Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "எங்கள் குடும்பத்திற்கு விவசாயம் தான் பிரதான தொழில். இந்தப் படிப்பை விரும்பித் தான் தேர்வு செய்தேன். 2023 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் படிப்பை முடித்தேன். சான்றிதழ் வாங்கும்போது கூட நம்பிக்கை இருந்தது. இப்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது" என்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா. ரஞ்சிதா மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யாவின் கருத்தும் இதையொட்டியே இருக்கிறது. ஒரே காரணம், தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான். "சட்டரீதியான தடைகளை நீக்கிவிட்டு அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு போதிய முயற்சியை மேற்கொள்ளவில்லை" என்பது அர்ச்சகர் படிப்பை முடித்த மாணவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் 'கோவில் கருவறைகளில் தீண்டாமை கூடாது' என்று கூறி தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ முறைப்படியும் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் வைணவ முறைப்படியும் ஆகம பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அர்ச்சகர் ஆக விரும்பும் எவரும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பயிற்சியில் சேரலாம்; பயிற்சி முடித்த உடன் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. பயிற்சியின் போது, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தமிழ் இலக்கணம், தமிழக கோவில்கள் வரலாறு, அனைத்துக் கடவுளுக்குமான மந்திரங்கள்; ஆகம கோவில்களில் பூஜை, அலங்காரம், வீதி உலா ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. பட மூலாதாரம்,TN GOVERNMENT படக்குறிப்பு, "சட்டரீதியான முயற்சிகளை துரிதப்படுத்தி அரசு உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்" என வலியுறுத்துகின்றனர் பயிற்சி பெற்றவர்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'இந்த சட்டம் செல்லும்' என 2015 ஆம் ஆண்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் தீர்ப்பளித்தனர். ஆனால், 'பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வு' எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பல்வேறு கோவில்களில் அனைத்து சாதிகளையும் சேர்ந்த 28 பேரை அர்ச்சகர்களாக அரசு நியமித்தது. இவர்களில் நான்கு பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள். உச்ச நீதிமன்றம் உத்தரவு இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டாக நடந்த இந்த வழக்கில், 'தமிழ்நாடு அரசு வகுத்த விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' எனவும் 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றமும், 'தற்போதைய நிலையை அப்படியே தொடரலாம்' (Status Quo) எனக் கூறிவிட்டது. இதன் காரணமாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அர்ச்சகர்கள் படிப்பை முடித்தும் சுமார் 380க்கும் மேற்பட்ட மாணவர்களால் பணியில் சேர முடியவில்லை" என்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன். படக்குறிப்பு, அர்ச்சகர்கள் படிப்பை முடித்தும் சுமார் 380க்கும் மேற்பட்ட மாணவர்களால் பணியில் சேர முடியவில்லை என்கிறார், ரங்கநாதன் "சாதி பிரதானமாக இல்லை" "இந்த வழக்கில் சாதியை முக்கியமானதாக நீதிமன்றம் பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகமம் உள்ளது. அதன்படியே மரபும் பழக்கவழக்கமும் உள்ளதால், அவை கடைபிடிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது" என்கிறார் வா.ரங்கநாதன். ஆனால், இன்று வரையிலும் 90 சதவிகித்துக்கும் மேல் பரம்பரை அர்ச்சகர்கள் மட்டுமே கோவிலில் பூஜை செய்வதாகக் கூறும் ரங்கநாதன், "தகுதி, திறமை இருந்தாலும் எங்களால் ஏன் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை?" எனக் கேள்வி எழுப்புகிறார். "கோவில் அனைவருக்கும் சமமானதாக இருக்கிறது. ஆனால், மரபும் பழக்கவழக்கமும் எங்களை ஒதுக்குவதற்கு காரணமாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தடையை நீக்குவதற்கு தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை" என்கிறார் ரங்கநாதன். வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன? "சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் பூஜை செய்யக் கூடிய கோவில்களில் மட்டும் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதர சாதியினர் அர்ச்சகர்களாக உள்ள கோவில்களில் இந்தப் பிரச்னை இல்லை" என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவரான டி.ஆர்.ரமேஷ்குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16(5) பிரிவு, மத சம்பிராதாயத்தில் குறிப்பிட்ட பிரிவினரே வழிபாடு செய்ய வேண்டும் என்றால் அதைப் பின்பற்ற வேண்டும்; அதில் மாற்றங்களை கொண்டு வரக் கூடாது என்கிறது. இதையே ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கிலும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது" என்கிறார். படக்குறிப்பு, அரசின் நோக்கத்துக்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்கிறார், ரமேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'எது ஆகமக் கோவில், அந்தக் கோவிலில் என்ன ஆகமம் பின்பற்றப்படுகிறது?' என்பதைக் கண்டறிய ஐவர் கமிட்டியை நியமிக்குமாறு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர நாத் பண்டாரி உத்தரவிட்டார். "இந்தக் குழுவை அமைப்பதில் அரசு அலட்சியம் காட்டுகிறது" எனக் கூறும் டி.ஆர்.ரமேஷ்குமார், "உச்ச நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, புதிய நியமனங்களையும் தமிழ்நாடு அரசு தவிர்க்கிறது" என்கிறார். "கோவிலில் உடல்நலக் குறைவால் பட்டாச்சாரியார் இறந்துவிட்டால் வேறு ஒருவரை நியமிப்பது தான் நடைமுறை. ஆனால், அவ்வாறு நியமிக்காமல் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்" என்கிறார், டி.ஆர்.ரமேஷ்குமார். உதாரணமாக, ராமேஸ்வரம் கோவிலில் 21 சன்னதிகளில் அர்ச்சகர்கள் இல்லை என அண்மையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையும் டி.ஆர்.ரமேஷ்குமார் மேற்கோள் காட்டினார். அமைச்சர் சேகர்பாபு சொல்வது என்ன? இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையையே தொடருமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற தடையை நீக்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன" என்று மட்டும் பதில் அளித்தார். மற்ற கேள்விகளை எழுப்பும் முன், இந்த விவகாரத்தில் போதிய விளக்கங்களை தான் அளித்துவிட்டதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "2021 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத 24 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். நவம்பர் 27ஆம் தேதி இந்த வழக்கு வரும்போது, எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறோம்" என்றார். புதிய நியமனங்களை தவிர்ப்பது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். பட மூலாதாரம்,SEKAR BABU படக்குறிப்பு, அர்ச்சகர் நியமன விவகாரத்தில் போதிய விளக்கங்களை தான் அளித்துவிட்டதாக கூறுகிறார், அமைச்சர் சேகர்பாபு அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது எப்போது? பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பலரும் உரிய வேலை கிடைக்காததால், தங்களுக்குக் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருவதாக கூறுகிறார், வா.ரங்கநாதன். "சிலர் தனியார் கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். சிலர் கூலி வேலையை செய்து வருகின்றனர். அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வந்தவர்கள், மாற்று வேலைகளைத் தேடி நகரத் தொடங்கிவிட்டனர். இதுதொடர்பான வழக்கு இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் வரவுள்ளது. அதற்குள் சட்டரீதியான முயற்சிகளை துரிதப்படுத்தி அரசு உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்" என்கிறார் வா.ரங்கநாதன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyv9zd4pmdo
  2. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198370
  3. சுன்னாகம் விபத்து; பொலிஸார் அராஜகம்; விசேட பொலிஸ் குழு விசாரணை - யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து, பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் தெரிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (09) வேன் - மோட்டார் சைக்கிள் விபத்தினை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்டவேளை சாரதிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முதலில் வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினையடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினையடுத்து, வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை, சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து, சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளனர். சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதிப் பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கம் செய்த நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில், விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கிறது. அதை அவர்கள் மீற முடியாது. மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார். நிச்சயமாக பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/198360
  4. 'நீ செல்லும் வழியில் இனி பள்ளம் இல்லை' - சஞ்சு சாம்சனை கிரிக்கெட் வீரராக்க தந்தை நடத்திய போராட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் "டெல்லியில் நடந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் நான் என் விக்கெட்டை இழந்தவுடன், என் நண்பனிடமிருந்து மெசேஜ் ஒன்று வந்திருந்தது. அதில் அவன், 'என் மொபைலின் டேட்டா தீர்ந்துவிட்டது, நீ ஆடுவதைப் பார்க்க நான் ரீசார்ஜ் செய்தேன். போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்த போது நீ அவுட்டாகிவிட்டாய். நண்பா சஞ்சு, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறாய்?' என கோபமாக அவன் மெசேஜ் செய்திருந்தான்." "முதலில் அதைப் பார்த்தவுடன் எனக்கு அவன் ஏன் எனக்கு கிரிக்கெட் ஆட செல்லித் தருகிறான் என கோபம் வந்தது. ஆனால் இப்போது, இவர்கள் அனைவரும் நான் நன்றாக ஆட வேண்டுமென விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்." இந்த நிகழ்வு பற்றி சஞ்சு சாம்சன் சில தினங்களுக்கு முன் என்னிடம் கூறினார். ஒரு வீரர் நன்றாக செயல்பட வேண்டுமென எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். மைதானத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், டிவியில் பல கோடி நபர்கள் மற்றும் இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி நம்மை நேசிப்பவர்கள் என பலர் இருக்கிறார்கள். டர்பனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தொடக்க வீரராக சதமடித்திருக்கிறார். இந்த சதத்தை கொண்டாடியவர்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரும் அடங்குவர். சஞ்சு சாம்சனின் அடுத்தடுத்த இரண்டாவது சதத்தை கண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்த தனது சாதனையை ஒரு வீரர் சமன் செய்திருப்பதை ரோகித் சர்மா மிகவும் விரும்புவார். ரோகித் வழியில் ஒருநாள், டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பாரா? பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் ( வலதுபுறம்) மற்றும் அவரது தந்தையுடன் ( நடுவில்) சகோதரர் சொல்லப்போனால், சஞ்சு சாம்சனில் தன்னுடைய தொடக்க கால சாரம் இருப்பதை ரோகித் சர்மா உணர்கிறார். இந்த உலகமே அவரது திறமையை கண்டு வியக்கும் போது, அதற்கு ஏற்ப ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் ஆடியதில்லை, இதுவே அவரை அப்படி உணர வைத்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டு தடுமாற்றத்திற்கு பிறகே ஒருநாள் நாள் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். அதன் பின், அவரது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது. அவர் டெஸ்ட் போட்டியிலும் கூட அதிரடியான பேட்ஸ்மேனாக பரிணமித்தார். சஞ்சு சாம்சனும் ரோகித் சர்மாவின் வழியை பின்பற்றுவாரா? ஏனெனில் ரோகித் சர்மா டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியிலும் அவர் சில காலம் விளையாடாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கிங்ஸ்மேட் மைதானத்தில் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சுவின் அதிரடி ஆட்டம் இந்தியா வெற்றி பெற அடித்தளம் அமைத்தது. இந்திய அணி மொத்தமாக 17 பௌண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்திருந்தது, அதில் சஞ்சு சாம்சன் மட்டுமே 7 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசியிருந்தார். 29 வயதான தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் அடித்த 107 ரன்களில், 88 ரன்கள் பௌண்டரி, சிக்ஸர்களாலே அடிக்கப்பட்டவை. பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் அவர் அப்பாவுடன் இருக்கும் பழைய புகைப்படம் "நீ செல்லும் வழியில் பள்ளமே இல்லை" தென் ஆப்ரிக்கா செல்லும் முன் சஞ்சு சாம்சன் கொடுத்த ஒரு பிரத்யேக நேர்காணலில் அவரது தந்தையின் வித்தியாசமான பங்களிப்பை பற்றி குறிப்பிட்டிருந்தார். "சென்ற மாதம், நான் டெல்லியில் உள்ள ஃபெரோஸ் கோட்லா மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்லுமுன், தந்தையிடமிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதற்கு முன் நடந்த போட்டியில் நான் குறைந்த ரன்களில் என் விக்கெட்டை பறிகொடுத்திருந்தேன். இரண்டாம் போட்டி துவங்குவதற்கு முன், 'மகனே, என்னை ஒரு கதை சொல்ல விடு', என்றார். டெல்லி ஜிடிபி நகரின் கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் நாங்கள் தங்கியிருந்த காலத்தின் கதையை தந்தை கூறினார், மற்றவர்கள் போல நானும் அந்த சமயத்தில் தெருவொர கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன். ஒரு கால்பந்து வீரராக இருந்த போதிலும், தந்தை எனக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்தார். எங்கள் வீட்டின்முன் இருந்த சாலையிலே கிரிக்கெட் ஆடுவோம். ஒரு நாள் நான் அவுட் ஆனேன், அதுவும் கிளீன் போல்ட்." 'அப்பா, அந்த சாலையில் ஒரு பள்ளம் உள்ளது, பந்து அந்த பள்ளத்தில் விழுந்ததாலேயே நான் போல்டானேன்,' என கூறினேன். "அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையில் அப்பா எதோ வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் கூர்ந்து கவனித்தபோது, சாலையில் பள்ளம் இருந்த இடத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பா அவர் கையால் சிமெண்ட் கலவையை பூசி கொண்டிருந்தார். பிறகு அப்பா சொன்னார், மகனே, "இப்போது எந்த பள்ளமும் இல்லை!" என்று சஞ்சு சாம்சன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தார். பட மூலாதாரம்,FACEBOOK/SANJU SAMSON அவர் தந்தை அன்று சாலையில் இருந்த அந்த தடையை மட்டும் அகற்றவில்லை. வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தடைகளை எதிர்கொள்ள அவரது குடும்பம் அவரை ஊக்குவித்ததை சாம்சனின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. "என் தந்தையின் பல நண்பர்கள் இதை கூறியுள்ளனர், 'ஏய், உன் குழந்தைக்காக நீ மிகவும் கடினமாக உழைக்கிறாய். இது எல்லாம் சாத்தியமில்லை. நீ காணும் கனவு நிறைவேறப் போவதில்லை. உன் மகனை நீ எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு செல்வாய்? இது சாத்தியமில்லை.' என்று கூறி தந்தையின் நண்பர்கள் அவரிடம் அனைத்தையும் விட்டுவிட சொல்வார்கள். "அது என் கைகளில் இல்லை. ஆனால், நான் அதனை சில வருடங்களுக்கு பிறகு பார்ப்பேன்," என அவர்களுக்கு அப்பா பதிலளித்தார். சஞ்சுவின் கனவு பட மூலாதாரம்,GETTY IMAGES "நான் ஃபெரோஸ் ஷா கோட்லா ( தற்போது அருண் ஜெட்லீ மைதானம் ) மைதானத்தை அடைந்த போது, அப்பா சொன்னார், 'மகனே, நான் நினைத்த அந்த நாள் இது, இன்று அந்த கனவு நிறைவேறிய நாள். இந்த கதையுடன், அவர் எனக்கு கிரிக்கெட்டின் முக்கியதுவம் என்ன என்பதையும் மற்றும் கனவு நனவாக எவ்வளவு கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் கூறினார்", என்றார் சஞ்சு சாம்சன். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனால் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாத போதிலும், அவர் ஹைதராபாத் மற்றும் டர்பன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த சதம் அடித்தார். இதன் மூலம், டி20 ஆட்டங்களில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது முன் மாதிரியாக கருதும் ரோகித் சர்மாவைப் போலவே இவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் திறமையை நிரூபிப்பார் என அவரது தந்தை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நம்பிக்கையில் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே அவரது கனவு என சஞ்சு சாம்சனும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yreqdgvr9o
  5. இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.வேலா என்ற நீர்மூழ்கிக் கப்பல் இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/198325
  6. சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - கீதநாத் காசிலிங்கம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளம் தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றேன். இந்த சம்பவம் தொடர்பில் பலரும் ஆளும் அரசாங்கத்தை கண்டிப்பதை காண முடிகிறது. ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. இப்படியான சம்பவம் எமது பொதுஜன பெரமுன அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்போது பிழை விடும் அதிகாரிகள் மீது சுமத்தவேண்டிய குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினார்கள். நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/198321
  7. முதலாவது ரி-20 இல் பந்துவீச்சாளர்களின் திறமையால் நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வென்றது இலங்கை (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை ஒரு ஓவர் மீதம் இருக்க 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது. பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், சரித் அசலன்கவின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டம் என்பன இலங்கையை ஒரு வெற்றிபெறச்செய்தது. இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரில் இலங்கை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது ஓவரில் நியூஸிலாந்து 12 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அதன் பின்னர் இலங்கையின் பந்து வீச்சில் சிரமத்தை எதிர்கொண்டு விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தது. ஸக்கரி பௌல்க்ஸ், இஷ் சோதி ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 39 ஓட்டங்கள் நியூஸிலாந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது. முன்வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 27 ஓட்டங்களையும் பின்வரிசையில் ஸக்கரி பௌல்க்ஸ் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். அவர்களைவிட வில் யங் (19), அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் (16) ஆகிய இருவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் மிச்செல் ஹே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். நியூஸிலாந்தின் எண்ணிக்கையில் 16 உதிரிகள் அடங்கியிருந்தன. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் துஷார 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சுமாரான மொத்த எண்ணிக்கையான 136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரராக களம் இறங்கிய குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். பெத்தும் நிஸ்ஸன்க (19), குசல் ஜனித் பெரேரா (23) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர். எனினும் இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (55 - 3 விக்.) தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.; பானுக்க ராஜபக்ச சாதிக்கக்கூடியவர், அவரது பாத்திரம் என்னவென்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார் என அணித் தலைவர் சரித் அசலன்க கூறியபோதிலும் அது பொய்யாகிப்போனது. பானுக்கு ராஜபக்ஷ வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (118 - 5 விக்.) எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்க தமது அணிக்கு உதவினர். வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தபோது இலங்கையின் வெற்றிக்கு மேலும் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அணித் தலைவர் சரித் அசலன்கவும் துனித் வெல்லாலகேயும் வெற்றிக்கு தேவைப்பட்ட மீத ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். சரித் அசலன்க 35 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஷக்கரி பௌல்க்ஸ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/198288
  8. வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம் எனவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். வவுனியாவில் (Vavuniya) இன்று (10) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். பிரச்சாரத்திற்காக வந்த ரணில் இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். வன்னி மக்கள் ஓரளவு வாக்கை அவருக்கு வழங்கியிருந்தனர். இந்த தேர்தலில் அவர் வருவாரா? அதேபோல எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) வந்தார். இந்த தேர்தலுக்கு அவர் இங்கு வருவாரா? வரவில்லை. ஏன்? அவர்கள் அவர்களது வெற்றிக்காக மாத்திரமே தேர்தலில் நின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வன்னியில் எமக்கு வீழ்ந்த 21 ஆயிரம் வாக்குகளும் எமது வெற்றிக்கு பாரிய ஒரு பங்களிப்பையும் சக்தியையும் வழங்கியிருந்தது. வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருக்கிறது. அந்தக்காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு நாங்கள் வழங்குவோம். எங்களுக்குத் தெரியும் இங்கு யுத்தம் ஒன்று நடந்தது பல்வேறு அநீதிகளுக்கு முகம்கொடுத்தோம். வடக்கின் மீன்வளம் இன்று அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளிக்கிறேன். இது சமத்துவமான ஒற்றுமையான ஆட்சி. இதனை தென்பகுதி எதிர்க்காது. ஆனால் அன்று அப்படி அல்ல வடக்கில் இவ்வாறு ஒன்று நடந்தால் தென்பகுதி அதற்கு எதிராக இருந்தது. எங்களை பிரித்து அரசியல் செய்தார்கள். நாங்கள் இன்று அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். வடக்கின் மீன்வளத்தை பெரிய அளவில் வேறு நாடுகள் வந்து சூறையாடுகின்றன. எமது மீன்வளம் அழியும்வாறாக அதனை செய்கின்றனர். நாங்கள் அரசு என்ற வகையில் எமது கடற்றொழிலாளர்களின் உரிமைக்காக வடக்கில் வாழும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அரச ஊழியர்களின் சம்பளம் சூரியஒளி இன்று மதிப்பு வாய்ந்துள்ளது. அது எமது சக்தி. அதனை துண்டு துண்டாக விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நாங்கள் மீளாய்வு செய்யவேண்டும். இந்த வளங்களை நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும். கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும். எனவே புதிய ஒரு நிலைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்லவேண்டும். அத்துடன் எமது முதலாவது வரவுசெலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நிச்சயம் இருக்கும்“ என தெரிவித்தார். https://ibctamil.com/article/lands-of-the-northern-people-will-be-freed-anura-1731238756
  9. இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒன்பது இலங்கையர்கள் நெடுந்தீவை வந்தடைந்தனர். திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரே நெடுந்தீவுக்கு நாட்டுப்படகில் வந்துள்ளனர். இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார், அந்த 9 பேரையும் தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர். பின்னர், இவர்களுக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198316
  10. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198303
  11. கண்டியில் கைப்பற்றப்பட்ட மற்றொரு வாகனம் கண்டி (Kandy) பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனமொன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த வாகனத்தைச் சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறை இதன்படி, குறித்த ஜீப் ரக வாகனம் சட்டவிரோதமான முறையில் உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயஸ்ரீ உயன பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் https://ibctamil.com/article/another-jeep-seized-in-kandy-1731228667
  12. (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்களாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்புகள் இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டதுடன் ஆழமான கலாசார மற்றும் மூலோபாய இணைப்பிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்வதில் வேரூன்றிய தனித்துவமான சகோதரத்துவத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தெற்காசிய சுற்றுலா தலைமைத்துவ மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2023ஆம் ஆண்டில், இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களில் சுமார் 20 சதவீதமானோர் இந்தியாவை சார்ந்தவர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவடைந்து வரும் இணைப்பின் எடுத்துக்காட்டாகவே இந்த எண்ணிக்கை உள்ளது. வலுவான உட்கட்டமைப்பு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் இலக்குக்கான ஊக்குவிப்புகள் ஆகியவை இந்தியப் பயணிகளுக்கான முதன்மையான இடமாக இலங்கையின் நிலையை உயர்த்துவதுடன், உள்ளுர் வேலை வாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும். இந்தியாவின் வலுவான சந்தை வாய்ப்புகளில் இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 330,758 சுற்றுலாப் பயணிகளின் வருடாந்த வருகையினால் இலங்கையின் மிகப் பெரிய மூலச் சந்தையாக இந்தியா உள்ளது. இந்த வலுவான பங்களிப்பு சுமார் 200,000 நேரடி மற்றும் 300,000 மறைமுக வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்கிறது. பொருளாதாரத்துக்கான அந்நியச் செலாவணி வருமானத்தின் மூன்றாவது பெரும் மூலாதாரமாகவும் உள்ளது. இந்த எண்களை மேலும் விரிவுபடுத்துதல், உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான அரச மற்றும் தனியார் துறை முயற்சிகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. விடுமுறை நாட்களை இன்பமாக்க இலங்கைக்கு செல்லுமாறு இந்தியர்களை, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஊக்குவித்து வருகின்றார். இலங்கையை ஒரு சற்றுலா இலக்காக மேம்படுத்துவதற்கான இந்திய முயற்சிகளின் வெளிப்பாடாகவே இவை உள்ளன. மறுபுறம் ஒரு வெளிநாட்டு தலைவர் தனது சொந்த குடிமக்களை அவர்களின் தாய்நாட்டுக்கு வெளியே விடுமுறைக்கு செல்ல ஊக்கப்படுத்துவது மிகவும் அசாதாரணமானதாகும். இருப்பினும் இந்தியாவின் அத்தகைய ஊக்குவிப்பு எமது இருதரப்பு உறவின் அரவணைப்பை எடுத்துக்காட்டுகிறது. பாரம்பரிய சுற்றுலாவுக்கு அப்பால் குறிப்பிட்ட வளர்ச்சிப் பகுதிகளும் உள்ளன. அதாவது பௌத்த மரபுரிமை கேந்திரங்கள் மற்றும் இராமாயண தொடர்புப் பாதை என்பன இந்திய பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார இணைப்புகளுக்கு வழிவகுக்கின்றன. இந்தியாவின் அயோத்தி கோயிலை உதாரணமாகக் கொண்டு, சாத்தியமான உள்ளுர் சுற்றுலா உட்கட்டமைப்பில் முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானங்கள் உட்பட இந்திய மற்றும் இலங்கையை 250 விமான சேவைகள் இணைக்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இணைப்பு என்பது முக்கிய முன்னுரிமையாக உள்ளது. எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துதல், இந்தியா வழியாக பயணிக்கும் இந்தியர் அல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவாயிலாகச் செயல்படுவது, அதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்தளத்தை பன்முகப்படுத்துவது மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் பயன்படுத்தப்படாத சுற்றுலாத் திறனை விரிவுப்படுத்தல் என்பன அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/198300
  13. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன். சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு. அஞ்சலிக்க முடியாத நிலை பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பதை நான் இதை விட வேறு எங்கும் கண்டதில்லை. எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் (Sri Lanka Army) குடியிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள், அண்ணன் தங்கைகள். இவர்களை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது. ஜனாதிபதியிடம் கோரிக்கை இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பெளத்த குருமார்கள், சிங்கள மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி, சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மனநிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியும்” என தெரிவித்தார். https://ibctamil.com/article/anura-should-remove-the-army-from-thuyilum-illam-1731221639
  14. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார். எழுதியவர் சோஃபியா ஃபெரெய்ரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார். ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டிரம்பின் பரப்புரை பணிகளில் பங்கேற்றார். பிபிசியிடம் பேசிய அவர், "வருகின்ற புதிய நிர்வாகம், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியிடம் உள்ள அமைதியை நிலை நிறுத்துவதற்கான திட்டங்கள் என்ன என்று கேட்கும்" என்று கூறினார். "அவர் இங்கே வந்து, கிரைமியாவை திரும்பப் பெற்றால்தான் எங்களால் அமைதியாக இருக்க முடியும் என்று கூறினால், அவர் இந்த விவகாரத்தில் தீவிரமாக இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்," என்று கூறினார் ப்ரையன். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்து பேசிய போது டொனால்ட் டிரம்பின் பிரதிநிதியாக ப்ரையன் பேசவில்லை என்று கூறினார். "கிரைமியாவை மீட்பது இனி சாத்தியமில்லை " 2014-ஆம் ஆண்டு ரஷ்யா, கிரைமியா தீபகற்பத்தை தன்னுடைய நாட்டோடு இணைத்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, யுக்ரேன் மீது முழுவீச்சில் போர் தொடுத்த ரஷ்யா, யுக்ரேனின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிராந்தியங்களை கைப்பற்றியது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக போரை நிறுத்துவது குறித்தும், யுக்ரேனுக்கான உதவிகளை குறைப்பது குறித்தும் பேசி வருகிறார். அவரைப் பொறுத்தமட்டில் யுக்ரேனுக்கு ராணுவ ரீதியாக அளிக்கும் உதவிகள் அமெரிக்காவின் வளங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது வரை, இந்த போரை அவர் எவ்வாறு நிறுத்துவார் என்பது குறித்து ஏதும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் யுக்ரேன் விவகாரத்தில் தன்னுடைய ஆலோசகர்களின் கருத்துகள் அனைத்தையும் அவர் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பிற்கு ஆலோசகராக 2016 மற்றும் 2024 தேர்தல்களில் செயல்பட்ட ப்ரையன், பிபிசியிடம் பேசும் போது யுக்ரேனின் கிழக்கு பிராந்தியம் குறித்து ஏதும் பேசவில்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கிரைமியாவைப் பெறுவது சாத்தியமற்றது என்றும் அமெரிக்காவின் இலக்கு அது அல்ல என்றும் கூறினார். ஜெலன்ஸ்கி , எங்களுக்கு கிரைமியா கிடைத்தால் மட்டுமே சண்டையிடுவதை நிறுத்துவோம் என்று கூறினால் அவருக்காக நாங்கள் ஒரு செய்தியை வைத்திருக்கிறோம். அது என்னவென்றால், "கிரைமியா ஏற்கனவே கையைவிட்டு சென்றுவிட்டது," என்று பிபிசியின் உலக சேவையில் அவர் தெரிவித்தார். கிரைமியாவை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்க வீரர்கள் போரிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை நீங்கள் தனியாக தான் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா தன்னுடைய துருப்புகளை யுக்ரேனுக்கு போருக்காக அனுப்பவில்லை. கீவும் அமெரிக்க துருப்புகளை அனுப்புங்கள் என்று கோரிக்கையும் வைக்கவில்லை. தங்களுடைய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்திருக்கிறது யுக்ரேன். யுக்ரேன் மக்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்த அவர், அவர்கள் சிங்கங்களைப் போன்ற பலமான இதயங்களைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும், "ஆனால் அமெரிக்காவின் முன்னுரிமை அமைதியை நிலைநிறுத்துவதும், உயிரிழப்புகளை தடுப்பதும் தான்," என்றார். "அமைதிக்கான உண்மையான பார்வை என்ன? அது வெற்றி பெறுவதில் அல்ல. மாறாக அமைதியை உருவாக்கக் கூடியது. நாம் ஒரு நேர்மையான உரையாடலை தொடங்குவோம் என்று தான் யுக்ரேனிடம் கூற இருக்கிறோம்," என்றார் அவர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யுக்ரேன் அதிபருடன் டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் மீது அதிகரிக்கும் அழுத்தம் இதற்கு பதில் அளித்த, ஜெலென்ஸிகியின் ஆலோசகர் திம்த்ரோ லைட்வைன், ப்ரையனின் கருத்துகள் அமைதிக்காக யுக்ரேன் மீது அழுத்தம் தருவது போன்று இருக்கிறது. உண்மையில் ரஷ்ய அதிபர் புதின் தான் போரை நீட்டிக்கிறார்," என்று கூறினார். "2022ம் ஆண்டில் இருந்தே நாங்கள் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். சாத்தியமான முன்மொழிவுகளை தான் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், அமைதி வேண்டும் என்றும், அது சாத்தியமானது என்றும் ரஷ்யாவைத் தான் கேட்க வைக்க வேண்டும்," என்று அவர் கூறினார். டிரம்பின் வருங்கால நிர்வாகத்தை அமைக்க இருக்கும் குழுவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து பேசும் போது, "ப்ரையன் பிரசார நிகழ்வுக்காக நியமிக்கப்பட்ட ஒரு ஒப்பந்ததாரர். அவர் டொனால்ட் டிரம்பின் கீழ் பணியாற்றவும் இல்லை. அவரின் கருத்துகளை பிரதிபலிக்கவும் இல்லை" என்று கூறினார். அதிகாரத்திற்கு வந்த பிறகு, நெருங்கிய வட்டங்களுடன் அமர்ந்து இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து டொனால்ட் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில், டிரம்பின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய, பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர், "ட்ரம்பின் வட்டாரத்தில் ஒருவர் எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் சரி, டிரம்பின் திட்டங்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக கூறினாலோ, அல்லது மாறுபட்ட கருத்துகளை கொண்டிருப்பதாக தெரிவித்தாலோ, அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எடுக்கப்படும் எந்த முடிவையும் தானாக எடுக்கும் பழக்கத்தை டிரம்ப் கொண்டிருக்கிறார் என்றும், பல நேரங்களில் அந்த நொடியில் எடுக்கப்படும் முடிவுகளாகவே அவை இருந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெலென்ஸிகியுடன் போனில் உரையாடினார் டிரம்ப். அந்த அழைப்பில் ஈலோன் மஸ்க்கும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு நாட்டு தலைவர்களும் போனில் உரையாடினார்கள் என்று யுக்ரேனின் அதிபர் அலுவலக தரப்பில் இருந்து பிபிசியிடம் தெரிவிக்கபப்ட்டது. "மிக முக்கியமான விவகாரங்களுக்கான அழைப்பு போன்று அது இல்லை. அமைதியான முறையில் மகிழ்ச்சியான ஒரு உரையாடலாக அது இருந்தது," என்று யுக்ரேன் அதிபர் அலுவலக தரப்பில் கூறப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ம் ஆண்டில் இருந்தே நாங்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று யுக்ரேன் கூறுகிறது. போரில் யுக்ரேன் பின்வாங்கினால் என்ன நடக்கும்? புதினுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஜனநாயகக் கட்சியினர் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். யுக்ரேனை அடிபணிய வைக்கும் நோக்கில் தான் அவர் போரை அணுகுகிறார் அது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆபத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும் என்றும் குற்றம்சுமத்துகின்றனர். எஸ்தோனியாவின் பிரதமர் பிபிசியிடம் பேசும் போது, யுக்ரேன் இந்த போரில் பின்வாங்கிவிட்டால், ரஷ்யாவின் பசி அதிகரிக்கத்தான் செய்யும் என்றார். சண்டே வித் லாரா குவென்ஸ்பெர்க் என்ற பிபிசி நிகழ்ச்சியில் பேசிய கிறிஸ்டன் மைக்கேல், "நீங்கள் பின்வாங்க முடிவு செய்துவிட்டால், அதற்காக அதிகம் இழக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்," என்று கூறினார். "நீங்கள் எங்காவது ஒரு எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்து, அங்கே படைகளைக் கொண்டு அந்த பகுதியை காக்க நினைத்தால் ரஷ்யாவும் அதையே செய்யும். ஆனால் அதனை பொறுமையாக செய்யாது. அது திட்டத்திலேயே இல்லை" என்றார் அவர். கடந்த மாதம் 'வெற்றிக்கான திட்டம்' ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்;gபித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி. அதில், யுக்ரேனின் பிராந்தியங்களையும் இறையாண்மையையும் இணைக்க மறுத்தல் என்ற சொற்றொடரும் இடம் பெற்றிருந்தது. தேர்தல் பிரசாரங்களின் போது ஒரே நாளில் போரை நான் நிறுத்திவிடுவேன் என்று டிரம்ப் கூறிக் கொண்டே இருந்தார். ஆனால், அதனை அவர் எவ்வாறு செய்வார் என்பது குறித்த விவரம் எதையும் வழங்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கலாம். ஆனால் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் அங்கே இருக்க வேண்டும் என்று, டிரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. "போரில் தான் இழந்த பிராந்தியங்களை மீட்கும் செயல்பாடுகளை யுக்ரேன் கைவிடக் கூடாது. ஆனால் அது தற்போதைய எல்லைகளின் அடிப்படையில் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாரத்தின் துவக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை வாழ்த்தினார் புதின். 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேன் மீது துவங்கிய படையெடுப்பிற்கு பிறகு யுக்ரேனுக்கு பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆதரவையும் ப்ரையன் விமர்சனம் செய்தார். "உண்மை நிலவரம் என்னவென்றால், பைடன் நிர்வாகமோ, ஐரோப்பிய நாடுகளோ இந்த போரில் யுக்ரேன் வெல்வதற்கு தேவையான ஆயுதங்களை வழங்கவில்லை. யுக்ரேன் வெல்வதற்கு தடையாக இருக்கும் அம்சங்களையும் அவர்கள் அகற்றவில்லை" என்று குற்றம்சுமத்தினார் அவர். இந்த ஆண்டின் துவக்கத்தில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் யுக்ரேனுக்கு உதவ 61 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்தது. யுக்ரேனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. 2022 பிப்ரவரி துவங்கி 2024 ஜூன் வரையான காலகட்டங்களில் 55.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது அல்லது தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பான கியெல் இன்ஸ்டிட்யூட் ஃபார் தி வேர்ல்ட் எக்கானமி தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98edn239lpo
  15. இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை, யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கத்தார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கத்தாரின் வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்பும் இதனை நிராகரித்துள்ளது. ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான இணக்கப்பாட்டினை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள கத்தார் கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் இணக்கத்திற்கு வராவிட்டால் அனுசரணை முயற்சிகளை இடைநிறுத்தப்போவதாக தெரிவித்திருந்தது என கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/198311
  16. இவர் வென்றால் சுகாதாரத்துறை ஊழல்களுக்கு முடிவு கட்டலாம், அர்ச்சுனாவை விட இவர் பொருத்தமாயிருப்பார் என நம்புகிறேன். யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பதில் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.
  17. அமெரிக்க அதிபரை நம்பினோர்....
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது எழுதியவர், ஜெஸிகா பிரவுன் பதவி, பிபிசி மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. "நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்" என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா? பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிளகாயாகவோ அவற்றை நாம் உட்கொள்கிறோம். ஆனால், சில ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த உணவுகளாக அவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. உடல்நல பிரச்னைகளை தடுக்கும் பொருட்டு, 2016 தேர்தல் பிரசாரங்களின் போது நாளொன்றுக்கு ஒரு மிளகாயை ஹிலாரி கிளிண்டன் சாப்பிட்டதாக தகவல்கள் உள்ளன. ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்டு வரும் மஞ்சள், உலகம் முழுவதிலும் உள்ள காபி கடைகளில் "கோல்டன் லேட்டே" (மஞ்சள் கலந்த பால்) எனும் பெயரில் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பெருந்தொற்று காலத்தில் மஞ்சள் "நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்", வியாதியிலிருந்து நம்மை காக்கும் என்றும் மெசேஜ்கள் பரவின. அந்த மஞ்சள், ஒரு பிரபல சமையல் கலைஞர் கூற்றுப்படி "எங்கும் உள்ளது." இதனிடையே, 2013-ல் "பெயோன்ஸ் டயட்" எனும் தவறான ஆலோசனையில் இருந்து (முற்றிலும் தாவர வகையிலான உணவுப்பழக்கம்) இருந்து கெயென் மிளகாய் (ஒருவித குடை மிளகாய்) இன்னும் மீளவில்லை. அதன்படி, அந்த மிளகாயை மேப்பிள் சிரப், எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என கூறப்பட்டது. ஆனால், நம்முடைய உணவில் இந்த மசாலா பொருட்கள் ஏதேனும் பலன்களை வழங்குகின்றதா? உடல்நல குறைவு ஏற்படுவதிலிருந்து தடுக்கிறதா? அல்லது இவற்றில் ஏதாவது உண்மையில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா? மிளகாயின் பலன்கள் மிகவும் அறியப்பட்ட, பரவலாக பயன்படுத்தப்படும் மசாலா பொருள், மிளகாய் தான். நம்முடைய உடல்நலனில் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அதனால் பலன்கள், மோசமான விளைவுகள் என இரண்டும் ஏற்படும் என அவை கண்டறிந்துள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நம் உடலில் மிளகாய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பல ஆராய்ச்சிகள் உள்ளன, ஆனால் அதன் முடிவுகள் கலவையாக உள்ளன கேப்சைசின் (Capsaicin) என்பதுதான் மிளகாயில் உள்ள முக்கிய பொருள். நாம் மிளகாயை சாப்பிடும்போது, கேப்சைசின் மூலக்கூறுகள், நம் உடலின் வெப்பநிலை ஏற்பிகளுடன் வினைபுரிந்து, காரமான உணர்வை உருவாக்க மூளைக்கு சமிக்ஞை செய்கின்றன. நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு கேப்சைசின் உதவலாம் என சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2019ல் மேற்கொள்ளப்பட்ட இத்தாலிய ஆராய்ச்சியில், மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை வாரத்திற்கு நான்கு முறை உட்கொண்டவர்களுக்கு, அதை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறியப்பட்டது. (ஆராய்ச்சியில் புகைப்பிடித்தல், உடற்பயிற்சி, ஒட்டுமொத்த உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் பழக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.) சீனாவில் கடந்த 2015-ல் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மிளகாயை உட்கொள்வது இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதில், தினந்தோறும் காரமான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு, வாரத்தில் ஒருமுறைக்கும் குறைவாக உட்கொள்பவர்களை விட இறப்புக்கான ஆபத்து 14% குறைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஞ்சள் கலந்த பால் உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளது "காரமான உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, இறப்புக்கான, குறிப்பாக புற்றுநோய், இதய நோய் மற்றும் மூச்சு சம்பந்தமான நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கான குறைவான ஆபத்துடன் தொடர்புடையது என்பதுதான் இதில் முக்கியமான கண்டுபிடிப்பு," என்கிறார், ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் ஊட்டச்சத்து பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான லூ குய். எனினும், குறுகிய காலத்தில் அதிகமான மிளகாய்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் அல்லது மூச்சு சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கும் என்பது இதன் அர்த்தம் அல்ல. இந்த சீன ஆய்வு ஒவ்வொரு ஏழு ஆண்டும் மக்களை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம். ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் ஆரோக்கியத்தில் மிளகாய்கள் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ ஏற்படவில்லை, காலப்போக்கில் தான் ஏற்பட்டுள்ளது. முதலில், ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்கெனவே ஆரோக்கியமாக இருந்தார்கள். வயது, பாலினம், கல்வி நிலை, திருமண நிலை, உணவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் உடலியக்க செயல்பாடு உள்ளிட்ட வாழ்வியல் முறை காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மிளகாயை உட்கொள்வதன் விளைவுகளை எல்லாவற்றிலிருந்தும் பிரிக்க முயன்றார் குய். மிளகாயை உண்பதால் நோய்களுக்கான ஆபத்து குறைவதற்கு கேப்சைசின் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார் "காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் போன்ற சில பொருட்கள், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர். மேலும், "இது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை விவரிக்க உதவி செய்யலாம்," என்கிறார் குய். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிளகாயில் உள்ள கேப்சைசின் உயர் ரத்த அழுத்தம், அழற்சி போன்றவற்றை மேம்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது கேப்சைசின் நாம் எரிக்கும் ஆற்றலின் அளவை அதிகரித்து, பசி உணர்வை குறைக்கும் என, சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தார் பல்கலைக்கழகத்தின் மானுட ஊட்டச்சத்து துறை இணை பேராசிரியர் ஸுமின் ஷி, மிளகாய் உடல்பருமன் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாகவும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளார். அறிவாற்றல் செயல்பாட்டில் மிளகாய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் அவர், அதிலும் தான் மூன்றாவது முறையாக வெற்றியடையலாம் என எதிர்பார்த்தார். ஆனால், சீனாவில் வயதுவந்தோரிடையே அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மிளகாய் இரண்டுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த போது, அதிகமாக மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மோசமான அறிவாற்றல் செயல்பாடு இருந்ததாக கண்டறிந்தார். நினைவாற்றலில் அதன் விளைவு அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு 50கி அளவு மிளகாய் எடுத்துக் கொள்ளும் போது மோசமான நினைவாற்றலுக்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வில் ஈடுபட்டவர்களே தெரிவிக்கும் தரவுகள் நம்பகத்தன்மையற்றது என பரவலாக கருதப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும். மிளகாயை உட்கொள்ளும் போது ஏற்படும் காரமான உணர்வு நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. இந்த தன்மை, மிளகாய் ஏன் அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையது என்பதற்கான சில பார்வைகளை வழங்குகின்றது. நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு தாவரங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியே இந்த காரத்தன்மை. "சில தாவரங்கள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கசப்புத் தன்மை வாய்ந்ததாகவோ அல்லது காரமானதாகவோ பரிணமித்தன. தாவரங்கள் தன்னைத்தானே நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றிக்கொள்கின்றன," என பிரிட்டனின் நியூகேசில் பல்கலைக்கழகத்தில் நியூட்ரிஷன் ரிசர்ச் சென்டர் பாப்புலேஷன் ஹெல்த் சயின்சஸ் எனும் மையத்தின் மூத்த விரிவுரையாளர் கிர்ஸ்டென் பிராண்ட் தெரிவிக்கிறார். ஆனால், இந்த சேர்மங்கள், பூச்சிகளை விட மனிதர்களிடத்தில் குறைவான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. "கேஃபின் போன்று சிறிதளவு நச்சுத்தன்மை நல்லதே. கேஃபின், நம்முடைய வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது, இதனால் நாம் அதிக விழிப்புடன் இருக்கிறோம்," என்கிறார் அவர். "எனினும், அதிகளவு நச்சு நமக்குக் கேடானது." என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சுவையை அளிக்கும் உணவுப்பொருட்களில் உள்ள சேர்மங்கள், மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல என வாதிடுகிறார், பிர்மிங்காமில் உள்ள ஆஸ்டன் மெடிக்கல் ஸ்கூலில் கற்பிக்கும் மூத்த ஆய்வு மாணவரும் உணவியல் நிபுணருமான டுவேன் மெல்லர். இவர் பிரிட்டனில் உள்ளார். "உணவில் நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் நிறைய நிறமிகளும் கசப்புத்தன்மை வாய்ந்த உணர்வும் தாவரங்களை பூச்சிகள் சாப்பிடாமல் பாதுகாப்பதற்காக உள்ளன. இதன் நச்சுத்தன்மைக்கு நாம் பழகிவிட்டோம். கருந்தேநீரில் உள்ள டன்னின்கள் (tannins) உட்பட இத்தகைய தாவரங்களின் சேர்மங்களை அனுபவிக்க நாம் பழகிவிட்டோம், ஆனால் சில உயிரினங்கள் அதற்கு பழகவில்லை." என்று அவர் கூறுகிறார். மற்றொரு புறம்,இத்தகைய மசாலா பொருட்கள் சிலவற்றில் பலனளிப்பவையாக இருந்தாலும், வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வழக்கமாக நாம் அதை உட்கொள்வதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு நாம் இத்தகைய மசாலாக்களை உண்பதில்லை பாலிஃபெனாலை (polyphenols) எடுத்துக்கொள்ளுங்கள்: இது, அழற்சிக்கு எதிரான விளைவுகளை கொண்டுள்ள பல தாவரங்களில் காணப்படுகின்றன. இத்தகைய பாலிஃபெனால் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை பொருத்து அந்த மசாலா பொருட்களின் ஆரோக்கிய பலன்கள் தொடர்புப்படுத்தப்படுகின்றன. எனினும், 2014-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த சேர்மத்தை குறைவாக கொண்டுள்ள மசாலா பொருளை சாப்பிடும்போது அதன் பலன்கள் குறையுமா என்பதில் தெளிவில்லை என கூறுகிறது. சில ஆராய்ச்சிகள் ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளன. 2022-ம் ஆண்டு 11 ஆய்வறிக்கைகளை ஆராய்ந்ததில், கேப்சைசின் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வதில் உள்ள ஆரோக்கிய பயன்கள் தெளிவாகவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் "உயர் தரத்தில் அமையவில்லை" என்றும் தெரியவந்தது. மஞ்சளின் பலன்கள் மனித ஆரோக்கியத்திற்கு அதிக பலன்களை அளிக்கக்கூடிய ஒன்றாக பரவலாக கருதப்படும் மற்றொரு மசாலா பொருள் மஞ்சள். இது, அதிலுள்ள குர்கியூமின் (curcumin) எனும் பொருளுக்காக அவ்வாறு கூறப்படுகிறது. மஞ்சளில் காணப்படும் இந்த சிறிய மூலக்கூறு, மாற்று மருத்துவத்தில் அழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் மன சோர்வு மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மஞ்சளின் நற்குணங்களுக்கான ஆதாரங்களுக்கு போதாமை நிலவுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகளில், குர்கியூமின் புற்றுநோய்க்கு எதிரான அம்சங்களை கொண்டுள்ளதாக ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வக சூழல் என்பது, மனித உடலில் இருந்து அதிகம் வேறுபட்டது. அது பரிமாறும் அளவை பொறுத்து, எந்த ஆரோக்கியமான விளைவுகளையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் குறைவானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மற்ற மசாலா பொருட்களுக்கும் பொருந்தலாம். இருந்தாலும், சில மசாலா பொருட்களை அதிகளவு உட்கொள்ளும்போது நேர்மறையான முடிவுகள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, 2023-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினமும் இஞ்சியை பிற்சேர்க்கையாக (supplement) எடுத்துக்கொள்வது, ஆட்டோஇம்யூன் உள்ளவர்களிடையே (நோய் கிருமிகளைத் தாக்காமல் உடல் உறுப்புகளையே நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்குவது) அழற்சியை கட்டுப்படுத்தவும் லூபஸ் (lupus) மற்றும் ருமனாய்டு ஆர்த்ரைட்டீஸ் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும் உதவுவதாக கண்டறிந்துள்ளது. மேற்கு நாடுகளில் மஞ்சள் போன்ற மசாலா பொருட்களில் குணப்படுத்தும் அம்சங்கள் உள்ளதாக கருதப்பட்ட இடைக்கால கட்டத்தில், மாற்று மருந்தாக அவை கடைசியாக பயன்படுத்தப்பட்டதாக, யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் பால் ஃப்ரீட்மேன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கத்திய நாடுகள் இடைக்காலகட்டத்தில் மஞ்சள் குணப்படுத்த உதவும் என பரவலாக கருதப்பட்டது "மசாலா பொருட்கள் உணவின் பண்புகளை சமன்படுத்த பயன்படுத்தப்பட்டன. உணவு சூடு, குளிர்ச்சி, ஈரப்பதம் மற்றும் வறட்சியான பண்புகள் உள்ளவையாக கருதப்பட்ட நிலையில், அவற்றை சமன்படுத்த வேண்டும் என நினைத்தனர்," என்கிறார் அவர். உதாரணமாக, மீன் குளிர்ச்சியானது, ஈரப்பதம் கொண்டது என கருதப்பட்ட நிலையில், மசாலாக்கள் சூடு மற்றும் வறண்ட தன்மை கொண்டவை. உணவை மருந்தாக பயன்படுத்துவதும் அதன் பண்புக்கேற்ப அவற்றை சமன்செய்வதும் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய கோட்பாடாகும். இது, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. நிறைய மேற்கு நாடுகளில், இத்தகைய கருத்துகள் புதிதானவை. "உணவை சமநிலை செய்யும் இந்த கருத்துரு, புதிய, நவீன மருத்துவத்துடன் பகிரப்பட்டுள்ளது," என்கிறார் அவர். "மசாலா பொருட்களுடன் நமக்கிருக்கும் நவீன கவர்ச்சி, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, இடைக்காலத்தை நமக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்டிபயாடிக் போன்ற நவீன மருந்துகளுக்கும் மாற்று மருத்துவத்திற்கும் (superstitious medicine) இடையே தடுப்பு சுவர் இருந்தது." தன் வேலையின் ஒரு பகுதியாக இந்த மூலக்கூறுகள் புதிய மருந்துகளுக்கான சேர்மங்களாக இருக்க முடியுமா என ஆராய்கிறார், மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு குறித்த மையத்தின் முன்னாள் உதவி ஆய்வு பேராசிரியரான கேத்ரின் நெல்சன். குர்கியூமினின் விளைவுகள் குறித்த கூற்றுகள் குறித்து அவருக்கு தெரியவந்ததால் அதுகுறித்து ஆராய அவர் முடிவு செய்துள்ளார். "சோதனைக் குழாய்களில் வளரும் செல்களில் இந்த சேர்மங்களை சேர்த்து, அச்செல்களில் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உழைப்பை செலுத்துகின்றனர்," என்கிறார் அவர். ஆனால், குர்கியூமின் ஒரு "பயங்கரமான" மூலக்கூறு என அவர் கூறுகிறார். ஏனெனில், அது செரிமானம் ஆனவுடன் உடல் அதை பயன்படுத்த முடியாது என்கிறார் அவர். சிறுகுடலால் அதை எளிதாக உறிஞ்ச முடியாது. மேலும், சிறு மற்றும் பெருங்குடல்களில் உள்ள புரோட்டீன்களுடன் கலக்கும் போது அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். அதனால் பெரும் பலன் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குர்கியூமினை சிறுகுடலால் எளிதாக உறிஞ்ச முடியாது மஞ்சளில் உண்மையாக பலனளிக்கக் கூடிய ஒன்று உண்டு, ஆனால், அது குர்கியூமின் அல்ல என்கிறார் அவர். ஓர் உணவில் மஞ்சள் சேர்த்து சமைக்கும்போது, அது மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு, சூடுபடுத்தும்போது, அதன் வேதியியல் சேர்மங்கள் மாறும் என்கிறார் அவர். "உண்மையில் மஞ்சளில் நாம் பார்க்க வேண்டியது குர்கியூமின் அல்ல. அது மட்டும் மஞ்சளில் இல்லை. அதனை வேதியியல் ரீதியாக மாற்றப்படவோ அல்லது நன்மை பயக்கும் வகையில் ஏதாவது சேர்க்கப்படவோ வேண்டும்." நிறைய மஞ்சள் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல என்று கூறும் அவர், ஆனால் சுய-மருந்தாக அதை உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். விளைவுகளும் காரணிகளும் மிளகாய் மற்றும் மஞ்சள் குறித்து பரவலாக ஆராயப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சோதனைகள் அதனை உட்கொள்வதால் ஏற்படும் வெவ்வேறு வித ஆரோக்கியமான விளைவுகளை மட்டுமே ஒப்பிட்டுள்ளது. இவை, காரணத்தை விளைவிலிருந்து பிரிக்காது. மேலும், ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு மனித உடலுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊட்டச்சத்து தொடர்பான பல ஆராய்ச்சிகள் போலவே, காரணத்திலிருந்து விளைவை பிரிப்பது கடினமானது. கடந்த 2019-ல் மிளகாய் உட்கொண்டால் இறப்புக்கான ஆபத்து குறைவாக கூறப்பட்ட ஆராய்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அது அவதானிப்புதான். எனவே, மிளகாய் உட்கொண்டால் நீண்ட காலம் வாழ முடியுமா, ஆராய்ச்சியில் ஏற்கனவே ஆரோக்கியமான மக்கள் மிளகாய்களை உட்கொண்டுள்ளனரா என்பதை அறிவது கடினம். அதுகுறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இத்தாலியர்கள் மற்றும் மத்திய தரைக்கடல் என வெவ்வேறு கலாசாரங்களில் மிளகாயை எப்படி உண்கின்றனர் என்பதில்தான் இது அடங்கியிருப்பதாக, இத்தாலியில் உள்ள மத்திய தரைக்கடல் நரம்பியல் மையத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் ஆய்வாசிரியருமான மரியாலௌரா பொனாசியோ கூறுகிறார். "மத்திய தரைக்கடல் நாடுகளில் மிளகாய் பரவலாக உட்கொள்ளப்படுகிறது," என்கிறார் பொனாசியோ. "பெரும்பாலும் பாஸ்தா, பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடனோ சேர்த்து உண்ணப்படுகிறது." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய தரைக்கடல் நாடுகளில் பாஸ்தா, காய்கறிகள், பருப்புகளுடன் மிளகாய் பரவலாக உண்ணப்படுகிறது அவற்றை பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடன் சாப்பிடலாம் என்பது, மசாலா பொருட்கள் எப்படி மறைமுகமாக பலனளிக்கலாம் என்பதற்கான ஓர் உதாரணம். பர்கர்களில் மசாலா கலவையைச் சேர்ப்பது, மசாலா இல்லாமல் பர்கரை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் ஒரு நபரின் உடலில் குறைவான நிலையற்ற மூலக்கூறுகளை (free radicals) உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், மேலும் இறைச்சியை புற்றுநோய் காரணியாக மாற்றலாம் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஆனால், அதன் பலன்களை மசாலா பொருட்களின் பதப்படுத்தும் தன்மைகளை பொறுத்து எளிமையாக விளக்கலாம், என இந்த ஆய்வில் ஈடுபடாத மெல்லர் கூறுகிறார். "இறைச்சியில் மசாலா பொருட்களை சேர்ப்பது, இறைச்சியை பதப்படுத்த நன்கு அறியப்பட்ட வழியாகும்," என்கிறார் அவர். "மசாலா பொருட்களின் பலன்கள் நேரடியானதாக அல்லாமல், அதன் பதப்படுத்தும் தன்மையில் அதிகமாக இருக்கலாம். இரு வழிகளிலும் உண்ணும் உணவை ஆபத்து குறைவானதாக ஆக்குவதிலிருந்து நாம் பலனடையலாம்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரும்பாலும் உப்புக்கு பதிலாக இம்மசாலாக்கள் பயன்படுத்தப்படுகிறது, எனவே அதன் பலன்கள் நமக்கு நேரடியாக மட்டும் கிடைப்பதில்லை நாம் எதனுடன் அந்த மசாலா பொருட்களை சாப்பிடுகிறோம் என்பதிலிருந்து அதன் பலன் நமக்குக் கிடைப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உதாரணமாக, உப்புக்கு பதிலாக அவற்றை நாம் பயன்படுத்தும் போக்கு, என்கிறார், நியூ யார்க்கில் உள்ள என்.ஒய்.யூ லங்கோன் ஹெல்த் எனும் மருத்துவ மையத்தின் மருத்துவ உதவி பேராசிரியர் லிப்பி ராய். "மசாலாக்கள் உணவை சுவையானதாக மாற்றுகின்றன. இது, உப்புக்கான ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்," என்கிறார் அவர். உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு பொருட்களுக்கு மாற்றாக மசாலாக்களை பயன்படுத்துவது, வெகுஜன உணவுகளை சுவையானதாக ஆக்குகின்றன என கடந்தாண்டு ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். காய்கறிகளுடன் மிளகாயை உண்ணும் போக்கு நம்மிடையே உள்ளது. இதுவும் நமக்கு பயனளிக்கும். எனவே, மஞ்சள் கலக்கப்பட்ட பால், (கோல்டன் லேட்டே) எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. சில காய்கறிகளை மசாலா தூவி சாப்பிடுவது நல்லது. எந்தவொரு நோயையும் தடுக்கவோ அல்லது போராடுவதற்கோ, நாம் நிச்சயமாக அவற்றை நம்பக்கூடாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdj3zgrg2plo
  19. கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் : சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார் தெரிவிப்பு யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொனானம்பலம், செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோர் பொலிஸாருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக பார்வையிட்டு அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பின்னர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது. பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனினிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சென்று வந்து மிலேச்சத்தனமான விதத்தில் தாக்கியுள்ளதுடன் கடும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்றவேளை தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து மிலேச்சதனமாக தாக்கியுள்ளனர் என அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அவர் எம்மிடம் தெரிவித்தார். ஆனால் அடிபட்ட பிரதேசத்தில் உள்ள நிலைமைகளை பார்க்கின்ற போது சி.சி.ரி.வி. ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் நாங்கள் அறிய முடிகின்றது. இந்த சம்பவமானது எமக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கிற்கு உள்ளே பொலிஸார் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றவர்கள் காடையர்களாக செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. உண்மையிலேயே இது பொதுப்பிரச்சினை. தெற்கிலே விதிமுறைகளை மீறி செயற்படுகின்ற பொலிஸார் தண்டனைக்காக வடக்கு பகுதிக்கு இடமாற்றப்படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. வடகிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்ற நிலையில் அவர்கள் எப்படி பிழையாக நடந்துகொண்டாலும் அதனை மூடிமறைக்கின்ற வகையில் மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் பொலிஸாரை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் தெளிவாக காண்பிக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/198292
  20. தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய நிதிய குழு (லியோ நிரோஷ தர்ஷன்) 17ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் போது அடுத்த கட்ட கடன் வசதி குறித்து அரச தரப்பினருடன் கலந்துரையாடப்பட உள்ளது. குறிப்பாக நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் சமகால மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் அரசாங்கத்தின் ஈடுப்பாடுகளையும் கொழும்பு விஜயத்தின் போது நாணய நிதிய குழு அவதானத்திற்கு உட்படுத்த உள்ளது. அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்ட வரைபை நாணய நிதியம் கோரியுள்ளது. வாஷிங்கடனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் சார்பில் கலந்துக்கொண்டிருந்த மத்திய வங்கிய ஆளுநர் கலாநிதி நந்தலல் வீரசிங்க மற்றும் திறைச்சேறி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதியளித்திருந்தனர். இதன் பிரகாரம் மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான மீளாய்வுகளை நிறைவுப்படுத்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியதுள்ளது. இதற்கு அமையவே நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கை வருகின்றது. இலங்கையின் ஒப்புதல்களின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இலங்கை விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/198296
  21. யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள். நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதால் நாங்கள் நின்றுவிட்டோம். கீழே விழுந்தவர் மது அருந்தியிருந்தார். கீழே விழுந்தவர் மது அருந்தியுள்ளதாகவும் நீங்கள் பயப்பட வேண்டாமென அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரிடம் வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டார்கள். ஆனால் அவர் போக்குவரத்து பிரிவினர் வந்தால் தான் கொடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கவில்லை. எனது கணவரின் கையைப் பிடித்து இழுத்தார்கள் நான் விடவில்லை. எனக்கு கறுப்புநிற ரிசேர்ட் அணிந்த பொலிஸ்காரர் அடித்தார். இரண்டுமாத குழந்தையுடன் இருந்த எனக்கு அடித்தார்கள். நான் மயிலிட்டியில் இருக்கும் அண்ணாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அண்ணா சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் என்னவிடயம் என கேட்க அவருக்கும் அடித்துவிட்டு அக்காவுக்கும் அடித்தார்கள். எனது இரண்டுமாத குழந்தை வீதியில் விழுந்த நிலையில், எனது பிள்ளையை தூக்கி பற்றைக்குள் எறிந்தார்கள். இதனை நான் தட்டிக்கேட்க என்னை அடித்துவிட்டு வெள்ளை ரிசேர்ட் அணிந்தவர் எனது போனை தூக்கி எறிந்தார், பொதுமக்கள் தான் எனது தொலைபேசியை எடுத்துதந்தார்கள். எனது கணவர் பிள்ளையை வேனிற்குள் கொண்டு போக எனது பிள்ளையை கீழே போட்டுவிட்டு எனது கணவரிற்கு கையால் அடித்தார்கள். பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டுபோக நாம் முயன்றபோது நீலநிற ரிசேர்ட் அணிந்தவர் வாகனத்தை இரும்பு கம்பியுடன் மறித்துக்கொண்டு நின்றார். வாகனத்தை எடுத்தால் உடைத்துவிடுவோம் என்றார். அண்ணா பிள்ளையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எங்கள் இரண்டு பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததுடன் கதிரையாலும் தாக்கினார்கள். எனக்கு புற்றுநோய் உள்ளது. எனது பிள்ளை பிறந்து இரண்டு மாதம். எங்களிற்கு நியாயம் பெற்றுதாருங்கள். எங்கள் வாகனத்தை மீட்டு தாருங்கள் என்றார். https://www.virakesari.lk/article/198290
  22. எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மடத்தின் ரூ.1,000 கோடி சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக சிலர் புகார் கூறியுள்ளனர். திருமணம் நடந்தாலும் தனது மனைவி கர்நாடகாவிலேயே இருப்பார், மடத்துக்குள் உரிமை கோர மாட்டார் என்கிறார், சூரியனார் கோயில் ஆதீனம். சூரியனார் கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது ஏன்? இந்தச் சர்ச்சை குறித்து ஆதீனத்தின் மனைவி சொல்லும் பதில் என்ன? சூரியனார் கோயில் ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்று சூரியனார் கோயில் ஆதீனம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள இந்த மடம், சிவாக்ர யோகி என்பவரால் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய சமஸ்தானங்களை ஆட்சி செய்த மன்னர்களும் தஞ்சை சரபோஜி மன்னர்களும், சூரியனார் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த மடத்தில் பிரம்மசாரிகளும் இல்லறத்தைக் கைவிட்டு துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களும் ஆதீனங்களாக இருந்துள்ளனர். இதை ‘சிவாச்சாரியார்கள் மடம்’ எனவும் கூறுகின்றனர். சூரியனார் கோயில் மடத்தை நிர்வகிக்க முடியாத காரணத்தால், சிலகாலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தம்பிரான்களாக இருந்தவர்கள், சூரியனார் கோயில் மடத்தின் ஆதீனங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு சூரியனார் கோயில் ஆதீனமாக இருந்த சங்கரலிங்க தேசிக சுவாமிகள், பரிபூரணம் (மரணம்) அடைந்ததைத் தொடர்ந்து 28-வது ஆதீனமாக மகாலிங்க தேசிகப் பண்டார சுவாமிகள் நியமிக்கப்பட்டார். படக்குறிப்பு, கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடம் கர்நாடக பெண்ணுடன் திருமணம் இந்தநிலையில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கர்நாடகாவில் வசித்து வரும் ஹேமாஸ்ரீ என்பவரை, சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இருவருக்கும் கர்நாடகாவில் திருமணம் நடந்தது தொடர்பான பதிவுச் சான்றிதழ், இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்திருந்தார், சூரியனார் கோயில் ஆதீனம். அதில், "மடத்தின் விதிகளை மீறிப் புதிதாக நான் எதையும் செய்யவில்லை. நடந்த சம்பவங்களை மறைக்கவும் விரும்பவில்லை. நான்கு பேருக்கு தெரிந்து வெளிப்படையாகவே பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்," எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, சூரியனார் கோவில் ஆதீனத்திடம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் பெற்றுள்ளனர். மரபுகளை மீறினாரா ஆதீனம்? இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார் சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள். (மடத்தின் சமயம், நிர்வாகப் பணிகளை கவனிப்பவர்களை 'ஸ்ரீகார்யம்' என்கின்றனர்) "ஆதீனத்துக்கு இது முதல் திருமணம். ஆனால், ஹேமாஸ்ரீக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். மடத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரிக்கவே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது," என்கிறார் அவர். "மதுரை, திருவாவடுதுறை, தருமபுரம் ஆகிய ஆதீனங்களில் திருமணம் ஆகாதவர்கள் தான் ஆச்சாரியர்களாக வர முடியும். ஆனால், சூரியனார் கோயில் மரபுப்படி இல்லறத்தில் இருந்தும் துறவறம் மேற்கொள்ளலாம். இதற்கு முன்பிருந்த ஆதீனம், இல்லறத்தில் இருந்து துறவறத்துக்கு வந்தவர் தான். ஆனால் துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்கக் கூடாது என்பது மரபு. இதற்கு மாறாக தற்போதைய ஆதீனம் செயல்பட்டுள்ளார்,” என்கிறார் அவர். மேலும், “அவர் திருமணம் செய்துள்ள ஹேமாஸ்ரீ என்பவர், கடந்த ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று மடத்தின் பக்தையாக உள்ளே வந்தார். பிப்ரவரி மாதம் மாசி மகம் நிகழ்வில் பங்கேற்றார். மார்ச் மாதம் நாங்கள் அயோத்திக்கு சென்றபோது, அப்போது ஆதீனத்துடன் அந்தப் பெண்மணி வந்து நின்றார். ஏப்ரல் மாதம் நர்மதா புஷ்கர நிகழ்வில் பங்கேற்க வந்தார்,” என்கிறார். படக்குறிப்பு,சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள் 'ரூ.1,000 கோடி சொத்துகள்' மேலும் பேசிய ஸ்ரீகார்யம் சுவாமிநாத தேசிக சுவாமிகள், ஹேமாஸ்ரீ தான் செய்து வரும் வியாபாரம் தொடர்பாக அவர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரியவந்ததாகச் சொல்கிறார். “மன்னர்கள் தானமாகக் கொடுத்த மடத்தின் சொத்துகளில் பலவும் ஆக்கிரமிப்பில் இருப்பதால், அதை மீட்டுக் கொடுக்கும் அளவுக்குத் தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கூறி ஆதீனத்தை அவர் ஏமாற்றியுள்ளதாக அறிகிறோம்," என்கிறார். தொடர்ந்து பேசிய சுவாமிநாத சுவாமிகள், "கர்நாடக மாநிலம், பிடதியில் 3 ஏக்கர் நிலத்தை மடம் அமைப்பதற்காக அந்தப் பெண்மணி கொடுத்ததால் திருமணம் செய்து கொண்டதாக ஆதீனம் கூறுகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலரும் மடத்துக்கு நிலம், உடைமைகளைப் தானமாக கொடுத்துள்ளனர். அவர்களை எல்லாம் அப்போதிருந்த ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் இல்லை,” என்கிறார். “மடத்துக்குச் சேவை செய்ய வரும் பெண்களுக்கு சமய தீட்சை, சிவ தீட்சை, சந்நியாச தீட்சை எனக் கொடுப்பதில் தவறு இல்லை. திருமணம் செய்து கொள்வதை எவ்வாறு ஏற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும், மடத்தின் சொத்துகளாகச் சூரியனார் கோயில் கிராமம், திருமாந்துறை கிராமம், திருமங்கலக்குடி கிராமம், திருவீழிமிழலை கிராமம் ஆகியவை உள்ளன. ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்தச் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக அறிகிறோம்," என்கிறார். "இந்தத் திருமணத்தின் மூலம் மடத்தின் மாண்பும் புனிதமும் கெட்டுப் போய்விட்டது. இந்தத் தகவலை இதர மடாதிபதிகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்துள்ளோம். காவல்துறையிலும் புகார் கொடுக்க உள்ளோம்," என்கிறார். பட மூலாதாரம்,SURIYANARKOVILAADHEENAM/FACEBOOK படக்குறிப்பு, ஆதீன திருக்கோவில் நிர்வாக குழுவினருடன் சூரியனார் கோவில் ஆதீனம் ஆதீனம் சொல்வது என்ன? ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அறவே மறுக்கிறார், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக சுவாமிகள். பிபிசி தமிழிடம் பேசிய ஆதீனம், "எங்களுக்கு சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாக தீட்சை, ஆச்சார்ய தீட்சை ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இதைப் பெற்று சந்நிதானமாகப் பொறுப்புக்கு வருகிறோம். இல்லறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். துறவறத்தில் இருந்தும் மடம் நடத்தலாம். எனக்கு முன்பு இருந்து சந்நிதானங்கள், இல்லறத்தில் இருந்து தான் வந்துள்ளனர்," என்கிறார். ஹேமாஸ்ரீ உடன் திருமணம் நடந்தது குறித்துப் பேசிய ஆதீனம், "அவருக்குத் தமிழ் தெரியாது. மடத்தின் நிர்வாகத்துக்குள் அவர் வரமாட்டார். அவருக்கு கர்நாடகாவில் தொழில்கள் உள்ளன. அவர் அங்கு தான் இருப்பார். அவருக்கும் எதிர்பார்ப்புகள் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை," என்கிறார். கர்நாடகாவில் சூரியனார் கோயில் மடத்தைத் தொடங்குவதற்குத் தனக்குச் சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ கொடுத்துள்ளதாகவும் அவரை அறங்காவலராக நியமித்து, தொடர்ந்து நிர்வாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் பிபிசி தமிழிடம் ஆதீனம் கூறினார். தனக்கு முன்பிருந்த சந்நிதானத்துக்கு 102 வயதாகும் போது அவரைப் பராமரிப்பதற்கு ஆள் இல்லாமல் தவித்ததாகவும் ஆதீனம் குறிப்பிட்டார். மடத்தின் சொத்துகளை அபகரிக்கவே திருமணம் செய்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த ஆதீனம், "தவறான குற்றச்சாட்டு. இவர்கள் கூறும் சொத்துகள் எல்லாம் ஆதீனத்தின் பெயரால் உள்ளதே தவிர, ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களிடம் உள்ள நிலங்களுக்கு குத்தகையும் முறையாக வசூல் செய்யப்படவில்லை," என்கிறார். "இப்போது வரை ஆறு கிராமங்கள் மட்டுமே சூரியனார் கோயில் மடத்துக்குச் சொந்தமாக உள்ளன. இவை நிலங்களாக உள்ளன. இங்கு வசிக்கும் மக்களும் அன்றாட வருவாய்க்காக வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வசூலிக்க முடியவில்லை," என்கிறார் மகாலிங்க தேசிக சுவாமிகள். புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட விஜயரகுநாத தொண்டைமான், ஆறு கிராமங்களை சூரியனார் கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளதாக கூறும் ஆதீனம், "அந்தச் சொத்துகளைத் திருவாவடுதுறை ஆதீனமும் பராமரிக்கவில்லை, நாங்களும் பராமரிக்கவில்லை. ஆனால் பட்டயம் மட்டும் உள்ளது. அதை மீட்பதற்கான வேலையும் நடந்து வருகிறது. பெரும்பான்மையான சொத்துகள், திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்," என்கிறார். பக்தர்களின் காணிக்கையை வைத்து சூரியனார் கோவில் புனரமைக்கும் வேலைகளைச் செய்து வருவதாகவும் அதில் இருந்தே மடத்தின் அன்றாட செலவுகளையும் கவனித்து வருவதாகவும் கூறுகிறார் ஆதீனம். 'பக்தராக மட்டுமே வருவார்' இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணை குறித்துப் பேசிய ஆதீனம், "என்னிடம் வந்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம், 'கர்நாடகாவில் இருந்து ஹேமாஸ்ரீ நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டுக்கு பக்தராக மட்டுமே வருவார். எந்த உரிமையும் கோரப் போவதில்லை' எனக் கூறிவிட்டேன். இந்த விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்" என்கிறார். ஹேமாஸ்ரீ என்ன சொல்கிறார்? திருமணச் சர்ச்சை குறித்து ஹேமாஸ்ரீயிடம் பிபிசி தமிழ் பேசியது. "பா.ஜ.க வைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் ஆதீனத்தைச் சந்தித்தேன். அவரை நான் திருமணம் செய்வதற்கு முன்பு வரை அவர் ஆதீனம் என்பது தெரியாது. அவருடன் காசிக்குச் சென்றபோது, அவர் ஆதீனம் என்பதையும் சைவ மடங்களில் மிகவும் புகழ்பெற்றதாக சூரியனார் கோவில் இருப்பதையும் அறிந்தேன்,” என்கிறார். “நான் ஆதீனத்திடம், 'எனக்குள்ள தொடர்புகள் மூலம் உலக அளவில் சூரியனார் கோயிலுக்கு மடங்களைத் திறக்கலாம்' என்றேன். அதன் ஒருபகுதியாக பிடதியில் உள்ள நிலத்தில் மடம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. “அந்த நிலத்தின் மதிப்பு ரூ.35 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது. என்னுடைய சொந்தப் பணத்தில் தான் அங்கு மடத்தைத் திறக்க உள்ளோம். இதற்கு ஆதீனம் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், சிலர் என் மீதும் ஆதீனம் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்," என்கிறார். பட மூலாதாரம்,SURIYANARKOVILAADHEENAM/FACEBOOK படக்குறிப்பு, அரியலூரில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆதினம் (கோப்பு புகைப்படம்) 'இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு' மேலும் பேசிய ஹேமாஸ்ரீ, " தமிழ் ஊடகங்களில் என்னைப் பற்றித் தவறான தகவல்கள் வெளிவந்துள்ளன. இது நானும் ஆதீனமும் சேர்ந்து எடுத்த முடிவு. இதில் மற்றவர்கள் தலையிடுவதற்கு என்ன உரிமை உள்ளது?" எனக் கேள்வி எழுப்புகிறார். மடத்தின் சொத்துகளை அபகரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு பதில் அளித்த ஹேமாஸ்ரீ, "திருமணம் செய்வதற்கு முன்பு வரை என்னுடைய சொத்துகள் பற்றி ஆதீனத்துக்குத் தெரியாது. அதேபோல், அவருக்கு உள்ள சொத்துகள் பற்றியும் எனக்குத் தெரியாது. அது பொதுமக்களின் பணம். அதை நான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் உள்ள பணமே போதுமானது," என்கிறார். "தற்போது சிலர் என் தந்தையைச் சந்தித்து, 'இந்தத் திருமணம் செல்லாது. ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறி மிரட்டியுள்ளனர். என் தந்தையை அவர்கள் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? என் முந்தைய கணவர் இறந்த பிறகு பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு ராம்நகரில் நற்பெயரில் உள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறேன்," என்கிறார் ஹேமாஸ்ரீ. https://www.bbc.com/tamil/articles/c9wrdkyqwzzo
  23. அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) அதிகாரத்திற்கு வந்து ஒரு கிழமையில் இலங்கையில் வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத கடன் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க (Rosy Senanayake) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வழங்கிய வாக்குறுதிகள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அலை ஒன்று ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். ஆனால் அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேலைத்திட்டங்களை பார்த்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் கடன்தொகையான 41 பில்லியன் டொலரை செலுத்துவது பெரிய விடயம் அல்ல என அநுரகுமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். அதேபோன்று பணம் அச்சிட்டும் கடன் பெற்றும் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேட்டிருந்தார். எரிபொருள் இறக்குமதியில் அமைச்சருக்கும் தரகுப்பணம் செல்வதாகவும் அந்த பணத்தை இல்லாமல் செய்து, எரிபொருள் விலையை குறைப்பதாகவும் தெரிவித்தார். அரச சொத்துக்களை திருடியவர்களை 24 மணி நேரத்துக்குள் சிறையில் அடைப்பதாக தெரிவித்தார். இவ்வாறு பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கி இருந்தார். ஆனால் இந்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? கடன் பெறுவதில்லை என தெரிவித்த இவர்கள், வரலாற்றில் யாரும் பெறாத கடன் தொகையை அரசாங்கம் அமைத்து ஒரு வாரத்துக்குள் பெற்றுள்ளார்கள். பணம் அச்சிட்டுள்ளனர். அரசாங்கத்தை பெற்றுக்கொண்டாலும் இவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. அதேபோன்று நாட்டை அபிவிருத்தி செய்யவும் இவர்களிடம் வேலைத்திட்டம் இல்லை. அவ்வாறு இருந்தால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அப்படியானால் அந்த வேலைத்திட்டங்களையும் அதனை எப்போது ஆரம்பிப்பது என்ற திட்டத்தையும் நாட்டுக்கு சொல்ல வேண்டும். எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய எந்த திட்டமிடலும் இல்லாமலேயே இவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூன்றுபேறும் இருளில் அலைந்துகொண்டு, ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-general-election-2024-1731133928
  24. பட மூலாதாரம்,BILLY HENRI படக்குறிப்பு, அகலேகா தீவு எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ் பதவி, பிபிசி உலக சேவை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார். சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்கும். அவசரகால மருத்துவ சேவைகளுக்காக, விதிவிலக்காக சிறிய நிலப்பகுதி விமானத்தின் ஓடுபாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அகலேகாவை உள்ளடக்கிய தீவு நாடான மொரீஷியஸ், இந்தியாவின் 3,000 மீட்டர் நீளத்தில் விமான ஓடுதளம் மற்றும் புதிய, பெரியளவிலான படகுத்துறை அமைக்க வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இது முழு அளவிலான ராணுவ தளமாக மாறக்கூடும் என அகலேகா தீவை சேர்ந்த சிலர் அச்சத்தில் உள்ளனர். 'தீவில் இருந்து வெளியேற்றப்படலாம்' கைவினை கலைஞரும் ரெக்கே இசைக் கலைஞருமான (மேற்கத்திய இசை வகை) 44 வயதான அர்னௌ பூலே, இத்திட்டத்திற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். "நான் என் தீவை நேசிக்கிறேன். இந்த தீவு என்னை நேசிக்கிறது," என்கிறார் அவர். "ஆனால், அந்த தளம் அமைக்கப்பட்டால் நான் வெளியேற வேண்டும் என்பது எனக்கு தெரியும்." என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,ARNAUD POULAY படக்குறிப்பு, கட்டுமான பணிகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் அர்னௌ பூலே இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படுகிறது. வடக்குத் தீவின் மையத்தில், வடக்கில் லா ஃபோர்ச்சே மற்றும் தெற்கில் விங்-சிங்க் ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கி, பனை மர வரிசைகளுக்கு நடுவே ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கட்டடம் இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி ஆய்வாளரான சாமுவேல் பேஷ்ஃபீல்ட் தெரிவித்தார். என்னென்ன வசதிகள் உள்ளன? பி-81 விமானம் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்கும் கடல்வழி தகவல் தொடர்புகளை கண்காணிப்பதற்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஆகும். விமான ஓடுதளத்தில் அந்த விமானம் இருப்பதை தீவுவாசிகள் ஏற்கனவே படம் எடுத்துள்ளனர். வடமேற்கில் புதிய கப்பல் துறை அமைந்துள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்களுக்காகவும் அகலேகாவுக்கு சரக்குகளை கொண்டு வரும் கப்பல்களுக்காகவும் அது பயன்படுத்தப்படலாம் என்று பேஷ்ஃபீல்ட் கூறுகிறார். "புதிய செயற்கைக்கோள் படங்கள் கிடைத்திருப்பதால், இந்தியப் பெருங்கடல் தகவல் தொடர்பில் அகலேகா தீவின் பங்கை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர். இந்த தளத்தை "கண்காணிப்பு நிலையம்" என்கிறது, இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிராட்டஜிக் ஸ்டடீஸ் எனும் நிறுவனம். மொரீஷியஸின் மற்ற இடங்களில் உள்ள, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாதனத்தை ஒத்த கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பும் அதில் இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,L'ASSOCIATION LES AMIS D'AGALEGA படக்குறிப்பு, அகலேகாவின் புதிய ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் பி-81 விமானம் இந்தியா கூறுவது என்ன? அகலேகா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ள இந்திய அரசாங்கம், தங்களின் இணையதளத்தில் உள்ள முந்தைய கூற்றுகளை பிபிசியிடம் குறிப்பிட்டது. அதில் ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவும் மொரீஷியஸும் வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான "கூட்டாளிகள்" என தெரிவித்திருந்தார். இரு நாடுகளும் 1970கள் முதல் பாதுகாப்பு தொடர்பாக நெருங்கிய உறவை கொண்டுள்ளன. மொரீஷியஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கடலோர காவல்படையின் தலைவர் மற்றும் காவல்துறையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் தலைவர் ஆகியோர் இந்தியர்கள் ஆவர். அவர்கள் முறையே இந்தியாவின் உளவு முகமை, விமானப்படை, மற்றும் கடற்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக உள்ளனர். "இந்த தளத்தை ராணுவ பயன்பாட்டு தளமாக அல்லாமல், திறனை மேம்படுத்தும் ஒன்றாக" இரு தரப்பும் பார்க்க விரும்புவதாக, லண்டன் கிங்ஸ் காலேஜின் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார். இந்திய பெருங்கடலில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருவது குறித்து இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் கவலை கொண்டுள்ளன என்பதில் எந்த ரகசியமும் இல்லை. படக்குறிப்பு, இந்தியப் பெருங்கடலில் அகலேகா தீவு அமைந்திருப்பதை விளக்கும் வரைபடம் 'சாகோஸ் தீவு போன்று ஆகிவிடுமோ?" ஒரு பெரிய நாடு சிறிய நாடு ஒன்றின் பிரதேசத்தில் ராணுவ தளம் அமைப்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றாலும், அகலேகாவில் நடைபெறும் கட்டுமான பணிகள், தீவுவாசிகள் சிலரை தொந்தரவு செய்துள்ளன. அத்தீவில் பனை மரங்கள் நெடுக உள்ள வெள்ளை-மணல் கடற்கரைகள் உட்பட பல பகுதிகள் ஏற்கனவே இப்பணிக்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வளர்ந்து வரும் இந்திய கட்டுமானங்களுக்காக லா ஃபோர்ச்சே கிராமமே காலி செய்யப்படலாம் என்றும், அங்கு வசிக்கும் 10 குடும்பங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் அங்கே தொடர்ந்து வதந்தி நிலவுகிறது. "இந்தியர்களுக்கு மட்டுமேயான முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அது மாறும்," என 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் அகலேகா' எனும் சங்கத்தின் தலைவர் லாவல் சூப்ரமணியென் (Laval Soopramanien) கூறுகிறார். "சாகோஸ் தீவுகளின் கதை போன்று அகலேகாவும் மாறிவிடும்" என அவர் அஞ்சுகிறார். சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் மற்றும் அகலேகாவை சேர்ந்த ஒருவரின் 26 வயது மகனான கைவினைஞர் பில்லி ஹென்றியும் இதே கவலையை எதிரொலிக்கிறார். "என் தாய் அவருடைய தீவை இழந்தார்," என்கிறார் ஹென்றி. "அடுத்து என் தந்தை இழக்கப் போகிறார்." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,YOHAN HENRI படக்குறிப்பு, அகலேகாவின் தலைநகர் விங்-சிங்க் (25 என்பதை குறிக்கும் பிரெஞ்சு வார்த்தை) தோட்ட அடிமைகளுக்கு ஒருகாலத்தில் வழங்கப்பட்ட கசையடிகளின் எண்ணிக்கை காரணமாக இப்பெயரால் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர். 1965-ம் ஆண்டில் சாகோஸ் தீவை பிரிட்டிஷ் பிரதேசமாக அறிவித்து, அதன் பெரிய தீவான டியகோ கார்சியா (Diego Garcia) தீவில் தகவல் தொடர்பு நிலையம் அமைக்க அமெரிக்காவுக்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். டியகோ கார்சியா தீவு பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது. அகலேகாவின் முழு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசாங்கம், அனைவரும் வெளியேறும் அளவுக்கு நிலைமையை மோசமானதாக ஆக்க முயற்சிப்பதாக பில்லி ஹென்றி அச்சத்தில் உள்ளார். சுகாதாரம் மற்றும் கல்வி, உள்ளூர் பொருளாதாரத்தில் குறைவான முதலீடு, வேலைவாய்ப்புகளுக்கான பற்றாக்குறை மற்றும் உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த தொழில்களை தொடங்குவதற்கு நிலவும் தடை ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். யாரையும் வெளியேறுமாறு கூற மாட்டோம் என, மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். உள்ளூர் மக்கள் விமான நிலையம் மற்றும் துறைமுக பகுதிக்குள் நுழைவது மட்டும் தடுக்கப்படும் என்றும் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை நாட்டுக்கு உதவும் என்றும் அவர் கூறினார். முழு கட்டுப்பாடும் தேசிய காவல் துறையிடமே உள்ளதாக கூறியுள்ள மொரீஷியஸ், அகலேகாவில் ராணுவ தளம் அமைக்கப்படும் என்ற கூற்றுகளை மறுத்துள்ளது. எனினும், இந்திய செலவில் மேற்கொள்ளப்படும் அப்புதிய கட்டுமானங்களின் "நிர்வாகம் மற்றும் செயல்பாடு" ஆகியவற்றில் இந்தியா உதவி செய்யும் என்று அது உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,MAXAR படக்குறிப்பு, அகலேகா தீவின் வடக்கு முனையில் விரிவான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - செயற்கைக்கோள் படங்கள் கப்பல் துறை மற்றும் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை காட்டுகின்றன அடிப்படை வசதிகளை கோரும் மக்கள் கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தில் செய்யப்படும் முன்னேற்றங்கள் தீவில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே செய்யப்படுவதாகவும் வறுமையிலிருந்து அவர்களை வெளியேற்ற அவை உதவும் என்றும் இருநாட்டு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸின் தலைநகருக்கு செல்ல ஆண்டுதோறும் நான்கு படகு சேவைகள் மட்டுமே இன்னும் இயக்கப்படுவதாகவும் பயணிகள் விமானம் இல்லையென்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவால் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு செல்ல தங்களுக்கு தடையிருப்பதாகவும் அகலேகா தீவு மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தி அறிக்கை ஒன்று, அதன் அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் பல் மருத்துவ உபகரணங்கள் குறித்து பெருமையாக குறிப்பிட்டாலும் இத்தடை இருப்பதாக கூறுகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் கொதிக்கும் சமையல் எண்ணெய் ஏற்படுத்திய தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அம்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டதாக பில்லி ஹென்றி கூறுகிறார். "அது இந்தியர்களுக்கு மட்டுமேயானதாக இருக்கிறது" என்கிறார் அவர். பாதிக்கப்பட்ட சிறுவனும் அவருடைய பெற்றோரும் மொரீஷியஸ் தலைநகருக்கு சென்றனர். இன்னும் அச்சிறுவன் மருத்துவமனையில் தான் இருப்பதாகக் கூறும் லாவல் சூப்ரமணியென், அகலேகாவுக்கு அடுத்த கப்பல் புறப்படும் வரை அச்சிறுவனின் குடும்பம் அதே தீவில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் நிலை குறித்து கேட்ட போது, அதுகுறித்து மொரீஷியஸ் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக பதிலளிக்க இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. சமீபத்தில் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரவீந்த் ஜூகனௌத், அகலேகா தீவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். சுகாதாரம், கல்வி, போக்குவரத்து தொடர்புகள், மக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள், மீன்பிடி துறையில் வளர்ச்சி மற்றும் தேங்காய் மதிப்புகூட்டு பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த "பெரும் திட்டம்" (master plan) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவோ அல்லது மொரீஷியஸோ எவ்வித தகவல்களையும் வெளியிடாததால் மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது, எனவே, எதிர்காலத்திற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yrpg2m734o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.