Everything posted by ஏராளன்
-
குஜராத் மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளன எழுதியவர், லக்ஷ்மி பட்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை 'டால்பின்களின் வீடு' என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல முயற்சிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டன. மீனவர்கள் கடலின் ஆழ்பகுதிகளில் மீன்களைப் பிடிக்க டால்பின்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. எனவே, குஜராத் மீனவர்கள் டால்பின்களைக் கொல்வதோ, பிடிப்பதோ இல்லை, அதை அவர்கள் புனிதமானதாகக் கருதுகிறார்கள். மீனவர்களுக்கு டால்பின்கள் எவ்வாறு உதவுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தில் 4 முதல் 5 முக்கிய ஆழ்கடல் மீன்பிடித்தல் முறைகள் மீனவர்களால் பின்பற்றப்படுகின்றன மங்கரோல் பண்டாரின் ‘தரியாலால் படகு சங்கத்தின்’ தலைவர் ஜெதாபாய் கோசியா, 35 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பிபிசியிடம் பேசிய ஜெதாபாய், "டால்பின்கள், மீனவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது டால்பின் மீன்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. டால்பின் மீன்கள் தனியாக பயணிப்பதில்லை" என்றார். "மற்ற மீன்கள் டால்பின்களுடன் இணைந்து குழுவாக பயணிக்கும். ஆனால் அந்த மீன்கள் கடலின் மேற்பரப்பில் காணப்படுவதில்லை. டால்பின்கள் விளையாடும் போது கடலின் மேற்பரப்பில் குதிப்பதைக் காணலாம். எனவே டால்பின் மீன்கள் இருக்கும் பகுதியில் வலைகள் அல்லது கயிறுகள் போடப்படுகின்றன. இதனால் மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் கிடைக்கின்றன." என்று ஜெதாபாய் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "சூரை மீன்கள் (Tuna) 50 முதல் 60 கிலோ வரை இருக்கும். சூரை மீன்கள் டால்பின்களைச் சுற்றியே செல்லும். டால்பின்கள் தென்படும் இடங்களில் சூரை மீன்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். சூரை மீன் மட்டுமல்ல, மற்ற மீன்களையும் கண்டுபிடிக்க டால்பின்கள் உதவுகின்றன." என்றார். இருப்பினும், டால்பின்களிடம் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டால்பின்கள் பெரிய துடுப்புகளைக் கொண்டுள்ளன. அந்தத் துடுப்பு ஒரு சிறிய படகில் மோதினால், படகில் பெரும் சேதம் ஏற்படும். மனுபாய் தண்டேல் என்ற மீனவர் கூறுகையில், "எங்களுக்கு டால்பின்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அரசு தடை விதிக்கும் முன் கூட நாங்கள் டால்பின்களை பிடித்ததில்லை. தவறுதலாக வலையில் டால்பின்கள் சிக்கினால் கூட, வலைகளைக் கிழித்து அவற்றை காப்பாற்றுகிறோம். கடலில் டால்பின்கள் நமக்கு மிகவும் முக்கியம்.” என்றார். பட மூலாதாரம்,GUJARAT GOVERNMENT படக்குறிப்பு, டால்பின் கணக்கெடுப்பின்போது குஜராத் வனத்துறை குழு எடுத்த படம் குஜராத் வனத்துறை கூறுவது என்ன? கட்ச் மேற்குப் பிரிவின் துணை வனப் பாதுகாவலர் யுவராஜ் சிங் ஜாலா, பிபிசியிடம் பேசுகையில், "கட்ச் வளைகுடாவில் ஆழமற்ற பகுதிகள் இருப்பதால் டால்பின்களை வேட்டையாடும் பெரிய மீன்கள் வேட்டையாட அங்கே வருவதில்லை. எனவே டால்பின்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், அவற்றின் குஞ்சுகளை வளர்ப்பதற்கும் மிகவும் சாதகமான சூழல் இங்கு உள்ளது.” என்கிறார். ''டால்பின்களை பாதுகாத்து, அதன் எண்ணிக்கையை அதிகரிக்க, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு முயற்சிகளால், டால்பின்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.” என்று அவர் கூறினார். குஜராத் மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்ச் வளைகுடாவின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் (ஓகாவிலிருந்து நவல்கி வரை நீண்டுள்ள) 1,384 சதுர கிமீ பரப்பளவில் அதிகபட்சமாக 498 டால்பின்கள் உள்ளன. கட்ச் வளைகுடாவின் வடக்குப் பகுதியில், கட்ச் வட்டத்திற்குட்பட்ட 1,821 சதுர கி.மீ பரப்பளவில் 168 டால்பின்களும், பாவ்நகரின் 494 சதுர கி.மீ கடற்கரையில் 10 டால்பின்களும், மோர்பியின் 388 சதுர கி.மீ.யில் 4 டால்பின்களும் காணப்பட்டன. ஆக மொத்தம் 4,087 சதுர கிமீ கடல் பகுதியில் சுமார் 680 டால்பின்கள் தென்பட்டுள்ளன. டால்பின்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அளித்து, மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் முகேஷ் படேல் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், “இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின்கள் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகின்றன. ஹம்ப்பேக் டால்பின்கள் பெரும்பாலும் அரபிக்கடலில் காணப்படுகின்றன. இது அதன் தனித்துவமான நீளமான முதுகுத் துடுப்பு அல்லது வால் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. டால்பின்கள் அடிக்கடி அலைகளில் குதித்து விளையாடுவதைக் காணலாம். அதன் கவர்ச்சியான உடலும், 'பாட்டில்' வடிவ வாயும் அவற்றை எளிதில் அடையாளம் காண உதவுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு 'கங்கை டால்பின்' என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 5, 2009 அன்று இந்திய அரசு டால்பினை இந்தியாவின் 'தேசிய நீர்வாழ் விலங்கு' என்று அறிவித்தது. குஜராத் மீனவர்களின் மீன்பிடி முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் பிபிசியிடம் பேசிய ‘வெராவல் பிடியா கர்வா சமாஜ் படகு சங்கத்தின்’ தலைவர் ரமேஷ்பாய் டல்கி, “ஆழ்கடலில், டால்பின்களைச் பின்தொடர்ந்து சென்று மீன்பிடிக்கப்படுகிறது. டால்பின்கள் வெளியே வரும் போது பிற மீன்களுக்கான வலை வீசப்படுகிறது. சூரை (Tuna) மீன்கள் இந்த வலையில் விழுகின்றன.” என்று கூறுகிறார். மீன்பிடி முறைகளைப் பற்றிப் பேசுகையில், "குஜராத் மாநிலத்தில் 4 முதல் 5 முக்கிய ஆழ்கடல் மீன்பிடித்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன" என்று ரமேஷ்பாய் கூறுகிறார். இழுவை மீன்பிடி முறையில் (Trawling) ஆழ்கடலில் வலைகளை விட்டு, படகில் கட்டி இழுத்துச் செல்லப்படும். அதில் மீன்கள் கிடைக்கும். அதுவே வலை மீன்பிடி முறையில் (Net Fishing), கடலில் வலை வீசிய பிறகு, படகில் கட்டி வைக்கப்படுகிறது. அது இழுத்துச் செல்லப்படாது. பிறகு குறிப்பிட்ட நேரத்தில் வலையை படகிற்குள் இழுக்கிறார்கள். இது தவிர, லைன் ஃபிஷ்ஷிங் (Line Fishing) முறை மிகவும் ஆபத்தானது. இந்த மீன்பிடி முறையில் கடலில் விளக்குகளை போட்டு தண்ணீர் சூடாக்கப்படுகிறது. இதில் சிக்கும் மீன்கள் இறந்து விடும், பின் வலைகள் மூலம் அவை வெளியே இழுக்கப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையில் மீன்களுடன் குஞ்சுகளும் இறக்கின்றன. இந்த மீன்பிடி முறை 'மான்ஸ்டர் ஃபிஷ்ஷிங்' (Monster fishing) என்றும் அழைக்கப்படுகிறது. “இந்த மீன்பிடி முறை குஜராத்தில் பின்பற்றப்படவில்லை. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. ” என்று ரமேஷ்பாய் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crr9wnxzrqqo
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய நியூஸிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் முழுமையான (3 - 0) வெற்றி (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்து 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையான வெற்றியீட்டி வரலாறு படைத்தது. இந்திய மண்ணில் 1956இலிருந்து இந்த வருடம்வரை விளையாடிய 13 டெஸ்ட் தொடர்களில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். மூன்று நாட்களுக்குள் நிறைவடைந்த மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 25 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2ஆவது இன்னிங்ஸில் 147 ஓட்டங்களே தேவைப்பட்டது. ஆனால், மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட அஜாஸ் பட்டேல், க்ளென் பிலிப்ஸ் ஆகிய சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரும் தங்களிடையே 9 விக்கெட்களைப் பகிர்ந்து இந்தியாவை 121 ஓட்டங்களுக்கு சுருட்டி நியூஸிலாந்தின் அபார வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அதன் கடைசி விக்கெட்டை இழந்தது. இந் நிலையில் இந்தியாவுக்கு மிகவும் இலகுவான 147 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை இலகுவாக அடைந்துவிடலாம் என இந்திய கிரிக்கெட் வீரர்களும் இரசிகர்களும் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தியா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், ரிஷாப் பான்ட் முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். அவர் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அஜாஸ் பட்டேலின் பந்துவீச்சில் பிடி ஒன்றுக்கான கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அது ஆட்டம் இழப்பில்லை என கள மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார். எனினும் கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு நியூஸிலாந்து அணியினர் கோரினர். அதனை மீளாய்வு செய்த மூன்றாவது மத்தியஸ்தர், பந்து துடுப்பில் பட்ட பின்னரே பாதகாப்பில் பட்டதாகத் தீர்மானித்து கள மத்தியஸ்தரின் தீர்ப்பை மாற்றி ரிஷாப் பான்ட் ஆட்டம் இழந்ததாகத் தீர்ப்பளித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷாப் பான்டைவிட ரோஹித் ஷர்மா, வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டெறில் மிச்செல் 82, வில் யங் 71, டொம் லெதம் 28, ரவிந்த்ர ஜடேஜா 65 - 5 விக்., வொஷிங்டன் சுந்தர் 81 - 4 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 263 (ஷுப்மான் கில் 90, ரிஷாப் பான்ட் 60, வொஷிங்டன் சுந்தர் 38 ஆ.இ., யஷஸ்வி ஜய்ஸ்வால் 30, அஜாஸ் 103 - 5 விக்.) நியூஸிலாந்து 2 ஆவது இன்: 174 (வில் யங் 51, க்ளென் பிலிப்ஸ் 26, டெவன் கொன்வே 22, டெறில் மிச்செல் 21, ரவிந்த்ரா ஜடேஜா 55 - 5 விக்., ரவிச்சந்திரன் 63 - 3 விக்.) இந்தியா - வெற்றி இலக்கு 147 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 141 (ரிஷாப் பான்ட் 64, வொஷிங்டன் சுந்தர் 12, ரோஹித் ஷர்மா 11, உதிரிகள் 12, அஜாஸ் பட்டேல் 57 - 5 விக்., க்ளென் பிலிப்ஸ் 42 - 3 விக்.) ஆட்டநாயகன்: அஜாஸ் பட்டேல் தொடர் நாயகன்: வில் யங். https://www.virakesari.lk/article/197784
-
வீடொன்றில் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமான முதலை மீட்பு
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர். எட்டு அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197799
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரெய்னின் முக்கிய இரு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி; 40 இற்கும் மேற்பட்டோர் பலி உக்ரெய்னின் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த ட்ரோன் தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்களை சேதமடைந்துள்ளதாக கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்துள்ளார். மேலும் 40 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் தொடர்மாடி குடியிருப்பு மற்றும் பல தனியார் வீடுகளை சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/311448
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தேர்தல் விடுமுறைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த விடுமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் இருப்பவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளும் வழங்கப்படும். இதன்போது, அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிப்பட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/197793
-
குழந்தைகள் பயன்படுத்தும் உணவு பெட்டிகள், தண்ணீர் போத்தல்களில் ஆபத்து
சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த பொருட்கள் சிறுவர்களுக்கு பாரிய ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்தார். இவைகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை பிள்ளைகளை மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்கிறது. இருப்பினும், சந்தைக்குச் செல்லும் வாடிக்கையாளர் இந்தப் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் புரிதல் உள்ளதா என்று கேட்டோம். பல நுகர்வோர் தயாரிப்பின் விலை மற்றும் அதன் அழகைப் பற்றி மட்டுமே அவதானிப்பதாக தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவு மற்றும் தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போது, அதன் கீழ்ப்பகுதியில் BPA அல்லது கீழே 5 என்ற எண் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையெனில், பொருட்களில் கண்ணாடியுடன் ஒரு முட்கரண்டியின் குறி இருக்கிறதா என்று சரிபார்க்கவும். இந்த இரண்டு அறிகுறிகளும் இருந்தால், இதுபோன்ற சாதனங்கள் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பயன்படுத்த ஏற்றது. சந்தையில் பல்வேறு இலக்கங்களுடன் விற்பனை செய்யப்படும் கவர்ச்சிகரமான மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொஹான் ரத்வத்த பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில், லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவுக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/197781
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது - பொ.ஐங்கரநேசன் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்த மாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்கு விடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவார காலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமன மாற்றத்தின் மூலம் பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது. பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனை வினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப் பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமே வேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப் பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயே நிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமான பொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. பனை அபிவிருத்திச்சபை இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமே கிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனை அபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ் அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311487
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் போட்டியைத் தவிர நாணயச் சுழற்சியும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக எண்ணுகிறேன்.
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா (Vavuniya) தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். https://tamilwin.com/article/court-order-on-vavuniya-dual-murder-suspect-1730594085#google_vignette
-
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் மாற்றுத்திறனாளி வேட்பாளர் ஒருவர் மீது வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர். வாக்குவாதம் இந்தநிலையில், சம்பவ தினத்தன்று பகல் ஒரு மணியளவில் வேறு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர், வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் பெரும்பான்மை இன கட்சியில் போட்டியிடக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து, வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியே வந்தபோது, அவருக்கும் ஆதரவு கேட்டு வந்த கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இந்தநிலையில், வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/candidate-being-attacked-in-batticaloa-1730586528?itm_source=article
-
யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (02.11.2024) இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/one-arrested-in-jaffna-with-illegal-alchohol-1730592459
-
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் - அதிர்ச்சியில் அறுகம் குடா - கார்டியன்
அறுகம்குடாவின் பொன்நிற மணல்கள் பொதுவாக ஆபத்தற்றவை விடுமுறையில் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நீச்சலிற்காகவும் கடல் சாகச விளையாட்டுகளிற்காகவும் கடற்கரையோரத்தில் ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்காகவும் அங்கு செல்வார்கள். ஆனால் கடந்தவாரம் அறுகம்குடாவின் மெதுவான தாளத்திற்கு ஒரு அதிர்ச்சியேற்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும், அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் அந்த பகுதியில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எசசரிக்கைகளை வெளியிட்டனர். இந்த தாக்குதலின் இலக்காக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர் என அதிகாரிகள் கருதினர். இதன் காரணமாக அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளை விடுத்தனர். இதன் பின்னர் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் அந்த சிறிய நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு தற்போது ரோந்துநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், வீதி தடைகளை அமைத்துள்ளனர். இலங்கை பொலிஸாரும் அமைச்சர்களும் அறுகம்குடாவில் காணப்படும் அச்சுறுத்தல் குறித்து தெளிவான விடயங்களை வழங்காத போதிலும் அது காசா மற்றும் லெபனானில் இடம்பெறும் யுத்தங்களுடன் தொடர்புடைய விடயம் என்பது தெளிவான விடயம். இஸ்ரேல் மத்திய கிழக்கில் மேற்கொண்ட தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் திட்டம் ஈரானிலேயே உருவானது என விசாரைணைகள் குறித்து நன்கறிந்த தங்கள் பெயர்களை குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஈராக்கில் வசித்த இலங்கை பிரஜையும் ஒருவர். கடந்த ஒக்டோபர் முதல் பல தரப்புகள் மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ளன என செய்தியாளர் மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அது தற்போது உலகின் ஏனைய பகுதிகளிற்கும் பரவிவிட்டது என அவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மத்திய கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தங்கள் அமைதியான கரையோரத்தில் எதிரொலித்துள்ளமை குறித்து அறுகம்குடாவில் ஆச்சரியம் காணப்படுகின்றது. அந்த பகுதி இஸ்ரேலின் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தங்களின் கட்டாய இராணுவசேவையின் பின்னர் பலர் இங்கு வருகின்றனர். இவ்வாறு அருகம்குடாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது. சிலர் நீச்சல் போன்வற்றில் ஈடுபடுவதுடன் சுற்றுலாப்பயணிகளாக காணப்படுகின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட நீண்டகால விசாக்களை பயன்படுத்தி உணவுவிடுதிகளை மதுபானசாலைகளை ஏனைய இஸ்ரேலியர்களிற்கு சேவை வழங்கும் சுற்றுலா நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். நகரின் பல பகுதிகளில் ஹீப்ரு மொழியில் இவற்றின் பெயர் பலகைகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் காணப்படுவார்கள் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர். யூதவழிபாட்டு நிலையமான சபாட் ஹவுசே இலக்குகளில் ஒன்று என இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்தார். அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் முஸ்லீம்களிற்கு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜூல்பி பைசர் ( 39) என்ற சுற்றுலாப் பயணிகளிற்ககான வழிகாட்டி தெரிவித்தார். இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு டொலர்கள் கிடைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். பெருமளவு முஸ்லீம்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அவர்களிற்கு இஸ்ரேலியர்கள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, நாங்கள் அவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோம், உண்மையான இஸ்லாமியர்கள் அவர்களிற்கு எதிரானவர்கள் இல்லை என அவர் தெரிவித்தார். யூத சமூக நிலையத்தை ஏற்படுத்தியது எந்த பிரச்சினையையும் உருவாக்கவில்லை, முஸ்லீம்கள் மக்கள் எந்த வித தயக்கமும் இன்றி இஸ்ரேலியர்களுடன் பழகுவார்கள், எனினும் இஸ்ரேலியர்கள் உள்ளுர் மக்களை ஏமாற்றிவிட்டு இந்த பகுதியில் நிலங்களை கொள்வனவு செய்ய முயன்றதால் சிறிய முறுகல் நிலை காணப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். இஸ்ரேலியர்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றனர் என உள்ளுர் அரசியல்வாதி ரெகான் ஜெயவிக்கிரம கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆடை அணிவது குறித்து இஸ்ரேலியர்களின் கலாச்சார நெறிமுறைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை தடை செய்யவேண்டும் என கருதும் உள்ளுர் மக்களில் தானும் ஒருவன் என்கின்றார் பைசர். இந்த வருடம் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளில் 1.5 வீதமானவர்களே இஸ்ரேலியர்கள். "அவர்கள் இலங்கைக்கு நல்லவிடயங்களிற்காக வந்தால் அது எங்களிற்கு நல்ல விடயம், ஆனால் தற்போது பிரச்சினை காணப்படுகின்றது" என தெரிவிக்கும் அவர் "தாக்குதல் இடம்பெற்றால் எங்கள் மக்களும் உயிரிழப்பார்கள"; என்கின்றார். https://www.virakesari.lk/article/197489
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: அரபு அமெரிக்கர்களின் ஆதரவு கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவரில் யாருக்கு? பட மூலாதாரம்,AFP எழுதியவர், ரபீட் ஜபூரி, மிச்சிகனில் இருந்து பதவி, பிபிசி அரபி அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், மிச்சிகனின் அரபு அமெரிக்க சமூகம் ஒரு குழப்பத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறலாம். இங்குள்ள 15 தேர்வாளர் வாக்குகள் (Electoral votes, தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியம் என்று கருதப்படுபவை) சமநிலையில் இருப்பதால், பல அரபு அமெரிக்கர்கள் முன்னெப்போதையும் விட சிக்கலானதாக உணரும் ஒரு முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறார்கள். கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு அவர்களுக்கு அவ்வளவு எளிதானது அல்ல. உள்நாட்டுப் பிரச்னைகள், மத்திய கிழக்கு மோதல்கள் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களுக்கு இது மிகவும் சிக்கலானது. இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான போட்டியை நவீனகால வரலாற்றில் மிக நெருக்கமான ஒன்றாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தற்போது தேசிய வெகுஜன வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். எனினும், அமெரிக்கத் தேர்தல்களில் அடிக்கடி நடப்பதைப் போல, தேர்வாளர் குழு முறையே இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்று கருதப்படும் முக்கியமான மாகாணங்களில் மிச்சிகனும் ஒன்று என்பதால் இதன் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள அரபு அமெரிக்கர்கள், குறிப்பாக அதிக அரபு மக்கள்தொகை கொண்ட டியர்பார்ன் போன்ற நகரங்களால், வாக்குகளை திசை திருப்ப முடியும். இந்த இடங்களில் பொதுவாக வெற்றி தோல்வி மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மாறுபட்ட, பிளவுபட்ட சமூகம் படக்குறிப்பு, மத்திய கிழக்குப் போர் அரபு அமெரிக்கர்களின் முக்கிய தேர்தல் பிரச்னையாக உள்ளது என்கிறார் ரிமா மெரூஹ் மிச்சிகனில் உள்ள அரபு அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே விதமாக வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கூற முடியாது. மாகாணம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசியல் சார்புகளும், முன்னுரிமைகளும் மிகவும் வேறுபடுகின்றன. இவை அவர்களுடைய மாறுபட்ட கலாசாரப் பின்னணிகள் மற்றும் அமெரிக்க உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டங்கள் இரண்டையும் பிரதிபலிக்கின்றன. டியர்போர்னில் உள்ள பொருளாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அரபு சமூக மையத்தில் அரபு அமெரிக்க சமூகங்களுக்கான தேசிய அமைப்பை இயக்கும் ரிமா மெரூஹ், அரபு வாக்குகளைத் துல்லியமாக எண்ணுவது சிரமமானது என்று பிபிசியிடம் கூறினார். "அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அரேபியர்களை ஒரு தனித்துவமான இனக் குழுவாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதனால் அவர்களின் எண்ணிக்கையைக் கூறுவது கடினம். ஆனால் மிச்சிகனில் குறைந்தது 300,000 அரபு அமெரிக்க வாக்காளர்கள் இருக்கின்றனர்," என்று மெரூஹ் மதிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கைகளைப் புரிந்துகொள்ள மிச்சிகனில் கடந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். டிரம்ப் 2016இல் மிச்சிகனில் வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2020இல் ஜோ பைடன் இந்த மாகாணத்தைக் கைப்பற்றியபோது, 100,000 வாக்குகள் வித்தியாசம் இருந்தன. எனவே அரபு வாக்காளர்கள் மிச்சிகனின் வாக்காளர்களில் ஒரு சிறிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அத்தகைய நெருக்கமான போட்டியில் அவர்களால் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். பாரம்பரியமாக, அரபு அமெரிக்க வாக்காளர்கள் ஒரு பிரச்னையை மையப்படுத்தி அணி திரண்டதில்லை என்றாலும், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்கிறார் மெரூஹ். காஸா போருக்குப் பிறகு, ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல அரபு அமெரிக்கர்கள் கவனம் செலுத்தும் ஒரு முக்கியப் பிரச்னையாக மத்திய கிழக்கு விவகாரம் உள்ளதாகக் கூறுகிறார் மெரூஹ். எனினும் எதிர்காலத்தின் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதில் அரபு வாக்காளர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிலைப்பாடு அந்தப் பிராந்தியத்தில் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பும் சிலர் அவரை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் ஹாரிஸ் ராஜ்ஜீய ரீதியாக ஈடுபடுவதற்கும் நீண்டகால தீர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். இதுபோக, பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினை ஆதரிக்கும் ஒரு குழு உள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு குறித்த அவரது விமர்சனம் அவர்கள் மத்தியில் ஆழமாக எதிரொலிக்கிறது. மத்திய கிழக்கு கொள்கை குறித்த போராட்டம் படக்குறிப்பு, இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்வது மிகவும் சிக்கலானது என்கிறார் சாம் அப்பாஸ் கமலா ஹாரிஸ் அரபு சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க முயன்று வருகிறார். மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கொண்டு வருவதை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு ஜனநாயகக் கட்சியின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் பாலத்தீனியர்களின் உரிமைகள் குறித்தும் பேசியுள்ளார். பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, கண்ணியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு நுணுக்கமான நிலைப்பாடு, ஆனால் சாம் அப்பாஸ் போன்ற வாக்காளர்களை இதன் மூலம் ஈர்ப்பது கடினமான காரியம். தனது பரபரப்பான டியர்போர்ன் உணவகத்தில் அமர்ந்து பேசிய அப்பாஸ், பல அரபு அமெரிக்கர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறார். மத்திய கிழக்கில் சிந்தப்படும் ரத்தத்திற்கு பைடனும் ஹாரிஸும் நேரடியாகப் பொறுப்பாவதாக அவர் கூறுகிறார். அவருக்குத் தெரிந்த அனைவரும் ஹாரிஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். இந்தத் தேர்தல் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாக அப்பாஸ் கூறுகிறார். "இரண்டு தீமைகளில் குறைந்த தீமை" ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர். அவர் யாருக்கு வாக்களிப்பார் என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் தேர்தல் நாளில் தனது முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். மறுபுறம், டிரம்ப். அவரது குடியேற்றக் கொள்கை முஸ்லிம்-விரோத, அரபு-விரோத அணுகுமுறையாக பலரால் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும், ஆச்சர்யப்படும் எண்ணிக்கையிலான அரபு அமெரிக்கர்களின் ஆதரவை டிரம்பால் வென்றெடுக்க முடிந்தது. அவர் அதிபராக இருந்தபோது போர்கள் எதுவும் வெடிக்கவில்லை என்ற அவரது கூற்று, அவர் பதவியில் இருந்திருந்தால் யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தியது, மோதல்கள் வேண்டாம் என்று நினைப்பவர்களிடம் எடுபட்டுள்ளது. தனது அரபு நாட்டு சம்பந்தி மசாத் பவுலோஸை குறிப்பிட்டு டிரம்ப் பேசி வருகிறார். மசாத் பவுலோஸின் மகன், டிரம்பின் மகள் டிஃப்பனியை திருமணம் செய்துள்ளார். விரைவில் பிறக்கவிருக்கும் தனது பேரக்குழந்தை பாதி அரபு பின்னணியை கொண்டிருக்கும் என்பதை அவர் வெளிப்படையான பெருமிதத்துடன் குறிப்பிட்டு வருகிறார். மாறும் விசுவாசம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனநாயகக் கட்சி மீது உண்டாகியுள்ள விரக்தி, அரபு அமெரிக்க சமூகத்திற்குள் இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. முதலில் பைடனை கைவிடுங்கள் என்றும், இப்போது கமலா ஹாரிஸை கைவிடுங்கள், என்ற பெயரிலும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பிரசாரம் வேகம் எடுத்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் பிரச்னைகளுக்கு உதட்டளவில் சேவை செய்வதாகவும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் வன்முறை தொடர்வதற்கு ஜனநாயகக் கட்சி, உடந்தையாக இருப்பதாகவும் அந்த பிரசாரத்தின் நிறுவனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசாரத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் அப்தெல் சலாம், இந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிரானது அல்ல, ஆனால் ஜனநாயகக் கட்சியின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டிற்கான பதிலடி என்று வாதிடுகிறார். "இரண்டு அரசியல் கட்சிகளும் வெறுக்கத்தக்கவை என்ற முடிவுக்குத் தாங்கள் வந்துள்ளதாக," அவர் கூறுகிறார், முஸ்லிம் அமெரிக்கர்கள் வாக்களிக்க அணிதிரள வேண்டும், ஆனால் அவர்கள் "இரண்டு அரசியல் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார். டிரம்புக்கு ஆதரவாக தராசுகளை சாய்க்கும் அபாயம் இருந்தாலும்கூட, இந்தக் குழு பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெய்னை வழிமொழிந்துள்ளது. அரபு மற்றும் முஸ்லிம் குரல்களைப் புறக்கணித்தமைக்கு ஜனநாயகக் கட்சியினர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்தெல் சலாம் கூறுகிறார். படக்குறிப்பு, சமாரா லுக்மான் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார், ஆனால் இப்போது டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் ஏமன்-அமெரிக்க அரசியல் ஆர்வலரும் ரியல்-எஸ்டேட் முகவருமான சமாரா லுக்மேன் நீண்டகாலமாக ஜனநாயகக் கட்சியை ஆதரித்து வருகிறார். இருப்பினும், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு வாக்களிக்க அவர் முடிவு செய்துள்ளார். அரபு அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் டிரம்பின் பிரசார அணுகுமுறையை அவர் சுட்டிக்காட்டுகிறார். டிரம்பின் பிரசாரக் குழுவினரால் தனிப்பட்ட முறையில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். பிரசார பேரணிகளுக்கு மத்தியில் முன்னாள் அதிபர் டிரம்பை அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, டிரம்ப் மீதான பார்வையை வெகுவாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார். அந்த உரையாடலின்போது டிரம்ப் "மனிதாபிமானத்தை" வெளிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அரசியல்ரீதியாக, டிரம்ப் எந்தவித தூண்டுதலும் இல்லாமல், "மத்திய கிழக்கில் போரை நிறுத்த" வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியபோது, காஸாவில் நடந்து வரும் போர் குறித்த சமாராவின் சொந்தக் கவலைகளை டிரம்ப் முன்கூட்டியே கணித்திருந்ததைப் போல் இருந்தது என அவர் ஆச்சர்யப்பட்டார். தனக்குத் தெரிந்த பல அரபு அமெரிக்கர்களின் வாக்குகளுடன் சேர்ந்து தனது வாக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் நம்புகிறார். அதுகுறித்துப் பேசியபோது, "இதுவொரு தண்டனை வாக்கு," என்று சமாரா கூறினார். அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் வெல்ல முடியுமா? படக்குறிப்பு, அரபு வாக்காளர்களை கமலா ஹாரிஸ் இன்னும் வெல்வதற்கு இன்னும் நேரமிருப்பதாகக் கூறுகிறார் சமி காலிதி. மிச்சிகனில் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்து வந்தாலும், ஜனநாயகக் கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. பல அரபு அமெரிக்கர்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருந்த கட்சி அது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மீதான பாதிப்புகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி இந்த சமூகத்தினரிடம் ஆதரவு பெற்று வந்தது. மிச்சிகனில் உள்ள ஜனநாயக கிளப்பின் தலைவரான சமி காலிதி, அரபு வாக்காளர்களை வெல்ல கமலா ஹாரிஸுக்கு இன்னமும் நேரம் இருப்பதாக நம்புகிறார். "காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாலத்தீனியர்களுக்கு அதிக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு வரவும்" ஹாரிஸ் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். "காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதில்" கமலா ஹாரிஸுக்கு உடன்பாடு இல்லை எனவும், அது அரபு அமெரிக்க வாக்காளர்களை ஈர்ப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். அரபு அமெரிக்கர்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான அங்கீகாரத்தை வழங்கும் ஒரே அரசியல் அமைப்பு ஜனநாயகக் கட்சி மட்டுமே என்று காலிதி கூறுகிறார். மத்திய கிழக்கிற்கான கமலா ஹாரிஸின் அணுகுமுறை அதிபர் பைடனின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுவதாகவும் அரபு அமெரிக்கர்களுக்கு மிகவும் சாதகமானது என்றும் அவர் நம்புகிறார். எவ்வாறாயினும், சமூகத்தில் பலருக்கு அவரது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தெரியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகையால், இந்தச் சமூகத்துடன் ஈடுபாடு மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனநாயகக் கட்சி தொடர வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் காலிதி வலியுறுத்துகிறார். விரக்தி மற்றும் அக்கறையின்மை படக்குறிப்பு, பாலஸ்தீன-அமெரிக்க கலைஞர் ஜெனைன் யாசின் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை ஆனால் சிலருக்கு, அரசியல் கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், அது ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. பாலத்தீன-அமெரிக்க கலைஞரான ஜெனைன் யாசின் வாக்களிப்பதை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேல் மீதான அமெரிக்க கொள்கை ஒரு சமரசத்திற்கு இடமில்லாத பிரச்னை. பாலத்தீனியர்களுக்கு எதிரான ஒரு "இனப்படுகொலை"யை இரண்டு வேட்பாளர்களும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்தத் தேர்தலில் இருந்து விலகியிருக்க யாசின் எடுத்துள்ள முடிவு பல அரபு அமெரிக்கர்களால் உணரப்படும் ஆழ்ந்த விரக்தியைப் பிரதிபலிக்கிறது. அரபு அமெரிக்கர்களைப் பொறுத்தவரை, "பாலத்தீனமே எங்கள் முழு பிரச்னை" என்பதை ஜனநாயகக் கட்சியினர் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் அவர். மேலும் பாலத்தீனர்களுக்கு அதே உரிமைகளைக் கோராதபோது, "கருக்கலைப்பு, பெண்கள் உரிமைகள், இனப்பெருக்க நீதி குறித்து அக்கறை காட்டுவதாக" கூற முடியாது என்பதையும் ஜனநாயகக் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிவதாக அவர் கூறுகிறார். இளம் தலைமுறை மத்தியில், இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்க கொள்கைகளுக்கு எழும் எதிர்ப்புக் குரல் அதற்கான குறியீடாக இருப்பதாகவும் ஜெனைன் யாசின் குறிப்பிடுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3njj7xqeeo
-
லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்கள் - 11 பேர் காயம்
லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். ரொக்கட் வீடொன்றை தாக்கியது என இஸ்ரேலின் அவரசசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தவேளை புழுதி மண்டலத்தையும் சிறுவர்கள் பெண்கள் அலறுவதையும் பார்த்தோம் என ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற டிராவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எங்களால் அந்த வீட்டிலிருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது எவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இஸ்ரேலிய தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தளமொன்றை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. ரொக்கட் வெடிப்புச்சிதறல்கள் காரணமாக 11 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/197753
-
கன்னி வரவு - செலவு திட்டத்தை மார்ச் மாதம் சமர்பிக்க அரசு தீர்மானம்
(லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறும். சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடமே இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான நிதி மூலாதாரத்தை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்த இல்லை. அதே போன்று உரம் நிவாரணம் வழங்கியமை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொண்டுள்ளது. எனவே ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் பொருளாதார சூழல், ஒப்பந்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்யவும், மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்த விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது. சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன. விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்மைய மேக்ரோ பொருளாதாரப் போக்குகள் வளர்ச்சியை காட்டுகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக மூன்று தவணைகள் அதிகரிப்பை காட்டியுள்ளதுடன் குறைந்த பணவீக்கம், அதிகரித்த அரச வருவாய் சேகரிப்பு மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்பதில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/197745
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பின் அதிகம் அறியப்படாத பக்கங்கள் பட மூலாதாரம்,ALAMY அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவதும், இரண்டு அதிபர் வேட்பாளர்களின் பலதரப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அந்த வேட்பாளர்கள் மேடைகளில் இருந்து பேசுவது, பேரணியில் கூட்டத்தை நோக்கி கையசைப்பது மற்றும் விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படங்கள். ஆனால், இந்தக் கட்டுரையில், அதிகம் அறியப்படாத புகைப்படங்கள் வழியாக, அந்த இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்த ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை நாம் காணப் போகிறோம். மேலே உள்ள புகைப்படம், வெள்ளை மாளிகை என்றால் என்ன என்பதை டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் புரிந்து கொள்வதற்கு முன்பே, அவர்களுக்கு மூன்று வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் தனது குழந்தைப் பருவத்தின் தொடக்க காலத்தை கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் கழித்தார். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் நியூயார்க் பெருநகரத்தின் குயின்ஸில் வளர்ந்தார். கமலா ஹாரிஸ் (கீழே உள்ள இடதுபக்க படத்தில், இடமிருந்து முதலில் இருப்பவர்) மற்றும் அவரது சகோதரி மாயா (நடுவில்) ஆகியோர் இந்தியாவை சேர்ந்த அவர்களின் தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார்கள். ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர். டொனால்ட் டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப், ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மகன். அவரது தாயார் மேரி ஆன் மெக்லியோட் டிரம்ப், ஸ்காட்லாந்தில் பிறந்தவர். டிரம்பின் பெற்றோர், அவரை 13 வயதில் நியூயார்க் ராணுவ அகாடமியில் சேர்த்தனர். பட மூலாதாரம்,KAMALA HARRIS / @REALDONALDTRUMP கமலா ஹாரிஸ் கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படித்தார். அவரது தாயார் அங்குள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். பின்னர் கமலா ஹாரிஸ் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள, முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். டொனால்ட் டிரம்ப், ‘நியூயார்க் ராணுவ அகாடமியில் 1959ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகள், தனக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தனது தலைமைத்துவ திறன்களை வடிவமைக்க அது உதவியதாகவும்’, ஒருமுறை தெரிவித்திருந்தார். பின்னர் வியட்நாம் போரில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கல்வி காரணங்களுக்காகவும், ஒருமுறை எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் அது ஒத்தி வைக்கப்பட்டது. பட மூலாதாரம்,ALAMY சிறு வயதிலிருந்தே, ஹாரிஸின் தாயார் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்குக் கற்பித்து வந்தார். கமலா ஹாரிஸ், 2004இல் வாஷிங்டனில் நடைபெற்ற ‘வருடாந்திர மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுதந்திர அணிவகுப்பில்’ கலந்துகொண்டார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளியில் பட்டம் பெற்ற டிரம்புக்கு, அவரது தந்தைக்குப் பிறகு குடும்ப வணிகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவு குடும்பத்திடம் இருந்து கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவுக்கு திரும்பினார், அங்கு அவர் மாநிலத்தின் குற்றவியல் நீதி அமைப்பின் உச்சிக்கு விரைவாக உயர்ந்தார். அதன் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் மூலம் கிடைத்த உந்துதலை, 2016இல் அமெரிக்க செனட் சபைக்கு வெற்றிகரமாகப் போட்டியிடப் பயன்படுத்திக் கொண்டார். அமெரிக்க செனட் சபையில் கமலா ஹாரிஸ் நுழைந்த அதே நேரத்தில், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்த டிரம்ப், முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் ஒரு மந்தமான அதிபர் பிரசாரத்தை நடத்தினார். இருப்பினும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனால், துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இருவரும், டிரம்ப் மற்றும் மைக் பென்ஸை தோற்கடித்து வெற்றி பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் முடிவிலும், பைடன்-ஹாரிஸ் பதவிக் காலத்தின் தொடக்கத்திலும், கொரோனா ஊரடங்குகள், கட்டாய முகக்கவசம் போன்ற உத்தரவுகள், மினியாபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் ஃப்லாய்ட் காவல்துறையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக அமைதியின்மை போன்ற பிரச்னைகளை அமெரிக்கா சமாளித்துக் கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES துணை அதிபராக முத்திரை பதிக்க கமலா ஹாரிஸ் சில நேரங்களில் போராட வேண்டியிருந்தது. ஆனால் 2022இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, தான் உரக்கப் பேசவேண்டிய விஷயம் எது என்பதை அவரால் உணர முடிந்தது. கருக்கலைப்பு உரிமைகள் இயக்கத்திற்கான வெள்ளை மாளிகையின் சாம்பியனாக கமலா ஹாரிஸ் மாறியதில், அதிபர் பைடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதேநேரம், பழமைவாதத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் நகர்வுக்கும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுக்கும் காரணமாக இருந்தவர் டிரம்ப்தான். டிரம்ப், ஓவல் அலுவலகத்தில் இருந்த காலத்தில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதோடு மட்டுமல்லாது குடியேற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்தார். பட மூலாதாரம்,WHITE HOUSE / GETTY IMAGES துணை அதிபராக ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக 2021இல் குவாத்தமாலாவுக்கு சென்றார். மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லையை அடையும் லத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருந்தது. அவர் பதவியில் இருந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்னைகளில் யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளைத் திரும்பப் பெற்றது ஆகியவை அடங்கும். அமெரிக்க அதிபராக டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் 2017இல் சௌதி அரேபியாவுக்கு சென்றதுதான். அமெரிக்க தொழில்துறையை ஊக்குவிப்பது, சர்வதேச போர்களில் இருந்து தனது நாட்டை விலக்கி வைப்பது தொடர்பான கருத்துகளை டிரம்ப் ஆதரிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS கமலா ஹாரிஸ், டக் எம்ஹாஃப் (கீழே உள்ள புகைப்படம்) என்பவரை மணந்தார். டக் எம்ஹாஃப், கமலா ஹாரிஸின் சார்பாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். எம்ஹாஃப்பின் முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகளான, கோல் (இடதுபுறம் இருப்பவர்), எல்லா (வலதுபுறம் இருப்பவர்) ஆகியோரை தாயாக இருந்து கவனித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பின் பல்வேறு குடும்ப உறுப்பினர்கள் அவரது அரசியல் வாழ்க்கையில் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும் அவரது மனைவியும், முன்னாள் ‘முதல் அமெரிக்க பெண்மணியுமான’ மெலனியா டிரம்ப் 2024 பிரசாரத்தில் அவருக்கு ஆதரவாகத் தோன்றுவது குறைவாகவே உள்ளது. டிரம்பின் முதல் மனைவி இவானாவுடன், டிரம்புக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். டொனால்ட் ஜூனியர் (கீழே உள்ள படத்தில் இடதுபுறத்தில் இருந்து இரண்டாவது), இவான்கா (வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது) மற்றும் எரிக் (வலதுபுறத்தில் கடைசியாக). அவரது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடன் அவருக்கு டிஃப்பனி (இடதுபுறத்தில் கடைசியாக) என்ற மகள் உள்ளார். அவர் தனது மூன்றாவது மனைவி மெலனியாவை (இடதுபுறத்தில் மூன்றாவதாக) 2005இல் மணந்தார், இவர்களுக்கு பரோன் என்ற ஒரு மகன் உள்ளார். பட மூலாதாரம்,ALAMY / AP கமலா ஹாரிஸ், 2024 அதிபர் பந்தயத்தில் கிட்டத்தட்ட தாமதமாகவே நுழைந்தார். போட்டியிலிருந்து விலகிய ஜோ பைடனுக்கு பதிலாக அவர் அதிபர் வேட்பாளராக ஆக்கப்பட்டார். அமெரிக்காவின் ஒரு பெரிய மற்றும் முக்கியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின மற்றும் ஆசிய-அமெரிக்க பெண் என்ற வரலாற்றை அவர் படைத்தார். இல்லினாயின் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் அவர் உரையாற்றினார். டொனால்ட் டிரம்ப் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியில் இருந்து மூன்றாவது முறையாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் என்ற அரிய பெருமையைப் பெற்றார். விஸ்கான்சின், மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசினார். பென்சில்வேனியாவில் பிரசாரத்தின்போது அவர் மீது நடத்தப்பட்ட ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், காதில் கட்டுப்போட்ட நிலையில் மில்வாக்கியில் அவர் உரையாற்றினார். பட மூலாதாரம்,REUTERS / EPA-EFE - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmzjdv78kno
-
யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமானது. நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட 4 நாட்களாக கப்பல் சேவை நீடிக்கப்பட்டதுடன் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1730548573
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட் - இந்திய அணி வெற்றி பெறுமா? ஆட்டம் எப்படி திரும்பும்? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்து வரும் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் இருக்கும் நிலையில் புனே டெஸ்ட் போட்டியைப் போன்று ஆட்டம் 3 நாட்களில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் பெரிதாக முன்னிலை வகிக்காத நிலையில், நியூசிலாந்து அணியும் 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இதனால் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி 2வது இன்னிங்ஸில் களமிறங்கினாலும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் சமாளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரிஷப் பந்த், சுப்மான் கில் ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 28 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாளான இன்று ஒரே நாளில் மட்டும் 15 விக்கெட்டுகள் இரு அணிகளிலும் சேர்த்து வீழ்த்தப்பட்டுள்ளன. இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரியக் காரணமாயினர். குறிப்பாக அஸ்வின் பல அற்புதமான கேரம் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டம் எப்படி நகரும் நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், இந்திய அணிக்கு 160 முதல் 170 ரன்களுக்குள்தான் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை இந்திய அணி பேட்டிங்கின் மூலம் அணுகினால்தான் வெற்றியை எளிதாக எட்ட முடியும். விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் அதீத கவனத்துடன் ஆடும்பட்சத்தில் இந்திய பேட்டர்கள் திணறும் டிஃபெண்ட்ஸ் போக்கால் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இந்திய பேட்டர்கள் டிஃபெண்ட்ஸ் வகை பேட்டிங்கில் திணறுகிறார்கள் என பயிற்சியாளர் கம்பீரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இதுபோன்ற நேரத்தில் தற்காப்பு பேட்டிங் மிகுந்த அவசியம். டி20 போட்டிகளில் அதிகம் பங்கேற்றதால் தற்காப்பு பேட்டிங்கை இந்திய பேட்டர்கள் கையாளுவதில் திணறுகிறார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஆடுகளமும் கடைசி 3 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், ஈஷ் சோதி, அஜாஸ் படேல், பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு நன்கு டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும். இதனால் இந்திய பேட்டர்கள் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தால் வெற்றி பெறலாம். டெஸ்ட் தொடரையும் ஒயிட்வாஷ் முறையில் இழக்காமல் 2-1 என்ற கணக்கில் கௌரவமாக இந்திய அணி முடிக்கும். ஒருவேளை இந்திய அணி நாளை விரைவாக வெற்றி இலக்கை அடைந்துவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டணையில் 12 புள்ளிகளைப் பெறும், வெற்றி சதவீதமும் தற்போதுள்ள 62 சதவீதத்தில் இருந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் பின் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சவாலான டெஸ்ட் தொடரை இந்திய அணி எதிர்கொள்ளும். ரிஷப் பந்த் - கில் அதிரடி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி நேற்று மாலை ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கும்போது 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பதற்றமடைந்தது. ஆனால், ரிஷப் பந்த், சுப்மான் கில் கடைசி நேரத்தில் விக்கெட்டை நிலைப்படுத்தி, இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ரிஷப் பந்த், கில் இருவரும் டெஸ்ட் போட்டியை போன்று பேட் செய்யாமல் டி20 போட்டியை போல நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அதிரடியாக ஆட வேண்டும் என்ற மனநிலையோடு களமிறங்கிய ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சுப்மான் கில் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 21 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அடுத்த 10 ஓவர்களில் தேநீர் இடைவேளையின் போது 163 ரன்களை எட்டி 6 ரன்ரேட்டில் சென்றது. இதனால் இந்திய அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரிஷப் பந்த் 53 ரன்கள் சேர்த்திருந்தபோது கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஃபிலிப்ஸ் தவறவிட்டார். இருப்பினும் ஈஷ் சோதி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரிஷப் பந்த் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்திருந்தது. 46 ஓவர்களில் 200 ரன்களை இந்திய அணி எட்டியது. விக்கெட் சரிவு பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், அடுத்த 63 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இந்திய பேட்டர்கள் விரைவாக இழந்தனர். ரிஷப் பந்த் ஆட்டமிழந்தபின் இந்திய அணி கவனமாக ஆட்டத்தை நகர்த்த வேண்டும் என்று எண்ணி இருந்தது. இதனால் அடுத்த 10 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் ஆட்டம் நகர்ந்தது. ஆனால், ரவீந்திர ஜடேஜா, சர்ஃபிராஸ் கான் விக்கெட்டுகளை விரைவாக இந்திய அணி இழந்தது. சொந்த மண்ணில் களமிறங்கிய சர்ஃபிராஸ் கான் டக்-அவுட்டில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஃபிலிப்ஸ் பந்துவீச்சில் ஜடேஜா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சதத்தை தவறவிட்ட கில் சதத்தை நோக்கி நகர்ந்த சுப்மான் கில் 90 ரன்கள் சேர்த்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனித்துப் போராடிய நிலையில் அவருக்குக் கடைசி வரிசையில் எந்த பேட்டரும் ஒத்துழைக்கவில்லை. அஸ்வின்(6), ஆகாஷ் தீப்(0) விரைவாக விக்கெட்டை இழந்தனர். சுந்தர் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 28 ரன்கள் முன்னிலை பெற்றது. அஜாஸ் படேல் இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து திணறல் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்து அணி, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆகாஷ் தீப் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் லாதம் க்ளீன் போல்டாகி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு கான்வே, யங் ஜோடி சேர்ந்து ஆட்டத்தைப் பொறுமையாக நகர்த்தினர். ஆனால், கான்வே 22 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த இன்னிங்ஸை போலவே ரவீந்திரா இந்த முறையும் நிலைக்கவில்லை. ரவீந்திரா களமிறங்கிய சிறிது நேரத்தில் 4 ரன்னில் ரிஷப் பந்த் ஸ்டெம்பிங் செய்து, அஸ்வின் பந்துவீச்சில் அவரது விக்கெட்டை எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு டேரல் மிட்ஷெல், யங் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திருப்பம் தந்த ஜடேஜா இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சிரமப்பட்ட நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் திருப்பம் நிகழ்ந்தது. டேரல் மிட்ஷெல் 21 ரன்கள் சேர்த்திருந்தபோது, மிட்-ஆப் திசையில் நின்றிருந்த அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. மாலை தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் நிதானமாக பேட் செய்த வில் யங் 95 பந்துகளில் அரைசதம் அடித்தார். 94 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி, அடுத்த 77 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி 4 விக்கெட்டுகளை மட்டும் 40 ரன்களுக்குள் இழந்தது. நிதானமாக பேட் செய்த வில் யங் 51 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyj1jv61nko
-
ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு அடி : முக்கிய கடற்படை தளபதியை சிறைபிடித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க இமாத் அம்ஹாஸ் அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுடன் தொடர்பு : ஐ.நா அமைதிப்படை மறுப்பு இதேவேளை நேற்று வடக்கு லெபனானில் இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்களால் ஹிஸ்புல்லா கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐ.நா அமைதிப்படை(UNIFIL) மறுத்துள்ளது என்று அரபு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவுதி(saudi) செய்தி நிறுவனமான அஷார்க் நியூஸ்( Asharq News) ஐ.நா அமைதி காக்கும் படையின் பெயரிடப்படாத துணை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, "எந்தவொரு கடத்தல் அல்லது லெபனான் இறையாண்மையை மீறுவதற்கும் உதவுவதில் UNIFIL க்கு எந்த தொடர்பும் இல்லை." "தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது பொறுப்பற்றது மற்றும் அமைதி காக்கும் படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/israeli-said-to-nab-top-hezbollah-naval-commander-1730560164
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பு! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (02) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் கீழ் லொஹான் ரத்வத்தவுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197727
-
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
யாழில், பிரான்ஸ் (France) நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் பண மோசடி விசாரணையில் சிக்காமல் 7 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் நேற்றுமுன்தினம் (31.10.2024) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட, ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு சட்டம் யாழ். விசேட குற்றவிசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த ஏழாம் மாதம் ஒருவரும், பத்தாம் மாதம் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேகநபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றில் பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கபட்டிருந்ததுடன், வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் ரூபா மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக காணப்படுவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடப்படும் சந்தேக நபராகவும் இவர் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். https://ibctamil.com/article/fraud-by-claiming-to-ship-abroad-jaffna-1730547518
-
விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?
பட மூலாதாரம்,NTK YT/TVK எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி,பிபிசி தமிழ் "திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்" என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சீமான் விமர்சித்துள்ளார். "கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் தமிழர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் என்ற கோபத்தில் சீமான் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது சீமான் விமர்சிப்பது ஏன்? இதன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளதா? விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம், மொழி எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார். பிளவுவாத அரசியல் செய்கிறவர்களை த.வெ.க.,வின் கொள்கை எதிரியாகக் குறிப்பிட்ட நடிகர் விஜய், "கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இவை நமது இரண்டு கண்கள்" எனப் பேசினார். சீமான் பேசியது என்ன? இந்தப் பேச்சுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு கடும் எதிர்வினையைக் காட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 1) நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கண் என்றவுடன் பயந்துவிட்டேன். சாம்பாரும் கருவாடும் வேறு வேறு. கருவாட்டு சாம்பார் எனக் கூறக்கூடாது. அண்மையில், 'காட்டுப் பூனையும் நாட்டுக் கோழியும் ஒன்று' என்கிறார் விஜய். இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய சீமான், "அண்மையில் வந்த படத்தில் கதாநாயகன், வில்லன் என இரண்டு பாத்திரத்தையும் அவர் (விஜய்) ஏற்றதால் குழம்பிப் போய்விட்டார். திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஏன் வேண்டும் என்பதற்கான காரணம் தெரிந்திருந்தால் அவர் சொல்ல மாட்டாரா?" என விஜயை சாடினார். "திராவிடம் என்பது வேறு. தமிழ்த் தேசியம் என்பது வேறு. திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இனத்துக்கு நேர் எதிரான ஒன்று. என் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியம். குடிக்க வேண்டும் என்பது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும்?" எனக் கேள்வி எழுப்பினார். விஜய் பாணியில் விமர்சித்த சீமான் பட மூலாதாரம்,NTK/YT தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படையே தவறாக இருப்பதாகப் பேசிய சீமான், "இது கொள்கையே அல்ல. தான் நடுநிலை என்கிறார். இது நடுநிலை அல்ல கொடுநிலை" எனக் கூறிவிட்டு, "வாட் ப்ரோ... வெரி ராங் ப்ரோ" என விஜய் பாணியிலேயே அவரைச் சாடினார் சீமான். அதைத் தொடர்ந்து, மாநாடு கட்-அவுட்டில் வேலுநாச்சியார் படத்தை த.வெ.க முன்னிறுத்தியது குறித்துப் பேசிய சீமான், "அவர் யார் எனச் சொல்லட்டும். சேர, சோழ, பாண்டியர், அஞ்சலை அம்மாள் யார் என அவருக்குத் தெரியாது" என்று பேசினார். மேலும், "பெண்ணிய உரிமை என்பதை வேலுநாச்சியாரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். 250 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளவுக்கு பெண்ணுரிமையைப் பேசியவர் வேறு யாரும் இல்லை. பெரியாரிடம் பெண்ணுரிமையை இவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்றால், வேலுநாச்சியாரிடம் இருந்து என்ன கற்றார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். 'கொள்கை வேறு. உறவு வேறு' பட மூலாதாரம்,PTI மறுநாள் (நவம்பர் 2) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், "திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. எனக்கு கொள்கை மொழி தமிழ்தான். இந்தி உள்பட எல்லா மொழிகளும் எங்கள் விருப்ப மொழிதான்" என்றார். அண்ணன்-தம்பி உறவாக நடிகர் விஜயை பார்ப்பதாக முன்னர் சீமான் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கொள்கை வேறு. உறவு வேறு. கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக எதிரிதான். எங்களுக்கு ரத்த உறவைவிட லட்சிய உறவுதான் முக்கியம்" என்றார். நாம் தமிழர் வாக்குகளை பிரிக்கிறதா த.வெ.க? பட மூலாதாரம்,NTK/YT "நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையை மாற்ற வேண்டும் அல்லது பேசுவதற்கு எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும்" எனவும் சீமான் கூறினார். த.வெ.க மாநாட்டுக்குக் கூடிய கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கூட்டம் எல்லாருக்கும் வரும். ஜல்லிக்கட்டுக்கும் கூட்டம் கூடியது. நாளை இன்னாரு நடிகர் பேசினாலும் கூட்டம் வரும். மதுரையில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா?" என்றார். "நாம் தமிழர் வாக்குகளை த.வெ.க பிரிக்கும் எனப் பேசப்படுகிறதே?" என செய்தியாளர்கள் கேட்டபோது, "இதெல்லாம் என்ன பேச்சு? யார் ஓட்டையும் யாரும் பிரிக்க முடியாது" என்று கோபத்தை வெளிப்படுத்தினார். சீமானின் பேச்சுக்கு த.வெ.க-வின் பதில் என்ன? பட மூலாதாரம்,LOYOLAMANI/FB சீமானின் விமர்சனம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் லயோலா மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், "இதுபோன்ற பேச்சுகள் வரவே செய்யும். மக்கள் பணி செய்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். ஏதோவோர் உணர்வின் அடிப்படையில் சீமான் பேசுகிறார். அதை மௌனமாகக் கடந்து போகவே விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டார். "திராவிடமும் தமிழ்த்தேசியமும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்பதைத் தனது கருத்து என்றுதான் விஜய் சொன்னாரே தவிர, கருத்தியலாக அவர் அதைக் கூறவில்லை. அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்" என்கிறார் லயோலா மணி. மக்களுக்கு என்ன சித்தாந்தம் தேவையோ அதை நோக்கி த.வெ.க பயணிப்பதாகவும் த.வெ.க-வை ஒருவர் விமர்சிப்பதைவிட பல கோடி பேர் வாழ்த்துவதையே தங்கள் கட்சி பார்ப்பதாகவும் லயோலா மணி குறிப்பிட்டார். "தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளை பிரதான எதிரிகளாகப் பார்க்கிறோம். பாசிசமும் ஊழல் நிறைந்த அரசும் இருக்கக்கூடாது என்பதுதான் த.வெ.கவின் நிலைப்பாடு. சீமான் எப்போதும் எங்களின் சகோதரர். அவரை விமர்சிப்பதற்காக அரசியல் களத்திற்கு நாங்கள் வரவில்லை" என்கிறார். சீமான் பேசியதன் பின்னணி என்ன? பட மூலாதாரம்,AYYANATHAN/FB அதேநேரம் சீமானின் பேச்சை விமர்சிக்கும் மூத்த பத்திரிகையாளர் கா.அய்யநாதன், தமிழக வெற்றிக் கழகத்தால் வாக்கு வங்கியில் பாதிப்பு வரலாம் என்ற கோபத்தின் வெளிப்பாடாக சீமான் பேசியதைத் தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். “விஜய் மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக உள்ளது. ஒரு மண்ணில் எந்த சித்தாந்தம் தோன்றியதோ, அந்த மண்ணுக்கு அது செய்த பங்களிப்பு என்ன என்பதைப் பார்க்க வேண்டும். திராவிட சித்தாந்தம் என்றால் பெரியார்தான். அவரது போராட்டம், வாழ்க்கை ஆகியவற்றால் பலன் பெற்ற மண்ணாக தமிழ்நாடு உள்ளது" என்றார் அவர். "தமிழ்நாட்டின் நலன், தமிழ் மக்கள் மேம்பாடு ஆகிய அரசியல் கூறுகளை உள்ளடக்கியதுதான் தமிழ்த் தேசியம். தமிழர்களை முன்னேற்றிய ஒன்றை இரண்டு கண்கள் என விஜய் கூறியதில் என்ன தவறு?" என அய்யநாதன் கேள்வி எழுப்புகிறார். மாநாட்டில் விஜய் பேசிய பேச்சின் மூலம் நாம் தமிழர் கட்சியுடன் த.வெ.க கூட்டு சேராது என்பதைப் புரிந்து கொண்டதால், தனது எதிர்ப்பை சீமான் வெளிக்காட்டுவதாகக் கூறுகிறார் கா.அய்யநாதன். நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன? பட மூலாதாரம்,EDUMBAVANAMKARTHIK/FB இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், "வாக்குகளை விஜய் பிரிப்பார் என நினைத்திருந்தால் அப்போதே எதிர்த்திருப்போம். இது விஜய் மீதான காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ இல்லை. இதுவொரு சித்தாந்த முரண்" என்கிறார். "காலம் காலமாக ஏமாற்றப்பட்ட மக்கள், தாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என்ற விழிப்புணர்வைப் பெற்று வரும் சூழலில் அதை மீண்டும் விஜய் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதால் எதிர்க்கிறோம்" என்றார் கார்த்திக். தனது அரசியல் வருகையை பிப்ரவரி மாதம் விஜய் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சி வரவேற்றதாகக் கூறும் இடும்பாவனம் கார்த்திக், "கடந்த ஆறு மாதங்களாகத் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. மாநாட்டில் பேசிய பின்னரே விமர்சிக்கிறோம்" என்றார். "திரைக் கவர்ச்சியை நம்பி அரசியலை ஓட்டிவிடலாம் என விஜய் நினைக்கிறார். யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துவிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான வித்தியாசம் அவருக்குத் தெரியவில்லை" என்றும் கடுமையாக இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgxpx2zx07o
-
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இந்தியா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அமெரிக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று (புதன்கிழமை) 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்துள்ளது. இந்திய பிரஜை ஒருவர் சீக்கிய பிரிவினைவாத ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்க மண்ணில் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் இரு நாட்டிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அமெரிக்கா இந்தத் தடையை அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "மூலோபாய வர்த்தகம் மற்றும் பரவல் தடை (non-proliferation) தொடர்பாக வலுவான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழில் அக்டோபர் 24ஆம் தேதியன்று வெளியான நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "பன்னுவின் கொலை முயற்சிக்கான பொறுப்பு யாருடையது என்பதை உறுதியாக அறிந்தால் மட்டுமே அமெரிக்கா திருப்தி அடையும்," என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சகம், கருவூலக அமைச்சகம், மற்றும் வர்த்தக அமைச்சகம் ஒன்றாக இணைந்து இந்தத் தடையை சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் என குற்றச்சாட்டு இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு பொருள் கொடுப்பதாகவும், ரஷ்யா அதை யுக்ரேன் போரில் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது. பொது முன்னுரிமைப் பட்டியலில் (Common High Priority List, CHPA) இடம் பெற்றுள்ள மின்னணுக் கருவிகள், கணினி எண் கட்டுப்பாட்டுக் கருவிகளை இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவின் வர்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலை மற்றும் பாதுகாப்புத் துறையாலும், பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் இந்தப் பொருட்கள் இந்தப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய நிறுவனங்களைக் குறிவைப்பது அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியதாகக் கூறி இந்திய நிறுவனம் ஒன்றின் மீது அமெரிக்கா தடை விதித்தது. எந்தெந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது? தடையை எதிர் கொண்டிருக்கும் இந்தியர்கள் யார்? அதற்காக அமெரிக்கா கொடுத்துள்ள காரணங்கள் என்ன? தடையை எதிர்கொள்ளும் இந்திய நிறுவனங்கள் பட மூலாதாரம்,ASCENDING FLIGHT படக்குறிப்பு, ரஷ்ய நிறுவனங்களுக்கு 700 முறை பொருட்களை அனுப்பியதாக அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சகம், 120 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்துள்ளது. அந்தப் பட்டியலில் நான்கு இந்திய நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸெண்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மாஸ்க் டிரான்ஸ், டி.எஸ்.எம்.டி. குளோபல் ப்ரைவேட் லிமிட்டட், ஃபூட்ரெவோ கம்பெனி ஆகியவைதான் இந்த நான்கு நிறுவனங்கள். கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டங்களில் 700 முறை ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்பியதாக அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. CHPA பொருட்கள் உள்பட ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அந்த நிறுவனம் அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மாஸ்க் டிரான்ஸ் என்ற நிறுவனம் ரூ. 2.5 கோடி மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்பியதாகவும், அந்தப் பொருட்கள் ரஷ்யாவின் விமான சேவைகள் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. டி.எஸ்.எம்.டி. குளோபல் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்களுக்கு ரூ.3.6 கோடி மதிப்பிலான கணினி உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. ஃபூட்ரெவோ நிறுவனம் ரஷ்யாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான மின்னணு இயந்திரங்களை, 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அபார் டெக்னாலஜிஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், டென்வாஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், இஎம்எஸ்ஒய் டெக், கேலக்ஸி பீரிங்ஸ் லிமிடெட், இன்னோவியோ வென்ச்சர்ஸ், கேடிஜி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் குஷ்பூ ஓனிங் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட், ஆர்பிட் ஃபைன்ட்ரேட் எல்எல்பி, பாயிண்டர் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஷார்ப்லைன் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட், ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீஜி இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஷ்ரேயா லைஃப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் மீதான தடை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடை செய்யப்பட்ட இரண்டு நபர்களும் அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் என்று அமெரிக்கா கூறுகிறது இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி விவேக் குமார் மிஸ்ரா, சுதிர் குமார் ஆகிய இரண்டு இந்தியர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த இருவரும் அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி இந்த நிறுவனம் டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. விமானப் பிரிவுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் லூப்ரிகெண்ட் போன்ற பொருட்களை விநியோகம் செய்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. நிபுணர்கள் கூறுவது என்ன? அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் 16,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்துள்ளது. இது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேன் மீது போர் தாக்குதலை நடத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை. இந்த நடவடிக்கைகள் காரணமாக ரஷ்யாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் பாதி (276 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ரஷ்ய வங்கிகளின் சொத்துகளில் 70% முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா ஸ்விஃப்ட் வங்கி முறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் அல்லது சொசைட்டி ஃபார் வேர்ல்ட்வைட் இன்டர்பேங்க் ஃபினான்சியல் டெலிகம்யூனிகேஷன் (Society for Worldwide Interbank Financial Telecommunication) என்பது ஒரு பாதுகாப்பான பணப் பரிமாற்ற அமைப்பாகும். அது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் வேகமாகவும் உடனுக்குடனும் நடைபெற உதவுகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் வர்த்தகங்களுக்கு இது பெரிய அளவில் உதவி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தத் தடைகளால் ரஷ்யாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார் ரஷ்ய அதிபர் புதின் வெளியுறவு விவாகரங்கள் துறை நிபுணரும், தி இமேஜ் ஆஃப் இந்தியாவின் தலைவருமான ரோபிந்தர் சச்தேவ், "இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிறகு, அவை ஸ்விஃப்ட் வங்கி அமைப்பின் கறுப்புப் பட்டியலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்கள் ரஷ்யா யுக்ரேன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுடன் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாது," என்று விவரிக்கிறார். இந்தத் தடையின் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளில் உள்ள அந்த நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்படும் என்று கூறுகிறார் சச்தேவ். "ரஷ்யாவை உடைப்பதற்காக அமெரிக்கா இதைச் செய்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனமாக்கவும், அதன் பாதுகாப்புப் பிரிவு போரைத் தொடர்ந்து நடத்தப் போதுமான பொருட்கள் கிடைக்காமல் திண்டாட வைக்கவும் விரும்புகிறது," என்கிறார் அவர். இருப்பினும், இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் இத்தகைய தடைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அவை இரண்டும் ஏற்கெனவே நல்ல உறவில் இருக்கின்றன என்று கூறுகிறார் இவர். ஆனால் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவில் ஐரோப்பாவின் தடைகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறார். அமெரிக்காவின் சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில், ரஷ்யா வெற்றிகரமாக கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், அதிலிருந்து நிறைய பண மீட்டுவதாகவும் குறிப்பிடுகிறது. சர்வதேச எரிபொருள் முகமை (International Energy Agency), ரஷ்யா நாள் ஒன்றுக்கு 80 லட்சம் பேரல்களில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், இந்தியாவும் சீனாவும் அதிகமாக அந்த கச்சாப் பொருட்களை வாங்குவதாகவும் கூறுகிறது. அதே நேரத்தில் ஜார்ஜியா, பெலாரூஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பொருட்களை ரஷ்யா வாங்குவதாக லண்டனின் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தியாவின் கருத்து பட மூலாதாரம்,ANI மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுதொடர்பாகப் பேசியபோது, "மூலோபாய வர்த்தகம் மற்றும் பரவல் தடை (non-proliferation) தொடர்பாக வலுவான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது. பரவல் தடை ஏற்றுமதிக் கட்டுப்பாடு அமைப்புகளான மூன்று முக்கிய அமைப்புகளில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம்," என்று குறிப்பிட்டார். "தி வசினார் அரேஞ்மெண்ட், ஆஸ்திரேலியா குரூப், மிஸில் டெக்னாலஜி கண்ட்ரோல் ரெஜிம் ஆகிய அமைப்புகளில் இந்தியா ஓர் அங்கமாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி பரவல் தடை தொடர்பான ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் மற்றும் தீர்மானம் 1540-ஐ இந்தியா திறம்படச் செயல்படுத்தி வருகிறது. எங்கள் புரிதலின்படி இந்தத் தடை, பரிவர்த்தனைகள் மற்றும் நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மீறவில்லை," என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால். இருப்பினும் "இந்தியாவின் பரவல் தடை முன்னெடுப்புகள் குறித்தும், அதன் கட்டுப்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாகவும் முகமைகள் மூலமாகவும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பிடும் சூழல்களில், சாத்தியமான பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்போது அவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9g899dg4vo
-
இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர் உயிரிழப்பு; பிரதி பொலிஸ் மா அதிபர்
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 676 பேர் பாதசாரிகள் ஆவர். 1,818 வீதி விபத்துக்களில் 730 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், 209 முச்சக்கரவண்டி விபத்துக்களும், 258 லொறி விபத்துக்களும், 146 பஸ் விபத்துக்களும், 118 வேன் விபத்துக்களும் அடங்குகின்றன. மேலும், 42 வாகனங்களின் சாரதிகள் விபத்துக்களை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். எனவே, வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/197740