Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இணைய வழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது இணையவழி ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/198235
  2. சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார். எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி. டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் 4வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு புறம் சீனியர் வீரர்கள் அடங்கிய இந்திய அணி டெஸ்ட் போட்டியில் உள்நாட்டில் நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆகி, மோசமான வரலாற்று தோல்வியைப் பதிவு செய்த நிலையில், இளம் இந்திய அணி அதிரடி வெற்றியைப் பெற்றுள்ளது. சாம்ஸின் பேட்டில் பறந்த சிக்ஸர்கள், பவுண்டரிகள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்டர் என பெயரெடுத்த சஞ்சு சாம்ஸன்(107) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பின், தொடர்ச்சியாக சாம்ஸன் அடித்த 2வது டி20 சதமாகும். சாம்ஸன் தொடர்ச்சியாக அடித்த 2வது சதமாகும். 27 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சாம்ஸன், 47 பந்துகளில் சதத்தை அடைந்தார். சாம்ஸன் கணக்கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். பவுண்டரி, சிக்ஸர் வகையில் மட்டுமே சாம்ஸன் 88 ரன்களை சாம்ஸன் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் இந்திய அணி 202 ரன்களைச் சேர்த்ததில் பெரும்பாலும் சிக்ஸர், பவுண்டரிகள் முக்கியக் காரணம். இந்திய அணித் தரப்பில் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 13 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. இதில் 10 சிக்ஸர்களை சாம்ஸன் மட்டும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களான மார்க்ரம், கேசவ் மகராஜ், பீட்டர் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சாம்ஸன் 27 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்தார். அது மட்டுமல்லாமல் கேப்டன் சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 37 பந்துகளில் 66 ரன்கள், திலக் வர்மாவுடன் இணைந்து 34 பந்துகளில் 77 ரன்கள் என முக்கிய பார்ட்னர்ஷிப்பை சாம்ஸன் அமைத்துக் கொடுத்து, ரன் சேர்ப்புக்கு உதவினார். ஒட்டுமொத்தத்தில் சாம்ஸனின் அபாரமான ஆட்டம், இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை. இந்திய அணியில் சாம்ஸன் தவிர்த்து கேப்டன் சூர்யகுமார்(21), திலக் வர்மா(33) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர். திலக் வர்மா களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்றார். அதிரடியாகவே பேட் செய்த திலக் வர்மா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி 183 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கேப்டன் சூர்யகுமார் கடைசியில் சொதப்பிய பேட்டர்கள் உண்மையில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும். சாம்ஸன் ஆட்டமிழந்தபோது 16-வது ஓவரில் இந்திய 175 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால், 250 ரன்களை இந்திய அணி எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த 28 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும். ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர்படேல், ரவி பிஸ்னோய் விரைவாக ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்துவிட்டது. கடைசி 20 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவி பிஸ்னோய் வருண், பிஸ்னோய் கலக்கல் பேட்டிங்கிற்கு சாதகமான கிங்ஸ்மெட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் பதிலடி கொடுப்பார்கள், வலுவான நடுவரிசை பேட்டிங் இருக்கிறது என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு முன் சொதப்பலாக பேட் செய்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய் இருவரும் 8 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆவேஷ்கான் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் அதிரடியாக அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி மிரட்டிய நிலையில் அடுத்த பந்தை ஸ்விங் செய்து மார்க்ரமை வெளியேற்றி நம்பிக்கையளித்தார். அதன்பின், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(11), விக்கெட்டை ஆவேஷ்கான் வீழ்த்தி வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அதன்பின் வருண் சக்ரவர்த்தி, பிஸ்னோய், அக்ஸர் படேல் ஆகியோர் சேர்ந்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களை பிழிந்து எடுத்தனர். குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே ஆபத்தான பேட்டர் ரெக்கெல்டான்(21) விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் முதுகெலும்பை உடைத்தார். அதன்பின் ஆபத்தான பேட்டர்கள் கிளாசன்(25) டேவிட் மில்லர்(18) விக்கெட்டையும் வருண் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் சுவாசத்தை பாதியாகக் குறைத்தார். கடைசி வரிசை பேட்டர்களான குர்கர்(1), யான்சென்(12), சமிலேன்(6) ஆகியோரின் விக்கெட்டுகளை பிஸ்னோய் வீழ்த்தவே தென் ஆப்பிரிக்கா தோல்வியில் விழுந்தது. கடைசி நேரத்தில் கோட்ஸி அதிரடியாக 3 சிக்ஸர்களை அடித்து 23 ரன்கள் சேர்த்தார்,. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் பவர்பளேயில் 3 விக்கெட் பவர்ப்ளே ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என தள்ளப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணியில் எந்த பேட்டரும் 30 ரன்களைக் கூட எட்டவில்லை. கிளாசன் சேர்த்த 25 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான நடுவரிசை, டாப்ஆர்டர் பேட்டர்ள் வைத்திருந்தும் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது வியப்பாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த தவறுகளைக் கூட தங்களுக்கு சாதகமாக மாற்றி ரன் சேர்க்ககூட தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் முயலாதது வேதனைக்குரியதாகும். ஆவேஷ்கான் வீசிய பல பந்துகள் ஓவர் பிட்சில் வந்தபோதும் அதை சிக்ஸர்களாக மாற்ற முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் வீணடித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்க்ரம் அவுட்டாகி வெளியேறுவதை இந்திய வீரர்கள் கொண்டாடுகின்றனர் தொடரும் மார்க்ரம் மோசமான ஃபார்ம் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் மார்க்ரமின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 25 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 7-வது முறையாக மார்க்ரம் தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரிய சுமையாக இருந்து வருகிறது. அர்ஷ்தீப் பந்துவீச்சில் அதிரடியாக 2 பவுண்டரிகளுடன் தொடங்கிய மார்க்ரம், அடுத்த பந்தில் மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரெக்கெல்டான், ஸ்டெப்ஸ் ஆகியோரும் பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஐபிஎல் டி20 தொடரில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் நடுவரிசை, கீழ்வரிசையில் இறங்கி ஃபினிஷர் ரோலில் பேட் செய்யக்கூடியவர். ஆனால், இந்த ஆட்டத்தில் அவரை 3வது வீரராகக் களமிறக்கி, தென் ஆப்பிரிக்கா பரிசோதித்தது தோல்வியில் முடிந்தது. டி20 போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும் கிளாசன், மில்லரும் விரைவாக விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்காவை தோல்வியை உறுதி செய்தது. தென் ஆப்ரிக்காவின் பலவீனமான பந்துவீச்சு தென் ஆப்பிரிக்க அணி என்றாலே வலுவான பந்துவீச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். ஆனால், அது நேற்றைய ஆட்டத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 7 பந்துவீச்சாளர்களை கேப்டன் மார்க்ரம் பயன்படுத்தியும் இந்திய ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வந்த கோட்ஸி 3 விக்கெட்டுகளை சாய்த்தாலும், ஓவருக்கு 9 ரன்களை வாரி வழங்கினார். யான்சென் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். மற்ற வகையில் சுழற்பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் பலவீனமாகவே காட்சி அளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சாம்ஸன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு எடுப்பதால் கிடைத்த தொடக்க வீரர் இடத்தை சஞ்சு சாம்ஸன் நன்றாக பயன்படுத்தி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சதம் அடித்த சாம்ஸன், தொடர்ந்து அந்நிய மண்ணிலும் சதம் அடித்தார். இலங்கைக்கு எதிரான தொடரிலும் 2 போட்டிகளில் சொதப்பினாலும், 3வது ஆட்டத்திலும் சாம்ஸன் அற்புதமாக பேட் செய்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சாம்ஸன் கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். அணியில் சாம்ஸனுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், ஷாட்களை தேர்ந்தெடுத்த ஆடுவதில் கட்டுபாடின்மை, விருப்பமான இடத்தில் பேட் செய்வது போன்றவை சாம்ஸனின் ஆட்டத்தை மெருகூட்டியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன்ஷிப் இவ்வளவு எளிமையா? வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் “ நாங்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகவே விளையாடுகிறோம், எங்களின் பிராண்ட் கிரிக்கெட்டை மாற்றவில்லை. சாம்ஸனின் ஆட்டம் மகிழ்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. சாம்ஸன் எப்போதுமே தன்னுடைய சொந்த ஸ்கோரைவிட, அணியை முன்னிலைப்படுத்தி அணிக்காக விளையாடக்கூடியவர். அவர் 90 ரன்களில் இருந்தாலும் சாம்ஸன் வாய்ப்புக் கிடைத்தால் சிக்ஸர் அடிப்பாரே தவிர சதம் அடிக்க முயலமாட்டார். மற்றவர்களிடம்இருந்து தனித்து சாம்ஸன் தெரிய இதுவே காரணம். முக்கிய கட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனை. வரும், பிஸ்னோய் பந்துவீச்சு அற்புதம். கேப்டன்சி செய்வதை என் அணியினர் எளிமையாக்கி வருகிறார்கள். அச்சமில்லாத மனநிலை, ஒருங்கிணைந்த ஆட்டம், ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் களத்திலும், வெளியிலும் இருப்பது என் பணியை மேலும் சுலபமாக்குகிறது. நாங்கள் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் கவலையில்லை, அச்சமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். இது டி20 கிரிக்கெட். விக்கெட்டை இழந்தாலும் 17 ஓவர்களுக்குள் 200 ரன்களை எட்டலாம்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckgdjvxepdvo
  3. பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198223
  4. தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப் களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
  5. ஆஸி. மண்ணில் 7 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சர்வதேச ஒருநாள் முதலாவது வெற்றி (நெவில் அன்தனி) அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சகலதுறைகளிலும் விஞ்சிய பாகிஸ்தான் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. அவுஸ்திரேலிய மண்ணில் 7 வருடங்களின் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நான்கு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் 5 விக்கெட் குவியல், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு, சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 35 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 35 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. சய்ம் அயூப் 5 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 122 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்று பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தன் பலனாக அவுஸ்திரேலியா சிரமப்படாமல் வெற்றியை ஈட்டிக்கொண்டது. பாபர் அஸாம் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: ஹரிஸ் ரவூப் https://www.virakesari.lk/article/198227
  6. அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின் நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் அல்ஜாரி ஜோசப் - இரண்டு போட்டித்தடை அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப், தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது. அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார், எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை. அந்த ஓவர் முடிவடைந்ததும், அணித்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார். இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது. எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார். நாங்கள் நண்பர்களாக பழகுவோம், ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது, என அவர் தெரிவித்துள்ளார். ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை, அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார் - கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198186
  7. நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல் - பலர் கைது நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் பலமுறை தலையிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்து பிரதமர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளார். இஸ்ரேலியர்களிற்கு எதிரான மோசமான வன்முறையை தொடர்ந்து நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களை வெளியேற்றுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இஸ்ரேலிய கால்பந்தாட்ட இரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. பெருமளவு பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதிலும் இஸ்ரேலியர்கள் தாக்கப்பட்டனர் என ஆம்ஸ்டெர்டாம் மேயரும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய லீக் போட்டிகளிற்காக இஸ்ரேலின் மக்காபி டெல் அவியின் இரசிகர்கள் நெதர்லாந்திற்கு சென்றிருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் - போட்டிக்கு முன்னதாகவே மக்காபி டெல் அவியின் இரசிகர்களிற்கும் பாலஸ்தீனிய ரசிகர்களிற்கும் இடையில் மோதலும் குழப்பமும் காணப்பட்டது பலர் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய கழகத்தின் ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளை கிழித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198182
  8. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர். வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர். எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கியமானவையாக காணப்பட்டன. அந்த தேர்தலிலேயே முதலாவது ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டார். ரொய்ட்டருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 25க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களில் அனேகமானவர்கள் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் சமஸ்டிபன்முகத்தன்மை மற்றும்உ உள்வாங்கல் திட்டங்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் சிவில் உரிமைகள் பறிபோகலாம் என கறுப்பினத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். டிரம்ப் பயன்படுத்திய இனவெறி மற்றும் பாலியல் மொழி குறித்து கறுப்பின மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். விஸ்கொன்சினை சேர்ந்த ஒக்கிறீக்கின் 72 வயது ஓய்வுபெற்ற தாதியான மேரி ஸ்பென்செர் டிரம்பின் வெற்றியால் அதிர்ச்சியடைந்துள்ளார். கறுப்பினத்தவர்கள் குறித்த டிரம்பின் கருத்து ஆதிக்கமனோபாவத்தை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அவர் எங்களை பற்றி என்ன நினைக்கின்றார் என்றால்- நாங்கள் கறுப்பினத்தவர்கள்,சட்டவிரோத குடியேற்றவாசிகள் செய்கின்ற வேலையை செய்ய முயல்கின்றோம் என நினைக்கின்றார், திறமையும் கல்வியறிவும் அவசியமற்ற வீட்டுவேலை போன்றவற்றை நாங்கள் செய்கின்றோம் என அவர் நினைக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் கறுப்பின ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை டிரம்ப் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின் வேலைகளை கைப்பற்றுகின்றனர் என தெரிவித்திருந்தார். ஹரிஸ் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்,இனரீதியான சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கறுப்பின தொழில்முனைவோரான 51 வயது கட்ரீன ஹோம்ஸ் அவருக்கு வாக்களித்திருந்தார். அவரது கொள்கை நிகழ்ச்சி நிரல் - உரை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களி;ற்கு டிரம்பின் வெற்றி பாதிப்பை ஏற்படுத்தும், என்கின்றார் கட்ரீனா ஹோம்ஸ். பிரிவினை உணர்வு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி குறித்தும்,தங்கள் சமூகஅமெரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவர்களிற்கும் டிரம்பி;ன் வெற்றி உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பெண்கள் பாலின கற்கைநெறியின் இயக்குநர் நடியா பிரவுன் தெரிவித்துள்ளார். அவரது சொல்லாட்சிகள், இனவெறி மற்றும் இனவெறி கருத்துக்கள் அனைத்தும் கவனத்தை சிதறடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரிணியின் வருகைக்கான களத்தை உருவாக்க பலமாதங்களாக பாடுபட் கறுப்பின மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் இது இனசமத்துவத்திற்காக இன்னமும் தீவிரமாக கடுமையாக போராடுவதற்கு தங்களை உக்குவிக்கும் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் அனைத்தையும் மீள பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை தடுப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் அணிதிரளப்போகின்றோம் என கறுப்பின பெண்களுடன் வெற்றிபெறுங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்த ஜொடாகா ஈடி தெரிவித்துள்ளார். நாங்;கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198164
  9. பட மூலாதாரம்,ROOP SINGH MEENA எழுதியவர், மோகர் சிங் மீனா பதவி, பிபிசி ஹிந்தி, ஜெய்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் 77 புலிகள் இருந்தன. அதில் காணாமல் போன 25 புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழு அமைப்பதற்கான உத்தரவு, ராஜஸ்தானில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, இந்தக் காப்பகத்தில் இருந்து 25 புலிகள் எப்போது, எப்படிக் காணாமல் போயின என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விசாரணைக் குழு அமைக்கப்பட்ட மறுநாளே, வனத்துறையினர் பத்து புலிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ராஜஸ்தானின் முதன்மை உயர் வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய், "கடந்த ஓராண்டுக்குள் காணாமல் போன 14 புலிகளில் 10 புலிகள் நவம்பர் 5-ஆம் தேதி கண்காணிப்புக் கேமராவின் உதவி கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று பிபிசியிடம் கூறினார். “மீதமுள்ள 4 புலிகளையும் கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம். மேலும் ஓராண்டுக்கு முன்பு 11 புலிகள் இங்கிருந்து காணாமல் போனது குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தும்,” என்றார். விசாரணை குழு ஏன் அமைக்கப்பட்டது? ராஜஸ்தானின் முதன்மை தலைமை வன பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய் நவம்பர் 4-ஆம் தேதி அன்று இந்த விசாரணைக் குழுவை அமைத்தார். புலிகள் கண்காணிப்பு பற்றிய பதிவுகளில் நீண்ட நாட்களாகவே புலிகள் காணாமல் போவது குறித்த தகவல்கள் வருவதாக விசாரணைக் குழு அமைக்கும் உத்தரவில் பவன்குமார் உபாத்யாய் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் பகுதி இயக்குனருக்கு கோரிக்கை வைத்தும் எந்த விதமான திருப்திகரமான மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி அன்று தலைமையகத்திற்குக் கிடைத்த கண்காணிப்புப் பதிவுகளை மேற்கோள் காட்டி, ஓராண்டுக்கு மேலாகியும், காணாமல்போன 11 புலிகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று உபாத்யாய் கூறினார். இத்துடன் கடந்த ஓராண்டுக்குள் காணாமல் போன 14 புலிகள் பற்றியும் எந்த ஒரு தகவலும் தெரியவில்லை, அதனால் தான் காணாமல் போன அனைத்து புலிகளையும் தேட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என்றார். பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, ராஜஸ்தானின் முதன்மை தலைமை வன பாதுகாவலரும் (வனவிலங்கு), தலைமை வனவிலங்கு காப்பாளருமான பவன் குமார் உபாத்யாய் நவம்பர் 4 ஆம் தேதி அன்று இந்த விசாரணை குழுவை அமைத்தார். விசாரணைக் குழு எவ்வாறு செயல்படும்? இந்தக் குழுவிற்குக் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராஜேஷ் குப்தா தலைவராக உள்ளார். மேலும், ஜெய்பூர் வன பாதுகாவலர் டி மோகன்ராஜ் மற்றும் பாரத்பூர் துணை வன பாதுகாவலர் மனாஸ் சிங் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். “நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்து விசாரணையை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து, பின்னர் களத்திற்குச் செல்வோம். காணாமல் போன புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தீவிர கண்காணிப்பு செய்வோம். ஏற்கனவே களத்தில் உள்ள அதிகாரிகளும் இதில் பணியாற்றுவார்கள். இந்தக் குழு இதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட இருக்கிறது,” என்று அவர் பிபிசி-யிடம் கூறினார். “அனைத்துப் பதிவேடுகளையும் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு என்னென்ன மேம்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்,” என்றார். “புலி என்பது ஒரு உயிரினம், நாங்கள் அவற்றைக் கண்காணிப்போம். இதுவரை பத்து புலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு செய்யப்பட்டு, வருங்காலத்தில் எல்லா புலிகளும் கண்டுபிடிக்கப்படும் என்று உறுதியாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். பொதுவாக மழை பெய்யும் போது புலிகளைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காது. எனவே, களத்தில் இறங்கி விசாரணை நடத்துவதே சிறந்தது என்று அவர் தெளிவுபடுத்தினார். புலிகள் காணாமல் போன உடனே அவற்றைக் கண்டுபிடிக்க ரந்தம்பூர் காப்பகத்தின் பிராந்திய இயக்குநர் மற்றும் துணை பிராந்திய இயக்குநர் ஆகியோர் என்ன முயற்சிகள் மேற்கொண்டனர் என்பது குறித்து விசாரணை குழு தகவல்களை சேகரிக்கும் என்றும் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு, புலிகள் கண்காணிப்பு குறித்த அனைத்துப் பதிவுகளையும் ஆய்வு செய்து, இதில் ஏதேனும் அதிகாரி அல்லது ஊழியரின் கவனக்குறைவு உள்ளதா என்பதை கண்டறியும். புலிகள் கண்காணிப்பு அமைப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கான ஆலோசனைகளையும் விசாரணைக் குழு வழங்கும். பட மூலாதாரம்,ROOP SINGH MEENA படக்குறிப்பு, மூன்று வழிமுறைகளிலும் ஒரு புலி நீண்ட நேரம் கண்காணிப்பில் வரவில்லை என்றால், அது காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. புலிகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன? புலிகளைக் கண்காணிக்க வனத்துறை மூன்று வகையான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த மூன்று வழிமுறைகளிலும் ஒரு புலி நீண்ட நேரம் கண்காணிப்பில் வரவில்லை என்றால், அது காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. “காப்பகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும், அவற்றின் கால்தடங்கள் மூலமாகவும் புலிகளின் எண்ணிக்கையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று பவன் குமார் உபாத்யாய் பிபிசி-யிடம் கூறுகிறார். "இது பருவமழைக் காலம், இதனால் புலிகள் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன, இதனால் அவற்றைக் கண்காணிக்க முடியவில்லை. காணாமல் போன 25 புலிகளில் பத்து புலிகள் கேமராக்களில் கண்காணிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புலிகள் கூட காப்பகத்தில் எங்காவது இருக்கும். விரைவில் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் உறுதி கொண்டுள்ளார். “மழைக் காலங்களில் கேமராக்கள் சரியாக வேலை செய்யாது, அவற்றைக் கொண்டு புலிகளைக் கண்காணிக்க முடியாது,” என்று தர்மேந்திர கண்டல் கூறுகிறார். பட மூலாதாரம்,ROOP SINGH MEENA படக்குறிப்பு, காட்டில் ஒரு புலி பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகள் வரை வாழ்கிறது புலிகள் எப்படி காணாமல் போகின்றன? தர்மேந்திர கண்டல், 'டைகர் வாட்ச்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 22 ஆண்டுகளாக ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். “10 புலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 15 புலிகளைக் காணவில்லை,” என்று அவர் புகாரளிக்கிறார். காட்டில் ஒரு புலி 15 முதல் 17 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ள 11 புலிகளில், பெரும்பாலானவை 20 வயதுக்கும் மேலானவை என்று அவர் குறிப்பிட்டார். "இவ்வளவு ஆண்டுகள் புலிகளால் வாழ முடியாது. இந்தப் புலிகளின் உடல் கிடைக்காததால், அவற்றை காணவில்லை என்றும் அறிவித்துள்ளனர்," என்றார். “இதற்கு முன்பும் ரந்தம்பூரில் புலிகள் காணாமல் போயுள்ளன. ஆனால், அந்த புலிகள் உண்மையாக காணாமல் போயின. ஆனால், இப்போது புலிகளைக் கண்காணிக்க முடியாததால் அவை காணவில்லை என்று கூறப்பட்டு வருகின்றன. வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது,” என்று தர்மேந்திர கண்டல் வனத்துறையினரின் மீது கேள்வி எழுப்புகிறார். “புலிகளுக்கு இடையே சண்டை ஏற்படுவதால், சில புலிகள் இறக்கின்றன, அவற்றின் உடல்கள் கிடைக்காததால் கூட, அவை காணாமல் போனதாக அறிவிக்கப்படுகின்றன," என்று அவர் கூறினார். “ஒரு புலி கிணற்றில் விழுந்து அல்லது நோய்வாய்ப்பட்டு குகையில் இறந்ததாக கருதினால்கூட, அதைக் கண்காணிக்க முடியாது,” என்று வனவிலங்கு நிபுணர் சதீஷ் ஷர்மா கூறுகிறார். “சைபீரியாவில் இருந்து பறவைகள் இங்கு வந்து, மீண்டும் சைபீரியாவிற்கே திரும்பிச் செல்கின்றன. அது வான்வழி இடம்பெயர்வு. அதேபோல், புலிகள் நிலத்தில் இடம்பெயர்வதும் நிகழ்கிறது. இதை அதிகாரிகள் புலிகள் ‘காணாமல் போனதாகக்’ கருதுகின்றனர். புலிகள் இடம்பெயர்வது ஒரு இயல்பு,” என்று அவர் குறிப்பிட்டார். உணவு, பாதுகாப்பு, பெண் புலிகளைத் தேடிசெல்வது போன்ற காரணங்களுக்காகப் புலிகள் இடம்பெயர்கின்றன. புலிகள் வெளிவந்தால் மட்டுமே வனத்துறை அதிகாரிகளால் கண்காணிக்க முடியும். அதற்கு நேரம் எடுக்கும்,” என்று சதீஷ் ஷர்மா கூறுகிறார். பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு, இந்தியாவின் 53 புலிகள் காப்பகங்கள் 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் பரந்துள்ளன. இந்தியாவில் எவ்வளவு புலிகள் உள்ளன? கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகளின்படி, இந்தியாவில் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவின் 53 புலிகள் காப்பகங்கள் 75,000 சதுர கி.மீ., நிலப்பரப்பில் பரந்துள்ளன. 2006-ஆம் ஆண்டு நடந்த முதல் கணக்கெடுப்பின் போது, இந்தியாவின் புலிகள் காப்பகங்களில் 1,411 புலிகள் இருந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 3,682 புலிகள் உள்ளன. 2018-ஆம் ஆண்டில், புலிகளின் எண்ணிக்கை 2,967-ஆக இருந்தது, இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 24% அதிகரித்துள்ளது. இந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் மத்திய பிரதேசத்தில் (526) உள்ளன. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தராகண்டில் 442 புலிகளும், மகாராஷ்டிராவில் 312 புலிகளும் உள்ளன. ராஜஸ்தானில் நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. அங்கு 91 புலிகள் இருக்கின்றன. ரந்தம்பூரில் அதிகபட்சமாக 77 புலிகள் உள்ளன. பட மூலாதாரம்,ROOP SINGH MEENA படக்குறிப்பு, ரந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கு ஒட்டியுள்ள கிராமத்தில் சமீபத்தில் புலி ஒன்று இறந்தது, அதன் இறுதிச் சடங்குகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன புலிகளின் இறப்பு புலிகளின் உயிரிழப்பு ராஜஸ்தான் வனத்துறையினருக்கு சவாலாக உள்ளது. சமீபத்தில், நவம்பர் 3-ஆம் தேதி அன்று ரந்தம்பூரில் ஒரு புலி இறந்தது. ரந்தம்பூர் காப்பகத்தை ஒட்டியுள்ள உலியானா கிராமத்தில் இந்தப் புலி இறந்து கிடந்தது. அந்தப் புலியின் உடல், முகம் உட்பட பல இடங்களில் காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் கண்டறியப்பட்டது. மனிதர்கள் தாக்கியதால் இந்தப் புலி இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன்பும், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புலிகள் இறந்து கிடந்துள்ளன. புலியின் குறியீட்டு எண்: 57, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இறந்துள்ளதாகவும், புலி எண்:114 மற்றும் அதன் குட்டி ஜனவரி 31-ஆம் தேதி அன்று இறந்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. புலி எண்: 19, பிப்ரவரி 9-ஆம் தேதியும், புலி எண்: 104, மே 10-ஆம் தேதியும், புலி எண்: 79, செப்டம்பர் மாதமும், புலி எண்: 69, டிசம்பர் 11-ஆம் தேதியும் இறந்துள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டில், புலி எண்:99, பிப்ரவரி 3-ஆம் தேதியும், புலி எண்: 60 மற்றும் அதன் குட்டி, பிப்ரவரி 4-ஆம் தேதி அன்றும், புலி எண்:58, ஜூலை 7-ஆம் தேதியும் இறந்துள்ளன. “புலிகள் இறப்பதற்கு விஷம் வைப்பதும் ஒரு காரணம். ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 வீட்டு விலங்குகளைப் புலிகள் சாப்பிடுகின்றன. இந்த விலங்குகளுக்கான இழப்பீடும் மிகக் குறைவாகவே இருக்கிறது,” என்று தர்மேந்திர கண்டல் கூறுகிறார். “கிராம மக்கள் புலியைக் கொன்று புதைத்த வழக்குகள் பலமுறை நடந்துள்ளன. இது யாருக்கும் தெரியவருவதில்லை. இந்தப் புலிகளும் காணாமல் போனதாகவே கருதப்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, "புலிகள் காணாமல் போவது இயற்கையான செயல்" என்று ராஜஸ்தான் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். ராஜஸ்தானில் உள்ள ராம்கர் புலிகள் காப்பகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி அன்று RVT-2 என்னும் புலி ஒன்று கொல்லப்பட்டது. பல நாட்கள் கழித்து, இந்தப் புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. "புலிகள் காணாமல் போவது இயற்கையான செயல்," என்று ராஜஸ்தான் வனத்துறையின் தலைமையகமான 'ஆரண்ய பவனில்’ உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். “பல சமயங்களில் குகைகளில் வாழும் புலிகள் தங்களுக்குள் நடைபெறும் சண்டைகளில் உயிரிழக்கின்றன. பல சமயங்களில் அவற்றின் எச்சங்கள் கிடைக்காமல் போவதாலோ அல்லது காட்டிற்குள் வெகுதூரம் செல்வதாலோ அவை கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்று அவர் கூறுகிறார். "இந்த வழக்கில் திடீரென்று விசாரணைக் குழு அமைத்ததன் பின்னணியில் அதிகாரிகள் இடையே உள்ள மோதல்கள்தான் காரணம்," என்கிறார். "இதனால்தான் காணாமல் போன 25 புலிகளைக் கண்டுபிடிக்க நவம்பர் 4-ஆம் தேதி அன்று விசாரணை குழு அமைக்கப்பட்ட அடுத்த நாளே 10 புலிகள் கண்டுபிடிக்கப்பட்டன," என்கிறார். காணாமல் போன 25 புலிகள் குறித்து விசாரணைக் குழு மூலம் புலி இறந்ததை விசாரிக்கும் வனத்துறை அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c6240n260pjo
  10. கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/tamil-iyyar-fell-off-in-toronto-in-tamil-event-1731068969
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெண் கொசுவுடனும் உறவில் ஈடுபடவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர். பெண் கொசுக்கள் தான், மக்களுக்கு நோய்களை பரப்பக் கூடியவை. அந்த கொசுக்களை முட்டை இடாமல் தடுப்பதன் மூலம், அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும். செவித்திறனை நீக்கியதால் கொசுக்களின் இனச் சேர்க்கையில் பாதிப்பு ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் எஜிப்டய் (Aedes aegypti) எனும் கொசுக்களைப் பற்றி இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கொசுக்களின் இனச் சேர்க்கை பழக்கங்களை ஆய்வு செய்தார்கள். இதன் கால அளவு சில நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே இருந்தது. பிறகு தான் மரபணுக்களை கொண்டு எப்படி இதை தடுப்பது என்று கண்டுபிடித்தனர். டி.ஆர்.பி.வி.எ. (trpVa) என்ற புரதத்தை அவர்கள் குறிவைத்தனர். இந்த புரதம் தான் கொசுக்களின் செவித்திறனுக்கு முக்கியமானது. மரபணு மாற்றம் பெற்ற கொசுக்கள், அவற்றின் இணையின் இறக்கை சத்தத்திற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. அந்த சத்தம் கேட்கமுடியாத அவற்றின் காதுகளில் விழுந்தது. இதற்கு மாறாக, மரபணு மாற்றம் பெறாத கொசுக்கள் பல்வேறு முறை உடலுறவில் ஈடுபட்டு அந்த கூண்டில் இருந்த அனைத்து பெண் கொசுக்களையும் கருத்தரிக்க செய்தன. பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட்ட கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மரபணு மாற்றம் ஏற்படுத்திய செவித்திறன் நீக்கம், கொசுக்களின் இனச்சேர்க்கையை முற்றிலுமாக தடுத்து விட்டது என்று கூறினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஸ் எஜிப்டய் கொசுக்கள் ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்புகின்றன உணவுச் சங்கிலியில் கொசுக்களின் பங்கு ஜெர்மனியிலுள்ள ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோர்க் ஆல்பர்ட், கொசுக்களின் இனப்பெருக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர். அவரிடம் இந்த ஆய்வை பற்றி நான் கேட்டேன். “கொசுக்களின் செவித்திறனை அழிப்பது கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் இதில் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.” என்று அவர் கூறினார். “இந்த ஆய்வில் வழங்கப்பட்ட முதல் நேரடி மூலக்கூறு சோதனையின் முடிவில், கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு செவித்திறன் முக்கியமானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட என்பதைக் காட்டுகிறது.” என்றார். “ஆண் கொசுக்களின் செவித்திறன் மட்டுப்படுத்தப்பட்டாலோ, அவை சத்தத்தினை கேட்டு ஈர்க்கப்படவில்லை என்றாலோ கொசுக்களின் இனமே அழிந்துவிடும்.” என்றும் ஆல்பர்ட் கூறுகிறார். கொசுக்களை கட்டுப்படுத்த மற்றொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதாவது கொசுக்களால் அதிகம் நோய்கள் பரவும் இடங்களில் மலட்டு ஆண் கொசுக்களை நாம் விட்டுப் பார்க்கலாம். என்னதான் கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், இவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சில வகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew2097719zo
  12. பொதுத் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு ? தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் (எம்.மனோசித்ரா) பொதுத் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும். சகல பிரசார நடவடிக்கைகளும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது. அத்தோடு வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இம்முறை இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும். ஏனைய 19 மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்கள் விநியோகிகப்படும். வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். அவ்வாறு புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும். அதன் பின்னர் தமது விருப்பத்தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன. வேட்பாளர்களது இலக்கங்கள் அடங்கிய பெயர் பட்டியல் இம்முறை வீடுகளுக்கே விநியோகிகப்பட்டுள்ளது. எனவே அதில் தாம் வாக்களிக்கவுள்ள வேட்பாளர்களது எண்களை தெளிவாக அவதானிக்க முடியும். மேலே தெரிவு செய்யப்படும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும். மாறாக ஒரு கட்சியை தெரிவு செய்து, பிரிதொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது. அவ்வாறான வாக்கு சீட்டுக்கள் நிராகரிக்கப்படும். அதே போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயாதீன குழுக்களுக்கோ வாக்களித்திருந்தால் அந்த வாக்குகளும் நிராகரிக்கப்படும். மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அந்த வாக்கும் நிராகரிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/198181
  13. பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது. எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்கும் தற்போது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கு நமது செலவினங்களில் பெரும் சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கேற்பவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும். புத்தாண்டில் பாடசாலை தொடங்கும் போது, பாடசாலை மாணவர்களுக்கு, குறிப்பாக அப்பியாச புத்தகங்களுக்கு நிவாரணம் தருவோம் என நம்புகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்…” என்றார். https://thinakkural.lk/article/311899
  14. மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டதடைகளை மீறி இந்திய ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதிவழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயில்லை என்பதால் இந்ததிட்டம் கைவிடப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னைய அரசாங்கம் மத்தல விமானநிலையத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளிக்க தீர்மானித்தது. இதற்கு அனுமதி வழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல் வடிவத்தினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர். எனினும் இலங்கையில் விமானநிலைய போக்குவரத்து அதிகாரசபைக்கு மாத்திரமே விமானநிலையங்களை முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை அரசாங்கம் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க தயாரில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குறிப்பிட்ட நிறுவனம் இந்த திட்டத்தினை முன்னெடுக்க விரும்பவில்லை. இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் நீண்டகாலமாக தொடர்புகொள்ளவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/198175
  15. முற்றுகைக்குள் திருகோணமலை இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள் ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன் சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது. 15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன. இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதும், சிங்களவர்களின் குடியேற்றத்தை அதிகரிப்பதும் இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இடம்பெறுகின்றது. இந்த புதிய ஆராய்ச்சி 2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது முதல் நில அபகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும், தமிழ் முஸ்லீம் சமூகத்தினரின் அதிகாரங்களை மேலும் பறிப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தவர்களும் இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ள தந்திரோபாயங்கள் குறித்தும் ஆராய்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதானமான தமிழ் முஸ்லீம் பிரதேசசெயலகங்களில் தீவிர நில அபகரிப்பு இடம்பெறுகின்றது. இதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகையில் சிங்களவர்கள் 27 வீதமாக காணப்படுவதுடன் 36வீதமான நிலத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். புவியியல் ரீதியில் வடக்குகிழக்கை இணைக்கும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, கடந்த பத்து வருடங்களில் மிகமோசமாக பறிபோயுள்ளது. இந்த பிரதேச செயலாளர் பிரிவில் ஆகக்குறைந்தது 41164 நிலத்தை அபகரித்துள்ளனர். இது ஒட்டுமொத்த நிலப்பரப்பின் 50 வீதமாகும். அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில்,சிங்கள விவசாயிகளை தமிழர் நிலப்பகுதிகளில் குடியேற்றும் செயற்பாட்டின் ஊடாக இதனை முன்னெடுக்கின்றனர் - இது சிங்களமயப்படுத்தல் எனப்படுகின்றது. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் உட்பட்ட பகுதிகளை அனுராதபுரத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன. சிங்கள மயமாக்கல் என்பது பௌத்த மயமாக்கலுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.- பௌத்த மயமாக்கல், என்பது குடிப்பரம்பல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான தமிழர்கள் முஸ்லீம்களின் பகுதிகளில் விகாரைகளை விஸ்தரிப்பதாகும். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அபகரித்த 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 27க்கும் மேற்பட்ட புத்தவிகாரைகளை கட்டியுள்ளனர். பல பௌத்த ஆலயங்களை அரசாங்கம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது. விகாரைகளிற்கு பௌத்தபிக்குகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் அதேவேளை இந்த பகுதிகளில் காணப்பட்ட, தமிழர்கள் வழிபாட்ட ஆதி தெய்வங்களின் ஆலயங்களை அழித்துள்ளனர். அல்லது அந்த பகுதிகளிற்கு செல்வதற்கு தடைவிதித்துள்ளனர். 2020 இல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவத்திற்காக 11 பேர் கொண்ட செயலணியை நியமித்து, தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இனம்கண்டு அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தலைமையிலான குழுவில் ஆரம்பத்தில் தமிழர்கள், முஸ்லீம்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் கிழக்கின் பெரும்பான்மை சமூகமாக காணப்பட்ட போதிலும் அவர்களை உள்வாங்கவில்லை. செயலணியில் இடம்பெற்றிருந்த இரண்டு பௌத்த மததலைவர்களில் ஒருவரான பானமுரே திலகவன்ச திருகோணமலையை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்கினார். இந்த செயலணி தற்போது செயற்படாத போதிலும், பௌத்த விகாரைகளை கட்டுவதற்காக நிலங்களை அபகரித்தல் தடையின்றி இடம்பெறுகின்றது. திருகோணாமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலத்தின் அளவு மக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வளமான விவசாய நிலங்களும், கடலோர நிலங்களும் பெருமளவில் அபகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். தங்கள் நிலங்கை மீட்டெடுப்பதற்காக வந்தவர்கள் பல சட்டசிக்கல்களை குடியேற்றவாசிகளிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கான அடிப்படை சேவைகள் மறுக்கப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அவர்களால் கிராமங்களில் வாழமுடியாத நிலை உருவாகலாம் என உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் தொடரும் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு இராணுவமயமாக்கல் குறித்த ஆதாரங்களை முன்வைப்பதுடன் வாய்மூல சாட்சிகளையும் முன்வைக்கின்றது. தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான தனது இனரீதியான ஆதிக்கத்தை தொடர்வதற்கு இராணுவமயமாக்கல் அவசியம் என இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. இதன் காரணமாக பெருமளவு இராணுவ பிரசன்னம் தொடர்கின்றது. வடக்குகிழக்கில் அதிகரிக்கும் நிலத்தகராறுகள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் ஸ்திரதன்மை இழக்கச்செய்யும் பாதிப்புகள் குறித்து தனது 2024 மார்ச் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், பிற்போக்குதனமான சட்டங்கள், ஏதேச்சதிகார அணுகுமுறைகள் போன்றவற்றால் இலங்கையில் பேண்தகு அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள, இலங்கையின் இனவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் செயற்பாடுகள் துன்பம் துயரம் அநீதி வெறுப்பு ஆகியவற்றை உருவாக்கி நாட்டில் அமைதிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை பாதிக்கின்றது. அரசாங்கம் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கும், தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அடிப்படை நில உரிமையை மதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டால் அமைதியும் நல்லிணக்கமும் சாத்தியமாகாது. அறிமுகம் இலங்கையின் இரத்தக்களறி மிக்க 26 வருடங்கள் நீடித்த அழிவை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வரவழைக்கப்பட்ட பொதுமக்கள் மீது அதன் பின்னர் இடம்பெற்ற இலங்கை படையினரின் ஈவிரக்கமற்ற குண்டுவீச்சினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதனை உன்னிப்பாக உற்றுநோக்கிய பலர் இனப்படுகொலை என்றே அழைக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் பிரிவினைவாதிகள், பெரும்பான்மை சிங்கள பௌத்த அரசாங்கத்தை எதிர்த்த இந்த மோதல், சுமார் 200,000 பேரின் உயிர்களை பறித்துடன் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச்செய்தது. இந்த மோதல் நாட்டின் உட்கட்டமைப்பை அழித்தது, இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம்களின் உயிர்கள் வாழ்வாதாரத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக - இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் ஓக்லாண்ட் நிறுவகம், தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்குகிழக்கில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளது. 2015 இல் ஓக்லாண்ட் நிறுவகம் வெளியிட்ட ஆரம்ப அறிக்கையான யுத்தத்தின் நீண்ட நிழல் - யுத்தத்திற்கு பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம், பௌத்த விகாரைகளை அமைத்தல், சுற்றுலாதலங்களை அமைத்தல், வெற்றி நினைவுச்சின்னங்களை அமைத்தல், தொல்பொருள் பாதுகாப்பு, வடக்குகிழக்கில் உள்ள சிங்களவர்களிற்கான விசேட பொருளாதார வலயம் போன்றவற்றின் மூலம்நிலம் அபகரிக்கப்படும் பல வழிமுறைகளை அம்பலப்படுத்தியது, அதன் தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகள் இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், எதிர்கொள்ளும் துன்பங்கள், நீதிக்கான அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் குறித்து பேசியது. முடிவற்ற யுத்தம்-இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் நிலம், வாழ்க்கை அடையாளம், என்ற அறிக்கை 2021 இல் வெளியானது. அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில், இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழ் சிறுபான்மையினர் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்த அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை அந்த அறிக்கை வெளியிட்டது. மேலும் வடக்குகிழக்கில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடனும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் நிலங்களை அணுகுவதை தடுக்கும் நோக்குடனும், அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் தமிழர் பகுதிகளில் அதிகரித்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அந்த அறிக்கை தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தலில் சிக்குண்டுள்ளதையும், ஆறு பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அந்த பகுதியில் இராணுவத்தினர் காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையின் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது, இலங்கை இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து இந்த பகுதியிலேயே காணப்படுகின்றது. இலங்கையில் கடந்த தசாப்தங்களில் பல ஆட்சிமாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அனைத்து அரசாங்கங்களும் வடக்குகிழக்கில் நில ஆக்கிரமிப்பு அபகரிப்பு பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் என்பவற்றை தொடர்ந்துள்ளன. தொடரும் https://www.virakesari.lk/article/198197
  16. நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அமைதி காலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் உங்களால் நடத்த முடியாது. வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கவும் முடியாது. பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் இயலுமையும் இல்லை. அமைதி காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம். எனவே அமைதிகாலத்தில் எவ்வித தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று சமூக ஊடக பிரசார நடவடிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமைதி காலத்தில் ஏதேனும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக அந்த பதிவுகளை நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/311894
  17. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
  18. பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
  19. Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்
  20. அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
  21. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  22. டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன். ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
  23. பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார். https://www.virakesari.lk/article/198152
  24. கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக் கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர். ஆனால், அவர் முன்னர் ஒருபோதும் கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு முன்னரான உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும் அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால், தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில் இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன் ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள் சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை, புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு -- செலவு திட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும். நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு, இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம். அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில் 47 சதவீதமான வாக்குகளைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது. அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம் தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம். https://www.virakesari.lk/article/198148

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.