Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். இதன்படி, குறித்த பிரேரணையை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. அதில், மின் கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்தது. எவ்வாறெனினும், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மின்சார சபையினால் குறைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண வீதம் போதுமானதாக இல்லை என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது. https://thinakkural.lk/article/311544
  2. 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் நன்மைகளை இழந்தவர்கள் மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய விசாரணைகளை நடத்தி அறிக்கையை தயாரித்து ஒப்படைக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன இக்குழுவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/197847
  3. இந்தியத் தூதரகத்தினால் திருமலையில் 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல. ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில் மூலம் பல்லாயிரம் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03 திருகோணமலை திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்கக்கட்டடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு மீனவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் தேவைகளுக்கான நம்பிக்கையை கடலன்னை வழங்கியுள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கிய பெரிய அபிவிருத்தி ஒத்துழைப்பு உதவிகளின் வரிசையில், இந்த நாட்டின் மீனவ சமூகத்தை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதற்குமான எமது முயற்சி முக்கிய இடத்தில் உள்ளது. 2009- 2010 ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுத மோதலை அடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு கடந்த காலங்களில் மீன்பிடி உபகரணங்களை வழங்கிய பல நிகழ்வுகளும் இதில் அடங்கும். கிழக்கு மாகாணத்தின் பல்துறைசார் மானிய உதவிகளுக்கென சுமார் 2.35 பில்லியன் இலங்கை ரூபாய்களை ஒதுக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான 33 திட்டங்களுக்கான, கட்டமைப்பு திட்டங்கள் இறுதி செய்யப்பட உள்ளன. இவற்றில், 7 மீன்பிடித் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், மீன்பிடி உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு, கடற்பாசி கூண்டு வளர்ப்பு, திலாப்பியா குளத்து மீன் வளர்ப்பு மற்றும் பருவகால தொட்டி மேம்பாடு போன்ற கருப்பொருள்கள் உள்ளடங்கியுள்ளன. இன்று உங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடின உழைப்பாளிகளான திருகோணமலை மீனவர்களுக்கு, அபிவிருத்தி உதவிப் பொதியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உதவித் தொகுதியில், படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரம், பிடித்த மீன்களை பாதுகாக்க கூடிய உறைவிக்கும் இயந்திரங்கள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள் ஆகியவை அடங்கும். இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்த உதவும் அத்தியாவசியமான கருவிகள். ஆழமான உறைவிப்பான்கள் உங்களால் பிடிக்கப்பட்ட மீன்களை தரம்கெடாது பேணுவதை உறுதி செய்யும் அதேவேளையில், உங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்கும் பங்களிக்கும். கடலில் சிக்கித்தவிக்கும் அல்லது விபத்துகளை சந்திக்கும் மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளை பாதுகாப்பாக மீட்பதற்கு அதிக வலுகொண்ட வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உயிர் காப்பு அங்கிகள் முக்கியமான ஆதரவை வழங்கும். இந்தியாவும் இலங்கையும் நமது கரையோரங்களை இணைக்கும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வேரூன்றிய ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த வாரம், இந்தியா – இலங்கை மீன்வளத்துறையின் கூட்டுப் பணிக்குழுவின் 6வது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விரிவாக ஆய்வு செய்தனர். இலங்கையில் மீன்பிடித் தொழிலின் முக்கியத்துவத்தையும், மீனவர்களாகிய நீங்கள், இயற்கையாலும், சந்தைப்படுத்துவதில் உள்ள விடயங்களாலும், நவீன உபகரணங்களை அணுகுவதன் மூலமும் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்தியாவில் உள்ள நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த நட்புறவு மற்றும் கூட்டாண்மையின் உணர்வில்தான் இந்தியா இலங்கைக்குத் தேவையான நேரங்களில் தொடர்ந்து துணை நின்றது. இனியும் நிற்கும். இன்றைய உதவி அந்த திசையில் பயணிப்பதற்கான மற்றொரு படியாகும். இந்தமுயற்சி பொருளுதவி வழங்குவது மட்டுமல்ல, திருகோணமலை மீனவ சமூகத்தின் நிலையான எதிர்கால சமூகங்களை வலுப்படுத்துவதும், அதற்கான முதலீடுகளை செய்வதுமாகும். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் எங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தையும் உறவையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றம் கொண்டதாக இருப்பதை உறுதிசெய்ய நமது அரசாங்கங்கள், நமது மக்கள் மற்றும் நமது சமூகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படும். இந்த உதவி மூலம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த பிராந்தியத்தின் முதுகெலும்பு. உங்கள் வெற்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். உங்கள் வலைகள் எப்போதும் நிரம்பியிருக்கவும், கடலுக்கு செல்லும் எமது மீனவ உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பவும் வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார். https://thinakkural.lk/article/311532
  4. லொஹானின் மனைவியும் விளக்கமறியலில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், கைது செய்யப்பட்டார். https://thinakkural.lk/article/311546
  5. இந்த 1 மணித்தியால காணொளியை கவனமாகப் பாருங்கோ. சுமந்திரன் ஐயா மட்டுமல்ல ஒரு நாடு இரு தேசமும் சிக்கல் தான் போல!
  6. தமிழ் தேசியம் பேசி, விஜய் தனது வாக்கு வங்கியைக் குறிவைப்பதாக நினைக்கிறாரா சீமான்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) மாநாட்டில் விஜய் பேசியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார். இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் என்ற தன்னுடைய தனித்த வாக்கு வங்கிக்கு விஜயின் தமிழ் தேசியம் குறித்த பேச்சால் ஆபத்து ஏற்படும் என்பதாலேயே சீமான் இப்படி விமர்சித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேசமயம், “எங்களுடைய விமர்சனம் கோட்பாட்டு ரீதியிலானது மட்டுமே, வெற்றி குறித்ததோ, வாக்கு வங்கி குறித்ததோ அல்ல,” என்கின்றனர், நாம் தமிழர் கட்சியினர். இதற்கு, “எங்களுடைய எதிரிகள் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தான், நாம் தமிழர் கட்சி எங்கள் எதிரி அல்ல,” என த.வெ.க தரப்பிலிருந்து பதில் வருகிறது. கடந்த அக்டோபர் 27-ஆம் த.வெ.க மாநாடு நடைபெற்ற திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ராணி வேலுநாச்சியார் என, நாம் தமிழர் முன்னெடுக்கும் மன்னர்களைப் போற்றும் அரசியலை விஜயும் முன்னெடுப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. மேடையில் ‘திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என விஜய் பேசியதிலிருந்து, தமிழ் தேசியத்தையும் அவர் தழுவிக்கொள்ள நினைத்தது தெளிவானதாக, அரசியல் ஆய்வாளர்கள் அச்சமயத்தில் கூறியிருந்தனர். இந்நிலையில் தான், தமிழ் தேசியம் குறித்த விஜயின் பேச்சைக் கடந்த இரு தினங்களாக விமர்சித்துவந்தார் சீமான். “வேலுநாச்சியார், மூவேந்தர்கள், அஞ்சலை அம்மாள் குறித்து விஜய்க்குத் தெரியாது,” என நேரடியாகவே விமர்சித்தார். “திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றல்ல. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்,” என்றார் சீமான். சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 01) நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் தான் இவ்வாறு சீமான் பேசியிருந்தார். சீமானது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் எவ்வாறு பார்க்கப்படுகிறது? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என பேசியிருந்தார் விஜய் வாக்கு வங்கி அரசியலா? கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை நடந்திருக்கும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. முதல் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1% ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1% வாக்குகள் கிடைத்தன. இதன் காரணமாக, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அந்தஸ்தை எட்டியது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு தேர்தலிலும் முதன்முதலாக வாக்களிக்க வரும் புதிய தலைமுறையினர், தி.மு.க-அ.தி.மு.க-வுக்கு எதிராக மாற்று அரசியலை நாடும் இளைஞர்கள் ஆகியோர்தான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்காளர்கள். தற்போது சீமான் பேசும் தமிழ் தேசிய ஆதரவை பெரியார் ஆதரவுடன் விஜய் முன்வைப்பதால், தன்னுடைய அடிப்படை வாக்காளர்கள் த.வெ.க பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதுவதால், சீமான் சற்று கலக்கம் அடைந்திருப்பதாக தெரிகிறது என்கின்றனர், மாநில அரசியலை உற்றுநோக்கும் அரசியல் நிபுணர்கள். எனினும், கணிசமாக அந்த வாக்குகள் குறையுமா என்பதைத் தற்போது சொல்ல முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “கொள்கை அடிப்படையிலான மோதல் என்பதைவிட இது வாக்கு வங்கி சம்மந்தப்பட்டது. விஜய் திராவிடம், பெரியாரை முன்னிறுத்தியது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கும். விஜய் மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் சீமானுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பட மூலாதாரம்,IDUMBAVANAM KARTHIK படக்குறிப்பு, விஜயை விமர்சிக்க வேண்டாம் என கட்சி சார்பில் முன்னர் முடிவெடுத்ததாக இடும்பாவனம் கார்த்திக் கூறுகிறார் சீமானின் விமர்சனம் அதீதமானதா? மாநாட்டுக்கு முன்னதாகப் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் விஜயை ‘தம்பி’ என அழைத்துவந்தார் சீமான். ஆனால், தற்போது கொள்கை முரண் காரணமாக, “கொள்கை வேறாக ஆனபின் அண்ணன் என்ன, தம்பி என்ன?” என்றும் சீமான் பேசியிருந்தார். அதேபோன்று, மாநாட்டுக்கு முன்பாக தனக்கு ஒத்த கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என சீமான் எதிர்பார்த்திருக்கலாம் என ப்ரியன் கூறுகிறார். இரு கட்சிகளும் கூட்டணியாகக் கூடப் போட்டியிடலாம் என்ற யூகங்கள் கிளம்பியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். விஜயை விமர்சிக்க வேண்டாம் என்ற முடிவை மாநாட்டுக்கு முன்னதாகவே தங்களின் உயர்மட்டக் குழுவில் சீமான் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறுகிறார், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். “அவருடைய கொள்கை தெரிவதற்கு முன்பாகவே மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என விஜயை வாழ்த்தினோம். அவர் நம் தோழமை சக்தி என்ற நிலைப்பாட்டை சீமான் எடுத்தார்,” என்கிறார் கார்த்திக். திராவிடம், தமிழ் தேசியம் இரண்டையும் ஆதரித்திருக்கும் விஜயின் த.வெ.க-வை, அவற்றை ஏற்கெனவே பேசிவரும் இருவேறு கட்சிகளும் தங்களின் எதிரிகட்சியாக பார்க்கிறது. “திராவிடம் - தமிழ் தேசியம் இரண்டும் நெடுங்காலமாக வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுகுறித்த எதிரெதிர் விமர்சனப் பார்வைகள் தி.மு.க, நா.த.க-வுக்கு உண்டு. நடுநிலையான நிலைப்பாட்டை விஜய் எடுத்திருக்கிறார். சர்ச்சையில் சிக்க வேண்டாம் என நினைத்திருப்பார்,” என்கிறார் ப்ரியன். மாநாட்டுக்குப் பின்னர் சீமான் கட்சியிலிருந்து இளைஞர்கள் விஜய் கட்சிக்குச் செல்வார்கள் என பரவலாக அரசியல் மட்டத்தில் பேசப்படுவதை சீமான் ரசிக்கவில்லை, அதனாலேயே இத்தகைய எதிர்வினையை அவர் ஆற்றியிருப்பதாகவும் கூறுகிறார் ப்ரியன். “ஆனால், அவருடைய விமர்சனங்கள் செயற்கையாக இருக்கின்றன. மாநாட்டுக்கு முன்பு ஒருமாதிரியும் இப்போது ஒருமாதிரியும் பேசுகிறார். தேவையில்லாத வார்த்தைகளால் விமர்சிப்பது அதீதமாக இருக்கிறது,” என்கிறார் அவர். நாம் தமிழர் கட்சிக்குள் அதிருப்தியா? நாம் தமிழர் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியிருப்பதாக ப்ரியன் கூறுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சீமான் ‘தவறான அணுகுமுறையை கையாள்வதாக’ அவர்கள் தெரிவித்திருந்தனர். “சீமானின் கட்சியில் 4-5 மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. தொடர்ச்சியாக நிர்வாகிகள் விலகுகின்றனர்,” என்கிறார் ப்ரியன். “தமிழ்நாட்டுக்குள்ளேயே தமிழர்களைப் பிரிக்கிறார் சீமான். ஆனால், எல்லா தமிழர்களுக்குமான உரிமை, நல்லிணக்கம் குறித்து விஜய் பேசுகிறார். வரும் காலங்களில் சீமானுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பார் விஜய்,” என்று அவர் கூறுகிறார். ஆனால், இந்தக் கருத்தை மறுக்கும் நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக், “மொழியை சாதி, மதத்துடன் ஒப்பிடுகின்றனர். சாதி ரீதியான அரசியலை நாங்கள் செய்வதாகக் கூறும் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். தேர்தல் பரப்புரைகளில் நாங்கள் சாதியை எதிர்த்துப் பேசுகிறோம்,” என்றார். பட மூலாதாரம்,𝗧𝗩𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚/X படக்குறிப்பு, மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூவேந்தர்களின் கட்-அவுட் தமிழ் தேசிய அரசியல் இரண்டு, மூன்று முறை தங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் கூட விஜய்க்கு செலுத்துவார்கள் என்ற பயம் சீமானுக்கு இருக்கிறது, என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். “அ.தி.மு.க, தி.மு.க வேண்டாம் என நினைப்பவர்கள், புதிதாக வரும் கட்சிக்கு வாய்ப்பளிக்கலாம் என நினைப்பார்கள். இம்முறை அது சீமானாக இல்லாமல் விஜய்க்கு ஆதரவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்,” என்கிறார் அவர். எனினும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு தற்போது எந்த இடமும் இல்லை என்றும், தமிழ் தேசியத்தைக் கையிலெடுத்த ஈ.வெ.க.சம்பத், மா.பொ.சி., பழ.நெடுமாறன் ஆகியோர் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். “சீமான் பேசும் தமிழ் தேசியம் நீர்த்துப்போன, தோற்றுப்போன கொள்கை. மாறாக, திராவிடமும் தமிழர் நலனைத்தானே பேசுகிறது. அதில் குறைகள் இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் திராவிடத்தால் ஒன்றும் நிகழவில்லை என கூறிவிட முடியாதுதானே,” என்கிறார் அவர். தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி எனப் பல கட்சிக் கொள்கைகளின் கலவையாக விஜய் தன் கொள்கையை அறிவித்திருக்கிறார் எனக்கூறும் குபேந்திரன், அது தன்னை மற்றக் கட்சிகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ளும் முயற்சி என்கிறார். தமிழ் தேசியம் குறித்த விளக்கத்தையோ, தமிழ் தேசியம் - திராவிடம் இரண்டு கண்கள் என கூறியதற்கான அர்த்தத்தையோ மாநாட்டில் விஜய் விளக்கவில்லை. தமிழ் தேசியம் தொடர்பாக தன்னுடைய முன்னோடி யார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை என விமர்சனங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள். பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, விஜயை பல இடங்களில் வெளிப்படையாக 'தம்பி' என அழைத்துவந்தார் சீமான் த.வெ.க., நா.த.க கட்சியினர் கூறுவது என்ன? சீமானின் விமர்சனம், விஜய் மீதான தனிப்பட்ட வன்மமோ, கோபமோ, காழ்ப்புணர்ச்சியோ அல்ல என்கிறார், நா.த.க-வின் இடும்பாவனம் கார்த்திக். “இது தத்துவார்த்த ரீதியான முரண் தான். சித்தாந்தப் போர் இது. நாம் தமிழரை விட நாங்கள்தான் மாற்று என்று சொல்லியிருந்தால் கூட கடந்துபோயிருப்போம், எதிர்வினையாற்றியிருக்க மாட்டோம். வாக்குகள் போய்விடும் என எந்தக் கணக்கும் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதோ, கமல் கட்சி தொடங்கியபோதோ எங்கள் கட்சியிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை, வாக்களிக்கவும் இல்லை. எங்கள் கட்சியினர் கொள்கைத் தெளிவு உள்ளவர்கள்,” என்கிறார் அவர். அதேசமயம், நா.த.க., எங்களின் எதிரி அல்ல என்கிறார், தமிழக வெற்றிக் கழகச் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. “மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்கள் கருத்தியல். திராவிடம், தமிழ்தேசியம் இரண்டுக்கும் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதை அனைத்துக் கட்சிகளும் நிரூபித்திருக்கின்றன. அனைத்து மக்களுக்குமான கட்சியாக வரும்போது எங்களுக்கு இரண்டும் வேண்டும். எல்லோருக்கும் பொதுவான தலைவர்தான் விஜய். நாங்கள் இனவாதம், தூய்மைவாதம் பேசும் தமிழ் தேசியத்தைப் பேசவில்லை. தமிழர்களின் வாழ்வியலைப் பேசுகிறோம்,” என்கிறார். மேலும், நாம் தமிழரும் நல்ல கட்சிதான், அவர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள், என்றும் எங்களின் பிரதான எதிரி பா.ஜ.க, தி.மு.க தானே தவிர நா.த.க அல்ல என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cgl4xd303ero
  7. ரொய்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு மோசமான விளைவான - டிரம்பின் வெற்றியை எதிர்கொள்வதற்கு ஈரானும் அதன் சகாக்களும் தயாராகிவருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கமலா ஹரிஸுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்ற போதிலும், ஈரான் தலைவர்களும் லெபனான், யேமன் ஈராக்கில் உள்ள அவர்களின் சகாக்களும் நவம்பர் 5ஆம் திகதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார்; அதனால் தங்களிற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும் என கருதுகின்றனர். ஈரானின் அணுநிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகளில் ஈடுபடுவதற்கும் இஸ்ரேலின் பிரதமரை டிரம்ப் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரான் அதிக கரிசனை கொண்டுள்ளது என மேற்குலக ஈரானிய அராபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் ஈரானின் எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக தடைகளை விதிப்பதன் மூலம் அதிகளவு அழுத்தத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்றலாம் என ஈரான் கருதுகின்றது. 2017 முதல் 2021 ம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த டிரம்ப் - இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால் இஸ்ரேலும் தானும் முன்வைக்கும் அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனிக்கு கடும் அழுத்தங்களை கொடுப்பார் என ஈரான் எதிர்பார்க்கின்றது. அமெரிக்காவில் ஏற்படக்கூடிய தலைமைத்துவ மாற்றங்கள் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ஈரானின் வெளிவிவகார கொள்கை மற்றும் பொருளாதார சாத்தியப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் ஈரான் முன்னர் போன்று செல்வாக்கு செலுத்த முடியாது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் ஈரான் இராணுவத்தின் ஆதரவில் செயற்படும் ஆயுதகுழுக்களை அழிப்பதற்கு பலமிழக்க செய்வதற்கு இஸ்ரேல் கடந்த ஒருவருடமாக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர். எனினும் இஸ்ரேலிற்கு நிபந்தனை எதுவுமற்ற வெளிப்படையான ஆதரவை டிரம்ப் வழங்குவதால் டிரம்பின் நிலைப்பாடே ஈரானிற்கு மிகவும் ஆபத்தானது தீங்குவிளைவிக்ககூடியது என்ற கருத்து காணப்படுகின்றது. டிரம்ப் ஈரான் மீது நிபந்தனைகளை விதிப்பார் அல்லது இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மீது இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதிப்பார் என வளைகுடா குறித்த புத்திஜீவிகள் அமைப்பின் இயக்குநர் அப்தெல்லாஜிஸ் அல் சகார் தெரிவித்துள்ளார். ஈரானிற்கு எதிரான இராணுவநடவடிக்கையை டிரம்ப் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார் அங்கீகாரம் வழங்குகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்பது பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கனவு என அவர் தெரிவித்துள்ளார். ஈரான் அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என தெரிவித்த ஈரானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் தடைகளை கடந்து எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும் நாங்கள் ஏனைய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் வெற்றி என்பது கொடுங்கனவு என தெரிவித்துள்ள மற்றுமொரு ஈரான் அதிகாரி இஸ்ரேலை திருப்திப்படுத்துவதற்காக அவர் ஈரானிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பார், எண்ணெய் தடைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வார், இது எங்களின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் முடக்கும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197846
  8. 18 தொடர்களை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆகக் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ்.க பதவி, பிபிசி தமிழுக்காக கடந்த 12 ஆண்டுகளில் 18 டெஸ்ட் தொடர்கள் வெற்றி, உள்நாட்டில் அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற பெருமை, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் நிகழ்த்தியிராத சாதனை என இந்திய அணி வலம் வந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப் போடும் அளவுக்கு மோசமானதாக மாற்றும் என யாரும் நினைக்கவில்லை. இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்ன? 147 ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல்... 12 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரைத்தான் இந்திய அணி இழந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் 24 ஆண்டுகளுக்குப்பின் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை முதல்முறையாக முற்றிலும் இழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. அதிலும் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரிஷப்பந்த், வாஷிங்டன் சுந்தர் என அனைவரும் ஐ.பி.எல் லீக்கில் அதிரடியாக பேட் செய்யக்கூடிய திறமையான பேட்டர்கள், இவர்கள் இருந்தும் 147 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது என்பது ஜீரணிக்கமுடியாததாக அமைந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர்கள் சாடல் இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தோல்வியை சீனியர் வீரர்கள் பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். “உள்நாட்டில் இந்திய அணியின் இந்த ஒயிட்வாஷ் வெட்கக்கேடாக இருக்கிறது,” என முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வேதனை தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற அனுபவமான வீரர்கள் இருந்தும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது 'தரமான ஆடுகளங்களில் பயிற்சி தேவை' ஹர்பஜன் சிங், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பந்து திரும்பக்கூடிய ஆடுகளம், அதுவே நமக்குச் சொந்த எதிரியாக மாறிவிட்டது. தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் இந்திய அணி விளையாடி பயிற்சி எடுப்பது அவசியம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இதுபோன்ற டர்னிங் பிட்ச்கள் ஒவ்வொரு பேட்டரையும் சாதாரணமாக மாற்றிவிட்டது,” என்று இந்திய அணியின் உண்மையைான நிலையை அம்பலப்படுத்திவிட்டார். 'மாஸ்டர் பேட்டர்' சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்திய அணியின் ஒயிட்வாஷ் தோல்வியை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வி ஆலோசிக்கப்பட்டு, சுயபரிசோதனை செய்யப்பட வேண்டும். டெஸ்ட் தொடருக்குச் சரியாகத் தயாராகவில்லையா, மோசமான ஷாட்கள் தேர்வா, போதுமான பயிற்சி எடுக்கவில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஆடும் இந்திய பேட்டர்களின் திறனை உறுதியாக மேம்படுத்த வேண்டும், அதற்கு அதிக பயிற்சிகள் வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத பரிசோதனைகள் மோசமான முடிவுகளை வழங்கிவிட்டன” எனச் சாடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது என தெரிவித்துள்ளார் அணில் கும்ப்ளே 'சரியான பிட்ச் அமைத்திருக்கலாம்' இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தத் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்து இந்திய அணியினர் எந்தவிதமான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக் கூடியவர்கள் என்பதைப் புரிந்து, அறிந்து அதற்கு ஏற்றார்போல் பிட்ச் அமைத்திருக்க வேண்டும். பந்து நன்றாக திரும்பக்கூடிய முதல்தரமான சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தை அமைத்தது ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி ஆதிக்கம் செய்ய வழிவகுத்துவிட்டது,” என்றிருக்கிறார். மேலும், "சுழற்பந்துவீச்சில் மட்டும் இந்திய பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் 37 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். பெங்களூரு டெஸ்டில் 2வது இன்னிங்ஸ் தவிர்த்து, டாப்ஆர்டர் பேட்டர்கள் இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக ஒரு செஷன் கூட பேட் செய்யவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை, வீரர்கள் களமிறங்கிய வரிசையில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனியர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது சீனியர் வீரர்களின் நிலை ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்தவிதம், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு, குறிப்பாக சீனியர் வீரர்களின் பேட்டிங் ஆகியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களின் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பி.சி.சி.ஐ ஆலோசிக்கும் என பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப்பின் இந்த சீனியர் வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கை குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏனென்றால், சீனியர் பேட்டர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பேட் செய்தவிதம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. பிரிட்டனில் பிறந்த குழந்தைகளை மாற்றிய மருத்துவமனை - 55 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை2 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 10க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார் ரோகித், கோலியின் மோசமான பேட்டிங் குறிப்பாக ரோகித் சர்மா 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உள்நாட்டு டெஸ்டில் 35 இன்னிங்ஸ்களில் பேட் செய்து 1,210 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சதங்கள் உள்பட 37 சராசரி டெஸ்ட் அரங்கில் வைத்துள்ளார். ஆனால் கடந்த 10 இன்னிங்ஸ்களில் கேப்டன் ரோகித் சர்மா 6 போட்டிகளில் 10-க்கும் குறைவான ரன்களையே எடுத்துள்ளார், 2 போட்டிகளில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளார், இரு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். விராட் கோலி இதே காலகட்டத்தில் உள்நாட்டில் 25 இன்னிங்ஸ்களில் 742 ரன்கள் சேர்த்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு சதம் மட்டுமே அடித்து, 30.91 சராசரி வைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் இரு சீனியர் வீரர்களும் தலா ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர். விராட் கோலி அதிகபட்சமாக 70 ரன்களும் ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அதைவிட மோசமாக இந்த டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாக 91 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதம் மட்டும் அடங்கும். சீனியர் பேட்டர்கள் இருவரின் சராசரி 15 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் தொடரில் மோசமான சராசரி ரன்கள் என்பது இந்த டெஸ்ட் தொடர்தான். இந்த தொடரில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ஹென்றி, சவுத்தி வேகப்பந்துவீச்சில் தேவையற்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி ரன்கள் 42.29 ஆக இருக்கும்போது, இந்த தொடரின் மோசமான பங்களிப்பு அவருக்கு பெரிய கறையாக அமைந்துவிட்டது. விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமான ரன் சராசரி இதுதான். கோலியின் டெஸ்ட் சராசரி 48 ரன்களாக இருந்தநிலையில் அது 47 ஆகக் குறைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90கிமீக்கு மேல்தான் இருந்தது அஸ்வின் திணறுகிறாரா? இந்தியாவில் கடந்த காலங்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் உலகத் தரத்துக்கு இணையில்லாத எளிதாக உடையக்கூடிய பிட்சுகளையே அமைத்து வந்தனர். உலகத்தரத்துக்கு இணையான சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அதில் சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பந்துவீசி இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. இதனால்தான், இந்த டெஸ்ட் தொடரில் தரமான டர்னிங் பிட்சுகளை அமைத்தபோது, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர். இதுபோன்ற தரமான டர்னிங் பிட்ச்களில் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் வேகத்தைக் குறைத்து, பந்தை அதிகமாக 'டாஸ்' (வளைவாகத் தூக்கி வீசுதல்) செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்து நன்றாக டர்ன் ஆகும். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு வேகம் மணிக்கு 85 கி.மீக்கு மேல் இருக்கக்கூடாது. ஆனால், அஸ்வின், ஜடேஜா இருவரின் பந்துவீச்சு வேகம் 90 கி.மீ.க்கு மேல்தான் இருந்தது. இதனால்தான் இருவரின் பந்துவீச்சும் இதுபோன்ற ஆடுகளத்தில் எடுபடவில்லை. ஆனால், வாஷிங்டன் சுந்தர் இந்த ஆடுகளத்தை எளிதாகக் கணித்து பந்துவீச்சு வேகத்தைக் குறைத்ததால் புனே டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. இதுபோன்ற ஆடுகளத்தில் அஸ்வின், ஜடேஜா பந்துவீசிப் பழகியிருந்தால் வேகத்தைக் குறைத்து, ஆடுகளத்தைப் புரிந்து பந்துவீசியிருப்பார்கள். ஆனால், தரமற்ற ஆடுகளத்தில் பந்துவீசி, வேகத்தைக் குறைக்காமல் பந்துவீசியதால், அதை இந்த விக்கெட்டில் மாற்றமுடியாமல் சிரமப்பட்டனர். தரமான சுழற்பந்துவீச்சுக்கு இணையான ஆடுகளத்தில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்ற இதே கருத்தைத்தான் ஹர்பஜன் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆடுகளத்தில் பந்தை டர்ன் செய்யமுடியாமல் அஸ்வின், ஜடேஜா போன்ற சீனியர் பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர் டாப் ஆர்டர் தோல்வி, நடுவரிசையை அதிகம் நம்பியது இந்த டெஸ்ட் தொடரில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களைக் கடக்கவில்லை. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, கில், கோலி என யாருமே சரியாக பங்களிப்பு செய்யவில்லை. இதனால் முழுமையாக நடுவரிசை பேட்டிங்கில் ரிஷப்பந்த், சர்ஃபிராஸ்கான், ஜடேஜா ஆகியோரைத்தான் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவித்திருந்தால், நிச்சயமாக நடுவரிசைக்குச் சுமை இருந்திருக்காது. ஆனால் டாப் ஆர்டர்கள் தோல்வியால் ஒட்டுமொத்தச் சுமையும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்து, அவர்கள் ரன் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி பயிற்சியாளர் கம்பீருடன், கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியின் தாக்கம் கடந்த 1980, 1990, 2000 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் முறை இப்போது இல்லை. பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மறைந்து வருகிறது என்பதையே இந்த டெஸ்ட் தொடர் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. அதேநேரம், டி20 தாக்கத்திலிருந்து வீரர்கள் யாரும் மீளவில்லை. இந்திய பேட்டர்கள் சமீப காலங்களில் டி20 போட்டிகளில் விளையாடிய அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததன் விளைவாகத்தான், அவர்களால் தங்களை உடனடியாக டெஸ்ட் தொடருக்குத் தயார் செய்யமுடியவில்லை, தங்களின் பேட்டிங்கையும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. தரமான டர்னிங் பிட்சுகளில் டிஃபென்ஸ் முறை பேட்டிங் மிகவும் அவசியம். ஆனால், இந்திய பேட்டர்களில் ரிஷப் பந்த் தவிர வேறு எந்த பேட்டரும் இந்தத் தொடரில் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தைக் கையில் எடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. ஒருவேளை அதைச் சரியாகக் கையாளவில்லையா அல்லது பிட்சைக் கண்டு அச்சப்பட்டார்களா, விக்கெட்டை இழந்துவிடுவோம் என அதீத கவனத்துடன் ஆடினார்களா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு ஷாட்டையும் டி20 போட்டியின் அணுகுமுறையில் ஆடத்தான் இந்திய பேட்டர்கள் முயன்றனர். எந்தப் பந்தில் டிஃபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை ஸ்வீப்ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், ஃபுல்ஷாட் ஆடுவது, ஸ்ட்ரோக் வைப்பது எனத் தெரியாமல் தவறான ஷாட்கள் ஆடியுள்ளனர். இவை அனைத்தும் தீவிரமான சுயபரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது தெரியவரும். படக்குறிப்பு, எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி 'பரிசோதனைகள் தேவையற்றது' இந்திய அணியின் ஒயிட்வாஷ் குறித்து எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனின் பயிற்சியாளர் ஜான் கென்னடி பிபிசி-யிடம் பேசினார். “எந்த பேட்டரை எந்த இடத்தில் களமிறக்குவது எனத் தெரியாமல் களமிறக்கினர். ஒன்டவுனில் ஆடக்கூடிய கோலியை 4-வது டவுனில் ஆடவைத்தனர். இதுபோன்ற பரிசோதனைகள் தேவையற்றவை,” என்றார். “இதுபோன்ற டர்னிங் டிராக் (பிட்ச்) பற்றி அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கு நன்கு தெரியும். இதில் அதிகமாகவும் ஆடிப் பயிற்சி எடுத்துள்ளனர். அதிலும் சென்னையில் இதுபோன்ற ஆடுகளம்தான் அதிகம் பயன்படுத்துவோம். அப்படியிருக்கும் போது சுந்தர், அஸ்வினை நடுவரிசையில் களமிறக்கி இருந்தால் சிறப்பாக பேட் செய்திருப்பார்கள். சுந்தர் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர். அவரை 7-வது வரிசையில் களமிறக்கித் தவறு செய்துவிட்டனர்,” என்று கூறினார். 'அஸ்வினின் தவறான ஷாட்' தொடர்ந்து பேசிய ஜான் கென்னடி, “அது மட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றிக்கு 25 ரன்கள் இருக்கும்போது அஸ்வின் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மோசமான தேர்வு. இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் சுந்தர், அஸ்வின் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். ஆனால், அஸ்வின் அடித்த ஷாட் அந்த நேரத்தில் தேவையற்று, தவறானது,” என்றார். 'டர்னிங் விக்கெட்டில் விளையாடவில்லை' இந்திய பேட்டர்கள் உண்மையில் இதுபோன்ற டர்னிங் டிராக்களில் பேட் செய்து பழகாதவர்கள் என்று கூறிய ஜான் கென்னடி, “உண்மையில் இப்போதுதான் தரமான ஆடுகளத்தை அமைத்துள்ளனர். அதனால்தான் பந்து நன்றாக டர்ன் ஆகியவுடன் அதை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாமல் இந்த பேட்டர்கள் திணறி விக்கெட்டை இழந்தனர்,” என்றார். “இதுபோன்ற டர்னிங் டிராக்குகளில் பேட்டர்கள் டிஃபென்ஸ் முறை ஆட்டத்தை முறையாக ஆட வேண்டும். ஆடிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும் அல்லது ரிஷப் பந்த் ஆடியதைப் போல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய முடியாத வகையில் அதிரடியாக ஆடி அவர்களைக் குழப்பிவிட வேண்டும்,” என்றார். “அப்போது எப்படிப் பந்துவீசுவது எனத் தெரியாமல் பந்துவீச்சாளர்கள் குழப்படையும்போது பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், இந்திய பேட்டர்கள் பந்து டர்ன் ஆகிவிடும் என பயந்து, அதீத கவனத்துடன் பந்தை எதிர்கொண்டு பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்ய வாய்ப்பளித்துவிட்டனர்,” என்றார். மேலும், “கிரிக்கெட்டில் பேட்டர்கள் பந்துவீச்சாளர்களின் கை அசைவு, அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், தூஸ்ரா, கூக்ளி வீசுகிறாரா என்பதைப் பார்த்து விளையாட வேண்டும். ஆனால், இப்போதுள்ள பேட்டர்கள் பந்தைப் பார்த்து ஆடுகிறார்கள்,” என்றார். “ரோகித், கோலி என அனைவருமே தரமான பேட்டர்கள்தான். ஆனால், இதுபோன்ற தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் ஆடியதில்லை என்பதுதான் கவனிக்க வேண்டியது. இதுபோன்ற விக்கெட்டை அமைக்கும்போது, இந்திய பேட்டர்களால் விளையாட முடியுமா, பந்துவீச முடியுமா என்பதை அறிந்து அமைத்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார் ஜான் கென்னடி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxyv6e1w2lo
  9. சுமந்திரன் உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு; சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். நேற்று மன்னார் தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இந்த கருத்தை அவர் கூறியபோது நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரியபோது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனால்தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும். அது முற்றிலும் பொய் என்றும் 2020ஆம் ஆண்டில் இருந்தே கட்சியின் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா, இல்லையா? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதேவேளை எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சுமந்திரன், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்கக்கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன். அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் போது வன்னியில் சுமந்திரன் ஏறும் எந்த அரசியல் மேடையிலும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் நான் ஏறவில்லை. அதன் காரணம் என்னவென்றால், சுமந்திரன் பிரசாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே. அவ்வாறான நிலையில், அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும், வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன். அதேவேளை அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும். இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலைமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன். சுமந்திரனுடன் 2020ஆம் ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறிருக்க, இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக வாக்கு கேட்க முடியாது. என்னை பொறுத்தவரையில், வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்த பகுதிகளில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், சுமந்திரனின் இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன். அதேவேளை சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்யவுமில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதமும் கொடுக்கவில்லை. சுமந்திரனின் கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தேர்தல் நியமனத்துக்காக நான் வாக்கு கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதேநேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக்கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாகத்தான் விலகினேன். சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன்... நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டுவந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/197843
  10. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிறைவேற்றவேண்டும். அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி தெளிவுபடுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்.
  11. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை - அர்ப்பணிப்பை மதிக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சிகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒன்றிணைவு மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தக்கவைக்கப்படும் என சுட்டிக்காட்டும் வகையிலான அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். 1979இல் நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அவசரநிலை போன்ற நிறைவேற்றதிகார அதிகாரங்களை கொண்ட ஆபத்தான சட்டம். ஆனால் இதனை சாதாரண தருணங்களிலும் பயன்படுத்தலாம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகள் கண்மூடித்தனமான கைதுகளில் இருந்து விடுதலை, சித்திரவதையிலிருந்து விடுதலை கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதால், சித்திரவதை, நீண்டகால தடுப்பு, அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றால் பெரும் மனித துயரங்களை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் ஆயுதமாக ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது, தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கு எதிராக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள் நாட்டிற்கு வெளியிலிருந்து மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்திலிருந்தும் வெளியாகியுள்ளது, கடந்த சில வருடங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து இதற்கு அதிகரித்த ஆதரவு காணப்படுகின்றது. எனினும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் அதனை தக்கவைத்துள்ளனர். 2024 ஒக்டோபர் 29ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் சட்டவிவகாரங்களிற்கான பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார அரசாங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்து வெளியிட்ட கருத்தின்போது பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இல்லை, மாறாக அது சிவில் சமூகத்தினர் பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார். அரசாங்கம் அவ்வாறு தவறாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது மாறாக நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே அதனை பயன்படுத்தும், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தாது என குறிப்பிட்டிருந்தார். அதேநாளில் கருத்துவெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுகின்றது, புதிய நாடாளுமன்றத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றுவது குறித்து ஆராயமுடியும், 2024 ஆகஸ்ட் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களும் நீக்கப்படும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களினதும் சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதற்கு முன்னரும் தேசிய மக்கள்சக்தி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அதிகார துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல்கொடுத்ததுடன், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற ஏனைய ஒடுக்குமுறை சட்டங்களையும் எதிர்க்கின்றது. சமீபத்தைய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான ஆணையை வழங்கிய பின்னர் தேசிய மக்கள் சக்தியின் சமீபத்தைய அறிக்கைகள் மக்களின் ஆணையை குறைமதிப்பிடும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிறைவேற்றவேண்டும். அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி தெளிவுபடுத்தவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும். அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தனது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த தெளிவுபடுத்தலும் தலைமைத்துவமும் அவசியம். https://www.virakesari.lk/article/197838
  12. (எம்.மனோசித்ரா) வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 'வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும். இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப்பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசணையுடன் முப்படையும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர் என்றார். இது தொடர்பில் இராணுப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு சேவை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மீளாய்வு அறிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமையவே இந்த வீதி திறக்கப்பட்டது. இந்த வீதி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் சென்றதால் மூடப்பட்டிருந்தது. தற்போது வீதி திறக்கப்பட்டுள்ளதே தவிர, அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்படவில்லை. எனவே வீதிக்கு வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/197835
  13. காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் குறித்த இளைஞர் குழுவினர் சந்திப்புகளை நடாத்தி, அவர்களது கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்றும், இன்றும் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அங்குள்ள அரசியல் பிரமுகர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் சிங்கள மக்களுடைய கோரிக்கைகளையும் தமிழ் மக்களுடைய வேண்டுகோள்களையும் பற்றி கலந்துரையாடினோம். அவர்கள் காணி, பொலிஸ் பாதுகாப்பு போன்றவற்றை கோரியிருந்தனர். தமிழ் சிங்கள மக்கள் இணைந்தால் நாங்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். மேலும் சிங்கள மக்கள் நினைக்கிறார்கள் மாகாணசபை தேர்தல் என்பது தமிழ், சிங்களம் என நாட்டை இரண்டாக பிரித்து நடாத்துவது என்று. ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துரைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311493
  14. புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட ஏனைய வசதிகள் மட்டுப்படுத்தப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களின் பணியாளர்களாக நியமிக்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் ஏற்றுக்கொள்வதற்கு தாங்கிக்கொள்வதற்கு கடினமான விடயமாக ஊழலின் முடிவு காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197832
  15. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இன்றைய தினம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் இன்றையதினம் ஞாயிற்றுகிழமை மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தான் மதுபான சாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புகொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் இன்று நான் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகளின் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்பத்தி மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. என்பதை நான் அன்மையில் ஒரு ஊடகவியளாலரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனாலும் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக்கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகவும் அது முற்றிலும் பொய் எனவும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்திகாரணமாக உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா இல்லையா என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிகாட்டினார். குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்மந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்மந்தன் ஐயாவுக்கு எழுதியிருதேன். அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை, அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே. அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார், இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன். அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்மந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன் சுமந்திரன் தலைவராக வரமுடியாமைக்கு நான் பெறும் பங்காற்றியிருந்தேன் அதுவும் அவருக்கு நன்றாக தெரியும். இப்பிடியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமைகாரணமாகவே இளைஞர்களுக்கு வாய்பு வழங்கு தேர்தலில் போட்டியிடவேண்டாம் என தீர்மானித்திருந்தேன். சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது. என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபடவேண்டும் ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனாலும் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன். அதே நேரம் சுமந்திரனுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன், நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசும் செய்யவில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிறுந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது, என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன். சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்தே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கின்றேன் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311491
  16. ரோஹித பொகொல்லாகமவை இலங்கைக்கு திருப்பி அழைத்துள்ளோம் - ஜனாதிபதி பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித பொகொல்லாகம இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்தே உயர்ஸ்தானிகரை இலங்கைக்கு மீள அழைத்துள்ளதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்கமாட்டோம், அரசியல் நியமனங்களை அனுமதிக்கமாட்டோம், தூதுவர், உயர்ஸ்தானிகர்கள் மாத்திரமல்லாமல் தூதரக பணியாளர்கள் பலரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அனேகமானவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பத்தவர்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197840
  17. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அமெரிக்கர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள். குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுமே பிரதான வேட்பாளர்கள். இருவருக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இறுதி நேரம் வரை கூறமுடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது வயது மூப்பு மற்றும் வேறு காரணங்களினால் அவரை ட்ரம்ப் இலகுவாகத் தோற்கடித்துவிடக்கூடிய சாத்தியம் இருந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்கினார். அதையடுத்து இலகுவாக வெற்றி பெறுவதற்கு ட்ரம்புக்கு இருந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போனது. பிரசாரங்களின் போது ட்ரம்புக்கு கமலா ஹரிஸுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் ஏறத்தாழ சம அளவிலான மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்ற ஏழு மாநிலங்களில் (Swing States) அதிகமானவற்றில் வெற்றியடைபவரே தேர்தல் மன்ற ( Electoral College ) வாக்குகளில் அதிகமானவற்றைக் கைப்பற்றி ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருவருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவுவதாகவே கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து ஜனப்பிரதிநிதிகள் சபைக்கும் செனட்சபைக்கும் ( இரு வருடங்களுக்கு ஒரு தடவையான) தேர்தல்கள் நடைபெறும். நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கப் போகும் ஜனாதிபதியுடன் சேர்த்து ( ஆறு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) 100 செனட்டர்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் ( இரு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) சகல 435 ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களையும் அமெரிக்கர்கள் தெரிவு செய்வார்கள். தனது முன்னைய பதவிக்காலத்தில் (2016 -- 20 ) தான்தோன்றித் தனமாக ட்ரம்ப் எடுத்த முடிவுகள் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மீண்டும் அவர் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வருவாரேயானால் சர்வதேச அரசியல் மிகவும் குழப்பநிலைக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது. அதுவும் குறிப்பாக மத்திய கிழக்கில் காசா போர் காரணமாக நிலவும் பதற்றம், ரஷ்ய - உக்ரெயின் போர் ஆகியவை காரணமாக ஏற்கெனவே சர்வதேச அரசியல் நிலைவரம் நெருக்கடி நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த நிலைவரங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்று சிந்தனையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது. அதை கேசரி வாசக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். "ஐரோப்பா போர் ஒன்றுக்கு தயாராக வேண்டியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகார தலைவர் ஜோசப் பொறெல் அண்மையில் வெளிப்படையாவே எச்சரிக்கை செய்திருந்தார்." வாஷிங்டனில் யார் ஆட்சி செய்யப்போகிறார் என்பதில் இது தங்கியிருக்கலாம். நாம் அமெரிக்க ஆதரவிலோ அல்லது எம்மை பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆற்றலிலோ தங்கியிருக்க முடியாது" என்று அவர் கூறினார். அதற்கு சில வாரங்கள் முன்னதாக ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மிகவும் குறைந்தளவு பணத்தைச் செலுத்தும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளை ( நேட்டோ ) தாக்குமாறு ரஷ்யாவுக்கு ஊக்கங்கொடுக்கப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரித்துவிட்டன. வடகொரியாவிடமிருந்து வரக்கூடிய அணுவாயுத அச்சுறுத்தலை தடுப்பதற்கு இனிமேல் அமெரிக்காவில் தங்கியிருக்காமல் தங்களது சொந்தத்தில் சுயாதீனமாக அணுவாயுத அச்சுறுத்தல் ( Nuclear deterrent ) தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் கோரிக்கை தென் கொரியாவில் அதிகரித்துவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமோ என்று அமெரிக்காவின் நேச நாடுகள் அமைதியிழந்துபோயிருக்கின்றன. ட்ரம்ப் பாராட்டும் எதேச்சாதிகாரிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் சமவளவு ஆதரவுடைய மாநிலங்களின் இலட்சக் கணக்கான மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது உலகின் ஏனைய பாகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ட்ரம்ப் வெற்றிபெறக் கூடும் என்ற ஊகம் உக்ரெயினில் கடுமையாக உணரப்படுகிறது. விளாடிமிர் புட்டின் மீதான ட்ரம்பின் அனுதாபம் வெளிவெளியாக தெரிந்த ஒன்று. ரஷ்யாவுடன் போரை ஆரம்பித்ததாக உக்ரெயின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அவரின் துணை வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய கிழக்கை நெருக்கடியை பொறுத்தவரை, கூடுதலான அளவுக்கு பாலஸ்தீனர்களுக்கு அனுதாபம் காட்டும் கமலா ஹரிஸ் ஜோ பைடனையும் விட இஸ்ரேலை குற்றம் காண்கிறவராக இருக்கிறார். ஆனால் கொள்கையில் பெருமளவுக்கு மாறுபடுவார் என்பதற்கான அறிகுறியைக் காணவில்லை. அராபிய அமெரிக்கர்கள் மத்தியிலான ஆதரவில் திடீரென்று ஏற்பட்ட குறைவு இஸ்ரேலுக்கு ஆயுதக்களை அனுப்புவது குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு உந்துதல் அளித்திருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும், தனக்கு வெகுமதி அளித்து இஸ்ரேலிய வலதுசாரிகளை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் மீள் வருகைக்காக பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு ஆவலுடன் காத்திருக்கிறார். தனது முதலாவது பதவிக்காலத்தில் ஈரானுடனான அணு உடன்படிக்கையில் ( அதை ஈரான் ஒழுங்காக கடைப்பிடித்து வந்தது) இருந்து வெளியேறிய ட்ரம்ப் முடிவற்ற போர்கள் மீதான தனது வெறுப்பின் விளைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்தார். ஆனால் அதே நிலைப்பாடு இனிமலும் தொடருமா? ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது உலகம் பெருமளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. ஜனாதிபதி கிம் ஜொங் -- உன்னை ட்ரம்ப் வீம்புத்தனமாக தவறாக கையாண்டதால் வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை துரிதப்படுத்தியதுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமாகவும் சென்றது. பைடன் நிருவாகம் ட்ரம்பின் பதவிக் காலத்தின் சகல அம்சங்களையும் நிராகரிக்கவில்லை. சீனா தொடர்பில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையில் இருந்த இருதரப்பு கருத்தொருமிப்பு தொடர்ந்து நிலவியது. முரட்டுத்தனமான முறையில் ட்ரம்ப் கடைப்பிடித்த பொருளாதார தேசியவாதத்தில் இருந்து பைடனின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. சீனாவுடனான வர்த்தப் போட்டியில் பைடன் குறிப்பிட்ட இலக்குகளை மையமாக வைத்தே நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், ட்ரம்ப் சீன உற்பத்திகள் மீது 60 சதவீத தீர்வையும் சகல இறக்குமதிகள் மீதும் 20 சதவீதம் வரையான தீர்வையையும் விதிக்கப்போவதாக அச்சுறுத்துகிறார். அதனால் உலகளாவிய வர்த்தகப் போர் ஒன்று மூளக்கூடும். தொடக்கத்தில் தாய்வானுக்கு ஆதரவாக நடந்துகொண்ட ட்ரம்ப் இப்போது பாதுகாப்புக்காக அமெராக்காவுக்கு அந்த நாடு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இது அவரது குறுகிய கால நலன்களை அடிப்படையாகக் கொண்டதும் அப்பட்டமான கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டதுமான ஒரு வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கிறது. அவர் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். ஜனநாயக கட்சியினரும் கமரா ஹரிஸும் குடிவரவை பொறுத்தவரை சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்ற அதேவேளை " பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பறித்த " ட்ரம்ப் பெருமளவில் ஆட்களை நாடுகடத்தப் போவதாக உறுதியளித்திருக்கிறார். குடியேற்றவாசிகள் அமெரிக்க " இரத்தத்தை நச்சாக்குகுகிறார்கள்" என்ற ட்ரம்பின் பாசிசத்தனமான பேச்சுக்கள் இனவெறியை நியாயப்படுத்தி பரப்புகின்றன. சர்வதேச ரீதியில் பெண் வெறுப்பாளர்களுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் பலம்பொருந்திய எதேச்சாதிகாரிகளுக்கும் ட்ரம்ப் துணிச்சலைக் கொடுத்திருக்கிறார். பைடனைப் போன்று கமலா ஹரிஸ் இஸ்ரேலுடனோ அல்லது ஐரோப்பாவுடன் ஐரோப்பாவுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டவராகவோ அல்லது ஜனநாயக நாடுகளுக்கும் அவற்றின் எதிரிகளுக்கும் இடையிலான ஒரு நாகரிக மோதல் பற்றிய கருத்தைக் கொண்டராகவோ கருதப்படவில்லை. உக்ரெயினுடன் " உறுதியாக நிற்பேன் " என்று கூறும் அவர் ரஷ்ராவுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்லுமாறு வற்றபுறுத்துவதில் பைடனைவிடவும் கூடுதலான அளவுக்கு நாட்டம் கொண்டவராக இருப்பார். கமலா ஹரிஸின் நிருவாகமும் பைடன் நிருவாகத்தின் ஒரு பரந்தளவிலான தொடர்ச்சியாக அமையும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்ற அதேவேளை, பதவிக்கு வந்ததும் ஒரு வேட்பாளர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை திட்டவட்டமாக எதிர்வு கூறுவது சாத்தியமில்லை. ஆனால், வெளியுறவு கொள்கையில் அவர் எப்போதும் சரியான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை என்கிற அதேவேளை அவர் ட்ரம்பின் நெறிபிறழ்ந்த, முரட்டுத்தனமான, தன்னையே முன்னிலைப்படுத்துகின்ற அணுகுமுறைக்கு முரணாக ஒரு உறுதிப்பாட்டை, பொறுப்பை, அர்ப்பணிப்பைக் கொண்டுவருவார் என்பது எமக்கு நிச்சயம். காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவசியமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைளை போதுமானளவுக்கு கமலா ஹரிஸின் ஒரு நிருவாகம் எடுக்காமல் விடக்கூடும். ஆனால் ட்ரம்ப் தற்போதைய உலகளாவிய உடன்படிக்கைகளை வேண்டுமென்றே சீர்குலைத்துவிடுவார். இந்த சகல காரணங்களுக்குமாக, இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம் தாங்கமாட்டாது. https://www.virakesari.lk/article/197820
  18. அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர் அறுகம் குடா மீது தாக்குதல் பின்னணயில் செயற்பட்ட ஆப்கானிஸ்தான் முகவர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன. அறுகம் குடா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த நபர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறிது. இந்த ஆப்கானிய முகவர் போதைப்பொருள் வியாபாரி என கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். பண பரிவர்த்தனைகள் அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பிலான் இவருடன் பாரிய பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி, குறித்த பண பரிவர்த்தனையுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள் அனைத்தும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை இதேவேளை, அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழுவினர் அறுகம் குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/arugam-bay-attack-threat-investigation-updates-1730631441
  19. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (02) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நியாயமான சம்பளம் தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர், மே தினமன்று கொட்டகலையில் 1750 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் எந்த தோட்டத் தொழிலாளிக்கும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். மக்கள் எப்பொழுதும் அரசை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பொருளாதாரம் சீராகும் வரை மக்களைக் காப்போம். கிடைத்துள்ள வாய்ப்பு அதன் பிறகு மக்கள் செய்யும் வேலைகளில் நல்ல வருமானம் கிடைக்கும், மக்கள் நலமாக வாழலாம், தேசிய மக்கள் சக்தி ஒரு சமுதாயத்தை நிறுவும். இந்த கனவு நமக்கு எவ்வளவு காலமாக இருந்தது? மக்களை முன்னேற்ற எவ்வளவு கனவு கண்டிருப்போம்? இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.” என்றார். ” https://ibctamil.com/article/new-changes-in-2025-budget-proposal-sri-lanka-1730634021#google_vignette
  20. - எம்.ஆர்.எம்.வசீம் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து ஏகாதிபத்திய ஆட்சியே முன்னெடுப்பதே தேசிய மக்கள் சக்தியின் திட்டம். அதுவே தற்போது லக்ஷ்மன் நிபுணாரச்சியின் வாயால் வெளி வந்திருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், தெற்காசியாவிலேயே சிறந்த தொழில் சட்டம் இருப்பது இலங்கையிலாகும். என்றாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழிற்சங்க தலைவர்களின் போராட்டம் காரணமாகவே எமது வேலை நேரம் 8 மணி நேரமாக அனுமதிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்களை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். எமது நாட்டில் தொழிற் சங்கங்கள் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைக்காக முன்னெடுத்து வந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே நாங்கள் எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியுமாகின. அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும். அதனால் லக்ஷ்மன் நிபுணாரச்சியின் கூற்றை நாங்கள் கண்டிப்பதுடன் அவரின் இந்த கூற்றுக்கு எதிராக இந்த நாட்டில் இருக்கும் தொழிற்சங்கங்கள் அணி திறளவேண்டும். நிபுணாரச்சி போன்றவர்களுக்கு இவ்வாறு கதைக்கவிட்டு, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் எங்கே என கேட்கிறோம். நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்களில் அதிகமானவை மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டதாகும். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்ததுடன் தொழிற்சங்கங்களை இல்லாதொழித்து, ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடையில் வளமான நாடு அழகான வாழ்க்கை என தெரிவித்தாலும் அதன் உள்ளடக்கத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.மக்கள் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அட்டை பக்கத்தை மாத்திரம் பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர். தற்போதுதான் இவர்களின் உண்மை சுயரூபம் அவர்களின் வாய்களினாலே வெளிவருகிறது. மேலும் தேசிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளுக்கு எமது புதிய ஜனநாயக முன்னணியே பாரிய சவாலை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுக்கு பாரிய பிரச்சினையாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளை பாதுகாத்துக்கொள்வதும் தற்போது அவர்களுக்கு சவாலாகியுள்ளது. அதனால் அரசாங்கத்தின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு மக்கள் பாரிய சக்தியை வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197810
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாகாணமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்துபோன கட்டமைப்புகளை ஆய்வாளர்கள் வரைபடமாக்கி வருகின்றனர். பண்டைய லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மாயர்கள் நாகரிகத்தின் தொல்லியல் தளமாகக் கருதப்படும் கலக்முல் (Calakmul) நகருக்கு அடுத்தபடியாகதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். தற்செயலாகக் கிடைத்த மாயன் நகரம் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இணையத்தில் ஆராய்ச்சித் தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, "தற்செயலாக" இந்த மாயன் நகரம் இருந்ததற்கான சாத்தியங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்குப் பிறகு அவரது குழுவினர் மூன்று தொல்லியல் தளங்களை அங்கே கண்டுபிடித்தனர். அதன் மொத்த பரப்பு ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோ அளவுக்கு இருந்துள்ளது. "நான் கூகுள் சர்ச்சின் 16வது பக்கத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக ஒரு மெக்சிகன் அமைப்பு நடத்திய லேசர் ஆய்வு ஒன்று கண்ணில்பட்டது" என்று கூறுகிறார் லூக் ஆல்ட்-தாமஸ். அவர் அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிதாக கண்டறியப்பட்ட நகரத்தின் புகைப்படங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அது காலக்முல்லுக்கு அருகே உள்ள பிரமிடு கட்டுமானங்கள் போன்ற கட்டுமானங்களைக் கொண்டுள்ளது எதேச்சையாக எதையோ தேட ஆரம்பித்து இந்த நகரத்தை கண்டறிந்தது எப்படி என்பது குறித்து விளக்கும் ஆல்ட் - தாமஸ், "நான் பார்த்தது ஒரு `லிடார்’ லேசர் சர்வே தான்" என்கிறார். லிடார் தொழில்நுட்பம் என்பது`ரிமோட் சென்சிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது. ஒரு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லேசர் பல்ஸ்கள் வெளியிடப்படும். அது பிரதிபலித்து அந்த சிக்னல் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள பொருட்களை வரைபடமாக்கும் முறையே லிடார் லேசர் சர்வே." ஆல்ட்-தாமஸ் அந்த கூகுள் தேடலில், தொல்லியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு தரவுகளைச் செயலாக்கம் செய்து பார்த்தபோது ஓர் உண்மையைக் கண்டறிந்தார். இதற்கு முன்னர் ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறவிட்டதை தாமஸ் கண்டார். அந்த லிடார் ஆய்வு முடிவுகள் மூலம், கி.பி 750 முதல் 850 வரை வாழ்ந்த 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய பழங்கால நகரத்தின் இருப்பை அவர் கண்டுபிடித்தார். இது இன்று இந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆல்ட்-தாமஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் அருகில் இருந்த ஒரு குளத்தின் பெயரை அடிப்படையாக வைத்து இந்த நகரத்திற்கு `வலேரியானா’ என்று பெயரிட்டனர். நகரத்தின் அழிவுக்கு என்ன காரணம்? படக்குறிப்பு, வலேரியானா நகரத்தின் தோற்றம் ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் மார்செல்லோ கானுடோவின் கூற்றுப்படி, இந்தக் கண்டுபிடிப்பு `வெப்பமண்டங்களில் தான் நாகரிகங்கள் அழிந்துபோயின’ என்ற மேற்கத்திய நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது. உலகின் இந்தப் பகுதி, மிகவும் ஆழமான மரபுகளைக் கொண்ட, பரந்துபட்ட சமூகக் கட்டமைப்புகள் அடங்கிய கலாசாரங்களின் தாயகமாக இருந்துள்ளதாக அவர் விவரித்தார். இந்த நகரத்தின் அழிவுக்கு காரணம் என்ன என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியாது, ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வலேரியானா, ஒரு தலைநகருக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளது. இந்த நகரம், அடர்த்தியான கட்டுமானங்களுடன், அற்புதமான காலக்முல் நகரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும், காலக்முல்லில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மாயன் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் எக்ஸ்புஜில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பிரதான சாலையில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் இருந்தபோதிலும் யாராலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்தப் பகுதியை `மறைந்துள்ள நிலப்பரப்பு’ என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் புதைந்துபோன நகரத்தின் படங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் யாரும் இப்பகுதிக்குச் சென்றதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் மக்கள் தரையின் கீழ் இடிபாடுகள் இருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். சுமார் 16.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த இந்த நகரம், 2 கிமீ தொலைவில் பெரிய கட்டடங்களைக் கொண்ட இரண்டு பெரிய மையங்களைக் கொண்டிருந்தது, அருகருகே அமைந்த வீடுகள் மற்றும் தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட பகுதிகள் இருந்தன. இங்கு வழிபடும் பிரமிடுகளுடன் இரண்டு பிளாசாக்கள் உள்ளது. அங்கு மாயன் மக்கள் வழிபட்டிருக்கலாம் அல்லது பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கலாம், அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்திருக்கலாம். மேலும், அங்கு ஒரு பழங்கால விளையாட்டு மைதானமும் இருந்தது. மொத்தத்தில், ஆல்ட் தாமஸ், பேராசிரியர் கானுடோ ஆகியோர் இந்த காட்டுப் பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு தளங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு அளவுகளில் 6,764 கட்டடங்களைக் கண்டுபிடித்தனர். மாயன்கள் வாழ்ந்த பகுதி சிதைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இந்த ஆராய்ச்சியோடு தொடர்பில்லாத லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரஹாம் கூறுகையில், இந்த ஆய்வின்படி, மாயன் நாகரிக மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கவில்லை. அவர்கள் சிக்கலான அமைப்பைக் கொண்ட நகரங்களில் வாழ்ந்தனர் என்ற கூற்றுகளை இந்த ஆய்வு ஆதரிக்கிறது” என்றார். "தற்போது அந்த இடங்கள் காட்டுப் பகுதிகளாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதில் மக்கள் குடியேற்றங்கள் இருந்துள்ளன” என்றும் கூறுகிறார். ஆராய்ச்சிப்படி, மாயன் நாகரிகத்தின் சரிவு கி.பி 800இல் தொடங்கி இருக்கலாம். அவர்களின் அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் காலநிலை தொடர்பான பிரச்னைகளைத் தாங்க முடியாமல் அழிவு நிகழ்ந்திருக்கலாம். "இப்பகுதிகளில் வறட்சி சூழல் ஏற்பட்டபோது, இந்த நிலப்பரப்பு மக்களால் நிரம்பி வழிந்தது என்பதை இது குறிக்கிறது. எனவே, மக்கள் இருப்பிடங்களை விட்டு வெகுதூரம் நகர்ந்ததால், முழு கட்டமைப்பும் சிதைந்திருக்கும்" என்று ஆல்ட் தாமஸ் கூறுகிறார். இறுதியாக, 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஸ்பெய்ன் நாட்டு படையெடுப்பும் மாயன்களின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்னும் பல நகரங்களைக் கண்டிபிடிக்கலாம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேராசிரியர் கானுடோ கூற்றுப்படி, தாவரங்கள் நிறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, அழிந்த நாகரிகங்களைக் கண்டறிவதில் லிடார் தொழில்நுட்பம் புரட்சி செய்துள்ளது. அவரது தொல்லியல் பணியின் ஆரம்பக் காலத்தில், தரையை அங்குலம் அங்குலமாகச் சரிபார்க்க எளிய கருவிகளைப் பயன்படுத்தி, உடல் உழைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மெசோ அமெரிக்கன் பிராந்தியத்தில் லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தொல்லியல் ஆய்வாளர்கள் ஒரு நூற்றாண்டில் செய்த பணிகளைவிட 10 மடங்கு அதிக பகுதிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். ஆல்ட் தாமஸ், "தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தெரியாத பல தளங்கள் அங்கு இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார். உண்மையில் பல தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஆய்வாளர்களால் அகழாய்வு செய்ய முடியாது. "ஏதோவொரு கட்டத்தில் வலேரியானாவுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது சாலைக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பது தெரியாது. அதே நேரம் நாங்கள் அங்கு தொல்லியல் பணிகளை மேற்கொள்வோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்கிறார் ஆல்ட் தாமஸ். மேலும், "லிடார் சகாப்தத்தில் பல புதிய மாயன் நகரங்களைக் கண்டறிவதால் சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை நம்மால் ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு அதிகமானவை" என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வு ஆன்டிக்விட்டி (Antiquity) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg4d5wzd7o
  22. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது: இந்தியா புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்திய அரசு இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாகவே இந்தியா - கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கடந்த மே மாதம் பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர சில கட்சிகளும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் வாக்கு வங்கியை குறிவைத்தே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது’’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கனடா குற்றம் சாட்டியுள்ளது. கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் சமீபத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ‘கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கீகாரம் அளித்ததாகவும் அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்துள்ளதாகவும் கனடாஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ‘‘வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இந்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா பெயரை குறிப்பிட்டது நான்தான்’’ என்று கனடா வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது என்று இந்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கனடாவின் பொது பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவின் முன்பு அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த அக்டோபர் 29-ம் தேதி அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடாவின் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு மோசமாக நடத்துகிறது. அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அவர்களது பேச்சு ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபோல தூதரக விதிகளை மீறி கனடா அரசு செயல்படுகிறது. இத்தகைய நெருக்கடிக்கு இடையில்தான் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கனடா பரப்புகிறது. இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும், என அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/197780
  23. நைஜீரியாவில் வாழ்கைசெலவு அதிகரிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை நால்வர் மயங்கி விழுந்துள்ளனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 76 பேருக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை நைஜீரியா அரசாங்கம் சுமத்தியுள்ளது. இவர்களில் 14 முதல் 17 வயதானவர்களும் காணப்படுகின்றனர். நைஜீரியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்த விரக்தி காரணமாக பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நால்வர் சுட்டுக்கொல்லப்பட்டனர் பலர் கைதுசெய்யப்பட்டனர். நைஜீரியாவில் 1976 இல் மரண தண்டனை நடைமுறைக்கு வந்தது, எனினும் 1996ம் ஆண்டின் பின்னர் எவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நைஜீரியாவின் சிறுவர் உரிமை சட்டம் சிறுவர்களை குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் அனுமதிக்கவில்லை என சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார். ஆகவே சிறுவர்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டு சென்றமை தவறான விடயம், என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197788
  24. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்துள்ளது. டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் பிளாக் 1 பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. பிபிசியைப் பொருத்தவரை, இந்த சம்பவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில் இளம்பெண் உள்ளாடை அணிந்தபடி அலட்சியமாக வளாகத்தில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வைரலான வீடியோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் இரான் மாணவி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், உள்ளாடை அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பல்கலைக் கழகத்தின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த உரையாடலின் ஆடியோ வீடியோவில் கேட்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த வீடியோ எங்கோ தொலைவில் உள்ள வகுப்பறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு வீடியோவில், இந்த பெண் பல்கலைக் கழக வளாகத்தின் பிளாக் ஒன்றின் அருகே சாலையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை களைகிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எதிர்வினையும் இதை உறுதிப்படுத்துகிறது. சிறிது நேரத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கார் சம்பவ இடத்திற்கு வந்தது. காரில் இருந்து இறங்கிய பல அதிகாரிகள் அந்தப் பெண்ணை காருக்குள் ஏற்றிச் செல்வதை வீடியோவை காண முடிகிறது. சமூக ஊடகங்களில் எதிர்வினை இரானுக்கு வெளியே பல ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இதனை, "அந்தப் பெண் தனது ஆடைகளை களைவதன் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்” என்று விவரித்தன. ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கும், பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தைக்கும் எதிரான எதிர்வினையாக அந்தப் பெண் இப்படி செய்ததாக விவரிக்கப்படுகிறது. இதுதொடர்பான பல செய்திகள் 'அமிர் கபீர் நியூஸ் லெட்டர்' என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளன. 'அமிர் கபீர் நியூஸ்' கூற்றின்படி, “ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரால் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. அதனால் கோபமடைந்த அந்தப் பெண் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது. பிபிசி பாரசீகத்திற்கு பதிலளித்த `அமீர் கபீர் நியூஸ்’, தகவலறிந்த சிலரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த செய்திகளை வெளியிட்டதாகக் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நேரில் பார்த்தவர்களின் கருத்து என்ன? இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் பிபிசி பாரசீகத்திடம் அது குறித்து விவரித்தனர். பிபிசி பாரசீகத்திடம் அவர்கள் கூறுகையில், "அந்தப் பெண் தனது கையில் மொபைல் போனுடன் பல வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்” என்றனர். அவர்கள் கூற்றுபடி, அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததால் கோபமடைந்த பேராசிரியர் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பதை கேட்க ஒரு மாணவியை அவருக்குப் பின்னே அனுப்பினார். அதன் பின்னர் அந்தப் பெண் சத்தம் போட ஆரம்பித்தார். பல்கலைக் கழக வளாகத்தின் சாலையில் அந்தப் பெண் தனது ஆடைகளைக் களைந்திருப்பதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. அதேசமயம் பிபிசியிடம் பேசிய இரு சாட்சிகளும் அந்தப் பெண் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த பின்னர் தான் கவனித்துள்ளனர். அவர் வகுப்பறைக்குள் வருவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். அந்தப் பெண், வகுப்பறை இருந்த கட்டடத்தை விட்டு வெளியேறி ஆடைகளை களைவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது சாட்சிகளுக்கு தெரியாதா? அந்தப் பெண் தன் ஆடைகளை களைந்த பிறகே இந்த இரண்டு சாட்சிகளும் அங்கு சென்றுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், "உங்களை காப்பாற்ற வந்தேன்" என்று கூறியுள்ளார். இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சமூக ஊடகப் பயனர், எக்ஸ் பக்கத்தில், "நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்" என்று இந்தப் பெண் கூறியதாகப் பதிவிட்டிருக்கிறார். பல்கலைக் கழகம் கூறுவது என்ன? இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அமீர் மஹ்ஜூப், ஒரு சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண்ணை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று குறிப்பிட்டார். அவருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்று அவர் கூறினார். "மனம் சார்ந்த பிரச்னை காரணமாக, அந்தப் பெண் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார், அதற்காக அவர் கண்டிக்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது." என்பது அமீர் மஹ்ஜூப்பின் கூற்று. "மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் சாலையை நோக்கி ஓடிவந்து, இவ்வாறு செய்தார்” என்று அவர் கூறினார். இந்தப் ‘பெண்’ மாணவர்களை வீடியோ எடுத்த போது, அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு பதிலடியாக அவர் தனது ஆடைகளை கழற்றி வீசியதாகவும் ISNA உள்ளிட்ட இரானிய ஊடகங்கள் கூறியுள்ளன. "மாணவி கடுமையான மன உளைச்சல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்" என பல்கலைக் கழகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மாணவியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை இந்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்வினை ஆற்றியுள்ளது. "இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஹிஜாப் அணியாததற்காக தவறாக நடத்தப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட மாணவியை நிபந்தனையின்றி இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்வீட் செய்துள்ளது. "பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் காவலில் இருக்கும் சமயத்தில் அவருக்கு எதிராக வன்முறையோ அல்லது பாலியல் தொந்தரவோ நடந்தால் அந்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்" என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்த சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்." என்று குறிப்பிட்டார். ஹிஜாபிற்கு எதிரான போராட்டமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பல்கலைக் கழக மாணவி என்ன செய்தார் என்பது பற்றி பல்வேறு கதைகள் மற்றும் கூற்றுகள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் பற்றி தெரியவில்லை என்றாலும், கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த பெண்ணைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். பல பயனர்கள் பெண்ணின் இந்த செயலை ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதற்கான எதிர்ப்பு மற்றும் பல்கலைக் கழக பாதுகாப்புப் படையினரின் கடுமையான அணுகுமுறைக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய கூற்றுகளை முன்வைப்பவர்களில் மரியம் கியானார்த்தி என்ற வழக்கறிஞரும் ஒருவர், "இந்த மாணவர்களின் கிளர்ச்சி, மாணவியர் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான மற்றும் நியாயமற்ற அழுத்தத்தின் எதிர்ப்பு" என்று அவர் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்காக கட்டணம் வாங்காமல் வழக்கை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஹிஜாப் அணிய வேண்டிய அழுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை காரணமாக மாணவி தனது ஆடைகளை களைந்ததாக நம்பும் சமூக ஊடகப் பயனர்கள் அவரின் செயலை "துணிச்சல்" என்று அழைக்கின்றனர். அந்தப் பெண் பீதி மற்றும் அழுத்தத்தால் மட்டுமே இதைச் செய்ததாகவும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட போராட்டம் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், இரானிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் "பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் பலரும், அந்த இயக்கத்தினர் ஆடைகள் இன்றி போராடவும் தயாராக உள்ளனர் என்ற அவர்களின் கூற்றை இந்தப் பெண்ணின் செயல் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்கவும் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவளிக்கவும் முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czxv1r9k4ndo
  25. லெபனானிற்குள் விசேட கடல் நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலிய படையினர் - ஹெஸ்புல்லா உறுப்பினர் கைது லெபனானிற்குள் விசேட நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர கைதுசெய்து இஸ்ரேல் கொண்டு சென்றுள்ளனர். லெபனானின் வடபகுதியில் உள்ள பெட்ரோனில் தரையிறங்கிய இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து விசாரணைக்காக இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் கையளித்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் கடற்படை நடவடிக்கைகளிற்கு பொறுப்பான இமாட் அம்ஹாஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இஸ்ரேலிய படையினர் கடத்திச்சென்ற நபர் சாதாரண பிரஜை கப்பல் கப்டன் என லெபனான் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு இது குறித்து முறைப்பாடு செய்யப்போகின்றோம் என தெரிவித்துள்ள லெபனானின் காபந்து பிரதமர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லெபனான் இராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்ரேல் இவ்வாறான லெபனானிற்குள் கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/197775

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.