காடு அணிந்தபடியே இருக்கின்றனர். தேசிய குடும்பநலத்துறை ஆய்வின் படி, ராஜகர்கில் 52% பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், 20 ல் இருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 46 சதவீதத்தினர் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமண உறவில் தள்ளப்படுகின்றனர். அதாவது குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரியவருகிறது. 2011 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி ராஜ்கர்கின் மக்கள்தொகை 15.45 லட்சமாக இருந்தது. அதில் பெண்கள் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் பகுதியை போல, ராஜஸ்தானில் உள்ள அகர் மல்வ, குணா, ஜலவர் ஆகிய இடங்களிலும் ஜடா நாத்ரா இன்னும் நடைமுறையில் தொடர்ந்து வருகிறது. படக்குறிப்பு, பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த பழக்கம் பற்றிய பின்னணி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை இவ்விடங்களில் நடந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ராஜ்கரின் பீஜி கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகின்றார் சீமா சிங் . "ஜடா நாத்ரா நடைமுறை பற்றி எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக இந்த பழக்கம் கைம்பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் கைகொடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் இது நாட பாத்ரா என்று அழைக்கப்பட்டது." என்று அவர் கூறினார். அவரைப் பொருத்தவரை, “இந்த நடைமுறையினால் கைம்பெண்களுக்கு மீண்டும் இந்த சமூகத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்பொழுது இந்த வடிவமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கு பெண்களை பேரம் பேசி சிறுவயதிலேயே திருமணமோ அல்லது நிச்சயமோ செய்துவைக்கின்றனர். பின்னர் ஏதேனும் சிக்கல் வரும் பொழுது இந்த உறவிலிருந்து வெளிவர பெண்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பெண்கள் இந்த நடைமுறையை எதிர்த்தாலோ அல்லது பணத்தை கொடுக்கமுடியவில்லை என்றாலோ பிரச்னை கிராமப் பஞ்சாயத்திற்கு செல்லும். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே எவ்வளவு பணம் கொடுத்து விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவெடுப்பர்,”என்று சீமா சிங் குறிப்பிடுகிறார். அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பானு தாகூர் இதைப் பற்றி கூறுகையில், “இங்குள்ள மக்களின் மீது இந்த நடைமுறையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவர்கள் பதிவுத் திருமணத்தை விட இதைத் தான் அதிகமாக நம்புகின்றனர்.” என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பற்றி மட்டும் தான் தெரியும், இன்னும் பதிவு செய்யப்படாத இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கலாம் என்று பானு தாகூர் தெரிவித்தார். படக்குறிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன மூன்று ஆண்டுகளில் 500 வழக்குகள் இதுதொடர்பாக நாங்கள் ராஜ்கரின் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ராவை சந்தித்தோம். “பெண்களின் உரிமைகளை பறிக்க இன்றளவும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் பாரம்பரியம் என்ற பெயரில் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு நிச்சயம் செய்து வைத்துவிடுகிறார்கள். பின் இந்த உறவில் பிரிவு ஏற்பட்டால் அந்த பெண்ணிடம் பல லட்ச ரூபாயை மாப்பிளை வீட்டார் கேட்கின்றனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செயலாக இது இருக்கின்றது, ஆனால், இங்குள்ள மக்கள் இதை சரியான செயல்முறையாக பார்க்கின்றனர். ஏறத்தாழ 500 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. ஆனால் இதை பார்க்கும் பொழுது முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது,” என்றார் ஆதித்ய மிஷ்ரா. “இந்த நடைமுறையில் பெண்களை வைத்து பேரம் பேசுகின்றனர். பழைய உறவிலிருந்து வெளிவர வேண்டுமானால் அப்பெண் ஒரு தொகையை அந்த ஆணுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு வெளியில் பல வரன்கள் பார்க்கப்படும். அதில் யார் அந்த பெண்ணுக்கு அதிக தொகையை கொடுக்கின்றனரோ அவருடன் அந்தப் பெண் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். அவரிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பழைய திருமண உறவிலிருந்து அந்தப் பெண் வெளியேறுகிறார்,” என்கிறார் சீமா சிங். படக்குறிப்பு, முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது என்கிறார் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ரா இது மங்கிபாயின் கதை ராஜ்கரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோடக்கியா கிராமத்தை சேர்ந்தவர் மங்கிபாய். இவரின் கதையும் கெளஷல்யா போன்றது தான். இதை எடுத்துரைக்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். “எனக்கு அங்கு ஒழுங்கான உணவோ அல்லது உறங்கும் இடமோ கிடைக்கவில்லை. என்னுடைய கணவர் மது அருந்துவதை தடுக்கும் போது என்னை அடிப்பார். என்னுடைய வாழ்க்கை அங்கு மோசமாகிவிட்டது. எனக்கு பெரிய கனவுகள் இருந்ததில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதுவும் நடக்காமல் போய்விட்டது,” என்று வருந்தினார். அந்த திருமணத்தில் இருந்து வெளியேற அவர் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கணவர் வீட்டார் கேட்டுள்ளனர். அதனால் கிராமப் பஞ்சாயத்திற்கு அதனை எடுத்து சென்ற போது அது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மங்கிபாய், கில்ச்சிபூர் காவல் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மற்றும் மைத்துனருக்கு எதிராக புகார் கொடுத்தார். காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மங்கிபாயின் கணவர் கமலேஷ் , மைத்துனர் மங்கி லால் மற்றும் மாமனார் கன்வர் லால் மீது இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அவர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். மங்கிபாய் தற்பொழுது தனது பெற்றோருடன் வசிக்கிறார். மங்கிபாயின் தந்தையும் அவரின் சகோதரர்களும் இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். அவரின் தந்தை 5 லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதனால் அவரால் தனது மகளை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது. படக்குறிப்பு, கணவரை பிரிந்து வாழும் மங்கிபாய் இதற்கிடையில் மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பிபிசியிடம் பேசிய கமலேஷ், “ஆறு மாதத்திற்கு முன்பு மங்கிபாயின் தந்தைக்கு மூன்று லட்சம் வழங்கினேன். திருமணத்தின் போது ஒரு தோலா தங்கத்தையும், ஒரு கிலோ வெள்ளி நகைகளையும் வழங்கினேன். நாங்கள் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறோம். அதை நாங்கள் நிச்சயம் வாங்கியே தீருவோம்”. என்றார். இந்த பணம் எதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு கமலேஷ் விடையலளிக்கவில்லை. படக்குறிப்பு, மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கிராமத்தினர் தலையீடு 70 வயதாகும் பவன் குமார்( பெயர் மற்றப்பட்டுள்ளது) இது தொடர்பான கிராமப் பஞ்சாயத்துகள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் தீர்ப்புகள் எல்லாமே மாப்பிள்ளை வீட்டாருக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “இந்த கிராமத்தில் இதுபோன்ற வழக்குகளில் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே இறுதியானது. அறுபதாயிரம் முதல் எட்டு லட்சம் வரையிலான பணம் சம்பத்தப்பட்ட வழக்குகளை நான் தீர்த்துள்ளேன்.” என்றார். “சிறுவயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படுவதால் பெண்கள் இந்த உறவில் இருக்க மறுக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்களும் இந்த பிரிவிற்கு காரணமாக இருக்கின்றனர். அப்போது நாங்கள் பெண் வீட்டார் குறைவாக பணம் கொடுக்கும் படி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வோம். இருப்பினும் 90% வழக்குகளில் பெண் வீட்டார் தான் இந்த தொகையை கட்ட வேண்டும்" என்கிறார் அவர். படக்குறிப்பு, 90% வழக்குகளில் ஆண் வீட்டாருக்கு சாதகமாகவே கட்டப் பஞ்சாயத்துகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது என்ன? சமூக செயற்பாட்டாளர் மோனா சுஸ்தானி இந்த நடைமுறைக்கு எதிராக பத்தாண்டுகளாக போராடுகிறார். அவர் இதை பெண்களுக்கு எதிரான செயலாகவும் , ஆணாதிக்க சிந்தனை மிக்கதாகவும் இருக்கின்றது என்று தெரிவித்தார். “நான் ஒரு அரசியல் குடும்பத்தில் 1989-ல் திருமணம் செய்துகொண்டேன். இந்த நடைமுறையைக் கண்டு நான் அதிர்ந்தேன். அப்போதே இதற்கு எதிராக குரல் கொடுக்க முடிவு செய்தேன்.” என்றார் அவர். அவர் உருவாக்கிய அமைப்பு, இதுதொடர்பான வழக்குகளில் குறுக்கிட்டு, பெண்களின் மீது பொருளாதார நெருக்கடி சேராத படி பார்த்துக்கொள்கிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார். அப்படி வெளியேறிய பெண்கள் பலர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். படக்குறிப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார் அதேசமயம் ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார். இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான். இந்த பழக்கத்தினால் ராம்கலா தனது வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது அவர் தனது உயர்கல்வியை படித்துக்கொண்டும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறார். “பெண்களை இதிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். சமூக அழுத்தங்கள் நிறைய உள்ளன. எங்களிடம் அவர்கள் வந்தவுடன் முதலில் காவல்துறையிடம் புகர் அளிப்போம். பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினரிடம் பேசுவோம். அவர்கள் புரிந்துகொண்டால் அப்பெண்ணிற்கு சட்டத்தின் வாயிலாக அவர்கள் உதவுவார்கள்.” என்றார் ராம்கலா. என்னதான் ராம்கலா, மோனா சுஸ்தானி போன்றவர்கள் இந்த தீய பழக்கத்திற்கு எதிராக போராடினாலும், கெளஷல்யா, மங்கிபாய் போன்ற பெண்கள் தங்களது திருமணத்திலிருந்து வெளியேற இன்னும் பல லட்ச ரூபாயை கொடுக்கவேண்டிய நிலை மாறவில்லை. படக்குறிப்பு, ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார்,இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c154p1ejeqxo
  2. கறுத்தக் கொழும்பான் தரவில்லை என்ற கோபத்தில கோர்த்துவிடக்கூடாதண்ணை!
  3. மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஒன்று கூடியுள்ளனர். அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை "இனப்படுகொலை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் அவர் விமர்சித்தார். "பாலத்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் லெபனான் மக்கள் மீதும் அந்நாடு தாக்குதலை விரிவுபடுத்த வாய்ப்புள்ள இந்த சூழலில், இவ்வுச்சிமாநாடு நடைபெறுகிறது", என்று அவர் கூறினார். ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வலுவாக மறுத்துள்ளது. மேலும் எதிரியாக இருந்த நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு அறிகுறியாக, அவர் இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு முன்பு, சௌதி அரேபிய ராணுவத்தின் உயர்நிலைக் குழு ஒன்று இரானுக்கு பயணம் மேற்கொண்டது. இது 'வழக்கத்திற்கு மாறான' ஒன்றாக கருதப்படுகிறது. அதேசமயம், சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசியுள்ளார். இரான் ராணுவ அதிகாரிகளுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவுகள் குறித்து சௌதி அரேபிய ராணுவத்தின் உயர்நிலைக் குழு கலந்துரையாடியதாக இரான் நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரேபிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாத் பின் ஹமீத் அல்-ருவைலி, இரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரியுடன் இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என்று இரான் ராணுவத்தின் செய்தி தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி ராணுவ தொடர்பு 2023-ஆம் ஆண்டு தொலைபேசி மூலம் மட்டுமே நடந்ததால் இரான் ஊடகங்கள் இந்த பயணத்தை 'வழக்கத்திற்கு மாறான' ஒன்று என்று குறிப்பிடுகின்றன. பட மூலாதாரம்,MINISTRY OF DEFENSE IN THE KSA படக்குறிப்பு, ராணுவ ஒத்துழைப்பு பற்றி செளதி- இரான் ராணுவ தளபதிகள் இடையே பேசப்பட்டது போர்ச் சூழலுக்கு நடுவே நடைபெறும் சந்திப்பு சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த பயணம் குறித்த தகவல்களை 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது. இரு நாடுகளும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், விஷயம் இது மட்டுமல்ல. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஏமென் நாட்டின் ஹத்ரமவுட் மாகாணத்தில் உள்ள சயூன் நகரில் சௌதி அரேபிய ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில், சௌதி அரேபிய அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு நபரும் காயமடைந்தார். ஏமெனில் உள்ள அரசாங்கம் சௌதி அரேபியாவின் ஆதரவை பெரும் அதே வேளையில் ஏமெனில் உள்ள ஹூதி ஆயுதக்குழுவை இரான் ஆதரிக்கின்றது. ஏமெனில் நடந்த இந்த தாக்குதல் 'துரோகம் மற்றும் கோழைத்தனமான' செயல் என்று சௌதி அரேபியா கண்டித்தது. பட மூலாதாரம்,EPA/RESUTERS படக்குறிப்பு, இரான் அதிபர் மற்றும் சௌதி பட்டத்து இளவரசர் இரான் அதிபரிடம் சௌதி பட்டத்து இளவரசர் என்ன பேசினார்? சௌதி அரேபியாவின் குழு இரானுக்குச் சென்றிருந்தபோது, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தார். இந்த அழைப்பில் ஐக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை பற்றி முகமது பின்னிடம், பெசெஷ்கியன் பேசியதாக சௌதி செய்தி முகமை தெரிவித்துள்ளது. சொல்லப்போனால், இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவே அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் திங்கட்கிழமை அன்று சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வந்தடைந்தனர். இந்த உச்சி மாநாட்டில் தற்போது காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்து பேசப்படுகிறது. இரானின் சார்பாக, துணை அதிபர் முகமது ரெசா ஆரிஃப் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த உச்சி மாநாடு வெற்றிகரமாக அமையும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் நம்பிக்கை தெரிவித்தார். சௌதி அரேபியாவின் அரசு ஊடக முகமையான வஃபா, '' பாலத்தீனம் மற்றும் லெபனான் பகுதிகளில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் மோசமான தாக்குதல் அரபு மற்றும் இஸ்லாமிய நாட்டின் தலைவர்களை உடனடியாக இந்த சந்திப்பு நடத்த கட்டாயப்படுத்தியது'' என்று குறிப்பிட்டுள்ளது. பாலத்தீனம் மற்றும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலை நிறுத்துவது, அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது என்பதே இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES கூட்டு ராணுவ பயிற்சி எதிரி நாடுகளாக இருந்த இரான் மற்றும் சௌதி அரேபியா கடந்த ஆண்டு முதல் நெருக்கமாக நகர தொடங்கின. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த சீனா மத்தியஸ்தம் செய்தது. இரான் போராட்டகாரர்கள் டெஹ்ரான் மற்றும் மஷாத் நகரில் உள்ள சௌதி அரேபியா தூதரகங்களை 2016-ஆம் ஆண்டு தாக்கியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமாக தொடங்கின. அக்டோபர் மாதத் தொடக்கத்தில், இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ரியாத்துக்கு பயணம் செய்து சௌதியின் பட்டத்து இளவரசரையும் சந்தித்தார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சற்று சரிவர தொடங்கின. கடந்த அக்டோபர் மாதம் இரு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தியது. இரான் உட்பட பல நாடுகளுடன் இணைந்து அரபிக்கடல் பகுதியில் சௌதி அரேபியா கடற்படை ராணுவ பயிற்சி மேற்கொண்டதாக, சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபாசில் பின் மற்றும் இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செங்கடலில் அமையும் புதிய கூட்டணி இஸ்ரேல் புதிய தகவல் ஒன்றை வெளியிட்ட அதே சமயம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஈலாட் வளைகுடாவில் அமெரிக்கா தலைமையில் இஸ்ரேல், ஜோர்டன், எகிப்த் மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய கூட்டணி அமைக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்தது. கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் மற்றும் உத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை இரானின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதே, செங்கடலில் இந்த ராணுவ ஒத்துழைப்பின் நோக்கம் என ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகள், இராக் மற்றும் ஏமெனில் கொடுக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த 'பிராந்திய பாதுகாப்பு கூட்டணி' உருவாக்கப்பட்டது என்று இஸ்ரேல் செய்தி இணையதளமான 'ஜமானே இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqxw3vpele3o
  4. BY AMAL JAYASINGHE AFP-JIJI இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. தனது கதாநாயர்களாக சேகுவேராவையும் கார்ல்மார்க்சினையும் கருதும் அனுரகுமார திசநாயக்கவிற்கு நாட்டின் மிகவும் செல்வாக்குள்ள தனியார் வர்த்தக அமைப்பின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியால் சீற்றமடைந்த மக்களின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க பெற்றார். இலங்கை வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக தான் முன்வைத்துள்ள திட்டங்கள் ஜேவிபியின் சோசலிஸ நிகழ்ச்சிநிரல் போன்று காணப்படுவதாக தெரிவித்துள்ளது. திசநாயக்கவின் கீழ் நாடு சீனா அல்லது வியட்நாமின் பொருளாதார மாதிரியை பின்பற்றக்கூடும் என வர்த்தக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அனுரகுமார திசநாயக்கவின் கட்சி அதன் சின்னமாக சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் சுத்தியல் மற்றும் அரிவாளை கொண்டுள்ளது. திசநாயக்கவின் முதல் பதவிக்காலத்தில் முழுமையான ஜனநாயக அமைப்பை கொண்டிருப்பதில் அவர்கள் வியட்நாமை விடசிறந்தவர்களாகயிருப்பார்கள் என அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட புவிசார் அரசியல் இடர்பகுப்பாய்வு நிறுவனமான ட்ரென்சிக்கின் இம்ரான் புர்கான் தெரிவிக்கின்றார். நீண்டகாலமாக கம்யுனிஸ ஆட்சியை கொண்டிருக்கும் வியட்நாமை விட இலங்கையில் ஜனநாயகம் ஆழமாக வேருன்றியுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். வியாழக்கிழமை தேர்தலில் திசநாயக்கவின் கட்சி இலகுவாக வெற்றிபெறும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன் திட்டத்தின்படி முன்னயை வலதுசாரி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த மக்கள் ஆதரவற்ற சிக்கன நடவடிக்கைகள் உட்பட சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தான் கருதுவதாக அவர் தெரிவிக்கின்றார். சுமார் 80,000 பேர் பலியான இரண்டு கிளர்ச்சிகளை 1971, 1989 இல் முன்னெடுத்த ஜேவிபி தொழில்சார் குழுக்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தன்னை தேசிய மக்கள் சக்தி என அழைக்கின்றது. விக்கிரமசிங்க இணங்கிய கடன் உடன்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியதன் மூலம் திசநாயக்க அவர் சீர்திருத்தங்களை கைவிடமாட்டார் என்ற வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என தெரிவிக்கின்றார் பர்ஹான். அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானது முதல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைசுட்டி 16.65 வீதம் முன்னோக்கி நகர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய அயல்நாடான இந்தியா இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய சீனா ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுகளை இலங்கை ஜனாதிபதி பேணியுள்ளார். இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் உள்ள 22 மில்லியன் மக்களை கொண்ட பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் ஆதரவை செல்வாக்கை பெறுவதற்கு இந்தியாவும் இலங்கையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்புகள் 7 மணிக்கு ஆரம்பமாகும். 225 தேர்தல் ஆசனங்களிற்காக 8880 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தல்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வாக்காளர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்டதை விட(80) வாக்களிப்பு குறைவாக காணப்படலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. சில எதிர்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்க்கும்போது முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக தோன்றுகின்றது என்கின்றார் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கட்சிக்கு கடந்த தேர்தலில் மூன்று ஆசனங்களே கிடைத்தன. ஆனால் இம்முறை சிறிய சவாலை கூட அந்த கட்சி எதிர்கொள்ளவில்லை. எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என தெரிவிக்கும் ரோகன ஹெட்டியாராச்சி தேர்தல் பிரச்சாரம் கடந்த காலங்களை போல இல்லாமல் மிகவும் அமைதியானதாக காணப்பட்டது என குறிப்பிடுகின்றார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவ ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பதுடன் மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் என்ற கௌரவ பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகின்றார் என துமிந்த குலங்கமுவ தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின்படி நஸ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை சீர்திருத்தவேண்டும் மானியங்களை வரிச்சலுகைகளை நிறுத்தவேண்டும். சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி நுண்பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் கொள்கை என தெரிவிக்கும் துமிந்த குலங்கமுவ அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை காண்பதற்கு ஜனாதிபதி விரும்புகின்றார் என தெரிவிக்கின்றார். https://www.virakesari.lk/article/198526
  5. அண்ணை, நீங்கள் உங்கள் பல்கலைத் தோழருக்கு வாக்களித்துள்ளீர்கள்!!
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது (கோப்புப் படம்) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவெடுத்ததை அடுத்து, தமிழ்நாட்டிற்கு இன்று (செவ்வாய், நவம்பர் 12) முதல் வரும் 18-ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் பெருங்குடியில் 78.9மிமீ மழை பதிவாகியுள்ளது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய், நவம்பர் 12) காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனவே தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய், நவம்பர் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு எப்போது மழை பெய்யும்? இன்று (செவ்வாய், நவம்பர் 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றார். அடுத்துவரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றார். “நாளை (புதன், நவம்பர் 13) சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிள் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது,” என்றார். “அடுத்த 24 மணிநேரங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்'' அதேபோல், “டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்,” என்றார். 14-ஆம் தேதி, வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது எனவும் 15-ஆம் தேதி, தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார். மீனவர்கள் அடுத்துவரும் இரண்டு தினங்களுக்குக் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுவதாக அவர் கூறினார். படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் (கோப்புப் படம்) வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (திங்கள், நவம்பர் 11) உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய், நவம்பர் 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் சமயத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (செவ்வாய், நவம்பர் 12), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (புதன், நவம்பர் 13), மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களோடு சேர்த்து மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்? நவம்பர் 14-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15-ஆம் தேதி மேற்கண்ட மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, திருப்பூர் தவிர்த்து) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 16, 17-ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,@CHENNAICORP படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னையில் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை குறிப்பிட்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “மழை நீரை அகற்ற 1494 மோட்டார் பம்புகள், 158 அதி விரைவு நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் மாதம் பெய்த மழையின் கருத்தில் கொண்டும் கூடுதல் மோட்டார்களை நிறுவி இருக்கிறோம். சென்னை மாநகராட்சி சார்பில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயாராக உள்ளன. அக்டோபர் மாதத்தில் 95ஆக இருந்தது, தற்போது அதன் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறோம்.” என்று கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து புகார்களுக்கும் மற்றும் உதவிகளுக்கும் 1913 உதவி எண்ணை அழைக்கலாம் என்றும், மழைக்காலத்தில் பழுதடைந்த அல்லது வலுவிழந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மழைக்காலத்தில் பழுதடைந்த அல்லது வலுவிழந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்றும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது மழை படிப்படியாக குறையும் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் கூடுலாக மழை பெய்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார். “மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும். பூண்டி, செம்பரம்பாக்கம் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் என்று நம்புவோம்,” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cgej5wyn3x1o
  7. கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 20ம் திகதி வரை விளக்கமறியல்! எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும் எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடத்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களை எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198545
  8. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198542
  9. இலங்கை என்பியல் சங்கத்தின் தலைவராக கோபிசங்கர் பதவியேற்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024-2025ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றுள்ளார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலை யாழ். போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார். https://tamilwin.com/article/new-post-for-jaffna-doctor-gopi-shankar-1731408629#google_vignette
  10. கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. விசிட்டர் வீசா அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய நடைமுறை எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்டு கால வீசா அனுமதி வழங்கப்படாது எனவும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் விண்ணப்பங்களும் தனிப்பட்ட ரீதியில் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வீசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், என்ன காரணத்திற்காக அவர்கள் வருகை தருகிறார்கள், அவர்களது நிதிநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/canada-multiple-entry-visas-1731399459#google_vignette
  11. அண்ணை, அப்ப கள்ள வாக்கு போட்டிட்டாங்களோ?!
  12. ஏனண்ணை இந்தக் கொலவெறி! வன்முறைகளில் மிகமிக குறைவாக அல்லது அறவே ஈடுபடுவதில்லை இப்பகுதி மக்கள், சமீபகால வாள்வெட்டுக் குழு செய்திகளில் எப்பவாவது பார்த்திருக்கிறீர்களா?
  13. இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ! செய்தி & கேமரா - ஷாகித் ஷேக் வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c704jkpj4nro
  14. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை (14) காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகளை நாளைய தினம் புதன்கிழமை படகுகள் மூலம் உத்தியோகஸ்தர்கள் எடுத்து சென்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உலங்கு வானுர்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198524
  15. எனக்கு செய்தி பார்த்து தான் கூட்டம் பற்றி தெரியும் அண்ணை! மேலுள்ள காணொளியில் ஒருத்தர் கேக்கிறார், சரியாக விளங்கவில்லை. போனமுறை தும்புபறக்க ஒருத்தர் கேட்டவர், இப்ப அவர் உயிரோடை இல்லை. ஐயையோ சத்தியமாக எனக்குத் தெரியாதண்ணை. எஸ்கேப்....
  16. அண்ணை அரசு ஊரடங்கு அறிவிப்பது போலவா?!
  17. யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்துக்கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வசாவிளான் மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றப்ட்டுள்ளது. மானிப்பாய் தொகுதியில் தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இல 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது. உடுப்பிட்டி தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டித்றை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ் கலவன் பாடசாலை மண்டப இல 1 இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் ஶ்ரீ வீரமா பிடாரி அம்பாள் ஆலய மண்டபத்திற்கும், நாவலர் கலாச்சார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாச்சார மண்டபத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198521
  18. ஊடகங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு அவதானிக்கும் - கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் அபிலாஷனி லெட்சுமன் தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்படும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ரஷ்யா, பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 10 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் இதுவரையில் சிறப்பான முறையில் காணப்படுவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது பணிகள் தொடர்பிலான விளக்கங்களையும் தேர்தல் நடைமுறை கண்காணிப்பு தொடர்பிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி இதன்போது மேலதிக தகவல்களை வழங்கினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சிவில் சமூக அமைப்புகள், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் அடிப்படையில் இதுவரையில் தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை நாம் அறிந்து கொண்டோம். கடந்த ஜனாதிபதி தேர்தலை போன்று அமைதியான முறையில் தற்போது இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலும் அவ்வாறு இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இங்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினால் தேர்தலுக்கு முதல் நாள், தேர்தல் தினத்தன்று, வாக்கு எண்ணும் பணி மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தினம் ஆகிய நான்கு விடயங்களையும் கண்காணிப்பு செய்யவுள்ளோம். இலங்கைக்கு வருகை தந்துள்ள எமது சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினால் நுவரெலியா, யாழ்பாணம், பதுளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை, மாத்தளை, பொலன்னறுவை, கொழும்பு மற்றும் மாத்தறை போன்ற 10 பிரதேசங்களில் தமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் போன்றவை தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேற்கூரிய விடயங்களை தொகுத்து ஆராய்ந்து தேர்தல் நிறைவடைந்த பின்பு தேர்தல் தொடர்பிலான எமது அறிக்கையினை வெளியிடுவதுடன் தொடர்ந்தும் தேர்தல் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதோடு வாக்களிக்கும் நடவடிக்கைகளும் சிறப்பாக இடம்பெறவேண்டும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198509
  19. பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றைய தினம் வர முடியாது எனவும், அதற்கு மாறாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒரு திகதியை ஒதுக்கினால் தன்னால் வர முடியும் எனவும் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198513
  20. சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் நிதர்ஷன் வினோத் வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அவரை அனுப்பி வைத்தனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரனின்-கூட்டத்தில்-குழப்பம்/175-346983
  21. எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு; வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்டரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டிடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செய்ய முடியும். வாக்கை அடையாளமிட முடியாதவர்களுக்கு வாக்குச் சீட்டிற்கு வழிகாட்டும் தொடுகை சட்டகம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல். தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குச் செல்லுபடியான அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க முடிந்தமை. வாக்கெடுப்பு நிலையத்தின் வளாகத்தில் காட்சிப்படுத்தப்படுகின்ற அறிவித்தல்களைச் சைகை மொழி மூலமான உருவப் படங்களுடன் காட்சிப்படுத்தல். தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் போது சைகை மொழிபெயர்ப்புடன் வெளியிடல். https://www.virakesari.lk/article/198532
  22. நடுவில இருக்கிற தம்பி அடுத்த தவிசாளருக்கு முயல்கிறார் போல! அவர் தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருப்பார். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்
  23. நல்ல விடயம். ஆறுதலுக்கு பேச்சுத் துணைக்கு மனிதர்கள் தேவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.