Everything posted by ஏராளன்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் யாழில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகின்றது - அநுரகுமார ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வந்தாரா? நாம் வந்தோம். தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27,000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது. ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது. எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள். மக்களை ஒன்றிணைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம். தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது. நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது. தேர்தலுக்கு பின்னர் திசைகாட்டி அரசாங்கத்தில் இணைவேன். அமைச்சு பதவி எடுப்பேன் என சிலர் சொல்கின்றனர். அவர்கள் ஆசனங்கள் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் மக்கள் எம்முடன் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் முன்பாக பல கட்சிகள் எம்முடன் இணைய தயங்கினர். அவர்களுக்கு நாம் இப்போது சொல்வது பழைய கட்சிகள் பஸ்ஸை தவற விட்டுவிட்டனர். யாழில் புதிய அரசியல் தலைவர்கள் எழும்புகின்றனர். புதிய இளம் சக்திகள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள். பஸ்ஸை தவறவிட்டவர்களுக்கு பஸ்ஸில் இடமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் 30 வருடங்கள் தொடர்ச்சியான யுத்தம் நிகழ்ந்தது. எமது பரம்பரை யுத்தத்தில் ஈடுபட்டது. சிங்கள தமிழ் முஸ்லிம் இடையே உள்ள சந்தேகம் கோபத்தை முற்றாக ஒழித்து தேசிய மக்கள் சக்தியாக முன்னேறுவோம். எமது ஆட்சியில் சில சந்தேகங்கள் இருக்கலாம். படிப்படியாக அந்த சந்தேகங்கள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் தீரும். எல்லோரும் தமது மொழியில் கதைத்து தமது கலாசாரத்தை பின்பற்றும் நிலையை உருவாக்குவோம். தற்போதும் மூடியிருந்த பாதையை திறந்து வைத்தோம். அதுக்கு திறப்பு விழா வைத்தோமா? திறப்பதற்கு வைபவங்கள் தேவையா? அது மக்களின் உரிமை. வேறு யாரும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மூடியவரே விழா வைத்து திறந்திருப்பார். படிப்படியாக உங்கள் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் சிலர் இருக்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமாக வாழ அனைவருக்கும் உரிமை உண்டு.அப்படி ஒரு நாடு தேவை இல்லையா? 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்தேன். சரியான வறுமையில் மக்கள் வாடினார். மக்கள் ஆயிரம் வருடங்களுக்கு வாழ்வதில்லை. 70, 80 வருடங்கள் வாழ சிறந்த வசதிகள் வேண்டும். வறுமையில் அடிமட்டத்தில் இருந்த மக்களை அதிலிருந்து நாம் மீட்க விடியாவிட்டால் எந்த அரசாங்கத்தால் அதனை செய்ய முடியும். விவசாயம் செய்யுங்கள். நியாயமான விலை கொடுக்க நாம் நடவடிக்கை எடுக்கப்படும். 15,000 இலிருந்து 20,000 உர மானியம் வழங்கப்படும். உங்களுக்கு சொந்தமான கடல் வளம் முற்றிலும் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். எமது கடலில் எமது மக்கள் மீன் பிடிப்பதை நாம் உறுதி செய்வோம். யாரும் அழிப்பதற்கு இடமளிக்கமாட்டோம் சுற்றுலாவுக்கான சிறந்த கடற்கரை உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடி வடக்கில் சுற்றுலா துறையை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் வடக்கில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர். பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.சீன அரசாங்கத்தினால் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.அடுத்த வருடம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும்போது பாடசாலை உபகரணங்கள் புத்தகங்கள் வாங்க உதவி வழங்கப்படும். யுத்தத்தின் பின்னர் படிப்படியாக வடக்கில் போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி என்றனர். கேரள கஞ்சா போதைப்பொருள் வடக்கில் மிக வேகமாக பரவுகிறது. போதைப் பொருளில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்போம். இந்த போதைப்பொருளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனை நிறுத்தி மாற்ற வேண்டும். அது சவால். வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். இரசாயன பொருட்களை உற்பத்தி செய்ய பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிப்போம். சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை தொழிற்சாலை ஆகிய புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை வளர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் இலங்கையை அமைப்போம். மின் கட்டணம், நீர் கட்டணம் ,அஸ்வெசும கொடுப்பனவு, பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறல், உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவோம். மூன்று நான்கு வருடங்களுக்குள் செய்வோம். நாம் மக்களுடைய பணத்தை களவெடுப்பதா? வீணடிப்பதா? அது தான் பழைய அரசியல். அவர்கள் இன்னும் அதனை கைவிடாமல் உள்ளனர். தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி, அதிக பாதுகாப்பு அதிக செலவு கேட்கின்றார்.ஜனாதிபதி செயலகத்தில் 800ற்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்பட்டது.யாழ்ப்பாணம் டிப்போவில் இத்தனை வாகனங்கள் இல்லை. வைத்தியசாலையில் அம்புலன்ஸ் இல்லை. ஆனால் ஜனாதிபதி வீட்டில் எந்நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும். ஜனாதிபதி தனக்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியாது நிலைமையை ஏற்படுத்துவோம். யாழ்ப்பாணத்தில் மண் கொண்டுபோக பணம் கொடுக்க வேண்டும். மக்கள் பணத்தை களவெடுக்காதா புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்போம். அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்துவோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம். அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். அவ்வாறான அரசியல் தலைவர்களை நாம் உருவாக்குவோம். நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம். புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்த அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம். செப்டம்பர் 21ம் திகதி இடம்பெற்ற மாற்றம் விசித்திரமானது. சேனநாயக்கா,பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன மற்றும் விக்ரமசிங்க, பிரேமதாசா, ராஜபக்ஷ ஆகிய ஐந்து குடும்பங்களின் கையில் நாடுகளின் ஆட்சி மாறியது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் எனக்கு எதிராக போட்டியிட்டார்கள். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டார்கள்.குடும்பங்களின் கையில் இருந்த பிரபுத்துவ ஆட்சி சாதாரண குடும்பத்தின் கையில் மாறியது புரட்சி இல்லையா! இது பொது மக்களின் வெற்றி. அந்த பிரபுத்துவ குடும்பத்தினர் கஷ்டப்படுகின்றனர். பொறுத்துக்கொள்ளாது ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்கின்றனர். நான் இந்த யாழ்ப்பாணத்தில் இருந்து கூறுகிறேன். முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பகிரங்க சவால் விடுக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்த வாக்குகளின் அரைவாசியை எடுத்து காட்டுங்கள். என்னை கவிழ்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களை மக்கள் கவிழ்ப்பார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. வாக்குகள் இம்முறை கூடும். யாழ் மக்கள் திசைகாட்டி ஆட்களை அனுப்புங்கள். பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும். பாராளுமன்றுக்குள் கத்தி, மிளகாய்தூள் கொண்டுவந்து சண்டை பிடிக்கின்றனர். பாடசாலை மாணவர்களை பாராளுமன்ற கலரியில் இருந்து அகற்றுமாறு சபாநாயகர் அடிக்கடி கூறுவார். பாராளுமன்றை பார்க்க பாடசாலை மாணவர்களுக்கு தடை. மிருகக்காட்சி சாலைக்கு தடை இல்லை. இது தேர்தல் அல்ல பாராளுமன்றை சுத்தப்படுத்தும் சிரமதானம். பார் பெமிட் கொடுத்தாக கூறப்படுகிறது. அவ்வாறானவர்கள் இல்லாது பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம். ஊழல் மோசடி இல்லாமல் பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம். இந்தியா கடந்த காலத்தில் பல திட்டங்களுக்கு கடன் தந்தார்கள். அதில் சில நன்கொடையாக்கி உள்ளார்கள். நாம் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துகிறோம்.நாட்டை விட்டு பலர் வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக கல்விமான்களாக ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே? உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை. எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரே எதிர்பார்ப்பு இருக்கிறது. அது இந்த நாட்டை கட்டியெழுப்புவது தான் – என்றார். https://www.virakesari.lk/article/198439
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது; வி.எஸ்.சிவகரன்
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ இலங்கை தேசியவாதம் பேசி முற்போக்கு இடதுசாரி சிந்தனை தத்துவ ஆட்சி கட்டமைப்பு என வெற்றுக் கோசத்தையும், போலி முக மூடியையும், அணிந்து கொண்டு ஜே வி பி தனது இனவாத கோர முகத்தை தேசிய மக்கள் சக்தி எனும் கவசத்திற்குள் திரையிட்டு மறைக்க முனைகிறது. இலங்கையில் பௌத்த தேசியவாத இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததில் பெரும் பங்கு ஜே வி பி க்கு உண்டு. 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கைக்கு எதிராக இனவாத கோஷத்தை முன் வைத்து குழப்பியதில் இன்றைய ஜனாதிபதிக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள் ஒன்றும் மீட்பர்கள் அல்ல பல மீட்பர்களை நாம் பார்த்து விட்டோம். ஒரு மாதத்திலேயே ஆட்சி கலகலத்து போய்விட்டது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை . தேர்தல் காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதி க்குரிய பெயர் விபரங்களை வெளியிடுவதாக கூறினார்கள். வெற்றி பெற்றதும் உடனடியாக இரத்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரு சிலருடைய பெயரை மட்டுமே வெளியிட்டவுடன் அமைதியாகிவிட்டனர். தூய வாதம் பேசியவர்கள் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவில் இவர்களின் போலி ஊழல் ஒழிப்பு வாதம் என்பதற்கு இதுவே பெரும் சாட்சி எனவே தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள் என சொல்பவர்கள் தமது சுயநலத்திற்காக மாற்றம் எனும் கோஷத்தை முன்னிறுத்துகின்றன. அவர்களால் தமிழினத்திற்கு எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதது போல் எண்ணற்ற கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் களத்தில் உள்ளன. வெளிநாட்டு பண முகவர்களும் புலம்பெயர்ந்த தேசத்தவர்களும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது. இன்றைய தமிழ்த்தேசிய கட்சிகளும் அதில் உள்ள நபர்களும் சோரம் போகலாம். ஆனால் தமிழ்த் தேசியம் எனும் உயரிய இலக்கில் இருந்து நாம் ஒவ்வொரு சாதாரண குடி மகனும் உள்ளத்தால் கூட மாற்றி சிந்திக்க முடியாது. இன விடுதலை அரசியலுக்காக நாம் இழந்தவை அதிகம் இன்னும் இழப்பவை அதிகமாக இருந்தாலும் நாம் தமிழ்த்தேசியத்தை கடந்து கடுகளவும் நகர முடியாது. அது வரலாற்றுத் தவறாக மாறிவிடும் கடந்த காலத்தில் வினைத்திறனற்ற செயல்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நிராகரியுங்கள். பணத்திற்கு, பதவிக்கோ,சலுகைக்கோ, சமயத்திற்கோ, சாதியத்திற்கு,சாராயத்திற்கோ, அபிவிருத்திக்கோ வாக்களிக்க முயலாதீர்கள். நான் ஏன் எதற்கு உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? எனும் கேள்வியை ஒவ்வொரு வாக்காளனும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களை யார் ஆள வேண்டும் எனும் உரிமையை அற்ப நபர்களுக்கு விற்று விடாதீர்கள். நாங்கள் நாங்களாகவே இருப்போம். எதற்காகவும் தமிழ்த்தேசியத்தை நிராகரிக்க முனையாதீர்கள். உங்கள் வாக்கு தடம் மாறாத இருப்பை தன தாக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்காக இருக்கட்டும். எமக்குள் உள்ள உள் பகையினை நாமே தீர்த்துக் கொள்ளலாம். எதிரிக்கு எந்த வாய்ப்பும் வழங்கி விடாதீர்கள் தேசம் பறி போய் விட்டது. தேசியத்தையாவது எம தாக்கிக் கொள்வதற்காக தேசிய உணர்வோடு வாக்களியுங்கள். அதுவே நாம் இந்த இனத்திற்கும் இந்த தேசத்துக்கும் செய்யும் பாரிய அர்ப்பணிப்பும் தியாகமும் ஆகும். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198428
-
புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்...
(நமது நிருபர்) பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது. இதில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவு செய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட 2024.09.24 ஆம் திகதி 2403/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அன்றைய நாள் மிகவும் விசேடமானதாகும். முதலாவது அமர்வு நாளில் சபா மண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் அரசியலமைப்பின் 64(1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை வாக்களிப்பின் மூலம் நியமித்தல், சபாநாயகரின் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரை அதன் பின்னர் பிரதி சாபாநாயகரும் குழுக்களின் தலைவரும், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வது இடம்பெறும். சபாநாயகர் நியமனம் பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும். எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாரா என்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவுசெய்யுமாறு உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழிய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது. முதலில் சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்யவேண்டும் என செயலாளர் நாயகம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இதன்போது எவராவது ஓர் உறுப்பினர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றால் குறித்த உறுப்பினரின் பக்கம் செயலாளர் நாயகம் பார்த்து நிற்க அந்த உறுப்பினரின் யோசனை சபைக்கு முன்வைக்கப்படும். ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு நபர்களின் பெயர்கள் உள்ளனவா என செயலாளர் நாயகம் சபையிடம் வினவுவது கட்டாயமாகும். அவ்வாறு வினவும்போது பிறிதொரு நபரின் பெயர் முன்வைக்கப்பட்டிருக்காவிட்டால் குறித்த உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த உறுப்பினரின் பெயரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் இருவரும் கையில் பிடித்துச் சென்று அவரை அக்கிராசனத்தில் அமர்த்துவது வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும். அதனைத் தொடர்ந்து சபாநாயகரினால் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொண்டு வைப்பார். இவ்வாறு பதவிச் சத்தியம் செய்துகொண்ட சபாநாயகர் அக்கிராசனத்தில் அமர்வதற்கு முன்னர் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நன்றிதெரிவித்து சிறியதொரு உரையாற்றுவதும் சம்பிரதாயமாகும். தெரிவுசெய்யப்பட்ட புதிய சபாநாயகருக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சபாநாயகரும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். அதன் பின்னர் சபா மண்டபத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச் சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வர். சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு பாராளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன. அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் சந்தர்ப்பதிலுமாகும். அவ்வாறான வாக்கெடுப்பின் போது ஐந்து நிமிடங்கள் வாக்கழிப்பு மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக சபையில் சமுகமளித்திருக்கும் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகரிடமிருந்து வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும். இந்த வாக்குச்சீட்டில் சபாநாயகராகத் தெரிவுசெய்ய விரும்பும் நபரின் பெயர் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினரின் கையொப்பம் என்பன இடப்பட்டு வெளியில் தெரியாதவாறு மடிக்கப்பட்டு வாக்குப்பெட்டியில் இடவேண்டும். வாக்களிப்பு நடத்தப்படும் முறை மற்றும் வாக்குகளின் எண்ணிக்கையை மேற்கொள்வதற்கான பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையே சாரும். செயலாளர் நாயகத்தின் மேசையிலேயே வாக்குகள் எண்ணப்படும். மேசையில் வாக்குகள் எண்ணப்பட்டதும், அதன் முடிவுகள் சபைக்கு அறிவிக்கப்படும். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குச்சீட்டில் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரின் கையொப்பம் இடப்பட்டிருக்காவிட்டால் அவை செல்லுபடிற்ற வாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும். சபாநாயகர் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினரின் வாக்குகள் நீக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுவார். அதேநேரம் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டது போல ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு எஞ்சிய உறுப்பினர்களுக்கிடையில் மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இறுதியில் அதிக வாக்குகளைப் பெறும் உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று உறுப்பினர்கள் போட்டியிடும் போது இரண்டு உறுப்பினர்களுக்கு மத்தியில் சம எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்க பெற்றிருந்தால், சமமான வாக்குகள் உள்ள அவ்வேட்பாளர்களுக்கிடையே எவர் விலக்கப்பட வேண்டியவர் என்பது செயலாளர் நாயகத்தினால் தீர்மானிக்க கூடியவாறான திருவுளச் சீட்டின்மூலம் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் போட்டியிடும் இருவரும் சமமான வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இருந்தபோதும் அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் யாரை சபாநாயகராகத் தெரிவுசெய்வது என்பதை திருவுளச் சீட்டின் மூலம் தீர்மானிக்கும் பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது. இதில் திருவுளச் சீட்டு போடும் முறை பற்றித் தீர்மானிக்கும் உரிமையும் செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது. வாக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஆகக் குறைந்தது ஒரு மாதகாலம் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேண வேண்டியதும், பாராளுமன்றத்திடமிருந்து பெறக்கூடிய ஏதேனும் பணிப்பிற்கமைய செயலாளர் நாயகம் வாக்குச்சீட்டுப் பத்திரங்களை அழித்துவிட்டு அதனைப் பாராளுமன்றத்திற்குச் சான்றுப்படுத்தலும் செயலாளர் நாயகத்தின் கடமையாகும். பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும். இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும். இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும். முதலாவது பாராளுமன்ற அமர்வு தினத்தில் பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். இவர்களின் தெரிவுகள் இடம்பெறும்போது சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அக்கிராசனத்தில் இருப்பதனால் குறித்த அறிவிப்பு மற்றும் வாக்கெடுப்புப் போன்றன சபாநாயகரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டிருந்தால், வேறு எவரினதும் பெயர்கள் முன்மொழியப்படுகின்றனவா என சபையிடம் வினவவேண்டிய பொறுப்பு சபாநாயகருடையதாகும். அவ்வாறு வேறு பெயர்கள் முன்மொழியப்படாவிட்டால் குறித்த உறுப்பினர் பிரதி சபாநாயகர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படுவார். ஏதாவது சந்தர்ப்பத்தில் இந்தப் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி ஏற்பட்டால் சபாநாயகரின் தெரிவின் போது பின்பற்றப்பட்ட வாக்களிப்புமுறை பின்பற்றப்படும். இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவது செயலாளர் நாயகத்திற்குப் பதிலாக சாபாநாயகர் என்பது விசேடமாகும். மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கப்படும் நாள் பெரும்பாலும் அடுத்த பாராளுமன்ற அமர்வு நாளாக இருக்கும். இருந்தபோதும், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்குவந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார். https://www.virakesari.lk/article/198414
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சுன்னாக பொலிஸாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்!
-
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் - நிஹால் தல்துவ
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198390
-
தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர் - சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் பொதுமக்களை ஜனாதிபதி கொண்டுவந்தார் என இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளா சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து அவர்களுடன் பேசினார் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள சுமந்திரன், அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிற்கு ஜனாதிபதி சென்று அவர்களுடன் உரையாடியிருக்கலாம் அதனால் செலவும் குறைவு என தெரிவித்துள்ளார். அனுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198409
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழும் காட்சி எழுதியவர், அலெக்ஸ் போய்ட் பதவி, பிபிசி நியூஸ் ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன. மாஸ்கோவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் உட்பட ஆறு பிராந்தியங்களில் 84 யுக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சனிக்கிழமை இரவு, யுக்ரேன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கி ரஷ்யா 145 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. ‘மாஸ்கோ மீதான மிகப்பெரிய தாக்குதல்’ மாஸ்கோ மீது யுக்ரேன் நடத்திய இந்தத் தாக்குதல் முயற்சி என்பது போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய தலைநகர் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். மாஸ்கோ பிராந்திய ஆளுநரும் இதை ‘மிகப்பெரிய அளவிலான தாக்குதல்’ என்றே விவரித்தார். ரஷ்யாவின் ரமென்ஸ்கோய், கொலோம்னா மற்றும் டொமோடெடோவோ மாவட்டங்களில் பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள ரமென்ஸ்கோய் மாவட்டத்தில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததால் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு வீடுகள் தீப்பிடித்தன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு 34 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. கடந்த செப்டம்பரில், ரமென்ஸ்கோய் மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம், மத்திய மாஸ்கோவில் கிரெம்ளின் அருகே இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. யுக்ரேனில், ஒடேசா பிராந்தியத்தில் ட்ரோன் தாக்கியதில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்தனர். சில கட்டிடங்களில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதையும், அதனால் ஏற்பட்ட சேதங்களையும் புகைப்படங்கள் காட்டின. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு யுக்ரேனின் ஒடேசாவில், ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரானில் தயாரிக்கப்பட்ட 62 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் 10 ட்ரோன்கள், யுக்ரேன் வான்வெளியில் இருந்து ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளான பெலாரஸ் மற்றும் மால்டோவாவை நோக்கிச் சென்றன என்றும் யுக்ரேன் விமானப்படை கூறியுள்ளது. ‘இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்’ என்ற அமைப்பின் தரவுகளை பகுப்பாய்வு செய்த ஏ.எஃப்.பி செய்தி முகமை, ‘மார்ச் 2022-க்குப் பிறகு, ரஷ்யப் படைகள் அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றியதாக கடந்த அக்டோபரில் தகவல்கள் வெளியான நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன’ என்று கூறியுள்ளது. ஆனால் பிபிசியிடம் பேசிய, பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி சர் டோனி ராடகின், ‘போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா அதன் மிக மோசமான உயிரிழப்புகளை சந்தித்தது கடந்த அக்டோபர் மாதத்தில் தான்’ என்றார். ரஷ்யப் படையில், அக்டோபர் மாதத்தில் ‘ஒவ்வொரு நாளும்’ சராசரியாக சுமார் 1,500 பேர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார். ரஷ்யா - யுக்ரேன் போரை டிரம்ப் எவ்வாறு அணுகுவார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா மீது தோல்வியைத் திணிக்க டிரம்ப் விரும்பவில்லை என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், ரஷ்யா - யுக்ரேன் போரை எவ்வாறு அணுகுவார் என்பது குறித்து தீவிரமான ஊகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தில் ‘ஒரே நாளில் தன்னால் ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அவர் அதை எவ்வாறு செய்வார் என்பது குறித்த விவரங்களை வழங்கவில்லை. டிரம்பின் முன்னாள் ஆலோசகர் பிரையன் லான்சா பிபிசியிடம் கூறுகையில், “வரவிருக்கும் புதிய அமெரிக்க நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் பகுதிகளை திரும்பப் பெறுவதற்கு உதவுவதை விட, இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டுவதில் தான் கவனம் செலுத்தும்” என்றார். இதற்கு பதிலளித்த டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பிரையன் லான்சா ‘டிரம்பின் பிரதிநிதி அல்ல’” என்று கூறி, இப்போதைக்கு இந்த விவகாரத்தில் டிரம்ப் ஏதும் கூறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் அலுவலகத்தின் (கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஞாயிறன்று அரசு ஊடகங்களில் பேசிய போது, ‘புதிய அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து ரஷ்யாவிற்கு ‘சாதகமான’ சமிக்ஞைகள் வருவது’ குறித்து தெரிவித்தார். “டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமைதியை நிலைநாட்ட விரும்புவதைப் பற்றி தான் பேசினார், ரஷ்யா மீது தோல்வியைத் திணிக்க அவருக்கு விருப்பம் இல்லை” என்று டிமிட்ரி கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேசியுள்ளார். இந்த உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லையென்றால், யுக்ரேன் இந்தப் போரில் தோல்வியடையக் கூடும் என்று ஜெலன்ஸ்கி முன்பு கூறியிருந்தார். ரஷ்யாவுக்கு தங்களின் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn8gv55v0k1o
-
ஆப்கன் நபரை கொண்டு டிரம்பை கொல்ல இரான் சதியா? அமெரிக்கா குற்றச்சாட்டின் முழு பின்னணி
டொனால்ட் டிரம்ப் கொலை முயற்சியில் ஈரானிற்கு தொடர்பில்லை - ஈரான் வெளிவிவகார அமைச்சர் டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈரானிற்கு தொடர்புள்ளதாக அமெரிக்காவின் நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளதை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி சமூக ஊடகபதிவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஒரு புதிய காட்சி புனையப்பட்டுள்ளது, உண்மையில் அவ்வாறான நபர் ஒருவர் இல்லை என்பதால் மூன்றாம் தரமான நகைச்சுவையை உருவாக்க திரைக்கதை எழுத்தாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அமெரிக்க மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளனர், தங்களிற்கு விருப்பமான ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிற்கு உள்ள உரிமையை ஈரான் மதிக்கின்றது, முன்னோக்கி பயணிப்பதற்கான பாதையும் ஒரு தெரிவுதான், அது மரியாதையுடன் ஆரம்பிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198415
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சுன்னாகம் பொலிஸாரின் அராஜகம்; 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்! சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன. சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198399
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகாரம் அற்றவை. எனிலும் சிறிலங்காவினால் நடாத்தப்படுகின்ற தேர்தல்களையும், நாடாளுமன்றத்தினையும் தமிழீழ விடுதலைக்கான களங்களாக, கருவிகளாக கையாளவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. தற்போதைய சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால தேர்தல்முறை இல்லை. நாம் தேர்தல் முறையினை புத்திகூர்மையுடன் கையாள்வதன் மூலம் சிங்களபௌத்த பேரினவாதத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்துவதன் மூலம் உலகின் கவனத்தினை நாம் ஈர்க்க முடியும். தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்பவர்கள் சிங்கள நாடாளுமன்றத்தினை எவ்வாறு தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்துவார்கள் என்பதனை முன்னரேயே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முயன்று வருகின்றது. எனவேதேசிய மக்கள் சக்தி தற்காலத்தில் முன்வைக்கும் தனிநபர் சமத்துவம், இலங்கையர்கள் என்ற கோட்பாடுகள் என்பன, கோத்தா முன்வைத்த கோட்பாடுகள். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை தொடர்ச்சியாக பேணி வருவதானது, தமிழ் மீதான அடக்குமுறைக்கு சான்றாக அமைகின்றது. கூட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலே தனிநபர் உரிமைகளை அனுபவிற்பதற்கான சூழல் உருவாகும். இன்று சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம் என்பது அரசியல் ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு கூறுவது போல், சின்ன மீனும் பெரிய மீனும் சமன் என்று கூறாலம். ஆனால் யாதார்தத்தில் பெரிய மீனே சின்ன மீனை விழுங்கும். சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் அல்ல. சிங்கள தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காது நிராகரிப்பது தமிழர் நலன் நோக்குநிலில் இருந்து அவசியமானது உட்பட சிங்களத் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் அரசியல் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை மறுதலிப்பதுடன், சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தலைமையேற்றுச் செய்யும் கட்சிகளாக இவை இருக்கின்றன் இருக்கப் போகின்றன. இத்தகைய சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பின், அது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானதாகும். மேலும் தமிழ்பிரதிநிதிகளாக செல்பவர்கள் தமிழீழ தேசியத்தினை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் தேசம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணயம் போன்ற நிலைப்பாடுகளில் சொல்லிலும் செயலிலும் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அரசியல், சமூக வாழ்வில் தூய்மையானவர்களாகவும், சமூக நீதி வழி நின்று செயற்படுபவர்களாகவும், பெண்கள், இளையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுப் வகையிலும் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும். ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையூடாக நீதி கோரல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் வாக்களிக்கும்போது கவனத்திற் கொள்ள வேண்டியவை. நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் மேம்பாட்டுக்கு எத்தகைய செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ்த் தேச வளர்ச்சிக்கு செயற்படக்கூடிய தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தகையதொரு, தேசியப் பேரியக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் காலதாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198396
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு லெபனானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் லெபனானில் நடந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அப்போது அந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்துவந்தது. இந்நிலையில் முதன்முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெதன்யாகு, லெபனான் பேஜர் தாக்குதல் தனது ஒப்புதலடனேயே நடந்ததாக தெரிவித்தார். இதனை நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஒமர் டோஸ்ட்ரி உறுதி செய்தார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு லெபனான் தாக்குதல் பற்றி வெளிப்படையாகப் பேசியது கவனம் பெற்றுள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலும் தான் ஒப்புதல் வழங்கிய பின்னரே நடந்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்து அவருடன் 3 முறை பேசிவிட்டதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களில் எதிர்ப்பை மீறி பேஜர் நடவடிக்கை மற்றும் ஹசன் நஸ்ரல்லா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போர் தொடங்கியது. காசாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன. இதன் நீட்சியாக தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹெஸ்புல்லாக்களை அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. கடந்த செப்டம்பர் மாதம், லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பேஜர் சாதனங்கள் வெடித்துச் சிதறிய நிகழ்வு மத்தியகிழக்கை மட்டும் அல்ல, மொத்த உலகையும் உலுக்கி எடுத்தியது. பின்னர் வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் என களமிறங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துவிட்டது. காயமடைந்தோர் எண்ணிக்கை 13,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தான் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்கள் தனது ஒப்புதலுடனேயே நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198401
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: ' தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்' இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா?
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்களை கோரி வருகின்றார்கள். இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் ஆரம்பமானது. இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றும் அரசியல்வாதிகள் தமது பிரசாரங்களில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர். குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளினால் அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற இந்த சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து, இளம் சமூகத்திற்கு எவ்வாறான புரிதல் இருக்கின்றது என்பது குறித்து பிபிசி தமிழ் அறிய முயன்றது. ’அர்த்தம் தெரியாது’ ''எல்லா அரசியல்வாதிகளும் 13-வது திருத்தம், சுய நிர்ணயம், தமிழ் தேசியம் என்று தான் கதைக்கின்றார்கள். ஆனால், அது என்னவென்று யாரும் சொல்வதில்லை. எல்லாரும் எனக்கு வாக்களியுங்கள் என்றும் தமிழ் தேசியம் என்றும் கதைப்பார்கள். அதன் வரைவிலக்கணத்தை சொல்வதில்லை.," என நெடுங்கேணியைச் சேர்ந்த பார்த்தீபன் தெரிவித்தார். இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார் நொச்சிமேடையைச் சேர்ந்த ரியா. சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்றவை தனக்கு புரியவில்லை என வவுனியாவைச் சேர்ந்த தனுஷ் கூறுகின்றார். இந்த சொற்கள் அனைத்தும் சுத்த தமிழ் மொழியில் இருப்பதனால், என்னவென்றே தெரியவில்லை என பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன காரணம்? சுயநிர்ணய உரிமை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் தமிழர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இன்றைய தமிழ் இளைஞர்கள் மத்தியில் தற்போது அது தொடர்பில் பெரிய விவாதம் இல்லாததற்கு காரணம் என்ன? இந்த விடயம் தொடர்பில் அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரனிடம் பிபிசி தமிழ் வினவியது. ''2009-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, இங்கிருக்கக் கூடிய எந்த தமிழ் கட்சிகளும் இளைஞர்களுக்கு வரலாறு சொல்லி கொடுக்கவில்லை. இன்றைக்கு கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகமாக எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெரியுமே தவிர, அதை இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை எந்த தமிழ் கட்சியும் வைத்துக்கொள்ளவில்லை." என்று அவர் கூறினார். தமிழ் கட்சிகளுக்கு இது பாதிப்பா? வடக்கு, கிழக்கு மாகாணம், மலையகம், கொழும்பு போன்ற இடங்களில் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் மேழிக்குமரன். சமஷ்டி, அரசியலமைப்பின் 13வது திருத்தம், சுய நிர்ணய உரிமை (சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமை), தமிழ்த் தேசியம், அதிகார பகிர்வு போன்ற சொற்களுக்கான விளக்கத்தை மேழிக்குமரன், பிபிசி தமிழிடம் அளித்தார். அந்த வார்த்தைகளுக்கு அவர் தந்த விளக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. சமஷ்டி என்றால் என்ன? இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. ஆனபடியால், ஒரு கூட்டாட்சி முறைமையை கொண்டு வர வேண்டும். இந்த கூட்டாட்சி முறைமையை சொல்லுகின்ற சொல் தான் சமஷ்டி. தமிழர் அமைப்புகள் சமஷ்டியை வலியுறுத்த காரணம். அது கூட்டாட்சி முறைமையை கொண்டு வரும். அரசியலமைப்பின் 13-வது திருத்தம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கான நடைமுறைகளை மாகாண சபை முறைமையாக கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அது யாப்பில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒரு திருத்தம். 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தமாகும். தமிழர்களுக்காக அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரெயொரு நடைமுறை மாகாண சபை முறைமையாகும். மாகாண சபை முறைமை இலங்கை முழுவதும் இருந்தாலும், அது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்த் தேசியம் உலகத்தில் வாழ்கின்ற எல்லா இனங்களும் தங்களுடைய சுய மரியாதையுடன் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான மொழியையும், இனத்தையும் இணைப்பது தான் தேசியம். "தமிழர்களாக இருக்கின்றமையினால், தமிழ்த் தேசியம் எனப்படுகிறது. சிங்கள மக்களுடன் இரண்டற கலப்பதன் மூலம் தமிழ்த் தேசியம் மரணித்து விடும். உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும் அவர்களுடைய தேசியம் ஒன்று இருக்கின்றது." என்கிறார் மேழிக்குமரன். படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் அரசியல் கட்சியினர் கூறுவது என்ன? அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரன் வெளியிட்ட கருத்து குறித்து, இலங்கையின் பழமையான அரசியல் கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கத்திடம் பிபிசி தமிழ் வினவியது. ''இந்த சொற்பதங்கள் எல்லாம் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மேடை பேச்சுகளில் எந்தளவிற்கு அர்த்தம் புரிந்து பேசுகின்றார்கள் என்பதில் எனக்கும் சந்தேகம் நிலவுகின்றது. இதுவொரு எங்களின் உணர்வை காட்டக்கூடிய வீரமான சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றது. யுத்த காலத்திலும், அதற்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு வரையும் இந்த சொற்களை பயன்படுத்தி மக்களை அரசியல்மயப்படுத்தக் கூடிய சூழல் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு பிறகு அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தங்களுடைய உணர்வுகளை காட்டக்கூடிய அல்லது அரசியல் பேசக்கூடிய ஒரு நிலைமை இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது." என்று அவர் கூறினார். "அப்படி ஏற்படுத்தப்பட்டாலும் கூட அரசியல் கட்சிகள் மக்களை அரசியல் ரீதியாக அரசியல்மயப்படுத்தல் வேலைத்திட்டத்தில், தமிழ் கட்சிகள் எல்லாம் பெருமளவிற்கு தோல்வியை கண்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தமிழர்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு மிகவும் குறைந்தளவே நடைபெற்றிருக்கின்றது. அரசியல் கட்சிகள் நிச்சயமாக மக்களை, குறிப்பாக இளம் சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் தேவை இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்திற்கு பிறகு எங்களால் இதனை செய்வதற்கு ஓரளவு இலகுவாக இருக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பை உணர்ந்து எதிர்காலத்தில் செயல்படும் என்று நம்புகிறேன்." என பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvzkep2glpo
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
இலங்கை - நியூசிலாந்து T20 தொடர் சமநிலை சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால் 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆகவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1 : 1 என்ற சமநிலையில் முடிவடைந்தது. https://www.virakesari.lk/article/198377
-
மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிந்தும் களுத்துறை பிரதேசத்திற்கு நன்றியை தெரிவிக்கவே வந்தேன் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abeygunawardana) கண்ணீர் விட்டழுத சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. களுத்துறையில்(kalutara) நேற்று(10.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் கண்ணீர் விட்டழுதுள்ளார். அங்கு உரையாற்றிய அவர், அபேகுணவர்தன அமைச்சராக மாட்டார் என்பது இங்குள்ள மக்களுக்கு தெரியும். நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம். நன்றி தெரிவிப்பு அதையறிந்து நான் இங்கு எனது நன்றியை தெரிவிக்கவே வந்தேன். எனினும் விரக்தியால் அரசியலை விட்டு விலக மாட்டேன்.” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2022 ஆண்டும் ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு தாக்கப்பட்ட பல சம்பவங்களை நினைவு கூர்ந்து அரசியல் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்ணீர் விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/rohitha-abeygunawardena-cry-1731287367#google_vignette
-
யாழ் களத்தில் புதுவரவு
வாங்கோ வாங்கோ செவ்வியன்.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
கொடிய பேஜர் தாக்குதல்: அதிர்ச்சியளித்த நெதன்யாகுவின் அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லெபனானிலும், சிரியாவிலும்(Lebanon and Syria) பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பேஜர் மற்றும் தொலைத்தொடர்புச் சாதன வெடிப்பு சம்பவங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது. இந்த அறிவிப்பானது இஸ்ரேல் மீதான அச்சத்தை மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில், லெபனானில் வெடித்த ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு சாதனங்கள் மீதான கொடிய செப்டம்பர் தாக்குதலுக்கு தான் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 40 பேர் பலி இந்த கொடிய தாக்குதலில் 40 பேர் பலியாகியதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர். இதற்கமைய இஸ்ரேல் முதல் முறையாக இந்த நகர்வில் ஈடுபட்டதாக நெத்தன்யாகு ஒப்புக்கொண்டார். இதன்படி பேஜர் தாக்குதல்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கையை அறிவித்தது. மேலும், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, ஹிஸ்பொல்லாவின் கோட்டையாக கரதப்பட்ட இடங்களில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. https://tamilwin.com/article/middle-east-war-netanyahu-approved-pager-attacks-1731261173?itm_source=parsely-api
-
தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் - விஜித ஹேரத்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே அழைப்புவிடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம், நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும், என தெரிவித்துள்ள விஜித ஹேரத் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும் அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198387
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
வாக்காளர்களிடம் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள வேண்டுகோள்...! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்க்க வேண்டாம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வாக்களிக்காதிருத்தல் அல்லது வாக்குச்சீட்டு சீட்டில் கிறுக்குவது பொருத்தமானது அல்ல. வாக்களிப்பதற்காக அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அவர் கோரியுள்ளார். வாக்களிக்காதிருப்பது சரியான தீர்மானம் அல்ல வாக்களிப்பது எமது உரிமை, அது எமது அதிகாரம், அது எமது குரல், வாக்களிப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மரணத்தை தவிர வாக்குரிமை மட்டுமே அனைவருக்கும் பேதமின்றி கிடைக்கப்பெறுகின்றது எனவும் எனவே வாக்களிக்காதிருப்பது சரியான தீர்மானம் ஆகாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். வாக்களிப்பை புறக்கணிப்பதன் மூலம் வாக்களிக்கும் நபர்களுக்கு விருப்பில்லாத ஒரு ஆட்சியாளர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வார் என மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டி உள்ளார். https://tamilwin.com/article/dont-ignore-the-voting-1731295517#google_vignette
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் மா அதிபர் வந்து சென்ற பின்னர் சுற்றறிக்கையை மீறிய பொலிஸார் - ஜோஸப் ஸ்டாலின் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து சென்ற சில மணிநேரத்தில் இடம்பெற்ற அராஜகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிசாரின் செயல்பாடுகளை காணொளி பதிவு செய்து சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தினால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். இது இவ்வாறு இருக்கையில் பதில் பொலிஸ் மா அதிபர் சுன்னாகத்திற்கு வருகை தந்து புதிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைத்துவிட்டு சென்று சில மணி நேரத்தில், அவரது சுற்றறிக்கையை மீறி அராஜகம் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம்பொலிஸ் நிலையத்தின் பெயர் எழுதப்பட்ட முச்சக்கர வண்டியில் வந்த பொலிசாரினால் தாக்குதல் நடாத்தப்பட்டவேளை, அந்த தாக்குதலை காணொளி பதிவு செய்த ஆசிரியரின் கைப்பேசியை பொலிஸார் பறித்து சென்றனர். பதில் பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் இவ்வாறு காணொளி பதிவு செய்துள்ளார். இது இவ்வாறு இருக்கையிலேயே பொலிஸாரின் அராஜகம் இடம்பெற்றுள்ளது.. இதுவரை அந்த கைப்பேசி கொடுக்கப்படவுமில்லை. இந்தப் பிரச்சனைக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆசிரியரது கைப்பேசி கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த சம்பவத்தை மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/198398
-
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது!
சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை - இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது, மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. “கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை. நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேல் நாங்கள் முன்பதிவு செய்யவில்லை. சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவுகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளையும், Windy app போன்ற செயலிகளையும் நாங்கள் நம்பியுள்ளோம். மேலும், வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வடக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/198381
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
மூன்றே ஓவரில் மாறிய ஆட்டம் - வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியும் வெற்றியை தவற விட்ட இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வருண் சக்ரவர்த்தி எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய அணி 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியிடம் வெற்றியை தாரை வார்த்தது. இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் மூன்றே ஓவர்களில் மாறிப் போனது. செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது தென் ஆப்ரிக்க அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. மிரட்டிய தென் ஆப்ரிக்கா, தடுமாறிய இந்தியா இந்திய அணியின் டாப் ஆர்டரை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டம் காண வைத்தனர். முதல் போட்டியில் சதம் அடித்த சாம்ஸன், திலக் வர்மா, சூர்யகுமார், அபிஷக் சர்மா ஆகியோர் இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யான்சென், கோட்ஸி, சிமிலேன் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து சாம்ஸன், அபிஷேக், சூர்யகுமார் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்திய அணி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பவர்ப்ளேயில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் கேசவ் மகராஜ், பீட்டர், மார்க்ரம் ஆகியோர் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்களேத் தவிர விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. கடைசி நேரத்தில் பீட்டர், மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் கூட்டணி கடைசி நேரத்தில் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். இந்திய பேட்டர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவுக்கு ரன்சேர்க்க முடியாததற்கு முக்கியக் காரணமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாம்ஸன் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஸ்டெம்பை விட்டு விலகி அடிக்க முற்பட்டு யான்சென் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்திய பேட்டர்கள் சாம்ஸன், அபிஷேக் சர்மா, திலக்வர்மா ஆகியோர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டவே முயன்று நேற்று ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக சாம்ஸன் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஸ்டெம்பை விட்டு விலகி அடிக்க முற்பட்டு யான்சென் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பந்துவீச்சாளரின் பந்துவீச்சை கணிக்கக்கூட சிறிது நேரம் எடுக்காமல் பேட்டை சுழற்றினால் இப்படி விலை கொடுக்க நேரிடும். அதேபோல அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார் என்பதற்காக வாய்ப்புப் பெற்ற அபிஷேக் சர்மா இலங்கை தொடருக்குப்பின் பெரிதாக எந்த ஆட்டத்திலும் இன்னும் ரன்கள் சேர்க்கவில்லை. அதேபோல ரிங்கு சிங் பெரிய ஃபினிஷராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை ரிங்கு சிங் சரிவர பயன்படுத்தவில்லை. ரிங்கு சிங் இந்த ஆட்டத்திலும் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் கூட்டணி கடைசி நேரத்தில் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். மானம் காத்த ஹர்திக் பாண்டியா இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தபின் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை நிறுத்தி நிதானமாக பேட் செய்தார். ஹர்திக் தனது முதல் 29 பந்துகளில் 19 ரன்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். இந்திய அணியின் ரன்சேர்க்கும் வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர். நடுப்பகுதி 5 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்க்க முடிந்தது, 35 பந்துகளில் ஒரு பவுண்டரிகூட இந்திய அணி அடிக்கவில்லை. 18வது ஓவரில்தான் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்தார். அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸர் என பாண்டியா அடித்து 100 ரன்களைக் கடப்பதற்கு உதவினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச அரங்கிலும் முதல்முறையாக டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம் தென் ஆப்ரிக்க அணி எளிதாக 124 ரன்களை சேஸ் செய்யும் நினைப்புடன்தான் களமிறங்கியது. ரெக்கல்டான், ஹென்ட்ரிக்ஸ் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து தொடங்கினர். ரெக்கல்டான்(13) விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபின், ஆட்டம் சூடுபிடித்தது. வருண் சக்ரவர்த்தி எனும் மாயஜாலப் பந்துவீச்சாளர் பந்துவீச வந்தபின், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர், பந்து எந்தத் திசையில் வரும் என கணித்து ஆடவே படாதபாடுபட்டனர். இதனால் வருண் பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது, 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்திக் கொடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். சர்வதேச அரங்கிலும் முதல்முறையாக டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் அக்ஸர் படேலுக்கு ஓவர்களை வழங்காமல், வேகப்பந்துவீச்சுக்கு வழங்கி, கிடைத்த வெற்றி வாய்ப்பை கேப்டன் சூர்யகுமார் தவறவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க வெற்றிக்கு கடைசி வரை போராடி 47 ரன்கள் குவித்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டராக ஜொலித்த கோட்ஸி காயத்தால் நீண்ட ஓய்வுக்குப்பின் களத்துக்கு வந்த கோட்ஸி முதல் போட்டியிலும் 23 ரன்களை அதிரடியாகக் குவித்தார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் இருந்தது. வெற்றிக்கு 26 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அர்ஷ்தீப் வீசிய ஓவரில் சிக்ஸரும், ஆவேஷ் கான் ஓவரில் 2 பவுண்டரியும் அடித்து தென் ஆப்ரிக்காவின் தோல்வி அழுத்தத்தை பெருமளவுகுறைத்து, பேட்டராக ஜொலித்தார். தென் ஆப்ரிக்க அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியை வெற்றிக்கு அழைத்து வந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டெப்ஸ் ஆட்டம் அருமையானது. டி20 உலகக் கோப்பை முடிந்தபின், இதுவரை 6 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணிவிளையாடிய நிலையில் முதல் டி20 வெற்றியை நேற்றுதான் அந்த அணி பெற்றது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் அதேநேரம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் உழைப்பு வீணானது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருணின் மாயஜாலப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட கடும் சிரமப்பட்ட தென் ஆப்ரிக்காவின் 4 பேட்டர்கள் க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தனர். தவறாகிப் போன சூர்யகுமாரின் முடிவு 16 ஓவர்கள் வரை ஆட்டம் இந்திய அணியின் பக்கம்தான் இருந்தது. 7 விக்கெட்டுகளை தென்ஆப்ரிக்கா இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. கடைசி 24 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 17, 18 மற்றும் 19 ஓவர்களை வீச வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் மற்றும் ஆவேஷ் கானை பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமாரின் முடிவு தவறாகிப் போய்விட்டது. அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் கோட்ஸி ஒரு சிக்ஸரும், ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரியும் என12 ரன்கள் குவித்தனர். ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் கோட்ஸி 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் குவித்தார். அர்ஷ்தீப் வீசிய 19-வது ஓவரில் ஸ்டெப்ஸ் 4 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வேகப்பந்துவீச்சை விளாசுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் தொடர்ந்து ஆவேஷ்கான், அர்ஷ்தீப் இருவருக்கும் டெத் ஓவரில் சூர்யகுமார் வாய்ப்பளித்தது தவறு என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வர்ணனையின்போது தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "நான் பெருமைப்படுகிறேன்" தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில் “டி20 போட்டியில் 120 ரன்கள் குறைவானதுதான். இருப்பினும் நாங்கள் பந்துவீசிய அணுகுமுறை பாராட்டுக்குரியது, பெருமைப்படுகிறேன். 125 ரன்களை டிபென்ட் செய்யும்போது ஒருபந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமல்ல. இந்த வாய்ப்புக்குத்தான் வருண் நீண்ட காலமாக காத்திருந்தார். இரு ஆட்டங்கள் முடிந்துள்ளன, அடுத்த ஆட்டத்தில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் பல வேடிக்கைகள் காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c75l16gvnxeo
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
தப்பியோட முனைந்தவர் என்பதை வைத்து சொல்கிறீர்களா அண்ணை? தன்னில் தவறில்லை என்பதால் பயணத்தை தொடர நினைத்திருக்கலாம்.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
குஞ்சு மீன்கள் எல்லாம் அள்ளிக்கொண்டு வாறது இதுதானோ?!
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது; ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அட்டவணை திருத்தப்படலாம்? (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான அட்டவணைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்மானம் போட்டியின்போது சிக்கல்களை தோற்றுவிக்கும் என கருதப்படுகிறது. இரண்டு இடங்களில் ஐசிசி சம்பின்ஷிப் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமது போட்டிகளை துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்தவேண்டும் என்ற எழுத்து மூல யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது. 2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய 8 நாடுகள் பங்குபற்றவுள்ளன. https://www.virakesari.lk/article/198355
-
அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
அவுஸ்திரேலிய மண்ணில் 22 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக சம்பியன் (50 ஓவர்) அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் மிக இலகுவாக பாகிஸ்தான் வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 22 வருடங்களின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக பாகிஸ்தான் வீழ்த்தி வரலாறு படைத்தது. மெல்பர்னில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 2 விக்கெட்களால் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஹரிஸ் ரவூப்பின் அபார பந்துவீச்சின் உதவியுடன் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திக் கொண்டிருந்தது. அப் போட்டியில் அவுஸ்திரலியாவை 35 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான், கடைசிப் போட்டியில் மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களின் அசாத்திய பந்துவீச்சுகளால் அவுஸ்திரேலியாவை 31.5 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சுருட்டி வெற்றியிட்டிது. கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் சோன் அபொட் மாத்திரமே ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக 22 உதிரிகளே இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது. பின்வரிசையில் அடம் ஸம்ப்பா 13 ஓட்டங்களையும் ஸ்பென்ஸர் ஜோன்சன் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 26.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. சய்ம் அயூப் 42 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 37 ஓட்டங்ளையும் பெற்று 84 ஓட்டங்களைப் பகிரந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து பாபர் அஸாம் (28 ஆ.இ.), அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் லான்ஸ் மொறிஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப். https://www.virakesari.lk/article/198372